நான்கு சக்திகளை உணர்தல் - நிறைவுப்படுத்துதலும் படைத்தலும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களை நிறைவுசெய்ய பிரபஞ்சம் காத்துக் கொண்டிருக்கிறது
பிரபஞ்சம் ஒருபோதும் உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்பதில்லை என்றோ அல்லது உங்கள் கனவுகளைப்பற்றி கவலைப்படுவதில்லை என்றோ நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் கனவு காணத்தொடங்கியவுடன், உங்களுடன் இணைந்து பிரபஞ்சமும் கனவு காணத்தொடங்கிவிடுகிறது. நீங்கள் கனவு காணத்தொடங்கியவுடன், வாழ்க்கையும் உங்களைப் பற்றிய தன்னுடைய கனவுகளைக் கட்டமைக்க ஆரம்பித்து விடுகிறது. பிரபஞ்சம் உங்களை நிறைவுசெய்யக் காத்திருக்கிறது. அது உங்கள் மூலமாகக் கனவு காண்கிறது. அவற்றை நிதர்சனமாக்குவதற்கு உங்களுக்காக அது ஏங்குகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தை ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ ஆவதற்கு எப்படி ஏங்குவாளோ, அப்படி நீங்கள் உங்கள் உச்சபட்ச சாத்தியக்கூறாக மாறுவதற்கும், உங்களுடைய சொந்த இயல்பாக மாறுவதற்கும் பிரபஞ்சம் ஏங்குகிறது. வாழ்க்கை உங்களுக்காகக் கொண்டிருக்கும் கனவுகள், உங்களுக்காக நீங்கள் கொள்ள முடிந்த கனவுகளைக் காட்டிலும் நூறு மடங்கு பெரியது.
அதனால் உங்களுடைய சிறந்த சாத்தியக் கூறுகளைக் கனவு காணுங்கள்: அவற்றைப் பிரகடனப்படுத்துங்கள். உங்கள் பிரகடனங்கள் ஏற்கெனவே நிதர்சனமாகிவிட்டதாகவே நினைக்கவும், வாழவும், செயல்படவும் ஆரம்பியுங்கள். அதைச் செய்யுங்கள்! பிறகு, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளின் சக்தியையும், சிந்தனை சக்தியையும், உணர்வின் சக்தியையும், வாழ்க்கையின் சக்தியையும் புரிந்துகொள்வீர்கள்! இதுவே தர்மம் - உங்களை, பிரபஞ்ச ஓட்டத்தோடு ஒருங்கிணைத்துக் கொள்ளுதல்.
பிரபஞ்ச ஓட்டத்தோடு இசைவித்துக்கொண்டு வாழும்போது, நீங்கள்...
★ சிரத்தையும், சக்தியும், ஆனந்தமும் கொண்ட ஜீவனாகிறீர்கள். ★ வாழ்க்கைக்கு தன்னியலார்ந்த வழியிலும் (spontaneously), அமைதியாகவும் பதில் செயல்புரிவீர்கள். ★ உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிசயங்களை நிகழ்த்தும் அளவிற்கு வல்லமையுடையவராகிறீர்கள்.


உங்கள் வாழ்வில் அதிசயங்களை நிகழ வையுங்கள்
நீங்கள் உயர்நிலை
விழிப்புணர்வை அடையும்போது
உங்களுக்குள் செயற்படுத்த
தூண்டப்படுகின்ற அசாதாரணமான
ஆன்மிக சக்திகளை சித்திகள்
என்கிறோம். 4 சக்திகளுடன்
நீங்கள் தொடர்ந்தும்,
சிரத்தையுடனும் வேலை
செய்யும்போது, இந்த சித்திகள்
உங்களுக்குள் விழிப்படையும்.
உங்கள் வார்த்தையில், எண்ணத்தில், உணர்வில், செய்யும் செயல்களில் தர்மத்தைச் சேருங்கள். 4 சக்திகளுடன் நீங்கள் தர்மத்தைச் சேர்க்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் அசாதாரணமான ஒருங்குவித்தலில் வாழும்போது, அந்தப் பிரபஞ்சமே உங்கள் வார்த்தைகளை நிறைவேற்ற ஓடோடி வருகிறது!
'சரியான உணர்வை' உருவாக்குவதைப்பற்றிய நகைச்சுவையான, ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சின்ன கதை.
அசுர இளவரசனான சிறுவன் பிரஹ்லாதன், விஷ்ணுவின் சிறந்த பக்தன். இது அவனுடைய தந்தையும் அசுர அரசனுமான ஹிரண்யகசிபுக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது. ஏனென்றால் அவன், கடவுளுக்குப் பதிலாக தன்னையே வணங்க வேண்டுமென விரும்பினான். ஒரு நாள் ஹிரண்யகசிபு, பிரஹ்லாதனை நோக்கி ஒரு சவால் விட்டான். அரண்மனையிலிருந்த தூண்களைக் காட்டி, நீ உன்னுடைய கடவுள் விஷ்ணு எல்லா இடத்திலும் இருப்பதாகச் சொல்கிறாயே, அப்படியானால் அவன் இங்கிருக்கும் தூண்களில் இருக்கிறானா? என்று கேட்டான்.
" ஆம், அவர் இங்கிருக்கும் தூண்களிலும் இருக்கிறார்!" என்றான் பிரஹ்லாதன்.

"ஓ, அப்படியா! எந்தத் தூணில் விஷ்ணு
இருக்கிறான் என்று சொல், அதைப்
பிளக்கிறேன், அவன் வருகின்றானா
என்று பார்க்கலாம்," என்று ஹிரண்யகசிபு
கர்ஜித்தான்.
பிரஹ்லாதன், தூணைச் சுட்டிக் காட்ட தன் பிஞ்சுக்கரத்தைத் தூக்க ஆரம்பித்தான்.
ஹிரண்யகசிபு பிரஹ்லாதனைக் கேள்வி கேட்கும்போது, விஷ்ணு தன் இருப்பிடமான வைகுண்டத்தில் ஓய்வாகப் படுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. பிரஹ்லாதனின் கரம் அசைய ஆரம்பித்ததும், விஷ்ணு துள்ளிக் குதித்து எழுந்து, பூமியை நோக்கி ஓட ஆரம்பித்தார்! இதைக் கண்டு அதியத்துப்போன அவர் மனைவி லட்சுமி, "என்ன நடந்தது, இவ்வளவு வேகமாகப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
"என்னுடைய பக்தன், ஒரு தூணைச்சுட்டிக் காண்பிக்கப் போகிறான். அவன் எந்த தூணைச் சுட்டிக் காண்பிக்கிறானோ, அந்தத் தூணில் நான் நுழைந்தாக வேண்டும்!" என்றார்.
களங்கமற்ற பிரஹ்லாதனின்
ஒருங்குவித்தலும் சிரத்தையும், அவன்
விரல் எங்குச் சுட்டிக் காண்பிக்கிறதோ
அங்கு விஷ்ணு தோன்றியே
ஆகவேண்டும் என்கிற அளவுக்கு
ஆழமானது! சக்தி மிக்க சாத்தியத்தை,
சாத்திய உணர்வை
நீங்கள் உருவாக்கும்பொழுது, அந்த
இடத்தில் தெய்விகம் இறங்கி வருகிறது,
உங்களுக்காக!

விருப்பத்தை நிதர்சனமாக்குதல்
கேளுங்கள்! ஏதாவது ஒன்று நிகழ்வதற்கான உணர்வை உருவாக்கும்பொழுதெல்லாம், துரதிர்ஷ்டவசமாக அது நிதர்சனமாகுமா என்ற சந்தேகத்தையும், அதன் சாத்தியத்தைப் பற்றிய சந்தேகத்தையும் சேர்த்தே உருவாக்குகிறீர்கள்! இதுபோன்று நீங்கள் உருவாக்கிய உணர்வைப் பற்றி சந்தேகப்படும்போது, நீங்கள் ஏற்கெனவே அந்த உணர்வை களங்கப்படுத்தி விட்டீர்கள்.

குறிப்பிட்ட ஒரு நோயால் நீங்கள் துக்கப்படுகிறீர்களென்றால், பாதிக்கப்படுகிறீர்களென்றால், நீங்கள் ஆரோக்கியமானவராக ஆவதற்கான உணர்வை உருவாக்குங்கள். ஆனால் நீங்கள் சரியான உணர்வை உருவாக்கத் தொடங்கியவுடனேயே, உங்களுக்குள் எல்லாவிதமான சந்தேகங்களையும் - உணர்வு தளத்தின் சக்தியைப்பற்றிய சந்தேகம், உங்கள் திறமையைப் பற்றிய சந்தேகம் - என்று உங்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு எல்லா விதமான சந்தேகங்களையும் கொள்கிறீர்கள். சரியான உணர்வை உருவாக்கத் தொடங்கியவுடனேயே, உங்களுடைய கடந்த கால தோல்விகள் அனைத்தும் உங்கள் முன் வந்து நிற்கும், அரக்கர்கள் போல!
மிகவும் துரதிர்ஷ்டமிக்க ஒரு விஷயம் - நீங்கள் உணர்வுதளத்தின் சக்தியைப் பற்றி சந்தேகம்கொள்வதுதான். அதனால் முதலில், சரியான உணர்வை உருவாக்குவதிலுள்ள சிக்கல்களைத்தான் முழுமை செய்ய வேண்டும். அந்த நிறைவுணர்விலிருந்து சரியான உணர்வை உருவாக்குங்கள்.
நிறைவுணர்விலிருந்து படைத்தலுக்கான நுட்பம்
இப்போது நான், உங்களுள் சரியான உணர்வை உருவாக்குவது பற்றியும், உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவதைப் பற்றியும் விளக்குகிறேன், மேலும் அந்த அனுபவத்தையும் அளிக்கிறேன்.
- நிதர்சனமாக வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்ற ஏதாவது ஆசையை எடுத்துக் கொள்ளுங்கள்- நீங்கள் செல்வந்தராக விரும்பலாம், ஆரோக்கியமானவராக விரும்பலாம், உறவுமுறைகளைச் சரிப்படுத்த விரும்பலாம், தலைவராக விரும்பலாம் அல்லது எதை விரும்புகிறீர்களோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில், உங்கள் ஆழமான சுய சந்தேகத்திலிருந்தும், கடந்த காலத்தோல்விகளிலிருந்தும் எழும் சாத்தியமில்லை என்னும் கருத்தை நிறைவுசெய்யுங்கள். அதனுடன் நிறைவுசெய்யுங்கள். உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், "சாத்தியமற்றது என்று ஒன்றுமே இல்லை!"

இரண்டாவதாக, உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவதற்கான உணர்வை உருவாக்குங்கள். அதற்கு முன், சரியான உணர்வை உருவாக்கும் உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் சந்தேகத்தை நிறைவுசெய்யுங்கள். கண்களை மூடி அமருங்கள். நீங்கள் கொண்டிருக்கும் அந்தக் கருத்தை மேலே எடுத்து வாருங்கள். சாத்தியமற்றது என்கிற அந்தக் கருத்தை நிறைவுசெய்யுங்கள்.
இப்போது அந்த நிறைவுணர்விலிருந்து செயல்படுங்கள். உங்களின் செயல்களின் மூலம், உங்களின் அந்த விருப்பத்தை நிதர்சனமாக்குவது என்று தீர்மானியுங்கள். உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக்குவது என்று ஒப்புக்கொள்ளும் பொறுப்பே, அதற்கான பொறுப்பை எடுப்பதாகிறது.
சாத்தியத்திற்கான உணர்வை உருவாக்குவதும், அதற்கான பொறுப்பை எடுப்பதும்தான், உங்கள் விருப்பத்தை உங்கள் வாழ்வில் நிதர்சனமாக்குகிறது.
உங்கள் உணர்வு தளத்தில்
எதையெல்லாம் உருவாக்குகிறீர்களோ,
அவை அனைத்துமே உங்கள்
வாழ்வில் மங்களகரமான நிஜங்களாக
ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.
அடுத்த படி...
அக விழிப்புணர்வு முகாம்
ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ்வதற்கான சாத்தியத்தை இப்போது பார்த்து விட்டோம், அடுத்த அடி, இயற்கையாகவே அதை விழிப்படையச் செய்வதைப் பற்றியதாகவும், மதை நோக்கியதாகவுமே இருக்க வேண்டும். வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர், ஆழம் மிக்க போதனைகள், கலந்துரையாடல் வகுப்புகள், மூலமனப்பாங்கைப் பற்றிய ஆராய்ந்தறிதல், குண்டலினியை விழிப்பிக்கச் செய்யும் சக்திமிக்க 21 தீக்ஷைகள் மூலம் உங்களுள் இருக்கும் நான்கு சக்திகளையும் விடுவித்து, உங்களுள் உணர்வுருமாற்றத்தை நிகழ்த்தும் அக விழிப்புணர்வு முகாமை ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்.
உங்கள் உணர்வுருமாற்றத்தை இன்னும் ஆழப்படுத்தவும், உங்கள் வாழ்வில் நான்கு சக்திகளும் ஆசீர்வாதங்களைப் பொழியத் துவங்குவதற்குமான வகையில் இந்த 21 நாள் தியான முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அக விழிப்புணர்வு தியான முகாம் (Inner Awakening) பற்றி மேலும் அறிந்து கொள்ள www.innerawakening.org க்குச் செல்லுங்கள். அல்லது உங்கள் சந்தேகங்களை [email protected] க்கு மெயில் செய்யுங்கள்.
1000 வருட பழமையான ஆலமரம்

நித்யானந்த தியானபீடம்
- தலைமை ஆஸ்ரமம் முகவரி நித்யானந்த தியானபீடம் நித்யானந்தா நகர் பிடதி-பெங்களூரு கர்நாடகா - 560 109 080 27 27 99 99
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரர் சமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வரி
21 அடி உயர ஆனந்த லிங்கம்


www.nithyananda.org
டணாணணீ://ணடிணடதூ ச்ணச்ணஞீச்.ணதி/
உங்கள் உணர்வு தளத்தில் எதையெல்லாம்
உருவாக்குகிறீர்களோ, அவை அனைத்துமே
உங்கள் வாழ்வில் மங்களகரமான நிஜங்களாக
ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கின்றேன்.
- வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்
Ebook ISBN: 979-8-88572-113-4
