வாழ்க்கையின் சக்தியை விடுவித்தல் –வளப்படுத்துதல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வாழ்வே ஒரு சக்தி
ஒவ்வொரு நாளும் நீங்கள் நடக்கிறீர்கள், உட்காருகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், பேசுகிறீர்கள், உணர்கிறீர்கள்-இதுபோல பலவற்றைச் செய்கிறீர்கள். இது அனைத்தும் சேர்ந்ததே வாழ்வு! வாழ்வே ஒரு சக்திதான்! வளப்படுத்துதல் என்னும் வாழ்க்கை முறையை உங்களுடையதாக்கிக் கொள்ளும்போது, உங்கள் வாழ்வில் நீங்கள் வாழ்வின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். (harness) கேளுங்கள்: நீங்கள் பிறப்பெடுத்ததன் நோக்கம், உங்களையும் மற்றவர்களையும் வளப்படுத்தவே! இந்தப் புரிதலில் இருந்து செயல்பட்டால், நீங்கள் உயிர்ப்புள்ளவராகவும், உங்கள் செயல்திறனின் உச்சத்திலும் ஜீவன்முக்த தன்மையிலும் இருப்பீர்கள்!
வளப்படுத்துதலே உங்களுக்குள் இருக்கும், வாழ்க்கை சக்தியைத் திறக்கும் திறவுகோல்.
வளப்படுத்துதல் என்றால் என்ன?
தொடர்ந்து வளப்படுத்திக்கொண்டே இருப்பேன் என்னும் வாக்குறுதியை ஒருங்குவித்தல், சிரத்தை மற்றும் பொறுப்புணர்வுடன் எடுக்கும்பொழுது, அது உங்கள் வாழ்வையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் தொடர்ந்து வளப்படுத்தி, விரிவடையச் செய்யும்.
உங்களையும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் வளப்படுத்துவது என்று பொறுப்பு எடுத்துக் கொள்ளும்பொழுது, வாழ்க்கை உங்கள் மீது எல்லாவிதமான மங்களங்களையும் பொழிகிறது. உங்களுக்குள் இருக்கும் வாழ்வை மட்டுமல்ல, மற்றவர்களுடனான வெளி வாழ்க்கையையும் கூட உணர்வீர்கள். நீங்கள் வளப்படுத்தும்பொழுது, வாழ்வின் சக்தி உங்களுள் விழிப்பிக்கப்படுகிறது.
அனைத்தும் உங்களின் அங்கமே
கேளுங்கள்: மற்றவர்களை உங்களிடமிருந்து வேறானவர்களாக நீங்கள் நினைக்க ஆரம்பிக்கும் அக்கணமே, உங்கள் வாழ்வில் அனைத்துவிதமான போராட்டங்களும் ஆரம்பித்துவிடுகிறது! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வில் 'மற்றவர்' என்று எவருமே இல்லை. 'மற்றவர்' என்பது மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட உங்களின் ஒரு பகுதியே! மற்றவர்களுடனான போராட்டம் என்பது, மறக்கப்பட்ட உங்களின் பகுதியுடனான போராட்டமே.
மற்றவர்களை வளப்படுத்தும்பொழுது, இயற்கையாகவே கைவிடப்பட்ட உங்களின் ஒரு பகுதியையும் சேர்த்தே வளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதனால் மற்றவர்களை எந்தளவிற்கு வளப்படுத்துகிறீர்களோ அந்தளவிற்கு உங்களை நீங்களே வளப்படுத்திக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, ஒவ்வொருவரும், ஒவ்வொன்றும் உங்களின் ஒரு பகுதியே என்ற சத்தியத்திற்கு விழித்துக் கொள்கிறீர்கள். Above all, you wake up to the truth that everyone and everything is part of you.
வளப்படுத்துதல், எல்லா சக்திகளுக்கும் உயிரளிக்கிறது
ஒருங்குவித்தலுடன் வாழும்பொழுது நீங்கள் நேர்மறை உணர்வை உணர்கிறீர்கள், சிரத்தையுடன் வாழும்பொழுது நீங்கள் சாத்திய உணர்வை உணர்கிறீர்கள், பொறுப்பெடுத்தலில் தலைமை உணர்வை உணர்கிறீர்கள். வளப்படுத்தலுடன் வாழும்பொழுது, ஞான உணர்வை, ஜீவன் முக்த உணர்வை உணர்கிறீர்கள். ஜீவன் முக்த வாழ்க்கை என்பது உங்களுடைய 4 உள் சக்திகளையும் விடுவித்து, அவற்றை உங்களையும், மற்றவர்களையும் வளப்படுத்தப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறொன்றுமில்லை. அதனால் வாழ்க்கை சக்தி, எல்லா சக்திகளையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.

ஒருங்குவிக்கப்பட்ட கேட்டலையும் (சிரவணம்), சிரத்தையுடன் கூடிய சிந்தனையையும் (மனனம்), பொறுப்பான பிரகடனத்தையும் (நிதித்யாசனம்) செய்யும்போது, நீங்கள் வளப்படுத்தும் வாழ்வையே வாழ்வீர்கள்.
உங்களையும், மற்றவர்களையும் வளப்படுத்தினால், அது பொறுப்படுத்தலைவிட ஒருபடி மேலானதுதான். வளப்படுத்துதல் ஒன்றே உங்களுள் இருக்கும் எவ்வித ஒருங்குவித்தலின்மை, அசிரத்தை மற்றும் பொறுப்பின்மையையும் எரித்துவிட முடியும்! மற்றவர்களின் ஒருங்குவித்தலின்மை மற்றும் அசிரத்தை உட்பட ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றுக்கும் பொறுப்பெடுப்பதே ‘வளப்படுத்துதல்’! ஏனென்றால் அவர்கள் உங்களின் ஒரு அங்கமே!
நான் ஏன் மற்றவர்களை வளப்படுத்த வேண்டும்?
ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எங்கோ தனித்திருக்கும் ஒரு காட்டிற்குள்ளோ அல்லது ஒரு குகைக்குள்ளோ வாழவில்லை. வாழ்க்கை உங்களுக்கு வெளியே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் மற்றவர்களுடன் இணைந்தே வாழ்கிறீர்கள். வாழ்க்கை மற்றவர்களுடன்தான் நிகழ்கிறது. நீங்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் உங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் இப்படி உங்கள் வாழ்க்கை நூற்றுக்கணக்கானவர்களுடன் சம்பந்தப்பட்டிருக்கும்பொழுது, இயற்கையாகவே, உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் உணர்வுருமாற்றத்தை விரும்பினீர்களென்றால், நீங்கள் மற்றவர்களின் வாழ்க்கையிலும் உணர்வுருமாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வேலைசெய்தாக வேண்டும்!

இல்லையென்றால், நீங்கள் நாட்கணக்காக, மாதக்கணக்காகத் தொடர்ந்து அமர்ந்து தியானம்செய்து, உங்களை உயர்நிலை இன்பத்திற்கும் ஆனந்தத்திற்கும் உயர்த்திக்கொள்ளலாம், ஆனால் உங்கள் வீட்டுக்குத் திரும்பிய பத்தே நிமிடத்தில், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களைக் கீழ்நிலைக்கு கொண்டுவந்துவிடுவார். பத்து நிமிடங்கள் என்பதுகூட அதிகம்தான்! ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு தொலைபேசி அழைப்பு போதும்! மற்றவர்களை வளப்படுத்தும்பொழுது மட்டுமே, உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு உணர்வுருமாற்றத்தையும் ஏற்று, அதைக் கடக்க முடியும்.
பொறுப்பெடுத்தல் என்றால், நீங்கள் மற்றவர்களின் ஒருங்குவித்தலின்மையையும் அசிரத்தையையும் ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கான பழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பொருள் அல்ல. இல்லை! அவர்கள் வாழ்வில் விடுவிக்காமல் இருக்கும் இந்த 4 சக்திகளையும் அவர்களும் உணர்ந்துகொள்வதற்கு, அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களைப் பலமிக்கவர்களாக்கவும் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.
மற்றவர்களைப் பலமிக்கவர்களாக்குங்கள்
'பெற்றிருத்தல்' என்பது இயல்பாகவே உங்களைப் பகிர்தலுக்குப் 'பொறுப்பெடுக்கும்'படி செய்துவிடும். இதுதான் இயற்கை விதி. கண்களைப் பெற்றிருக்கும் ஒருவர், இயல்பாகவே, கண்ணற்ற ஒருவருக்கு பார்த்தலினால் ஏற்படும் பயன்களைத் தருவதற்குப் பொறுப்பாகிறார். பலமிக்க ஒருவர், இயல்பாகவே, பலமற்றவர்களைப் பலமுள்ளவர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறார். கல்வியில் சிறந்திருக்கும் ஒருவர், அறியாமையில் இருக்கும் மக்களை அறிவுள்ளவர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறார். நீங்கள் செல்வந்தரானால், ஏழைகளைப் பணக்காரர்களாக்குவதற்குப் பொறுப்பாகிறீர்கள்.

உங்கள் செல்வத்தையெல்லாம் மற்றவர்களுக்குப் பங்குபோட்டு கொடுத்துவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அப்படியல்ல, நீங்கள் ஒரு 10 ஏழைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் செல்வத்தை அவர்களுக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால், இப்போது நாம் 11 ஏழைகளைக் கொண்டிருப்போம்! அவ்வளவுதான்.
அதனால் உங்கள் செல்வத்தை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்லவில்லை. நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், அவர்களுக்குக் கல்வி கொடுப்பதற்கும், அவர்களைச் செல்வந்தராக்குவதற்குமான பொறுப்பெடுங்கள் என்பதுதான். நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் எந்த ஒன்றையும், பகிர்ந்தளித்து, அதை மேலும் மேலும் வளர்ப்பதற்கும் நீங்கள் பொறுப்பாகிறீர்கள்.
வளப்படுத்துதலைப்பற்றிய சில சத்தியங்கள்
- வளப்படுத்துதல்தான் உங்கள் இயல்பே! ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அது மற்றவர்களை வளப்படுத்தும் செயல்தான். உங்கள் சுவாசம் கூட மரங்களையும், செடி, கொடிகளையும் வளப்படுத்துகிறது.
✶ மற்றவர்களை வளப்படுத்துவது உங்களையும் வளப்படுத்துகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவருமே உங்களின் பாகமே.
✶ உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்காகத்தான் என்ற சத்தியத்தை, உங்கள் மனத் திற்கு ஒருமுறை புரியவைத்து விட்டால்போதும், உங்கள் இதயத்தில் பதிந்திருக்கும் அனைத்து துக்கங்களும் உங்களை விட்டுச்சென்று விடும்.
✶ அவரவர்களுடைய உச்சபட்ச சத்தியத்தில் வாழ்வதற்கு மற்றவர்களை வளப்படுத்துவதே, நீங்கள் அவர்களை வளப்படுத்தும் இறுதி, அறுதி வழி. அதனால் உங்கள் வாழ்க்கை முறையை வளப்படுத்த தீர்மானியுங்கள்.
உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்
இந்த முக்கியமான சத்தியத்தை உள்வாங்கிப் புரிந்துணர்ந்து கொள்ளுங்கள். உங்களையும் மக்களையும் கைவிடாதீர்கள்! மக்கள் 100 முறை தோல்வியுற்றாலும், தொடர்ந்து அவர்களுடன் வேலை செய்வதை நிறுத்தாதீர்கள்.
மற்றவர்கள் தோல்வியுறும்பொழுது வெறுப்புணர்வு அடைகிறீர்களென்றால், தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் தோல்வியை நோக்கிய வெறுப்புணர்வுதான். நாம் மற்றவர்களுக்கு நம் முதுகைக் காட்டினால்... நாம் தர்மத்தை வாழவில்லை, ஏனென்றால் நாம் மற்றவர்களைக் கைவிடும்பொழுது, நம்மையும்கூட சேர்த்தே கைவிடுகிறோம். அதனால் ஒருபோதும் மக்களைக் கை விடாதீர்கள்!
வாழ்க்கை சக்தியை விடுவிக்கும் நுட்பம்:
✶வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட்டது, உங்களைத் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டது, அதனால் இனி உங்களை நீங்களேதான் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று முதன்முதலாக எப்போது நினைத்தீர்கள்.
✶எது உங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்துகிறது, வேறானவராக உணரச் செய்கிறது என்பதைப் பாருங்கள். அந்த மூல எண்ண மனப்பாங்கை நிறைவுசெய்யுங்கள்.
✶அடுத்த 48 மணிநேரத்திற்கு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும், எல்லாவற்றையும் உங்களுடைய நீட்டிப்பாக பாருங்கள். அவர்களுக்கு நிறைவுணர்விலிருந்து சேவை புரியுங்கள்.