சுத்திகரிக்கும் நுட்பம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

15.5 அஹங்காரத்திலிருந்தும் தவறான நம்பிக்கையிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுகதுக்கம் என்ற இருமையிலிருந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான புருஷரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள்- இவர்கள் அழியா ஞானத்தை அடைகின்றனர்.
15.6 என்னுடைய அந்த நித்யமான விழிப்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களோ, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.
காமத்தைக் கடக்கும் நுட்பம்
கிருஷ்ணர், முந்தைய அத்தியாயங்களிலும், இந்தக் கருத்தையே வெளிப்படுத்தினார். ஆனால் அப்போது அர்ஜுனனால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் அர்ஜுனன் கேள்விகேட்கும் மனநிலையில் இருந்தார்.
கேள்விகேட்கும் மனநிலையில் இருக்கும்பொழுது, நாம் முழு பாடத்தையும் தவறவிட்டுவிட்டு, மும்முரமாகக் கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்பொழுது அர்ஜுனனுக்கு, கேள்விகேட்கும் மனநிலை போய்விட்டது. இப்போது அங்கே சந்தேகங்கள் மட்டுமே இருக்கின்றன, கேள்விகள் இல்லை. கிருஷ்ணர், அதே ஸத்யத்தை இப்போது மீண்டும் ஆழமாக விளக்குகிறார்.
சீடர், சந்தேகங்களோடு அமர்ந்திருக்கிறார், ஆனால் உள்வாங்கும் திறந்த மனத்துடன்! அவர் தம்முடைய இருப்புத்தன்மையைத் திறந்துவைத்து, குரு தமக்குள் ஊடுருவக் காத்துக்கொண்டிருக்கிறார்.
அர்ஜுனன், கிருஷ்ணரை உள்வாங்கத் தயாராக இருந்தார். அவர் குருவின் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உள்பேச்சு நின்றுவிட்டதால், அங்கே எந்தக் கேள்விகளும் எழவில்லை. இப்போது அவர், கிருஷ்ணரை உள்வாங்குவதற்குரிய உள்ளத்தையும் விழிப்புணர்வையும் பெற்றிருக்கிறார். அதனால்தான் இப்போது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஜென் புத்த மதத்தில், விடுகதை போன்ற அல்லது புதிர் போன்ற வாக்கியங்களை 'கோன்' (Koan) என்று அழைக்கிறார்கள். ஒரே ஒரு வாக்கியம் மட்டும் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு, 'ஒரு கை ஓசை எப்படி இருக்கும்?' உன்னுடைய தாயும் தந்தையும் பிறக்கும் முன் உன்னுடைய முகம் எப்படி இருந்தது?
- என்பது போன்ற ஜென் கோன்கள் பல இருக்கின்றன.
அந்தச் சீடர்கள், இந்தக் கோனைப் பற்றி த்யானம் செய்துவிட்டு, அதற்கான பதிலுடன் தங்கள் குருவிடம் திரும்புவார்கள். அந்த குரு,
அவர்கள் முதுகில் பலமாக ஓசைவருமாறு
ஒரு தட்டுதட்டி, அவர்களை அவர்களுடைய
சொந்த வழியில் செல்லுமாறு அனுப்புவார்.
இறுதியில், அவர்கள் ‘ஒரு கை ஓசையை’
அனுபவமாகப் பெறுவர்.
‘கோன்’ என்பது விவரிக்கக்கூடிய பதில் இல்லை. அது ஒரு அனுபவம் மட்டுமே!
இங்கே கிருஷ்ணர், “யாரெல்லாம் அஹங்காரத்திலிருந்தும் தவறான நம்பிக்கைகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களோ, யாரெல்லாம் தமக்குள் வசிக்கிறார்களோ, யாரெல்லாம் காமத்தைக் கடந்தவர்களோ, சுகம் துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களோ, யாரெல்லாம் குழப்பமடையாதவர்களோ, பரமாத்மாவிடம் சரணாகதியடைவது பற்றி அறிந்தவர்களோ, அவர்கள் எல்லோருமே அழிவில்லாத நித்ய விழிப்பு நிலையை அடைகிறார்கள்,” என்று சொல்கிறார்.
வைராக்யம் என்றால்
பந்தத்தையும்
பந்தமில்லாத்
தன்மையையும்
கடந்தநிலை.
வார்த்தைகள் என்ன அழகாக உபயோகிக்கப்பட்டுள்ளன. அவர் காமத்தைத் துறந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது!
வைராக்யம் என்றால் பந்தத்தையும் பந்தமில்லாத் தன்மையையும் தாண்டியது. ராக என்றால் பற்று என்று அர்த்தம். அராக என்றால் பற்றற்ற தன்மையையும் விராக அல்லது வைராக்ய என்றால் பற்று மற்றும் பற்றின்மை இரண்டையும் கடந்தது, எதனோடும் இணைத்துக் கொள்ளாதிருத்தலையே வைராக்ய என்கிறோம்.

ஏழு வயதுவரை நாம் பொம்மைகளின் மீது பற்றாக இருக்கிறோம். எட்டு ஒன்பது வயதில், அவற்றை விட்டுவிட நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இருபது வயதில், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மீது பற்று அல்லது பற்றின்மை என்பதைத் தாண்டிய நிலையில் இருப்போம். ஆனால் கட்டாயப்படுத்துதலின்பேரில் உருவான கைவிடுதலால், நாம் அதை வெளியில் வேண்டுமானால் கைவிட்டிருக்கலாம்; ஆனால் அவற்றின் மீதான ஏக்கம் நம் உள் மனத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
அதனால்தான் கிருஷ்ணர் பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்கிறார். அவர், 'யாரெல்லாம் காமத்தைக் கடந்தவர்களோ' என்று சொல்கிறார்.
இந்த நிலையில், நம்மால் என்ன இயலும் என்பதும் நமக்குத் தெரியும். அது அங்கு இருப்பதும் நமக்குத் தெரியும். நம் தேவைக்கு ஏற்றவாறு அதை உபயோகிக்கலாம் அல்லது தூக்கியெறிந்து விடலாம்.
வாழ்க்கையும் ஒரு பொம்மை மாதிரி தான். இதை முழுதாகப் புரிந்துகொண்டால், நீங்கள் ராஜாவைப்போல் வாழலாம். சாதாரண உலகியல்சார்ந்த ராஜாவாக அல்ல, ஞான ராஜாவாக, ராஜரிஷியாக!
இது ஒரு ஜென் 'கோன்'. இது புரிந்துகொள்வதற்காக அல்ல, தியானிப்ப தற்காக! இந்த நுட்பத்தை தியானித்தால், இந்தப் பண்புநலன்கள் உங்களுள் மலரத் துவங்கும். மேலும், காரண சரீரத்தைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தை உங்களுக்குத் தரும்.
முன்பு கிருஷ்ணர், ஸமஸ்காரங்களை அழிப்பதற்கான வழிகளைச் சொன்னார். இப்போது, சரியான ஒரு சரீரத்தைக் கட்டமைப்பதைப் பற்றிப் பேசுகிறார். அது உங்கள் காரண சரீரத்தைப் புனரமைப்பது பற்றியது.
கிருஷ்ணர், காரண சரீரத்தைப் புதுப்பிக்கும் யுக்திகளைக் கொடுக்கிறார்.
கிருஷ்ணருடைய வார்த்தைகள் ஜென் கோன்களைப் போன்றவை. உண்மையில் கிருஷ்ணர், அதே வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் உபயோகிக்கிறார். வார்த்தைகளையும் வெளிப்படுத்துதல்களையும் மட்டுமல்ல, அவர், அதே எழுத்துக்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். ஆரம்பத்தில் அவர், இந்த வார்த்தைகளை அறிவுரைகளாகப் பயன்படுத்தினார். இப்பொழுது அதே வார்த்தைகளை, செயல்முறை யுக்திகளாகப் பயன்படுத்துகிறார்.
இந்த அத்தியாயம், நம்முடைய காரண சரீரத்தைக் கட்டமைப்பதைப் பற்றியது, ஸம்ஸ்காரங்களைக் கட்டமைப்பதைப் பற்றியது.
இந்தச் செயல்முறை, நம்முடைய காரண சரீரத்தில் நேர்மறையான ஸம்ஸ்காரங்களை உருவாக்குகிறது. அர்ஜூனன் கேள்விகேட்கும் மன நிலையில் இருந்தவரை, அதே வார்த்தைகள் அறிவுரைகளாகச் சொல்லப்பட்டன. அவர் சந்தேக மனநிலைக்குள் நுழைந்தவுடன், அதே வார்த்தைகள் நுட்பங்களாகத் தரப்படுகின்றன.
சீடர், கேள்விகேட்கும் மன நிலையில் இருக்கும்பொழுது, குருவின் வார்த்தைகள் அறிவுரைகளாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எப்போது சீடர், கேள்வி கேட்பதை நிறுத்தி, கவனிக்க ஆரம்பிக்கிறாரோ, அப்போது அதே வார்த்தைகள் நுட்பங்களாக இருக்கும்.
வார்த்தைகள், அறிவுரைகளாக மட்டுமே இருக்கும்வரை, கதவைத் திறக்க, உங்களுக்குச் சாவிகள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை நுட்பங்களாக ஆகும்பொழுது, அந்த நுட்பங்களே சாவிகள் ஆகின்றன. அவை கதவைத் திறக்கத் தயாராக இருக்கின்றன.

அர்ஜூனன், இந்த அத்தியாயத்தில், முந்தைய அத்தியாயங்களின் சாராம்சத்தைப் பெற்றுக்கொண்டார்.
வட இந்திய மடாலயங்களில், ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும், இந்த அத்தியாயம் ஓதப்படுகிறது. இந்த 15வது அத்தியாயம் உள் ஒளிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி என்பதால், ஒவ்வொரு உணவுக்கு முன்னும் உச்சாடனம் செய்யப்பட வேண்டும்.
இந்த அத்தியாயத்தின் சொற்களே, உங்கள் காரண சரீரத்தைப் புனரமைப்பதில் அதிசயங்களை நிகழ்த்தும்.
இதனை உச்சாடனம் செய்வதற்கு சில நிமிடங்களே தேவைப்படும். எவராலும் இதைச் செய்ய முடியும். அதன் பொருளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் பொருள் விளங்ிகனால்,
மிகவும் நல்லது, உங்களுக்குப் பொருள்
தெரியாவிட்டாலும், அதை உச்சாடனம்
செய்வது மிகுந்த பயனை நல்கவல்லது.
இச்சொற்களை மீண்டும் மீண்டும்
உச்சாடனம் செய்வது, காரண சரீரத்தைச்
சீரமைக்கும். குறிப்பாக நீங்கள் ஒரு
சரணாகதி மன நிலையில், குருவின் மீதான
அலாதி மரியாதையுடன் உச்சாடனம்
செய்யும்போது, இது நேரடியாகக் காரண
சரீரத்தைத் தொடுகிறது.
சீடன் குருவுடன்
முழுமையாக
இசைந்திருந்தால்,
பிரபஞ்ச இருப்பு
குருவின் மூலமாக
அவருக்கு உதவுகிறது.
அர்ஜுனன், முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறார். அவர் குருவோடு முழுமையாக இணங்கியிருக்கிறார். சீடன் குருவுடன் முழுமையாக இசைந்திருந்தால், பிரபஞ்ச இருப்பு குருவின் மூலமாக அவருக்கு உதவுகிறது.
அர்ஜுனனுக்கு விளக்கங்களோ, தர்க்கமோ தேவையாக இல்லை. அவர் குருவை உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறார். அதனால் கிருஷ்ணர், காரண சரீரத்தை ச் சீரமைப்பதற்கான சொற்களை உச்சரிக்கிறார். அவர், நல்ல ஸம்ஸ்காரங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தருகிறார்.
புலன்கள் எனும் மாய வலை
அவர் சொல்கிறார்: கர்வம், தவறான நம்பிக்கைகள், பந்தம் இவற்றிலிருந்து விடுபட்டவர்களும், தன்னிடத்திலேயே நிலைத்திருப்பவர்களும், காமத்தைக் கடந்தவர்களும், சுக துக்கம் என்ற இருநிலைகளிலிருந்து விடுபட்டவர்களும், குழப்பமில்லாதவர்களும், மேலான பிரபஞ்சத்திடம் சரணாகதி அடைய அறிந்தவர்களும், எல்லையற்ற நித்யமான விழிப்புணர்வை அடைகிறார்கள்.
காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்குக் கடினமானது. மாமுனிவர்களும்கூட காமத்திற்கு அடிபணிந்திருக்கிறார்கள். காமம், உடலைப் பொறுத்தது. உடலைப் பற்றிய உணர்வு இருக்கும்வரை, காமம் இருக்கும். உடல் உணர்வுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒருவரே, காமத்தைத் துறக்க முடியும்.
ஒரு சின்ன கதை ஒரு சிறுவன், தன் பெற்றோருடன் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்திற்குச் சென்றான். அது, வனவிலங்குகளைப் பற்றிய படம். சிறுவன் அத்திரைப்படத்தை முழுமையாக ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு காட்சி, அந்தச் சிங்கக் குட்டி வேடனின் பொறியில் சிக்கிக்கொண்டு, பயத்தால் திகிலடைந்துபோயிருக்கும் நிலையைக் காட்டுவதாக இருந்தது.
இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவனால் பொறுக்க முடியவில்லை. அவன், தன் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்திறங்கி, திரையின் பக்கம் ஓடினான். சிங்க குட்டியைக் கூண்டில் அடைக்க இருந்த வேடனுடன் சண்டையிடுவதுபோல், தன் கை, கால்களை வேகமாக ஓங்கி வீசினான்.
அப்போது திரையில், மற்ற வன விலங்குகள்
எல்லாம் ஒன்றுசேர்ந்து வேடனை விரட்டி,
சிங்கக் குட்டியைக் காப்பாற்றுவதுபோன்ற
காட்சி வந்தது.
சிறுவன், தன் இருக்கைக்குத் திரும்பி,
தன் தாயிடம் பெருமையாகச்
சொன்னான்: "பாருங்கள், நான் முதலில்
சென்றதால்தான், எல்லா விலங்குகளும்
என்னைப் பின்தொடர்ந்து வந்தன. நாங்கள்
எல்லோருமாக அந்தச் சிங்கக் குட்டியைக்
காப்பாற்றினோம்."
காமத்தை விடுவது
என்பது ஒரு மனிதனுக்குக்
கடினமானது.
உடல் உணர்வுக்கப்பால்
சென்றுவிட்ட ஒருவரே
காமத்தைத் துறக்க முடியும்.
சிறுவன், சினிமாவை உண்மையென்று நினைத்ததுபோல், நாம், நம் புலன்கள் மூலம் கிரகிக்கப்பட்ட விஷயங்களை உண்மையென்று நம்புகிறோம். நாம், நம் புலன்கள் உருவாக்கிய மாயையில் சிக்கிக்கொள்கிறோம். நமக்குள் இருக்கும் காமம்தான் மிகவும் சக்தி வாய்ந்த மாயை.
ஆதி சங்கராச்சாரியார் பஜகோவிந்தத்தின் ஸ்லோகங்களில் சொல்கிறார்: நாரி ஸ்தன பர நாபி தேசம் த்ரு ஷ்ட்வா மா கா மோஹாவேசம் ஏதந் மாம்ஸ வசா'தி விகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்
பஜகோவிந்தம் வேதாந்தத்தின் சாரமாகவும் இறுதி ஞானமாகவும் கருதப்படுகிறது. இங்கு சங்கரர், 'பெண்களின் மார்பையும் நாபியையும் பார்ப்பதனால் மாயையின் தீவிரமான ஆசைகளைக் கடந்துவிட முடியாது; இவை வெறும் சதைப் பிண்டங்களே, விரைவில் அழுகக்கூடியதே என்று மீண்டும் மீண்டும் உணருங்கள்' என்கிறார்.
காமத்தை அடக்குவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பதும் ஒருவரை ஒருபோதும் ஜீவன்முக்தராக ஆக்குவதில்லை. அது ஒருவரைப் பைத்தியமாகத்தான் ஆக்கும்.
மனத்தின் கற்பனைகளை நீக்காமல், உடலால் மட்டும் ப்ாஹ்மசர்யத்தைக் கடைபிடிப்பது, உடலுறவில் ஈடுபடுவதைவிட, அதிகமான துக்கத்தை உருவாக்கும். ஞானம், ஒருவர் தம் புலன் உணர்ச்சிகளைக் கடப்பதற்கும், மனமற்ற நிலையை அடைவதற்கும் உதவுவதன்மூலம், காமத்தையும் பாலுறவையும் கடக்க உதவுகிறது.
காமத்தைத் தாண்டுவதே விழிப்புணர்வின் முதல்படி
ப்ாஹ்மசாரி என்ற ஸம்ஸ்க்ரு'த வார்த்தை, பல நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. தவறாக மொழிபெயர்க்கவும் படுகிறது. இந்த வார்த்தை, ப்ாஹ்மம் மற்றும் சர்ய என்னும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வருகிறது.
ப்ாஹ்ம என்பது இறுதியான மற்றும் உண்மையான ஸத்யம் என்று பொருள். சர்ய என்றால் பாதையைப் பின்பற்றிச் செல்லுதல் அல்லது பாதையில் நடத்தல் என்று பொருள். ஸத்யம் எனும் பாதையைப் பின்பற்றும் ஒருவரே ப்ாஹ்மசாரி.
ஞானம்,
ஒருவர் தம்
புலன் உணர்ச்சிகளைக்
கடப்பதற்கும்,
மனமற்ற நிலையை
அடைவதற்கும்
உதவுவதன் மூலம்,
காமத்தைக் கடக்க
உதவுகிறது.
ஆனால் பெரும்பாலும், இந்த வார்த்தைக்கு
'மணமாகாதவர்' என்ற பொருளே
கொடுக்கப்படுகிறது.
ஏனென்றால் வேத காலத்தில் ஒருவரின்
வாழ்க்கையின் முதல்நிலை ப்ாஹ்மசர்யமாக
இருந்தது; அக்காலத்தில் குழந்தைகளுக்கு
ஏழு வயது ஆகும்போது, பெற்றோர்கள்
அவர்களை ஆன்மிக குருவின் பொறுப்பில்
விட்டுவிடுவர். குழந்தையின் இயல்பான
ஆர்வத்த்தைப் (மனப்பாங்கை) பொறுத்து, அதற்கு எந்த வகையான கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதை குருதான் தீர்மானிப்பார்.
ஏழு வயதில், அவர்களுடைய மனத்தை நிலைநிறுத்துவதற்கும், உள்ளுலகை நோக்கிக் கவனத்தைத் திருப்புவதற்கும், காயத்ரி மந்த்ரம் கற்றுத்தரப்பட்டது.
விடலைப்பருவம் முடியும்வரை, குழந்தைகள் தங்கள் குருவுடன் இருப்பார். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சி, மற்றும் வளர்ப்பு முறையைப் பொறுத்து, அவர்கள் திருமணம் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள். அதனால் ப்ரம்மசர்யம் என்ற வார்த்தைக்கே ‘திருமணமாகாதவர்’ என்ற பொருளைக் கொடுத்து விட்டனர்.
இந்தக் குழந்தைகள், அவரவர்களின்
ஆர்வத்த்தைப் பொறுத்து வெவ்வேறு
பாடங்களைக் கற்றார்கள்.
ஆன்மிகத்தில் உறுதியான விருப்பத்தை
வெளிப்படுத்தியவர்களுக்கு, ச்ருதி,
வேதங்கள், உபநிஷதங்கள், ப்ரம்மஸூத்ரம்
போன்றவை கற்றுத்தரப்பட்டன.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு
இல்லாதவர்களுக்கு, இல்லறத்தில்
வாழ்வதற்கான பயிற்சியும் காமசூத்திரமும்
கற்றுத்தரப்பட்டது.
> ஸத்யம் எனும் பாதையைப்
> பின்பற்றும் ஒருவரே
> ப்ரம்மசாரி.
காமசூத்திரம், ஆண் பெண் உறவுக்கான ஒரு கையேடு அல்ல. இந்தப் புத்தகத்தின் ஆசிரியரான ஞானகுரு வாத்ஸ்யாயனருக்கு, இதை எழுதியபொழுது வயது பதினாறு தான்.
வாத்ஸ்யாயனர், தாம் ஞானமடைந்தவுடன் தம் அன்னையிடம் சென்று, தாம் ஞானமடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால் அவருடைய அன்னைக்கோ அவர் இன்னமும் சிறுகுழந்தைதான்.
தாய் கேட்டார், “நீ ஞானம் அடைந்துவிட்டதாக சொல்வதன் பொருள் என்ன?”
வாத்ஸ்யாயனர் சொன்னார், “இப்போது எனக்கு எல்லாம் தெரியும்!” அவரது தாய் குறுக்கிட்டு, "நீ ஒரு குழந்தைதான். உனக்கு எல்லாம் தெரியுமென்றால், காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் எனக்குச் சொல்வாயாக," என்று சொன்னார்.
வாத்ஸ்யாயனர், காதல், காமம் இந்த இரண்டிலுமே எந்தவித நேரடியான லௌகீக அனுபவமும் இல்லாமல், தம்முடைய தாய்க்கு இவற்றைப்பற்றிக் கற்பித்ததுதான் காமசூத்திரம்.
ஒரு ஜ்ஞானகுரு காமத்தைக் கடந்தவராகவும், பாலினத்தைக் கடந்தவராகவும், அர்த்தநாரீஸ்வரர் ஆகவும் அதாவது ஆண் - பெண் இருவருக்குமான இயல்புகளை ஒருங்கே வெளிப்படுத்துபவராகவும் இருக்கிறார். ஞானத்திற்கான ஒரு முக்கியமான இயல்பு, பாலினத்தைக் கடந்ந்திருப்பது தான்.
ஒரு ஜ்ஞானகுரு
காமத்தைக்
கடந்தவராகவும்,
ஆண் - பெண்
இருவருக்குமான
இயல்புகளை ஒருங்கே
வெளிப்படுத்துபவராகவும்
இருக்கிறார்.
கிருஷ்ணர் நேரடியானவர். அவர்
உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள
வேண்டும் என்பதற்காக, மனத்திற்கு
இனிய வார்த்தைகளை மட்டுமே தருவதில்
நம்பிக்கை இல்லாதவர். அவர் சொல்கிறார்,
'காமத்தை வென்றவர்'. அவர் நேரடியான
வார்த்தைகளைத் தருவதில் கண்டிப்பானவர்.
இன விருத்திக்காக இயற்கை கொடுத்த முதல் அடிப்படை உணர்வுதான் காமம். உயர் விழிப்புணர்வை உணர்வதற்கான முதல் முக்கியமான படியே காமத்தைக் கடப்பதும் அதை வெற்றிகொள்வதும் தான்.
மனிதர்களுக்கு எப்போதுமே காதலுக்கும் காமத்திற்கும் இடையில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்கள், மிருகங்கள் மட்டுமே காமம் நிறைந்தவை என்று நினைக்கிறார்கள். உண்மையில், விலங்குகள் மட்டுமே தம் துணையுடன் இணையும்போது தூய்மையான காமத்தில் இருக்கின்றன.
மனிதர்களால் மட்டுமே, அவர்களின் பகுத்தறிவின் காரணமாக, அவர்களால் முழுமையான காமத்திலும் இருக்க முடியாது, முழுமையான காதலிலும் இருக்க முடியாது. அதனால்தான், அவர்கள் திருப்தியில்லாத, நிறைவேற்றப்படாத, முழுமையடையாத பகுதியிலேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எப்போது ஒரு ആണும் பெண்ணும், நூறு சதவிகிதம் தூய்மையான காமத்தால் தூண்டப்பட்டு, தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார்களோ, அப்போது அவர்களுடைய இந்தக் காமம், காதலாக மாறுவதைக் காண்பார்கள். அதற்கு, அவர்கள் ஒருவருள் ஒருவர் மூழ்க வேண்டும். பின்பு இந்தச் செயலே, காதலை வெளிப்படுத்தும் ஒரு அனுபவமாக இருக்கும்.
பழங்காலத்தில், காதலும் காமமும் இல்லறவாசிகளைவிட்டு, கிட்டத்தட்ட அவர்களது நாற்பதாவது வயதில் உதிர்ந்துவிடும். ஏனென்றால் அவற்றை அவர்கள் முழுமையாக அனுபவித்திருப்பார்கள். ஒரு ஆசை முழுமையாக அனுபவிக்கப்படும்போது, அது உங்கள் அமைப்பை விட்டு உதிர்ந்துவிடும்.
திருமணத்தின்போது உச்சாடனம்
செய்யப்படும் மந்திரங்களின் பொருள்
உங்களுக்குத் தெரியுமா? இந்தக் காலத்தில்,
திருமணம் நடத்தும் அர்ச்சகர்களுக்கு
மட்டும்தான் அர்த்தம் தெரிகிறதேதவிர,
வேறு ஒருவருக்கும் தெரிவதில்லை.
> ஒரு ஆசை முழுமையாக
> அனுபவிக்கப்படும்போது,
> அது உங்கள் அமைப்பை
> விட்டு உதிர்ந்துவிடும்.
சப்தபதியில், அதாவது இந்து மத திருமண சம்பிரதாயங்களில், அக்னி சாட்சியாக, மணமகள் கழுத்தில் மணமகன் தாலியைக் கட்டிய பிறகு, தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்து ஏழு அடிகள் நடந்து, அந்த அக்னியை வலம்வருவார்கள்.
அப்போது தெய்விக மந்திரங்களை உச்சாடனம் செய்வார்கள். அதில் மனைவி கணவரிடம், "என் பதினோராவது மகனாகுங்கள்," என்று சொல்வார். கணவன் மனைவியிடம், "என் பதினோராவது மகளாகுங்கள்," என்று சொல்வார்.
இதன் பொருள், திருமணமான பதினோராவது வருடத்தில், அவர்களது நெருக்கம், ஒருவருக்கொருவர் குழந்தையாகும் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் காமசூத்திரத்தின்படி வாழ்ந்தால், நிச்சயமாக அங்கு ஆழமான நெருக்கம் இருக்கும்.
அங்கு அருமையான உறவு இருக்கும்.
இந்த வார்த்தைகள், கவிதைகள் அல்ல.
வாழ்வதற்கான வழிமுறைகள்.
இப்போது, திருமண உறவுகள்,
பாதுகாப்பிற்கான அல்லது பொருள்சார்ந்த
பயனுக்கான ஒரு வியாபாரமாக
ஆகிவிட்டன. நீங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து
வாழலாம். ஆனால் ஒரு குடும்பமாக
வாழவில்லை.
உங்கள் வாழ்க்கைத் துணையின் உடலைப் பற்றியும் உங்கள் உடலைப் பற்றியும் நீங்கள் கொண்டுள்ள கற்பனைகளையும் கனவுகளையும் உங்கள் காமத்திலிருந்து நீக்க வேண்டும்.
நம்மில் பலர், நம் உடலைப் பார்த்தே வெட்கப்படுகிறோம். நாம் அதை வெறுக்கிறோம். எல்லா உடல் வலிகளும் தீராத தோல் நோய்களும், நம் உடலைக் குறைத்து மதிப்பிடுவதினாலும் அவமரியாதை செய்வதினாலும்தான் ஏற்படுகின்றன.
காமம் அன்பாக மலர, நட்புடன் இருங்கள்
நாம், வேறொருவரைப் பார்த்து அவரைப்போன்று இருக்க வேண்டுமென விரும்புகிறோம். நாம் அவரைபோன்றே நம் உடலை வடிவமைப்பதற்கும், உடை அணிவதற்கும் விரும்புகிறோம். நம் சொந்த உடம்புக்குள் எல்லைகட்டி நிற்பதைவிட்டு, வேறொருவராக இருப்பதற்குக் கற்பனைசெய்கிறோம்.
நம் பெயரைக் கேட்ட மாத்திரத்தில், முதலில் நமக்கு நினைவுக்கு வருவது, நம் முகமே. முழு உடலும் நம் நினைவுக்கு வருவது இல்லை. ஏனென்றால், நாம் நம் உடலுடன் சௌகரியமாக உணரவில்லை.
நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல் யாரோ ஒருவரைப் பார்த்து அவரைப் பின்பற்றிணால், நாம் மிகச் சிறப்பான அழகுடன் இருக்கலாம். ஆனால் அது, ஒரு நேர்த்தியான அழகாகவோ வசீகரமிக்கதாகவோ இருக்கவே முடியாது. ஏனென்றால், நேர்த்தி, நம் உள்ளிருந்து வருவது. அடுத்த சில நாட்களுக்கு, குளித்த பிறகு, அன்புடன் உங்கள் உடலைக் கவனியுங்கள். உங்கள் உடலுடன் ஒரு சௌகரியத்தை உணருங்கள். நம் உடல் எந்த நேரமும் ஆனந்த ஊற்றாகவே இருக்கிறது. இருந்தும், நாம் வெறும் வலியைத்தான் உணர்கிறோம்.
நாம் நம் உடலுடன், தளர்வான மனநிலையில் அமர்ந்தோமானால், நம் மனம் அலைபாய்ந்து திரிவதில்லை.
பொதுவாக, நாம் வீட்டில் இருந்தால், நம் மனம் அலுவலகத்தில் இருக்கும். நாம் அலுவலகத்தில் வேலைசெய்யும்பொழுது, ஒரு விருந்தில் இருக்க வேண்டுமென விரும்பும். மொத்தத்தில் நம் உடல் எங்கு இருக்கிறதோ, அங்கு நம் மனம் இருப்பதில்லை.
அது மட்டுமல்லாமல், நாம் சொல்வதைச் செய்யும் வரை, நமக்குக் கீழ்ப்படியும்வரைதான், நாம் ஒரு நபரை விரும்புகிறோம். ஒரு தாய் சொல்கிறார், "என் மகள், எனக்கு விருப்பமில்லாத ஒருவரைத் திருமணம்செய்துகொள்வதற்கு முன்புவரை, நான் அவளை ஆழமாக விரும்பினேன்!"
அந்தத் தாய், தம்முடைய கருத்துக்கும் தனிப்பட்ட குணத்துக்கும் மறு உருவமாக மகள் இருக்கும்வரை, தம் மகளின் மீது அன்பை உணர்ந்தார். இதுதான் அன்பா? இது, உங்கள் அஹங்காரத்திற்கு நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது.
அன்பில் நட்புத்தன்மையைச் சேருங்கள். இப்போதைய நிலையில், நம் காதலும் காமமும் அடுத்தவரை சொந்தமாக்கிக்கொள்வதற்கும் அவர்கள் நம்மை எதிர்த்தால், அவர்களை வெற்றிகொள்வதற்குமான ஆழ்ந்த வன்முறையையே மூலமாகக் கொண்டுள்ளன. நம்முடைய காதலிலும் காமத்திலும் வன்முறையே வேரூன்றியுள்ளது. இது ஒரு போரே.
ஆனால் இதற்குமாறாக உறவுகளில்
நட்புணர்வைச் சேருங்கள். உங்கள்
வாழ்க்கைத்துணையை, அவர்
இருக்கிறபடி அப்படியே வரவேற்று
ஏற்றுக்கொள்ளுங்கள், அவரை வெறுமனே
ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவருடைய உடல்,

மனம் மற்றும் இருப்பு -என அனைத்துவகையிலும், உள்ளவாறே வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

நாம், நம் உடலுடனாவது சிநேகமாக
இருக்கிறோமா? அதுவும் இல்லை.
நாம் அப்படி இருப்பதில்லை.
ஆழ்ந்து கவனித்தோமென்றால்,
நாம் நம் உடலை அவமரியாதை
செய்வதையும், தவறான
முறையில் பயன்படுத்துவதையும்
புரிந்துகொள்ள முடியும்.
நம் கண்கள் தூக்கத்திற்காகக் கெஞ்சினாலும், நாம் நள்ளிரவுவரை தொலைக்காட்சியைக் காண்கிறோம்; வயிறு முழுமையாக நிரம்பியிருக்கும்போதுகூட, உணவை மேலும் திணித்துக்கொள்கிறோம். நம் நுரையீரல்கள் அலறினாலும்கூட, புகைபிடிக்கிறோம். நினைவற்றுப் போகும்வரை குடிக்கிறோம்.
நம் உடலை ஒரு குப்பைத்தொட்டிபோல நடத்துகிறோம். அசுத்தத்தின் நாற்றத்திலிருந்து தப்ப நினைத்து, அந்த அசுத்தத்திற்குள்ளேயே மூக்கை நுழைத்துக்கொள்ளும் பன்றிபோல நாம் இருக்கிறோம். எதை நாம் களிப்பென்று எண்ணுகிறோமோ, அதற்காக நம் உடலை சித்ரவதை செய்கிறோம்.
உலகளாவிய பயங்கரவாதத்தினால் நாம் கவலையடைந்திருக்கிறோம். ஆனால் நம் வீட்டிலும், நம் உடலுக்கும் எதிராக நாம் நடத்தும் வன்முறையை அலட்சியம்செய்கிறோம். பிறரைத் துன்புறுத்தி அதில் இன்பம் காண்பது மற்றும் நம்மையே துன்புறுத்தி அதில் இன்பம் காண்பதுபோன்ற நம்முடைய வக்ர குணங்கள் நம்மைக் கவலைகொள்ளச் செய்வதில்லை. ஆனால் பயங்கரவாதம் நம்மைக் கவலைகொள்ளச் செய்கிறது.
குற்றவுணர்ச்சியாலும்,
மற்றவர்களின் குறைகளைச்
சகித்துக்கொள்ள முடியாத நம்முடைய
உங்கள்
வாழ்க்கைத்துணையை,
அவருடைய உடல், மனம்
மற்றும் இருப்பு -என
அனைத்துவகையிலும்,
உள்ளவாறே வரவேற்று
ஏற்றுக்கொள்ளுங்கள்.
கடுமைத்தன்மையினாலும் நம்மை நாமே
சித்திரவதை செய்துகொள்கிறோம்.
இதுவும் வன்முறையே, சூட்சுமமான
வடிவிலிருக்கும் ஒரு பயங்கரவாதமே.
ஒருவர் ஒருமுறை என்னிடம் சொன்னார்,
"என் மனைவி ஒரு வக்கீல்." நான்
கேட்டேன், "ஓ அப்படியா, அவர்
நீதிமன்றமெல்லாம் செல்கிறாரா?"
அவர் சொன்னார், "இல்லை, அவர் வீட்டிலேயே வாதம் செய்கிறார்!"
உங்கள் வார்த்தைகளும்,
உங்கள் உடல்மொழியும்
மற்றவர்களைக்
குணப்படுத்துவதாக
இருக்கட்டும்.
எப்போதும்
நட்புத் தன்மையுடன்
இருங்கள்.
உங்கள் கற்பனையையும் கனவுகளையும் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கிய உறவு முறையில் அன்பைச் சேருங்கள். மற்றவர்களிடம்கொள்ளும் உறவுமுறையிலும் அன்பைச் சேருங்கள். அவர்களின் உடல், மனம் மற்றும் இருப்பு உட்பட அனைத்திலும் அன்பைச் சேருங்கள்!
உங்கள் வார்த்தைகளும், உங்கள் உடல்மொழியும் மற்றவர்களைக் குணப்படுத்துவதாக இருக்கட்டும். எப்போதும் நட்புத் தன்மையுடன் இருங்கள். இது ஒரு ஆன்மிக செயல்முறை. விரதங்கள் இருப்பதற்கும், பூஜைகள் செய்வதற்கும் பதிலாக, லக்ஷ்மியின் அருளையும் நல்லெண்ணத்தையும் உங்களோடு கொண்டுசெல்லுங்கள்.
முதன்மைறையாக நீங்கள் மற்றவர்களை சிநேக பாவத்துடன் அணுகும்பொழுது, அவர்கள் உங்களை ஏற்காமல் இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் இதற்கு முன் அவர்களிடம் காட்டிய அணுகுமுறை சற்று கடுமையாக இருந்திருக்கலாம். ஆனாலும் தளர்வடைந்துவிடாமல் முயற்சியைத் தொடருங்கள். அவர்கள் உங்களிடம் சரியான அணுகுமுறையைக் காட்டாவிட்டாலும், நீங்கள் நிறுத்ததாதீர்கள். அவர்களுக்கு உங்கள்மீது நம்பிக்கை ஏற்பட்டு, உங்களிடம் நட்புத்தன்மையை வெளிப்படுத்தும்வரை தொடருங்கள்.
உங்களுடைய மற்றும் மற்றவர்களுடைய உடல், மனம் மற்றும் இருப்பு குறித்த கற்பனைகளை விட்டுவிடுங்கள். உங்களோடும் மற்றவர்களோடும் விடாமல் தொடர்ந்து சிநேக பாவத்துடன் இருங்கள்; காமம் அன்பாக மாறும், உங்கள் இருப்பு, எப்போதும் நித்ய ஆனந்தத்தில் இருக்கும்!
மரணச் சமீப அனுபவங்கள்
கிருஷ்ணர் சொல்கிறார், "அந்த நிலையான மேலான விழிப்புணர்வு வெளி, அதாவது என்னுடைய விழிப்புணர்வு நிலை சூரியனாலோ, சந்திரனாலோ அல்லது நெருப்பினாலோ பிரகாசிக்கப்படுவதில்லை. அந்த வெளியில் நுழைபவர்கள் எவரும் மீண்டும் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை."
இச்சொற்கள் அறிவுரைகள் அல்ல. அவை ஆழ்ந்து சிந்திப்பதற்கானவை. எல்லோரும் கொடுக்கத் தயாராய் இருப்பது, ஆனால் ஒருவரும் எடுத்துக்கொள்ள விரும்பாதது, அறிவுரையே!
கிருஷ்ணர், நம் காரண சரீரத்தைச் சீரமைப்பதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்கிறார். இந்த வார்த்தைகள், சிந்திப்பதற்கும் தியானிப்பதற்கும் உரியவை.
நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில், பங்கேற்பாளர்கள் காரண சரீரத்தின் மீது வேலைசெய்யும்பொழுது, இருள்மீது த்யானம் செய்வதற்கு வழிநடத்தப்படுகிறார்கள். இந்த இருள், ஒளியின்மை அல்ல, அது ஒரு சக்தி.
ஆத்மா, இந்தப் பொருள்சார்ந்த உலகைவிட்டுச் செல்லும்போது, காரண சரீரத்தின் சக்திப் பாதை மூலமாகத்தான், தன் இறுதி அடியை எடுத்துவைக்கிறது. ஆத்மா இந்தக் காரண சரீரப் பாதையிலேயே மாட்டிக்கொள்ளும்போது, ஒருவர் கோமா நிலையில் விழுகிறார். ஒருவர் இந்த அடுக்கிலேயேகூட, தடுதல் ஏற்பட்டு நீண்டகாலம் தங்கிவிடக்கூடும்.
> “என்னுடைய விழிப்புணர்வு
> நிலை சூரியனாலோ,
> சந்திரனாலோ அல்லது
> நெருப்பினாலோ
> பிரகாசிக்கப்படுவதில்லை.
> அந்த வெளியில்
> நுழைபவர்கள் மீண்டும்
> இந்த உலகிற்குத்
> திரும்புவதில்லை.”
> - ஸ்ரீகிருஷ்ணர்.
மரணத்தின்போது ஏற்படக்கூடிய வலியை ஸ்தூல சரீரத்தால் தாங்க முடியாதபோது, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ‘கோமா’ நிலைக்குச் சென்றுவிடுகிறது. அந்த நபர் கோமாவில் இருக்கும்வரை, ஆன்மா காரண சரீரத்திலேயே இருக்கும். அது, எப்போது வேண்டுமானாலும் காரண சரீரத்திலிருந்து மீண்டும் ஸ்தூல சரீரத்திற்குத் திரும்பிவர முடியும். அதனால்தான், பல வருடங்களாகக் கோமாவில் இருந்த பலரும் மீண்டும் உணர்வுபெற்று எழுந்ததையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லா மரணச் சமீப அனுபவங்களுமே (Near-Death-Experiences) காரண சரீரத்தின் சக்திவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர்களுடையதே!
ஆத்மா, திரும்பி வரமுடியாத பகுதிக்குச் செல்லும்முன், அதாவது காரண சரீரத்தைக் கடந்து ஆன்ம சரீரத்தை அடையும்முன், பல்வேறு காரணங்களுக்காக, தான் விட்டுச்சென்ற உடலுக்கு மீண்டும் திரும்பிவிடுகிறது. இப்பயணம் கோமாவைப்போல் ஒரு நீண்ட பயணம் அல்ல, இது ஒரு துரிதப் பயணம்!
சக்திவாய்ந்த இருள் அடுக்கான காரண சரீரத்தில், சூரியனோ சந்திரனோ நெருப்போ பிரகாசிப்பதில்லை. இந்த சரீரத்தைக் கடந்தவர்கள், ஆன்ம சரீரத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். அதன்பின், உண்மையான விடுதலையைக் குறிக்கும் நிர்வாண சரீரத்தை அடைகிறார்கள்.
நம்முடைய சில த்யான நிகழ்ச்சிகளில், ஆசிரியர்கள் கற்றுத்தரும் இருள் தியானம் மூலம், ஒருவர், கிருஷ்ணர் விவரிக்கும் இந்த ஸத்யத்தின் மீது, இந்த நுட்பத்தின் மீது தியானிக்க முடியும்.
இருள் தியானம்,
மரணபயத்திலிருந்தும்,
அடையாளம்
பறிபோவதைப் பற்றிய
பயத்திலிருந்தும்
ஒருவரை விடுவித்துவிடும்.
இந்த இருள் தியானம், ஒருவரை மரணபயத்திலிருந்தும், அடையாளம் பறிபோவதைப் பற்றிய பயத்திலிருந்தும் விடுவித்துவிடும். ‘நம்முடைய அடையாளம் பறிபோய்விடுமோ’ என்ற பயமே மரணபயத்திற்கு காரணமாக இருக்கிறது.
உடலின் மரணம், அது நம்முடைய விருப்பத் தேர்வு அல்ல. அது நிச்சயிக்கப்பட்ட ஒன்று! உடல் - மனத்திலிருந்து ஆன்மா பிரிந்துசெல்வது என்பது வேதனை நிறைந்தது.
விவேகானந்தர், ‘அந்த வேதனை, ஆயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவதைப் போன்றதொரு வலியைத் தரக்கூடியது’ என்கிறார்.
மரணத்தின்போது ஆன்மா இந்த உடல் கூட்டை விட்டு விட்டு, ஆதி அந்தமில்லா சக்தியில் ஒன்றுசேர்கிறது. பிறகு அது வேறொரு கூட்டில், வேறொரு உடலில் மீண்டும் தோன்றுகிறது. முன்பே கூறியதுபோல், இது, ஒரு வெள்ளைப் பலகையில் வட்டங்கள் வரைவதுபோன்றதே. பின்புலத்தில் இருப்பது பிரபஞ்ச சக்தி. அதில் வரையப்பட்ட வட்டங்களின் வெளிக்கோடுகள்தான் தனித்தனி ஆன்மாவைச் சுமந்துகொண்டிருக்கும் உடல்கள். இந்த வெளிக்கோடுகள்தான், தனி ஆன்மாவை, சுயத்தை அந்தப் பிரபஞ்ச சக்தியிலிருந்து, ப்ரஹ்மத்திலிருந்து பிரிக்கின்றன.
> உடலின் மரணம்,
> அது நம்முடைய
> விருப்பத் தேர்வு அல்ல.
> அது நிச்சயக்கப்பட்ட ஒன்று!
நாம் இந்த வட்டங்களை அழிக்கும்பொழுது, வட்டத்திற்குள் இருக்கும் வெண்மை, பின்புலத்தில் இருக்கும் வெண்மையுடன் கலக்கிறது. தனி மனித இருப்பு, பிரபஞ்ச இருப்போடு ஒன்றுசேர்கிறது; சுயம் ப்ரஹ்மத்தோடு இணைக்கிறது.
ஆன்மா, பற்று மற்றும் காமத்தைக் கடந்து, பிரபஞ்ச இருப்பின் மீது உணர்வுகளை ஒன்றாக்கும்பொழுது, அது இன்னொரு சிக்கலான உடல் - மன அமைப்புக்குள் திரும்பிவர வேண்டியிருப்பதில்லை. அப்படியில்லையென்றால், அது மீண்டும், இந்த உடல் - மனம் என்னும் சிக்கலான அமைப்புக்குள் வர வேண்டியிருக்கிறது.
உடல் மரணம் அடைவது நிச்சயம். ஆனால் ஆன்மாவின் மரணம் சாத்தியமில்லாதது. ஆன்மா வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆன்மா உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, மலரும்பொழுது, அது மீண்டும், முற்பிறவியில் கடந்துசென்ற மன அமைப்பிற்குத் திரும்பாது என்பதைக் கிருஷ்ணர் சுட்டிக்காட்டுகிறார்.
உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும் மரணச் சமீப அனுபவம்
கேள்வி : மரணச் சமீப அனுபவம் (Near Death Experience) ஞானத்திற்கு வழிகோலுமா?
மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு, மீண்டும்வரும் அனுபவங்கள், மேலான ஆன்மிக அனுபவங்கள்தான். ஆனால், அவை ஞான அனுபவங்கள் அல்ல. நீங்கள் ஞானம் அடைவதற்கு இறக்கவோ அல்லது இறப்பிற்கு அருகில் செல்லவோ தேவையில்லை! மாறாக, நீங்கள் ஞானம் அடையும்பொழுது, நீங்கள் உங்கள் பழைய அடையாளத்தை இழந்துவிடுவதால், வேறுவகையில் இறப்பீர்கள்.
பலருக்கு அத்தகைய சக்திவாய்ந்த மரணச் சமீப அனுபவம் நிகழ்ந்திருக்கின்றன. அது மிகவும் வித்தியாசமாகவும், அவர்களின் தர்க்க அறிவிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஏனென்றால், அது அவர்களை ஒரு உணர்வுமாற்றத்திற்குள் எடுத்துச்செல்கிறது. இந்த உணர்வுமாற்றம், அவர்களுடைய சிந்தனை முறையிலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான மரணச் சமீப அனுபவங்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த அனுபவத்தை அடைந்த மக்கள், அவர்கள் உடலிலிருந்து விலகி மிதந்துசென்றதாகச் சொல்கிறார்கள். அவர்கள், தாங்கள் இறப்பதை தாங்களே பார்க்கிறார்கள்; அறுவைசிகிச்சை அறையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செயல்களைப் பார்க்கிறார்கள், பேச்சுக்களைக் கேட்கிறார்கள்.ாதாரணமாக ஒருவர் அறுவைசிகிச்சைக்கான படுக்கையில் படுத்துக்கொண்டு பார்க்க முடியாதவற்றைக்கூட, அவர்கள் பார்க்கிறார்கள்.
அவர்கள் ஒரு இருண்ட வெளியைக் கடந்துசென்று, அதன் இறுதியில் வெளிச்சத்தைக் காண்கிறார்கள். அந்த வெளிச்சம் இதமாக இருக்கிறது. அவர்கள் பயத்தை அனுபவிக்கவில்லை, அமைதியை அனுபவிக்கிறார்கள். இதுவே, அவர்கள் எல்லோருக்குமான ஒரு பொதுவான அனுபவமாக இருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, அவர்கள் மருத்துவ ரீதியாக
பயிற்சிபெற்றவர்களாக இருந்தால்,
அவர்கள் உடல் - மன இயக்கம் மெல்ல
மெல்ல செயலிழப்பதைப் பார்க்கின்றனர்.
அவர்களால் உதவிகேட்க முடிந்தால், உதவி
கேட்கலாம். ஆனால், அது எந்தவிதமான
பயத்தினாலும் அல்ல. அவர்கள்,
இருண்ட குகையின் இறுதியில் எது
இருந்தாலும், அதை நோக்கி மகிழ்ச்சியுடன்
நகரத் தயாராக இருக்கிறார்கள்.
> ஆன்மா, உயர் விழிப்புணர்வு நிலைகளுக்கு உயரும்பொழுது, அது மீண்டும், முற்பிறவியில் கடந்துசென்ற மன அமைப்பிற்குத் திரும்புவதில்லை! அவரவர்கள் கலாச்சார, மத நம்பிக்கையைப் பொறுத்து, சில உருவங்கள் காட்சியளித்து, கையசைத்து அவர்களைத் திரும்பிப்போகும்படி சொல்கின்றன; அல்லது அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பின்பு அவர்கள் உடலுக்குத் திரும்பிவந்துவிட்டதாக உணர்ந்து, விழித்துக்கொள்கிறார்கள்.
மக்கள், மரணச் சமீப அனுபவத்தைப் பெறும்பொழுது, தங்கள் மரணபயத்தை விட்டுவிடுகிறார்கள். அப்போது அவர்கள் எத்தகைய அனுபவத்தை அடைந்திருந்தாலும், அந்த அனுபவம் தரும் உணர்வுமாற்றம் இதுவே: இந்த வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது, அது, இந்தப் பொருள்சார்ந்த நன்மைகளைவிட உயர்வானது, மேலானது என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தருகிறது.
ஞானம்,
உங்களின்
இயற்கை நிலை.
நாம் உடலாலும் மனதாலும்
கட்டுப்பட்டவர்கள் அல்ல; நாம்
அனைவருமே உடல், மனத்தைத்
தாண்டிய நிலையில் ஒருவருக்கொருவர்
நெருங்கிய தொடர்புடையவர்களே என்ற
விழிப்புணர்வை வளர்க்கிறது.
பலர், புனர்ஜென்மம், மறுபிறவி இவற்றை நம்ப ஆரம்பிக்கிறார்கள். அதிக பொறுமையை வளர்த்துக்கொள்கிறார்கள், உறவுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மகோன்னத இருப்பான கடவுளின் மீது அதிக நம்பிக்கை வளர்த்துக்கொள்கிறார்கள்.
நம்முடைய த்யானந்த ஸ்பூரண த்யான முகாமில், இந்த மரண அனுபவத்தைப் போன்ற ஒரு த்யானத்தை பங்கேற்பாளர்களைச் செய்யவைக்கிறோம். நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத மரண சமீப அனுபவத்தைப் பெற்றால்தான், மரணபயத்தைக் கடக்க முடியும் என்று சொல்லமுடியாது; பாதுகாப்பான கட்டுப்பாடான சூழ்நிலையில் செய்யப்படும் இந்த த்யானத்தின் மூலமே மரணபயத்தை ஒருவர் விட்டுவிட முடியும்.
பங்கேற்பாளர்கள், தங்கள் அடையாளம் கரையும் அனுபவத்திற்குள்ளும் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்க்கை என்றாலே உடைமைகளையும் செல்வத்தையும் சேர்ப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அவர்களுடைய வாழ்க்கையில் அடைவதற்கு இவற்றைவிட மேலான ஏதோ ஒன்றும் இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். தாங்கள் யார் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும்கூட கண்டறிகிறார்கள்.
ஞானம், உங்களின் இயற்கை நிலை. உண்மையில் நீங்கள் யார் என்பதை உணரும்பொழுது, நீங்கள் ஞானம் அடைகிறீர்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மரணச் சமீப அனுபவம் ஒருவருக்கு அவருடைய இருப்பை உணரவைத்து, அதன் மூலம் ஞானத்திற்கு வழிகாட்ட முடியும்.
