KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/கட்டுறு மனப்பாங்குSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

கட்டுறு மனப்பாங்கு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

கட்டுறு மனப்பாங்குடைய இந்த லௌகீக உலகில் வாழும்
உயிரினங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே.
ப்ரக்ருதி-செயல்பாட்டுச் சக்தியில் வசிக்கும் மனம் உட்பட ஆறு
புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன.

மலரிலுள்ள நறுமணத்தைக் காற்று எடுத்துச்செல்வதுபோல்,
இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா,
ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது,
இவற்றை (ஆறு புலன்கள்) எடுத்துச்செல்கிறது.

உங்கள் மதிப்பைத் தீர்மானிப்பது எது?

கிருஷ்ணர் ‘கட்டுறு மனப்பாங்கு’ என்னும் புதிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

அண்மைக் காலத்திய ஆராய்ச்சி, மனிதர்கள் இரண்டு கால்களால் நடப்பதேகூட கட்டுறு மனப்பாங்கினால்தான் என்று தெரிவிக்கிறது.

சமீபத்தில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு காட்டிற்குச் சென்றபொழுது, அங்கு ஓநாய்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ஒரு பதினேழு வயது வாலிபனைக் காணநேர்ந்தது. அவனைத் தங்களுடன் அழைத்து வந்த அவ்விஞ்ஞானிகள் அவனுக்கு இரண்டு கால்களில் நடப்பதற்கும், சில வார்த்தைகளைப் பேசுவதற்கும் கற்றுத்தர முயன்றார்கள். அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை, அவன் ஒரு வருடத்திற்குள் இறந்து விட்டான்.

மனிதன், தன் கட்டுறு மனப்பாங்கினால்தான் இரண்டு கால்களால் நடக்கிறான். மனிதனின் இயல்பு என்று நாம் நினைப்பவையெல்லாம் கட்டுறு மனப்பாங்கைத் தவிர, வேறொன்றுமில்லை.

ஜென் புத்த மதத்தில், கட்டுறு மனப்பாங்கை நீக்குவதற்கு ஒரு அழகான நுட்பம் இருக்கிறது.

சாதகன், ஒரு இருபத்தொரு நாட்களுக்குத் தொடர்ந்து ஒரு தனிஅறையில் இருக்க வேண்டும். அவன் உணவருந்தலாம், தூங்கலாம். ஆனால், அவன் இதுவரை பார்த்தது, கேட்டது அனைத்தையும் தன் மனத்திலிருந்து தூக்கியெறிந்துவிட வேண்டும். இப்படிச்செய்யும் பட்சத்தில், இருபத்தொரு நாட்களுக்குள் அவர் ஞானமடைந்திருப்பார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இது ஒரு கடுமையான வேலை. இத்தகைய
நிலையில் இருபத்தொரு நிமிடங்கள்
இருப்பதுகூட ஒரு கடினமான வேலைதான்!

இங்கே கிருஷ்ணர் ‘கட்டுறுத்தப்பட்ட
உலகம்’ என்று சொல்கிறார், எல்லாமே
கட்டுறுத்தப்பட்டவைதான்.

மனிதனின் இயல்பு
என்று நாம்
நினைப்பவையெல்லாம்
கட்டுறு மனப்பாங்கைத்
தவிர, வேறொன்றுமில்லை.

சரி - தவறு, மரியாதை - அவமரியாதை என எல்லாமே கட்டுறு மனப்பாங்குதான். நாம், மரியாதை மற்றும் அவமரியாதை என்று நினைப்பதுகூட, அப்படி நினைக்கக் கற்றுத்தரப்பட்டதால் அவ்வாறு நினைக்கிறோம்.

நாம் பல வகைகளில் கட்டுறுத்தப் பட்டவர்களாக இருக்கிறோம். ஒரு பிரிவு மக்கள் கூட்டமாகச் சேர்ந்து, நமக்குச் சான்றிதழ் அளித்து, கைகளைத் தட்டினால், அதை நாம் மரியாதை என்று எடுத்துக்கொள்கிறோம். அப்படித்தான் நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது.

ஆனால், ஒருபோதும் அடுத்தவரின் கைதட்டல்களை வைத்து உங்களை எடைபோடாதீர்கள். இந்த அங்கீகார ஏக்கம், பலரைப் பைத்தியமாக மாற்றியுள்ளது. கூட்டத்தின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

ஒரு சின்ன கதை

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பத்திரிகையாளர் ஒருவர் சர்ச்சிலிடம், "இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து, நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டார்.

சர்ச்சில் உடனே சொன்ன பதில்: "ஒருபோதும் கூட்டத்தைவைத்து என் முக்கியத்துவத்தை எடைபோடாதீர்கள். இன்று பத்தாயிரம் மக்கள் இருக்கிறார்கள். நாளையே என்னைப் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்போவதாக நீங்கள் அறிவித்தால், அங்கு ஒரு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். அது பார்க்கவேண்டிய ஒருகாட்சி!"

சரி - தவறு, மரியாதை - அவமரியாதை என்பதையெல்லாம் கூட்டத்தின் அளவு முடிவுசெய்ய முடியாது. உங்களின் ஒருங்கிணைத்தல், ச்ரத்தை, ஆழமான சுய - விழிப்புணர்வு இவையே உங்களின் மதிப்பைத் தீர்மானிக்கும்.

தத்த்வமஸி - அதுவே நீ ஆகிறாய்

கிருஷ்ணர், உங்கள் காரண சரீரத்தை அதாவது உங்கள் ஸம்ஸ்காரத்தை மாற்றி வடிவமைக்கும் த்யான மந்திரத்தை வழங்குகிறார்.

மற்றொரு ஒரு சின்ன கதை

ஒரு சுஃபி ஞானி, ஒரு மன்னரிடம் தமக்கான ஒருவேளை உணவைப் பிச்சையாகக் கேட்டார். மன்னன் அவரிடம், "இங்கு யாருக்குமே உன்னைத் தெரியாது," என்று கத்தினார்.

அந்த ஞானி சிரித்துக்கொண்டே, "ஆம் நான் ஒப்புக்கொள்கிறேன். இங்கு இருக்கும் யாருக்குமே என்னைத் தெரியாது. இருப்பினும் என்னை எனக்குத் தெரியும். ஆனால் உங்களைப்பொறுத்த விஷயத்தில், எல்லோருக்குமே உங்களைத் தெரியும். ஆனால், உங்களுக்கு உங்களைத் தெரியாது!" என்றார்.

தன்னைத் தானே தெரிந்துகொள்ளாதவரே, மற்றவர்கள் தம்மைத் தெரிந்துகொள்வதைப் பற்றிக் கவலைப்படுவார்.

காரண சரீரதைத் தாண்டியபிறகு, கட்டுறு மனப்பாங்கிலிருந்து விடுபட்ட ஒரு வெளிக்குள் நுழைவீர்கள். அங்கு நீங்கள் எல்லாக் கட்டுறுமனப்பாங்குகளிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள்!

கிருஷ்ணர் சொல்கிறார், "அவர்கள் மனம் உட்பட ஆறு புலன்களால் கவரப்பட்டிருக்கிறார்கள்."

ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களுடன் சேர்த்து ஆறாவதாக மனத்தையும் சேர்த்து, ஆறு புலன்கள் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். என்றாலும் என்னைப் பொறுத்தவரை, மனம் ஒன்றுதான் புலன். புலன்கள் என்று சொல்லப்படும் மற்ற ஐந்து புலன்களும் அதன் அடிமைகளே!

மனம் இங்கும் அங்குமாகத் தாவிக்கொண்டே இருக்கும். மனத்தைக் கையாள முடிந்தால் மற்ற ஐந்து புலன்களையும் கையாள முடியும்.

ஒரு சின்ன கதை :

ராணி மாதலஸா, ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் ஏழு வயதையடையும்போது ஞானமடைந்து, இராஜ்ஜியத்தைவிட்டுச் சென்றுவிடுகிறது!

இதைக் கண்ட மன்னர் ஆச்சரியமடைந்தார். எப்படி வரிசையாக ஏழு குழந்தைகளும் ஞானமடைந்தன என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

நடந்தது என்ன என்று விஷயத்தை ஆராய்ந்துபார்த்ததில், மாதலஸா தத்த்வமஸி (அதுவே நீ ஆகிறாய்) என்ற வார்த்தையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டார்.

தத்த்வமஸி என்ற வார்த்தையை வெறுமனே உள்வாங்குவதன் மூலமே, நம் மன அமைப்பு மாறிவிடும்.

தத்த்வமஸி என்ற வார்த்தையை வெறுமனே உள்வாங்கியதன் மூலமே, அவர்களின் மன அமைப்பு மாறியிருந்தது. அவர்களின் காரண சரீரத்திலிருந்த ஸம்ஸ்காரங்கள் நீங்கின. அவர்கள் ஞானிகளானார்கள்.

ஞானம் அடைதல் என்பது ஸம்ஸ்காரங்களை நீக்குவது. நம்முள் ஆழப்பதிந்துள்ள பதிவுகளை நீக்குவது மற்றும் கட்டுறுமனப்பாங்கைக் கரைப்பது. நாம் நம்முடைய உண்மையான தூய்மையான நிலைக்குத் திரும்புகிறோம். இதனால்தான் ஞான நிலையை ஸமாதி என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். ஸமாதி என்பதற்கு ‘பூர்வீக நிலைக்குத் திரும்புதல்’ என்று பொருள்.

பாவம் தொடர்வதில்லை மனப்பான்மையே தொடர்கிறது

காற்று மணத்தை எடுத்துச்செல்வதுபோல், உடல் - மனத்தைத் தாங்கி இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழும் ஆன்மா, ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, இந்த ஸம்ஸ்காரங்களையும் தன்கூடவே எடுத்துச்செல்கிறது.

ஒரு உடலில் இருக்கும் ஸம்ஸ்காரங்கள் அந்த உடலை விட்டுச் சென்றவுடன், வேறொரு உடலில் தஞ்சமடைகிறது. கிருஷ்ணர், இவ்விதம் தொடர்ந்து நடக்கும் ஸம்ஸ்காரங்களின் விஷச் சுழற்சியை ஸம்ஸாரம் என்று குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணர், ‘இவற்றை எடுத்துக்கொண்டு’ என்று சொல்கிறார். ‘இவற்றை’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார்? முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணர், மனத்தையும் சேர்த்து ஆறு புலன்களைப் பற்றிப் பேசினார். அதைத்தான் இங்குக் குறிப்பிடுகிறார்.

> காற்றானது நறுமணத்தை
> எடுத்துச்செல்வதுபோல்,
> ஆன்மா ஒரு உடலைவிட்டு
> வேறொரு உடலுக்குச்
> செல்லும்பொழுது,
> ஸம்ஸ்காரங்களை
> எடுத்துச்செல்கிறது.

காற்றானது நறுமணத்தை எடுத்துச்செல்வதுபோல், ஆன்மா ஒரு உடலைவிட்டு வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, ஐந்து புலன்களுடன் ஆறாவதாக மனத்தையும் சேர்த்து எடுத்துச்செல்கிறது.

காற்று எப்படி நறுமணத்தை எடுத்துச்செல்கிறதோ அதேபோல், விழிப்புணர்வுநிலை மனப்பாங்குகளை, அதாவது ஆன்மா ஸம்ஸ்காரங்களை, ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு எடுத்துச்செல்கிறது.

கிருஷ்ணர், மக்கள் அடிக்கடி கேட்கும், “ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்கு ஒருவருடைய பாவங்கள் பின்தொடர்ந்து வருகின்றனவா,” என்ற பாவங்களைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கிறார். பாவங்கள் ஒருபோதும் நம்மைத் தொடர்வதில்லை. அதன் பதிவுகள்தான் நம்மோடு பயணிக்கின்றன.

உதாரணமாக, ஒரு மனிதர் நூறு கொலைகள் செய்கிறார் என்றால், அந்த எண்ணிக்கை தொடராது, ஆனால் அந்த வன்முறை என்ற அடிப்படை மன அமைப்பு அவரைத் தொடரும். வெறும் அந்த மன அமைப்புத்தான் எடுத்துச்செல்லப்படுகிறது. அது அவரைத் தொந்தரவு செய்யும்.

கர்மா என்னும் கருத்து, பல நேரங்களில், நம்முடைய எதிர்மறை செயல்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு முகமூடியே. ‘இது நம் கர்மா’; ‘இது நம் விதி’, ‘இது நம் தலையெழுத்து, நாம் என்ன செய்ய முடியும்?’, ‘என்ன நடக்க வேண்டும் என்று இருந்ததோ, அதுவே நடந்தது’ என்று சொல்லியே, நம்முடைய எதிர்மறை செயல்களை நியாயப்படுத்துகிறோம். இது வெறும் கற்பனையே.

விதியா? விருப்பமா?

ஒரு செயலைத் தீர்மானிப்பதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் நமக்குச் சுதந்திரம் இருக்கிறது. மாறாக ஞானகுருவிற்குத்தான் அச்சுதந்திரம் இருப்பதில்லை!

ஞானகுருமார்கள், பராசக்தியின் விருப்பப்படி வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் அவளால் வழிநடத்தப்படுகிறார்கள். அந்தப் பிரபஞ்ச சக்தி, அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறதோ, அதைச் செய்ய வழிநடத்துகிறது. புரிந்துகொள்ளுங்கள், ஒரு அடியைக்கூட நான் சுயமாக எடுத்து வைக்க முடியாது. என்னுடைய கை கால்கள்கூட அவளின் விருப்பப்படியேதான் அசையும்.

ஒரு சாதாரண மனிதர், அவருடைய விதியின் கட்டுப்பாட்டில் இருப்பார். நம் வாழ்வில், இயற்கை நமக்குப்பல பாதைகளை வழங்குகிறது, நம்முள் பல பாதைகளைத் திறந்துவைக்கிறது. எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். நாம்தான் நம் பாதையைத் தீர்மானிக்கிறோம்.

நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை, நம் ஆன்மா சுமந்துவரும் வாஸனாவே தீர்மானிக்கிறது. இது, நம் கடந்தகால செயல்களின் நுட்பமான பதிவுகளான ஸம்ஸ்காரங்களும் கர்மங்களும் ஆகும்.

அந்த வாஸனாவை, துர்நாற்றமாகவோ அல்லது அருமையான ஒரு நறுமணமாகவோ மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அது நம் கையில்தான் இருக்கிறது. அது வரையறுக்கப்பட்டதோ அல்லது முன்பே தீர்மானிக்கப்பட்டதோ அல்ல.

நாம் அதே ராட்டினத்தில் சுற்றிச் சுற்றிப் பயணிக்க விரும்புகிறோமோ அல்லது அதை உடைத்து வெளியேவந்து சுதந்திரமாக நடக்க முடிவுசெய்கிறோமோ என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார். அதாவது நாம் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்வதுபோல், ஆன்மா ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்கிறது. அவர் தம் ஸ்தூல

> வாஸனாவை,
> துர்நாற்றமாகவோ
> அல்லது அருமையான
> ஒரு நறுமணமாகவோ
> மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு
> நமக்கு இருக்கிறது.

உடலைவிட்டுச்சென்றபோது, அவர் மனைவி அன்னை சாரதாதேவியார் தம் நகைகளைக் கழற்றவிருந்தார்.

சாரதாதேவியார் அவரது மங்கள நாணைக் கழற்றமுற்படும்பொழுது, இராமகிருஷ்ணர் அவர் முன் தோன்றி, “நான் எங்கே சென்று விட்டேன்? இன்னொரு அறைக்குத்தானே சென்றிருக்கிறேன். அதனால், நகைகளைக் கழற்றாதே,” என்று சொன்னார்.

அப்போது முதல், தம்முடைய இறுதிக்காலம்வரை, அன்னையார் அவரின் அந்த வார்த்தைகளைப் பின்பற்றினார். இன்றைய காலகட்டத்தில் இது சுலபமாகத் தெரியலாம். ஆனால், அந்தக்காலத்தில், பழைமையில் ஊறிப்போயிருக்கும் ஒரு வைதீகக் குடும்பத்தில், அதுவும் ஒரு கிராமத்தில் இப்படிச் செய்வது மிகவும் கஷ்டமானதொரு செயல். ஆனால் அன்னை சாரதாதேவி மிகவும் தைரியமானவர்.

Quote box

எல்லாச் சமூகக் கட்டுறு
மனப்பாங்குகளையும், காரண சரீரத்தில்
பதித்திருக்கும் ஸம்ஸ்காரங்களையும்
விட்டுவிட்ட ஒருவர், ஒரு அறையில் இருந்து
இன்னொரு அறைக்குச் செல்வதுபோல,
ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு
எளிதாகச் செல்கிறார்.

நாம் பெரிய வீடுகளைக் கட்டிக்கொள்கிறோம், வங்கியில் பணமும் நிறைய சேர்த்துவைத்துக் கொள்கிறோம், நிறைய நண்பர்களையும் சம்பாதித்துக் கொள்கிறோம், இறுதியில் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கும் நேரத்தில், திடீரென்று மரணம் நம் முன்னால் வந்து நிற்கிறது. நாம் மரணத்தைக்கண்டு பயப்படுவதற்குக் காரணம், அது நம்மிடம் உள்ள அனைத்தையும் பறித்துக்கொள்கிறது என்பதற்காகத்தான்.

நாம் எதிலும் பற்றின்றி இருக்கும்போது, காரண சரீரத்தை ஸம்ஸ்காரங்களால் நிறைத்துக்கொள்ளாதபோது, சமூகத்தின் கட்டுறுமனப்பாங்கில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும்போது, நாம் மரணத்தைக்கண்டு பயப்பட மாட்டோம். அது ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்குப் போவதைப் போன்றதே என்பதைப் புரிந்துகொண்டிருப்போம். கிருஷ்ணர் வேறு ஒரு இடத்தில் இதைப்பற்றிச் சொல்லும்பொழுது, 'ஒரு உடையிலிருந்து மற்றொரு உடைக்கு மாறுவதுபோல்' என்கிறார்.

நீங்கள் இங்கு எதேச்சையாக வரவில்லை

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடிக்கடி சொல்லும் ஒரு கதை :

தந்த்ர சாஸ்த்ரத்தை ஆழமாகப் பயிற்சிசெய்துகொண்டிருந்த ஒரு ஆன்மிக சாதகர், பிரபஞ்சத் தாயை வணங்குவதற்காக காட்டிற்குச் சென்றார். சடங்குகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரித்துக்கொண்டு, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது, அங்கு வந்த புலி ஒன்று அவரைக் கொன்றுவிட்டது. அப்போது அந்த வழியே சென்றுகொண்டிருந்த ஒரு வழிப்போக்கர் இதைப்பார்த்து விட்டு, தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார்.

பின் அந்தப் புலி அங்கிருந்து சென்றவுடன், அவர் கீழே இறங்கினார். அப்பொழுது அவர் மனத்தில் தோன்றிய ஒரு சிறு ஆர்வத்தின் காரணமாக, அந்தப் பிணத்தின் அருகே அமர்ந்து, பிரார்த்திக்க ஆரம்பித்தார். அப்போது திடீரென பிரபஞ்ச அன்னை அவர் முன்னே தோன்றி, அவரிடம், “நீ செய்த பிரார்த்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்,” என்றார்.

இதக்கேட்டு ஆச்சரியமடைந்த அந்த மனிதர், “அம்மா, இறந்துபோன அந்த மனிதர் மிகவும் தீவிரமாகப் பிரார்த்தித்தார். இருந்தும் அவர் கொல்லப்படுவதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். இவ்வழியாகச்

பயப்படுவதற்குக்
காரணம், அது நம்மிடம்
உள்ள அனைத்தையும்
பறித்துக்கொள்கிறது
என்பதற்காகத்தான்.

சென்று கொண்டிருந்த நான், அவர் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து இப்போதுதான் உங்களைப் பிரார்த்திக்க ஆரம்பித்தேன். ஆனால், என்னை மட்டும் ஆசீர்வதிக்கிறீர்களே இது ஏன்?” என்று கேட்டார்.

அதற்கு தேவி, “இதற்கு முன் பல பிறவிகளாக நீ என் பக்தனாக இருந்தாய். உன்னுடைய முந்தைய காலத்து ஸம்ஸ்காரங்களும் வாஸனாக்களும்தான் உன்னை இங்கு அழைத்து வந்துள்ளன. அவற்றின் பலனாகத்தான் நான் உன் முன்பாகத் தோன்றினேன்,” என்று சொன்னார். இதற்கு முந்தைய பிறவிகளிலிருந்து இந்தப் பிறவிக்கு, ஆன்மாவால் எடுத்து வரப்பட்ட வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ராரப்த கர்மாக்கள்தான் இந்தப் பிறவியின் ஸம்ஸ்காரங்களைத் தீர்மானிக்கின்றன. வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ராரப்த கர்மாக்களின் விளைவே ஸம்ஸ்காரங்கள். இது எப்போதுமே ஒரு இன்ப, துன்பக் கலவையாகவே இருக்கிறது.

எதுவுமே முன்பே முடிவுசெய்யப்பட்டது இல்லை!

கேள்வி: சுவாமிஜி, நாம் எதைச் செய்கிறோமோ அதைக் கட்டுறு மனப்பாங்குதான் செய்யவைக்கிறது என்று தாங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் எதைச் செய்ய வேண்டும் என்பதை உத்தரவிடக்கூடிய, முன்கூட்டியே திட்டம் வகுக்கப்பட்ட ஒரு அமைப்புதான், மனித உடல் - மன அமைப்பை இயக்குகிறதா?

இந்தக் கேள்விக்குப் பல நிலைகளில் பதில்சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆரம்ப கால அறிவியல், உடல் வளரவளர, அதனுடன் மூளையும் இயல்பாகவே வளர்கிறது என்று நம்பியது. பொதுவான உடற்கூறுகளைப் பொறுத்தமட்டிலும்கூட, ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவர் ஒரே மாதிரியான வளர்ச்சியையே பெறுவார் என்று நம்பியது.

சில வருடங்களுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சலீஸ் புறநகர் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு அறையிலிருந்து ஒரு இளம் பெண்ணை மீட்டார்கள்.

> வாஸனாக்கள், மன அமைப்பு மற்றும் ப்ராரப்த கர்மாக்களின் விளைவே ஸம்ஸ்காரங்கள். இது எப்போதுமே ஒரு இன்ப, துன்பக் கலவையாகவே இருக்கிறது.

அவளது பெற்றோர், ஏதோ காரணத்திற்காக அவளை வெளியில் செல்லவிடாமல், தனிமையிலேயே இருக்கவைத்தார்கள். அவளை அந்த அறையிலிருந்து மீட்ட பிறகும்கூட, அவளால் நடக்கவோ, பேசவோ, யார் சொல்வதையும் புரிந்துகொள்ளவோ முடியவில்லை. பத்து வருடங்களுக்குப்பின் அவள் இறந்தேபோய்விட்டாள் என்று நினைக்கிறேன். பிரேதப் பரிசோதனை செய்த நரம்பியல் வல்லுனர்கள், அவளது மூளையின் பல பகுதிகள் அழிந்துவிட்டதாகச் சொன்னார்கள். மூளையின் ஒரு பகுதியை எந்த அளவிற்கு உபயோகிக்கிறோமோ, அந்த அளவிற்கு நமது மூளை செல்களுக்கு இடையேயான தொடர்புகள் (Synaptic) சிறப்பாக அமையும் என்பதை இப்போது தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

நம் மூளை, அதனுள் லட்சக்கணக்கான... லட்சக்கணக்கான என்று சொல்வதைவிட கோடிக்கணக்கான என்று சொல்லலாம், கோடிக்கணக்கான ஆற்றல்மிக்க தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்துடன்தான் வருகிறது. நாம் எந்த அளவிற்கு அந்த மூளைப்பகுதியை உபயோகப்படுத்துகிறோமோ, அதைப்பொறுத்தே, அந்தப் பகுதியின் இணைப்புகள் முடுக்கிவிடப்படுகின்றன.

நடத்தலும் அசைவுகளும் சில இணைப்புக்களைச் செயல்படுத்தச் செய்கின்றன. பேசுவது, கேட்பது, பார்ப்பதுபோன்ற புலன்கள் வழியாக நம்முள் செல்லும் விஷயங்கள், சில இணைப்புக்களை உயிர்பெறச் செய்கின்றன.

Eye, forehead, nose, and lips close-up detail

இந்தப் பெண்ணின் விஷயத்தில்,
நிறைய இணைப்புகள் உபயோகப்
படுத்தப்படாமலேயே இருந்ததால்,
அவை உயிர்ப்பிக்கப்படாமலேயே
இருந்துவிட்டன.

இந்த உடல் - மனம் என்ற அமைப்பிற்குள் இயல்பாகவே இருக்கும் அளப்பரிய உள்ளார்ற்றலை, இந்தக் கட்டுறு மனப்பாங்கு வீணடித்துவிடுகிறது என்ற உண்மையை அறிவியல் உலகும் ஏற்றுக்கொள்ளுகிறது. அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.

நேர்மறை எதிர்மறை என்பதெல்லாம் பெரும்பாலும் வட்டாரக் கலாசாரம் மற்றும் வளர்க்கப்படும் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவுசெய்யப்படுகிறது.

பிறக்கும்போதே இருக்கும் இந்த உடல் - மனம் அமைப்பானது, சில தன்னிச்சையான, சுயமான செயல்களுக்கான பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறது. இதுகூட, சிறுவயதில் அக்குழந்தைக்கு அளிக்கப்படும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை பராமரிப்பு விஷயங்களைப் பொறுத்தே அமைகிறது.

அதனால் எதுவுமே முன்பே முடிவுசெய்யப்பட்டது இல்லை. ஆம் நம்முடைய முந்தைய பிறப்பின் கடைசி ஆசையே, இந்தப் பிறவியில் நம் உடல் எந்தச் சூழ்நிலையில் பிறக்க வேண்டும் என்பதை முடிவுசெய்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் அந்த முடிவு, இந்த உடல் எப்படிப்பட்ட பரிமாணத்தை அடையவேண்டும் என்பதற்கான சாத்தியங்களாக மட்டுமே இருக்க முடியும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு நிச்சயக்கப்பட்ட முடிவாக இருக்க முடியாது.

குவாண்டம் இயற்பியல் வல்லுநர்கள் (Quantum physicists) இதைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள்தான் உண்டே தவிர, நாம் சொல்லிக்கொண்டிருப்பதுபோல், அவை இயற்கையின் விதிப்படி தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை இன்றைய அறிவியல் அறிந்திருக்கிறது.

இயற்கை இருக்கிறது, அவ்வளவுதான். அதற்கென்று விதிகள் கிடையாது. அது விதிகளுக்கு அப்பாற்பட்டது.

illustration
Lord Krishna