உணர்வின் சக்தியை விடுபடுத்துதல் - பொறுப்பெடுத்தல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நீங்கள்தான் ஆதார சக்தி
உணர்வின் சக்தி என்பது உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்திற்குமே நீங்கள் தான் மூல ஆதாரம் என்று உங்களை உணரச் செய்வதைத் தவிர, வேறில்லை. இந்தப் புரிதல், உங்கள் சொந்த வாழ்க்கையின் மீதான உங்களுடைய வல்லமையான கட்டுப்பாட்டு ஆற்றலை அளிக்கிறது. மேலும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஒரு நேர்மறை தாக்கமாக இருக்கக்கூடிய ஆற்றலையும் உங்களுக்குத் தருகிறது.
உங்களை நீங்களே ஒரு தலைவராகக் கண்டுணர்ந்து, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் நிகழும் எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது உணர்வின் சக்தி வெளிப்படுகிறது.
உணர்வின் சக்தியை விடுவிக்கும் திறவுகோல் பொறுப்பெடுத்தலே.


பொறுப்பெடுத்தல் என்றால் என்ன?
உங்களுக்குள்ளும், உங்களைச்
சுற்றியும் நிகழுகின்ற அனைத்து
நிகழ்விற்கும் நீங்கள்தான் ஆதிமூலம்
என்னும் சத்தியத்தை உணர்ந்து,
அதனால், ‘உங்களுக்குள்ளும்,
உங்களைச் சுற்றியும் நிகழுகின்ற
எல்லாவற்றிற்கும்
நீங்கள்தான் பொறுப்பு’ என்ற
உணர்வுத்தெளிவிலிருந்து சிந்தித்தல்,
பேசுதல், இயங்குதல் மற்றும்
மற்றவர்களையும் இயக்குவித்தல்!
யாராவது, எவருமே, யாராகிலும் மற்றும் எல்லோரும்
நாமெல்லோரும் அறிந்த ஒரு சின்ன கதை
முன்னொரு காலத்தில் யாராவது, எவருமே இல்லை, யாராகிலும் மற்றும் எல்லோரும் என்னும் பெயர்களுடைய நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை ஒரு முக்கியமான வேலை செய்து முடிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் அதை யார் செய்வது? என்ற கேள்வி எழுந்தது.
‘யாராவது’ இதைச் செய்ய முடியும், ‘யாராகிலும்’ இதைச் செய்திருக்க முடியும், ஆனாலும் ‘எவருமே’ இதைச் செய்யவில்லை என்று ‘எல்லோரும்’ உறுதியாக நம்பினார்.
‘யாராவது’க்கு உடனே கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அது ‘எல்லோருமுடைய’ வேலை என்று எண்ணினார்.
‘யாராகிலும்’ இதைச் செய்ய முடியும் என்று‘எல்லோரும்’ நினைத்தார், ஆனால் ‘எல்லோரும்’ அதைச் செய்யப் போவதில்லை என்பதை ‘எவருமே’ உணர்ந்துகொள்ளவில்லை.
இறுதியில், ‘யாராகிலும்’ செய்து முடித்திருக்க முடிந்த ஒன்றை, ‘எவருமற்றவர்’ செய்து முடித்தபோது, ‘எல்லோரும்’ ‘யாராவது’வைத் திட்டுவதில் தான் இது முடிந்தது.

மூன்று வகையான மனிதர்கள்:
தன்னுடைய சொந்த செயல்களுக்கு தானேதான் பொறுப்பு என்பதை உணராதவன் மிருகம் போல் வாழ்கிறான்- அவன் தாழ்நிலை விழிப்புணர்வில் வாழ்கிறான். தன்னுடைய சொந்த செயல்களுக்கு மட்டுமே தான் பொறுப்பு என்று உணர்பவன் மனிதன்- அவர் நடுத்தரமான விழிப்புணர்வில் வாழ்கிறான். மற்றவர்களின் செயல்களுக்குக் கூட பொறுப்பெடுப்பவன் இறைவனாகிறான்- அவன் தலைமைப் பண்பு விழிப்புணர்வில் வாழ்கிறான்.
சிலவற்றுக்கு, உங்களுடைய செயல்கள் பொறுப்பாகவிட்டாலும் கூட, மற்றவர்களுடைய அந்த அசிரத்தைக்கும் பொறுப்பின்மைக்கும் பொறுப்பெடுப்பது உங்களை ஒரு தலைவனாக்கும்.
காரணங்கள் VS பொறுப்பெடுத்தல்
'எல்லாவற்றுக்கும் நீங்களே பொறுப்பெடுப்பது' என்பது பற்றி கேட்டவுடனேயே, உங்கள் மனத்திற்குள் எழும் மிகப்பெரிய கேள்வி இது, 'என்னைச் சுற்றி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும்?'

"எனக்குள் நிகழ்பவற்றுக்கு நான்தான் பொறுப்பாளி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என்னைச் சுற்றி நடப்பவற்றிற்கு, எனக்கு வெளியில் நடப்பவற்றிற்கு நான் எப்படி பொறுப்பெடுக்க முடியும். உதாரணத்திற்கு, எனக்கு ஒரு விபத்து நிகழ்ந்தால், அதற்கு நாம் எப்படி பொறுப்பாளியாக முடியும்?"
எல்லோரும் கேட்கும் கேள்வி இது!
கேளுங்கள்: ஏதோ ஒன்றுக்கு காரணமாக இருப்பதற்கும், அதற்கான பொறுப்பெடுப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது!
சில சமயங்களில, சில நிகழ்வுகள் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு உங்கள் வாழ்வைப் பாதிக்குமானால், நீங்கள்தான் அந்நிகழ்வுக்குப் பொறுப்பு! உதாரணத்திற்கு, உங்கள் நாட்டில் நிலவும் பொருளாதார லஞ்ச-லாவண்யங்களுக்கு நீங்கள் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்நாட்டின் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் அதற்கு பொறுப்பு! உங்கள் தர்க்கத்தின்படி, நீங்கள் அதற்குக் காரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் அதற்கு பொறுப்பு அல்ல என்பது அதன் பொருள் அல்ல.You may not be the reason, as per your logic, but that doesn't mean that you are not responsible in truth.
நீங்கள் பொறுப்பெடுக்காவிட்டால், நீங்கள் உங்களை மேம்படுத்தப்போவதும் இல்லை, உங்களுடைய உள் உலகை விரிவுப்படுத்திக் கொள்ளப்போவதும் இல்லை என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான்தான் பொறுப்பாளி...

உங்களுடைய பிரம்மாண்டத்தன்மையே உங்களைப் பயமுறுத்துகிறது
நீங்கள் எப்போதுமே, உங்களுடைய சிறிய தன்மையால்தான் திக்கு முக்காடுகிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இல்லை! நீங்கள் உங்கள் பிரம்மாண்டத்தன்மையால் தான் திக்குமுக்காடிப் போகிறீர்கள்! எப்போதெல்லாம் உங்களுடைய பிரம்மாண்டத்தன்மை உங்களை விரிவடைய வற்புறுத்துகிறதோ, உங்களை விரிவுப்படுத்த நீங்கள் நிர்பந்திக்கப்படுகிறீர்கள் என்று எப்போதெல்லாம் உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் உங்களை உங்களுடைய சௌகரியமான வட்டாரத்திற்குள் மேலும் சுருக்கிக் கொள்கிறீர்கள். உங்களுடைய சோர்வுத் தன்மை, உங்களுடைய பலஹீனம், உங்களுடைய சக்தியற்றதன்மை இவை எல்லாமே உங்களுடைய பிரம்மாண்டத்தைப் பார்க்க நீங்களே கொண்டிருக்கும் எதிர்பார்ப்புத்தன்மையே தவிர, வேறொன்றில்லை.
அதனால்தான் யாராவது உங்களிடம், "நீங்கள் ஏழை, பலஹீனமானவர், பாவம் செய்தவர்," என்று சொன்னால் அதை ஒப்புக் கொள்வதென்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. ஆனால், யாராவது உங்களிடம், "நீங்கள் தெய்வீகமானவர், நீங்கள் சக்தி மிக்கவர், நீங்கள் முழுமையானவர்," என்று சொன்னால், உடனே உங்களுடைய மொத்த அடையாளமும் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் வாழ்க்கை உங்களிடமிருந்து எப்போதும் விரிவாக்கலையே எதிர்பார்க்கிறது. ஏனெனில் விரிவடைதலே வாழ்வின் இயல்பான விதி! அதனால்தான் நீங்கள் வாழ்வைப்பற்றி அவ்வளவு ஆழமான ஒரு பயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.
குறிப்பாக, மற்ற மக்கள் வடிவத்தில் இருக்கும் வாழ்க்கையைப்பற்றி அதிக அளவு பயத்தைக் கொண்டிருக்கிறீர்கள்-ஏனெனில் மக்கள்தான், வாழ்வின் சிறப்புமிக்க, உயிர்ப்புள்ள வெளிப்பாடுகள்! நீங்கள் வாழ்க்கையுடன் எந்த அளவுக்கு அதிகமாக உங்களைப் பிணைத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கான விரிவாக்கத்தை உங்களிடமிருந்து அது எதிர்பார்க்கிறது. எப்போதெல்லாம் பலஹீனமாகவும், சக்தியற்றும், சோர்வாகவும் உணர்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் இது: 10 பொறுப்புகளை எடுத்து, அவற்றை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்து முடிப்பதற்கான வாக்குறுதி கொடுங்கள். உங்களுக்குள் பலஹீனமும், சோர்வும், சக்தியற்ற நிலையும் வளர்வதற்கான வழியே இல்லாத வகையில், அந்த ஒப்பிய பொறுப்புக்கள் மூலம், உங்கள் உள் உணர்வை மிக பலமாக உலுக்குங்கள்.

பொறுப்பெடுத்தலே உங்களைப் பலசாலியாக்கும்
பொறுப்பெடுத்தல் என்பது ஒரு சுமை என்றுதான் நாம் எப்போதுமே நினைக்கின்றோம். இல்லை! அது ஒரு சக்தி! பொறுப்பு, நேரடியாகவே உங்களை தலைமைப்பண்பு உணர்விற்கு எடுத்துச் சென்றுவிடும்.
உங்களுடைய குடும்பத்திற்கு மட்டுமே பொறுப்பு என்று உணரும் வரை, நீங்கள் உங்களுடைய வீட்டுக்குத் தலைவராகிறீர்கள். சமுதாயத்திற்குப் பொறுப்பு என்று உணரும்பொழுது, நீங்கள் சமுதாயத்திற்கு தலைவராகிறீர்கள். உங்களுடைய பொறுப்பெடுக்கும் தன்மை விரிவடைய விரிவடைய, உங்களுடைய தலைமைப்பண்பும் விரிவடையும். மொத்தப்பிரபஞ்சத்திற்கே பொறுப்பெடுக்க உணரும் தீர்மானமே ஞானத்தன்மை! எல்லாவற்றுக்குமே நானே பொறுப்பு என்று உணர்வதும், 'அந்த உணர்வுக்கேற்ற வாழ்க்கையை வாழ்வேன்' என்று பிரகடனப்படுத்துவதும்தான் 'பொறுப்புப் பிரகடனம்' (Responsible declaration) எனப்படுகிறது. இதுவே இந்து ஆன்மிகப் பயிற்சியில் நீத்தியாசனம் என்றறியப்படுகிறது. பொறுப்புப் பிரகடனம், உங்களுள் உள்ள உணர்வின் சக்தியை விடுவிக்கிறது.

'நான் பொறுப்பு என்று உணர்வது' என்பதன் பொருள் என்ன?
உங்களைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிற்குமே நீங்கள் தான் பொறுப்பு என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், உடனே நீங்கள், 'தெருவில் கிடக்கும் குப்பைகளுக்கெல்லாம் நான் தான் பொறுப்பு என்றால், அதைச் சுத்தம் செய்வதிலேயே என்னுடைய நாள் முழுவதுமே செலவழிந்து விடுமே! நான் அதற்குப் பிறகு எதுவுமே செய்ய முடியாதே!' என்று நினைக்கலாம். கேளுங்கள்: தெருவில் கிடக்கும் குப்பைக் கூளங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு என்று நீங்கள் உணர்ந்தால், நீங்களேதான் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை;
மேலும் நீங்கள் அதைச் சுத்தம் செய்யக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. என்ன வேண்டுமானாலும் நிகழட்டும். ஆனால் உங்களுடைய கற்பனையான சிக்கல்கள் imaginary complications காரணமாக, பொறுப்பெடுத்தலில் குதிப்பதற்குப் பயப்படாதீர்கள். அப்படி உணர்வதற்கே கூட உங்களை நீங்களே தடுத்துக் கொள்ளாதீர்கள்!
அந்தக் கற்பனையான சிக்கல்களை (imaginary complications) முழுமைப்படுத்துங்கள். சிறிதுகால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள், இந்தப் பொறுப்புணர்வு உங்களுக்குள் மூழ்கவும், உங்கள் செயல்களுடன் ஒத்திசைந்து செல்லவும் அனுமதியுங்கள். இப்படி செய்யும்போது, பொறுப்பே (responsibility) ஒருங்குவிக்கப்பட்ட சக்தியாகிவிடும் (synergy).
உணர்வின் விஞ்ஞானம்
உணர்வின் விஞ்ஞானத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஒன்றையும் மகிழ்ச்சியாகவும் உணரலாம் அல்லது வலியாகவும் உணரலாம். அது உங்கள் சுதந்திரம்! சிறந்த வாழ்நாள் சாதனைகள் கூட சில சமயங்களில் உங்களுக்கு வலியைக் கொண்டுவரும். அதேபோல் மிக மோசமான ஒரு அனுபவம் கூட, உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான பாடமாக இருக்கலாம். ‘ நீங்கள் அதை எப்படி உணர வேண்டும்' என்பதைத் தீர்மானிக்கும் ஆற்றலை நீங்களேதான் பெற்றிருக்கிறீர்கள்.
கேளுங்கள்: எப்பொழுதெல்லாம் உங்களை ஆற்றலுடையவராக உணர்கிறீர்களோ, அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். எப்பொழுதெல்லாம் உங்களைச் சக்தியற்றவராக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் துக்கத்தையே அனுபவிக்கிறீர்கள். உங்களுடைய எல்லாவிதமான துக்கமுமே - வலி, கோபம், குற்றவுணர்ச்சி, பொறாமை, விரக்தி - இவையெல்லாமே, உங்களுடைய சக்தியற்ற நிலை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வழிகளே! உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்திற்குமே நீங்கள் தான் பொறுப்பு என்று உணரும்பொழுது, எல்லாமே மகிழ்ச்சிதான் என்று உணர்வீர்கள்; ஏனெனில் எதுவுமே உங்களைச் சக்தியற்றவராக்க முடியாது. அதனால், பொறுப்பெடுத்தல் மூலம் உங்களை ஆற்றலுடையவராக்கிக் கொள்ளுங்கள். உணர்வின் சக்தியை விடுவித்துக் கொள்ளுங்கள்.
உணர்வின் சக்தியை விடுவிப்பதன் மூலம், நீங்கள்...
✦சக்தியும், நிறைவுணர்வும் நிறைந்த ஒரு தளத்திலிருந்தே எப்போதும் செயல்படுவீர்கள். ✦உங்கள் கவனத்தைத் தீர்வுகள் மீது செலுத்துவீர்கள்; பிரச்னைகள் மீதல்ல. ✦உங்கள் உள்உணர்வை விரிவுபடுத்துவீர்கள். புது சாத்தியக்கூறுகளுக்கு உங்களைத் திறந்து வைப்பீர்கள். ✦உங்கள் வாழ்க்கை மீது சிறந்த கட்டுப்பாட்டைப் (Gain a high degree of control over your life ) பெறுவீர்கள். ✦வெற்றியின் அடுத்த நிலைக்கு உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள். புது ஜீவனாக மலர்வீர்கள்.
உங்கள் உணர்வின் சக்தியை விடுவிக்கும் பயிற்சி முறை:
✦ உங்களை நீங்களே எங்கெல்லாம் சுருக்கிக் கொள்கிறீர்களோ, உதாரணத்திற்கு வேலையில், உறவு முறைகளில் என்று எங்கெல்லாம் உங்களைச் சுருக்கிக் கொள்கிறீர்களோ அவற்றைப் பட்டியலிடுங்கள். ✦ வாழ்வின் இந்த ஒவ்வொரு அம்சத்திலும், நீங்கள் எந்த மாதிரி எண்ணங்களை எண்ணுகிறீர்கள்; எந்த மாதிரியான செயல்களைச் செய்கிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். ✦ வாழ்வின் அந்த அம்சத்திற்கு நீங்கள் பொறுப்பெடுக்காமல், அதற்குப் பதிலாக வெளிக் காரணிகள் ஏதாவது அந்த அம்சத்தை மாற்றி விடும் என்று வெளிக் காரணிக்காகக் காத்திருக்கும் அம்சங்களை அடையாளம் கண்டு பட்டியலிடுங்கள்.

✸ அவற்றுள் ஏதாவது ஒரு அம்சத்தைத் தேர்ந்தெடுத்து, அதை மாற்றுவதற்குரிய புதிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு நீங்களே பொறுப்பு என்று பிரகடனப்படுத்துங்கள். அது நிகழ நீங்கள் எதை மாற்ற வேண்டுமென்பதை அடையாளம் காணுங்கள். ✸ ஒரு வாரத்திற்கு, உங்களை நீங்களே தொடர்ந்து கவனித்து, உங்கள் முன்னேற்றத்தைக் குறித்து வையுங்கள்.
