KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/நமது மனம் எப்படி இயங்குகிறதுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

நமது மனம் எப்படி இயங்குகிறது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும்பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.

இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.

உங்கள் மனத்தின் இருப்பிடம் எது?

கிருஷ்ணர், 'அவரே நினைவாகவும் அறிவாகவும்' இருப்பதாக அறிவிக்கிறார். இதன் பொருள் என்ன?

நமது மனம் எப்படி இயங்குகிறது? அது எப்படி நம்பிக்கைகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது? நமக்கு நம்முடைய மனம் எங்கே இருக்கிறது என்பதுகூட தெரியாது.

உங்கள் மனம் எங்கே இருக்கிறது என்று உங்களைக் கேட்டால், உங்கள் தலையைக் காண்பிப்பீர்கள், அது உங்கள் மனம் அல்ல.

நம் உடலில் இருக்கும் அத்தனை திசுக்களுக்குள்ளும், ஒரு இயல்பான புத்திசாலித்தனம் நிறைந்திருக்கிறது. இந்தத் திசுக்கள் அனைத்தும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் திறன்கொண்டவை. அதனால் நமது புத்திசாலித்தனம் எப்போதுமே புதிதாகவும், காலத்திற்கேற்ப தன்னை உயர்த்திக் கொள்வதாகவும் இருக்கிறது. அது பழைமையானது அல்ல.

திசுக்களே நமது உடல் - மன அமைப்பை உருவாக்குகின்றன. அவை நம் உடலெங்கும் நிறைந்து இருக்கின்றன. அதனால், நம் மனம் உடலின் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது என்று நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது, நிச்சயமாக அது நம் தலையில் இல்லை.

இந்த மனமானது எப்படி இயங்குகிறது? திசுக்களினால் ஆன நமது உடல் - மன அமைப்பின் கூட்டு புத்திசாலித்தனம் எந்தவிதத்தில் இயங்குகிறது? இன்றளவும் அறிவியல், இதற்கான ஒரு சிறுகுறிப்பைக்கூட தர முடியவில்லை.

> நம் உடலில் இருக்கும் அத்தனை திசுக்களுக்குள்ளும் ஒரு இயல்பான புத்திசாலித்தனம் நிறைந்திருக்கிறது.

புலன்கள், எவ்வாறு வெளி உலகை உள்வாங்கிப் புரிந்துகொள்கின்றன என்பதை இன்றைய அறிவியலால் புரிந்துகொள்ள முடியவில்லை.

விஞ்ஞானிகளும், நரம்பியல்
வல்லுநர்களும், உளவியல் அறிஞர்களும்
மற்றும் பல துறை அறிஞர்களும், 'நமது
சிந்தனை செயல்முறை இப்படித்தான்

நடக்கிறது' என்று தாங்கள் நினைக்கிற
ஏதோ ஒரு ஸ்தூல பாதையைக் காட்டலாம்.
ஆனால், அதற்கு எந்தவொரு ஆதாரமும்
கிடையாது.

> திசுக்களே நமது
> உடல் - மன அமைப்பை
> உருவாக்குகின்றன.

நம்முடைய ரிஷிகளும் ஞானிகளும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்று அழகாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள், எப்படி எண்ணங்கள் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றிற்குப் பயணம்செய்கிறது என்பதை ஸ்தூல ரீதியாக விளக்கவில்லை, கருத்து ரீதியாக விளக்கியிருக்கிறார்கள்.

அவர்களுடைய இந்த விளக்கங்கள், நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நமக்கு அழகாகத் தெளிவுபடுத்துகின்றன.

இப்போது, நம் கண்களால் பார்க்கும் காட்சியை எப்படி உள்வாங்குகிறோம் என்பதை இந்தப் படத்தின் துணையோடு பார்ப்போம்.

diagram

இது கண்கள் வழியாக நாம் உள்வாங்கும் விஷயங்களுக்கு மட்டுமல்லாது, மற்ற புலன்களான காது, மூக்கு, நாக்கு மற்றும் உடலின் வழியாக நாம் உள்வாங்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொதுவானது.

ஒரு எடுத்துக்காட்டுக்காக, நாம் கண்களால் பார்க்கும் செயல்பாட்டை எடுத்துக்கொள்வோம் ஏனென்றால் புலன்சார்ந்த செயல்களில் கித்தட்டட்ட 80% செயல்கள் கண்கள் வழியாக உள்வாங்கும் செய்திகளாகவே இருக்கின்றன.

உங்கள் கண்கள் இப்போது என்னைப் பார்க்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தில் இந்தப் பார்க்கும் திறனை, சக்ஷு என்று சொல்கிறோம்.

சக்ஷு என்பது கண்களுக்குப் பின்புலத்திலிருந்து இயக்கும் சக்தியே தவிர, இது ஒரு உறுப்பு அல்ல. இது காட்சிகளைச் சிக்னல்களாக மாற்றும் திறன் கொண்டது. ஆங்கிலத்தில் இதை ‘டிஜிட்டல் சிக்னல் ப்ராஸசர் (Digital Signal Processor) என்று சொல்கிறார்கள்.

நாம் பார்க்கும் காட்சிகள், பயோ - சிக்னல் கோப்புகளாக மாற்றப்பட்டு, மனப்பதிவுகள் இருக்கும் நினைவப்பகுதியான சித்தத்திற்குள் அனுப்பப்படுகிறது. இந்த நினைவுப் பகுதி, இப்போது வந்திருக்கும் பதிவுகளை ஆராய ஆரம்பிக்கும். அது ஏற்கெனவே தனக்குள் வைத்திருக்கும் பதிவுகளையும், புதிதாய் வந்திருக்கும் பதிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்.

நம் உடல் - மன
அமைப்பின் வேகம்
கம்ப்யூட்டரால் ஈடுசெய்ய
முடியாததாகவே இருக்கிறது.

சித்தம் ஒரு வடிகட்டியாகச் செயல்படுகிறது. அது முதலில் நீக்குகிறது. அதாவது ஏற்கெனவே இருக்கும் ஒவ்வொரு பதிவையும், புதிதாய் வந்திருக்கும் பதிவோடு ஒப்பிட்டுப்பார்த்து, ‘இது அதுவல்ல, இது அதுவல்ல’ என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும்.

‘இப்போது நாம் பார்ப்பது, ஒரு விலங்கு அல்ல, ஒரு பாறை அல்ல’, என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும். ஸம்ஸ்க்ருதத்தில் இதை, ந இதி, ந இதி என்று சொல்வார்கள்.

‘இதுவல்ல, இதுவல்ல’ என்பதன் மூலம், ஒரு பகுதி மட்டுமே செயல்முறைபடுத்தப்பட்ட, வடிகட்டப்பட்ட ஆவணமானது முழுதாகச் செயல்முறை ஆக்கப்பட்டதல்ல.

அடுத்ததாக அந்த ஆவணம், நம்முடைய மனத்துள் அதாவது மனஸில் நுழைகிறது. அதன் பின்பு மனம், ‘உங்கள் முன் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஒரு மனிதர்தான்’ என்பதைச் சொல்லும். மனம்தான் நாம் பார்க்கும் பொருளை அடையாளம் காண்கிறது. தனக்குள் இருக்கும் மிகப்பெரிய நினைவுப்பதிவுக் கோப்புகளிலிருந்தே மனஸ் இதைச் செய்கிறது. இன்றளவும் ஒரு கம்ப்யூட்டரால் இந்த அடையாளம் காணும் செயலைச் செய்ய முடியவில்லை. இந்த ஒரு செயலைச் செய்வதற்குத் தேவைப்படும் உபகரணங்களையும் சக்தி அளவையும் கணக்கிட்டுப் பார்க்கையில், அது ஒரு கடினமான காரியமாக இருக்கிறது.

மேலும் நம் உடல் - மன அமைப்பு, இந்தச் செயலைச் செய்ய எடுத்துக்கொள்ளும் வேகம், கம்ப்யூட்டரால் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது.

அகங்காரம் தூங்குவதே இல்லை

இப்படி மனஸால், அடையாளப்படுத்தப்படும் பொருளின் விஷயங்கள் அடங்கிய கோப்பு, ஒரே தாவலாக நமது அகங்காரத்தை அடைகிறது.

அகங்காரம் என்பது, சிக்மண்ட் ஃப்ராய்டும் (Sigmund Freud) மற்றவர்களும் விளக்கியதுபோல, அது மனிதனின் அடையாளம். அங்கேதான், நாம் சோதித்துப்பார்த்த அத்தனை விஷயங்களின் பதிவுகளும் இருக்கிறது.

ஆனால், நான் இங்குச் சொல்கின்ற வரையறை, மேற்கத்திய உளவியல் தத்துவங்கள் சொல்லும் வரையறையைக் காட்டிலும் வேறானது.

நம்முடைய அகங்காரம், இந்தக் கோப்பை தனக்குள் ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணப்பதிவுகளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும். அந்தப் பதிவுகளைப் பொறுத்தே, இந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

நாம் ஏற்கனவே இப்படி ஒரு நிகழ்ச்சியில்
பங்குகொண்டு, அதில் நமக்கு ஒரு நல்ல
அனுபவம் கிடைத்திருந்தால், தொடர்ந்து
அமர்ந்திருந்து அவருடைய பேச்சைக்
கேட்போம் என்று தீர்மானிப்போம்.

அப்படி இல்லாமல், அந்த நபருடனான,
அதுபோன்ற வேறுயாருடனான நமது
முந்தைய அனுபவம் மோசமானதாக
இருந்திருந்தால், நாம் அந்த இடத்தைவிட்டு
உடனடியாகச் சென்று விடுவோம்.

நம் அகங்காரம்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.

நம் அஹங்காரம்தான், நாம் இந்த நிகழ்ச்சியைக் கவனிக்க வேண்டுமா அல்லது இங்கிருந்து எழுந்து செல்ல வேண்டுமா என்பதை முடிவுசெய்கிறது. நாம் அந்த முடிவை வெளிப்படுத்துகிறோம், அந்த முடிவைப் பொறுத்துச் செயல்படுகிறோம்.

இந்த அஹங்காரத்தளமானது நம்முடைய விழிப்புணர்வு, தர்க்க அறிவு, பட்டறிவு மனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.

இந்த அஹங்காரமானது, தொடர்ந்து தன்னுள் முத்திரைகளையும், கடந்தகால நினைவுப் பதிவுகளையும், நிறைவேறாத ஆசைகளையும், மற்ற உணர்ச்சிமயமான எதிர்ச்செயல்களையும், ஒரு பதிவுகளாகத் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கிறது.

நாம் இந்த அனுபவங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது நமக்குள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அஹங்காரம் தூங்குவதே இல்லை.

இந்த விழிப்புணர்வற் பகுதியானது எதிர்மறை நினைவுகளாலும் அமைதியற்ற தன்மையாலும் நிரம்பி இருக்கிறது. நம்முடைய எல்லாக் கடந்தகால நினைவுப்பதிவுகளும், நமது எண்ண அமைப்புகளும், இந்த விழிப்புணர்வற் பகுதியில் கோப்புகளாக இருக்கின்றன.

உளவியலில், இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள நினைவுப்பதிவுகளை engrams (பதிக்கப்பட்ட நினைவுகள்) என்று அழைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வற் பகுதியில்தான், அனைத்து விதமான கோப்புகளும் சேகரிக்கப்படுகின்றன. எந்த ஒரு தர்க்க ரீதியான தொடர்புமின்றி, எல்லாச் சம்பவங்களும் அப்படியே வரிசைப்படி பதிவாகின்றன.

எண்ணப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான், நாம் எப்போதும் ஓய்வின்றி இருக்கிறோம்.

எண்ணப்பதிவுகளின் எண்ணிக்கை
அதிகமாக இருப்பதால்தான், நாம்
எப்போதும் ஓய்வின்றி இருக்கிறோம்.

ஏற்கனவே ஏராளமான கோப்புகள்
சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் இந்த
விழிப்புணர்வற் பகுதிக்குள், ஒரே
தாவலாக இந்தக் கோப்பும் தாவும்போது
என்ன நடக்கிறதென்றால், ஒரு தீர்மானத்தை
எடுக்கவிருக்கும் அஹங்காரப் பகுதிக்குள்

இந்தக் கோப்பு முழுமையாகச் சென்று சேருவதில்லை.

ஒரு கம்ப்யூட்டரில், தகவல்களைச் சேகரிக்கப் பயன்படும் ஹார்ட் டிஸ்கானது (Hard Disc) பதிவுகளால் நிரம்பியிருக்கும்பொழுது, புதிதாகத் தகவல்கள் ஏதும் சேகரிக்கும் அளவிற்கு அதில் இடமிருக்காது. அப்போது, கம்ப்யூட்டர் இயங்க முடியாமல் நின்றுவிடும்.

இதேபோல்தான், நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதியும் இருக்கிறது. பழைய நினைவுப்பதிவுகளுடனும் பழைய எண்ண அமைப்புகளுடனும் அது நிரம்பியிருப்பதால், நம்முடைய அஹங்காரமானது, சரியாக ஆராய்ந்து சிறந்ததொரு முடிவை எடுக்காமல், அவசர கதியில், ஒரு திறமையற்ற முடிவை எடுத்துவிடுகிறது.

உதாரணத்திற்கு, புகைபிடிப்பதை எடுத்துக்கொள்வோம். நம்முடைய ஞாபகங்களைப் பொறுத்தவரை புகைபிடிக்கும் பழக்கம் கெடுதலானது என்பது நமக்குத் தெரிந்ததே. அது நம் உடலுக்குக் கேடானது என்பதும் தெரிந்ததே. நாம் நம்முடைய விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, இந்த முடிவையே நாம் பிடித்துக்கொண்டிருப்போம்.

இருந்தாலும், நம்முடைய மனமானது அஹங்காரத்திற்குள் நுழையும்போது, ஏற்கெனவே இருக்கும் மனப்பதிவுகள் அதற்கு இடும் கட்டளை, ‘புகைபிடி’ என்பதுதான். உடனே நாமும் புகைபிடிக்கத் தீர்மானிக்கிறோம்.

விழிப்புணர்வுப் பகுதி ‘புகைபிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது, அதனால் நாம் புகைபிடிக்க வேண்டாம்’ என்று சொல்லும். ஆனால் விழிப்புணர்வற்ற பகுதியோ, ‘புகைபிடிக்க வேண்டும்’ என்றுகூட சொல்வது கிடையாது, ‘புகைபிடித்தாக வேண்டும்’ என்ற தீர்மானத்தையே அது எடுத்துவிடும். நாம் அதைச் செயல்படுத்துவோம்! முழுக்க முழுக்க இது ஒரு இயல்பூக்க நிலையிலான முடிவு.

இந்த விழிப்புணர்வற்ற பகுதியானது, மிகவும் சக்தி வாய்ந்தது. இதை மூன்று வகையாக உபயோகப்படுத்தலாம். இயல்பூக்க நிலை, தர்க்க நிலை மற்றும் உள்ளுணர்வு நிலை.

விழிப்புணர்வற் ற பகுதி, எதிர்மறை
நினைவுப்பதிவுகளாலும் அமைதியற்ற
தன்மையாலும் நிறைந்திருக்கும்வரை,
நம் முடிவுகள் இயல்பூக்க நிலையிலேயே
இருக்கின்றன. இயல்பூக்க நிலையிலும்
விழிப்பற்ற நிலையிலும், ஒரு விலங்கு
போலவே முடிவெடுக்கிறோம். நாம்
அவசர நிலையில், பதட்டமான முடிவுகளை
எடுக்கும்போது, வருந்தும்படியான
முடிவுகளையே எடுக்கிறோம்.

> நம்முடைய விழிப்புணர்வற் ற
> பகுதிக்குள் ஆழ்ந்த
> அமைதியையும்
> விழிப்புணர்வையும்
> நிரப்பும்போது, நாம்
> உள்ளுணர்வு நிலையிலே
> இருப்போம்.

அடுத்ததாக தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் நிலை. இந்த நிலையில், நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். தர்க்க ரீதியான முடிவுகளை எடுத்தாலும் அதில் மிகப்பெரிய உற்சாகமோ, சக்தியோ இருப்பதில்லை. நாம் இந்த நிலையில், புதிதாகவும் படைப்புத்திறனுடன் சிந்திப்பதில்லை. நம்மால் மகத்தான முடிவுகளை எடுக்க முடியாது. நாம் மேலும் முன்னேறுவதில்லை. நாம் காரண காரியங்களை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் முடிவு எடுக்கிறோம். அவ்வளவுதான்.

தர்க்க ரீதியான முடிவெடுக்கும் நிலையில், நாம் சோர்வடைவதும் இல்லை, புத்துணர்வுடன் இருப்பதும் இல்லை. நாம் ஒரு சுமாரான மனநிலையில் இருக்கிறோம். இந்த நிலையில், நாம் நமது ஆற்றலை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லை.

எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்தியானந்தம்

உள்ளுணர்வு நிலையில்தான் நம்முடைய முழு ஆற்றலையும் நாம் வெளிப்படுத்துகிறோம்.

நம்முடைய விழிப்புணர்வற் ற பகுதிக்குள் நாம் ஆழ்ந்த அமைதியுடனும் விழிப்புணர்வுடனும் ஊடுருவும்போது, அங்கிருக்கும் எண்ணப்பதிவுகளை அகற்றி, ஆழ்ந்த அமைதியையும் விழிப்புணர்வையும் அங்கே நிரப்பும்போது, இந்த உள்ளுணர்வு நிலையிலே இருப்போம்.

ஒரு சின்ன கதை

ஒரு மரவெட்டி, காட்டின் வெளிப்புறத்தில் இருந்த மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஞானிக்கு, அவர் தம்முடைய உணவைப் பரிமாறினார். அந்த மனிதரின் நடத்தையால் மனமகிழ்ந்த ஞானி, அந்த மரவெட்டியிடம், "ஆழ்ந்து உள் செல்," என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

தம்மைக் காட்டிற்குள் சென்று மரம்வெட்டச் சொல்வதாக நினைத்த அம்மரவெட்டி, அடுத்த நாள் அந்தக் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள் சென்றார். அங்கே ஒரு மிகப்பெரிய வெள்ளிச் சுரங்கம் இருப்பதைக் கண்டார். அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர், அந்த வெள்ளிப் படிமங்களை வெட்டியெடுத்து விற்று செல்வந்தரானார்.

சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி
அதே வழியாகப் பயணம்செய்தார். அந்த
மரவெட்டி இந்த முறையும் அந்த ஞானியை
மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார்.
அந்த ஞானியின் அறிவுரைப்படிதான்
பணக்காரர் ஆனதால், அவர்
ஞானியிடம் மிகுந்த நன்றியுணர்வுடன்
நடந்துகொண்டார். அந்த ஞானி
புறப்படுவதற்கு முன் மீண்டும், "ஆழ்ந்து
உள் செல்," என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.

> ‘ஆழ்ந்து உள்
> செல்’ - ஞானியின்
> இவ்வார்த்தைகள் நம்
> ஒவ்வொருவராலும்
> சிந்திக்கப்பட வேண்டிய
> வார்த்தைகள்!

அடுத்த நாள் அந்த மரவெட்டியும் ஞானியின் சொற்படி, இன்னும் ஆழ்ந்து காட்டிற்குள் சென்றார். அங்கே ஒரு தங்கச் சுரங்கத்தைக் கண்டார். அந்தத் தங்கப் படிமங்களை வெட்டி எடுத்து விற்று, அவர் மேலும் செல்வந்தர் ஆனார். அவர் அந்த ஞானியிடம் ஆழ்ந்த நன்றியுணர்வுடனும் பிரார்த்தனை உணர்வுடனும் இருந்தார். அந்த ஞானியைச் சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.

இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி மீண்டும் அவ்வழியாகச் சென்றார். அந்த மரவெட்டி, நடந்தவற்றையெல்லாம் சொல்லி, தம்முடைய சொத்துக்களை ஞானியுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். அந்த ஞானி புன்னகையுடன் அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டு, "ஆழ்ந்து உள்செல்," என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஞானியின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, அவர் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள்ளே சென்றார். இம்முறை அவர் வைரச் சுரங்கத்தைக் கண்டு வியந்தார். அதை வைத்து, அந்த நாட்டின் அரசரைவிட பெரிய செல்வந்தர் ஆனார்.

அவர் அந்த ஞானியின் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். அவர் வந்தவுடன் இந்த நல்ல செய்தியை அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பூரிப்பில் இருந்தார்.

அதேபோல் அந்த ஞானி அவ்வழியாகச்
சென்றார். இம்முறையும், "ஆழ்ந்து
உள்செல்," என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இம்முறை அந்த மரவெட்டி, காட்டிற்குள்
ஆழ்ந்து செல்லவில்லை, மாறாக, 'அந்த
ஞானி சொல்வதில் இன்னும் ஆழமான
ஏதோ ஒரு ஸத்யம் இருக்கிறது. என் புரிதலுக்
கப்பாற்பட்ட ஒரு ஸத்யம் அதனுள் உள்ளது'

  • என ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்.

சட்டென அவருக்குள் இந்தப் புரிதல் பளிச்சிட்டது: 'அந்த ஞானி, 'ஆழ்ந்து உள் செல்' என்று சொல்வது காட்டிற்குள் அல்ல, எனக்குள்!'

ஆழ்ந்த விழிப்புணர்வினாலும், அந்த ஞானியின் மீது வைத்திருந்த நம்பிக்கையினாலும், தம்முள் ஆழ்ந்து உள்சென்று, ஞானமடைந்து விட்டார்.

மிகச்சிறந்த செல்வம் வெளி உலகில் இல்லை, அது நமக்குள்தான் இருக்கிறது. மிகப்பெரிய மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது, வெளியே அல்ல. வெளியுலக விஷயங்களைப்பொறுத்தமட்டில், சந்தோஷமான ஒவ்வொரு அனுபவமும் ஒரு சோகமான அனுபவத்தால் பின்தொடரப்படுகிறது.

sந்தோஷம், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவடையாதபோது சோகம் ஏற்படுகிறது. தேடுதல் நமக்குள்ளேயே நிகழும்போது, எதிர்பார்ப்புகள் உதிர்ந்துவிடும் பந்தங்கள் அறுந்து, ஒரு புது ஆனந்தத்தை அனுபவிப்போம். அந்த ஆனந்தமே எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்.

சரியான இடத்தில் தேடுங்கள்

நமக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு இல்லாமல், ஆனந்தத்தை வெளியுலகில் தேடுகிறோம், நமக்குத் தெரிந்த ஒரேவழி இதுதான் என்பதற்காக!

ஒரு சின்ன கதை

ஒரு மாணவர், சிறப்பு அழைப்பாளரின் விரிவுரைகளின்போது உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவருடைய நண்பர் அவரிடம், "நீ ஏன் இதுபோன்ற சிறப்பு அழைப்பாளரின் விரிவுரைகளுக்கு வரவேண்டும்? இங்கு வந்து உறங்கத்தான் செய்கிறாய், இங்கு உறங்குவதற்குப் பதிலாக, நீ உன் அறையிலேயே படுத்துறங்கலாமே!" என்றார்.

அதற்கு அந்த மாணவர் சொன்னார், "நான் தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இங்கு மட்டும்தான் என்னால் நிம்மதியாக உறங்க முடிகிறது," என்றார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மாணவரைப்போலவே நாமும், ஆனந்தத்தைத் தேடி, பல இடங்களுக்குச் செல்கிறோம். நாம் சரியான விஷயத்தை, தவறான இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட கட்டுறுமனப்பாங்கு, நம்முள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மை உள்முகப்படுத்துவதே.

சங்கரர் எழுதிய கீதை உரையில்
சொல்கிறார், "நல்ல செயல்களைச்
செய்பவர்களுக்கு, கிருஷ்ணரிடம் இருந்து
நினைவுகளும் அறிவும் வருகிறது. கெட்டது
செய்பவர்களுக்கு, நினைவுகள் அழிவதும்,

> நாம் செய்ய
> வேண்டியதெல்லாம்,
> நம்மை
> உள்முகப்படுத்துவதே.

அறிவுக் குறைபாடும் கிருஷ்ணராலேயே ஏற்படுத்தப்படுகிறது,” என்கிறார்.

இங்கே நினைவு மற்றும் அறிவு என்று சொல்லும்போது, நம்முடைய உண்மையான இயல்பினைப் பற்றிய புரிதலும், கிருஷ்ணரே எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார் என்ற புரிதலும், நாம் தெய்விக சக்தியின் ஒரு பாகமே என்ற புரிதலும் உணர்தலையுமே குறிப்பிடுகிறார்.

சங்கரர் அவரது பஜ கோவிந்தத்தில் இவ்வாறு முடிக்கிறார்: 'குருவிடம் தன்னை முழுவதுமாக சரணாகதி செய்யும் சீடன், தெய்விகத்தைத் தன் இதயத்தில் உணருவான்' என்கிறார். இது ஒன்றே நமக்குத் தேவை, குருவிடம் சரணாகதி செய்யும்போது, நாம் கிருஷ்ணரைக் காணலாம்.

விஞ்ஞானத்தின் கடைசிப்படியே ஆன்மிகத்தின் முதல்படி!

கிருஷ்ணர் அர்ஜுனனை இன்னும் ஆழமான ஸத்யத்திற்குள் அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணர், இந்தப் படைப்பின் ஆதார சக்தியான புருஷ பற்றிப் பேசுகிறார்.

ஸாங்த்யத் தத்துவம் புருஷ பற்றியும், ப்ரக்ருதி பற்றியும் பேசுகிறது. புருஷ என்பது அங்கும் இங்கும் நகராத, செயல்படாத சக்தியையும், ப்ரக்ருதி என்பது இயங்கு பொருளின் அடிப்படைத் தன்மையையும் குறிக்கும். புருஷ என்பது ஆண் சக்தி, சிவன். ப்ரக்ருதி என்பது பெண் சக்தி, தேவி.

எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே, ஆனால் அவை எல்லாம் அழியா சக்தியில் நிலைகொண்டிருக்கின்றன!

கிருஷ்ணர், இந்தத் தத்துவத்தையும் தாண்டி, இன்னும் ஆழமாகச் செல்கிறார். புருஷ என்பது இரண்டு அடுக்காக இருக்கிறது என்கிறார். ஒன்று, அழியக்கூடியது; மற்றொன்று, அழிவில்லாதது. அவர் சொல்கிறார், எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே, ஆனால் அவை எல்லாம் அழியா சக்தியில் நிலைகொண்டிருக்கின்றன என்கிறார்.

முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர், மனம், புலன்கள் மற்றும் முக்குணங்களின் மூலமாக இயங்கும் ப்ரக்ருதியின் அம்சங்களைப்பற்றி ஆழமாக விளக்கினார். அப்பிரபஞ்சம் உட்பட வெளிப்பட்ட அனைத்து சக்தியுமே ப்ரக்ருதி எனப்படுகிறது. இப்போது அவர் புருஷபற்றி விளக்கமளிக்கிறார். ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் - இருப்பவை அனைத்துமே சக்தியே என்று ஈசாவாஸ்ய உபநிஷத் சொல்கிறது. .

மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், தம்முடைய கண்டுபிடிப்பான 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி'யின் (ஒவ்வொரு பொருளும் சக்தியை வெளிப்படுத்தக்கூடியவையே என்னும் சார்பியல் கொள்கையின்) அடிப்படையில் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டபொழுது, தம்முடைய கண்டுபிடிப்பை, தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்களே என்று வேதனை அடைந்தார்.

தம்முடைய கண்டுபிடிப்பு, தாம்
விரும்பாமலேயே அழிவிற்குப்
பயன்படுத்தப்படுவதை நினைத்து அதிர்ச்சி
அடைந்தார். அதனால், ஆறுதலையடைய
அவர் ஆன்மிகத்தை நாடினார்.

அப்போது, ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, உபநிடதங்களில், ப்ரக்ருதி, புருஷ பற்றி விளக்கப்பட்டிருந்ததைப் படிக்க நேர்ந்த ஐன்ஸ்டீன் சொன்ன வாசகங்கள்: 'பொருள் என்பது, சக்தியே' என்பதை நான் கண்டுபிடித்ததாகப் பெருமைப்பட்டேன். ஆனால் இந்த ஞானிகள், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே, இதைத் தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இதற்கும் மேலான ஒரு ஸத்யத்தையும் அவர்கள் சொல்லியிருக்கின்றனர், 'சக்தியிலிருந்தே பொருட்கள் தோன்றுகின்றன' என்கின்ற மிக சூட்சுமமான தத்துவத்தைப் புரிந்துவைத்திருந்தனர். விஞ்ஞானத்தின் கடைசிப்படியே ஆன்மிகத்தின் முதல்படி!

பல்லாயிரம் வருடங்களுக்கு
முன்பே, கிழக்கத்திய
ஞானிகளும் ரிஷிகளும்
சொல்லியிருக்கிற
விஷயங்களையே,
இப்போது விஞ்ஞானிகளும்
சொல்லத்
தொடங்கியுள்ளார்கள்.

ஐன்ஸ்டீனின் இந்தக் கருத்து, இந்தியாவைப் பற்றியும் உபநிடதங்களைப் பற்றியும் தவறான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கான ஒரு சவுக்கடி!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கிழக்கத்திய ஞானிகளும் ரிஷிகளும் சொல்லியிருக்கிற விஷயங்களையே இப்போது விஞ்ஞானிகளும் சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.

சில நூறு வருடங்களுக்கு முன்புவரை மேற்கத்திய விஞ்ஞானிகள், தாங்கள்தான் இயற்கையின் விதிகளைக் கண்டுபிடித்து எழுதுவதாக நினைத்திருந்தனர். ஆனால், அந்த மனநிலை இப்போது இல்லை.

குவாண்டம் இயற்பியல், மூலக்கூறுகளின் உயிரியல் (Quantum physics, Molecular biology) போன்ற துறைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தினால், தங்களால் இயற்கையை ஓரளவிற்குத்தான் யூகிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.

மூல சக்தி

ஒரே ஆராய்ச்சியை, ஒரே மாதிரியான
முறையில், இரண்டு வெவ்வேறு
விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போது,
அந்த ஆராய்ச்சியின் முடிவுகள்
ஒரேமாதிரியாக அல்லாமல் வேறுவேறாக
இருக்கின்றன. அந்த ஆராய்ச்சியை
மேற்கொள்ளும் மனிதரும், அந்த
முடிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார்
என்பதையே இது காட்டுகிறது.

நமது சாஸ்திரங்கள் இதைப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளன. 'பார்ப்பவர், பார்க்கிற பொருளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார்' என்று சங்கரர் மீண்டும் மீண்டும் சொல்வதன் தாத்பர்யம் இதுவே.

இது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்ட ஒரு ஸத்யம்!

கடவுளே என்றாலும் அடையாள அட்டை கேட்பார்கள்

மூல சக்தியான புருஷ என்பது ஒரு உள்ளாற்றல் சக்தியைப்போன்றது. அது ஒரு சக்திதான். ஆனால் அது செயல்படாது. அதுதான் இந்த மொத்தப் பிரபஞ்சமும் இயங்குவதற்குப் பின்னணியில் இருக்கும் அடிப்படை விதி. இந்த சக்தி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது. கிருஷ்ணர் சொல்கிறார், இரண்டு வகையான புருஷ சக்தி இருக்கிறது. ஒன்று, எங்கும் நிறைந்திருக்கும் அழியா சக்தி. மற்றொன்று, அழியக்கூடியது.

உடல் - மன சக்தியாக அனைத்து உயிர்களுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சக்தி தான், அழியக்கூடிய புருஷ சக்தி. இதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட வாழ்நாளே உள்ளது. இது நிலையானது அல்ல. இது சிதைவுற்று அழிவுறும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

புருஷனின் அழிவற்ற அம்சமான கூடஸ்த என்னும் சக்தியே, ஒருபோதும் அழிக்க முடியாத, நம்முள் என்றென்றும் தொடர்ந்திருக்கும் ஆத்ம சக்தி!

வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததுதான் தெய்வம்.

கிருஷ்ணர் சொல்கிறார், அடிப்படை
சக்தியானது, அழிவது மற்றும்
அழியாதது என்று இரண்டு வகைகளில்
வெளிப்படுகிறது. இந்த இரண்டுமே
அடிப்படை சக்தியின் அம்சங்களே. ஒன்று,
அழிக்கப்படுகிறது. மற்றொன்று தொடர்ந்து
வாழ்கிறது. இரண்டிற்கும் உள்ள இந்த
வித்தியασத்தை அனுபவ பூர்வமாக
உணர்பவர்களும், புருஷ சக்தியின் அடிப்படை
ஸத்யத்தைப் புரிந்துகொள்பவர்களும்
விடுதலையடைகிறார்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கிறார்,

ஒரு மேதாவியான பண்டிதர் ஒருவர், தாம் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களினால் மிகுந்த கர்வத்துடன் இருந்தார். அவர் அத்வைத (இரண்டல்ல) தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். அதனால், கடவுள் பல உருவங்களில் இருப்பார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

ஒருநாள் தேவி, தம்முடைய அனைத்து அலங்காரங்களுடனும் பராசக்தியாக அவருக்குக் காட்சி தந்தாள். அதைப் பார்த்த பண்டிதர், பிரமைபிடித்தது போலாகிவிட்டார். அவரால் அந்த நிலையிலிருந்து வெகு நேரத்திற்கு மீளமுடியவில்லை. பிரமை தெளிந்தபோது, அவரால் உச்சரிக்க முடிந்தது 'கா, கா, கா' என்பது மட்டும்தான். அவரால் தாம் கண்ட தெய்வத்தின் பெயரைக்கூட முழுதாகச் சொல்ல முடியவில்லை!

வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததுதான் தெய்வம்.

பண்டிதர்கள், புருஷனின் இயல்பு மற்றும் பல்வேறு பண்புகளைப் பற்றியும், ப்ரக்ருதிக்கும் புருஷனிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பற்றியும், முடிவில்லாமல் வாதம்செய்துகொண்டே இருப்பார்கள்.

வாதம செய்வது அவர்களுக்கு ஒரு தொழிலாகவே போய்விட்டது. இது அவர்களின் அஹங்காரத்தை மட்டுமே பலப்படுத்துகிறது. தெய்வமே அவர்கள்முன் காட்சியளித்தாலும், அவர்களால் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

'தான் காளிதான்' என்பதை நிரூபிக்க, காளிதேவியேகூட, அடையாள அட்டையுடன் வரவேண்டி இருக்கிறது.

நாம் உள்ளுணர்வால் முடிவுகளை எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது.

கேள்வி: சுவாமிஜி, மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை மிக அழகாக விளக்கினீர்கள். இதை, நம்முடைய தினசரி நடவடிக்கைகளில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?

வெறும் சாட்சியாக இருந்தாலே போதும்

நம் மனம், மூன்று விதமாக வேலை செய்கிறது. அது, இயல்பூக்க நிலையில், விழிப்புணர்வற்றும் இயங்க முடியும். அறிவு நிலையில், விழிப்புணர்வோடும் இயங்க முடியும். உள்ளுணர்வு நிலையில், உயர்விழிப்புணர்வோடும் இயங்க முடியும்.

நம் மனம் முழுக்க, எதிர்மறை உணர்ச்சிகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஸம்ஸ்காரங்கள் நிரம்பியிருக்கும்பொழுது, அது இயல்பூக்க நிலையிலேயே செயல்படுகிறது. சிறு வயது முதல் திரும்பத் திரும்ப நம்முள் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் காரணமாக, இந்த ஸம்ஸ்காரங்கள் நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதியில் மிக ஆழமாகப் புதைந்துள்ளன.

நாம் ஒரு கஷ்டத்தில், வலியில், வேதனையில் இருக்கும்போது, தெளிந்த மனத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்தில்,

Spheres

விழிப்புணர்வற்ற பகுதியில் பதிந்திருக்கும் இந்தப் பதிவுகள் சட்டென மேலேழுந்து, ஒரு தீர்மானத்தை, ஒரு முடிவை நம்மையறியாமலேயே நம்மை எடுக்கச் செய்கின்றன. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம்முடைய ஸம்ஸ்காரங்களை முடிவுசெய்கின்றன. நம்முடைய மனத்தின் பட்டறிவுப்பகுதி, விழிப்புணர்வுப் பகுதி அதைச் செய்வதில்லை.

பத்து சதவீத விஷயங்களில் மட்டுமே, நம் மனத்தின் விழிப்புணர்வுப் பகுதி முடிவுகளை எடுக்கிறது. அப்போதும்கூட, நம்முன் விரிந்து கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளிலிருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பம் அடைகிறோம்.

நம்முடைய தர்க்க அறிவைப் பயன்படுத்தி, சரியானது என்று முடிவுசெய்து ஒரு தீர்மானத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். பின், அவ்வாறு தேர்ந்தெடுத்ததற்காக வருந்துகிறோம். எந்த ஒரு தேர்வுமே நூறு சதவிகிதம் சரியாக இருப்பதில்லை.

உண்மையிலே, நாம் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா? ஆம். இருக்கிறது! நாம் உள்ளுணர்வால் முடிவுகளை எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது.

எப்படி நாம் இந்த உள்ளுணர்வு நிலைக்குள் நுழைவது?

நம் மனது ஒருநிலைப்படும் நிலையே
உள்ளுணர்வு நிலை எனப்படுகிறது.
இதைத்தான் நாம் நிகழ்காலத்தருணம்
என்கிறோம். பொதுவாக நாம்,
கடந்தகால நினைவுகளிலோ அல்லது
எதிர்காலத்தைக் கணிப்பதிலேயோதான்
புதைந்திருக்கிறோம். நாம்
எப்போதாவதுதான் நிகழ்காலத்துக்கே
வருகிறோம். நம் எண்ண ஓட்டங்கள்,
நமக்குக் கொடுக்கும் பரிசு இதுதான்!

நம் மனம் எப்போதாவதுதான், நம் உடல்

த்யானத்தின்பொழுது,
ஒருவரின் விழிப்புணர்வு
நிகழ்காலத்தில்
நிலைக்கிறது;
விளைவு,
எண்ணங்கள் நிற்கிறது;
உள்ளுணர்வு
செயல்படுகிறது.

இருக்கும் அந்த இடத்திலேயே இருக்கிறது. கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தொடர்ந்து தாவிக்கொண்டே இருக்கும் மனத்தின் அசைவே எண்ண ஓட்டங்கள். எண்ணங்கள் நிற்கும்போது மனம் நின்றுவிடும்.

தியானம், நமது எண்ணங்களை நிறுத்துகிறது. இது மிகவும் சுலபமானது. தியானத்தின்பொழுது, ஒருவரின் விழிப்புணர்வு நிகழ்காலத்தில் நிலைக்கிறது; விளைவு, எண்ணங்கள் நிற்கிறது; உள்ளுணர்வு செயல்படுகிறது. இந்தத் தருணத்தில் நாம் எடுக்கும் எந்தவொரு முடிவுமே சரியானதாகவே இருக்கும்.

எண்ணங்கள் நிற்கவேண்டும் என்றுகூட அவசியமில்லை. உங்கள் எண்ணங்களை நீங்கள் பின்தொடராமல் இருந்தாலே போதும். உங்களது எண்ணப்போக்கில் மாட்டிக்கொள்ளாமல், சாட்சியாக மட்டும் இருக்கும் இந்த நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டால் போதும் நீங்கள் உங்கள் போரில் வெற்றியடைந்துவிட்டீர்கள்.

இந்த நுட்பத்தில் நீங்கள் கைதேர்ந்தவராக ஆகும்போது, நீங்கள் விரும்பும்போதெல்லாம், நிகழ்கால விழிப்புணர்வில் நிலைகொள்கிறீர்கள். நிகழ்கால தருணத்தில் நிலைத்து, நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது, 'இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து விட்டோமே' என்று எதிர்காலத்தில் அந்த முடிவுகளைக் குறித்து வருந்தும் நிலை, ஒருபோதும் ஏற்படாது.

இதனை வியாபாரிகளும் தொழிலாளிகளும் கற்றுக்கொண்டு கடைபிடிக்கும்போது, எத்தனை கோடிக்கணக்கான பணத்தைச் சேமிக்க முடியும் என்பதை கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். பணத்தை சேமிப்பது மட்டுமே இதன் பலன் அல்ல.

இயல்பூக்க உணர்ச்சி நிலையிலிருந்து வெளிப்படும் ஆசை அல்லது அச்சத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மக்கள் செயல்படும்போது, சுற்றுப்புறச்சூழல் அழிக்கப்படுகிறது. உள்ளுணர்விலிருந்து நாம் இயங்கும்போது, ஒருபோதும் நாம் இயற்கைக்கு எதிராக செயல்பட மாட்டோம். ஏனென்றால் உள்ளுணர்வே இயற்கை!

hands playing flute