KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/விழிப்புணர்வு, சாதனை அல்லSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

விழிப்புணர்வு, சாதனை அல்ல

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

ஆத்மாவைப் பற்றிய புரிதலுடைய யோகிகளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து மற்றும் தீயிலிருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடமிருந்து பெறப்பட்டவையே.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிர்ச்சியான நிலவாக ஆகி, எல்லா செடிகொடிகளையும் நானே பேணிவளர்க்கிறேன்.

ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத் தீயாகவும், உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும் இருந்து நான்கு வகை உணவுகளையும் செரிமானிக்கிறேன்.

சிரத்தை - ஜீவன்முக்திக்கான ஸாதனம்

கிருஷ்ணர் இந்த ஸ்லோகத்தில், யோகின: என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அவர் இந்த வார்த்தையின்மூலம் என்ன சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

யோகா என்பது இன்றைய மனிதர்களால், ஒரு சொகுசு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அதில், 'உடனடி ஜீவன்முக்திக்கு - சூப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகா' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

வேதங்களில், சூப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகங்களைப் பற்றிய குறிப்புகளை, ஆதாரங்களை நான் ஒருபோதும் படித்ததில்லை. உடனடி ஜீவன்முக்திக்கென்று எந்த ஒரு யோகமும், நமது வேத பாரம்பரியத்தில் குறிப்பிடவில்லை.

யோகா என்பது தனி உணர்வான ஆன்மாவிற்கும், பிரபஞ்ச விழிப்புணர்வான ப்ரஹ்மத்திற்குமான இணைப்பு.

இந்த இணைப்பைப் பற்றிய விழிப்புணர்வு அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற விழிப்புணர்வு நம்மை விடுதலையடையச் செய்யும். இந்தப் புரிதல் உடனடியாக நடக்கும். ஆனாலும், இதை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் சாதனா முறைகள், வரையறுக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அவற்றை ச்ரத்தையுடன் செய்யும் மனிதனுக்கு மட்டுமே ‘ஜீவன்முக்தி’ சாத்தியமாகிறது.

யோகா என்பது தனி உணர்வான ஆன்மாவிற்கும் பிரபஞ்ச விழிப்புணர்வான ப்ரஹ்மத்திற்குமான இணைப்பு.

பழங்கால இந்தியாவின் மிகச் சிறந்த அறிவியலாளரும் ஞானியுமான பதஞ்சலி, தம்முடைய யோக ஸூத்ரத்தில் யோகம் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

‘நாம் கடவுள்’ என்ற விழிப்புணர்வைப் பெறுவதற்கும், கடவுளுடனான நமது இணைப்பை உணரவும், ஜீவன்முக்தி வாழ்வை வாழ்வதற்குமான எட்டுப் பாதைகளை நமக்குக் காட்டுகிறார். இந்த எட்டுப் பாதைகள் தொடர்ந்துவரும் எட்டுப்படிகள் அல்ல. அவை வெவ்வேறு பகுதிகள்.

அதில் முதல் பாதை, யம-. ஆன்மிக நடத்தை
விதிகளைப் பற்றியது. இதில் ஐந்து விதிகள்
உள்ளன. 1. ஸத்ய - எண்ணம், சொல் மற்றும்
செயல்களில் ஸத்யத்தைக் கடைபிடிப்பது.

2. அஹிம்ஸா - எண்ணம், சொல் மற்றும்
செயல்களில் கொல்லாமையைக்
கடைபிடிப்பது. 3. ஆஸ்தேய - திருடாமை.

4. அபரிகிரஹ - எளிமையான வாழ்க்கையை வாழ்வது. 5. ப்ரம்மசர்ய - இயல்பு நிலையில் வாழ்வது.

இந்து பாரம்பரியத்தில், ஆன்மிகத் தேடுதல் உடைய ஒருவர், ஸந்நியாஸ வாழ்க்கைக்குள் நுழைவதற்கான தீட்சையைப் பெறும்போது, ‘ஆன்மிகத்தின் இந்த ஐந்து விதிகளையும் நான் சிரத்தையுடன் கடைபிடிப்பேன்’ என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும்; அதைத் தீவிரமாகக் கடைபிடிக்கவும் வேண்டும்.

நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களுடன், இமயமலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு, சார்தாம் யாத்திரை செல்வேன். முதல் ஸ்தலமான ரிஷிகேசில் பயணத்தை ஆரம்பிக்கும்போது, புனித கங்கைக்கரையில், ஒவ்வொருவரும் இந்த ஐந்து விதிகளையும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். அந்த ஆன்மிகப் பயணம் முழுவதும் அவர்கள், இந்த விதிகளை சிரத்தையுடன் கடைபிடிக்கும் ஆன்மிக சாதகர்களாக இருப்பார்கள்.

இரண்டாவது பாதை, நியம - உடலளவிலும் மனதளவிலும் ஆன்ம அளவிலும் ஒருவர், தூய்மையாகவும் மேன்மையாகவும் தம்மை உயர்த்திக்கொள்வதற்கான தினசரி பயிற்சிகளை உள்ளடக்கியது.

A person meditating in lotus pose by the water

மூன்றாவது பாதை, ஆஸன. ஆஸனம்
என்பது த்யானத்திற்கு சௌகரியமான
நம் உடலின் நிலை, அதாவது
நாம் அமரும் முறை. இன்றைய
காலக்கட்டத்தில் இந்த ஆஸனங்களும்
யோகாவும் ஒன்றாகாவிட்டது.

நான்காவது பாதை, ப்ராணாயாமம் - சுவாசத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது. இது உடலையும் - மனத்தையும் உள்முகப்படுத்த உதவுகிறது.

ஐந்தாவது பாதை, ப்ரத்யாஹார - புலன்களிடமிருந்தும் புலனின்பப் பொருள்களிடமிருந்தும் புலனின்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்வது. இதுவும் நம்மை உள்முகப்படுத்த உதவும்.

ஆறாவது பாதை தாரணா. மனத்தைக் கட்டுப்படுத்த, தேர்ந்தெடுத்த ஒரு பொருளின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது.

ஆன்மிக முன்னேற்றத்திற்கும், ‘நாம் இந்தப் பிரபஞ்சிருப்பின் ஒரு பாகமே’ என்பதை உணர்வதற்கும் த்யானமே சிறந்த பாதை

எப்போது ஒருவரால், ஒரு பொருளின் மீது தம் கவனத்தை ஒருமுகப்படுத்த முடிகிறதோ, அப்போது அவரது மனம் கூர்அறிவைப் பெறுகிறது. அந்த நிலையை அடையும்பொழுது, அதே கவனத்தை எந்தவொரு பொருளின் மீதும் அவரால் செலுத்த முடியும்.

ஏழாவது பாதை, த்யானம் - தம்முடைய இருப்புத்தன்மையின் மீது தியானிப்பது.

எட்டாவது மற்றும் கடைசிப்பாதை ஸமாதி. நம்முள் முழு விழிப்புணர்வு நிகழ்ந்து, முழுமையான இணைப்பு ஏற்படும் நிலையை இது குறிக்கிறது.

தொடர்ந்து ச்ரத்தையுடன் இந்த யோக முறைகளைக் கடைபிடிக்கும் ஒருவர், ‘இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் தாம்’ என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்.

Mிக ஆழமான ஈடுபாடுகொண்ட சில சாதகர்கள், இடைப்பட்ட பாதைகள் எதிலும் பயணிக்காமலேயே ஸமாதி அனுபவத்தைப் பெறுகிறார்கள். இது மிகவும் அரிதாக நடப்பது.

என்னைப் பொறுத்தவரை, இன்றைய நவீன உலகத்தில், ஆன்மிக முன்னேற்றத்திற்கும், ‘நாம் இந்தப் பிரபஞ்சிருப்பின் ஒரு பாகமே’ என்பதை உணர்வதற்கும் த்யானமே சிறந்த பாதை என்று கருதுகிறேன்.

இருளும் ஒரு சக்தியே

விழிப்புணர்வு ஏற்படாதவரை, ஒருவர் என்னதான் முயற்சிசெய்தாலும் தம்மை அடைய முடியாது என்கிறார் கிருஷ்ணர். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது விழிப்பைப்பற்றி, அடைவதைப் பற்றி அல்ல.

ஸத்யம் என்னவென்றால், நம்முடைய தனி இருப்பானது, இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே. நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பைச் சென்றடைய வேண்டியதில்லை. நமக்குத் தேவை, அதைப் பற்றிய விழிப்பே!

இந்த ஸத்யத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதில்லை. 'அது இருக்கிறது' என்ற இந்த ஸத்யத்தை உணரவேண்டும் அவ்வளவுதான்.

நம்முடைய தனிப்பட்ட அஹங்காரத்தினால், மாயையினால் நம் கண்கள் கட்டப்பட்டிருப்பதால், 'நாம் இந்தக் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகமே' என்ற ஸத்யத்தை மறந்துவிட்டோம்.

யோகிகள், தெய்விகத்துடன் ஒன்றுபட்டிருக்கும் தங்கள் உண்மைநிலையை உணர்ந்து கொள்வதற்கு, மாயை என்னும் திரையை விலக்கி, மயக்கத்தை விட்டொழிக்கிறார்கள்.

இந்தத் திரையை விலக்குவதற்கான ஒரு நுட்பமே, ஒரு பாதையே தியானம். தியானம் ஒருவரை தமக்குள் மேலும் மேலும் ஆழமாகச் செல்லவைக்கிறது; விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஒளி என்பது விழிப்புணர்வு. ஒளி என்பது வாழ்வின் ஆதாரம். பைபிளில் 'அங்கு ஒளி இருந்தது. அந்த ஒளி இருக்கட்டும்!' என்ற வாசகம் இருக்கிறது.

ஒளி, கடவுளால் இந்தப் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் படைப்புக்களில் ஒன்று. சூரியனின் ஒளியும் வெப்பமும் இல்லாமல், இப்பிரபஞ்ச வாழ்வு சாத்தியமற்றது என்ற உண்மை நமக்குத் தெரியும். ஒவ்வொரு பொருளும் ஜீவனும், சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளியிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் கிடைக்கும் சக்தியினை மையமாகக்கொண்டுதான் சுழல்கின்றன.

சூரியன், இருளைப் போக்கும் சக்தி. கிருஷ்ணர், 'சூரியனையும் சந்திரனையும் நம் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமான நெருப்பினையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்தது தாமே' என்று மட்டும் சொல்லவில்லை, 'இருளைப் போக்குவதும் தாமே' என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணர், இருளை அழிக்கும் குரு. குரு என்றாலே இருளை நீக்குபவர் என்றுதான் பொருள். சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பைப்போன்று கிருஷ்ணர் ஒரு தலைசிறந்த குருவாக இருந்து, நம்மை விழிப்புணர்வை நோக்கி அழைத்துச்செல்கிறார்.

கிருஷ்ணர் நம்முடைய ஸம்ஸ்காரங்களை அழிப்பவர். ஸம்ஸ்காரங்கள் என்பது நம்முடைய விழிப்பற்ற தன்மையின் படைப்பு. இருளுக்கு 'நேர்மறையான இருப்பு' கிடையாது. அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முடியாது. ஆனால், இருளை ஒளியைக்கொண்டு அழிக்க முடியும்.

ஒளியின் இருப்பு இருளைக் கரைத்துவிடுகிறது. ஒளியில்லாதவரையில்தான் இருள் இருக்க முடியும். இருளை நாம் உருவாக்க முடியாது; ஏதோ ஒன்றின் இல்லாமையே இருள். எப்போது ஒளி வருகிறதோ அப்போது இருள் அழிந்தே தீரும். விழிப்புணர்வின் வருகையினால் ஸம்ஸ்காரங்கள் அழிகின்றன.

கண்பார்வை இல்லாத ஒருவர், இருளால் பாதிக்கப்படுவதில்லை. இருளைப்பார்த்து அவர் பயப்படுவதில்லை. குருடருக்கு இருள்தான் அவருடைய இயல்பு நிலை. ஒரு குருடர், தாம் இருளில் ஒரு பேயையோ அல்லது ஆவியையோ பார்த்ததாகச் சொல்வதில்லை. இருளில்தான் அவர் எப்போதுமே இருக்கிறார்.

உண்மையிலேயே துணிவும் தைரியமும் உடைய ஒருவர்கூட, இருளினால் பாதிக்கப்படுவதில்லை. எதைப்பற்றியும் பயப்படாத ஒருவருக்கு தம்முடைய அஹங்காரம் அழியும்போதும், அடையாளம் அழியும்போதும், மரணத்தின்போதும்கூட பயம் இருக்காது. அவருக்கு இருள், பயத்தை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. அவரால் ஒளியையும் இருளையும், எந்தவொரு ஆசையும் அச்சமும் இல்லாமல் கையாள முடியும்.

இந்த இரண்டு வகையான மனிதர்களைத் தவிர, அனைவருக்குமே இருள் ஒரு பிரச்சினையாகவும் பயம்தரக்கூடியதாகவுமே இருக்கிறது. நம்முடைய ஆனந்த ஸ்பூரண த்யான முகாமிலும். நித்யானந்த ஸ்பூரண த்யான முகாமிலும் பங்கேற்பாளர்கள் இருளைத் தியானிப்பதற்கு வழிநடத்தப்படுவார்கள். இது மிகுந்த சக்தியளிக்கக்கூடிய தியானம். உங்களுக்கு இது ஆச்சரியமாகக்கூட இருக்கலாம், ஆனால் இருள் என்பது சக்தி.

ஒளியின் கடவுள் மட்டுமல்ல இருளின் கடவுளும் கிருஷ்ணரே!

இந்த தியானத்துள் மிகுந்த விழிப்புணர்வுடன் செல்பவர்களுக்கு, மிகவும் சக்தி வாய்ந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இதெச் செய்பவர், படிப்படியாகத் தம் புலனுணர்ச்சிகளை இழப்பார். பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் தொடு உணர்வு ஆகிய அத்துணை புலனுணர்ச்சிகளையும் இழப்பார். தம்முடைய உடலின் எல்லைகளைப் பற்றிய உணர்ச்சியையும் விட்டுவிடுவார். அவரது நினைவிலிருந்து உடலே மறைந்துவிடும். அதன் பின்பு, எண்ண ஓட்டம் நின்று, மனம் அமைதியாகிவிடும்.

callout text

இருள்மீது கவனத்தைக் குவித்து தியானம்
செய்வது, நம்மை ஆன்மாவை உணரும்
இடமாகிய விழிப்புறுநிலையை
அடையச்செய்யும். உடல், மனம் மற்றும்
புலன்களை இழக்க முடியும், ஆனாலுங்கூட,
நம்முடைய ஆன்மா அழியாமல் இருக்கும்
என்பதை உணருகின்றனர்.

சில மனிதர்களால், அதுவும் வருடத்தின்
குறிப்பிட்ட காலங்களில் ஒளியைவிட
இருளின் கால அளவு அதிகமாக இருக்கும்
நாடுகளில் வாழும் மனிதர்களால், இந்த
'இருள் தியானத்திற்குள்' செல்லும்போது,

அவர்களால் முழுமையாக இருளை உணர முடியவில்லை.

ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா சமீபத்திய பகுதிகளில், குளிர் காலத்தில் சூரியனைப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்தவர்களுக்கு இருளைப்பற்றிய பயமே இல்லை. அப்படிப்பட்டவர்களை, இருள் சம்பந்தமான பயத்தைப் போக்குவதற்கு, 'இருள்மீது ஆழ்ந்து தியானியுங்கள்' என்று சொல்லும்போது, அவர்கள் இருளை, பயப்படுவதற்குரிய ஒரு விஷயமாகக் கருதவில்லை.

இதிலிருந்து, கிருஷ்ணர் ஒளியின் கடவுள் மட்டுமல்ல, இருளுக்குமான கடவுள் என்பது தெரிகிறது.

text banner

கிருஷ்ணர், தம்முடைய ஸாந்நித்யம்
ஊடுருவிப் பரவியிருக்கும் விஷயங்களை
மேலும் விவரிக்குறார். ஒளியாகவும்
வெப்பமாகவும் இருந்து, இந்தப்
பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து
ஜீவன்களையும் பேணிக்காப்பவராகவும்
தாமே இருப்பதாகச் சொல்கிறார். நம்மைப்
பொறுத்தவரை, அவர் நம் மன இருளான
ஸம்ஸ்காரங்களை அழிப்பவர்.

மேலும் அவர், நிலவிலிருந்து வெளிப்படும்
சக்தியாகத் தாமே இருப்பதாகவும், இச்ச
க்தியின் மூலம் தாவரங்களுக்குள் உயிர்ச்ச
க்தியாகவும் தாமே இருப்பதாகவும்
சொல்கிறார்.

தைத்த்ரேயே உபநிஷத் சொல்கிறது: “ப்ரஹ்மமே, இப்பிரபஞ்ச விழிப்புணர்வே இறுதி ஸத்யம்என்பதை உணர்ந்தவர்கள், தங்கள் இதயத்தில் இறைவனைக் காண்பார்கள். வாழ்க்கை அவர்களுக்கு எல்லா ஆசீர்வாதங்களையும் பொழிகிறது.

இந்த இறுதி ஸத்யத்திலிருந்து ஆகாச சக்தி தோன்றியது. ஆகாசத்திலிருந்து காற்று வந்தது. காற்றிலிருந்து நெருப்பு உண்டானது. நெருப்பிலிருந்து நீர் உருவானது. நீரிலிருந்து பூமி உருவானது. இந்தப் பூமியில் இருந்து மரங்களும் செடிகளும் உருவாக்கப்பட்டன. மரங்களும் செடிகளும் உணவைத் தந்தன. அந்த உணவிலிருந்து மனித உடலும் தலையும் கையும் காலும் இதயமும் உருவாகின.”

உண்ணும்போது உண்ணுங்கள், தூங்கும்போது தூங்குங்கள்

'தாமே ப்ரம்மம் எனவும், தம்முடைய வெளிப்பாடுகளான நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் மூலமாக, இந்த உலகில் செடிகளையும் மரங்களையும் வாழவைப்பதாகவும், அதன் மூலம் உருவாகும் காய்களையும் பழங்களையும்கொண்டு மனிதர்களையும் வாழச்செய்பதாகவும்' கூறுவதன் மூலம், கிருஷ்ணர், இந்த உபநிஷத் கூற்றை உறுதிப்படுத்துகிறார்.

மரம் செடிகொடிகள் இல்லாமல் உணவு கிடையாது. உணவு இல்லாமல், உடலும் மனமும் இருக்க முடியாது. இதே உடலும் மனமும் இறந்தபிறகு அடுத்தவர்களுக்கு உணவாகிறது. உணவு என்பது தெய்விகத்தன்மையின் வெளிப்பாடு. உணவில் இருக்கும் சக்தியே, ஸம்ஸ்காரங்களைப் படைக்கவும் அழிக்கவும் செய்கிறது.

நம்மில் பெரும்பாலானோர், உணவை ஒரு அடிப்படை தேவையாகவோ அல்லது நாவின் சுவைக்கான ஒரு பொருளாகவோதான் பார்க்கிறோம். ஒன்று, உணவை அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அதற்கு அடிமையாய் இருக்கிறோம். நாம் என்ன உண்கிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஒரு ஜென் குருவிடம் அவருடைய சீடர் கேட்கிறார், "குருவே, நீங்கள் ஞானமடைந்தபின், உங்களிடம் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?" என்றார். அதற்கு அந்த குரு, "அப்பா, நான் ஞானமடைந்தபின், உண்ணும்போது உண்கிறேன், தூங்கும்போது தூங்குகிறேன்," என்றார்.

இந்தப் பதில், கொஞ்சம் குழப்பத்தைத் தருவதாகக்கூட இருக்கும். நம்மில் எத்துணை பேர் உண்ணும்போது உண்கிறோம்; நம்மில் எத்துணை பேர், உண்ணும் உணவில் நினைவைக்குவித்து உண்கிறோம்? உண்ணும்போது, உண்பதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் - பேசுவது, எதையாவது கனவு காண்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சண்டை போடுவது என அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.

நாம், உணவை ஒரு குப்பையாகவே
நினைக்கிறோம். அப்படிநினைப்பதாலேயே
அது குப்பையாகவே மாறிவிடுகிறது.
உணவைச் சக்தியின் வடிவமாக, உயிர்ச்
சக்தியாகப் பார்க்கத் தொடங்கும்போதே,
நமக்குள் ஒரு மிகப்பெரிய உணர்வுமாற்றம்
ஏற்படும். கிறிஸ்துவ மதத்தில் ஒரு
அருமையான பழக்கம் உள்ளது,
உண்ணுவதற்கு முன், அந்த உணவைத் தந்த
கடவுளுக்கு நன்றியைச் செலுத்துவார்கள்.

உணவைச்
சக்தியின் வடிவமாக,
உயிர்ச்சக்தியாகப்
பார்க்கத் தொடங்கும்போதே,
நமக்குள் ஒரு மிகப்பெரிய
உணர்வுமாற்றம் ஏற்படும்.

உண்ணுவதற்கு முன், இந்த உணவை நமக்காக அருளிய இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவியுங்கள். அந்த உணவின்மீது சிறிது நேரம் தியானியுங்கள். பாரம்பரிய இந்து கலாச்சாரத்தில் ஒரு பழக்கம் உள்ளது, இறைவனுக்கு நன்றிசெலுத்தி, மந்திர உச்சாடனம்செய்த பின்னரே உண்பார்கள். இந்தப் பழக்கத்தை விழிப்புணர்வுடன் பின்பற்றும்போது, மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்குள் நிகழும்.

உண்ணும்போது நாம் உணவில் கவனம் செலுத்துவதினால், நாம் நிகழ்காலத்தில் இருப்போம். நிகழ்காலத்தில் நிகழும் அனைத்து விஷயங்களுமே, முதன்முறையாக நிகழும் ஒரு நிகழ்வே, அது புத்தம் புதியதாய் இருக்கும்.

ஒரு குருவுக்கு, அவருடைய டாக்டர் பத்திய உணவு சாப்பிட அறிவுறுத்தியிருந்தார். அந்தப் பத்திய உணவை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தச் சமையல்காரர், ஒருநாள் அந்த குருவிடம், "தாங்கள் எப்படித்தான் தினமும் ஒரே உணவை, குறைகூறாமல் உண்கிறீர்களோ! ஒரே உணவைச் சமைக்க எனக்கே சலிப்பாக இருக்கிறது,'' என்றார்.

அதற்கு அந்த குரு, "நான் எங்கே, ஒரே உணவை உண்கிறேன்? நேற்று நான் உண்ட உணவும், இன்று நான் உண்ணும் உணவும் வேறு வேறுதானே; இன்று உண்ணும் உணவும் நாளை உண்ணப்போகும் உணவும் வேறு வேறுதானே?!'' என்றார்.

நிகழ்காலத்தில் தளர்வாக, சௌகரியமாக வாழமுடிந்த மனிதர், மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பார். அவர் கிருஷ்ணரோடு வாழ்வார்.

இறைவன் குடிகொண்டிருக்கும் இடம் -உணவு

சூரியன், ஒளியையும் வெப்பத்தையும் சக்தியாக வெளிப்படுத்துவது நமக்குத் தெரியும். மேலும் சூரியன் இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது என்பதும் நமக்குத் தெரிந்ததே.

ஆனால், சூரியனின் பங்களிப்பை உணருகின்ற அளவிற்கு, சந்திரனின் பங்களிப்பை நாம் உணர்வதில்லை. சந்திரன், மரங்களும் செடிகொடிகளும் வாழ்வதற்கான உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. இதன் மூலம் மனிதர்களுக்கான உயிர்ச்சக்தியைக் கொடுக்கிறது. ஆனால், சூரியன் அளவிற்கு நம்மால் சந்திரன் போற்றப்படுவதில்லை.

நிலவு, நம்முடைய நடத்தையையும் மன அமைப்பையும் மனத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஸம்ஸ்க்ருத்தில, ஸோம என்பது நிலவைக் குறிக்கும். அதாவது நிலவின் தேய்ந்து வளரும் நிலையற்ற தன்மையை, இது குறிக்கிறது.

அடுத்து கிருஷ்ணர், வைச்'வாநர, ப்ராண மற்றும் அபாந பற்றிப் பேசுகிறார்.

ப்ரு'ஹதாரண்யக உபநிஷத் சொல்கிறது: 'மனிதர்கள் உண்ணும் உணவை உள்ளிருந்து செரிக்கச் செய்யும் நெருப்பே, வைச்'வாநர. அதன் சப்தத்தை, நம் காதுகளை மூடிக்கொண்டால், நம்மால் கேட்க முடியும். மரணம் நெருங்கி, ஆன்மா பிரியப்போகும் நேரத்தில், இந்தச் சப்தம் வெளிப்படாது. மேலும் ஆஹாரமோ அல்லது ப்ராணனோ ஒன்றைவிட்டு ஒன்று தனியாகச் செயல்பட முடியாது'.

சுவாசம் இல்லையென்றால், உணவு கெட்டுவிடும்; உணவு இல்லையென்றால், சுவாசம் உலர்ந்துவிடும். இவை இரண்டும் இணைந்த விழிப்புணர்வு நிகழும்பொழுது, நம்முள் ஆன்ம உணர்வு மலர்கிறது.

உணவு மொத்தம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மென்று விழுங்கும் திட உணவு, காற்றின் மூலமாக உள்செல்லும் உணவு, உறிஞ்சிக் குடிக்கும் திரவ உணவு. மற்றும் நாக்கினால் நக்கி உண்ணும்

> ஆஹாரம், ப்ராணன் - இவை இரண்டும் இணைந்த விழிப்புணர்வு நிகழும்பொழுது, நம்முள் ஆன்ம உணர்வு மலர்கிறது. உணவு - இப்படி நான்கு வகைகள் இருக்கின்றன. இந்த நான்கு வகை உணவுகளையும், ஆகாயம் தவிர, மற்ற நான்கு பூதங்களான காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலத்துடன் சம்பந்தப்படுத்தலாம்.

பண்டைய இந்து கலாசாரத்தின் மருத்துவ முறையான ஆயுர்வேதம், வைச்வாநர விதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. நம்முள் இருக்கும் நெருப்பின் தரமே, நம்முடைய பசி, பசியின்மை மற்றும் நம்முடைய உடல் நலத்தையும் நிர்ணயிக்கிறது.

கிருஷ்ணர், இங்கே உணவையும் தெய்வீகத்தன்மையுடையது என்கிறார். உணவும் அவருடைய அடையாள முத்திரையைத் தாங்கியிருக்கிறது; சக்தியைத் தாங்கியிருக்கிறது என்கிறார்.

> நம்முள் இருக்கும்
> வைச்வாநர நெருப்பின்
> தரமே நம்முடைய
> பசி, பசியின்மை
> மற்றும் நம்முடைய
> உடல் நலத்தையும்
> நிர்ணயிக்கிறது.

நாம் உணவை மதிப்பதே இல்லை. அதை
அலட்சியப்படுத்துகிறோம்; அதை, சர்வ
சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.
உணவு பற்றாக்குறை ஏற்படும்போதுதான்,
அதன் அருமையை நாம் உணருகிறோம்.
அப்போது மட்டுமே அதைக்
கொண்டாடுகிறோம்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள்.
உங்களையும் பாருங்கள். நாம் உண்ணும்
உணவை எத்தனை தடவை நாம் மதித்து
சாப்பிட்டிருக்கிறோம்?

ஒரு ஏழை, தாம் உண்ணும் சாதாரண உணவைக்கூட, எவ்வளவு களிப்புடனும் விழிப்புணர்வுடனும் உண்கிறார்.

நமக்கு வசதி வாய்ப்புகள் அதிகமாக அதிகமாக உணவு மீதான நமது விழிப்புணர்வு குறைகிறது. நம்முடைய நோய்களுக்கான அடிப்படைக்காரணமே உணவுக்கு நாம் செய்யும் அவமரியாதையே.

இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள பாரம்பரியமிக்க வீடுகளில், இன்றும்கூட, வீட்டில் உள்ள மனிதர்கள் உண்ணுவதற்கு முன்பாக காக்கைக்கோ அல்லது மற்ற விலங்குகளுக்கோ உணவுபடைப்பது வழக்கம். மேலும் பல நேரங்களில், யாராவது ஒரு துறவிக்கோ அல்லது பிச்சைகேட்பவருக்கோ உணவுகொடுக்காமல் வீட்டில் உள்ளவர்கள் உண்பது இல்லை. மற்ற உயிர்களுக்கும் மனிதர்களுக்கும் உணவளிப்பது ஒரு மிகச்சிறந்த வழிபாடாக இந்து கலாசாரத்தில் போற்றப்படுகிறது. உணவு என்பது இறைவன் குடிகொண்டிருக்கும் விஷயமாகவே கருதப்படுகிறது.

ஒரு சின்ன கதை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தம்முடைய மாணவனுக்கு, உண்ணும்போது எப்படி உட்கார வேண்டும், எப்படி உணவைக் கையில் எடுக்க வேண்டும், உண்ணும் உபகரணங்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

அதைக் கேட்டுக்கொண்ட அந்தச்
சிறுவன், தன் எதிரே இருந்த உணவைக்
கையிலெடுத்துச் சட்டென சாப்பிடப்
போனான். அதைப்பார்த்த அந்த ஆசிரியை,
"நாம் எதையோ மறந்துவிட்டோம் என
நினைக்கிறேன்," என்றார்.

அதற்கு அந்த மாணவன், "எதை மறந்தோம்," என்றான்.

அந்த ஆசிரியை சொன்னார், "நீ
உண்ணுவதற்கு முன்னால் பிரார்த்தனை
செய்வதில்லையா?" என்றார்.

அதற்கு அந்தச் சிறுவன் சொன்னான், "இல்லை! ஏனென்றால் என் அம்மா நன்றாகச் சமைப்பார்கள்," என்றான்.

கேள்வி: சுவாமிஜி, நீங்கள் யோகா பற்றிச் சொன்னீர்கள். இன்றைய காலகட்டத்தில், யோகாவை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காகச் செய்கிறார்கள். இது தவறா?

ஒருவர் தம் உடம்பில் இருக்கும் வியர்வையை வெளியேற்ற நினைத்தால், அதற்கு யோகா தேவையில்லை. யோகா அதற்காக உருவாக்கப்பட்டது கிடையாது. யோகா, வெப்பம் அதிகமான, புழுக்கம் அதிகமான ஒரு அறையில் இருந்துகொண்டு வியர்வையை வெளியேற்றுவதற்காகச் செய்யப்படுவது கிடையாது. இவையெல்லாம் முரண்பாடான முறைகளாகும்.

நித்ய யோகா, உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது

உடலும் மனமும் இருப்புத்தன்மை அளவில் ஒன்றியிருப்பதற்காகச் செய்யப்படுவதே யோகா. அதற்காக உடலைப் பழக்கப்படுத்தும் நுட்பமே யோகா. இதுவே யோகாவின் ஒரே நோக்கமாகும். யோகா என்றால் ‘இணைத்தல்’ அல்லது இணைப்பதற்கான வழிமுறை என்றே பொருள். யோகா என்பது செயலையும் செயல்முறையையும் குறிக்கும் வினைச்சொல்; அது ஒரு இலக்கையோ அல்லது ஒரு இறுதி முடிவையோ குறிக்கும் பெயர்ச்சொல் அல்ல .

> உடலும் மனமும்
> இருப்புத்தன்மை அளவில்
> ஒன்றியிருப்பதற்காகச்
> செய்யப்படுவதே யோகா.

உடளவில் செய்யப்படும் யோகா
என்பது நமது தனி விழிப்புணர்வை
பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணையச்
செய்வதற்கான எட்டு பாதைகளில் ஒன்றே.

மிகச்சிறந்த யோக வல்லுநரான எனது
குருவால், என்னுடைய மூன்று வயது
முதற்கொண்டு, பல வருடங்களுக்கு
நான் யோகா பயிற்றுவிக்கப்பட்டேன்.
ஞான சக்தியைத் தக்கவைத்துக்கொள்ளும்
அளவிற்கு என் உடலைத் தயார்படுத்த,
அவர் ஒரு கருவியாகச் செயல்பட்டார்.
ஆன்மிகத் தேடலின்போது, நான் செய்த
கடுந்தவங்களுக்குத் தாக்குப்பிடிக்கும்
வகையில், என் உடல் தயாராவதற்கு இது
உதவியது.

சிலர் மிகச் சாதா ரணமாக, ப்ராணாயாமம் - மூச்சுப் பயிற்சியைச் செய்கிறார்கள். ஏதோ ஒரு உடற்பயிற்சிபோன்று ப்ராணாயாமத்தையும் நினைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இது மிகவும் அபாயமானது. ப்ராணன் என்பது உயிர்சக்தி. தவறாக உபயோகிக்கும்பொழுது, அது உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம்.

sரியாகப் பயன்படுத்தப்படும்பொழுது, இது ஆயுளை நீட்டிக்கும். உணவோ, தண்ணீரோ அல்லது காற்றோ இல்லாமல்கூட உயிர்வாழ ப்ராணாயாமம் உதவும். இதற்கெல்லாம் ஆழ்ந்த புரிதலும் சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் தேவை.

நம்முடைய ஆசிரியர்கள், நித்ய யோகாவைக் கற்றுத் தருகிறார்கள். நித்ய யோகா என்பது, யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவரின் உடல்மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

நித்ய யோகா, த்யானத்தை அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளது. த்யானத்தோடு அஷ்டாங்க யோகாவின் மற்ற அம்சங்களும் இணைக்கப்பட்டு, ஒரு முழுமைத்துவம்மிக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nithya Yoga practice group

நித்ய யோகா என்பது, நம் உடலை எந்த அளவிற்கு வளைக்கிறோம் என்பதல்ல. நாம் எந்த இலக்கை நினைத்துக்கொண்டு, இந்த உடல் அசைவுகளை மேற்கொள்கிறோம் என்பதே முக்கியம். நம்முடைய நோக்கமும், அதை ஆழ்ந்து மனதுக்குள் பாவனை செய்துபார்ப்பதுமே, அந்த இலக்கை அடைய வழிவகுக்கும். உங்கள் உடல் அந்த இலக்கை நினைத்தபடியே இயங்கும். நீங்கள் அதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்க வேண்டாம்.

நித்ய யோகா, உங்கள் வாழ்க்கையில் இன்னும் சில அசைவுகளை ஏற்படுத்துவது இல்லை. உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது.

தங்கள் உடல் நிலைக்கு யோகா என்பது முடியாத காரியம் என்று நினைத்த அறுபது, எழுபது வயதானவர்கள்கூட, நித்ய யோகா செய்கிறார்கள். அவர்களே ஆச்சரியப்படும் வகையில், அவ்வளவு சுலபமாக எந்தவொரு சிரமுமின்றி அவர்கள் உடல் இயங்குகிறது!

இந்தக் கம்ப்யூட்டர் காலத்தில், ‘மூளை மாசுபாடு’ எனும் விஷயத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்குத் த்யானம் ஒன்றே தீர்வு . நித்ய யோகா, த்யானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில், இதுதான் பாதுகாப்பானதும் நல்ல பலன்தரக்கூடியதுமான யோகா.

Hands holding a flute