KAILASA Library/உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)/சிந்தனை சக்தியை விடுவித்தல் — சிரத்தை உங்களுடைய சிந்தனையை உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுடன் இசைவு செய்தல்:Sign in
உங்களின் நான்கு உள் சக்திகள் (Your Four Inner Powers)

சிந்தனை சக்தியை விடுவித்தல் — சிரத்தை உங்களுடைய சிந்தனையை உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுடன் இசைவு செய்தல்:

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda

வார்த்தைகளின் சக்தி எந்த ஒரு உறவையும் உருவாக்கவும் முடியும், உடைக்கவும் முடியும் என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். As you saw, the Power of Words can make or break any relationship.

சிந்தனை சக்தி, வார்த்தைகளின் சக்தியை விட இன்னும் ஆழமானது. ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையையே உருவாக்க முடியும் அல்லது உடைக்க முடியும்!

நீங்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும், நம்பினாலும் நம்பாவிட்டாலும், எப்படி உங்கள் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறீர்களோ, அதைபோல் நீங்கள் உங்கள் மனத்தையும் கட்டுப்படுத்த முடியும்! நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ, அதைத் தீர்மானிக்கவும் முடியும், பிரகடனப்படுத்தவும் முடியும்.

உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளுடன் இசைந்து செல்லும் எண்ணங்களை மட்டுமே ஊக்குவிக்கும்படியும், தாழ்வான கருத்துக்களை தடைசெய்து, அவற்றை நிறைவுசெய்யும்படியும் உங்கள் மனத்திற்கு நீங்கள் பயிற்சிகொடுக்க முடியும். இது சாத்தியமே. It is possible to train your mind and encourage only the thoughts that are in alignment with your highest possibility, discouraging and completing with low ideas.)

உங்கள் சிந்தனை உங்களை உருவாக்கும் அல்லது உடைக்கும். சிந்தனை ஒரு விபத்து அல்ல- அது உங்களுடைய தன்னார்வ ஈடுபாட்டுடன் நிகழ்வது. உங்களுடைய சிந்தனை முறை, உண்மையிலேயே உங்களால் ஊக்குவிக்கப்படுகிறது, வரவேற்பளிக்கப்பட்டு அன்பு பாராட்டப்படுகிறது, வளப்படுத்தப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் சிந்தனையை ஒரு விபத்தாகக் கருதுகிறீர்கள். உங்கள் மனத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் நம்புகிறீர்கள்.

சிந்தனை சக்தியை விடுவிக்கும்போது, நீங்கள் இயல்பாகவே உங்கள் எண்ணங்களையெல்லாம் உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளை அடைவதற்கு ஒருங்குவிக்கும் ஆற்றலுடையவராகிறீர்கள். தொடர்ந்து உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளைச் செயல்படுத்துவதே சிரத்தை.

சிந்தனை சக்தியைத் திறக்கும் திறவுகோல் சிரத்தை.

சிரத்தை என்றால் என்ன?

உங்களைப்பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (மமகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களிடம் உங்களை எப்படிக் காண்பித்துக்கொள்கிறீர்களோ (அகங்காரம்)அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ (ஸ்வ-அன்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும், மற்றவர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்களோ (அன்யகாரம்) அதனுடைய செயல்திறமையின் உச்சத்திலிருந்தும் செயல் புரிந்து, வாழ்க்கையை விரிவடையச் செய்து வாழ்தல்!

மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் காட்சி

கேளுங்கள்! நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல், நீங்கள் ஒரே ஒரு அடையாளம் மட்டும் கொண்டவரல்ல: நீங்கள் 4 அடையாளங்களைக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாச் சமயங்களிலும், இந்த 4 அடையாளங்களையும், 4 பரிமாணங்களையும் ஒருசேரப் பெற்றிருக்கிறீர்கள். இந்த 4 அடையாளங்களும் ஒன்று சேர்ந்ததுதான் உங்கள் தனிமனித வாழ்வு; அதுதான் உங்கள் தனித்தன்மை! இந்த 4 அடையாளங்களுக்கும் நீங்களே பொறுப்பு!

உங்களுக்கு நான்கு அடையாளங்கள் உண்டு:

முதல் அடையாளம் - மமகாரம் அதாவது உங்களுக்குள் காட்டிக் கொள்வது. 'நான் ஆரோக்யமானவன், நான் அசிங்கமாக இருக்கிறேன், நான் புத்திசாலி, என்னால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது, நான் மக்களை நேசிக்கிறேன்'- இதுபோன்ற உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்துக்களே மமகாரம். இதுபோன்ற உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் பல கருத்துக்களைச் சுமந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எப்போதுமே இது, நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதை விடக் குறைவானதாகவே இருக்கிறது.

இரண்டாவது அடையாளம் - அகங்காரம் நீங்கள் மற்றவர்களுக்கு உங்களை எப்படிக் காட்டிக் கொள்கிறீர்களோ இதுவே அகங்காரம் எனப்படுகிறது. நீங்கள் எப்போதுமே உங்களை ஒரு பலசாலியாகவும், திறமைசாலியாகவும், நேர்மையானவராகவும், உதவிபுரிபவராகவும், இன்னும் எதுவாகவெல்லாமோ காட்டிக் கொள்ள முயல்கிறீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இப்படி வெளிக்காட்டிக் கொள்ளும் அகங்காரம், எப்போதுமே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதைக் காட்டிலும் அதிகமானதாகவே இருக்கும்.

மூன்றாவது அடையாளம் -அன்யகாரம் இந்த இரண்டைக்காட்டிலும் மூன்றாவதாக அன்யகாரம் என்ற ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துக்கள் அன்யகாரம் எனப்படுகிறது. மற்றவர்கள் உங்களை எப்படி உணர்கிறார்களோ அது, நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொள்கிறீர்களோ அதைக் காட்டிலும் வேறானதாக இருக்கலாம். ஏனெனில் மற்றவர்கள், நீங்கள் காட்டும் சூட்சுமமான சமிக்ஞைகளை வைத்துத்தான் உங்களைப்பற்றிய கருத்துக்களை உருவாக்குகிறீர்களே தவிர, நீங்கள் வெளிப்படையாகக் காட்டும் சமிக்ஞைகளை வைத்து அல்ல. நீங்கள் சொல்லாதவற்றையும் கூட புரிந்துகொள்வதில் மனிதர்கள் போதுமான அளவு புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்! ஆம், முக்கியமாக நீங்கள் சொல்லாத விஷயங்களைப் புரிந்துகொள்வதில்!

நான்காவது அடையாளம் ஸ்வ-அன்யாகாரம்: வாழ்க்கையைப்பற்றிய கருத்து அதாவது ஸ்வ-அன்யகாரம், மிகவும் சூட்சுமமான ஒரு அடையாளம், ஏனெனில் இது நேரடியாக உங்களோடு சம்பந்தப்பட்டது அல்ல. ஸ்வ-அன்யகாரம் என்பது வாழ்க்கையைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்து; வாழ்க்கை, உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று நீங்கள் உணரும் உணர்வு. உதாரணத்திற்கு, வாழ்வு தனிமையானதுதான், வாழ்வே முரண்பாடுகள் நிறைந்ததுதான், வாழ்க்கை பயம் நிறைந்தது என்றும் நினைக்கலாம்; வாழ்க்கை புனிதமானது, நான் எதையெல்லாம் விரும்புகின்றேனோ, அவற்றையெல்லாம் எனக்கு அது வழங்குகிறது என்றும் நினைக்கலாம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் மக்களிடமிருந்தும், சூழ்நிலைகளிடமிருந்தும் பெறப்போகும் அனுபவங்களை இது வரையறுப்பதால், இதுகூட உங்களுடைய அடையாளமே!

இந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் உச்சபட்சமாக வாழ்வதே சீரத்தை.

மூலமனப்பாங்கு

  • முரண்பாடுகளின் ஆதாரம்

கடந்த காலத்தில் நிகழ்ந்த தோல்வி, நிராகரிப்பு, தண்டிக்கப்பட்ட அனுபவம், அவதூறுக்குட்படுதல், அன்பானவர்களின் மரணத்தைப் பார்த்தது போன்ற ஏதாவதொரு ஆழமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் வாழ்வில் நிகழும் எந்த ஒரு சூழ்நிலைக்கும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வகையில் பதில்செயல் புரிவதைத்தான் 'எண்ணப்பாங்கு' என்கிறோம்.

நம்முடைய பதில்செயல்கள், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. நெருக்கடியான தருணங்களின்போது, நீங்கள் 'நான் பலவீனமானவன், தோல்வியாளன், யாருமே என்னிடம் அன்பாக இல்லை, வாழ்க்கையே அபாயகரமானதுதான், அதனால் நான் மிகவும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்' என்று இப்படிப் பல கருத்துக்களை உங்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் உருவாக்குகிறீர்கள்.

உங்களின் பரிமாணம் diagram

கிட்டத்தட்ட எல்லா எண்ண மனப்பாங்குகளுமே எதிர்மறையானவையே, அவை உங்களை வாழ்க்கையில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தாலும் கூட! ஏனெனில் அவை உங்களை நீங்கள் சக்தியற்றவராக உணர்ந்த சூழ்நிலைகளிலிருந்து எழுந்தவை!

பொதுவான சில மூல மனப்பாங்குகள்:

  1. நான் ஒரு தோல்வியாளன்
  1. யாருமே என்னிடம் அன்பாக இல்லை
  1. நான் தனியாள்
  1. நான் அசிங்கமாக இருக்கிறேன்
  1. வாழ்க்கை என்னை ஏமாற்றுவதற்கென்றே இருக்கிறது
  1. நான் பலஹீனமாகவும், ஆரோக்கியமற்றும் இருக்கிறேன்
  1. நான் சக்தியற்றவனாக இருப்பதால், நான் மற்றவர்களைச் சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது
  1. வாழ்க்கை கடினமானதாகையால், நான் இன்னும் அதிக சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும்
  1. நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கை விசாலமானதாக இருக்கிறது.

எல்லா எண்ண மனப்பாங்குகளுமே குறை புரிந்துணர்வுகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஏனெனில் வாழ்க்கை கணத்திற்கு கணம் வேறுபட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் தன்னிச்சையான இயல்புடன் உடனுக்குடன் பதில்செயல் புரிய வேண்டியுள்ளது. ஆனால் தப்போதைக்கு நீங்கள், ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட செயல்கள் மற்றும் மனப்பாங்குகளின் ஒரு தொகுப்பே! ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட செயல்களும் மனப்பாங்குகளும் வாழ்க்கை உங்களுக்கு எப்படி நிகழ்கிறதோ அப்படியே அதனுடன் தொடர்புகொள்ள உங்களை அனுமதிப்பதில்லை.

உங்களுக்கு பல எண்ண மனப்பாங்குகள் இருக்கலாம். ஆனால், உங்களுடைய அறிவுக்கு கொண்டு வராமலேயே உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்கும் மூலமனப்பாங்கு ஒன்றுதான்!

உங்கள் அடையாளங்களுக்கிடையிலான முரண்பாடுகள்கூட, மூல-மனப்பாங்கின் விளைவே தவிர வேறொன்றல்ல. உங்களுக்குள் உங்களைப் பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்துவிட்டு, ஆனால் வெளியில் வேறொரு மாதிரி உங்களைக் காட்டிக் கொள்வதே அசிரத்தை.

அசிரத்தை, உங்கள் சிந்தனை சக்தியை எப்படி விடுவிக்கும்?

இரண்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்

நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்து
கவனித்தீர்களானால், உங்கள் 4
அடையாளங்களுக்கிடையில் இருக்கும்
முரண்பாடுகளிலிருந்தே உங்கள்
பிரச்சனைகள் எழுகின்றன என்பதைப்
புரிந்துகொள்ளலாம். உங்களுடைய 4
அடையாளங்களும் ஒன்றுக்கொன்று
ஒத்திசைந்து செல்லாதபோது, அது
உங்கள் வாழ்வில் நோய்களையும்
துக்கங்களையும் குறைவுணர்வுகளையும்
விளைவிக்கிறது.

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், உண்மையில் நீங்கள் கொண்டிருக்கும் இந்த அடையாளங்கள் அனைத்துமே, உங்களைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ண மனப்பாங்குகளே! மற்றவர்கள் உங்களைப் பற்றி கொண்டிருக்கும் அடையாளங்கள் கூட, அவர்களுக்குள் நீங்கள் உருவாக்கியதுதான். அதனால், உங்களுடைய எல்லா அடையாளங்களையும் படைத்த படைப்பாளி நீங்கள்தான்! புரிந்ததா?

இப்போது, ஒரு அடையாளம் மற்றொரு அடையாளத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால், உங்களுடைய சிந்தனையை எப்படி ஒருங்குவிக்க முடியும்? உங்களுடைய மொத்த சக்தியுமே, சண்டையிட்டுக் கொண்டிருக்கும் உங்கள் அடையாளங்களைச் சமாதானப்படுத்தவும் சமரசப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டுவிடும்.

உங்களுடைய அடையாளங்கள் ஒன்றுக்கொன்று இசைவுடன் இருந்தால், உங்களுடைய சிந்தனை முழுவதையுமே நீங்கள் ஒரே திசையில் குவிக்க முடியும். அப்போது உங்கள் சிந்தனை ஒரு லேசர் தூண் போல் தெளிவானதாகவும், கூர்மையானதாகவும் ஆகிவிடும்; உங்கள் சிந்தனைச் சக்தியை நீங்கள் விழிப்படையச் செய்கிறீர்கள்.

நீங்கள் சிரத்தையில் வாழும்போது, அங்கு விழிப்பற்ற சிந்தனைக்கோ, வாழ்க்கைக்கோ இடமில்லை, ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்வில் விளையாடும் காரண காரியங்களைப் பற்றி முழுமையாக அறிந்தவராகவே இருப்பீர்கள்.

உங்களால் கற்பனை செய்ய முடிந்தவை எல்லாமே உண்மைதான்

மகிழ்ச்சியுடன் சிரிக்கும் பெண்கள்

உங்களை நீங்கள் எப்படிக்
கட்டமைத்துக் கொள்ள
விரும்புகிறீர்களோ, அந்த
முறையிலேயே உங்கள்
சிந்தனைப்போக்கும் செல்கிறது. உங்கள்
விருப்பத்துடன் சிந்தனைப்போக்கு
கைகோர்த்துக் கொள்கிறது. அதனால்,
சிந்தனையின் இந்த 4 பகுதிகளுமே
முழுமையாகத் தூய்மையாக்கப்பட
வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
உங்களுக்குள் பார்த்து, உங்களைப்பற்றி
நீங்களே உங்களுக்குள்
கொண்டிருக்கும் அடையாளங்களை
அடையாளம் காணுங்கள்.

பிறகு, இந்த அடையாளங்களுடைய உச்சபட்ச சாத்தியக்கூறுகள் என்று நீங்கள் உணர்பவற்றையும், உங்களால் உடமையாக்கிக் கொள்ள முடியும் என்று உணர்கின்ற சிறந்த குண நலன்களையும் மீண்டும் எழுதிக் கொள்ள முடியும். உங்களுடைய சிந்தனை எப்போதுமே உங்கள் உச்சபட்ச மமகாரம், உச்சபட்ச அகங்காரம், உச்சபட்ச அன்யகாரம் மற்றும் உச்சபட்ச ஸ்வ-அன்யகாரங்களுடன் ஒருங்கிணைந்ததாக இருக்கட்டும்.

பொதுவாக உங்களைப்பற்றி உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் கருத்து, உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு நீங்கள் காட்டும் அடையாளத்தைவிட மிகவும் குறைவானதாகவே இருக்கும். ஆனால் இந்த முக்கியமான சத்தியத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் உங்களைப்பற்றி ஒரு உயர்வான சிறந்த அடையாளத்தைக் காண்பிக்க முடிகிறதென்றால், அந்த உயர்வான அடையாளம் ஏற்கெனவே உங்கள் பாவனை தளத்தில், உங்கள் சிந்தனை தளத்தில் இருக்கிறது என்பதே அதன் பொருள். ‘நீங்கள்’ என்று எதையெல்லாம் நீங்கள் நினைக்க முடிகிறதோ, அதையெல்லாம் நிதர்சனமாக்கும் ஆற்றலை நீங்கள் ஏற்கெனவே பெற்றிருக்கிறீர்கள்!

குரு மற்றும் சீடர்கள்

உங்கள் மமகாரத்தையும் அகங்காரத்தையும் ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி

1. மமகாரம், அகங்காரம் என்ற தலைப்பிட்ட இரண்டு பத்திகளை உருவாக்குங்கள்.

2. முதல் பத்தியில் நீங்கள் உங்களைப் பற்றிக் கொண்டுள்ள முதல் பத்து உள்-அடையாளங்களை, நம்பிக்கைகளைப் பட்டியலிடுங்கள். உதாரணத்திற்கு, நான் பலஹீனமானவன், நான் நட்புடன் பழகக் கூடியவன், நான் துரதிர்ஷ்டசாலி...

இரண்டாவது பத்தியில் நீங்கள் மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் வெளி-அடையாளங்களைப் பட்டியலிடுங்கள். அதாவது முதல் பத்தியில் எழுதப்பட்டிருக்கும் உள்-அடையாளங்களுக்குப் பதிலாக நீங்கள் மற்றவர்களுக்குக் காட்டும் வெளி-அடையாளங்களை எழுதுங்கள். உதாரணத்திற்கு, நான் பலஹீனமானவன் என்பது உங்கள் உள்-அடையாளமாக இருந்தால், வெளி-அடையாளமாக என்ன காட்டுகிறீர்கள் என்பதை இரண்டாவது பத்தியில் எழுதுங்கள். சில சமயங்களில் உள்-அடையாளமும் வெளி-அடையாளமும் ஒரே மாதிரியாகக் கூட இருக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் உள்-அடையாளம், ‘நான் நட்புடன் பழகக் கூடியவன்' என்று இருந்து, வெளி-அடையாளமாகவும் உங்களை ‘நட்பு மிக்கவராகக் காட்டிக் கொண்டிருந்தால், இரண்டாவது பத்தியிலும் ‘நான் நட்புடன் பழகக் கூடியவன்' என்றே எழுதுங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் உங்களை மற்றவர்களுக்கு எப்படி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அதை எழுதுங்கள்.

3. மமகாரம், அகங்காரம் இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடுங்கள். இரண்டு அடையாளங்களும் ஒத்திசைந்து இருந்தால், அதைப் புறக்கணித்துவிட்டு, அடுத்த அடையாளத்திற்குச் செல்லுங்கள்.

4. எங்கெல்லாம் இரண்டு அடையாளங்களும் முரண்படுகிறதோ அந்த இரண்டையும் இசைவு செய்யுங்கள். மமகாரம், அகங்காரம் இந்த இரண்டினுள் எது உயர்வான கருத்தாக இருக்கிறதோ, அதையே தேர்ந்தெடுங்கள். 5.உதாரணத்திற்கு எங்கெல்லாம் உங்களுடைய வெளி அடையாளம், உள் அடையாளத்தைக் காட்டிலும் உயர்வானதாக இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் உள்-அடையாளத்தை, வெளி அடையாளத்துடன் இசைவு செய்ய முடிவெடுங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்கிறீர்களோ அந்த வெளி அடையாளத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பற்றி உங்களுக்குள் என்ன உணர்கிறீர்களோ அந்த உள் அடையாளத்தை உயர்த்துங்கள். இங்கு, உங்களுடைய வெளி-அடையாளமே அளவுகோலாக இருக்கட்டும்.

6. இதையே ஒவ்வொரு அடையாளத்துக்கும் தொடருங்கள். இரண்டு அடையாளங்களையும் ஒப்பிடுங்கள், இரண்டில் எந்த பண்பு நலன் உயர்வாக இருக்கிறதோ, அதையே தேர்வு செய்யுங்கள். எந்த உள் அடையாளம் உயர்வானதாக இருக்கிறதோ அதனருகில் நட்சத்திரக் குறியீடு இடுங்கள். அதே போல் உங்கள் வெளி-அடையாளங்களில் எவையெல்லாம் உயர்வானவையாக இருக்கின்றனவோ அவற்றுக்கருகில் நட்சத்திரக் குறியீடு இடுங்கள்.

7. உங்கள் உள் அடையாளத்தில் சில சிறந்த குணநலன்கள் இருந்தால், அவற்றுக்கு இணையாக உங்கள் வெளி-அடையாளத்தை உயர்த்துங்கள். அதே போல் உங்கள் வெளிஅடையாளத்தில் சில சிறந்த குணநலன்கள் இருந்தால் அவற்றுக்கு இணையாக உங்கள் உள் அடையாளத்தை உயர்த்துங்கள். இந்தப் பயிற்சி பட்டியலை, உங்கள் உயர் அடையாளத்துடன் இசைவு செய்து கொள்ளும் வரை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

உள் மற்றும் வெளி அடையாளங்களை இசைவு செய்தல்

உள்-அடையாளம்வெளி-அடையாளம்தேர்ந்தெடுக்கவேண்டிய அடையாளம்
நான் பலஹீனமானவன்★நான் பலசாலி★நான் பலசாலி
நான் பிரபலமானவனில்லை★நான் பிரபலமானவன்★நான் பிரபலமானவன்
★நான் பொறுப்பானவன்★நான் பொறுப்பானவன்★நான் பொறுப்பானவன்
★நான் சாமர்த்தியசாலி★நான் முட்டாள்★நான் சாமர்த்தியசாலி

உங்கள் சிந்தனையில் சிரத்தையை

எடுத்து வாருங்கள்

சிந்தனையில் சிரத்தையை எடுத்து வருதலில் இரண்டு படிகள் உள்ளன. முதலில், நீங்கள் உண்மையிலேயே எதை விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். இது, உங்கள் 4 பரிமாணங்களும் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்பதைக் குறித்து சிரத்தையுடன் ஆழ்ந்து ஆராய்ந்து, சிந்திப்பதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும்.

அகங்காரம், மமகாரம், அன்யகாரம், ஸ்வ- அன்யகாரம் இந்த நான்கு அடையாளங்களிலும் உயர்ந்த அடையாளங்களைப் பட்டியலிட்டு, படுக்கைக்கு அருகில், அலுவலக மேஜையில் என்று காலை எழுந்தவுடன் பார்க்கக்கூடிய இடமாக, அல்லது நாள் முழுக்க அடிக்கடி நாம் உபயோகிக்கும் இடமாகப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்குத் தடைகளாக இருப்பவற்றை அதாவது நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ, எப்படி இருக்க விரும்புகிறீர்களோ அவற்றை அடைய விடாமல் உங்களைத் தடுப்பவை எவை என்பதைக் கண்டுபிடியுங்கள். பெரும்பாலான மக்களுக்கு அப்படித் தடையாக இருப்பது சுய-சந்தேகமே. சுய-சந்தேகம், கடந்தகால தோல்விகளின் காரணமாக நமக்குள் எழும் ஒரு எதிர்மறை மனப்பாங்குதான் இந்த சுய-சந்தேகம்.

உங்கள் உச்சபட்ச சாத்தியக் கூறுகளோடு ஒத்திசைந்து செல்லும் எண்ணப் போக்கு களை ஊக்குவியுங்கள், வளப்படுத்துங்கள், வரவேற்பளியுங்கள்; ஒத்திசைந்து செல்லாத எண்ணப் போக்குகளை முழுமைப்படுத்துங்கள். விழிப்புடனும், தீர்மானத்துடனும் அந்த மனப்பாங்கை முழுமைப்படுத்துங்கள். நாள்தோறும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளை அடையவிடாமல் தடுக்கும் அந்த மனப்பாங்குகளைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து, அந்த மனப்பாங்குகளை முழுமைப்படுத்துங்கள்.

நீங்கள் சிரத்தையை வாழ்க்கை முறையாக வாழ ஆரம்பிக்கும்போது, சரியான வழியில் சிந்திக்கத் தெரிந்துகொள்கிறீர்கள்; எதை உங்கள் வாழ்க்கையில் அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு உங்கள் சிந்தனையைப் பயன்படுத்துவீர்கள். மனனம், authentic thinking என்றறியப்படும் இதுவே இந்து மத ஆன்மிகப் பயிற்சியில் இரண்டாவது படியாக விளங்குகிறது.

உங்கள் சிந்தனை ‘சிரத்தை’யில் நிலைக்கட்டும், தொடர்ந்து உங்களை உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி விரிவடையச்செய்யட்டும். உங்கள் எண்ணங்களில் ஆழமிக்க தெளிவை நீங்கள் அடையும்போது, நீங்கள் நினைப்பதையெல்லாம் அது வெற்றியடையச் செய்கிறது, நீங்கள் சிந்தனை சக்தியை விடுவிக்கிறீர்கள்.