வினாக்களின் வாசலில்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அர்ஜுனன் அமைதியில் ஆழ்ந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் அவருக்குள் சந்தேகம் இருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஒருவர் தமக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்று எப்படி வேறுபடுத்துவது? நமக்குள் இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மறைத்தோமானால், அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தாதா, ஸ்வாமிஜி?

தர்ம காரியங்களில் ஈடுபடுவது நல்லது என்று நமக்கு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். தர்மம் என்பது எல்லா நேரங்களிலும் சிறந்ததாகாது என்று நீங்கள் சொல்வது குழப்பமாக உள்ளது. தயவுசெய்து விளக்கவும்.

ஸ்வாமிஜி, நீங்கள் பயன்படுத்தும் 'அஹங்காரம்' என்னும் வார்த்தை ஃப்ராய்ட் (Freud) என்பவர் உபயோகிக்கும் வார்த்தையைப் போன்றதுதான், இருப்பினும் இரண்டும் ஒன்றல்ல என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது எனக்குப் புரியவில்லை, தயவுசெய்து தெளிவாக விளக்குங்கள்.

ஸ்வாமிஜி, மரணத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பும் அனுபவங்கள் ஜீவன்முக்தியை நோக்கி அழைத்துச் செல்லுமா?

ஸ்வாமிஜி, நாம் எதைச் செய்கிறோமோ அதைக் கட்டுறு மனப்பாங்குதான் செய்ய வைக்கிறது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் எதைச் செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடக்கூடிய, முன்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்ட அமைப்புதான் மனித உடல் - மன அமைப்பை இயக்குகிறதா?
✍ * ஸ்வாமிஜி, ஆன்மீக வளர்ச்சிக்கு ஆசிரமச் சூழல் மிக முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னீர்கள். ஆசிரம வாழ்க்கை வாழ இயலாத மக்களின் நிலை என்ன? அவர்களால் முன்னேற முடியாதா?
✍ * ஸ்வாமிஜி, நீங்கள் யோகாவைப் பற்றிச் சொன்னீர்கள். இன்றைய நாகரிக மக்கள் யோகாவை ஆரோக்கியத்திற்கான ஒரு பயிற்சியாகவே பயன்படுத்துகிறார்கள். இது தவறா?
✍ * ஸ்வாமிஜி, மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை மிக அருமையாக விளக்கினீர்கள். இதை நம் அன்றாட செயல்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்துவது?
✍ * ஸ்வாமிஜி, நாம் மன அளவிலும், அதைவிட உயர்ந்த அளவிலும்கூட ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களென்றால், ஏன் நம்மால் அந்த இணைப்பை உணர முடியவில்லை? நாம் எப்படி அந்தத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது?
வளப்படுத்துதலை, உங்கள் வாழ்க்கைமுறையாக்குங்கள்

பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயமான புருஷோத்தம யோகத்தில் கிருஷ்ணர் மட்டுமே பேசுகிறார். அர்ஜூனன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அர்ஜூனனின் உள்மனப் பேச்சு அமைதியாக்கப்பட்டது. அதன் விளைவாக அவருள் இருந்த கேள்விகள் மறைந்தன.
கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்முடைய சக்தி என்ன என்பதையும், உயிர்படைத்தவைகளுள், தாம் மேலானவராகச் சிறந்து விளங்குவதற்குக் காரணம் என்ன எனபதையும் விளக்குகிறார்.
மேலும் அவர் அர்ஜூனனிடம் என்ன பகிர்ந்துகொண்டாரோ, அது மிகவும் ஆழ்ந்த இரகசியம் என்பதையும் விளக்குகிறார்.
அர்ஜூனன், தம்முடைய 'சுய'த்துள் நிலைபெற்றிருந்தார். அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. விச்வரூப தர்சன யோகத்தில் கிருஷ்ணரின் பிரபஞ்ச வடிவத்தைக் கண்டதாலும், அதன்மூலம் அவருக்குக் கிடைத்த நேரடி அனுபவத்தினாலும், அவருள் குடிகொண்டிருந்த கேள்விகள் அத்தனையும் கரைந்தேபோயின. ஸத்யங்களை உள்வாங்க அர்ஜூனன் தயாராகிவிட்டதை அறிந்து, கிருஷ்ணர் திருப்தியடைந்தார்.
தேடுதல் இல்லாத சந்தேகம் - கேள்வி, தேடுதல் உள்ள கேள்வி - சந்தேகம்
இதுவரை கிருஷ்ணர் அவருக்கு என்னவெல்லாம் போதித்தாரோ, அவற்றை உள்வாங்குவதற்குத் தேவையான ஆழ்ந்த அறிவையும் தெளிவான புரிதலையும் அவர் பெற்றுவிட்டார்; தம்முடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தயாராகி விட்டார்.
> குருமார்கள், தங்கள் அனுபவங்களை உடல்மொழிமூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
அர்ஜூனன் ஆழ்ந்த வலிமைமிக்க ஆன்மிக அனுபவத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஒரு புதிய 'இருப்பாக' இருக்கிறார்.
கிருஷ்ணர், தம்முடைய பிரபஞ்ச வடிவத்தை வெளிப்படுத்தியதின் விளைவாக, கூட்டு விழிப்புணர்வு நிலையில், தாமும் ஒரு அங்கம்தான் என்ற விழிப்புணர்வை, புரிதலை அர்ஜூனன் பெற்றார். இந்த அனுபவம் அவரைப் பக்தியில் ஆழ்த்தியது. இந்தப் பக்தி வெறும் கிருஷ்ணரிடம் மட்டும் ஏற்படவில்லை, கிருஷ்ணரின் மூலமாக மொத்த மனிதகுலத்தின் மீது வந்தது.
அர்ஜூனன், மனிதகுலத்திற்காகவே பேசுகிறார், கிருஷ்ணர் சொல்வதைக் கேட்கிறார், தமக்காக அல்ல.
அர்ஜூனனிடம் இதற்கு மேல், எந்தவிதமான தர்க்க ரீதியான கேள்விகளும் இல்லை. அவர், கிருஷ்ணரை உள்வாங்குவதற்கான நிலையை அடைந்துவிட்டார். அதற்கு அவர் முழுமையாகத் தயாராகியிருந்தார். குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்திருந்த 'எண்ணங்கள் நிரம்பிய' நிலையிலிருந்து (Thoughtfullness State) எண்ணங்களற்ற நிலையை (Thoughtless State), கேள்விகள் மறைந்த மனமற்ற நிலையை (No-Mind State) அடைந்துவிட்டார்.
நமக்குள் கேள்விகள் இருக்கும்வரை, நாம் விடையைப் பெற மாட்டோம். நாம் முன்கூட்டியே தீர்மானித்த தீர்மானங்களையும், நம்முடைய வரையறுக்கப்பட்ட புரிதலைத் தற்காத்துக்கொள்வதற்காகவுமே கேள்விகளை எழுப்புகிறோம். கேள்விகள், நமக்கும் அறிவிற்கும் இடையேயும், நமக்கும் குருவிற்கும் இடையேயும் தடையாகச் செயல்படுகின்றன. புத்தர், லாவோட்சே (Lao Tse) உட்பட, எல்லாப் பெரிய குருமார்களுக்கும் கேள்விகள் மீது ஒரு வெறுப்பு இருந்தது.
குருமார்கள், தங்கள் அனுபவங்களை உடல்மொழிமூலம் வெளிப்படுத்துகிறார்கள். அங்கு சக்தி பரிமாற்றம் (Transmission) நிகழ்கிறது.
ஒரு அனுபவத்தை வார்த்தைகளால் சொல்வது என்பது அந்த அனுபவத்தை மறுப்பதே. ஒருமுறை வார்த்தையில் சொல்லிவிட்டால் போதும், அந்த அனுபவம், அதன் பொருளை இழந்துவிடுகிறது. லாவோட்சே சொல்கிறார், "உண்மையான ஸத்யத்தை அனுபவமாக பெற்றிருந்தால், அதை வார்த்தைகளால் சொல்லி, மற்றவர்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி வார்த்தைகளால் சொல்லி மற்றவர்களுக்குப் புரியவைக்க முடிந்தால், அது ஸத்யம் ஆகாது."
ஸத்யத்தை
வார்த்தைகளால்
சொல்லி
மற்றவர்களுக்குப்
புரியவைக்க முடியாது.
ஒரு தமிழ் துறவி சொல்கிறார், "உணர்ந்ததைக் கற்றுக்கொடுக்க முடியாது, அப்படிக் கற்றுக்கொடுக்க முடிந்தால், அது உணரப்படாத ஒன்றைப் பற்றியதாகத்தான் இருக்கும்!" அதாவது அதை நாம் இன்னும் உணரவில்லை என்றே பொருள்.
ஆனால் கிருஷ்ணர் மாறுபட்டவர். அவர் மனிதகுல நன்மைக்காக, எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதற்காக, அர்ஜுனனுடனான உரையாடலில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறார். மேலான விழிப்புணர்வுடைய கடவுளாக இருப்பதால், அர்ஜுனனின் குழப்பத்தைத் தீர்ப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.
அர்ஜுனனின் கேள்விகள், குழப்பங்களில் இருந்து எழுந்தவை. ஒரு க்ஷத்ரியராக, கொல்வதென்பது அர்ஜுனனுக்குப் பழக்கப்பட்ட ஒன்றே. ஆனால் அந்தக்க குருக்ஷேத்ர போர்க்களத்தில் அவருக்கு இருந்த குழப்பம், மனிதர்களைக் கொல்வதைப் பற்றியதல்ல. தம்முடைய உறவினர்களை, ஆசிரியர்களை, நண்பர்களைக் கொல்வதைப் பற்றியது.
அர்ஜுனனின் குழப்பம், அஹிம்சை கொள்கையினால் ஏற்பட்டதல்ல; அப்படியிருந்திருந்தால் கிருஷ்ணர், அர்ஜுனனைச் சண்டையிடத் தூண்டியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.
அர்ஜுனனின் குழப்பம், மனஅழுத்தம், சந்தேகங்கள், கேள்விகள் அனைத்தும் அஹங்காரத்திலிருந்து, 'நான்', 'எனது' என்ற உடைமை உணர்விலிருந்து எழுந்தவை.
அர்ஜுனன் முன்னே கூடியிருப்பவர்கள், அர்ஜுனனால் போரில் கொல்லப்பட வேண்டிய அனைவருமே யாரோ அன்னியர்கள் அல்ல, அவர்கள் அவரது உறவினர்களும் நண்பர்களும்தான்! ஆகவே அர்ஜுனனின் மனத்தில் ஏற்பட்ட குழப்பம் அஹிம்சையினால் ஏற்பட்டதல்ல, அவருடைய 'எனது' என்ற உடைமை உணர்வினால் ஏற்பட்டதே.
அர்ஜுனனின் மதிமயக்கம், அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் முன்னால் கூடியிருப்பவர்கள் அவரது உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே என்ற அவரது பார்வை, அவர்களைக் கொல்வதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.
குருவின் சக்தி
எப்படிப்பட்டதென்றால், ஒரு
கேள்விக்கு அளிக்கப்படும்
பதில், அடுத்து
பின்தொடர்ந்து வரக்கூடிய
பல கேள்விகளைக்
கரைந்துபோகச்செய்யும்
ஒரு க்ஷத்ரியன் என்ற முறையில், கொல்வதில் அர்ஜுனனுக்குத் தடுமாற்றமோ அல்லது ஒழுக்கத்தை மீறிய செயல் என்ற எண்ணமோ இல்லை. அஹங்காரத்திலிருந்து பிறந்த வன்முறையும், 'எனது' என்ற உடைமைக் குணத்தினால் எழுந்த வன்முறையுமே அவருக்கு ஒரு தடையாக அமைந்ததேயன்றி, அது அஹிம்சை என்னும் நீதிக் கொள்கையினால் ஏற்பட்ட தடை அல்ல.
அர்ஜுனனின் கேள்விகளுக்கு ஒன்றன்பின்
ஒன்றாகக் கிருஷ்ணர் பதிலளித்தார்.
குருவின் சக்தி எப்படிப்பட்டதென்றால்,
ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் பதில்,
அடுத்து பின்தொடர்ந்து வரக்கூடிய பல
கேள்விகளைக் கரைந்துபோகச்செய்யும்
வகையில்தான் இருக்கும்!
கிருஷ்ணரின் விச்வரூப தர்சனத்தால்,
அந்தத் தெய்விக தரிசன அனுபவத்தால்
அர்ஜுனனின் உள்மன ஓட்டத்தின் வேகம்
குறைந்தது, ஏறக்குறைய நின்றேவிட்டது
எனலாம். இதன் விபரம் அத்தியாயம்
பதினொன்றில் கொடுக்கப்பட்டுள்ளது.
கடவுளின் மனத்தில்
இடம்பெற ...
'நான்', 'எனது' என்ற
உடைமை உணர்வைக்
களைந்துவிடுங்கள்.
அர்ஜுனனிடம் எஞ்சிநின்ற கேள்விகள் அவருக்கானது மட்டும் அல்ல, மனிதகுலத்தின் சார்பாகத் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்பிய சந்தேகங்களே.
இந்தக் கேள்விகள், இப்பொழுது முற்றிலும் வேறுபட்ட கோணத்தைக் கொண்டிருந்தன, அவை, அவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியதல்ல. கிருஷ்ணரின் விச்வரூப தர்சனத்தைப் பார்த்த பிறகு, அவரது கேள்விகள் அனைத்தும் தெய்விக கிருஷ்ணரின் இயல்பைப் பற்றியும், அவரை எப்படி அடைவது என்பதைப் பற்றியுமானவையாகவே இருந்தன.
இப்பொழுது கிருஷ்ணர், தாம் யார் என்பதையும், தம்மை அடைவது எப்படி என்பதையும் அர்ஜுனனிடம் விளக்குகிறார். அர்ஜுனன், தம் தர்க்க ரீதியான கேள்விகளைக் கடந்துவிட்டதைக் கிருஷ்ணர் புரிந்துகொண்டார். அர்ஜுனனிடம் கடைசியில் மிஞ்சிநிற்பது சந்தேகங்கள் மட்டுமே!
சந்தேகம் என்றால் அந்த நபர், குருவை ஜீரணிக்க, ஏற்றுக்கொள்ள, கிரகித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார் என்று பொருள்! குருவிலிருந்து வரக்கூடிய எல்லா வார்த்தைகளுமே, சந்தேகங்களைத் தீர்க்கக்கூடியவைதான். குரு தம்மைத்தாமே வெளிப்படுத்த உதவுவது சீடனின் சந்தேகங்களே! கேள்விகள் குருவை வெளிப்படுத்த அனுமதிப்பதில்லை. ஏறக்குறைய எல்லாக் கேள்விகளுமே
வன்முறையானவைதான்.
வார்த்தைகளை இரண்டு வகையாகப்
பிரிக்கலாம். ஒன்று கேள்விகளை உடையது,
மற்றொன்று சந்தேகங்களை உடையது.
கேள்வி என்பது வன்முறையானது, நமக்கு
இது தெரியும் என்று தெரியப்படுத்துவதற்கு
அல்லது நாம் உண்மை என்று நம்பும்
ஒன்றை தற்காத்துக் கொள்ளுவதற்காக
வெளிப்படுத்தும் செருக்கேதான்
கேள்விகள்.
பெரும்பாலான நேரங்களில், நமக்கு அதைப்பற்றித் தெரியும் என்பதை வெளிக்காட்டுவதற்காக, கேள்விகள் கேட்கிறோம். மிகப் பெரிய கேள்விகளை மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.
ஒருவர் என்னிடம், 'ப்ரஹ்மம் என்பது புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்ட, தர்க்க அறிவுக்கு எட்டாத ஒன்று' என்று ப்ரஹ்ம ஸூத்ரம் சொல்கிறது, இது சரிதானே?' என்று கேட்டார். அவர் ப்ரஹ்ம ஸூத்ரம் படித்திருக்கிறார் என்பதைக் காட்டுவதே இந்தக் கேள்வியின் நோக்கம். இதில் தேடுதல் இல்லை.
தேடுதல் இல்லாத சந்தேகம்தான், கேள்வி. தேடுதல் உள்ள கேள்விதான், சந்தேகம். கேள்விகள், ஸத்யத்தைத் தேடுவதில்லை. ஆனால் சந்தேகங்கள், ஸத்யத்தைத் தேடுகின்றன.
ஸத்யத்தின் புரிதலே, அற்புதத்தின் ஆரம்பம்
நம்மில் யாருமே ஸத்யத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால், மனிதனால் நிறைய ஸத்யங்களைக் கையாள முடிவதில்லை. அவனால் ஓரளவு ஸத்யங்களையே சமாளிக்க முடிகிறது.
இன்னொருபுறம், ஸத்யங்கள் அவனுக்குள் மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பிக்கிறது. அப்போது, தான் நிற்கிற பூமி நழுவிச்சென்று கொண்டிருப்பதை உணர்கிறான். அது அவனுக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. ஸத்யத்தை நேர்மையாகக் கொடுத்தால், ஒருசிலரே கேட்கத் தயாராக இருக்கிறார்கள். மக்கள், உண்மையான ஸத்யத்தைக் கொடுத்த வினாடியில் பயந்துவிடுகிறார்கள். ஸத்யம், மக்களைப் பயமுறுத்துகிறது. அதனால், அவர்கள் ஸத்யத்தைக் கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு மேற்கத்திய வேதாந்தி மிக அழகாக எழுதினார், "தயவுசெய்து பொய்களைக் களைந்துவிடாதீர்கள்; மனிதன் அதன் மேலேயே வாழட்டும், அதனுடனேயே வாழட்டும்."
ஒருவரின் பொய்களை அகற்றிவிடுவது என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்தப் பொய்களை அடிப்படையாகக்கொண்டே, ஒருவர் வாழ்கிறார். பொய்களை அடிப்படையாகக்கொண்டுதான் நாம் வாழ்ந்துகொண்டும் மடிந்துகொண்டும் இருக்கிறோம். பொய்கள், நமக்கு ஆறுதலளிக்கிறது. ஸத்யங்கள், நம்மை பயமுறுத்துகின்றன.
நாம் ஏன் அலங்கரித்துக்கொள்கிறோம், தலைமுடிக்குச் சாயம் பூசிக் கொள்கிறோம். மேலும் உடையலங்காரம் செய்துகொள்கிறோம்?
நாம் ஸத்யத்தைப் பார்க்க விரும்புவதில்லை. நமக்கு வயதாகிறது என்ற உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. நாம் முதுமையடைகிறோம் என்ற உண்மையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை; நாம் போலியாக நடிக்கிறோம், பொய் சொல்கிறோம்.
நாம், நம் உண்மையான தோற்றத்தை நமக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்கிறோம் என்று தெரிந்தபிறகும், விதவிதமான அலங்காரங்களை ஏன் செய்துகொள்கிறோம்? நாம், 'நம்மை எதுவாகக் காட்டிக்கொள்கிறோமோ, அது அல்ல நாம்' என்பது நமக்கே நன்றாகத் தெரியும். நாம் எண்ணற்ற வழிகளில் ஸத்யத்தை மறைக்கிறோம். நாம் ஏன் இத்தனை சமுதாய நன்னடத்தைப் பண்புகளை வைத்திருக்கிறோம்?
சமுதாய மரியாதைக்காக நாம் நிறைய
சம்பிரதாயங்களைச் செய்கிறோம். நமக்கு,
நம் சிறுவயதிலிருந்தே, 'தயவுசெய்து,'
ஸத்யத்தை
நேர்மையாகக் கொடுத்தால்
ஒருசிலரே
கேட்கத் தயாராக
இருக்கிறார்கள்.
'நன்றி' போன்ற வார்த்தைகள் கற்றுத்தரப்படுகின்றன. நாம் அவற்றை மனதாரச் சொல்ல நினைக்கின்றோமா இல்லையோ, உண்மையில் அந்தச் சூழ்நிலைக்கு அவசியமா இல்லையா என்பதைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், சமுதாய நன்னடத்தைக் கோட்பாடுகள் சொல்கின்றன என்பதற்காக அவற்றைச் சொல்கிறோம்.
ஒருவரைப் பார்க்கும்பொழுது, உண்மையில் நாம் அதை நல்லவிதமாக உணராவிட்டாலும்கூட, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று சொல்கிறோம்.
சில நேரங்களில், நான்கூட இந்த விளையாட்டை விளையாட வேண்டியதாகிவிடும். மக்கள் என்னை முதன்முறையாகப் பார்க்கும்போது, அவர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாதபோது, அவர்கள் என்னிடம் எந்த வார்த்தையில் பேசினாலும்சரி, நான் அவர்களிடம் சமுதாய ரீதியான மரியாதையுடன் இருப்பதுதான் எனக்கு மிகவும் நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் மனதளவில் காயப்படுவார்கள். அவர்கள், உண்மையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதில்லை.
அதனால் நான், அவர்கள் மனத்திற்கு இனிமையானதையே வழங்கிவிடுவேன். அவர்கள் இன்னும் தயாராகாதபொழுது, நாம் ஏன் அவர்களது சமுதாய ரீதியான சௌகரியமான சூழ்நிலையைத் தொந்தரவு செய்ய வேண்டும்?
நாம் உண்மையாகவே 'இனிமையாக' உணர்ந்திருந்தால், நம் முழு உடலும், நம் இருப்புமே அந்த இனிமையை வெளிப்படுத்திவிடும்.
நாம் ஒருவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை அவருக்குப் புரியவைப்பதற்கு, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி' என்று அவரிடம் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமா என்ன? நம்முடைய மொத்த உடலும், நம் புன்னகையும் வெளிப்படுத்தும் சந்தோஷமே அதற்குச் சான்றாக இருக்கும். நாம் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் உணர்ச்சிகளைத் தங்களுக்குள் மறைத்துக்கொண்டு, எந்த அளவிற்குப் குறைத்து வெளிக்காட்டுகிறார்களோ, அந்த அளவிற்குத்தான் ஒரு நாடோ அல்லது மக்களோ நாகரிகத்தில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள். ஒரு நாடோ அல்லது மக்களோ தங்களை எந்த அளவிற்கு நாகரிகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்களோ, அந்தத்திற்குக் குறைவான அளவே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.
யாராவது புன்னகைசெய்தால், நாம் வெறும் உதட்டளவில் புன்னகைக்கிறோம். இது வெறும் செயற்கையான புன்னகை, இந்தப் புன்னகை கண்களைத் தொடுவதேயில்லை. நம் கண்கள் ஒருபோதும் சிரிப்பதில்லை, இதயமும் சிரிப்பதில்லை.
நம் சிரிப்பு, உதட்டில் தொடங்கி
உதட்டளவிலேயே முடிந்துவிடுகிறது.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
உண்மையான சிரிப்பு வயிற்றிலிருந்து
வரும். ஆனால் ஒருவர் வயிற்றிலிருந்து
உணர்வு பொங்க உண்மையாகச்
சிரித்தாரென்றால், மக்கள், அவர் ஏதோ
தவறுசெய்துவிட்டு, குற்றவுணர்ச்சியில்
சிரிப்பதாக வெறித்துப் பார்ப்பார்கள்.
ஸத்யத்தைப் போலவே சிரிப்பும் மக்களைக்
கலவரப்படுத்துகிறது.
> ஸத்யம் நேரடியாக
> நமக்கு ஜீவன்முக்தியை
> அளிக்கிறது. நம்முள்
> உணர்வுமாற்றத்தை
> ஏற்படுத்துகிறது.
நமக்குத் நன்றாகத் தெரியும், ஸத்யம் என்பது வேறு ஏதோ ஒன்று. ஸத்யத்தை எதிர்கொள்ள நமக்குத் தைரியம் இல்லை. வார்த்தைகளிலும் சரி, உடல் மொழியிலும் சரி, நம்மால் அவ்வளவு ஸத்யமாக இருக்க முடியாது என்று நினைக்கிறோம்.
ஸத்யம் நேரடியாக நமக்கு ஜீவன்முக்தியை அளிக்கிறது. நம்முள் ஒரு உருமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஸத்யத்தின் ஒரு குறிப்பிட்ட முக்கியமான கருத்தையோ, ஸத்யத்தின் ஒரு சிறிய பரிமாணத்தையோ, எங்கேனும் ஒருவர் நேர்மையான முறையில் உணர்ந்துகொண்டாலோ, பிடித்துக்கொண்டாலோ, அந்த வினாடியே அது பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிடும்.
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்கிறார், "நீங்கள் உலகிலுள்ள எல்லா நூலகங்களிலுமுள்ள மொத்தப் புத்தகங்களை மனப்பாடம் செய்தாலுமே, அது உங்களுக்கு வித்யா அஹங்காரத்தை மட்டுமே வளர்க்க உதவும்; வேறு எதற்கும் உதவாது. ஏதாவதொரு கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . உங்கள் இருப்புநிலைவரை எடுத்துச்சென்று கிரகித்துக்கொள்ளுங்கள், அதை அனுபவமாக்குங்கள். அந்த ஒரே ஒரு கருத்து, உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.
கண்கள், ஆன்மாவின் வாசல்
அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் 'பெரிய புராண'த்தை நாம் படித்தோமென்றால், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பார்க்கலாம். அந்த ஞானிகள், போற்றத்தக்க வகையில் பெரிதாக ஏதும் செய்திருக்க மாட்டார்கள், அதில் சில நாயன்மார்கள், மலர்களைப் பறித்துக் கடவுளுக்குப் படைத்தார்கள். அவ்வளவுதான். இருந்தாலும், அவர்கள் ஞானமடைந்தார்கள்.
நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை. நாம் செய்யும் செயலில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பதே முக்கியம். கடவுளுக்கு மலர்களைச் சமர்ப்பிக்கும்போது, அந்தச் செயலில் நாயன்மார்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தார்கள்.
நாம்கூட கடவுளை மகிழ்விப்பதற்காக, தினமும் மலர்களைப் படைக்கிறோம். இன்னும் பலவற்றையும் செய்கிறோம். ஆனாலும் நாம் இன்னமும் ஞானமடையவில்லை. தோட்டத்தைப் பராமரிப்பதற்கான அல்லது மலர்களை வாங்குவதற்கான செலவுதான் அதிகரித்திருக்கும்!
இங்குப் பிரச்சினை என்னவென்றால்,
நாம் உண்மையாக இருப்பதில்லை.
நாயன்மார்கள் கடவுளுக்குப்
படைப்பதற்காக மலர்களைக்
கொய்யும்போதும், அவற்றை மாலையாகத்
தொடுக்கும்போதும், தொடர்ந்து
தங்கள் இஷ்ட தெய்வத்தை மட்டுமே
நினைத்தார்கள். அவர்கள் முழுமையாகக்
கடவுளைப் பற்றிய சிந்தனையிலேயே
மூழ்கியிருந்தார்கள். அவர்கள் கவனம்
சிறிதளவும் சிதறிப் போகவில்லை.
நாம், நம் இஷ்ட தெய்வத்திற்குப்
படைப்பதற்காக மலர்களைக்
கொய்யும்போதுகூட, நாம் வேறு
எதையோ பற்றிச் சிந்திக்கிறோம். தினமும்
தவறாது பிரார்த்தனை செய்யும் மக்களை
நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள்
கவனம் அலுவலக வேலைகளின்
மீதோ அல்லது வேறு ஏதோ ஒன்றின் மீதோ
இருக்கும்.
> நாம் இதய பூர்வமான
> ஈடுபாட்டுடனிருந்தால்,
> கடினமான வேலைகூட,
> ஒரு இனிமையான
> வழிபாடாக மாறிவிடுகிறது.
விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களைத் தினமும் படிக்கும் மக்களை நாம் கவனித்ததுண்டு.
முழுமையாகச் செய்தால் ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகக்கூடிய அந்த ஸ்லோகங்களை, உணவேதும் உண்ணாமல் விரதமிருந்து சொல்வதாகப் பெருமிதப்பட்டுக்கொள்வார்கள். ஆனால் ஸ்லோகங்களைச் சொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள் எத்தனையாவது ஸ்லோகம் வருகிறோம், இன்னும் எத்தனை ஸ்லோகங்கள் பாக்கியிருக்கின்றன என்று புரட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அவர்கள், அந்த ஒருமணிநேரத்திற்குள் சலித்து, களைத்துவிடுகின்றனர்; அதனை ஒரு சாதாரண வேலையைப்போல் செய்கின்றனர். அவர்களால் தாங்கள் உச்சாடனம் செய்யும் மந்திரங்களிலோ அல்லது பிரார்த்தனையின் தாத்பரியத்திலோ உணர்வுகளை ஒருமுகப்படுத்த முடிவதேயில்லை. அவர்களிடம் நேர்மையில்லை.
நாம் இதய பூர்வமாக வழிபாட்டில் ஈடுபடாதபொழுது அது ஒரு சாதாரணமான தினசரி வேலையாக ஆகிறது. ஆனால், நாம் இதய பூர்வமான ஈடுபாட்டுடனிருந்தால், கடினமான வேலைகூட, ஒரு இனிமையான வழிபாடாக மாறிவிடுகிறது.
ஞானிகள், சடங்கு சம்பிரதாயங்களையோ அல்லது பிரார்த்தனையையோ, பயத்தினாலோ அல்லது பேராசையினாலோ
செய்யவில்லை; அவர்கள் அதைச்
செய்ய விரும்பினார்கள். அன்பினாலும்,
இயற்கையோடு இருந்த இணக்கத்தினாலும்,
இதயத்தின் ஆழத்திலிருந்து, தங்கள்
இருப்பு நிலையிலிருந்து இதைச்
செய்தார்கள். அவர்களுக்கு இதைச் செய்ய
வேண்டுமென்ற உந்துதல் இருந்தது.
நாம் நம் படுக்கையிலிருந்து எழுந்த
வினாடியிலிருந்து, அந்த நாள் முடியும்வரை
நன்றாக ஆராய்ந்து பார்த்தோமானால்,
அந்த முழு நாளுமே பொய்களால்
நிறைந்திருக்கும்.
திரந்த மனத்துடன்
இருங்ங்கள்.
எது எல்லாம் வெளியே
வருகிறதோ,
அதுவே உங்கள்
அனுபவம்.
முதலில், நம்முடைய புன்னகையே பொய்யானது. நாம் புன்னகை செய்யும்பொழுது, நம் மனத்தில் என்ன இருக்கிறது என்று அடுத்தவர் புரிந்துகொள்ளக்கூடாது என்று நினைக்கிறோம்; அதனால் நாம் மற்றவரின் கண்களை நேருக்குநேர் பார்ப்பதில்லை. ஏன்? அவர் நம் மனத்தைப் படித்துவிடுவாரோ என்று பயப்படுகிறோம். நம் இதயம் கொதித்துக் கொண்டிருந்தாலும்கூட, நம்மால் ஒரு பெரிய புன்னகையை உதடுகளில் காட்ட முடியும். எது எப்படியானாலும், நம் கண்களால் எதையும் மறைக்க முடியாது.
நம் கண்களால் எதையுமே மறைக்க முடியாது. கண்கள், நம் ஆன்மாவிற்குள் செல்வதற்கான நுழைவாயில். எதிரில் இருக்கும் நபரின் ஆன்மாவை, நாம் நேரடியாக அவர் கண்களில் பார்க்கிறோம்.
நாம் பல நேரங்களில், அடுத்தவரின் கண்களுக்குள் பார்ப்பதேயில்லை. ஏனென்றால், நாம் பேசுவதையும் செய்யும் செயல்களையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று நினைக்கிறோம்.
குறிப்பு - அனுபவமாகாத ஸத்யம்
மாபெரும் தத்துவ மேதையும் பேராசிரியருமான ஒருவர், என்னுடைய சில சத்சங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் என்னைக் கேட்டார், “சுவாமிஜி, நான் ஒரே பாடத்தை பல வருடங்களாகக் கற்றுக்கொடுக்கிற போதிலும், ஒரு பதினைந்து நிமிட வகுப்பு எடுக்க வேண்டியிருந்தாலும்கூட, குறைந்தது ஒருமணிநேரமாவது, நான் என்ன பேச வேண்டும் என்பதற்கான குறிப்பு தயார்செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் நான் கவனித்தவரை, நீங்கள் எதையுமே தயார்செய்யாமல் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள். மேலும் ஒவ்வொருநாளும் புதுப் புது விஷயங்களைப் பேசுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றிக்கொண்டேயிருப்பதால், உங்களுக்கு குறிப்பெடுப்பதற்கான நேரமில்லை என்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் எப்படி உங்களால் தொடர்ந்து பல மணி நேரங்கள் பேசமுடிகிறது?''
அதற்கான பதில் இதுதான் : “நீங்கள் வெளிப்படுத்துவது, உங்கள் உண்மையான அனுபவமாகயிருந்தால், தயார்செய்ய வேண்டிய அவசியமே இல்லை.”
திறந்த மனத்துடன் இருங்கள். எது எல்லாம் வெளியே வருகிறதோ, அதுவே உங்கள் அனுபவம். உதாரணமாக, நம் பெயரை யாராவது கேட்டால், நாம் தயார்செய்கிறோமா? அதற்கு ஏதும் குறிப்புகள் தேவையா? நிச்சயமாக இல்லை! ஏனென்றால், அது நம் அனுபவம். நமக்கு அனுபவமாகாத ஒன்றிற்கு விளக்கம் தருவதற்குத்தான், நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் சொற்பொழிவாற்றுவதற்குத்தயார்செய்ய வேண்டியுள்ளதென்றால், அல்லது நாம் மேடையேறிப் பேச பயமாயிருக்கிறதென்றால், இதன் பொருள் நாம் பொய்களால் நிறைந்துள்ளோம். நம் முழு இருப்புமே பொய்; நம் வாழ்வே ஒரு பொய்.
மேடையில் பேசுவதற்கு மக்கள்
ஏன் பயப்படுகிறார்கள்? அவர்கள்
நினைப்பதையெல்லாம் அப்படியே பேசி
விடுவார்களோ என்று பயம். மனத்தினுள்
ஓடிக்கொண்டிருப்பதையெல்லாம்
வெளியே கொட்டிவிடுவார்களோ என்று
பயப்படுகிறார்கள்.
உள்ளே நிறைய அழுக்கு இருக்கிறது என்று
நமக்கே தெரியும். அந்தக் குப்பைகளுள்
சிலவற்றைத் தவறிக் கொட்டிவிடுமோ
> நம்மைத்
> தயார்செய்து கொள்ளுதல்
> என்பது
> நம் உள் மனப் பேச்சை
> மறைப்பதற்கான முயற்சியே!
என்று பயப்படுகிறோம். அதனால்தான் நாம் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என்று ஆயத்தம் செய்கிறோம்.
நாம் சம்பந்தமில்லாத ஒன்றைப் பேசவில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நாம் ஒவ்வொரு கருத்தாக எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவற்றை மறந்துவிட்டால், மனத்தில் உள்ளதை உள்ளபடியாகவே வெளியே சொல்லிவிடுவோமோ என்று பயப்படுகிறோம்.
வேறு எதையாவது வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே, நாம் நம்மைத் தயார்செய்து கொள்கிறோம். முன்னேற்பாடு அல்லது நம்மைத் தயார்செய்து கொள்ளுதல் என்பது நம் உள் மனப் பேச்சை மறைப்பதற்கான முயற்சிதான்.
நம் உணர்வுகளைத்
வெளிப்படுத்த,
வார்த்தைகள்
தேவையில்லை.
நம் உடல்மொழியே
போதுமானது.
பேச்சைத் தொழிலாகக் கொண்ட
ஒருவர், தாம் பேச வேண்டியவற்றைத்
தயார்செய்துகொள்ள வேண்டும் என்றால்
அவர் சொல்வது எல்லாமே பொய்தான்.
அவர் வெறுமனே அதை மனப்பாடம்
செய்து பேசுகிறார். அது, அவர்
அனுபவமாக மாறவில்லை. அது, அவர்
இருப்பின் அங்கமாக மாறவில்லை.
"உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்கள் அருகாமையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்பது போன்ற இத்தனைக் கனிவான வார்த்தைகளை நாம் ஏன் தயார்செய்து கொள்கிறோம்.
பிறகு சிறிது நேரம் கழித்து, "எனக்கு முக்கியமான சில வேலைகள் இருப்பதால், இப்போது நான் போயாக வேண்டியுள்ளது; இன்னொரு நாள் சந்திக்கிறேன்," என்று சொல்கிறோம். ஏன் இது போன்றவற்றைச் சொல்ல வேண்டும்? உண்மையிலேயே நாம் அவர் அருகாமையை அருமையாக உணர்ந்தோமென்றால், நம்முடைய முழு இருப்புமே, அதை வெளிப்படுத்தும். நம் உடலே, அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிடும். நாம் அதை, வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது.
ஒரு சின்ன கதை:
ஒரு ஆசிரியை, தங்கள் பள்ளியைச் சுற்றிக் காண்பிப்பதற்காக ஒரு விருந்தினரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அந்த வழியாகச் சென்ற மாணவர்கள் அந்த ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்தார்கள்.
அந்த ஆசிரியை, மெதுவாகத் தலையசைத்து, மெதுவான குரலில், ‘உங்களுக்கும் அதே’ (Same to you) என்று முணுமுணுத்தார்.
விருந்தினர் கேட்டார், "நீங்கள் ஒருமுறைக்கூட அவர்களைத் திரும்ப வாழ்த்தவில்லையே, ‘உங்களுக்கும் அதே’ என்று சொல்கிறீர்களே, ஏன்?"
நாம் உண்மையில்
நிலைபெற்றிருந்தால்,
நம் உள்மனப் பேச்சு
மறைந்துவிடும்,
நாம் யோசிக்க வேண்டிய
அவசியமேயில்லை
அந்த ஆசிரியை சிரித்துக்கொண்டே
சொன்னார், "நானும் மாணவியாக
இருந்திருக்கிறேன். அவர்கள் மனத்தில்
உண்மையாக என்ன ஓடிக் கொண்டிருக்கிறது
என்று எனக்குத் தெரியும்," என்றார்.
அதனால், நீங்கள் எப்பொழுது யாருக்கு வணக்கம் செலுத்தினாலும், உங்கள் வாழ்த்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களைப் பற்றி விழிப்புடனிருங்கள். அவர்கள் 'Same to you' என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். சிறிது எச்சரிக்கையுடனிருங்கள்!
பல நேரங்களில், நாம் எப்பொழுது, எதைப் பேச வேண்டும் என்பதைத் தயார்செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது.
ஆனால் நாம் உண்மையில் நிலைபெற்றிருந்தால், நம் உள்மனப் பேச்சு மறைந்துவிடும், நம் சிந்தனை மறைந்துவிடும், நாம் யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை, பேசிவிட்டு அமைதியாக வேண்டியதுதான். நாம் ஏன் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும்?
ஒரு மேடைப்பேச்சிற்கோ அல்லது சொற்பொழிவிற்கோ மட்டுமல்ல, நண்பர்களைப் பார்க்கும்போதும் அல்லது நம் வாழ்க்கைத்
துணையுடன் இருக்கும் போதும்கூட, நாம்
திட்டமிடுகிறோம், வார்த்தைகளை ஒத்திகை
பார்க்கிறோம்.
‘எப்படி ஆரம்பிக்க வேண்டும், எதிலிருந்து
ஆரம்பிக்க வேண்டும், மேலும் விஷயத்தை
எப்படித் தொடர வேண்டும்’ என்பதுபோன்ற
பல விஷயங்களை ஒத்திகை பார்க்கிறோம்.
நாம், முழுமையாக ஒருமுறை இறுதி
ஒத்திகை பார்த்துவிடுகிறோம்.
ஸத்யம், எந்தவித ஒப்பனைகளும் அற்றது!
ஒருவேளை, எதிரில் இருப்பவர் வேறு ஏதாவது விஷயத்தைப் பேச ஆரம்பித்து விட்டால், அவ்வளவுதான், நாம் தொலைந்தோம்; அடுத்து என்ன சொல்வதென்றே நமக்குத் தெரியாது. ஏனென்றால், நமக்கு எது தெரியுமோ, நாம் எதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மட்டுமே முழுமையாக ஒத்திகை பார்த்திருப்போம்.
நம் மேலதிகாரியிடம் பேசுவதற்கு, நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும், அது சரியானதே! அவரிடம் பேசும்பொழுது நாம் கனிவுடன் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் வேலையை இழந்துவிடுவோம். மேலும் சமுதாய விளையாட்டில், அதுவும் ஒரு பகுதியாகிவிட்டதென்பதால், அதை ஏற்றுக்கொள்வோம்!
ஆனால், நிலைமை அதைவிட மிக மோசமாக உள்ளது. நாம் தொடர்ந்து, நம் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உரையாட வேண்டியவற்றைக்கூட தயார்செய்கிறோம்.
நாம் தயார்செய்ய வேண்டியிருக்கிறது என்றாலே, அது பொய்தான்.
நாம் அதை, உண்மை என்பது போன்றே சொன்னாலும்கூட, அது ஸத்யமில்லை. ஒரு உண்மையைச் சொல்வது என்பது ஸத்யமாகி விடுவதில்லை.
உண்மை வேறு, ஸத்யம் வேறு
நாம் உண்மைகளைப் பல உள் அர்த்தங்களுடன் சொல்ல முடியும். அதில் பெரும்பாலானவை பொய்களாகத்தான் இருக்கும். ஒரு பொய்யை சிறு ஒப்பனைசெய்து, அலங்கரித்து ஸத்யம்போல் காட்டிவிட முடியும்.
மஹாபாரதத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் யுத்தம் மூண்டபோது, யுத்தத்தின் ஒரு கட்டத்தில், துரோணர் கௌரவர்களின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
யுத்தப் பாதையிலிருந்து துரோணாச்சாரியரை அகற்றாமல், அவர் தலைமை தாங்கும் கௌரவப் படையை வீழ்த்த இயலாது என்பதையும், துரோணாச்சாரியாரின் மன அமைதியைக் குலைக்காமல், அவரைக் கொல்ல முடியாது என்பதையும், துரோணாச்சாரியரை நிலைதடுமாறச் செய்ய ஒரேவழி, 'அவரது மகன் இறந்துவிட்டார்' என்ற செய்தியை அவருக்கு எட்டச்செய்வதுதான் என்பதையும் கிருஷ்ணர் நன்கறிவார்.
துரோணாச்சாரியரைக் கொன்றால் மட்டுமே, கௌரவப் படையை வெல்ல முடியும். துரோணாச்சாரியரைக் கொல்ல வேண்டுமென்றால், அவரது மகன் அசுவத்தாமன் இறக்க வேண்டும் அல்லது அசுவத்தாமன் இறந்துவிட்டார்' என்ற செய்தி அவருக்கு எட்ட வேண்டும். ஏனென்றால் துரோணரின் முழு சக்தியும் அவரது மகன் அசுவத்தாமனை நோக்கியே இருந்தது. துரோணாச்சாரியாருக்கு, தம் மகனைத் தவிர வேறு யாருடனும் பந்தமில்லை. கிருஷ்ணருக்கு, துரோணரிடம் சென்று அசுவத்தாமன் இறந்துவிட்டார் என்று சொல்ல ஒருவர் தேவைப்பட்டார்.

யாரோ ஒருவர் சென்று, 'உங்கள் மகன் கொல்லப்பட்டான்' என்று சொன்னால் நிச்சயம் துரோணர் நம்பமாட்டார். ஏனென்றால், அசுவத்தாமனை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது. ஆகவே, அசுவத்தாமனின் மரணத்தை அறிவிக்க, பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரைக் கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார். யுதிஷ்டிரர் ஸத்யங்களை மட்டுமே பேசுவார். அதனால் எல்லோரும் அவரை ஸத்யவான் என்று நம்பினார்கள்.
துரோணாச்சாரியாரின் காதில் விழும்படியாக, 'அசுவத்தாமன் இறந்து விட்டான்' என்று சொல்லுமாறு யுதிஷ்டிரரைக் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டார். யுதிஷ்டிரர், தம்மால் பொய்சொல்ல முடியாது என்றும், அசுவத்தாமன் உயிருடனிருக்கையில், தாம் எப்படி அவர் இறந்துவிட்டதாகச் சொல்ல முடியும் என்றும் வினவினார்.
கிருஷ்ணர் சொன்னார், “சரி பரவாயில்லை. அசுவத்தாமன் என்ற பெயர் கொண்ட இந்த யானையை உன் சகோதரன் பீமன் கொல்வான். அதன்பிறகு, ‘இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை’ என்று நீ
> ஸத்யத்திற்கும் உண்மைக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாடு இருக்கிறது. உண்மையெல்லாம் ஸத்யமாகிவிடாது.
சொல். நீ ‘யானை’ என்கிற வார்த்தையைச் சொல்லும்பொழுது, அந்த வார்த்தை, பிறர் காதில்விழா வண்ணம், நான் என் சங்கை ஒலிக்கச்செய்கிறேன்.
இது, நீ பொய் சொன்னதாக ஆகாது; ‘பொய் பேசாத தர்மவான்’ என்ற உன் பெயரையும் காப்பாற்றும்; அதேசமயம் எந்த வேலையை முடிக்க வேண்டுமோ அந்த வேலையையும் செய்துமுடித்துவிடும்,” என்று சொன்னார்.
நாம் ஸத்யத்தைத்தானே பேசப் போகிறோம் என்று யுதிஷ்டிரரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர், “இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை,” என்று அறிவித்தார். யானை என்ற வார்த்தையைச் சொல்லும்போது, கிருஷ்ணர், தம் சங்கை முழக்கி, யாருக்கும் அந்த வார்த்தை கேட்காமல் பார்த்துக்கொண்டார்.
துரோணர், யுதிஷ்டிரரை நம்பினார். அது தவிர, சங்கை முழக்குவது வெற்றியின் அடையாளம். அதனால் கிருஷ்ணர் சங்கை முழக்கியவுடன், அசுவத்தாமன் இறந்ததாக எண்ணி, அவர் ஆழ்ந்த மனச்சோர்வில் வீழ்ந்தார்; சக்தி இழந்தவரானார். தம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தியானத்தில் ஆழ்ந்தார். சண்டையிலிருந்து விலகிவிட்ட துரோணரை, பாண்டவர்களின் தலைமை சேனாதிபதியான திருஷ்டத்யும்னன் கொன்றார். மகனின் மரணம் மிகுந்த மனவலியைத் தரக்கூடியது. மகன் இறக்கும்பொழுது, தந்தையினுடைய இருப்பின் ஒரு பகுதியும் இறக்கிறது. துரோணாச்சாரியாருக்கும்கூட அதைக் கையாள்வது பெரிய விஷயமாக இருந்தது. இந்தவிதத்தில்தான், துரோணாச்சாரியரை வீழ்த்தி, கெளரவர்களின் வீழ்ச்சிக்குக் கிருஷ்ணர் வழிவகுத்தார்.
இந்தச் சம்பவத்தில், யுதிஷ்டிரர் பொய் சொல்லவில்லை; அவர் உண்மையைத்தான் பேசினார். ஆனாலும் அவர் அங்கு ஸத்யத்தை உரைக்கவில்லை. ஸத்யத்திற்கும் உண்மைக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாடு இருக்கிறது. உண்மையெல்லாம் ஸத்யமாகிவிடாது.
நேர்மையின் அரசராகக் கருதப்பட்ட
தர்மராஜர் பொய் சொல்லவில்லை,
ஆனாலும், அவர் ஸத்யத்தைப் பேசவில்லை.
கதையின் அடுத்த பகுதி இவ்வாறாகச் செல்கிறது.
ஸத்யத்தைப் பேசும் அவரின் இயல்பினால் தர்மராஜாவின் பாதங்கள் பூமியைத் தொட்டதில்லை என்றும், அவை பூமிக்குச் சற்றுமேல்தான் இருக்கும் என்றும், மேலும், அவருடைய ரதம்கூட தரையைத் தொட்டதில்லை என்றும், அவர் இந்தப் பந்தத்தில் சிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கு இது நேரடியான ஒரு உண்மை அல்ல.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். ஒருவர் பரவசத்தில், பேரானந்தத்தில் இருக்கும்போது, அவர் இலகுவாக இருப்பதுபோல், பறப்பதுபோல் உணர்கிறார். உண்மையில், தர்மராஜரின் உடல், பூமியில்தான் நடக்கிறது. ஆனால், பூமியின் மேல் பறப்பதுபோல், அவ்வளவு இலகுவாக உணர்ந்தார் தர்மராஜர். அது, எல்லைகளே அற்ற ஒரு விழிப்புணர்வு அனுபவம்.
"இறந்துவிட்டான், அசுவத்தாமன் எனும் யானை," என்று அவர் சொன்ன வினாடியே, அது ஒரு உண்மையேயானாலும்கூட, அதுவரை பூமியைத் தொடாது நடந்து கொண்டிருந்த அவரது பாதங்கள் பூமியைத் தொட்டன. பூமிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அவரது ரதம், பூமியைத் தொட்டது என்று வியாஸர் எழுதுகிறார்.
அவர் தம் எல்லையற்ற விழிப்புணர்வு நிலையை இழந்து, பூமியைத் தொட்டார். ஸத்யம் தொலைந்தது. அவர் நேர்மையை இழந்தார்.
நம் நிஜ வாழ்வில் ஏன் இவ்வளவு பொய்கள் சொல்கிறோம்? ஒரு கணவர், தம் மனைவியிடம், தாம் அவரைக் காதலிப்பதாக ஏன் அடிக்கடி சொல்கிறார். அவர், தம் மனைவியைக் காதலிப்பதாக இருந்தால், அவருடைய உடல் மொழியே அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதை வார்த்தையில் சொல்லும்போது, உண்மையில், தம் மனைவியிடம் தாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதைத் தமக்குத்தாமே நினைவுபடுத்திக்கொள்கிறார், அவ்வளவுதான்!
நாம் நிறைய வார்த்தைகளைப் பேசினாலே, நாம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நாம் உண்மையைப் பேசவில்லை. மிகையாக அழகு செய்வதின் மூலம், நாம் பொய்களை மறைக்கிறோம்.
ஸத்யத்தைப் பேசுவது என்பது ஆபத்தானது. ஸத்யங்களைப் பேசினால், ஞானிகள் மத்தியில் இடம் கிடைக்கும். ஆனால் மற்ற மக்கள் மத்தியில் இடம் கிடைக்காது. ஸத்யம். அது அவ்வளவு மிகவும் அபாயகரமானது.
குருவின் வார்த்தை உபதேசமா? நுட்பமா?

ஸத்யம், தர்க்க ரீதியான கேள்விகளையும்
வாதங்களையும் கடந்து, நிலைத்து
நிற்கக்கூடியது. அது தர்க்க ரீதியான
அலசல்களையும் தாக்குப்பிடித்து நிலைத்து
நிற்கிறது.
ஒரு பொருளை, அது தூய்மையான
தங்கத்தில் செய்யப்பட்ட்துதானா என்று
அறிந்துகொள்ள வேண்டுமானால், அதை
அமிலத்தில் போட்டு பரிசோதனை
செய்ய வேண்டும்; தங்கத்தின் ஸத்ய
தன்மையைச் சோதிக்க அமிலப் பரிசோதனை
தேவைப்படுகிறது. அதேபோல், ஸத்யத்தைப் பரிசோதிக்கவும் தர்க்க ஆராய்ச்சி என்னும் அமிலப் பரிசோதனை தேவைப்படுகிறது.
ஸத்யத்தின் முன் நம் தர்க்கம், எளிதில் வீழ்ந்து தோற்றுவிடும். ஏதோ ஒன்றின் முன் நம் தர்க்கம் வீழ்ந்தால், நீங்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம், அது ஸத்யமே என்று!
எது ஒன்று ஸத்யமோ அது தர்க்கத்தை அழித்துவிடும்; இதன் பொருள், நம் தர்க்கம் களைத்துப்போய் தானாகவே விழுந்துவிடும்.
இறுதி ஸத்யம் என்றால், அது தர்க்க ஆராய்ச்சிகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும். எந்தத் தர்க்க ரீதியான அமிலப் பரிசோதனையில் இட்டாலும், அது அனைத்தையும் தாங்க வேண்டும்.
கேள்விகேட்கும் மன நிலையில் சீடர்
இருந்தால், குரு தம் வார்த்தைகளை
நிரூபித்தாக வேண்டும். கேள்விகேட்கும்
சீடரின் கோரிக்கையான அமிலப்
பரிசோதனைக்கும், குரு தயாராக இருக்க
வேண்டும். அது ஒரு பெருஞ்சுமை
சீடர் சந்தேகத்தில் இருந்தால், குரு ஸத்யங்களைத் திறந்து வைப்பார். அங்கு அப்பட்டமான ஸத்யங்கள் நேரடியாகச் சொல்லப்படும். சந்தேகங்கள் இருக்கும் மனத்திற்கு, எந்த ஒரு ஸத்யத்தையும் கற்பிக்க முடியும், விளக்க முடியும். கேள்விகேட்கும் மனத்திற்கு, எதையுமே விளக்க முடியாது.
அவர் ஸத்யங்களை வார்த்தைகளால் மறைக்க மாட்டார்; வார்த்தைகளால் விளையாட மாட்டார்.
குருவின் வார்த்தைகள் வெறும் உபதேசமா அல்லது உணர்வுமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த நுட்பமா என்பதை சீடரின் மனநிலைதான் தீர்மானிக்கிறது. சீடர் முழுமையாக இசைவாகயிருந்தால், அவருக்கு குருவால் உதவ முடியும். குரு ஞானமடைந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை!
ஒரு சின்ன கதை
யமுனை நதிக்கரையில் வாழ்ந்து வந்த ஒரு பண்டிதர், கிருஷ்ணரை நியமத்துடன் பூஜைசெய்து, நாள்தோறும் வழிபட்டு வந்தார்.
அவருடைய பூஜைக்கான அபிஷேகப் பால்கொண்டு வரும் பெண்மணி, ஒருநாள் வரவில்லை.
சீடரின் நம்பிக்கை,
எப்படிப்பட்ட
தடையையும் மீறி
அவரை வெற்றிபெறச்
செய்யும்.
மறுநாள் அந்தப் பெண்மணி வந்தவுடன், "நீ ஏன் நேற்று வரவில்லை?" என்று பண்டிதர் கேட்டார்.
அந்தப் பெண்மணியோ, "முதல் நாள் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், என்னால் ஆற்றைக் கடக்க முடியவில்லை," என்று பதில் சொன்னார்.
உடனே பண்டிதர் அவரிடம், "கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்து, ஸம்ஸார ஸாகரம் என்னும் பிறவிப்பெருங்கடலையே பலர் கடந்துள்ளார்கள். உன்னால் ஒரு சிறு ஆற்றைக் கடக்க முடியவில்லையா! அவர் பெயரை உச்சாடனம் செய்துகொண்டே ஆற்றைக் கடந்து வா," என்றார்.
ஒரு பண்டிதருக்கே உரிய இலக்கணங்களுடன், தம்முடைய வறண்ட அறிவைப் பெருமையுடன் பேசி, அந்தப் பெண்மணியின் மனத்தில்,

தம்மைப் பற்றியதொரு உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதேசமயம், அவர் ஒருநாள் வராமல் இருந்ததைக் கண் டிப்பதற்காகவுமே அப்படிச் சொன்னார்.
அன்றிலிருந்து அந்தப் பெண்மணி சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். சில நாள்கள் கழித்து, பலத்த மழையின் காரணமாக ஆற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் அந்தப் பெண்மணி சரியான நேரத்திற்கு வந்து பண்டிதரை ஆச்சரியத்திற்குள்ளாக்கினார். அவர் அந்தப் பெண்ணிடம், "உன்னால் எப்படி ஆற்றைக் கடக்க முடிந்தது?'' என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண்மணி, "தங்களின் வழிகாட்டுதலின்படிதான், குருவே! தாங்கள் சொன்னபடி, கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்தபடி, நீரின் மேல் நடந்து வந்தேன்!''என்றார்.
பண்டிதரால் இதை நம்ப முடியவில்லை. அவர், அந்தப் பெண்மணி அதை நிரூபிக்க வேண்டும் என்றார். அந்தப் பெண்மணியும் அதற்கு ஒப்புக்கொண்டார். அவர்கள் இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள்.
அந்தப் பெண்மணி, கிருஷ்ணரின் பெயரை உச்சாடனம் செய்துகொண்டே தண்ணீரின் மேல் நடந்து சென்றார். அவர் மிகவும் எளிதாக ஆற்றைக் கடந்து விட்டார்.
அங்கு நடந்த நிகழ்வைப் பண்டிதரால் நம்ப முடியவில்லை. 'அறியாமையிலிருக்கும் ஒரு பெண், நான் சொல்லிக்கொடுத்ததைக் கேட்டு, தண்ணீரின் மேல் நடக்கமுடிகிறது. ஒரு மாபெரும் பண்டிதரான நான் ஏன் நடக்க முடியாது?' என்று அவர் நினைத்தார்.
அவர் கிருஷ்ணரின் நாமத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். இருந்தாலும் தண்ணீரை நெருங்கியதும், தம்முடைய ஆடை நனையாமல் இருக்க வேண்டுமென்ப தற்காக, அதைத் தூக்கிப்பிடித்தபடியே தண்ணீருக்குள் இறங்கினார், அப்படியே மூழ்கியே விட்டார்.
பால் விற்கும் பெண்ணிடம் சொன்னதில்,
அவருக்கே எந்த நம்பிக்கையும்
இல்லை. அவர் தம் அறிவைக்
காட்டிக்கொள்வதற்காகத்தான் அவ்வாறு
சொன்னார்.
ஆனால் கேட்டவர், உள்வாங்கும் மனநிலையில் இருந்ததால், குரு

கேட்பவர் உள்வாங்கும் மனநிலையில் இருந்தால், குரு சொல்லும் சாதாரண வார்த்தைகள்கூட, சீடரின் வளர்ச்சிக்கான ஒரு நுட்பமே!
சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள்கூட, அவர் வளர்ச்சிக்கான ஒரு நுட்பமாக அமைந்தது. அது அவருக்கு நன்மையையே தந்தது.
குரு ஞானம் அடையாதவராக இருந்தாலும், அவர் சொல்லும் வார்த்தைகளில் அவருக்கே நம்பிக்கையில்லை அல்லது அனுபவமில்லை என்றால்ம்கூட, சீடரின் நம்பிக்கை, எப்படிப்பட்ட தடையையும் மீறி அவரை வெற்றிபெறச் செய்யும்.
நம்பிக்கையின் வேர், சந்தேகம்
சந்தேகமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை இருக்க முடியாது.

பெரும்பான்மையான மக்கள் என்னிடம்
"ஸ்வாமிஜி, தாங்கள் சொல்வதை அப்படியே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான்
விரும்புகிறோம். ஆனாலும் எங்களுக்குள்
சந்தேகங்கள் எழுகின்றன. இதை
எப்படி கடப்பது?" என்று கேட்பதுண்டு.
"சந்தேகம் இருந்தால் பரவாயில்லை,"
என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு.
சீடரின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்பொழுது, நம்பிக்கை ஆழப்படுகிறது. அப்போது, குருவின் அருளால், புதிய புரிதலுக்கான அடுக்கு சீடருக்குள் வெளிப்படுகிறது, உடனே நம்பிக்கை மீட்கப்படுகிறது
இறுதியாக அந்தச் சீடர், நம்பிக்கை - சந்தேகம் என்ற சுழலை, செயல்முறையைக் கடந்துசெல்கிறார். அவர் ஸத்யத்தை அடைகிறார். இந்த நிலையை அடையும்வரை மீண்டும் மீண்டும் சந்தேகமும் நம்பிக்கையும் அவருக்குள் எழுவது வழக்கமே.
இப்போது, அர்ஜுனன் ஒரு புரிதலுக்கு வந்துவிட்டார். அவர், தமக்கு நேரடியாகக் கிடைத்த முதலாவது ஆன்மிக அனுபவத்திற்குப் பிறகு, கேள்விகேட்கும் மனநிலையைக் கடந்து, சந்தேகம் என்ற நிலையை அடைந்துவிட்டார். இதற்கு மேல் அவரிடம், கேள்விகள் ஏதும் இல்லை. அதற்குப்பின் அவர், தமக்கு எது நன்மை தரும் என்று கேட்கவில்லை. அதுபோன்ற சுய லாபக் கணக்குகள் மறைந்துவிட்டன. இதற்கு மேல், அவரிடம், கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம (8-1) பிரம்மன் என்றால் என்ன? நான் என்றால் என்ன? எது கடமை? - போன்ற கேள்விகள் அவருக்குள் இல்லை.
முன்பு அவர் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாம் மறைந்து விட்டது. முதல் அத்தியாயத்தில், கிருஷ்ணர், முழுமையாக அமைதியில் இருந்தார். அர்ஜூனன் அதிகமாகப் பேசி னார். அவர் நேர்மையைப் பற்றி, பழமையான வேத நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டினார். இப்பொழுது இந்த அத்தியாயத்தில், அர்ஜூனன் முழுமையாக அமைதியில் இருந்தார்.
பூமி கிரகத்தில் அவதரிக்கும் ஒவ்வொரு குருவும் சந்திக்கும் பிரச்சினை இதுவே.
அரைகுறை ஞானத்தில் அதாவது
அஞ்ஞானத்தில் இருக்கும் ஒரு
மாணவரைவிட, வெகுளித்தனமான ஒரு
மாணவர் சிறந்தவர்.
ஒரு சின்ன கதை
ஒரு இசை வித்வானிடம் சென்ற ஒரு மாணவர், "குருவே, நான் ஏற்கனவே நான்காண்டுகளாக இசை பயின்றுவருகிறேன். இப்போது நான் உங்களிடம் இசை பயில விரும்புகிறேன். நான் இசையைச் சிறப்பாகக் கற்க எவ்வளவு காலம் ஆகும்?" என்று கேட்டார்.
ஆசிரியர், "ஆறு ஆண்டுகள் ஆகலாம்," என்றார்.
அப்போது இன்னொரு நபர் கேட்டார், "நான் இரண்டு ஆண்டுகளாகத்தான் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்," என்று கேட்டார். உடனே ஆசிரியர், "இரண்டு ஆண்டுகள்," என்று சொன்னார்.
மூன்றாவதாக இருந்த நபர், "குருவே, எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இப்போதுதான் முதன் முதலாகக் கற்க வந்திருக்கிறேன். நான் இசையைக் கற்க எவ்வளவு காலம் ஆகும்?'' என்று கேட்டார்.
ஆசிரியர், "உனக்குக் காலமே தேவைப்படாது, உன்னால் உடனடியாக என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியும்,'' என்று சொன்னார்.
ஒரு புதிய, ஏதும் தெரியாத மாணவர் தம் குருவை உடனடியாக உள்கிரகித்துக்கொள்கிறார். அவர் தம் குருவிடமிருந்து சுலபமாகப் பெற்றுக்கொள்கிறார். அவர் நேரடியாக தம் இருப்பிற்குள் குருவை உள்வாங்கிக்கொள்கிறார். ஆனால், அரைகுறையாகக் கற்றுக்கொண்டு வருபவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் இதற்குமுன் கற்றவற்றையெல்லாம் குருவானவர் நீக்க வேண்டியிருக்கிறது.
இப்புவியில் அவதரிக்கும் எல்லா குருமார்களும், சாஸ்த்ரத்தில் எழுதிவைக்கப்பட்ட அதே ஞானத்தைத்தான் எடுத்துவருகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த ஞானத்தால் நிரம்பிய வாழ்வையும் சேர்த்து எடுத்துவருகிறார்கள்.
உண்மை தேடுதலுக்கும் போலி தேடுதலுக்கும் உள்ள வித்தியாசம்
நாம் புத்தகத்தில் படிப்பது வெறும் வார்த்தைகள்தான்! அவை, படிப்பவரிடம் எந்தவிதமான உணர்வுமாற்றத்தையும் ஏற்படுத்தாது. எந்தப் புத்தகமும் நமக்கு ஸத்யத்தைத் தர முடியாது. அவை அதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.
ஒரு சின்ன கதை

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு புத்தகத்திற்கான குறிப்பைச் சொல்ல சொல்ல, அதை ஒரு சீடர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில், "குருவே, தயவுசெய்து மீண்டும் அதைச் சொல்லுங்கள்,'' என்று சீடர் கேட்டார். குரு, அந்த வாக்கியத்தை மீண்டும் சொன்னார்.
மாணவர் எழுதுவதை நிறுத்திவிட்டு,
"குருவே, இந்த வாக்கியம் நீங்கள் சென்ற
அத்தியாயத்தில் சொன்ன வாக்கியத்திற்கு
முரண்பாடாக இருக்கிறதே. இது
குழப்பமாக இருக்கிறது," என்று கேட்டார்.
இராமகிருஷ்ணர் அவரிடம்,
"கவலைப்படாதே, நான் சொல்வதை
அப்படியே எழுது," என்று சொன்னார்.
சீடர் சமாதானமடையவில்லை.
"இந்தப் புத்தகத்தின் நோக்கம், உண்மைகளை, செய்திகளை வழங்குவது அல்ல; ஸத்யத்தைச் சொல்வதும், உணர்வுமாற்றத்தை ஏற்படுத்துவதும்தான். இது, ஒரு வாழும் ஞானியிடம் செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை மக்களிடம் ஏற்படுத்துவதற்குத்தான்," என்று இராமகிருஷ்ணர் விளக்கினார்.
இறுதி ஸத்யத்தை
எந்தப் புத்தகத்தாலும்
தர முடியாது.
குருவின் வார்த்தைகள், உண்மைகளோடு சம்பந்தப்பட்டவை அல்ல; அவை ஸத்யங்கள்!
உண்மைகள் என்பது பதிவேடு; ஸத்யங்கள் என்பது எதிரொலி!
இறுதி ஸத்யத்தை எந்தப் புத்தகத்தாலும் தர முடியாது. எல்லா வேதங்களையும், எல்லாப் புத்தகங்களையும் பொறுத்தவரை இதுதான் ஸத்யம். இப்போது பிரச்சினை என்னவென்றால், சில மக்கள் புத்தகங்களையே இறுதியான சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள், தங்கள் பட்டறிவைச் சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள். ஸத்யத்தை வாழ்வதற்குப் பதிலாக, புத்தகத்தையே அதிகார பூர்வமான ஸத்யமாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள், தாங்கள் படித்த புத்தகங்களையும் வேத நூல்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, குருவின் வார்த்தைகளுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.
வார்த்தைகளின் அர்த்தமே முக்கியமான பிரச்சினை. உதாரணமாக குரு, 'ஆத்மன்' என்ற வார்த்தையைச் சொல்கிறாரென்றால், அது, ஸம்ஸ்க்ரு'த அகராதியிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் நாம், ஆத்மன் என்ற வார்த்தையை நம்முடைய ஆக்ஸ்போர்டு அகராதியில் தேடுகிறோம். இயல்பாகவே, பிரச்சினை எழ ஆரம்பித்துவிடுகிறது.
நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.
இந்நிலையில் நாம் வாழும் குருவின்
ஸாந்நித்யத்தில் இருந்தால், நாம் அவரிடம்
நம்முடைய சந்தேகங்களை உடனடியாகத்
தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதை, நம் முகத்தைப் பார்த்தே
குரு தெரிந்துகொள்வார். நமக்குத்
தெளிவாகப் புரியும்வரை, அவர் மேலும்
விளக்கமளிப்பார்.
புத்தகம் படிக்கும்பொழுது நாம், நம் மனத்துடன்தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்மில் பலர், வாழும் குருவின் வார்த்தைகளைக் கவனித்துக் கேட்பதைவிட, புத்தகங்கள் படிப்பதை சௌகரியமானதாக உணர்கிறோம். இதுதான் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கும், போலியான தேடுதல் உள்ளவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
நம்முடைய தேடல் உண்மையானதாக இருந்தால், அது ஒரு உண்மையான உந்துதலாக இருந்தால், நிச்சயம் நாம் ஒரு வாழும் ஞானியைத்தான் தேடிச்செல்வோம்.
நம் தேடல், நேரத்தைக் கழிப்பதற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இருந்தால், நாம் புத்தகங்களுடனும் பழைய குருவின்புகைப்படத்துடனும் சௌகரியமாக உணர்வோம். நம் தேடல் தீவிரமானதாக இருந்தால், வாழும் குருவுடன் ஒரு ஆழமான இணைப்பை நாம் உணர்வோம்.
இருண்ட காட்டை, ஒரு சிறு விளக்கு மூலம் ஆராய முடியுமா?
வியாச பகவானின் புதல்வரும் மாமுனிவரும் இளைஞருமான சுகப்பிரம்மர், தம்மைவிட வயதில் மூத்த மாமுனிவர்களுக்கு, பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை, குறிப்பாக கிருஷ்ணரின் அவதாரத்தை விளக்கும் ஸ்ரீமத் பாகவத புராணத்தைச் சொல்கிறார். பாகவதக் கதையைச் சொல்லி முடித்தவுடன், அங்கு கூடியிருந்த ரிஷிகளுள் ஒருவர் கண்ணீர் கசிய, சுகப்பிரம்மரின் பாதத்தில் விழுந்தார். அவர் உணர்ச்சி பொங்க, "தயவுசெய்து இவற்றை எழுத்தில் வடித்துவிடாதீர்கள். எழுத்துக்களில் வடிக்கும்பொழுது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஸத்யத்தின் ஆழமும், மேலான அழகும் தொலைந்துவிடும். பாகவதக் கதையை நீங்கள் விவரிக்கும்போது நிகழ்ந்த சக்தி ஓட்டத்தையும், வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த உயிர்ப்பையும், நீங்கள் சொல்வதை நேரில் கவனித்ததன் மூலம் எங்கள் ஆன்மா அடைந்த அனுபவத்தையும், ஒருவர் புத்தகத்தைப் படிப்பதால் அடைந்துவிட முடியாது! இங்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. குருவின் நேரடி உபதேசத்தில் நிறைந்திருக்கும் ஸத்யத்தையும், அதன் சக்தியையும் புத்தக வார்த்தைகள் முழுவதுமாகக் குறைத்துவிடும்,'' என்றார்.
சுகர், ''நான், தாங்கள் சொல்வதை
ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும்,
நாம் இதைப் புத்தகமாக எழுதி வைக்க
வேண்டும். இதிலுள்ள வார்த்தைகள்,
படிப்போரின் உத்வேகத்திற்கான
சிறந்த ஆதாரமாகவும், உந்துசக்தியாகவும்
அமையும். இந்த வார்த்தைகளிலுள்ள
ஸத்யத்தை அனுபவமாகப் பெற அவர்களைத்
தூண்டும்!'' என்று விளக்கினார்.
> ஸத்யம் என்பது உருவகம்.
> அது ஒரு தகவல் அல்ல.
> அது காலத்தையும்
> இடத்தையும் தாண்டியது.
தகவல்கள், சரித்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட கடந்தகால நிகழ்ச்சிகளின் ஒரு காலஅட்டவணை.
மேற்கத்திய மக்கள், எப்போதுமே தகவல்கள், காலஅட்டவணை, சரித்திரக் குறிப்பு மற்றும் ஏதாவது ஒருவகையில் நிரூபிக்கக்கூடிய ஒன்றின்மேல்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். மேற்கத்திய அறிவியலைப் பொறுத்தவரை, எந்தவொரு விஷயத்தையும் பட்டறிவின் மூலமே நிரூபிக்க வேண்டும். எந்த விஷயத்தையும் உலகத்திற்குத் தருவதற்குமுன், அவர்கள் அதைத் தர்க்க ரீதியாக நிரூபித்தாக வேண்டும்.
ஆனால் கிழக்கத்திய மக்களின் கவனம் ஸத்யத்தின் மேல் குவிந்துள்ளது. ஸத்யம் என்பது உருவகம். அது ஒரு தகவல் அல்ல. அது காலத்தையும் இடத்தையும் தாண்டியது. நேரடியான தர்க்கத்தினால் நிரூபிக்கபட முடியாதது. தர்க்க ரீதியாக ஸத்யத்தை நிரூபிக்க முடியுமென்றால், தர்க்கம் ஸத்யத்தைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும். நல்லவேளையாக, அதற்கான வாய்ப்பே இல்லை.
பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் வாழ்வைப்பற்றி விவரிக்கும் இராமாயண இதிகாசத்தில், அரக்கர்களின் அரசனான இராவணன், இராமரின் மனைவி சீதையைக் கடத்திச்சென்றுவிடுகிறான். இராமர், சீதையை மீட்க வன இராஜ்ஜியமான கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் உதவியை நாடுகிறார். இந்த இராஜ்ஜியத்தை வானர சகோதரர்களுள் ஒருவரான சுக்ரீவன், அனுமனின் உதவியுடன் ஆண்டுவந்தார்.
> அறிவியலால்
> நிரூபிக்கப்படாததும்
> அளவிட முடியாததும்
> ஸத்யம் இல்லை
> என்றாகி விடாது.
வால்மீகி, கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் தொகையைச் சொல்கிறார். உண்மையில் பார்த்தோமானால், கிஷ்கிந்தையில் அத்தனை லட்சம் குரங்குகள் இருப்பதற்கான இடமே இல்லை. அவர், ஸத்யத்தின் அடிப்படையில் இந்த மிகப்பெரிய எண்ணிக்கையைச் சொல்கிறார். இது, உருவகப்படுத்தப்பட்ட ஸத்யமே. அவர், இந்த எண்ணிக்கையின் மூலம், வானரங்களின் வலிமையின் அளவைச் சொல்கிறார். அவர் எந்த வலிமையைப் பற்றிப் பேசுகிறாரோ, அதை எண்ணிக்கையாகச் சொல்கிறார்.
வால்மீகியின் பாவனை ஸத்யம் சம்பந்தப்பட்டது. அவர், தாம் குறிப்பிடும் எண்ணிக்கையின் மூலம், வானரவீரர்களின் எண்ணிக்கையைச் சொல்ல வரவில்லை, அவர்களின் சக்தியைப் பற்றிச் சொல்கிறார்.
வால்மீகியின் கவனம், உண்மையைச் சொல்வதைவிட, வலிமையின் அளவைப் பற்றிய ஸத்யத்தைச் சொல்வதில் இருந்தது.
விஞ்ஞானம், எல்லாவற்றையுமே நிரூபித்துக்காட்டுவதையும் அளவிட்டுக் காட்டுவதையுமே விரும்புகிறது. அதற்காக, அறிவியலால் நிரூபிக்கப்படாததும் அளவிடமுடியாததும் ஸத்யமில்லை என்றாகிவிடாது.

நியூட்டன் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் புவிஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்தார். ஆனால் புவிஈர்ப்புவிசையானது, படைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே செயல்படுகிறது. அதன் இருப்புநிலை, பிரபஞ்ச தொடக்கத்திலிருந்தே இருந்து வருகிறது. இல்லாவிட்டால், சூரியனும் கோள்களும் இப்போது நகர்ந்து கொண்டிருப்பதுபோல் முன்பு நகர்ந்திருக்க முடியாது. ஆனால் சமூகமும், சில மதங்களும் இந்த உண்மையை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.
பூமி, எப்போதுமே உருண்டையாகத்தான் இருக்கிறது. அதுதான் ஸத்யம். இருந்தாலும், இந்த ஸத்யத்தை மக்கள் முன்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கசப்பான விவாதத்தில், பல மக்கள் கொல்லப்பட்டார்கள். இறுதியாக, சென்ற நூற்றாண்டில்தான் கருத்தொருமித்த ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்.
விஞ்ஞானம் என்பது புரிந்துகொள்ளும் சக்திக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. இது, ஒரு அடர்ந்த, இருண்ட காட்டை ஒரு சிறு விளக்கு மூலம் ஆராய்வது போன்றது.
சிறு விளக்கு, தன் முன்னே சிலஅடி தூரத்தில் உள்ளதை மட்டுமே காண்பிக்கும். அது போலவே விஞ்ஞானமும் ஒரு குறுகிய வட்டத்தை மட்டுமே பார்த்து விட்டு, அதன் அடிப்படையில் தன் கோட்பாடுகளைப் பரிந்துரைக்கிறது.

அடுத்ததாக விஞ்ஞானம், அந்த விளக்கை எடுத்துக்கொண்டு மேலும் சில அடிகள் முன்னே சென்று, அங்கு இருப்பத்தைக் காண்கிறது. இப்போது பார்ப்பது முன்பு பார்த்ததைவிட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. உடனே அவர்கள் புதிய கோட்பாடுகளைச் சொல்லி, முதலில் சொன்ன கோட்பாடுகளை ஒதுக்கிவிடுகிறார்கள். இப்படித்தான் விஞ்ஞானம் செயல்படுகிறது.
ஒரு மின்னல் வெளிச்சத்தில் காடு முழுவதையும் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இப்படித்தான் ஜ்ஞானகுருமார்கள் முழு ஸத்யத்தையும் பார்க்கிறார்கள்! இதுதான் விஞ்ஞானத்திற்கும் ஆன்மிகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.
ஸத்யம் மின்னலைப் போன்றது, அது, உடனடியாக ஒரு கணத்தில் நிகழக்கூடியது, அது அதீதமானது, அது படிப்படியாக நிகழ்வது கிடையாது. ‘உண்மை’ என்பது தர்க்கம், அது படிப்படியாக முன்னேறுவது, இங்கு அடுத்த பகுதிக்குச் செல்வதற்குமுன், முதல் பகுதியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஸத்யம் என்பதில் உள்வாங்குதல் முழுமையானதாகவும் உடனடியானதாகவும் புனிதமானதாகவும் இருக்கும். அதனால்தான் பட்டறிவு மூலமாக ஸத்யத்தைக் கிரகிப்பதென்பது கடினமானதாக இருக்கிறது. அது தர்க்கத்தைப் போன்றது அல்ல, அது பகுத்தறிவு அல்ல.
பல நூற்றாண்டுகளாக, மக்கள் அவநம்பிக்கையை அனுபவித்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய இருப்புக்குள் பார்த்த ஸத்யமானது சமுதாயம் மற்றும் மதங்கள் ஏற்றுக்கொண்ட ஸத்யங்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதை அனுபவ பூர்வமாகப் பார்க்கிறார்கள்.
ஸத்யத்தை மொழிபெயர்ப்பதும் ஒழுங்குபடுத்துவதும் கடினமாதலால், சமுதாயமும் மதமும் ஏற்படுத்தியிருக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும், ஸத்யத்துடன் எந்தவித சம்பந்தமும் இல்லை. விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும், உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.
உண்மையும் ஸத்யமும்
எப்போதும் ஒன்றாகச்
சேர்ந்து இருப்பதில்லை.
உண்மையும் ஸத்யமும் எப்போதும் ஒன்றாகச்
சேர்ந்து இருப்பதில்லை. உண்மை ஒரு
பரிமாணத்தை மட்டுமே கொண்டது.
அதாவது காலத்தோடு மட்டுமே
சம்பந்தப்பட்டது. அப்படியிருக்க, ஸத்யம்
என்பது இடம், காலம் சம்பந்தப்பட்டது.
பல பரிமாணங்களை உடையது.
இங்கு அர்ஜுனன் பண்பட்ட நிலையை
அடைந்துவிட்டார். இனியும் அவர்,
உண்மைகளை மட்டும் கேட்டு திருப்தி
அடையப்போவதில்லை. அவருடைய
தேடல், ஸத்யத்தை நோக்கியே இருந்தது.
அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. அவரிடம் கேள்விகள் ஏதுமில்லை, வெறும் சந்தேகங்கள் மட்டுமே இருந்தன. சந்தேகங்கள் உயர்ந்தவை. இவை, சீடர் குருவை ஏற்பதற்கும் உள்வாங்குவதற்கும் தயாராக இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள். சந்தேகங்கள், பச்சைக் குறிகள்; அதேசமயம் கேள்விகள், சிகப்புக் குறிகள்.

முன்நிற்கும் பதிலை ஏற்காதது எது?
குருவை மேலும் திறந்தவராக இருக்கவிடாமல் தடுப்பது, நம் கேள்விகள். அவை குருவைத் தடுத்து, நம் வார்த்தைகளுக்கான அவரது பதிலைக் கேட்கின்றன.
மேலும், நம்மால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதபொழுது, நாம் வாழும் குருவின் சான்றை, வாழும் சக்தியையே கேள்வி கேட்கிறோம். நாம் நம்முடைய பட்டறிவை அவரை மதிப்பிடுவதற்கான ஒரு அளவுகோலாக, பயன்படுத்துகிறோம். நாம் நம் வரையறைக்குட்பட்ட பட்டறிவால், அவரை வரையறைக்குட்படுத்துகிறோம்.
ஒரு சின்ன கதை
ஒரு இளைஞர், தம் கிராமம் அருகே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகி, தாம் ஒரு குருவைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
அந்தப் பெரியவர், "எனக்கு ஒரு குருவைத் தெரியும்," என்று சொல்லிவிட்டு, அந்த குருவினுடைய தோற்றம், எங்கு அவரைக் கண்டுபிடிப்பது போன்ற பல விபரங்களைச் சொன்னார். அந்த இளைஞர் அந்தப் பெரியவருக்கு நன்றிசொல்லி விடைபெற்றுக்கொண்டார். பெரியவர் சொன்ன அடையாளங்களுடன் கூடிய ஒரு குருவை, முப்பது வருடங்களாகத் தேடினார். குருவைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுவதை விட்டுவிட்டு, தம் சொந்த கிராமத்திற்கே திரும்பினார்.
அவர், தம் வீட்டையடையும் முன், குருவின் விளக்கத்திற்கு அப்படியே ஒத்துப்போகும் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார். அருகில் வந்த பிறகுதான், அந்த வயதானவர் வேறு யாரும் அல்ல, இவரிடமிருந்துதான் தம் தேடலைத் துவங்ளினார் என்பதை அந்த இளைஞர் கண்டுகொண்டார்.!
> சீடர்,
> உள் வாங்கும்
> தன்மையில் இல்லாவிட்டால்
> அவரால் குருவைக்கூடத்
> தெரிந்துகொள்ள
> முடிவதில்லை!
"உங்களைக் கண்டுபிடிப்பதற்கு
என்னுடைய முப்பது வருடங்களை ஏன்
வீணாக்கினீர்கள்?'' என்று அந்த இளைஞர்
கேட்டார்.
வயது முதிர்ந்தவர், ''அந்த முப்பது வருடங்கள் வீணாக்கப்படவில்லை. அவை உன்னைப் பக்குவப்படுத்தின. நீ முப்பது வருடங்களுக்கு முன் என்னிடம் வந்தபொழுது, நான் அமர்ந்திருக்கும் இந்த மரத்தையும், என்னைப் பற்றியும் தெளிவாக விவரித்தேன். ஆனாலும் உன்னால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனென்றால், நீ யாத்திரை செய்யும் அவசரத்திலும், அலைந்து திரிந்து உன் அஹங்காரத்தைத் திருப்திப்படுத்தும் அவசரத்திலும் இருந்தாய். உன் அஹங்காரத்திலிருந்து எழுந்த கேள்விகளைக் கரைப்பதற்கு, இந்தத் தேடல் அவசியமே. இப்போது நீ பக்குவமடைந்து, என்னை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாய்,'' என்று சொன்னார்.
சீடர், உள் வாங்கும் தன்மையில் இல்லாவிட்டால், அவரால் குருவைக்கூடத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. கேள்விகள், அஹங்காரத்தில் இருந்து எழுகின்றன. சந்தேகங்கள், உணர்வில் இருந்து எழுகின்றன.
அர்ஜுனன் எல்லாவற்றையும் செய்துவிட்டார். இரண்டாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஆன்மாவைப் பற்றிப் பேசும்போது,
ஆன்மாவை எந்த ஆயுதத்தாலும் வெட்ட முடியாது, எந்த நெருப்பாலும் எரிக்க முடியாது - நைநம் சிந்தந்தி சஃஸ்த்ராணி நைநம் தஹதி பாவக்க: I (2 - 23) என்கிறார்.
உடனே அர்ஜூனன் கேட்டார். "ஒரு ஞானி எப்படிப் பேசுவார்?''
அவர் ஏன் அந்தஃக் கேள்வியைக் கேட்டார்? கிருஷ்ணரைப் பற்றிக் கணிப்பதற்காக, கிருஷ்ணர் ஞானமடைந்தவர்தானா என்று பார்ப்பதற்காக, அவரது அஹங்காரத்திலிருந்து எழுந்த கேள்வி அது. அர்ஜூனன், குருவின் சான்றைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அது வன்முறையோடு, கேள்வியோடு ஆரம்பித்தது.
ராஜவித்யா ராஜ குஹ்யம் என்னும் ஒன்பதாவது அத்தியாயத்தில், 'பிரபஞ்ச சக்தியே ஞானம்' என்கிற மேலான இரகசியத்தை கிருஷ்ணர் வெளிப்படுத்தியவுடன், அர்ஜூனனின் கேள்விகள் மிக மெதுவாகத் தணிந்தன.
விபூதி யோகம் என்னும் பத்தாவது அத்தியாயத்தில், கிருஷ்ணரின் மகிமைகளைக் கேட்டவுடன், அவருக்குள் அன்பு மலர ஆரம்பித்தது. விச்'வரூப தர்ச்'ந யோகம் என்னும் பதினொன்றாவது அத்தியாயத்தில், கிருஷ்ணர், தம் பிரபஞ்ச வடிவத்தை, விச்'வரூபத்தை வெளிப்படுத்தியபொழுது, அர்ஜூனன் இறுதி விழிப்புணர்வை அனுபவமாக உணர்ந்தார்.
ஒன்பதாவது அத்தியாயத்தில், தெய்விக அறிவும் தெய்விக இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டதில் ஞானம் நிகழ்ந்தது. பத்தாவது அத்தியாயத்தில், தெய்விக வெளிப்பாடுகளைப் பற்றிய வர்ணனையால், பக்தியும் அன்பும் மலர ஆரம்பித்தது. பதினொன்றாவது அத்தியாயத்தில் கண்ட விச்'வரூப தர்ச்'நத்தால், அர்ஜூனனுள் 'இறுதி விழிப்புணர்வு' அனுபவம் நிகழ்ந்தது. இப்போது கேள்விகள் எல்லாம் தீர்ந்தன.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அழகாகச் சொல்கிறார், "விருந்துங்களில்
உணவு பரிமாறும்வரை, பேசும்
சப்தமுமாக இருக்கும். உணவு பரிமாறத்
தொடங்கியதுமே, வெறும் உணவு
பரிமாறும் சப்தமும் உணவருந்தும்
சப்தமும் மட்டுமே கேட்கும். அதுபோல்
முழுமையான அனுபவம் நிகழும்வரை,
அங்குக் கேள்விகள் இருக்கும். அதன்
பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடு
மட்டுமே இருக்கும். மற்ற எல்லா
சப்தங்களும் காணாமல் போய்விடும்.”
அர்ஜூனன், முதலில் கிருஷ்ணரின் திறனையே கேள்வி கேட்டார். பிறகு, தம் சுய லாபத்தைப் பற்றிய கணக்கீடுகளை நோக்கி நகர்ந்தார். இப்பொழுது, ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார். முதலில் இருந்தது எதிர்ப்பு, பிறகு அலட்சியம், இறுதியாக ஏற்றுக்கொள்ளுதல்.
உருவாக்கும் சக்தி, கணக்கிடுவதிலிருந்து மாறுபட்டது. கடவுள் மட்டுமே உருவாக்க முடியும். யாராவது எதையாவது உருவாக்கினால், அந்த நேரத்தில் அவர்கள் தெய்விகத்தை அனுபவிக்கிறார்கள்.
அதனால்தான் வேத காலத்தில், கர்ப்பிணிகளை வணங்கும் வழக்கம் இருந்தது. அவர்களின் வெறும் தொடுதல் மூலமாகவே மக்கள் குணமடைவதாக நம்பப்பட்டது.
கட்டுமானப் பணியைப்பொறுத்தமட்டில், பொறியாளர்கள் நிறைய சம்பாதிப்பார்கள். ஆனாலும் கட்டிடக் கலைஞர்கள்தான் மன திருப்தியை அடைகிறார்கள். ஏனென்றால் கட்டிடக் கலைஞர்களே அங்குப் படைப்பாளிகள். உருவாக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், நாம் நம் வாழ்க்கையையே தவறவிடுகிறோம்.
இங்கு அர்ஜூனன் எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவருடைய சுயலாபக்கணக்குகளும் முடிந்தன, கேள்விகளும் முடிந்தன. அவர், சந்தேகம் என்னும் நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். கேள்விகள் இருக்கும்போது, அவருடைய குரல் வித்தியாசமாக இருந்தது. கேள்விகள், குருவிடமிருந்து சான்றைக் கேட்கும்; சந்தேகங்கள், அப்படியல்ல. அவை வெறும் சில குறிப்புகளை மட்டுமே கேட்கும்.
அர்ஜுனன், தம் குருவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால்தான் இந்த அத்தியாயம் முழுவதும், அர்ஜுனன் அமைதியாக இருக்கிறார். அவர், குருவை உள் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறார். அவரை நோக்கி வீசப்படும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.
நீங்களும் சந்தேகப்படலாம்
கேள்வி: அர்ஜுனன் அமைதியில் ஆழ்ந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் அவருக்குள் சந்தேகம் இருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஒருவர் தமக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்று எப்படி வேறுபடுத்துவது? நமக்குள் இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மறைத்தோமானால், அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தாதா?
நிச்சயமாக! அடக்குதல் ஒருபோதும் தீர்வாகாது. ஒருவரிடம் இருப்பது சந்தேகம் என்றால், அது தீர்த்துவைக்கப்படவேண்டும். ஒருவர் எப்படி சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வது?
பெரும்பாலான நேரங்களில், நாம், மற்றவர்கள் நம்மிடம் சொல்வதைக் கவனிப்பதில்லை. அடுத்தவர் வாயைத்திறந்த கணமே, நாம் அடுத்து பேச்சை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து, பொறுமையின்றி, காத்துக்கொண்டிருப்போம். நாம் காத்துக்கொண்டிருக்கும் அந்த நேரம்கூட, அவர்களுடைய பேச்சைத் தடுப்பதற்கும் மறுப்பதற்கும், நம்மைத் தயார்படுத்திக்கொள்வதற்கான நேரமாகத்தான் இருக்கிறது. அது கவனிப்பது ஆகாது. அது, போருக்கான முன்னேற்பாடு.
நமக்குக் கேட்டலில் கவனம் இருக்க வேண்டுமானால், நம் எதிரில் இருப்பவரை மதிக்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே, அவர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் செலுத்த முடியும். அவர்,
'கேட்டலில்' கவனம் இருக்க
வேண்டுமானால்,
நாம், நம் எதிரில்
இருப்பவரை
மதிக்க வேண்டும்.
நம்மிடம் சொல்வதற்கென்று, மதிப்பு மிக்க ஏதோ ஒன்றை தம்மிடம் வைத்திருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிரில் இருப்பவர் சொல்ல நினைக்கும் எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் நம்பினால், பின்பு கவனிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்னும் அதிக உபயோகம் தரக்கூடிய ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.
மனம் மற்றும் உடலின் குறுக்கீடு இல்லாமல், அக்கறையோடு கவனித்தோமானால், சொல்லப்படும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வோம். உள்வாங்குதல் நிகழ்ந்தால், சொல்லப்படுகிற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, நமக்குள் எந்த ஒரு வன்முறையும் இருக்காது. அதனால் அங்கு எந்தக் கேள்விகளும் இருக்காது.
நீங்கள் அனுபவித்த அல்லது உணர்ந்ததிலிருந்து மாறுபட்ட வேறு ஏதோ ஒன்றைச் சொல்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் அல்லது அவர் சொல்வதைத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பீர்கள், மேலும் அவரின் புரிதலை, நோக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். நீங்கள் அந்தக் கருத்தை எடைபோட்டு, கண்டனத்தைத் தெரிவிக்கமாட்டீர்கள்.
நீங்கள சந்தேகப்படலாம்! நீங்கள் சந்தேகப்படும்பொழுது, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி எழுகிறீர்கள். கேள்விகேட்கும்பொழுது, கற்பிக்க வேண்டும் என்ற ஆவலோடு எழுகிறீர்கள்.
நீங்கள் சந்தேகப்படும்போது, திறந்த மனத்துடன் இருக்கிறீர்கள்; கேள்விகேட்கும்போது, இறுகிய மனத்துடன் இருக்கிறீர்கள்.
நான் த்யான வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த காலங்களில், அறையின் வெளியில் இருக்கும் ஒரு பலகையில், 'தயவுசெய்து உங்கள் காலணிகளையும் மனத்தையும் வெளியில் விட்டுவிட்டு வாருங்கள்’ என்ற வாசகம் இருக்கும். உங்கள் முழு மனத்தையும் உள்ளேகொண்டு வரும்பொழுது, உங்கள் மனம் அறிவின் கர்வத்தினால் நிரம்பி வழியும்பொழுது, அங்கு நிகழ்வது பட்டறிவின் வன்முறையே! அது, எதையுமே உள்ளேநுழைய அனுமதிக்காது. பிறகு த்யான வகுப்பின் உள்ளே வருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
என் முன்னால் திறந்த மனத்துடன் அமர்ந்திருக்கும்பொழுது, என் சக்தியே உங்கள் கேள்விகளை உணர்ந்துகொள்ளும். நீங்கள் விழிப்புடனிருந்தால், பதிலைக் காண்பீர்கள். உங்கள் மனம் முடியிருந்தால், நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல், கேள்விகளைத் தயார்செய்து கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் உண்மையாகவே கவனிக்கும்போது, கேள்விகள் கரைந்துவிடும். நான் சொல்வதைப் பொய்யென நிரூபிக்கும் வன்முறை இல்லாமல், நான் என்ன சொல்கிறேன், எதைச் சொல்கிறேன் என்பதைக் கற்பதில் மட்டுமே ஆர்வம் அதிகரிக்கும். நான் சொன்னதை நீங்கள் ஜீரணித்துவிட்டீர்கள். இன்னும் அதிகம் வேண்டும் என்ற பசியில் இருக்கிறீர்கள்.
உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் சந்தேகங்கள் உங்கள் உள் உலகில் இருந்து எழுவதுபோல் தெரியும். ஸத்யம் என்னவென்றால், வற்றுக்கான பதில்களும் உங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன. நீங்கள் வெறுமனே தேடினால் போதும், அவ்வளவுதான். உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடைகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
