வார்த்தைகளின் சக்தியை விடுவித்தல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
—ஒருங்குவித்தல்
உங்களின் வார்த்தைகளே உங்களின் வாழ்வு!
உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றுவது என்பது ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது?
நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், உங்கள் வார்த்தைகளின் மீதும் வாக்குறுதிகளின் மீதும்தான் உங்கள் வாழ்க்கை கட்டப்படுகிறது.
உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள்தான் அடிப்படை கட்டமைப்பு, அதன் மீதுதான் உங்கள் வாழ்வு என்னும் கட்டிடம் கட்டப்படுகிறது! உங்கள் வாழ்க்கையை ஒரு கட்டிடத்துக்கு ஒப்பிட்டால்,

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள்தான் அந்தக் கட்டிடத்திற்கான அஸ்திவாரம்! அஸ்திவாரம், தூசுபடிதலோ துருப்பிடித்தலோ இல்லாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகிறது, 'தூசுபடிதலோ துருப்பிடித்தலோ இல்லாமல்' என்பதன் பொருள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக்கொள்ளும் வார்த்தைகள், விழிப்பற்ற மனப்பாங்குகள் இல்லாமல் இருப்பது அவசியம்.
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுத்துக் கொள்ளும் விழிப்பற்ற வார்த்தைகளே உங்கள் வாழ்வு என்னும் கட்டிடத்தில் படியும் மாசுக்களும், துருவும்! மாசுக்களும், துருவும் படிந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் கட்டிடம் நீண்ட நாட்களுக்கு நீடித்து நிலைக்காது. அது உறுதியான, தூய்மையான மற்றும் நம்பகமான இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதைப் போலவே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகள் மீது உங்கள் வாழ்க்கை கட்டப்படுவதால், உங்கள் வார்த்தைகளும் வாக்குறுதிகளும் விழிப்பற்ற மனப்பாங்குகளோ, உணர்வwidgetற்ற மனப்பாங்குகளோ அற்றதாக இருக்க வேண்டியது

அவசியம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் வாழ்வின் உறுதி அமைகிறது. உங்கள் வார்த்தைகள் விழிப்புமிக்கதாக இருந்தால், உங்கள் வாழ்வும் விழிப்படையும். உங்கள் வார்த்தைகள் விழிப்பற்றதாக இருந்தால், உங்கள் வாழ்வும் விழிப்பறு நிலையிலேயே கழியும்.
அதனால்தான் ஒருங்குவித்தல், உங்கள் வாழ்வின் அஸ்திவாரத்தை வடிவமைக்கிறது. ஒருங்குவித்தல் உங்கள் வாழ்வு சக்தியின் பாகமாகவே இருக்கிறது. நீங்களும் இந்த முழு பிரபஞ்சமும் இயங்குவதே இந்த ஒருங்குவித்தல் சக்தி மீதுதான்!
ஒருங்குவித்தல் என்றால் என்ன?
நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணங்களையும் வாக்குறுதிகளையும் உயிராகவே நினைந்து நிறைவேற்றி, உங்களோடும் வாழ்க்கையோடும் பூர்ணத்வ நிலையை உணர்தல்!
ஒருங்குவித்தல் என்பது நம் வாழ்க்கையில் கொடுக்கும் பெரிய பெரிய வாக்குறுதிகளைப் பற்றியது மட்டுமல்ல. 'நான் நாளையிலிருந்து அதிகாலை எழுந்து யோகப் பயிற்சிகளைச் செய்வேன்' என்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வாக்குறுதியாகட்டும் அல்லது 'நாம் மாலை ஐந்து மணிக்குச் சந்திக்கலாம்' என்று உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் வாக்குறுதியாகட்டும்-
இது போன்ற சின்ன சின்ன வாக்குறுதிகளையும் உள்ளடக்கியதுதான். உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நீங்கள் எந்த மாதிரி வார்த்தையைக் கொடுக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல, அதற்கு மதிப்பளித்து நிறைவேற்றுவதே உண்மையான ஒருங்குவித்தல்.
நிறைவேற்றப்படாத வார்த்தைகள் உங்களுக்குள் தொக்கி நின்றுவிடும்

பல சமயங்களில், நீங்கள்
உங்களுக்கும் மற்றவர்களுக்கும்
கொடுத்துக் கொள்ளும்
வாக்குறுதிகளை ஞாபகம் கூட
வைத்துக் கொள்வதில்லை; ஏனெனில்,
அந்தளவிற்கு அதைப்பற்றி சிந்திக்கக்
கூட இல்லாமல், விழிப்பற்ற
நிலையிலேயே வார்த்தைகளைக்
கொட்டுகிறீர்கள். அது மற்றவர்களிடம்
எந்த விதமான தாக்கத்தை
ஏற்படுத்துகிறது என்பதைக்கூட நீங்கள்
புரிந்துகொள்வதில்லை.
நீங்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டு அதைக் காப்பாற்றவில்லையென்றால், உங்களுக்குள்ளோ அல்லது மற்றவர்களுக்குள்ளோ அது ஒருவித தொடர்விளைவை விட்டுச் செல்கிறது. இந்தத் தொடர்விளைவு உங்கள் சுய-நம்பிக்கையையும் அழித்து விடும். மற்றவர்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அழித்து விடும்.
உங்கள் வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியிலும் - அது உங்கள் உறவுமுறையிலாகட்டும், உங்கள் வியாபாரத்திலாகட்டும், எந்த ஒரு அம்சத்திலும் நீங்கள் விழிப்புணர்வற்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது, வாழ்க்கை உங்களுக்கு எந்தவித பின்விளைவுகளைக் கொண்டு வரப்போகிறது என்பதைப்பற்றி நீங்கள் உணர்வதில்லை. வாழ்க்கை உங்களுக்குத் தொடர்ந்து அதிர்ச்சிகளையே கொண்டுவந்து கொண்டிருந்தால், ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஒருங்குவித்தலில் வாழவில்லை!
ஒருங்குவித்தல்
- உங்கள் வார்த்தைகளுக்குச் சக்தி கொடுக்கிறது
வாக் சக்தியைத் திறக்கும் திறவுகோல் ஒருங்குவித்தல்.
ஒருங்குவித்தல் இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வார்த்தைகளை நிறைவேற்றுவது. மற்றொன்று மற்றவர்களுக்கு கொடுக்கும் வார்த்தைகளை நிறைவேற்றுவது.
சரியான வார்த்தைகள் உங்களிடமிருந்துதான் ஆரம்பமாகின்றன.
நீங்கள் உச்சரிக்கும் வார்ததைகளை, முதலில் கேட்கும் நபர் யார்?
நீங்களே!
உங்கள் வார்த்தைகளை நிறைவேற்றும்பொழுது, உங்களுள் தன்னம்பிக்கை வளரும். உங்கள் சுய-சந்தேகங்கள் கரைந்து விடும். நீங்கள் பலமிக்கவர்களாகி விடுகிறீர்கள்.
மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது, உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வளரும். அந்த நபருடனான உங்கள் உறவு பலப்படும்!


வார்த்தைகளை விழிப்புடன் உச்சரிக்க வேண்டும், ஏன்?
வார்த்தைகளை உணர்வுடன் உச்சரிப்பதும் விழிப்புடன் உபயோகிப்பதும், அந்த வார்த்தைகள் உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
சரியான வார்த்தைகளை உபயோகிப்பது, உடனடியாக உங்களின் சிந்தனை முறையையும், உங்களைப் பற்றிய உணரும் முறையையுமே மாற்றிவிடும். சரியான வார்த்தைகளைக் கொண்டு ஒரு சூழ்நிலையைக் கையாளும்போது, அதற்கு பதில்செயல் புரியும்பொழுது, உங்கள் உடல் மொழியில் கூட ஒரு மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கவனிக்க முடியும். சரியான வார்த்தைகள், உங்கள் உள் உலகை முரண்பாடுகளற்ற அமைதி நிலையில் வைக்கும்; உங்கள் உடல் நலத்தை மேம்படுத்தும்; வாழ்நாளை நீட்டிக்கும்! சரியான வார்த்தைகளை உருவாக்கி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம், உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தபடி உங்கள் வாழ்வை நீங்களே வடிவமைத்துக் கொள்ளலாம்.

வார்த்தைகளின் சக்தி மூலம் உங்கள் நிஜ வாழ்வை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்
நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளே நீங்கள்!
உங்களிடமும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசும் வார்த்தைகளாகவே நீங்கள் ஆகிறீர்கள். “நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன், நான் நோய்வாய்ப்பட்டுள்ளேன்,” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால், நீங்கள் மிக எளிதாக நோயில் விழுவீர்கள். அதேபோல, தொடர்ந்து நீங்கள், “நான் ஆரோக்யமாக இருக்கிறேன். நான் ஆரோக்யமாக இருக்கிறேன்,” என்று சொல்லிக் கொண்டிருந்தால், உங்களுடைய துணிவும் சக்தியும் விழிப்படைந்துவிடும். நீங்கள் ஆரோக்கியமடைந்து விடுவீர்கள்! உங்கள் உடல் மன அமைப்பில் பிரபஞ்ச சக்தி விழிப்படைந்து, உங்கள் பிரகடனங்களை நிதர்சனமாக்கும். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் நீங்கள் உங்கள் நிதர்சன வாழ்வைச் சரியான வார்த்தைகளுடன்தான் தொடங்குகிறீர்கள்! உங்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதே இது!

உங்களை நோக்கிய சரியான வார்த்தைகள் ➔ மற்றவர்களை நோக்கிய சரியான வார்த்தைகள் உங்களை நோக்கிய தவறான வார்த்தைகள் ➔ மற்றவர்களை நோக்கிய தவறான வார்த்தைகள்
வார்த்தைகளின் சக்தியைப் பற்றி விளக்கும் ஒரு சின்ன கதை:
ஒரு துறவி, ஒருமுறை ஒரு கிராமத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு குடிசையைக் கடந்து செல்கையில், அக்குடிசையிலிருந்து வெளிவந்த ஒரு பெண்மணி அத்துறவியைக் கண்டார். உடனே அவர் அந்தத் துறவியை வணங்கி, நோயால் இறந்துகொண்டிருக்கும் தம்முடைய குழந்தையைக் குணப்படுத்தும்படி மன்றாடி வேண்டினார். அத்துறவி அக்கிராமத்திற்குப் புதியவராகையால், அவர் ஏதாவது அதிசயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஆர்வத்தில் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது. அந்தப் பெண்மணி தம்முடைய குழந்தையை வீட்டிலிருந்து வெளியே தூக்கி வந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “மருந்துகள் கொடுத்தும் சரியாகாத ஒரு நோய், உங்கள் பிரார்த்தனை மூலம் சரியாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?” என்று கூக்குரலிட்டார். உடனே அந்தத் துறவி அவரைப் பார்த்து, “முட்டாளே வாயை மூடு. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ அறிய மாட்டாய்!” என்று கத்தினார். ‘முட்டாள்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் கோபத்தால் கொந்தளித்துப் போனார். அவருடைய முகம் சிவந்து விட்டது! “என்ன ஒரு தைரியம் உனக்கு, என்னையே அவமானப்படுத்துகிறாயா!” என்று கூச்சலிட்டான். அந்தத் துறவி சிரித்துக் கொண்டே அமைதியுடன் அவரை நோக்கிக் கேட்டார். “ஒரு வார்த்தை, இந்தளவுக்கு உனக்குள் கோபத்தைமூட்டுமானால், மற்றொரு வார்த்தை ஏன் குழந்தையைக் குணப்படுத்தாது?”
இதுவே வார்த்தைகளின் சக்தி!

கேட்டல், உங்கள் வார்த்தைகளுக்கு ஒருங்குவித்தலைக் கொண்டு வரும்
உண்மையிலேயே, உங்கள் வார்த்தைகளை நீங்களே 'கேட்ட' கடைசித் தருணம் எது?
உண்மையில், நாம் ஒருபோதும் 'கேட்பதே' இல்லை. நம்முடைய வார்த்தைகளையும் சரி, மற்றவர்களுடைய வார்த்தைகளையும் சரி, நாம் கேட்பதே இல்லை! உங்கள் வார்த்தைகளையே நீங்கள் கேட்க ஆரம்பிக்கும்பொழுது, இயற்கையாகவே நீங்கள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வார்த்தைகளைப் பற்றிய விழிப்புணர்வுள்ளவர்களாகி விடுவீர்கள்; மற்றவர்கள் உங்களிடம் பேசும் வார்த்தைகளையும் ஒருங்குவித்தலுடன் கேட்கும் திறமை உடையவர்களாகி விடுகிறீர்கள்.


கேட்டல்
'கேட்டல்' என்பது நேரடியாகவே நிதர்சனத்தை உள்ளது உள்ளபடியே கையாள்வதுடன் தொடர்புடையது. சரியான 'கேட்டல்' இருந்தால், உங்களுடைய விழிப்பற்ற சொந்த கருத்துக்களையும், தீர்மானங்களையும் உருவாக்காமல் நேரடியாக உள்ளதை உள்ளபடியே அணுகுவீர்கள். 'கேட்டல்' இல்லையென்றால், அந்தச் செய்திகளை முழுமையாகப் புரிந்துணர்வதற்கு முன்பே, ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுவீர்கள்.
அதனால்தான், ஹிந்து மதத்தில் முதல் ஆன்மிகப் பயிற்சியாக இருப்பது சிரவணம் - ஒருங்குவிக்கப்பட்ட கேட்டல்
என்னால் வார்த்தையை நிறைவேற்ற முடியாவிட்டால் என்ன ஆகும்?

உங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற
நீங்கள் உங்களால் ஆன எல்லா முயற்சி
களைப் போட்டும், உங்களால் அதை
நிறைவேற்ற முடியவில்லையென்றால்,
அதை முன்கூட்டியே உங்களுடனும்,
மற்றவர்களுடனும் தெரிவித்து
விடுவதன் மூலம், நீங்கள் உங்களுடனும்
மற்றவர்களுடனும் முறையேற்றிக்
கொள்ளலாம்.
பிறகு நீங்கள் அந்த வாக்குறுதியைப்
பற்றிய குற்றவுணர்ச்சியோ, வலியோ,
தொக்கி நிற்கும் நினைவுகளோ
இல்லாமல், அடுத்தடுத்து தொடர்ந்து
சென்றுகொண்டே இருங்கள்!
ஒன்று, சொன்ன வார்த்தையை செய்துமுடித்து நிறைவேற்றுங்கள்; அல்லது செய்துமுடிக்க முடியவில்லையென்றால், அதை முன்கூட்டியே உங்களுடனும், மற்றவர்களுடனும் தெரிவித்து முறையேற்றுங்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், முறையேற்றுதல்கூட ஒருங்குவித்தல்தான்!
உங்களுக்குள்ளும், மற்றவர்களிடமும் நீங்கள் பேசிய வார்த்தைகளை முழுமைப்படுத்துதலை நோக்கி ஒழுங்குப்படுத்துவதே ஒருங்குவித்தல் எனப்படுகிறது !


முழுமைப்படுத்துதல்
- முரண்பாடற்ற வாழ்க்கைக்கான ஒரு நுட்பம்
முழுமைப்படுத்துதல் என்றால் என்ன?
முழுமைப்படுத்தல் என்பதன் பொருள், கடந்த கால வாழ்க்கையின் நிகழ்வுகள், வார்த்தைகள், செயல்கள், நினைவுகள்- அவை உங்களுடையதாக இருந்தாலும் சரி, மற்றவர்களுடையதாக இருந்தாலும் சரி, அவற்றைப் பற்றிய தொக்கிய விளைவுகள் இல்லாமல் வாழ்வதும் செயல்புரிவதும்தான்.
‘தொக்கிய விளைவுகள் இல்லாமல்’ இருக்க வேண்டுமென்பதன் பொருள், நீங்கள் கடந்த காலத்தையே மறந்து விட வேண்டும் என்பது அல்ல. நீங்கள் முழுமையுடன், நிறைவுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் கடந்த கால நிகழ்வுகளையும் செயல்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்குள் வலியையோ, கோபத்தையோ, குற்றவுணர்ச்சியையோ ஏற்படுத்துவதற்குரிய சக்தியைப் பெற்றிருக்காது.
உங்களுக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் அபூர்ணத்துவத்தை உருவாக்காமல் இருப்பதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் ஒரே அழகான வழி ஒருங்குவித்தலே!
பூரணத்துவத்திற்கான இரண்டு நுட்பங்கள்:
1. தொடர்ந்து முழுமைப்படுத்திக் கொண்டேயிருப்பதற்கான நுட்பம்
வாழ்க்கையை அது எப்படி நிகழ்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அது குறைவுணர்வே. அதனால் உங்களுக்குள் துக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் உங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி, அதை மீண்டும் அப்படியே வாழ்ந்து, அதிலிருந்து உங்களை நீங்களே விடுபடுத்திக்கொள்ளும்போது நிறைவுணர்வு ஆரம்பிக்கிறது.
கடந்த காலத்தை மாற்றியமைக்க,
உங்களால் முடிந்த ஒரே வழிமுறை
நிறைவுப்படுத்துதலே!
✦ கண்ணாடியின் முன் சௌகரியமாக அமர்ந்துகொள்ளுங்கள்.
✦ உங்களுடைய முழு உருவத்தையும்
பார்க்கக்கூடிய அளவிற்கு கண்ணாடி
பெரியதாக இருக்க வேண்டும்.

✦ கண்ணாடியில் தெரியும் உங்களுடைய பிம்பத்தை கண்ணோடு கண்ணாகப் பாருங்கள்.
✦ ஆழமாக, கண்ணோடு கண் தொடர்பு கொண்ட அந்தக் கணமே நடக்கும் முதல் விஷயம் உங்கள் கண்களில் கண்ணீர்த்துளிகள் வழிய ஆரம்பிப்பதுதான்.
✦ அதை அனுமதியுங்கள்.
✦ கண்ணாடி முன் அமர்ந்து உங்களுக்கு நீங்களே என்னென்ன சொல்ல விரும்புகிறீர்களோ, அதைப் பேசுங்கள்.
✦ உங்களுடன் நேரத்தை செலவழியுங்கள். பேசுங்கள். பேசுங்கள்.
✦ இந்தக் குறையுணர்வை, இந்தக் குறை புரிந்துணர்தலை உங்களுக்குள் உருவாக்கிய முதல் நிகழ்வை அடையாளம் காணுவதற்கு முயற்சி செய்யுங்கள். இதுவே, உங்கள் துக்கங்களுக்கெல்லாம் காரணமான மூல மனப்பாங்கை உருவாக்குகிறது.
✦ உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முதன் முதலாக முரண்பாடுகளை அனுபவித்த சில நிகழ்வுகளுக்குள் செல்லுங்கள் இந்த நிகழ்வுகள் சரியாக உங்கள் 3 வயதிலிருந்து 5 வயதிற்குள் நடந்திருக்கலாம். அந்த நிகழ்வை மீண்டும் வாழுங்கள்.
✦ கண்ணீர் வந்தாலும், கோபம் வந்தாலும், அவற்றை அனுமதியுங்கள்.
✦ உங்கள் கடந்தகாலத்தை நேருக்கு நேர் துணிவுடன் சந்திக்கும்பொழுது வலி மறைந்து விடுகிறது, கோபம் மறைந்து விடுகிறது! கோபம் மறையும்பொழுது அது அன்பாக மாறுகிறது. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சக்தி, கோபமாக வெளிப்படும்போது, அந்தச் சக்தியிலிருந்து கோபத்தை விலக்கி விட்டால், அது அப்படியே அன்பாக மாறிவிடும்.
மூலமனப்பாங்குகளின் மீது வேலை செய்வதன் மூலம் மட்டுமே, உங்களுள் நிறைவுத் தன்மை நிகழ்ந்துவிடுவதில்லை. அந்த மூலமனப்பாங்கிலிருந்து முளைத்த ஒவ்வொரு நிகழ்வையும் நீங்கள் நிறைவுசெய்ய வேண்டும். நீங்கள், உங்கள் நினைவுக்கு எட்டியவரை பின்னோக்கிச் சென்று, உங்கள் குழந்தைப் பருவ நிகழ்வுகளை மேலே எடுத்து வாருங்கள். அதை முழுமைப்படுத்துங்கள். இதேபோல் ஒவ்வொரு மூலமனப்பாங்கையும், அதிலிருந்து இன்றுவரை முளைத்த நிகழ்வுகளின் பதிவுகளையும் நிறைவுசெய்யுங்கள்.

2. 'சட்டென்று' தானாகவே நிகழ்கின்ற நிறைவுணர்விற்கான நுட்பம்
நிறைவுணர்வு என்பது, 'உங்கள் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்பதைக் குறிக்கவில்லை; நமக்கு வாழ்க்கை எப்படி நிகழ்கிறதோ, அதற்கு எதிர்ப்புக்காட்டாமல் இருப்பதையே குறிக்கிறது.
நம்முடைய எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் மூல காரணம், 'வாழ்க்கை இப்படி இருக்கக்கூடாது' என்று நாம் கொண்டிருக்கும் கருத்துதான்.
நாம் இந்தக் கருத்தை வைத்திருப்பதால்தான், நம் வாழ்நாள் முழுவதும், 'ஏன், ஏன், ஏன்' என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கிறது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நல்லவர்களுக்கு ஏன் கெட்டதே நடக்கிறது? என்று தொடர்ந்து 'ஏன், ஏன், ஏன்' என்று நாம் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.
தன்னிச்சையான (Spontaneous) அல்லது உடனடியான (instant) நிறைவுணர்வு என்பதன் பொருள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்களுக்குள் முரண்பாடுகளை, மனப்போராட்டங்களை உருவாக்கும் தவறான புரிதலைக் கீழே போடுங்கள்.
இது சாத்தியம்!
ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது? என்று கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக, இப்படிக் கேட்க முடிவு செய்யுங்கள்: "இதுதான் வாழ்க்கை! இப்போது அடுத்து என்ன செய்வது?" இதை ஏற்றுக்கொண்டு, அடுத்தடுத்து சென்று கொண்டிருப்பதா? இதை நிராகரித்து விட்டு, அடுத்தடுத்து சென்று கொண்டிருப்பதா? இல்லையென்றால், நான் நினைத்தபடி, விரும்பியபடி அதை மாற்றியமைப்பதா?


இந்தப் புரிந்துணர் தலின் அடிப்படையில், நீங்கள் எந்த ஒரு முடிவை எடு த்தாலும், அது சரியே. நீங்கள் முழுமைத்தன்மையிலிருந்து, நிறைவுணர்விலிருந்து செயல்படும்பொழுது, நீங்கள், உங்கள் உள் உலகிலோ அல்லது வெளி உலகிலோ நிகழும் எந்தவிதமான குழப்பங்களையும், முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கான ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்.
முழுமைமைப்படுத்துதல், உங்களுக்கு என்ன செய்கிறது?
பூரணத்துவ க்ரியா செயல்முறையின்போது, உங்களுக்குள் வலி ஏற்படுத்திய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் வாழ்வதன் மூலம், உங்கள் மீதான தங்கள் கட்டுப்பாட்டை அவை இழந்து விடுகின்றன.
தன்னிச்சையான (spontaneous), அழுத்தம் அற்ற வாழ்க்கையை வாழ்வதற்கான ஆற்றலை மீண்டும் அடைகிறீர்கள்.
நீங்கள் ஒருங்குவித்த மனிதராக வாழ ஆரம்பிக்கிறீர்கள்; வார்த்தைகளின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள்.
நீங்கள், 'ஒருவராக', ஒருங்கிணைக்கப்பட்ட மனிதராக ஆகும்போது உங்களுடைய உள்-உலகம், உடல் மற்றும் மன அமைப்பு அனைத்தும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
உங்கள் வார்த்தைகளுக்குப்
பொறுப்பெடுத்துக் கொள்ளுதல்
உங்கள் வார்த்தைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளல் என்பது 'தர்ம'த்தைப் பயிற்சி செய்வதாகும், அதாவது சரியான 'வாழ்வியல் முறை'யைப் பயிற்சி செய்வதாகும்.
மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தர்மத்திற்கான ஒரு விளக்கம்: உங்களுக்குச் செய்யப்படும்போது உங்களுக்கு வலியை ஏற்படுத்தும் செயல்களை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். இதுவே தர்மம்!
ஒவ்வொரு முறையும் இந்த தர்மத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ‘இந்த வார்த்தைகள் எனக்கு வலியை ஏற்படுத்துமா அல்லது மற்றொருவருக்கு ஏற்படுத்துமா?’ என்று உங்களுக்குள் நீங்களே ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் மற்றவர்களை நோக்கியும் சொல்லும் வார்த்தைகளுக்குள்ள சக்தியைப் பற்றியும், அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் எப்போதுமே விழிப்புடன் இருங்கள். சரியான வார்த்தைகளை உச்சரிப்பதும், அவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பெடுத்தலும் உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளின் சக்தியை விடுவிக்கும்.
பிரகடனப்படுத்தலின் சக்தி
ஒருங்குவித்தலோடும், நிறைவுணர்வோடும் இருக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை வலுப்படுத்த வேண்டுமானால், அதை உங்களுக்கு நீங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள்; மற்றவர்களிடமும் பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடைய தீர்மானத்தைப் பிரகடனப்படுத்தும்போது, அந்தப் பிரகடனம், சிதறிப்போய்க்கிடக்கும் உங்கள் சக்திகளை ஒன்று திரட்டுவதற்கும், ஒன்று திரட்டப்பட்ட அந்த சக்தியை உங்கள் தீர்மானங்களை நிதர்சனமாக்குவதற்குரிய பொறுப்பான செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்துவதற்கும் உதவுகிறது.
நீங்கள் தொடர்ந்தும் விழிப்புடனும் உங்கள் வார்த்தைகளைச் சரியான செயல்களுடன் ஒருங்கிணைக்கும்போது, உங்கள் வார்த்தைகள் சக்திமிக்கவையாக ஆகின்றன. நீங்கள் வாக்கு சித்தி வாய்க்கப் பெறுவீர்கள். நீங்கள் சொல்லும் எந்த ஒன்றையுமே நிதர்சனமாக்கும் வல்லமையை அடைகிறீர்கள். இதுவே வாக்கு சக்தியின் உச்ச அனுபவம்.