உங்களின் ஸம்ஸ்காரங்களே நீங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் சென்று, காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன்கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.
15.10 குணங்களுடன் கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்கிறது, அவ்வுடலைத் துறந்து செல்கிறது என்பதை அறியாமையில் மூழ்கியிருக்கும் மூடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக்கண் பெற்றிருப்பவரே இதை அனைத்தையும் காண்கிறார்.
ஆழ்ந்த தூக்கம் -
நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே
அழியா ஆன்மாவானது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது, காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய உடலையெடுத்து, கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன், தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.
உங்களுடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில்தான், உங்களுடைய உடலையே உருவாக்குகிறீர்கள் என்கிற இன்னொரு ரகசியத்தையும் கிருஷ்ணர் இங்கே வெளிப்படுத்துகிறார்.
> நம்முடைய காரண
> சரீரத்தில் பதிந்திருக்கும்
> ஸம்ஸ்காரங்களைப்
> பொறுத்தே,
> நம்முடைய புலன்களை
> நாம் உருவாக்குகிறோம்.
உடற்கூறுகளைப் பற்றி விஞ்ஞான
பூர்வமாக விளக்கும் ஸாமுத்ரிகா லக்ஷண
சாஸ்திரத்தில், நம்முடைய உடலுக்கும்
மனத்திற்கும் இடையேயான தொடர்பு
விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூலைக்
கற்றுத்தேர்ந்தவர்கள், நம்முடைய
உடற்கூறுகளை வைத்தே, நம்முடைய மன
அமைப்பைக் கணித்துவிடுவர்.
நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை நாம் உருவாக்குகிறோம். அதாவது, நம்முடைய மன அமைப்பைப் பொறுத்தே, ஆன்மாவானது புலன்களைத் தேர்வுசெய்கிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இது, நாம் இன்னொரு உடல் எடுக்கும்போது மட்டும் நடப்பதல்ல. ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நாம் வெளிவரும்போதும், நம்முடைய புலன்கள் மீண்டும் பிறக்கின்றன. அதனால், நம்முடைய மன அமைப்பினை மாற்றுவதாலேயே, சிறிதுகாலத்திலேயே நம்முடைய முக அமைப்பை மாற்றிவிட முடியும்.
உடல் முழுதும் பரவியிருக்கிற புத்திசாலித்தனத்தைத்தான் மனஸ் என்கிறோம்! நம்முடைய ஒவ்வொரு திசுவிலும் இந்த புத்திசாலித்தனம் உறைந்துள்ளது. ஒவ்வொரு திசுவும், மரபுசார்ந்த புத்திசாலித்தனத்தைத் தன்அகத்தே கொண்டுள்ளது. உடலும் மனமும் தனித்தனி அமைப்பு அல்ல. அது உடல் - மனம் அல்லது மன - உடல் என்கிற ஒரே அமைப்புதான்.
இந்த உடல் - மன அமைப்பிற்குள், ஒவ்வொரு வினாடியும், ஆயிரமாயிரம் திசுக்கள் இறக்கின்றன, புதிதாய் ஆயிரமாயிரம் திசுக்கள் பிறக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இத்தொடர் செயல்முறை, இயற்கை அல்லது பிரபஞ்ச புத்திசாலித்தனத்தின் ஆணைப்படிதான் நடக்கிறது. இது நம்மால் நடக்கவில்லை, நம்மையும் மீறி நடக்கிற ஒரு விஷயம்.
இந்தச் செயல்முறையில், இரண்டு
வருடத்திற்குள்ளாகவே, நம்முடைய
உடலின் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு
திசுவும் புதுப்பிக்கப்படுகின்றன.
இன்று இருக்கும் நமது இந்த உடலும்,
ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்த
நமது உடலும் ஒன்றல்ல. அதேபோல
இன்று இருக்கும் நமது உடலும், ஒரு
வருடத்திற்குப் பிறகு இருக்கப்போகும்
நமது உடலும் ஒன்றாக இருக்காது. இது
வெறும் கட்டுக்கதையல்ல. நிரூபிக்கப்பட்ட
அறிவியல் உண்மை
உடலும் மனமும் தனித்தனி
அமைப்பு அல்ல.
அது உடல் - மனம்
அல்லது மன - உடல்
என்கிற ஒரே அமைப்புதான்.
பின் ஏன் நம் நடத்தை மட்டும் பல வருடங்களாக ஒரேமாதிரியாகவே உள்ளது? அதே திசுக்கள் நம் உடலில் இல்லாவிட்டாலும்கூட, ஏன் அதே நோய்கள் தொடர்ந்து நீடித்து நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம்?
ஒவ்வொரு திசு இறக்கும்போதும், புதிதாய்ப் பிறக்கும் திசுவும் பின்பற்றும்படியாகச் சில பதிவுகளை விட்டுச்செல்கின்றன. அவைதான் நம்முடைய ஸம்ஸ்காரங்கள்.
நம்முடைய உடல் - மன அமைப்பே முழுமையாக மாறிவிட்ட பின்னருங்கூட, அதே உடல் - மன அமைப்பு தொடர்வதை, இந்த ஸம்ஸ்காரங்களே உறுதிப்படுத்துகின்றன. இந்த ஸம்ஸ்காரங்கள், உடல் - மன அமைப்பைவிட சக்திவாய்ந்தவை. இவையே எல்லா முடிவுகளையும் எடுக்கின்றன, அதன்படி நம்மைச் செலுத்தவும் செய்கின்றன.
ஒவ்வொரு நாளும் நாம் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்வது, நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே. நாம் ஒவ்வொரு நாளும் இறந்து மீண்டும் பிறக்கிறோம். நாம் அனுமதித்தால், நம்முடைய ஸூக்ஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறி, சக்தியூட்டப்பட்டு மீண்டும் வருகிறது. நாள்தோறும் இயல்பாகவே நடக்கும் இந்தப் புத்துணர்வாக்கல், இந்தச் சக்தியூட்டல் செயல்முறையை எந்தளவிற்குப் பயனுள்ளதாக்குவது என்பது நம் கையில்தான் இருக்கிறது.
எதிர்மறை ஸம்ஸ்காரங்களே நம் உடல் எடைக்குக் காரணம்
தியானத்தின் மூலம் இந்த ஸம்ஸ்காரங்களை மாற்றியமைத்து, நாம் மீண்டும் புதிதாகப் பிறக்கலாம். ஸம்ஸ்காரங்களைச் சீரமைப்பதன் மூலம், நம்முடைய குணம், நடத்தை மற்றும் பண்புகளை மாற்றியமைக்கலாம்.
அதனால்தான், தியானம் செய்ய ஆரம்பித்தபின் மக்கள், தங்கள் கருணையை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
அழகு, ஒப்பனை செய்வதால் உருவாக்கப்படுகிறது; கருணை, தியானத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. அழகு, உணர்ச்சியை அதிகப்படுத்தும், அடுத்தவரை அமைதியற்ற தன்மைக்கு (ரஜஸ்) எடுத்துச்செல்லும். ஆனால் கருணை, தன் அருகில் இருப்பவர்களை தங்கள் இல்லத்தில் இருப்பதுபோன்றே உணரச்செய்யும். அது சூழ்நிலையையே அமைதிப்படுத்தும். கருணை, ஸத்வத்தை உருவாக்கும், அடுத்தவருக்குள் சக்தி பொங்கச் செய்யும்.

ரமண மகரிஷி போன்ற குருமார்களை
நினைவுகூறும் மக்கள் சொல்கிற ஒரு ஸத்யம்
என்னவெனில், அவர்கள் மௌனத்தின்
மூலமாகவே ஞானத்தை அடுத்தவருக்குள்
பாய்ச்சினார்கள் என்பதுதான்.
ஜ்ஞானகுருமார்களின் கருணை, அவரைச் சுற்றியுள்ளவர்களின் சக்தியில் ஊடுருவி, அவர்களின் ஸம்ஸ்காரங்களை மாற்றியமைக்கிறது. ஜ்ஞானகுருமார்களின் ஸாந்நித்யத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே, 'நாம் வெறுமனே இருப்பது!'
நம்மைத் திறந்துவைத்து, அமைதியாக,
குருவின் கருணை நம்முள் ஊடுருவ
அனுமதித்தாலே போதும். இங்கு நாம்
வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை.
என்ன செய்ய வேண்டுமோ அதை குருவின்
கருணை செய்துவிடும்.
இந்தியாவின் தலைசிறந்த காப்பியமான இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள அருமையான பகுதி இது: இளவரசி சீதை, தமது தந்தையான ஜனகரின் அரசவையில் நுழையும்போது, அங்கே அமர்ந்திருந்த ஞானிகளும் பேரரசர்களும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இது ஒன்றும் அரசவையின் நடைமுறை வழக்கம் அல்ல. சீதை வெளிப்படுத்திய கருணையே அவர்களுக்குள் இத்தகைய பதில்செயலை நிகழ்த்தியது.
அழகு, அடுத்த மனிதருக்குள் ஏக்கத்தையே ஏற்படுத்தும். கருணை ஒன்றே மரியாதையை ஏற்படுத்தும். சீதையின் ‘இருப்பிலிருந்து’ வெளிப்பட்ட கருணையானது அனைவரையும் எழுந்து நிற்கச்செய்தது.
ஜென் புத்தமதம் சொல்கிறது, ஒரு மனிதர் புல்வெளியில் நடக்கும்போது, அவர் நடந்த இடத்திலிருக்கும் புல் சாகாமலும், அங்குப் பாதை ஏற்படாமலும் இருக்குமேயானால் அவருக்கு ஸந்நியாஸம் சாத்தியம் என்று சொல்கிறது.
நான்கூட முதலில் இதை நம்பவில்லை. ‘நம்முடைய முழு உடலின் பாரத்தையும் எப்படிப் புல்லால் தாங்க முடியும், அதுவுமல்லாமல் அந்த இடத்தில் பாதை ஏற்படாமல் எப்படி இருக்க முடியும், இது சாத்தியம் இல்லை’ என்றே நினைத்தேன்.
ஒருமுறை, தென்னிந்திய காட்டுக்குள் யானைசவாரி செய்யும் வாய்ப்புகிட்டியது. எங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புகையில் நேரமாகிவிட்டதால், இருட்டிவிட்டது. அந்த யானைப் பாகனிடம் டார்ச் லைட்டோ அல்லது வேறெந்த விளக்கோ இல்லை. இந்த இருட்டில் எப்படிப் பாதையைக் கண்டுபிடிப்பீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, “நான் தினமும் நடப்பதால், இங்கே ஒரு பாதை அமைந்திருக்கிறது. அந்தப் பாதையில், இந்த இருட்டில்கூட என்னால் நம் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் சென்றடைய முடியும்,” என்றார்.
உடனே நான், அந்த யானையைப் பற்றிக் கேட்டேன். ஏனென்றால், அந்த யானையும் தினமும் அந்தப் பாதையில் அவருடன் நடக்கிறது, அப்படியானால் அது நடக்கும் பாதையும் இருக்க வேண்டுமே என்கிற காரணத்தால் அதைப் பற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. ‘யானை நடப்பதால் பாதை உருவாகாது. யானை மட்டுமல்ல, வேறெந்த மிருகமும் நடக்கும்போது புல்லை சேதப்படுத்துவது கிடையாது! என்பதுதான் அந்த பதில்.
நான் ஒரு சிறிய கணக்குப் போட்டேன். யானையின் ஒரு காலால் பூமியில் ஏற்படும் அழுத்தம், குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதர் ஏற்படுத்தும் அழுத்தம்போல் நான்கு மடங்கு அளவுக்காவது அதிகமாக இருக்கும். அப்படியிருந்தும். அது பாதையை உருவாக்குவதில்லை, ஒரு சிறு புல் நுனியைக்கூட சேதப்படுத்துவதில்லை, சுற்றுச்சூழலுக்குச் சேதாரம் செய்வதில்லை.
அதனால்தான் ஜென் புத்தமதம் சொல்கிறது: “ஒரு புல் நுனியைக்கூட சேதப்படுத்தாமல் நம்மால் புல்வெளிமீது நடக்க முடியுமானால், நாம் ஸந்நியாஸத்திற்குத் தகுதியானவர்கள்!”
நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் வன்முறை மற்றும் எதிர்மறை ஸம்ஸ்காரங்களே, நம்மைப் பூமிக்குப் பாரமானவர்களாக உணரச் செய்கிறது.
நம்முடைய தொப்புள் பகுதியைச் சுற்றி ஒரு பாரத்தை உணர்ந்தோமென்றால், நாம் எதிர்மறை ஸம்ஸ்காரங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.
பாரமான உணர்வு, நம்முடைய உடல் எடையோடு சம்பந்தப்பட்டதல்ல, அது, நம் உள் வெளியில் இருக்கும் பதிவுகளோடு சம்பந்தப்பட்டது. தம்மை எடையற்று உணரும் ஒருவர், தம்முடைய இருப்புத்தன்மையிலிருந்து கருணையை வெளிப்படுத்துவார். அவர் புல்வெளியில் நடக்கும்போது பாதை உருவாவதில்லை, ஒரு புல் நுனியைக்கூட சேதப்படுத்துவதில்லை.
நம்முடைய பாதங்கள் பாதையை ஏற்படுத்தாதபோதும், காற்றில் மிதப்பதுபோல் நடக்கும்போதும், இயற்கைக்கு எதிராகச் செயல்படாதபோதும் மட்டுமே, நாம் ஆன்மிகத்தில் மலர்ந்தவர்களாக ஆா்கிறோம் என ஜென் மதம் வரையறுக்கிறது.
இயற்கைக்கு எதிரானதால் பாதையை மறந்துவிட்டோம்
இயற்கைக்கு எதிராகப் போய் விட்ட ஒரே மிருகம் மனிதன் மட்டுமே!
ஒரு சின்ன கதை,
ஒரு மனிதர் தம்முடைய மனைவியிடமிருந்தும், மனைவி வளர்க்கும் செல்லப் பூனையிடமிருந்தும் விலக நினைத்தார். ஆனால் இந்தியாவில், ஒரு கணவர், தாம் நினைத்தவுடன் தம் மனைவியை சிறு சிறு காரணங்களுக்காக விவாகரத்து செய்ய முடியாது. அதனால் பூனையிடமிருந்தாவது தப்பிக்கலாம் என்று முடிவுசெய்தார்.
அந்தப் பூனையைக் காரில் எடுத்துக்கொண்டு, ஒரு பத்து மைல்களுக்கு அப்பால் சென்று விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில், அவர் வீட்டிற்குள் நுழையும்போது பூனையும் உள்ளே நுழைந்தது.

அடுத்த நாள் அந்தப் பூனையைக் காரில்
எடுத்துக்கொண்டு, நாற்பத்தைந்து
நிமிடங்கள் பயணம்செய்தார்.
அவரே இதுவரை பார்த்திராத ஒரு
அடர்ந்த காட்டைப் பார்த்தார், அங்கே
அந்தப் பூனையை விட்டுவிட்டு,
திரும்பிப் பார்க்காமல் வேகமாகக்
காரோட்டிக்கொண்டு ஒருவித நிம்மதியுடன்
வீடு வந்து சேர்ந்தார். அந்தப் பூனை, அமை
தியாக வீட்டு வாசலில் அமர்ந்திருந்தது,
அவர் அதிர்ச்சியடைந்தார்!
மூன்றாவதுநாள், அவர் முன் ஜாக்கிரதையாக, அந்தப் பூனையின் கண்களைக் கட்டி, ஒரு சாக்கில் போட்டு காரில் ஏற்றினார். மிகவும் குழப்பமான பாதைகளைத் தேர்ந்தெடுத்து, வண்டியை ஓட்டிச்சென்று, ஏதோ ஒரு இடத்தில் பூனையை விட்டுவிட்டார். அதன்பின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஒரு மணிநேரம் பயணம்செய்தபிறகு, அவர் தம் மனைவிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "அம்மா, அந்தப் பூனை வீட்டில் இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, "ஆம், இப்போது என் அருகில்தான் இருக்கிறது," என்றார். உடனே அதற்கு அவர் "தயவுசெய்து, நான் வீட்டிற்கு வர, நீதான் எப்படியாவது உதவ வேண்டும். நான் வந்த வழியை மறந்து விட்டேன்," என்றார்.
விலங்குகள் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் இயற்கைக்கு எதிராகச் சென்றுவிட்டோம், அதனால் பாதையையும் மறந்துவிட்டோம்.
ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்
இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், நாம் நமது ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நமது புலன்களை அமைத்துக்கொள்கிறோம். இது நாம் இறந்து மீண்டும் பிறக்கும்போது மட்டும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்பும்போதும், நாம் நமது ஸம்ஸ்காரங்களுக்கேற்ப புலன்களை மறுவடிவமைக்கிறோம்.
நாம் தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்தச் சில வினாடிகள் மிகவும் முக்கியமானவை. நாம் அப்போது என்ன உணர்கிறோமோ, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும்.
நாம் சரியான மனநிலையுடன் விழிக்கும்பொழுது, நாம் அதற்கேற்ற புலன்களையே பெறுகிறோம். அதனால் அந்த நாள் முழுவதுமே நாம் சந்தோஷமாக இருப்போம். மாறாக, எதிர்மறை மன அமைப்புடன் விழிக்கும்போது, நாம் நாள் முழுவதும் துக்கப்படுகிறோம்.
நாம் தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்தச் சில வினாடிகள் மிகவும் முக்கியமானவை. நாம் அப்போது என்ன உணர்கிறோமோ, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும்.
அப்போது நாம் சந்தோஷத்தை
வெளிப்படுத்தினால், நம்முடைய அந்த
நாள் முழுதும் சந்தோஷமாக இருக்கும்;
எரிச்சலை வெளிப்படுத்தினால், அந்த நாள்
முழுதும் எரிச்சலாகவே இருக்கும்.
சூஃபி குருமார்கள், ஸூக்ஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தில் நிலைகொள்ளும், கண்விழிக்கும் அந்த நேரத்தில் இந்த அருமையான த்யானத்தை ாள்தோறும் பயிற்சிசெய்வார்கள்.
கண்களை மூடியவாறு படுக்கையில் படுத்துக்கொண்டே, கைகளால் தலையை தடவியபடியே, மிகுந்த விழிப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும், "என் தலையையும் தலைமுடியையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான தலையையும் தலைமுடியையும் தந்ததற்காக, நான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்று சொல்கிறார்கள்.
இப்படியே, உடலின் ஒவ்வொரு பகுதியையும் தொட்டு, பிரபஞ்ச சக்திக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
நாளைமுதல் நீங்களும் இந்த த்யானத்தைச் செய்யுங்கள். உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் மிகுந்த அன்புடன் தொடுங்கள். அந்த உடல் பாகத்திற்கு உங்கள் அன்பினை வெளிப்படுத்துங்கள். அந்தப் பாகத்தின் அழகுகும் கருணைக்கும் பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இவ்வளவு அழகான உடல் - மன அமைப்பை கொடுத்ததற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.

இதை உங்கள் உடல் முழுவதும், தலை முதல் பாதங்கள்வரை செய்யுங்கள். இறுதியாக உங்கள் பாதங்களை மிகுந்த அன்புணர்வுடன் தொட்டபடி, "என் பாதங்களை நான் நேசிக்கிறேன். இவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான பாதங்களைக் கொடுத்ததற்கு, பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்," என்று உணர்வுபூர்வமாகச் சொல்லுங்கள்.
இதை விழிப்புணர்வுடன், குறைந்தபட்சம் ஒரு இருபத்தியோரு நாட்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்கள் கருணையை வெளிப்படுத்த ஆரம்பிப்பீர்கள். அது மட்டுமல்லாமல், நீங்களே உங்களை நேசிக்க ஆரம்பித்திருப்பீர்கள், விளைவு, நீங்கள் அடுத்தவரையும் மிகச் சுலபமாக நேசிக்க முடியும்.
கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உருவாக்கும் புலன்களைப் பொறுத்தே, நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அமைகின்றன. நாம் நேர்மறையான உணர்வுகளை உருவாக்கும்போது, நம்முடைய வாழ்க்கை இனிமையாய் இருக்கும். நாம் எதிர்மறையான புலன்களை உருவாக்கும்போது, எதிர்மறையான வாழ்க்கையால் கஷ்டப்படுகிறோம்.
نام எந்த மாதிரி புலன்களை
உருவாக்குகிறோமோ, அதைச்சார்ந்த
பொருட்களும் இன்பங்களும்தான்
நம்மை ஈர்க்கின்றன. நாமும் அதை
அனுபவிக்கிறோம்.
நம்முடைய உணர்வுகளும், புத்தியும், உடல் - மன அமைப்பும் நம்மைச் சுற்றி ஒரு சக்தி ஓட்டக்களத்தை ஏற்படுத்துகிறது. அந்த சக்தி ஓட்டம், அதே மாதிரியான சக்தி ஓட்டக்களத்தையே ஈர்க்கும். நாம் எதிர்மறையான எண்ணம் கொண்டவராக இருந்தால், எதிர்மறையான மன அமைப்பு கொண்டவர்களையே ஈர்ப்போம். அப்படியே அந்த விஷச்சுழலில் சிக்கிக் கொள்வோம்.
அதனால் நம்முடைய எதிர்மறை மன அமைப்பை, நேர்மறை மன அமைப்பாகவும் நேர்மறை உணர்வுகளாகவும் மாற்றினால், அதே மன அமைப்புள்ள மகிழ்ச்சியான மனிதர்களை நம்மை நோக்கி ஈர்ப்போம்.
இது, ஒரு மனிதரின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான பங்குவகிக்கிறது. குருவோடு இருக்கும்போது இந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் சுலபமாக நடக்கும். ஆனால் அதே பாதையில் பயணிக்காதவர்களோடு நாம் சேர்ந்திருக்கும்போது, நாம் நம்முடைய ஆன்மிகப் பாதையிலிருந்து எளிதாக விலகி விடுவோம். அந்த உற்சாகத்தைத் தவறவிட்டுவிடுவோம். ஸத்யத்தை ஆழமாகத் தேடும் ஒத்த மன அமைப்பு உள்ளவர்களின் சேர்க்கை, நம்மைப் பந்தங்களிலிருந்து விடுவிக்கும். இதுதான் ஆன்மிகப் பயணத்தின் முதல் அடி, முக்கியமானதும்கூட.
ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்கிறார், சங்கரர். அதனால்தான் புத்தர் ஸங்கத்தை ஏற்படுத்தினார். கிறிஸ்து ஒரு பிரிவு சீடர்களை, தம்முடைய ஞான விளக்கை எடுத்துச்செல்வதற்கெனவே உருவாக்கினார். குருவின் உபதேசங்களைப் போல, அவருடைய ஸங்கமும் மிக முக்கியமானது. ஸங்கங்கள்தான் ஸத்யம் நிலைத்திருக்கவும் ஒளிரவும் எரிபொருளாய் இருக்கின்றன.
அதனால்தான் நான், ஒத்த மனமுடைய மக்கள் சேர்ந்து வாழும் ஆச்ரமங்களை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறேன். ஏனென்றால், இது போன்ற சூழலில் வாழும் மக்கள், ஆன்மிகத்தில் மிக விரைவாக முன்னேற முடியும்.
இந்த இடங்களில் ஒன்றாக வாழ்வதினால், ஏற்படக்கூடிய சக்திப் பெருக்கத்தை வெளி உலகத்தில் உருவாக்க முடியாது. இங்கே, இந்த நடைமுறையில் உருவாகும் சக்தியை, வெளி உலகில் ஏற்படுத்த முடியாது.
எங்கிருந்தாலும் என்னால் த்யானம் செய்ய முடியும் என்று நாம் சாதுர்யமாக பேசலாம். ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆன்மிகம் செழித்து வளர்வது என்பது தனிமையிலோ அல்லது அதே மன அமைப்புள்ளவர்களோடு சேர்ந்துவாழும்போதோ மட்டுமே நிகழ முடியும்.
ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்; வளப்படுத்தும்.
ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள்
இந்த அத்தியாயத்தின் நடுவில் கிருஷ்ணர் நறுக்குத்தெரித்தாற்போன்ற ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார்: “ஆன்மாவானது எப்படி ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்குச் செல்கிறது என்பதையோ, குணங்களின் அடிப்படையில் அவன் எப்படிப்பட்ட உடலை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதையோ மூடம்டாள்களால் புரிந்துகொள்ள முடியாது. அறிவினால் பயிற்றுவிக்கப்பட்ட கண்களுக்கே, இந்த விஷயங்கள் புலப்படும்!’”
இங்கு, மூட - ‘முட்டாள்’ என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார், கிருஷ்ணர்.
காலையில் எழும்போது நமக்குள் தோன்றும் முதல் எண்ணத்தைப் பொறுத்தே, அந்த நாள் முழுவதற்குமான அனுபவம் அமையும்!
ஆனால் பொதுவாக நம்முடைய முதல் எண்ணம் எதுவாக இருக்கிறது? முதலில் நாம் எழுந்துவிட்டதை உணர்கிறோம், பிறகு நம் உடலை உணர்கிறோம், அடுத்து நமக்குள் எழுவது, ‘நாம் ஆபீஸ் போகவேண்டுமே என்ற அச்சம் அல்லது நமக்குபிடித்தமான ஏதோ ஒரு வேலையை முடித்தாக வேண்டுமென்ற ஆசை’.
ஆசையாலோ அச்சத்தாலோ உந்தப்பட்டுத்தான் நாம் படுக்கையிலிருந்து துள்ளி எழுகிறோம். ஆசை அல்லது அச்சத்தின்மூலமே, நாம் நம் உடலுடன் தொடர்பை உணர்கிறோம்.
கிருஷ்ணர் சொல்கிறார், ‘நம்முடைய உடலை ஆசையாலோ அச்சத்தாலோ பிடித்தோமானால், அந்த நாள் முழுவதும் ஆசை அல்லது அச்சம்சார்ந்த விஷயங்களையே ஈர்ப்போம்.
ஒவ்வொரு நாளும் நாம்
தூங்கி எழுவது,
இந்தப் பூமியில் நாம்
இன்னொரு நாள் வாழ
நமக்குக் கிடைத்த நீட்டிப்பே.
உடம்பிற்குள் நுழைய எத்தனையோ வாயில்கள் இருக்கின்றன. ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள். ஒரு ஆன்மிக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழுங்கள். உங்கள் குருவையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ நினைத்துக்கொண்டு எழுங்கள். இதைச் சில நாட்களுக்குத் தவறாமல் விழிப்புணர்வோடு செய்யுங்கள். பின்பு, இது உங்கள் இயல்பாக மாறிவிடும். உங்கள் உடலோடு ஆசை அல்லது அச்சத்தின் மூலமாக இணைய வேண்டாம். அது மேலும் மேலும் ஆசையையும் அச்சத்தையுமே ஈர்க்கும்.
உங்களுடைய முதல் எண்ணம் ஆன்மிகம்
சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும்.
உங்கள் குருவையோ, கடவுளையோ
அல்லது தெய்விகமானவர்களையோ
நினைவுபடுத்தி, அவருக்கு
நன்றிசொல்லுங்கள். வாழ்க்கையை மேலும்
ஒருநாள் நீட்டித்ததற்காக அவருக்கு
நன்றிசொல்லுங்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுவது,
இந்தப் பூமியில் நாம் இன்னொரு நாள்
வாழ நமக்குக் கிடைத்த நீட்டிப்பே.
இந்த நீட்டிப்பை அளித்த பிரபஞ்சத்தின்
கருணைக்கு நன்றிசொல்லுங்கள்.
உங்கள் குருவையோ,
கடவுளையோ அல்லது
தெய்விகமானவர்களையோ
நினைவுபடுத்தி,
வாழ்க்கையை
மேலும்ஒருநாள்
நீட்டித்ததற்காக அவருக்கு
நன்றிசொல்லுங்கள்.
நீங்கள் புத்திசாலியா அல்லது முட்டாளா?
தூக்கத்திலிருந்து எழுவது நம் பிறப்புரிமை கிடையாது. சொல்லப்போனால், பிறப்பே நமது உரிமை கிடையாது. அது பிரபஞ்ச இருப்பு நிலையின் தூய்மையான பரிசு. நம் வாழ்க்கை,, இன்னொரு நாள் நீட்டிக்கப்பட்டதற்குப் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
ஆன்மிக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழும்போது, அந்த நாள் முழுவதுமே அந்த விழிப்புணர்வு நமக்குள் நீடிக்கும். லௌகீக எண்ணத்துடன் எழும்போது, அந்த நாளை எரிச்சலுடன் தொடங்குவோம். நாள் முழுவதுமே அந்த எரிச்சல் மனநிலை தொடரும்.
ஆழ்ந்த தூக்கத்தில், நாம் காரண சரீரத்துடன் தொடர்புகொள்கிறோம். தூங்கி எழும்போது, மற்ற மூன்று சரீரங்கள் வழியாகப் பயணம்செய்துதான், ஸ்தூல உடலைச் சேருகிறோம். இந்த மூன்று சரீரங்களும் பலவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கும் ஒரு பெரிய கடைவீதி. நம்முடைய காரண சரீரத்திலிருக்கும் ஸம்ஸ்காரங்களைத் தேர்ந்தெடுத்தே, நாம் அன்றைய தினத்து ஸ்தூல உடலையும் புலன்களையும் தீர்மானிக்கிறோம்.
ஒரு இருபத்தியோரு நாட்களுக்கு மட்டும் ஆன்மிக எண்ணத்துடன் எழுங்கள். அதற்குப் பிறகு உங்கள் முகத்தைப் பாருங்கள். முகம் மாறியிருப்பதைப் பார்த்து, நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் கண்களில் ஒரு புதிய பொலிவு தெரியும்.
நான் இங்கே உங்கள் முன், ஒரு 'கோட்பாட்டை' (Theory) வைக்கவில்லை. நான் இதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
உலகெங்கும் லட்சக்கணக்கானவர்கள், இந்த வார்த்தைகளைப் பயிற்சிசெய்து, வெற்றி கண்டிருக்கிறார்கள். அந்த உரிமையில்தான் நான் இதை ‘மிகவும் சக்தி வாய்ந்த, உயிர்ப்புள்ள ஒரு நுட்பம்’ என்று சொல்கிறேன்.
> அதிகாலையில் சில வினாடிகளுக்காவது ஆனந்தமான மனநிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புதிதாகவும் இருக்கும்.
மன அழுத்தத்துடனோ அல்லது அமைதியற்ற தன்மையுடனோ, அதாவது தமஸ் அல்லது ரஜஸ் தன்மையுடனும் உடலுக்குள் நுழையாதீர்கள். ஆசை அல்லது அச்சத்துடன் எழும்போது, ஆசை அச்சத்தை வெளிப்படுத்தும் உடலையே வடிவமைப்பீர்கள். உங்களை ஆசை அச்சத்தில் போடக்கூடிய விஷயங்களையே ஈர்ப்பீர்கள்.
காரண சரீரத்திலிருந்து, ஸ்தூல சரீரத்திற்குத் திரும்பிவரும்போது, ஆனந்தம் மற்றும் அமைதிசார்ந்த ஸத்வ ஸம்ஸ்காரங்களையே எடுத்து வரவேண்டும். அதனால்தான், நமது ரிஷிகளும் ஞானிகளும் நம்மை அதிகாலையில் த்யானம் செய்யச் சொல்கிறார்கள்.
சில வினாடிகளுக்காவது ஆனந்தமான மன நிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புதிதாகவும் இருக்கும்.
கிருஷ்ணர் சொல்கிறார், “அறிவால் பயிற்றுவிக்கப்பட்ட கண்கள் மட்டுமே, இந்த அறிவியலின் ஸத்யத்தைப் புரிந்துகொள்ள முடியும்!
அனைத்துமே உங்கள்முன் இருக்கிறது, ஆனால் முட்டாள்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. புத்திசாலித்தனமான கண்களை உடையவர்களால் மட்டுமே, இந்த ஸத்யங்களைப் பார்க்க முடியும்!
முட்டாளாக இருப்பதோ அல்லது புத்திசாலித்தனமான கண்களுடன் இருப்பதோ, நம் கையில்தான் இருக்கிறது. அது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பமே.
ஆன்மிகப் பயணத்தின் ஆரம்ப இடம் ஆசிரமம்
கேள்வி : ஸ்வாமிஜி, ஆன்மிக வளர்ச்சிபெற வேண்டுமானால், ஒருவர் ஆச்ரம சூழலில் வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொன்னீர்கள். ஆச்ரமங்களில் வாழ முடியாதவர்களின் நிலை என்ன? அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேற முடியுமா?
ஆச்ரமத்தில் இருக்கும் எல்லோரும் ஜீவன்முக்தர்கள் ஆவதில்லை. ஒருவர் ஜீவன்முக்தராக வேண்டுமெனில், அவர் ஆச்ரமத்தில் வாழ்ந்தாக வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஜீவன்முக்தி என்பது நம் இயல்பான நிலை. நாம் அதைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.
அதனால், நாம் இந்த ஸத்யத்தை உணர்வதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் முக்கியமானது.
நாம் ஜீவன்முக்தர்கள் என்றால், நாம் ஏன் அதை உணரவில்லை? நாம் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை? நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் என்பதை நாம் ஏன் உணரவில்லை? இந்தப் பிரபஞ்சம், நம்முடைய எந்த முயற்சியுமே இல்லாமல், நம்மைப் பார்த்துக்கொள்ளும் என்பதை நாம் ஏன் உணரவில்லை?
நமக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். நாம் நம்மை ஒரு தனி ஜீவனாக உணர்கிறோம். கடலில் எழும் அலையானது, தான் அந்தக் கடலில் ஒரு பகுதி அல்ல என்று நினைப்பதுபோன்றதே இது.

அந்த அலை ஒவ்வொருமுறையும் கடலோடு கலந்து, பின் மீண்டும் அலையாக எழுந்தாலும், அந்த அலை தன்னை, அந்தக் கடலினின்று வேறாகவே நினைக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து எழுந்து, மீண்டும் இந்தப் பிரபஞ்சத்திலேயே ஒடுங்கினாலும், நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணருவதேயில்லை; 'நாம் தனி' என்றே உணர்கிறோம்.
நாம் வெளி உலகில் பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், ‘நாம் தனியானவர்’ என்றே உணர்வைத் திணித்துக்கொள்கிறோம்.
நாம் மனிதர்கள் மீதும் பொருட்கள் மீதும் நிகழ்வுகள் மீதும் பற்றினை ஏற்படுத்திக்கொண்டு, நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் மட்டுமல்லாமல், நமக்கும் நம்முடைய இயல்பான தன்மைக்குமிடையேகூட, ஒரு பெரிய தடுப்புச்சுவரை எழுப்பி விடுகிறோம்.
பந்தங்களை அடிப்படையாகக்கொண்டு கட்டப்பட்ட இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை, அதை உடைத்துக்கொண்டு வருவது கடினம்.
> ஆச்ரம வாழ்வு, பலனை எதிர்பாராமல் வாழ்வது மற்றும் பற்றற்று வாழ்வது என்ற விஷயங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
நாம் இந்தப் பந்தங்களுக்கான காரணங்களை வேறு உருவாக்குகிறோம். ஒரு தாய் சொல்கிறார்: "நான் என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்." ஒரு முதலாளி சொல்கிறார்: "நான் என் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்." ஒரு தலைவர் சொல்கிறார்: "நான் என் தொண்டர்களை வழிநடத்த வேண்டும்."
இவையெல்லாம் ஸத்யத்தை உணருவதைத் தள்ளிப்போடுவதற்காக நாம் போடும் நாடகம் அல்லது நாம் விளையாடும் விளையாட்டு,
நாம் வரையறுக்கும் குழுக்களிடமும், நம்மைச் சுற்றி விரிந்து இருக்கும் உலகத்திலும் இவையெல்லாம் - கவனித்துக்கொள்வதும், பார்த்துக்கொள்வதும், வழிநடத்துவதும் - தானாகவே நிகழும்.
ஒரு ஆச்ரமம், நம்மை இந்தப் பந்தங்களிலிருந்து விடுபடுத்துக்கொள்ள உதவுகிறது. குருவின் ஸாந்நித்யமும், ஒத்த எண்ணம் கொண்டவர்களின் சேர்க்கையும் நம்மைப் புலனின்பம்சார்ந்த வெளி உலகிலிருந்து விடுதலைபெறச் செய்கிறது.
புற உலகம்சார்ந்த பந்தத்திலிருந்து, குருவிடமான பந்தத்திற்கு மாறுகிறோம். குருவின் வழிகாட்டுதலால், நாம் அந்தப் பந்தத்திலிருந்தும் விடுபடுவோம்.
ஆச்ரமம் என்பது நம்மை யதார்த்த நிலையிலிருந்து விலகியிருக்கச் செய்யாது. ஆச்ரமவாசிகள் வெளியுலகம்சார்ந்த பல பொறுப்புக்களை ஏற்றுள்ளார்கள். பணத்தைக் கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கக் கற்றிருக்கிறார்கள்; மேலும் புகைப்படம் எடுப்பது, கம்ப்யூட்டர் இயக்குவது, எழுதுவது, சிற்பம் போன்ற கலைசார்ந்த விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
இவை அனைத்துமே, பலனை எதிர்பாராமல் வாழ்வது மற்றும் பற்றற்று வாழ்வது என்ற விஷயங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
‘இறுதி ஸத்யத்தைத் தேடுபவர்கள் ஒன்றாகச் சேரும்போது, அது பந்தங்களிலிருந்து விடுடுத்தும்; பந்தங்களிலிருந்து விடுபட்ட நிலை ஆசைகள் அற்ற நிலைக்கு எடுத்துச்செல்லும்; ஆசைகள் அற்ற நிலை ஒரு சலனமற்ற மனத்தை உருவாக்கும்; சலனமற்ற மனம் நம்மை ஜீவன்முக்தி அடையச் செய்யும்.’ - இதைத்தான் சங்கரர் ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்கிறார்,
ஆச்ரமம், உள்ளுலகப்பயணத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறந்த இடம்.
