KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/கூட்டு விழிப்புணர்வுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

கூட்டு விழிப்புணர்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

இந்த இரண்டைத் தவிர, பரமாத்மா என்றழைக்கப்படும்
புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி,
அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!

அழியக்கூடியவை மற்றும் அழிவற்றவைக்கெல்லாம்
அ அப்பாற்பட்டவனாகவும் மேலானவனாகவும் நான் இருப்பதால்,
இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று
புகழ்பெற்றிருக்கிறேன்.

ஓ, பரதவம்சத்தில் உதித்தவனே, எந்தவித சந்தேகமும்
கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன்,
எல்லாம் அறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய
அத்துணை உணர்வையும்கொண்டு என்னை வழிபடுகிறான்.

என்னால் உபதேஸிக்கப்பட்ட மேலான போதனை இதுவே.
ஓ! பாவங்களற்றவனே! இதை யாரெல்லாம் உணர்கிறார்களோ

அவர்கள் அறிஞர்களாகிறார்கள். அவர்களின் செயல்கள் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

அழிவதும் அழியாததும் நானே!

புருஷனின் இந்த இரண்டு அம்சங்களையும் - அழியக்கூடிய உடல் - மன அமைப்பு மற்றும் அழியாத ஆன்மா சக்தி - தாண்டி, ஒரு மேலான புருஷ சக்தி என்ற நிலையும் இருக்கிறது என்கிறார், கிருஷ்ணர். மேலும் அவர், அந்த மேலான புருஷ சக்தி - புருஷோத்தமன் தாமே என்கிறார்.

புருஷ என்ற சக்தியே நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைந்திருக்கிறது. புருஷோத்தம என்ற சக்தியே இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கிறது. புருஷோத்தம என்பது பிரபஞ்ச சக்தியான பராசக்தியிலிருந்து வேறுபட்டதல்ல.

இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வைப்பற்றி விவரிக்கும்போது, புருஷ மற்றும் சக்தி என்று, ஆணாகவும் பெண்ணாகவும் இரண்டாகப் பிரித்துச்சொல்வது வெறும் வார்த்தை விளையாட்டே.

புத்தர் சொல்கிறார், "இந்தப் பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறது. பிரபஞ்சம் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததில்லை. பிரபஞ்சம் இல்லாமல் இருக்கப்போகும் காலம் என்று ஒன்று இருக்கப்போவதும் இல்லை. இந்தப் பிரபஞ்சம் அழிவற்றது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி அழிவற்றது."

கிருஷ்ணர் சொல்கிறார், "இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியான, புருஷோத்தமன் நானே!"

> இந்தப் பிரபஞ்சத்தைத் தொடர்ந்து என்றும் இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியான புருஷோத்தமன் நானே! - கிருஷ்ணர்

ஒரு அழகான வாக்கியம் உபநிடதத்தில் இருக்கிறது. பொதுவாக சடங்குகளின்போது முதல் மந்திரமாக இதைத்தான் சொல்வார்கள்.

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே ।
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ॥

அனைத்துமே பூரணமானது. பூரணத்திலிருந்து பூரணம் உருவாகிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்தபிறகும், எஞ்சி நிற்பதும் பூரணமே!

இதே கருத்தைத்தான் கிருஷ்ணரும் சொல்கிறார். 'எல்லையில்லாததிலிருந்து இந்தப் பிரபஞ்சமும் மற்ற பல பிரபஞ்சங்களும் வெளிப்பட்டன.'

இன்றைய விண்வெளி இயற்பியலாளர்கள் (Astrophysicists), பிரபஞ்சம் ஒன்றல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட பிரபஞ்சங்கள் இருக்கின்றன; ஒவ்வொரு பிரபஞ்சத்திற்குள்ளும் லட்சக்கணக்கான பால்வெளி அண்டங்களும், ஒவ்வொரு பால்வெளி அண்டத்திற்குள்ளும் லட்சக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் இருக்கின்றன என்கிறார்கள்.

நவீன உபகரணங்களின் உதவியுடன்கூட, பிரபஞ்சம் எங்குத் தொடங்குகிறது, எங்கு முடிகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது உபகரணங்களால் சாத்தியப்படக்கூடிய விஷயம் அல்ல. பிரபஞ்சத்தின் பின்னணியில் இருப்பது ஆன்மிக சக்தி. பிரபஞ்சத்தை இயக்கும் அந்த இறைசக்தியை அளக்கவோ, பார்க்கவோ, வரையறுக்கவோ முடியாது.

எப்படிப் பிரபஞ்சம் உருவானது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. படைப்பைப் பற்றி பைபிளில் வரும் கதைகளும், ப்ரஹ்மம் மற்றும் பிரளயம் பற்றிய உருவகக் கதைகளும் பிரபஞ்சத்திற்குக் காரணமான மேலான சக்தியைப் பற்றிப் பேசுகின்றன. இருந்தாலும், பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது.

பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கை (Big Bang), எப்படி இன்றளவும் பிரபஞ்ச பெருவெடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையோ, ஒவ்வொரு பிரபஞ்ச பெருவெடிப்பும் எப்படிப் புதிது புதிதாய் நட்சத்திரக் கோள்களையும் பால்வெளி அண்டங்களையும் தோற்றுவிக்கிறது என்பதையோ விளக்கவில்லை.

அதேபோல் எங்கேயோ நிகழும் கருந்துளை (Black hole), அந்த நட்சத்திரங்களையும் பால்வெளி அண்டங்களையும் தனக்குள் எப்படி உள்வாங்கிக்கொண்டே இருக்கிறது என்பதையும் விளக்கவில்லை.

ஒவ்வொரு பிறப்பிற்கும் இறப்பு
இருக்கிறது. இருந்தாலும் அந்த முதல்
பிறப்பு எப்படி நிகழ்ந்தது? அது ஒருபோதும்
நிகழவில்லை. அது எப்போதும் அங்கு
இருக்கிறது, அவ்வளவுதான்.

கிருஷ்ணர் சொல்கிறார், "அழியக்கூடிய
மற்றும் அழிவற்றதையும் கடந்து, மேலான
புருஷோத்தமனாய் நானே இருக்கிறேன்."

இப்போது கிருஷ்ணர், வஸுதேவர் மற்றும் தேவகியின் மைந்தரும், யாதவ வம்சத்தவருமான, வாஸுதேவ கிருஷ்ணரைப் பற்றிப் பேசவில்லை. அவர் பரப்ரம்மகிருஷ்ணரான, ஈச்வரனைப்பற்றிப் பேசுகிறார். அவரே ஸகுணமாகவும் நிர்குணமாகவும் இருக்கிறார். அழிவற்ற ஆன்மாவும் அழியக்கூடிய உடல் - மன அமைப்பும் சங்கமிக்கும் ப்ரம்மம் அவரே.

இந்தப் பூமியில் வாழும் அறுநூறு கோடி மனிதர்களும் மற்றும் எண்ணிலடங்கா உயிரினங்களும், மற்ற கிரகங்களில் இருக்கும் கோடிக்கணக்கான உயிர்வகைகளும் ப்ரம்மமான அவருக்குள்ளேயே சங்கமிக்கின்றன. அவரே புருஷ - சக்தி; ப்ரக்ருதி - பொருள், அவரின்றி ஒர் அணுவும் அசையாது!

கடவுள் என்பது ஒரு கருத்து அல்ல; அவர் ஸத்யம்

நாம் வளர்க்கப்பட்ட விதத்தைப் பொறுத்தும் நம்முடைய உள்வாங்கும் திறனைப் பொறுத்துமே, நாம் புருஷோத்தமனைப் பல வகைகளில் பார்க்கிறோம்.

ஆறு முகங்களையும் பன்னிரண்டு கரங்களையும் உடைய கார்த்திகேயனாக சிலரும், நான்கு கரங்கள் கொண்ட பாலாஜியாக சிலரும், மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட சிரசும் இரண்டு கரங்களுடன் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனாக சிலரும் பார்க்கிறோம். நமக்கு எந்த வகையில் பார்க்க சௌகரியமாக இருக்கிறதோ, அந்த உருவத்தில் பார்க்கிறோம், அப்படியானால்தான் நாம் அவரை அடைய முடியும்.

Incense holder with deity figure

மிகச்சிறந்த பண்டிதரும் பக்திமானுமாகிய ஒருவர், சிவனை இடைவிடாது பல வருடங்களாக வழிபட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்களாக வழிபட்டும், சிவன் தரிசனம் அளிக்கவில்லை. ஒருநாள் அவருக்கு, தாம் இன்னும் அதிக நாள் வாழப்போவதில்லை என்ற பயம் பற்றிக்கொண்டது. தாம் இறப்பதற்கு முன் எப்படியேனும் இறைதரிசனத்தைப் பெற விரும்பினார். சிவனைவிட விஷ்ணு கருணை மிக்கவர் என்று அவர் கேள்விப்பட்டதால், சிவனை வழிபடுவதை நிறுத்திவிட்டு, விஷ்ணுவை வழிபட முடிவெடுத்தார்.

தாம் இதுநாள்வரை வழிபட்டு வந்த சிவனின் சிலையை வெளியே தூக்கியெறிய, அவருடைய இதயம் ஒப்பவில்லை, அவரது இதயத்தின் இதயத்திற்குள் இன்னமும் அவர் சிவனின் பக்தராகவே இருந்தார். ஆகையால் அதனையெடுத்து பரணில் வைத்துவிட்டு, ஒரு அழகான விஷ்ணு சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தார். விஷ்ணு சிலைக்கு முன்பாக ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்துவிட்டு, பூஜையைத் தொடங்கினார்.

அந்த ஊதுபத்திப் புகை விஷ்ணு சிலைக்குப் போகாமல், பரணில் இருந்த சிவனின் சிலைக்கு சென்றதைப் பார்த்து மிகவும் கோபமானார். உடனே அவர் எழுந்து சென்று, பரணில் இருந்த சி வன் சிலையின் மூக்கை மூடியபடியே, "இது உனக்கான புகை கிடையாது, இனிமேலும் நான் உன்னை வழிபடப்போவதில்லை," என்றார்.

இவ்வாறு செய்த அந்த வினாடியே அவர்
சிவனின் இருப்பை அங்கு உணர்ந்தார்,
அவருக்கு சிவ தரிசனம் கிடைத்தது.
உடனே அவர் மனமுருகிக் கதறியழ
ஆரம்பித்துவிட்டார். "ஓ! இறைவா!

கடவுளை நமக்கு எந்த
வகையில் பார்க்க
சௌகரியமாக இருக்கிறதோ
அந்த உருவத்தில் நாம்
அவரைப் பார்க்கிறோம்,
அப்படியானால்தான் நாம்
அவரை அடைய முடியும்.

பல வருடங்களாக உங்களை முறைப்படி வழிபட்டுவந்தேன். அப்போதெல்லாம் நீங்கள் எனக்குக் காட்சி கொடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் உங்களை வழிபடாமல் தூரவிலக்கி வைத்தது மட்டுமல்லாமல், உங்கள் மூக்கை மூடி அவமதித்தேன். இருந்தும் நீங்கள் காட்சி தந்தீர்கள். இது ஏன்?'' என்று இறைஞ்சி வினவினார்.

அதற்கு சிவன் சொல்கிறார், "இதுநாள்வரை உனக்கு நான் ஒரு கருத்தாகவே தெரிந்தேன். இன்றுதான் நீ என்னை ஸத்யமாக உணர்ந்தாய், அதனால்தான் என் மூக்கை மூடினாய்!''

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, இறைவன் என்பது ஒரு கருத்து, ஒரு கோட்பாடு, அவ்வளவுதான். நம்முடைய பயத்தையும் கவலையையும் மறைப்பதற்கும், பல சிக்கலான கருத்துகளையும் தத்துவங்களையும் வடிவமைத்து, நாம் அறிவாளி என்பதை நிரூபிப்பதற்கும் கிடைத்த ஒரு கோட்பாடு.

கிருஷ்ணா, ப்ரஹ்ம, புருஷோத்தம, பரப்ரஹ்ம, ப்ரக்ரு'தி என்று எந்தப் பெயரைக்கொண்டு நாம் அழைத்தாலும், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது? நாம் எந்தப் பெயரைக்கொண்டு அழைத்தாலும், நம் அனைவரையும் இயக்கும் மேலான இறைசக்தி அவரே.

அதிகாரத்துவமிக்க உரிமையோடு கிருஷ்ணர், 'நானே அந்த புருஷோத்தமன்' என்கிறார். அதனால்தான் கீதை, நம்பகத்தன்மையான வேத நூலாக இருக்கிறது.

கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்களுக்காகவோ, அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் ஞானக் கருத்துக்களுக்காகவோ நாம் அதைக் கொண்டாடவில்லை.

கிருஷ்ணர் என்ற ஒரு தனிமனிதர், "நானே எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறேன்," என்று துணிச்சலுடன் பிரகடனப்படுத்துவதுதான் கீதையைக் கொண்டாடக் காரணமாக இருக்கிறது. இதுவே பகவத்ீ கதையை ஒரு நிலையான ஸத்ய நூலாக வரையறுக்கிறது. அந்தப் புருஷோத்தமன், பரப்ரஹ்ம கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்! இப்போது கிருஷ்ணர், பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வாக விளங்கும் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பற்றிய உயர் ஸத்யங்களை முன்வைக்கிறார்.

பிரபஞ்ச ஸத்யங்கள்

இது உங்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம் அல்லது, இது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயமாகக்கூட இருக்கலாம்.

இந்த ஸத்யம் புதியதா, பழையதா என்று ஆராயாமல், இந்த ஸத்யத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உள்வாங்குங்கள், ஆராயுங்கள்.

உங்கள் தர்க்க அறிவு சோர்வடைந்து,
தோல்வியை ஒப்புக்கொள்ளும்
வரை, இதைப் பற்றிய கேள்வியை
எழுப்பிக்கொண்டே இருங்கள்.

முதல் ஸத்யம்.

நம் எல்லாருடைய மனமும், இந்தப்
பிரபஞ்சத்தின் தனித்தனி பகுதிகள்
கிடையாது. அவை அனைத்துமே ஒன்றுதான்.

நம் மனங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை மட்டுமல்ல, அவை ஒன்றையொன்று நேரடியாகப் பாதிக்கவும் செய்யக்கூடியவை. நம் மனம், நேரடியாகவே மற்றவரைப் பாதிக்கும். இதைத்தான் கூட்டு விழிப்புணர்வு என்கிறோம்.

ஜலதோஷத்தைப் போல நமது எண்ணங்களும் பரவக்கூடியதே!

ஜலதோஷம் பிடித்திருக்கும் ஒரு மனிதரிடம் இருந்து, நமக்கு ஜலதோஷம் பரவாமல்கூட, சுலபமாகத் தப்பித்து விடலாம். ஏனென்றால் ஜலதோஷம் அவ்வளவு தீவிரத்தன்மையுடன் பரவுவதில்லை. ஆனால், நமது எண்ணங்கள் ஜலதோஷத்தைவிட தீவிரமாகப் பரவக்கூடியவை.

நமக்கு வேறு யாரிடமிருந்தாவது ஜலதோஷம் தொற்றிக்கொண்டால், சில நாட்களுக்கு உடலளவில் மட்டுமே பாதிக்கப்படுவோம். அதுவுங்கூட

விரைவில் சரியாகிவிடும். ஆனால், நாம்
மற்றவரிடமிருந்து எண்ணங்களைப்
பிடித்துக்கொள்ளும்பொழுது,
நாம் நேரடியாகவே மனதளவில்
பாதிக்கப்படுகிறோம். அதுமட்டுமல்ல, அது
நீண்ட நாள் தொடரும் ஒரு பாதிப்பாகவும்
பிரச்சினையாகவும் இருக்கிறது.

நம்முடைய எண்ணங்கள் எதுவாக
இருந்தாலும், அது நம்மைச்
சுற்றியிருப்பவர்களுக்குள்ளும் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜலதோஷத்தைப் போல
நமது எண்ணங்களும்
பரவக்கூடியதே!

நம்மைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாமல், இந்தப் பூமியில் வாழும் அனைவரையும் பாதிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய பட்டறிவு இதை நம்ப மறுக்கும். இது எப்படி ஸத்யமாகும்? இதை நாம் கேள்வி - பதில் நேரத்தின்போது ஒவ்வொன்றாக அங்குலம் அங்குலமாகப் பார்ப்போம்.

முதல் ஸத்யத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். நாம் எல்லோரும் வேறுவேறு உயிரினங்களும் கிடையாது, மனங்களும் கிடையாது, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். நாம் ஒருவரோடு ஒருவர், எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் இணைக்கப்பட்டுள்ளோம். என்னுடைய எந்த ஒரு எண்ணமும் உங்களுக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல், உங்களுடைய எந்த ஒரு எண்ணமும் என்னைத் தொடும். நாம், தனித்தனியானவர்கள் அல்ல.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் அனைவரும் தனித்தனி தீவுகள் கிடையாது. நாம் அனைவரும் மற்றவர்களால் பாதிக்கப்படாத தனித்தனி மனிதர்கள் இல்லை. கூட்டு விழிப்புணர்வு என்ற ஒரு ஸத்யம் நம் அனைவரையும் இணைக்கிறது.

அடுத்த ஸத்யம்.

மனதளவில் மட்டுமல்ல, ஆழமான விழிப்புணர்வு அளவிலும்கூட நாம் இன்னும் ஆழமாக இணைக்கப்படுகிறோம்.

இந்த வரைபடத்தைப் பாருங்கள், மொத்தம் ஏழு சரீரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உள்வட்டமும் ஒவ்வொரு சரீரத்தைக் குறிக்கிறது.

வரைபடம்

நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே

முதல் சரீரம் ஸ்தூல சரீரம். அடுத்தாக ப்ராண சரீரம். இப்படி ஒவ்வொன்றாக செல்கிறது.

ஸ்தூல உடலைப்பொறுத்தவரை, நீங்கள் - நான் - கிருஷ்ணர் ஆகிய மூவரும், இந்த வட்டத்தில் இருக்கும் மூன்று வெவ்வேறு புள்ளிகள். இவை மூன்றும் மிகுந்த தொலைவில் இருக்கின்றன. மேலும் ஒவ்வொன்றும் 120 டிகிரி இடைவெளியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஸ்தூல சரீர நிலையில், நம் ஒவ்வொருவருக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.

அடுத்ததாக, ப்ராண சரீரத்திற்குள் செல்லும்போது, அந்தத் தூரம் கொஞ்சம் குறைகிறது. இன்னும் உள்ளே, மன சரீரத்திற்குச் செல்லும்போது, உங்களுக்கும் எனக்குமான தூரமும், உங்களுக்கும் கடவுளுக்குமான தூரமும் இன்னும் குறைகிறது.

இவ்வாறு ஆழமாகப் பயணித்து, இறுதியாக
நிர்வாண சரீரத்தை அடையும்பொழுது,
அங்கே மூன்றும் ஒன்றாகவே ஒடுங்குகிறது.
ஆழமாக உள்ளே செல்லச் செல்ல, நீங்கள்

  • நான் - மற்றும் கடவுள் ஆகிய மூவருமே

> ஆழமாக உள்ளே
> செல்லச் செல்ல
> நீங்கள், நான், கடவுள்
> ஆகிய மூவருமே
> ஒன்று தான்.

ஒன்று தான். அங்கே தூரம் எதுவுமில்லை. நாம் ஒரே புள்ளியாக ஆகிறோம்.

ஆம், நமது பட்டறிவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இதுதான் ஸத்யம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், நாம் இந்த ஸத்யத்தைக் கேட்க விரும்புவதில்லை. ஏனென்றால் இந்த ஸத்யம், நம் உணர்வு நிலையையே உயர்த்திவிடும், இந்த ஸத்யம், நம்மை உணர்வுமாற்றம் செய்துவிடும் என்பதால்தான்!

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், நாம் இந்த உள் நிலையை அடைந்துவிட்டால், கடவுளும் நாமும் ஒன்றே. நாம்தான் கடவுள். கடவுள்தான் நாம்.

| கூட்டுவிழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்கிற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே நமது துக்கங்களுக்குக் காரணம். | ஸ்தூல நிலையில் பார்க்கும்பொழுது, நாமெல்லோரும் தனித்தனியானவர்களாகத் தெரிகிறோம். ஒருவரை நாம் மிகவும் விரும்பும்பொழுது, அவருடைய அன்பும் துன்பமும் நம்மைப் பாதிக்கிறது. இது நம்முடைய இருப்பு நிலையிலிருந்து வருகிறது, செல்கிறது. ஆழ்ந்த நிலையில் நமக்கென்று தனித்தனி அடையாளங்கள் இல்லை. நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே. |

துக்கங்களை நாம் விரும்புவதில்லை. ஆனாலும், அவற்றிலிருந்து நம்மால் தப்பிக்க முடிவதில்லை. அது உடல் வலியாக இருந்தாலும் சரி, மன வேதனையாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மிகப் பந்தமாக இருந்தாலும் சரி, நாம் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே சுழன்றுகொண்டே இருக்கிறோம்.

கூட்டுவிழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்கிற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே இதற்குக் காரணம்.

நமக்கென்று தனிப்பட்ட அடையாளம் என்று ஒன்று இல்லை, நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகம் என்பதை உணர்ந்து புரிந்துகொண்டவுடன், நமக்கென்று பிடித்துக்கொள்ளவோ, பாதுகாத்து வைத்துக்கொள்ளவோ, ஒரு தனிப்பட்ட அஹங்காரம் என்று ஒன்று கிடையாது என்பதை உணருகிறோம். நமக்கென்று சொந்தமான ஒரு பட்டறிவு ரீதியான அடையாளம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். பிரபஞ்ச இருப்புநிலையில், அப்படிப்பட்ட தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமில்லை. இந்த ஸத்யத்தை நாம் உணரும்போது, வலி, துன்பம், கஷ்டம் வியாதி போன்றவற்றைக் கடந்துசெல்கிறோம்.

இயற்கையை எதிர்க்காதீர்கள்

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம், 'ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வு' என்ற விஷயத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் ஆன்ம அளவிலும் துன்பப்பட்டுக் கொண்டேதான் இருப்போம்.

நாம் ஏன் தொடர்ந்து இயற்கையை
எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம்?
இயற்கை எதைக்கொடுத்தாலும் நாம்
அதைத் தடுக்கிறோம், எதிர்க்கிறோம்.

சூழ்நிலை குளிராக இருந்தால், உடனே நாம்
குளிரை எதிர்க்கிறோம். பிரபஞ்ச இருப்பு
நிலையிலிருந்து வேறுபட்டவர்களாக
நம்மை நினைக்கிறோம். இமயமலையில்,
நான் நிறைய ஸந்நியாஸிகளையும்
ஞானிகளையும் பார்த்திருக்கிறேன்.
அவர்களெல்லோரும் அந்தக் குளிரிலும்,
அந்தப் பனியிலும் கிட்டத்தட்ட
நிர்வாணமாகவே வாழ்கிறார்கள்.

> நமக்கென்று தனித்தனி
> அடையாளங்கள்
> இல்லை என்ற ஸத்யத்தை
> நாம் உணரும்போது,
> வலி, துன்பம், கஷ்டம்
> வியாதி போன்றவற்றைக்
> கடந்துசெல்கிறோம்.

நான், அதேமாதிரி குளிரிலும் பனியிலும் உடல்நிலை பாதிக்கப்படாமல், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்திருக்கிறேன். சுற்றி இருக்கும் சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவனாக, என்னை நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இயற்கையிலிருந்து விலகியிருப்பதாக உணர்ந்ததும் கிடையாது. நாம், இந்தச் சூழலிலிருந்தும், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றிலிருந்தும் வேறுபட்டவர்களாக நம்மைக் கருதும்போதுதான், நாம் அவற்றைத் தடுக்க ஆரம்பிக்கிறோம்.

மிகவும் குளிராக நாம் உணரும்போதுகூட, நம்மால் இயல்பாக இருக்க முடியும். அதற்கு ஒரு எளிமையான நுட்பம். அதை நாம் இப்போதே முயற்சிசெய்து பார்ப்போம். குளிராக இருப்பதாக உணர்ந்தீர்களென்றால், தளர்வாக இருந்து, உடலின் எந்தப் பகுதியில் குளிர்கின்றது என்பதை அடையாளம் காணுங்கள். அந்தப் பகுதியில், குளிர் சூழலைத் தடுக்க நினைக்க வேண்டாம். இயற்கையைத் தடுக்கவேண்டாம். பிரபஞ்ச இருப்பைத் தடுக்க வேண்டாம்.

உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள், "இயற்கையை நான் தடுக்கப்போவதில்லை. இந்தக் குளிரை நான் தடுக்கப் போவதில்லை. பிரபஞ்சத்தை நான் தடுக்கப்போவதில்லை. ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருப்பேன்." விழிப்புணர்வுடன் இதை முடிவுசெய்யுங்கள்.

இதைச் செய்யும்போது, உங்கள் உடல் இறுக்கமில்லாமல் தளர்வாக இருப்பதை நீங்களே பார்ப்பீர்கள். குளிர் என்ற விஷயம், உங்கள் உடலின் அந்தப் பகுதியை விட்டுப்போயிருக்கும். மிகவும் லேசாக உணர்வீர்கள்.

இதை நம்மால், கடினமான சூழ்நிலைகளிலும் பயிற்சிசெய்ய முடியுமா, இதөп் பனிப்பிரதேசத்திலும் முயற்சிசெய்து குளிரைத் தடுக்க முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

மனம் எப்போதுமே ஒரு அதீதமான சூழ்நிலையையே விரும்பும். அதுவே அதன் இயல்பு. நாம் முழுமைத்தன்மையோடு இதைச் செய்தால், நம்மால் பனிப்பிரதேசத்திலும், குளிரால் பாதிப்படையாமல் இருக்க முடியும். ஆனால் அந்த அளவிற்கு நம்மிடம், முழுமைத்தன்மையோ தெளிவோ இல்லாததுதான் பிரச்சினை.

Quote box

நாம் இயற்கையோடு முழுமையாக
இசைந்துசெல்ல முடிந்தால், எந்தவொரு
சூழ்நிலையின் உச்சத்திலும் சௌகரியமாக
உணர்வோம். எத்தனையோ பேர் இதைக்
கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாமும் இயற்கையோடு இசைந்து
செல்லும்போது, நமக்கும் இது சாத்தியமே.
இயற்கையிலிருந்து நாம் ஏதோ
ஒருவகையில் வேறுபட்டவர்கள் என்று
நினைக்கும்போதே, நாம் இயற்கையால்
பாதிப்படைகிறோம்.

பிரபல மருத்துவக்குழு ஒன்று, திபெத்தில்,
இமயமலையிலுள்ள புத்த மடாலயங்களில்
வாழும் புத்த பிட்சுக்களிடம் பல விதமான
ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.

அதிலும் ஒரு ஆராய்ச்சியாக தீக்ஷை சடங்குசம்பிரதாயங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்யப்பட்டது. இதில், அப்புத்த பிட்சுக்கள் ஈரத் துணிகளை உடுத்திக்கொண்டு, இரத்தத்தையே உறையவைக்கும் கடுங்குளிரில் அமர்ந்து, தங்களுடைய உடல் சூட்டை அதிகப்படுத்துவதற்கு தியானம் செய்தார்கள்.

நாம் இயற்கையோடு
இசைந்து இருக்கும்போது,
நம் உடலிற்குள் நுழையும்
கிருமியானது,
தானாகவே வெளியேறிவிடும்.

இப்படிச் செய்ததனால், அவர்களது உடல் வெப்பம் அதிகரித்து, அது அவர்களது உடலை வெதுவெதுப்பாக வைத்திருந்தது மட்டுமல்லாமல், அந்த ஈர உடைகளையும் உலரச் செய்துவிட்டது. இது உண்மை, இந்தச் சம்பவம் புகைப்பட காட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்னொரு விஷயம் என்னவென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றில், பாக்டீரியா, வைரஸ் போன்ற எல்லா வகையான கிருமிகளும் கலந்தே இருக்கின்றன. எந்த ஒரு தருணத்திலும் ஏதாவதொரு நோய்க் கிருமி நமக்குள் நோய்களை உண்டாக்கும் சாத்தியமும் இருக்கிறது.

ஆனால் நாம் இயற்கையோடு இசைந்து இருக்கும்போது, நம் உடலிற்குள் நுழையும் கிருமியானது, தானாகவே வெளியேறிவிடும். நாம் அதனால் பாதிக்கப்படமாட்டோம். நாம் எப்போது, நாம் ஒரு தனிப்பட்ட உடல், பிரபஞ்சத்தில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நினைக்கிறோமோ, அப்போதே நமது மொத்த உடலும் நமக்கு எதிரியாகிறது.

பிரபஞ்சம் நமது நண்பனே

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. இந்த மொத்தப் பிரபஞ்சத்துடன், நாம் இசைந்து நடக்கும்போது, பிரபஞ்சம் நமக்கு நண்பனாகிறது. நாம் எப்போது பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்து, பிரபஞ்சத்திற்கு எதிராக நடக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரிபோல் நடிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் . பிரபஞ்சம்
இங்கு நம்மைக் கொல்வதற்காகவோ,
அழிப்பதற்காகவோ இல்லை.

இந்தப் பிரபஞ்சம் என்னும்
ஹோலோகிராமில் (Hologram)
நாமெல்லோரும் ஒரு பகுதி.

முழுமையான ஒன்றிலிருந்து
ஏதாவது ஒரு சிறுபகுதி தனியாகப்
பிரித்தெடுக்கப்பட்டாலும், அது
அந்த முழுமையை முழுமையாகப்
பிரதிபலிக்கும்வகையில் இருக்கும். அதை
ஆங்கிலத்தில் ஹோலாகிராம் என்கிறோம்.

பிரபஞ்சத்திற்கு எதிராக
நாம் எப்போது நடக்க
ஆரம்பிக்கிறோமோ,
அப்போது பிரபஞ்சம் நமக்கு
எதிர்போல்
நடிக்க
ஆரம்பிக்கிறது.

ஹோலோகிராமிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒவ்வொரு பகுதியும், அந்த மொத்த ஹோலோகிராமையும் எப்படிப் பிரதிபலிக்கிறதோ, அதுபோலவே நாமும் முழுமைத்துவத்தை அதாவது பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்குறோம்.

அடுத்ததாக, இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டால், அங்கே என்ன நிகழ்கிறது? இறந்த உடல் தண்ணீரில் மிதக்கிறது. இறந்த உடல் தண்ணீரைவிட கனமானது, இருந்தும் மிதக்கிறது. ஆனால், உயிரோடு இருக்கும் உடல், தண்ணீரைவிட லேசானது. இருந்தும் அது மிதப்பதில்லை, தண்ணீரில் மூழ்கிவிடுகிறது!

இது ஏன் நடக்கிறது? நாம் உயிரோடு இருக்கும்போது, தண்ணீருடன் நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்வதில்லை. நம்முடைய அஹங்காரம், அதைத் தடுக்கிறது. நம்முடைய மனம் அதைத் தடுக்கிறது.

இறந்த உடலில் மனமும் கிடையாது, அஹங்காரமும் கிடையாது. நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் உடலின் கனத்திற்கு காரணங்களாகின்றன.

நயாகரா நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து, மீண்டு வந்த ஒருவரின் பேட்டியை, நான் சமீபத்தில் படித்தேன். நயாகரா வீழ்ச்சியிலிருந்து விழுந்த ஒருவர், உயிர்பிழைத்திருப்பதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். நயாகரா நீர் வீழ்ச்சியை நீங்கள் பார்த்திருந்தால், அதன் வேகத்தையும் பிரம்மாண்டத்தையும் பார்த்திருந்தால், உங்களுக்கு இது புரிந்திருக்கும். எல்லாப் பத்திரிகையாளர்களும், அவரிடம் அந்த அசாதாரணமான சூழ்நிலையைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் மிக அழகானதாகும்: "நான் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்தபோது, நான் அதன் ஒரு பாகமாகவே மாறிவிட்டேன். அதன் ஒரு பகுதியாகவே என்னை உணர்ந்தேன். அதனின்று வேறாக என்னை நினைக்கவில்லை!"

நாம், கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து இருக்கும்போதும், கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகமாக மாறும்போது, இயற்கை நம்மோடு இருக்கும். இயற்கை நமக்கொரு நண்பனாக இருந்து நம்மைப் பாதுகாக்கும். இயற்கை நம்மைத் துன்பப்படுத்தாது.

நாம் நம்மை, இந்த இயற்கையிலிருந்து வேறுபட்டவர்களாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நம்மை ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வாக நினைத்துக்கொண்டு இருக்கும்வரை, இயற்கை நமக்கு எதிராகவே இருக்கும்.

சமூக மற்றும் பொருளாதார வெற்றிகளை அடையவேண்டும் என்று நாம் நினைத்தால், நாம் அந்தச் சூழ்நிலையோடும், அந்த முழுக் குழுவோடும் இசைந்து இருக்கும்போது மட்டுமே, அது சாத்தியமாகிறது. நாம், நம்முடைய இலக்கை அடைவது சாத்தியமாகிறது.

நாம், கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து நடக்க வேண்டும்! நாம் தனிப்பட்டவர்கள் என்றும், நாம் வேறு ஒருவர் என்றும் அடையாளப்படுத்தும்வரை, நாம் எந்தச் சூழ்நிலைக்கும் ஒரு தடையாகவே இருப்போம். அதுபோல் நாமும் தடைபடுத்தப்படுவோம். இது நாம் வேலைசெய்யும் இடத்திலோ, வீட்டிலோ, தொழிற்கூடத்திலோ அலுவலகத்திலோகூட நடக்கலாம்.

கூட்டு விழிப்புணர்விற்குள்
கரையம்போது, நாம் பாதுகாப்புடன்
பராமரிக்கப்படுகிறோம். நம்மை அந்தக்
கூட்டு விழிப்புணர்வே பார்த்துக்கொள்ளும்.
இதனால், நாம் சமூக மற்றும் பொருளாதார
வெற்றிகளை அடைவது மட்டுமல்லாது,
இந்த விழிப்புணர்வை அனுபூதியாக
உணர்வோம். இது ஒரு பூரணத்துவமான

நாம் கூட்டு
விழிப்புணர்வோடு இசைந்து
இருக்கும்வரை
இயற்கை நம்மைப்
பாதுகாக்கும்.

உணர்வு. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், நாம் தடுக்க ஆரம்பிக்கும் அக்கணமே, நமக்கே நாம் ஒரு நரக அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

கூட்டு விழிப்புணர்விற்குள் கரைந்துவிடுங்கள், சுதந்திரமடையுங்கள்

ஒரு சின்ன கதை

இரண்டு எறும்புகள், சாகாவரம் அளிக்கக்கூடிய அமிர்தம் இருக்கும் ஒரு பாத்திரத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தன. பேசி க் கொண்டி இருக்கும்போதே, ஒரு எறும்பு தன் சமநிலையை இழந்து, தவறி அமிர்தத்துக்குள்ளே விழுந்துவிடும் நிலையில் இருந்தது. ஆனாலும், தட்டுத் தடுமாறி எப்படியோ தம்மை நிலைப்படுத்திக்கொண்டு மீண்டு வந்தது.

இதைப்பார்த்த இன்னொரு எறும்பு,
"நீ ஏன் அமிர்தத்துக்குள் விழ
விரும்பவில்லை? அப்படியே, நீ
அமிர்தத்துக்குள்ளே மூழ்கியிருந்தாலும்,
நீ சாகாநிலையைத்தானே
அடையப்போகிறாய்!" என்று கேட்டது.

அதற்கு அந்த முதல் எறும்பு, "இருந்தாலும், எனக்கு அமுதத்தில் மூழ்குவதில் விருப்பம் இல்லை!" என்றது.

கூட்டு விழிப்புணர்விற்குள் கரைவதே, நம்மை முழுமைத்துவத்தில் சுதந்திரமடையச் செய்யும் என்பதை நாம் உணருவதில்லை.

'நான்' என்ற அஹங்காரத்தைப் பிடித்துக்கொண்டு, இதை நாம் தடுக்கிறோம். கூட்டு விழிப்புணர்வுடன் கரையாதவரை, நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நாம் தொடர்ந்து நரகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்போம்.

பண்டைய சீனத் தத்துவமான தாவோயிசமும் இதையே சொல்கிறது. தாவோ, இயற்கையுடன் மிதந்து செல்வதைப்பற்றியது. இயற்கை ஓட்டத்திற்கு, தண்ணீர், ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அது நிலத்தோடு இயைந்து பாய்கிறது.

nature water

அது, தடைகளைத் தாண்டி, அழகாகவும் உற்சாகத் துள்ளலுடனும் சக்திப்பிரவாகமாகப் பாய்கிறது.

தாவோ, நாணல் செடிகளைப் பற்றியும் பேசுகிறது. தண்ணீர் வேகமாகப் பாயும்போது, நாணல் நீரின்போக்கிலேயே வளைந்து கொடுக்கிறது. தண்ணீரின் வேகம் குறைந்ததும், அது நேராக நிமிர்ந்து நிற்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்காதபோதுதான், நமக்கு இது சாத்தியம்.

சுற்றியிருக்கும் சூழ்நிலையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கும்போதுதான், உடலிலும்கூட நோய்களை வரவேற்கிறோம்.

இன்னொரு ஆழமான ஸத்யம். மன சரீர அளவில் நாம் தனிப்பட்டவர்கள் என்று நினைக்கும்போதே, வன்முறைக்கான விதை விதைக்கப்படுகிறது. நம்மைத் தனிப்பட்டவர்களாக உணரும்போதும், நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நினைக்கும்போதும்தான், வன்முறைக்கான விதை உருவாகிறது.

மேலும் நாம், சுயநலமிக்கவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் எதையும் மதிக்காதவர்களாகவும் மாறிவிடுகிறோம். பின் தீவிரவாதிகளாகவே மாறிவிடுகிறோம்.

கூட்டு விழிப்புணர்வால் நாம்
ஒன்றுபடுகிறோம், தனி விழிப்புணர்வால்
பல்வேறு துண்டுகளாகப் பிளவுபடுகி
றோம். பட்டறிவு, எதையும் துண்டு
துண்டுகளாக்குகிறது. உள்ளுணர்வு,
ஒன்றிணைக்கிறது.

ஆன்ம அளவில் நம்மைத்
தனிப்பட்டவர்களாக நினைக்கும்போது,
ஆன்மிக வளர்ச்சிக்கான சாத்தியமே
இல்லை. ஆன்மிகத்தில் முதல்
அடியைக்கூட எடுத்து வைக்க முடியாது.

> பட்டறிவு எதையும்
> துண்டு துண்டுகளாக்குகிறது
> உள்ளுணர்வு
> ஒன்றிணைக்கிறது.

முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய
விஷயம், ஸ்தூல உடலளவில்கூட, நாம்
தனிப்பட்டவர்கள் கிடையாது.

நம்முடைய உடலும் சூரியனுடைய உடலும் இணைக்கப்பட்டுள்ளது.

சூரியனின் உடலில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம், நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் உடலில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம், சந்திரனின் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் தர்க்க அறிவால் இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், ஸத்யம் இதுதான்.

> ஆன்ம அளவில் நம்மைத்
> தனிப்பட்டவர்களாக
> நினைக்கும்போது,
> ஆன்மிக வளர்ச்சிக்கான
> சாத்தியமே இல்லை.

தலைவனாக வாழ்வோம் அல்லது தொண்டனாக வாழ்வோம்

மன சரீர அளவில்கூட, நாம் தனிப்பட்டவர்கள் கிடையாது. யாரோ ஒருவருக்குள் ஏற்படும் ஒரு எண்ணமானது, நம்மை வந்தடைகிறது. அதுபோல, நம்முடைய மனத்தில் ஏற்படும் ஒரு எண்ணமானது, மற்றவரையும் சென்றடைகிறது.

யாரோ ஒருவரால் விதைக்கப்பட்ட ஒரு எண்ணம், நம்மையும் பாதிக்கிறது. இது, ஒரு குளத்தில் உருவாக்கப்படும் அலையைப் போன்றது.

நாம் ஒரு வலிமையான அலையை உருவாக்கும்போது, வலிமையான எண்ணத்தை உருவாக்கும்போது, நம்முடைய அந்த எண்ணத்தால் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். நமது எண்ணங்களால் மற்றவர்களை வழிநடத்தவும் உற்சாகப்படுத்தவும் செய்கிறோம். நம்முடைய எண்ணங்கள் போதுமான அளவிற்கு வலிமையாக இல்லாதபோது, மற்ற அலைகள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழ்ந்தால், ஒரு தலைவனாக வாழ்வோம். இல்லையென்றால், தலைவனைப் பின்தொடரும் ஒரு தொண்டனாக வாழ்வோம். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமில்லை.

"நான் தலைவன் இல்லை, என்னால் அவ்வளவு வேலையெல்லாம் செய்யமுடியாது. அதேசமயம் நான் தொண்டனும் இல்லை, என்னுடைய சொந்தப் பாதையில் செல்வேன்," என்று நாம் சொல்லலாம்.

இது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். 'என்னுடைய தனிப்பட்ட நிலை' என்று எதுவுமில்லை. வழிநடுத்துதல் அல்லது பின்தொடர்தல், இவை இரண்டுதான் இருக்கின்றன.

மனசரீர அளவில், மீண்டும் மீண்டும் நம்மைத் தனிப்பட்டவர்களாக நினைக்கும்வரை, நாம் தடைகளைச் சந்திப்போம். 'கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம்' என்பதை உணரும் அந்த வினாடியே, நாம் வரவேற்கப்படுவோம், நாம் ஏற்றுக்கொள்ளப்படுவோம்.

மூன்றாவது ஸத்யம்

இறுதிநிலையில், ஆன்மிக நிலையில், நாம் அனைவரும் மொத்தக் குழுவோடு, மொத்தப் பிரபஞ்சத்தோடு ஆழமாக இணைக்கப்பட்டவர்கள்தான், அதனோடு முழுமையாகவும் வலுவாகவும் ஒன்றிணைக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணரும் அந்த வினாடியே, நாம் நித்யானந்தத்தை உணர்வது மட்டுமல்லாது, 'இருப்புத்தன்மையின்' பல பரிமாணங்களை நாம் வாழ ஆரம்பிப்போம். அப்போதுதான் நாம் உண்மையிலேயே வாழ்கிறோம்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில், நாம் எப்போதும் கடுகடுப்பாக இருக்கிறோம். தொடர்ந்து ஏதோ ஒன்று நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அதனால் நாம் தொடர்ந்து அளவுக்கதிகமாகவே சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

நம்முடைய தனிப்பட்ட உடல் மற்றும்
மனத்தைக்கொண்டு நாம் நிறைய சிந்திக்க
வேண்டியதிருப்பதால், ஆனந்தமாய்
இருப்பதற்கு, நாம் கடினமாக முயல
வேண்டியதிருக்கிறது.

கூட்டு விழிப்புணர்விற்குள் நாம்
கரையம்போது, நமக்குள் நாம் புதுப்புது
பரிமாணங்களையும் சாத்தியங்களையும்
உயிர்ப்பிப்போம்.

இந்த ஒரு உடலைக் கொண்டே, நம்மால் இவ்வளவு ஆனந்தத்தை உணர முடிகிறது. கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். இரண்டு உடல்கள் இருந்தால், இன்னும் எவ்வளவு ஆனந்தத்தை உணரலாம். பல உடல்கள் இருந்தால், எவ்வளவு சாதிக்கலாம் என்பதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.

உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆனந்தமும் மகிழ்ச்சியும் அதிகமாகும். கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி நாம் என்று உணரும்போது, இது நமக்கு அனுபவமாகிறது.

இந்தியாவில் இது ஒருபோதும் நடக்காத காரியம்

நித்யானந்த ஸ்புரண த்யான முகாமில், 'நாம் விழிப்புணர்வின் ஒரு பகுதியே' என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்பது மட்டுமல்ல, நாமேதான் கூட்டு விழிப்புணர்வும்கூட. நாம் நினைப்பதுபோல, நாம் தனித்தனி விழிப்புணர்வுகள் கிடையாது.

ஒவ்வொரு உடலாக, நாம் உள்ளே ஆழ்ந்து செல்லச்செல்ல, நாம் எல்லாவற்றோடும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை உணருகிறோம். இதனால், நோய்கள் தானாகவே குணமாகின்றன. நம்முடைய மன சரீரம், ப்ராண சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரம் மற்றும் மற்ற அனைத்து சரீரங்களிலுமே இனிமையை உணருகிறோம்.

கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்பது மட்டுமல்ல, நாமேதான் கூட்டு விழிப்புணர்வும்கூட.

நாம் எல்லையில்லா விழிப்புணர்வு என்பதை அனுபவமாக உணரும்போது, அது ஒரு நம்பவியலாத அருமையான அனுபவமாகவே இருக்கும். இதை கற்பனைசெய்து பார்ப்பது கடினம்.

த்யான முகாமின் இறுதியில், தங்களது பெயர், அடையாளம் சமூக அந்தஸ்து, கல்வித்தகுதி, பணம், மதம் மற்றும் எதையெல்லாம் தாங்கள் என்றும், தங்களுடைய அடையாளங்கள் என்றும் பிடித்துவைத்திருந்தார்களோ, அத்தனையும் மறந்து, அவ்வளவு ஆனந்தத்துடன் இருப்பார்கள்.

மாமனார், தம்முடைய மருமகளின் காலில் விழுந்து வணங்குவதைப் பார்த்திருக்கிறேன்! இந்தியாவில் இது ஒருபோதும் நடக்காத காரியம். ஆனால் நமது த்யான முகாமில் இறுதியில் இது நடந்தது. ஏனென்றால் அவர் அந்தப் பெண்ணிற்குள் இறைவனைப் பார்க்கிறார்.

மாமியார், தம்முடைய மருமகனுக்குள் இறைவனைப் பார்ப்பதால், அவருடைய கால்களில் விழுந்து வணங்குகிறார். தாத்தா பாட்டிகள், தங்களுடைய பேரன் பேத்திகளின் காலில் விழுகிறார்கள். முதலாளிகள், தங்களுடைய தொழிலாளிகளின் காலிலும் உடன் வேலை செய்பவர்களின் காலிலும் விழுகிறார்கள்.

ஒன்றிணையும் உணர்வை அனுபவிக்கும்பொழுது, கூட்டு விழிப்புணர்வை அனுபவிக்கும்பொழுது, கூட்டு விழிப்புணர்வின் ஆனந்தத்தை உணரும்பொழுது, நம்முடைய அடையாளம் என்று பிடித்துக்கொண்டு மற்றவரிடம் இருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கத் தூண்டும் நம்முடைய பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து, கௌரவம் என்ற அனைத்தையும் மறந்துவிடுவோம்.

நாம் எல்லையில்லா விழிப்புணர்வு என்பதை அனுபவமாக உணரும்போது, அது ஒரு நம்பவியலாத அருமையான அனுபவமாகவே இருக்கும்.

'நாம் யார்' என்ற ஸத்யம் புலப்படும்.

தம்முடைய மோசமான எதிரியின் கால்களைத் தொடுவதாலும், தம்முடைய வயதைவிட மிகக் குறைந்த வயதுடையவரின் கால்களைத் தொடுவதாலும், பொருளாதார நிலையில் தங்களைவிட குறைந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதாலும், மக்கள், தங்களது அடையாளங்களை மறந்துவிடுவதைப் பார்த்திருக்கின்றேன்.

அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேறுகிறார்கள்.

அவர்களின் அஹங்காரம் கரைந்ததனால், ஆழமான விழிப்புணர்வையும் ஆனந்தத்தையும் உணருகிறார்கள். அனைவரிடத்திலும் கடவுளைப் பார்க்கிறார்கள். அவர்கள், ஆனந்தத்திலும் உற்சாகத்திலும் கூட்டு விழிப்புணர்விலும் இருக்கிறார்கள். அவர்கள் இதை பாவனைசெய்து பார்ப்பதில்லை. இந்த அனுபவம் ஏற்படும்போது, அங்கே இருக்கும் தாங்கள் அனைவருமே தனித்தனியானவர்கள் அல்ல, ஒருங்கிணைந்தவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்கின்றனர். கூட்டு விழிப்புணர்வை நாம் உணரும்போதுதான், ஆனந்தம், நித்யானந்தம் என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் தெரியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், "எல்லோருடைய இதயங்களிலும் நான் வீற்றிருக்கிறேன்."

அவர் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் வீற்றிருக்கிறார்.

பிரபஞ்ச இருப்பு மற்றும் தனிமனித இருப்புக்கும் இடையேயான வேறுபாடு, அழியக்கூடியது மற்றும் அழியாததற்கும் இடையேயான வேறுபாடு - என்பதெல்லாம் மாயையில் சிக்கியவர்களுக்கும், குழப்பத்தில் இருப்பவர்களுக்கும்தான் என்று கிருஷ்ணர் சொல்கிறார். கூட்டு விழிப்புணர்வை உணரும்போது, இந்த வித்தியாசங்கள் ஏதுமில்லை. நாம் அனைவருமே கூட்டு விழிப்புணர்விற்குள் கரைகிறோம்.

கடலில் ஏற்படும் அலை, தாம் தனியானது என்றே நினைக்கிறது. கடலிலிருந்துதான் நாம் உருவானோம், கடலிலேயே கலப்போம் என்பதை அது உணர்வதில்லை. மேலும், தான் சமுத்திரம்தான் என்பதை அலை நம்புவதில்லை. எப்படி அலையானது கடலின் ஒரு பகுதியோ, அதுபோலவே நாமும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாவோம்.

புருஷோத்தமனை அடைவது நமக்கு எப்படிச் சாத்தியமாகும், நாம் அவரின் ஒரு பகுதியாக இருக்கும்பட்சத்தில்! 'நாம் அவரின் ஒரு பகுதி' என்ற விழிப்புணர்வை வேண்டுமானால் அடையலாம்.

இதுதான் கிருஷ்ணரின் அறிவாழம்மிக்க உபதேசம். இந்தப் பகுதியில், கிருஷ்ணர் ஒரு மேலான குருவாகவே மாறிவிடுகிறார். அர்ஜுனன், ஆழ்ந்த அமைதியில் நிலைத்திருக்கிறார். இதுவே, குருவை உள்வாங்குவதற்கான சிறந்த வழி!

தேக்கநிலையிலிருந்து மீட்பவர் குரு ஒருவரே

குரு, நம் இருப்பில் நிகழும் உச்சபட்ச நோயான அஹங்காரம் என்னும் புற்றுநோய்க்கட்டியை அகற்றுகிறார்.

குரு, அந்தக் கட்டியின்மீது அறுவைசிகிச்சை செய்கிறார். ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் செளகரியமாக உணரவோ, அதிலேயே தடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவதில்லை.

ஆன்மிக ரீதியாக நாம் முன்னேறினாலும், சில அம்சங்களில் நாம் சிக்கியிருப்போம். இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், நாம் அவ்வாறு சிக்கியிருக்கிறோம், அதனால் நமக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுகூட நமக்குத்தெரியாது. இந்த சூழ்நிலையில்தான், குருவானவர் நம்மை முன்னேற்றப்பாதையில் மீண்டும் மீண்டும் ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். அவர், நம் மொத்த வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடுவார்.

அறுவைசிகிச்சை செய்ய கத்தியுடன் வரும் மருத்துவரைப் பார்க்கும்போது, அவர் நம்மைக் காயப்படுத்திவிடுவாரோ என்று பயப்படுவோம். ஆனால் மருத்துவர் கத்தியை வைத்திருப்பது, நம்மைக் கொல்வதற்காக அல்ல, நம்மைக் குணப்படுத்துவதற்காக!

இந்தியாவில் கடவுள்கள், வாளுடனும் இன்னும் பல ஆயுதங்களுடனும் இருப்பார்கள். அவர்கள் நம் அஹங்காரம் என்னும் கட்டியை அறுக்கும் மருத்துவர்கள் என்பதால் அவ்வாறு காட்சிதருகிறார்கள்.

ஞானமடைவதற்குக் குறைவான எந்த ஒரு நிலையிலும் நாம் செளகரியமாக உணரவோ, அதிலேயே தடைபட்டிருக்கவோ குருவானவர் விடுவதில்லை.

காளிதேவி, தம்முடைய ஒரு கையில் பெரிய வாளுடனும் மற்றொரு கையில் வெட்டப்பட்ட தலையுடனும் காட்சி தருவாள். வெட்டப்பட்ட தலை, அஹங்காரத்தைக் குறிக்கிறது. அந்த வாள், அஹங்காரத்தை அழித்த அறிவை, ஞானத்தைக் குறிக்கிறது.

குருவானவர் எப்படி ஒரு சீடர்மீது அக்கறையுடன் இருக்கிறார், அந்தச் சீடர் எந்த ஒரு நிலையிலும் தேங்கி நிற்காமல், தொடர்ந்து முன்னேறச் செய்கிறார் என்பதை விவரிக்கிறேன்.

சீடர், தம்முடைய தற்போதைய நிலையைச் சௌகரியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் உணர்ந்தாலும்கூட, குருவானவர் அந்தச் சீடரை உலுக்கி, அவர் பாதுகாப்பு என்று நினைக்கும் அந்த நிலை உண்மையில் பாதுகாப்பானது கிடையாது, அது வெறும் தேக்கநிலையே என்பதையும், அந்தத் தேக்கநிலையிலிருந்து மீண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்பதையும் உணரச்செய்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் குருவானஇராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. இராமகிருஷ்ணர், காளியின் உருவத்தை த்யானம் செய்வதிலும் அதை உணர்ந்து அனுபவிப்பதிலுமே ஆனந்தமாக இருந்தார்.

ஒருநாள், இராமகிருஷ்ணரின் அத்வைத குரு தோதாபுரி இராமகிருஷ்ணரிடம், காளியின் உருவத்தை த்யானம் செய்யாமல், அதைக் கடந்து த்யானம் செய்யுமாறு சொன்னார்.

தோதாபுரி, நிர்குண தத்துவத்தைப் - பிண்டாண்டமும் பிரம்மாண்டமும் ஒன்று என்ற - அத்வைத தத்துவமுறையைப் பின்பற்றும் குரு.

குரு சொன்னதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஆச்சரியமடைந்து, "காளிதேவியின் வடிவம் மிகவும் அழகாக இருக்கிறது, நான் என்னை முழுவதுமாக அவளுடன் இணைத்துக்கொண்டேன். பின் ஏன் நான் அவளது உருவத்தை தியானிக்கக்கூடாது?" என்றார்.

குருகுலங்களில் வழக்கமான
கல்விகளைக்கூட,
ஆசிரியர்கள்
கற்றுத்தரவில்லை,
ஆன்மிக குருமார்களே
கற்றுத்தந்தார்கள்.

அதற்குத் தோதாபுரி, "உருவங்கள் இறுதியானது அல்ல. உருவங்களைக் கடந்து ஆழ்ந்து செல்லும்போதுதான், இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வின் ஆனந்தத்தை உணரமுடியும்," என்றார்.

ஒரு உருவத்தைத் த்யானம் செய்யும்போது, நம்முடைய அஹங்காரத்தை அந்த உருவத்தின்மீதும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். அது நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.

நமக்கு ஒரு கனிவான, அன்பான ஒரு
அம்மா தேவைப்பட்டாலோ அல்லது
தந்தையிடம் அன்பு மற்றும் கவனிப்பு என்ற
அம்சங்கள், பண்புகள் இல்லையென்று
உணர்ந்தாலோ, அந்த ஏக்கம் என்னும்
அஹங்காரத்தை, கடவுளின்மீது செலுத்தி,
கடவுளை, கனிவும் அன்பும் நிறைந்த
அம்மாவாகவோ, தந்தையாகவோ
நினைத்து வழிபடுவோம்.

எந்தளவிற்கு ஆழமாக இதை
அகக்காட்சியாகக் காண்கிறோமோ,
அந்தளவிற்கு விரைவில் அது
நிதர்சனமாகும்; உண்மையாகும்.

> ஆசிரியருக்கு அறிவு
> பூர்வமாக மட்டுமே தெரியும்.
> குருவிற்கோ அனுபவ
> பூர்வமாகவும் தெரியும்.

இராமகிருஷ்ணர், ஆழமாக தம் மனதில் பாவனை செய்த காட்சி நிஜமானதுதான் என்று நினைத்தார். அது இறுதி ஸத்யம்அல்ல என்றாலும்கூட, இராமகிருஷ்ணர் உருவ வழிபாட்டில் சந்தோஷத்தை அடைந்தார்.

ஆனால் தோதாபுரி, அவரை இந்த நிலையில்லா ஆனந்தத்திலேயே, இடைப்பட்ட நிலையிலேயே தேங்கி இருக்க விடவில்லை. அவர் இராமகிருஷ்ணரை, உருவத்திலிருந்து, நித்ய ஆனந்தமான உருவங்களற்ற நிலைக்குச் செல்லுமாறு வலியுறுத்தினார். உருவமற்ற அனுபவத்தை அடைய, காளியின் உருவத்தை மனதுக்குள்ளிருந்து அழிக்குமாறு சொன்னார். ஸ்ரீராமகிருஷ்ணரும் அப்படியே செய்து, முடிவிலா நித்தியானந்தத்தை அடைந்தார்.

நாம் எங்கேயும் தேங்கிவிடாமல், இறுதிநிலையை அடைவதை குரு உறுதிசெய்கிறார். அதனால்தான் கிழக்கத்திய கலாச்சாரத்தில், குருவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்திற்கு, ஆசிரியர்களை மட்டுமே தெரியும். அங்கு, ஆன்மிக குரு என்ற ஒரு விஷயமே கிடையாது.

கிழக்கத்திய கலாச்சாரத்தில், ஆன்மிகக் கல்வியைக் கொடுக்கும் பாரம்பரிய பள்ளிகளான குருகுலங்களில், வழக்கமான கல்விகளைக்கூட, ஆசிரியர்கள் கற்றுத்தரவில்லை, ஆன்மிக குருமார்களே கற்றுத்தந்தார்கள்.

குருவிற்கும் ஆசிரியருக்கும் என்ன வித்தியாசம்? ஆசிரியருக்கு, தாம் கற்றுக்கொடுப்பது குறித்து அறிவு பூர்வமாக மட்டுமே தெரியும்.

குருவிற்கோ அனுபவ பூர்வமாகவும் தெரியும். குருவானவர், தாம் சொல்லும் ஸத்யத்தை அனுபூதியாக உணர்ந்தவர்.

இந்திய மன்னர்கள், போர்க்கலை கற்றுக்கொள்ள, குருவிடம்சென்றார்கள். ஞானமடைந்த ஒருவருக்கு விவசாயத்தைப் பற்றியும், போர்க்கலைகள் பற்றியும், வர்த்தகம் பற்றியும் என்ன தெரிந்திருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அன்றைய குருமார்கள், ஆயகலைகள் அறுபத்து நான்கையும் (64) கற்றுத்தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

ஒவ்வொரு கலை மற்றும் அறிவியலுக்கென்று ஒரு நுட்பம் இருக்கிறது. குருகுலத்தில், குழந்தைகள் ஏழு வயது முதல் பதினான்கு வயது வரை, தியானம் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள்

> ஞானகுருமார்கள், ஒவ்வொருவருக்கும் ஏற்ற சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழும்படி வழிகாட்டியதால், அனைவருமே மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில், அவர்களுக்கு முதல் ஆன்மிக அனுபவம் ஏற்பட்டால், அவர்கள் ஆழமான ஆன்மிக ஸத்யங்களை விளக்கும் ப்ரஹ்ம ஸூத்ரத்தைக் கற்று, ஸந்நியாஸ வாழ்வை ஏற்பார்கள். இல்லையெனில், வாழ்க்கையின் புதிர்களைக் கற்றுக்கொள்ள, காமஸூத்ரத்தைப் படித்து, இல்லற வாழ்வில் நுழைவார்கள்.

ஞானகுருமார்கள், ஒவ்வொருவருக்கும் ஏற்ற சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழும்படி வழிகாட்டியதால், அனைவருமே மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள்.

ஆசிரியர், வார்த்தைமொழியால் கற்றுத்தருகிறார். குரு, தம் உடல்மொழியால் கற்றுத்தருகிறார்.

தொண்ணூறு சதவீதம், நாம் உடல்மொழி வழியாகவே விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதை இன்றைய ஆராய்ச்சிகள் ஒப்புக்கொள்கின்றன. குருவின் நேரடி தொடுதலும், அவரது ஸாந்நித்யமும் ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற தளத்தை உருவாக்குகின்றன.

நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை...

குருவை நாம் முதன்முறை சந்திக்கும்போதே, நாம் நம்மை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவல்ல நாம் என்பதை உணர்த்துகிறார்.

அவர் சொல்கிறார், 'நாம் ஆன்மிக அனுபவத்தைப் பெறவந்த மனித உயிர்கள் அல்ல, மனித அனுபவத்தைத் தாங்கிநிற்கிற ஆன்மிக உயிர்கள்'. நாம் இதை நம்ப மறுப்பது மட்டுமல்லாமல், தீவிர அசௌகரியமாகவும் உணருகிறோம். அவர், தம்முடைய கருத்துக்களைச் சொல்லி, நம்மை மாற்றப் பார்க்கிறார் என்று நினைக்கிறோம். நாம் பயந்துபோய், தப்பித்து ஓடப் பார்க்கிறோம்.

நாம், நம்முடைய செம்மறி ஆட்டு மந்தை வாழ்க்கையையே தொடர்ந்துவாழ விரும்புகிறோம் அதிலேயே சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம். வழக்கமான விஷயங்களான வீடு, மனைவி, குழந்தைகள் வேலை மற்றும் சந்தோஷம் போன்றவற்றில் சிக்கித்தடைப்பட்டு நின்றுவிடுகிறோம்.

குருவின் நேரடி தொடுதலும் அவரது ஸாந்நித்யமும் ஒரு மனிதர் விழிப்படைவதற்கு ஏற்ற தளத்தை உருவாக்குகிறது.

சிறிது காலத்திற்குப் பிறகு, குரு, அதே கருத்துக்களை மீண்டும் சொல்லும்பொழுது, நாம் அந்தக் கருத்துக்களைப் புறக்கணிப்பதில்லை. அதேசமயம், நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுமில்லை.

இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, குருவின் சக்தியானது நம்மை ஈர்க்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை நினைக்கத் தொடங்குவோம். குரு நம்ிருப்பின் ஒரு பாகமாவார். ஆனாலும் அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் குருவிடம் கண்ணாமூச்சி விளையாடுகிறோம்.

ஒரு தருணத்தில், நாம் அவரை உணர்வு பூர்வமாக நம்பும்பொழுது, நாமும் அவரைப் போன்றவர்தான் என்பதை உணர்த்துகிறார். நாமும் இறுதி ஸத்யத்தை அடையமுடியும், அதன் விளைவாக அவரைப்போல் இருக்கவும் முடியும் என்பதைக் காட்டுகிறார். ஆனாலும், மறுபடியும் நாம் பயந்து ஒரு செம்மறிஆட்டைப்போல இருக்கிறோம்.

அப்போது நாம் சௌகரியமாக உணருவதற்காக, குருவும் ஆட்டைப்போல நடிக்கிறார். நம்முள், ‘அவரும் நம்மைப் போன்றவரே’ என்ற உணர்வு வரும்படியாகச் செய்கிறார்.

நமக்குள் எந்த ஒரு ஆன்மிக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மிக அனுபவம்.

நாம் அவரை முழுமையாக நம்பியவுடன், அவருடன் சௌகரியமான உணர்வுடன் தொடர்புபடுத்திக் கொண்டவுடன், ‘நாம் ஆடு கிடையாது. சிங்கம்’ என்ற உணர்வைப்பெற நம்மை வலியுறுத்துகிறார். இதைத்தான் தீக்ஷை அல்லது முதல் அனுபவம் என்கிறோம்.

நாம் மீண்டும் மறுக்கிறோம்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, குருவானவர், நம்முடைய இயல்பான நிலையை உணரச்செய்து, இறுதி சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அதற்குப்பிறகே, ‘நாம் எப்போதுமே சிங்கம்தான்’ என்பதை நாம் உணருகிறோம்.

நாம் புதிதாக ஏதோவொன்றாக மாறவேண்டியதில்லை, நாம் விழித்தெழுந்து, ஏற்கனவே அதுவாகத்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்போதும். குருவானவர், முழு மலர்ச்சிக்கு முந்தைய எந்த ஒரு நிலையிலும், நம்மைத் தேங்கவிடுவதில்லை.

நாம் முழுமையாக மலரும்வரை, அவர் நம்மை எங்கும் சோர்வடைந்து நிற்கவிடுவதில்லை.

நாம்தான் இந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வு, நாம்தான் இறுதி ஸத்யம், நாம்தான் பிரபஞ்ச சக்தி என்பதை நாம் உணரும்வரை, குரு, மீண்டும் மீண்டும் நம்மை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

ஆழ்ந்த சரணாகதி - முக்திக்கான நுட்பம்

ஒரு அழகான ஜென் கதை.

ஒரு சீடர், சிறு வயது முதலே குருவிடம் வளர்ந்துவந்தார். அவர், தனது குருவைப் போலவே பாவனை செய்வார். குரு, தாம் சொற்பொழிவாற்றும்போது, கட்டைவிரலை மட்டும் உயர்த்திக்காட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இதைச் சீடரும் அப்படியே செய்வார்.

ஒருநாள், குரு சொற்பொழிவின்போது கட்டைவிரலை உயர்த்தினார். வழக்கம்போல் சீடரும் அதேமாதிரி செய்தார். சட்டென ஒரு வாளையெடுத்து அந்தச் சீடரின் கைவிரல்களை வெட்டிவிட்டார் குரு!

சீடர், எந்த ஒரு சலனமோ, சந்தேகமோ இல்லாமல், குரு எதுசெய்தாலும் தம் நன்மைக்குத்தான் செய்வார் என்ற ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்தார். அந்த ஆழ்ந்த நம்பிக்கையே அந்தச் சீடரை உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு எடுத்துச் சென்றது. அந்தச் சீடரும் ஞானமடைந்தார்.

மற்ற சீடர்கள் குருவிடம், "ஞானமடைவதற்கு, எதற்காக அந்தச் சீடர் விரல்களை இழக்கவேண்டும்," என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த குரு, "மக்கள் ஞானமடைவதற்காகப் பல ஜென்மங்களை இழக்கிறார்கள். சில விரல்களை இழப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை," என்றார்.

மற்றொரு ஜென் கதை.

ஒருநாள் சீடர் பின்தொடர, குருவானவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது சீடர் குருவிடம், ஞானமடைவதற்கு வழிகாட்டுமாறு கேட்டார்.

உடனே சட்டென திரும்பிய அந்த குரு, சீடரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். அந்த சீடர் குருவிடம் ஆழ்ந்த சரணாகதி உணர்வுடன் இருந்ததால், குரு என்னசெய்தாலும், அது தம் நன்மைக்காகவே இருக்கும் என்று

தத்தவமஸி -
'அதுவாகவே நீ இருக்கிறாய்'
என்ற அனுபவம் நமக்குள் ஏற்படும்வரை, குரு ஓய்வெடுப்பதில்லை.

உணர்ந்தார். அவர் விழும்போது, மிதப்பதைப்போன்று உணர்ந்தார். அவர் தரையைத் தொடும்போது, சொர்க்கத்தைத் தொட்டார். அவர் ஞானமடைந்தார்.

ஆனால், இந்த நுட்பங்களை, தங்களோடு ஆழ்ந்த சரணாகதி உணர்வோடு இருக்கும் சீடர்களிடம் மட்டுமே குருமார்கள் பயன்படுத்துவார்கள்.

தம்மோடு இசைந்து இருக்கும் சீடர்களிடம் மட்டுமே இதைச் செய்வார்கள். ஜென் தடி (Zen Stick) என்கிற உயர்ந்த நுட்பத்தை கனிவுடனும் அன்படனும் உபயோகிப்பார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் மனதைப் புண்படுத்தக்கூடியதாகத் தெரியும். ஆனால் அந்த சீடருக்கு மட்டுமே, குரு தம்மிடம் அந்த நுட்பத்தை உபயோகப்படுத்துவதன் பின்னணியில் இருக்கும் அன்பும் கனிவும் புரியும். இப்படிப்பட்ட அறுவைசிகிச்சையைப் பெறுவதே பாக்கியம்.

குருவானவர், எவரையும் சாதாரண அனுபவங்களில் தேங்கி நிற்க அனுமதிப்பதில்லை. நாம் இதையெல்லாம் ஆன்மிக அனுபவம் என்று சொன்னாலும்கூட, நமக்குள் எந்த ஒரு ஆன்மிக அனுபவமும் மேலும் ஏற்படாத நிலையே, உண்மையான ஆன்மிக அனுபவம்.

இந்த அனுபவத்தில்தான், அனுபவிப்பவர், அனுபவிக்கப்படுவது, அனுபவம் ஆகிய இந்த மூன்றுமே ஒன்றாகிறது. இந்த மூன்றும் ஒன்றாகி, 'அனுபவம்' மட்டுமே எஞ்சி நிற்கிறது. 'நாம்' மட்டுமே இருக்கும். 'நாம்' என்ற வார்த்தையைக்கூட உபயோகிக்க முடியாது, ஏனென்றால், அங்கே வேறெதுவும் கிடையாது. எல்லா எல்லைகளும் அழிந்துவிட்டன.

'மற்றவரைவிட நாம்
புனிதமானவர்' என்ற
மனப்பான்மை
ஆன்மிக ரீதியான
அஹங்காரத்தை
ஏற்படுத்தும்.
நம்மை இந்நிலையில்
குருவானவர்
தேங்கவிடுவதில்லை.

தத்தவமஸி - 'அதுவாகவே நீ இருக்கிறாய்'
என்ற அனுபவம் நமக்குள் ஏற்படும்வரை,
குரு ஓய்வெடுப்பதில்லை.

குருவானவர், நம்முடைய சாதாரண
மற்றும் ஆன்மிக நிலையில் இருக்கும்
அஹங்காரத்தை, அறுவைசிகிச்சைசெய்து
நீக்கும் சிறந்ததொரு மருத்துவர்.

'மற்றவரைவிட நாம் புனிதமானவர்' என்ற மனப்பான்மை ஆன்மிக ரீதியான

அஹங்காரத்தை ஏற்படுத்தும். நம்மை இந்த
நிலையில் குருவானவர் தேங்க விடுவதில்லை.
அவர் நம்மை முன்னோக்கிச் செல்ல,
பின்னால் இருந்து தள்ளிக்கொண்டே
இருப்பார். இறுதி ஸத்யத்தை உணரும்வரை,
இவ்வாறு முன்னோக்கித் தள்ளிக்கொண்டே
இருப்பார்.

எந்த அளவுக்கு அறுவைசிகிச்சை செய்ய
அனுமதிக்கிறோமோ, அந்த அளவிற்கு
நம்மால் ஸத்யத்தை உணர முடியும்.
ஒருசில மனிதர்கள், அறுவைசிகிச்சை
செய்துகொண்டிருக்கும்போதே பாதியில்
எழுந்து ஓடிவிடுவார்கள், இது மிகவும்
ஆபத்தானது.

அத்தனையும் தனக்குள்
உணரும் எல்லை வகுக்க
முடியா இம்முழுமை
நிலையைத்தான், சங்கரர்,
பூர்ணம் என்று சொல்கிறார்.
இதே ஸத்யத்தைத்தான்
புத்தர், சூன்ய என்று
குறிப்பிடுகிறார்.

சரணாகதி செய்வதற்கு முன்பே, என்னென்ன சரிபார்த்துக்கொள்ள வேண்டுமோ சரிபார்த்துவிடுங்கள். சரணாகதி செய்துவிட்டால், குரு தம் வேலையைச் செய்ய அனுமதியுங்கள்.

ஶ்ரத்தை, பாதையையே இலக்காக்கி விடும்

கேள்வி : ஶ்வாமிஜி, நாம் அனைவரும் மனநிலையில் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த நிலைகளிலும் ஒன்றாகவே இருக்கிறோம், ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோமென்றால், ஏன் நம்மால் அதை உணர முடியவில்லை? எப்படி அதனோடு இணைப்புப்பெற்றிருப்பது?

உங்களுடைய கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு முதலில் பதில் சொல்கிறேன்.

நீங்கள் இணைப்பை ஏற்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நாம் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வது ஒன்றுதான்.

உங்களுடைய இருப்புத் தன்மையின் ஆழத்தில், நிர்வாண ஶரீரத்தில், நீங்கள் இந்த உலகத்துடனும் கடவுளுடனும் ஒருங்கிணைந்து விடுகிறீர்கள். இதுவே ஜீவன் (ஜீவாத்மா), ஜகத் (உலகம்), ஈஸ்வரன் (கடவுள்) மூன்றும் ஒன்றே என்று குறிப்பிடப்படுகிறது.

A person hugging a tree

அப்போது உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் உங்களிலிருந்து வேறொன்றாகப் பார்க்க மாட்டீர்கள், சக மனிதர்கள்மீது மட்டுமல்ல, உயிரற்ற பொருட்களின் மீதும் அன்பு செலுத்துவீர்கள். (மரணத்தின் வாசல்வரை சென்று வந்தவர்கள் நிறையபேருக்கு இதே உணர்வு இருக்கிறது.)

உங்களுக்குள் இருக்கும் சக்தியானது, இந்த இயற்கையின் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தின் சக்தியே, இறைவனின் சக்தியே என்பதை உணர்வீர்கள், நீங்கள் எப்போதும் நித்யானந்தத்திலேயே இருப்பீர்கள்.

நீங்கள் ஏதோ சிலவற்றுடன் மட்டும் இணைக்கப்படவில்லை. எல்லாவற்றுடனுமே இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளுடனோ, கருத்துடனோ அல்லது உறவுகளுடனோ மட்டும் உங்களுக்கென்று தனியான பந்தம் இல்லை.

நீங்கள் எல்லையற்றவராய் விரிவடைந்து, எல்லாப் பொருட்களையும் மனிதர்களையும் உங்களுக்குள் உணரும்போது, எப்படி உங்கள் அன்பையும் கனிவையும் ஒரு விஷயத்தில் மட்டும் செலுத்த முடியும்?

அத்தனையையும் தனக்குள் உணரும் எல்லை வகுக்க முடியா இம்முழுமை நிலையைத்தான், சங்கரர், பூரணம் என்று சொல்கிறார். இதே ஸத்யத்தைத்தான் புத்தர், சூன்ய என்று குறிப்பிடுகிறார், அதாவது தனி அடையாளம் மறைந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும நிலையைக் குறிப்பிடுகிறார்.

> உங்களுக்குள் இருக்கும்
> சக்தியானது,
> இயற்கையின் சக்தியே,
> இறைவனின் சக்தியே
> என்பதை உணர்வீர்கள்.

நாம் எப்படி இதை அடைவது?
இது, பதில் சொல்வதற்கு சுலபமான கேள்வி,
அதே சமயம் பதில் சொல்ல முடியாத
கேள்வியும்கூட.
ஒவ்வொருவருமே, புனிதரோ அல்லது
பாவியோ, நாம் இந்த விழிப்புணர்விலிருந்து
விலகித்தான் இருக்கிறோம். அதுவும் சம
அளவு தூரத்தில்!

நாம் செய்யவேண்டியது... ஒரே தாவலில் அந்தத் தூரத்தைக் கடக்க வேண்டியதுதான்.

இது, உடனடியாகவும் தாமாகவும் சரியான நேரத்திலும் நிகழும் ஒரு விழிப்புணர்வு. பகுதி பகுதியாக முடித்த பிறகு, அதற்கான சான்றிதழ்கள் வாங்கி, இறுதியாக, 'விழிப்புணர்வுத் தேர்வில்' தேர்ச்சி பெறுவது போன்றது கிடையாது இது.

நம்முடைய அனைத்து த்யான வகுப்புகளும், உங்களின் ஒரு பகுதியைத் திறக்கச் செய்து, இந்த ஸத்யத்தின் ஒரு துளியையாவது அனுபவிக்கச் செய்கின்றன.

உன்னுடைய கேள்விகள் வேட்கையாக மாறும்போது, அவசியங்கள், அவசரங்களாக மாறும்போது, நீங்கள் விழிப்படைகிறீர்கள்.

முதல்நிலை த்யான வகுப்பான, ஆனந்த ஸ்பூரண த்யான வகுப்பில், உங்களுடைய சக்தி மையங்களான சக்கரங்களை விழிக்கச்செய்து,தூய்மைப்படுத்துவதற்கான நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன. தூய்மைப்படுத்தப்பட்ட இந்நிலையில் நீங்கள், அந்த ஸத்யத்தை ஒருதுளியாவது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பீர்கள். மேலும் முன்னேறிச் செல்லவும் தயாராக இருப்பீர்கள்.

இரண்டாவது நிலை த்யான வகுப்பான, நித்யானந்த ஸ்பூரண த்யான நிகழ்ச்சியில், ஏழு சரீரங்களின் வழியாக உங்களை அழைத்துச் செல்வோம். இதில் நீங்கள், சில அனுபவங்களைப் பெறுவீர்கள். நீங்கள் ஸத்யத்தின் சில துளிகளையாவது ருசிப்பீர்கள். அடுத்ததாக, நித்ய த்யான சிகிச்சையாளர் தீக்ஷை வகுப்பு. இதில், இந்த அனுபவத்திலேயே, நீங்கள் விரும்புகிறவரை நிலைத்திருப்பதற்கான தீக்ஷை தரப்படுகிறது.

இதற்குமேல் உங்களது முயற்சி தேவைப்படுகிறது. உங்களுடைய கேள்விகள் வேட்கையாக மாறும்போது, அவசியங்கள், அவசரங்களாக மாறும்போது, நீங்கள் விழிப்படைகிறீர்கள்.

இனி வேறு வழியே இல்லை, எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இந்த அனுபவத்திடம் சரணடைவது ஒன்றுதான் வழி என்று நீங்கள் தீர்மானிக்கும்போது, ஸத்யத்துடன் இணைகிறீர்கள். இது, தர்க்க ரீதியான செயல்முறை அல்ல, ஒரு வரையறுக்கப்பட்ட பாதையும் அல்ல. நீங்கள் ச்ரத்தையோட இருக்கும்போது, பாதையே இலக்காக மாறிவிடும்.

எங்கும் நிறைந்த விழிப்புணர்வை நாம் உணர்ந்து, ஜ்ஞான சக்ஷு என்ற ஞானக்கண் கொண்ட உயிர்களாகி, நித்யானந்தத்தில் நாம் நிறைந்திருக்கச் செய்யுமாறு, மேலான பிரபஞ்ச விழிப்புணர்வான, பிரபஞ்ச அறிவான கிருஷ்ணனிடம் பிரார்த்திப்போமாக! நன்றி!

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸுபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுநஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பஞ்சதசோ'த்யாய: ||

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான, மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும், யோக விஞ்ஞானமுமாகிய ‘புருஷோத்தம யோகம்’ எனப்பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம்.

Illustration