அத்தியாயம் - 8: அஹங்காரத்தை விடுதல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- ஆக்ஞா சக்கரம் -
- திவ்ய நேத்ரா தியானம் -
ஆக்ஞா சக்கரமானது புருவங்களுக்கு மத்தியில் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில் ஆக்ஞா என்றால், ‘ஆணை’ அல்லது ‘உத்தரவு’ என்று பொருள். ஆக்ஞா சக்கரம் தலைமைச் சக்கரமாக அறியப்படுகிறது.
அது கடுமைத்தனத்தாலும் அஹங்காரத்தினாலும் பூட்டப்படுகிறது (அடைபடுகிறது).
அதை கள்ளங்கபடமற்ற தன்மையினாலும், எளிமையினாலும், அறிவுக் கூர்மையினாலும், அஹங்காரத்தை அதன் எல்லா வடிவங்களிலும் விடுவதன் மூலமும் மலரச்செய்ய முடியும்.
தியான முறை: திவ்ய நேத்ரா தியானம் - ஒரு ஜொராஸ்ட்ரிய தியான முறையில் இருந்து எடுக்கப்பட்டது.
ஆக்ஞா சக்கரம் ‘சக்ரராஜ்’ என்று அழைக்கப்படுகிறது-இதுவே எல்லா சக்கரங்களுக்கும் தலைமைச் சக்கரமாகும்.
இதைத் தூண்டி விடுவதற்காகச் செயல்படாத மதங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சக்கரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்ஞா திறக்கும் பொழுது, முழு
| Shedding the Ego |
இருப்புத் தன்மையுமே ஒரு மாறுபட்ட பிரதேசத்தில் பிரவேசி க்கிறது; ஒரு முழு அடுக்கு புலன்கள் திறக்கின்றன. இதுதான் எல்லா கீழை நாடுகளின் கடவுள்களின் நெற்றியிலும் மூன்றாவது கண்ணாகக் குறிப்பிடப்படுகிறது. ஆக்ஞா விழிப்படைந்ததன் குறியீடே மூன்றாவது கண்.
நீங்கள் இந்தியாவின் ஒரு புனிதம்த வாய்ந்த நகரமான வாரணாசியில் இறந்தால், தானாகவே விடுதலை பெற்று விடுவீர்கள் என்று ஒரு பழங்கூற்று இருக்கிறது. வாரணாசி என்பது நாம் அறிவது போல் ஒரு வெறும் நகரமல்ல. அது 'வாரணா' என்கிற புருவங்கள், 'நாசி'யாகிய மூக்கைச் சந்திக்கும் இடமும் கூட; அதுவே ஆக்ஞா சக்கரத்தின் சரியான இருப்பிடமுமாகும். விடுதலை பெற்ற அல்லது ஞானமடைந்த நிலையில் அஹங்காரம் அழிந்து விடுவதன் அடையாளக் குறியீடே அது.
கடுமைத்தனம் என்றால் என்ன?
கடுமைத்தனம் என்பது, மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, ஏதோ ஒன்றுக்கு மட்டுமே, தேவையற்ற, அதிக முக்கியத்துவம் கொடுப்பது, 'வாழ்க்கை முழுவதுமே ஒரு நாடகம்தான், அது ஒவ்வொரு நிமிடமும் விரிந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது' என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையிலிருந்தே அது முளை விடுகிறது. வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதன் விளைவே கடுமைத்தனம்.
| Ego¹ | Seriousness² |
Ego
Seriousness
ஒரு சின்ன கதை...
இரண்டு சிறுவர்கள் கடற்கரையில் மணற் கோட்டை கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் சண்டை வந்து, அதில் ஒரு சிறுவன் கோபத்தில் மணற் கோட்டையை உதைத்து விட்டான். மற்ற சிறுவனோ மன்னனிடம் சென்று தனது முக்கியமான பிரச்சினையைப் பற்றி முறையிட்டான். இந்த ஒன்றுமில்லாத வெறும் மணற் கோட்டைக்காக இவ்வளவு செய்கிறானே என்று அவனைக் கண்டு மன்னன் சிரிக்க ஆரம்பித்தான். ஆனால் அரசனின் ஆலோசகரான ஜென் துறவியோ மன்னனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தார். அவர் கேட்டார், "நீ உன்னுடைய கற்கோட்டைகளுக்காக போர்க்களங்களில் சண்டையிட்டு, உன் தூக்கத்தைத் தொலைக்கும்பொழுது, இந்தச் சிறுவர்கள் மணற்கோட்டைக்காக சண்டையிடுவதைக் கண்டு ஏன் சிரிக்கிறாய்?".
நமது எல்லா கடுமைத்தனமுமே வெறும் மணற் கோட்டைகளுக்காகத்தான்! அதைப்ப புரிந்து கொள்ளுங்கள். குழந்தைக்கு, அந்தச் சிறு வயதில், மணற்கோட்டைகள் விலைமதிப்பற்றதாகத் தோன்றுகிறது; நமக்கோ, இந்த வயதில், கற்கோட்டைகள் விலைமதிப்பற்றதாகத் தோன்றுகிறது, அவ்வளவு தான். அது மணற்கோட்டையோ அல்லது கற்கோட்டையோ, அதன் பின்னால் இருக்கும் கடுமைத்தனம் ஒன்றுதான்; அதற்குக் காரணமான பொருள் தான் வேறு. அதனால் குழந்தைகள் மணற்கோட்டைகளுக்காகச் சண்டையிட்டால் சிரிக்காதீர்கள்.
கடுமைத்தனம், வாழ்க்கையின் திறந்த தன்மைக்கும் சுதந்திரத்திற்கும் உங்கள் மனதை மூடி விடுகிறது. அது உங்களை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கி விடுகிறது, அது உங்கள் சிந்தனையைத் தடை செய்து, உங்களுக்கு
ஆக்ஞா திறக்கும் பொழுது, முழு இருப்புத் தன்மையுமே ஒரு மாறுபட்ட பிரதேசத்தில் பிரவேசிக்கிறது. எப்பொழுதும் தெரிந்த, பழக்கமான வடிவ அமைப்புகளிலேயே உங்களை ஒட்டிக் கொண்டு இருக்குமாறு செய்து விடுகிறது.
ஒரு ஜென் மடாலயத்தில், சீடர்களுக்கிடையே, யாரிடத்தில் இருப்பது சிறந்த தோட்டம் என்று ஒரு போட்டி வந்தது. அதில் ஒரு சீடன் மிகவும் கடுமையான வகையைச் சேர்ந்தவன். அவன் இந்தப் போட்டியையும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டு விட்டான். எப்பொழுதும் அவன் தோட்டத்தை நன்றாகப் பெருக்கி, நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்திருந்தான். புற்கள் எல்லாம் ஒரே உயரத்தில் இருந்தன. எல்லாப் புதர்களும் நேர்த்தியாக வெட்டி விடப்பட்டு இருந்தன. அவன் நிச்சயமாக முதற் பரிசைப் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தான். போட்டி நாளன்று, குரு எல்லாத் தோட்டங்களையும் சுற்றி வந்தார். பிறகு திரும்பி வந்து எல்லாத் தோட்டங்களையும் வரிசைப்படுத்தினார். அந்தச் சீடனுடைய தோட்டம் கடைசி இடத்தையே பெற்றிருந்தது; எல்லாருக்குமே அதிர்ச்சி. சீடன் குருவிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டான். "குருவே, என் தோட்டத்தில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ஏன் கடைசி இடத்தையே கொடுத்திருக்கிறீர்கள்?". குரு அவனைப் பார்த்துக் கேட்டார், "எங்கே அந்த இறந்த இலைகள்?". இது போன்று பராமரிக்கப்படும் தோட்டம் உயிரோட்டத்துடன் இருப்பதில்லை! அது உயிரற்றதாக இருக்கிறது.
கடுமைத்தன்மை தன்னிச்சையான¹ இயல்பைக் கொன்று விடுகிறது. படைப்பாற்றலை² அழித்து விடுகிறது.
நீங்கள் ஒரு வேலையைத் தளர்வாகவும்³, எளிதாகவும் எடுத்துக் கொண்டு செய்யும் பொழுது, உங்களுடைய சிந்திக்கும் மற்றும் முடிவெடுக்கும் திறன் தானாகவே அதிகரிக்கிறது என்று அறிவியல் நிரூபித்திருக்கிறது. அதே வேலையைக் கடுமையான
| Spontaneity¹ | Creativity² | Relaxed³ முறையில் எடுத்துக் கொண்டு செய்யும் பொழுது, அது உங்கள் மனதை மந்தப்படுத்தி விடுகிறது.
நான் சொல்கிறேன்... நமது எல்லா கடுமைத் தன்மையும் வெறும் வியாதிதான். நான் 'எல்லா' என்று சொல்லும் பொழுது, எல்லாவற்றையும்தான் சொல்கிறேன். நமது எல்லா வியாதியுமே கடுமைத் தன்மையிலிருந்துதான் ஆரம்பமாகின்றன. கடுமைத் தன்மை வியாதியை விளை விக்கிறது; வியாதி கடுமைத் தன்மையை விளைவிக்கிறது.
ஒரு இரவு, ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, அழ ஆரம்பித்து விட்டார். அவர் சொன்னார், “நான் உங்கள் காலில் விழுகிறேன் ஸ்வாமிஜி! தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள். நான் மிகவும் மனச்சோர்வில் இருக்கிறேன்! என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன்!” என்று பலவும் சொன்னார். நான் அவரை அமைதிப்படுத்த முயன்றேன். இறுதியாகச் சொன்னேன், “நீங்கள் ஏன் நாளை காலை ஆசி ரமத்திற்கு வந்து என்னோடு சில நாட்கள் தங்கியிருக்கக் கூடாது ?. நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்’’. அவர் சொன்னார், “நாளைக்கா ஸ்வாமிஜி! ஓ... நாளைக்கு நான் வேலைக்குப் போக வேண்டுமே... வேண்டுமானால் அடுத்த வாரக் கடைசியில் வரட்டுமா?”.
நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம் - ஒன்றுமில்லாத பிரச்சினைகளைக் குறித்து தேவையில்லாமல் மன இறுக்கம் அடைகிறோம். நம்முடைய கடுமைத்தனம் விழுவதற்கு வெறும் ஒரு குலுக்கலே போதுமானது. நாம் உண்மையை நோக்கி விழித்துக் கொள்ளும்பொழுது, உண்மையிலேயே நம்முடைய பிரச்சினையெல்லாம் எவ்வளவு அற்பமானது என்பதைக் காண முடியும்.
| ஆக்ஞா விழிப்படைந்ததன் குறியீடே மூன்றாவது கண். இதுவே எல்லா கீழை நாடுகளின் கடவுள்களின் நெற்றியிலும் மூன்றாவது கண்ணாகக் குறிப்பிடப்படுகிறது. |
நீங்கள் எதையேனும் மிகவும் கடுமையுடன் செய்யும் பொழுது, அதன் விளைவைப் பற்றி மிகவும் கவலைப்படும் பொழுது, உண்மையில் உங்களைச் சாதகமான நிலையில் செயலாற்ற அனுமதிப்பதில்லை.
நிச்சயமாக, நீங்கள் திட்டமிட வேண்டியதுதான், முன் கூட்டியே யோசனை செய்ய வேண்டியதுதான். ஆனால் அதைச் சிரத்தையுடன்1 செய்யுங்கள்; கடுமையுடன்2 அல்ல. கடுமையும் சிரத்தையும் ஒன்றல்ல. சிரத்தை என்பது உற்சாகத்துடனும், இளமைத் துடிப்புடனும் வேலையில் கவனம் செலுத்துவது. சிரத்தையென்பது, விளைவைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், வேலையில் உங்களுடைய சிறந்த முயற்சியை அளிப்பது.
நீங்கள் கடுமையுடன் இருக்கும் பொழுது, மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டீர்கள், சிரிக்க மாட்டீர்கள். கடுமையாக இருக்கும் பொழுது எப்படி சிரிக்க முடியும்? அவை இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் இருக்க முடியும். நீங்கள் கடுமையாக இருக்கலாம் அல்லது சிரித்துக் கொண்டு இருக்கலாம்; ஒரே சமயத்தில் இரண்டும் இருக்க முடியாது; ஏனெனில் கடுமைத்தனம் அவ்வாறுதான் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் சிரத்தையுடன் இருப்பீர்களானால், உங்களால் சிரிப்புடனும், விளையாட்டுத்தன்மையடனும்3 இருக்க முடியும்; உங்களால் கையிலிருக்கும் வேலையை விளையாட்டாகவும், படைப்பாற்றலுடனும் செய்ய முடியும். வேலையும் மகிழ்ச்சியுடன் முடிந்து விடும். வேலையை முடித்து விட்டதால், நீங்கள் சிரத்தையுடன்தான் இருந்திருக்கிறீர்கள். சிரத்தையில் கவலையில்லை; உற்சாகம் மட்டுமே இருக்கிறது.
நீங்கள் கடுமையாக இருக்கும் பொழுது, அஹங்காரத்துடன் இருக்கிறீர்கள்; ஏனெனில் இது எல்லாமே
Sincerity¹
Seriousness²
Playful³
ஒரு பிரபஞ்ச நாடகம்தான் என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறீர்கள். நீங்கள் வெகுவாக உங்களை ஒரு தனி வஸ்துவாக உணர்கிறீர்கள்; 'நான்' என்ற எண்ணம் மிகவும் அதிகமாக இருப்பதால் கடுமையாக இருக்கிறீர்கள். எல்லாமே ஒரு நாடகம்தான் என்பதைப் புரிந்து கொண்டீர்களானால், உங்களால் ஒரு போதும் கடுமையாக இருக்க முடியாது. இந்தப் புரிந்து கொள்ளுதல் ஒரு ஆழமான நிலையில் நிகழ்ந்தால், பிரபஞ்ச நாடகத்துடன் அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லும் சந்தோஷத் திலேயே, செயல்களை வெறுமனே செய்து கொண்டிருப்பீர்கள். மேலும் இவ்வாறு செய்யும் பொழுது, நீங்கள் கடுமையாக இல்லாமல், உங்களுடைய பாத்திரத்தை வெறுமனே சிரத்தையுடன் செய்வீர்கள், அவ்வளவே.
பாருங்கள், இரண்டு விஷயங்கள் இருக்கின்றன... காலவரிசையிலான திட்டமிடுதல் மற்றும் உளவியல் ரீதியிலான திட்டமிடுதல்.
காலவரிசையிலான திட்டமிடுதல் என்பது கால அளவுகோலைக் கொண்டு திட்டமிடுவது; எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை வேலைகளை எத்தனை மணிக்கு முடிப்பது, அலுவலகத்தில் என்னென்ன வேலைகளைச் செய்து முடிப்பது என்பதையெல்லாம் தீர்மானிக்கிறீர்கள். இது சரி தான். இவ்வாறு உங்கள் வேலைகளை சாத்தியமான வகையில் அமைத்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும். இது போன்று திட்டமிடுதலும், சிரத்தையுடனான செயலும் உங்களை சந்தோஷத்தில் இருந்து அதிக சந்தோஷத்திற்கு எடுத்துச் செல்லும்.
இன்னொரு பக்கம், உளவியல் ரீதியான திட்டமிடுதல் என்பது, கால அல்லது இட சம்பந்தமின்றி, மூளையில் திட்டமிடுவது. இது காலவரிசையிலான திட்டமிடுதலுக்கும் மேலாக, மூளையில்
வாரணாசி நாம் அறிவது போல் வெறும் நகரம் மட்டும் அல்ல. 'வாரணா' என்கிற புருவங்கள், 'நாசி'யாகிய மூக்கைச் சந்திக்கும் இடமே, ஆக்ஞா சக்கரத்தின் சரியான இருப்பிடமாகும். எப்பொழுதும் வெறுமனே கடுமையாக திட்டமிட்டுக் கொண்டே இருப்பது. அது உங்களை கடுமையாகவும், கடமையுணர்வோடும் இருப்பதாக எண்ண வைக்கிறது. அது உண்மையிலேயே, ஏற்கனவே தீர்மானித்த கால வரிசையிலான திட்டத்தின் மேல் செலுத்தப்படும் சிக்கலான எதிர்மறைத் தன்மையைத் தவிர வேறல்ல. நீங்கள் உங்கள் திட்டத்தை ஆராய்ந்து ஆராய்ந்து ஒரு மந்தமான நிலைக்குச் சென்று விடுகிறீர்கள்; ஏனெனில் உங்களுடைய எல்லாச் சக்தியும் திட்டத்தை மீண்டும் மீண்டும் ஆராய்வதிலேயே போய் விடுகிறது.
உளவியல் ரீதியான திட்டமிடுதல் உங்கள் அஹங்காரத்தை ஊக்கப்படுத்துகிறது. ஏதோ பெரிதாகவும், தகுதி வாய்ந்ததாகவும் சாதித்து விட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது. கடுமையாக இருக்கவும் உதவுகிறது. ஏதோ பெரிய விஷயங்களைக் கையாளுவதைப் போன்ற உணர்வைத் தருகிறது. அதைப் பற்றிக் கவலைப்படுவதும், நடத்தி முடிப்பதும் எல்லாம் உங்கள் கையில்தான் இருப்பதாக ஒரு எண்ணத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்தின் பின்னாலும் சென்று, அதை முடிப்பதில்தான் உங்கள் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணுகிறீர்கள். இதுதான் உளவியல் ரீதியான திட்டமிடுதல்.
நான் சொல்கிறேன்... உண்மையில் இது ஒரு வகையில் சந்தோஷத்தைத் தள்ளிப் போடுதல்; வாழ்க்கையைத் தள்ளிப் போடுதல்; வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிப்பதற்குக் கூட, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்காகக் காத்திருத்தல்.
நாம் எப்பொழுதும், 'எனக்குக் கல்யாணமாகி விட்டால் வாழ்க்கையில் நிலைபெற்று விடுவேன். அதனால் நான் அதற்கான வேலைகளில் இறங்குகிறேன்... எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால் என் வாழ்க்கை நிறைவு பெற்று
வாழ்க்கை என்பது ஒரு நாடகம்தான், அது ஒவ்வொரு கணமும் விரிந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
விடும்... நான் ஓய்வு பெற்றுவிட்டால் அமைதியாக இருப்பேன்', என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
அது, 'நான் இப்பொழுது கடுமையாக இருந்து விடுகிறேன். பிறகு மகிழ்ச்சியாக இருந்து கொள்வேன்!' என்பதான மனோபாவ ஆகும், இறுதியில், நீங்கள் இப்பொழுதோ அல்லது பிறகோ எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்கும் திறனை இழந்து விடுவீர்கள்.
வெறுமனே எளிமையாகவும்1, தன்னிச்சையாகவும்2, கள்ளங்கபடமற்றும்3 வாழுங்கள். எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்காதீர்கள். நான் சொல்கிறேன்... எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பது உங்களை மன நோயாளியாக்கி விடக் கூடும். நீங்கள் எதைச் செய்தாலும் முழுவதுமாக, முழுமையாகச் செய்யுங்கள். பிறகு நீங்கள் செய்வதெல்லாம் தானாகவே முழுமையாக இருக்கும்; நீங்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டியதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க வேண்டியதில்லை.
எல்லாம் சரியாக இருக்க வேண்டும்4 என்பது எப்பொழுதும் மனதில் இருந்து வரும் ஒரு விஷயம். அது உங்களுக்கு ஒரு இலக்காகி விடுகிறது. நீங்கள் அதையே இலக்காக வைத்துக் கொண்டு உழைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். மேலும் அதை இலக்காக வைத்துக் கொண்டு வேலை செய்யும் பொழுது, அது உயிரற்றும், சலிப்பானதாகவும் ஆகி விடுகிறது. ஆனால் நீங்கள் முழுமையாக இருக்கும்பொழுது, இதயத்தில் நிலைபெறுவதால், அது ஒரு ஆழமான அனுபவமாகி விடுகிறது. அதனால் விளையும் பயனும் அற்புதமாகவும் இருக்கும், ஆனந்தத்தையும் அளிக்கும். பிறகு
Simplicity¹ Spontaneity² Innocence³ Perfectionism⁴
Simplicity
Spontaneity
Innocence
Perfectionism
நீங்கள் எதைச் செய்யினும், அது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவுடனேயே இருக்கும்.
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பது, ஒருபோதும் ஆனந்தத்தை அளிக்காது; அது உங்கள் அஹங்காரத்தையே நிறைவு செய்கிறது. அதனால் இறுதியில் ஒருவேளை நீங்கள் நிறைவடைந்தால் கூட, அது உங்களுடைய அஹங்காரத்தின் நிறைவாகத்தான் இருக்குமே தவிர, ஒருபோதும் உங்கள் இருப்புத் தன்மையின் நிறைவாக இருக்காது. மிகவும் தெளிவாக இருங்கள்... எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்பவர்கள் பெரும் அஹங்காரம் உள்ளவர்கள். அவர்கள் முழுமையாக இருத்தல் என்னும் பரிமாணத்தையே தவறவிட்டு விடுகிறார்கள். இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்... ஒரு விஷயத்தில் ஆழ்ந்து சென்றால்தான் முழுமை சாத்தியமாகும். எல்லாம் சரியாக இருத்தல் என்பது ஒருபோதும் சாத்தியமில்லை; ஏனெனில், அது உங்கள் மனதில் இருக்கிறது; மேலும் உங்கள் மனம் எல்லாம் சரியாக இருத்தலைப் பற்றிய வரையறையை மாற்றிக் கொண்டே இருக்கிறது.
இன்னும் ஒரு விஷயம்... தவறு செய்யும் தைரியத்தைப் பெறுங்கள். கடுமையான மக்கள் எப்பொழுதும் தவறு செய்ய பயப்படுவார்கள். அவர்கள் தங்களை எப்பொழுதும் மிகவும் கடுமையாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஏதேனும் தவறு செய்து, மற்றவர்களால் சுட்டிக் காட்டப்படுவது, அவர்களால் மிகவும் தாங்க முடியாதது. உண்மையில் நான் சொல்கிறேன், சிறிய தவறுகளைச் செய்ய பயப்படும் இவர்கள், முடிவில் பெரிய தவறுகளைச் செய்துவிடப் போகிறார்கள்.
தவறுகளைச் செய்வதில் தவறென்ன இருக்கிறது? “ஸ்வாமிஜி, தவறு நிகழ வாய்ப்பே அளிக்க முடியாத ஒரு வேலையில் நான் இருக்கிறேன்" என்று நீங்கள் சொல்லாம். நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்; உங்களுடைய வேலை தவறுகள் நிகழ்வதை அனுமதிக்க முடியாததாக இருக்கலாம்; ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. நீங்கள் தவறு செய்யும் பொழுது, மக்களால் சுட்டிக் காட்டப்படுவதை உங்களால் தாங்க முடியாது. உங்கள் அஹங்காரம் புண்பட்டு விடும்; நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவீர்கள்; இது நீங்கள் அறிந்ததுதான். அதனால் உங்கள் அஹங்காரம் புண்பட்டு விடாமல் தவிர்ப்பதற்காக, தவறு செய்து விடாமல் இருக்க முயற்சி செய்கிறீர்கள்.
உங்கள் அஹங்காரத்தைப் பாதுகாப்பதற்கு, விழிப் பின்றியே தொடர்ந்து திட்டமிட்டபடியே இருக்கிறீர்கள். ஆனால் அதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள்தான் வெவ்வேறானவை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பதல்ல. அப்படி அல்ல! உங்கள் அமைப்பும் உங்கள் அஹங்காரமும் செயல்படும் நுட்பமான வழிமுறைகளை நீங்கள் அறியவில்லை. ஆனால் இதை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள்.
தவறுகளைச் செய்வதில் தவறொன்றுமில்லை. உண்மையில், சில தவறுகளைச் செய்வதன் மூலம், அனுபவ பூர்வமாகப் புரிந்து கொள்வதால், தவறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்கிறீர்கள். தவறுகளில் இருந்து அதிகமாகத் தெரிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, தவறுகளைச் செய்யாமல் இருப்பது எவ்வாறு என்பதையும் வெகுவாகத் தெரிந்து கொள்கிறீர்கள்.
தவறுகளைச் செய்யாமல் இருப்பது எவ்வாறு என்பதைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அப்பொழுதுதான் நீங்கள் அனுபவபூர்வமாக இரண்டு
நமது எல்லா கடுமைத் தனமுமே
வெறும் மணற்கோட்டைகளுக்காகத்தான்
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
பக்கங்களையும் ஆராய்ந்தவர்களாகிறீர்கள். இல்லாவிடில் ஏதேனும் ஒரு ஆபத்தான, உண்மையிலேயே வாய்ப்பளிக்கக் கூடாத ஒரு சமயத்தில், தெரியாத பக்கத்தில் விழுந்து விடக்கூடிய அபாயம் எப்பொழுதும் இருக்கிறது.
ஒரே ஒரு விஷயம்... அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்! உங்கள் மனம் எப்பொழுதும் ஒரே வடிவ அமைப்பிலேயே திரும்பத் திரும்பச் சென்று கொண்டிருக்கிறது. அதைத் தவற்றிலும் செய்து விடாதீர்கள். புதிய தவறுகளைச் செய்யுங்கள்! நன்றாகப் புரிந்து கொள்ளுதலை நோக்கி மேலும் மேலும் செல்லுங்கள்!
நான் வேண்டுமென்றே தவறுகளைச் செய்யச் சொல்லவில்லை. மீண்டும் அது ஒரு முட்டாள்தனமான செயலாகும். தவறாகி விடுமே என்ற கவலையின்றி, உங்கள் அறிவுக் கூர்மையினாலும், உற்சாகத்தினாலும் செயல்களை நன்றாகச் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். அது தவறாகி விடுமோ என்று கவலைப்படும் கணத்திலேயே, உங்கள் அஹங்காரம்புண்பட்டுவிடும்என்றுதான் கவலைப்படுகிறீர்கள்.
உங்களது அஹங்காரம் புண்பட்டு விடும் என்பதைப் பற்றி கவலைப்படாத பொழுது, எதிலும் தைரியமாகக் குதித்து விடுவீர்கள். உங்களுடைய பெயரளவிலான எல்லாக் கவலையுமே, உண்மையில் உங்கள் அஹங்காரம் புண்பட்டு விடுவதைப் பற்றித்தான். நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறும்பொழுது, அதிக சுதந்திரத்துடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். ஆராய்வதில் அதிக விருப்பமுடையவராக இருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை...
ஒரு சூதாட்ட விடுதியில், ஒருவன் சீட்டாடி முடித்து விட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மேலங்கி மாட்டி1 அருகே
Coat - stand¹
Coat - stand
சென்று அவனது மேலங்கியை அணிந்து கொள்ளும் பொழுது, திடீரென்று பின்னாலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது, "ஐயா, ஆனால் நீங்கள்தான் திரு.. ஃபிலிப் என்பவரா?". அவன் திரும்பி, "இல்லை, நான் இல்லை" என்றான். அந்தக்குரல் சொன்னது, "நன்றி கடவுளே! நான்தான் ஃபிலிப், அந்த மேலங்கி என்னுடையது".
(சிரிப்பு!)
நாம் ஏதேனும் தவறு செய்து நம்மை, நமது அஹங்காரத்தைக் காயப்படுத்திக் கொண்டு விடுவோமோ என்று மிகவும் அஞ்சுகிறோம். அதனால் அடக்கம் என்று எண்ணிக் கொண்டு, மிகவும் வினயத்துடனும் கடுமைத்தனத்துடனும் செயலாற்றுகிறோம். இவை அஹங்காரத்தின் சாத்வீகமான வடிவங்களைத் தவிர வேறல்ல. உங்களுடைய அஹங்காரம் காயப்பட்டு விடுவதைப் பற்றிய மிகுதியான அச்சத்தில் இருப்பதால், நீங்கள்வ்வாறான வழிகளில் நடந்து கொள்கிறீர்கள். உங்களுடைய எல்லா அஹங்காரப் பாதுகாப்புகளையும் விட்டு விட்டு சுதந்திரமாகச் செல்லுங்கள்.
கடுமைத்தனத்திலிருந்து விலகிச் சென்று விடுங்கள். எவ்வாறோ, நாம் எப்பொழுதும் ஆன்மீகத்தைக் கடுமைத் தனத்துடன் சம்பந்தப்படுத்தி விடுகிறோம். அது ஒரு தவறான கருத்தாகும். கடுமைத்தனம் ஒருபோதும் மதமாகவோ, ஆன்மீகமாகவோ முடியாது.
நான் ஏன் நிறைய நகைச்சுவைகளும், சின்னச் சின்னக் கதைகளும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்? இவற்றையெல்லாம் சொல்லவில்லையென்றால், நீங்கள் மிகவும் கடுமையாகி விட ஆரம்பித்து விடுவீர்கள்; கடுமையாகும் பொழுது, உயிரற்றும், கனத்தும் போய் விடுகிறீர்கள். நீங்கள் உயிர்ப்படனும் இலேசாகவும் இருப்பதில்லை. நான் உங்களை கனமாக்குவதற்காக இங்கு வரவில்லை.
கடுமைத்தனம் வாழ்க்கையின் திறந்த தன்மைக்கும் சுதந்திரத்திற்கும் உங்கள் மனதை மூடி விடுகிறது.
உங்கள் சுமையைக் குறைத்து, இலேசாக்கவே வந்திருக்கிறேன். கடுமைத்தனம், உங்கள் அஹங்காரத்தின் ஒரு வடிவத்தைத் தவிர வேறல்ல என்பதைக் காட்டவே, வந்திருக்கிறேன். நீங்கள் எது இல்லையோ, அதைக் காட்டவே நான் வந்திருக்கிறேன். நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதை பலப் படுத்துவதற்காக, நான் இங்கு வரவில்லை.
இறந்தகாலத்தாலும், எதிர்காலத்தாலும் சுமையேற்றப் பட்டிருப்பவர்களே எப்பொழுதும் கடுமையாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தன்னிச்சையாக சிரிப்பது எவ்வாறு என்பது கூடத் தெரியாது. அவர்கள் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் தோளில் சுமப்பது தங்கள் கடமை என்றெண்ணி, அதிலேயே கடுமைத் தனத்துடன் ஆழ்ந்து விடுகிறார்கள். இது மிகவும் அஹங்காரம் நிறைந்த ஒரு மனோபாவம். அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால், அவர்களுக்காக அதைச் செய்வதற்கு யாருமில்லை என்று எண்ணுகிறார்கள்.
முதலில், இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் தோளில் சுமந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை. வெறுமனே நிகழ்காலத்தில் இருப்பதே போதுமானது. அவர்கள் நிகழ்காலத்தை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் சிரிப்பையும் முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறார்கள்.
சிரிப்பு என்பது உங்கள் இருப்புத்தன்மையில் இருந்து உடலுக்கு சக்திக்கதிரைக் கொண்டு வருவது. இது உங்கள் முழு இருப்பையும் முழுவதுமாக புத்துயிர் பெறச் செய்கிறது. அதனால், வேறு எதனாலும் முடியாத அளவிற்குப் குணப்படுத்தமுடியும். அதனால், நீங்கள் மற்ற கடினமான தியான முறைகளின் மூலம் அடைய முயற்சி செய்யும் அற்புதமான நிகழ்கால தரிசனத்தை அளிக்க முடியும். சிரிப்பு ஒரு மிகவும் சக்திவாய்ந்த தியான முறையாகும்.
கடுமைத்தனம் தன்னிச்சையான இயல்பைக் கொன்றுவிடுகிறது. படைப்பாற்றலை அழித்துவிடுகிறது.
சிரிப்பு என்பது ஒரு மிக உயர்ந்த ஆன்மீகத் தன்மையாகும். எப்பொழுதும் சிரத்தையும், சிரிப்பும் ஒன்றாகவே இணைந்து செல்லும். நான் முன்பே சொன்னது போல், கடுமைத்தனத்தால் ஒரு போதும் சிரிப்புடன் ஒன்றாக இணைந்து இருக்க முடியாது. நீங்கள் கடுமையாக இருக்கலாம் அல்லது சிரிப்புடன் இருக்கலாம். நீங்கள் சிரத்தையுடன் இருக்கும் பொழுது, சிரித்துக் கொண்டே உங்கள் கடமையைச் சிரத்தையுடன் செய்ய முடியும்.
நம்மில் எத்தனை பேரால் முழுமையாக, இதயம் திறந்து சிரிக்க முடியும்? சிரிப்பதற்குக் கூட நாம் கட்டுப் பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்! பண்பான முறையில் சிரிப்பதற்குக் கூட, பெயரளவிலான சமூக ஒழுக்க விதிமுறைகள் உங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. குழந்தைகள் சிரிக்கும் பொழுது கூட, அவர்களை நெறிப் படுத்துகிறோம். அவர்களுடைய இயல்பான வழிகளில், நாம் குளிர்ந்த தண்ணீரைத் தெளிப்பதைப் போலச் செயல்படுகிறோம். உடனே, நாம் அவர்கள் போதுமான அளவு சிரித்து விட்டதாகச் சொல்லி விடுகிறோம்! அவர்களது சிரிப்பைக் கூட நெறிப்படுத்த முயற்சி செய்கிறோம்.
தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம், "ஆம்பள மாதிரி சிரிக்காதே; பொம்பள மாதிரி சிரி" என்று சொல்வதைக் கேட்டிருக் கிறேன். சிரிப்பை எவ்வாறு பண்படுத்த முடியும்? சிரிப்பு உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து வரும் ஒரு விஷயம். நான் செ ால்கிறேன், நீங்கள் உங்கள் குழந்தைகளை நெறிப்படுத்துவதெல்லாம், அவர்களையும் உங்களைப் போல் வெறுமனே மந்தமாகவும் நடைப் பிணமாகவும் ஆக்குவதற்குத்தான். நீங்கள் உங்களை முழுமையாகப் பிரதியெடுக்கும் வரை ஓய் மாட்டீர்கள்.
கடுமைத்தனம் உங்கள் சிந்தனையைத் தடை செய்து, உங்களை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கிவிடுகிறது. இந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்த பொழுது சில குழந்தைகளுடன்கொஞ்சநேரத்தைக் கழித்தேன். அவர்களுடன் சுமார் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்களை எவ்வளவு சிரிக்க வைக்க முயன்றும், அவர்கள் சிரிக்காதது கண்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய நாட்களில் குழந்தைகள் ஒரு போலியான பக்குவத்தைப் பெற்று, சிரிக்காமலேயே சமாளித்து விடுகிறார்கள். குழந்தையிலேயே சிரிக்கவில்லை யென்றால், அவர்கள் வளர்ந்த பிறகு என்ன செய்யப் போகிறார்கள்? என்னால் அதைத் தாங்க முடியவில்லை.
மக்கள், என்னுடைய சிரிப்பு தொற்றும் தன்மை உடையதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், முதன்முறையாக, அந்தச் சிறுவர்களுடன், என்னுடைய சிரிப்பு தொற்றும் தன்மையை இழந்தது போல் தோன்றியது! அவர்கள் அதே பக்குவமான முகத்துடன் என்னை வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னையும் கடுமையாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அங்கிருந்து வந்து விட்டேன்!
(பலத்த சிரிப்பு)
பாருங்கள், பக்குவத்திற்கும் சிரிப்பைத் தவிர்ப்பதற்கும் சம்பந்தமில்லை. ஆனால், எவ்வாறோ, நாம் பக்குவமடைந்து விட்டால் தானாகவே கொஞ்சமாகத்தான் சிரிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். சிரிப்பு மிகவும் பலம் வாய்ந்தது; ஏனெனில் அது சக்தியை உங்கள் மையத்தில் இருந்து வெளி விளிம்பிற்குக் கொண்டு வருகிறது.
நீங்கள் என்னுடைய வகுப்புகளில் அமர்ந்தால், பெரும்பாலான சமயங்களில் சிரிப்பு மட்டுமே இருக்கும். ஏதோ ஒரு நகைச்சுவையோ அல்லது ஒரு கதையோ சொல்லப்பட்டு, எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். நான் ஒருபோதும்
நமது எல்லாக் கடுமைத்தன்மையும் வெறும் வியாதிதான். கடுமைத்தனம் வியாதியை விளைவிக்கிறது. வியாதி கடுமைத்தன்மையை விளைவிக்கிறது.
கடுமைத்தனம் உள்ளே புக அனுமதிப்பதே இல்லை. ஆசிரமத்தில் என்னுடைய வேலையைச் செய்பவர்களிடம் கூட, கடுமைத்தனம் புக நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.
ஒரு சின்ன கதை...
ஒரு சிறு நகரத்தில் பேசுவதற்காக ஒரு நகைச்சுவை பேச்சாளர் அழைக்கப்பட்டார். அவர் நிகழ்ச்சிக்கு ஒரு பெருங் கூட்டத்துடன் வந்தார். பேச்சாளருடன் வந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து, அமைப்பாளர்களுக்கு ஒரே ஆச்சரியம். பேச்சாளர் அவர்களுடைய வியப்பான பார்வையைப்பார்த்து விட்டுச்சொன்னார், “இந்நாட்களில் சிரிப்பவர்கள் கிடைப்பதே அபூர்வமாக இருக்கிறது. அதனால் நான் என்னுடைய பார்வையாளர்களையும் அழைத்து வந்து விட்டேன்”.
(சிரிப்பு!)
பெயரளவிலான உயர் வட்டங்களில், மக்கள் சிரிப்பார்கள்; ஆனால் மிகவும் நாகரிகமாக, மிகவும் பண்பட்ட வகையில்! இது உண்மையான சிரிப்பல்ல; உயிரற்ற சிரிப்பு. சிரிப்பை ஒருபோதும் நெறிப்படுத்த முடியாது. நெறிப்படுத்தப்பட்டால், அது சிரிப்பல்ல; அது நாம் பேசும் தியான மயமான சிரிப்பாக இருக்காது. அது உள்ளிருக்கும் அஹங்காரத்தின் வெறும் வெளிப்பாடாக இருக்கும், அவ்வளவே.
ஒரு நகைச்சுவை சொல்லப்படும் பொழுது, நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்தால், அதைப் புரிந்து கொள்வீர்கள். முதலில் தர்க்கரீதியாகத் தொடர்புடைய சில வாக்கியங்கள் சொல்லப்படுகிறது. நீங்கள் உருவாக்கப்பட்ட தர்க்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, உங்கள் தர்க்கம் ஆட்டம் காணும் வகையிலான, முத்தாய்ப்பான ஒரு வாக்கியம்
| நிச்சயமாக நீங்கள் திட்டமிட வேண்டியதுதான். ஆனால், அதை சிரத்தையுடன் செய்யுங்கள்; கடுமையுடன் அல்ல. |
உதிர்க்கப்படுகிறது! உங்களுடைய தர்க்கம் ஆட்டம் காணும் அந்தக் கணத்தில், உங்களுடைய சிந்தனையும், மனமும் கூட ஆட்டம் கண்டு, நீங்கள் ஒரு மனமற்ற நிலை அல்லது ஸத்தோரியில் இருக்கிறீர்கள். நீங்கள் புத்தராக இருக்கிறீர்கள்!
மனமற்ற நிலையில் இருக்கும் பொழுது, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் சிரிக்கும் பொழுது நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள்; ஏனெனில் சிரிக்கும் பொழுது எண்ணங்கள் இருக்க முடியாது. எண்ணமற்று இருக்கும் பொழுது, நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கிறீர்கள். எண்ணங்களுடன் இருக்கும் பொழுது, நீங்கள் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் இருப்பீர்கள்.
சிரிப்பு முழுமையானது; அதனால் உங்களை வெறுமனே குணப்படுத்தவும் உருமாற்றவும் முடியும். அதுவே மனித இனத்திற்குச் சிறந்த மற்றும் சுலபமாகக் கிடைக்கும் மருந்தாகும்.
நான் சொல்கிறேன்... மந்தமான மற்றும் உற்சாக மற்ற கணங்களில் செலவழிப்பதற்கு, வாழ்க்கை மிகவும் விலை மதிப்பற்றது. சிரியுங்கள்; உங்கள் வாழ்க்கையில் சக்தியையும், ஆனந்தத்தையும் உட்புகுத்துங்கள். நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருப்பது என்று தீர்மானியுங்கள். சிரத்தையுடன் இருங்கள்; கடுமையுடன் அல்ல.
நீங்கள் சிரிக்கும் பொழுது, உங்களைச் சுற்றி சக்தியைப் பரப்புகிறீர்கள்; அது தொற்றிக் கொள்ளும் இயல்புடையது; நீங்கள் உங்களைச் சுற்றி குணப்படுத்தக் கூடிய ஆனந்தத்தைப் பரப்புகிறீர்கள். அதனால்தான், நல்ல மனநிலையில் இல்லாத ஒருவர் உள்ளே வரும் பொழுது, அவரைச் சுற்றி அதே மனநிலையைப் பரப்புவதால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதனால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். நான் எப்பொழுதும் மருத்துவர்களிடம்
நீங்கள் கடுமையுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டீர்கள். சிரிக்க மாட்டீர்கள்.
ஏதாவது தூய்மைப்படுத்தும் தியானத்தைச் செய்யச் சொல்வது வழக்கம்; ஏனெனில் அவர்கள் தொடர்ந்து அதிக எதிர்மறையான எண்ணங்களுடனும், வியாதிகளுடனும் வரும் நோயாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, ஆனால் சிரிப்பதற்கு ஏதேனும் காரணம் வேண்டுமே! ஒன்றுமே நகைச்சுவையாக இல்லாத பொழுது, எவ்வாறு வெறுமனே நகைச்சுவை மனப்பான்மையுடன் இருப்பதாகத் தீர்மானிக்க முடியும்?
நாம் எப்பொழுதும் நம்மைச் சிரிக்க வைப்பதற்கு ஒரு கோமாளியோ அல்லது நகைச்சுவையோ வேண்டும் என்று நினைக்கிறோம். நான் சொல்கிறேன்... நீங்கள் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பித்தாலே, உங்கள் இருப்புத்தன்மை அழகாகவும், இலேசாகவும் ஆகிவிடும். உங்களுடைய உள் சுவாசம், வெளி சுவாசம், உங்கள் உடலில் உணவு செரித்து குருதியாவது, பிரபஞ்ச இருப்புத்தன்மையில் எல்லா நிகழ்வுகளும் ஒருமித்து நடைபெறுவது, எல்லாமே மிகவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் மிகவும் ஆனந்தமயமாக உணர்வீர்கள்; எப்பொழுதும் புன்னகைத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருப்பீர்கள். உங்கள் முழு இருப்புத் தன்மையுமே சிரிப்பையும், ஆனந்தத்தையும் பரப்பிக் கொண்டிருக்கும்.
நகைச்சுவையினால் சிரிப்பது சரிதான்; ஆனால் நீங்கள் பிரபஞ்சஇருப்புத்தன்மையுடன் இசைந்து செல்லும்பொழுது, நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்ச நாடகத்தை வெறுமனே ரசிக்கவும், எல்லாவற்றையுமே கண்டு சிரிக்கவும் செய்வீர்கள். பிறகு கடுமைத்தனத்திற்கோ, அஹங்காரத்திற்கோ இடமே இருக்காது. நீங்கள் திடமாக இருக்க மாட்டீர்கள்.
நீங்கள் சிரத்தையுடன் இருப்பீர்களானால், உங்களால் சிரிப்புடனும், விளையாட்டுத் தன்மையுடனும் இருக்க முடியும்.
மென்மையாகவும், எளிதில் சிரிப்பவராகவும் ஆகிவிடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மையின் விளையாட்டைப் பற்றிய ஆழமான புரிந்து கொள்ளுதலை வளர்த்துக் கொண்டு, எல்லாவற்றையும் பார்த்து சிரிப்பீர்கள்.
ஒவ்வொருவருமே இந்த விளையாட்டில் பங்கு பெறுபவர்கள்தான் என்பதையும், ஆனால் அவர்கள் பாத்திரத்துடன் மிகவும் கடுமையாகி விட்டதையும், உங்களால் காண முடிவதால், நீங்கள் அதைக் கண்டு சிரிப்பீர்கள். இந்த விளையாட்டில் எவ்வாறு ஒவ்வொருவரும் மற்றவரை ஏமாற்றுகின்றனர் என்பதைக் கண்டு சிரிப்பீர்கள். நீங்கள் ஒரு விளையாட்டில் இருக்கிறீர்கள் என்ற எண்ணமே உங்களைச் சிரிக்க வைக்கும்! உங்களால் சிரிக்க முடியுமானால், கவனிப்பவராகி விட முடியும்; நீங்கள் கவனிப்பவராகி விட்டால், அஹங்காரமான ‘நான்’ மற்றும் ‘எனது’ ஆகியவற்றில் இருந்து பிரிந்து விடுவீர்கள்.
ஒரு சின்ன கதை...
ஒருசமயம் புத்தத் துறவிகளிடையே, உண்மையான ஆன்மீகத்தன்மை என்பது என்ன என்பது பற்றிய மாநாடு நடந்தது. ஒவ்வொரு துறவியும் மேடைக்குச் சென்று நீண்ட பிரசங்கங்களை நிகழ்த்தினர். இறுதியில், ஒரு ஜென் துறவியின் முறை வந்தது. அவர் மேடைக்குச் சென்று, வெறுமனே சிரிக்க ஆரம்பித்தார்! சிரித்தார், சிரித்தார், சிரித்துக் கொண்டே இருந்தார்... அவருடைய இருப்புத்தன்மையில் இருந்து! சிரிப்பு அவருடைய அடிவயிற்றில் இருந்து எழுந்தது. அவர் கட்டுப்படுத்த முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். அவரது சிரிப்பு மிகவும் தொற்றிக் கொள்ளும் இயல்புடையதாக இருந்ததால், காரணத்தைக் கூட அறியாமல், வெகு சீக்கிரத்திலேயே அறையில் இருந்த அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விட்டனர்! துறவிகளுடைய சிரிப்பால், அவர்களை அறியாமல், அந்த அறையில் ஒரு பெரும் நேர்மறை சக்தி அலை
நீங்கள் சிரத்தையுடன் இருப்பீர்களானால், உங்களால் கையிலிருக்கும் வேலையை விளையாட்டாகவும், படைப்பாற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் செய்ய முடியும். எழும்பியது. துறவிகள் ஒரு உயர்ந்த நிலைக்குச் சென்றனர். அவர்களது எண்ணங்கள் ஆட்டம் கண்டு, இருப்புத்தன்மை ஆனந்தத்தால் நிரம்பியது. இறுதியாக அந்த ஜென் துறவி பேசினார், “இதுதான் உண்மையான ஆன்மீகத்தன்மை”.
சிரிப்பே உயர்ந்த ஆன்மீகத்தன்மை! அதனால் உங்களை ஞானமடைதலை நோக்கி இட்டுச் செல்ல முடியும். சிரிப்பு ஒரு பெரிய குணப் படுத்தும் சக்தி. உங்கள் நோயைக் கண்டு சிரித்தால், ஆரோக்கியம் பெற்று விடுவீர்கள். தூய குணப்படுத்தும் சக்தியான, பிரபஞ்ச இருப்புச் சக்தியுடன் தொடர்பு கொள்வதற்கு அற்புதமான ஒரு வழி சிரிப்பு.
நமது தியான நிகழ்ச்சிகளில், நாம் எப்பொழுதுமே சிரிப்பையும், நடனத்தையும் சேர்த்துக் கொள்வோம். அவை புத்தராவதற்கான சுலபமான வழிகளாகும்! நடனம் உங்களை எளிமையாகவும், இலேசாகவும் ஆக்கி விடும். நடனமும் சிரிப்பைப் போலவே, இன்னொரு சுலபமான மற்றும் மகிழ்ச்சியுடன் செய்யக் கூடிய ஒரு தியானமாகும். உங்களால் கவலையின்றி நடனமாட முடியுமானால், நீங்கள் நடனமாகவே ஆகி விடுவீர்கள். அப்பொழுது உங்களிடமிருந்து சக்தி பீறிட்டுக் கொண்டு வரும்.
உங்களுடைய எல்லா போலி அடையாளங்களிலிருந்தும் விடுதலை பெற்றிருந்தால் மட்டுமே, உங்களால் எதைப் பற்றிய கவலையும் இன்றி நடனமாட முடியும். நீங்கள் ‘யாரோ ஒருவராக’ இருக்கும் வரை உங்களால் மகிழ்ச்சியுடன் நடனமாட முடியாது. நடனம் உட்புற மகிழ்ச்சியின் வெளிப்புற வெளிப்பாடு. நான், அடுத்த அடி என்ன என்பது தெரிந்து நடனமாடும் முறையான நடனத்தைப் பற்றிப் பேசவில்லை. உங்களுடைய பெயரளவிலான அடையாளங்களை விட்டுவிட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒன்றாக உணர்ந்து, மகிழ்ச்சியுடன் ஆடும் நடனத்தைப் பற்றியே பேசுகிறேன்.
நீங்கள் கடுமையாக இருக்கும்பொழுது, அஹங்காரத்துடன் இருக்கிறீர்கள்.
தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள், அஹங்காரமுடையவர்கள். அவர்கள், மற்றவர்கள் தான் நடனமாடுவதைப் பார்த்து என்ன சொல்வார்களோ என்ற கவலையில் அமைதியாக அமர்ந்து விடுவார்கள். மீண்டும் அவர்கள் தங்கள் அஹங்காரத்தைப் பாதுகாப்பதில், வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தவறவிட்டு விடுகிறார்கள்.
குறைந்தபட்சம் எப்பொழுதாவது, உங்கள் வீட்டிலேயே, ஏதேனும் ஒரு இசையைப் போட்டு விட்டு, நடனமாடுங்கள். வெறுமனே விட்டுவிடத் தீர்மானியுங்கள். அது ஒரு தீவிரமான தியானமாகி, உங்களை மனம் கடந்த நிலைக்கு எடுத்துச் சென்று, வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில், உருமாற்றமடையச் செய்து விடக் கூடும். இயல்பாக இருங்கள். அசலாக இருங்கள். உங்கள் நடனத்தை விமரிசிப்பவர்கள், வெறுமனே நடனமாடுவதன் மகிழ்ச்சியைத் தவற விடுபவர்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். வெறுமனே கரைந்து, நீங்களே நடனமாகி விடுங்கள். சிரிப்பும், நடனமும் உங்கள் அஹங்காரத்தை விடுத்து பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விடும் சுலபமான உத்திகளாகும்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, எங்களது அஹங்காரம் போய்விட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எப்பொழுது உங்களைத் தனி வஸ்துவாக உணரவில்லையோ, அப்பொழுது உங்கள் அஹங்காரம் கரைந்து விட்டதென்று பொருள். நீங்கள் ஞானமடையும் பொழுது, உங்களுடைய அஹங்காரம் பழுத்து, வெடித்து விடுகிறது. அஹங்காரம் அற்று விடும் பொழுது, நீங்களே இதற்கு முன் அமைத்துக் கொண்ட தடைகள் மறைந்து,
'நான்' என்ற எண்ணம் மிகவும் அதிகமாக இருப்பதால்தான் கடுமையாக இருக்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத் தன்மை வெறுமனே உங்கள் வழியாகப் பாய்கிறது.
உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஏற்றுக் கொள்வீர்களோ இல்லையோ, விரும்புகிறீர்களோ இல்லையோ, பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வழியாகப் பாய்ந்து செல்ல முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நீங்கள்தான் முழுவதுமாக அஹங்காரத்தால் நிறைந்திருப்பதால், அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய அஹங்காரத்தினால், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அற்புதங்களைத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியாததால், தொடர்ந்து அஹங்காரத்திலும், அறியாமையிலும், துயரத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் அஹங்காரத்தால் நிறைந்திருப்பதால், உங்கள் சொந்த இருப்புத் தன்மையில் இருந்து, வெகுதூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்தப் பிறவியில் மட்டுமின்றி, பல பிறவிகளாக சேர்த்து வைத்த, விட்டுவிட வேண்டிய வஸ்து, உங்களுக்குள் எக்கச்சக்கமாக இருக்கிறது. உங்களுக்குள் உங்களுக்கே இடமில்லை! இதனால், நீங்கள் எப்பொழுதுமே, உங்கள் இருப்புத்தன்மையிலிருந்து செயல்படுவதற்கு பதிலாக, வெளி விளிம்பில் இருந்தே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களுடைய அஹங்காரம் கரைந்து விடும் பொழுது, நீங்களே இல்லாமல் போய் விடுவதால், வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விடுகிறீர்கள்! ஞானமடைந்த குருமார்கள் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். “எது நீங்கள் இல்லையோ, அதை அழித்துவிடுங்கள்” என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். மக்கள் என்னை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
எல்லாமே ஒரு நாடகம்தான் என்பதைப் புரிந்து கொண்டீர்களானால், உங்களால் ஒருபோதும் கடுமையாக இருந்து விடுகிறேன், பிறகு மகிழ்ச்சியாக இருந்து கொள்வேன் என்ற மனோபாவத்தால், நீங்கள் இப்பொழுதோ அல்லது பிறகோ எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், நீங்கள் என்பது உங்கள் உள் இருப்புத்தன்மை. அந்த இருப்புத் தன்மையானது இப்பொழுது, எது இல்லையோ அந்த பல்வேறுபட்ட செயல்படும் மற்றும் செயல்படா நிலையில் உள்ள அஹங்காரத்தினால், மாசு அடைந்திருக்கிறது. நீங்கள் அழிக்க வேண்டியதும், “எது நீங்கள் இல்லையோ, அதை அழித்து விடுங்கள்; நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டீர்கள்!” என்று நான் சொல்வதும் இதைத்தான்.
நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதிதான்; உங்களை மற்றவாறு எண்ண வைக்கும் எதுவுமே உங்கள் அஹங்காரம்தான். அவ்வளவுதான். அது எவ்வாறு இருக்கிறதென்றால்... ஒரு மீன், விருப்பம் இருப்பினும் இல்லாவிடினும், ஏற்றுக் கொள்ளினும் இல்லாவிடினும், நம்பினாலும் இல்லாவிடினும், கடலின் ஒரு பகுதிதான். அதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று, கடலில் மகிழ்ச்சியாக வாழ்வது; அல்லது கடலுடன் சண்டையிட்டுக் கொண்டும், வாழ்க்கையைத் துயரமாக்கிக் கொண்டும், அதிலேயே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து சென்றால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்க முடியும். நீங்கள் உள்வாங்கும் தன்மையுடனும் உணர்வுபூர்வமாக வும், படைப்பாற்றலுடனும், திரவத் தன்மையுடனும் இருப்பீர்கள்.
ஒரு சின்ன கதை...
ஒரு ஆசிரியை தனது மாணவர்களை சுற்றுலாவிற்காக வெளியே அழைத்துச் சென்றாள். அவர்கள் விளையாடினார்கள்; நொறுக்குத் தீனிகளைத் தின்று மகிழ்ந்தார்கள். திடீரென்று, ஆசிரியை அவர்களது கவனத்தை வானத்தில் தோன்றிய ஒரு அழகான வானவில்லை நோக்கித் திருப்பினாள். குழந்தைகள்
| வெறுமனே எளிமையாகவும், தன்னிச்சையாகவும் | | கள்ளங்கபடமற்றும் வாழுங்கள். |
அதை வியப்புடன் பார்த்தனர். அவர்களை கவனித்த ஆசிரியை அறிவித்தாள், ‘‘சரி, இப்பொழுது நாம் இதற்குப் பின்னால் இருக்கும் ஓவியனுக்காகக் கை தட்டுவோம்!’’. ஒரு கணம் குழம்பிய மாணவர்கள், உடனே புரிந்து கொண்டு, கரகோஷம் செய்தனர்!
குழந்தைகளுக்கு, அவர்களைச் சுற்றியுள்ள பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அழகைப் பாராட்ட கற்றுத் தரப்பட வேண்டும். இல்லாவிடில், அவர்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை வெகு சீக்கிரத்திலேயே இழந்து விட்டு, அஹங்காரம் மிக்கவர்களாகி விடுவார்கள். அவர்கள் அஹங்காரம் மிக்கவர் களாகவும், இயந்திரம் போலாகி விடவும் அனுமதித்து விடக்கூடாது. அவர்கள் மென்மையானவர்களாகவும், உணர்ச்சிமிக்கவர்களாகவும் வளர்க்கப்பட வேண்டும்.
உங்களால் பிரபஞ்ச இருப்புத்தன்மையை உணர்ந்து பாராட்ட முடியுமானால், நீங்கள் அதற்கு அருகாமையில் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம். முழு இருப்புத் தன்மையுமே படைப்பாற்றல்தான். ஒரு படைப்பாளி, அவனுடைய மூளையை விட, இதயத்திற்கு அருகில் இருக்கிறான். நீங்கள் படைக்கும் பொழுது, கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள். கடவுளே படைப்பவன், படைக்கப் பட்டது மற்றும் படைத்தல். நீங்கள் படைக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்பின்தன்மையான, உங்களுடைய இருப்புத்தன்மையை வெளிப் படுத்துகிறீர்கள். நீங்கள் படைக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய, உங்கள் அன்பையும், பாராட்டுதலையும் காண்பிக்கிறீர்கள்; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டுகிறீர்கள்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றிய ஆச்சரியத்தால் நிரம்பியிருப்பீர்களானால், உங்களால் படைக்க முடியும். இன்னொரு பக்கம், நீங்கள் அஹங்காரத்தால்
எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பது ஒரு போதும் ஆனந்தத்தை அளிக்காது; அது உங்கள் அஹங்காரத்தையே நிறைவு செய்கிறது.
நிறைந்திருப்பீர்களானால், உங்களால் படைக்க இயலாது; அவ்வாறு படைத்தாலும், உங்கள் படைப்பு ஒரு உயிரற்ற படைப்பாகவே இருக்கும். அது ஒரு பிளாஸ்டிக் ரோஜாவைப் போல இருக்கும்; எல்லாம் சரியாகக் காணப்பட்டாலும், அதில் மணமோ, உயிரோ இருக்காது. ஒரு படைப்பாளி அன்பினால் படைக்கும் பொழுது, அவனால் படைப்புக்கு ஏதோ ஒரு சிறப்பான தன்மையைத் தர முடியும். ஆனால் அஹங்காரத்தினால் படைக்கும் பொழுது, படைப்பில் உயிர் இருக்காது.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இல்லாத பொழுது, அதன் நறுமணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள். அது, நீங்கள் ஒரு அற்புதமான நறுமணத்தால் சூழப்பட்டிருக்கும் பொழுது, உங்கள் நாசியை நாற்ற மெடுக்கும் விரல்களால் மூடிக் கொண்டு இருப்பதைப் போல இருக்கிறது. இதுதான் அஹங்காரம். நீங்கள் பிரபஞ்சத்தின் நறுமணத்தை உணரும் பொழுது, அதன் ஒருமித்த நிகழ்வையும் உணர ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனும் ஒத்திசை வாக இருப்பீர்கள். ஒவ்வொரு இலையும், சிறு கிளையும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அல்லது கடவுளின் வெளிப்பாடே என்பதை உங்களால் காண முடியும். இந்த நிலையில் இருக்கும் பொழுது, நீங்கள் தேடுவது அனைத்தும் கிடைக்கும்; ஏனெனில் நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது வாழ்க்கையே ஒரு அற்புதமாகி விடும்! இதைத்தான் நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒருமித்த நிகழ்வு என்கிறோம்.
மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒத்திசைவுடன் இருக்கும் பொழுது, பேராசையுடன் எதையும் தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
தவறு செய்வதில் தவறென்ன இருக்கிறது? ஒரே ஒரு விஷயம்... அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள். வெறுமனே, பிரபஞ்ச இருப்புத் தன்மையே, நீங்கள் தேடுவதற்கும் முன்பே, உங்களுக்கு அந்தக் கணத்திற்கு என்ன தேவையோ, அதைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். 'நீங்கள் தேடுவது கிடைக்கும்' என்று நான் சொன்னது இதைத்தான்.
பிரச்சினை என்னவென்றால், நமது மூலமும், நமக்குள் வெகு ஆழத்தில் பொதிந்து கிடப்பதுமான பிரபஞ்ச இருப்புத்தன்மையில் இருந்து நம்மை தூரப்படுத்திக் கொண்டு விட்டோம். அதனால் அதைத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. முதலில் நம்மைச் சுற்றியிருக்கும் அழகை ஆராதிப்பதன் மூலமும் பாராட்டுவதன் மூலமும் நமது அஹங்காரத்தை விட ஆரம்பிக்க முடியும். அதுவே உருமாற்றத்திற்கான விதையை உங்களுக்குள் விதைக்கத் தொடங்கி விடும். அதுவே உங்களுக்கு, உங்களுடைய அஹங்காரத்தை விட பலம் பொருந்திய உயிர்ச்சக்தி ஒன்று இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிய வைத்து விடும்.
நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் இழக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அஹங்காரமற்று விடுவீர்கள். எந்த அளவிற்கு அஹங்காரமற்று இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களை இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு இழந்து விடுவீர்கள்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, அஹங்காரத்தைச் சரணாகதி செய்து விட வேண்டும் என்பதை புத்திபூர்வமாக அறிந்திருந்தாலும், எங்களால் செய்ய முடியவில்லையே, ஏன்?
பாருங்கள், மனிதன் ஒருபோதும் முழுமையாக விட்டுவிட விரும்புவதில்லை. அவன் எப்பொழுதும் எதையாவது பற்றி
உங்களது அஹங்காரம் புண்பட்டு விடும் என்பதைப்பற்றிக் கவலைப்படாத பொழுது, எதிலும் தைரியமாகக் குதித்து விடுவீர்கள். கொண்டிருக்கவே விரும்புகிறான்; அந்த எதையாவது என்பது அவன் அஹங்காரம்தான். உங்கள் அஹங்காரம்தான் உங்கள் பலம். இதைப் பன்னெடுங்காலமாக நன்றாகவே பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். அதுவே உங்கள் இருப்பின் அடிப்படையாகவும் இருக்கிறது.
உங்களுடைய அஹங்காரத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையும், அது இப்பொழுது நீங்கள் இருப்பதை விட மிக ஆனந்தமயமாக இருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. அஹங்காரமே உங்கள் உயிர் ஆதார வஸ்துவாக இருக்கிறது. ஆனால் எளிமையான உண்மை என்னவெனில்-நீங்கள் அதை விட்டுவிட வேண்டியது தான்!
அது எவ்வாறு இருக்கிறதென்றால்... ஒரு விதை விதைக்கப்படுகிறது; அது பிளந்து கொண்டால்தானே மரமாக வளர முடியும், இல்லையா? அது மரம் வளர்வதற்காகக் காத்திருந்து பிறகு பிளந்து கொள்ளலாம் என்று எண்ணினால், அது சாத்தியமாகுமா? அவ்வாறு இல்லை. அதே போல், மனிதனுடைய அஹங்காரமும் பிளந்து கொண்டால்தான் அவனால் மலர முடியும். அவன் எவ்வளவு தூரம் தன் அஹங்காரத்தைப் பாதுகாக்கிறானோ, அவ்வளவு தூரம் தன் மலர்தலைத் தள்ளிப் போடுகிறான், அவ்வளவே.
மனிதன் தன் குருவைச் சந்திக்கும் வரை, அவனுடைய தடைகள் எங்கிருக்கிறது, அஹங்காரம் எங்கு அவனுக்குத் தடையாக நிற்கிறது என்பதைக் கூட அவன் அறியாமல் இருக்கக் கூடும். ஆனால் அவன் ஒரு முறை தன் குருவைச் சந்தித்து விட்டாலே, திறவுகோலைக் கண்டுபிடித்து விடுகிறான்! அதை உபயோகிப்பது அவன் கையில்தான் இருக்கிறது. குருவின் ஒரே நோக்கம், தனது சீடர்களின் அஹங்காரத்தைக் கிழித்து எறிவதே.
சிரிப்பு ஒரு மிகவும் சக்தி வாய்ந்த தியான முறையாகும். அது ஒரு மிக உயர்ந்த ஆன்மீகத் தன்மை.
ஒரு குருவின் சொற்களும், செயல்களும் வெளியில் இருந்து பார்க்கும்பொழுது சம்பந்தமற்றதாகவும், பொருத்த மற்றதாகவும் தோன்றலாம். ஆனால் அது உண்மையைச் சுமந்து கொண்டிருக்கிறது; உங்கள் அஹங்காரத்தை அழித்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறது. மனித இனத்தின் மீதான வெறும் பரிவினால் மட்டுமே குருவானவர் கீழிறங்கி வருகிறார். அவர் எதன் மீதும் அல்லது எவர் மீதும் எந்த விதமான சுயநலமும் இல்லாமல் இருக்கிறார். அவர் ஆபத்தான ஆசைப் பெருங்கடலைக் கடந்தவர். அவர் இங்கிருப்பதன் காரணம், வெறுமனே உங்களையும் அவர் நிலைக்கு - 'நான்' என்ற உணர்வற்று வெறும் விழிப்புணர்வு மட்டுமே இருக்கும் எல்லையற்ற ஆனந்த நிலைக்கு - உயர்த்துவதற்காகவே!
பெண் சக்தியான, தேவியின் மீதான 700 சுலோகங்கள் அடங்கிய, சமஸ்கிருதத்தில் அமைந்த சண்டி ஸ்தோத்திரத்தில், சண்டி தேவி எவ்வாறு பல்வேறு தீய ராக்ஷஸர்களை அழிக்கிறாள் என்பது சொல்லப்படுகிறது. அது, அவள் உண்மையிலேயே மனிதர்களை அழித்தாள் என்பதல்ல. அவள் நிஜ மனிதர்களை கொன்றிருந்தால், ஜெயிலுக்குச் சென்றிருப்பாள்; நாமும் அவளை ஸ்தோத்திரங்களின் வாயிலாக வழிபட்டுக் கொண்டிருக்க மாட்டோம்! அவள் குற்றவியல் சட்டத்தின் கீழ் வந்திருப்பாள்!
அசுரர்கள் என்பது மனிதனுக்குள் இருக்கும் பல விதமான தீய குணங்கள் அல்லது அஹங்காரத்தைக் குறிக்கிறது; இந்த அஹங்காரத்தைத்தான் தேவி அழித்து அவனுக்கு அவற்றிடமிருந்து விடுதலை கொடுக்கிறாள். அதைப் புரிந்து கொள்ள வேண்டும். மகிஷத் தலையுடன் ஒரு அசுரன்! இது சிலரது எருமைத் தோலை நமக்குப்புரிய வைக்கத்தான்! குரு நம்மை எத்தனை முறை எழுப்பி அவரது பாதையில் திருப்பி விட்டாலும், நாம் நமது
| சிரிப்பதற்குக் கூட நாம் கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். |
பாதையைவிடாமல் பற்றிக் கொண்டு இருக்கிறோம்! நாம் குருவின் அழைப்பிற்கு உள்வாங்கும் தன்மையற்றும், உணர்ச்சியற்றும் இருக்கிறோம்.
பாருங்கள், குருவுடன் வாதம் செய்வது, நீங்களே உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகப்பெரிய தண்டனை. நான் நேர்மையுடன் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் குருவுடன் வாதம் செய்வதில் சிக்கிக் கொண்டு விட்டால், உங்களுக்கு இதை விடப் பெரிய தீங்கை யாராலும் செய்து விட முடியாது. நீங்கள் குருவுடன் வாதம் செய்யும் பொழுது, உங்களுக்கே போதுமான அளவிற்கு தீங்கு செய்து கொள்கிறீர்கள். ஒவ்வொருவரையும் அவரவர்க்கேற்ற வகையில் எவ்வாறு மலர வைக்க வேண்டும் என்பது குருவிற்குத் தெரியும்; நாம் செய்ய வேண்டியதெல்லாம்; விசுவாசத்துடனும், தைரியத்துடனும் அவருக்குத் திறந்து இருப்பதே.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, நீங்கள்தான் என்னுடைய குரு என்பது எனக்குத் தெரிந்தாலும், உங்கள் முன்னிலையில் தயக்கமாகவும், அச்சமாகவுமே இருக்கிறது!
(பரமஹம்ஸர் சிரிக்கிறார்!) நீங்கள் இதைச் சொல்வதில் இருந்தே, இந்த நிலையில் இருந்து வெளியே வர விரும்புகிறீர்கள் என்று அர்த்தமாகிறது. நீங்கள் ஒரு மிகப்பெரிய அடியை எடுத்து வைக்கத் தீர்மானித்து விட்டீர்கள்.
நான் இதை விளக்குகிறேன்... உங்களுடைய இருப்புத் தன்மை என்னைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டு விட்டது; ஆனால் உங்கள் மனமோ சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் இருப்புத் தன்மை என்னை அடையாளம் கண்டு கொள்ளாவிடில்,
| மனமற்ற நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். |
நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு வந்து கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் இங்கு வருவதற்கு வீட்டில் நிறைய தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இல்லையா? உங்களுக்கு மிகவும் சுலபமானது என்னவென்றால், பேசாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பது. அது உங்கள் குடும்பத்தினரையும் சந்தோஷப்படுத்தியிருக்கும், இல்லையா?
நீங்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்து என்னைப் பார்க்க விரும்புகிறீர்கள்? என்னிடம் வருவதற்காக ஏன் மீண்டும் மீண்டும் வீட்டில் விவாதங்களை எதிர்கொள்கிறீர்கள்? வெறுமனே வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களைச் சந்தோஷமாக வைத்திருப்பது மிகவும் சுலபமல்லவா? காரணம் என்னவெனில், நீங்கள் இழுக்கப்படுவது, இருப்புத்தன்மை நிலையில். அது ஒரு முறை என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டால், மீண்டும் உங்களைத் திரும்பிச் செல்ல அனுமதிக்காது. முடியுமானால் முயற்சி செய்து பாருங்கள், உங்களால் தப்பிக்க முடியாது!
உங்களுடைய இருப்புத்தன்மைக்கு என்னைத் தெரியும். ஆனால் உங்கள் மனம்தான் தடையாக இருக்கிறது. ஞாபகம் வைத்துக்க கொள்ளுங்கள்... எப்பொழுதும் உங்கள் இதயத்தையே பின்பற்றுங்கள். நீங்கள் இங்கு அதைத்தான் செய்ய வேண்டும். உங்கள் இதயத்தைப் பின்பற்றினால், என்னை அடைந்து விடுவீர்கள். உங்கள் மனதைப் பின்பற்றும் பொழுது, என்னைத் தவறவிட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
நீங்கள் உங்களை என்னிடம் இழப்பதற்கு மிகவும் அஞ்சுகிறீர்கள். அதுதான் பிரச்சினை. உங்கள் அஹங்காரம் அச்சு றுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. உங்கள் அடையாளத்திற்குப்
| சிரிக்கும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். ஏனெனில் | | சிரிக்கும்பொழுது எண்ணங்கள் இருக்க முடியாது. எண்ணமற்று | | இருக்கும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். |
பாதுகாப்பில்லாமல் போய்விடும் என்று அஞ்சுகிறீர்கள். உங்கள் அடையாளம் கரைந்து மறைந்து கொண்டிருப்பதாக உணர்கிறீர்கள். உங்கள் அடையாளம் இன்றி எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று ஆச்சரியப்படத் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது.
இது நிகழும் பொழுது, வாழ்க்கையில் மற்ற சூழ்நிலைகளைப் போலவே, உடனே அஹங்காரம் அதன் ஆகாரத்தைக் கேட்கிறது; ஆனால், இங்கு உங்களால் அதை நிறைவேற்ற முடியாது. அதனால் என்னை சந்தேகப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள்; பலவகையிலும் உங்கள் உணர்வுகளுக்கான காரணங்களை ஆராய ஆரம்பித்து விடுகிறீர்கள். முழுமையானதும் தீர்வு காண முடியாததுமானதற்கு தீர்வு காணத் தொடங்குகிறீர்கள். உங்கள் மனம் யானையின் துதிக்கையைப் போல இங்கும் அங்குமாக - ஒரு புறம் என் மீது தீவிரமான அன்பில் இருந்து, மறுபுறம் அந்த அன்பையே தீவிரமாக சந்தேகப்படும் அளவிற்கு-ஆடுகிறது.
நினைவில் வையுங்கள்... அன்பு உங்கள் இதயத்தில் இருந்து வருகிறது; ஆனால் பயமோ உங்கள் மனதில் இருந்து வருகிறது. எப்பொழுதும், எப்பொழுதுமே, உங்கள் இதயத்தையே பின்பற்றுங்கள். அன்பு இயற்கையானது; அச்சமோ சமூகத்தாலானது. பயமும், சந்தேகமும் ஒன்றுக்கொன்று ஆழமாகத் தொடர்புள்ளவை; அவை உங்களுக்குள் பதிந்து விட்ட வெறும் நெறிப் படுத்தல்கள்தான்.
மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்... சந்தேகப் படுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. சந்தேகம் ஞானமடைவற்கு தீப்பந்தம் போல வழிகாட்டும். சந்தேகமின்றி மேலே செல்வது உங்கள் மனதிற்கு மிகவும் கடினமான செயல். ஆனால் இறுதியில்
உங்களால் சிரிக்க முடியுமானால், கவனிப்பாராகிவிட முடியும்.
உங்கள் சந்தேகங்கள் விசுவாசமாக மாற்றமடைந்து விட வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று பொருள். நீங்கள் உள்நோக்கி செல்லச் செல்ல, இது நிகழும்.
நாங்கள் செய்ய வேண்டியது என்ன, ஸ்வாமிஜி?
வெறுமனே, முழுமையாக அன்பில் விழுந்து விடுங்கள், அவ்வளவுதான்! முழுமையாக அன்பில் விழுதல் என்பது, முழுமையாக அஹங்காரமற்ற நிலையில் விழுந்து விடுதலாகும். அதனால்தான், அஹங்காரமற்ற நிலையில் இருக்கும் ஒரு குருவால், அன்பாகவும் பரிவாகவும் மட்டுமே இருக்க முடியும். கோபம், எரிச்சல் போன்ற மற்ற எல்லா உணர்ச்சிகளுமே அவருடைய எல்லையற்ற அன்பின் போலியான வெளிப்பாடுகள் தான். அவர் கோபமாகவும், எரிச்சலாகவும் இருப்பதாக பாவனை செய்கிறார். அவர் உங்கள் நிலைக்குக் கீழிறங்கி வந்து, உங்கள் நிலையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, இன்னுமொரு புரிந்து கொள்ளும் நிலை வாயிலாக அழைத்துச் செல்கிறார், அவ்வளவே. நீங்கள் அவரது மொழியான, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மொழியைப் புரிந்து கொள்ளும் வரை, அவர் உங்கள் மொழியிலேயே பேசுகிறார்!
ஆனால் ஸ்வாமிஜி, எவ்வாறு முழுமையாக அன்பில் விழ ஆரம்பிப்பது? அது சொல்வது சுலபம், செய்வது கடினம் போல் தோன்றுகிறதே!
முதல் விஷயம்... உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வைப் பாய்ச்சுங்கள். கவனிப்பவராக மாறுங்கள். இது எல்லாமே ஒரு நாடகம்தான்; நீங்கள் தற்செயலாக அதில் ஒரு பாத்திரத்தில் நடித்தாலும், அதை வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள், என்பதை உணர ஆரம்பித்து விடுவீர்கள். இரண்டாவது விஷயம்... நீங்கள் பார்ப்பது
சிாிப்பாக மிக உயர்ந்த ஆன்மீகத் தன்மை. அதனால் ஞானமடைதலை நோக்கி இட்டுச் செல்ல முடியும்.
எல்லாவற்றையும் எடைபோடுவதை¹ நிறுத்துங்கள். எடை போடுவதை நிறுத்தினாலே, எல்லாரையும், எல்லாவற்றையும் முழுமையான கள்ளங்கபடமற்ற தன்மையுடன் வெறுமனே நேசிப்பீர்கள்.
எடை போடும் பொழுது, நீங்கள் என்ன இருக்கிறதோ அதைப் பார்ப்பதில்லை; எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதையே பார்க்கிறீர்கள். நம்மில் பலரும் ஏற்கனவே, முன்ன தாகவே முடிவு கட்டி விட்டோம். அவையே நமக்கு அடித்தளக் கற்களாகும். பின்னர் நாம், அதையே ஒரு திடமான அடிப்படை யாகக் கொண்டு, வெறுமனே செயல்படுகிறோம். பிறகு நாம் எதைப் பார்த்தாலும், முதலில் செய்வது, அதை முன்கூட்டியே எடுத்த தீர்மானத்தின் கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான்.
நாம் இது போன்று செயல்படுவோமாயின், எவ்வாறு விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்ப்பது? எவ்வாறு எப்பொழுதாவது அன்பில் விழுவது? நீங்கள் எல்லாவற்றையும் புத்துணர்ச்சியுடனும், ஒருவிதமான கள்ளங்கபடமற்ற தன்மையுடனும் வரவேற்கும் பொழுதுதான், உங்களால் அன்பில் விழ முடியும். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நேசிப்பதற்குக் கூட, சாதக பாதகங்களை ஆராய ஆரம்பித்து விடுகிறீர்கள். ஆராய ஆரம்பிக்கும்பொழுதே, அதைத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் இறுதியாக செய்யலாம் என்று தீர்மானிக்கும் பொழுது, அது மிகவும் கால தாமதமாகி விடக் கூடும்.
பாருங்கள், குரு-சிஷ்ய உறவே உங்கள் অহங்காரத்தை இழப்பதற்காகத்தான். நீங்கள் தனியாக இருக்கும் பொழுது, உங்கள் অহங்காரத்தை இழக்க முடியாது. உங்கள் அஹங்காரத்தை இழப்பதற்கு குரு கருவியாக இருந்து உதவுகிறார். நீங்கள் அவரில் எவ்வளவு கரைகிறீர்களோ, அந்த
Judging¹ அளவிற்கு திறக்கவும், அஹங்காரத்தை இழக்கவும் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் கரைவது எப்பொழுது தெரியும்? நீங்கள் இதற்கு முன் அனுபவித்திராத ஒருவிதமான மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பிக்கும் பொழுது.
நீங்கள் எந்தக் காரணமும் இன்றியே மகிழ்ச்சியாக உண ர ஆரம்பிப்பீர்கள். வெறுமனே இருப்பதே உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும். ஆனால், குருவுடன் இருக்கும் பொழுது, எப்பொழுதும் உங்கள் அஹங்காரம் அறுவை சிகிச்சைக்கு உள்ளாவதாலும், அது வெட்டியெடுக்கப்படுவதாலும், ஆழமான துயரம் மிக்க கணங்களும் இருக்கும். ஆனால் அந்தக் கணங்களில் இருந்து வெளிவரும் பொழுது, உங்கள் வளர்ச்சியில் பல அடிகள் முன்னேறியிருப்பீர்கள்; எந்தக் காரணமும் இல்லாமலேயே எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
இளஞ்சிறார்களைப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையை நோக்கிய மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மிகவும் அன்புடன் இருக்கிறார்கள். நீங்களும் ஏன் அவர்களைப் போல் உற்சாகமாக இருப்பதில்லை என்று எப்பொழுதாவது ஆச்சரியப் பட்டிருக் கிறீர்களா? நீங்களும் ஒரு காலத்தில் அவர்களைப் போல்தான் இருந்தீர்கள், இல்லையா? பிறகு, இந்த உற்சாகத்தையும், கள்ளம் கபடமற்ற தன்மையையும் எங்கே இழந்தோம்? சொல்லுங்கள். நாம் இதை எங்கே இழந்து விட்டோம் என்று நினைக்கிறீர்கள்?
நாம் வளர்ந்து மிகுந்த பக்குவம் பெற்று விட்டோம், ஸ்வாமிஜி. நாம் அவர்களை விட மிகுந்த அனுபவ சாலிகள்...
ஆ...ஆ...! எதில் அனுபவம்? சலிப்படைவதிலா?! பாருங்கள்... மிகவும் தெளிவாக இருங்கள்... நாமெல்லாம் குழந்தைகளை விட மிகுந்த பக்குவம் பெற்றவர்கள் என்றும்,
சிரிப்பு ஒரு பெரிய குணப்படுத்தும் சக்தி. உங்கள் நோயைக் கண்டு சிரித்தால் நீங்கள் ஆரோக்கியம் பெற்று விடுவீர்கள்.
வாழ்க்கையைப் பற்றிய சரியான மனோபாவத்தை உடையவர்கள் என்றும், குழந்தைகள்தான் வாழ்ந்து இந்தப் பக்குவத்தை சம்பாதிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
உண்மை என்னவெனில், நாம் மிகவும் புத்தி பூர்வமாக ஆகி விட்டதால், நமது இதயத்துடனான தொடர்பை இழந்து விட்டோம். நாம் முழுவதுமாக மூளையில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கிறோம். நமது உணர்ச்சிகள் கூட மூளையில் இருந்தே உத்தரவிடப்படுகிறது. நாம் நமது இருப்புத் தன்மையில் இருந்து உணர்ச்சியடைவதையே நிறுத்தி விட்டோம். நமது மையத்துடனான தொடர்பையே இழந்து விட்டோம்.
நாம் இந்த உலகத்திற்கு வந்த போது, தன்னிச்சையாகவும், கொண்டாட்டமான ஒரு நிலையிலும் இருந்தோம். சில வருடங் களில் சமூகம் நம்மை நெறிப்படுத்தி, நமக்கான மனத்தை உருவாக்கி விட்டது. மனமானது தானாகவே திடப்பட்டு, நமக்கு நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்துவிட்டது. நமது தன்னிச்சையான இயல்பு தொலைந்துவிட்டது.
நான் சொல்கிறேன்... நமது அஹங்காரத்தை விடும் இந்த முழுச் செயல்முறையுமே, நமக்குளிருக்கும் குழந்தையை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிதான். நமது இளம்பிராயத்தில், கடவுளை உணர, மிகவும் நெருக்கத்தில் இருந்தோம். நாம் வளர்ந்து, பெயரளவிலான பக்குவத்தை அடைந்த பிறகு, நமது சமூக நெறிப்படுத்துதல்கள், நமக்கு உள்ளிருந்த குழந்தையை அழித்து விட்டது,
பலர் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, எவ்வாறு உங்களால் மிகப்பெரிய உண்மையைப் பற்றி பேசினாலும், ஒரு குழந்தையைப் போல இருக்க முடிகிறது?”. இப்பொழுது
| தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் | | :---: | | அஹங்காரமுடையவர்கள். |
சொல்லுங்கள், நான் வளர்ந்து பக்குவம் அடையாததால் ஒரு குழந்தையைப் போல இருக்கிறேனா?! நீங்கள் வெறுமனே விஷயங்களை உங்களுக்கு சௌகரியமான வழிகளில், உங்கள் செ ாந்த தத்துவ வழிகளில், அர்த்தம் கொண்டு விடுகிறீர்கள், அதுதான் பிரச்சினை.
சமூக நெறிப்படுத்துதல்கள்1 இல்லாவிடில், பயிற்சியின்றியே நமக்கு நீந்தும் மற்றும் பறக்கும் திறமைகள் இருக்கின்றன. இது உங்களுக்கு அபத்தமாகத் தோன்றினாலும், உண்மை. நம்மிடம் இந்தத் திறமைகள் இருக்கின்றன. நம்மால் நீந்தவும் பறக்கவும் முடியாது என்று மக்கள் நம்மிடம் சொல்லத் தொடங்கும் வரை, நம்மால் நீந்தவும் பறக்கவும் முடியும். நீங்கள் ஒரு பிறந்த குழந்தையை நீச்சல் குளத்தில் விட்டால், அது மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்.
அஹங்காரம் தன்னை பலவழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது; நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கேற்றபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நமது தினசரி வாழ்வில் உண்மையில் முகமூடிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நமது அம்மாவிடம் ஒரு முகமூடியை2 உபயோகப்படுத்துகிறோம்; அப்பாவிடம் இன்னொரு முகமூடியை உபயோகப் படுத்துகிறோம்; நமது மேலதிகாரிக்கு வேறு ஒன்று, என்று இவ்வாறு பல முகமூடிகளை உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ற சரியான முகமூடியை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் வரை சரிதான். யாராவது ஒருவரிடம் தவறான ஒரு முகமூடியை உபயோகப்படுத்தி விடும் கணத்தில், உங்கள் அஹங்காரம் உள்ளே நுழைந்து விட்டது என்று பொருள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முகமூடியை
| Conditioning¹ | Mask² |
|---|
திறமையாக மாற்றிக் கொண்டு, காட்சியை ரசித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்பொழுது நீங்கள் கவனிப்பவர் மட்டுமே; விளையாட்டில் ஒரு திடமான வஸ்துவாக ஈடுபடவில்லை.
நீங்கள் முகமூடிக்கும் அப்பால் ஏதோ ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்தால்தான் உங்களால் ரசிக்க முடியும். இல்லாவிடில், முகமூடியால் உணர்ச்சிகளில் அடித்துச் செல்லப்பட்டு,வாழ்க்கையின் மொத்தக் கவர்ச்சியையும் இழந்து விடுவீர்கள். நீங்கள் முகமூடிகளைத்தான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்தால், உங்கள் ஆசைகள் தானாகவே நழுவி விழுந்து விடும்.
அது எவ்வாறு இருக்கிறதென்றால்... நீங்கள் பெரியவர்களாக வளரும் பொழுது, தானாகவே உங்கள் பொம்மைகளை விட்டு விடுகிறீர்கள், இல்லையா? அதன் பிறகு பொம்மைகள் உங்களை ஈர்ப்பதில்லை, அதே போன்று, நீங்கள் இந்த முகமூடிகளை அறிவுக் கூர்மையுடன் நோக்கும் பொழுது, அவற்றின் மீது ஆசை வைப்பதில்லை; அதை வெறுமனே உபயோகப்படுத்தி விட்டு, மேலே சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
அஹங்காரம் தன்னைப் பல தந்திரமான வழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது - அதனால்தான் இவ்வளவு விளக்கம் தேவையாக இருக்கிறது. இவையெல்லாம் உங்கள் உள் நோக்கிய பயணத்தில் நீங்கள் எங்கு தடையாக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று பார்க்க உதவும்.
உங்களுக்குள் தடைகள் குறைவாக இருக்குமானால், நீங்கள் அதிக திரவத் தன்மையுடனும் இசைவுடனும் இருப்பீர்கள். உங்களிடம் தடைகள் குறைவாக இருக்குமானால், நீங்கள் அதிக உள்வாங்கும் தன்மையுடனும், மென்மையாகவும் இருப்பீர்கள். உங்களிடம் தடைகள் அதிகமாக இருக்கும்பொழுது, நீங்கள்
குறைந்தபட்சம், எப்பொழுதாவது உங்கள் வீட்டிலேயே ஏதேனும் ஒரு இசையைப் போட்டு விட்டு, நடனமாடுங்கள். திடமாகவும், ஊடுருவிச் செல்வதற்குக் கடினமாகவும் இருப்பீர்கள். இவ்வாறு உங்கள் அஹங்காரம் எல்லாவற்றிற்கும் ஒரு திடமான தடையாக இருக்கிறது.
உதாரணமாக, எப்பொழுதும் யாராவது உங்களிடம் ஏதாவது சொல்லும் பொழுது, அதற்கு உங்கள் முதல் எதிர்ச்செயல் என்னவாக இருக்கும்? உங்கள் முதல் எதிர்ச் செயல், ஒருவிதமான எதிர்ப்பு, ஒரு 'இல்லை' என்பதாகவே இருக்கும். நீங்கள் 'இல்லை' என்று சொல்லும் பொழுது, அது உங்கள் அஹங்காரத்தை வெகுவாக நிறைவடையச் செய்கிறது. நீங்கள் உங்களுக்குள் திடமாகவும், உறுதியாகவும் உணர்கிறீர்கள். நீங்கள் 'சரி' என்று சொல்லும் பொழுது, திரவமாகவும், மென்மையாகவும் உணர்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் கீழ்ப்படிவதைப் போல உணர்கிறீர்கள். அதனால் 'இல்லை' என்று சொல்கிறீர்கள்.
அதனால்தான் நீங்கள் வீட்டிலோ, பள்ளியிலோ, அலுவலகத்திலோ அல்லது வேறெங்காவதோ விதிகளை மீறும் பொழுது ஒரு சந்தோஷத்தை அடைகிறீர்கள். உண்மையில், நீங்கள் ஒரு விதியை மீறும் பொழுது, உங்களைப் பற்றி உயர்வாகக் கருதிக் கொள்கிறீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளுக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுத்து விட்டுச் செல்வதில் ஒரு சந்தோஷம் அடைகிறார்கள். ஏன்? ஏனெனில் விதிகளை ஏற்க மறுப்பது அஹங்காரத்திற்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. சிறு குழந்தைகளிடம், சில விஷயங்கள் குழந்தைகளுக்கானதல்ல என்று சொன்ன கணமே, அதுதான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். பெரியவர்களும் பல வழிகளில் ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.
கணவனும், மனைவியும் எந்த யோசனையாயினும் முதல் முறையிலேயே ஒத்துப்போவது மிக அரிது! உதாரணத்திற்கு நமது
சிரிப்பும், நடனமும் உங்கள் அஹங்காரத்தை விடுத்து பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் கலந்து விடும் சுலபமான உத்திகளாகும்.
பக்தர்களையே எடுத்துக் கொள்ளுங்களேன். முதலில் கணவன் என் மீது பற்று வைத்து விட்டால், மனைவியின் முதல் எதிர்ச் செயல் என்னை எதிர்ப்பதாகத்தான் இருக்கும். அவள் என்னுடைய புத்தகங்களை இரகசியமாகப் படித்து ரசித்திருக்கக் கூடும்; ஆனால் கணவனின் முன்னிலையில், என்னை ஏற்றுக் கொள்ள விரும்ப மாட்டாள். அதே போல் முதலில் மனைவி என்னிடம் பற்று கொள்ளும் சம்பவங்களிலும், இதே கதைதான். கணவன்மார்கள் அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க என்னவெல்லாம் முடியுமோ அத்தனையையும் செய்து விட்டு, இறுதியில் என்னிடம் வருவார்கள்.
இதுதான் அஹங்காரத்தின் விளையாட்டு. 'சரி' என்று சொல்வது, நீங்கள் தடைகள் இல்லாமல் ஒரு திரவ நிலையில் இயல்பாக இசைந்து செல்ல உதவுகிறது. இதற்கு, நீங்கள் எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாக 'சரி' என்று சொல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல. அப்படியல்ல! அதன் பொருள், அஹங்காரத்தின் பாதிப்பில்லாமல், உங்கள் தன்னிச்சையான இயல்பின்மீது விசுவாசம் வைத்து தீர்மானியுங்கள் என்பதே, அவ்வளவுதான். பிறகு நீங்கள் தானாகவே சரியானவற்றுடன் இணைந்து செல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.
'இல்லை' என்று சொல்வது ஒரு எச்சரிக்கையான அடியோ அல்லது உங்கள் காக்கும் தேவதையான ஏதேனும் பாதுகாப்பு சக்தியோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எந்தவிதமான எதிர்ப்பும், முன்கூட்டிய முடிவும் இல்லாமல் வெறுமனே திறந்திருங்கள், அதுவே போதுமானது.
சொல்லுங்கள்...?
ஆனால் ஸ்வாமிஜி, நான் இதுவரையில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொள்வது மட்டுமே அஹங்காரத்தின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொண்டிருந்தேன்!
நீங்கள் இந்தப் பிறவியில் மட்டுமின்றி, பல பிறவிகளாக சேர்த்து வைத்த, விட்டுவிட வேண்டிய வஸ்து, உங்களுக்குள் ஏராளமாக இருக்கிறது. உங்களுக்குள் உங்களுக்கே இடமில்லை.
செயல்படும் நிலையிலுள்ள அஹங்காரத்தைக் கண்டு கொள்வது சுலபம். செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரம் உள்ளவர்கள் ஒருவித ஆணவத்துடன் நடந்து கொள்வார்கள்; அவர்கள் வெளிப்படையாக தனது முக்கியத்துவத்தை நிலை நாட்டிக் கொள்வார்கள்; அவர்கள் மற்றவர்களுக்கு வளைந்து கொடுக்க மாட்டார்கள்; அகந்தையுடன் இருப்பார்கள். ஒரு குருவுக்கு, உண்மையில், இந்த விதமான அஹங்காரத்தைக் கையாள்வது சுலபம். சில முறை வெறுமனே அதன் மீது மோதினாலே, அது உடைந்து விடும்!
ஒரு சின்ன கதை....
ஒருவன் சூதாட்டத்தில் அவனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஏழையாகி விட்டான். ஒரு நாள் அவன் ஒரு சாலையோர கையேந்தி பவனுக்குச் சென்று காலைச் சிற்றுண்டிக்காக ஒரு மேஜையில் அமர்ந்தான். என்ன வேண்டும் என்று கேட்பதற்காக உணவு பரிமாறுபவர் வந்தார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். உணவு பரிமாறுபவர் அவனது பழைய நண்பர்; அவன் முன்பிருந்தது போலவே அவரும் ஒரு பெரிய பணக்காரர். அவன் அவரைப் பார்த்துக் கேட்டான், “நீ இது போன்ற ஒரு உணவு விடுதியிலா பரிமாறுபவராக இருக்கிறாய்?”. அவர் சொன்னார், “நான் பரிமாறுபவராக மட்டும்தான் இருக்கிறேன். இங்கு சாப்பிடுவதில்லை”.
(சிரிப்பு!)
Active¹ and Passive² Ego
செயல்படும்
சாத்வீக
செயல்படும் நிலையிலுள்ள அஹங்காரத்தைக் கண்டு கொள்வது சுலபம். செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரம் உள்ளவன், அவனுடைய மற்ற பாதுகாப்புகளான பணம், சொத்து முதலியவற்றை அவனிடம் இருந்து எடுத்து விட்ட போதிலும், விட்டு விடுதலை விரும்பமாட்டான். செயல்படும் நிலையிலுள்ள அஹங்காரத்தை சுலபமாக வெட்டி சீர் செய்து விட முடியும்.
ஆனால் சாத்வீகமான அஹங்காரம் மிகவும் நுட்பமானது, தந்திரமானது. சாத்வீகமான அஹங்காரம் உள்ளவர்கள், தங்களை மிகவும் பணிவாகக் காட்டிக் கொள்வார்கள்; மக்களை எதிர்கொள்ள தைரியம் அற்றவர்கள்; தனக்குரிய மதிப்பை எடுத்துக் கொள்ள வெட்கப்படுபவர்கள். இதில் மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், அஹங்காரம் இல்லாததால்தான் தாங்கள் இவ்வாறு இருப்பதாக அவர்கள் எண்ணுவது. உண்மை என்னவெனில், மற்றவர்களை விட, ഇവர்களே அதிக அஹங்காரம் உள்ளவர்கள்! இது போன்ற பணிவான விஷயங்களைச் செய்வதன் மூலம், தங்களது அஹங்காரம் புண்பட்டு விடாமல், மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்கிறார்கள்.
உங்களிடம் ஆழமான விழிப்புணர்வும், புரிந்து கொள்ளுதலும் இருந்தால், நீங்கள் உங்கள் அஹங்காரத்தை வெறும் கவனிப்பவராக மட்டுமே இருப்பீர்கள்; மேலும் இந்த நிலையில் தானாகவே நீங்கள் அடக்கத்துடனோ அல்லது அஹங்காரத்துடனோ இருக்க மாட்டீர்கள்; நீங்கள் உங்களுக்குரிய மதிப்பை எடுத்துக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து வெட்கப்பட்டு விலகிச் செல்லவோ மாட்டீர்கள். நீங்கள் இதில் எதுவும் இல்லை என்பதைக் கூட எண்ணவோ அல்லது நிலைநாட்டவோ மாட்டீர்கள்; நீங்கள் வெறுமனே இருப்பீர்கள், அவ்வளவுதான். யாராவது உங்களைப் பாராட்டும் பொழுதோ அல்லது உரிய மதிப்பளிக்கும்
| உங்களுடைய அஹங்காரம் கரைந்துவிடும் பொழுது, நீங்களே இல்லாமல் போய் விடுவதால், வெறுமனே பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் கலந்து விடுகிறீர்கள். |
பொழுதோ, நீங்கள் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று, அதை அத்துடன் விட்டு விடுவீர்கள், அவ்வளவே. மேலும் எதையும் ஒப்பிாடவோ அல்லது உரிமை கொண்டாடவோ வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
அதனால் மிகவும் தெளிவாக இருங்கள்... பெரும் பாலும், மக்கள், செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரம் தான் ஒரே வகையான அஹங்காரம் என்று எண்ணுகிறார்கள். இல்லை. இப்பொழுது நாம் விவாதித்த, சாத்வீகமான நிலையில் உள்ள அஹங்காரம் ஒன்று இருக்கிறது; இதைக் கையாள்வதே மிகவும் கடினமானது.
செயல்படும் நிலையில் உள்ள அஹங்காரத்தை உடைய மக்கள், காய்ந்த கடினமான குச்சியைப் போன்றவர்கள். அவர்களை சுலபமாக உடைத்து விடலாம். சாத்வீகமான நிலையிலுள்ள அஹங்காரத்தை உடையவர்கள், புதியதாகவும் பசுமையாகவும் உள்ள குச்சியைப் போன்றவர்கள். ஒவ்வொரு முறை அவர்கள் அஹங்காரம் அடிபடும் பொழுதும், வளைந்து விடுகிறார்கள்; ஆனால் உடைவதில்லை. அவர்களது அஹங்காரம் மிகவும் நன்றாகப் பாதுகாக்கப்படுவதால், அதனைக் கையாள்வது கடினமாகிறது. உண்மையில், அவர்கள் அதைப் பாதுகாக்க, இனிமையான மற்றும் சாத்வீகமான வழியில், மிகவும் கடினமாகவே உழைக்கிறார்கள். சாத்வீகமான அஹங்காரம் செயல்படும் அஹங்காரத்தை விட மிகவும் ஆபத்தானது.
உதாரணத்திற்கு, இப்பொழுது நீங்கள் என்னுடன் இந்த வகுப்பில் இருக்கிறீர்கள். உங்களுக்குள் நிறைய கேள்விகள் எழும். ஆனால் நீங்கள் அவற்றையெல்லாம் உடனே தன்னிச்சையாக எழுப்பி விடுகிறீர்களா? இல்லை. நீங்கள் அவற்றை உள்ளுக்குள்ளேயே
| எது நீங்கள் இல்லையோ, அதை அழித்து விடுங்கள். |
கையாண்டு இறுதியில் அடக்கி வைத்து விடுகிறீர்கள். நீங்கள் அவற்றைக் கையாள்வதற்குக் காரணம், கேள்விகளைக் கேட்டு முட்டாள்தனமாகத் தோற்றமளித்து விடுவோமோ என்ற அச்சம்தான். முட்டாள் தனமாகத் தோற்றமளிக்க விரும்பாததால் கேட்பதில்லை. உங்கள் அஹங்காரத்தைக் காப்பாற்றிக் கொள்கிறீர்கள். என்னுடைய இருப்பினால், உங்கள் கேள்விகள் தானாகவே கரைந்து விடுமாயின், அது வேறு விஷயம். ஆனால் இது அவ்வாறல்ல.
நீங்கள் உங்களைப் பற்றிய மற்றவர்களின் எதிர்ச் செயல்களிலும், அபிப்பிராயங்களிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறீர்கள். நீங்கள் இத்தனை ஆண்டு காலமாக மிகவும் கவனத்துடன் பேணிக் காத்து வரும் உங்கள் அஹங்காரத்தின் மீது, தழும்பு விழும் துயரத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த அஹங்காரம்தான் உங்கள் ஆதாரமாக இருக்கிறது. அது பலமாகக் குலுக்கப்படும் பொழுது, நீங்கள் ஆதாரமற்றுப் போய் விட்டதாக உணர்கிறீர்கள். அதனால் கீழ்ப்படிவது போன்ற சாக்கில் பேசாமல் இருந்து விடுகிறீர்கள். குருவின் இருப்பில் உங்கள் அஹங்காரத்தை வெளிப்படுத்தும் இன்னொரு வாய்ப்பையும் தவற விட்டு விடுகிறீர்கள். நீங்கள் மலர்தலை நோக்கி இன்னொரு அடி எடுத்து வைக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு விடுகிறீர்கள்.
சாமி ஒன்று சொல்கிறேன்... இறுதியில் எல்லாக் கேள்விகளுமே முட்டாள்தனமானதுதான். சில கேள்விகள் முட்டாள்தனமானவை, மற்ற கேள்விகள் எல்லாம் அறிவுள்ளவை என்று ஒரு கணமும் எண்ணாதீர்கள். ஆழமான புரிந்து கொள்ளுதல் நிகழும் பொழுது, கேள்விகள் தானாகவே கரைந்து விடும். இதுவே உண்மையான ஞானம். எப்படியோ, நாம் நமது அஹங்காரத்தைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்கிறோம்.
நீங்கள் படைக்கும் பொழுது, கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள். கடவுளை படைப்பவர், படைக்கப்பட்டது மற்றும் படைத்தல்.
நாமெல்லாம் நன்றாகப் பேணிக்காக்கும், அஹங்காரத்தின் இன்னொரு விளையாட்டும் இருக்கிறது- அதன் பெயர் சமூக அஹங்காரம்.
இந்த சமூக அஹங்காரம் என்பது என்ன?
உங்கள் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் அந்தரங்கமானது எனவும், அதற்குள் எவரையும் அனுமதிக்கக் கூடாது எனவும் எண்ணுகிறீர்கள்.
உதாரணத்திற்கு, மக்கள் என்னிடம் தங்கள் குழந்தைகளின் தவறான போக்கைப் பற்றி விவாதிக்க வருகிறார்கள். ஆனால் சுற்றி மற்றவர்கள் இருக்கும் பொழுது அவர்கள் இயல்பாக இருப்பதில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் மற்றவர்கள் தெரிந்து கொள்வதை நீங்கள் விரும்புவதில்லை; ஏனெனில் நீங்கள் உங்களைப் பற்றியும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் சமூகத்தின் கண்களில் ஒரு 'தோற்றத்தை¹' உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை அனுமதிப்பீர்களேயானால், நீங்கள் உங்கள் முழு இருப்பையுமே அவர்களுக்கு வெளிப்படுத்தி விட்டதாக உணர்கிறீர்கள். உங்கள் முழுத் தோற்றமுமே சரிந்து விழுந்து விடக் கூடும் என்றும், பிறகு உங்களைச் சமூகத்தில் தாங்கி நிறுத்த எதுவுமே இல்லை யென்றும் அஞ்சுகிறீர்கள். இதுதான் சமூக அஹங்காரம் என்பது.
நீங்கள் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய தோற்றம், உங்கள் அடையாளமாகி விட்ட, உங்களை சமூகத்தில் அடையாளம் காட்டுகிற தோற்றம், ஆபத்தில் இருக்கிறது. அது மற்றவர்களை விட உங்களுக்கே ஒரு பெரிய அடையாளமாக இருக்கிறது! நீங்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களை உள்ளபடியே வெறுமனே காட்ட முடியுமானால், இன்னும் தளர்வாக இருப்பீர்கள்;

ஏனெனில் அப்பொழுது எதையும் மூடி மறைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது.
"ஸ்வாமிஜி, இவைகளை நாங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புவதன் காரணம், மக்கள் இவற்றைப் பற்றி வம்பளக்க ஆரம்பித்து விடுவார்கள்; அதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று நீங்கள் சொல்லக்கூடும். நான் சொல்கிறேன், ஒருவருக்கும் இன்னொருவரைப் பற்றிப் பேசத் தகுதி கிடையாது. அப்படிப் பேசுவார்களாயின், அவர்கள் முட்டாள்கள். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தானாகவே நீங்கள் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் சக்தியும், அவர்களது பேச்சும் வெறுமனே மறைந்து விடும். நீங்கள்தான், உங்களை பாதிக்கும் சக்தியை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள், இல்லையா? இப்பொழுது அந்த சக்தி காணாமல் போய் விடும்.
வெறுமனே ஒரு திறந்த புத்தகம் போல் வாழத் தீர்மானித்து, அதன்படியே வாழுங்கள், அவ்வளவே. உங்கள் தைரியத்தையும், உடல் மொழியையும் பார்த்து மக்கள் தானாகவே உங்களைப் பற்றி வம்பளப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள்! உங்கள் சமூக அஹங்காரத்தை விடுத்து, எந்த விதமான அந்தரங்கமும் இல்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய விடுதலைதான் என்று சாமி சொல்கிறேன்.
நமது சமூக அஹங்காரத்தினால், நாம் எப்பொழுதும் நம்மைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம், மக்கள் எப்பொழுதும் நம்மைப் பார்த்து, நம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதாக, நாம் எண்ணிக் கொண்டு இருப்பதுதான். மிகவும் தெளிவாக இருங்கள்... நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால், மிகவும் அஹங்காரம் உள்ளவர்களாகிறீர்கள். உங்களை ஏதோ பெரிதாக நினைத்துக்
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றிய ஆச்சரியத்தால் நிரம்பியிருப்பீர்களானால், உங்களால் படைக்க முடியும். கொண்டு, எல்லோரது கண்களும் எப்பொழுதும் உங்கள் மீதே இருப்பதாக நினைக்கிறீர்கள். அதனால்தான் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் உங்களை ‘இல்லாதவர்’1 என்று எண்ணும் பட்சத்தில், உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் உங்களை ‘யாரோ’2வாக எண்ணிக் கொண்டிருப்பதால்தான், உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதன் மூலம்தான் நீங்கள் தன்னடக்கத்தைக் காட்டுகிறீர்கள் என்று வேறு நினைக்கிறீர்கள். உண்மையில் இது உங்களுக்குத் துன்பத்தையே அளிக்கிறது என்பதைக் கூட நீங்கள் அறிந்து கொள்ளாத ஒரு விஷயம். நீங்கள் வெறுமனே கண்ணியமாகவும், அடக்கத்துடனும் இருப்பதாகத் தொடர்ந்து நினைக்கிறீர்கள்; அது போன்றே தொடர்ந்து இருந்தும் கொண்டிருக் கிறீர்கள்.
நீங்கள், உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தால்3, வாழ்ந்தும் வாழாமலேயே இருக்கிறீர்கள். அது உங்கள் அழகிற்கும், வசீகரத்திற்கும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதனால் உங்கள் அழகு இயல்பாக வருவதில்லை. விலங்குகளையும் இயற்கையையும் பாருங்கள்; அவை மிக அழகாகவும் தடையற்றும் இசைவாகவும் செல்கின்றன. அது ஏன்? ஏனெனில் அவை தங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதில்லை; அவை வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒன்றாக இருப்பதிலேயே மகிழ்ச்சியடைந்து விடுகின்றன. மக்கள் உங்களை கவனிக்கிறார்கள் என்று எண்ண ஆரம்பித்த கணத்திலேயே, அஹங்காரம் உள்ளே நுழைந்து விடுகிறது; நீங்கள் உங்கள் இயல்பான சுயத்தை4 இழந்து விடுகிறீர்கள்.
| Nobody¹ | Somebody² | Self-conscious³ | Self⁴ |
Nobody¹
Somebody²
Self-conscious³
Self⁴
குழந்தைகள், பெரியவர்களைப் போல் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் விளையாடுவதைப் பார்த்தால் தெரியும்- எல்லாமே மிக அழகாகவும் கள்ளங்கபட மற்றும் இருக்கும். நீங்கள் புகைப்படம் எடுக்கும் பொழுது கூடப் பார்த்திருக்கலாம்- நீங்கள் தெரிந்து நின்று கொண்டு எடுத்த புகைப்படத்தை விட, உங்களுக்குத் தெரியாமலேயே எடுத்த புகைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.
உங்களைப் புகைப்படத்திற்காக நிற்கச் சொன்ன வுடனேயே, நீங்கள் உங்களைப் பற்றி எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள். மக்கள் என்ன சொல்லி தழும்பேற்படுத்தி விடுவார்களோ என்று உங்கள் அஹங்காரம் அஞ்சுகிறது. எப்பொழுதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் அஹங்காரமானது எல்லாவற்றிலும் சாதக பாதகங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது. அது எப்பொழுதும் எல்லாருடைய கண்களுக்கும், அபிப்பிராயங் களுக்கும் மதிப்புக் கொடுத்து தனது சொந்த சுதந்திரத்தை இழந்து விடுகிறது.
நமது தியான வகுப்புகளில்கூட, நீங்கள் பார்த்தீர் களானால், தியான முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்னால், உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கண்கட்டும் துணியினால் உங்கள் கண்களை கட்டிக் கொண்டு விடுமாறு நான் சொல்வேன். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முதலில் மற்றவர்கள் தங்கள் கண்களை ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார்களா என்று பார்க்கிறீர்கள். நீங்கள் தியானக் கூடத்தில் கூட இந்த அளவிற்கு உங்களைப் பற்றிய எண்ணத்தி லேயே இருக்கிறீர்கள். சிலர் தியானங்களைக் கூடச் சரியாகச் செய்வதில்லை; ஏனெனில் தன்னார்வத் தொண்டர்களும், நானும் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறோமே! நீங்கள் தியானங்களை வெறுமனே ஒரு கட்டுப்படுத்தப்பட்ட
| நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு | | :---: | | இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு இழக்கிறீர்களோ, | | அவ்வளவுக்கவ்வளவு அஹங்காரமற்று விடுவீர்கள். |
வகையில் செய்து விட்டு, இறுதியில் இந்த தியான முகாமிற்கு வந்த நோக்கத்தையே இழந்து விடுகிறீர்கள்.
நீங்கள் கணக்குப் பார்ப்பதை நிறுத்தி விட்டு, கள்ளங் கபடமற்றும், திறந்தும் இருக்க ஆரம்பித்தால், எப்பொழுதும் ஆச்சரியத்தாலும், புத்துணர்ச்சியாலும் நிரப்பப்படுவீர்கள். வாழ்க்கை உங்களுக்கு எப்பொழுதுமே ஒருபோதும் மந்தமாகவும், தடையாகவும் இருக்காது.
இன்னொரு விஷயம்... கள்ளங்கபடமற்றவர்கள் யாருக்கும் எந்த விதத் தீங்கும் செய்வதில்லை; ஏனெனில் தீங்கு செய்வதற்கும் திட்டமிட வேண்டும். அவர்கள் அறியாமல் தீங்கு செய்து விட்டால் கூட, மக்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்; ஏனெனில் அவர்களுக்குத் தெரியும், அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தல்ல என்று. அவர்களுடைய உடல் மொழியே, அவர்களது கள்ளம் கபடமற்ற தன்மையை அறிவித்து, அவர்களுக்கு ஆதரவாகவும் நிற்கும்.
சரி... இப்பொழுது... நாம் அஹங்காரத்தின் இன்னொரு முக்கிய வடிவத்தைப் பார்ப்போம் - இது கல்வியறிவினால் வரும் அஹங்காரம்.
நீங்கள் வளர வளர, கலந்து பழகுவதன் மூலம் மக்களைப் பற்றிய தீர்மானங்களையும், புனித நூல்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் தகவல்களையும் சேகரிக்கிறீர்கள். இந்த இரண்டும் சேர்ந்து உங்கள் மொத்த மன அமைப்பையும் நிர்ணயிக்கிறது. பிறகு, நீங்கள் பார்க்கும் எதையும், இந்த மன அமைப்பின் வழியாகவே பார்க்கிறீர்கள்.
நீங்கள் பார்க்கும் எதுவும், நீங்கள் ஏற்கனவே இயற்றிய தீர்மானங்களுக்கு, ஒரு வெறும் ஆதரிக்கும் வாதமாகவே ஆகிவிடும்.
| நீங்கள் எந்த அளவிற்கு அஹங்காரமற்று இருக்கிறீர்களோ, | | அந்த அளவிற்கு உங்களை இந்தப் பிரபஞ்ச | | இருப்புத் தன்மைக்கு இழந்து விடுவீர்கள். |
நீங்கள் கிட்டத்தட்ட ஒரு சவம் போல இருக்கிறீர்கள்! உங்களிடம் வளர்வதற்கு இடமேயில்லை. நீங்கள் எப்பொழுதும், நீங்களே வண்ணம் பூசிய, ஒரு குறிப்பிட்ட வண்ணக் கண்ணாடியின் வழியாகவே பார்க்கிறீர்கள்! இதனால், அற்புதங் கள் நிரம்பிய இந்த உலகில், நீங்கள் எவ்வளவு இழக்கிறீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.
ஒரு சின்ன கதை....
ஒருவன், தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்... "உனக்குத் தெரியுமா, உண்மையிலேயே நானே என்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டு விட்டேன்". நண்பன் கேட்டான், "ஏன், என்ன நடந்தது?". அவன் சொன்னான், "நான் என் வீட்டில் பத்து விரிசல் விட்ட ஜன்னல் கண்ணாடிகளை மாற்றினேன்; பிறகுதான் தெரிந்தது விரிசல் என் மூக்குக் கண்ணாடியில் என்று!".
நாம் ஒரு க்ஷணம் வெறுமனே உள்ளே பார்த்தோமானால், நாம் பார்க்கும் அனைத்திலும் பொதுவாக இருப்பது 'நாம்' தான் என்பதைப் புரிந்து கொள்வோம். ஆனால், எப்படியோ, நாம் ஒரு போதும் உள்ளே பார்க்க விரும்புவதில்லை. நமக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுகிறோம்; அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. லோகாயதமான கல்வியறிவு நாம் வளர்ச்சியடைவதற்கு வெறுமனே ஒரு வாய்ப்பு கொடுப்பதில்லை.
இதில் மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் என்னவெனில், நீங்கள் உங்கள் கல்வியறிவுடன் திடமாகி விட்டதாக எண்ணுகிறீர்கள். உங்கள் கல்வியறிவின் பண்பினாலேயே நீங்கள் ஒரு திடமான குணத்தை அடைந்து விட்டதாக எண்ணுகிறீர்கள். ஆனால், உங்கள் இருப்புத் தன்மையின் மீது நீங்கள் ஒரு சுமையாகி விட்டதைத் தவிர வேறெதுவுமில்லை என்பதை நீங்கள் அறியவில்லை.
உங்களுடைய அஹங்காரத்தைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையும், அது இப்பொழுது நீங்கள் இருப்பதைவிட ஆனந்தமயமானது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை.
உங்கள் இருப்புத்தன்மை, ஒரு நதியைப் போல இருக்கிறது; ஆனால், நீங்கள் பெயரளவிலான கல்வியறி வினால் அதைத் தேங்கி நிற்கும்படி செய்து விட்டீர்கள். உங்கள் வழியில் வரும் கல்வியறிவை எவ்வாறு விட்டுவிட்டு ஒரு குழந்தை போல வாழ்வது, தன்னிச்சையாக சென்று கொண்டு இருப்பது என்பதை அறிந்து கொள்வதிலேயே உண்மையான அறிவு அடங்கியிருக் கிறது. நீங்கள் அஹங்காரத்தில் இருந்து தன்னிச்சை நிலைக்குச் செல்ல வேண்டும்.
நாம் அனைவரும், நம் வாழ்க்கையில் பார்த்த அனைத்தை யும் வகைப்படுத்தி, முத்திரை குத்தத் தயாராக இருக்கிறோம். இதில், வாழ்க்கையில் இருந்து வெறுமனே தன்னிச்சையான இயல்பைக் களவாடி விட்டோம். நாம், நமது வழியில் வரும் மக்கள், இடங்கள், சூழ்நிலைகள், அனைத்தையுமே வகைப்படுத்தி விடுகிறோம்.
ஒரு சின்ன கதை...
ஒருவன் திரைப்படம் பார்ப்பதற்கு திரையரங்கத்திற்குச் சென்றான். படம், அதைத் தயாரித்த ஒரு புகழ் பெற்ற சர்வதேச படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைப்புடன் துவங்கியது. அவன், "ஒ! இந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன்!", என்று அவனுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, எழுந்து சென்று விட்டான்.
(பலத்த சிரிப்பு!)
அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் எல்லாப் படமுமே அந்தக் குறிப்பிட்ட படப்பிடிப்பு நிலையத்தின் முத்திரை யுடன்தான் வரும்; ஆனால், அவனோ அதைப் பார்த்தவுடன் அந்தப் படத்தைத் தான் ஏற்கனவே பார்த்து விட்டதாக முடிவு செய்து விட்டான்! அவன் வெறுமனே தவறவிட்டு விட்டான், அவ்வளவுதான்!
நாமனைவரும், முக்கியமாகப் பெரியவர்கள், இவ்வாறுதான் இருக்கிறோம். குழந்தைகள் அவ்வாறு அல்ல. அவர்கள்
அஹங்காரமே உங்கள் உயிர் ஆதார வஸ்துவாக இருக்கிறது. ஆனால் எளிமையான உண்மை என்னவெனில்... நீங்கள் அதை விட்டுவிட வேண்டியதுதான்.
எல்லாவற்றையும் புதியதாகப் பார்க்கிறார்கள். அவர்கள் முழுமையாக உயிர்ப்புடன் இருக்கிறார்கள்; நம்மைப்போல் நடைப்பிணங்களாக அல்ல.
நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், குழந்தைகளை வெறுமனே கவனியுங்கள்; அவர்கள் எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் கடற்கரைக்குச் சென்றால், அதை ஏற்கனவே அறிந்ததாக எண்ணுகிறீர்கள். இயற்கையின் இணையற்ற அழகும் புத்துணர்ச்சியும் கூட உங்கள் நிறமேற்றப்பட்ட கண்ணாடியின் வழியாகத்தான் வருகிறது. உங்களால், உங்கள் கண்ணாடியை விட முடியவில்லை. கடற்கரை வெறுமனே, உங்கள் பெயரளவிலான கல்வியறிவைப் பலப்படுத்தும், இன்னொரு இடமாகி விடுகிறது. நான் சொல்கிறேன்... உங்களால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியவில்லை என்று நீங்கள் எண்ணுவீர்களானால் அது உங்கள் மனத்தினாலும், திடமான அஹங்காரத்தினாலும் தான்; வாழ்க்கை அற்புதமாக இல்லை என்பதனால் அல்ல.
ஒருவன் விடுமுறைக்கு ஸ்விட்சர்லாந்து சென்று, ஒரு மாதத்திற்குப் பிறகு திரும்பி வந்தான். ஒரு நாள் மாலை அவனது நண்பனைச் சந்தித்தான்; அவனுடன் வெளியே உணவருந்தலாம் என்று தீர்மானித்தான். நண்பன் அவனிடம் கேட்டான், "ஸ்விட்ச ர்லாந்தில் அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்தாயா?". அவன் பதில் சொன்னான், "ஆம்.. ஒரு மாதிரி... ஆனால் வழியில் குறுக்கே ஒரே மலைகளாக வந்து கொண்டிருந்தன".
(பலத்த சிரிப்பு!)
நாம் மிகவும் உணர்ச்சியற்று இருக்கிறோம்; இயற்கையிலிருந்து வெகு தூரம் தள்ளியிருக்கிறோம். நம்மைச் சுற்றி அழகு கொட்டிக் கிடக்கிறது; ஆனால், நமக்கு அனுபவிக்கும் திறன் இன்மையால், அனுபவிக்க ஏதுமில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய இருப்புத்தன்மைக்கு என்னைத் தெரியும். ஆனால் உங்கள் மனம்தான் தடையாக இருக்கிறது. அனுபவிக்கும் திறன் உங்களிடம்தான் இருக்கிறது. வெளியே எதன் மீதும் பழி போடாதீர்கள். குழந்தையாக இருந்த பொழுது, உங்களைச் சுற்றியிருந்த அனைத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தீர்கள். அதன் பிறகு என்னவாயிற்று? நீங்கள் கடுமையாகி, எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதையே மறந்து விட்டீர்கள். உங்களுடைய பெயரளவிலான கல்வியறிவினால் மந்தமாகி விட்டீர்கள்.
நான் முன்பே சொன்னதுபோல், "ஸ்வாமிஜி, எவ்வாறு நீங்கள் இவ்வளவு அறிவுடன் குழந்தை போலவும் இருக்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு நகைச்சுவை சொல்லும் பொழுதும், உடனே வெகு இயல்பாகச் சிரிக்கிறீர்கள்; நாங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! நீங்கள் ஒரு நகைச்சுவையைச் சொல்ல ஆரம்பிக்கும்பொழுதே, சில சமயங்களில் நாங்கள் அதை முன்பே கேட்டிருப்பதால் சிரிப்பதில்லை; ஆனால், நீங்களோ அதை வேறு யாரோ முதன் முறையாகவே சொல்வது போல் மிகவும் ரசிக்கிறீர்கள்!" என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.
பாருங்கள், உங்களுடைய தன்னிச்சையான இயல்பையும், மகிழ்ச்சியை அனுபவிக்கும் திறனையும் இழந்து விட்டீர்கள் என்று நான் சொல்வது இதைத்தான். உங்களுடைய கல்வியறிவினால், நீங்கள் 'எல்லாம் தெரியும்' என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள்.
இப்பொழுது இதைச் சொல்லி விட்டதால், நான் பேசும் பொழுது அடிக்கடி சொல்லும், இப்பொழுது நினைத்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும், ஒரு கதையையும் சொல்லி விடுகிறேன்!
தமிழ்நாட்டில் கிராமங்களில் வருடாவருடம் கோயில்களில் திருவிழா நடக்கும். அப்பொழுது திறந்த வெளியில் தற்காலிகமாக
அன்பு உங்கள் இதயத்தில் இருந்து வருகிறது. ஆனால் பயமோ உங்கள் மனதில் இருந்து வருகிறது. மேடை அமைத்து, புகழ்பெற்ற நாடகக் குழுக்கள், பெரும்பாலும் ஹிந்து இதிகாச புராணங்களான மஹாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் இருந்து காட்சிகளை நாடகமாகப் போடுவார்கள். நான் சென்று அவற்றைப் பார்ப்பது வழக்கம்.
அது போன்ற ஒரு சமயத்தில், மஹாபாரதத்தில் இருந்து துச்சாதனன் திரௌபதியின் துகிலை உரிவதையும், இறுதியில் கிருஷ்ணன் காப்பாற்றுவதையும் காட்சியாக நடித்துக் கொண்டிருந்தார்கள். திரௌபதியின் பாத்திரத்தை ஒரு ஆணே புடவையணிந்து நடித்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய திட்டப்படி, திரௌபதி ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு புடவைகள் அணிய வேண்டும்; துச்சாதனன் அவற்றை ஒவ்வொன்றாக உருவும் பொழுது கவனமாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஏழாவது புடவை வந்தவுடன், திரௌபதி கிருஷ்ணனை நோக்கி அபயக்குரல் எழுப்ப வேண்டும்; அப்பொழுது கிருஷ்ணன் தோன்றுவார். எப்படியோ, திரௌபதி வேடம் போட்டவர் அணியும் பொழுது தவறுதலாக ஒரு புடவையை விட்டுவிட்டு, ஆறு புடவைகளையே அணிந்திருக்கிறார். மேடையில், துச்சாதனன் புடவைகளை இழுக்க ஆரம்பிக்க, ஆறாவது புடவையை இழுக்கும் பொழுதுதான் திடீரென்று திரௌபதிக்குத் தான் செய்த தவறு புரிந்தது! அவர் துச்சாதனனைப் பார்த்து. “ஏய் விடுறா ஏய் விடுறா!” என்று கத்த ஆரம்பித்தார். ஆனால் துச்சாதனனோ, திரௌபதி தனது பாத்திரத்தை மிகவும் அருமையாக நடிப்பதாக நினைத்து தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தான்! இறுதியில், திரௌபதி மேடையில் வெறும் அரை டராயருடனும், இரவிக்கையுடனும் பெண் வேடத்தில் நின்று கொண்டிருந்தார்! ஆனால் அவருடைய சமயோசித புத்தியால், “ஏ கிருஷ்ணா! நீதான் எவ்வளவு கருணையுள்ளவன்; அவமானத்திலிருந்து காப்பதற்காக என்னையே ஆணாக மாற்றி விட்டாயே!” என்று கதறினார். (பரமஹம்ஸர் இதைச் சொல்லும் பொழுது குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்!) அந்தக் காட்சியை இப்பொழுது நினைத்தால் கூட, என்னால் சிரிக்காமல் இருக்க முடியாது!
அதனால் புரிந்து கொள்ளுங்கள்... கல்வியறிவு1 இருக்கட்டும்; ஆனால் அதனால் நீங்கள் இறுகி திடமாகி விடாதீர்கள். உங்களுடைய உள்ளார்ந்த இயல்பு ஒரு நதி போன்றது - பிரவகித்துக் கொண்டே இருப்பது. தன்னிச்சையான இயல்பே உங்கள் இயற்கை. பெயரளவிலான கல்வியறிவினால் நீங்கள் அதை விட்டு வெகுதூரம் தள்ளிச் சென்று விட்டீர்கள். நீங்கள் கள்ளம் கபட மற்று வாழ்வீர்களானால், உங்களுக்கு ஒரு புதிய உலகம் திறக்கும்.
ஒவ்வொரு கணத்தையும் வெறுமனே திறந்த நிலையில் எதிர்கொள்ளுங்கள். எதைப் பற்றியும் முன்கூட்டிய கருத்துக்களை வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இது போன்று வாழ்ந்தீர்களானால், எதுவுமே உங்களுக்கு அலுப்பைத் தராது. அப்பொழுது, நீங்கள் தினசரி உடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் மனைவி கூட புதியவராகவும், புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அளிப்பவராகவும் இருப்பதைக் காண்பீர்கள்.
இதுவே உங்கள் மனோபாவமாகி விடும் போது, மற்றவரும் உங்கள் திறந்த தன்மையை உணர்ந்து, பல மகிழத்தக்க வழிகளிலும் அவரும் உங்களிடம் திறந்த தன்மையுடன் இருக்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. பிறகு, இது நீங்கள் ஒவ்வொரு கணமும் புத்துணர்ச்சியில் இருந்து புத்துணர்ச்சிக்கே செல்லும் ஒரு நேர்மறைச் சுழற்சியாகி விடும். பின்னர் எங்கும் புத்துணர்ச்சி மட்டுமே இருக்கும்; எதுவுமே சுவாரஸ்யமற்றிருக்காது!
நீங்கள் அஹங்காரத்துடன் வாழும் பொழுது, உங்களைச் சுற்றி எப்பொழுதும் சில உடமைகள், சில ஆதரவுகள், சில மனிதர்கள் என்று ஏதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ஆதரவுகளே உங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறது.
Knowledge¹
Knowledge
அவை இல்லாவிடில், நீங்கள் ஒரு ‘இல்லாதவராகி¹’ விடுவீர்கள். ஒரு அரசன், அவனது இராஜ்ஜயம் இருந்தால் மட்டுமே அரசனாக இருக்க முடியும். இன்னொரு பக்கம், ஒரு பரமஹம்ஸருக்கோ எதுவும் தேவையில்லை; அவர் கால்களை நீட்டினால் உறங்கு கிறார், கைகளை நீட்டினால் உண்கிறார்! அவர் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக் கிறார். தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவான அவர் தானே தனக்கு அரச னாக இருக்கிறார். அவருக்கு எந்த இராஜ்ஜியமும் தேவையில்லை!
ஆனால் நீங்கள் ஒரு பரமஹம்ஸராகி விடும் பொழுது, உங்களைச் சுற்றி தானாகவே ஒரு பெரிய இராஜ்ஜயம் உருவாகி விடும்; ஆனால் நீங்கள் அதனால் தொடப்படவோ, கறைபடவோ மாட்டீர்கள். பலவீனமானவர்கள் மட்டுமே தங்களுக்காக ஒரு இராஜ்ஜயத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களது ஆதரவையும், பலத்தையும் அதிலிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கே அவர்களைத் தாங்கிப் பிடிக்க அந்தஸ்தும், அஹங்காரமும் தேவையாக இருக்கிறது. ஒரு பரமஹம்ஸருக்கோ, அவரது நிலையே அவருக்கு எல்லாவற்றையும் செய்து விடும்; அவரைச் சுற்றியுள்ள அந்தஸ்தால் அவர் தொடப்படுவதேயில்லை.
நீங்கள் உடமைகளைத் தேடுவதன் காரணம், அதுவும் இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் வெறுமையாகவும், சலிப்பாகவும் இருப்பதாக நீங்கள் எண்ணுவதுதான். வாழ்க்கை மிகவும் அலுப்பாக இருப்பதாக நீங்கள் எண்ணுவதற்குக் காரணம், நீங்கள் எப்பொழுதும் அற்புதங்களைத் தேடிக் கொண்டிருப்பதுதான். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மிகப்பெரிய அற்புதங்கள் ஒவ்வொரு கணமும் உங்கள் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
Nobody¹ ஆனால் நீங்கள் உங்கள் அஹங்காரத்துடன் வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பதால், அதைத் தவறவிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் சொந்த உடலே ஒரு அதிசயம்தான். அது மனிதனால் எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடிந்த தலைசிறந்த கணினியை விட மிகச் சிறப்பு வாய்ந்தது. உங்கள் உடலில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்களும்1, ஒருமித்து நிகழும்2 ஆயிரக்கணக்கான செயல்பாடுகளுமே பூமியில் மிகச் சிறந்த அதிசயங்கள். எவ்வாறு உங்கள் மனதை விட்டுவிட்டு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து வாழ்வது என்பது தெரிந்தால், நீங்கள் அதிசயங்கள் என்ற பெயரில் தேடுவது பிரபஞ்ச இருப்புத்தன்மையில் நிகழும் இயல்பான ஒருமித்த நிகழ்வுகளைத் தவிர வேறல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் அஹங்காரமே இவற்றை வெறும் சாதாரண விஷயங்களாகப் பார்க்க வைத்து விடுகிறது, அவ்வளவே. உங்கள் கல்வியறிவு எப்பொழுதும் விஷயங்களைக் கூறு போட்டு, ஆராய்ந்து அலுப்பைத் தரும் தர்க்கமாகக் குறைத்து விடுகிறது.
சொல்லுங்கள்...?
ஸ்வாமிஜி, நாங்கள் இந்த விஷயங்கள் தெரிந்தும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்?
ஆம்...இது ஒரு நல்ல கேள்வி! இன்பமாக வாழும் தேர்வு நம்மிடம் இருக்கும் பொழுது, நாம் ஏன் துன்பத்தைத் தேர்வு செய்கிறோம்...?!
பாருங்கள், உண்மையிலேயே உங்கள் உண்மையான அடையாளமான, உங்கள் இருப்புத் தன்மையைப் பற்றியே, உங்களுக்குத் தெரியாது. காலப்போக்கில், நீங்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து, உங்களுக்கென்று ஒரு போலியான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு விட்டீர்கள்.
Cells¹ Synchoronous²
Cells
Synchoronous
இந்தப் போலியான அடையாளத்துடன், உங்களால் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இந்தப் போலியான அடையாளம் தான் உங்கள் அஹங்காரம். அது முழுவதும் மற்றவர்களால் உங்கள் மீது ஒட்டப்பட்ட முத்திரை குத்தப்பட்ட சீட்டுகளால் ஆனது. உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாது.
'நீங்கள் யார்' என்று நான் கேட்பதாக வைத்துக் கொண்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? 'நான் இன்னாரின் தந்தை' அல்லது 'நான் இன்னாரின் சகோதரி' அல்லது 'நான் ஒரு மருத்துவர்' என்று இவ்வாறு ஏதாவது சொல்வீர்கள். ஆனால் இவைகளெல்லாம் என்ன? இவையெல்லாம் உங்கள் உறவுமுறைகளும், தொழிலும் தான். நீங்கள் உங்கள் தந்தைக்கு மகள், உங்கள் கணவருக்கு மனைவி, உங்கள் குழந்தைகளுக்குத் தாய் இவ்வாறு... நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு இவைகளாக இருக்கிறீர்கள். அப் பொழுது, உங்களுக்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
நீங்கள் தற்சமயம் உறவு முறைகளிலும், தொழிலிலும் தான் இருக்கிறீர்கள். உங்கள் அஹங்காரம் இதிலிருந்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அடையாளமும் இதன் வழியாகவே ஏற்படுகிறது. அதனால்தான் உங்கள் அடையாளத்தை இழந்துவிடும் அபாயம் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. அது மனிதனால் செய்யப்பட்ட வலுவற்ற ஒரு விஷயமாதலால், எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விடக் கூடியதுதான். அதனால்தான் நீங்கள் அதனைப் பராமரிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.
உண்மையிலேயே உங்கள் உள்ளார்ந்த தன்மை 'தனிமை'தான். உங்கள் தாயின் கருப்பையில் தனிமையில் தான் இருந்தீர்கள். உண்மையில் நீங்களே உங்களுக்குப் போதும். இதுவே உங்கள் தனித்தன்மை. காலப்போக்கில்
| நீங்கள் பார்ப்பது எல்லாவற்றையும் | | எடை போடுவதை நிறுத்துங்கள். |
இந்தத் தனித்தன்மை உங்கள் புறத்தன்மையால் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. தனித்தன்மை இயல்பானது; புறத்தன்மை சமூகத்தால் ஆனது.
அது எவ்வாறு இருக்கிறதென்றால்... ஒரு பார்சல் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறது; ஒவ்வொரு இடத்திலும் அதன் மீது வெவ்வேறு விவரங்கள் முத்திரை குத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்தப் பார்சலானது இந்த முத்திரைகள் அல்ல; அதன் உள்ளிருக்கும் வஸ்துதான், இல்லையா? அதே போல், நீங்களும் மக்கள் உங்கள் மீது குத்திய முத்திரைகள் அல்ல; உங்களுக்குள் இருக்கும் வஸ்துதான்.
எப்படியோ, காலப்போக்கில், உங்கள் அஹங்காரம் இந்த முத்திரைகளின் மீது கட்டமைக்கப்பட்டு, அதற்கு மேலும் மேலும் உணவளிக்க மக்கள் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் உங்களால் முழுவதுமாக தனிமையில், உங்களுடனேயே, இருக்க முடியவில்லை என்பதைக் கவனியுங்கள். நீங்கள் உங்களுடன் மட்டுமே இருக்கும் பொழுது, உங்கள் அஹங்காரத்திற்கு உணவளிக்கும், மற்றவர்களின் குரல்களைச் கேட்க முடிவதில்லை. உங்கள் அஹங்காரம் உணவளிக்கப் படாததாக உணர்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? குறைந்தபட்சம் தொலைக்காட்சியையாவது போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள்!
ஒரு சின்ன கதை...
ஒரு பாரம்பரியம் மிக்க அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவன் இறந்து கொண்டிருந்தான். அவன் சாகும் தருவாயில் எதிர்க்கட்சிக்கு மாறி விட்டது, அவனுடைய நண்பர்களுக்குத் தெரிய வந்தது. வியப்படைந்த அவர்கள், ஏன் அப்படிச் செய்தான் என்று
எடை போடும்பொழுது நீங்கள் என்ன இருக்கிறதோ, அதைப் பார்ப்பதில்லை. எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே பார்க்கிறீர்கள். அவனிடமே கேட்டனர். அவன் பதிலளித்தான், "ஓ! அவர்களில் ஒருவர் சாகட்டுமே என்றுதான்!".
(சிரிப்பு!)
நமது போலி அடையாளம் அவ்வளவு உறுதியானது! நம்மை வேறு எதையும் பார்க்க விடாமல் நமது கண்களைக் குருடாக்கும் அளவிற்கு அது நமக்கு திடமான உண்மையாகி விட்டிருக்கிறது. இறக்கும் சமயத்தில் கூட, நமது கௌரவத்தை விடுவது நமக்குக் கடினமாக இருக்கிறது! நாம் விழிப்பின்றியே வாழ்ந்தும், இறந்தும் விடுகிறோம்.
உங்களுடைய ஒரே பிடிமானமான புறத் தன்மையை இழந்து விடும் அச்சமே, நீங்கள் நடந்து கொள்ளும் விதத்திற்குக் காரணம். அதனால்தான் நாம் இதை அஹங்காரத்தின் விளையாட்டு என்கிறோம். மொத்த ஆன்மீகமுமே எல்லாம் இந்த புறத்தன்மையையும், போலி அடையாளத்தையும் இழப்பது பற்றித்தான்.
இது, நீங்கள் ஈடுபடுவதற்கும், நம்புவதற்கும் பதிலாக கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது நிகழும். கவனிக்க ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் பார்சலுக்குள் உள்ள வஸ்துதான் என்றும், அதன் மேல் உள்ள பெயர்களோ அல்லது முத்திரைச் சீட்டுக்களோ அல்ல என்பதையும் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்குள் இந்த விழிப்புணர்வு வரும் பொழுது, நீங்கள் உரையோ, பிரசங்கமோ, போதனையோ, உபதேசமோ செய்யத் தேவையில்லை.
சொல்லுங்கள்...?
ஸ்வாமிஜி, எங்கள் குருவான உங்களிடம் நாங்கள் சரணடைந்தால், எங்கள் அஹங்காரத்தை நீங்கள் கவனித்துக் கொள்வீர்களா?
முதலில், நீங்கள் உண்மையிலேயே சரணடைந்து விட்டால், ஞானமடைந்து விடுவீர்கள். 'நான் சரணடைந்தால்' என்பது போன்ற
குரு - சிஷ்ய உறவே உங்கள் அஹங்காரத்தை இழப்பதற்காகத்தான்.
கேள்விக்கே இடமில்லை. எப்படியோ ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால், என்னை உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல நீங்கள் அனுமதிப்பதாகத் தீர்மானித்துவிட்டால், நீங்களாகவே அதை முழுமையாக இழந்து ஞானமடையும் வரை, நான் அதை வெட்டிச் சீர்படுத்தி ஒரு போன்சாய்1 மரம் போல செய்து வைத்திருப்பேன்.
உங்கள் தொழிலை நடத்தவும், தினசரிச் செயல்களைச் செய்யவும், மற்றவர்களையும் உங்களையும் புண்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் தேவையான அஹங்காரம் மட்டுமே இருக்கும். உங்கள் அஹங்காரம், இனி வளர முடியாத, வறுக்கப்பட்ட விதையைப் போலாகி விடும்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... இன்னும் ஞானமடையாத மனிதனிடம், அஹங்காரமானது ஏதோ ஒரு வழியில் இருந்து கொண்டுதான் இருக்கும். அது செயல்படும் அஹங்காரமோ அல்லது சாத்வீகமான அஹங்காரமோ எதுவாயினும், நீங்கள் எந்த அளவிற்குப் கவனிப்பவராகத் தொடங்குகிறீர்களோ, உங்கள் அஹங்காரம் அந்த அளவிற்குக் கரையும். இப்பொழுது இந்தப் புரிந்து கொள்ளுதல் போதுமானது
சாதாரண மக்களிடம், உங்கள் அஹங்காரத்தை சுலபமாக மறைத்துக் கொண்டு சென்று விடலாம். ஆனால் ஒரு குருவை உங்களால் ஒரு போதும் ஏமாற்ற முடியாது. வேண்டுமானால் அவரை ஏமாற்றி விட்டதாக ஒரு எண்ணத்தை வைத்துக் கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் அஹங்காரத்தையும், தந்திரத்தையும் எவ்வளவுதான் ஆழமாக மறைந்து, நன்றாக மூடி வைத்துக் கொண்டாலும், குருவின் கூர்மையான பார்வையில் அவை வெறுமனே வெளிப்பட்டுவிடும். நீங்கள் அதை மறைக்கப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, குரு அதை குணப்படுத்த முயற்சி செய்கிறார்.
Bonsai- பெரிய மரங்களை மிகச் சிறிய அளவில் வளர்க்கும் ஒரு ஜப்பானியக் கலை
அஹங்காரம் எத்தகைய அழிவை ஏற்படுத்தும் கொடிய வியாதியென்பதை அவர் மட்டுமே அறிவார்.
நான் பகவத் கீதையில் இருந்து சில விஷயங்களைச் சொல்கிறேன். கிருஷ்ணருடைய, உலகிற்கான உபதேசமே பகவத் கீதை.
பகவத் கீதையின் துவக்கத்தில், அர்ஜுனன் குழப்பத்தில் இருக்கிறான். அவன் சொல்கிறான், “ஓ பிரபுவே! எனக்கு வாழ்க்கையில் என்ன செய்வதென்று தெரியவில்லை, தயேகூர்ந்து என்னை வழிநடத்திச் செல்லுங்கள்”. கிருஷ்ணர் அவனுக்கு, ஆத்மனை அடையும் வழியான, சாங்கிய யோகத்தை விளக்குகிறார். பிறகு கர்ம யோகத்தையும், பக்தி யோகத்தையும், கர்ம ஸந்யாச யோகத்தையும், ஞான கர்ம ஸந்யாச யோகத்தையும், ராஜ வித்யா யோகத்தையும், இவ்வாறு பல யோகங்களையும் விளக்குகிறார். அவர் 18 அத்தியாயங்களில், 700 சுலோகங்களில் பல்வேறு தியான முறைகளையும் விவரிக்கிறார். இறுதியில் அர்ஜுனன் சொல்கிறான், “கிருஷ்ணா, நீங்கள் விளக்க ஆரம்பித்த பொழுது இருந்ததை விட இப்பொழுது மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். நான் எந்த முறையைப் பின்பற்றுவது? எந்த முறை மிகவும் சிறந்ததும், விரைவானதும்? எது சுருக்கு வழி-இறுதியான முறை?”. கிருஷ்ணர் இதற்கு இறுதியான 18-ம் அத்தியாயத்தில் பதிலளிக்கிறார்.
எந்த குருவுடனும், அவர் முடிவாகச் சொல்லும் வார்த்தைகளே, கடைசியானதும், உறுதியானதும், இறுதியான உண்மையுமாகும். கிருஷ்ணர் சொல்கிறார், “சர்வதர்மன் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வ சர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”. அவர் சொல்லும் இந்த வரிகள் எது போன்றவை என்றால், எல்லா மதங்களையும், தத்துவங்களையும், ஆன்மீக நூல்களையும் ஒரு பானைப் பாலாக நாம் கற்பனை செய்து கொண்டால்,
அஹங்காரம் தன்னை பலவழிகளிலும் வெளிப்படுத்திக் கொள்கிறது. நாம் ஒவ்வொரு நிமிடமும் அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இது அவை எல்லாவற்றிலும் இருந்து கடைந்து எடுக்கப்பட்ட அவற்றின் சாரமான வெண்ணெயாகும். அவர் சொல்கிறார், “நான் உனக்கு எல்லாவிதமான நீதிகளையும் விளக்கி விட்டேன். எல்லாவற்றையும் வெறுமனே என்னிடம் சரணாகதி செய்து விடு. என்னிடம் சரணடைந்து விட்டால் நானே உன்னை கவனித்துக் கொள்கிறேன். நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவித்து உனக்கு புக்தியளிக்கிறேன்”.
கிருஷ்ணர் சுலோகத்தின் இந்தப் பத்தியில் உண்மையிலேயே அற்புதமான ஒரு உறுதி மொழியை அளிக்கிறார். இந்தப் பத்தியின் வாயிலாக, கிருஷ்ணர் உலகிற்கு சரணாகதியே முடிவான, உறுதியான, இறுதியான முறையாகும் - அஹங்காரமற்ற நிலைக்கும், மோக்ஷத்திற்கும் சுருக்கு வழியாகும் என்பதைக் காட்டுகிறார்.
கிருஷ்ணரையும் அர்ஜூனனையும் பற்றி இன்னொரு அருமையான கதை இருக்கிறது...
ஒரு மாலையில், கிருஷ்ணரும் அர்ஜூனனும் ஒன்றாக அமர்ந்து அளவளாவிக் கொண்டு இருந்தனர். திடீரென்று கிருஷ்ணர் ஒரு காகத்தைச் சுட்டிக் காட்டிச் சொன்னார், “அர்ஜூனா, அந்தக் கருப்புக் காகத்தைப் பார்!”. அர்ஜூனன் அந்தத் திசையில் பார்த்துச் சொன்னான், “ஆமாம் கிருஷ்ணா, நான் பார்க்கிறேன்!”. சில நிமிடங்கள் கழித்து, கிருஷ்ணர் ஆச்சரியத்தில் கத்தினார், “அர்ஜூனா, அந்தப் பச்சைக் காகத்தைப் பார்!”. அர்ஜூனன் செ ான்னான்,” ஆம் கிருஷ்ணா, நான் பார்க்கிறேன்!”. கிருஷ்ணர் வெறுமனே அர்ஜூனனைச் சோதிப்பதற்காகக் கேட்டார், “அர்ஜூனா, நீ எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறாய்! எங்காவது பச்சைக் காக்கை இருக்கிறதா? நீ எவ்வாறு அதைப் பார்த்திருக்க முடியும்?”. அர்ஜூனன் சொன்னான், “கிருஷ்ணா, நீ அதைப் பச்சைக் காக்கை
நீங்கள் முகமூடிக்கும் அப்பால் ஏதோ ஒன்றாக இருக்கிறீர்கள் என்பது தெரிந்தால்தான் உங்களால் ரசிக்க முடியும். என்று சொன்ன பொழுது, நான் அதைப் பச்சைக் காக்கையாகவே பார்த்தேன்!".
அர்ஜுனனுடைய புலன்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்து விட்டன. குருவிடம் புலன்களைச் சரணாகதி செய்வதே, எக்காலத்திலும் மிகவும் கடினமான செயலாகும். குரு பிரபஞ்ச இருப்புத் தன்மையேதான்; அவர் உருவத்தில் இருப்பினும் உருவமற்றவர். உங்களுடைய புலன்கள் எப்பொழுது குரு சொல்வதை மட்டுமே உணர்கிறதோ, அப்பொழுது நீங்கள் சரணாகதியில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள்.
சரணாகதி என்பது என்ன? சரணாகதி என்ற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டது. நாம் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையாயின், தவறாகப் புரிந்து கொண்டு விடுவோம்! ஒரு மோசமான தவறைச் செய்து விடுவோம். ஆழமான உண்மைகளைத் தவறாகப் புரிந்து கொண்டு விடுவோம்.
ஒரு சின்ன கதை...
ஒரு இரவில், இரண்டு குடிகாரர்கள் தெருவில் ஒரு ஹேலஜன் விளக்கைக்கடந்து சென்று கொண்டு இருந்தனர். ஒருவன் அதைப் பார்த்து ஆச்சரியத்தில் கத்தினான், "பார், நமக்காக சூரியன் வந்திருக்கிறது!". மற்றவன் சொன்னான், "இல்லை, இது இரவு நேரம், அது சந்திரன்!". முதலாமவன் தொடர்ந்தான், "அது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் சூரியன்தான்". அப்பொழுது மூன்றாவதாக ஒரு குடிகாரன் அவர்களைக் கடந்து சென்றான். அவர்கள் அவனிடம் கேட்டனர், "ஐயா, தயவு செய்து சொல்லுங்கள், இது சூரியனா அல்லது சந்திரனா?". அவன் சொன்னான், "நான் இந்த ஊருக்குப் புதுசு; எனக்கு ஒன்றும் தெரியாது!".
(பலத்த சிரிப்பு!)
'சரி' - என்று சொல்வது, நீங்கள் தடைகள் இன்றி ஒரு திரவ நிலையில் இயல்பாக இசைந்து செல்ல உதவுகிறது. அதனால், நீங்கள் தெரியாத ஒருவரிடம் கேட்டால், ஒரு பதிலையும் பெற மாட்டீர்கள் அல்லது தவறான பதிலைப் பெறுவீர்கள்.
அனுபவித்தவர்கள் மட்டுமே தெளிவாக விளக்க முடியும். சரணாகதியின் அர்த்தத்தை, அதை அனுபவிக்காத ஒருவனிடம் கேட்டீர்களானால், அவன், "எல்லாவற்றையும் வெறுமனே கடவுளிடம் கொடுத்துவிடு, அவ்வளவுதான்" என்பான்.
அது சரணாகதி அல்ல.
ஒருவர் என்னிடம் வந்து கேட்டார், "நான் எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்து விட்டால், சரியாகிவிடுமா?". நான் சொன்னேன், "ஆமாம், நீ உண்மையிலேயே எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும்". அவர் 3 நாட்கள் கழித்து திரும்பி வந்து என்னிடம் சொன்னார், "ஸ்வாமிஜி, நான் எல்லாவற்றையும் கடவுளிடம் சரணாகதி செய்து விட்டேன்". நான் சந்தோஷமடைந்து அவரிடம் கேட்டேன், "இப்பொழுது நீ எங்கே போகிறாய்?". அவர் சொன்னார், "குடிக்கும் இடத்திற்கு", அவர் தொடர்ந்தார், "இப்பொழுதிலிருந்து, நான் என்ன செய்தாலும், அதற்குக் கடவுள்தான் பொறுப்பு".
இது உண்மையில் உங்களையே முட்டாளாக்கிக் கொள்ளும் ஒரு வழி. அவர் உண்மையிலேயே சரணாகதி செய்திருந்தால், குடிப்பழக்கத்தையும் சரணாகதி செய்திருப் பார். அவரால் அதற்குப் பிறகு குடிக்கக் கூட இயலாது.
ராமகிருஷ்ணர் அழகாகச் சொல்கிறார், "உண்மையான சரணாகதி உங்கள் இதயத்தில் இருந்து வருமானால், கடவுள் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் வழி நடத்திச் செல்வார்; உங்களால் ஒரு போதும் தவறு செய்ய முடியாது". சரணாகதி உங்கள்
இறுதியில் எல்லாக் கேள்விகளுமே முட்டாள்தனமானதுதான். சில கேள்விகள் முட்டாள்தனமானவை. மற்றவை அறிவுள்ளவை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். உள்ளுக்குள் இருந்து மலராமல், வெறும் உதட்டளவில் இருக்குமானால், நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் முட்டாளாக்கிக் கொண்டிருப்பீர்கள்.
சரணாகதி எப்பொழுதும் உங்களை பிரபஞ்ச இருப்புத் தன்மை பற்றியே எண்ண வைத்துக் கொண்டு இருக்கும். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் சொந்த அடையாளத்தையும், அஹங்காரத்தையும் இழந்து விடுவீர்கள். பாகவதத்தில் ஒரு கோபிகை தனக்குள் சொல்லிக் கொள்வதாக ஒரு சுலோகம் வருகிறது, ''என்னால் கிருஷ்ணனைத் தவிர வேறெதையும் நினைக்க முடியவில்லை. என் மனதை அவனிடம் சரணாகதி செய்து விட்டேன். நான் வேறு எதையாவது நினைக்க வேண்டுமானால், என் மனதை மீண்டும் அவனிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்; ஆனால் அது எவ்வாறு முடியும்?''.
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவரது கடைசி நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் பலருக்கும் பலவிதமான வியாதிகளையும் குணப் படுத்தியிருக்கிறார். ஒருவர் அவரிடம் கேட்டார், ''நீங்கள் ஏன் ஒரே ஒரு கணம் உங்கள் மனதை உங்கள் வியாதியின் மீது வைத்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது?''. அவர் சொன்னார், ''நான் என் மனதை அந்த எல்லையற்ற சக்தியிடம் சரணாகதி செய்து விட்டேன், அதை எவ்வாறு, என் வியாதியின் மீது வைப்பதற்காக திருப்பி எடுத்துக் கொள்ள முடியும்!''. இதுவே உண்மையான சரணாகதி.
பிரபஞ்ச சக்தி நம்மை கவனித்துக் கொள்ளும். “நான் சரணடைந்தால், இந்தப் பிரபஞ்ச சக்தி என்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்துக் கொள்ளுமா?” என்று நீங்கள் கேட்கக் கூடும். பகவத்கீதையில், கிருஷ்ணர் மிகவும் அழகாக பதிலளிக்கிறார்-உறுதி அளிக்கிறார் என்று கூடச் சொல்லலாம், ''வேறு
ஆழமான புரிந்துகொள்ளுதல் நிகழும்பொழுது, கேள்விகள் தானாகவே கரைந்துவிடும். இதுவே உண்மையான ஞானம்.
எந்த சிந்தனைகளும் இல்லாமல், ஒருவன் என்னையே நினைத்துக் கொண்டிருப் பானாயின், நான் அவனுக்கு கொடுப்பதோடன்றி, அதைத் தக்க வைத்துக் கொள்வதையும் அனுபவிப்பதையும் பார்த்துக் கொள்கிறேன். என்னிடம் பூரண சரணாகதி அடைந்தவர்களின் வருமானத்திற்கும், வளமைக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அவர்களுடைய பிரச்சினைகள் கரைந்து விடும்''.
உண்மையான சரணாகதி நிகழ்வதற்கு பொறுப்பு ணர்வும், மனப்பக்குவமும் வேண்டும். நீங்கள் கடவுளிடமோ அல்லது ஏதாவது ஒரு குருவிடமோ சரணடைய வேண்டியத் தேவையில்லை. எதனிடம் வேண்டுமானாலும் சரணடையலாம். சரணாகதியே ஒரு சிறந்த பண்பாகும்; அதில் மிகுந்த சக்தி இருக்கிறது. நீங்கள் சரணடையும் பொழுது, உங்கள் அஹங்காரத்தை விட மிகப் பெரிய உயிர்ச் சக்தி இருக்கிறதென்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள், அவ்வளவுதான்.
உண்மையில், நீங்கள் சரணாகதி அடைவதற்கு கடவுள் ஒரு சாக்காக மட்டுமே இருக்கிறார். சரணடையும் செயலே முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் இலக்கல்ல; சரணாகதியே உண்மையான இலக்கு. நீங்கள் சரணடையும் பொழுது அல்லது உங்கள் அஹங்காரத்தை இழக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையில் நீங்கள் அதற்கு மேலும் ஒரு தனி வஸ்துவாக இருப்பதில்லை; பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் அல்லது கடவுளுடன் கலந்து விடுகிறீர்கள். மேலே ஒரு கடவுள் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்பதை பிறகுதான் புரிந்து கொள்கிறீர்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மை மட்டுமே இருக்கிறது; நீங்களும் அதன் ஒரு பகுதிதான்.
ஒருவருக்கும் இன்னொருவரைப் பற்றிப் பேசும் தகுதி கிடையாது. அப்படி பேசுவார்களாயின், அவர்கள் முட்டாள்கள்.
ஒரு சின்ன கதை...
ஒருவன் சரணடைவதாகத் தீர்மானித்து விட்டான்; ஆனால் யாரிடம் சரணடைவது என்பதுதான் தெரியவில்லை. காட்டுக்குச் சென்று, அங்கு எதிர்ப்படும் முதல் மனிதனிடம் சரணடைவது என்று தீர்மானித்தான். அவன் காட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந்தான். அவன் முன் எதிர்ப்பட்ட முதல் மனிதன், வீடுகளில் கன்னம் வைத்துத் திருடும் ஒரு கள்வன்; அவனைத் துரத்திக் கொண்டிருந்த காவலர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான். அவன் கள்வனது கால்களைப் பெற்றிக் கொண்டு, அவனே தனது குரு எனவும், தான் அவனிடம் சரணடைந்து விட்டதாகவும் அறிவித்தான். கள்வன் குழப்பமடைந்தான்; அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் அவசரமாக “சரி, அப்படியானால் கண்களை மூடிக்கொண்டு, நான் திரும்ப வரும் வரை இங்கேயே இரு” என்று சொல்லி விட்டு ஓடி விட்டான். மிகப் பொறுப்புணர்வுள்ள அந்த மனிதனோ, ஊண் உறக்கமின்றி வெகுகாலம் அங்கேயே இருந்தான். அவனது பொறுப்புணர்வைக் கண்டு, கடவுள் அவன் முன் தோன்றி, அவனை அரவணைத்துக் கொண்டார்; விடுதலையும் தந்தார்.
நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல; பூரண சரணாகதி செய்யும் எண்ணமே, உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமான ஒன்றாக மாற்றவல்ல ஆற்றல் பெற்றது. நீங்கள் சரணடையும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையான, தீர்க்க முடியாத சக்திக்குச் சொந்தக்காரராகிறீர்கள்; பிறகு உங்கள் வழியில் வரும் எதையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்.
நீங்கள் உறுதியாகவும், எதுவரினும் அசைக்க முடியாதவராகவும் ஆகி விடுகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், ஆதரவையும் தருபவராகிறீர்கள். அவர்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை, உங்கள் மூலம் உணர்கிறார்கள். நீங்கள் சரணடையாவிடில், உங்கள்
நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தால், மிகவும் அஹங்காரம் உள்ளவர்களாகிறீர்கள். வாழ்ந்தும் வாழாமலேயே இருக்கிறீர்கள். அஹங்காரம் உங்களை எல்லையற்ற தன்மையில் கலந்து விடாமல், பின்னோக்கி இழுத்து வைத்திருக்கிறது என்று பொருள்; அதனால் நீங்கள் தானாகவே உங்கள் வளங்களிலும், சக்தியிலும் ஒரு எல்லைக்குட்பட்டவராகி விடுவீர்கள்.
ஒரு குருவானவர் நீங்கள் சரணடைவதற்கு ஒரு கருவியாக இருந்து உதவுகிறார். சரணடைவது என்பதற்கு யாரையும் சார்ந்திருப்பது என்று அர்த்தமல்ல. உங்கள் சொந்த அஹங் காரத்தைக் கரைப்பதற்கு அவர்களுடைய உதவியை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.
சொல்லுங்கள்...?
ஸ்வாமிஜி, தயவுசெய்து எங்களுக்கு தியானத்தைப் பற்றியும், அது எவ்வாறு அஹங்காரத்தை இழக்க உதவுகிறது என்பது பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
நிச்சயமாக... முதலில், தியான முறைகள் எவ்வாறு வந்தது, ஏன் வந்தது என்பது பற்றிச் சொல்கிறேன்.
மனிதன்,தான் படைக்கப்பட்டதிலிருந்தே, 'இந்த அற்புதமான பிரபஞ்சத்தைப் படைத்தது எது?' என்று ஆச்சரியமடைந்து கொண்டும், ஆராய்ந்து கொண்டும் இருந்தான். இந்த அழகான பூமியைப் படைத்து ஆகாயத்தில் உருளவிட்டது எது? நதிகளைப் பாயச் செய்வதும் மலைகளை வளரச் செய்வதும் எது? இவற்றையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கும் ஆற்றல் அல்லது சக்தி ஒன்றிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஒரு பிரம்மாண்ட மான இருப்பு சக்தியே இந்த மொத்தக் காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். பிறகு எவ்வாறு அந்த சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது என்று வியப்படையத் தொடங்கினான்.
நீங்கள் எப்பொழுதும், நீங்களே வண்ணம் பூசிய, ஒரு குறிப்பிட்ட வண்ணக் கண்ணாடியின் வழியாகவே பார்க்கிறீர்கள்.
இந்த முடிவுக்கு வந்த, இதைப் பற்றி ஆராய்ந்த, இந்த சக்தியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட, முதல் மனிதர்களே ரிஷிகள் அல்லது தன்னையுணர்ந்த ஆத்மாக்கள் அல்லது ஞானமடைந்த குருமார்கள். அவர்கள் அடைந்ததும், வருங்கால சந்ததியினரும் இந்த சக்தியை உணர்வதற்காக, பல வழிகளையும் உருவாக்கி வைத்தனர். அவர்கள் ஒவ்வொரு வரும் கொடுத்த வழிமுறைகளே, பல்வேறு தியானமுறைகளும், மதங்களுமாகும்.
ஒவ்வொருவருமே கடவுளை ஒரு வித்தியாசமான வழியில், ஒரு வித்தியாசமான முறையில் உணர்ந்து, அவர்களது வழிமுறையைத் தனியாகப் பதிவு செய்து வைத்தனர். இது விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி அறிக்கைகளைத் தயாரிப்பது போன்றது. ஒவ்வொரு ரிஷியும் தங்களது ஞானமடைதலைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க, அது ஒரு மதமாகவோ அல்லது தியான முறையாகவோ ஆகி விட்டது,
இந்த ஆரம்பகால, தன்னையுணர்ந்த ஆத்மாக்கள், இந்த உலகத்தை வழிநடத்திச் செல்லும் உயிர்ச் சக்தியைப் பற்றிய கருத்துக்களை நிலைநாட்ட பல்வேறு மதங்களை உருவாக்கினர். இந்த உயிர்ச் சக்திகளையே நாம் இயேசு, அல்லா, சிவன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். நீங்கள் எந்தக் கடவுளையும் நம்ப வேண்டியது இல்லை. நாத்திகவாதிகள் எந்தக் கடவுளையும் நம்புவதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் இருப்பின் மீது நம்பிக்கை வைத்துத்தானே ஆக வேண்டும்? நாம் நமது சொந்த இருப்பின் மீது நம்பிக்கை வைத்து, "நான் யார்?" என்ற கேள்விக்கு பதிலைத் தேடுவோமாயின், அது ஒரு தியான முறையாகி, நாம் கடவுளை உணர்ந்து விட முடியும். எப்படியோ, இந்தப் பல்வேறு வழிகள் அல்லது தியான முறைகள் காலப்போக்கில் பல்வேறு மதங்களாகி விட்டன.
ஒரு அரசன் இராஜ்ஜியம் இருந்தால் மட்டுமே அரசனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பரமஹம்ஸருக்கோ, எதுவும் தேவையில்லை. அவர் கைகளை நீட்டினால் உண்கிறார், கால்களை நீட்டினால் உறங்குகிறார். ஆனால், பிற்பாடு என்ன ஆயிற்று? மக்கள் மதங் களுக்குப் பின்னால் உள்ள இந்த அடிப்படைக் கருத்தை விட்டுவிட்டு, மதங்களின் பெயரால் சண்டையிடத் தொடங்கி விட்டனர்.
ஒரு சின்ன கதை...
ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட இந்தியன், ஒரு பெங்காலி ஆகிய நால்வரும் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தூரத்தில் இருந்து ஒரு ஏரியைப் பார்த்தனர். தமிழன் அதைத் தெற்கேயிருந்து பார்த்து ‘தண்ணீர்’ என்று அழைத்தான். ஆங்கிலேயன் அதை மேற்கேயிருந்து பார்த்து ‘வாட்டர்’ என்று அழைத்தான். வட இந்தியனோ அதை வடக்கேயிருந்து பார்த்து ‘பானி’ என்று அழைத்தான். பெங்காலி அதைக் கிழக்கேயிருந்து பார்த்து ‘ஜல்’ என்று அழைத்தான். அந்த நான்கு பேருமே ஒரே விஷயமான ‘தண்ணீரை’த்தான் குறிப்பிட்டனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சொல்வதே சரி என்று சொல்லி சண்டையிடத் தொடங்கி விட்டனர். அந்த நால்வரில் ஒருவர் கூட ஏரிக்கு அருகில் சென்று அது என்னவென்று சரியாகப் பார்க்க முன்வரவில்லை. தமிழன் அவன் தாத்தா சொன்னதையே பிடித்துக் கொண்டிருந்தான்; ஆங்கிலேயனோ அவன் தாத்தா அதை ‘வாட்டர்’ என்றுதான் சொன்னதாக சொல்லிக் கொண்டிருந்தான்; வட இந்தியனும், பெங்காலியும் கூட அவர்கள் தாத்தா சொன்னதையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தனர்.
நாமும் இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம். மதங்களுக்காக சண்டையிடுபவர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கால ஆன்மீக விழிப்படைந்த ஆன்மாக்கள், எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தனரோ, அந்தக் கோணத்தில் இருந்தே பெயரிட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; எல்லாம் ஒன்றே- அதுவே பிரபஞ்ச இருப்புத்தன்மை
உங்கள் சொந்த உடலே ஒரு அதிசயம்தான்!
அல்லது கடவுள். கிருஷ்ணா என்றாலும் கிறிஸ்து என்றாலும் ஒன்றுதான். அவர்கள் வெவ்வேறு கோணத்தில் இருந்து பார்க்கின்றனர், அவ்வளவே.
இந்த நால்வரும், ஏரிக்குச் செல்லாமலேயே, அவர்களுடைய முன்னோர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்! என்ன நடக்கும்? ஒவ்வொருவரும் அவர்களுடைய முன்னோர்கள் சொன்னதே சரி என்று எண்ணுவதால் சண்டைதான் நடக்கும். அவர்களுடைய பாட்டனார்கள் சொன்னவற்றையெல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு, தாங்களாகவே ஏரிக்குச் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தால், அவர்களுடைய பாட்டனார்கள் சொன்னதெல்லாம் ஒரே விஷயத்தைத்தான் என்பதைப் புரிந்து கொள்வார்கள்! பிறகு சண்டை இருக்காது.
இன்று, ஏரிக்குச் சென்று ஒருவாய் தண்ணீரைக் குடிக்காத வர்கள்தான் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருப்பவர்கள், ஆன்மீகம் என்ற ஏரிக்குச் சென்று, உண்மையின் சுவையை உணராதவர்களே. சண்டையிடும் அந்த நால்வரும் வெறுமனே கரையில் நின்று கொண்டு சண்டையிடுபவர் களே! புரிந்து கொள்ளுங்கள்... உண்மை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.
தியானத்திற்குத் திரும்பி வருவோம்; தியானத்தைப் பற்றி எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அது உங்கள் மனம் தளர்வாக இருக்க உதவுகிறது, அவ்வளவே. தியானம் என்பது மக்கள் நினைப்பது போல் மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல. நீங்கள் ஒருமுகப்படுத்தும் பொழுது, உண்மையிலேயே உங்கள்
உங்களுக்கே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?
மனதிலிருந்து எல்லாவற்றையும் விலக்கிவிட முயற்சி செய்கிறீர்கள்; அது ஒரு சாத்தியமற்ற செயல்.
வெறுமனே இரண்டு நிமிடங்கள் அமர்ந்து, உங்கள் மனதிலிருந்து எல்லாவற்றையும் அகற்றி விட முயற்சி செய்யுங்கள்; உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்! நீங்கள் அகற்ற முயற்சி செய்யும் ஒவ்வொரு விஷயமும் திரும்ப வந்து உங்களைத் தொந்தரவு செய்யும். அதனால் மனதை ஒருமுகப்படுத்துதல் தியானம் அல்ல. தியானம் என்பது வெறுமனே எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு, தளர்வாக இருப்பது. நீங்கள் எதையும் விலக்குவதற்காக மனதை ஒருமுகப்படுத்தாதபோது, தளர்வாக இருக்க முடியும்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, வெறுமனே தளர்வாகிக் கொண்டு உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனியுங்கள். உங்களைச் சுற்றி எழும் ஒலிகளை இதயபூர்வமாக கேளுங்கள். அது பறவைகளின் சப்தமாகவோ, தென்றலில் தவழும் நாட்காட்டியின் சப்தமாகவோ, உங்களுக்கு மேல் சுற்றும் மின் விசிறியின் சப்தமாகவோ, உங்களைச் சுற்றியுள்ள மக்களின் ஒலியாகவோ அல்லது எதுவாகவும் இருக்கட்டும். வெறுமனே திறந்த இதயத்துடன் கேளுங்கள். கவனத்தில் வையுங்கள்; இவை
யெல்லாம் கவனச்சிதறல் அல்ல. நீங்கள் அவற்றுடன் இசைந்து செல்கிறீர்கள்; அதனால் அவை கவனச்சிதறல் அல்ல. நீங்கள் அவற்றுடன் செல்லும் பொழுது, அவை கவனத்தை திசை திருப்புவதாக இருப்பதில்லை. இதைச் செய்தீர்களானால், ஒருவித அமைதியையும், உள்ளுக்குள் இருக்கும் ஒரு தொகுப்பு மையமே ഇവையனைத்திற்கும் உண்மையில் சாட்சியாக இருக்கிறது என்பதையும் உணருவீர்கள்; மேலும் உங்களுக்குள் இருக்கும் அந்த அமைதியை ஆழமாக அறிவீர்கள். அவ்வப்பொழுது அந்த அமைதியின் கண நேரக் காட்சியையும் பெறுவீர்கள்.
நாம் விழிப்பின்றியே, வாழ்ந்தும் இறந்தும் விடுகின்றோம்.
கொஞ்சம் கொஞ்சமாக, உங்கள் உடல் உணர்வையும் இழப்பீர்கள். உங்களிடம் விழிப்புணர்வு மாத்திரமே இருக்கும். உங்களை, உங்கள் விழிப்புணர்வாலேயே அறிவீர்கள்; உடலாலோ, மனதாலோ அல்ல. உங்கள் உடல் உணர்வற்று மரத்துப் போயிருக்காது; ஆனாலும் உங்களால் அதை உணர முடியாது, அவ்வளவே. உங்கள் விழிப்புணர்வு மாத்திரமே எஞ்சியிருக்கும். தீவிரமாகச் செய்யும் பொழுது, இது உங்களை மனதிற்கப்பால் எடுத்துச் செல்லும்.
தியானம் உங்களுக்கு, வாழ்க்கையில் நீங்கள் ஒரு கவனிப்பவர் மட்டுமே என்பதை உணர உதவி செய்யும். அது, நீங்கள் உங்கள் இருப்புத் தன்மைக்குள் நன்றாக மையம் கொண்டு, வெளியுலக வேலைகளை இன்னும் திறமையாகவும், ஆனந்தமய மாகவும் தொடர உதவும்; ஏனெனில் எதனாலும் திசைதிருப்ப முடியாத, இடையூறு செய்யப்பட முடியாத ஒரு உள் அமைதியை நீங்கள் சுமந்து கொண்டிருப்பீர்கள். இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், நீங்கள் 'நான்', 'எனது' என்பதை விடத் தொடங்கு வீர்கள். உங்கள் அஹங்காரம் கரைந்து விடும். உங்கள் அஹங்காரம் என்பது, உங்கள் மனதையும், உடலையும் பற்றி, நீங்கள் வைத்திருக் கும் வலுவான எண்ணமும் அடையாளமும் தவிர வேறல்ல.
நாம் ஏன் தியானத்திற்காக ஒரு உலகளாவிய இயக்கத்தைத் தோற்றுவிக்க முயற்சி செய்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? தியானமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு. நீங்கள் உள் நோக்கிப் பார்க்கத் தொடங்கி விட்டால், அதிகாரம், பணம், வஞ்சம் முதலிய வெளியுலக திசை திருப்பல்களால் கவனம் சிதறடிக்கப்பட மாட்டீர்கள். உங்களுடைய கீழ்நிலைச் சக்தி களெல்லாம் உயர் நிலை ஆன்மீக சக்திகளாக உருமாற்றம் அடையும். கூட்டு விழிப்புணர்வு¹ ஒரு மாறுதலுக்கு உள்ளாகி தானாகவே அமைதி நிலவும்.
| Collective Consciousness¹ |
அதனால்தான் நான் தனிமனித உருமாற்றத்தில் கவனம் செலுத்துகிறேன். தனிமனிதர்கள் சிலர் உருமாற்றமடைந்து, அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளும்பொழுது, அவர்கள் மற்றவர்களுக்கு தூண்டுகோலாக இருப்பார்கள்; இது தொடர்ந்து சமூகத்தில் ஒரு நேர்மறையான புதிய மன அமைப்பை உருவாக்கும்.
உங்களுடைய புரிந்து கொள்ளுதல் அனுபவமாகும் வரை உருமாற்றம் சாத்தியமில்லை. தியானத்தால் உங்கள் புரிந்து கொள்ளுதலை அனுபவமாக்க முடியும். தனிமனித உருமாற்றத்திற்கும், சமூக உருமாற்றத்திற்கும் தியானமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.
தியானத்தினால் அறிவு வளர்கிறது. எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவு பிறக்கிறது. மாற்று வழிகளுக்காக நீங்கள் யாரையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறுமனே உங்களுக்கே தெரியும், அவ்வளவுதான். அதற்குக் காரணம், நீங்கள் உங்கள் உள் அறிவுடன் மிகுந்த இசைவுடன் இருப்பதே. அது தவறாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் தெரியும்.
நீங்கள் சரியான பாதையில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் இருப்புத் தன்மையில் இருந்து தெரிந்து கொள்வீர்கள். நீங்கள் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக இருப்பதால், சில சமயங்களில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், அதன் விளைவு அற்புதமாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விடாமுயற்சியுடனும் உங்கள் சொந்த அறிவின் மீது ஆழமான விசுவாசத்துடனும் இருப்பதே.
நீங்களே உங்களை தியானத்துடன் பேணி வளர்த்தால், உங்கள் திறன் விரிவடையும்; நீங்கள் வெளியுலகில் நிறைய சாதிக்க முடியும். உங்களால் செய்ய முடிவதற்கும், வெளிப்படுத்துவதற்கும்
குருவிடம் புலன்களைச் சரணாகதி செய்வதே, எக்காலத்திலும் மிகவும் கடினமான செயலாகும். எல்லை எதுவும் இருக்காது, நீங்கள் பல பரிமாணங்களிலும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்.
எதுவுமே, நீங்கள் அஹங்காரத்திலிருந்து இல்லாமல், உள் அறிவிலிருந்து செயல்படும் பொழுது சுலபமாக வரும். எதுவுமே உங்களுக்குக் கடினமாக இருப்பதன் காரணம், உங்கள் அஹங்காரம் உங்களை அதிலிருந்து வேற்றுமைப்படுத்தி விடுவதுதான். நீங்கள் உங்களை இழந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து விட்டால், எதுவுமே சிக்கலாக இருக்காது; நீங்கள் வெறுமனே இசைவுடன் சென்று கொண்டிருப்பீர்கள். உங்கள் அறிவுக் கூர்மையே, தானாகவே, பிரபஞ்ச சக்தியை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான வேலையைச் செய்யும்.
நீங்களே உங்களை ஒரு அதிசய மனிதராகப் பார்ப்பீர்கள்! உங்களுக்கு அப்பாற்பட்டிருப்பதாகத் தோன்றிய விஷயங்கள் திடீரென்று சகஜமாகி விடும். நீங்கள் அறியாமையில் இருந்து ஆழ்ந்த விழிப்புணர்வுக்குச் சென்று விடுவீர்கள்.
ஸ்வாமிஜி, நாம் ஆழமான கனவற்ற உறக்கத்திலும், உண்மையான தியானத்திலும், ஒரே மாதிரியான மனமற்ற நிலையில்தான் இருக்கிறோமா?
இல்லை. நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொழுது விதை நிலைக்குச் சென்று விட்டு மீண்டும் தூங்குவதற்கு முன்பிருந்த பழைய நிலைக்கே திரும்பி விடுகிறீர்கள். உங்களுக்குள் வளர்ச்சி எதுவும் நிகழ்வதில்லை. நீங்கள் உண்மையான தியானத்தில் இருக்கும் பொழுது, விதை நிலைக்குச் செல்கிறீர்கள்; விதை பிளந்து நீங்கள் அடுத்த உயர் நிலைக்குச் செல்கிறீர்கள். அதுதான் வித்தியாசம். இரண்டும், இரண்டு எல்லைகள். நீங்கள் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, இரண்டு எல்லைகளும் ஒன்று போலத் தோன்றலாம். ஒரு பித்தன் ஞானி போலத் தோன்றலாம்.
நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. பூரண சரணாகதி செய்யும் எண்ணமே, உங்கள் வாழ்க்கையை ஆனந்தமயமான ஒன்றாக மாற்றவல்ல ஆற்றல் பெற்றது.
இருவரும் தங்களது மனதைத் தொலைத்தவர்கள்தான், ஆனால் வெவ்வேறு திசைகளில்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, எப்படி நீங்கள் எப்பொழுதுமே மிகவும் அழகாக இருக்கிறீர்கள்...?!
(பரமஹம்ஸர் சிரிக்கிறார்!)
ஆம், இது ஒரு சுவையான கேள்வி! எப்படி நான் எப்பொழுதும் அழகாகத் தோன்றுகிறேன்!
பாருங்கள், அது வடிவத்தை மட்டும் பற்றியதாக இருந்தால், நீங்கள் ஈர்க்கப்படும், உங்களுக்கு அழகாகத் தோன்றும், இந்த வடிவமும், அதன் ஈர்க்கும் திறனும் காலப்போக்கில் தடுமாற்றம் கண்டு விடும். அது சூழ்நிலையைப் பொறுத்தும், ஆடை அணிகலன்களைப் பொறுத்தும் தடுமாற்றம் அடையும். எண்ணிப்பாருங்கள்... நீங்கள் என்னை இதே உடையில் பார்க்கிறீர்கள், அதே பாடல்களைக் கேட்கிறீர்கள், தினமும் அதே குரலைக் கேட்கிறீர்கள்; ஆனாலும் எப்பொழுதும் அதே ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வேறு யாரூடனாவது இதே போன்று தொடர்ந்து இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் உணரும் அந்த அழகை ஒளிவீசச் செய்வதும், உங்களை ஈர்ப்பதும் இருப்புதான், நபர் அல்ல.
உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு நபர்1. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு வெறும் இருப்பு2, அவ்வளவுதான். அஹங்காரமற்ற இருப்பு மிகுந்த ஆற்றலுடையது; அதுவே உங்களை வெறுமனே கவர்கிறது. என்னை விட இன்னும் சிறந்த தோற்றத்துடன் மிகவும் அழகாக இருக்கும் ஆணழகர்களும், நடிகர்களும் எத்தனை பேர் இருக்கிறார்கள், இல்லையா?
| Person¹ | Presence² |
Person¹
Presence²
அவர்களிடமும் நீங்கள் கவர்ந்து இழுக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் என்னிடம் இருப்பது போன்ற ஒரு ஆழமான ஏக்கம்த்துடன் அல்ல.
இங்கு, ஏக்கம் உங்கள் இருப்புத்தன்மையிலிருந்து வருகிறது; ஏனெனில் உங்கள் இருப்புத்தன்மை இந்த வடிவத்தின் பின்னாலுள்ள தெய்வீகத்தைப் பார்க்கிறது. அதுவே உங்கள் இருப்புத் தன்மையின் ஒரே நோக்கம். உங்கள் இருப்புத் தன்மைக்கு, அஹங்காரமற்ற இருப்பு மிகவும் பரவசத்தைத் தருகிறது. அதனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் என்னை நோக்கி ஈர்க்கப் படுகிறீர்கள்!
பாருங்கள், ஒவ்வொரு மனிதனின் அடி ஆழத்திலும் கடவுளை உணரும் ஏக்கம் இருக்கிறது; ஆனால் அதை அவனால் உணர முடிவதில்லை! நீங்கள் என்னைப் பார்க்கும் பொழுது, என்னிடம் ஈர்க்கப்படுகிறீர்கள்; அந்த ஈர்ப்பு எதனால் என்று ஆச்சரியப்படுகிறீர்கள். அந்த ஈர்ப்பு உங்கள் இருப்புத் தன்மையின் அழைப்பு.
ஆனால் நீங்கள் உடனே அது என்னவாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்; உங்களுக்கு உங்கள் மூளையை உபயோகித்து எல்லாவற்றையும் தர்க்கமாகக் குறைத்து விட மட்டுமே தெரியும். கடவுள் தர்க்கத்திற்கு அப்பாற் பட்டவர். அதனால்தான் உங்களால் உங்கள் தர்க்கத்தைக் கொண்டு, என்னிடம் ஏன் ஈர்க்கப்படுகிறீர்கள் என்பதை விளக்க முடியவில்லை.
நீங்கள் அனைவரும், இங்கு மணிக்கணக்காக, கண் இமைக்காமல், வாய்பிளந்து என்னைப் பார்த்துக் கொண்டு, எது அவ்வாறு உங்களை வாய்பிளக்க வைக்கிறது என்று வியப்பிலாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஏக்கம், வீட்டை அடைந்து விடும் ஏக்கம். பல பிறவிகளாக நீங்கள் இந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்து
சரணடையும் செயலே முக்கியத்துவம் வாய்ந்தது. கடவுள் இலக்கல்ல, ஒரு சாக்கு மட்டுமே. சரணாகதியே உண்மையான இலக்கு.
கொள்ள முயற்சி செய்து, வெற்றி பெறாததால், மீண்டும் திரும்பி வந்திருக்கிறீர்கள்; இன்னொரு பிறவி எடுத்திருக்கிறீர்கள்.
இந்த ஏக்கத்தை உணரும் பொழுது, உங்களில் சிலர் அதைத் தொடர்ந்து சென்று உங்கள் உள் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கிறீர்கள்; ஆனால் இன்னும் சிலரோ அச்சமடைந்து தப்பியோடி விடுகிறார்கள். நீங்கள் வெளி வட்டத்திலேயே தயங்கி நின்று கொண்டு, என்னை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அதனால் ஏதேனும் நடந்தாலும் சுலபமாக ஓடிவிட முடியும்! பிறகு நான் உங்களை ஏமாற்றி, கற்றுக் கொடுத்து, ‘நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள், இனி நீங்கள் உங்கள் அஹங்காரத்தை விட்டு விடுவதைத் தவிர செய்ய வேண்டியது வேறு ஏதுமில்லை’ என்பதைக் காண்பிக்க வேண்டியதாக இருக்கிறது!
நீங்கள் எப்பொழுதும் அச்சத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள்; ஏனெனில் அவ்வாறுதான் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அச்சம் அஹங்காரத்தின் இன்னொரு சாத்வீகமான வடிவம். எங்கேயாவது விட்டுக் கொடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில், பயம் என்ற போர்வையில் கொஞ்சம் விலகியே நின்று கொண்டிருக்கிறீர்கள். அச்சத்தை அடக்கம் என்று எண்ணி விடாதீர்கள். அச்சம் அஹங்காரத்தின் மிகவும் ஏமாற்றக்கூடிய ஒரு வடிவம். நீங்கள் விட்டுவிட மிகவும் அஞ்சுகிறீர்கள். கரைந்து போய்விடுவீர்களோ என்று மிகவும் அஞ்சுகிறீர்கள்.
புரிந்து கொள்ளுங்கள்... பிரபஞ்ச இருப்புத் தன்மை அன்புமயமானது. அது அன்பைத் தவிர வேறெதுவுமில்லை. மேலும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு உங்களைத் தெரியும்; ஏனெனில் நீங்களும் அதன் ஒரு பகுதிதான். இருப்புத் தன்மைக்கே உங்களைத் தெரியவில்லையென்றால், வேறு யாருக்குத் தெரியும்? அதனால் அச்சப்படுவதற்கு ஏதுமில்லை.
ஒரு குருவானவர், நீங்கள் சரணடைவதற்கு ஒரு கருவியாக இருந்து உதவுகிறார்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையிடம் பாசாங்கு ஏதும் செய்யத் தேவையில்லை. வெறுமனே சாதா ரணமாக நீங்களாக இருந்தாலே போதும்; பிரபஞ்ச இருப்புத்தன்மை தானாகவே உங்கள் மீது தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கும். பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு அன்பு செய்யவும், மன்னிக்கவும் மட்டுமே தெரியும். அதற்கு வேறு எந்தப் பண்பும் தெரியாது. நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையை, உங்களுடைய சொந்த, அஹங்காரம் பிடித்த, பெயரளவிலான, ஒழுக்க நியதிகளைக் கொண்டு எடை போடுகிறீர்கள்; அதுதான் பிரச்சினை; அதனால்தான் நீங்கள் இது போன்ற செயல்களைச் செய்ய ஆரம்பிக்கிறீர்கள்.
நீங்களும் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு பகுதிதான் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொழுது, ஒரு விடுதலை பெற்ற உணர்வை அடைவீர்கள். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையில் இருந்து வேறுபட்டவர் என்று எண்ணுவீர்களானால், துயரத்தில் விழுவீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பது என்பது மிகவும் உயர்ந்த ஒரு உணர்வைத் தரும். உங்கள் அஹங்காரத்தினால்தான், நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையில் இருந்து வேறுபட்டவர் என்று எண்ணுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் பயணத்தை உள்நோக்கித் திருப்பும் பொழுது, நீங்களும் இந்தப் பிரபஞ்சத்தின் பகுதிதான் என்பதை மேலும் மேலும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அஹங்காரத்தை அகற்றி விடும். விழிப்புணர்வு ஆட்கொள்ளும் பொழுது, அஹங்காரம் கரைந்து விடத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை. விழிப்புணர்வு ஆட்கொள்ளும் வரையில், உங்களை ஒரு திடமான வஸ்துவாகவே உணர்ந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையிலிருந்து உங்களை முழுவதுமாக துண்டித்துக் கொண்டு விடுகிறீர்கள்.
'நான் யார்?' - என்ற கேள்விக்கு பதிலைத் தேடுவோமாயின், அதுவே ஒரு தியான முறையாகி, நாம் கடவுளை உணர்ந்துவிட முடியும்.
உண்மையில், வானம் முழுவதையும் உங்களால் பார்க்க முடியும். ஆனால் நீங்கள், உங்கள் அஹங்காரம் எவ்வளவு அனுமதிக்கிறதோ அவ்வளவு மட்டுமே, உங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள்; அந்தச் சட்டங்களுக்குள் தெரிவதே உண்மையான வானம் என்றும் எண்ணுகிறீர்கள்.
இது போன்ற எல்லா விளையாட்டுகளுமே அஹங்காரத்தின் விளையாட்டைத் தவிர வேறல்ல. இதை அறிந்து கொள்வதே, இதை விட்டு வெளியே வருவதற்கான முதல் படியாகும். உங்களுக்குள் இருக்கும் எந்தப் பூட்டையும் திறப்பதற்கு, விழிப்புணர்வே பிரதான திறவுகோலாகும். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்- விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள் என்று.
ஸ்வாமிஜி, உங்களுக்கு எங்கள் மீதுள்ள அக்கறையை எவ்வாறு விவரிப்பீர்கள்?
எனக்கு உங்கள் மீதுள்ள ஒரே அக்கறை, நீங்கள் மலர உதவுவதுதான். அதுவே நான் உங்களுக்குச் செய்யக் கூடிய, நீங்கள் எனக்குச் செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயமாகும்! மக்கள் தங்களுடைய இயற்கையான ஆனந்தத்தையும், உள்ளுறை சக்தியையும் உணர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இப்பொழுது, மனிதன், தன்னை ஒரு ஆன்மீக அனுபவத்திற்காகக் காத்திருக்கும் மனிதப் பிறவியாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் மனித அனுபவத்திற்காகக் காத்திருக்கும் ஆன்மீகப் பிறவியென்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நான் அவனுக்கு அதைக் கற்றுத் தரவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவன் அதைக் கற்றுக்க கொள்ள ஒரே வழி, அவனை ஒரு ஆன்மீகப் பிறவி என்று அறிய விடாமல், ஒரு மனிதப் பிறவி
எல்லாம் ஒன்றே. அதுவே பிரபஞ்ச இருப்புத் தன்மை அல்லது கடவுள்.
என்று எண்ண வைக்கும் அஹங்காரத்தின் வடிவங்களை அறிந்து கொள்வதே. மனிதன் பிரார்த்தனை செய்வதில் இருந்து ஆகுதலை1 நோக்கி நகரும் பொழுது, அவன் திறவுகோலைக் கண்டுபிடித்து விட்டான் என்று அர்த்தம்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, தியானம் செய்யும் பொழுது எவ்வாறு உருமாற்றம் நிகழ்கிறது? அதில் குருவின் பங்கு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா...
ஒருவன் தியானம் செய்யும்பொழுது, அவனுடைய கீழ்நிலை உணர்வுகளான கோபம், இச்சை, பொறாமை, அதிகப்பற்று முதலியவை உயர் நிலைச் சக்திகளாக உருமாறி விடுகிறது. இது அவனை உணர்வு நிலையிலும், விழிப்புணர்விலும் உயர்நிலைப் பிரதேசங்களை நோக்கி உந்தித் தள்ளுகிறது. பிறகு அவன் முன்பிருந்ததைப் போன்று அமைதியற்றிருக்க மாட்டான். சக்தி உருமாற்றம் தியானத்தின் மூலமாக மட்டுமே நிகழ முடியும்.
இந்த உருமாற்றம் ஒவ்வொரு தனிமனிதனிடமும் நிகழும் பொழுது, சமூகம் முழுவதும் உருமாற்றம் அடையும். மூர்க்கத்தனங்கள் குறைந்து பெருமளவில் இணக்கம் ஏற்படும். தனிமனித உருமாற்றமே உலக அமைதிக்கு மிகவும் அனுபவ சாத்தியமான ஒரு வழியாகும்.
தியானத்துடனும், குருவின் வழிகாட்டுதலுடனும் நீங்கள் கடந்து செல்லும், எவையெல்லாம் நீங்கள் இல்லையோ அவற்றை அழித்து விடும், செயல் முறையே உருமாற்றம் என்பது. குருவின் துணையுடன் கடந்து செல்லும் இந்தச் செயல்முறை வலியும் வேதனையும் தரும் ஒன்றாகும்; ஏனெனில் இதில் நீங்கள், நீங்கள் என்று நினைத்து, உங்கள் இதயத்திற்கு அருகில் வைத்திருக்கும் பல விஷயங்களையும் விட்டுவிட வேண்டியிருக்கும்.
Becoming¹
குருநாதர், எவையெல்லாம் நீங்கள் இல்லையோ, அவற்றையெல்லாம் உங்களுக்குத் தொடர்ந்து காட்டிக் கொண்டேயிருப்பார்; அவையெல்லாம் தானாகவே நழுவி விழுந்து விடும். அவர் உங்களுடைய அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிக்கொணரும் சூழ்நிலைகளை உருவாக்குவார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர் உங்களிடம் செயல்பட அனுமதிப்பதே; அவர், நீங்கள் பல பிறவிகளிலும் சேர்த்து வைத்த குப்பைகளையெல்லாம் எரித்து விடுவார்.
நான் மக்களிடம் சொல்வது வழக்கம்... நீங்கள் விலகி ஓடிவிட முயற்சி செய்தால், இன்னொரு முறை என்னைத் தவற விட்டு விடுகிறீர்கள். அதனால் தப்பி ஓடிவிட முயற்சி செய்யாதீர்கள். என்னுடைய கைகளை சரியாக உங்களுக்குள் மறைந்திருக்கும் கட்டிகளின் மீதுதான் வைக்கிறேன். வெறுமனே என் மீது விசுவாசம் வைத்து, திறந்து கொள்ளும் தைரியத்தைப் பெறுங்கள். பிறகு என்னால் உங்களுடைய எல்லாக் கட்டிகளையும் குணப்படுத்தி விட முடியும். வெறுமனே குருவுக்குத் திறந்து கொள்வதிலேயே உங்களுடைய பாதி அஹங்காரம் உங்களை விட்டுச் சென்று விடுகிறது. மீதியை அவர் கவனித்துக் கொள்வார். நீங்கள் கைகளை வெறுமனே நீட்டினாலே போதும்; அவர் உங்களை வெளியே தூக்கி விடுவார், அவ்வளவுதான்.
நீங்கள் ஒரு சிரத்தையுடன் தேடுபவராக இருந்தால், ஒரு உருமாற்றத்திற்குத் தயாராக இருந்தால், குருவுக்குத் திறந்த நிலையில் இருப்பீர்கள்; எல்லாம் தானாகவே நடக்கும். நீங்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவராக இருந்தால், பெரிதாக எதுவும் நிகழாது; நீங்கள் வெறுமனே ஒரு குருவிடமிருந்து இன்னொரு குருவிடம் தாவிக் கொண்டு இருப்பீர்கள்; எவரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
தியானம் என்பது மக்கள் நினைப்பதுபோல் மனதை ஒருமுகப்படுத்துவதல்ல.
நீங்கள் தியானம் செய்யும் பொழுது, தீவிரமாக தியானம் செய்யுங்கள். தியானத்துடன் தீவிரத் தன்மை இருக்கும் பொழுது, உருமாற்றம்1 நிகழ்ந்தே தீரும்; உயர் விழிப்புணர்வு2 ஏற்படுவது நிச்சயம். பொதுவாக, நாம் தீவிரமாக இருக்கும் பொழுது, தியானத்தைத் தவறவிட்டு விடுவோம் அல்லது தீவிரத்தன்மை இல்லாமல் தியானம் செய்வோம். ஒன்றைப் பிடித்து இன்னொன்றை விட்டு விடுவோம். உண்மையிலேயே மலர வேண்டுமாயின், இரண்டையும் பிடித்துத்தான் ஆகவேண்டும்.
நீங்கள் எவ்வளவு நேரம் தியானத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை; ஆனால் எவ்வளவு தீவிரமாக தியானத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள் என்பது முக்கியமானது. விழிப்புணர்வின் தன்மையே முக்கியமானது. நீங்கள் உள்நோக்கித் திரும்புவதாக விழிப்புடன் ஒரு தீர்மானம் எடுத்து விட்டீர்களானால், அதுவே தியானத்தில் ஒரு தீவிரத் தன்மையைக் கொடுத்து விடும் .
சொல்லுங்கள்...?
ஸ்வாமிஜி, நாங்கள் எப்பொழுதும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இதுவும் எங்கள் அஹங்காரத்தின் விளையாட்டுதானா?
ஆம், நிச்சயமாக! நீங்கள் விஷயத்திற்கு வந்து விட்டீர்கள். நீங்கள் வாழ்க்கைக்கு ஏதோ நோக்கம் இருப்பதாக எண்ணி, அதன் பின்னால் ஓடினீர்களானால், அஹங்காரமிக்கவர்களாக இருக்கிறீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அழகை உணர்ந்து அதனுடன் இசைந்து சென்றீர்களானால்- வாழ்க்கையே அதன் நோக்கம்தான், மற்ற எல்லா இலக்குகளுமே வெறும் மாயையே3 என்பதைப் புரிந்து கொண்டீர்களானால் - விழிப்புணர்வை4 பெற்று விட்டீர்கள்; பிறகு நீங்கள் அஹங்காரமிக்கவர் அல்ல.
Transformation
Super Consciousness
illusions
Awarness
குருநாதரே உங்களுக்கு வாழ்க்கையின் ‘நோக்கமற்ற தன்மை’யை புரிய வைப்பவர். நீங்கள் ஒரு நோக்கத்துடன் தேடும் பொழுது, நிஜத்தைத் தவற விடுகிறீர்கள்; ஏனெனில் ஒரு நோக்கத்தின் பின்னால் ஓடும் பொழுது, நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையையே தவறவிட்டு விடுகிறீர்கள்.
வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையை உணரும் பொழுது, உங்களிடம் ஒரு புது விழிப்புணர்வு மலரத் துவங்கும். பிறகு நீங்கள் இதுகாறும் பாதுகாத்து வந்த வைரைக்கற்கள் எல்லாம் வெறும் கற்களே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் இதுவரை பெரிய விஷயங்களாகக் கருதி வந்தவை வெறும் விளையாட்டு பொம்மைகளே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் தேடும் உண்மையான ஆனந்தம் பணத்திலல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் தேடல் அதற்கும் அப்பாற்பட்டது.
நீங்கள் வாழ்க்கையை, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு மிகப்பெரும் தெய்வீக விளையாட்டாகக் காண ஆரம்பிப்பீர்கள். அந்த நாடகத்தை மிகவும் ரசிப்பீர்கள். உங்கள் பாத்திரத்தையும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அனைத்தையும் சரியாகவும் செய்வீர்கள். இலக்குகளுக்காக வாழ மாட்டீர்கள்; வாழ்வதற்காகவே வாழ்வீர்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.
பாருங்கள், புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் பணம் சம்பாதிப்பதை நிறுத்தி விடுங்கள் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் பணமன்றி எதையும் செய்ய முடியாது. வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்; இந்த முழு செயல் முறையிலும் உங்கள் இலக்கு களை வெறும் தற்காலிகமான நிகழ்வாகவே அமைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன். இது எல்லாமே வெறும் நாடகம்தான், நீங்கள் அதில் ஒரு
தியானம் என்பது வெறுமனே எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு, தளர்வாக இருப்பது.
பாத்திரம்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலக்குகளின் மீது பற்று வைக்கும் பொழுது, இதில் உள்ள முழுக் கருத்தையுமே தவற விட்டு விடுகிறீர்கள்.
ஒரு நாடகத்தில், உங்கள் பாத்திரத்தின் மீதோ அல்லது வேறெவர் மீதோ அல்லது எதன் மீதோ பற்றுவைப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? கிடையாது! அது நேரடியாகவே நகைப்புக்குரியதல்லவா? அதே போல, வாழ்க்கையும் ஒரு பெரிய நாடகம்தான்; அதனால் அதன் மீது எந்த வகையிலும் பற்று வைத்து விடாதீர்கள். வெறுமனே உங்கள் பாத்திரத்தை நடியுங்கள்; மொத்த விளையாட்டையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.
வாழ்க்கையே இலக்கல்ல, அது பாதைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் ஒரு இலக்கு இருந்தால், நீங்கள் ஓடிக் கொண்டிருப்பீர்கள். ஓடும்பொழுது, உங்கள் கால்கள் தரையில் படாது; கால்கள் தரையில் படவில்லையென்றால் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அழகைத் தவற விட்டு விடுவீர்கள். நீங்கள் ஓடும்பொழுது, உங்களின் காலடியில் உள்ள பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றிய ஒரு உணர்வேயின்றி, அதைத் தவறவிடுகிறீர்கள். இலக்கை விட்டுவிடும் பொழுது, தானாகவே பாதை முக்கியத்துவம் பெற்று விடுகிறது. பாதை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கே; இலக்கு தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்.
வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையைப் புரிந்து கொண்டால், நீங்கள் வாழ்வதன் பொருளையும் புரிந்து கொள்வீர்கள். இதைப் புரிந்து கொள்ளும் வரை, உங்கள் வாழ்க்கையை ஒரு விழிப்பற்ற வகையில்தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் சரியான விழிப்புணர்வின்றியே வாழ்கிறீர்கள். இலக்குகளை மட்டுமே குறியாகக் கொண்ட,
தியானம் உங்களுக்கு, வாழ்க்கையில் நீங்கள் ஒரு கவனிப்பவர் மட்டுமே என்பதை உணர உதவி செய்யும்.
வாழ்க்கையின் அழகைக் காணாத, ஒரு திடமான அஹங்காரத்துடன் தான் வாழ்கிறீர்கள்.
இலக்குகளுக்காக வாழ்க்கை முழுவதையுமே தியாகம் செய்து விடுவது சரியான வாழும் வழியல்ல. இந்த வகையில் வாழ்ந்தால், ஒவ்வொரு இலக்கை அடையும் பொழுதும், அற்ப மான விஷயங்களுக்காக வாழ்க்கை முழுவதையும் வீணடித்து விட்டதற்காக வருத்தப்பட மட்டுமே நேரிடும். இலக்குகளை விட்டுவிட்டு, பாதையை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். இந்த போதனையின் மீது மீண்டும் மீண்டும் தியானம் செய்யுங்கள். உங்களிடம் உண்மை ஒருநாள் உதயமாகும்.
இன்னொரு விஷயம்... உங்கள் வாழ்க்கையில் இருந்து எதையும் விலக்காதீர்கள்; நீங்கள் வாழ்க்கையில் எதையோ தவற விடுகிறீர்கள் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். ஆன்மீகம் என்பது எதையும் ஒருபோதும் விலக்குவதல்ல; எப்பொழுதும் எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்வது. உங்கள் வாழ்க்கையிலிருந்து எதையாவது விலக்குவீர் களானால், எதையோ தவற விடுகிறீர்கள் என்று பொருள். அதற்கு பதில், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அப்பொழுது முழுமையாகி விடுவீர்கள். முழுமையாகும் பொழுது புனிதமாகி விடுவீர்கள்!
சில விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லை யென்றால், அது வேறு விஷயம். அவற்றை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. வெறுமனே விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மேலே சென்று கொண்டேயிருங்கள்.
புரிந்து கொள்ளுங்கள்... ஒரு விஞ்ஞானியானவன் வெளியுலகில் தான் கண்டுபிடித்ததை, மற்றவர்களும் அனுபவிக்க,
தியானத்தினால் அறிவு வளர்கிறது. எல்லா விஷயங்களிலும் ஒரு தெளிவு பிறக்கிறது.
அதை மீண்டும் உருவாக்குவதற்காக ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறான்.
ஒரு குருவோ உள்ளுலகில் தான் அனுபவித்ததை மற்றவர்களும் அனுபவிப்பதற்காக, அந்த அனுபவத்தை மீண்டும் உருவாக்குவதற்காக, ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறார். அவர் தனது விழிப்புணர்வில், தான் அனுபவித்த ஆனந்தத்தை மற்றவர்களும் அனுபவிப்பதற்காக, அதை மீண்டும் உருவாக்கு வதற்கான ஒரு சூத்திரத்தை உருவாக்குகிறார்.
நான் இப்பொழுது உங்களுக்கு இறுதியான ஆனந்தம் அல்லது நித்யானந்தத்தை உணர்வதற்கான ஒரு சூத்திரத்தைத் தருகிறேன்.
சொல்லுங்கள்...?
ஸ்வாமிஜி, நாங்கள் எவ்வாறு எங்கள் அஹங்காரத்தை அழிப்பது?
முதலில் உங்களிடம் அஹங்காரம், செயல்படும் நிலையிலோ அல்லது சாத்வீகமாகவோ, ஏதோ ஓர் வடிவில் இருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு, அது நாம் இது வரையில் விவாதித்த, பல்வேறு வழிகளிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய எல்லா குற்ற உணர்வு, ஆசைகள், பயம், பணிவு, சுய முக்கியத்துவம், ஆகிய அனைத்துமே, உங்களுடைய 'நான்' மற்றும் 'எனது' என்னும் திட உணர்வால் நிகழும், அஹங்காரத்தின் பல்வேறு வடிவங்கள்தான். இதை நீங்கள் புரிந்து கொண்டால், கவனிப்பவராகி விடுவீர்கள்; அதனால் முழு வாழ்க்கையுமே ஒரு நாடகம்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதைச் செய்யும் பொழுது, உங்களுடைய திடமான இருப்பு கரைவதையும், அஹங்காரம் கரைவதையும் உணர்வீர்கள்.
| ஒவ்வொரு மனிதனின் அடி ஆழத்திலும் கடவுளை உணரும் ஏக்கம் இருக்கிறது. |
இது நிகழத் தொடங்கும் பொழுது, நீங்கள் தானாகவே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒத்திசைந்து செல்வீர்கள்; எவ்வாறு விஷயங்கள் தாமாகவே மாறியமைந்து உங்கள் வாழ்க்கையை அற்புதமாக்குகிறது என்பதையும் காண்பீர்கள். பிறகு உங்கள் அஹங்காரத்தை அழிப்பதையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு வாழுங்கள். அதை எவ்வகையிலும் பாதுகாக்காதீர்கள். எப்பொழு தும் உங்கள் அஹங்காரத்தை அழிக்கத் தயாராக இருங்கள். உங்கள் அஹங்காரத்தை அழிக்கத் தயாராகி விட்டால், நீங்கள் விடுதலை அடையத் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம், அவ்வளவுதான்.
ஸ்வாமிஜி, நீங்கள் கள்ளங்கபடமற்ற தன்மையும், அறிவுக்கூர்மையும் ஆக்ஞா சக்ரத்துடன் சம்பந்தப்பட்டது என்று கூறினீர்கள். கள்ளங்கபடமற்ற தன்மையைப் பற்றியும் அறிவுக் கூர்மையைப் பற்றியும் விளக்க முடியுமா?
நீங்கள் மனதின் கடினமான இயந்திரகதியிலான அமைப்பிலி ருந்து உடைத்துக் கொண்டு வெளியே வரும் பொழுது, திரவ நிலையில், ஒரு ஆற்றைப் போல இசைந்து செல்கிறீர்கள்; அது அறிவுக் கூர்மை. உங்களால் வேறு விதமாகச் சிந்திக்க முடிந்தால், அது அறிவுக்கூர்மை. நீங்கள் தன்னிச்சையாக இருந்தால், அது அறிவுக் கூர்மை. உங்களிடம் சவால் விடுவது கடினமானால், அது அறிவுக்கூர்மை.
வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்பதை அறிவீர்களானால், அது அறிவுக்கூர்மை. பிரபஞ்ச இருப்புத் தன்மையே இறுதியான உயிர்ச்சக்தி என்பதைப் புரிந்து கொள்வீர்களானால், அது அறிவுக்கூர்மை. உங்கள் உள் அமைதியை உணர்ந்து அறிவீர்களானால், அது அறிவுக் கூர்மை.
உங்களுடைய மனதைச் செலுத்தாமலேயே, தன்னிச்சையாக உங்களால் புன்னகைக்கவும் சிரிக்கவும்
பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு உங்களைத் தெரியும். ஏனெனில் நீங்களும் அதன் ஒரு பகுதிதான். முடியுமானால், அது அறிவுக்கூர்மை. உங்களுடைய வெறும் இருப்பினாலேயே சக்தியைப் பரப்புவீர்களானால், அது அறிவுக் கூர்மை. நீண்ட நேரத்திற்கு எங்கும் சிக்கிக்கொள்ளாமல், சுலபமாகச் சவால்விடப்படமுடியாமல் இருப்பீர்களானால், அது அறிவுக்கூர்மை. உங்களுடைய அஹங்காரத்தை விழிப்புடன் உங்களால் உணர முடியுமானால், அது அறிவுக் கூர்மை. உங்களுடைய செல்வத் தினால் அன்றி இருப்புத் தன்மையினால் நீங்கள் வளமானவராக இருப்பதாக அறிவீர்களானால், அது அறிவுக் கூர்மை.
உங்களால் உங்கள் குருவை அடையாளம் காண முடிந்தால், அது அறிவுக்கூர்மை. உங்களுடைய அஹங் காரத்தை உங்கள் குருவிடம் விட்டு விடத் தயாராக இருப்பீர்களானால், அது அறிவுக் கூர்மை. வாழ்க்கையின் விளையாட்டை ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து விளையாடுவீர்களானால், அது அறிவுக் கூர்மை.
ஒரு சின்ன கதை...
மூன்று பேரிடம் ஒரே கேள்வி கேட்கப்பட்டது. “உங்களுடைய வாழ்க்கை இன்னும் 10 நாட்கள் மட்டும்தான் என்று சொன்னால். நீங்கள் என்ன செய்வீர்கள்?”. முதலாமவன் சொன்னான் “நான் செய்து முடிக்க வேண்டிய எல்லா வேலைகளையும், வரிசைப்படுத்தி, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விடுவேன்; அதனால் நான் போன பிறகு என் குடும்பம் கஷ்டப்பட வேண்டாம்; பிறகு நான் நிம்மதியாக வாழ்வேன்”. இரண்டாமவன் சொன்னான், “நான் இதுவரையிலும் ஒருபோதும் செய்யாதவற்றை எல்லாம் செய்து வாழ்க்கையை அதிகபட்ச மகிழ்ச்சியுடன் அனுபவிப்பேன்”. மூன்றாமவன் சொன்னான், “நான் இன்னொரு டாக்டரிடம் ஆலோசனைக்குச் செல்வேன்”.
(சிரிப்பு!)
பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு அன்பு செய்யவும், மன்னிக்கவும் மட்டுமே தெரியும்.
இது அறிவுக் கூர்மை! உங்களால், உங்களுக்காக நீங்களே கட்டிக் கொண்ட, திடமான பழக்கப்பட்ட பாதைகளில் சிக்கிக் கொள்ளாமல், தன்னிச்சையாக இருக்க முடியுமானால், நீங்கள் திரவத்தன்மையுடனும், அறிவுக் கூர்மையுடனும் இருக்கிறீர்கள்.
ஒரு மருத்துவமனையில், தொலைபேசி மணியடித்தது; செவிலி பதிலளித்தாள். ஒரு குரல் கேட்டது, “தயவு செய்து அறை எண் 10-ல் இருக்கும் சந்தா பாசு எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?”. செவிலி பதிலளித்தாள், “அவர் நன்றாக இருக்கிறார்; நாளை மாலை அவரை வெளியே அனுப்பி விடுவோம் என்று நம்புகிறோம். நீங்கள் யார்?”. அந்தக் குரல் பதிலளித்தது, “சந்தா பாசு. நீங்கள் இங்கு நோயாளிகளிடம் ஒருபோதும் எதையும் சொல்வதில்லை”.
(பலத்த சிரிப்பு!)
இது அறிவுக்கூர்மை! நீங்கள் எங்கும் வெகுநேரம் சிக்கிக் கொள்ளாமலும், வெகுநேரம் சவாலை சமாளிக்க இயலாமல் திணறாமலும் இருப்பீர்களானால், நீங்கள் அறிவுக் கூர்மையுடையவர்.
இப்பொழுது இதைக் கேளுங்கள்...
ஒருவன் அவனுடைய பண்ணைக்கு, நகரத்தில் இருக்கும் அவனது நண்பனை அழைத்துச் சென்றான். அதைச் சுற்றிக் காண்பித்தான்; பிறகு அவனிடம் கேட்டான், “இவ்வளவு ஆடுகளைப் பார்த்து மிகவும் திகைப்படைந் திருப்பாய்! அவைகளை எண்ண முயற்சித்தாயா?”. நண்பன் சொன்னான், “ஓ, ஆம், அவைகள் 300 இருந்தன”. அவன் ஆச்சரியமடைந்து கேட்டான், “எப்படி அவைகளை சமாளித்து எண்ணினாய்?”. நண்பன் பதிலளித்தான், “ஓ, அது எளிது. நான் கால்களை எண்ணி நாலால் வகுத்து விட்டேன்!”.
| விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக | | --- | | அகங்காரத்தை அகற்றிவிடும். |
இது அறிவுக்கூர்மையல்ல! இது நாம் வாழ்க்கையில் எளிமையான விஷயங்களை எப்படி சிக்கலாக்கி விட்டோம் என்பதைக் காட்டுகிறது.
அடுத்து, கள்ளம் கபடமற்ற தன்மைக்கு வருவோம். கள்ளம் கபடமற்ற தன்மையைப் புரிந்து கொள்ள குழந்தைகளே சிறந்த உதாரணம். அவர்கள் எந்தவிதத் திருத்தங்களும் செய்யாமல் வெறுமனே பேசுகிறார்கள். அவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை; நடத்தையில் மிகவும் முழுமையாக இருக்கிறார்கள்; ஒருபொழுதும் தந்திரமாக இருப்பதில்லை; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை. இதுதான் கள்ளங்கபடமற்ற தன்மை.
ஆனால், நாம் என்ன செய்கிறோம்?. எவ்வாறு வார்த்தை களைத் திருத்தம் செய்ய வேண்டும், எவ்வாறு அவைகளைத் திரித்துக் கையாள வேண்டும், என்று நம்மால் முடிந்த அளவிற்குச் சிறப்பாகக் கற்றுத்தர முயற்சி செய்கிறோம். நாம் அவர்களுக்கு இதயத்திலிருந்து மூளைக்கு நகர்ந்து விட கற்றுத் தருகிறோம்; அதனால் அவர்களது தூய்மையான கள்ளங்கபடமற்ற தன்மை, மூளையால் மாசுபடுத்தப்பட்டு விடுகிறது.
ஒரு சின்ன கதை...
ஒரு சிறுவனிடம், அவனது பணக்கார அத்தை அன்று அவனது வீட்டிற்கு வருவதாகவும், அதனால் அவன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அத்தை வந்தாள்; பெரிய விருந்து கொடுக்கப்பட்டது. விருந்து முழுவதும் அந்தச் சிறுவன் தொடர்ந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்தான்; இறுதியில் அவளிடம் கேட்டான், "அத்தை நீங்கள் எப்பொழுது உங்கள் வித்தையைச் செய்யப் போகிறீர்கள்?". அந்தப் பெண்மணி கேட்டாள், "என்ன வித்தை, என் அன்பே?". சிறுவன் சொன்னான்,
உங்களுக்குள் இருக்கும் எந்தப் பூட்டையும் திறப்பதற்கு, விழிப்புணர்வே பிரதான திறவுகோலாகும்.
‘‘என் அப்பா சொன்னார், நீங்கள் ஒரு மீன் மாதிரி குடிப்பீர்கள்¹ (மொடாக்குடியர் என்பதற்கு ஆங்கில வழக்கு!) என்று!’’.
(சிரிப்பு!)
குழந்தைகள் வெறுமனே என்ன நினைக்கிறார்களோ அதைப் பேசி விடுகிறார்கள். தங்கள் கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்து கிறார்கள். அதனால்தான் அவர்களை கவனிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோம். அவர்களது கள்ளம் கபடமற்ற தன்மை நம்மைக் கவர்கிறது. ஆனால் நாம் அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களையும் தந்திரமாக இருக்கவும், வார்த்தைகளில் மோசடி செய்யவும் கற்றுக் கொடுத்து விடுகிறோம். இதைத்தான் நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
ஒரு குழந்தை அவளது தாத்தாவிடம் சென்று கேட்டது, ‘‘தாத்தா, உங்களால் உண்மையிலேயே ஒரு தவளையைப் போலச் செய்ய முடியுமா?’’. ஆச்சரியமடைந்த தாத்தா கேட்டார், ‘‘ஏனம்மா கேட்கிறாய்?’’. ‘‘என் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டார்கள்; நீங்கள் தவளை போலக் கத்தினால்² (மண்டையைப் போடுதல் என்பதற்கு ஆங்கில வழக்கு!), எங்களுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடிக்குமாம்!’’.
(சிரிப்பு!)
நாம் எப்பொழுதும் உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசுகிறோம். ஒருபோதும் நமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதில்லை. எதையோ நினைத்து வேறு எதையோ பேசுகிறோம். அதனால் மிகவும் அசிங்கமாகி விட்டோம். வெறுமனே நமது கள்ளம் கபடமற்ற தன்மையை இழந்து விட்டோம். குழந்தைகள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.
| Drink like Fish¹ | Croak like Frog² |
அவர்கள் மிகவும் இயல்பாக இருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக தங்களை வெளிப் படுத்திக் கொள்வதால் அழகாக இருக்கிறார்கள்.
ஒரு தாயார் தனது குழந்தையை அவளது சிநேகிதியிடம் ஒருநாள் விட்டுவிட்டுச் சென்றாள். அவள் தனது குழந்தையிடம் மாலையில் திரும்பி வருவதற்கு முன் ஞாபமாக சிநேகிதிக்கு நன்றி தெரிவித்து விட்டு வருமாறு சொல்லியிருந்தாள். குழந்தை மாலையில் வீட்டிற்குத் திரும்பி வந்தது. தாயார் குழந்தையிடம் தனது சிநேகிதிக்கு நன்றி தெரிவித்தாயா என்ற கேட்டாள். குழந்தை சொன்னது, “இல்லை; ஏனென்றால் இன்னொரு குழந்தை நன்றி தெரிவித்த பொழுது, ‘பரவாயில்லை, சொல்ல வேண்டாம்’ என்று சொல்லி விட்டார்கள்”.
இதுதான் குழந்தைகள் என்பது! அடிப்படையான விஷயங்களான நன்றியுணர்வு முதலியவற்றை, நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியதுதான்; ஆனால் நான் உங்களுக்குப் புரியவைக்க முயற்சிப்பது என்னவென்றால் நாம் அவர்களை கபட வேஷதாரிகளாக்கி விடக் கூடாது. அவர்களே இந்த விளை யாட்டைப் புரிந்து கொண்டு, அஹங்காரமின்றி, விழிப்புணர்வுடன், விழிப்புணர்வுடன் மட்டுமே விளையாடட்டும். அவர்களே பகுத்து அறிந்து கொள்ள அடிப்படை விதிமுறைகளையும் அறிவுக் கூர்மையையும் மட்டுமே கொடுங்கள்.
ஒரு விஷயம்... குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மைக்குக் காரணம் அதன் அறியாமைதான். குழந்தையிடம் கள்ளம் கபடமற்ற தன்மை நிச்சயமாக இருப்பதன் காரணம், அது இன்னும் சமூக நெறிப்படுத்துதல்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படாததே. ஆனால் நெறிப்படுத்துதல்கள் நிகழ ஆரம்பித்து, கல்வியறிவும் சேர்ந்துவிட்டால்,
எனக்கு உங்கள் மீதுள்ள ஒரே அக்கறை. நீங்கள் மலர உதவுவதுதான்.
குழந்தை தனது கள்ளம் கபடமற்ற தன்மையை இழந்து விடுகிறது. ஆனால், ஆழமான விழிப்புணர்வின் மூலம், குழந்தையால், பல காலமாக அது இழந்து விட்ட கள்ளம் கபடமற்ற தன்மையுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். திரும்பப் பெறப்பட்ட இந்த கள்ளங்கபடமற்ற தன்மையே உண்மையான கள்ளங்கபடமற்ற தன்மையாகும்; ஏனெனில் இந்தக் கள்ளங்கபட மற்ற தன்மையானது அறியாமையினால் ஏற்பட்ட தல்ல; ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலினால் ஏற்பட்டது.
இதுவே குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற தன்மைக்கும், குருமார்களின் கள்ளங்கபடமற்ற தன்மைக்கும் உள்ள வேறுபாடாகும். உலகாயதமான கல்வியறிவானது கள்ளங்கபடமற்ற தன்மையை நசுக்கி அஹங்காரத்தையே பேணி வளர்க்கிறது. ஆனால் அறிவுக் கூர்மையும், விழிப்புணர்வும் கல்வியறிவை ஒரு பக்கமாக வைத்து விட்டு, கள்ளங்கபடமற்ற தன்மையை மீண்டும் வெளிக்கொணர்ந்து விடும். இது நிகழுமானால், நீங்கள் வழியைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
ஸ்வாமிஜி, கடவுளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது?
நீங்கள் அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கடவுள் ஏதோ ஒரு தனி வஸ்து அல்ல. அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் தலைக்கு மேலாக சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, நீங்கள் அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. அவர் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இருக்கிறார். அனைத்தும் அவராலேயே உருவாக்கப்பட்டது.
இது எல்லாமே வெறும் நாடகம்தான். நீங்கள் அதில் ஒரு பாத்திரம்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவரே படைப்பவர், படைத்தல் மற்றும் படைக்கப்பட்டது. அவரே அனுபவிப்பவர், அனுபவித்தல் மற்றும் அனுபவம். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நாம் கடவுள் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறோம், அவ்வளவே. இதைப் புரிந்து கொள்வீர்களானால், கடவுளை உணரத் தொடங்கி விட்டீர்கள்; பிறகு கடவுளுடன் தொடர்பு கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை.
மக்கள் என்னிடம், நான் கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறேனா என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், நானே கடவுள்தான் என்று! நான், அவர்களும் கடவுள்தான் என்று சொல்கிறேன்! ஆனால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் எவ்வாறு கடவுளுக்கு நெருக்கமாகச் செல்வது என்று அறிய விரும்பு கிறார்கள். நெருக்கம் என்று சொல்லும் பொழுதே, உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருக்கிறதென்று அர்த்தம். நான் சொல்கிறேன் நீங்களே கடவுள்தான் என்று! பிறகு நெருக்கம் என்ற கேள்வி எங்கு வருகிறது?! நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்கிறீர்களா? அது மிகவும் எளிமையானது! கடவுள் என்பது பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பெயரைத் தவிர வேறல்ல; நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதி.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவுடன் வாழ்வீர்களானால், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான உங்கள் தொடர்பைக் கண்டுபிடித்து விட்டீர்களானால், நீங்கள் கடவுள்தான், அவ்வளவே. உங்கள் வழியில் எதிர்ப்படும் எதனுடனும் அல்லது எவருடனும் ஒரு நெருக்கமான உணர்வுடன் வாழ்வீர்களானால், நீங்கள் தூய விழிப்புணர்வாகி விடுவீர்கள்.
வாழ்க்கையின் நோக்கமற்ற தன்மையை புரிந்து கொண்டால், நீங்கள் வாழ்வதன் பொருளையும் புரிந்து கொள்வீர்கள்.
உங்களால், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும், அவர் தெரிந்தவரோ அல்லது தெரியாதவரோ யாராயிருப்பினும், ஒரே விதமான அன்பை உணர முடியுமானால், நீங்கள் உங்களிடம் கடவுளை உணர்கிறீர்கள். இது, கடவுள் உணர்விலிருந்து நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறிய உதவும் ஒரு எளிய அளவுகோலாகும்.
நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், இசைந்து செல்ல ஆரம்பிக்கும் பொழுது, உங்களுக்குள் ஒரு உள் குரலைக் கேட்க ஆரம்பிப்பீர்கள். பிறகு எந்த வழிகாட்டலும் தேவையில்லை. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கும் யாரும் தேவையில்லை. வெறுமனே உங்களுக்கே தெரியும்; உங்கள் அறிவே உங்களை வழிநடத்திச் செல்லும். நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டிய சுமையான உணர்வின்றி இசைவுடன் சென்று கொண்டிருப்பீர்கள். உங்களுக்குள் அந்த உள்குரலை எழுப்பக் கூடியவரே குரு எனப்படுகிறார். அவர் உங்கள் அறிவுக் கூர்மையை எழுப்புவதற்காக உங்களிடம் செயல்படுகிறார்.
நம்மில் பலரால் ஏதேனும் ஒரு காரணத்துடன் மட்டுமே நேசிக்க முடியும். நமது அஹங்காரம் அவ்வளவு வலுவாக இருக்கிறது. மிகவும் தெளிவாக இருங்கள்... நீங்கள் இது போன்று இருக்கும் பொழுது, கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள்! நாம் நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அன்பைப் பொழிவதாக உரிமை கோரலாம். இதுவரையிலும் பூமியில் தோன்றியுள்ள குருமார்கள் அனைவரையும் வெறுமனே பாருங்கள். அவர்களுடைய சேவைக்கு, அவர்களை இழுத்த பொதுவான தன்மை என்ன? தூய அன்பு, அவ்வளவே. நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் உணரும் சாதாரண அன்பையே
இலக்குகளை விட்டுவிட்டு, பாதையை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். அவர்களும் அனுபவித்திருந்தால், அவர்களால் இந்த சேவை ஸ்தாபனங்களை நிறுவியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
வெறும் சாதாரண அன்பைக் கொண்டு ஒரு உலகளாவிய சேவை ஸ்தாபனத்தை நிறுவுவது சாத்தியமா? சாதாரண அன்பால் எவ்வளவு உத்வேகத்தைக் கொடுக்க முடியும்? உண்மையில், அது உங்களைச் சீக்கிரத்திலேயே களைப்படையச் செய்து விடும்! குருமார்கள் மீண்டும் மீண்டும் உலகெங்கிலும் உள்ள மக்களை அடைந்து, அவர்களின் வாழ்க்கையை உருமாற்ற முடிந்ததென்றால், அதன் காரணம் தெய்வீக அன்பும், இந்த பூமியில் ஒவ்வொரு தனி மனித உயிருடனும் அவர்கள் உணர்ந்த ஒன்றான தன்மையுமே யாகும்.
உண்மையில், அவர்களது சுயசரிதைகளைப் படித்தால், ஏறக்குறைய அவர்கள் அனைவருமே அவர்களது குடும்பத்தை ஒரு பக்கமாக வைத்து விட்டு, அவர்களது கடுங் கோபத்துடனேயே மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காண முடியும். இது போன்ற சம்பவங்களில், குடும்பத்தினர் எப்பொழுதுமே எதிர்ப்பைக் காட்டுகின்றனர். ஆனால் பக்குவமும், விழிப்புணர்வும் வந்து விட்டால், அவர்களும் மற்றவர்களைப் போலவே ஏற்றுக் கொள்ளவும், பின் தொடரவும் ஆரம்பிக்கின்றனர்.
உங்களைக் கடவுளிடமிருந்து பிரித்து தனியாக உணர வைப்பது எதுவானாலும், அதுவே அஹங்காரம். அஹங்காரம் இருக்கும் பொழுது, உங்களால் எப்பொழுதும் ஒரே சீராக, அதே ஆழமான உணர்வுடன், நேசிக்க முடியாது. உங்கள் அன்பு வெகுவாக உங்களைப் பொறுத்து இருக்கும். அது இரண்டு எல்லைகளுக்கிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும்.
உங்களால் வேறுவிதமாகச் சிந்திக்க முடிந்தால் அது அறிவுக்கூர்மை.
குருமார்களுடைய உடல் மொழியைக் கவனியுங்கள்; தெய்வீக அன்புடன் ஒத்திசைந்து இருப்பது என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்வதற்கு சுலபமான வழி, குருமார்களின் உடல் மொழியைக் கவனிப்பதே. ஒரு குருவானவர் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவுடன் இருக்கிறார். அவர் எப்பொழுதும், அவர் முன் இருப்பவர் யார் என்ற பாரபட்சமன்றி, அன்பைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவருடைய உடல் மொழியைக் கவனிக்கும் பொழுது, அதன் பின்னால் இருக்கும் தன்மையை நீங்கள் கிரஹித்துக் கொள்வீர்கள்.
நீங்கள் சில காலம் குருவை கவனித்து வந்தீர்களானால், அவர் எவ்வாறு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து, மிகவும் அழகாக, கவிதை ரசம் பொங்க, மிகவும் ஒருமித்து, ஒரு நதியைப் போல பிரவகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உங்களால் உணர முடியும். அவருடைய ஒவ்வொரு செயலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் மிகவும் சரியாக ஒத்துப் போகிறது, அதனால்தான் அவரைக் கவனிப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாக இருக்கிறது! வெறுமனே குருவை கவனிப்பதன் மூலமே, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகையும், அது பிரவகிப்பதையும், உணர்ந்தும், புரிந்தும் கொள்ள முடியும்.
ஒரு குரு அஹங்காரமற்றிருப்பதால், அவர் தடைகளின்றி பிரவகித்துச் செல்கிறார். அவரிடம் ‘நான்’ மற்றும் ‘எனது’ என்னும் உணர்வில்லையாதலால் அவர் பிரவகித்துச் செல்கிறார். அவர் அன்பைத் தவிர வேறெதையும் பரப்பாததால், குணப்படுத்துகிறார். குணப்படுத்துதல் என்பது அடர்த்தி மிக்க அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. அதனால்தான் நாம் மீண்டும் மீண்டும்
வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்பதை அறிவீர்களானால் அது அறிவுக்கூர்மை.
குருமார்களின் அற்புதமான குணப்படுத்தும் ஆற்றல்களைப் பற்றிக் கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் குருமார்கள் கடவுளாகப் பார்க்கப்படுகிறார்கள். மிகவும் தெளிவாக இருங்கள்... குருமார்கள் மட்டுமே வாழும் கடவுள்கள்! அவர்கள் இறுதியான சக்தியின் உச்சபட்ச வெளிப்பாடு!
அதனால், கடவுளுடன் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது என்ற கவலையை நிறுத்துங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்க ஆரம்பியுங்கள்; கடவுளாகி விடுங்கள்!
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை வெல்ல முடியாது. நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையால் வெல்லப்பட மட்டுமே முடியும். உங்களுடைய அஹங்காரம் அனைத்தையும் இழந்து விட்டீர்களானால், நீங்கள் வெல்லப்பட்டு விட்டீர்கள், அவ்வளவுதான்! நீங்கள் கடவுளுக்கு இசைவாயிருக்கிற கருவறையாகி விட்டீர்களானால், அவர் உங்களிடம் குடி கொண்டிருப்பார். ஆரம்ப நிலைகளில், நீங்கள் விருந்தின ராகவும், அவர் விருந்தளிப்பவராகவும் இருப்பீர்கள். இறுதியில், நீங்களே விருந்தளிப்பவராகி விடவேண்டும்; அவரை வரவேற்கும் ஒரு கருவறையாகி விட வேண்டும். கருவறையாகி விடுதல் என்றால், உருகி மென்மையாகி விடுதல். மென்மையாகி விடுதல் என்றால், உங்கள் முழு அஹங்காரத்தையும் விடுத்து, கடவுள் அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையில் கரைந்து விடுதல். பிறகு வாழ்க்கை ஒரு இசையாகவும், முடிவற்ற கொண்டாட்டமுமாகி விடும்!
sரி... இப்பொழுது நாம், இந்த ஆக்ஞா சக்கரத்திற்கான, அற்புதமான, மிகவும் பலன் தரக்கூடிய தியான முறையான, திவ்ய நேத்ரா தியானத்தைச் செய்யலாம்.
ஆனந்தமாக இருங்கள்!
திவ்ய நேத்ரா தியானம்
(நீடிக்கும் காலம் : 25 நிமிடங்கள்)
இந்த தியான முறை இரண்டு பகுதிகளைக் கொண்டது - முதலாவது, ஆக்ஞா சக்கரத்தைத் தூய்மைப்படுத்துதல்; அடுத்தது, அதற்குச் சக்தியூட்டுதல். ஆக்ஞா சக்கரம் அல்லது மூன்றாவது கண் என்பது மாயையையும் இச்சையையும் அழிப்பதாக அறியப் படுகிறது. அது உங்களுடைய உயர் விழிப்புணர்வைத் திறக்க உதவுகிறது.
இங்கு உங்கள் முன், ஏற்றப்பட்ட பிரார்த்தனை தீபம் ஒன்று இருக்கிறது. அது நல்லெண்ணெய் அல்லது பசு நெய் உபயோகிக்கப்பட்டு ஏற்றப்பட்டிருக்கிறது. நீங்கள் மெழுகு வர்த்தியைக் கூட உபயோகிக்கலாம்; ஆனால் அது தாவரக் கொழுப்பிலிருந்துதயாரிக்கப்பட்டதுதானாஎன்பதைஉறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வழிகாட்டுதலுடன் செய்யும் ஒரு தியான முறை. நான் சொல்வதை வெறுமனே கவனமாகப் பின்பற்றுங்கள்.
தரையில் கால்களை சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். தரையில் உட்கார முடியாத வர்கள் நாற்காலியில் உட்காரலாம்.
(மென்மையான இசை போடப்படுகிறது)
உங்கள் ஆக்ஞா சக்கரத்தை ஊடுருவுவது போன்று அதில் கவனத்தைக் குவியுங்கள். (5 நிமிடங்கள்)
கண்களைத் திறந்து உங்கள் புருவ மத்திக்கு இடையே உள்ள மூன்றாவது கண் வழியாக விளக்கின் சுடரைப் பாருங்கள். உங்கள் கண்கள் சிமிட்டலாம் அல்லது எரியலாம் அல்லது கண்ணீர் வரலாம். வெறுமனே அது நிகழ அனுமதியுங்கள். (5 நிமிடங்கள்) கண்களை மூடி மீண்டும் ஆக்ஞா சக்கரத்தில் மனதைக் குவியுங்கள். (5 நிமிடங்கள்).
கண்களைத் திறந்து, உங்கள் புருவ மத்திக்கு இடையே உள்ள மூன்றாவது கண் வழியாக விளக்கின் சுடரைப் பாருங்கள். (5 நிமிடங்கள்)
கண்களை மூடுங்கள்; ஆக்ஞா சக்கரத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டாம்; வெறுமனே தளர்வாக இருங்கள்.
(5 நிமிடங்கள்)
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!
மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களைத் திறவுங்கள்.
நாம் அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.
ஆனந்தமாக இருங்கள்!

