மரத்தை வேரோடு சாய்த்தல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்த மரத்தின் உண்மையான உருவத்தைக் காண முடியாது. அது
எங்கே முடிகிறது, எங்கே தொடங்குகிறது, எங்கே இருக்கிறது
என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக
வேரூன்றியுள்ள இந்த மரத்தை, பற்றற்றதன்மை என்ற
ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுதியோடு சாய்க்க
வேண்டும்.
ஆதியில் யாரிடம் இருந்து எல்லாச் செயல்களும் தொடங்கியதோ,
ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிருந்து திரும்பிவர
முடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச்சென்று, அந்த
மகோன்னத இருப்புநிலையிடம் சரணடைய வேண்டும்.
ஸம்ஸ்காரத்தைச் செயலிழக்க வைக்கும் தந்திரங்கள்
கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் சேர்த்துவைக்கப்பட்டுள்ள, காரண சரீரத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர் ஒரு அசாதாரணமான விஞ்ஞானி.
ஒரு விஞ்ஞானியால்தான் ஸத்யத்தை நேர்மையாகத் தேட முடியும். தம் சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் விட்டுவிட்டு, தேடுதலின்போது படிப்படியாகக் கண்டுபிடிக்கப்படும் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான போதுமான தைரியத்தையும் அவரே பெற்றிருக்க முடியும்.
இந்தப் பண்புகளை நாம் கிருஷ்ணரிடம் காணலாம். அவர் தம்முடைய வெளிப்படுத்துதலிலும் தேடுதலிலும் நேர்மையானவராக இருக்கிறார். அவர் பெரிய ஸத்யத்திற்காக, தம்முடைய சிறிய புரிந்துகொள்ளுதல்களை விட்டுவிடத் தயாராக இருக்கிறார். அவர் இன்றைய புதுப்பிக்கப்பட்ட ஞானத்திற்காக, நேற்றைய ஸத்யத்தை விடத் தயாராக இருக்கிறார்.
நாம் கடந்த வருட ரயில்வே அட்டவணையைப் பார்த்துக்கொண்டு, இன்றைய புகைவண்டிக்குக் காத்திருக்க முடியாது. கிருஷ்ணர், தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்கிறார். இறுதியாக, அவர் இரகசியங்களைப் பொதுமக்களிடம் தைரியமாகத் திறந்துவைக்கிறார். அவர் பதிப்புரிமை பற்றியோ, பட்டறிவுசொத்துரிமை பற்றியோ கவலைப்படவில்லை.
கிருஷ்ணர்,
இரகசியங்களைப்
பொதுமக்களிடம்
தைரியமாகத் திறந்து
வைக்கிறார். அவர்
பதிப்புரிமை பற்றியோ,
பட்டறிவுசொத்துரிமை
பற்றியோ
கவலைப்படவில்லை.
இந்திய நாட்டில், முற்கால வேத
பாரம்பரியத்தில் அறிவு எல்லோருக்கும்
சொந்தமானதாகவும், இலவசமாகக்
கற்பிக்கப்பட வேண்டியதாகவும்
நம்பப்பட்டது. பதிப்புரிமை என்ற
ஒரு கருத்தே இடம் பெறவில்லை.
கிருஷ்ணர் எல்லா இரகசியங்களையும்
வெளிப்படுத்தும் அளவிற்குத் தைரியமாக
இருந்தார்.
அவர் அழகாகச் சொல்கிறார்: நரூபமஸ்யேஹ
ததோலப்யதே - ஒருவராலும் இந்த மரத்தின்
அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது.
எவராலும் அது எங்கே துவங்குகிறது,
எங்கே முடிகிறது அல்லது அதன் மூல
ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைப்
புரிந்துகொள்ள முடியாது. இருந்தபோதிலும்
பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு,
திடமான மனோ பலத்தினாலும் உறுதியான
தீர்மானத்தினாலும் ஒருவர் இந்த மரத்தை
வெட்ட வேண்டும்.
ஒருவர், தம் காரண சரீரத்தில் என்ன சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை எவராலும் பார்க்க முடியாது. அது பண்டோரா பெட்டியைப் (Pandora's Box) போன்றது.
பண்டோரா பெட்டி என்பது கிரேக்க பழங்கதை மரபுப்படி, மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் ஒருசேர உள்ளடக்கிய ஒரு பெட்டி. அதைத் திறந்துவிட்டால் போதும், அதன்பிறகு நிகழ்வது, நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
இந்தக் காரண சரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் எல்லா ஸம்ஸ்காரங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் நான்கை அழிக்கும்பொழுது, பத்து ஸம்ஸ்காரங்கள் மேற்பரப்பிற்கு வரும். உள்ளே என்ன இருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு விஷயம் மட்டுமே சாத்தியம், எல்லா ஸம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான தீர்மானத்தினால் வெட்டிவிட முடியும்.
உறுதியான தீர்மானத்தினாலும் புத்திசாலித்தனத்தாலும் முழு காரண சரீரத்தையும் தூய்மையாக்க முடியும்.
மக்கள் தங்கள் குருவிடம், ஸம்ஸ்காரங்களிலிருந்து வெளியே வருவது எப்படி? என்று கேட்கிறார்கள்.
திடமான தீர்மானத்தாலும் ஞானத்தாலும் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். உதாரணத்திற்கு, நாம் அறியாமல் நெருப்பில் கையை வைத்துவிட்டால், நெருப்பிலிருந்து கையை எடுக்க குருவின் உதவியைக் கேட்போமா? இல்லை. நெருப்பு சுட்டவுடனேயே, கைகளை நாம் எடுத்துவிடுவோம். நம்மிடம் புரிதல் இல்லை என்றால் மட்டுமே குருவிடம் கேட்போம். புரிதல் இருந்தால், அதைத் தொடர்ந்து சரியான செயல்கள் நடைபெறும். சரியான செயல்கள் நடக்கவில்லையென்றால் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அங்கே புரிதல் நிகழவில்லை.
ஸம்ஸ்காரங்கள் நெருப்பைப்போல் ஆபத்தானவை. அவற்றிலிருந்து விடுபட, அவற்றைக் கரைக்க உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் புத்திசாலித்தனமும் பற்றின்மை என்ற உறுதியான தீர்மானமும் தான்.
கிருஷ்ணர் விவரிக்கிறார். அந்த ஸம்ஸ்கார மரத்தை வெட்டியபின், 'திரும்ப வருதல்' இல்லாத நித்யமான அமைதியிடம் சரணடைந்தபின், நாம் மீண்டும் இங்கே திரும்பி வரமாட்டோம். அந்த இடமே மொத்தப் பிரபஞ்சமும் நிலைபெற்றிருக்கும் இடம்.
அஹங்காரத்தைப் பற்றிய சரியான புரிதலே நம்மை விடுவிக்கும் யுக்தி
ஃப்ராய்ட் (Freud) மற்றும் ஜங்க் (Jung) என்பவர்கள், அடையாளம் அல்லது அஹங்காரம் என்னும் கருத்தைப் பற்றியும், மூளையின் பாகங்கள் மற்றும் உடல் - மன அமைப்பினைப் பற்றியும் தீவிரமாகப் பகுத்து ஆராய்ந்தார்கள்.
நான் இந்த வார்த்தைகளை மனோதத்துவ நிபுணர்கள் பயன்படுத்துவதிலிருந்தும், அதனுடைய அர்த்தத்தில் இருந்தும் வேறுவிதமாகப் பயன்படுத்துகிறேன்.
உங்களை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்களோ, நம்புகிறீர்களோ அந்த நினைவுகளின் தொகுப்பையே 'அடையாளம்' என்கிறேன்!
அதாவது உங்களைப் பற்றிய கருத்தை வரையறுக்கும் உங்களுடைய நினைவுகளின் தொகுப்பையே அடையாளம் அல்லது அஹங்காரம் என்கிறேன். இதுவே உங்களுடைய தனித்தன்மையை உருவாக்குகிறது.
நம்முடைய எல்லாத் தீர்மானங்களும்
நம்முடைய தனித்தன்மையினால்
இயக்கப்படுகின்றன. அது மீண்டும்
நினைவுப் பதிவுகள், நம்பிக்கைகள் மற்றும்
கருத்துக்களின் தொகுப்பாகிறது.
அடையாளத்தால் சேமித்துவைக்கப்படும்
பெரும்பாலான தகவல்கள், மனத்தின்
விழிப்பறு பகுதியில்தான் இருக்கின்றன.
நமக்கு இங்கே என்ன சேமிக்கப்பட்டுள்ளன
என்று தெரியாது.
தொண்ணூறு சதவீதத்திற்கு மேற்பட்ட நம் புலன்களின் புரிதல்கள், நம்முடைய விழிப்புணர்வற் ற மனத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நம்முடைய விழிப்புறு மூளை கிரகித்தால், நாம் பைத்தியமாகிவிடுவோம்.
ஒருவருடைய விழிப்பறு மனத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஸம்ஸ்காரங்களை அவருடைய ‘அடையாளம்’!
இது, நம்முடைய காரண சரீரத்தில் இருக்கிறது. ஆழமான மற்றும் ஒருமுகப்பட்ட த்யானத்தினால், இந்த விழிப்புணர்வற் ற காரண சரீரத்தை அடைந்து, அங்குச் சேர்த்துவைக்கப்பட்டுள்ள ஸம்ஸ்காரங்களை நம்மால் கரைத்துவிட முடியும். ஒருமுறை இதைச் செய்துவிட்டால் போதும், மீண்டும் பழைய மனிதனாக ஆக மாட்டோம். ஸம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு நாம் சுதந்திரம் பெறுவோம்.
நிக்யானந்த ஸ்புரண நிகழ்ச்சியில், இருளையே நம்முடைய வழிகாட்டும் சக்தியாகக்கொண்டு, நாம் காரண சரீரத்தின் மீது த்யானம் செய்வோம். இது உருவகமாக, நாம் சாதரணமாக அறிந்திராத விழிப்புணர்வின்மையைத்தான் குறிக்கிறது.
உடலை விட்ட ஆன்மா, இந்தக் காரண சரீர அடுக்கை உணர்விழந்த நிலையில்தான், கோமா நிலையில்தான் கடக்கிறது. ஆன்மா இந்த அடுக்கைக் கடந்துசெல்லாத வரை, அதனால் மீண்டும் அந்த உடம்பிற்குள் வர முடியும். இதுவே ஸம்ஸ்காரத்தின் சக்தி, வலிமை!
இந்த எண்ணப்பதிவுகளுக்கும் ஆசைகளுக்கும் இந்த ஆன்மாவை மீண்டும் உடலுக்குள் இழுத்துவரக்கூடிய சக்தி இருக்கிறது. அதனால்தான், பல வருடங்களாக நினைவற்ற நிலையில் இருப்பவர்கள் கூட, மீண்டும் நினைவைத் திரும்பபெறுகிறார்கள். அவர்கள், தங்களின் நிறைவேறாத ஆசைகளால் திரும்பவும் இழுக்கப்படுகிறார்கள். ஆனால், அந்த ஆன்மா இந்தக் காரண சரீரத்தைக் கடந்து விட்டால், அது மீண்டும் அந்த உடலுக்குள் நுழைய முடியாது; அது அடுத்த அடுக்கான ஆன்ம சரீரத்திற்குத்தான் நகர்ந்தாக வேண்டும்.
> விழிப்புணர்வற் றநிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு நாம் விளையாடும்போது, உண்மையில் நாம் நமக்குத் தெரியாத ஒன்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
ஸம்ஸ்காரங்கள் கரையும் இந்தப் புள்ளியை ஒருமுறை அடைந்து, ஆன்ம சரீர அடுக்குிற்குள் நகர்ந்துவிட்டால், சேகரிக்கப்பட்ட நினைவுப்பதிவுகளின் உத்தரவிற்கேற்ப, விழிப்புணர்வில்லாமல் நாமும் நடந்துகொள்ள மாட்டோம்.
நாம் முன்பிருந்த நிலையான ‘உள்ளுணர்ச்சி’ நிலையிலிருந்து ‘நுண்ணுணர்வு’ நிலைக்கு நகர்வோம். அப்போது நாம் அறியாமையுடன்கூடிய விழிப்புநிலையில் இருக்க மாட்டோம் விழிப்புணர்வின் உண்மையான விழிப்புற்ற நிலையில் இருப்போம்.
மனோவசியம், மனக்கட்டுப்பாடு, பாவனை போன்ற பல யுக்திகள் விழிப்புணர்வற்ற நிலையைத் திறப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. விழிப்புணர்வற்ற நிலை என்று சொல்லப்படும் ஆழ்மனத்தோடு அல்லது கனவு மனத்தோடு நாம் விளையாடும்போது, உண்மையில் நாம் நமக்குத் தெரியாத ஒன்றோடுதான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் இந்தப் பகுதிக்குள், த்யானத்தைப் பற்றிய விழிப்புணர்வும், த்யானத்தின் துணையும் இல்லாமல் பயணம்செய்யும்பொழுது, நாம் எதிர்பார்க்காத மற்றும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளைத்தான் சந்திக்கிறோம். அதனால்தான் நாம் எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது, ஏனென்றால் அது உண்மையாக நடந்துவிடவும்கூடும்.
மனத்தின் ஆழ்மனப்பகுதியோ அல்லது விழிப்பறு பகுதியோ விழிப்புணர்வில்லாமல் செயல்படுத்தப்பட்டால், அது அமைதியற்ற, ஒழுங்கற்ற விளைவுகளையே விளைவிக்கும்.
வயது வந்தவர்கள், தாங்கள் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதற்குத் தங்கள் பெற்றோர்களே காரணம் என்றும் குறைசொல்வது இப்போதைய நவீன உலகில் அதிகரித்துள்ளது.
ஆனால் இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், இவற்றுள் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டதுதான்! இந்தக் கருத்துக்கள் எல்லாமே, அந்த வாலிபர்களுக்குள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த, மனோதத்துவ சிகிச்சை நிபுணர்களால் விதைக்கப்பட்டவை என தெரியவந்தது.
மனோவசியத்தால் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் முடியலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். இருந்தபோதிலும், அதைத் தவறானவர்கள் கையாளும்பொழுது, விழிப்புணர்வற்ற பகுதியில் தீங்கிழைக்கக்கூடிய நினைவுப்பதிவுகளை விதைத்துவிடுகிறார்கள்.
‘உயர்’ விழிப்புணர்வு தியானத்தின் வாயிலாக, விழிப்புணர்வற்ற பகுதிக்குள் விழிப்புணர்வைக்்கொண்டு வருவதுதான், இவ்வாறு சேர்த்துவைக்கப்பட்ட ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான சரியான வழி.
கேள்வி: ஸ்வாமிஜி, நீங்கள் பயன்படுத்தும் ‘அஹங்காரம்’ என்னும் வார்த்தை ஃப்ராய்ட் (Freud) என்பவர் உபயோகிக்கும் வார்த்தையைப் போன்றதுதான், இருப்பினும் இரண்டும் ஒன்றல்ல என்று நீங்கள் சொல்கிறீர்கள். இது எனக்குப் புரியவில்லை, தயவுசெய்து தெளிவாக விளக்குங்கள்.
ஃப்ராய்ட் பற்றி எனக்கு அதிகம்
தெரியாது. அவர், மன நலம்
பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொண்ட
ஆராய்ச்சியின் அடிப்படையில் கிடைத்த
முடிவுகளைக்கொண்டு 'நடைமுறை சாராக்' கோட்பாட்டை உருவாக்கினார். அவருடைய கருத்துக்கள், பலரைத் தவறான திசையில் செலுத்தியுள்ளன. அவர் இந்த ஆராய்ச்சியை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே வைத்துச்செய்யாமல், ஞானமடைந்த மக்களிடமும் மேற்கொண்டுவிட்டு, அதன்பிறகு ஒரு முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அப்போது மட்டுமே அது சமச்சீரான ஆராய்ச்சியாக இருக்கும்.
ஃப்ராய்டும், அவர் காலத்தைச் சேர்ந்த கார்ல் ஜங்கும் ஜெர்மானிய மொழியில் - 'அது' (It), 'நான்' (I), 'நான் - ஐத் தாண்டியது (Over-I)' என்ற வார்த்தைகளையே உபயோகித்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்கள்தான் அவற்றை - 'அடையாளம்' (Id), 'அஹங்காரம்' (Ego), 'உயர் அஹங்காரம்' (Super Ego) என மொழிபெயர்த்துள்ளார்கள்.
ஃப்ராய்டைப் பொறுத்தவரை, 'அது' அல்லது 'அடையாளம்' என்பது இயல்புணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட இன்பங்களைப் பற்றியது. முதன்மை உணர்ச்சிகளான ஆசையையும் அச்சத்தையும் பற்றியது. இது பெரும்பாலும் விழிப்புணர்வில்லாதது.
'நான் - ஐத் தாண்டியது' அல்லது உயர் அஹங்காரம் என்பது சமுதாய, மத மற்றும் அரசியல் கட்டுறு மனப்பாங்குகளின் அடிப்படையிலான மனசாட்சியைப் பற்றியது. தந்தைபோன்று கட்டுப்படுத்தும் ஒருவகை கட்டுறு மனப்பாங்கு இது! நம்மை ஆட்சிசெய்யும் சமுதாய ஒழுக்கமுறை இது.
குரு,
'அஹங்காரம்'
என்ற வார்த்தையை
வெறுமனே 'நான்'
என்பதைக் குறிப்பதற்கு
மட்டுமல்லாமல்,
'எனது' என்பதைக்
குறிக்கவும்
உபயோகிக்கிறார்.
நான் அல்லது அஹங்காரம்
என்பது, 'அது'வுக்கும், 'நான் - ஐத்
தாண்டியது'வுக்கும் இடையேயான ஒரு
அடையாளம். ஃப்ராய்டைப் பொறுத்தவரை
அஹங்காரம் என்பது ஒரு பகுதி
விழிப்புணர்வுள்ளதாகவும், மற்றொரு பகுதி
விழிப்புணர்வற்ற்றதாகவும் இருக்கிறது. இது
ஒரு எளிய விளக்கம்.
ஆனால் உண்மையில், அஹங்காரத்தின்
வெளிப்பாடு வேண்டுமானால்
விழிப்புணர்வுள்ளாதக இருக்கலாம்.
ஆனால் இந்த வெளிப்பாட்டை
வெளிக்காட்ட வைப்பது விழிப்புணர்வற்ற
நிலையே.
நீங்கள் விருப்பப்பட்ட எந்த வார்த்தையை
வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.
ஆனால் குரு, 'அஹங்காரம்' என்ற
வார்த்தையை வெறுமனே 'நான்' என்பதைக்
குறிப்பதற்கு மட்டுமல்லாமல், 'எனது'
என்பதைக் குறிக்கவும் உபயோகிக்கிறார்.
இவை இரண்டும் இணைந்துதான், 'நீங்கள்
யார்' என்று நினைக்கிறீர்களோ, அதை
உருவாக்குகிறது.
நீங்கள், உங்களுடைய
உடைமைகள் என்று
எதைப் பார்க்கிறீர்களோ
அதன் அடிப்படையில்தான்
உங்கள் அடையாளத்தை
வரையறுக்கிறீர்கள்.
நம்மில் பலர், 'நான்' என்பதை உணர்வதால்தான், 'எனது' என்ற கருத்தே எழுகிறது என்று நினைக்கிறோம். இல்லை! உங்களுடைய முதல் தேவைகளான உயிர்வாழ வேண்டுமென்ற விருப்பம் மற்றும் இன்பத் தேவைகள், இவை இரண்டும்தான் 'எனது' என்பதை வரையறுக்கிறது. இவை மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகின்றன.
நீங்கள், உங்களுடைய உடைமைகள் என்று எதைப் பார்க்கிறீர்களோ, அதன் அடிப்படையில்தான் உங்கள் அடையாளத்தை வரையறுக்கிறீர்கள், நீங்கள் என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையும் முடிவுசெய்கிறீர்கள்.
'நான்' என்ற பயத்தையும் பாதுகாப்பின்மையையும் பற்றிய வெளிப்பாடு, ஸ்வாதிஷ்டானச் சக்ரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆனால் 'எனது' என்ற பேராசையைப் பற்றிய வெளிப்பாடு, முதல் சக்கரமான மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகிறது.
ஜென்ம ஜென்மமாக நம்முள் இருக்கும் பொக்கிஷம்
'நான்', 'எனது' என்ற இவை இரண்டும் சேர்ந்த கலவையைத்தான் 'அஹங்காரம்' என்று குரு குறிப்பிடுகிறார். அஹங்காரத்திற்கு உள்முகம் மற்றும் வெளிமுகம், அதாவது அஹங்காரம், மமகாரம் என்ற இரண்டு முகங்கள் உண்டு. நீங்கள், உங்களை மற்றவர்களிடம் என்னவாகக் காட்டுகிறீர்களோ, அதுவே வெளியில் நீங்கள் இருக்க விரும்பும் நிலை. இதுவே அஹங்காரம் எனப்படுகிறது. இது பெரும்பாலும், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட மிகைப்படுத்தியே, உங்களை வெளியே காட்டுவதாகவே இருக்கும். இங்கு உங்களுக்கு நீங்களே மாயையாக இருக்கிறீர்கள். அஹங்காரம், ஒரு மிகப் பெரிய மாயையாக இருக்கிறது.
நீங்கள், உள்ளுக்குள் உங்களைப் பற்றி என்னவாக நினைக்கிறீர்களோ, அதுவே மமகாரம் எனப்படுகிறது. அது எப்போதும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட குறைந்ததாகவே இருக்கும்.

“இல்லை, இல்லை, என்னைப் பற்றி நான்
உயர்ந்த மதிப்பீடுதான் வைத்திருக்கிறேன்,”
என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பல
நேரங்களில் இந்த உயர் சுயமதிப்பீடு,
உங்கள் பாதுகாப்பின்மை உணர்விலிருந்து
பிறக்கிறது. அது, சமுதாயத்திடமிருந்து
உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நீங்கள்
எழுப்பிக்கொள்ளும் ஒரு சுவர். நீங்கள்
அந்தச் சுவரின் பின்னால் ஒரு கைதியாகவே
இருக்கிறீர்கள். இது, உங்களுக்குள் ஒரு
சூட்சுமமான வன்முறையை வளர்க்க
ஆரம்பிக்கிறது.
உண்மையாகவே, உங்களைப் பற்றிய உயர் சுயமதிப்பீடு இருக்குமானால், ‘நீங்கள் கடவுள்’ என்பதை ஏன் நீங்கள் ஒப்புக்கொள்வதில்லை? ஏன் முடியாது.
நான், ‘நீங்கள் கடவுள்’ என்று உங்களுக்குச் சொல்கிறேன். என்னுடைய சங்கம் தொடங்கப்பட்டதே, ‘நீங்கள் கடவுள்’ என்பதை உங்களுக்குநிரூபிப்பதற்காகவே தவிர, நான் கடவுள் என்பதை நிலைநாட்டுவதற்காக அல்ல!
‘நீங்கள் கடவுள்’ என்பதற்குப் பதிலாக, ‘நீங்கள் பாவிகள்’ என்று உங்களை அழைக்கும் உங்கள் மதத்தை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். பாவம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அறியாமையே பாவம்!
‘நீங்கள் தெய்வம்’, ‘நீங்கள் கடவுள்’ என்ற ஸத்யத்தை உணராமல் இருப்பதே அறியாமை; இந்த ஸத்யத்தை சமுதாயமும் மதமும் உங்களை உணர்ந்துகொள்ள விடாது. ஏனென்றால், அதை நீங்கள் உணர்ந்துகொண்டால், அவர்களால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.
மதங்கள், உங்களை அச்சுறுத்துவதின் மூலமும், ஆசைப்படுத்துவதின் மூலமும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உங்களைக் கொண்டுவர ஆசைப்படுகின்றன. நரகத்தைப் பற்றிய பயம் மற்றும் சொர்க்கத்தைப் பற்றிய பேராசை என்பது, ஒரு கையில் சாட்டையையும் மற்றொரு கையில் காரட்டையும் வைத்துக்கொண்டு, உங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தும் கருவிகளே!
சமுதாயமும் தன் பங்கிற்கு, பெற்றோர் மூலமாகவும் பெரியவர்கள் மூலமாகவும் சுற்றுச்சூழல் மூலமாகவும் கட்டுப்படுத்துகிறது, ஏனென்றால் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால், நீங்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாவீர்கள். நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பீர்கள்.
உங்கள்மீது இவர்களால் சுமத்தப்படும் கட்டுறு மனப்பாங்குகள்றதான், உங்களுக்குள் ஸம்ஸ்காரங்களை உருவாக்குகின்றன. இந்த ஸம்ஸ்காரங்களினால் நீங்கள் பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறீர்கள். அதனால் அவர்கள், உங்களைப் பிறப்பிலிருந்தே கட்டுப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்பது உயர் அஹங்காரம் - உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் மூத்த சகோதரர்.
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், பந்தத்தின் தன்மையைப் பற்றியும், நீங்கள் அதை உடைத்தெறிந்து, அதிலிருந்து விடுதலையடைவது எப்படி என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.
