உங்களின் நான்கு உள் சக்திகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் வாழ்க்கையிலிருக்கும் முரண்பாடு, மன அழுத்தம், துக்கம் ஆகியவற்றை என்றென்றைக்குமாக நீக்கிவிடுவதற்கான வழிமுறை ஒன்று இருக்கிறது என்று தெரியவந்தால்,
என்ன செய்வீர்கள்?
கேளுங்கள்: நீங்கள் அதைச் செய்ய முடியும்!
உண்மையில், உங்களுடைய விருப்பங்களை நிதர்சனமாக்கிக்கொள்ளும் சக்தி உங்களிடம் இருக்கிறது. சுய உணர்வுருமாற்றம் அடைவதற்கான உள்ளாற்றல் உங்களிடம் தான் புதைந்துள்ளது. இது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையுமே வளப்படுத்தும்; உடல்நலத்திலிருந்து செல்வத்திலிருந்து அர்த்தமுள்ள உறவுகளிலிருந்து நீடித்த மகிழ்ச்சியான வாழ்வுவரை, அனைத்தையுமே உங்களுக்கு எடுத்துவரும்.
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் குண்டலினி எனப்படும் அளப்பறிய உள்ளாற்றல் சக்தி உறைந்துள்ளது. குண்டலினி என்பது உங்களால் இதுவரை பயன்படுத்தப்படாத, நீங்களே அறிந்துகொள்ளாத, ஆனால் உங்களுக்குள்ளேயே சுருண்டு படுத்துக்கிடக்கும் உங்களுடைய சொந்த சக்திதானே தவிர, வேறு ஏதோ ஒன்று அல்ல; இதைப்பற்றி நீங்கள் அறியாதுகூட இருக்கலாம்! குண்டலினி சக்தி, உங்கள் மூலம் நான்கு சக்திகளாக, நான்கு வெவ்வேறு ஊற்றுக்களாக வெளிப்படுகிறது, அதை 4 ஆற்றல்கள் என்றும் சொல்லலாம். இந்த நான்கு சக்திகளுமே குண்டலினி சக்தியின் வேறு வேறு வெளிப்பாடுகள்தான்.
உடல்நலம், வெற்றி, நிலையான மகிழ்ச்சி இவற்றுக்கான திறவுகோல், தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவே இருக்கும் இந்த நான்கு சக்திகளையுமே விடுவிப்பதுதான்.
உங்கள் வாழ்க்கையில் இந்த நான்கு
சக்திகளையுமே நீங்கள் அன்றாடம்
பயன்படுத்திக் கொண்டிருந்தாலுமே,
அவற்றை நீங்கள் விழிப்புடனோ தெளிவான
நோக்கத்துடனோ பயன்படுத்துவதில்லை.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், மின்சாரம்
அல்லது காற்று சக்திபோல இந்த நான்கு
சக்திகளுமே மிக உயர்ந்த சக்திகள்தான்.
அவற்றை நீங்கள் சரியான முறையில்
கையாண்டீர்களானால், நீங்கள் விரும்புகிற
அனைத்தையும் அவற்றால் உங்கள்மீது அள்ளி
சொரியமுடியும். ஆனால் அவற்றை நீங்கள்
சரியான வழியில் கையாளவில்லையென்றால்,
அவை தொடர்ந்து எதிர்மறை தாக்கங்களையே
உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.
இவற்றைச் சரியான வழியில்
கையாள்வதற்கான நுட்பம்: 'உங்களுக்குள்
சரியான உணர்வை உருவாக்குவதும்,
உங்களுடைய சிறந்த மற்றும் உச்சபட்ச
சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தி
நடைமுறைப்படுத்துவதும்தான்!'
உங்களுக்குள் சரியான உணர்வை நீங்கள் உருவாக்கும்போது நீங்கள் விரும்புகிற ஒவ்வொரு நிகழ்வுமே, தானாகவே மிக எளிதாக உங்கள் வாழ்வில் வந்துசேரும், எந்தவித ஒரு சிரமமுமின்றியே அவை உங்கள் வாழ்வில் நிகழத் துவங்கும். நீங்கள் செய்வதனைத்தும் வெற்றிபெறும். இந்த சக்திகளை சரியான வழியில் உபயோகிப்பது எப்படி, பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளும்பொழுது, அந்தக் கணமே நீங்கள் உங்கள் வாழ்வை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்வையும் உணர்வுருமாற்றம் பெறச் செய்வீர்கள்.


நான்கு உள்ளாற்றல்களை சந்தியுங்கள்
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்களுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் உங்களுள் 4 அளப்பறிய பேராற்றல் மிக்க சக்திகள் உறைந்துள்ளன. அவை உங்கள் வாழ்வின் 4 வெவ்வேறு பரிமாணங்களுடன்- உங்கள் வார்த்தைகள், உங்கள் சிந்தனை, உங்கள் உணர்வுகள் மற்றும் உங்கள் வாழ்வுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இந்த 4 பரிமாணத்திலும், உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறுகளை விழிப்படையச் செய்யும்போது, அது உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மாறுகிறது; உங்கள் வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதாக மாறுகிறது.
நீங்களே பார்க்க முடிகின்ற உங்கள் 4 சக்திகள்: வார்த்தைகளின் சக்தி - சமஸ்கிருதத்தில் வாக் சக்தி சிந்தனை சக்தி- சமஸ்கிருதத்தில் மனோசக்தி உணர்வின் சக்தி- சமஸ்கிருதத்தில் ப்ரேம சக்தி வாழ்வின் சக்தி- சமஸ்கிருதத்தில் ஆத்ம சக்தி என்கிறோம்.

4 சக்திகளை விடுவிக்கும்போது என்ன நிகழ்கிறது?

■ வார்த்தைகளின் சக்தியை விடுவிக்கும்பொழுது, உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான, ஆற்றல் வாய்ந்த, பயன்மிக்க வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தன்னிச்சையான புத்திசாலித்தனத்தைப் பெறுகிறீர்கள்.
■ சிந்தனை சக்தியை வெளிப்படுத்தும்பொழுது, உங்கள் வேலையில், உறவில், கல்வித்துறையில் மற்றும் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையே வெற்றிபெற, உங்கள் எண்ணங்களை ஒருங்குவிக்க உங்களால் முடியும். You will be able to focus your thoughts to achieve success in your job, relationships, education, finances and life itself.
■ உங்களை வலிமையானவராக்கும் ஆற்றல் மிக்க பொறுப்புக்களை எடுத்துச் செயலாற்றுவதன் மூலம், உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி உணர்வின் சக்தி போதிக்கிறது.
■ மற்றவர்களுக்காக வாழும்போதுதான், மிகச்சி றந்த வெகுமதிகள் உங்களை நோக்கி வருகின்றன என்பதை நீங்கள் புரிந்துணரும்பொழுதுதான், உண்மையிலேயே நீங்கள் வாழ்வின் சக்தியை உணர்ந்து மகிழ்கிறீர்கள்.

தத்துவங்கள்: - 4 சக்திகளுக்கான திறவுகோல்கள்
4 சக்திகளுமே, தத்துவங்கள் எனப்படும் 4 ஆன்மிகக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தத்துவமுமே, உங்களுக்குள் உறைந்திருக்கும் அதனதுக்குரிய சக்தியைத் திறக்கும் திறவுகோலாகத் திகழ்கிறது.
■ நீங்கள் ஒருங்குவித்தல் என்னும் தத்துவத்தை உங்கள் வாழ்வின் பாகமாக்கும்பொழுது, நீங்கள் வாக்சக்தியைப் பெறுகிறீர்கள். உங்களுக்கு வாக்கு சித்தி வாய்க்கிறது.
■ நீங்கள் சிரத்தையைப் பயிற்சி செய்யும்போது, சிந்தனை சக்தி உங்களுக்குத் திறக்கப்படுகிறது.
■ நீங்கள் பொறுப்புகளை எடுத்துச் செயலாற்றும்போது, உங்களுக்கு உணர்வின் சக்தி சாத்தியமாகிறது.
■ நீங்கள் மற்றவர்களை வளப்படுத்த முடிவு செய்த அக்கணமே, வாழ்வின் சக்தியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
| ஒருங்குவித்தல் | வார்த்தைகளின் சக்தி | | சிரத்தை | சிந்தனை சக்தி | | பொறுப்பெடுத்தல் | உணர்வின் சக்தி | | வளப்படுத்துதல் | வாழ்வின் சக்தி |

