அத்தியாயம் - 7: பொறாமையிலிருந்து விடுதலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- விஷுத்தி சக்கரம் -
- சக்தி சாகர தியானம் -
விஷுத்தி சக்கரம் தொண்டைப் பகுதியில் இருக்கிறது.
சமஸ்கிருதத்தில், விஷுத்தி என்றால், சுத்த அசுத்தங்களுக்கு அப்பாற்பட்ட என்று பொருள்.
இந்த சக்கரம் ஒப்பிடுவதாலும் பொறாமையாலும் பூட்டப்படுகிறது (அடைபடுகிறது).
இதனை, மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் நமது தனித்தன்மையைக் காட்டுவதன் மூலமும், நமது முழுத் திறனையும், தனித்துவத்தையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதன் மூலமும் மலரச் செய்ய முடியும்.
தியான முறை: சக்தி சாகர தியானம் - ஜென் புத்த மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
நாம் எப்பொழுதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறோம். எப்பொழுதும் மற்றவர்களிடம் இருப்பது அல்லது மற்றவர்கள் சாதித்திருப்பது நம்மை விட அதிகம் என்ற உணர்வில், நாம் பொறாமைப்பட ஆரம்பிக்கிறோம். மற்றவர்களின் மேன்மையை நம்மால் சகித்துக் கொள்ள முடியாத போது, நாம் பொறாமைப்படுகிறோம். ஒப்பிடுதல் விதையென்றால், பொறாமை பழத்தைப் போன்றது!
Freedom from Jealousy
ஒப்பிடுதலும்¹ பொறாமையும்², இரண்டுமே உண்மையில் இல்லாத ஒன்று³! நாமே அவற்றை உருவாக்கி விட்டு, பிறகு அதை எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். விஷுத்தி என்கிற இந்தச் சக்கரத்தின் பெயரிலிருந்தே, இந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஷுத்தி என்றால் சுத்தம் என்று பொருள். அஷுத்தி என்றால் அசுத்தம் என்று பொருள். விஷுத்தி என்றால், சுத்தம் அசுத்தம் இரண்டையும் கடந்த என்று பொருள். அதனால் இந்தப் பெயரின் விளக்கம் என்னவென்றால், இந்தச் சக்கரம் ஒருபோதும் அசுத்தமடைவதில்லை; ஆதலால், ஒருபோதும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லாதது என்பதாகும்.
அதனால் இந்தச் சக்கரத்தைப் பூட்டும் (அடைக்கும்) ஒப்பிடுதல் பொருளில்லாத ஒரு நிழலைப் போன்றது. ஒப்பிடு வதற்கு அடிப்படையே கிடையாது. அது கலப்படமற்ற கற்பனை. கட்டுக்கதை.
ஒரு சின்ன கதை....
சந்தா பாசு, உலகம் முழுவதும் நேரடிக் காட்சிகளை நடத்தும் ஒரு இசைக்குழுவின் உறுப்பினர். சந்தா, ஒரு குறிப்பிட்ட மேடை நிகழ்ச்சியில், ஒரு சில பாடல்களுக்குக் கறுப்பு டோப்பாவையும், மற்ற பாடல்களுக்கு சிவப்பு டோப்பாவையும் அணிவது என்று முடிவெடுத்தான். அவன் டோப்பாக்களை மாற்றி மாற்றி, நிகழ்ச்சியின் முதல் பாதியை முடித்து விட்டான். இடைவேளையில், காட்சி இயக்குனர் அவனது உடை மாற்றும் அறைக்கு வந்து, "ஐயா, நீங்கள் மீதிக் காட்சி முழுவதும் சிவப்பு டோபாவைத்தான் அணிய வேண்டும்" என்று சொன்னார். சந்தா ஆச்சரியமடைந்து ஏனென்று
Comparison¹ Jealousy² Non-existent³ கேட்டான். அவர் சொன்னார், “மக்கள் கறுப்பு முடியணிந்தவனின் குரலை விட சிவப்பு முடியணிந்தவனின் குரலை மிகவும் ரசிக்கிறார்கள்”.
(சிரிப்பு!)
நாம் விஷயங்களை உள்ளது உள்ளவாறு பார்க்க முடியாத அளவிற்கு எப்பொழுதும் ஒப்பிடுவதில் மிகவும் மும்முரமாக இருந்து கொண்டிருக்கிறோம்! நமது மனம், தான் பார்ப்பதில் உள்ள உண்மையான தன்மையை தவற விடும் அளவிற்கு ஒப்பிடுவதில் சிக்கிக் கொண்டிருக்கிறது.
விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடிவதற்கு நாம் நமது ஒப்பிடும் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும்.
ஒப்பிடுதல் என்றால் என்ன?
எங்கெல்லாம் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள் என்று யாராவது செ ால்ல முடியுமா? நீங்கள் தயாராகவே இருப்பீர்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்!
(பார்வையாளர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்...)
அழகு, ஸ்வாமிஜி...
ஆ! அழகு! ஒவ்வொருவரும் ஒப்பிடுவதற்கு சொந்த விஷயங்கள் வைத்திருக்கிறார்கள்! மிகவும் சரி, அடுத்தது....
செல்வம்... பெயர் மற்றும் புகழ்... அதிகாரம், கௌரவம்.. அறிவு... ஆரோக்யம்...
நாம் எப்பொழுதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் இருப்பது அல்லது மற்றவர்கள் சார்ந்திருப்பது நம்மை விட அதிகம் என்ற உணர்வில் பொறாமைப்பட ஆரம்பிக்கிறோம்.
சரி, இவையெல்லாம் பொதுவாக நாம் நம்மை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொள்வதற்கு உபயோகிக்கும் விஷயங்கள் இல்லையா? இவற்றை நாம் 4 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்: பணம், அறிவு, அழகு (இது ஆரோக்கியத்தை உள்ளடக்கியது) மற்றும் அந்தஸ்து. உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளும், எல்லாச் சிக்கல்களும் இந்த நான்கு விஷயங்களைத் தவிர வேறில்லை, சரிதானே?
இப்பொழுது... உலகத்திலுள்ள எல்லா மக்களையும் அவர்களிடமிருக்கும் செல்வத்திற்கேற்ப ஏறுவரிசையில் ஒரு வரிசையாக நிற்க வைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்களும் அந்த வரிசையில் ஒரு பகுதிதான். நீங்கள் எங்கிருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள்?
நடுவில் எங்கேயாவது ஸ்வாமிஜி.....
மிகவும் சரி! நீங்கள் நடுவில் எங்கேயாவது இருப்பீர்கள், இல்லையா? உங்களால் வரிசையில் உங்களுக்கு இரண்டு பக்கமும் உள்ளவர்களை எண்ணக் கூட முடியாது. உங்களுக்கு முன்னரும் எண்ணற்றவர்கள் இருப்பார்கள். பின்னரும் எண்ணற்றவர்கள் இருப்பார்கள்.
மேலும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் செல்வநிலை மாறிக்கொண்டே இருப்பதாலும், வரிசையில் அவர்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்! இப்பொழுது உங்களுக்கு முன்னால் உள்ள வரிசையின் நீளத்தைப் பார்த்து பொறாமைப்படுவதா அல்லது உங்களுக்குப் பின்னால் உள்ள வரிசையின் நீளத்தைப் பார்த்து தளர்வுடனும் கடவுளுக்கு நன்றையுணர்வுடனும் இருப்பதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.
| | |---| | ஒப்பிடுதலும் பொறாமையும் உண்மையில் இல்லாத ஒன்று. நாமே அவற்றை உருவாக்கி விட்டு, பின்னர் அவற்றை வெல்வதைப் பற்றி முடிவின்றி பேசிக் கொண்டிருக்கிறோம். |
நீங்கள் வரிசையில் எங்கிருப்பீர்கள் என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அந்த எண்ணம் உங்களைத் தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருக்கும்! இல்லாத ஒரு நிகழ்வு நம் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது! அது எதிர்மறை இருப்புடையது!
எதிர்மறை இருப்பு என்றால் என்ன என்பதை விளக்கு கிறேன். எனக்குப் பக்கத்தில் இருக்கும் இந்த மணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மணியை நான் இங்கிருந்து அகற்ற விரும்பினால், இதை நான் சுலபமாக இந்த அறைக்கு வெளியே கொண்டு வைத்து விட முடியும். அதற்குப் பிறகு அது இங்கு இருக்காது, சரிதானே? இந்த மணிக்கு நேர்மறை இருப்பு இருப்பதால், என்னால் இதைச் செய்ய முடிகிறது. நாம் இப்பொழுது, இந்த அறையில் இருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களால் அந்த இருளை எடுத்து வெளியே வைக்க முடியுமா? முடியாது...
ஆனால் நான் இந்த அறைக்குள் ஒளியைக் கொண்டு வந்தால், இருள் தானாகவே மறைந்து விடுகிறது, சரிதானே? ஏனெனில், இருளிற்கு நேர்மறையான-இருப்பு¹ கிடையாது. அது எதிர்மறையான-இருப்பை² உடையது. அதற்கு எதிர்மறை இருப்பு இருப்பதால், நம்மால் அதைச் சுலபமாக அகற்ற முடியாது.
அதே போல், ஒப்பிடுவதற்கு நேர்மறையான இருப்பு கிடையாது. அது நம் மனதில் மட்டுமே இருக்கிறது; அது நம் மனதில் ஒருவிதமான எண்ணத்தைச் செயல்படுத்தும் பொழுதே நிகழ்கிறது. ஒப்பிடுதல் நிஜத்தில் இல்லாததால், உங்களால் அதைச் சுலபமாக வெளியேறச் சொல்லி வெற்றி கொள்ள முடியாது. வெளிச்சத்தைக் கொண்டு வரும் பொழுது, இருள் மறைவது
Positive existence¹ Negative existence² போல, உங்கள் மனதில் ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு வருவதன் மூலம் அதை வெல்ல முடியும்.
சமஸ்கிருதத்தில் மாயை, மாயா என்று மொழி பெயர்க்கப்படுகிறது. யாமா இதி மாயா என்று சொல்கிறோம்; அதன் பொருள், எது இல்லையோ அது மாயா எனப்படுகிறது!
எது இல்லையோ, அது தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது! அதுதான் மாயையின் தன்மை! நீங்கள்தான் அதற்கு உயிர் கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான். ஒப்பிடுதல் கலப்படமற்ற மாயை. சொல்லுங்கள்...?
ஸ்வாமிஜி, நாம் வரிசையில் எந்தப் பக்கத்தையுமே பார்க்காமல் இருப்பதே மிகவும் நல்லது!
ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்? மேலும், எப்படியாயினும், பார்ப்பதற்கு ஏன் பயப்படுகிறீர்கள். நீங்கள் அதைப் பார்க்க பயப்படுவதே உங்கள் மனதிலிருந்து தப்பி ஓடப் பார்க்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. உங்களால் பாதிக்கப்படாமல் பார்க்க முடியுமானால்-நீங்கள் சரியான வழியைக் கண்டுபிடித்து விட்டீர்கள்.
உங்களால் எல்லாவற்றையும்-உங்களிடம் இருப்பதையும் மற்றும் மற்றவர்களிடம் இருப்பதையும் பார்க்க முடியுமானால், அதன் பிறகும் உங்களால் எப்பொழுதும் நிறைவாக இருக்க முடியுமானால், இந்தச் சக்ரமானது சக்தியூட்டப்பட்ட நிலையிலேயே இருக்கும். பாருங்கள், மிகவும் தெளிவாக இருங்கள்... நான் "திருப்தி" என்ற வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. மக்கள் அடிக்கடி
விஷயங்களை உள்ளது உள்ளவாறே பார்க்க முடிவதற்கு நாம் நமது ஒப்பிடும் மனோபாவத்தை விட்டுவிட வேண்டும். சொல்கிறார்கள், "திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று. உங்களால் ஒருபோதும் திருப்தியாக இருக்கக் கற்றுக் கொள்ள முடியாது.
ஒப்பிடுதல் மற்றும் பொறாமையின் எதிர்மறையான இருப்பை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ளுதலின் விளைவாக திருப்தி மலர வேண்டும். அது, உங்களுக்குக் கொடுக்கப் பட்டவைக்கான ஆழ்ந்த நன்றியுணர்விலிருந்து மலர வேண்டும். அதை வெளியிலிருந்து சுமத்த முடியாது. அது உள்ளேயிருந்து தான் மலர வேண்டும்.
உங்களுக்குச் சொல்லப்பட்டவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மீண்டும் மீண்டும் உண்மையைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம், உங்களுக்குள் அதை அனுபவிக்கக் கூடிய, ஒரு வெளியைத் திறக்க முடியும். எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்குள்ளேயே தீர்வும் இருக்கிறது. உங்களுக்கு, சிரத்தையான மனதுடன், அதை ஆழ்ந்து பார்க்கும் விருப்பம் மட்டுமே இருந்தால் போதுமானது. நீங்கள் வெறுமனே ஒப்பிடுதலையும் பொறாமையையும் விழிப்புடன் ஆழ்ந்து பார்த்தாலே அது உங்கள் மனதின் வெறும் விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதைக் காண முடியும்.
நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது, உங்களுக்கென்று ஒரு வீடும், காரும் மட்டும் இருந்தாலே போதுமானது என்று நினைப்பீர்கள். இந்த எண்ணமே உங்களைத் தளர்வாக இருக்கச் செய்து விடும். நீங்கள் சில கணங்கள் நன்றியுணர்வுடனும், நிறைவுடனும் கூட இருப்பீர்கள். கொஞ்ச நேரம் கழித்து, நீங்கள் உங்கள் காரில், வீட்டை விட்டு வெளியே வந்து, போக்குவரத்து சிக்னலில் நிற்கும் பொழுது, என்ன நடக்கிறது? ஒரு மெர்சிடிஸ்
| இல்லாத ஒன்று (ஒப்பிடுதலும் பொறாமையும்) நம் மனதை வாட்டிக் கொண்டேயிருக்கிறது. அது எதிர்மறை இருப்புடையது. |
பென்ஸ் கார் உங்கள் கார் அருகில் வந்து நின்றதும்... உங்கள் மனம் தன் சிந்தனையை அப்படியே மாற்றிக் கொண்டு விடுகிறது. உங்கள் கார் அவ்வளவாக நன்றாக இல்லை என்று நினைக்கத் தொடங்கி விடுகிறீர்கள். அது மெர்சிடிஸ் பென்ஸ் காராக இல்லாவிட்டாலும், நீங்கள் புதிய கார் வாங்க உகந்த நேரம் வந்து விட்டதாக நினைக்கத் தொடங்குகிறீர்கள்.
சில நிமிடங்களுக்கு முன்னர், உங்களிடம் இருந்த வற்றுடன் நீங்கள் சந்தோஷமாகத்தானே இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது என்னவாயிற்று? நீங்கள் புதிய ஆசையுடன்-கடன் வாங்கப்பட்ட ஆசையுடன் செயலாற்றத் தொடங்குகிறீர்கள். மிகவும் தெளிவாக இருங்கள்... இது உங்கள் சொந்த ஆசையல்ல. அது மற்ற எவருக்கோ சொந்தமான, கடன் வாங்கப்பட்ட ஆசை. அது அந்த பென்ஸ் காரினுடைய சொந்தக்காரரின் ஆசை. இவ்வாறு தான் நீங்கள், உங்கள் மனதில், ஒப்பிடுதல் மற்றும் பொறாமைப்படுதலின் விளைவால், மற்றவர்களின் ஆசையின் மீது செயல்படத் தொடங்குகிறீர்கள்.
உங்கள் வீட்டில் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அவசியத்தை நீங்கள் ஒருபோதும் உணர்ந்திருக்கமாட்டீர்கள். ஆனால், உங்கள் அண்டைவீட்டுக்காரர் ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கியவுடன், நீங்கள் அது இல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்! உடனே ஒரு குளிர்சாதனப் பெட்டி வேண்டியதன் அவசியத்திற்கான, உலகத்திலுள்ள எல்லாக் காரணங்களையும் கண்டுபிடித்து விடுவீர்கள். இவ்வளவு நாட்கள் குளிர்சாதனப் பெட்டி இல்லாமல் சமாளித்துக் கொண்டுதானே இருந்தீர்கள்! எதுவும் மாறவில்லை, ஆனால் என்ன நடந்தது? உங்கள் மனம் ஒப்பிட ஆரம்பித்து விட்டது.
வெளிச்சத்தைக் கொண்டு வரும்பொழுது இருள் மறைவது போல, உங்கள் மனதில் ஒரு புரிந்து கொள்ளுதலைக் கொண்டு வருவதன் மூலம் அதை (ஒப்பிடுதலையும் பொறாமையும்) வெல்ல வேண்டும். ஆனால் கடன் வாங்கப்பட்ட ஆசைகள் ஒருபோதும் உங்கள் சொந்தமாக முடியாது. அது உங்கள் மனதில் மிகவும் நுட்பமாக நிகழ்வதால், கடன் வாங்கப்பட்ட ஆசையின் சரியான மூலம் தெரிந்து கொள்ளப்படாமலேயே போய் விடுகிறது. அது மனதின் மிகவும் நுட்பமான, தந்திரமான ஒரு விளையாட்டு. ஆனால் நாம் எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
ஒரு சின்ன கதை....
ஒருவன் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு அவன் இருந்த இடத்திற்குத் திரும்ப வந்தான். அவன் நண்பர்களுடன் அக்கம்பக்கமெங்கும் சுற்றி வந்தான். அங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததைக் கண்டு ஆச்சரிய மடைந்தான். நண்பனிடம் விமர்சித்தான், "வளமை சுற்றுப்புறத் தோற்றத்தையே முழுமையாக மாற்றி விட்டது!". நண்பன் சொன்னான், "இல்லை, வளமை இல்லை, வெறும் சாதாரணப் பொறாமை".
நாம் எப்பொழுதும் மற்றவர்களைத் தோற்கடிக்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கடன் வாங்கப் பட்ட ஆசைகளுடன் இருப்பீர்களானால், ஒருபோதும் நிறுத்த மாட்டீர்கள். ஏனெனில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றும் சமயத் தில் இன்னொரு கடன் வாங்கப்பட்ட ஆசை எங்கிருந்தாவது வரும்; நீங்கள் மீண்டும் ஒரு முறை ஓடத் தயாராகி விடுவீர்கள்!
நீங்கள் உங்களுக்குள் மையம் கொள்ளாததால் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் மையம் மாறிக் கொண்டே இருக்கிறது. உங்கள் மையம் மற்றவர்களிடம் இருக்கிறது, உங்களுக்குள் அல்ல! அவர்களுடைய மையமும் வேறெங்கோ இருக்கிறது, அவர்களுக்குள் அல்ல! ஒட்டு மொத்தமாக ஊசலாடிக்
| எது இல்லையோ, அது தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மாயையின் தன்மை, நீங்கள்தான் அதற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். | |---|
கொண்டிருக்கும் மையத்தில் இல்லாத எண்ணங்கள், மற்ற உணர்ச்சிகளுக்கேற்றவாறு நீங்கள் எவ்வளவு ஓட வேண்டும், எவ்வளவு இழுபறி செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் ஒரு பொம்மையாகி விடுகிறீர்கள்.
நான் சொல்கிறேன்... ஒவ்வொரு முறை நீங்கள் எதையேனும் விரும்பும் போதும், தனியே அமர்ந்து உண்மையிலேயே அது உங்களுக்கு வேண்டுமா அல்லது மற்றவர்களிடம் இருப்பதால் அதை விரும்புகிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு ஆசை எழும் போதும், அதை நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய எல்லா கௌரவப் பிரச்சினைகளையும் விட்டு விட்டு, ஒரு சுய ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள். நீங்கள் தனியாக இருக்கும் பொழுதே உங்கள் கௌரவத்தை விட முடியவில்லையென்றால், மக்களுடன் இருக்கும் பொழுது எவ்வாறு விடப் போகிறீர்கள்?
நீங்கள் உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், நடைபாதையில் இறப்பதாயிருந்தாலும், அமைதியுடனும், முழுத் திருப்தியுடனும் இறக்க முடியும். கடன் வாங்கப்பட்ட ஆசைகளுடன் முழு வாழ்க்கை வாழ்ந்தாலும், நீங்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும், உங்களால் ஒருபோதும் உண்மையான மன நிறைவைக் காண முடியாது. மேலும் நிறைவேற்றப்படாத, கடன் வாங்கப்பட்ட ஆசைகளில் இருந்து விடுதலை பெற முடியாமல் நீட்டிக்கப்பட்ட, இழுறியான இறப்பையே பெறுவீர்கள்.
ஜைன மதத்தில், நீங்கள் பிறக்கும்பொழுதே உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான முழு உணவும் சக்தியும் உங்களுடனேயே அனுப்பப்பட்டு விடுவதாக ஒரு நம்பிக்கை
நீங்கள் வெறுமனே விழிப்புணர்வுடன் ஒப்பிடுதலையும் பொறாமையும் பார்த்தாலே, அது உங்கள் மனதின் வெறும் விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள். இருக்கிறது. இதன் பொருள், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களை இந்த பூமிக்கு அனுப்புமுன்னரே, உங்களுடைய உண்மையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சக்தியையும் கொடுத்தே அனுப்புகிறது என்பதுதான்.
ஆனால் இந்த சக்தியை உங்களுடைய கடன் வாங்கப் பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உபயோகிக்க ஆரம்பிக்கும் பொழுதுதான், நீங்கள் உங்களுக்கு ஒன்றுமே கொடுக்கப்படவில்லை, எதுவுமே போதுமான அளவு இல்லை என்று உணர ஆரம்பிக்கிறீர்கள். எதுவும் நிகழாததால் நீங்கள் சோர்வாகவும், எல்லாச் சக்தியையும் இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் உணர்கிறீர்கள். இவ்வாறுதான் பிரச்சினை உருவாகிறது.
பாருங்கள்... தேவைகளுக்கும்¹, ஆசைகளுக்கும்² வேறுபாடு இருக்கிறது. உங்கள் தேவைகள் அனைத்திற்கும் ஏற்கனவே ஏதோ ஒரு வகையில் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. உங்கள் தேவைகளைத் திருப்திப் படுத்தி விட முடியும்; ஆனால் உங்கள் ஆசைகளைத் திருப்திப்படுத்துவது முடியாத காரியம். ஏனெனில் எப்பொழுதும் அவை மாறிக் கொண்டும், தெளிவற்றும் இருக்கின்றன. ஒவ்வொரு முறை ஒரு விருப்பம் அல்லது ஆசை நிறைவேறும் பொழுதும், இன்னும் நூறு வந்து விடுகிறது.
முடிவேயில்லாமல் ஆசைப்படுவது நமது இயல்பு. ஏனெனில் நாம் தொடர்ந்து மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து, அவையனைத்தும் நமக்கு வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் இப்பொழுது இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம்.
Needs¹ Wants²
ஆனால் ஆழ்ந்து ஆராய்வீர்களானால், இது உண்மை யென்பதைக் காண்பீர்கள். உங்கள் மனம் மிகவும் தந்திரமாகவும், சாத்வீகமாகவும் செயல்படுவதால், உங்களால் இதை முதல் தடவையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டிற்கு மின் விசிறி வாங்குவதற்காகக் கடைக்குச் செல்கிறீர்கள். ஆனால் வழியில் சில நண்பர்களைச் சந்திக்கிறீர்கள். அவர்கள் வேறு கடைகளில் வேறு சில பொருட்களை வாங்கப் போவதாகச் சொல்கிறார்கள். உடனே, உங்களுக்கும் அவற்றை வாங்க வேண்டும் என்ற ஆசை வந்து விடுவதால், உங்கள் பாதையை மாற்றிக் கொண்டு, அவர்களுடன் சென்று அவற்றை வாங்குகிறீர்கள். பிறகு உங்களுக்குத் தேவையான மின் விசிறியை வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை என்பதை உணர்கிறீர்கள்!
நீங்கள் ஒப்பிட ஆரம்பித்துக் கொண்டும், மற்றவர்களின் ஆசைகளை வாழ்ந்து கொண்டும் இருந்தீர்களானால், எங்கு நிற்கிறீர்கள் என்பதே தெரியாததால், ஆழமான தொல்லையில் மாட்டிக் கொள்வீர்கள். எப்பொழுதும் உங்களுடைய சொந்த அளவுகோலைக் கொண்டு உங்களை அளந்து கொள்ளுங்கள்; ஒருபோதும் மற்றவர்களின் அளவு கோல்களைக் கொண்டு அல்ல. அது மிகவும் முட்டாள்தனமான மற்றும் அபாயகரமான காரியம்.
இந்தியாவில் சில இடங்களில் காணலாம்... குரங்குகளைப் பழக்குவதையே வாழ்க்கையாகக் கொண்ட குரங்காட்டிகள் இருக்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு கோலை வைத்துக் கொண்டிருப்பார்கள். குரங்கைக்கூத்தி, அவர்கள் சொல்வதையெல்லாம் செய்ய வைக்க, உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் கோலை ஆட்டி, “டான்ஸ் ஆடு ராமா! டான்ஸ் ஆடு!” என்று சொல்வார்கள். குரங்கு நடனம் ஆடும். பிறகு
கடன் வாங்கப்பட்ட ஆசைகள் ஒருபோதும் உங்கள் சொந்தமான முடியாது.
அவர்கள், "குட்டிக்கரணம் போடு ராமா! குட்டிக்கரணம் போடு!" என்று சொல்வார்கள். குரங்கு குட்டிக்கரணம் போடும். குரங்கு வெறுமனே கோலின் இசைக்கேற்ப ஆடும்.
அது போல நாமும் நமது வாழ்க்கையை நடத்த ஒப்பிடுதல் என்னும் கோலை அனுமதித்திருக்கிறோம். நாமும் அதன் இசைக் கேற்ப ஆடிக்கொண்டு, நமக்கு இயல்பான விஷயங்களைச் செய்யாமல், அந்தக்க கோலின் கட்டளைக்கேற்றபடி செய்து கொண்டிருக்கிறோம்.
ஒப்பிடுதலுக்கும், நமது எதிர்பார்ப்புகளுக்கும் ஒரு முடிவே கிடையாது. நாம் எப்பொழுதும் இன்னும், இன்னும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நீங்கள் தொடர்ந்து இந்த பதவிக்கும், அதிகாரத்திற்குமான "எலி ஓட்டப் பந்தயத்தில்" ஓடிக் கொண்டேஇருக்கிறீர்கள். பிறகு எவ்வாறு உங்களால் தளர்வாகவும், மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் இருக்க முடியும்? மேலும் இந்த எலி ஓட்டப் பந்தயத்தில் ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் வெற்றி பெற்றாலும், எலியாகத்தான் இருப்பீர்கள்!
ஆனால் எப்படியோ, பிற்காலத்தில், ஒரு சமயத்தில், இந்த எலி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவது கூட மன நிறைவைக் கொடுப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்; வெற்றி கூட ஒரு ஆழமான திருப்தியற்ற உணர்வை நோக்கியே இட்டுச் செல்கிறது. இதற்குக் காரணம், புறவுலகம் சார்ந்த பொருள் ரீதியான ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட போதிலும், நீங்கள் எப்பொழுதும் உங்கள் இருப்புத்தன்மையை அலட்சியம் செய்தே வந்திருக்கிறீர்கள்.
அதிருப்தியின் அழைப்பு உங்கள் இருப்புத் தன்மை யிலிருந்துதான் வருகிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ளும்பொழுது,
உங்களுக்கு ஒவ்வொரு ஆசை எழும்பொழுதும், அதை நீங்கள் நேர்மையாக ஆராய்ந்து பாருங்கள். மிகவும் தாமதமாயினும் நீங்கள் ஆன்மீகத்தை நோக்கித் திரும்புகிறீர்கள். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாத பொழுது, நீங்கள் மனச் சோர்வை நோக்கித் திரும்புகிறீர்கள். ஏனெனில், உங்களுக்கு எங்கு தவற விடுகிறீர்கள் என்பது தெரியவில்லை; அந்த இழை எங்கேயென்று தெரிய வில்லை; அதை எங்கே இழந்தீர்கள் என்பது தெரியவில்லை; எங்கே நீங்கள் தவறு செய்தீர்கள் என்பதும் தெரியவில்லை.
பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் நம் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது; அவ்வளவு அபரிமிதமாக இருக்கிறது - என்பதை என் அனுபவத்திலிருந்து சொல்ல முடியும்! ஆனால் நாம் அதிருப்தியுடன் இருக்கும் ஒழுங்கு முறைக்கு நன்றாகப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாம் பெற்றுக் கொள்வதனைத்தையும் ஒரு உணர்ச்சியின்றியே பெற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் எப்பொழுதும் இன்னும் அதிகமாக வேண்டும் என்றே விரும்புகிறோம். ஏனெனில், வேறு யாரோ ஒருவரிடம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் ஒப்பிடுதல் நமக்குள் ஒரு விழிப்பற்ற செயல்முறையாகி விட்டது; ஏனெனில் நமக்கு உள்ளேயே ஒரு மையத்தைக் கொண்டு ஒரு மனநிறைவான வாழ்க்கையை வாழ்வது எவ்வாறு என்பது நமக்குத் தெரியவில்லை.
ஒரு சின்ன கதை....
கடவுளைக் காண்பதற்காக ஒருவன் காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தான். கடவுள் மனமிரங்கி அவனுக்குக் காட்சியளித்தார். அவனுக்கு என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்றார். அவன் மிகுந்த சந்தோஷமடைந்து, தான் ஒரு நிலச்சுவான்தாராக இருந்ததாகவும், எல்லாச் செல்வத்தையும் இழந்து விட்டதாகவும், மீண்டும் செல்வந்தனாக விரும்புவதாகவும்
| ஒவ்வொரு முறை நீங்கள் எதையேனும் விரும்பும்பொழுதும், தனியே அமர்ந்து, உண்மையிலேயே அது உங்களுக்கு வேண்டுமா, அல்லது மற்றவர்களிடம் இருப்பதால் அதை விரும்புகிறீர்களா என்று எண்ணிப் பாருங்கள். |
சொன்னான். கடவுள் அவனிடம் மிகுந்த பரிவுடன், அடுத்த நாள் காலை முதல் மாலை வரை அவன் எவ்வளவு தூரம் ஓடுகிறானோ, அந்தப் பிரதேசம் முழுவதும் அவனுடையதாகி விடும் என்றார். அவன் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் விடியலுக்கும் முன்பாகவே ஓட ஆரம்பித்தான். அவனால் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினான். மதியம் நெருங்கிய சமயம், பசி தலை காட்டியது; ஆனால் அவன் அதைக் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டிருந்தான். முன்மாலை யில், தாகமும் சோர்வும் அவனை இறுகப் பற்றியது; ஆனால் பல ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்டிருந்த அண்டை நிலச் சுவான்தாரரைப் பற்றிய எண்ணம் அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. அவனது சமகாலத்திய செல்வந்தர்களின் உருவங்கள் அவன் மனதில் வந்து கொண்டிருந்தது; அவன் தொடர்ந்து ஓடினான். சூரியன் அஸ்தமிப்பதற்குச் சற்று முன்னர், மயக்கம் வருவது போலவும் பலவீனமாகவும் உணர்ந்த போதிலும், இன்னும் சில அடிகள் சமாளித்து ஓடினான். அந்தி மயங்கும் நேரத்தில், அவன் தள்ளாடி... இறந்து விழுந்தான்.
நாம் அனைவரும் நமது வாழ்க்கையை இவ்வாறு தான் வாழ்கிறோம். ‘ஏன் ஓடிக் கொண்டிருக்கிறோம்?’ என்று சிந்திப்பதற்குக் கூட நிற்காமல் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம்! மற்ற அனைவரும் ஓடிக் கொண்டிருப்பதால் நாமும் ஓடுகிறோம்! சங்கராச்சாரியார் இதை மிகவும் அழகாக “ததாகிம், ததாகிம்...” (இதன் பொருள் - அடுத்தது என்ன, அடுத்தது என்ன...) என்று விவரிக்கிறார். நாம் எப்பொழுதும் “அடுத்தது என்ன” என்றே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம்மை ஓட வைக்கிறது.
சந்தாபாசு அவன் வீட்டு வாயிற்படியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் நண்பன் என்ன விஷயம் என்று கேட்டான்.
நீங்கள் உங்களுடைய ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், நடைபாதையில் இறப்பதாயின், அமைதியுடனும், முழு திருப்தியுடனும் இறக்க முடியும்.
அவன் சொன்னான், "என்னுடைய அத்தைப் பாட்டி அவளுடைய எல்லாச் சொத்துக்களையும் எனக்குக் கொடுத்து விட்டு செத்துப் போய் விட்டாள்". அவன் நண்பன் குழப்பமடைந்து, "அவளுக்கு மிகவும் வயதாகி விட்டது. மேலும் அவள் எல்லாச் செல்வத்தையும் உனக்குத்தான் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறாள். இதற்கேன் அழுகிறாய்?" என்று கேட்டான். சந்தா பதிலளித்தான், "உனக்குத் தெரியாது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னால், என் மாமா அவரது எல்லாச் சொத்துக் களையும் எனக்குக் கொடுத்து விட்டுச் செத்துப் போய் விட்டார்". நண்பன் குழப்பமடைந்து கேட்டான், "அதற்கு ஏன் அழுகிறாய்?". சந்தா தொடர்ந்தான், "அதற்கும் முந்தைய வாரம் என் அத்தை எல்லா சொத்துக்களையும் எனக்குக் கொடுத்து விட்டுச் செத்துப் போய் விட்டாள்". இதற்குப் போய் சந்தா எதற்கு அழ வேண்டும் என்று நண்பனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் கேட்டான். "சந்தா, தயவு செய்து சொல், இதற்காக ஏன் அழுகிறாய்?". சந்தா சொன்னான், "உனக்குத் தெரியாது, இனிமேல் செத்துப் போய் சொத்துக்களைக் கொடுப்பதற்கு உறவினர்கள் யாரும் இல்லை!".
(பலத்த சிரிப்பு!)
இது ஒரு மிகைப் படுத்தப்பட்ட கதைதான். ஆனால் நாமும் இது போல்தான் இருக்கிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். நாமெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையிடமிருந்து எதைப் பறித்துக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டிருக் கிறோம். நமது பெயரளவிலான அன்பெல்லாமே பேரத்தைத் தவிர வேறல்ல. சில விஷயங்களில் வெளிப்படையாக புலப்படும் வகையிலும், மற்ற விஷயங்களில் நுட்பமாக சுலபமாக உணர முடியாத வகையிலும் இருக்கிறது. உண்மையில், அது, உங்களால் விழிப்பின்றி
கடான் வாங்கப்பட்ட ஆசைகளுடன் முழுவாழ்க்கை வாழ்ந்தாலும், நீங்கள் பளிங்கு மாளிகையில் வாழ்ந்தாலும், உங்களால் ஒருபோதும் உண்மையான மனநிறைவைக் காண முடியாது.
செயல்படுத்தப்படுவதால், உண்மையான அன்பென்றே எண்ணத் தோன்றுகிறது.
ஒப்பிடுவதற்கான அடிப்படைக் காரணம், நம்மிடம் மன நிறைவில்லாததே; நம்மிடமிருக்கும் அனைத்தும் நமக்கு சந்தோஷத்தைத் தருவதில்லை. காலையிலிருந்து இரவு வரை, ஒரு 24 மணி நேரத்திற்கு நீங்கள் கண் பார்வையை இழந்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கண்களை மூடிக் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்ய முயற்சி செய்யுங்கள். சில நிமிடங்களிலேயே உங்களுடைய வழக்கமான, சகஜமான வேலைகள் கற்பனைக்கெட்டாததாகி விடுவதை உணர்ந்து கொள்வீர்கள். ஏன் 24 மணி நேரம், வெறும் சில நிமிடங்களிலேயே, கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விடுவீர்கள். மீண்டும் கண்களைத் திறந்து உலகத்தைப் பார்ப்பது ஒரு மிகப் பெரும் விடுதலையாக இருக்கும். அப்பொழுது ஒரு வேளை உங்களுடைய கண் பார்வைக்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லக் கூடும்!
நீங்கள் எப்பொழுதாவது உங்களைக் கண் பார்வையற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குக் கண்பார்வையைக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்களா? நீங்கள் எப்பொழுதாவது உங்களுடைய கண் பார்வைக்காகத் தன்னிச்சையாக நன்றி உணர்வுடன் இருந்திருக்கிறீர்களா? இல்லை! ஏன்? ஏனெனில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றை எப்பொழுதும் நீங்கள்ாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். அதுதான் காரணம். "அது எப்படியும் இருக்கிறது... நாம் அடுத்தது என்னவென்று பார்ப்போம்", என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் நம் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது.
நாம் அனைவரும் இந்த மூன்று அச்சுக்களைச் சுற்றியே செயல்படுகிறோம்: செய்தல்¹, பெறுதல்², இருத்தல்³. இருத்தலை அனுபவிக்காமல், பெறுவதற்காகச் செய்வதே நமது எல்லாத் துயரங்களுக்கும் ஒரே காரணம். செய்வதால் ஒருபோதும் பெறுவதை ஈடு செய்ய முடியாது! ஒவ்வொரு முறையும் நாம் கடினமாக உழைத்து நமது ஒரு ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொழுதும், நம்மை ஓட வைக்க இன்னும் பல ஆசைகள் வந்து விடுகிறது.
"நான் இப்பொழுது வேலை செய்து விடுகிறேன். பிறகு அனுபவித்துக் கொள்கிறேன்” என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். பிறகு, நீங்கள் திரும்ப வந்து அனுபவிக்கலாம் என்று எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், அது ஒருபோதும் நடக்காது. ஒவ்வொரு ‘நாளை’யும் இன்று என்ற ரூபத்திலேயே வருகிறது. செய்தல் ஒவ்வொரு கணமும் இருத்தலை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழ்தலைத் தள்ளிப் போடாதீர்கள்! கொண்டாடுங்கள்! வாழ்க்கையை அனுபவியுங்கள் - இப்பொழுதில்லையெனில் எப்பொழுதும் இல்லை. நாமனைவரும், பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வாழ்க்கை முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இறுதியில் கல்லறையைச் சென்றடைந்து விடுகிறோம். நீங்கள் ஓடு பாதைக்கு வந்து விட்டாலே, வாழ்க்கையை அனுபவிக்கும் உண்மையான திறனை இழந்து விடுகிறீர்கள். எவ்வாறு அனுபவிப்பது என்பதை மறந்து விடுகிறீர்கள்.
"அடைவதை விட துரத்திக் கொண்டிருப்பதில்தான் அதிக சுகம் இருக்கிறது!” என்று ஒரு கூற்று இருக்கிறது. எப்பொழுதுமே, நீங்கள் எதையாவது துரத்திக் கொண்டிருக்கும்
| Doing¹ | Having² | Being³ |
வரை, அது இந்த முழு உலகத்திற்கும் ஈடாகத் தெரியும் - ஆனால் அதை அடைந்த பின்னரோ, எப்படியோ இனி அது முக்கியமற்றதாகி விடுகிறது. நீங்கள் உங்களை அறிந்து கொண்டு, உங்களுக்குச் சரியாக என்ன வேண்டும் என்று புரிந்து கொண்டு, அதை மட்டும் செய்ய முயற்சி செய்வீர்களாயின், ஒருபோதும் இது போன்ற சுயமுரண்பாடான மற்றும் சிதறுண்ட சூழ்நிலைகளில் இறங்க மாட்டீர்கள்.
ரமண மஹரிஷி அழகாகச் சொல்கிறார்...
"அடைவதன் முன் கடுகே ஆனாலும்
மலையாய்க் காட்டி,
அடைந்த பின் மலையே ஆனாலும்
கடுகாய்க் காட்டும்
மாய மனம்"
அதன் பொருள்: மனமானது அடைவதற்கு முன் கடுகைக் கூட ஒரு பெரிய மலையைப் போலக் காட்டி, அடைந்த பிறகு அது மலையாகவே இருந்தாலும் அதை அற்பமான கடுகைப் போல காட்டும் ஒரு மாயை!
ஒப்பிடுதலே இதுபோன்ற மனோபாவத்திற்கு மூல காரணம். மனம் வெறுமனே அதைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் பார்த்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் உங்களுடைய எல்லா ஆசைகளையும் துறந்துவிடச் சொல்லவில்லை. ஒப்பிட வேண்டாம் என்றும் சொல்லவில்லை. உங்களுடைய ஒப்பிடுதலில் தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன். பொறாமையில் தெளிவைக் கொண்டு வாருங்கள். ஏன் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். வேறு யாரோ ஒருவர் ஓடிக் கொண்டிருக்கிறார் என்பதற்காக ஓடாதீர்கள், அவ்வளவே.
தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. தேவைகள் சில. ஆனால் ஆசைகளோ பல.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, ஒப்பிடா விட்டால் நாம் எங்கு நின்று கொண்டு இருக்கிறோம் என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?".
பாருங்கள்... ஒப்பிடுதலில் இரண்டு வகை இருக்கிறது: ஆக்கபூர்வமான - ஒப்பிடுதல்¹ மற்றும் அழிவுபூர்வமான - ஒப்பிடுதல்².
ஆக்கபூர்வமான ஒப்பிடுதலில், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து, நீங்கள் அறியாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களைப் பார்த்து உங்கள் அனுபவபூர்வமான அறிவை வளர்த்துக் கொள்கிறீர்கள். விஷயங்களை எவ்வாறு இன்னும் நன்றாகச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொள்கிறீர்கள்.
உண்மையில், இதை ஒப்பிடுதல் என்று கூடச் சொல்ல முடியாது; அறிவைச் சம்பாதிப்பது அல்லது அனுபவபூர்வமான அறிவை வளர்த்துக் கொள்வது என்று வேண்டுமானால் சொல்லலாம். மேலும், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து நீங்கள் பொறாமையோ அல்லது வேறு ஏதாவது விரும்பத்தகாத எண்ணங்களையோ அடைவதில்லை. இதுதான் மிகவும் முக்கிய மான விஷயம்.
நாம் பேசிக் கொண்டிருக்கும் உண்மையான ஒப்பிடுதல், மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் அழிவுபூர்வமான ஒப்பிடுதலைப் பற்றி.
அழகோ, பணமோ, அறிவோ அல்லது அந்தஸ்தோ மற்றவர்கள் அனுபவிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பொழுதுதான் நீங்கள் அதை அடைய விரும்ப
Constructive Comparison¹ Destructive Comparison² ஆரம்பித்து, கடன் வாங்கப்பட்ட ஆசைகளின் சுழலில் விழுகிறீர்கள். இது பொறாமையை நோக்கி இட்டுச் செல்கிறது.
இந்த உலகத்தில், நீங்கள் எதைச் செய்யினும் அதை விட நன்றாகச் செய்பவர்கள் நிச்சயமாக இருப்பார்கள். நீங்கள் உலகத்தின் தலைசிறந்த பொறியாளராகவோ அல்லது வேகமாக ஓடக் கூடியவராகவோ அல்லது மிகவும் திறமை வாய்ந்த ஒரு ஓவியராகவோ இருப்பதற்கான சாத்தியக் கூறு 99.99 சதவிகிதம் இல்லை. அப்படியெனில் நீங்கள் இவற்றை அனுபவிப்பதில் ஏதேனும் குறை இருக்கிறதென்றா பொருள்? நீங்கள் வேறு எவரையும் விட குறைவாக அனுபவிக்கிறீர்களோ என்று எண்ணும் பொழுதுதான் உங்கள் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கிறது! "வேறு யாரோ ஒருவர் உங்களை விட அதிகமாக அனுபவிக்கிறார்களோ" என்ற எண்ணம் எழும் கணத்திலேயே, உங்கள் மொத்தச் சுவையும் மாறி விடுகிறது. நீங்கள் பொறாமையுடன் அமைதியற்றும் போய் விடுகிறீர்கள்.
பாருங்கள், வறுமையே நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம்தான் நம்மைத் தொந்தரவு செய்கிறது. நாம் இருக்கும் நிலையிலேயே ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம் நம்முள் நுழைந்தவுடன், நாம் துன்பமடைகிறோம். எவ்வாறு இந்த எண்ணம் வந்தது? மற்றவர்களைப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்வதால். நாம் இவ்வாறு உணர்வதற்குக் காரணம், இந்த எண்ணம் நேரடியாக நமது அஹங்காரத்தைத் தாக்கி, நம்மை ஒரு மாவடுவைப் போலச் சுருங்கிப் போக வைப்பதால்தான்.
உங்கள் தேவைகளைத் திருப்திப் படுத்திவிட முடியும். ஆனால் உங்கள் ஆசைகளை திருப்திபடுத்துவது முடியாத காரியம்.
ஒரு சின்ன கதை....
ஒரு தெருவின் இரு புறமும் எதிரெதிரே இரண்டு கடைகள், ஏறக்குறைய ஒரே மாதிரியான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தன. எப்பொழுதும் அவர்களுக்கிடையே ஒரு கடுமையான போட்டி நிலவியது. அவற்றில் ஒரு கடைக்காரர் ஒருநாள் வெளியே ஒரு விளம்பரப் பலகையை வைத்தார்: "1929-ஆம் வருடம் நிறுவப்பட்டது". எதிர்ப்புறமுள்ள கடைக்காரர் இதைக் கடைக்குள்ளிருந்து கவனித்துக் கொண்டி ருந்தார். அடுத்த நாள் அவர் ஒரு விளம்பரப் பலகையை அவரது கடையின் முன் வைத்தார்: "எல்லாம் புதிய பொருட்கள். பழைய சரக்குகள் எதுமில்லை".
(சிரிப்பு)
நீங்கள் உங்களை மற்றவருடன் ஒப்பிட்டுக் கொண்டு அதற்கு எதிர்வினையாற்றிக் கொண்டு இருந்தீர்களானால், உங்கள் மதிப்பை இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று பொருள். நீங்கள் வெறுமனே உங்கள் மூளையிலிருந்து எதிர்ச்செயல் புரிகிறீர்கள்; அறிவிலிருந்து அல்ல. உங்கள் மூளை தான் காணும் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொண்டு, நீங்கள் ஒரு தர்க்க ரீதியற்ற வகையில் எதிர்ச்செயல் புரிவதற்கு ஒரு உடனடி அட்டவணையாக உதவுகிறது. அதே சமயத்தில், உங்கள் உள் அறிவுக் கூர்மையோ விஷயங்களை உள்ளது உள்ளவாறே நோக்கி மேலே செல்கிறது.
நீங்கள், உங்களுக்கு அருளப்பட்ட ஆற்றலைப் புரிந்து கொள்ளாதபோது, நீங்களே உங்களுக்குப் போதுமானதாக இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்காத போது, தானாகவே உங்களுக்குள்ளிருக்கும் வஸ்துவின் மீது நம்பிக்கையற்று, மற்றவர்களைப் பின்பற்ற ஆரம்பிக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறை ஒரு ஆசை நிறைவேறும் பொழுதும் இன்னும் நூறு வந்து விடுகிறது.
சார்பின்றி எதுவுமில்லை என்று புத்தர் சொல்கிறார். ஒரு புதிய கோளில் நீங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உயரமானவரா அல்லது குள்ளமானவரா? அசிங்கமா அல்லது அழகா? பணக்காரரா அல்லது ஏழையா? சொல்லுங்கள்! நீங்கள் உங்களை எதுவென்றும் அழைத்துக் கொள்ள முடியாது, சரிதானே? நீங்கள் வெறுமனே நீங்களாகவே இருப்பீர்கள்! அவ்வளவுதான். புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் இந்தக் கோளில் இருக்கும் பொழுதும் இதுதான் உண்மை.
ஒவ்வொரு தனி மனிதரும் தனித் தன்மையுடையவர். உங்களால் ஒரு சிங்கத்தையும் குதிரையையும் ஒப்பிட முடியுமா? நாம் எப்பொழுதாவது நம்மை மலர்களுடனோ அல்லது பறவைகளுடனோ அல்லது மலைகளுடனோ ஒப்பிட்டுக் கொள்கிறோமோ? நாம் வெறுமனே அவற்றின் அழகை அனுபவிக்கிறோம், இல்லையா?
அதே போல், நீங்கள் ஏன் மற்ற மனிதர்களைக் கண்டும் மகிழ்ச்சியடையக் கூடாது?
மனிதர்கள் ஒரே மாதிரிக் காட்சியளித்தாலும், ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டும் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பாதையில் முழுக்கவனத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் வரை ஒவ்வொரு நிமிடமும் மன நிறைவை அனுபவிப்பீர்கள். இன்னொரு மனிதரின் பாதையைப் பார்ப்பது என்றால் என்ன என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
‘ஏன் ஓடிக்கொண்டிருக்கிறோம்?’ என்று சிந்திப்பதற்குக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு சின்ன கதை....
நிட்டி முதலியார் தெரு விளக்குகள் இல்லாத ஒரு இருளான கிராமச் சாலையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு பாதுகாப்பிற்காக முன்னால் சென்று கொண்டிருந்த காரைப் பின் தொடர்ந்து செல்வது என்று தீர்மானித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று நின்றது. நிட்டி நிறுத்த முடியாமல் அதன்மீது மோதினார். “நீ ஏன் நிறுத்தப் போவதாக சைகை செய்திருக்கக் கூடாது?” என்று நிட்டி அலறினார். தலையை வெளியே நீட்டிய ஓட்டுனர் சொன்னார், “என்னுடைய கேரேஜிற்குள்ளேயேவா?”.
(பலத்த சிரிப்பு!)
உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துவீர் களானால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும் உங்கள் திறனில் விரிவடைந்து கொண்டும் இருப்பீர்கள். நீங்கள் உங்களை உங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும்; ஒருபோதும் மற்றவர்களுடன் அல்ல. நீங்கள் உங்களை மட்டுமே வெற்றி கொள்ள வேண்டும்; மற்றவர்களை அல்ல. மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்கு உதவாத வீணான நேரம்தான்.
ஒருவன் 1000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்தான். 200 மீட்டர் ஓடிய பிறகு, பின்னால் திரும்பிப் பார்த்து, மற்றவர்கள் அவனுக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் தொடர்ந்து ஓடினான். 500 மீட்டர் ஓடிய பிறகு, மீண்டும் திரும்பிப் பார்த்து, தான்தான் முன்னால் இருக்கிறோம் என்று சந்தோஷமடைந்து தொடர்ந்து ஓடினான். இவ்வாறே ஒவ்வொரு சில மீட்டருக்குப் பிறகும் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி, இறுதியில்
| ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக | | இருங்கள். வேறு யாரோ ஒருவர் ஓடிக்கொண்டிருக்கிறார் | | என்பதற்காக ஓடாதீர்கள். அவ்வளவே. |
வெற்றி பெற்று விட்டான். அவன் திரும்பிப் பார்க்காமல், வேகமாக ஓடுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்தால், இன்னும் குறைந்த காலத்திற் குள்ளாகவே அவன் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஒருவேளை ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கக் கூடும்! அதே போல, நம் வாழ்க்கையிலும், மற்றவர்களைக் கவனிப்பதற்குப் பதிலாக, எப்பொழுதும் நமது சொந்த முன்னேற்றத்திலேயே முழுக்கவனத்துடன் இருப்போமாயின், நமது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து உண்மையாக்க முடியும். ஆனால் நாம் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு, நமது முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து உண்மையாக்காமல் தவற விட்டு விடுகிறோம்.
நீங்கள் ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் விரயமாக்குகிறீர்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்; 60 சதவிகிதத்திற்கும் மேலாக என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். முக்கியமாக, ஒப்பிடுதலும் பொறாமையும், மற்றவற்றை விட அதிகமாக, உங்கள் சக்தியை உறிஞ்சி விடும். மற்றவரிடம் எது இருப்பினும், எவ்வாறு அவர் சமாளித்து அதை அடைந்திருப்பார் என்றெல்லாம் திட்டமிடுவதிலும், கணக்குப் போடுவதிலும் உங்கள் மனம் மும்முரமாக வேலை செய்யும். உங்கள் மூளை சூடேறும். இந்தத் தேவயற்றக் கணக்குகளால் உங்கள் ஒட்டு மொத்த அமைப்புமே தன் சக்தியை இழந்து விடும். ஒப்பிடுதலாலும் பொறாமையாலும் நீங்கள் வெறுமனே உங்கள் சக்தியை வெகு சீக்கிரத்திலேயே வடித்து விட முடியும்.
நாம் எப்பொழுதும் பெட்ரோல், தண்ணீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நமது
இந்த எலி ஓட்டப் பந்தயத்தில் ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் வெற்றி பெற்றாலும் எலியாகவேதான் இருப்பீர்கள். ‘ததா கிம்? ததா கிம்?’ - ‘அடுத்தது என்ன? அடுத்தது என்ன?’
சொந்த சக்தியைச் சேமிப்பது பற்றி என்ன சொல்வது? நமது சொந்த சக்தியைச் சரியான வழியில் உபயோகிப்பது பற்றி என்ன சொல்வது?
நாம் ஏன் நமது சொந்த சக்தியைப் பற்றிய விழிப்பின்றி இருக்கிறோம்? நாம் நம்மை சக்தி அருளப் பெற்றவர்களாய் காண்பதில்லை; அதுதான் காரணம். நம்மால் வெளியில் இருக்கும் சக்தி மூலங்கள் வீணடிக்கப்படுவதைக் காண முடிகிறது; ஏனெனில் அங்கு சக்தியை நாம் உணர முடிந்த வடிவில் காண்கிறோம். அதே சமயத்தில், நமது சொந்த சக்தியை, நாம் வெறுமனே ஆழமான விழிப்பற்ற வழிகளில் விரயம் செய்து விட்டு, பிறகு நமக்குப்போதுமானது கொடுக்கப்படவில்லை என்று குறை கூறிக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் உங்கள் சொந்த வளர்ச்சிக்காக உங்கள் எல்லா சக்தியையும் உபயோகப்படுத்தினால், உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்; சுலபமாக விரிவடைந்து விடுதலை பெற்ற உணர்வை அனுபவிக்கலாம்.
ஒப்பிடுதலைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் உங்கள் பலவீனத்தையோ அல்லது பலவீனமான செயல் பாட்டையோதான் அளவிட எடுத்துக் கொள்கிறீர்கள். அதுதான் பிரச்சினை. ஏன் அவ்வாறு செய்ய விரும்புகிறீர்கள்? ஒருபோதும் உங்களை உங்கள் பலவீனத்தைக் கொண்டு அளவிடாதீர்கள். நீங்கள் அஹங்காரத்துடன் உங்களை ஏதோ சிறந்தவராக பறைசாற்றிக் கொள்ளவும் வேண்டாம். ஆனால் கொஞ்சம் சுயமரியாதையுடன் நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதைக் காண முடியும். அப்பொழுது உங்களை இவ்வாறு அளவிட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
| நீங்கள் எப்பொழுதாவது உங்களை கண்பார்வையற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குக் கண்பார்வையைக் கொடுத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறீர்களா? | |---|
உங்களுக்குச் சுயமரியாதை இருக்குமானால், ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் உணர்ந்து, ஒப்பிடுவதற்கே இடமில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். வெறுமனே நமது இருப்பிற்காகவே நன்றியுணர்வுடன் இருப்பதற்கு இது முதல் படியும் கூட!
ஒரு சின்ன கதை....
ஒரு முறை ஒரு அரசன் மந்திர சக்திகளை அடைவதற்காக ஒரு குருவிடம் சென்றான். அவனது அண்டை நாட்டு அரசர்களை விட மிகவும் சக்தி வாய்ந்தவனாக ஆக விரும்பினான். அவன் குருவின் முன் அமர்ந்து தான் வந்ததன் நோக்கத்தைப் பற்றிக் கூறத் தொடங்கினான். குரு அரசன் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டார். பிறகு அவர் அவனைத் தனது தோட்டத்தில் ஒரு ரோஜாச் செடியும், ஒரு சைப்ரஸ் செடியும் அருகருகே வளர்ந்திருந்த இடத்திற்குப் போகச் சொன்னார். அவர் சொன்னார், “அவைகளே உனது ஆசான். நீ கற்றுக் கொள்ள வேண்டியதை அவை உனக்குக் கற்றுக் கொடுக்கும்”. தோட்டத்திற்குச் சென்ற அரசன் அந்த இரண்டு செடிகளையும் பார்த்தான். அந்தச் செடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் குருவிடம் திரும்பி வந்து கேட்டான், “தாங்கள் என்ன சொல்கிறீர்கள் குருவே? எவ்வாறு அவை எனக்குக் கற்றுத் தர முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”. குரு அவனை அந்தச் செடிகளிடம் அழைத்துச் சென்று விளக்கினார், “இந்த சைப்ரஸ் செடி ரோஜாச் செடிக்கு அருகில் பல வருடங்களாக இருக்கிறது. அது ஒருபோதும் ரோஜாச் செடியாக விரும்பியது இல்லை. அதே போல், ரோஜாச் செடியும் ஒருபோதும் சைப்ரஸ் செடியாக விரும்பியது இல்லை. அவைகள் தினமும் வெறுமனே தங்களது கடமைகளான வளர்தலையும்
நாம் அனைவரும் இந்த மூன்று அச்சுக்களைச் சுற்றியே இருக்கிறோம்; செய்தல், பெறுதல், இருத்தல். மலர்தலையும் செவ்வனே செய்து வருகின்றன. மனிதன் சைப்ரஸ் செடியாக இருந்திருந்தால், தன்னை ரோஜாச் செடியுடன் ஒப்பிட்டுக் கொண்டு, மக்களின் கவனத்தைக் கவரும் ரோஜாச் செடியின் மீது பொறாமை கொண்டிருப்பான். அல்லது ஒருவேளை ரோஜாச் செடியாக இருந்திருந்தால், பொறாமையுடன் சைப்ரஸ் செடியைப் பார்த்து, தினமும் மக்களால் பறிக்கப்படும் அவஸ்தைகள் இல்லாமல் அது எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று எண்ணியிருப்பான்''. குரு சொன்னார், "இதுவே நீ அடையக் கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திர சக்தி!’”.
பாருங்கள், இரண்டு செடிகளும் செழுமையாக வளர்ந்த தற்குக் காரணம், அவை தங்கள் எல்லாச் சக்தியையும் தங்கள் சொந்த வளர்ச்சிக்காக உபயோகித்ததுதான். ஒரு அணுவளவு சக்தி கூட மற்றவற்றின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காக விரயமாக்கப்படவில்லை. அவற்றின் 100 சதவிகித சக்தியும் அவற்றின் வளர்ச்சிக்கே உபயோகப்படுத்தப்பட்டது.
அதே போல, உங்களுடைய எல்லாச் சக்தியையும், உங்களுடனேயே பந்தயத்தில் ஓடவும், உங்களுடனேயே போட்டியிடவும் செலவழித்தீர்களானால், உங்களுடைய முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறீர்கள் என்று திரும்பிப் பார்த்தால், அதை உங்களாலேயே நம்ப முடியாது. மேலும் இடையூறற்ற நிரந்தரமான அமைதியைப் பெறுவதற்கும் இதுவே ஒரே வழி!
"இடையூறு அற்ற” அமைதியைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஓடும் பொழுது, உங்களுக்கு ஒரு குறுகிய கால அமைதி, ஒவ்வொரு ஆசை நிறைவேறும் பொழுதும், கிடைக்கலாம். அதுவும் அடுத்த
| இருத்தலை அனுபவிக்காமல் பெறுவதற்காகச் செய்வதே நமது எல்லாத் துயரங்களுக்கும் ஒரே காரணம். |
ஒப்பிடுதலை ஆரம்பித்தவுடன் மறைந்து விடும். இன்னொரு பக்கம், நீங்கள் உங்களுடன் மட்டுமே ஓடும் பொழுது, விரைவான முன்னேற்றமும் இடையூறற்ற அமைதியை யும் பெறுவீர்கள்.
மற்றவர்களால் இடையூறு செய்யப்பட முடியாத அமைதி, மிகப் பெரிய விடுதலையாகும். தெளிவாக இருங்கள்... இன்னொருவரால் இடையூறு ஏற்படுவதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்குள் ஏதோ தடை அல்லது புரிந்து கொள்ளுதலில் குறை இருக்கிறதென்று அர்த்தம். அதாவது, நீங்கள் உங்கள் அமைதிக்கு இன்னும் மற்றவர் களைச் சார்ந்து இருக்கிறீர்கள் என்று பொருள்.
உங்கள் சொந்த பலவீனத்திற்கு, உங்கள் தெளிவுக் குறைவிற்கு நீங்கள் சமூகம் என்று பெயர் கொடுக்கிறீர்கள். சமூகம் என்று ஒன்றுமில்லை. வானமே எல்லை, வானம் என்ற ஒன்றே இல்லை! விரிதலே வாழ்வு; சுருங்குதல் சாவு. நீங்கள் உங்களுக்குள் தெளிவாக இல்லை; அதன் பழியை மக்கள் மீது போடுகிறீர்கள்.
நீங்கள் மற்றவர்களின் கனவுகளை உங்களுக்கு நிஜமாக்கிக் கொள்ளும் சூழலில் சிக்கிக் கொண்டு விட்டால், எலி ஓட்டப் பந்தயத்தில் இருக்கிறீர்கள்! ஒப்பிடுதலும் பொறாமையும் மற்றவர்களின் கனவுகளைக் கடன் வாங்கிக் கொண்டு அவற்றை உங்களுடைய நிஜமாக்கிக் கொள்ளும் முயற்சியைத் தவிர வேறல்ல. எலி ஓட்டப் பந்தயத்தில் இருப்பதற்கு சக்தி அல்லது ஆற்றல் தேவை. சக்தி அல்லது ஆற்றல்தான் உங்கள் கனவுகளை நனவாக்குகிறது. ஆனால் நிஜம் உண்மையில் உங்கள் கனவு என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான சாதனை! இதைப் புரிந்து கொள்வதற்கு ஆற்றல் தேவையில்லை; புத்தி அல்லது அறிவே தேவை.
‘நான் இப்பொழுது வேலை செய்து விடுகிறேன்,
பிறகு அனுபவித்துக் கொள்கிறேன்’
என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.
ஆற்றல் உங்கள் கனவுகளை நனவாக்கும்; அறிவு நிஜமே உங்கள் கனவுதான் என்பதைப் புரிய வைக்கும்! நீங்கள் ஏற்கனவே என்னவாக இருக்க வேண்டுமோ அதுவாகத்தான் இருக்கிறீர்கள். விழித்துக் கொள்ள வேண்டியது மாத்திரமே தேவை, நீங்கள் நிஜமாக்க முயற்சி செய்யும் மற்ற அனைத்துமே கடன் வாங்கப்பட்டதும் பொய்யானதும்தான் என்பதை அறிவு உங்களுக்குப் புரிய வைக்கும்!
நாம் எப்பொழுதும் வெளியுலகில் சாதிப்பதைத்தான் பார்க்கிறோம். இதுவே ஒப்பிடுதலுக்கும் பொறாமைக்கும் மூல காரணம். நீங்கள் வெளியுலகில் ஏதேனும் உணா்த்தக்க வகையில் சாதித்திருந்தால் மட்டுமே மக்கள் உங்களை மதிக்கிறார்கள். கல்வி சார்ந்த பட்டங்கள், அழகிற்கான பட்டங்கள், தொழில் சார்ந்த பதவிகள், ஆராய்ச்சி வெளியீடுகள், வங்கி இருப்பு ஆகியவையே சமூகம் உங்களை மதிப்பிட வைத்திருக்கும் அளவு கோல்கள்.
பாருங்கள், முதலில் நீங்கள் யாராலும் மதிப்பிடப் பட வேண்டியதில்லை. உங்கள் சொந்த அறிவின் மீது நம்பிக்கை வைத்து நீங்களே உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியுலகில் சாதிக்க வேண்டியதும், மனித குலத்திற்குச் சேவை செய்ய வேண்டியதும் நிறையவே இருக்கிறது. அறிவியலின் சாதனையால்தான் இன்று நான் இந்த மின் ஒலி பெருக்கியின் மூலம் பேசுவதை உங்களால் கேட்க முடிகிறது.
ஆனால் நீங்கள் உள்ளுலகிலும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளியுலக சாதனைகள் தற்செயலானவை. அவை உங்களுக்கு உடனடியாகப் பெயரையும், புகழையும், பணத்தையும் தரலாம். ஆனால் உண்மையான சாதனை உள்ளுலகத்தில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு 'நாளை'யும் 'இன்று' என்ற ரூபத்திலேயே வருகிறது. உங்களில் மையங்கொண்டு, கூரிய விழிப்புணர்வுடன் வெளியுலக செயல்பாடுகளில் வெறுமனே தாமரையிலைத் தண்ணீர் போலப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். வெளிச் செயல்பாடுகள் இடையூறின்றி நடைபெறட்டும்; ஆனால் நீங்கள் உங்கள் இருப்புத்தன்மையில் மையம் கொண்டிருங்கள். அவ்வாறு செய்தால், உங்களால் வெளியுலகில் இன்னும் சிறப்பாகச் செயலாற்ற முடியும்; ஏனெனில் உங்கள் உள் அறிவு வளர்ந்து கொண்டும், நீங்கள் செயலாற்றுவதில் வழிகாட்டிக் கொண்டும், அவற்றின் விளைவை ஒரு வெறும் பார்வையாளராக கவனித்துக் கொண்டும் இருக்கும்.
பிறகு நீங்கள் வெளியுலக சாதனைகளுக்கேற்றவாறு அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருப்பதை நிறுத்தி விடுவீர்கள். உங்கள் இருப்புத் தன்மையின் மையத்தில் உறுதியாக நிலைபெற்று மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். இந்த ஒப்பிடுதல் மற்றும் பொறாமைச் சுழலில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி உங்கள் மையத்தைக் கண்டுபிடிப்பதுதான்.
இன்று எத்தனை வெற்றிகரமான தொழிலதிபர்கள் வெற்றியினால் வரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் விரும்பிய அனைத்தையும் சாதித்து விட்டார்கள்; அவர்களுடைய சொந்தக் கனவுகள், கடனாகப் பெற்ற கனவுகள் அனைத்தையும் நிஜமாக்கிவிட்டார்கள். ஆனாலும் மனநிறைவடையவில்லை; அவர்களிடம் ஒரு வெறுமை இருக்கிறது.
எதற்காக இவ்வளவு ஓடினார்கள் என்று ஆச்சரியப்படத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களது எலி ஓட்டப்பந்தயத்தில் இத்தனை நாளும் அவர்களைத் தூண்டி விரட்டிக் கொண்டிருந்த ஆசைகளும், வலிமையான உணர்வுகளும் இப்பொழுது இல்லை.
வாழ்தலைத் தள்ளிப் போடாதீர்கள். கொண்டாடுங்கள். அனுபவியுங்கள். இப்பொழுதிலையையெனில் எப்பொழுதும் இல்லை. அவர்கள் தங்களைப் பற்றிய ஒரு குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தொழிலில் இருந்த காலத்தில், அவர்களின் மீதே இருந்த பிடிமானம், இப்பொழுது திடீரென்று வலுவிழந்து விட்டது போல் தோன்றுகிறது.
இதற்குக் காரணம் அவர்கள் விழிப்புணர்வில்லாமல் ஓடியதுதான்; அவர்களுக்கே நேரம் ஒதுக்கக் கூட நிற்காததுதான்; சுய விசாரணை செய்து கொள்ளாததுதான். அதன் விளைவாக, இப்பொழுது அவர்கள் நிற்கும் பொழுது அல்லது திடீரென்று இனிமேல் ஓட முடியாது என்ற நிலை வரும் பொழுது, அவர்கள் தங்களிடமே தஞ்சம் புகுந்து, தங்கள் இருப்புத் தன்மையுடனேயே தாங்கள் இசைவாக அல்லது இயல்பாக இல்லாததைக் கண்டு கொள்கிறார்கள். இதுவே ஒரு வியாதியாக அல்லது மனச் சோர்வாக உருவெடுக்கிறது.
நீங்கள் வெற்றியினால் வரும் மனச்சோர்வில் விழுந்து விட்டீர்களானால், மூன்று வழிகளில் புகலிடம் தேடலாம். முதலாவது, போதை மருந்துகள் - இதற்கு அடிமையாவது மேலும் மனச்சோர்வை நோக்கியே இட்டுச் செல்லும். இரண்டாவது வழி, தற்கொலை - இது தப்பித்தல். மூன்றாவது வழி, தியானம் - தீர்வை உள்ளே தேடுவது. அறிவுக்கூர்மை உடையவர்கள் மூன்றாவது வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த மனச்சோர்விலிருந்து விடுதலை பெற சுய விசாரணை ஒரு வழியாக முடியும். பிரச்சினை உள்ளே இருக்கும்போது, நீங்கள் தீர்வை வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் இருப்புத்தன்மையை வெகுகாலமாக அலட்சியம் செய்து விட்டீர்கள். இந்த மனச் சோர்வு உண்மையில் உங்கள் இருப்புத் தன்மையின் அழைப்புதான். அதனால்தான் மீண்டும் மீண்டும் குருமார்கள் உங்கள் உள் மையத்தில் மையங்கொண்டு வெறுமனே
‘அடைவதை விட துரத்திக் கொண்டிருப்பதில்தான் அதிக சுகம் இருக்கிறது’ என்று ஒரு கூற்று இருக்கிறது.
வெளியில் செயலாற்றிக் கொண்டிருக்கும் உத்திகளை எப்போதும் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இதையே நீங்கள் தொழிலில் உச்சத்தில் இருக்கும் பொழுது சொன்னால், கவனம் செலுத்த விரும்பமாட்டீர்கள். ஏனெனில் உங்களிடம் போதுமான, நீங்கள் கொண்டு வந்த அனைத்துச் சக்தியும், உங்களது மையத்தை விட்டு விலகிய நடத்தையினால் வீணாக்குவதற்கென்றே இருக்கிறது. உங்கள் சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும் பொழுது, எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்வீர்கள். அந்த "ஏதோ" வைத்தான் குருமார்கள் மீண்டும் மீண்டும் உங்களுக்குச் சொல்ல முயற்சி செய்கிறார்கள்.
சிறந்த இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மரணப் படுக்கையில் இருந்தார். அவருக்கு நெருக்கமான சிலர் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அவரிடம், இன்னொரு முறை பிறக்க நேர்ந்தால் என்னவாகப் பிறக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும், அவர் இன்னும் சிறந்த விஞ்ஞானியாக அல்லது அதுபோல ஏதாவதுக பிறக்க விரும்புகிறேன் என்று சொல்வாரென எதிர்பார்த்தனர். ஐன்ஸ்டீன் பதிலளித்தார், "நான் மீண்டும் பிறப்பதாயிருந்தால், ஒரு குழாய் ரிப்பேர் செய்பவராகப் பிறக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்".
அவர் சாதிக்க வேண்டியதையெல்லாம் சாதித்து விட்டதாகவும், ஆனால் எதற்காக இதையெல்லாம் சாதித்தாரோ அதை சாதிக்கவில்லையென்றும் உணர்ந்தார். அவர் உலகிற்கு மகத்தான உண்மைகளை அளித்தார். ஆனால் அவரது முழு வாழ்க்கையுமே ஒரு பொய்யாகி விட்டதாக உணர்ந்தார். அவரது கடைசி நாட்களில், அவரது வாழ்வு முழுவதும் வெளியுலக
'அடைவதன் முன் கடுகே ஆனாலும்
மலையாய்க் காட்டி, அடைந்த பின் மலையே
ஆனாலும் கடுகாய்க் காட்டும் மாய மனம்'.
நிகழ்ச்சிகளில் சிக்கிக் கொண்டு விட்டதாகவும், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான ஒரு ஆழமான தொடர்பைத் தவறவிட்டு விட்டதாகவும் உணர்ந்தார்.
அதனால்தான் மீண்டும் ஒரு விஞ்ஞானியாக விரும்பாமல் குழாய் ரிப்பேர்க்காரராகப் பிறக்க விரும்புவதாகக் கூறுகிறார். நீங்கள் வெளியுலக செயல்பாட்டின் உச்சத்தில் சிக்கிக் கொண்டு விட்டாலும், ஒரு இயந்திரமாகி விடாதீர்கள். இது ஒரு ஆன்மீக வாதிக்குச் சுலபமான வேலை; உலகாயதவாதிக்குக் கடினமான வேலை.
பாருங்கள், இந்த ஒப்பிட்டு ஓடிக் கொண்டிருக்கும் செயல்முறையில் நீங்கள் உண்மையிலேயே ஒரு இயந்திரமாகி விடுகிறீர்கள். உங்களுடைய வெகுவான தினசரி செயல்பாடுகள் விழிப்பற்றதாகி விடுகின்றன. நீங்கள் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற விழிப்பு கூட இல்லாமல் உங்களால் ஒரு காரை ஓட்ட முடியும். நீங்களும் காரைப் போல ஒரு வெறும் இயந்திரமாகி விட்டீர்கள்.
காலையில் பல் துலக்குவதிலிருந்து, படுக்கைக்குச் செல்லும் வரை, உங்களைப் பற்றிப் பரிபூரணமான விழிப் புணர்வே இல்லாமல், ஒரு நிகழ்ச்சி நிரலிடப்பட்ட இயந்திர மனிதனை¹ போல வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது எல்லாவற்றையும் திறமையாகவே செய்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் மனிதத் தன்மையை இழந்து விட்டீர்கள்! நீங்கள் இந்த பூமியில் பிறந்த நோக்கத்தை விட்டு வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டீர்கள். நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வெகுவாகத் துண்டிக்கப்பட்டு விட்டீர்கள்!
நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது, விஷயங்களைத் திறமையாக மட்டுமின்றி, ஒரு நிறைவான
Programmed Robot¹
உணர்வுடன், முழுமையாகவும் செய்வீர்கள். ஏனெனில் பிண்டமான நீங்கள், அண்டமான பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்திருப்பீர்கள்; உங்கள் வேர்கள் பூமியில் இருக்க, நீங்கள் வானில் பறந்து கொண்டிருப்பீர்கள். இவ்வாறில்லாமல் பறக்கும் பொழுதுதான், நீங்கள் எப்பொழுதும், எப்பொழுது விழுந்து விடுவோமோ என்ற பயத்திலேயே இருப்பீர்கள். அதனால் புரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வுடன் வேலை செய்வது உங்கள் திறமையை மட்டும் அதிகப்படுத்துவதில்லை; உங்கள் இருப்புத் தன்மையின் நோக்கத்திலிருந்து விலகாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
சரி, இப்பொழுது... நாம் பொறாமையைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோம்! பொறாமை நீங்க ளெல்லாம் அறிந்தது போல் ஒப்பிடுதலிலிருந்து எழுவதே. மற்றவர்களின் உயர்வை எவ்விதத்திலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாதபோது, நாம் பொறாமை கொள்ளத் தொடங்குகிறோம். நாம் ஏன் பொறாமை கொள்கிறோம் என்பதற்கு எப்பொழுதுமே பல காரணங்களை வைத்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு, உங்களை விட மற்றொருவர் அழகாக இருக்கிறார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே உங்களால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உங்களுக்குள் மிகவும் மோசமாக உணர்கிறீர்கள். மேலும் இன்னொருவர் உங்களை விட அழகாக இருப்பதைக் கண்டு நீங்கள் பொறாமைப்படுவது இயற்கையானதுதான் என்றும் நினைக்கிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள்... கடவுள் ஒரு கலைஞர், பொறியாளர் அல்ல. அவர் ஒரு பொறியாளராக இருந்திருந் தால் ஒவ்வொரு பெண்ணையும் அல்லது ஒவ்வொரு ஆணையும் ஒரே அச்சால் செய்திருப்பார். ஒருவேளை எல்லாப்
ஒப்பிடுதலில் இரண்டு வகை இருக்கிறது; ஆக்கப்பூர்வமான ஒப்பிடுதல் மற்றும் அழிவுப்பூர்வமான ஒப்பிடுதல். பெண்களையும் முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயைப் போன்ற அச்சில் செய்திருக்கக் கூடும்!
அவர் மிகவும் அழகான பெண்ணாகக் கருதப்படுகிறார் அல்லவா? எல்லா ஆண்களையும் ஹ்ருதிக் ரோஷனைப் போன்றோ அல்லது ஷாருக்கானைப் போன்ற அச்சிலோ செய்திருப்பார்! ஆனால் கடவுள் ஒரு பொறியாளர் அல்ல. அவர் ஒரு கலைஞர். அவர் ஒவ்வொருவரையும் ஒரு தனித்துவம் வாய்ந்த வழியில் செய்கிறார்.
நீங்கள் போதுமான அளவு அழகாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு உயிருமே அழகாகத்தான் இருக்கிறது. எந்த அளவு கோலைக் கொண்டு அழகை அளக்கிறீர்கள்? அளவுகோல் எதுவும் கிடையாது. அவையெல்லாம் உங்களுடைய எண்ணங் களும் கருத்துக்களுமே. மேலும் வெறுமனே எண்ணிப் பாருங்கள்... உங்களுடைய பெயரளவிலான திரையுலக நாயகன் அல்லது நாயகி எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், உங்களால் அவர்களது உருவத்தைக் கொண்டு ஒரு கோப்பைத் தேநீரையாவது சுவைக்க முடியுமா?
நீங்கள் போதுமான அளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர் களின் உடலைக் கண்டு ஏங்க ஆரம்பித்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பிளவை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே பிளவுபட்ட தன்மைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களையே வெறுக்கத் தொடங்குகிறீர்கள்.
மற்றவர்களின் உடலைக் கண்டு ஏங்காத கண்கள் ஒருவிதமான அழகையும் கள்ளங்கபடமற்ற தன்மையையும் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடவுள்
நான் உங்களுடைய எல்லா ஆசைகளையும் துறந்து விடச் சொல்லவில்லை. ஒப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுடைய ஒப்பீடுத்தலில் ஒரு தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன். உங்களுக்குச் செய்தவற்றிற்காக விசுவாசத்துடன் இருங்கள். உங்களுக்கு அந்த விசுவாசம் இல்லாத பொழுது தான், நீங்கள் எல்லா விதமான அபத்தமான வழிமுறைகளிலும் ஈடுபட்டு உங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். நீங்கள் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பொழுது, உங்களுக்கு ஒருவிதமான வசீகரம் வந்து விடுகிறது. இந்த வசீகரம் உங்கள் பெயரளவிலான அழகைக் காட்டிலும் பன்மடங்கு உயர்வானது.
பாருங்கள், உடலழகு என்பது ஒன்று, வசீகரம் என்பது இன்னொன்று. உடலழகை எவ்வாறாயினும் அடைந்து விடலாம். இந்நாட்களில் உடலழகை அடைவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன - அழகு சாதனங்கள், அழகியல் அறுவை சிகிச்சை கள் மற்றும் பல அறுவை சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஆனால் வசீகரம்1 என்பது உங்களிடம் அசாதாரணமான நம்பிக்கையும் அமைதியும் இருந்தால் மட்டுமே வருவது; அடங்காத ஆசைகள் அற்ற பிறகு வருவது; நீங்கள் உங்கள் உடலுடன் முழுவதுமாக இயல்புடன் இருக்கும்பொழுது வருவது.
நீங்கள் உங்களை முழுமையாக அனுபவிக்கும் பொழுது, உங்களிடம் ஒருவிதமான வசீகரம் ஏற்படுகிறது. நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள பெயரளவிலான மிகவும் அழகானவர் களை விட மிகவும் அழகாகத் தோன்றுகிறீர்கள். நீங்கள் போக்கை நிர்ணயிப்பவராகி2 விடுகிறீர்கள்.
நான் அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது, இதுபோன்ற காவியுடை அணிந்து கொண்டு பேசினால் மக்கள் எவ்வாறு கேட்பார்கள் என விமான நிலையத்திலிருக்கும் அதிகாரிகள் என்னிடம் கேட்டனர்! நான் அவர்களிடம்
Grace
Trend - setter
சொன்னேன், "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள், நான் இதை அமெரிக்காவின் நாகரிகமாக்கிக் காட்டுகிறேன்!". தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டவனே தலைவன் எனப்படுகிறான். நீங்கள் உங்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது, ஒரு தனித்துவம் வாய்ந்த மலராகி விடுகிறீர்கள்; உங்களிடம் அசாதாரணமான சுதந்திரமும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. உங்களுடைய எல்லாக் குற்ற உணர்வுகளும் உடலைக் குறித்த வெறுப்பும், தூய நம்பிக்கையாலும் கருணையாலும் அகற்றப்படுகிறது.
நீங்கள் உங்கள் சொந்த உடலுடன் வாழக் கற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் இன்னொருவரின் உடல் அல்லது இன்னொருவரின் பரிமாணங்கள் மிகவும் கவர்ச்சி யாக இருக்கிறது என்று எண்ணும் கணத்திலேயே, உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கி விடுகிறீர்கள்.
தங்கள் அறைகளில் விளம்பர அழகிகள் மற்றும் ஆணழகர்களின் படங்களை சுவற்றில் ஒட்டி வைத்துக் கொண்டு, அவர்களைப் போலவே உடலமைப்பைப் பெறுவதற்காக, உடற்பயிற்சிகளைச் செய்பவர்களை பார்த்திருக்கிறேன். தெளிவாக இருங்கள்... இன்னொருவருடைய உடல் உங்களுடையதை விட மிக அழகாக இருக்கிறது என்ற எண்ணம் வந்த உடனேயே, உங்களுக்கும் உங்களுக்கும் இடையிலேயே ஒரு இடை வெளியை உருவாக்கி விடுகிறீர்கள்.
இது போன்ற மற்றவரின் உடலைப் பார்க்கும் விழிப்பற்ற வழிகள் உங்கள் இருப்புத் தன்மையில் விரும்பத்தகாத பக்க விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. நம்மில் ஒருவரும் நமது உடலை ஆழமாக நேசிப்பதில்லை. நாம் அதை ஒரு சுமை போலச்
| 'Give me one week and I will make this a fashion in America' |
'Give me one week and I will make this a fashion in America'
சுமந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவே. அதை ஒரு சத்திரம் போலக் கருதுகிறோம். நாம் அதை வெறுப்பதால், ஒருபோதும் அதனுள் இருப்பதில்லை. நாம் நமது உடலைத் தவிர மற்றெங் கெல்லாமோ இருக்கிறோம். அதனால் தொடர்ந்து அமைதியற்றும், எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்துவிடும் நிலையிலும் இருக்கிறோம்.
உதாரணத்திற்கு, உங்களுடைய ஓட்டுனர் ஏதேனும் சிறிய தவறு செய்தாலும், நீங்கள் முயற்சியின்றியே அவர் மீது வெடித்து விடுகிறீர்கள். வேலையில், தொடர்ந்து ஒரு எரிச்சலான மன நிலையிலேயே இருக்கிறீர்கள். இதற்கான காரணங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருக்கிறதென்று நினைக்காதீர்கள். மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், “ஸ்வாமிஜி, என்னுடைய எல்லாத் தொழிலாளர்களும் திறமையின்றி இருப்பதால்தான் நான் எரிச்சலடைகிறேன்”. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எரிச்சலடைவதற்கு காரணம் இதுவல்ல. நீங்கள் உங்கள் உடலுடன் இயல்பாக இல்லை; அதுவே உங்கள் அமைப்பின் அமைதியற்ற தன்மைக்கும் எரிச்சலுக்கும் காரணம். இது மிகவும் நுட்பமாக இருப்பதால் உணர்ந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து உங்கள் அளவீடுகளை அல்லது பரிமாணங்களை மாற்றிக் கொண்டேமிருக்க விரும்புகிறீர்கள். உங்கள் உடல் கடவுளிடம் இருந்து வந்த பரிசு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்குப் போதுமானதாக இல்லை என்ற எண்ணமே நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் முதல் பாதிப்பு.
ஏதேனும் கேள்விகள்?
நீங்கள் வேறு எவரையும் விட குறைவாக அனுபவிக்கிறீர்களோ என்று எண்ணும் பொழுதுதான் உங்கள் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கிறது.
ஸ்வாமிஜி, உங்கள் முகம் என்னைப் பொறுத்தவரை மாறிக் கொண்டேேயிருப்பது போல் தோன்றும் கிறதே, அது என்னுடைய கற்பனையா அல்லது உண்மைதானா?
(பரமஹம்ஸர் சிரிக்கிறார்!)
புரிந்து கொள்ளுங்கள்... என்னுடைய இருப்புத்தன்மை அஹங்காரமற்று திரவம் போல் இருக்கிறது. நான் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து சென்று கொண்டிருக்கிறேன். நான் வெளிப்படுத்தும் எதுவும் திரவத்தைப் போன்று எளிதாக வளைந்து கொடுப்பதால் அதை அப்படியே என் முகத்தில் காண்கிறீர்கள். என் முகம் எப்பொழுதும் மாறிக் கொண்டேேயிருப்பது போல் தோன்றுவதற்குக் காரணம் இதுவே! நாம் அடுத்த சக்கரமான, ஆக்ஞா சக்கரத்தைப் பற்றிப் பேசும்பொழுது, அஹங்காரமற்ற தன்மை தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
ஸ்வாமிஜி, தன்னுடையது-என்ற-எண்ணத்திலிருந்தும்¹ பொறாமையிலிருந்தும் விடுதலை பெறுவது எவ்வாறு?
சரி... எவ்வாறு விடுதலை பெறுவது... நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்ற உண்மையே நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்வதற்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... மனிதர்களை ஒருபோதும் பிடித்து வைத்திருக்க முடியாது. நீங்கள் ஒருவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயன்றால், உண்மையிலேயே அவரை ஒரு பொருளாகத் தரம் குறைத்து விடுகிறீர்கள். ஒருவரை உயிரற்ற பொருளாக ஆக்கி விடுகிறீர்கள். உயிரற்ற பொருட்களை
Possessiveness¹
மட்டுமே வைத்திருக்க முடியும். இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்களானால், நீங்கள் தன்னுடையது என்ற எண்ணத் திலிருந்தும், அதிலிருந்து எழும் பொறாமையிலிருந்தும் விடுதலை பெறலாம்.
ஒவ்வொரு மனிதரையும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு போலப் பாருங்கள்; அவர்களுடன் எத்தைக் கொண்டு வந்தாலும், அதை வெறுமனே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு ஆற்றைப் பிடித்து வைத்திருக்க முடியுமா? தண்ணீறைக் கையில் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான ஒரு செயல், இல்லையா? அதே போல, மனிதர் களையும் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்; அவர்கள் என்னவாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்; நீங்கள் பொறாமையின் பிடியிலிருந்து விடுதலை பெற்று விடுவீர்கள்.
பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள், இந்தத் தன்னுடையது என்ற எண்ணம், நீங்கள் மிகவும் செல்வாக்குக் கொடுத்து வைத்திருக்கும், உங்கள் ஆழமான, சிக்கல் நிறைந்த மனத் திலிருந்து உருவானதுதான் என்று.
நீங்கள் யாரையாவது பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தால், அது அந்த மனிதருக்கும் கஷ்டத்தையே தருகிறது. நீங்கள் உங்கள் எல்லாக் கருத்துக்களையும் அவர் மீதே பிரதிபலிப்பீர்கள். அவரும் நீங்கள் அவர் மீது பிரதிபலித்த கருத்துக்களுக்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். அவர் கூண்டில் அடைக்கப்பட்டது போல் உணர்வார். அவருடைய புறத்தன்மை பிளவுபடும். அவரால் உங்களுடன் இயல்பாக இருக்க முடியாது. மேலும் இதை ஒரு உறவுமுறை என்றும் அழைக்க முடியாது!
வறுமையே நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. நாம் ஏழையாக இருக்கிறோம் என்ற எண்ணம்தான் நம்மைத் தொந்தரவு செய்கிறது.
நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதரை நேசித்தால் அவருக்கு விடுதலை கொடுங்கள்! அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்; அப்பொழுதுதான் உண்மையான உறவு மலரும்; அப்பொழுதுதான் ஆழமான அன்பையும் விசுவாசத்தையும்தவிரவேறெதையும்சார்ந்திராதஉறவுமலரமுடியும். நீங்கள் எதையேனும் பற்றிக் கொள்ள முயற்சி செய்யும் கணமே, அதைத் தவற விட்டு விடுகிறீர்கள். எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி வெறுமனே அவரை நேசியுங்கள்.
எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது...
தென்னிந்தியாவில், நாகரிகத்தைப் பற்றியே அறியாத மக்கள் வாழும் ஒரு கண்காணாத கிராமத்தில், ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். ஒரு நாள், முதன் முறையாக, அந்த கிராமத்தில் ஒரு சந்தை நடந்தது. அந்த வயதான மனிதர் சந்தைக்குச் சென்று காட்சி க்கு வைக்கப்பட்டிருந்த எல்லாப் பொருட்களையும் பார்த்தார். ஒரு கண்ணாடியை எடுத்துப் பார்த்து, அதில் தான் கண்டதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! அவர் வாழ்வில் அதற்கு முன் ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்ததில்லை. அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவ்வப்பொழுது கண்ணாடியை எடுத்துப் பார்த்து விட்டு, அவர் மனைவி வருவதற்குள் மீண்டும் அதை பழையபடியே வைத்து விடுவார். இதை எப்படியோ கவனித்து விட்ட மனைவி, ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த சமயத்தில், அதை எடுத்துப் பார்த்து விட்டாள். அவள் ஆச்சரியத்தில் கத்தினாள், “நான் நினைத்தது போலவே இன்னொரு பெண்!”.
(சிரிப்பு!)
| ஒரு புதிய கோளில் நீங்கள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொண்டால், நீங்கள் உயரமா அல்லது குள்ளமா? அழகா அல்லது அசிங்கமா? ஏழையா அல்லது பணக்காரரா? | | --- |
நமது, தன்னுடையது என்ற எண்ணத்தினாலும், பொறாமை யினாலும், நமது கற்பனைகளுக்கு முடிவேயின்றி இருக்கிறது! அநேகமாக ஒருபோதும் நமது கற்பனைகள் நிஜத்துடன் ஒத்துப் போனதேயில்லை. நாம் சற்று நின்று நமது பொறாமையினுள் உற்று நோக்குவாமாயின், அது அடிப்படையற்றதும் தேவை யற்றதும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
“ஸ்வாமிஜி, என் கணவரோ அல்லது மனைவியோ வேறு யார் மீதாவது ஒரு கண் வைத்திருந்தால் அதைப் பார்த்துக் கொண்டு எவ்வாறு சும்மா இருப்பது?” என்று நீங்கள் சொல்லக்கூடும். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உண்மையிலேயே இன்னொரு வர் மீது ஒரு கண் வைத்திருந்தால், விழிப்பற்ற செயல்களில் இறங்குவதற்குப் பதிலாக, அதை வெறுமனே விழிப்புடன் முழு விழிப்புணர்வுடன் பாருங்கள்.
நீங்கள் தன்னுடையது என்ற எண்ணத்தையும், பொறாமையையும் விழிப்புணர்வுடன் பார்க்கும்பொழுது, பொருத்தமற்ற கற்பனைகளாலும் உணர்ச்சிகளாலும் ஆட்கொள்ளப்பட மாட்டீர்கள். உங்களால் விஷயங்களை சரியான ஒளியில் பார்க்க முடியும்; சரியாக நடந்து கொள்ள முடியும்; சரியான தீர்மானங்களை எடுக்க முடியும்.
பொறாமைப்படாதே என்று சொல்வதன் மூலம், அதிலிருந்து ஒருபோதும் வெளியே வர முடியாது. எல்லா வற்றிலும் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வருவதன் மூலமும், ஆழமாகப் புரிந்து கொள்வதன் மூலமுமே உதவ முடியும்.
பொறாமையை வெற்றி கொள்வதற்கு, அது எவ்வாறு உங்கள் அமைப்பிற்குள் வந்தது என்பதை வெறுமனே பாருங்கள்; உங்கள் அமைப்பிற்குள் வரும் எண்ணங்களையும்
உங்களுடைய பாதையில் கவனம் செலுத்துவீர்களானால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டும், உங்கள் திறனில் விரிவடைந்து கொண்டும் இருப்பீர்கள். உணர்ச்சிகளையும் வரிசைக்கிரமமாக ஆராயுங்கள்; பிறகு உங்கள் அறிவுக் கூர்மையால் இந்த மொத்த செயல்முறையின் காரணங்களையும் கண்டுபிடித்துத் திருப்பிச் செய்து விடுங்கள்.
பொறாமை என்பது பொருளற்ற நிழல் என்பதை ஒரு முறை நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்களானால், அது எவ்வளவு வேதனைக்குள்ளாக்கியது என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள். பொறாமையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒருவரது வாழ்வில் பெறும் மிகப் பெரும் விடுதலையாகும்.
மேலும் உங்கள் பொறாமைக்குக் காரணமான பொருளை நிந்தனை செய்யாதீர்கள். பொறாமைக்கு காரணமான பொருளை வெறுமனே நிந்திப்பதன் மூலம், நீங்கள் பொறாமையிலிருந்து விடுதலை பெற முடியாது. ஏனெனில் நீங்கள் நிந்தனை செய்ய ஆரம்பிக்கும் பொழுதே, உள்ளே இருக்கும் காயத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று பொருளாகிறது.
பொறாமைக்குரிய பொருளை நிந்திப்பதன் மூலம், ஒரு வேளை அந்த குறிப்பிட்ட பொருளிலிருந்து விடுதலை கிடைக்கக் கூடும். ஆனால் நீங்கள் இன்னொரு பொறாமைக்குரிய பொருளிடம் சிக்கிக் கொண்டு விடுவீர்கள், அவ்வளவுதான்! அது “சீச்சீ, இந்த திராட்சை புளிக்கிறது” என்று சொல்லி விட்டு இன்னொரு திராட்சைத் தோட்டத்திற்குச் செல்வது போன்றதுதான்! அதனால் பொறாமைக்குரிய பொருளை வெற்றி கொள்ள முயற்சிப்பது தீர்வாகாது. நீங்கள் உங்களிடம்தான் செயல்பட வேண்டும்.
எப்பொழுதும் நினைவில் வையுங்கள்... நீங்கள் விட்டொழிக்க விரும்பும், உங்கள் வளர்ச்சிக்குதவாத ஒரு உணர்ச்சி உங்களிடம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதைத் தடை செய்யாதீர்கள். அதைத் தடுக்கும் பொழுது, அதற்கு மேலும்
| நீங்கள் உங்களை உங்களுடன் மட்டுமே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மற்றவர்களுடன் அல்ல. |
அதிக சக்தியையே கொடுக்கிறீர்கள். நீங்கள், "நான் பொறாமைப்படக் கூடாது" என்று சொல்லும் பொழுது, "நான் கூடாது" என்பதற்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கிறீர்களோ, அதே அளவு சக்தியை "பொறாமை" என்ற வார்த்தைக்கும் அளிக்கிறீர்கள்.
அதனால் இது போன்ற விஷயங்களைச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக, "நான் எப்பொழுதும் எல்லாரிடமும் பரிவுடன் இருக்கிறேன்", என்று சொல்லிக் கொள்ளுங்கள். 'பொறாமை' என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தாதீர்கள். ஒரு உணர்ச்சியை மறுப்பதன் மூலம், நீங்கள் விரும்புவதைச் சாதிக்க முடியாது. அதே சூழ்நிலைக் கேற்றவாறு முழுவதும் நேர்மறை யாக ஏதேனும் சொல்லுங்கள், அவ்வளவே.
மேலும், பொறாமையைத் தவிர்ப்பதற்கோ அல்லது அதிலிருந்து தப்பி ஓடுவதற்கோ பதிலாக, அதை முழு விழிப்புணர்வுடன் கடந்து செல்லுங்கள். அதைத் தவிர்க்க முற்பட்டால், அது பிறிதொரு சமயத்தில் முன்னை விட அதிக தீவிரத்துடன் உங்களைத் தாக்கும். ஒரு விஷயத்தை ஆழமான விழிப்புணர்வுடன் மனதில் வையுங்கள்... பொறாமை உங்களுடைய உண்மையான இயல்பல்ல. பொறாமையை உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது சமூகமே.
பொறாமை நீங்கள்அல்ல என்பதில் நம்பிக்கை வையுங்கள், அதுவே போதுமானது. பிறகு தானாகவே, நீங்கள் அதில் சிக்கிக் கொள்ளாமல், அதைக் கண்டு நகைப்பீர்கள். அதைக் கண்டு நகைக்க முடியுமானால், அதில் பங்கெடுத்துக் கொள்வதற்கு பதில், அதைச் சாட்சியாக இருந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று பொருள். உங்களால் சாட்சியாக இருக்க முடியுமானால், எதையும் கடந்து செல்வது சுலபமாகி விடும்.
ஒருபோதும் உங்களை உங்கள் பலவீனத்தைக் கொண்டு அளவிடாதீர்கள்.
மேலும், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை முழுவதுமே ஒரு தெய்வீக விளையாட்டைத் தவிர வேறல்ல என்பதைப் பார்த்தீர்களானால், பெயரளவிலான இந்தப் பொறாமையுணர்வும் ஒரு தெய்வீக விளையாட்டுத்தான், அதில் சிறிதளவும் உண்மையில்லை என்பதைப் பார்க்க முடியும். பொறாமையில் சிக்கிக் கொள்ளாமல் அதை வெறுமனே வெளியில் ஒரு பொருளாகப் பாருங்கள். பிறகு தானாகவே அது உங்களிடம் தன் சக்தியை இழந்து விடும்.
நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர் என்பதையும், உங்களைப் போல் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டீர்களானால், உங்களுடைய ஒப்பிடும் இயல்பு அர்த்தமற்றதாகி, நீங்கள் தானாகவே பொறாமைப்படுவதை நிறுத்தி விடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் சமமாகவே நேசிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஸ்வாமிஜி... குருமார்கள் மீண்டும் மீண்டும் நம்மிடம் பொறாமையற்ற அன்பு, நன்றாகப் புரிந்து கொள்ளும் தன்மை, மற்றவர்களை எடை போடாத மனப்பாங்கு போன்ற குணங்களை தூண்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஏன் இன்னும் நம்மிடம் புரிந்து கொள்ளுதல் நிகழவில்லை?
பாருங்கள், இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
நாம் குருமார்களின் கொள்கைகளைப் பற்றிக் கொண்டு உருமாற்றமடைவதற்குச் சிரத்தையுடன் முயற்சி செய்வோமாயின் சரியான இழையைப் பிடித்து விட்டோம்; ஆனந்தத்தைப் பெறலாம்! ஆனால் நடப்பதென்னவெனில், நாம் அதற்கு பதிலாக, குருவின் புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். நீங்கள்
| ‘இதுவே நீ அடையக் கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த மந்திர சக்தி’ |
முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது குருவின் கொள்கைகளுக்கும் தத்துவத்திற்கும். நீங்கள் அவரது புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது, அவரை முழுமையாகத் தவற விட்டு விடுகிறீர்கள்; அவரது செய்தியை முழுமையாக தவற விட்டு விடுகிறீர்கள்.
பாருங்கள்... புரிந்து கொள்ளுங்கள்... அவரது போதனை களைப் பின்பற்றினால், நீங்கள் ஆன்மீகத்தில் பழுக்க முடியும்; அவரது புறத் தோற்றத்தைப் பற்றிக் கொண்டிருந்தால் ஒரு மதவாதப் பைத்தியமாகத் தங்கி விடுவீர்கள். மதவாதப் பைத்தியங்களே குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிக் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அது பகவத் கீதையிலுள்ள கிருஷ்ணரின் செய்தியானாலும் சரி, அல்லது புனித குரானிலுள்ள முஹம்மதுவின் செய்தி யானாலும் சரி, அல்லது புனித பைபிளில் உள்ள கிறிஸ்துவின் செய்தியானாலும் சரி, செய்தி ஒன்றே; அது வெளிப்படும் விதம்தான் வேறுபடுகிறது. நீங்கள் எந்த குருவைப் பின்பற்றும் அதிர்ஷ்டத்தைப் பெற்றாலும், பின்பற்றுங்கள். ஆனால் நீங்கள் அவர்களது போதனைக்குப் பதிலாக, அவர்களது புறத் தோற்றத் தைப் பின்பற்ற ஆரம்பிக்கும் பொழுதுதான், உங்களுக்குப் பகவத் கீதையை விடவும் கிருஷ்ணர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகிவிடும் பொழுதுதான், நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சினையை உருவாக்கத் தொடங்குகிறீர்கள்.
கிருஷ்ணரும் கிறிஸ்துவும் சந்தித்தால், நிச்சயமாக அவர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொள்வர். ஆனால் கிருஷ்ணரின் பசுக்களும் கிறிஸ்துவின் ஆடுகளும் சந்தித்துக் கொள்ளும் பொழுது, அங்கே ஒரு சண்டைதான் நிகழும்!
மற்றவர்களால் இடையூறு செய்யப்படாத முடியாத அமைதி. மிகப்பெரிய விடுதலையாகும்.
பல்வேறு மதத்தைப் பின்பற்றுபவர்களும் தங்களது குருமார்களின் தத்துவமே தலைசிறந்தது என்று உரிமை கோரி அமைதியைப் பரப்ப முயல்கின்றனர். பிறகு என்ன நிகழ்கிறது? அமைதியைப் பரப்புவதற்கு பதிலாக, நாமே துண்டு துண்டாகச் சிதறி விடுகிறோம்! உங்களுடைய பெயரளவிலான அமைதியை மற்றவர்களின் மீது திணிக்க முயற்சிக்கும் பொழுதுதான், பிரச்சினை ஆரம்பமாகிறது. இவ்வாறுதான் நாம் எல்லா விஷயங் களையும் சிக்கலாக்கிச் செய்தியைப் பல பிறவிகளாகத் தவற விட்டுக்கொண்டிருக்கிறோம்.
குருமார்கள் மனித இனத்தின் மீது கொண்ட முழுமையான பரிவினால் மீண்டும் மீண்டும் இந்தப் பூமியில் அவதரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் மனிதன் எவ்வாறோ சமாளித்துத் தப்பித்து விடுகிறான்!
இரண்டாவது விஷயம்; மற்றவர்களை நோக்கி விரல் களைச் சுட்டுவதற்கு பதில் அல்லது பயிற்சியை ஆரம்பிப்பதற்கு ஒரு நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு பதில், நாம் ஒவ்வொருவரும் கேட்ட கணம் முதற்கொண்டே பயிற்சியைத் தொடங்கினோமானால், நம்மைச் சுற்றி விஷயங்கள் தானாகவே நடக்கத் தொடங்கும்.
உதாரணத்திற்கு, நான் உங்களை செடிகளையும், விலங்குகளையும், மரங்களையும், மனிதர்களையும் ஒரே மாதிரி நேசிக்கச் சொல்கிறேன். ஒரு மங்களகரமான நேரத்திற்காக காத்திருந்து கடைசியில் மறந்து விடுவதை விட, அதை உடனடியாக உள் வாங்கிக் கொண்டு, பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.
இதை ஆரம்பிப்பதற்கு எளிமையான வழி, நீங்கள் சாலையில் நடக்கும் பொழுதோ அல்லது வீட்டிலிருக்கும்
வானமே எல்லை, வானம் என்ற ஒன்றே இல்லை. பொழுதோ இயற்கையைக் காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம். நம்மில் சிலர் நடக்கும் பொழுது வழியிலுள்ள மரத்தின் கிளைகளை ஒடிப்பதையும், பூக்களைப் பறிப்பதையும் வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இது போன்ற செயல்களை விழிப்புடன் இருந்து நிறுத்த முடியும்; மேலும் இவற்றை அதிக விழிப்புணர்வுடனும் அன்படனும் பார்க்க முடியும். நீங்கள் இயற்கையைத் தழுவுவதிலிருந்து தொடங்கலாம். பொறாமையடைவதற்கு பதில், மகிழ்ச்சியடை வதற்கும் போற்றுவதற்கும் இது ஒரு நிச்சயமான வழி. இவை குருமார்களின் போதனைகளைத் தவற விடாமலிருக்கச் சில வழிகளாகும்.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இங்கு வந்து எனது பேச்சைக் கேட்டோ அல்லது என்னுடைய சில புத்தகங்களை வாங்கிப் படித்தோ, நான் ஒரு சிறந்த பேச்சாளர் என்று புகழ்ந்து விட்டு மறந்துவிடுகிறீர்கள். அல்லது உங்களுடைய சில நண்பர்களுக்கு என்னுடைய பேச்சைக் கேட்கும்படி ஆலோசனை கூறி விட்டு, நீங்கள் மீண்டும் உங்கள் பழைய வழிக்கே போய் விடுகிறீர்கள். பிறகு என்னதான் செய்வது? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் என் போதனைகளைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டாம், அவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
இந்தச் சின்னக் கதையைக் கேளுங்கள்...
ஒருவன் விடுமுறைக்கு ஆப்பிரிக்கா சென்றான். ஒரு நாள் அவன் கொல்லையில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிங்கம் அவன் மீது பாய்ந்தது. அவன் வேகமாக குனிந்து கொண்டு விட, சிங்கம் அருகிலிருந்த புதரில் குதித்தது. அடுத்த நாள் அவன் மீண்டும் நடந்து கொண்டிருந்தபோது, சிங்கம் மீண்டும் ஒரு முறை அங்கு
விரிதலே வாழ்வு, சுருங்குதல் சாவு. வந்து அவனைத் தாக்கியது; மீண்டும் அவன் குனிந்து கொள்ள அது புதரில் கொஞ்சம் தள்ளிப் போய் குதித்தது. அடுத்த நாள் அவன் வீட்டிற்குள்ளிருந்தே, சிங்கம் வெளியே எங்காவதிருக்கிறதா என்று பார்த்தான். அது புதருக்குப் பின்னால் இருந்தது. அவன் வியப்படையும் வகையில் அது தாழ்வாகக் குதித்துப் பயிற்சி செய்து கொண்டிருந்தது.
பாருங்கள், நீங்கள் சேகரித்த அறிவைச் செயல்படுத்தினால்தான் வாழ்க்கையில் வளர முடியும். வெறுமனே அறிவைச் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தால், எந்தவிதப் பயனுமில்லை. நீங்கள் வெறுமனே அறிவைச் சேகரிப்பதாயிருந்தால், உங்கள் ஞாபக சக்திதான் வளரும், இருப்புத் தன்மையல்ல.
சேகரித்த அறிவனைத்தும் உங்கள் உள் வளர்ச்சிக்காகச் செயல்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் ஒரு நடமாடும் நூலகத்தை விட மேலானவரல்ல. நான் பலரைப் பார்த்திருக்கிறேன் - அவர்கள் பெரும் பசியுடன் படிக்கிறார்கள், தத்துவத்தைப் பற்றிப் பலரது பேச்சுக்களைக் கேட்கிறார்கள்; மேலும் அதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்கள். ஆனால் செயல்பாடு என்று வரும் பொழுது, அவர்கள் முற்றிலும் குறைபாடுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே மற்றவர்களின் குறிப்பிற்கான புத்தகங்களாகி விடுகிறார்கள். படித்து, முழுமையாக ஜீரணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மற்றவர்களின் மீது வாந்தியெடுத்து விடுகிறார்கள். அதனால் என்ன பயன்?
விழிப்புணர்வுடன் வளர்ந்தால் மட்டுமே, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ முடியும். ஒரு அனுபவரீதியான புரிந்து கொள்ளுதல் தேவையாக இருக்கிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கேட்டதைச் செயல்படுத்துதல்
ஆற்றல் உங்கள் கனவுகளை நனவாக்கும். அறிவு நிஜமே உங்கள் கனவுதான் என்பதைப் புரிய வைக்கும். வெளியுலக நன்மைக்காக உபயோகப்படுத்துவதற்காகக் கூட அல்ல; வெளியுலகம் மாயை என்பதையும், சாதிக்க வேண்டிய தனைத்தும் உங்களுக்குள் தான் என்பதையும் புரிந்து கொள்ளத் தேவையான விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கே மிகவும் அவசியமானதாகும். அப்பொழுது இந்த முழுச் செயல் முறையிலும், வெளியுலகில் நீங்கள் அடையும் வெற்றி களெல்லாம் வெறும் தற்செயலானதாகவே அமைந்து விடும்.
நீங்கள் குருமார்களின் பேச்சைக் கேட்கும்பொழுது, அப்படியே உட்கிரஹித்துக் கொள்ளுங்கள். குருமார்கள் சத்தியத்தை மட்டுமே பேசுகிறார்கள்.
அது எவ்வாறு இருக்கிறதென்றால்... ஒரு பெரிய அடர்ந்த கானகத்தை, உங்கள் மனதைப் போன்ற, ஒரு சிறிய விளக்கைக் கொண்டு ஆராய்வது போல் இருக்கிறது. சிறிய விளக்கின் ஒளியில், முன்னால் தெரியும் சில அடிகளைக் கெண்டே, நீங்கள் கண்டதே உண்மை என்று முடிவுகட்டி விடுகிறீர்கள். இதைத்தான் விஞ்ஞானிகள் செய்கிறார்கள். அவர்கள் சில அடிகள் முன்னால் பார்த்து விட்டு இன்று ஒரு கோட்பாடுடன் வருகிறார்கள். சில காலத்திற்குப் பின், இன்னும் சில அடிகள் முன் சென்று அந்த ஒளியில் இன்னும் சில அடிகளை நோக்கி இன்னும் சிலவற்றைப் பார்க்கிறார்கள்.
பின்னர் அவர்கள் நேற்று அறிவித்த உண்மைகளை ஒதுக்கி விட்டு வேறு ஒரு புதிய உண்மையைக் கொண்டு வருகிறார்கள். மிகவும் தெளிவாக இருங்கள்... நேற்று உண்மையாக இருந்த ஒன்று, இன்று உண்மையல்ல என்றாகிவிடுமாயின், நேற்றும் உண்மையாக இருந்திருக்க முடியாது. எது எப்படியோ, இவ்வாறுதான் அவர்கள் தங்கள் மனதைக் கொண்டு ஒரு அடர்ந்த கானகத்தை ஆராய முற்படுகிறார்கள்.
நீங்கள் ஏற்கனவே என்னவாக இருக்க வேண்டுமோ அதுவாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது திடீரென்று ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகமும் தெரிவதாகக் கற்பனை செய்து பாருங்கள்! இப்பொழுது உங்களுக்கு முழுக் கானகமும் தெரிவதால் உங்களால் தேவையான பொழுது அதை விவரிக்க முடியும்.
ஞானமடைதல்¹ என்பது இதுவே! அது ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகத்தையும் பார்த்தல்.
ஒரு முறை இது நிகழ்ந்துவிடின், நீங்கள் வெறுமனே அறிகிறீர்கள்².
அதனால்தான், ஒரு குருவுக்கு உண்மையாக இருப்பது இன்னொரு குருவுக்கும் உண்மையாக இருக்கிறது. அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வேறு படலாம்; ஆனால் அவர்களது இறுதி அனுபவம் ஒன்றே. நீங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்கிறீர்கள், அல்லது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் புத்தியைக் கொண்டு பதிலளிக்க முற்படும் போதுதான் தத்துவங்களை உருவாக்குகிறீர்கள். அதனால் தத்துவமாக்கி விடாமல், உங்கள் புரிந்து கொள்ளுதலை அனுபவமாக்க முயற்சி செய்யுங்கள்.
இந்தியாவின் கண்காணாத கிராமங்களில் உள்ள பல தேநீர்க் கடைகளில் நீங்கள் ஒரு வழக்கமான காட்சியைக் கண்டிருக்கக் கூடும். தினமும் வழக்கமாகக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உலகத்தின் தலைசிறந்த தத்துவங்களை அலசுவார்கள். தலைசிறந்த கடவுள்களின் தலைவர்கள், குருமார்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இவர்கள் வாயில் அரைபட்டு ஜீரணிக்கப்படுவார்கள். பட்டணத்தில் இழைக்கப்படும் அனைத்து அநீதிகளும், எதுவும் விட்டு வைக்கப்படாமல், அலசப்படும். ஒழுக்கம் மற்றும் ஒழுக்கக் குறைவுகளுக்காக உலகம் முழுவதும் இவர்களது பார்வையில்
| Enlightenment¹ | Simply Know² |
அலசி ஆராயப்படும். இறுதியில், இவையனைத்தையும் பேசியவன், தேநீரைக் குடித்து முடித்து விட்டு, அதற்கான காசை அடுத்த நாள் தருவதாகச் சொல்லி விட்டுச் செல்வான்!
தனது தேநீருக்கான காசைக் கூட கொடுக்க முடியாதவன், தேநீர்க் கடையின் பெஞ்சில் அமர்ந்து செய்தித்தாளின் முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படித்து முடித்து விட்டு, தான் படித்த அனைத்தையும் பற்றி எடை போட்டுக் கொண்டிருப்பான். அந்தச் செய்திப் பத்திரிக்கையின் ஆசிரியர் கூட அவ்வளவு முழுமையாகப் படித்திருக்க மாட்டார்!
இவர்கள் தேநீர்க் கடை பெஞ்சுகளில் செலவழிக்கும் நேரத்தில் அந்த பெஞ்சுகளில் பள்ளம் விழுந்து விடுகிறது. அவர்களது முழு நேரத்தையும் இவ்வாறே செலவழிக் கின்றனர். அவர்கள் ஒரு கணத்தைக் கூட எதையேனும் சாதிக்கும் முயற்சியில் செலவழிப்பதில்லை.
அதனால், நீங்கள் குறைந்தபட்சம், நான் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, அவற்றின் பின்னால் இருக்கும் உண்மையை உணர முற்படலாம். பதஞ்சலி சொல்கிறார், உங்களால் இன்று 5 அங்குலம் வளைய முடியுமானால், நாளை ஒரு அரை அங்குலமாவது அதிகமாக வளைய முற்படுங்கள். இது போன்றே நான் கொடுக்கும் உண்மையை உணர்வதற்காக ஒரு சீரான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் அந்த தேநீர்க் கடைகளில் இருப்பவர்களை விட மேலானவர்கள் அல்ல. அவர்கள் அங்கு பெஞ்சைப் பள்ளமாக்கு கிறார்கள், நீங்கள் இங்கு தரை விரிப்பை ஓட்டையாக்குகிறீர்கள், அவ்வளவே!
பல சமயங்களில், பிரச்சினை என்னவென்றால், ஞான மொழிகளைக் கேட்கும்பொழுது, நாம் எப்பொழுதுமே இவை,
| காலையில் பல்துலக்குவதிலிருந்து, இரவு படுக்கைக்குச் செல்லுமவரை, உங்களைப் பற்றிய விழிப்புணர்வேயில்லாமல், ஒரு இயந்திர மனிதனைப் போல வேலை செய்கிறீர்கள். | |---|
நம்முடன் கேட்டுக் கொண்டிருக்கும் நமது நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ மிகச் சரியாகப் பொருந்துவதாக எண்ணுகிறோம்! நாம் அதை அவர்களுக்குச் செலுத்திப் பார்த்து, அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற இரகசியமான நம்பிக்கையில் இருக்கிறோம். அவ்வாறு செய்வதால், செய்தியை நீங்கள் தவறவிட்டு விடுகிறீர்கள், அவ்வளவுதான்! நான் சொல்கிறேன்... நான் பேசும் பொழுது, உங்களிடம்தான் பேசுகிறேன். இந்த அறையில் ஆயிரம் பேர் இருந்தாலும், நான் உங்களிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
என் ஒவ்வொரு வார்த்தையும், உங்களுக்காகவே, சக்தியைத் தாங்கி வருகிறது. அதனால் தயவு செய்து உங்கள் மனதில் இது போன்ற எண்ணங்களுடன் கேட்காதீர்கள். முக்கியமாக கணவனும் மனைவியுமாக என் பேச்சைக் கேட்பதற்கு வரும் பொழுது, நான் அவர்களது நடைமுறை வாழ்க்கை குறித்த விஷயங்களைச் சொன்னால், கணவன், மனைவி இதைக் கேட்க வேண்டும் என்றும், மனைவி, கணவன் இதைக் கேட்க வேண்டும் என்றும், எண்ணுகின்றனர். இறுதியில் இருவருமே அதை தவற விட்டு விடுகின்றனர்.
மனிதனது உள்ளார்ந்த இயல்பு, பணத்தையும் பொருள் களையும் சேர்ப்பது. ஒரு காலத்தில் பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இருக்கின்றன என்பதை உணருகிறான். பிறகு செல்வத்தை சேர்க்கும் வேகம் தானாகவே குறைகிறது. பிறகு அவன் வார்த்தைகள் அல்லது புத்திபூர்வமான அறிவைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். இது எவ்வாறோ ஒருபோதும் நிற்பதேயில்லே. அவனது வார்த்தைகளுக்கான பேராசை மேலும் மேலும் அதிமாகிறது.
நீங்கள் வெளியுலக செயல்பாட்டின் உச்சத்தில் சிக்கிக் கொண்டு விட்டாலும் ஒரு இயந்திரமாகி விடாதீர்கள்.
எவனொருவன் செல்வத்தையும், வார்த்தைகளையும் சேகரிப்பதை நிறுத்துகிறானோ, அவன் உண்மையான அறிவைத் தேட ஆரம்பிக்கிறான். பல சமயங்களில் நாம் கேள்வி கேட்பது, உண்மையிலேயே பதிலைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல; வெறுமனே நமக்கு வார்த்தைகளின் மேலுள்ள பேராசையாலோ அல்லது நமக்கும் கொஞ்சம் தெரியும் என்று காண்பிப்பதற்காகவோதான்.
உள்ளே ஆழ்ந்து நோக்கினீர்களானால், ஒரே ஒரு கேள்வி மட்டுமே எழும்; அதுவே உங்களுடைய உண்மையான கேள்வியாகும். அந்தக் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டால், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!
என்னிடம் ஒருவர் கேட்டார், "ஸ்வாமிஜி, கடவுள் என்பது என்ன?". நான் மெதுவாக விஷயத்தை மாற்றி அவரது குடும்பத்தைப் பற்றியும், தொழிலைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பித்தேன். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இரண்டு மணி நேரத்தில், அவர் ஒரு முறை கூட அவரது முதல் கேள்வியைப் பற்றிக் கேட்கவேயில்லை. இறுதியில் நான் அவரிடம் சொன்னேன், "ஐயா, நீங்கள் இங்கு வந்தவுடன் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொல்லாததன் காரணம், அது உங்கள் உள் ஆழத்திலிருந்து வந்த கேள்வியல்ல".
கேள்வி நமது உள் ஆழத்திலிருந்து வருமானால், நாம் அதை ஒரு போதும் மறக்கவோ அல்லது நமக்கு ஒரு திருப்தியான பதில் கிடைக்கும் வரை ஓயவோ மாட்டோம். சிலர் கேள்வி கேட்டு விட்டுப் பதிலையும் அவர்களே சொல்லி விட்டு, பிறகு என்னிடம் ஒரு பதிலைக் கேட்கிறார்கள்! அவர்கள் வெறுமனே என்னிடமிருந்து ஆதரவான வார்த்தைகளையே எதிர்பார்க்கிறார்கள், அவ்வளவே.
கடவுள் ஒரு கலைஞர், பொறியாளர் அல்ல. ஒருவேளை அவர் ஒரு பொறியாளராக இருந்திருந்தால், அனைவரையும் ஒரே அச்சால் செய்திருப்பார்.
கேள்விகள் உண்மையிலேயே நமக்குள் வார்த்தைகளைச் சேகரிக்கும் ஒரு போராட்டமாக அமைந்து விடுகின்றன. நாம் இந்த வார்த்தைகளைச் சேகரிப்பதில் பெருமிதம் அடைகிறோம். ஆனால் அவ்வாறு செய்வதில் பெரும் உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம்! நாம் உண்மையை விட வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறோம். இவ்வாறுதான் நாம் குருவைத் தவற விட்டு விடுகிறோம்; இவ்வாறுதான் நாம் குருவின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள புரிந்து கொள்ளு தலைத் தவறவிட்டு விடுகிறோம்.
மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, நாங்கள் ஒப்பிடுவதையும் மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி விட வேண்டு மென்றால், எல்லாவற்றையும் துறந்து ஆன்மீக வாதியாகிவிட வேண்டுமா?”
ஒப்பிடுதலை நிறுத்துங்கள், ஓடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள் என்றெல்லாம் சொன்னவுடன், நான் அவர்களை உலக விஷயங்களிலிருந்து தப்பி ஓடி ஆன்மீகவாதியாகி விடும்படி சொல்கிறேன் என்று பலரும் நினைக்கிறார்கள். முக்கியமாக இந்த விஷூஅத்தி சக்கரத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர்கள் இவ்வாறு நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆன்மீகம் அல்லது சந்நியாசம் என்பது துறப்பதைப் பற்றியே அல்ல. அது ஆழமான விழிப்புணர்வைப் பெறுவது பற்றியது. விழிப்புணர்வு பெறும் பொழுது, முட்டாள்தனமான ஆசைகள் தானாகவே சுருங்கி அடிப்படைத் தேவைகள் மட்டுமே எஞ்சி நிற்கும். விழிப்புணர்வானது, அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஆற்றலைக் கொடுத்து, பிறகு உங்களை உள்ளே திருப்பி விடும்.
நீங்கள் போதுமான அளவு அழகாக இருக்கிறீர்கள், ஒவ்வொரு உயிருமே அழகாகத்தான் இருக்கிறது?
வெளியுலகில் செய்யப்பட வேண்டியவை யெல்லாம், சந்தேகத்திற்கிடமின்றி, செய்யப்பட வேண்டியதுதான். நீங்கள் வாழ்வதற்காக சம்பாதிக்க வேண்டும்; அது தொடர்பான விஷயங்களைப் பார்க்க வேண்டும்; உங்கள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள வேண்டும். நான் சொல்வதெல்லாம் என்னவென்றால், இவை எல்லாவற்றிலும் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்; அதனால் வெளியுலகில் தேவையற்ற நடவடிக்கைகள் தானாகவே மறைந்து விடும்; மேலும் உங்கள் பிறப்பு மற்றும் வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதலோடு வாழ முடியும். பிறகு, எல்லாவிதமான மாயைகளும், அனைத்து கடன் வாங்கப்பட்ட ஆசைகளும், புகுத்தப்பட்ட அத்தனை பயங்களும், எல்லா விதமான பொறாமையும், ஒப்பிடுதலும், தீவிரமான உணர்ச்சிகளும், இச்சையும் ஒரு முழுமையான மாற்றத்திற்குட்பட்டு, உங்களுக்கு ஒரு ஆனந்தமயமான சக்தியாகி விடும்.
ஒரு சின்ன கதை...
ஒரு குருவும் சிஷ்யனும் நடந்து கொண்டிருந்த பொழுது, ஒரு ஆற்றை அடைந்தனர். ஆச்சரியமடைந்த சிஷ்யன் கேட்டான், “குருவே, நாம் இப்பொழுது ஆற்றைக் கடக்கப் போகிறோமா?”. குரு அமைதியாகச் சொன்னார், “ஆம், கடக்கப் போகிறோம். பாதம் நனைந்துவிடப் போகிறது, பத்திரம்!”. குரு என்ன சொல்கிறார் என்பதைச் சீடனால் புரிந்து கொள்ள முடியவில்லை!
ஆன்மீகம் என்பது கால்கள் நனையாமல் வாழ்க்கைக் கடலைக் கடப்பது என்பதையே குரு புரிய வைக்க முயற்சி
நீங்கள் உங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்பொழுது, உங்களுக்கு ஒருவிதமான வசீகரம் வந்து விடுகிறது. தன்னை முழுமையாக ஏற்றுக் கொண்டவனே தலைவன் எனப்படுகிறான். செய்கிறார். ஆன்மீகம் என்பது உலக விஷயங்களிலிருந்து தப்பி ஓடி விடுவதல்ல. இதில் மிகவும் தெளிவாக இருங்கள்.
ஆன்மீகம் என்பது உண்மையில் வாழ்க்கைப் பொறியியல். கல்லூரிகளில் பலவகையான பொறியியல் படிப்புகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அவையெல்லாம் உங்கள் மூளையை விற்பதற்குப் பதிலாகக் கிடைக்கும் வெற்றுச் சான்றிதழ்கள். நம் ஒவ்வொருவருக்கும் போதிக்கப்பட வேண்டியது வாழ்க்கைப் பொறியியலே. ஆன்மீகம், உங்களுக்கு இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில் ஒரு பரமஹம்ஸர் அல்லது தன்னை முற்றிலும் உணர்ந்த ஒரு ஞானியைப் போல, கழுத்தளவு நீரில் நின்றாலும், அதனால் தொடப்படாமல், வாழக் கற்றுக் கொடுக்கிறது.
அது யாருடைய அல்லது எதனுடைய வரம்பையும் மீறாமல், ஒரு தீவிரமான, மனநிறைவான வாழ்வை வாழக் கற்றுக் கொடுக்கிறது. அது உங்களுடைய புத்தியிலிருந்து துண்டித்துக் கொண்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் அதிசயங்களை, ஒப்பிடுதல், பொறாமை, இச்சை போன்ற எந்த விதமான மாயத் தோற்றங்களும் இன்றி, விழிகள் விரிய, கள்ளங்கபடமற்ற தன்மையுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து இயங்கி, தற்செயலின் ஆற்றலை அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது; அப்பொழுது உங்களின் உள் மகிழ்ச்சியின் விளைவாக விஷயங்கள் தானாகவே நிகழ்வதைக் காண்கிறீர்கள்.
அது எப்பொழுதும் ஒரு பிரார்த்தனையான மற்றும் நன்றியுணர்வுடனான மனநிலையுடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வழிகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் இருக்கக் கற்றுக் கொடுக்கிறது. அது, வெளியுலக உணர்ச்சிகளால்
| உங்கள் உடல் கடவுளிடம் இருந்து வந்த பரிசு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். |
அலைக்கழிக்கப்படாமல், ஒவ்வொரு கணத்தையும், உங்கள் உள் மையத்தில் இருந்து அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது. அது கொண்டாடு வதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டிராமல், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் கற்றுக் கொடுக்கிறது.
அது உங்கள் உள் அறிவுக் கூர்மையைத் தூண்டி, வெளியுலகச் செயல் திறனை வேகப்படுத்துகிறது. அது உங்கள் விழிப்புணர்வை எழுப்பி ஆழமான விழிப்புணர்வை நோக்கி எடுத்துச் செல்கிறது. அது உங்களை இச்சையிலிருந்து அன்பாக்கும், கவலையிலிருந்து ஆச்சரியத்திற்கும், பொய்யிலிருந்து உண்மைக்கும், வேதனையிலிருந்து ஆனந்தத்திற்கும், பொறாமையில் இருந்து கொண்டாட்டத்திற்கும் எடுத்துச் செல்கிறது. இப்பொழுது சொல்லுங்கள், இவற்றிலெல்லாம் துறவு எங்கு வருகிறதென்று?
மேலும் இன்னொரு விஷயம்... மக்கள் ஆன்மீகத்திற்கென தனியான நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; நிச்சயமாக அவ்வாறு இல்லை. நான் அது தேவையில்லையென்று எதைக் கொண்டு சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல; அவர்கள் மதவாதிகள்.
சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருப்பதால் மதத்திற்கு நேரம் தேவை. ஆன்மீகத்திற்கு அளவுடனோ¹ அல்லது நேரத்துடனோ² எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஆனால் ஆன்மீகத்திற்கும் உங்கள் வாழ்க்கைத்தரத்திற்கும்³ சம்பந்தம் உண்டு. உங்களுக்கு உண்மையைத் தேடும் சிரத்தை இருந்தால் போதுமானது. பிறகு, எப்பொழுதும், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் தியானமாகச் செய்ய முடியும்;
Quantity¹ Time² Quality of Life³ உங்கள் நோக்கத்தையும் அடைந்து விடுவீர்கள். பிறகு நீங்கள் தானாகவே வேலையிலும், வீட்டிலும், மனிதர்களுக்கிடையே யான உறவிலும், பொறாமை மற்றும் ஒப்பிடுதல் போன்ற எந்தவிதமான சக்தித்தடைகளும் இல்லாமல் பிரகாசிப்பீர்கள்.
எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உங்களால் சுலபமாக உங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும். உங்களால் எந்த இடத்திலும் எவருடனும் இயல்பாக இருக்க முடியும். வீடு என்பது வெறுமனே நீங்கள் வசிக்கும் இடம் மட்டுமே என்பதல்லாமல் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையுமே உங்கள் வீடாகி விடும். நீங்கள் மன மற்றும் உடல் ரீதியான நெறிப் படுத்தல்களை உடைத்துக் கொண்டு விடுதலை பெற்று, உயர்ந்து, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் கலந்து ஒன்றாகி விடுவீர்கள்.
பிரச்சினை என்னவென்றால், மக்கள் வெறுமனே சடங்க களைச் செய்வதிலேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். இதைச் செய்வதில் ஏதோ ஒரு பாதுகாப்பை உணருகிறார்கள். மக்களுக்கு, சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் தெரிவதில்லை; ஆனால் சடங்குகள் அவர்களது அஹங்காரத்தைத் திருப்தி செய்கின்றன. சடங்குகள் சிக்கல் நிறைந்தவை; சிக்கல் நிறைந்த விஷயங்களில் ஈடுபடுவதை நாம் எப்பொழுதும் ஒரு சவாலாகவே கருதுகிறோம்.
மக்கள் என்னிடம் அவர்களுடைய பிரச்சினைகளுடன் வந்து, அவற்றிற்குத் தீர்வு கேட்கிறார்கள். நான் அவர்களிடம் 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்கிறேன்; மேலும் அவர்கள் ஆசிரமத்தில் இருக்கும்பொழுது சிறிது நேரம் ஆல மரத்தடியில் அமர்ந்து விட்டுச் செல்லுமாறு சொல்கிறேன். ஆசிரமத்தில் இருக்கும் ஆலமரம் ஒரு சக்திக்களம்1. ஆனால் அவர்கள் இந்த பதிலில்
Energy Field¹
Energy Field
மகிழ்ச்சியடைவதில்லை. விஷயங்கள் இன்னும் நல்ல படியாக ஆக என்ன சடங்குகள் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களிடம் ஆசிரமத்திலுள்ள ஆலமரத்தை 108 சுற்றுக்கள் சுற்றுமாறு சொன்னால், அவர்கள் அதை மிக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்! பாருங்கள், நீங்கள் ஆலமரத்தை 108 சுற்றுக்கள் சுற்றினால், அது உங்கள் அஹங்காரத்தைத் திருப்திப் படுத்துகிறது. பிறகு நீங்கள் கடினமாக உழைத்ததாகவும், அதன் பலன் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் எண்ணுகிறீர்கள். நாம் மதத்தைப் பொறுத்தவரை நமது மனத்தை இவ்வாறுதான் பழக்கப்படுத்தியிருக்கிறோம்.
மதங்களிலும் சடங்குகளிலும் கூட, மக்கள் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதை நான் கண்டிருக்கிறேன்! உங்கள் அண்டை வீட்டார் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டை ஒரு குறிப்பிட்ட கோயிலில் செய்தால், அடுத்து நீங்களும் அங்கே சென்று அதே வழிபாட்டை அதே கோயிலில் செய்கிறீர்கள். எதைக் குறித்து? கடவுளையா அல்லது அண்டை வீட்டுக்காரரையா?! இவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் தவற விட்டு விடுகிறீர்கள்!
மக்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கியமான புனித ஸ்தலங்களுக்குச் சென்று வந்ததாகக் கூறுவதில் பெருமை யடைகிறார்கள். அவர்கள் சென்று வந்த கோயில்களைப் பட்டியலிடுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்பவர்களோ, உடனடியாக, இந்த சாதனைகளை மிஞ்சுவதற்கு முயற்சி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.
இந்த எல்லாப் புனித ஸ்தலங்களுக்கும் சென்று வந்த பிறகும், உங்கள் அஹங்காரம் இன்னும் உறுதியாகவே இருக்கிறது;
நீங்கள் உண்மையிலேயே ஒரு மனிதரை நேசித்தால் அவருக்கு விடுதலை கொடுங்கள். விஷூத்தி சக்கரம் இன்னும் அடைபட்டுதான் இருக்கிறது! இதைப் பற்றி எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? இவையெல்லாம், ஒப்பிடுதல், பொறாமை மற்றும் இது போன்ற விஷயங்களில் இருந்து விடுதலை பெறவும், உள் உலக முன்னேற்றத்திற்காகவுமே செய்யப்படுபவை. ஆனால் இங்கும் நீங்கள் குறிக்கோளை மீண்டும் மீண்டும் தவறவிட்டு விட்டு, இவற்றை வெளி உலகிற்காகவே செய்கிறீர்கள்.
மக்கள் தெய்வத்திற்கு முன் ஸ்லோகங்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சில வரிகளைப் படித்து விட்டு, வேலைக்காரியைக் கூப்பிட்டு அவளுக்குக் கொடுத்த வேலையை முடித்தாயிற்றா என்று கேட்பார்கள். அல்லது சில வரிகளைப் படித்து விட்டு, முடிப்பதற்கு இன்னும் எத்தனைப் பக்கங்கள் மீதியிருக்கிறது என்று பார்ப்பார்கள்! இவ்வாறுதான் அவர்கள் கடவுளுடன் தொடர்பு கொள்கிறார்கள்; மேலும் இறுதியில் அதைப் படித்து முடித்ததற்காகத் திருப்தியடைகிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் மேலாக, இதுபோன்று பாராயணம் செய்வதை, ஒரு உறுதியெடுத்துக் கொண்டு, 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்! பிறகு பெருமிதத்துடன் சென்று அண்டைவீட்டுக்காரர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ தாங்கள் மிகவும் கடினமான ஒரு சங்கல்பத்தை நிறைவேற்றி விட்டதாகச் சொல்வார்கள்.
நாம் செய்யும் எல்லா விஷயங்களுமே அநேகமாக வெறுமனே மற்றவர்களிடம் சொல்லி, அவர்களிடம் ஒரு ஒப்பிடுதல் விதையை விதைப்பதற்குத்தான். பாருங்கள், நீங்கள் சடங்குகளைச் செய்வதாகத் தீர்மானித்தால், அதை மிகுந்த சிரத்தையுடன், பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் ஒரு ஆழமான
| பொறாமை என்பது பொருளற்ற நிழல் என்பதை ஒருமுறை நீங்கள் புரிந்துகொண்டு விட்டால், அது எவ்வளவு வேதனைக்குள்ளாக்கியது என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள். |
தொடர்பு இருக்கும் உணர்வுடன் செய்யுங்கள். இவ்வாறு செய்தீர்களானால், அதைப் பற்றிப் பேச மாட்டீர்கள்.
சடங்குகளின் வழியைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்தால், பொறுப்பும் சிரத்தையும் பிரதானமாக இருக்க வேண்டும். அதனால் மிகுந்த சிரத்தையுடன் செய்யுங்கள். இன்று சடங்கு முறை வழிபாட்டிற்கு நூற்றுக்கணக்கான வழிமுறைகள் இருக் கின்றன. அதில் எதைப் பின்பற்றுவது என்று குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வெறுமனே ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றுவதாகத் தீர்மானித்து, அதைப் பொறுப்புடன் செய்யவும். பொறுப்புணர்வுதான் பலனளிக்கிறதே தவிர, சடங்குகளே அல்ல.
மேலும் இன்னொரு விஷயம்... உடனடி விளைவை எதிர்பார்க்காதீர்கள். இன்று ஒவ்வொருவரும் உடனடி தேநீர், உடனடி காபி போல உடனடி விளைவை விரும்புகிறார்கள். நம்மில் பலரும், மற்றவர்களுடைய பிரார்த்தனைகளுக்குச் சீக்கிரமாக பதில் கிடைத்து விடுவதாகவும், நாமும் நமது வழிபாட்டு முறையை அவர்களது வழிபாட்டு முறையைப் போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறோம். இவையெல்லாம் அபத்தமானது. வழிபாட்டில் கூடவா இவ்வளவு ஒப்பிடுதல்? நீங்கள் செய்யும் எதையும் பொறுப்புடனும் விசுவாசத்துடனும் செய்து விட்டு, மற்றவற்றை அப்படியே விட்டுவிடுங்கள். தானாகவே நடக்க வேண்டியது நடக்கும்.
மேலும், சடங்குகளைப் பின்பற்றும் பொழுது அவற்றின் பின்னாலுள்ள அறிவியலைப் புரிந்து கொண்டு செய்ய முயற்சி செய்தால், உங்கள் மனமும் சடங்குகளிலேயே சிக்கிக் கொண்டு விடாமல், சரியான விதத்தில் இசைவுடன் இருக்கும். எந்த ஒரு
பொறாமையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒருவரது வாழ்வில் பெறும் மிகப்பெரும் விடுதலையாகும்.
மதத்தின் அல்லது சடங்கின் இறுதி நோக்கமும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்திருப்பதேயாகும். இது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
சடங்குகள் கடவுளர்க்கு லஞ்சம் கொடுப்பதற்கான வர்த்தகப் பரிவர்த்தனை அல்ல. அவை நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கும் வங்கி இருப்பு களும் அல்ல. அவை யார் அதிகமாகச் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கான, மற்றவருடனான ஓட்டப் பந்தயமும் அல்ல. அதனால் ஒப்பிடுதலை நிறுத்தி விட்டு, நீங்கள் செய்வதில் உள்ள தீவிரத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பியுங்கள்.
எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது...
மூன்று பேர் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கினர். அவர்கள் தொழிலில் கடவுளையும் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானித்தனர். அவர்களுக்கு வரும் லாபத்தில் ஒரு சதவீகிதத்தை கடவுளுக்குக் கொடுத்து விடுவதாகவும் முடிவு செய்தனர். அவர்கள் தொழிலை ஆரம்பித்து, எதிர்பாராத விதமாக அதிக லாபமடைந்தனர். பிறகுதான் பிரச்சினை வந்தது... கடவுளுக்கு எப்படி இவ்வளவு கொடுப்பது? ஒவ்வொருவரும் ஆலோசனை கூறினர். முதலாமவன் சொன்னான், "சரி. நாம் ஒரு வட்டம் வரைந்து, எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். வட்டத்திற்கு உள்ளே விழுவது கடவுளுக்கென்றும் வெளியே விழுவது நமக்கென்றும் வைத்துக் கொள்வோம்சு. இரண்டாமவன் சொன்னான், "அப்படி வேண்டாம். நான் ஒரு சிறந்த யோச னை சொல்கிறேன். நாம் ஒரு பெரிய வட்டம் வரைந்து, எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். உள்ளே விழுவது நமக்கென்றும், வெளியே விழுவது கடவுளுக்கென்றும் வைத்துக் கொள்வோம்".
உங்களால் சாட்சியாக இருக்க முடியுமானால், எதையும் கடந்து செல்வது சுலபமாகி விடும். மூன்றாமவன் சொன்னான், "பாருங்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். எப்படியும் கடவுள் நமக்கு மேலேதான் இருக்கிறார். நாம் எல்லாப் பணத்தையும் மேலே எறிவோம். அவருக்கு வேண்டியதை அவர் எடுத்துக் கொள்ளட்டும். கீழே விழுவதை நாம் எடுத்துக் கொள்வோம்".
(பலத்த சிரிப்பு!)
நமக்கு ஏதாவது வேண்டியிருக்கும் வரையில், நாம் அதற்காகக் கடவுளுக்கு லஞ்சம் கொடுப்போம். நமக்கு அது கிடைத்தவுடன், அடுத்த ஆசை எழும் வரையில், அவரைக் கைகழுவி விடுவோம். நமக்கு இவ்வாறு செயல்படத்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சொல்லுங்கள்... ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா?
ஸ்வாமிஜி, நாம் சடங்குகளைப் பற்றிப் பேசும் பொழுது, தயவு செய்து சடங்குகளின் மார்க்கத்தைப் பற்றியும், தியான மார்க்கத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?
சொல்கிறேன்...
பாருங்கள், சடங்குகளைப் பொறுத்தவரை, ஏதோ ஒரு நிச்சயமான தன்மை இருக்கிறது. அது ஒழுங்காக வடிவமைக் கப்பட்டிருக்கிறது. நீங்கள் சரியாக எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்பொழுது முடிக்கப் போகிறீர்கள், எங்கு செய்யப் போகிறீர்கள், எதற்காகச் செய்யப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். சடங்குகளைப் பொறுத்த வரை, நீங்கள் உள்ளே சென்று விட்டு மீண்டும் அதே மனிதனாக வெளியே வந்து விடுகிறீர்கள். மொத்த செயல்முறையிலுமே மிகுந்த பாதுகாப்பு இருக்கிறது.
நீங்கள் என் போதனைகளைப் பிரசங்கம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
அதனால்தான் அது இவ்வளவு தூரம் பரவியிருக்கிறது. நிச்சயமான தன்மை கொண்ட எதுவுமே சுலபமாகப் பரவி விடுகிறது.
ஆனால் தியானத்தில் என்ன நிகழ்கிறது? முதலில், சடங்குகளுடன் ஒப்பிடும் பொழுது, பலனளிப்பதில் தியானம் மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது. நான் ஏன் ஆசிரமத்தில் சடங்குகளைச் செய்கிறேன் என்று மக்கள் என்னிடம் எப்பொழுதும் கேட்பதுண்டு. நான் அவர்களிடம் சொல்வேன், மக்களை வெறுமனே ஆசிரமத்திற்கு வந்து ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்யுங்கள் - உண்மையில் இதுவே போதுமானது - என்றால், அவர்கள் கேட்பார்களா?
இப்பொழுது இங்கு தக்ஷிணாமூர்த்தி சிலையும், நடராஜர் விக்கிரகமும் இல்லையென்றால், அவர்கள் இவற்றை அங்கே பார்க்கவில்லையென்றால், வெறுமனே வெறும் திறந்த வெளியையும் ஆலமரத்தையும் பார்ப்பதற்கு வருவார்களா? அனேகமாக நான் மட்டுமே ஆலமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பேன்! (சிரிப்பலைகள்).
மக்களை, அவர்களது உள்நோக்கிய பயணத்தில் முதலடியை எடுத்து வைக்க வைப்பதற்கு, அவர்கள் மனதிலிருக்கும் சில சிக்கலான விஷயங்களை நான் காண்பிக்க வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில் அவர்களைக் கவர முடியாது. நான் அவர்களது மொழியிலேயே பேச வேண்டியதிருக்கிறது.
தக்ஷிணாமூர்த்தி சிலை அங்கு இல்லாவிடினும் உண்மை யிலேயே ஆலமரத்தைச் சுற்றியுள்ள சக்திக் களம் இருக்கும் என்பதை அறியாமல், அவர்கள் ஆலமரத்தினடியில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ஆல மரமானது உயிருள்ள சக்தியாகும். அதன் அமைதி அதிர்விலேயே
| நீங்கள் குருமார்களின் பேச்சைக் கேட்கும்பொழுது அப்படியே உட்கிரஹித்துக் கொள்ளுங்கள். குருமார்கள் சத்தியத்தை மட்டுமே பேசுகிறார்கள். |
இருக்கும் அமைதி. அதனடியில் நீங்கள் வெறுமனே ஒரு தியான மனோபாவத்தோடு அமர்ந்தாலே போதுமானது. நீங்கள் சிக்கலான எதையும் செய்ய வேண்டியதில்லை. அதிலிருக்கும் ஒவ்வொரு இலையும், கிளையும் என்னுடன் பேசுகிறது.
பாருங்கள், நீங்கள் விக்கிரகங்களை வழிபடும்பொழுது, அதனுடன் இணைக்க முயற்சி செய்யும், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரமிக்கத்தக்க இருப்பை மேலும் மேலும் அறிய வேண்டும். பிறகு நீங்கள் தானாகவே எல்லா இடத்திலும் கடவுளைக் காண ஆரம்பித்து விடுவீர்கள். அது வெறும் விக்கிரகம் அல்ல, கடவுளின் இருப்பைச் சுமந்து கொண்டிருக்கும் முழுப் படைப்புமே அது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். பிறகு உங்களால் முழு பிரபஞ்சத்துடனுமே தொடர்பு கொள்ள முடியும்.
தியானத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சிரத்தையுடன் தியானத்திற்குள் சென்றால், அதன் விளைவை நிச்சயமாகச் சொல்ல முடியாது. புறத்தன்மை மாற்றமடையலாம். நீங்கள் வேறு மனிதராக வெளிப்படலாம். இது ஒரு பெரிய அபாயமாகப் பார்க்கப்படுகிறது! அது சூதாட்டத்தைப் போன்றது. மாற்றம் நிகழத் தொடங்குகிறது. இந்த மாற்றத்தைத்தான் நீங்கள் உண்மையிலேயே தேடிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது நிகழும்பொழுது அச்சப்படுகிறீர்கள்.
நீங்கள், உங்கள் சடங்குகளின் பாதுகாப்பில் சுகமாக இருக்கிறீர்கள். சடங்குகள் உங்கள் தினசரிச் செயல்பாடுகளில் ஒரு அங்கமாகி விட்டது; அது நீங்கள் பின்பற்றும் உயிரற்ற வழிமுறைகளின் ஒரு பகுதியாகி விட்டது.
ஞானம் என்பது இதுவே - அது ஒரு மின்னல் ஒளியில் முழுக் கானகத்தையும் பார்த்தல்! எப்படியோ, அது உங்களுக்கு ஒரு திருப்தியைத் தருவதால், நீங்கள் அங்கேயே இருக்கிறீர்கள். தியானத்தில், உங்கள் கொள்கைகள் கொஞ்சம் ஆட்டம் காணத் தொடங்குவ தால், நீங்கள் அச்சப்படுகிறீர்கள். வருடக் கணக்கான நெறிப் படுத்தல்களினால் கட்டப்பட்டுள்ள உங்கள் நம்பிக்கைகள் திடீரென்று ஆட்டம் காண்பது போல் தோன்றுகிறது. நீங்கள், இதுவரை அதிகம் நடந்திராத பாதையில் செல்வதாக உணர்வதால் அது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நீங்கள் தியானம் செய்யும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு அதிகமாகிறது. அதனால், நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கும், உண்மையில் சமூகத்தால் உங்களைச் சுற்றிப் போடப்பட்ட வேலியானது, கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, நீங்கள் புரட்சிகரமாக உணர்கிறீர்கள். இது சமூகத்திற்கு எதிரானதல்ல; ஆனால் உங்களுடைய விழிப்பற்ற, அறியாமை நிறைந்த நிலைக்கு எதிரானது. இந்தப் புரட்சி மனப்பான்மை இதன் காரணத்தை அறிய மேலும் முற்படுகிறது. அது உங்களுக்கு இன்னும் பல வழிகளைத் திறக்கிறது.
இவ்வாறு நீங்கள் இதற்குமுன் சென்றிராத, சமூகத்தால் அறியப்படாத, சமூகம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிற, இதுகாறும் உங்களுக்குள்ளேயே இருந்த ஆனால் பூட்டப்பட்ட நிலையில் இருந்த, அதைத் திறப்பதற்கான திறவு கோலைத் தேடிக் கொண்டிருந்த, இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் இதற்கு முன்னும் பல பிறவிகளிலும் அறியாமல் இருந்த, ஒரு வெற்றிடத்தில் மேலும் மேலும் ஆழமாகச் செல்வீர்கள். இந்த வெளியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால் வந்து சேர்ந்து விட்டீர்கள்!
என் ஒவ்வொரு வார்த்தையும், உங்களுக்காகவே, சக்தியைத் தாங்கி வருகிறது. அது இவ்வாறு இருக்கிறது... ஒரு பசு கயிற்றால் கட்டப்பட்டு, சில மீட்டர் ஆரமே கொடுக்கப்பட்டு, சிறிது தூரம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அது அங்குமிங்கும் அலைந்து, அதன் அறிவுக் கூர்மையினால் விழிப்பும், பக்குவமும் பெறுகிறது. பிறகு கயிறு சிறிது தளர்த்தப்பட்டு, இன்னும் சில மீட்டர் ஆரம் அதிகமாக்கப்படுகிறது. அது இன்னும் கொஞ்சம் அதிக தூரம் சென்று மேலும் அறிவுக் கூர்மையடைகிறது. அதனால் இன்னும் சிறிது கயிறு தளர்த்தப்பட்டு இன்னும் சிறிது தூரம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பசுவின் வளரும் அறிவுக் கூர்மையையும், விழிப்புணர்வையும் பொறுத்து ஒரு காலத்தில் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டு விடும்!
மனிதனிடமும் இதேதான் நடக்கிறது. மனிதனைச் சுற்றியிருக்கும் கயிறு அல்லது வேலியானது அவனுடைய விழிப்புணர்வைப் பொறுத்தே அமைகிறது. அவனுடைய விழிப்பு அதிகரிக்க அதிகரிக்க, அவன் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறான்; மேலும் அவனது விழிப்புணர்வு அதிகரிக்கிறது.
பாருங்கள், அது உங்களுடைய சக்தி உருமாற்றமடைய அனுமதிப்பதற்கு எவ்வளவு விருப்பமாயிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்த ஒரு வழியில்தான் அது நிகழ முடியும்.
ஆனால் அது நிகழும் பொழுது, சமூகம் நீங்கள் விலகிச் செல்வதாகச் சொல்லும். அது நீங்கள் சரியான பாதையிலிருந்து விலகிச் செல்வதாகச் சொல்லும். பிறகு குழப்பம் ஆரம்பமாகும். அப்பொழுது, நீங்கள் தைரியத்துடனும், உங்கள் மீதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீதும் விசுவாசத்துடனும், மேலே செல்ல வேண்டும்.
உள்ளே ஆழ்ந்து நோக்கினீர்களானால், ஒரே ஒரு கேள்வி மட்டுமே எழும்; அதுவே உங்களுடைய உண்மையான கேள்வியாகும். அதற்கு பதில் கிடைத்து விட்டால், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள். இங்குதான், எந்த ஒரு புத்தகத்தையும் அல்லது பிரசங்கத்தையும் விட மேலாக, ஒரு குருவால் ஒரு யோக தண்டம் (சிறு ஊன்றுகோல்) போல நீங்களாகவே எழுந்து நிற்க உதவ முடியும். ஒவ்வொரு முறையும், உங்கள் ஆன்மீகப் பாதையில், நீங்கள் சமூகத்தால் தாக்கப்படுவதாக உணரும் போதும், நீங்கள் பெரும்பாலான மக்களுக்கு எதிராக இருப்பதாக உணரும் போதும், குருநாதர் தன் சொந்த வழியில் உங்களை மேலே தூக்கி, தொடர்ந்து செல்லச் சொல்வார்.
பலவீனமான தருணங்களில் தூண்டி விடப்பட வேண்டும். நீங்கள் மீண்டும் உங்கள் தலையை உயர்த்தி நடக்கும் வரையிலும் குருநாதரே தூண்டு கோலாகவும் ஊன்றுகோலாகவும் இருக்கிறார். நீங்கள் திணறும் ஒவ்வொரு கணமும், அந்தக் கோல் உதவுவதற்காக வெளிப்படுகிறது.
குருநாதரின் துணையுடன், உங்களால் தனி மனிதனாக, சுதந்திரமான மனிதனாக, உங்களது தனித்துவத்தைக் கண்டுணர்ந்து, எழுந்து நிற்க முடியும். அதன் பொருள், நீங்கள் குருநாதரைச் சார்ந்திருக்கிறீர்கள் என்பதல்ல, கண்டிப்பாக அல்ல. இது இன்னொரு பொதுவான தவறான அபிப்பிராயம். மக்கள், நீங்கள் வாழ்க்கைக்கு இன்னொரு மனிதரைச் சார்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றனர்.
அது இவ்வாறு இருக்கிறது... நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள். நீங்களாகவே கண்டு பிடிப்பதாயிருந்தால், நீங்கள் பல இடங்களில் வழி கேட்பீர்கள். சில சமயம் தவறாக வழி காட்டப்பட்டு, மீண்டும் சென்ற வழியே திரும்பவும் நேரலாம். இவ்வாறு, எப்படியோ உங்கள் இலக்கை அடைந்து விடுவீர்கள். நீங்கள் அடைந்து
நாம் உண்மையை விட வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவ்வாறுதான் நாம் குருவையும் தவற விட்டு விடுகிறோம். விடுவீர்கள் என்றாலும், அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் உங்களிடம் ஒரு வரைபடமோ அல்லது ஒரு வழிகாட்டியோ இருந்தால், எப்படி இருக்கும்? நீங்கள் நேர விரையமில்லாமல் நேராக உங்கள் இலக்கை அடைந்து விடலாம் இல்லையா? அதன் பொருள் நீங்கள் வரைபடத்தையோ அல்லது வழிகாட்டியையோ சார்ந்து இருக்கிறீர்கள் என்பதா? இல்லை. அது காரியத்தை விரைவாகச் செய்யும் ஒரு வழி, அவ்வளவே. அதே போன்று, குருநாதரும் ஒரு வழிகாட்டிதான்; அவருக்கு வழி தெரியும்; அவர் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்கனவே சென்றிருக்கிறார்; உங்களுக்கு அங்கு செல்வதற்கு வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.
உங்களிடம் அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால், நீங்கள் இலக்கை அடையக் கடினமாக உழைப்பீர்கள் என்பதில் சந்தேக மில்லை; ஆனால் உங்களிடம் அர்ப்பணிப்புடன் தைரியமும் இருந்தால், இலக்கை வேகமாக அடைந்து விடுவீர்கள். இந்தத் தைரியம் நீங்கள் மற்றவர்களைப் பார்ப்பதை நிறுத்தி உங்களை மட்டுமே பார்க்கும் பொழுது, உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதை நிறுத்தி உங்களையே விழிப்புணர்வுடன் கவனிக்கும் பொழுது, உங்களுடைய அமைப்பில் நிகழும் நுட்பமான மாற்றங்களை கவனிக்கும் பொழுது மட்டுமே வரும்.
நீங்கள் உங்கள் பாதையில் திட நம்பிக்கையுடன் இருக்கும் தைரியத்தில் எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளாமல், உங்களுக்குள் உறுதியாக மையம் கொண்டிருந்தால் மட்டுமே, உங்களுக்குள் திட நம்பிக்கையுடன் இருக்கும் தைரியம் நிகழும்.
ஆன்மீகம் அல்லது ஸந்யாசம் என்பது துறப்பதைப் பற்றியே அல்ல. அது ஆழமான விழிப்புணர்வு பெறுவதைப் பற்றியது. சமூகம், உங்களை அதற்குத் தெரிந்த பழக்கமான வடிவ அமைப்புகளிலும், அதனால் கையாள முடிந்த பழக்கமான துயரங்களிலும், ஏற்கனவே பலமுறை நடந்து தேய்ந்த பாதைகளிலும், இழுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாதையில் விழுவது மிகவும் சுலபம்; அதற்குத் துணிவு தேவையில்லை. ஆனால் அதிகமாக நடக்கப்படாத ஆன்மீகப் பாதையில் நடப்பதற்குத் துணிவு தேவை. நான் துணிவு என்று சொல்லும் பொழுது, ச ாதாரணமான துணிவைச் சொல்லவில்லை. முழுமையான துணிவைச் சொல்கிறேன்.
நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை அணிவதற்கு தைரியம் தேவையில்லை; ஆனால் ருத்ராக்ஷ மாலையை அணிவதற்கு தைரியம் தேவை. ருத்ராக்ஷ மாலையை அணிய விரும்பும் பக்தர்களுக்கு, நான் அதைக் கொடுப்பதுண்டு. ருத்ராக்ஷ மணிகள் சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்ளும். அவை உங்களுக்காக பிரபஞ்ச சக்தியை சேமித்து வைத்துக் கொள்கின்றன. அவை மின்கலம் போன்று சக்தியைச் சே மித்து, உங்கள் சக்தி குறையும் பொழுது, உங்களுக்கு மீண்டும் சக்தியை அளிக்கிறது. ஆனால் சமூகம் இந்த மாலையை சந்நியாச த்தின் தெளிவான அறிகுறியாகப் பார்க்கிறது! அது துறவின் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல், இவை துறவிகளால் மட்டுமே அணியப்படுகிறது என்ற கண்ணோட்டத்திலேயே இருக்கிறது.
அது குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ருத்ராக்ஷம் அணிவதை கண்டனம் செய்கிறது. ஆனால் ருத்ராக்ஷ மாலையை அணிந்திருக்கும் விக்கிரகத்தையோ அல்லது சாதுவையோ கண்டால் மகிழ்ச்சியடைந்து பிரார்த்தனை செய்கிறது. என்னுடைய இளம் பக்தர்கள் பலர், ருத்ராக்ஷ மாலையை அணிவதற்கு அவர்கள்
சிஷ்யன் கேட்டான் ‘குருவே, நாம் இப்பொழுது ஆற்றைக் கடக்க போகிறோமா?’ குரு சொன்னார் ‘ஆம் கடக்கப் போகிறோம். பாதம் நனைந்து விடப்போகிறது. பத்திரம்’
வீட்டில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதை என்னிடம் வந்து சொல்கிறார்கள்.
இந்த வீண் பேச்சு பேசுபவர்கள் அனைவரும் இதைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பர்; இவர்களைப் பற்றிக் கதைகளையும் பரப்புவர். இது அபத்தமாக இல்லை? அவர்கள் பிரார்த்தனை செய்யும் பொழுது, பிரபஞ்ச சக்தியிடம் பிரார்த்திக் கிறார்கள்; ஆனால் அதே சக்தி எளிமையான வடிவில் கிடைக்கும் பொழுது, அதை ஏற்கத் தயாராக இல்லை! அவர்கள் அதை நோக்கிப் பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் அதை விட்டு விலகி ஓடி விடுகிறார்கள்!
இதனை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், மிகவும் அபத்தமாகவும் பொருளற்றதாகவும் தோன்றும். அவர்கள் தங்களை மிகவும் தெளிவாகக் கடவுளிலிருந்து வேறுபட்டவர் களாகக் காண்கிறார்கள்; அதுதான் பிரச்சினை. அவர்கள் தாங்கள் கடவுள் என்பதை ஏற்கத் தயாராக இல்லை. நான் இப்பொழுது சொல்கிறேன்: உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான். இதுதான் விஷுத்தி சக்ரத்தின் அடிப்படையும் கூட - உங்களுடைய தனித்துவத்தையும் முடிவற்ற ஆற்றலையும் கண்டுபிடிப்பது.
உங்களுடைய தைரியம் வளரும்பொழுது, சமூகம் தானாகவே தேய்ந்து முக்கியமற்றதாகி விடும். உங்களுடைய தைரியம் குறைவாக இருக்கும்பொழுது, சமூகம் உங்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தும். இவை எல்லாவற்றிற்கும் உங்கள் மனம்தான் காரணம். நீங்கள் சமூகத்திற்கு எவ்வளவு
ஆன்மீகம் என்பது கால்கள் நனையாமல் வாழ்க்கைக் கடலைக் கடப்பது.
அதிகாரம் கொடுத்திருக்கிறீர்களோ, அது உங்கள் மீது அவ்வளவு அதிகாரத்தைச் செலுத்தும். அதனால் எதற்காகவும் ஒருபோதும் சமூகத்தைப் பழிக்காதீர்கள்.
தேர்வு எப்பொழுதும் உங்களுடையதாகவே இருக்கிறது. தைரியக் குறைவினால், நீங்கள் சமூகத்தின் வழியில் செல்லத் தீர்மானிக்கிறீர்கள்; ஒப்பிடுவதன் மூலமும், ஒருவரையொருவர் தோற்கடிக்க முயற்சி செய்வதன் மூலமும் இழுபறி செய்யத் தீர்மானித்து விட்டு, பிறகு சமூகத்தின் மீது பழியைப் போடுகிறீர்கள். அது மிகவும் அபத்தமான காரியம். நினைவில் வையுங்கள். தேர்வு எப்பொழுதுமே உங்களுடையதுதான்.
வெறுமனே விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள், எல்லையற்றது தானாகவே திறந்து கொள்ளும். அப்பொழுது நீங்கள் அச்சப்படலாம்; ஏனெனில் இதற்கு முன் நீங்கள் இத்தகைய திறந்த வெளியைக் கண்டதில்லை.
நீங்கள் எப்பொழுதும் எல்லைகளையே கண்டு பழக்கப் பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களால் வேலியையே எங்கும் காண முடியாது. இயல்பாக இருக்க முடியாமல் அச்சப்பட ஆரம்பிக்கிறீர்கள்.
உடனே தவறான இடத்திற்கு வந்து விட்டதாக எண்ணுகிறீர்கள். நிஜத்தை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது. பாதுகாப்பற்று உணர்கிறீர்கள். மீண்டும் பழைய நம்பிக்கைகளும் பொய்களும் கொடுத்த கதகதப்பிற்கே போய்விடலாம் என்று எண்ணுகிறீர்கள். சமூகம் நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்று சொன்னபோதே, அதன் பேச்சைக் கேட்காமல் தவறு செய்து விட்டதாக எண்ணுகிறீர்கள். நீங்கள் சந்தேகப்பட ஆரம்பிக்கிறீர்கள்; பிறகு சந்தேகத்தையும் சந்தேகப்பட ஆரம்பிக்கிறீர்கள்.
கழுத்தளவு நீரில் நின்றாலும், அதனால் தொடப்பட்டால் வாழக் கற்றுக் கொடுப்பதே ஆன்மீகமாகும்.
வாழ்க்கை திடீரென்று ஆட்டம் காண்பதாகத் தோன்றும். நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்றே தெரியவில்லை. ஒரு பாலைவனத்தின் நடுவே தனியாக விடப்பட்ட குழந்தையைப் போன்று உணர்கிறீர்கள். இது போன்ற சமயங்களில்தான் நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மை எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; உங்களுடைய துணிவு பக்குவம் அடைய வேண்டும்; பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது விசுவாசத்துடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும்; பிறகு எல்லாம் சரியாகி விடும். விசுவாசமே துணிவின் தூண்டு கோலாக இருக்கிறது.
உங்களுக்குள் ஒரு புரட்சி நிகழாத வரையில், ஒருபோதும் வெடித்துக் கொண்டு ஒரு மரமாக வளர முடியாது. நம்மில் பலர் தைரியம் இன்மையினால், விதையாகவே இருந்து இறந்து விடுகிறோம். நாம் எப்பொழுதுமே விதையைக் கூறு போட்டு பழங்களையும் மலர்களையும் காண முயற்சி செய்கிறோம். அது எப்பொழுதாவது உதவுமா? உதவாது! விதை பிளந்தால் தான் வளர முடியும். அதே போன்று, ஒரு அடிப்படையான மாற்றம் நிகழ்ந்தால்தான், ஒரு புரட்சி உருவானால்தான், மனிதனால் வெடித்துக் கொண்டு வளர முடியும். எல்லா தியான முறை களுமே, விதை வெடிப்பதற்கான உத்திகளைத் தவிர வேறல்ல.
நீங்கள் வெடிக்க ஆரம்பிக்கும் பொழுது, உங்களுடைய முன்னுரிமை வரிசையும்1 மாறத் தொடங்கும். இதற்கு முன் முக்கியமாக இருந்தது இப்பொழுது முக்கியமற்றதாகி விடும். உங்களுடைய இருப்புத் தன்மையைப் பேணும் விஷயங்கள் மட்டுமே இப்பொழுது முக்கியமாகத் தோன்றும். உங்களுடைய முழு மனோபாவமுமே மாறிவிடும். உங்களுடைய முழுிருப்பும் மாறிவிடும்.
Periority¹
உங்களுடைய இருப்பு, அவர்கள் அங்கீகரிக்காமல் போனால் கூட, தானாகவே மக்களைக் கவர்ந்திழுக்கும்! உங்களுடைய உள் மையத்திலிருந்து வீசும் ஒளியானது அவர்களுடைய ஆழமான ஆர்வத்தைத் தூண்டியிழுக்கும். சமூகம் உங்களுடைய மாற்றமடைந்த மனோபாவத்தைப் பற்றி விமர்சனம் செய்த போதிலும், அது உங்களுடைய இருப்பில் இருக்கும் தெளிவான வித்தியாசத்தை உணரத் தொடங்குகிறது.
உருமாற்றம்¹ நிகழும்பொழுது, கடந்த காலம் பற்றிய எதையும் வெறுமனே முற்றிலுமாக அலட்சியம் செய்து விடுங்கள். கடந்த காலம் மீண்டும் மீண்டும் உங்களை பழக்கமான வடிவ அமைப்புகள்ளுள்ளும், ஆழமான அடிமைத்தளைக்குள்ளும் இழுக்க முயற்சி செய்யும். நீங்கள் மற்றவர்களுடைய வார்த்தைகளைக் கேட்பீர்களானால், அடிமைத் தளைக்குள்ளேயே இருப்பீர்கள். வெறுமனே, பரவச நிலையையும், உங்களுக்குள் உருமாற்றம் நிகழ்வதில் திட நம்பிக்கையையும் தீர்மானத்துடன் உறுதியாகப் பற்றி நில்லுங்கள். இதுவே உங்களுக்கான மிகப் பெரும் சோதனை - முழுமையாக உருமாற்றமடைவதில் உங்களுடைய விடாமுயற்சிக்கான சோதனை. உருமாற்றமடைதல் முழுமை பெற்று பக்குவமடையும் வரையில் உறுதியாகப் பற்றி நில்லுங்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நிரப்பும் பிரபஞ்ச சக்தியும், உங்களை நிரப்பும் ஒரு சக்தியும் இருக்கிறது. ஆன்மீகம் என்பது இந்தப் பிரபஞ்ச சக்திக்கும் உங்களுடைய சக்திக்கும் ஒரு உயிருள்ள இணைப்பை ஏற்படுத்துவதுதான். உங்களுடைய தனி விழிப்புணர்வு, பிரபஞ்ச விழிப்புணர்வுடன் கலந்து விடும் பொழுது, நீங்கள் ஞானமடைகிறீர்கள்.
Transformation¹
வெறும் ஞானமடையும் ஆசை மட்டுமே போதாது. அது விழிப்புடன் எடுத்த தீர்மானமாக இருக்க வேண்டும். பாருங்கள், சாதாரண ஆசைகள், உண்மையிலேயே உங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி உந்தித் தள்ளாத, பேராசையைத் தவிர வேறல்ல. ஒரு விழிப்பான தீர்மானமென்பது, உங்களைச் சாதனையை நோக்கிச் செயல்பட வைக்கும்.
மக்கள் இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல், வெறுமனே மேலோட்டமான நிலையில் பேசுகிறார்கள். நீங்கள் புரிந்து கொள்ளாதபோது, தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் புரிந்து கொண்டதாக எண்ணுகிறீர்கள்.
ஆன்மீகம் என்பது நமது உடல், மனம் மற்றும் ஆவியைப் பற்றிய ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலைத் தரும் ஒரு விஞ்ஞானம். அதில் விழிப்புணர்வுடன் நுழையும் போது, வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறது. மக்கள், வெளியிலிருந்து உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் துறப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் எதையும் துறக்கவில்லை; வெளியுலக விஷயங்கள் தான் தானாகவே வெறுமனே கரைந்து விடுகிறது என்பதை, நீங்கள் மட்டுமே புரிந்து கொள்வீர்கள். மாயை மறைந்து நீங்கள் மனோவசியத்திலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.
ஒரு நிகழ்ச்சியில், எத்தனை பேர், நான் அவர்களை மனோவசியப்படுத்தி வைத்திருப்பதாக நினைக்கிறார்கள் என்று கேட்டேன். எண்பது பேரில், மூன்று பேர் மட்டுமே கையை உயர்த்தினர். கையை உயர்த்திய ஒரு சிறு பெண்ணைக் கண்டு அவளருகில் இருந்த ஒரு பெண்மணி சிரித்தார். அந்தப் பெண்மணியிடம் ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டேன்;
இந்த ஆலமரமானது உயிருள்ள சக்தியாகும். அதன் அமைதி அதிர்விலேயே இருக்கும் அமைதியாகும்.
குறைந்தபட்சம் அந்தச் சிறு பெண்ணிடம் கையை உயர்த்தும் நேர்மை இருந்தது.
அவர்களில் பலரும் கையை உயர்த்த விரும்பி யிருப்பார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்; ஆனால் நான் என்ன சொல்வேனோ என்று பயந்து பேசாமல் இருந்து விட்டனர்! எப்படியோ, மூன்று பேர் கையை உயர்த்தினர். நான் அவர்களிடம், நான் மனோவசியப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் மனோவசியத்திலிருந்து அவர்களை விடுவித்தேன், என்று சொன்னேன்.
அவர்கள் மாயை அல்லது பொய்யான தோற்றங்கள் விலகுவதை உணரத் தொடங்கினர். ஆனால் என்ன நிகழ்கிற தென்றால், நீங்கள் பொய்யான நிலையிலேயே இருந்து பழகி விட்டதால், அது விலகத் தொடங்கும்பொழுது, ஏதோ தவறு நடந்து விட்டதாக நினைக்கிறீர்கள்! பிரச்சினை என்னவென்றால், மக்களிடம் மிகுதியான உண்மைகளைச் சொல்லி புரிந்து கொள்ளுதல் நிகழத் தொடங்கும் பொழுது, ஒரு விதமான பயம் ஆட்கொள்கிறது. அவர்கள் அறியாமையின் மறைப்பில் அனுபவித்த சுகங்கள் ஆட்டம் காணத் தொடங்குகிறது.
பாருங்கள், எந்த அளவிற்கு உங்கள் அறியாமை கரைகிறதோ, அந்த அளவிற்கு நீங்கள் கடவுள் அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையால் ஆட்கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் தினசரி வாழ்க்கையில் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், உங்களைக் காலி செய்து கொள்ளுதலை நோக்கித் திருப்பி விடப்பட்டால், நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையினால் நிரப்பப்படுவீர்கள். வாழ்க்கையில் மற்ற எல்லாமே வெறும் தற்செயலானதும் முக்கியமற்றதும்தான். இதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் தியானம் செய்யும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு அதிகமாகிறது.
உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், உங்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை நோக்கியே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் உண்மையிலேயே பிரபஞ்ச இருப்புத் தன்மையை அல்லது கடவுளை உணர வேண்டும் என்று விழிப்புடன் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று பொருள். உங்களிடம் இந்த உறுதியான தீர்மானம் நிகழவில்லை என்றால், நீங்கள் தேடுவதாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவே. நீங்கள் வெறுமனே உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கணமும் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைக்காதீர்கள். உங்களைத்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
வெளி நோக்கியிருக்கும் உங்கள் அடிகளை உள்நோக்கித் திருப்புவதுதான் முதல் அடி. U-வளைவெடுக்கும் அந்தக் கணம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கவனம் கொள்ளுங்கள், நீங்கள் U-வளைவெடுத்து விட்டீர்கள் என்பதை உங்கள் விழிப்புணர்வு சொல்லும். அது வரையில் உங்களை ஒருங்கிணைக்க முடியாமைக்கு மக்களையும், சூழ்நிலைகளை யும், வெளியுலக சந்தர்ப்பங்களையும் காரணம் காட்டி உங்கள் மனம் மேலும் மேலும் சாக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
ஒரு முறை நீங்கள் U-வளைவு¹ எடுத்து விட்டால், இவையெல்லாம் மறைந்து முக்கியமற்றதாகி விடும். அவை சிறிது சிறிதாக தங்கள் முக்கியத்துவத்தை இழந்து விடும். அவை அங்கிருக்கும் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் நீங்கள் அவற்றுடனேயே நிலையாக முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். அவைகள் தங்களுடைய பாத்திரத்தை மிகவும் சரியாகச் செய்து, நீங்கள் மிகவும் சக்தி மிக்க கவனிப்பவராக உதவும். முதலடி எடுத்து
U - turn¹ வைப்பது அல்லது U-வளைவெடுப்பதே மிகவும் கடினமான காரியம். U-வளைவெடுக்கும் பொழுதே, பாதி வேலை முடிந்து விடுகிறது. பிறகு நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வழிகளுக்கு மிகவும் வளைந்து கொடுப்பவராக ஆகி விடுகிறீர்கள்.
நீங்கள் U-வளைவெடுக்கும் பொழுது, எல்லாமே தியானமாகிவிடுகிறது. அது நடப்பதோ, பேசுவதோ, பாடுவதோ, நடனமாடுவதோ, அல்லது வெறுமனே உங்கள் உடைகளை உடுத்திக் கொள்வதோ அல்லது களைவதோ, எதுவாக இருப்பினும் அது தியானமாகிவிடுகிறது; அது அதிகரித்துக் கொண்டிருக்கும் விழிப்புணர்வுடன் செய்யப்படுகிறது.
நீங்கள் இவற்றைச் செய்வதை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பீர்கள்; கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொத்த உலகமுமே ஒரு மாயைதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் உள் நோக்கி முதலடி எடுத்து வைக்கும் பொழுதே, உண்மையில் ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறீர்கள்; ஏனெனில் முதலடியே உண்மையில் பெரிய அடிதான். அது வரையில், வெறுமனே தத்துவமாக்கிக் கொண்டும், தேடுவதாக உங்களையும் மற்றவர்களையும் நம்ப வைத்துக் கொண்டும், நாளுக்கு நாள் குழப்பம் அதிகரித்துக் கொண்டும், உறுதி குறைந்து கொண்டும் இருக்கிறீர்கள்.
நீங்கள் முதலடி எடுக்கும் பொழுதே, உங்களை வெற்றி கொள்ளத் தயாராகி விட்டீர்கள். மற்றவர்களை வெல்வது மிகவும் சுலபம். வெறுமனே சில ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது உங்கள் நாவால் அவர்களை நார் நாராகக் கிழித்துவிடுங்கள்,
நரிக்குறவர்களின் பாசிமணி மாலையை அணிவதற்கு தைரியம் தேவையில்லை. ஆனால் ருத்ராக்ஷ மாலையை அணிவதற்கு மிகுந்த தைரியம் தேவை.
அவ்வளவுதான். ஆனால் உங்களை வெல்வதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும். இந்த விஷ்ஒத்தி சக்ரமானது, முழுவதும் உங்களை வெல்வது பற்றியதே.
நீங்கள் உள்நோக்கிப் பார்க்கும் பொழுது, உங்களை வெற்றி கொள்ளத் தயாராகிறீர்கள். நீங்கள் உள்நோக்கிய பாதையில் இருக்கும் பொழுது, என்ன செய்கிறீர்கள் என்பது, உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு உணரத்தக்க வகையில் இல்லாமல் இருக்கக் கூடும். நிகழ்வதெல்லாம் உள்ளேதான், வெளியே அல்ல என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.
உங்களுக்குள் நிகழும் புரட்சியை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். உங்களுக்குள் அறிவுக் கூர்மை வளர்வதை உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.
உங்களைச் சுற்றியிருக்கும் மக்களால், உங்கள் அனுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாது. நான் சொல்கிறேன்... நீங்கள் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை, ஒரு போதும் யாரையும் நம்ப வைக்க முயற்சி செய்யாதீர்கள். உங்களுடைய எண்ண அலை வரிசையுடன் ஒத்துப் போகும், ஆன்மீக நண்பர்களுடன் வேண்டுமானால், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால் உள்பயணங்களைப் பற்றி அறியாத மற்றவர்களுடன், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்தீர்களானால், ஆழ்ந்த துயரத்தைதான் அடைவீர்கள்.
உன்னிடம் வெறுமனே அனுபவங்கள் நிகழ விடுங்கள்; அவற்றைப் பற்றிக் கொண்டோ அல்லது அவற்றின் பின்
நான் இப்பொழுது சொல்கிறேன்; உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான்! ஓடிக்கொண்டோ இருக்காதீர்கள். அவை உங்களிடம் நீராவியைப் போல வேலை செய்ய அனுமதியுங்கள்; அதனால் நீங்கள் முழுமையாகப் பக்குவமடையலாம். நீங்கள் அவற்றைப் பற்றிக் கொண்டிருந்தால், ஓரிடத்திலேயே தேங்கி அனைத்தையும் தவற விட்டு விடுவீர்கள்.
இந்த எல்லா அனுபவங்களுமே, உங்களுடைய உள்நோக்கிய பயணத்தில், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதன் அறிகுறிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை நீங்கள் சாலைகளில் காணும் விளம்பரப் பலகைகளைப் போன்றவைதான். நீங்கள் விளம்பரப் பலகைகளைப் பற்றிப் கொண்டு, இலக்கை அடைந்து விட்டதாகச் சொல்வீர்களா? இல்லை. அவற்றைப் பற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய இலக்கை நோக்கி மேலே செல்லுங்கள்.
முழுமையான பொறுப்புணர்வும் மன உறுதியும் வேண்டும்; அது நீங்கள் தயாராகும் பொழுது - சமூகத்தாலாகிய உங்கள் மனதை விட்டு விட்டு உங்கள் இதயத்துடன் வாழத் தயாராகும் பொழுது - எதுவரினும், மற்றவர்களை நோக்கி விரல்களைச் சுட்டுவதை நிறுத்தி விட்டு, உங்களை நோக்கியே சுட்டிக் கொள்ளத் தயாராகும் பொழுது
- மனம் என்பது சமூகத் தாலானது, இதயம் இயற்கையானது என்பதை அனுபவபூர்வ மாகப் புரிந்து கொள்ளும்போது - உங்களிடம் தானாகவே வருகிறது.
இன்னொரு விஷயம்... மக்கள் உங்களிடம், உங்களுடைய அனுபவங்களுக்கான நிரூபணத்தைக் கேட்கும் பொழுது, அதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்பதைப் புரிந்து
வெறுமனே விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள். எல்லையற்றது தானாகவே திறந்து கொள்ளும். கொள்ளுங்கள். உங்களுடைய அனுபவங்கள் உங்களுக்கு மிகவும் அந்தரங்கமானதும், தனிப்பட்டதுமாகையால், அதை உங்களால் இன்னொருவருடன் அவருக்குப் புரியும் வகையில் பகிர்ந்து கொள்ள இயலாது. உண்மையில், பகிர்ந்து கொண்டீாீ களானால், முழு அனுபவத்தின் மதிப்பையும் குறைத்து விடுகிறீர்கள். மேலும், நீங்கள் சொல்வதை மற்றவர் நம்பத் தயாராக இல்லாமல் இருக்கக் கூடும். அவர்கள், உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்வதாகக் கூறக் கூடும். அவர்கள், நீங்கள் எல்லாவற்றையும் தர்க்கரீதியாக விளக்க வேண்டும் என்று கூறலாம்.
இந்த அனுபவங்களைத் தர்க்கத்தால் விளக்க முடியாது. கடவுள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர். தர்க்கத்தால் கடவுளை விளக்க முடியுமானால், அது கடவுளை விட மேலானது என்று ஆகிவிடுகிறது; ஆனால் அது அவ்வாறு இல்லை; அதனால் வெறுமனே உங்களை தளர்வாக்கிக் கொண்டு, அனுபவங்கள் நிகழ்வதை அனுமதியுங்கள். யாராயினும் உங்களிடம் கேள்வி கேட்கும் பொழுது, புன்னகைத்து விட்டு மேலே செல்லும் பக்குவத்தைப் பெறுங்கள். உங்களால் பல வார்த்தைகளில் விளக்க முடியாததை, ஒரு புன்னகையால் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட முடியும்.
ஞானமடைந்த சிறந்த குருமார்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமித்து பேரானந்தத்தில் திளைத்திருக்கின்றனர். மக்கள் என்னுடைய அனுபவங்களை விவரிக்கும்படிக் கேட்கிறார்கள். ஆனால் அவை மிகவும் தனிப்பட்டதாகவும், மறைபொருளாகவும் இருப்பதால், அவற்றை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. ஆனால் நான் வழிகாட்டியாக இருக்க முடியும்,
நீங்கள் எப்பொழுதும் எல்லைகளையே கண்டு பழகப் பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்களால் எங்கும் வேலியையே காண முடியாது. உங்கள் அனுபவத்திற்கான பாதையை, உங்கள் வழியை என்னால் காட்ட முடியும். ஆனால் அதை விளக்க ஆரம்பித்தால், அது லோகாயதமாகி விடும்.
ஆனால் ஒரு விஷயம்... உங்களுக்குள் தீ¹ இருக்கு மானால், நீங்கள் அனுபவிப்பீர்கள் என்கிற உயர்ந்த உறுதியை என்னால் அளிக்க முடியும். ஒரு குருநாதரால் அளிக்கப்படும் உறுதியே நீங்கள் சாதிப்பதற்குத் தேவையான சக்தியை அளித்து விடும்.
நீங்கள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்குக் காரணம் ஏதுமில்லை என்பதை வெறுமனே புரிந்து கொள்ளுங்கள். காரணம் ஏதுமின்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பத்தைக் கண்டு மக்கள் உங்களைப் பைத்தியம் என்று எண்ணக் கூடும். மகிழ்ச்சியைப் பொறுத்தமட்டில் கூட அவர்கள் காரண - விளைவு உறவு முறையாகத்தான் அறிகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, வெளியே ஏதோ ஒரு காரணமே, உள்ளே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக் காரணம் என்று கருதுகிறார்கள்.
இவற்றையெல்லாம், நான் இப்பொழுது நீங்கள் தியானத்தையும் ஆன்மீகத்தையும் பற்றிக் கேட்ட கேள்விக்கு, பதிலாகக் கூறுகிறேன். நாம் தலைப்பிலிருந்து விலகிச் செல்வதாக நீங்கள் நினைக்கக் கூடும். அப்படி இல்லை! இந்த சக்கரம் - விஷுத்தி சக்கரம் - நீங்கள் விரிவடைதலைப் பற்றியது; முழு விழிப்புணர்வுடன் உங்கள் சொந்த தனித்துவம் வாய்ந்த இருப்பைக் கண்டுபிடிப்பதைப் பற்றியது; மேலும் வாழ்க்கையில் ஒப்பீடலுக்கும் பொறாமைக்கும் இடமேயில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுதலைப் பற்றியது. நான் சொல்வதை அப்படியே வெறுமனே உள்ளே
Fire¹ எடுத்துக் கொண்டு அதன் பின்னாலிருக்கும் சக்தி உங்களை உருமாற்ற அனுமதி யளியுங்கள். நான் சொல்கிறேன், உங்களுக்குள் அற்புதங்கள் நிகழும்! அது உங்கள் இருப்புத் தன்மையின் முழுத் தன்மையையே மாற்றி விடும்.
பாருங்கள்... நம்மிடம் சக்தி மூன்று அடுக்குகளாக3 இருக்கிறது. முதல் அடுக்கு சக்தியானது நமது மனதிலிருந்து வருகிறது. அதுவே நாம் காலை முதல் இரவு வரை நமது தினசரி செயல்களுக்கு உபயோகப்படுத்துவது. இந்த சக்தி செலவழிந்து விடும் பொழுது, இன்னும் அதிகமாக வேலை கொடுக்கப் பட்டால், நீங்கள் களைப்பும், எரிச்சலும் அடைகிறீர்கள்.
இரண்டாவது அடுக்கு சக்தியானது அவசர கால அடுக்கு. அது உங்கள் உணர்ச்சிகளில் இருந்து எழும் சக்தி. அவசரகாலங்களில்4 இந்த சக்தி திறக்கப்படுகிறது. நீங்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை ஒரு நாய் துரத்துமானால், பய உணர்ச்சி மேலெழுகிறது; பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சாதாரண மான சூழ்நிலைகளில் எவ்வளவு வேகமாக ஓடுவீர்களோ, அதை விட அதிக வேகமாக ஓடுகிறீர்கள், இல்லையா? நீங்கள் எவ்வளவு களைப்பாக இருந்த
Non-entity¹
Energy House²
Layers³
Emergency⁴
போதிலும், உங்கள் கைகால்களை அசைக்க முடியாமல் இருப்பினும், திடீரென்று ஒரு நாய் உங்களைத் துரத்தும் பொழுது, நீங்கள் வேறு விதமான ஒரு சக்தியுடன் ஓடுகிறீர்கள். இதுதான் அவசர கால சக்தி
- உணர்ச்சிகளில் இருந்து எழுவது.
மூன்றாவது அடுக்கு சக்தியானது இருப்புத் தன்மையின் நிலையில் இருக்கும் சக்தி. இது உங்களிடம் இருக்கும் எல்லையற்ற சக்தியின் மூலம்; அதை நீங்கள் உபயோகப் படுத்துவதே இல்லை. இந்தச் சக்தி அடுக்கை ஆழமான தியானத்தின் மூலம் திறந்து உணர முடியும். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லா விட்டாலும் இந்த மூன்றடுக்குச் சக்திகளுடனும் நீங்கள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். விஷுத்தி சக்ரமானது இந்த உயர் சக்தி நிலைகளுக்கான திறவு கோலை வைத்திருக்கிறது.
நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த நாட்களில் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை விவரிக்கிறேன்...
இமயமலையில் அல்மோரா எனும் அழகு மிளிரும் இடத்தில், தியானம் செய்ய விரும்புபவர்களுக்காக, சில குடிசை களுடன் ஒரு சிறிய ஆசிரமம் இருக்கிறது. அந்த இடத்தைப் பற்றிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இரவில் புலிகளின் நடமாட்டம் இருக்கும்! அங்கு சிறிது காலம் தங்கியிருந்தேன். அங்கு நான் நீண்ட நேரம் தியானத்தில் இருப்பது வழக்கம். அங்கு புலிகள் வருவதை உணர்ந்தால், ஆசிரமத் தலைவர் ஒரு மணியை அடிப்பார்; சாதுக்கள் அவரவரது குடிசைக்குள் சென்று, திரும்ப வெளியே வரச் சொல்லும் வரை, கதவை முடியே வைத்திருப்பார்கள்.
ஆன்மீகம் என்பது நமது உடல், மனம் மற்றும் ஆவியைப் பற்றிய ஒரு ஆழமான புரிந்து கொள்ளுதலைத் தரும் ஒரு விஞ்ஞானம், அதில் விழிப்புணர்வுடன் நுழையும் போது, வெளியுலகம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடுகிறது.
ஒரு சமயம், இரவில், நாங்கள் தியானத்தில் இருந்த பொழுது மணியடித்தது; நாங்கள் அனைவரும் குடிசைக்குள் சென்று விட்டோம். அடுத்த நாள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆசிரமத் தலைவர் சுற்றி வந்தார். ஒரு குடிசை மட்டும் திறக்கப்படாமலேயே இருப்பதைப் பார்த்தார்; உள்ளேயிருந்த சந்யாசி, ஜன்னல் வழியாக, கதவைத் திறந்து விடுமாறு கத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் அந்தக் குடிசைக்கு ஓடி, கதவைக் திறக்க முயன்றோம்; ஆனால் முடியவில்லை. இறுதியாக எங்களில் சிலர், ஜன்னல் வழியாக குடிசைக்குள் நுழைந்தோம். எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக, ஒரு பெரிய அம்மிக்கல்1 இயந்திரத்தை, புலி தள்ளி கதவு திறந்து கொள்ளாதவாறு, அதற்குப் பின்னால் வைத்திருந்தார். நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து அந்த அம்மிக் கல்லை நகர்த்தி வைத்துக் கதவைத் திறந்தோம்.
பிறகுதான், 'இந்த அம்மிக்கல்லை இவர் தனியாளாக எவ்வாறு கதவருகே நகர்த்தி இருக்கக் கூடும்?' என்பது எங்களுக்குத் திடீரென்று உறைத்தது. அதை அவர் எவ்வாறு நகர்த்தினார் என்று அவரிடமே கேட்டோம். அவர் பதிலளித்தார், "நகர்த்தினேனா? நான் அதை அப்படியே தூக்கியல்லவா வைத்தேன்!". புலி வருவதற்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், அவர் அந்த அம்மிக் கல்லை அப்படியே தூக்கி கதவுக்குப் பின்னால் வைத்துவிட்டார், அவ்வளவுதான்!
நான் இதைத்தான் அவசரகால அடுக்கு சக்தி என்கிறேன். சாதாரணமான சூழ்நிலைகளில், அதே மனிதரால், அந்தக் கல்லைத் தூக்கியிருக்க முடியாது. புரிகிறதா? அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவசரகாலம் முடிந்துவிட்ட பின்னர்,
Grinding stone¹ அவராலேயே அந்தக் கல்லைக் கதவிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை!
இரண்டாவது நிலைச் சக்தி, பயத்தினாலும் பேராசை யினாலும் திறந்து கொள்கிறது. உதாரணத்திற்கு, ஒரு முக்கியமான கூட்டமிருப்பின், நீங்கள் களைப்படைவீர்களா? மாட்டீர்கள்! நீங்கள் துடிப்புடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசை அல்லது பேராசை உங்களைச் சக்தியூட்டப்பட்ட நிலையில் வைத்திருக்கும்.
விஷூத்தி சக்கரம், இந்த மூன்று அடுக்குச் சக்திகளையும் திறப்பதற்கு ஒரு வாயிலாக இருக்கிறது. ஆனால் அதை நீங்கள் அறியவில்லை. ஏனெனில் நீங்கள் இந்த அடுக்குகளை வெகுகாலமாகப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தியதே இல்லை.
அது இவ்வாறு இருக்கிறது... எல்லாத் துறைமுகங் களிலும், படகுகளை நிறுத்தி வைப்பதற்கென்றே, படகுத்துறை என்று அழைக்கப்படும் ஒரு இடம் இருக்கும். கடலில் செல்லாமல் வெகு காலம் படகுத் துறையிலேயே நிறுத்தி வைக்கப்படும் படகுகள், அவை தண்ணீரைச் சார்ந்தவை என்பதையே மறந்து விடும் என்று ஒரு பொதுவான வழக்கு இருக்கிறது!
அதே போன்று, நீங்கள் வெகு காலமாக மூன்றாவது அடுக்குச் சக்தியையே உபயோகப் படுத்தாததனால், நீங்கள் அதைச் சேர்ந்தவர் அல்லது அது உங்களைச் சேர்ந்தது என்பதையே மறந்து விடுகிறீர்கள். தியானத்தால் இந்த மூன்றாவது அடுக்குச் சக்தியைத் திறக்க முடியும்.
உங்களுடைய ஒவ்வொரு மூச்சும், உங்களுடைய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதை நோக்கியே இருக்க வேண்டும்.
இந்தச் சக்கரத்தை நீங்கள் தூய்மையான நிலையில் வைத்திருந்தால், வெளியுலகில் மிக உயரத்திற்கும், உள்ளுலகில் மிக ஆழத்திற்கும் செல்ல முடியும். தாழ்வான சுயமதிப்பீடு அல்லது பொறாமையினால் இந்தச் சக்கரம் அடைபடுகிறது. தாழ்வான சுயமதிப்பீடு என்பது பொறாமையின் ஒரு சாத்வீகமான வெளிப்பாடு, அவ்வளவே! செயல்படும் தன்மையில் பொறாமையாகவும், செயலற்ற தன்மையில் தாழ்வான சுயமதிப்பீடாகவும் வெளிப்படுகிறது. இரண்டுமே ஒப்பிடுதலின் விளைவுதான். தாழ்வான சுய மதிப்பீட்டில், நீங்கள் சரியல்ல என்ற உணர்வில் விலகிக் கொள்கிறீர்கள். பொறாமையில், அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல், எதிர்ச் செயல் புரிய ஆரம்பித்து விடுகிறீர்கள்; அதுதான் வித்தியாசம்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... உங்களைப் பற்றிய சுய மதிப்பீடு எதுவாக இருப்பினும், அது உங்களைக் கடவுளை விட குறைவானதாகக் காட்டினால், அது தாழ்வான சுய மதிப்பீடு. ஏனெனில் நீங்களே கடவுள்தான். அதனால்தான் வேறு யாருடனும் ஒப்பிடுவதற்கு இடமேயில்லை என்று நான் சொல்கிறேன்.
உங்களுக்குள் மறைந்திருக்கும் எல்லையற்ற ஆற்றலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இந்தச் சக்கரத்தில் மறைந்துள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்குச் சக்திகளை உணர வேண்டும். உண்மையில் இந்தச் சக்கரமே நமது சக்தியின் இருப்பிடம். அதில் கவனத்தைச் செலுத்தும்பொழுது, அதிலிருந்து சக்தி பரவுவதை உணர முடியும்.
உங்களுக்குள் நிகழும் புரட்சியை நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்களால், உங்கள் அனுபவங்களைப் புரிந்து கொள்ள முடியாது.
இமயமலையில், நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில், நடந்து சென்றே பல மைல்களைக் கடந்து விடுவேன். விஷுத்தி சக்கரத்தில் கவனத்தை வைத்து, மெதுவாக நடக் க ஆரம்பிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி, கவனத்தைச் சக்கரத்திலேயே வைத்து, முயற்சியின்றியே நடந்து கொண்டிருப்பேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு, என் உடல் தானாகவே முன்னும் பின்னும் அசைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் செல்லத் தொடங்கும்; நான் வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பேன்! இவ்வாறாக ஒரேயடியாக பல மைல்களைக் கடந்து விடுவேன்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் எல்லா உணவும், அல்லது செய்யும் எல்லா உடற்பயிற்சிகளும் முதலடுக்கு சக்திக்கு மட்டுமே உதவுகிறது. உணவு மட்டுமே உங்களுக்குச் சக்தியைத் தருவதில்லை. உணவு மட்டுமே சக்தியை அளிக்கிறது என்பது ஒரு பொதுவான தவறான கருத்து. உணவில் இருந்தும் சக்தி கிடைக்கிறது, அவ்வளவே.
திபெத்தில் இருக்கும் யோகிகள் உணபதேயில்லை. அவர்கள் வெறுமனே வில்வப் பழத்தின் மேலோட்டிலிருக்கும் நீரைக் குடிக்கிறார்கள். நானும் அது போன்றே இமயமலையில் ஆறு மாதங்கள் வாழ்ந்தேன். சூரிய ஒளியில் இருந்தும், குளிக்கும் நீரில் இருந்தும், சுவாசிக்கும் காற்றில் இருந்தும் சக்தியை எடுத்துக் கொண்டேன். இவையெல்லாம் யோக வழிமுறைகள். தபஸ்யா என்பது ஞானமடைதலுக்காக உங்கள் வாழ்வு முழுவதும் செய்யும் தவம். அது மட்டுமே உங்கள் இருப்புத் தன்மையில் அதிர்வில் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மற்றவர்களுடன் போட்டியிடும் பொழுது, உங்கள் சொந்த இருப்பை மறந்து விடுகிறீர்கள். உங்களுடைய உண்மையான, உபயோகப் படுத்தப்படாத, ஆற்றல் மூலமான இருப்புத் தன்மையை பலப்படுத்த மறந்து விடுகிறீர்கள். ஆன்ம பலம் இல்லாத, வெறும் உடல் பலமும், புத்தி பலமும் பயனற்றது. உங்கள் ஆன்ம பலத்தைக் கண்டுபிடிக்கும் போதுதான் நீங்கள் வாழ்வின் மூலத்தைத் தொடுகிறீர்கள்.
சொல்லுங்கள்...
ஸ்வாமிஜி, எங்களால் பொறாமையின்றி இருக்க முடியுமானால், எங்களுடைய குறைபாடுகளில் குறைந்தபட்சம் ஒரு அம்சத்திலாவது, முழுமையான விடுதலை கிடைத்து விட்டதாகக் கருதலாமா?
நிச்சயமாக... உங்களால் தீவிரமான உணர்ச்சிகள் அல்லது பொறாமையற்ற அன்பு இருக்கக் கூடிய ஒரு வெளியைப் பார்க்க முடியுமானால், நீங்கள் நிச்சயமாக முன்னேறியிருக்கிறீர்கள்; ஆனால் முழு விழிப்புணர்வுடன் தொடர்ந்து செல்லுங்கள்; ஏனெனில் நீங்கள் மிகவும் சுலபமாக உங்களுடைய பழைய விழிப்பற்ற வழிகளில் நழுவி, மீண்டும் பழைய உணர்ச்சிகளில் சிக்கி விடக் கூடும்.
புதிதாகக் கண்டுபிடித்த விழிப்புணர்வைப் பற்றிக் கொண்டு அதனுடன் செல்லுங்கள். அது, நீங்கள் ஆராய்வதற்கான, இன்னும் நிறைய அழகான பாதைகளைத் திறக்கும். தேங்கி நின்று விடாதீர்கள். அவையே உறுதியானது என்ற எண்ணத்தில், சில அனுபவங்களை இறுகப் பற்றிக் கொண்டு விடுவதே மிகப் பெரிய அபாயமாகும்.
உங்களுக்குள் தீ இருக்குமானால் நீங்கள் அனுபவிப்பீர்கள் என்கிற உயர்ந்த உறுதியை என்னால் அளிக்க முடியும்.
குருமார்கள், தங்களது சீடர்களை, எந்த ஒரு அனுபவத்திலும் தேங்கி நின்று விட ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சீடர்கள் தங்கள் தேடலில் மேலும் மேலும் ஆழமாகப் பார்க்க ஏதுவாக, அவர்களை மேலும் மேலும் தூண்டி விட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்கள் ஆன்மீகப் பயணத்தில் இறைக் காட்சிகளைக் காண்பவர்களே பெரும்பாலும் தேங்கி நிற்கத் தலைப்படுகிறார்கள். அவர்கள் காண்பதற்கு இனி எதுவுமில்லை என்று எண்ணி விடுவதால், தங்களது அனுபவத்தைப் பற்றிக் கொண்டு அங்கேயே தங்கி விடுகிறார்கள். இது நிகழ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
பாருங்கள், நீங்கள் நிரந்தரமான ஆனந்த நிலையை அடையும் வரை, எப்பொழுது வேண்டுமானாலும் கீழ் நிலைக்குச் சென்றுவிட முடியும். அதை மனதில் கொண்டு, மேலும் மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ளுதலை நோக்கி உங்களை எடுத்துச் செல்லும் விழிப்புணர்வைத் தொடர்ந்து போஷித்து வாருங்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... ஒரு குருநாதரின் வேலை மிகவும் நுட்பமானது. அவர் உங்கள் ஒவ்வொருவரையும் உச்சபட்ச அக்கறையுடனும் நுட்பமாகவும் கையாள வேண்டும். அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும் வளர்வதற்கு ஏற்ற வழி எதுவென்று பார்த்து, உங்களை அவ்வழியில் மலர வைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் பல பிறவிகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள்; அந்த அளவிற்கு அறியாமையையும் சேகரித்து வைத்திருக்கிறீர்கள். அவர் இவற்றின் மீதெல்லாம் செயல்பட்டு உங்களை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும். மேலும் ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்... வாழ்க்கை ஏராளமான தீர்வுகளை வழங்கத் தயாராக இருக்கிறது; ஆனால் எப்பொழுதுமே ஏதோ ஒன்று உங்களுக்குப்
நீங்களே கடவுள்தான். அதனால்தான் வேறு யாருடனும் ஒப்பிடுவதற்கு இடமேயில்லை என்று நான் சொல்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு பாதை; அது ஒரு இலக்கல்ல. பொருத்தமாக இருக்கிறது. அதைக் கண்டு பிடிப்பதில்தான் உங்கள் அறிவுக் கூர்மை அடங்கியிருக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த அறிவுக் கூர்மையால் அதைக் கண்டு பிடித்தீர்களானால், அதன் பயன்களை அனுபவிப்பீர்கள். ஆனால், மற்றவர்களைப் பார்த்து, அவர்களுடைய தீர்வுகளை உங்களுக்கு உபயோகப்படுத்தத் தொடங்கினீர்களானால், நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதே தெரியாமல் பாதையைத் தவறவிட்டு விடுவீர்கள்.
ஒரு சின்ன கதை...
ஒரு வயதான பெண்மணி, தொலைதூர கிராமத்தில் உள்ள அவளுடைய பழைய வீட்டை தூசி தட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது திடீரென்று கதவு திறந்து கொள்ள, ஒரு இளம் விற்பனையாளன் உள்ளே வந்தான். அவள் தூசி தட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவன் பரபரப்புடன் பேசினான். அவனிடம் பல கருவிகள் இருப்பதாகவும், அவை அவளுக்கு வீட்டைச் சுத்தம் செய்ய உதவியாக இருக்கும் என்றும் சொன்னான். அந்த வயதான பெண்மணி சொன்னாள், “ஆனால்...” அவன் அவளை இடைமறித்து, ஒரு பையிலிருந்து நிறைய குப்பை கூளங்களை எடுத்து தரையில் கொட்டினான். வயதான பெண்மணி மீண்டும் முயற்சித்தாள், “ஆனால்...” அவன் அவளிடம் அருகே நின்று கவனிக்கச் சொன்னான். ஒரு கருவியை வெளியே எடுத்து விளக்கினான், “இந்தக் கருவியைப் பார்க்கிறீர்களா? இது எவ்வளவு தூசியிருந்தாலும் ஒரு நொடியில் சுத்தம் செய்து விடும். இது மிகவும் எடை குறைவாக இருப்பதால் உங்களுக்கு இந்த வயதில் கையாள்வதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும். நான்
இருளிற்கு நேர்மறையான இருப்பு கிடையாது. அது எதிர்மறையான இருப்பை உடையது. செய்முறையைக் காட்டுகிறேன்” வயதான பெண்மணி முயற்சித்தாள், “ஆனால்...” அவன் இடைமறித்தான், “சற்று ப்ளக் பாயிண்டைக் காட்டுங்கள்” இறுதியாக அந்தப் பெண்மணி சொன்னாள். “ஆனால்... இன்னும் எங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வரவில்லை!”.
(பலத்த சிரிப்பு!)
வாழ்க்கையில் நமக்கு எது சரியாகப் பொருந்துகிறது என்பதை நம்மால் கணிக்க இயல வேண்டும்! இதில் நாம் தெளிவாக இருந்தால், கவலையின்றி வளரலாம். ஆனால் பல சமயங்களில், நாம் மற்றவர்களுடைய தீர்வுக்கு ஆசைப்பட்டு, அதை நமக்கு உபயோகித்து விட்டு, பின்னர் வருத்தப்படுகிறோம்.
நாம் எங்கு நிற்கிறோம், நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால், நம்மால் நிலையாக முன்னேற முடியும். இது போன்ற வாழ்க்கை முறையில், பின்னடைவுகள் கூட, எவ்வாறு இன்னும் அறிவுக் கூர்மையுடன் செயலாற்ற முடியும் என்பதைக் கற்றுக் கொடுப்பதாக அமையும். இம்முறையில், நீங்கள் உங்கள் சொந்த அறிவுக் கூர்மையுடன் செயலாற்றுவதால், அது உங்களுக்கு அனுபவபூர்வமான புரிந்து கொள்ளுதல் ஆகிறது.
நீங்கள் வெறுமனே இன்னொருவருடைய தீர்வைப் பின்பற்றும் பொழுது, உங்களுக்குள் எதுவும் நிகழ்வதில்லை; நீங்கள் வெறுமனே உங்கள் வெளி விளிம்பில் இருந்து செயல்படு கிறீர்கள். உங்களுக்குள் எதுவும் நிகழாத போது, உங்களால் வளர முடியாது; அதை நினைவில் கொள்ளுங்கள். நான், நீங்கள் வளர முடியாது என்று சொல்லும் பொழுது, உள்ளே வளர்வதில்லை என்று
| விஷ்அத்தி சக்கரம் சுத்த அசுத்தங்களைக் கடந்ததால், | | --- | | ஒருபோதும் அசுத்தமடைவதில்லை. அதனால் அதை | | ஒருபோதும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவையில்லை. |
சொல்கிறேன். உலகாயதமான நன்மைகளைப் பெறலாம்; ஆனால் நீங்கள் உள்ளே உயிரற்று இருப்பீர்கள்.
ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் உள்ளேயிருந்து வளரும் பொழுது மட்டுமே, உண்மையில் வளர்கிறீர்கள் என்று அர்த்தம். வெளியுலக ஓட்டப் பந்தயங்களில் அபாய கரமாகச் சிக்கிக் கொண்டு விடாதீர்கள். அவற்றை வெறும் விளையாட்டாகவே பாருங்கள்; நன்றாக விளையாடுங்கள். உயிர் வாழ்தலுக்கு பொருள் சார்ந்த பயன்களும் தேவைதான். ஆனால் இவையெல்லாம் வெளி விளிம்பிலேயே இருக்க வேண்டும். உங்கள் உள் மையமானது நிலையாக வளர வேண்டும். இதுவே உங்களுடைய வெளி விளையாட்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
உங்களுடைய சொந்த அறிவுக் கூர்மையை உபயோகப் படுத்தக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், இன்னொருவருடைய முன்னேற்றத்தையோ அல்லது செயல்களையோ பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தமற்றது என்பதைக் காண்பீர்கள். உங்களுடைய அறிவு வளர வளர, ஒவ்வொருவரும் ஓட வேண்டியது தங்களுடைய சொந்த ஓட்டப் பந்தயத்தில்தானே தவிர, ஒருவருக்கொருவர் எதிராக அல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள்! உண்மையான பந்தயம் உங்களுடைய எல்லை யற்ற அறிவைக் கண்டுபிடிப்பதை நோக்கித்தான். இதில் ஒப்பிடுவதற்கு எங்கே இடமிருக்கிறது?
வாழ்க்கை என்பதே, முழுவதும் உங்களுடைய எல்லை யற்ற அறிவைக் கண்டுபிடிக்கும் செயல்முறையைப் பற்றியது தான். அதனால்தான் நான், “வாழ்க்கை என்பது ஒரு பாதை;
| மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நமது | | :--- | | தனித் தன்மைகளையும், படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதன் | | மூலம் விஷுத்தி சக்கரத்தை மலரச் செய்ய முடியும். |
அது ஒரு இலக்கல்ல”1 என்று எப்பொழுதும் சொல்வது வழக்கம். உங்களுடைய அறிவு வளர வளர, நீங்கள் மேலும் மேலும் மகிழ்ச்சியடைவீர்கள்; வாழ்க்கை விளையாட்டை உங்களால் மேலும் பயனுள்ள வகையில் விளையாட முடியும். அதனால் ஒப்பிடுதலை நிறுத்தி, உங்களுடைய உண்மையான வளர்ச்சிக்கு மூலத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பியுங்கள்.
விஷூத்தி சக்கரமே, உயர்ந்த படைப்பாற்றலின் இருப்பிடம். இந்தச் சக்கரத்தின் சக்தி திறக்கப்படும்பொழுது, உங்களுக்கு மிகப் பெரும் படைப்பாற்றல் கிடைக்கப் பெறுவதை காண்பீர்கள்.
உங்களுடைய இருத்தலின்2 தன்மையை நீங்கள் மாற்றும் பொழுது, இயற்கையாகவே உங்களுடைய செய்தலின்3 தன்மையும் மாறுகிறது. நீங்கள் செய்வது எதுவாயினும், மிக்க திறமையுடனும், மிக்க படைப்பாற்றலுடனும் செய்கிறீர்கள். அதன் விளைவாக, உங்களுடைய பெறுதலின்4 தன்மையும் மாறுகிறது. உங்களுடைய வழியில் எதுவரினும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள்; உலகாயதமான செல்வமும், வெற்றியும் இயல்பாகவே உங்களை நோக்கி வருவதைக் காண்கிறீர்கள். அதனால் ஒப்பிடுதலை விடுத்து, உங்களுடைய இருப்புத் தன்மைக்குத் திரும்பி, முடிவற்ற ஆனந்தம் அல்லது நித்யானந்தத்தைக் கண்டுபிடியுங்கள்.
சரி... நாம் இப்பொழுது சக்தி சாகர தியானம் என்னும் ஒரு தியான முறையைக் காண்போம். அது உங்களுக்கு விஷூத்தி சக்கரத்தின் மூலமாகக் கிடைக்கும் மிகப்பெரும் சக்தி மூலத்தை எவ்வாறு உபயோகத்திற்குக் கொண்டு வருவது என்பதை அனுபவபூர்வமாகப் புரிய வைக்கும்.
Life is the path and not any goal Being² Doing³ Having⁴
Life is the path and not any goal
Being
Doing
Having
சக்தி சாகர தியானம்
(நீடிக்கும் நேரம் : 31 நிமிடங்கள்)
கண்களை மூடி மனதை விஷூத்தி சக்கரத்தில் வைத்து நிற்கவும். ஒரு நாற்காலிக்குப் பின்னால் நின்று கொண்டோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரத்தைப் பற்றிக் கொண்டோ, நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்திலேயே, மெதுவாக, மிக மெதுவாக, நடக்கத் தொடங்கவும்.
இப்பொழுது படிப்படியாக உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள். அதே இடத்திலேயே வேகமாக, இன்னும் வேகமாக, நடந்து கொண்டிருங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு, நீங்கள் அசௌகரியமாக உணராத வரையில் உங்கள் எல்லைகளைத் தாண்டுங்கள். எப்பொழுதும் அதிக மாகச் சிரமப்படாத அளவில் செய்யுங்கள். எப்பொழுதும் மனதை விஷூத்தியிலேயே வைத்திருங்கள். அதிலிருந்து சக்தி வருவதை உங்களால் உணர முடியும். ஒருபோதும் வேகத்தைக் குறைத்து விடக் கூடாது என்பது முக்கியமான விஷயம். 21 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தவும்.
அடுத்த 10 நிமிடங்களுக்கு நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே வெறுமனே அமைதியாக அமரவும். கண்களை மூடி மனதை விஷூத்தியில் வைத்திருக்கவும். இயக்கத்தினால் உற்பத்தியான சக்தியை கிரகித்துக் கொள்வீர்கள்.
இந்த தியானத்தில் முக்கியமான விஷயம், உடல் அசைந்து கொண்டிருக்கும் பொழுது, மனதை நிலையாக விஷூத்தியில் வைத்திருப்பதே. இதைச் செய்யும் பொழுது பிரபஞ்ச சக்தி உங்கள் விஷூத்தி சக்கரத்தின் வழியாக நுழைந்து உங்களுக்குப் பெரிய சக்தி மூலமாக அமையும்.
இந்த தியானத்தைச் செய்யும் பொழுது, உங்கள் மாலையை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்ளவும். அது தியானத்தில் உருவாகும் சக்தியைச் சேமித்து வைக்கும்.
(பங்கேற்பாளர்கள் மென்மையான இசையுடனான சக்தி சாகர தியானம் செய்கிறார்கள்)
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!
மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களைத் திறவுங்கள். அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.
ஆனந்தமாக இருங்கள்!
