KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/செயலும் செய்பவனும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

செயலும் செய்பவனும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

15.1 பகவான் சொல்கிறார்: மேலே வேரும், கீழே கிளைகளும் பரப்பி வளரும் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்திற்கு உருவகமாக இருக்கிறது. வேதங்களின் துதிப்பாடல்கள்தான் இலைகள் என்று சொல்லப்படுகிறது. இந்த அழியா மரத்தை அறிந்துகொள்ளும் ஒருவர் வேதங்களையும் அறிந்தவராகிறார்.

15.2 பூமிக்குக் கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் கிளைகள் மனிதனின் மூன்று குணங்களால் வலுவூட்டப்படுகின்றன. புலனின்பப் பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள், மனித நிலையிலிருந்து செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு உள்ளன.

காரண சரீரத்திற்குள்ளான பயணம்

கிருஷ்ணர், காரண சரீரத்தை ஆலமரம் எனக் குறிப்பிடுகிறார். இது சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி. அத்தியாயம் பதினான்கு முதல் பதினேழுவரை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்பொழிவுகள்.

பதினான்காவது அத்தியாயமான குணத்ரய விபாக யோகத்தில், கிருஷ்ணர் நம் இருப்பின் முதல் நான்கு சரீரங்களைப் பற்றிப் பேசுகிறார். புருஷோத்தம யோகம், என்னும் இந்த அத்தியாயத்தில் அவர் ஐந்தாம் சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார்.

nம்மைச் சுற்றி ஏழு சக்தி அடுக்குகள் இருக்கின்றன. நாம் இதைப் பற்றி மிக விளக்கமாக நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில் விளக்கமாகப் பேசியுள்ளோம்.

இந்த நான்கு நாள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள், மரணத்தின்பொழுது எதிர்கொள்ளப்போகும் அந்த அனுபவத்திற்குள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அப்போது அந்த ஆன்மா, தன் இந்த உடலைவிடுவதற்குமுன், தன்னைச் சுற்றியிருக்கும் ஸ்தூல, ப்ராண, மன, ஸூக்ஷ்ம, காரண, ஆன்ம மற்றும் நிர்வாண என்னும் ஏழு சக்தி சரீரங்களைக் கடந்து செல்கிறது.

இந்த ஏழு அடுக்குகளையும் உள்ளடக்கியதுதான் நம் உடல் - மன - ஆன்மா அமைப்பு. முதல் அடுக்கு, எலும்புகளாலும் சதையாலும் ஆன நம் ஸ்தூல சரீரம். மற்ற அடுக்குகள் நம் இருப்பின் அங்கங்கள். இரண்டாவது அடுக்கு ப்ராண சரீரம். இது நம் ஸ்தூல சரீரத்திற்குள் இருக்கும்

> சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை ரஜஸிலும் தமஸிலும் மூழ்கடித்து விடுகின்றன.

ப்ராண, அபான, உதான, வ்யான, ஸமான போன்ற வெவ்வேறு காற்றின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்

சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், இந்த ப்ராண சரீரம் ஆசைகளால் நிறைந்தது என்று விளக்கினார். அவர் மேலும், நாம் எப்படி முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்கித் துக்கப்படுகிறோம் என்பதையும் விளக்கினார். சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை ரஜஸில் (அமைதியின்மை) ஆழ்த்துகின்றன. அவை நம்மைத் துக்கப்படச் செய்கின்றன. மேலும் தமஸில் (சுறுசுறுப்பற்ற நிலை அல்லது மனச்சோர்வு) நம்மை மூழ்கடித்து விடுகின்றன.

ஐந்தாவது அடுக்கு காரண சரீரம். இங்குதான் நம் எல்லா ஸம்ஸ்காரங்களும் விதை வடிவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த தூக்கத்தில், நாம் இந்தக் காரண சரீரத்திற்குள் நுழைகிறோம். இந்த அடுக்கிலிருந்து ஸம்ஸ்காரங்களை எடுத்துத்தான் உலகத்தை உருவாக்குகிறோம்.

இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், காரண சரீரத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், ஆசையின் சக்தியை எப்படிப் பயன்படுத்துவது என்று விளக்கினார்.

ஆசைகளும் ஒரு சக்தியே, சுய முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குவதன் மூலம், அந்தச் சக்தி தவறாக உபயோகப்படுத்தப் படுகிறது. சுய முரண்பாடுடைய ஆசைகள் நம்மை அமைதியின்மையில் தள்ளுகின்றன. அதன் பிறகும் நம்மை நாமே சரிசெய்து கொள்ளவில்லையென்றால், நாம் மனச்சோர்வில் விழுகிறோம். அவர், சுய முரண்பாடுடைய ஆசைகளை நீக்குவதற்கான நுட்பத்தைத் தருகிறார்.

சில ஆசைகள் மட்டுமே நம்முடைய சொந்த ஆசைகள், நாம் சென்ற பிறவியிலிருந்து கொண்டுவந்த மன அமைப்பிலிருந்து பிறந்தவை. இதனை ப்ராரப்த கர்மா என்றும் சொல்வோம். நாம் பிறக்கும்போதே எடுத்து வந்தவை. இந்த ஆசைகள், அவற்றுக்கான அடிப்படை தேவைகளையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கான சக்தியையும் தங்களுடன் எடுத்து வந்துவிடுகின்றன.

ஜைன மதத்தைத் தோற்றுவித்த மஹாவீரர், ‘நமக்குத் தேவையான எல்லாவற்றோடும்தான் நாம் இந்தப் பூமிக்கு அனுப்பப்படுகிறோம்’ என்கிறார்.

இரமண மகரிஷி சொல்கிறார், “இந்தப் பிரபஞ்சத்தால், இப்பூவுலகில் வாழும் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். ஆனால் ஒரே ஒரு நபரின் ஆசையைக்கூட முழுமையாக அதனால் பூர்த்திசெய்ய முடியாது!”

ஆசைகளும் ஒரு சக்தியே,
அவற்றை முறையாகப்
பயன்படுத்துவதன்மூலம்
அவற்றைக் கடந்துசெல்ல
முடியும்.

எவ்வளவு உண்மை!

இந்தப் பிரபஞ்சம் நம்முடைய உண்மையான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான ஆற்றலை நமக்கு வழங்கி இருக்கிறது. இருந்தாலும் இங்கு வந்தவுடன், மேலும் பல ஆசைகளைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒப்பிடுதல், பின்பற்றுதல், பொறாமைப்படுதல் மூலமாக மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்குகிறோம்.

கடன் வாங்கப்பட்ட ஆசைகள், இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால், மற்றவர்களின் உடைமைகளை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்த ஆசைகளாக இருந்தால், அங்கு நம் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் இருக்கும்.

இந்தப் பிரபஞ்சம் நம்முடைய உண்மையான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆற்றலை நமக்கு வழங்கி இருக்கிறது.

நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே உண்மையான இன்பம். அதனால்தான், தம் எளிய உணவான ரொட்டிகளையும் பருப்பையும்கூட ஒரு ஏழை மனிதர் அவ்வளவு சுவைத்துச் உண்கிறார்!

கடன்வாங்கிய ஆசைகள் துன்பத்தையே தரும். துக்கத்திற்கே அடிகோலும். நீங்கள் எப்போதாவது ஒரு செல்வந்தர் உண்மையான மகிழ்ச்சியுடன் உணவருந்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர் சேர்த்துவைத்த சொத்துக்கள், அவருக்குக் குடற்புண், சர்க்கரை நோய், இதயக் கோளாறு போன்ற பிரச்சினைகளைக் கொடுத்திருக்கும். அதனால் அவருக்கு மருத்துவறால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமிட்டஉணவு தேவைப்படும். அவருக்குத் தம்மைச் சரியாகப் பராமரித்துக்கொள்வதற்கும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்குமே, தனிப்பட்ட பயிற்சியாளர்களும் உணவு ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.

நம்முள் ஆழமாகப் பதிந்துள்ள ஸம்ஸ்காரங்கள் எனப்படும் புலனின்ப உணர்ச்சிகளின் அனுபவப் பதிவுகளே, ஆசைக்குக் காரணமாகின்றன. ஸம்ஸ்காரங்கள், விழிப்புணர்வற் ற மன ச்ரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.

நம் புலன்களால் உணர்பவற்றுள், தொண்ணூறு சதவீதத்திற்கு மேலானவை விழிப்பறு பகுதியில்தான் பதிந்து வைக்கப்படுகின்றன. மீதமுள்ள பத்து சதவீதமே விழிப்புணர்வுப் பகுதிக்குள் செல்கிறது. ஆனால், அதைக்கூட சமாளிக்க முடியாமல் நம் மனம் தடுமாறுகிறது. அதுவே நூறு சதவீதமாக இருந்தால், எப்படியிருக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள்.

நம்முடைய ஸம்ஸ்காரங்களே, நம் செயல்களை நடத்திச்செல்கின்றன.

ப்ருஹதாரண்யக உபநிஷத் சொல்கிறது, 'நம்முடைய ஆசைகளே நாம்; நம்முடைய ஆசைகளின் உருவகமே நாம். நம்முடைய ஆசைகளே நம் மன சக்திக்கு வடிவம் தருகின்றன. நம் மனசக்தி, நம் செயல்களுக்கு வடிவம் தருகிறது. நம் செயல்கள் நம்மை உருவாக்குகின்றன. அதாவது, நாம் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன.'

கடான்வாங்கப்பட்ட இந்த ஆசைகள்,
தங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான
சக்தியைக் கொண்டுவந்த நம்
உண்மையான ஆசைகள் இல்லை
என்பதை நாம் உணர்வதில்லை. இவை
பொறாமையினாலும் ஒப்பிடுதலினாலும்
மட்டுமே மற்றவர்களிடமிருந்து
பொறுக்கியெடுக்கப்பட்டவை. ஆனால்
பெரும்பாலும் நம் ஸம்ஸ்காரங்களே நம்மை
வரையறுக்கின்றன.

கடான்வாங்கிய ஆசைகள் துன்பத்தையே தரும்.

இப்போது கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் விதை வடிவத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடுக்குிற்கு நகர்கிறார். நாம் ஆசை, அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளைக் கடந்துசென்றாலும்கூட, விதை வடிவத்தில் இருக்கும் இந்த ஸம்ஸ்காரங்கள் நீக்கப்படவேண்டும்.

கிருஷ்ணர் இந்த ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான நுட்பத்தைச் சொல்கிறார். இவை, இந்த நிமிடம் நம்மிடம், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாம்; இருந்தாலும், அவற்றை விதை வடிவத்தில் இருக்க அனுமதித்தோமென்றால், ஒரு சமயம் இல்லாவிட்டாலும் இன்னொரு சமயம் அவை நம்மை உபயோகப்படுத்தியே தீரும்.

ஒரு அலுவலகத்தில், சில கோப்புகள் மேஜைமீது இருக்கும்; சில அலமாரியில் இருக்கும்; மற்றவை நிலவறையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும். சென்ற மூன்று அடுக்குகளும் அலுவலக மேஜை மற்றும் அலமாரியைப் போன்றவை.

இந்தப் காரண சரீரம், நிலவறை பாதுகாப்பு பெட்டகத்தைப்போன்றது.

சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், மேஜையைக் காலிசெய்வதற்கான நுட்பத்தை விளக்கினார். இப்போது, பாதுகாப்புப் பெட்டக அறையைக் காலிசெய்யும் நுட்பத்தைத் தருகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், மரத்தின் வேர்கள் வெளியில் இருக்கின்றன. அதன் கிளைகள் உள்ளே இருக்கின்றன. ஒரு மரத்திற்கு அதன் வேர்கள்தான் ஆகாரம் அளிக்கின்றன. வேர் வழியாகத்தான் தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் அவை எடுத்துக்கொள்ளும். ஒரு மரத்தின் நிலையை, வளர்ச்சியை அதன் வேர்கள்தான் தீர்மானிக்கின்றன.

Mind and Senses Illustration

ஸ்தூல சரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களே காரண சரீரத்திலுள்ள ஸம்ஸ்காரங்களை வலுப்படுத்துகின்றன. அதனால்தான் கிருஷ்ணர், "மரத்தின் வேர்கள், ஸ்தூல சரீரத்தில் இருக்கின்றன," என்கிறார்.

காரண சரீரத்தில் விதை வடிவில் இருக்கும் ஸம்ஸ்காரங்கள், ஸ்தூல சரீரத்தில் இருக்கும் ஐம்புலன்களால் உருவாக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், இதன் இலைகள் வேத மந்திரங்கள் என்றும், யார் ஒருவர் இந்த மரத்தைத் தெரிந்துவைத்துள்ளாரோ அவரே வேதங்களை அறிந்தவர் என்றும் சொல்கிறார்.

> நாம் ஆசை, அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளைக் கடந்துசென்றாலும்கூட, விதை வடிவில் இருக்கும் ஸம்ஸ்காரங்களை நீக்கியே ஆகவேண்டும்.

அவர் சொல்கிறார், ஸம்ஸ்காரங்கள்தான் வேத மந்திரங்கள். மனஸ்ய ஸ்திரஹ இதி மந்தரஹ - எதுவெல்லாம் மனத்தைக் கட்டுப்படுத்துகிறதோ, நிலைநிறுத்துகிறதோ, அவை மந்திரங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. மேலும் மனஹ த்ராயதே இதி மந்தரஹ - மனிதனின் வாழ்க்கையை மீட்டுக்கொடுப்பவை மந்திரங்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

இரு கூர் முனைகளைக்கொண்ட வாள்போன்றது வார்த்தைகள்

நமக்குள் படிந்திருக்கும் வார்த்தைகள்தான், நம் பாதைக்கு வழிவகுக்கின்றன. நாம் தனியாக இருக்கும்பொழுது வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான், காரண சரீரத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ஸம்ஸ்காரங்கள். நம் வாழ்க்கை அவற்றைச் சுற்றித்தான் சுழன்றுகொண்டு இருக்கிறது.

வார்த்தைகள், இருபக்கமும் கூர்தீட்டப்பட்ட வாள் போன்றது. நாம் அடுத்தவரைத் தாக்க எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோமோ, அவை நமக்குள்ளேயும் படிகிறது. நமக்குள்ளிருந்து வெடித்து வெளிவர வாய்ப்பு கிட்டும்பொழுதெல்லாம், அவை வெடித்து வெளிக் கிளம்புகின்றன.

கொரூரமான வார்த்தைகளை மற்றவர்களுக்கும், மென்மையான வார்த்தைகளை தனக்குள்ளேயும் பயன்படுத்தும் அளவிற்கு, இங்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை. அது ஒரு விழிப்புணர்வற்ற செயல். அதனால்தான் பழங்கால இந்திய சமூகம் பல்வேறு பழக்க வழக்கங்களை விதித்து, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தியது.

> கொரூரமான வார்த்தைகளை மற்றவர்களுக்கும் மென்மையான வார்த்தைகளை தனக்குள்ளேயும் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு எந்த மனிதனும் புத்திசாலி இல்லை.

நம் மனம், எப்போதும் உள் அரட்டையால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும். இந்த உள் அரட்டையின் ஒரு பகுதியைத்தான் நாம் எப்போதாவது வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறோம். மற்றொரு பகுதியை சமூக விளைவுகளுக்குப் பயந்து அடக்கிவைக்கிறோம்.

நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகள், மற்றவர்களைக் காயப்படுத்திவிடுமோ என்றோ அல்லது மற்றவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயந்தோ அவற்றை வெளிப்படுத்துவதில்லை. இந்த எல்லா வார்த்தைகளும் வார்த்தைகளின் இருப்பிடமான மணிப்பூரக சக்கரத்திற்குள் ஆழமாகப் பதிந்துவிடும்.

sசில வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்தமட்டில், கேட்பவருடனான நம் உறவுநிலையைப் பொறுத்தே, நாம் சௌகரியமாக உணர்கிறோம்.

நம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக
நாம் நினைக்கும் நம் வாழ்க்கைத்
துணை, குழந்தைகள், நமக்குக் கீழ்
பணிபுரிபவர்கள் போன்றோரிடம்
கடுமையான வார்த்தைகளைப்
பயன்படுத்துகிறோம். ஆனால் அதே
கடுமையான வார்த்தைகளை, நம்மைவிட
அதிகாரம் கொண்டவர்களிடமும்
அன்னியர்களிடமும் பயன்படுத்துவதற்கு
கனவில்கூட துணிவுகொள்வதில்லை.

கடுமையான வார்த்தைகளை நாம் வெளியே வெளிப்படுத்தினாலும் அல்லது நமக்குள்ளேயே வெளிப்படுத்திக் கொண்டாலும், அவை நமக்குள் தங்கிவிடுகின்றன. எந்த வார்த்தையை வெளியே வெளிப்படுத்துகிறோமோ, அது உள்ளேகூட செல்கிறது. இது நம் தொப்புள் பகுதியிலுள்ள மணிப்பூரக சக்தி மையத்திற்குள் தங்கிவிடும்.

நாம் வெளியே வெளிப்படுத்திய வார்த்தைகள் மற்றும் நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்ட வார்த்தைகள் - இந்த இரண்டு விதமான வார்த்தைகளுமே, நம் ஸம்ஸ்காரம் என்னும் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன.

The Hidden Messages in Water (தண்ணீரில் மறைந்திருக்கும் செய்திகள்) என்னும் புத்தகத்தைப் பற்றி நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். இதில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் டாக்டர். மசரு இமோடோ (Dr. Masaru Emoto), தண்ணீரைக்கொண்டு தாம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறார்.

இமோடோ, சாதாரண குழாய்த் தண்ணீரை, ஒரேமாதிரியான கண்ணாடிப் புட்டிகளில் நிரப்பி வைத்தார். புட்டிகளின் மேல் - காதல், வெறுப்பு, பயம் கவலை, நம்பிக்கை, சரணாகதி, குழந்தைகள், எதிரிகள் - போன்ற வார்த்தைகளை எழுதிய சீட்டை ஒட்டினார்.

தினமும் ஒவ்வொரு புட்டியின் முன்னும் நின்று, அந்தப் புட்டியின்மேல் எழுதி ஒட்டப்பட்ட தலைப்பைப் பற்றிப் பல நிமிடங்கள் பேசுவார். உதாரணமாக, அன்பு என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கும் புட்டியின்முன் நின்று, அன்பைப் பற்றி அன்புடன் பேசுவார்; பயம் என்ற சீட்டு ஒட்டப்பட்டிருக்கும் புட்டியின்முன், பயத்தைப் பற்றிப் பயத்துடன் பேசுவார். ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தப் புட்டிகளில் இருந்த தண்ணீரை உறையவைத்து, அப்பனிப் படிகங்களைச் சக்திவாய்ந்த நுண்ணோக்கி மூலம் பார்த்தார். எந்தெந்த தண்ணீர் மாதிரிக்குமுன், என்னென்ன பேசினாரோ, அந்தந்த கருத்தையே அந்தப் படிகங்கள் பிரதிபலித்தவிதம் அவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

அன்பு என்னும் சீட்டு ஒட்டவைக்கப்பட்டிருந்த புட்டியின் பனிப்படிகம் வைரத்தைப்போல் தளதளப்பாகப் பிரகாசித்தது. பயம் என்ற சீட்டு எழுதப்பட்ட புட்டியின் பனிப்படிகம் பிசாசு போலவும், கோணல்மாணல்களாகவும் தெரிந்தது.

எமோட்டோ, அடுத்து தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அசுத்த நீரெடுத்து உறையவைத்து, அந்தப் படிகத்தை ஆராய்ச்சி செய்தார். எதிர்பார்த்ததைப்போல், அது மிகவும் மோசமாகக் காணப்பட்டது.

அவர், புத்தமதத் துறவிகளை அழைத்து, அந்தப் பாட்டில் நீர்களுக்கு, பிரார்த்தனை சக்தியை அளிக்குமாறு செய்தார். அப்படிச் சக்தியூட்டப்பட்ட நீரைப் படிகங்களாக்கியபொழுது, அவை பார்ப்பதற்கு வைரங்களைப்போல் ஜொலித்துக்கொண்டடும் மிக அழகாகவும் இருந்தன.

எமோட்டோ, நம்முடைய வார்த்தைகளும் எண்ணங்களும்கூட, நீர் போன்ற இயற்கை மூலக்கூறுகளைப் பாதிக்கும் என்ற தீர்மானத்திற்கு வந்தார். நம்முடைய வேத நூல்களில் சொல்லப்பட்டவை, அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக இருந்தன. அவருடைய கண்டுபிடிப்புகளினால் மனிதகுல வரலாற்றில் ஒரு முக்கியமான புரிதலும் பயனும் ஏற்பட்டது.

நாம் வெளியே வெளிப்படுத்திய மற்றும் நமக்குள்ளேயே வெளிப்படுத்திக்கொண்ட, இந்த இரண்டுவிதமான வார்த்தைகளுமே ஸம்ஸ்காரம் என்னும் நம் வங்கிக் கணக்கை வளர்க்கின்றன.

மனித உடல் என்பது கிட்டத்தட்ட 80 சதவீதம் நீரினால் ஆனது. அதனால், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அல்லது யாரை நோக்கிச் சொல்லப்படுகிறதோ அவரையும் பாதிக்கும். எண்ணங்களாலும் இதே பாதிப்பு ஏற்படுகிறது.

இதப் புரிந்துகொள்ளும் ஒருவர், பிறரிடம் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அதைச் செயல்கள்மூலம் செய்வதைவிட, தம் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் சாதித்துக் கொள்வார்.

நம்முடைய வார்த்தைகளும் எண்ணங்களும் மற்றவர்கள் மேல் எவ்வாறு ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும், அவர்களை எந்தளவிற்குப் பாதிக்கின்றது என்பதும் நமக்கேகூட தெரியாது. அவை, ஒருங்கிணைக்கப்படாமலும், ஆற்றலற்றதாகவும் இருந்தாலும்க்கூட நம்மையும் மற்றவரையும் பாதிக்கும்.

வியாபாரத்திலும், பெரிய கூட்டுநிறுவனங்களிலும் இருப்பவர்களுக்கு 'தகவல் பரிமாற்றம்' என்பது வெற்றிக்கான ஒரு சாவி.

தகவல் பரிமாற்றம் என்பது மொழியை நாம் எவ்வளவு எளிதாக

Callout Box

உபயோகிக்கின்றோம், எவ்வாறு சரளமாகப் பேசுகின்றோம் என்பதைப் பற்றியதல்ல; அது நமது உச்சரிப்புமுறையைப் பற்றியதும் அல்ல. நாம் என்ன உணர்கிறோமோ நினைக்கிறோமோ அதை வெளிப்படுத்துவதே தகவல் பரிமாற்றம்.

நம்முடைய உணர்வுகளும் எண்ணங்களும் எதிர்மறையாகயிருந்தால், அவற்றை மறைப்பதற்கு நாம் எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும், நம்முள் இருக்கும் உணர்வுகளையும் நோக்கத்தையும், நம்முடைய வார்த்தைகளும் உடல்மொழியும் வெளிப்படுத்திவிடும்

எவரொருவர் நேர்மறையான வார்த்தைகளை மட்டுமே பேசப் பயிற்சி செய்து, அவற்றை உபயோகிக்கும் கலையில் வல்லவராகிறாரோ, அவருக்குள் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களே உருவாகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சில நேரங்களில், குறிப்பிட்ட சில மக்களைப் பற்றியும், சூழ்நிலைகளைக் குறித்தும் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது கடினம். ஆனாலும், நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த நாம் உபயோகிக்கும் எதிர்மறை வார்த்தைகளை, தொடர்ந்து முயற்சிசெய்து நேர்மறை வார்த்தைகளாக மாற்றியமைத்தால், மற்றவர்கள்மேல் நாம் வைத்திருக்கும் மனப்பாங்கு மாறிவிடும்.

நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு

வியாபாரத்தில், இந்தச் செயல்முறையைக் கையாளும்பொழுது, வியாபாரம் செழிக்கிறது. உறவுமுறைகளில் உண்மையுடன் செயல்படுத்தும்போது சந்தோஷத்தை அளிக்கிறது.

இதன் அடிப்படை மிக எளிமையானது. நாம் மனத்தில் பாவனைசெய்து பார்க்காமல், ஒரு வார்த்தையைச் சொல்ல முடியாது. நாம் 'பசு' என்று சொல்லும் அந்த நேரம், நம்முடைய மனம் பசுவை மனக்கண்ணில் பாவனைசெய்யும். யானையை நினைத்துக்கொண்டு, 'பசு' என்று சொல்வதற்கு முயற்சிசெய்யுங்கள். அதைச் செய்ய முடியுமென்றாலும்கூட, அது, கட்டாயமாக, நமக்கு ஒரு அசௌகர்யத்தைக் கொடுக்கும்.

‘தகவல் பரிமாற்றம்’ என்பது வெற்றிக்கான ஒரு சாவி.

அதேபோல் நாம் ஒருவரைப் பற்றி
அல்லது சூழலைப் பற்றி எதிர்மறையான
வார்த்தைகளால் சொல்லும்பொழுது,
நம்முடைய மனத்திரையில் அந்தக் காட்சி
தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நபரைப்
பற்றியோ அல்லது சூழ்நிலையைப்
பற்றியோ, நம் மனத்தில் எதிர்மறை
எண்ணம் மேலெழும் முன்பே, அந்நபரைப்
பற்றிய அல்லது சூழ்நிலையைப் பற்றிய
நேர்மறை எண்ணத்தால், நம்மால் அதை
அழித்துவிட முடியும். அதற்குத் தேவை
தொடர் பயிற்சியும் விழிப்புணர்வுமே!

வார்த்தைகள் மாறுவதால், நம் மன அமைப்பும் மாறிவிடுகிறது.

ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் மறைந்திருக்கிறது. அதனால் காரணச் சரீரத்தைப் பற்றிய நல்ல செய்தியும் உண்டு. கெட்ட செய்தியும் உண்டு.

இந்த இடத்தில் கெட்ட செய்தி என்னவென்றால், நம்முடைய நிகழ்காலத்தைய எதிர்மறைகளே, நாம் இனி சந்திக்கப்போகும் எல்லாத் துக்கங்களுக்கும் காரணம்.

நல்ல செய்தி என்னவென்றால், நம்முடைய காரண சரீரத்தை எந்த நேரத்திலும் நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

கிருஷ்ணர் மேலும் சொல்கிறார்:
'எவர் ஒருவர் இந்த மரத்தைப் பற்றி
அறிந்திருந்திருக்கிறாரோ, காரண ச்ரீரம்
உருவாகக் காரணமான ஸம்ஸ்காரங்களுக்கு,
ஐம்புலன்களால் உள்வாங்கப்படும்
உணர்ச்சிகளே காரணம் என்ற அறிவைப்
பெற்றிருக்கிறாரோ அவர் வேதங்களை
அறிந்தவராகவும், வாழ்க்கையை
வழிநடத்தும் ஆற்றலைப் பற்றிய அறிவைப்
பெற்றவராகவும் இருக்கிறார்.'

வேரின் மூலமாகப் பெறப்படும் நீர்தான் மரத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது. நல்ல நீரும் உரமும் கிடைத்தால் அந்த மரம் செழிப்பாக வளரும், அதன் இலைகள் பசுமையாக இருக்கும். விஷத்தை ஊற்றினால், அந்த மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும், மெதுவாக மரம் இறந்தே விடும்.

காரண ச்ரீரத்தில் வேரூன்றியிருக்கும் இந்த ஸம்ஸ்கார மரம், ஐம்புலன்களின் மூலமாகவே வாழ்கிறது.

கிருஷ்ணர் அச்வத்த என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார், அதன் அர்த்தம் 'நிரந்தரமில்லாதது' என்பதாகும். அதாவது நேற்று இருந்ததுபோன்று இன்று இருக்காது; இன்று இருப்பதுபோல் நாளை இருக்காது என்பதாகும். இது பொருள்சார்ந்த வாழ்க்கையைக் குறிக்கிறது, இங்கே எதுவுமே, நாம் எதுவாகக் காண்கிறோமோ அதுபோல் இருப்பதில்லை. எல்லாமே புத்தர் சொல்வதைப்போல் அநிச்ச - நிலையில்லாதது.

விழித்துக்கொள்ளும்வரை கனவுகூட உண்மைதான்

வாழ்க்கை, மக்கள் சொல்வதைப்போல் பொய்யானது இல்லை! அது உண்மையாகவே, பொய்யானதாக இருந்தால், அதை நம்மால் அனுபவிக்க முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால், நாம் அதைச் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். பொருள்சார்ந்த உலகியல் வாழ்க்கை தற்காலிகமானதுதான் என்றாலும்கூட, அது உண்மைதானே? நாம் எதையெல்லாம் அனுபவமாக உணர்கிறோமோ, அவை அனைத்துமே நிலையில்லாதது என்பதால் மட்டுமே, அவற்றை நாம் 'பொய்' என்று சொல்லிவிட முடியுமா?

‘பொய்யானது’ என்றால் அதற்கு ‘இருப்பு’ இல்லை என்று அர்த்தம். ஏதாவது ஒன்றுக்கு ‘இருப்பு இல்லை’ என்றால், நம்மால் அதைப் புலன்களால் உணர்ந்துகொள்ளவோ, அனுபவிக்கவோ முடியாது, தற்காலிகமாகக்கூட!

அதனால் கனவுகூட உண்மைதான். ஆனால் நாம் கனவை உண்மையில்லையென்று சொல்கிறோம். ஆனால் அதை அனுபவித்ததை நாம் மறுக்க முடியுமா? முடியாது. மக்கள், தங்களின் சில கனவுகளைத் திரும்பவும் மிகத் தெளிவாக நினைவுபடுத்திச் சொல்கிறார்களே! பிறகு எப்படி க் கனவுகள் பொய்யாக இருக்க முடியும்? இருந்தபோதிலும், கனவு காணும்போது, ‘சுய விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை’ என்பது மட்டும்தான் உண்மை

ஒருமுறை நாம் உணர்வுநிலைக்கு வந்துவிட்டோமென்றால், நாம் கனவிலிருந்து விழித்துக்கொள்கிறோம். கனவில், ஒரு சிங்கமோ அல்லது ஒரு கொலைகாரனோ நம்மைத் துரத்தி வந்து பிடிப்பது என்பது ஒருபோதும் நடக்காது. அது திரைப்படங்களில் வேண்டுமானால் நிகழலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் நடக்காது. நாம் பயமுறுத்தப்பட்டவுடன், நம்மைப் பற்றிய விழிப்பு நிலைக்குள் வந்துவிடுவோம், நாம் விழித்து கொள்வோம், கனவும் முடிந்துவிடும்.

‘இருப்பு’ இல்லாமல் இருக்கிறது என்பதற்காக, கனவுகள் பொய்யானவை கிடையாது. விழித்துக்கொள்ளும்வரை அவை உண்மையே. விழித்துக்கொண்ட பிறகே அவை ‘பொய்’.

இதேபோலத்தான், இப்போது நாம் விழித்துக் கொண்டிருந்தாலும் விழிப்புணர்வில்லாமல் இருப்பதாக ரிஷிகள் சொல்கிறார்கள். அதனால்தான் அவர்கள் ஜாக்ரத், ஜாக்ரத் - ‘விழித்துக்கொள்ளுங்கள், விழித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு சொல்லும்போது, நம்மைத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளச் சொல்லவில்லை. அவர்கள் நம்மை விழிப்பறு நிலையிலிருந்து, விழிப்புள்ள நிலைக்கு விழித்துக்கொள்ளச் சொல்கிறார்கள்!

அச்'வத்த - இந்த விழிப்புணர்வற்ற நிலையைக் குறிக்கிறது. ஸம்ஸ்காரங்களால்

வழிநடத்தப்பட்டு, புலன்களால்
உருவாக்கப்பட்ட, இந்த விழிப்புணர்வற்ற
நிலையைப் புரிந்துகொள்ள
வேண்டுமானால், நாம் வேதங்களைப் பற்றிய
அறிவைப் பெற வேண்டும்.

கிருஷ்ணர், இந்த விழிப்புணர்வற்ற
நிலையைப் பற்றி நிறைய விளக்கங்களைச்
சொல்லிக்கொண்டே போகிறார்.

வேர்கள், மேல்நோக்கியும் செல்கின்றன, கீழ்நோக்கியும் செல்கின்றன என்றும்...

மரத்தின் இலைகள், ஐம்புலன்களின் தந்திரத்தாலும் மனிதகுலத்தின் செயல்களின் விளைவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும்...

அதாவது வேர்கள், ஸ்தூல சரீரத்தில் மட்டுமல்ல, செயல்களிலும் இருக்கின்றன என்றும்...

மொத்த மனிதகுலத்தின் செயல்களும் எப்போதும் பலனைச் சார்ந்தே இருப்பதால், அவை பேராசையினாலும் அச்சத்தினாலுமே வழிநடத்தப்படுகின்றன, அதனால், 'விழிப்புணர்வற்ற நிலை' மனிதனுள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்றும்... சொல்கிறார் கிருஷ்ணர்.

அச்வத்த மரம், ஒரு மனித உடலைப் போன்றது, அதனுடைய வேர்கள் மேலே உள்ளன, மனிதனின் முடியைப்போல! இந்த முடி, பிரபஞ்ச சக்தியைப் பெறுவதற்குரிய ஒரு வாய்க்காலாகக் கருதப்படுகிறது.

ஆலமரத்தின் கிளைகள், நம்முடைய அவயங்களான கைகளும் கால்களும் போன்றவை.

மனித அமைப்பு உண்மையில் முற்றிலும் தலைகீழானது.

கர்மச் சக்ரம்

கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்களைக் களைய ஒரு அழகான யுக்தியைத் தருகிறார். பேராசையும் பயமும் நம்மை வழிநடத்தவில்லையென்றால், நம்முடைய செயல்கள் பலனைச்சாரந்ததாக இல்லாமல் இருந்தால், எந்த ஸம்ஸ்காரங்களும் உருவாகாது. நீங்கள் நாள்தோறும் ஒரு அரைமணி நேரமாவது, எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல், சுயநலமின்றி சேவைசெய்தால், அது உங்களுக்கு நிறைய நற்பலன்களைத் தரும்.

சேவை செய்யும்பொழுது, எதையும் திட்டமிடாதீர்கள். சேவை செய்வதற்குத் தன்னார்வத் தொண்டர்களைக் குழுவாக வைத்துக் கொள்ளக்கூடத் திட்டமிடக்கூடாது.

எந்த வேலையாக இருந்தாலும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அது அற்பமானதாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும்கூடத் தோன்றலாம். ஆனால் பின்வரும் நாட்களில், இந்தக் காலங்கள் மட்டுமே உபயோகம் நிறைந்ததாக உணர்வீர்கள்.

உங்களுடைய சேவை, பேராசையினாலும் பயத்தினாலும் சக்தியூட்டப்பட்டால், நீங்கள் குழப்பம் உண்டாக்குவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தொந்தரவாகவும் இருப்பீர்கள்.

கர்ம சக்ரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று மூலப்பொருட்கள் இருக்கின்றன. வாஸனா, ஸம்ஸ்காரா, கர்மா. வாஸனாக்கள் விதை போன்றவை. ஸம்ஸ்காரங்கள் செடி போன்றவை. கர்மா என்பது வளர்ந்த மரம் போன்றது.

வாஸனாக்கள் என்றால் மன இயல்பு. மனித ஆன்மா ஒரு உடலைவிட்டு, இன்னொரு உடலுக்குச் செல்லும்போது எடுத்துச்செல்லும் சாரத்தைத்தான் வாஸனாக்கள் என்கிறோம்.

ஒரு நிமிடம், நாமெல்லோரும், ஒரு வெண்மையான தளத்தில், தனித்தனி காற்றுக் குமிழ்களாக இருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.

அந்தக் குமிழ்களின் வெளிவட்டம் வெவ்வேறு வண்ணங்களால் வர்ணம் தீட்டியிருப்பதாகக் கற்பனைசெய்து கொள்ளுங்கள். அதாவது ஒரு வெள்ளைநிறக் காகிதத்தில் வண்ண வண்ண வட்டங்கள் வரையப்பட்டிருப்பதாகக் கற்பனைசெய்துகொள்ளுங்கள்.

வெண்மையான வெற்றிடமே சக்தி. வட்டத்திற்கு வெளியில் இருக்கும் சக்தி பிரபஞ்ச சக்தி, வட்டத்திற்கு உள்ளே இருக்கும் சக்தி நம்முடைய உயிர் சக்தி.

வட்டத்தின் வண்ண வெளிக்கோடுகள்தான் நம்முடைய உடலும் மனமும், அதாவது அதுதான் நம்முடைய எல்லைகள். அந்தக் குமிழிக்குள் இருக்கும் வெண்மையான வெற்றிடமே ஆத்மா. வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடம் பிரஹ்மம். வட்டத்திற்குள் இருக்கும் வெண்மையான வெற்றிடமும், வெளியில் இருக்கும் வெண்மையான வெற்றிடமும் ஒன்றே.

நாம் இறக்கும்பொழுது, இந்த வண்ணக் கோடு அழிக்கப்பட்டுவிடும். நம் உள்ளிருக்கும் சக்தி. வெளியில் இருக்கும் சக்தியோடு ஒன்றுசேர்ந்துவிடும். இருந்தாலும் அது முழுமையாக ஒன்றுகலந்து விடுவதில்லை, ஒரு சிறு பிரிவு இருக்கும்.

ஏனென்றால், ஒவ்வொருவரின் ஆத்மாவும், வாஸனாக்களால் மெல்லியதாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஆத்மா, பிரஹ்மத்தோடு இணையும்பொழுது, வாஸனாக்களின் சாரமான இந்த வண்ணத் தீற்றல்களின் காரணமாக, பிரஹ்மத்திலிருந்து பிரிந்தே இருக்கிறது.

அந்த ஆத்மா, தன்னுடைய அந்த
வாஸனாக்களுக்கேற்ற உடலையும்
மனத்தையும், தான் புதுப்பிறவியெடுக்கத்
தேடும். இவ்வாறுதான் மறுபிறவி
தீர்மானிக்கப்படுகிறது.

வாஸனாக்கள் விதை போன்றவை. இது மிகவும் நுண்ணியது. நமக்கு உள்நோக்கிப் பார்க்கக்கூடிய திறமை இருந்தால், அந்த விதைக்குள் இனி வளரப்போகும் செடியைப் பார்க்க முடியும்.

உண்மையில், ஒருமுறை பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர்கள், பூக்கள் இல்லாத ஒரு ரோஜாச் செடியைப் புகைப்படம் எடுத்தபோது, அந்தப் புகைப்படத்தில், இனி உருவாகப்போகும் ரோஜாப்பூக்களின் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

ஒரு ஞானிக்கு வாஸனாக்கள் இருக்காது. அதன் விளைவாக, மரணத்தின்போது, அவர் உடல் - மன அமைப்பை விடும்போது

எந்த வேலையாக
இருந்தாலும் உங்களால்
முடிந்ததைச் செய்யுங்கள்.

அவர் பிரபஞ்ச சக்தியுடன் பிரிவற்று முழுமையாகக் கலந்துவிடுகிறார். அதனால் அவருக்கு மறுபிறவி கிடையாது.

மற்ற மனிதர்கள், புதிய உடலெடுப்பதற்குத் தேவையான வாஸனாக்களையும் தங்களுடன் எடுத்துச்செல்கிறார்கள்.

இந்த மனோ அமைப்பே, புதிய உடல் - மன அமைப்பு வளர்வதற்கான ஸம்ஸ்காரங்களை உருவாக்குகிறது. புதிய உடல் - மன அமைப்பின் அனுபவங்கள், பழைய பிறவியிலிருந்து எடுத்து வந்த வாஸனாக்களை அனுமதித்து, ஸம்ஸ்காரங்களாக மலரச் செய்கிறது. இறுதியாக ஸம்ஸ்காரங்கள் நம்மைச் செயலைச் செய்யுமாறு தூண்டுகின்றன. இந்தச் செயலே கர்மா எனப்படும்.

வாஸனாக்கள் விதைகள் என்றால், ஸம்ஸ்காரங்கள் செடி போன்றவை. கர்மா என்பது வாஸனை என்ற விதையிலிருந்து ஸம்ஸ்காரம் என்று அழைக்கப்படும் செடியாக வளர்ந்து, பின்பு முழுமையாக வளர்ந்த ஒரு மரம். வாஸனாக்கள், பீஜகர்மா - கர்மத்தின் விதை என்றும் அழைக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, ஒரு பெண்மணி ஒரு கடையில் தனக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது, அக்கடையின் ‘ஷோ கேசில்’ ஒரு குறிப்பிட்ட காலணியைப் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். முதலில் பார்க்கும்போது வேண்டுமானால், அது ஒரு ஆர்வதத்தின் காரணமாகப் பார்த்த பார்வையாக இருக்கலாம். ஆனால் அவர் அதனால் ஈர்க்கப்பட்டிருந்தால், அவர் இன்னும் சில முறைகள் அதனைப் பார்ப்பார். அப்போது அவர் மனத்தில், அந்த ஜோடிக் காலணியை அடைய வேண்டுமென்ற ஒரு விதை விதைக்கப்படுகிறது. அதுதான் வாசனை, விதை எனப்படும்.

இன்னும் சிலமுறைகள் பார்த்தபின், அவருடைய மனத்தில், அவர் அந்தக் காலணியை அணிந்துகொண்டால் எவ்வளவு அழகாக இருப்பார் என்றும், அடுத்த வாரம் நிகழவிருக்கும் விருந்து நிகழ்ச்சி க்கு, அதை அணிந்துசென்றால், மற்றவர்கள் எப்படியெல்லாம் வியந்து பேசுவார்கள் என்றும், ஒரு காட்சி உருவாகிவிடும். இப்போது அவர் மனத்தில், ஒரு திடமான ஆசை வளர்த்துவிடுகிறது. இதுவே ஸம்ஸ்காரம். இது வாஸனாவின் வேலை. அந்த விதையிலிருந்து ஒரு செடி வளர்ந்துவிட்டது.

கடைசியில் அவர், தம்மால் அந்தக்
காலணிகள் இல்லாமல் இருக்க
முடியாது என்று நம்புகிறார், அவற்றை
வாங்கியும்விடுகிறார். இதுவே கர்மா -
செயல் எனும் மரம்.

அந்த விருந்து முடிந்தபிறகும், ஒரு வாரத்திற்கு அந்தக் காலணிகளை, எல்லா இடங்களுக்கும் அவர் அணிந்துசெல்வார். அடுத்த இரண்டு வாரங்களில், அதை அணிவதில் இருந்த ஈர்ப்பு குறைந்து, அதை எப்போதாவது ஒரு நேரம்தான் அணிவார். விரைவில், அந்தக் காலணிகளை மடிப்படியின் கீழ்ப்பகுதியில் எறிந்துவிடுவார், அவற்றைத் தாம் திரும்பவும் பார்த்துவிடமுடியாதபடி!

பிறகு அவர் மற்றொரு ஜோடி காலணிகளைப் பார்க்கிறார்!

இந்த ஸம்ஸ்கார சுழலும் கர்மச் சுழலும் போய்க் கொண்டேதான் இருக்கும். ஆசைகள், முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, அவை திரும்பவும் தோன்றுகின்றன. இந்த ஸம்ஸ்காரங்கள், திரும்பவும் தோன்றுவதற்காக இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு ஜோடி காலணிகள் மட்டும் போதும் என்பது நமது நிலையாக இருந்தால், நம்முடைய ஆசையும் அந்த ஒரு ஜோடி காலணியிலேயே நிறைவேறிவிடும்; அதுவே நம்முடைய இயல்பு நிலையாக இருக்கும்; காலணிகளுக்கான நம்முடைய ஸம்ஸ்காரங்கள் நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்குக் கிடைத்ததை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். நமக்குக் கிடைத்த பிறகும், அதை முழுமையாக அனுபவிக்காமல், அடுத்ததற்கு ஏங்கி ஆசைப்பட மாட்டோம்.

ஆனால் வியாபார பலம்வாய்ந்த தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனங்கள் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், அவற்றால் அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.

வியாபாரத்தத்துவம் சொல்கிறது, ‘எது வளர்ச்சியடையவில்லையோ அது சுருங்கி இறந்துவிடுகிறது’ என்று. எனவே அங்கு விரிவடைவதற்கான போராட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

ஒரு வியாபாரம், சுயநல நோக்கம் கொண்டிருக்கும்வரை, அது அந்த முதலாளியின் இலாபமாகவோ, பங்குதாரர்களின் இலாபமாகவோ இருக்கும்வரை, சாதனைகள் மகத்தானவையாகவே இருந்தாலும் அவர்களுக்குத் திருப்தியளிப்பதில்லை, - அது !

திட்டமிடாத சேவை, தெய்வீகத்திற்கான பாதை

அடைய வேண்டும் என்ற பேராசை, அது எதைப்பற்றியதாக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தீங்கை விளைவிக்கக்கூடிய சுயநல மனப்போக்கையும் நடவடிக்கைகளையும் ஒருவருக்குள் உருவாக்குகிறது. அதனால்தான் ‘கூட்டுநிறுவனங்கள் (Corporations), மக்கள் நலனிலும் சுற்றுச்சூழலிலும் அக்கறைகொள்வதில்லை’ என்ற கெட்ட பெயரைச் சம்பாதித்திருக்கின்றன.

கூட்டுநிறுவனத்தின் குறிக்கோள்கள், வெளிப்படையானவையாகவும் சமுதாயத்திற்கும் இந்த உலகத்திற்கும் மேலான பலனைத் தருவதாகவும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவும் இருந்தால், அவை கூட்டுநிறுவனத்தின் ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும். ஒரு தனி மனிதனுக்குள் மலரும் சுயநலமற்ற தன்மை எப்படி அவனுடைய ஸம்ஸ்காரங்களைக் கரைக்கிறதோ, அதுபோல் கூட்டுநிறுவனத்தின் சுயநலமற்ற தன்மை, அதன் ஸம்ஸ்காரங்களைக் கரைத்துவிடும்.

சுயநலமான ஆசைகள், ஒருபோதும் நிறைவைத் தருவதில்லை. அவை நம்முடைய அஹங்காரத்தை ஊட்டி வளர்க்கும் உணவு. இந்தப் பிரபஞ்சத்திற்கு அவை எந்த சேவையையும் செய்வதில்லை !

ஒரு சின்ன கதை

ஒரு பள்ளியில், சாரண இயக்க (Scouts) மாணவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. சாரண மாணவர்கள் தினமும் ஏதாவதொரு சமூக சேவையாவது செய்ய வேண்டும் என்றும், அதைச் சாரணர் ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே அந்த அறிவுரை.

> ஆசைகள், முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருக்கும்வரை, அவை திரும்பவும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

மறுநாள் காலையில், மூன்று பேர் கொண்ட மாணவர் குழு ஒன்று சாரண ஆசிரியரைச் சந்தித்து, ஒரு வயதான பெண்மணி சாலையைக் கடக்க, தாங்கள் மூவரும் சேர்ந்து உதவியதாகச் சொன்னார்கள்.

ஆசியருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "சாலையைக் கடக்க ஒரு வயதான பெண்மணிக்கு உதவுவது நல்ல சேவையே. ஆனால் அதற்கு மூவர் தேவையில்லையே. ஒருவரே போதுமே!" என்றார்.

உடனே அதில் ஒரு மாணவன், "இல்லை ஐயா, மூன்று பேர் தேவைப்படும் ஒரு சேவை அது, ஏனென்றால் அவர் சாலையைக் கடக்க விரும்பவில்லை, அதனால் நாங்கள் அவரைத் தூக்கிச்செல்ல வேண்டியதாயிற்று !" என்று சொன்னான்.

திட்டமிட்ட சேவை, நம்மை இது மாதிரியான ஒரு சூழ்நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். அதனால் எதையும் திட்டமிடாதீர்கள். வெறுமனே எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள். அப்படிச் செய்யும் சேவையானது, உங்கள் இருப்புத் தன்மையில் அளவில்லா சக்தியைச் செலுத்தும்.

ஒருநாளில் குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது சுய நலமில்லாத ஏதாவது ஒரு சேவை செய்யுங்கள்.

நான் என்னுடைய பக்தர்களிடம், தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சங்கத்திற்காகச் சேவை செய்யுமாறு சொல்வேன். இந்தச் சேவையே த்யாணம்!

அது நம்முள் கூட்டு விழிப்புறு மனோநிலையைப் பதியவைத்து, அந்தச் சேவையின் பின்னணியில் இருக்கும் தெய்விகத் தன்மையை, நாம் உணர்வதற்கான பாதையை வகுக்கிறது.

பகவான், கர்மாநுபந்தீநி மனுஷ்ய லோகே என்று சொல்கிறார். நம்முடைய எல்லாச் செயல்களுமே பலனை நோக்கியே சுழல்கின்றன. அதனால் இந்தச் சேவையையாவது, பணத்தையோ பெயரையோ குறிக்கோளாகக் கொள்ளாமல் செய்யுங்கள்.

ஒரு தனி மனிதனுக்குள்
மலரும்
சுயநலமற்ற தன்மை
அவனுடைய
ஸம்ஸ்காரங்களைக்
கரைத்துவிடும்.

மற்றவர்கள் மனத்தில் உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை விதைக்க வேண்டும்

என்று முயற்சிசெய்யாதீர்கள். நீங்கள்
இருக்கிறீர்கள் என்பதை உணர வைக்கத்
திட்டமிடாதீர்கள். ஒரு வேலையை அதன்
நன்மைக்காகவே செய்யுங்கள்.

மனித நேய சேவை அல்லது அறக்கட்டளை
சேவை என்று கருதப்படும் சேவைகளைச்
செய்யும்போதுகூட, நாம் செய்யும்
அந்தச் செயல்களின் பலனில் நம்மைப்
பந்தப்படுத்திக் கொள்ளாமலிருப்பதற்கு,
நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

எதையும் திட்டமிடாதீர்கள்.
வெறுமனே எங்கு
வேண்டுமானாலும் சேவை
செய்யுங்கள். அப்படிச்
செய்யும் சேவையானது
உங்கள் இருப்புத்
தன்மையில் அளவில்லாச்
சக்தியைச் செலுத்தும்.

"உலகத்திலுள்ள மக்கள் கஷ்டப்பட்டுப் கொண்டிருக்கும்பொழுது, நாம் த்யானம் செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?" என்று மக்கள் கேட்கிறார்கள்.

உண்மையாகவே மனிதகுலத்தின் துக்கங்களை உணர்ந்து, அவற்றைக் களைவதற்கு உதவ வேண்டும் என்று நாம் விரும்பி வேலைசெய்தால், அது நல்லது தான். ஆனால் அந்தக் கருணையை உணர வேண்டுமானால், நாம் விரிவடைந்த விழிப்புணர்வு பற்றிய உணர்வு பெற்றிருத்தல் வேண்டும். அது த்யானத்தினால் மட்டுமே சாத்தியம்.

பெரும்பாலும் நாம் சேவைகளை, நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், நமக்கு மறுபிறவியில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, மற்றவர்கள் கவனத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய ஏக்கத்தை ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறைவேற்றும் என்று நம்பியும் செய்கிறோம். அவை நமக்கு ஏதோவொரு விதத்தில் நன்மையைத் தரும் என்ற நோக்கத்தோடு செய்கிறோம் அல்லது ஊடகங்களில் நம்முடைய பெயரும் புகைப்படமும் வெளியிடப்பட வேண்டுமென்ற ஆசையில் செய்கிறோம்

ஆன்மிகப் பாதையில் பாவம் அல்லது புண்ணியம் என்ற கருத்தே கிடையாது. சித்திரகுப்தரோ அல்லது புனித பீட்டரோ மேலுலக நுழைவாயிலில் நின்றுகொண்டு, "உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சமூக சேவைகளைப் பூவுலகில் செய்தீர்களா?" என்று கேட்கப் போவதில்லை.

நீங்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செயலாற்றும்பொழுது, அதை நீங்களும் சமுதாயமும் - அறச்செயல், வியாபாரம், கருணை

  • என்று எப்படி வரையறுத்தாலும், அவை சுயநல நோக்கைக் கொண்டிருக்காது. உங்களுடைய இந்தச் செயல்கள் பயத்தினாலும் பேராசையினாலும் ஊக்குவிக்கப்பட்டவை அல்ல. அதனால் அவை, ஜென்ம ஜென்மமாக நம்மைப் பின்தொடரும் ஸம்ஸ்காரங்களை விளைவிக்காது. பட்டறிவு மனத்திற்கு இதை ஏற்றுக்கொள்ளவது என்பது கடினமாக இருக்கும்.

ஒரு தனிமனிதனும் கூட்டுநிறுவனங்களும் புதிய திட்டங்களைத் தீட்டி, தர்ம காரியங்களை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் தங்கள் வெற்றியை அளப்பதற்கு, தங்களால் அடையப்பட்ட பலன்களைக் கணக்கிடுகிறார்கள்.

தாங்கள் போட்ட பணத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ற பலன்கள் கிடைத்தனவா என்று கணக்கிடுகிறார்கள்.

கருணையை
உணர வேண்டுமானால்,
நாம் விரிவடைந்த
விழிப்புணர்வு பற்றிய
உணர்வு பெற்றிருத்தல்
வேண்டும். அது
த்யானத்தினால் மட்டுமே
சாத்தியம்.

நோக்கங்கள் தெளிவாக விளக்கப்பட
வேண்டும்; வரவு, செலவுப் பட்டியல்கள்
உருவாக்கப்படவேண்டும்; அதன்
பயன்கள் ஆராயப்படவேண்டும்;
மற்றும் அதன் செயல்படும் முறை
சரிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு
செயல்முறைகளைப்பற்றி மட்டும்
விளக்கிவிட்டு, பயன்களைப்பற்றி
வரையறுக்காமல் இருப்பதற்கான
வழிமுறையும் இருக்கிறது. அதுவே
சிறந்தமுறை.

திட்டமிட்ட செயல்முறை
பின்பற்றப்படும்போது, பலன்களும்
இயற்கையாகவே தொடர்ந்துவரும்.

சரியான பாதையை நாம் பின்பற்றினால், சரியான இடத்தைச்ச் சென்றடைவோம். இதை நம்புவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது.

'நான் எந்தவிதமான வெகுமதியையும் எதிர்பாராமல் வேலை செய்வேன்' என்று சொல்வதற்கு நமக்குத் தைரியம் தேவைப்படுகிறது. ஒரு தன்னம்பிக்கை நிறைந்த மனிதனால் மட்டுமே, செயலுக்கு உரிமைகொண்டாடுவதைவிட 'செயல்புரிவது'தான் முக்கியம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

அந்தஸ்து முக்கியமல்ல, எந்தத் தன்மையிலிருந்து செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்மால் இந்த ஸத்யத்தை ஏற்றுக்கொள்ள

முடிந்தால் போதும், நமக்குள்
இருக்கும் உண்மையான சுதந்திரத்தைக்
கண்டுகொள்வோம்.

எதிர்காலத்தை ஒருவித கவலையோடு
எதிர்கொள்ளும் மனப்பாங்கு, நம்
தோள்களின் மீது பாரமாக அமர்ந்து,
நம்மை அழுத்திக்கொண்டிருக்கிறது.

நாம் கடந்தகால பலன்களைக்கொண்டு, எதிர்காலச் செயல்களை வரையறுக்கிறோம்.

இதுபோன்ற 'செயல்திருத்த' வரையறைகளால் ஒரு பலனும் இல்லை. ஏனென்றால், எதிர்காலச் சூழ்நிலை, கடந்தகாலச் சூழ்நிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். நிகழ்காலத்தில் கவனத்தைச் செலுத்தி, பாதையையும் செயல் முறையையும் வகுத்து, அது பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்வது மட்டுமே.

இதை விழிப்புணர்வுடன் செய்தால், அதற்கான பலன்கள் தானாகவே பின்தொடரும்.

கொடுக்க முடியாததைக் கொடுப்பதே தானம்

கேள்வி: தானம் செய்வது நல்லது என்று சொல்லித்தான் நாங்கள் கேள்விப்பட்டிருக்கினோம். ஆனால் நீங்கள், தானம் எல்லாத் தருணங்களுக்கும் நல்லதல்ல என்று சொல்லும்போது குழப்பமாக உள்ளது. தயவுசெய்து விளக்குங்கள்.

முதலில் தானம் என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். தானம் என்பது சுயநலமற்ற காரணங்களிலிருந்து ஏற்பட வேண்டும். ஸம்ஸ்க்ருத்தில் செல்வம் என்ற வார்த்தைக்கு தந் என்றும், தானத்திற்கு தாந் என்றும் சொல்வார்கள். நம்முடைய செல்வத்தையும் பொருளியல் உடைமைகளையும் விட்டுவிடுவதே தானம்.

உங்களால் விட்டுவிட முடிவதை 'விடுதல்' அல்ல தானம். உங்களால் விடமுடிந்ததை விட்டீர்களானால், அது தானம் ஆகாது. அது உங்களுடைய சௌகரியத்திற்காகச் செய்வதாகும்.

‘வருமான வரி குறைப்பு’ வசதியைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது, தானம் ஆகாது, அது வியாபாரம். செய்தித்தாள்களில் உங்கள் பெயரும் புகைப்படமும் இடம்பெற வேண்டுமென்பதற்காகச் செய்யப்படுவது தானம் ஆகாது. அது உங்கள் அஹங்காரத்தை ஊக்கப்படுத்தும் செயல் மட்டுமே. சுய நலமற்றதாகவும் எந்தவித உள் நோக்கமற்றதாகவும் தானம் இருக்க வேண்டும்.

தானம் என்பது ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற உணர்ச்சிகளிலிருந்து எழ முடியாது.

தானம் என்றால், உங்களால் கொடுக்க முடியாத ஒன்றைக்கூட மற்றவர்களுக்காகக் கொடுப்பது. தானம் என்பது அடுத்தவர்களையும் உங்களைப்போல் கருதி, உங்களிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல்!

உண்மையான தானம், விரிவடைந்த விழிப்புணர்வு நிலையில் ஏற்படுகிறது. அது நீங்கள், வஸுதேவ குடும்பகம் - இந்த உலகே உங்கள் குடும்பம் என்று நம்பும்போது நடக்கிறது.

மகாபாரதத்தில் இருந்து ஒரு அழகான கதை.

பாண்டவர்கள் மகாபாரதப் போரில் வெற்றி பெற்றபின், பாண்டவப் பேரரசரான யுதிஷ்டிரரின் தலைமையில் ஒரு ராஜஸூய யாகம் நடத்தினார்கள். அந்த யாகம் முடிவுபெற்றபின், வந்திருந்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்கள் திருப்திபெறும்வகையில் தானம் வழங்கப்பட்டது.

> ஒரு தன்னம்பிக்கை நிறைந்த
மனிதனால் மட்டுமே,
செயலுக்கு
உரிமைகொண்டாடுவதை
விட,
செயல்புரிவது'தான்
முக்கியம் என்பதை
ஏற்றுக்கொள்ள முடியும்.

அப்போது, பாதி உடல் மட்டும் தங்கமாக
மின்னிக் கொண்டிருந்த கீரிப்பிள்ளை ஒன்று
யாகசாலைக்குள் நுழைந்தது. நடைபெற்று
முடிந்த யாக சாம்பலில் தன் மீதிஉடலை
இப்படியும் அப்படியுமாகப் புரட்டிவிட்டு,
“இந்த யாகம் அந்த ஏழை பிராமணன் செய்த
யாகத்திற்கு ஈடாகாது!” என்று சொன்னது.

இதைக் கேட்டுத் திடுக்கிட்ட இளவரச
ர்கள், “வந்திருப்போர் அனைவரும்
இதுபோன்ற யாகத்தை நாங்கள் இதற்கு முன்
கண்டதில்லை என்று சொல்லும்போது, நீ

மட்டும் இவ்வாறு சொல்வதற்கான காரணம் என்ன?'' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தக் கீரிப்பிள்ளை, தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தது.

பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் அது.
அப்போது தந்தை, தாய், மகன் மற்றும்
மருமகள் என நால்வர் அடங்கிய ஒரு
பிராம்மண குடும்பமும் பல நாட்கள் உண்ண
உணவில்லாமல் வாடிக்கொண்டிருந்தது.

பல நாட்களுக்குப்பின் அவர்களுக்கு சி றிது மாவு பிஷையாகக் கிடைக்கவே, அதை நான்கு பாகங்களாக்கி, இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு, உண்ணத்தயாரானபொழுது, வீட்டிற்கு முன், ஒருவர் பிஷைக்காக நின்றார்.

உடனே தந்தையானவர், தம்முடைய பங்கு உணவை அவருக்குக் கொடுத்தார். அவர் உண்டுவிட்டு, அது தம்முடைய பசியைப் போக்கப் போதுமானதாக இல்லை என்று சொல்லவே, அடுத்து அந்தத் தாயானவர், தம்முடைய பங்கை அவருக்குக் கொடுத்தார். அதுவும் போதவில்லை என்று சொல்லவே, மகன் தம் பங்கு உணவைக் கொடுத்தார். அப்போதும் அவர் திருப்தியடையாததால், மருமகளும் தமக்கான பங்கு உணவைக் கொடுத்தார். அதன்பிறகே வந்த விருந்தாளி திருப்தியுடன் சென்றார்.

ஆனால் அக்குடும்பத்தினர், பசியால் அன்றிரவே இறந்தனர். அவர்களின் தியாக உணர்வால் மனம் மகிழ்ந்த இந்திரன், அவர்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றார்.

அன்றிரவு அவர்களுடைய வீட்டிற்கு நான் செல்ல நேர்ந்தது. அப்போது என் உடம்பின் பாதி பாகத்தில், விருந்தாளி உண்ணும்போது கீழே சிதறிய மாவு பட நேரிட்டது. உடனே என்னுடைய அந்தப் பாதி உடம்பு தங்கமாக மாறி விட்டது.

அன்றிலிருந்து, என்னுடைய மறுபாதி உடம்பையும் தங்கமாக மாற்ற, தாத தர்மங்கள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் சென்று, அங்கு நடைபெற்று முடிந்த யாகத்தின் சாம்பலில் விழுந்து புரள்வது என்னுடைய வழக்கம். ஆனால் இதுவரை என்னுடைய அந்த எண்ணம் ஈடேறவில்லை. தர்மராஜரின் யாகத்திலாவது என்னுடைய எண்ணம் ஈடேறும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கும் ஏமாற்றமே மிஞ்சியது என்று கூறியது.

இந்த பூமியில் மிகச்சிறந்த ஆட்சியாளர் என்று புகழ்பெற்ற ஒருவருடைய யாகம்கூட, ஒரு ஏழை பிராமண குடும்பத்தின் தியாகத்திற்கு இணையாகவில்லை,

இதுவே தானம். தானத்தில் எதிர்பார்ப்புகளே இருக்க முடியாது. நீங்கள் எப்பொழுது உங்களிடம் இருக்கும் சிறந்த பொருட்களையும், அது தேவைப்படும் நிலையிலிருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அதைப்பற்றிய எண்ணம்கூட இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்கிறீர்களோ, அப்பொழுதுதான் நீங்கள் தான சிந்தனை உடையவராகிறீர்கள். நீங்கள் கொடுத்ததன்மூலம் எதையும் பெறவில்லையென்றாலும்கூட, நீங்கள் சந்தோஷமாக இருந்தால், நீங்கள் தான சிந்தனை உடையவர்; இல்லையென்றால் அது மற்றொரு வியாபாரமே

Illustration of hands playing flute