KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 6: பயத்தை எதிர்கொள்ளல்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 6: பயத்தை எதிர்கொள்ளல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • ஸ்வாதிஷ்டான சக்கரம் -
  • இருள் தியானம் -

ஸ்வாதிஷ்டான சக்கரம் தொப்புளுக்கு 2 அங்குலம் கீழே இருக்கிறது.

ஸ்வாதிஷ்டானா என்றால், ‘இருப்புத்தன்மை நிலை கொண்டிருக்கும் இடம்’ என்று பொருள். ஸ்வ என்றால் ‘தான்’, அதிஷ்டானா என்றால் ‘நிலை பெற்றிருத்தல்’.

அது பயத்தால், முக்கியமாக மரணம் பற்றிய பயத்தால் பூட்டப்படுகிறது.

பயத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம், மரணத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம், அதைத் திறக்க முடியும்.

தியான முறை: இருள் தியானம் - தாந்த்ரீக முறையிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தச் சக்கரம் பயத்தால் பூட்டப்படுகிறது. நமது எல்லா பயங்களும் உண்மையில் மரணத்தை பற்றிய பயமே; ஆனால் பல்வேறு மாறுவேடங்களில் இருக்கிறது, அவ்வளவு தான். நமது ஒவ்வொரு பயமும், மரணத்தைப் பற்றிய பயத்துடன் தொடர்பு உடையதுதான், ஆனால் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

சுருட்டி வைக்கப்பட்டிருப்பதால், அதை நம்மால் மரணம் பற்றிய பயமாகக் காண முடிவதில்லை. பயம் என்பது

Facing Fear

இல்லையென்றால், மரணம் என்ற வார்த்தையே, நாம் அதனுடன் தொடர்புடுத்தி வைத்திருக்கும் பொருளை இழந்து விடுகிறது.

அதனால் மரணம் என்பது என்ன?

நான் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டால், நீங்கள், "ஸ்வாமிஜி, மரணம் என்பது நமது வாழ்வின் இறுதியில் நிகழ்வது" என்று சொல்வீர்கள், மரணம் என்பது அவ்வளவுதான் என்றால், அது மிகவும் சுலபமாக இருந்திருக்கும்!

ஆனால் மரணம் என்பது நமது வாழ்வின் இறுதியில் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. அது நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். நமது ஒவ்வொரு செயலுமே விழிப்பற்ற நிலையில் நமது மரணத்துடன், மரணம் பற்றிய பயத்துடன் தொடர்பு உடையது. மரணம் நமது வாழ்க்கையின் தன்மையையே மாற்றி விடுகிறது. அது முடிவல்ல; அது நமது வாழ்வின் உச்சகட்டம் - நமது வாழ்வு முழுவதும் அதை நோக்கியே இருக்கிறது!

நான் ஏன் இதைச் சொல்கிறேன்?

ஏனெனில் நமது வாழ்வு முழுவதுமே, மரணம் பற்றிய நமது கருத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. நமது சமூக அமைப்பு கூட, மரணம் பற்றிய நமது கருத்தினாலேயே வழிநடத்தப் படுகிறது.

எல்லா சிறந்த மதங்களும், உலக தத்துவங்களும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியிலேயே எழுந்துள்ளன: "மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது?". இந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியிலேயே, பல்வேறு வாழ்க்கைத் தீர்வுகள் எழுந்துள்ளன.

நமது எல்லா பயங்களும் இறுதியில் மரணத்தைப் பற்றிய பயமே; பல்வேறு மாறுவேடங்களிலும் இருப்பது மரணத்தைப் பற்றிய பயமே.

ஒரே ஒரு வாழ்க்கை என்பதில் நம்பிக்கை உள்ள, மறுபிறப்பைப் பற்றிய கருத்துக்களே இல்லாத கலாச்சாரங்கள், அவர்களுடைய சக்தி முழுவதையும் வாழ்க்கையை வளப் படுத்துவதிலேயே கொட்டிவிட்டனர். அவர்கள், செய்திகளை உட்கிரஹித்தல், அறிவைச் சம்பாதித்தல், உலகாயதமான சுகங்கள் என்ற வகையில் ஒரு உச்சத்தைத் தொட்டுவிட்டனர்.

இந்தக் கலாச்சாரங்களே அறிவியலைக் கொடுத்திருக் கிறது. அறிவியல், வாழ்க்கையை அதன் அதிக பட்சத்தில் வாழ உதவுகிறது. அறிவியல், நாம் இந்த வாழ்க்கையிலிருந்து அதிக பட்சத்தைப் பெற உதவுகிறது.

மறுபிறப்பை நம்பும் கலாச்சாரங்கள், அவர்களது வாழ்வின் மையத்தை உள்நோக்கித் திருப்பியுள்ளன. அவர்களது தேடல் வேறுவிதமானது. அவர்கள் வாழ்க்கையை ஒரு அவசரகதியில் வாழ தூண்டப்படுவதில்லை; ஏனெனில் அவர்களுக்கு அழிவற்ற தன்மை கொடுக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் இந்தக் கருத்தின் செயல்பாட்டை, தெளிவாக மக்களின் நடத்தையில் காணலாம். இந்தியாவில், ஒரு நிகழ்ச்சி 6 மணிக்குத் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தால், அது 7.30-க்கு முன்னால் தொடங்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் அவர்களுக்கு முன் அழிவற்ற தன்மை இருக்கிறது!

நமது முழு மன அமைப்பு, நமது வாழ்வின் போக்கு, நமது சமூகம், நமது கலாச்சாரம், நமது மதம் அனைத்துமே மரணம் பற்றிய நமது கருத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. நாம் மரணத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்கிறோம்-ஆனால் மரணம் நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வியாபித்திருக்கிறது!

மரணம் என்பது நமது வாழ்வில் இறுதியில் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. அது ஒவ்வொரு கணத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். நாம் மரணத்தின் ஆழங்களையும், இரகசியங்களையும், புதிரையும் புரிந்து கொண்டால், வாழ்வின் இரகசியங்களைப் புரிந்து கொள்வோம். நாம் மரணத்தின் புதிரை விடுவித்து, அது வேறு ஒரு வடிவத்தில் ஒரு வெறும் தொடர்ச்சியே என்பதைக் காண வேண்டும். இல்லையெனில் நாம் வாழ்வையே தவறவிட்டு விடுவோம்!

நாம், மரணம் என்பது வேறொரு வடிவத்தில் ஒரு தொடர்ச்சியைத் தவிர வேறில்லை என்பதைப் புரிந்து கொண்டால், மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டோம். மரணத்தைக் கண்டு அஞ்சுவதை நிறுத்தும் பொழுது, எவ்வளவு தூரம் வாழ்க்கையைத் தவற விட்டுக் கொண்டு இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

நாம் வாழ்க்கையைச்ாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்; மிகவும் மேலோட்டமாக வாழ்கிறோம்; வாழ்க்கையில் பல அம்சங்களைத் தவற விட்டு விடுகிறோம். இறப்பு, வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கும். மரணம் எப்பொழுதும் ஒரு மிகச் சிறந்த குருவாக இருக்கிறது.

நமக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் நம்பிக்கை வர வேண்டுமென்றால், அதை இரண்டு விதங்களில் செய்யலாம். ஒன்று உண்மை என்னவென்று நாமே பரிசோதனை செய்து பார்த்து விடுவது. இரண்டு, அதை ஏற்கனவே அனுபவித்தவர்களின் குறிப்பை எடுத்துக் கொள்வது. நான் இப்பொழுது உங்களுக்கு உபநிஷத்துக்களில் இருந்து ஒரு குறிப்பைக் கொடுக்கிறேன்.

கடோபநிஷத் என்று ஒரு உபநிஷதம் இருக்கிறது. அது மரணத்தின் கடவுளான எமனுடன் ஒரு குழந்தையின் நேரடி

மரணம் என்பது முடிவல்ல - அது நமது வாழ்வின் உச்சகட்டம். நமது வாழ்வு முழுவதும் அதை நோக்கியே இருக்கிறது. உரையாடல்; ஒரு அற்புதமான தனிப்பட்ட பேட்டியின் வெளிப்பாடு. ஹிந்து புராணங்களில், எமனே இறப்பின் பிரதானக் கடவுள் என்று சொல்லப்படுகிறது. அவன் மரணத் தைக் குறிக்கிறான்.

உச்சைசிரவஸ் என்றொரு பெரிய மன்னன் இருந்தான். அவனுக்கு திடீரென்று இந்த உலகம் முழுவதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. அதனால், வாஜபேய யாகம் (உலகம் முழுவதும் ஆள விருப்பம் உள்ளவன் செய்ய வேண்டிய ஒரு அக்னி வழிபாடு) செய்தான்.

இந்த வழிபாட்டின் விதிமுறைகளின்படி, ஒருவர் தனக்குப் பிடித்தமான, மிக விலையுயர்ந்த பொருட்களை யெல்லாம் தானமாகக் கொடுத்து விட வேண்டும். அப்பொழுதுதான் அவரால் உலகத்திற்கே கடவுள் என்கிற பதவியை அடைய முடியும்.

மன்னர்கள் எல்லாம் எப்பொழுதுமே சிறந்த வியாபாரிகள்; அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்; இல்லாவிடில் அவர்களால் மன்னர்களாக இருக்க முடியாது. மிகப் பெரிய சொத்துக்களை அடக்கி ஆளவும் முடியாது. அவர்கள் குறைந்தபட்சம் கொடுத்து விட்டு, அதிகபட்சம் அடைய முடியுமா என்று பார்ப்பவர்கள்.

இந்த மன்னன், தானம் கொடுக்க ஆரம்பித்தான். வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பசுக்களையும், அவற்றின் வாழ்நாளில் எல்லாப் பாலையும் கறந்து விட்ட பசுக்களையும், அவற்றின் வாழ்நாளில் எத்தனை முடியுமோ அத்தனை கன்றுகள் போட்டு விட்ட பசுக்களையும், சாகத் தயாராக இருக்கும் பசுக்களையும் தானமாகக் கொடுத்தான். அவன் செய்த தானம் அனைத்துமே

எல்லா சிறந்த மதங்களும், உலக தத்துவங்களும் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முயற்சியிலேயே எழுந்துள்ளன. மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது? இவ்வாறு மதிப்பற்றவையாகவே இருந்தது. 7 வயதான அவனது மகன் நசிகேதன் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். நசிகேதன்தான் இந்தக் கதையின் கதாநாயகன். அவனுக்கு அவன் தந்தை செய்தது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை.

பாருங்கள்... குழந்தைகள் மிகவும் கூர்மையானவர்கள், அறிவு நிறைந்தவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. சமூகம் அவர்களை இன்னும் கெடுத்து நெறிப்படுத்தவில்லை. தந்தையையே கவனித்துக் கொண்டிருந்த அவன், இறுதியில் அவரிடம் சென்று, "தந்தையே, நீங்கள் உங்களுடைய மிகவும் விலையுயர்ந்த உடமைகளை யெல்லாம் தானமாகக் கொடுக்க வேண்டும். நானும் உங்களுடைய ஒரு விலை உயர்ந்த உடமைதான். என்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

மன்னனுக்குத் தான் செய்வதைத் தன் மகன் குத்திக் காட்டுகிறான் என்று புரிந்து விட்டது; ஆனால் அவனது அஹங்காரம் அதற்கு இடம் கொடுக்க அனுமதிக்கவில்லை. அவன் மதிப்பற்ற தானத்தைத் தொடர்ந்தான். மீண்டும் ஒரு முறை அந்தச் சிறுவன் மன்னனிடம் அந்த கேள்வியைக் கேட்டான். மன்னன் மௌனமாக இருந்தான்.

மூன்றாவது முறை, சிறுவன் அவனை உலுக்கி தன்னை யாருக்குத் தானமாகக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று கேட்டான். மன்னன் கோபமடைந்து உளறினான்: "நான் உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன். எமனிடம் போ" என்றான். ஒரு சாதாரணமான பையனாயிருந்தால், "நான் ஏன் போகவேண்டும்? நீ வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து விட்டாய்; நீ போ!" என்று

நாம் மரணத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் மரணம் நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் வியாபித்திருக்கிறது.

சொல்லியிருப்பான். ஆனால், நசிகேதன் மிகவும் சிரத்தையான, பொறுப்பான சிறுவன். பொறுப்பும் நேர்மையும் அவனைப் பேய் போலப் பிடித்திருந்தன. அவனுடைய தந்தையின் வார்த்தை களுக்கு மரியாதை கொடுப்பதற்காக, அவன் எமனைச் சந்திக்க முடிவு செய்தான்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.... நசிகேதனே பூமியிலிருந்து எமனைச் சந்திக்கச் சென்ற முதலும் கடைசியுமான மனிதன்.ாதாரணமாக, எமன்தான் மக்களைச் சந்திக்க வருவான். முதன் முறையாக, நசிகேதன் எமனைச் சந்திக்கச் சென்றான்.

அவன் எமனின் வசிப்பிடத்தை அடைந்து விடுகிறான்; ஆனால் எமன் அங்கு இல்லை! அவன் வெளியில் சென்றிருந்தான். நசிகேதன் மூன்று நாட்கள் காத்திருந்தான். இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். கதையின் இந்த இடத்தில் ஒரு பெரிய உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நாம் மரணத்தைத் தேடிச் செல்வோமானால், அல்லது நம்மிடம் மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் இருக்குமானால், மரணம், நமக்குத் தெரிந்த விதத்தில், அங்கு இருக்காது!

எப்படியோ, மூன்று நாட்களுக்குப் பிறகு எமன் திரும்பு கிறான். அவனது வேலையாட்கள் அவனுக்காக காத்திருக்கும் சிறுவனைப் பற்றிச் சொல்கிறார்கள். எமன் நசிகேதனைப் பார்க்க விரைந்தான். அவன் சிறுவனை வரவேற்க அங்கு இல்லாததற்காக மன்னிப்புக் கேட்டான். அவன் மேலும் சொன்னான், "உன்னை மூன்று நாட்களாக காத்திருக்க வைத்ததற்காக, நான் உனக்கு மூன்று வரங்களைத் தருகிறேன். உனக்கு எந்த மூன்று வரங்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். நான் உனக்குத் தருகிறேன்".

மரணம் என்பது வேறொரு வடிவத்தில் ஒரு தொடர்ச்சியதைத் தவிர வேறல்ல என்பதை புரிந்து கொண்டால், மரணத்தைக் கண்டு அஞ்ச மாட்டோம்.

நசிகேதனுக்கு மரணம் வரங்களைக் கொடுக்கும் கடவுளாகி விட்டது! அவன் மூன்று வரங்களைக் கேட்டான். முதல் வரம்: "என் தந்தையின் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட வேண்டும்". எமன் அந்த வரத்தை அளித்தான். இரண்டாவது வரம்: "நான் உங்களைச் சந்தித்த பிறகு திரும்பச் செல்லும்போது, என் தந்தை என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்". அந்த வரமும் அளிக்கப்பட்டது.

மூன்றாவது வரம்: "மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று எனக்குச் சொல்லுங்கள்? சிலர் இறப்பிற்குப் பிறகும் மனிதன் வாழ்கிறான் என்று சொல்கிறார்கள்; சிலர் இறப்பிற்குப் பிறகு மனிதன் உயிருடன் இருப்பதில்லை என்று சொல்கிறார்கள். உண்மை என்ன?". நசிகேதனின் இந்தக் கேள்வியால் எமன் அதிர்ச்சியடைந்தான். அவன் சொன்னான், "தயவு செய்து என்னிடம் இந்தக் கேள்வியை மட்டும் கேட்காதே. நீ இறப்பைப் பற்றிய இரகசியத்தைக் கேட்கிறாய்; அதை என்னால் உனக்குச் சொல்ல முடியாது; நான் அதை உனக்குச் சொல்லி விட்டேனானால், நீ ஞானம் அடைந்து விடுவாய். நீ விரும்பினால், நான் உனக்கு அளவற்ற செல்வங்களை அளிக்கிறேன். ஆனால் தயவுசெய்து அந்தக் கேள்வியை மட்டும் கேட்காதே".

ஆனால் நசிகேதன் பிடிவாதமாக இருந்தான். அவன் சொன்னான், "நான் உங்களிடமிருந்து எல்லாச் செல்வங்களையும் எடுத்துச் சென்றாலும், உமது செல்வங்களுக்கு நூறு வருடங்களுக்கோ, ஆயிரம் வருடங்களுக்கோ நான் ஒரு வெறும் காப்பாளராகத்தான் இருக்க முடியும், அவ்வளவுதான். அந்தக் காலம் முடிந்தவுடன் மீண்டும் உங்களுடைய இருப்பிடத்திற்குத்தான் வர வேண்டும்! அதனால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை.

மரணம், வாழ்க்கையை மிகுந்த விழிப்புணர்வுடன் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. மரணம், ஒரு மிகச்சிறந்த குருவாகும்.

அதனால் அதற்குப் பதிலாக எனக்கு மரணத்தின் இரகசியத்தைப் பற்றிச் சொல்லுங்கள்''.

எமன், சிறுவனுடைய பக்குவத்தையும், உண்மையை அறிந்து கொள்வதில் அவனுக்கிருக்கும் உறுதியையும் பொறுப்புணர்வையும் கண்டான். அவன் சிறுவனுக்கு, விழிப்புணர்வுடனான மரண அனுபவத்தைத் தரத் தீர்மானித்தான். அவன் சிறுவனுக்கு அளித்த அனுபவம், அந்தச் சிறுவனின் ஆத்மானுபவமாய் அமைந்தது; நசிகேதன் மலர்ந்து ஞானமடைந்தான்.

இது உபநிஷத்திலிருந்து கிடைக்கும் ஒரு அற்புத மான கதையாகும். இந்தக் கதை உண்மையா இல்லையா என்று ஆராயாதீர்கள். வரலாற்றையும் தேதிகளையும் பார்க்கத் தொடங்காதீர்கள். அது உண்மையைக் கொண்டு வருகிறது. அதுவே போதும். ஏணியைப் பற்றித் தொங்கிக் கொண்டு உண்மையைத் தவற விட்டு விடுவதற்குப் பதிலாக, அதை உண்மையை அடைய உதவும் ஒரு ஏணியாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மரணம் ஞானத்தையே கொடுக்கக்கூடிய குருவாகும். சாதாரணமாக, நம் எல்லாருடைய வாழ்விலும் சரியான காலத்தில் வருவது மரணம் மட்டுமே! நாம் ஒரு நிமிடம் கூட அதிகம் கேட்க முடியாது. மேலும் நமது வாழ்வில், மரணம் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துச்சென்றுவிடுகிறது. நமது உறவினர்கள், நமது செல்வம், எல்லாவற்றையுமே. ஆனால், நசிகேதனுக்கோ, மரணம் எல்லாவற்றையும் கொடுக்கிறது. ஞானத்தையும் கூட! ஏன் இந்தப் பாரபட்சம்? நமக்கும் நசிகேதனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரே ஒரு காரணம் தான். நாமெல்லாம் மரணத்திடம் இருந்து ஓடி விடுகிறோம்; ஆனால், நசிகேதன் மரணத்தை எதிர்கொள்கிறான்.

நசிகேசன்தனே பூமியிலிருந்து எமனைச் சந்திக்கச் சென்ற முதலும் கடைசியுமான மனிதன். இந்த அற்புதமான கதையிலிருந்து நான்கு விஷயங் களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதல் விஷயம்: நாம் மரணத்தைத் தேடிச் செல்லும் பொழுது, மரணத்தை எதிர்கொள்ளும் பொழுது, அது அங்கு இருக்காது.

இரண்டாவது விஷயம்: அப்படியே மரணம் அங்கு இருந்தாலும், நாம் நினைப்பதுபோல் பயங்கரமான ஒன்றல்ல; அது அன்பாகவும், கொடுப்பதாகவும் இருக் கிறது.

மூன்றாவது விஷயம்: மரணம் எப்பொழுதும் நமக்கு ஒரு சிறந்த ஆசானாக இருக்கிறது.

நான்காவது விஷயம்: மரணம் நமக்கு இறுதியான பரிச ான ஞானத்தைக் கொடுக்கக் கூடியது!

எப்படியோ, பெரும்பாலான மக்களுக்கு, வாழ்க்கை ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தாண்டிச் செல்வதேயில்லை. வாழ்க்கை ஒருபோதும் மரணத்தைப் பற்றிய பயத்தைத் தாண்டிச் செல்வதேயில்லை. நாம் மூலாதார மற்றும் ஸ்வாதிஷ்டான சக்கரங் களுக்கிடையே, ஆசைகளுக்கும் பயத்திற்கும் இடையே, வாழ்ந்து மடிந்து விடுகிறோம். நமக்கு வாழ்வில் வேறெந்த வழியையும் எடுத்துக் கொள்வதற்கான தைரியம் இல்லை.

முந்தைய காலங்களில் மக்கள், நமக்கு இன்றிருக்கும் வாழ்க்கைப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வாழ்ந்தனர். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு எந்தத் தடுப்பூசியும் கிடையாது. இயற்கைப் பேரழிவுகளை செயற்கைக்கோள் துணையுடன் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் அமைப்புகள் கிடையாது. பஞ்சத்திற்கோ அல்லது வெள்ளத்திற்கோ எதிரான பாதுகாப்பு எதுவும் கிடையாது; அதனால் மக்கள் எப்பொழுதும்

நாம் மரணத்தைத் தேடிச் செல்வோமாயின், அல்லது நம்மிடம் மரணத்தை எதிர்கொள்ளும் தைரியம் இருக்குமாயின், மரணம் நமக்குத் தெரிந்த விதத்தில், அங்கு இருக்காது!

மனதளவிலும் போராட்டத்திற்குத் தயாராகவே இருந்தனர்; இறப்பிற்கும் கூட. முக்கியமாக, போர்வீரர்கள் எப்பொழுதும் இறக்கத் தயாராகவே இருக்க வேண்டும். பழங்கால ஜப்பானிய சாமுராய் வீரர்கள் மரணத்தை அமைதியுடன் எதிர்கொள்ளும் வழியை அறிந்திருந்தனர். அவர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டால், வெறுமனே ஒரு நீளமான ஊசியை ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் சொருகிக் கொண்டு விடுவார்கள். இது ஒரு மிகவும் உயர்ந்த தொழில் ரீதியான உத்தியாகும்; இதில் ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் இருக்கும் உயிர் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டு, அதன் விளைவாக உடனடியான, வலியற்ற மரணம் நேரிடுகிறது. இந்த முறை ஹரா-கிரி என்று அறியப்படுகிறது.

நாம் அனைவரும் எப்பொழுதும் மரணத்தைப் பற்றிய பயத்துடனேயே வாழ்கிறோம். எவ்வாறாயினும் அதிலிருந்து தப்பி விடத் தயாராக இருக்கிறோம். மரணம் ஒரு மிகப் பெரும் எதிரியாகவே பார்க்கப்படுகிறது.

சாக்ரடீஸைப் பற்றிய ஒரு சின்ன கதை...

சாக்ரடீஸ் ஹேம்லாக் என்று அழைக்கப்படும் ஒரு விஷச் செடியின் சாற்றை அருந்த வைத்துக் கொல்லப் பட்டார். விஷத்தை அருந்துவதற்குச் சற்று முன்னர், அவருடைய சீடர் ஒருவர் கேட்டார். “குருவே தங்களுக்கு இறப்பதைப் பற்றி அச்சமில்லையா? தாங்கள் மிகவும் அமைதியாகக் காணப்படுகிறீர்கள்?”. சாக்ரடீஸ் சொன்னார், “நான் ஏன் பயப்பட வேண்டும். இறப்பிற்குப் பின்னால் இரண்டு விஷயங்கள்தான் நடக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இறப்பிற்குப் பிறகு வேறு ஏதாவது ஒரு வடிவத்திலோ, பெயரிலோ நான் தொடர்ந்து இருப்பேன்; அல்லது இல்லாமல் போய்

மரணம் நமக்கு இறுதியான பரிசான ஞானத்தைக் கொடுக்கக் கூடியது.

விடுவேன். முதலாவதைப் பற்றிக் கவலைப்பட ஏதுமில்லை; இரண்டாவதில் கவலைப்பட யார் இருக்கப் போகிறார்கள்? அதனால் எந்த வழியிலுமே அச்சப்பட ஏதுமில்லை!'".

சாக்ரடீஸ் இறப்பைப் பற்றிய அச்சம் ஏதுமின்றி இருந்தார்; ஏனெனில் அவரிடம் இறப்பைப் பற்றியும், அதன் பின்விளைவு களைப் பற்றியும் ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் இருந்தது. மரணம் எப்பொழுதுமே ஒரு முடிவாகவே பார்க்கப்பட்டதால், மக்கள் அதனைப் பார்க்கும் பொழுது துயரப்படுகின்றனர். மரணத்தைப் பற்றிய அடிப்படையான புரிந்து கொள்ளுதல் இல்லை.

மரணம் எப்பொழுதுமே ஒரு முடிவாக இருந்ததில்லை. அது வேறு ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்ச்சியாகவோ அல்லது வெறுமனே விடுதலையாகவோ இருக்கிறது. அவ்வளவே. இதை மனிதன் புரிந்து கொள்ளும் பொழுது, இதற்காக துயரப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் என்பதை உணர்கிறான். மனிதன் தன் ஸ்தூல வடிவத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறான்; அதனால்தான் மிகுந்த துயரம் அடைகிறான். உடல் ஆத்மாவின் ஒரு வெறும் வாகனம் மட்டுமே. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பூமியில் மனிதனுக்கு ஒரே ஒரு நிச்சயமான விஷயம் மரணமாக இருந்தும், அது உண்மையில் நிகழும் பொழுது அவன் வியப்படைகிறான். இதுவே மனிதனைப் பற்றிய ஒரு வியப்பிற்குரிய விஷயம்.

ஒரு சின்ன கதை...

ஒரு பெண்மணி அவளது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தாள். அவளது குடும்பத்தினர்

மரணத்திற்குப் பிறகு என்ன நிகழ்கிறது? அனைவரும் அதில் பங்கேற்றனர். அவர்கள் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வந்த பரிசுகளை பிரித்துக் கொண்டும், வாழ்த்துக்களைப் படித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் அவளிடம், அவளுடைய 94 வயதான ஒரு சினேகிதி அனுப்பியிருந்த ஒரு வாழ்த்தைக் காண்பித்தனர். அவள் ஆச்சரியத்தில் கூச்சலிட்டாள், "கடவுளே! அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாளா!".

(சிரிப்பு!)

நாம், மரணத்தை, நம்மைத் தவிர மற்ற அனைவருக்கும் பிரயோகித்துப் பார்க்கிறோம்! நாம் எல்லாருமே இப்படித்தான் இருக்கிறோம். வாழ்க்கையில் மரணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு வினோதம் என்னவென்றால், வாழ்க்கையில் மரணத்தைத் தவிர மற்ற எதுவுமே முன் கூட்டியே கணிக்க முடியாதவை; வாழ்க்கையில் மரணம் ஒன்று மட்டுமே உறுதியானது. ஆனால் என்றாவது ஒரு நாள் நாம் இறந்து விடுவோம் என்பதைக் கூட நாம் கேட்க விரும்புவதில்லை!

பகவான் ரமண மகரிஷி விழிப்புணர்வுடனான மரண அனுபவத்திலிருந்தே ஞானமடைந்தார். ரமணர் சிறுவனாக இருந்த பொழுது, ஒரு நாள் இந்தியாவிலுள்ள மதுரையில் அவரது மாமாவின் வீட்டில், அவரது படுக்கையில் வெறுமனே படுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு தான் இறந்து விடப் போவதாக ஒரு எண்ணம் வந்தது! மரணம் அவர் மீது வந்ததாக உணர்ந்தார். அவருக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன - அந்த உணர்வை எதிர்ப்பது, அல்லது அதை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வது.

நம்மிடம் மரணத்தைப் பற்றிய அடிப்படையான புரிந்து கொள்ளுதல் இல்லை.

பொதுவாக மக்கள் எதிர்ப்பார்கள் - அதனால் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்று, விழிப்புணர்வற்ற நிலையில் உடலை விட்டு விடுவார்கள். நம்மில் 99 சதவீதம் பேர் உடலை விழிப்புணர்வற்ற நிலையில்தான் விடுகிறோம். மரணத்தில்தான் நமது வாழ்வு ஒரு உச்சநிலைக்குப் போகிறது என்பது பிறப்பிலிருந்தே நமக்குத் தெரிந்தாலும், அதை நாம் ஒரு போதும் மனதில் கற்பனை செய்து பார்க்க முயற்சி செய்வதில்லை; அந்த சாத்தியக் கூற்றை உண்மையாக்க முயற்சி செய்வதில்லை; அதை வரவேற்கவும் முயற்சி செய்வதில்லை! ஒரே ஒருமுறை நீங்கள் அதற்குள் விழிப்புணர்வுடன் சென்று விட்டால், தானாகவே உங்கள் பயம் போய் விடும்.

ரமணர் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தைப் பெற்றிருந்தார். அவர் அந்த எண்ணத்துடன் ஒத்துழைத்தார்.

மரணம் நிகழ்வதற்கு அனுமதித்தார். இறக்கும் பொழுது என்ன நிகழ்கிறது என்று பார்க்கத் தீர்மானித்தார். அவரது உடலின் பாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறப்பதைத் தெளிவாகப் பார்த்தார். மெதுவாக, அவரது உடல் முழுவதுமே இறந்துவிட்டது. அவர் உடல் சாம்பலாவதைப் பார்த்தார். திடீரென்று, அதற்குப் பிறகும் ஏதோ ஒன்று, அழிக்க முடியாத ஏதோ ஒன்று, இருப்பதை உணர்ந்தார். அந்தச் சமயத்தில், 'தான்' மனதிற்கு அப்பாற்பட்ட, அப்பாலுக்கும் அப்பாற்பட்ட, தூய விழிப்புணர்வு என்பது அவருக்கு புரிந்தது! நடந்த அனைத்திற்கும் அவர் ஒரு வெறும் சாட்சியாகவே இருந்தார்! பிரம்மாண்டமான அந்த அறிவு பிறகு அவரை விட்டுச் செல்ல வில்லை. அவர் உடலிற்குள் திரும்ப வந்தபொழுது, பகவான் ரமண மஹரிஷியாக, ஒரு ஞானமடைந்த குருவாக ஆகிவிட்டார்.

நாம், மரணத்தை, நம்மைத் தவிர மற்ற அனைவருக்கும் பிரயோகித்துப் பார்க்கிறோம்.

மரணத்தைப் பற்றிய பயத்தை வென்று விட்டீர்களானால், நீங்கள் மரணத்தையே வென்று விடுவீர்கள்; ஏனெனில் மரணம் என்பது வெறும் இன்னொரு கற்பனையே! எவ்வாறு மூலாதாரச் சக்கரத்தில், நமது பேராசை, உலகம் நிஜத்தில் இருப்பதை விட இன்னும் அழகாக இருப்பதாகக் கற்பனை செய்ய வைக்கிறதோ, அவ்வாறே நமது பயமானது, இறப்பானது நிஜத்தில் இருப்பதை விட இன்னும் அச்சம் தருவதாகக் கற்பனை செய்ய வைக்கிறது.

நாம் பேராசை மற்றும் பயம் என்னும் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, நிஜத்தைப் பார்க்க அனுமதிப்பதேயில்லை. உளவியல்பூர்வமாக நீங்கள் மரணத்தை அனுபவித்து விட்டால், மரண பயம் காரணமாக ஸ்வாதிஷ்டான சக்கரத்தில், பூட்டி வைத்திருக்கும் சக்தியை வெளியிடுவீர்கள்; ஸ்வாதிஷ்டான சக்கரம் திறக்குமானால், வாழ்க்கையின் தன்மையே முழுமையாக மாறி விடும்.

மரணம் என்பது இன்னொரு வடிவத்தில் தொடர்ச்சியே என்கிற உங்களுடைய ஏற்றுக் கொள்ளும் திறனால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் திறனும் உருமாற்றமடைகிறது. உங்கள் முழு உடலுமே தளர்வாக இருக்கிறது; விழிப்புணர்வு அதிகரிக்கிறது; வாழும் திறன் விரிவடைகிறது. நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், மரணத்தைப் பற்றிய பயம் உங்கள் உள் மனதில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. மரணத்தையும், மரணத்தைப் பற்றிய பயத்தையும் புரிந்து கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை வளம் பெறும்; செல்வம் இல்லாமல் இருக்கக் கூடும், ஆனால் வாழ்க்கை வளமாக இருக்கும். வளமான தன்மையே உண்மையில் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும்.

வாழ்க்கையில் மரணம் ஒன்று மட்டுமே உறுதியானது. ஆயினும், என்றேனும் ஒரு நாள் நாம் இறந்து விடுவோம் என்பதை நாம் கேட்கக் கூட விரும்புவதில்லை.

ஒரு சின்ன கதை....

பிறவியிலேயே பார்வையற்ற ஒருவனுக்கு, ஒரு மருத்துவர் குணப்படுத்துவதாக உறுதி கூறினார். மருத்துவர் அவனிடம், "இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு உன்னால் பார்க்க முடியும்! உன்னுடைய ஊன்று கோலை இனி நீ உபயோகப்படுத்த வேண்டிய தேவையே இருக்காது" என்று உறுதி கூறினார். அதற்கு அவன் சொன்னான், "டாக்டர், என்னால் பார்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறேன், ஆனால் ஊன்று கோல் இல்லாமல் நான் நடப்பது எவ்வாறு சாத்தியமாகும்?".

ஊன்றுகோல் அவனுடைய ஒரு பகுதியாகி விட்டதால், பார்வை கிடைத்த பிறகு அவனால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியும் எனபதைக் கூட தொடர்புபடுத்திப் பார்க்க முடியவில்லை! ஒரு பார்வையற்ற மனிதனுக்கு, அவன் பார்வை கிடைத்து விட்டால், ஊன்றுகோல் தேவையில்லை என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்? இப்பொழுது அவன் மிகவும் அஞ்சுகிறான். அதனால், நீங்கள் செய்ய முடிந்ததெல்லாம், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவனையே பார்க்க வைக்க வேண்டியதுதான், அவ்வளவு தான். பிறகு அவனாகவே ஊன்று கோலைத் தூக்கி எறிந்து விடுவான்!

அதே போல, 'உங்கள் பயமனைத்தும் இறுதியாக மரணத்தைப் பற்றிய பயம்தான், உங்கள் ஆத்மா அழிவற்றது, உங்கள் உடம்புதான் அழிகிறது' என்றெல்லாம் நான் சொன்னாலும், நீங்கள் உங்கள் பயத்தைப் பற்றிய கருத்துக்களை பயத்தினாலேயே விடாமல் பிடித்துக் கொண்டிருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அதை அனுபவிக்கவில்லை!

மரணம் உங்கள் விழிப்புணர்வான அனுபவம் ஆகும் வரையில், பயம் உங்களை விட்டுச் செல்லாது. ஆனால் உங்களால்

பகவான் ரமண மஹரிஷி விழிப்புணர்வுடனான மரண அனுபவத்திலிருந்தே ஞானமடைந்தார். ஒன்று செய்ய முடியும்: இதுபோன்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேளுங்கள்; அவற்றைப் பற்றி ஒரு உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்; உங்களுடைய சிறிய, பெரிய பயங்கள் எவ்வாறு உண்மையில் உங்கள் மரண பயத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்; உங்களுடைய பயங்களெல்லாம் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என்பதைப் பாருங்கள்; உங்களுடைய பயங்களிலெல்லாம் ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்; பிறகு உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து உண்மைக்கு அருகாமையில் வர முடியும்.

நமது பயங்களையெல்லாம் ஐந்து பெரிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம்: முதலாவது - செல்வம், வசதிகள், பெயர், புகழ், பெருமை மற்றும் மற்ற வெளியுலக விஷயங்களை இழந்து விடும் பயம். இரண்டாவது - ஆரோக்கியத்தை இழக்கும் பயம்; ஏதேனும் விபத்து அல்லது நோயின் காரணமாக உடல் உறுப்புகளை இழந்து விடும் பயம் - நமது உடல் ஆரோக்கியத்தைக் குறித்த பயம். மூன்றாவது

  • நமது மன நலம், மற்றும் மனதின் ஸ்திரத் தன்மையை இழந்து விடும் பயம். நான்காவது - நாம் நேசிப்பவர்களையும், அவர்களது அன்பையும் இழந்து விடும் பயம். ஐந்தாவது - தெரியாதவர்களைப் பற்றிய பயம்-கடவுளைப் பற்றிய பயம், பேய்களை, ஆவிகளைப் பற்றிய பயம் மற்றும் இறப்பைப் பற்றிய பயம்.

உண்மையில், நமது பயங்களை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், இந்த ஐந்து வகை பயங்கள் அனைத்துமே, மரணம் பற்றிய பயம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதுவே பல்வேறு விதங்களிலும் வெளிப்படுகிறது. அவ்வளவுதான்.

இறப்பிற்குப் பிறகு வேறு ஏதாவது ஒரு வடிவத்திலோ பெயரிலோ தொடர்ந்து இருப்பேன்; அல்லது இருக்க மாட்டேன். முதலாவதைப் பற்றி கவலைப்பட எதுமில்லை; இரண்டாவதில் கவலைப்பட யார் இருக்கப் போகிறார்கள்?

மக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுவதன் முக்கியக் காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழாததே. அவர்கள் இன்னும் வாழ்க்கையை போதுமான அளவு வாழாதது குறித்த அவநம்பிக்கையில் இருப்பதால் அஞ்சு கிறார்கள். அவர்கள் இதுபோன்று உணர்வதற்குக் காரணம், வாழ்க்கை முழுவதும் கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கவலைகளிலும், மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து விட்டதும், ஒரு போதும் நிகழ்காலத்தில் வாழாததும் போன்றவையே.

நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் காரணம், ஒருவருக் கொருவர் அஹங்காரத்தினாலும், ஆசைகளினாலும், உணர்ச்சி களினாலும் இன்னும் பலவற்றாலும் இழுபறி செய்து கொண்டிருப்பதே ஆகும். நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலே, நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் பெற்றோர்கள் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்படும் ஆசைகள், குற்ற உணர்வு, பயம் ஆகியவற்றாலான மகுடத்தை வெறுமனே எடுத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை வாழ்ந்த பின்னர், இறப்பதற்கு முன், அதை அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் சென்று விடுகிறீர்கள், அவ்வளவே. நீங்கள் ஒரு போதும் முழுமையாக வாழ்ந்ததேயில்லை.

முழுமையாக வாழ்தல் என்றால் என்ன? வாழ்க்கையை இன்னும் தெளிவுடன் வாழ முயற்சி செய்யுங்கள், அவ்வளவே. மற்றவர்கள் அர்த்தமற்ற எதையும் உங்கள் மீது திணிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெளிவாக இருப்பீர்களானால், உங்களுடைய சொந்த ஆசைகளையும், மற்றவர்கள் உங்கள் மீது திணித்த ஆசளையும், மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட

ஒரே ஒரு முறை நீங்கள் விழிப்புணர்வுடன் மரண அனுபவத்தைப் பெற்று விட்டால், தானாகவே உங்கள் பயமனைத்தும் மறைந்து விடும்.

ஆசைகளையும் உங்களால் தெளிவாகப் பிரித்து அடையாளம் காண முடியும். மற்றவர்களுக்கோ அல்லது அவர்களது உடைமைகளுக்கோ எந்தவிதமான ஊறும் விளைவிக்காமல், முதல் வகையான ஆசைகள் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ளப்படலாம். மற்ற இரண்டும் மனத்தெளிவின் உதவியுடன் விட்டு விடப்பட வேண்டியதாகும்.

நீங்கள் இவ்வாறு வாழ்ந்தீர்களானால், ஒருபோதும் மற்றவர்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்க மாட்டீர்கள்; ஒருபோதும் மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்ந்து, மன நிறைவை அனுபவித்து, காலம் வரும் பொழுது இறக்கத் தயாராக இருப்பீர்கள். உங்களிடம் பதுங்கிக் கொண்டிருக்கும் குழப்பமும், மரணத்தைப் பற்றிய அச்சமும் இருக்காது. நான் உங்களை சுயநலத்துடன் இருக்கச் சொல்ல வில்லை. எல்லா விஷயத்திலும் தெளிவைக் கொண்டு வாருங்கள் என்றுதான் சொல்கிறேன்.

ஒரு சின்ன கதை....

ஒரு முறை ஒரு ஜென் துறவிக்கு மன்னரால் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் அந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாகஇருந்தது. அந்தத்துறவியோமௌனமாகவும் அமைதியாகவும் இருந்தார். அவருடைய சீடர்களில் ஒருவர், துறவியின் அமைதியால் அதிர்ச்சியடைந்து, அவரிடம் கேட்டார், "தாங்கள் வாழ்வதற்கு இன்னும் 24 மணி நேரம்தான் இருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? தங்களுக்கு பயமாக இல்லையா?". துறவி அமைதியாக பதிலளித்தார், "நான் வாழ்ந்து விட்டேன், அதனால் எனக்கு மரணமடைவதைப் பற்றி அச்சமில்லை".

| மரணத்தைப் பற்றிய பயத்தை வென்று விட்டீர்களானால், நீங்கள் மரணத்தை வென்று விடுவீர்கள். ஏனெனில் மரணம் என்பது வெறும் இன்னொரு கற்பனையே. |

அவர் சொன்னதன் பொருள், "நான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், கணத்திற்கு கணம், வாழ்ந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது! நான் ஏன் அச்சப்படவேண்டும்?"..

நீங்கள் உள்ளே ஆழமாகப் பார்த்தீர்களானால், நம்மில் பெரும்பாலானோர் மரணமடைவதைக் கண்டு அஞ்சவில்லை; நாம் வாழ்க்கையைப் போதுமான அளவு வாழவில்லையே என்றுதான் அஞ்சுகிறோம், என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நாம் ஒரு பொய் யான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம் என்றே அஞ்சுகிறோம். நாம் இந்த அனைத்தையும் பற்றி, ஒரு வகையான ஆழமான விளக்க முடியாத துக்கத்தை உணர்கிறோம். நாம் விரும்பியவண்ணம் வாழவில்லை என்று உணர்கிறோம்; நாம் நிறைவடைந்ததாக எண்ணவில்லை - மரணத்தைப் பற்றிய பயம் அங்குதான் ஆரம்பிக்கிறது!

தொடர்ந்து மற்றவர்களுக்காக சமரசம் செய்து கொள்வதும், நமக்கு இயல்பற்ற ஒரு வாழ்க்கையை வாழ முயற்சிப்பதும், சமூகம் நமக்காக உருவாக்கிய அச்சுக்குள் பொருந்தியிருக்க முயற்சிப்பதும்... இவையனைத்தும் ஒரு நிறைவின்மையை நோக்கி இட்டுச் செல்லும்! மரணத்தைப் பற்றிய அச்சத்தில் பிரதிபலிப்பது வாழ்க்கையைப் பற்றிய அச்சமே.

நீங்கள் முழு திருப்தியுடன், முடிந்த அளவு ஆழமாக வாழ்ந்து விட்டீர்களானால், உங்களுக்கு மரணத்தைப் பற்றிய அச்சம் இருக்காது. அச்சமின்றி வாழுங்கள்.

உங்களால் முடிந்த அளவிற்கு ஆழமான தனித் தன்மை யுடன் வாழுங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி வருமளவிற்கு வாழுங்கள். மரணத்தைப் பற்றிய உங்கள் அச்சம் போய் விடும்.

மக்கள் மரணத்தைக் கண்டு பயப்படுவதன்
முக்கியக் காரணம், அவர்கள் தங்கள்
வாழ்க்கையை முழுமையாக வாழாததே.

இன்னொரு விஷயம்... நீங்கள் எந்த ஒரு உணர்வையும் மனதில் தங்க விடாமல், முழுமையாக, உங்கள் உணர்ச்சிகளை மிகத் தெளிவுடன், முழுமையாக வாழ்ந்து விட்டீர்களானால், உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் இழப்பதைப் பற்றி அஞ்ச மாட்டீர்கள்.

பாருங்கள்... ஒருவருடைய இழப்பைப் பற்றி நீங்கள் அஞ்சுவதற்குக் காரணம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில், ஏதோ ஒரு வழியில், அந்த உறவிற்கு சரியான நியாயத்தை வழங்கவில்லை என்று எண்ணுகிறீர்கள்; நீங்கள் முழுமையாக இல்லாததாக உணர்கிறீர்கள்; நீங்கள் அந்த உறவை விட்டுவிட இன்னும் தயாராகவில்லை. உடல் அளவிலான பிரிவு, அச்சத்தின் ஒரே ஒரு அம்சம்தான்; உண்மையான காரணம் உறவில் நிறைவின்மைதான்.

உறவுகளில் 'நியாயமாக நடந்து கொள்ளுதல்'1 என்ற வார்த்தை வருவதற்குக் காரணம், நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்காக வாழ வேண்டும், அவர்களது தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும், என்றே எப்பொழுதும் உங்களுக்கும் கற்றுக் கொடுக்கப்படுவதுதான்.

நீங்கள் எப்பொழுதும், இது போன்ற விஷயங்களைச் செய்து, உறவுகளிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையை உணருகிறீர்கள். மேலும் இவைகளைச் செய்யவில்லையென்றால், நீங்கள் ஒரு குற்றவுணர்வு மற்றும் பயச்சுழலில் சிக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் சமூகத்தின் முழுச் செயல்பாடு பற்றிய ஆழமான தெளிவுடன், வெறுமனே முழுமையாக வாழ்ந்தால், இது போன்ற நிர்ப்பந்தங்களின் பிடியில் ஒருபோதும் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.

நீங்கள் உறவுகளில் அன்பை இழக்காமல் முழு நிறைவுடன் வாழமுடியும். இதைப் பற்றி நாம் அனாஹத சக்கரத்தைப்

Justification

பற்றிப் பேசும்பொழுது பேசினோம். எப்பொழுதும் உடளவிலான பிரிவைப் பற்றிய பயத்திற்குக் காரணம் அந்த உறவைப் பொறுத்த வரையிலான குற்ற உணர்வே. நீங்கள் உறவில், ஒரு வர்த்தக முறையைப் போல் அல்லாமல், மற்றவரை நோக்கிய தூய அன்பின் ஆற்றலுடன், முழுமையாக வாழ்வீர்களானால், குற்றவுணர்விற்கோ அல்லது பயத்திற்கோ இடமிருக்காது. அந்த மனிதர் மறைந்து விட்டால் கூட, உங்களிடம் அவரை நோக்கிய அன்பு தொடர்ந்து இருக்கும், அவ்வளவுதான். ஒரு போதும் பிரிவைப் பற்றிய பயம் இருக்காது.

நீங்கள் அந்த மனிதருடன் வாழும் பொழுதும், மிகுந்த தெளிவுடனும், விழிப்புணர்வுடனும் வாழ முயற்சி செய்யுங்கள். பல சமயங்களில், உறவுகளில் துன்பத்திற்குக் காரணம் பாதுகாப்பற்ற உணர்வும், எப்பொழுதும் இழையோடிக் கொண்டிருக்கும் ஒருவரையொருவர் இழந்து விடுவோமோ என்ற அச்சமும்தான். எந்த உறவிலும் உள்ள பயத்தை ஆழமாக ஆராய்ந்தீர்களானால், நமது உறவுகள் ஏதோ ஒரு வகையில் வர்த்தகப் பரிவர்த்தனையைப் போல் ஆகி விட்டதுதான், இந்த பயத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில், மற்றவர் திருமணத்திற்கு வெளியே வேறு யாரையாவது தேடிக் கொண்டு விடுவாரோ என்ற பயம். தாய்க்கும் மகனுக்கும் இடையில், மகன் தாயை விட மனைவிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவானோ என்ற பயம். தந்தைக்கும் மகனுக்கும் இடையில், தந்தை சொத்துக்களை மகனுக்குக் கொடுக்காமல் போய் விடுவாரோ என்ற பயம் அல்லது மகன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றாமல் போய் விடுவானோ என்ற பயம்.

இதுபோன்று, எந்த உறவிலும், திருப்திப்படுத்தப்பட வேண்டிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய, ஒரு அடிப்படையான

நாம் உண்மையில் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை

  • நாம் இன்னும் வாழ்க்கையை போதுமான அளவு வாழவில்லையே என்றுதான் அஞ்சுகிறோம். எதிர்பார்ப்பு இருக்கிறது. இதுவே பயத்திற்குக் காரணம். நான் சொல்கிறேன்... உங்களால் எந்த உறவையும் ஒருபோதும் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது. குடும்பத்தினர் அனைவரையும் திருப்திப்படுத்த முயலும் எவருமே இறுதியில் அதை விட்டு விட்டு ஓடி விடுவர்!

அனாஹத சக்கரத்தைப் பற்றிப் பார்த்தபொழுது நாம் பேசிய அன்பைப் போன்று, தூய அன்பின் அடிப்படையில் ஒரு உறவு இருக்குமானால், அதில் பயத்திற்கான எந்தவிதமான வஸ்துவும் இருக்காது.

உங்களால் அச்சத்திலிருந்து அன்பை நோக்கி நகர முடியுமானால், அது எவ்வளவு பெரிய சுதந்திரம் என்பது உங்களுக்குத் தெரியாது. அச்சம் எப்பொழுதும் சிறைப்படுத்தும்; அன்பு எப்பொழுதும் சுதந்திரம் அளிக்கும். ஆனால் சமூகம் உங்களுக்குள் பயத்தைப் புகுத்தா விட்டால், நீங்கள் அது சொல்வதைக் கேட்க மாட்டீர்கள்.

அதனால் அது உங்களுக்குள் எல்லா வித சாத்தியமான வழிகளின் மூலமாகவும் - பாதுகாப்பின்மை, விதிமுறைகள், கட்டுப்பாடுகள், வழிபாடு போன்ற இன்னும் பல வழிகளிலும் - பயத்தைப் புகுத்துகிறது.

சமூகம் உங்களை புனிதர்களாக்க-எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைக் கண்டும் மற்றும் எல்லாவற்றையுமே கண்டும் அச்சப்படும் புனிதர்களாக்க-முயற்சி செய்கிறது. நான் உங்களைப் புனிதர்களாக்க இங்கு வரவில்லை. உங்களை ஆனந்தமயமாக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் ஆனந்தமயமாக இருக்கும் பொழுது, முழுவதும் உயிர்ப்படனும், உணர்வுடனும், விழிப்புடனும் இருப்பீர்கள்.

| உங்களால் எந்த ஒரு உறவையும் ஒருபோதும் முழுமையாகத் திருப்திப்படுத்த முடியாது. |

எப்படியோ, நமது உறவில், பயம் பொறாமையாக உருவெடுத்து விடுகிறது. நமது பல செயல்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடியில் இருக்கும் உணர்ச்சி பயம். பொறாமை, கோபம், பேராசை ஆகிய உணர்ச்சிகளின் மூலமும் பயமே. ஆனால் நாம் இதை அறிவதில்லை. இவையனைத்திற்கும் காரணம் பயம்தான் என்பது நமக்குத் தெரியாது. அதுதான் பிரச்சனை. அதனால்தான் நாம் நமது நடத்தை வடிவ அமைப்பு களைப் பொறுத்த வரையில் தொடர்ந்து இருளிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் உறவு முறைகள் வலியும் வேதனையுமாக மாறி விடுகின்றன.

புரிந்து கொள்ளுங்கள்... அச்சமும் அன்பும் ஒரு போதும் ஒன்றாக இருக்க முடியாது. ஒரு உறவில் தூய அன்பு இருக்குமானால், அங்கு ஒருபோதும் அச்சம் இருக்க முடியாது. அச்சம் இருக்குமாயின், அங்கு ஒரு போதும் தூய அன்பு இருக்க முடியாது. மிகத் தெளிவாக இருங்கள்... உறவில் சில சுயலாபங்கள் இருக்கின்றன; பாதுகாப்பு அல்லது பேராசை அல்லது பதிலுக்கு எதையேனும் பெறுதல் ஆகிய சில நோக்கங்கள், சில குறிக்கோள்கள், சில எதிர்பார்ப்புகள் முதலியவை உறவில் இருக்கின்றன. அதனால்தான் பயம் வருகிறது.

நாம் எல்லா உறவுகளிலும் பாதுகாப்பை எதிர்பார்க்கிறோம். நாம் வசதியாக நிலைபெறுவதற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. இது உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் ஒருவிதமான சிறைவாசம். மக்கள் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; ஆனால் நான் சொல்கிறேன், அவர்கள் அதைக் கண்டு மிகவும் அஞ்சுகிறார்கள்; அவர்கள் சிறைப்படுதலையே மிகவும் விரும்புகிறார்கள்.

அச்சம் எப்பொழுதும் சிறைப்படுத்தும், அன்பு எப்பொழுதும் சுதந்திரம் அளிக்கும்.

சிறையில் இருக்கும் வசதியான பாதுகாப்பு அமைப்பால் அவர்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு சிறுமி ஒருநாள் அவள் தந்தையிடம் கேட்டாள், "அப்பா, உத்தரவாதம் என்ற சொல்லின் பொருள் என்ன?". தந்தை பதில் சொன்னார், "அதன் பொருள், ஏதோ ஒன்றை நன்றாகச் செய்திருக்கிறீர்கள், அது வெகுகாலம் நீடித்து இருக்கும்". அன்று இரவு தூங்கச் செல்லும் முன், சிறுமி தந்தையை அழைத்து, "நல்ல இரவு, உத்தரவாதமான அப்பா¹!" என்றாள்.

நாம் அனைவரும் நமது வாழ்வில் தொடர்ந்து பாதுகாப்பைத் தேடுகிறோம். ஆனால் நாம் சுதந்திரத்தைத் தேடுவதாகச் சொல்கிறோம். நாம் உண்மையிலேயே சுதந்திரத்தைத் தேடுவோமாயின், ஏன் பாதுகாப்பைத் தேடுகிறோம்? ஏன் அச்சம்? உங்களிடம் பயம் இருக்கும் வரை, நீங்கள் பாதுகாப்பைத் தேடுவீர்கள். அதுவரை, சுதந்திரத்தை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு, நீங்களே உங்களை ஏமாற்றிக் கொண்டு திருப்தியடைந்து கொண்டிருக்கலாம்.

உங்களை வாழ்வின் முழு பாதுகாப்பின்மை மீது வீசி எறிபவர் எவரோ, அவரே குரு ஆவார். அவரால் மட்டுமே உங்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்க முடியும். அதனால்தான் அவருடன் நீங்கள் பாதுகாப்பற்று, அச்சத்தை உணர்கிறீர்கள். சுதந்திரம் அச்சத்தை உருவாக்குகிறது.

உங்களுடைய மற்ற உறவுகளில் நீங்கள் ஒருபோதும் முழுமையான பாதுகாப்பற்று உணர்வதில்லை. ஏனெனில் எப்பொழுதுமே அங்கு கொஞ்சம் பேராசை, பயம் மற்றும் கோபம்

Good Night, Guaranteed Father¹

ஆகியவற்றின் இழுபறி இருப்பதால், உறவுகளின் பழக்க மான வடிவமைப்பில் நீங்கள் நன்றாக நிலை பெற்று விடுகிறீர்கள். ஆனால் ஒரு குருவுடன், நீங்கள் முழுவதும் சுதந்திரமாக இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு பயமேற்படுகிறது.

ஒரு சின்ன கதை....

ஒரு மனிதன் 20 வருடங்கள் சிறையில் இருந்தான். அவன் விடுதலை பெறும் நாளில், மிகவும் கவலையாகவும், இறுக்கமாகவும் காட்சியளித்தான். சிறையில் இருக்கும் அவனது நண்பன் கேட்டான், “உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வளவு கவலையுடன் இருக்கிறாய்?”. அவன் பதிலளித்தான், “எனக்கு பயமாக இருக்கிறது. வெளியில் சென்று நான் என்ன செய்வேன்?”.

சிறை அவனிடம் அவ்வளவு திடமான ஒரு பாதுகாப்பு வடிவ அமைப்பை உருவாக்கி விட்டது. அதனால் அவன் வெளியில் சென்ற பிறகு அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! இதுவே ஒரே விதமான வடிவ அமைப்புகளிலும், பாதுகாப்பிலும் சிக்கிக் கொள்வதன் ஆபத்து.

ஒரு குருவானவர் நீங்கள் தேடும் பாதுகாப்பை ஒருபோதும் கொடுக்க மாட்டார். அவர் நீங்கள் தேடும் வடிவ அமைப்பை ஒருபோதும் கொடுக்கமாட்டார். நீங்கள் தேடும் பாதுகாப்பு கிடைக்காத போது, நீங்கள் உங்களுக்கு உள்ளேயே ஆழமாக மையம் கொண்டு வளர்வீர்கள்; இழப்பதற்கு எதுவுமில்லை என்று தெரியுமாதலால் அச்சமின்றி வளர்வீர்கள்; மேலும் இழப்பதற்கு எதுமில்லை என்பது தெரியும் பொழுது, உங்களிடம் அச்சம் இருக்காது.

இழப்பதற்கு எதுவுமில்லை என்பதை காண்பிப்பதற்கு, குரு உங்களை முழுமையான பாதுகாப்பின்மைக்குள் எறிகிறார்.

அச்சமும் அன்பும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது.

உங்கள் மீது அவருடைய ஆழ்ந்த பரிவினால், உங்கள் வளர்ச்சியின் மீது அவருடைய ஆழ்ந்த அக்கறையினால், அவர் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில்லை. வழக்கமான பாதுகாப்பு இல்லாததனால், நீங்கள் கடவுளை அடைகிறீர்கள்; நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் புரிந்து கொள்கிறீர்கள்.

உங்களுடைய எல்லா அச்சங்களுக்கும் காரணம், இழப்பதற்கு எதுவுமில்லை என்பது உங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியாததுதான். ஒரே ஒருமுறை மரணத்தின் அருகாமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு விட்டீர்களானால், அதுவே இழப்பதற்கு எதுவுமில்லை என்பதையும், உங்களுடைய எல்லா அச்சங்களும் ஆதாரமற்றவை என்பதையும் காட்டி விடும். குரு அவரது வழியில் இதை உங்களுக்குப் புரியவைத்து விடுவார்.

அதனால் குருவிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்யாதீர்கள். உண்மையிலேயே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே அவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களின் உள்ளார்ந்த இயல்பு அச்சமின்மை. பல காலமாக நீங்கள், உங்களுக்குள் பயத்தைப் புகுத்தப்பட்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் பல காலமாக உங்களுக்குள் எடுத்துக் கொண்டு விட்ட நெறிப்படுத்துதல்களின் படிமங்களை குரு உடைக்க முயற்சி செய்கிறார்; அவ்வளவுதான். அவர் உங்களிடம் செயலாற்ற விசுவாசத்துடனும் அன்படனும் அவரை அனுமதித்தீர்களானால், நீங்கள் உங்கள் கண் முன்னாலேயே உருமாற்றமடைவதைக் காணலாம்.

எனக்குப் பழக்கமான ஸ்வாமி ஒருவரைப் பற்றிய ஒரு சின்ன கதையைக் கூறுகிறேன்...

அந்த ஸ்வாமியின் அறையில் நிறைய கடிகாரங்கள்

| நாம் எல்லா உறவுகளிலும் பாதுகாப்பை எதிர்பார்க்கிறோம். இது உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் ஒருவிதமான சிறைவாசம். |

இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டும். நான் அது பற்றி ஒருநாள் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார், “நேரம் என்னுடைய எஜமான் அல்ல. நான்தான் எஜமான்! எனக்கு எந்த நேரம் வேண்டுமோ, அந்த நேரத்தை அந்த கடிகாரத்திலிருந்து எடுத்துக் கொள்வேன்”. அந்த ஸ்வாமி தான் உடலை விடப்போகும் நாளையும், நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டார்.

இறப்பதற்கு முதல் நாள் இரவு, அவரது சீடர்களை எல்லாம் அவரைச் சுற்றி இருக்கச் செய்து, கீர்த்தனைகளைப் பாடச் சொன்னார். அதில் ஒரு பாடகர் தனது இசைத் திறமையில் கொஞ்சம் கர்வம் உள்ளவர். அவர் அப்பொழுது பாடவில்லை. வழக்கமாகச் செய்வதைப் போல், ஸ்வாமி ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி அதை அவரிடம் அனுப்பினார். அது ஏதோ ஒரு குறிப்பிட்ட பாடலைப் பாடுவதற்கான வேண்டுகோள் என்று அந்த சீடர் மகிழ்ந்தார். ஆனால் அவர் அந்த துண்டுச் சீட்டைத் திறந்து பார்த்தபொழுது, அதில் ஸ்வாமி, “தயவு செய்து நான் இறந்த பிறகு பாட வேண்டாம்” என்று எழுதி இருந்தத்தைக் கண்டார்! இறக்கும் தறுவாயிலும் அவர் ஒரு நகைச்சுவையான மனநிலையில் இருந்தார்!

அந்த இரவின் பிற்பகுதியில், ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுமாறு, தனது சீடர்களிடம் கூறினார். அவர் சொன்னார், “முக்கியமாக நாளை, நீங்கள் அனைவரும் எனது தகன ஏற்பாடுகளில் மும்முரமாகி விடுவீர்கள். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்ய மறந்து விடாதீர்கள்!”. இறுதி நிமிடம் வரை, அவர் பின்னால் விட்டுச் செல்லும் மக்களுக்கான அக்கறையுடன் தான் இருந்தார்! அடுத்த நாள் காலையில், அவர் சொன்ன சரியான நேரத்தில், இரு கைகளையும் அனைவரையும் நமஸ்கரிக்கும் பாவனையில்

உங்களை வாழ்வின் முழு பாதுகாப்பின்மை மீது வீசி எறிபவர் எவரோ, அவரே குரு ஆவார். அவரால் மட்டுமே உங்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்க முடியும்.

கூப்பினார் - பிறகு ஒரு வெறும் நாடகத்தைப் போல, அவரது கைகள் விழுந்தன.

மரணத்தை எதிர்கொள்ள எவ்வளவு அழகான, அமைதியான, தைரியமான வழி! நாமும் இப்படித்தான் இறக்க வேண்டும். நமது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ நம்மை விட்டுச் செல்லும் பொழுதும் மரணத்தை இவ்வாறே பார்க்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் பயத்தைப் பற்றிய அனைத்துக் கருத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய் விடும். ஏனெனில், நான் சொன்னது போல், பயத்திற்குக் கீழே இருக்கும் அடிப்படையான விஷயம் மரணம்தான்.

சரி... ஏதேனும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?

ஆனால் ஸ்வாமிஜி,ாதாரணமாக பயம் அதிகமாகப் பெண்களுடன் தொடர்பு படுத்தப்படுகிறதே?

பாருங்கள்... ஆண்கள் முக்கியமாக மூலாதார சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்; பெண்கள் முக்கியமாக ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்கள் மிகவும் இச்சையுடையவர் களாகவும், பெண்கள் மிகவும் பயமுடையவர்களாகவும் இருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இருவருக்குமே இது தெரியும்; ஒருவருக்கொருவர் இதை சரியான முறையில் உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்!

பெண்ணின் பலவீனமான நாணை சரியாக எங்கு தொட வேண்டும் என்று ஆணுக்குத் தெரியும். அவன் அவளுடைய பாதுகாப்பின்மை மற்றும் பயத்துடன் விளையாடி, அவளைச் சுரண்டுகிறான். அதே போல், பெண்ணுக்கும் ஆணின் திறவுகோல்

ஒரு குருவானவர் நீங்கள் தேடும் பாதுகாப்பை ஒருபோதும் கொடுக்க மாட்டார்.

எங்கிருக்கிறதென்பது தெரியும்! அவளும் விளையாடி, அவனைச் சுரண்டுவாள்! காலங்காலமாக திருமணங்களில் இதுதான் நடந்து வருகிறது.

உண்மையில், ஹிந்துக்களின் திருமணங்களில், ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மற்றவரின் கர்மாவை (நிறைவேறாத செயல்களும் ஆசைகளும்) மென்மையான முறையில் தீர்க்கும் வகையிலும், இந்த வாழ்க்கையில் மேலும் கர்மாக்களைச் சேர்த்துக் கொள்ளாத வகையிலும் செயல்படுவதாக உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால், இந்நாட்களில், மக்களுக்கு அது போன்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டது கூடத் தெரியாது. ஏனெனில், திருமணம் செய்து கொள்வது அவர்களல்ல; புரோகிதர்கள் தான் எல்லா மந்திரங்களையும் சொல்லி திருமணம் செய்து கொள்கின்றனர்!

அவர்கள் எடுத்துக் கொள்வது மிகவும் அற்புதமான ஒரு உறுதிமொழி. பாருங்கள்...நாம் போதுமான அளவுக்கு மேலும் கர்மாக்களை நமது வாழ்வில் சேர்த்து விட்டோம். குறைந்த பட்சம் அவற்றை இந்தப் பிறவியிலாவது தீர்த்து விட்டு, விடுதலை அடைவதே, நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வெளியிலிருந்து கவனித்தால்தான், எவ்வளவு முட்டாள் த்தனமான விளையாட்டு விளையாடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு... நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் வாழ்க்கையை ஒரு விளையாட்டாகப் பார்ப்பது மிகவும் சுலபம்; ஏனெனில், அவர்கள் எப்பொழுதும் ஏதோ பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையை ஒரு பெரும் நாடகமாகப் பார்ப்பதில் அவர்களே

| இழப்பதற்கு எதுவுமில்லை என்பதைக் காண்பிப்பதற்கு, குரு உங்களை முழுமையான பாதுகாப்பின்மைக்குள் எறிகிறார். வழக்கமான பாதுகாப்பு இல்லாததனால், நீங்கள் கடவுளை அடைகிறீர்கள். |

மிகவும் நெருங்கி வருகிறார்கள். மற்ற அனைவரும் தமது பாத்திரங்களில் மிகவும் சிக்கிக் கொண்டிருப்பதால் அதுவே நமக்கு திடமான நிஜமாகி விடுகிறது.

பெண்கள் மிகவும் பயந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் உளவியல் ரீதியாக அப்படி உருவாக்கப்பட்டிருப்பது தான். ஆணும் பெண்ணும் உடலளவில் மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் வேறுபட்டே இருக்கிறார்கள்.

ஸ்வாமிஜி, சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பயப் படுவதிலிருந்து வெளியே வருவது எப்படி?

முதலில், எல்லாச் சின்னச் சின்ன பயங்களுமே, இறுதியான மரணத்தைப் பற்றிய பயத்தின், வெறும் பிரதிபலிப்புகள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது, உங்கள் பயத்தை எதிர்க்காதீர்கள்; வெறுமனே உங்களுக்கு பயமாக இருக்கிறது என்பதை மட்டும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் சொல்லிக் கொண்டு, அதை அனுபவியுங்கள், அவ்வளவுதான்! பயம் உங்களிடம் இருந்து போய் விட்டது என்பதை நீங்கள் வெகு சீக்கிரத்தில் கண்டு கொள்வீர்கள். ஏனெனில், நீங்கள் அதைப் பார்த்து, அனுபவித்து விட்டீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறை பயத்தை உணரும் பொழுதும் இதைச் செய்ய ஆரம்பியுங்கள்.

இதில் நீங்கள் விழிப்புடன் செயல்படும் பொழுது, பயம் என்று நீங்கள் அழைப்பது, ஏதோ ஒரு நிகழ்விற்கோ அல்லது ஒரு எண்ணத்திற்கோ உங்களுடைய பதில் அல்லது எதிர்ச் செயலைத் தவிர வேறல்ல என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு பயம் இருந்ததா இல்லையா என்பது உங்களுடைய பதிலைப் பொறுத்தது. மேலும் மேலும் விழிப்புணர்வுடன், உங்களால் பயத்திற்கு பயமில்லாமல் பதில் கொடுக்க முடியும்!

மரணத்தை எதிர்கொள்ள எவ்வளவு அழகான, அமைதியான, தைரியமான வழி! நாமும் இப்படித்தான் இறக்க வேண்டும்!

ஒரு விஷயத்தை நினைவு கொள்ளுங்கள்... யாருமே பயமற்றவர் என்று உரிமை கோர முடியாது. பயத்தை பயமில்லாமல் கையாளுவதைக் கற்றுக் கொள்ள முடியும், அவ்வளவே. யாராவது பயமற்றவர் என்று பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தால், அவர்கள் பயத்தையும் அதற்கு மனிதனின் பதிலையும் பற்றி ஆழமாக ஆராய்ந்து பார்க்கவில்லை என்பதில் தெளிவாக இருங்கள். அவர்கள் மனித ஆற்றலை மீறிய சக்தி படைத்தவர்கள் என்றும், நீங்கள் தகுதி குறைவானவர்கள் என்றும் எண்ண ஆரம்பித்து விடாதீர்கள்.

ஸ்வாமிஜி, நீங்கள் என்னுடைய சிலந்திகள் பற்றிய பயத்தை வெல்லுமாறு செய்ததை நினைவு கூர்கிறேன்!

(பரமஹம்ஸர் சிரிக்கிறார்!) ஆமாம் ஆமாம், எப்படி யென்று அவர்களுக்கு சொல்லும்மா!

(ஒரு சிறுமி சொல்கிறாள்) ஒரு நாள் நாம் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு சிலந்தியைப் பார்த்து நான் துள்ளிக் குதித்தேன். அதற்காக நீங்கள் என்னைப் பார்த்து சிரித்தீர்கள். நான் ஒவ்வொரு முறை சிலந்தியைப் பார்க்கும் பொழுதும், அதன் மீது என்னைத் தியானம் செய்யச் சொன்னீர்கள். நான் அதை கவனத்துடன் பின்பற்றினேன். ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும் பொழுதும், விழிப்புணர்வுடன், மனதை ஒருமுகப்படுத்தி அதைப் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக, அதைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும் என்ற ஆச்சரியம் எனக்கு வர ஆரம்பித்தது!

சரி, நீங்கள் எல்லாரும் அதைக் கேட்டீர்களா? நமது பயங்களுக்குள் விழிப்புணர்வைக் கொண்டு வருகிறீர்களா என்பதுதான் கேள்வி; பிறகு, உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது எது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

பயம் என்று அழைப்பது, ஏதோ ஒரு நிகழ்விற்கோ அல்லது ஒரு எண்ணத்திற்கோ, உங்களுடைய பதில் அல்லது எதிர்ச்செயல் என்பதைத் தவிர வேறல்ல என்பதை, நீங்கள் விழிப்புடன் செயல்படும் போது புரிந்து கொள்வீர்கள்.

(இன்னொரு சிறுமி) ஸ்வாமிஜி, இமயமலையில், கங்கையில் நாங்கள் அனைவரும் உங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்த பொழுது, ஒரு தண்ணீர்ப் பாம்பு நாம் நின்றிருந்த இடத்திற்கருகில் வந்தது ஞாபகத்திற்கு வருகிறது. நான் கூச்சலிட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த பொழுது, அது அவளை உரசிக் கொண்டு சென்ற போதும் அனுபமா அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் கணத்தில், அதுவும் உங்கள் முன்னிலையிலேயே-விழிப்புணர்வைக் கொண்டுவராததற்காக நீங்கள் கூட பிறகு என்னைக் கடிந்து கொண்டீர்கள்.

ஆமாம்! இப்பொழுது, நான் விழிப்புணர்வு என்று சொல்லும் பொழுது என்ன பொருளில் சொல்கிறேன் என்பதை உங்களால் இணைத்துப் பார்க்க முடிகிறது. இந்த பயங்களிலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி, உங்களுடைய கற்பனா சக்தியின் மூலம், இவற்றை மனதில் கற்பனை செய்து, நிஜத்தைப் போலவே அவற்றை அனுபவிப்பதுதான்!

நீங்கள் தனியாக அமர்ந்து கூட, உங்களுடைய பயங்கள் உங்களுக்கு நிகழ்வதாகக் கற்பனை செய்யலாம். உங்களுடைய கற்பனையில், அவற்றை ஆழமான விழிப்புணர்வுடனும் அமைதி யுடனும் எதிர்த்து நில்லுங்கள். இந்தக் கற்பனையான செயல் முறையில் நீங்கள் துன்பப்படுவீர்களானால், பரவாயில்லை. அதை அடக்கி வைக்கவோ அல்லது தண்டிக்கவோ செய்யா தீர்்கள். உங்கள் உடல் பயத்தில் நடுங்கினால், நடுங்கட்டும். வெறுமனே உங்களுடைய அறிவுடன் ஒத்துழைத்து, நீங்கள் அதனுடன் செல்ல அனுமதியுங்கள். எதுவுமே, முழுமையாக வாழ்ந்து விடும் போது, உங்கள் மீது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்களுடைய எல்லா பயங்களுமே, வெறுமனே உங்களுடைய பயங்களைப் பற்றிய பயம்தான், அவ்வளவே!

| மேலும் மேலும் விழிப்புணர்வுடன் செயல்படும்பொழுது, உங்களால் பயத்திற்கு பயமில்லாமல் பதில் கொடுக்க முடியும். |

ஒரு சின்ன கதை...

ஒரு நாள் ஒரு சீடன் ஆற்றில் சிக்கிக் கொண்டு விட்டான். அவன் உயிரை இழந்து விடுவது பற்றி பயந்து, மூழ்குவதிலிருந்து காப்பாற்றுமாறு, அவனது குருவை நோக்கிக் கத்தினான். குரு சொன்னார், "எழுந்து நில்!". சீடன் அலறினான், "எவ்வாறு என்னால் முடியும்? நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்". குரு சொன்னார், "நீயே உனக்கு உதவியாயிருப்பது பற்றி நான் உனக்குக் கற்றுத் தரவில்லை? இப்பொழுது எழுந்து நில்!". சீடன் சொன்னான், "குருவே, நான் சாகும் தறுவாயில் இருக்கும் பொழுது நீங்கள் போதனை செய்து கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றக் கூடாது!". குரு விடாப்பிடியாகச் சொன்னார், "நான் சொல்கிறேன். எழுந்து நில்!". குருவின் விடாப் பிடியான உறுதியினால் சீடன் நிலைகுலைந்து போனான். அவன் வெறுமனே எழுந்து நின்றான். தண்ணீர் அவன் முழங்கால் மட்டுமே இருந்தது.

(சிரிப்பு!)

நான் சொல்கிறேன்... உங்களுடைய எல்லா பயங்களுமே, உங்களுடைய பயங்களைப் பற்றிய பயத்தைத் தவிர வேறல்ல. உங்களுடைய பயங்களை எல்லாம் உதறித் தள்ளி விட்டு, அறிவு மேலே வர அனுமதித்தீர் களானால், உங்களுடைய பயங்களெல்லாம் வெறும் இல்லாத பொருள்களின் நிழல்களே என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

மரணத்தைப் பற்றிய பயத்தை நீங்கள் ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், மக்கள் இறப்பதற்கு அச்சப்படுவதற்குக் காரணம், அவர்கள் விழிப்பற்ற நிலையில், தாங்கள் இப்பொழுது இருப்பதை விட வேறெங்கோ ஒரு உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். அவர்கள்

உங்கள் உடல் இருக்கும் இடத்தில், உங்கள் மனம் இல்லையென்று நிச்சயமாகச் சொல்ல முடியும். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட ஒருபோதும் முழுமையாக வாழ்ந்ததில்லை.

வாழ்க்கையில் அடைய வேண்டிய உண்மையான இடத்தை இன்னும் அடையவில்லை என்று எண்ணுவதால், இறப் பதற்குத் தயாராக இல்லை.

சிலர் தங்கள் மீது மற்றவர்களின் கண் பட்டுவிட்டதால் அவர்களால் முன்னேற முடியவில்லை என்று கருதுகிறார்கள்! உண்மை என்னவென்றால்... உங்கள் கண்ணே இன்னும் சரியாக உங்கள் மீது படவில்லை. அதனால்தான், உங்களுடைய கடைசி நாட்களில் கூட, உங்கள் மரணத்தைத் தாமதப் படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.

நீங்கள் சரியான முறையில் உங்கள் ஆசைகளையும், பயங்களையும், மற்ற உணர்ச்சிகளையும் ஆராய்ந்து புரிந்து கொண்டீர்களானால், எதற்காகவும், யார் மீதும் பழி போட மாட்டீர்கள்.

இது போன்ற சுருண்டு கொண்டிருக்கும் பயங்களற்று, தங்கள் வாழ்க்கையை வாழும் மக்களால், தங்கள் இறப்பையும் வாழ முடியும். நான் முன்பே சொன்னது போல், சரியாக எத்தனை மணிக்கு, தாங்கள் இறப்போம் என்று தங்கள் சீடர்களிடம் சொல்லி அதே போல இறந்த, வாழும் குருமார்களைப் பற்றிய கதைகள் நிறைய இருக்கின்றன.

குருமார்கள் உயிருடன் இருந்த பொழுது, அவர்களது போதனைகளில் இருந்து கற்றுக் கொள்ளாததை, பல சீடர்கள் தங்கள் குருமார்களின் இறப்பிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இறப்பை வாழ்ந்தார்கள் என்று சொல்லும் பொழுது, நாம் சொல்வது என்னவென்றால் அவர்களால் இறப்பை அறிவிக்க முடிந்தது என்பதையும் அவர்கள் விழிப்புணர்வுடன் இறந்தார்கள் என்பதையும்தான். அவர்கள்

வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள்.

விஷயத்தில், அவர்களது இறப்பு என்பது உண்மையில் 'உடலை விடுவது', அவ்வளவுதான்.

நாமனைவரும் மிகுந்த துன்பத்துடன், விழிப்பற்ற நிலையில் உடலை விடுகிறோம். நிறைவேறாத ஆசைகளின் இழுபறி நம்மை ஒரு பக்கம் சித்திரவதை செய்கின்றன; உடம்பு போதுமான அளவு கஷ்டத்தை அனுபவித்து விட்டது என்று இன்னொரு பக்கம் சித்திரவதை செய்கிறது. மனமும் உடலும் பொருந்தாத தன்மை, நாம் இருக்கும் பொழுதும், இறக்கும் பொழுதும் நம்மைத் தொந்தரவு செய்கிறது. உயிருடன் இருக்கும் பொழுது, நாம் நமது உடலுக்குள், நமது எல்லைக்குள் இருப்போமானால், உடலை விடும் பொழுதும் அமைதியான முறையிலேயே விடுவோம். பிரச்சினை என்னவென்றால், நாம் இருக்கும்பொழுது, எப்பொழுதும் உடலுக்கு வெளியிலேயே இருக்கிறோம்; ஒருபோதும் உள்ளே இருப்பதில்லை.

இதைக உங்களுக்கு விளக்குகிறேன்....

உங்கள் வாழ்க்கை முறையை வெறுமனே ஆழமாகப் பாருங்கள். காலையில் பல் தேய்க்கும் பொழுது என்ன செய்கிறீர்கள்? வேலைக்குச் செல்வதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். வேலையில் இருக்கும் பொழுது, வீட்டிற்குச் செல்வதற்கு பேருந்தைப் பிடிப்பதைப் பற்றி நினைக்கிறீர்கள். வீட்டிலிருக்கும் பொழுது, அடுத்த நாள் வேலையைப் பற்றி நினைக்கிறீர்கள்! விடுமுறையில் இருக்கும் பொழுது, அலுவலகத்தைப் பற்றி நினைக்கிறீர்கள், அலுவலகத்தில் இருக்கும் பொழுது விடுமுறையில் செல்வதைப் பற்றி நினைக்கிறீர்கள்.

உங்கள் உடல் இருக்கும் இடத்தில், உங்கள் மனம் இல்லையென்று நிச்சயமாகச் சொல்ல முடியும்! நீங்கள் உங்கள்

'நாளை' என்பது 'இன்று' என்ற ரூபத்திலேயே வரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது 'இன்றாக' வரும்பொழுது, நீங்கள் மீண்டும் நாளைக்கு என்று சொல்லி விடுகிறீர்கள். வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட ஒரு போதும் முழுமையாக வாழ்ந்ததில்லை.

நீங்கள் எப்பொழுதுமே கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் வாழ்ந்திருக்கிறீர்கள். இதைத்தான் ‘எல்லைக்குள் வாழ்வதில்லை’ என்கிறோம். அதனால்தான் இறக்கும் தருவாயில், நீங்கள் வேறெதிலோ ஆழ்ந்து, நிறைவு பெறாமலும், செல்வதற்கு விருப்பமில்லாமலும் இருக்கிறீர்கள். அதனால்தான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறீர்கள்.

நீங்கள் விழிப்புணர்வுடன் இறப்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்று கேட்கக் கூடும். நான் சொல்கிறேன்.... மரணத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே, உங்களால் வாழ்க்கையைப் பற்றி சரியான புரிந்து கொள்ளுதலுடன் வாழ முடியும். இல்லாவிடில், நீங்கள் வாழ்க்கையை சரியான முறையில் வாழ மாட்டீர்கள்.

வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் சந்தோஷத்தை தள்ளிப் போடுகிறீர்கள், உங்கள் வேலை யைத் தள்ளிப் போடுகிறீர்கள்; எல்லாவற்றையுமே நாளைக்குத் தள்ளிப் போட்டு விடுகிறீர்கள். ‘நாளை’ என்பதும் ‘இன்று’ என்ற ரூபத்திலேயே வரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! அது ‘இன்றாக’ வரும் பொழுது, நீங்கள் மீண்டும் ‘நாளைக்கு’ என்று சொல்லி விடுகிறீர்கள்! அது நீங்களே உங்களுடன் விளையாடிக் கொள்ளும் ஒரு விளையாட்டு.

இறுதியில், மரணம் வரும் பொழுது, நீங்கள் தயாராக இல்லை! நீங்கள் நிறைய செய்ய வேண்டியது இருப்பதாக நினைக்கிறீர்கள். வாழ்க்கையே உங்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இவ்வளவு காலமாக,

பெரும்பாலும், தள்ளிப்போடுவதை
உங்களை வறுமைக்கு எடுத்துச் செல்கிறது.
வறுமை என்பது உங்களின் சொந்தத் தேர்வு.

நீங்கள்தான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். இறுதியில் எல்லாவற்றிற்கும் பழியை வாழ்க்கையின் மீது போடுகிறீர்கள். அதனால்தான் நீங்கள் வாழ்வதற்கு மரணத்தைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் வேண்டும். பிறகு எந்தவிதமான ஏமாற்றிக் கொள்ளுதலும் இல்லாமல், காலம் வரும் பொழுது நீங்கள் இறப்பதற்குத் தயாராகவே இருப்பீர்கள்.

இந்த தள்ளிப் போடும் மனப்பான்மையால் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருக்கிறோம். மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, உங்களால் எப்படி இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடிகிறது?”. என்னுடைய வருடாந்திர காலண்டரைப் பார்த்து அவர்கள் வியப்பில் ஆழ்கிறார்கள்! வருடம் முழுவதும், உலகம் முழுவதும், பல்வேறு விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். நான் சொல்கிறேன். “அது மிகவும் எளிமையானது. நான் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்கிறேன். உங்களைப் போலத்தள்ளிப் போடுவதில்லை”.

உங்களுடைய, இந்த எதையும் தள்ளிப் போடும் போக்கு, உங்களை வெறுமனே ஒரு இழப்பவரைப் போல எண்ண வைக்கிறது. ஆனால் இழப்பவரைப் போல உணர்ந்தாலும், நீங்கள் தள்ளிப் போடாமல் இருக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

நமது தியான நிகழ்ச்சிகளில், நாம் மக்களை வழிகாட்டுதலுடன் கூடிய தியானத்திற்குள் எடுத்துச் சென்று அதில் அவர்கள் இன்னும் 24 மணி நேரத்தில் இறந்து விடுவார்கள் என்றும், அதற்குள் அவர்கள் முடிக்க விரும்பும் எல்லா விஷயங்களையும் முடித்து விட வேண்டும் என்பதையும் கற்பனைக் காட்சியாக மனதில் உருவகப்படுத்திப் பார்க்குமாறு சொல்லப்படுகிறது. அது ஒரு

இந்தத் தள்ளிப்போடும் மனப்பான்மையால் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருக்கிறோம்.

அற்புதமான தியானமுறை. அவர்கள், அவர்களுடைய இறப்பையும், இறுதிச் சடங்கையும் கூட கற்பனைக் காட்சியாக உருவகப்படுத்திப் பார்க்குமாறு செய்யப்படுகிறார்கள்.

ஒரு முறை இந்த தியானத்திற்குப் பிறகு, ஒரு சிறுமி அவளது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டாள். அவள் சொன்னாள், “ஸ்வாமிஜி, நான் ஒரு கடையில் ஒரு சுவரொட்டியைப் பார்த்தேன். அதில் 'நீங்கள் திட்டமிடும் பொழுது, வருங்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு உறுதியாகத் திட்டமிடுங்கள். அதைச் செயல்படுத்தும் பொழுது, அடுத்த நிமிடம் நீங்கள் இறந்து போய்விடப் போவதைப் போல் செயல்படுத்துங்கள்’ - என்று எழுதியிருந்தது. அதன் உண்மையான பொருளை, இந்தத் தியானம் செய்த பிறகே புரிந்து கொண்டேன்”. நான் “அற்புதம்” என்று சொன்னேன்!

பாருங்கள்... திட்டமிடும் பொழுது, வருங்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டால், பின்னர் சில வருடங் களுக்காவது நிறைய மாற்றியமைத்துக் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் செயல்படுத்தும் பொழுது, பிரதான திட்டத்திலிருந்து எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உபவேலையை யும், ஒரு சின்ன குறைபாடு கூட இல்லாமல் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும்.

பிறகு, ஒருவேளை நீங்கள் இறக்க நேர்ந்தால் கூட, முடிந்த வரையில், எல்லாமே முழுமையாக இருக்கும்; மக்களுக்கு சூழ்நிலைக்கேற்பவாறு, பின் தொடரவோ அல்லது மாற்றவோ, பிரதான திட்டம் அப்படியே இன்னமும் ஒரு குறிப்பாக இருக்கும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு உப வேலையையும் தாமதமின்றி செய்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

நீங்கள் தினமும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து, இன்றுதான் உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்வீர்களானால், தள்ளிப் போடுவதை நிறுத்தி விடுவீர்கள்.

பெரும்பாலும், தள்ளிப் போடுவதே உங்களை வறுமைக்கு எடுத்துச் செல்கிறது. வறுமை என்பது உங்களின் சொந்தத் தேர்வு. நீங்கள் முடிவுகளை தள்ளிப் போடும் பொழுது, வறுமையை நோக்கி அடியெடுத்து வைக்கிறீர்கள். ஆனால் இதை நீங்கள் அறியவில்லை. நீங்கள் கடவுளால் சரியாக நடத்தப்படவில்லையென்றும், கனவுகளை நிஜமாக்க முடியாமைக்குக் காரணம், உங்கள் வாழ்க்கை மிகவும் குறுகியதாக இருப்பதே என்றும் நினைக்கிறீர்கள். உங்களுடைய எல்லாச் சக்தியையும் நீங்கள் தெளிவுடன் சரியான வழியில் உபயோகப் படுத்தியிருந்தால், இதுபோன்று எண்ண மாட்டீர்கள்; எப்பொழுதும் இறக்கத் தயாராக இருப்பீர்கள்.

நீங்கள் தினமும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து இன்றுதான் உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்வீர்களானால், தள்ளிப் போடுவதை நிறுத்தி விடுவீர்கள். இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்; ஒரே ஒரு மாதம் போதுமானது, பிறகு தானாகவே, உங்கள் வாழ்க்கையை தள்ளிப் போடாமல் வாழ ஆரம்பித்துவிடுவீர்கள். அதுமட்டுமல்ல. உங்களுடைய கௌரவத்தை இழந்து விடும் பயம், தர்ம சங்கடம், பெருமை, எதிர்பார்ப்புகள் ஆகியவையும் கரைந்து போய்விடும். ஏனெனில் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு விடுவீர்கள்.

ஒரு விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியோ அல்லது புற்று நோயிலிருந்து குணமடைந்தோ அல்லது இது போன்ற வேறு ஏதாவது வகையில் மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டுத் திரும்பியவர்களால் அதிக அச்சமின்றி வாழ முடிகிறது; ஏனெனில் இழப்பதற்கு எதுவுமில்லை என்று அவர்கள்

ஒழுக்கம் உங்களை முழுவதும் மந்தமாகவும், நடைப்பிணமாகவும் ஆக்கிவிடும்.

தெரிந்துகொள்கிறார்கள்! அவர்கள் வாழ்க்கையை அதிகத் தெளிவுடனும், அதிக அறிவுக் கூர்மையுடனும் வாழ்கிறார்கள்.

நீங்கள் உங்கள் எல்லாக் கல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம், நீங்கள் சரியான விஷயத்தை சரியான நேரத்தில் செய்து விட்டுச் சென்று கொண்டேமிருக்க வேண்டியதுதான் என்பதே. ஆனால் எப்படியோ, இதுவே நாம் கடைசியாகக் கற்றுக் கொள்ளும் முழுமையான பாடமாக இருக்கிறது! மற்ற பாடங்களையெல்லாம் படித்து முடித்த பிறகே இந்தப் பாடத்தைக் கற்கிறோம்.

தாமதப்படுத்துதல் என்பது நீங்களே கொண்டு வருவது. ஆனால் மற்ற பயங்கள் சமூகத்தினால் உங்களுக்குள் புகுத்தப்படுவது. சமூகம் உங்களை, உங்களையே பார்த்தும், மற்றவர்களைப் பார்த்தும், கடவுளைப் பார்த்தும் அச்சப்பட வைக்கிறது. ஒழுக்கம், நாமரூபங்கள், கெளரவம் போன்ற எளிய விஷயங்களைக் கொண்டு நீங்களே உங்களைக் கண்டு அச்சப்படுமாறு செய்கிறது.

ஒழுக்கம் என்ற பெயரில், உங்களைத் தன்னம்பிக்கை இழக்கச் செய்து விடுகிறது; அதனால்தான் ஒழுக்கம் என்று வரும் பொழுது உங்களையே உங்களால் நம்ப முடியவில்லை. நீங்கள் பயத்தின் காரணமாக ஒழுக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தால், உங்கள் உள்-அறிவுக் கூர்மை உங்களை வழி நடத்தும் வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது. மக்கள் என்னிடம், நான் பெண்களுடன் பயணம் செய்யும் பொழுது கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, ஒரு ஆன்மீகத் தலைவராய் இருந்து கொண்டு, எவ்வாறு உங்களால் பெண்களுடன் பயணம் செய்ய முடிகிறது? பிறகு மக்கள் உங்களைப் பற்றிப் பேச மாட்டார்களா?".

வெறுமனே உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும், அனைத்திடமும் அளவற்ற அன்புடன் வாழுங்கள். முதலில் அவர்கள் ஒரு ஞானமடைந்த குருவிடம் பேசுகிறோம் என்பதையே மறந்து விடுகிறார்கள். அவர்கள் யாரிடம் பேசுகிறோம் என்பதை முழுவதுமாக அறிந்து கொண்டார்களானால், இந்தக் கேள்வியே எழாது. எப்படியோ, அவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பதிலளிக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன், "எனக்கு என்னிடம் நம்பிக்கை இருக்கிறது, அந்தப் பெண்களுக்கும் என்னிடம் நம்பிக்கை இருக்கிறது, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?!". நான் இதைச் சொல்லும்பொழுது அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

நமது வாழ்வில், ஒழுக்கம் என்பது அறிவுக் குறைவிற்கு ஒரு கீழான மாற்று என்பதைத் தவிர வேறல்ல. உங்கள் சொந்த அறிவிலிருந்து செயல்படும் பொழுது, உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால் விதிமுறைகளில் இருந்தும் கட்டுப்பாடுகளில் இருந்தும் செயல்படும் போது, உங்களால் ஒருபோதும் உங்களை நம்ப முடியாது. ஏனெனில், முதலில் நீங்கள் நீங்களாக இல்லை! நீங்கள் உங்களுக்குள் மையம் கொள்ளவில்லை; விதிமுறைகளில் மையம் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் அறிவுபூர்வமாக வாழ்ந்தீர்களானால், இது போன்ற பயங்கள் ஒருபோதும் உங்களைப் பற்றாது. ஒழுக்கத்தைப் போதிக்கும் மக்கள் ஆழ்ந்த பயத்திலிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அதைப் போதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் மீதே நம்பிக்கையின்மையாலோ அல்லது அவர்கள் ஒழுக்கவாதிகளாக அறியப்படுவது பயத்தினாலோ இருப்பதால் அச்சப்படுகிறார்கள். ஒழுக்கவாதிகள் அவர்களது ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு பற்றிய கருத்துக்களினால் மன நோயாளிகளாகி விடக் கூடும்.

தன்னம்பிக்கையற்றவர்கள்தான் ஒழுக்க நியதிகளை வகுத்து, அவற்றைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை....

சாதாரணமாக தெருக்களில் நடக்கும் பொழுதே கவனமாக அடிகளை அளந்து வைக்கும் ஒழுக்கவாதி ஒருவர் இருந்தார். ஒரு நாள் திடீரென்று கனமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. ஒழுக்கவாதியும் கூட்டத்துடன் சேர்ந்து ஓடத் தொடங்கினார். சிறிது தூரம் ஓடிய பிறகே, அவர் அவரது கவனமற்ற போக்கை உணர்ந்தார். அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார், "நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்! ஓடுவது ஒரு கௌரவமற்ற செயல். ஒரு மேன்மையான மனிதன், ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை வருத்தத்துடன் திருத்திக் கொள்ள வேண்டும்". அதனால் அவர் மழையில் திரும்பவும் ஓட ஆரம்பித்த இடத்திற்கே சென்று அங்கிருந்து மீண்டும் அடிகளை அளந்து நடக்க ஆரம்பித்தார்.

(சிரிப்பு!)

ஒழுக்கம் உங்களை முழுவதும் மந்தமாகவும், நடைப்பிணமாகவும் ஆக்கிவிடும்!

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... நான் இதைச் சொல்லும் பொழுது, இது ஒரு சுதந்திரமான உலகம், நீங்கள் விரும்பிய எதையும் செய்யலாம் என்று சொல்லவில்லை. நீங்கள் உங்கள் சொந்த அறிவுக் கூர்மையை வளர்த்துக் கொண்டு வாழுங்கள்; அதனால் விதிமுறைகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவற்றையும், உணர்ந்தவற்றையும் உறுதிப்படுத்துவதாக மட்டுமே இருக்கும். அதனால் உங்கள் பயங்களை விட்டு விட்டு, உங்கள் உள் அறிவையும், உள் குரலையும், உள் குருவையும் தேட முயற்சி செய்யுங்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு இளம் சந்யாசி ஒரு தெருவில் ஒரு அழகான விலைமாதூவின் வீட்டிற்கு எதிரே வசித்து வந்தார். சந்யாசி

| அறிவுக் கூர்மையுடையவர்கள், வெறுமனே தன்னிச்சையாகச் செயல்பட்டு, சரியான விஷயங்களைச் செய்கிறார்கள். | | --- |

எப்பொழுதும் தியானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். இன்னொரு புறம், விலைமாதுவோ அவளது வழியில் பணம் சம்பாதிப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அவளது வீட்டிற்கு பல ஆண்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சந்நியாசியும் அவரால் முடிந்த அளவிற்கு தியானத்தில் மனதை ஒருமுகப்படுத்த முனைந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது கவனமோ அந்த இளம் பெண் மீதே அதிகமாக இருந்தது. அவள் நடத்தி வந்த ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்காக அவளை எப்பொழுதும் சபித்துக் கொண்டிருந்தார். இன்னொரு புறம் அந்த விலை மாதுவோ, தெருவின் எதிர்ப்புறத்தில் இந்த சந்யாசி வசிப்பதைக் கூட அறியவில்லை. அவளது வாழ்க்கை முறை ஆண்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதாக இருந்த போதிலும், அந்த விலை மாதுவோ, கிருஷ்ணன் மீது அன்பிலாழ்ந்து, அவளால் முடிந்த அளவு நேரத்தை அவனை வழிபடுவதிலும், அவன் உருவ விக்ரகத்துடன் விளையாடுவதிலும் கழித்து வந்தாள்.

அந்த சந்யாசியும், விலைமாதுவும் ஒரே நாளில் இறந்து, மரணத்தின் தேவனான, எமனின் வாயிலை வந்து அடைந்தனர். அவர்களுடைய பதிவேடுகள் ஆராயப்பட்டு, விலைமாது சொர்க்கத்திற்கும், சந்யாசி நரகத்திற்கும் அனுப்பப்பட்டனர். சந்யாசியோ, எமனின் முழு நீதியிலும் இருந்த நியாயமற்ற தன்மையைப் பற்றிய தனது ஆழமான மன உணர்வுகளை வெளிப்படுத்தினார். எமன் அமைதியாக சந்யாசியிடம் விளக்கினார். "உன் வாழ்க்கை முழுவதும், தியானம் செய்வதாக பாசாங்கு செய்து கொண்டு உன்னிடம் அந்த விலைமாதுவின் மீது இச்சைக்கு இடம் கொடுத்திருந்தாய். இன்னொரு புறத்தில் அவளோ, என்ன செய்து கொண்டிருந்தாலும், கடவுளின் உண்மையான தன்மையில் முழுமையாக மன ஒருமைப்பட்டிருந்தாள்''.

| ஒழுக்கத்தை போலவே, கெளரவமும் பயத்தைக் கொடுக்கிறது. கெளரவம், புகழ், சமூக அந்தஸ்து இவையனைத்தும் பயத்தைக் கொடுக்கிறது. |

ஒழுக்கவாதிகள் மேலோட்டமான, பயத்துடன் கூடிய, ஆழமற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் முழுமை யாக வாழ்வதில்லை. அவர்கள் எப்பொழுதும் ஒழுக்கம் தவறி விடும் அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய உண்மையான எண்ணங்கள் ஒழுக்கம் என்ற போர்வையில் நன்றாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. உள் அறிவுக் கூர்மையில் இருந்து செயல்படுவதற்குப் பதிலாக வெறுமனே ஒழுக்க நியதிகளின்படி செயல்படுவதால் வரும் பிரச்சினை இது.

உங்கள் அறிவுக்கூர்மையில் இருந்து செயல்படும் பொழுது, உங்களிடம் ஒரு விதமான தூய்மை இருக்கும். வெறுமனே வெளி விளிம்பில் இருந்தும், ஒழுக்கவிதிகளின் படியும் செயல்படும் பொழுது, அதில் அழகோ அல்லது தூய்மையோ இருக்காது.

அச்சப்படுபவர்களும், தங்களைப் பற்றியே நம்பிக்கை இல்லாதவர்களும்தான் ஒழுக்க நியதிகளை வகுத்து, அவற்றைப் பின்பற்றுகிறார்கள். அறிவுக் கூர்மையுடைய வர்கள், வெறுமனே தன்னிச்சையாக செயல்பட்டு, ஆழமாக மையம் கொண்டும், அச்சமின்றியும், சரியான விஷயங்களைச் செய்கிறார்கள்.

ஒழுக்கத்தைப் போலவே, கௌரவமும் பயத்தைக் கொடுக்கிறது; கௌரவம், பெயர் மற்றும் புகழ், சமூக அந்தஸ்து - இவையனைத்தும் பயத்தைக் கொடுக்கிறது. இந்த அச்சங்கள் அனைத்தும் உங்கள் அஹங்காரத்தின் அச்சத்தைத் தவிர வேறல்ல. எந்த கௌரவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறீர்கள்? வெறுமனே உள் நிறைவுடனும், கண்ணியத்துடனும் வாழுங்கள்; அதுவே போதுமானது. இந்த பூமியில் தங்கள் கெளரவத்தைக் கட்டிக் காப்பவர்களே மிகப் பெரிய கபட வேஷதாரிகள்.

வெறுமனே பயத்தைப் பார்த்து, நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். பயம் தானாகவே கரைந்து போய்விடும். அவர்கள் எப்பொழுதும் அச்சத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய பெயரளவிலான கௌரவம் அவர்களை ரொம்பவே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஒரு மனிதன் ஒரு நாள் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடியாமல் அவன் வெகு நேரமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். கையிலிருந்த தூண்டிலுடன் அவன் தூங்கி விழுந்து கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மீன், தூண்டிலில் இருந்த இரையைப் பிடித்து பலமாக இழுத்தது. அவன் விழித்துக் கொள்வதற்குள் தண்ணீருக்குள் தலைகுப்புற விழுந்தான். இதை தூரத்திலிருந்து ஒரு சிறுவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் தந்தையிடம் கேட்டான். "அப்பா, அவன் மீனைப் பிடிக்கிறானா, இல்லை, மீன் அவனைப் பிடிக்கிறதா?".

பாருங்கள், உங்களுக்கு கௌரவம் வாழ்க்கையை விடப் பெரிதாகி விட்டால், அது உங்களை விழுங்கத் தொடங்குகிறது. இனிமேல் நீங்கள் அதைத் தேட வேண்டியதில்லை; அது வெறுமனே உங்களை விழுங்கி விடுகிறது, அவ்வளவே.

மேலும், உங்கள் கௌரவத்தை இழப்பதற்கு ஏன் பயப்படுகிறீர்கள்?. ஏனெனில் உங்கள் கௌரவம் உங்களுக்கு நீங்கள் ஏதோ அசாதாரணமானவர் என்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. உங்கள் கௌரவம் உங்களுக்கு சமூகத்தில் ஒரு திடமான அடையாளத்தைக் கொடுக்கிறது. பணத்தையும் கௌரவத்தையும் உடையவர்கள் எல்லாவிதமான அபத்தமான மற்றும் ஒழுக்கக்கேடான விஷயங்களைச் செய்து விட்டு தப்பி விடுகிறார்கள். அவர்களுக்கிருக்கும் அதிகாரத்தினாலும் கௌரவத்தினாலும் மக்கள் அவர்கள் முகத்திற்கெதிரே வாழ்த்துக் கூறி விட்டுப் பின்னால் அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

உண்மையில் இருள் மிகவும் அழகாகவே இருக்கிறது. அது உங்கள் தாயின் கருவறை போல் இருக்கிறது.

இது போன்ற கௌரவத்தைத்தான் அவர்கள் மிகவும் கவனமாக பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். நான் ஒரு விஷயம் சொல்கிறேன்... நீங்கள் இது போன்றிருந்தால் பிரபஞ்ச இருப்புத் தன்மை ஒருபோதும் உங்களைத் தேர்ந்தெடுக்காது. இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில், நீங்கள் விரும்புவது கிடைக்கலாம்; நீங்கள் வெற்றிகரமான மனிதராகக் காட்சியளிக்கலாம்; ஆனால் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்களில், நீங்கள் வறியவராகவே இருப்பீர்கள். பிரபஞ்ச இருப்புத்தன்மை, தேர்ந்தெடுப்பதற்குத் தன் சொந்த வழிமுறைகளை வைத்திருக்கிறது.

கௌரவம், பெயர், புகழ் மற்றும் அதிகாரம் எல்லாம் உங்களுடைய சொந்தக் கற்பனை என்பதைக் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள்தான் அவற்றிற்கு உயிர் கொடுக்கிறீர்கள்; நீங்களே உருவாக்கி விட்டு, பிறகு அவற்றை இழந்து விடுவோமோ என்ற பயத்தையும் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

வெறுமனே உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும், அனைத்திடமும் அளவற்ற அன்புடன் வாழுங்கள். உங்கள் வழியில் வரும் எவர்க்கும், எதற்கும் உங்கள் ஆழமான அன்பை உணருங்கள். நீங்கள் இவ்வாறு வாழ்ந்தால், கௌரவம் தானாகவே உங்களைத் தேடிவரும். மக்கள் உங்களை, உங்கள் பண்பிற்காக மதிப்பார்கள்; பணத்திற்காக அல்ல. இது போன்ற கௌரவத்தைப் பொறுத்த வரை, இழந்து விடும் அச்சமில்லை; அதை எப்பொழுதும் பாதுகாக்கும் அவசியமும் இல்லை; நீங்கள் வெறுமனே இதுபோன்ற அச்சங்களில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

மேலும் பொது மேடைகளில் பேசுவதற்கு பயம் போன்ற பயங்களும், ஒரு விதத்தில் கௌரவத்தை இழந்து விடும்

கடவுள் என்பது, பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு, இந்தப் பேரண்டத்திற்கு, நாம் கொடுத்திருக்கும் பெயரைத் தவிர வேறல்ல. பயம்தான். ஒரு கூட்டத்திற்கு முன்னால் பேச பயப்படுவதும், உண்மையில் அவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்வார்களோ என்ற பயத்தினால்தான். அவர்கள் உங்களைப் பற்றி ஏதேனும் சொன்னால் உங்கள் அஹங் காரத்திற்கு அவதியாகிவிடும் என்று அச்சப்படுகிறீர்கள். இது உங்கள் அஹங்காரத்தைப் பாதுகாக்கும் சாத்வீகமான ஒரு வழி. பயம் என்பதே அஹங்காரத்தின் ஒரு வெளிப்பாடுதான். அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மக்கள் உங்கள் பேச்சை அங்கீகரிக்காவிட்டால் என்ன? நீங்கள் ஒரு முழுமையான உணர்வுடன் பேசுங்கள்; அதுவே போதுமானது. வெறுமனே மகிழ்ச்சியுடன் இதைச் செய்யுங்கள்; மக்கள் அதைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாதீர்கள். மக்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் வந்துவிட்டால், உங்கள் அஹங்காரத்திற்கு அடைக்கலம் கொடுக் கிறீர்கள் என்று பொருள்.

அஹங்காரம் அவதிப்படும் அச்சமும் மக்கள் தியானத்திற்குள் செல்ல அஞ்சுவதற்குக் காரணமாகும். தியானத்திற்குள் செல்லும் பொழுது, எப்பொழுதுமே, உங்களை - பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும், உங்களைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்ச இருப்பு சக்திக்கும் - இழந்து விடும் அச்சம் இருக்கும். அதனால் நீங்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். தியானத்திற்குள் செல்லாமல் தடுக்கிறீர்கள். அதற்கு பதில், நான் உங்களை வேறு எதையேனும் ஜபித்துக் கொண்டிருக்கச் சொன்னால், நீங்கள் சந்தோஷமாக ஜபித்துக் கொண்டிருப்பீர்கள்; அச்சம் இருக்காது.

உங்கள் அஹங்காரம் கரைந்து விடும் அச்சத்தில் இருக்கிறது. அது கரையும் பொழுது, நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் முத்திரை குத்தப்பட்ட சீட்டுக்களும் கரைந்து போய் விடும். இது உங்கள்

இந்த பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு, இந்த பிரபஞ்சசக்திக்கு நேசிக்க மட்டும்தான் தெரியும். முதலில் சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். அஹங்காரத்திற்கு மிக அதிகம். நீங்கள் 'இல்லாதவர்¹' ஆகிவிடுவீர்கள்! அதனால் நீங்கள் எதிர்க்கிறீர்கள்; இப்பொழுது குறைந்த பட்சம் உங்களைப் பொறுத்த மட்டிலாவது 'யாரோ²'வாக இருக்கிறீர்கள். இந்த எதிர்ப்பு அஹங்காரத்தின் அச்சத்தில் இருந்துதான் வருகிறது. நீங்கள் மென்மையாகவும் எளிதில் ஊடுருவக் கூடிய தன்மையுடையவராகவும் மாற பயப்படுகிறீர்கள்.

மக்கள் சமூக வட்டங்களில் அதிகம் பேசுவதற்கு பயமும் ஒரு காரணம். நீங்கள் மக்களை வெறுமனே கவனித்தால், அவர்கள் தரப்பிலிருந்து எதையேனும் சொல்வதற்கு அவர்கள் மிகவும் நிர்பந்திக்கப்படுவதாக உணர்வதைக் காணலாம். மற்றவர்கள் இவர்களை ஏதுமறியாதவர்களாகக் கருதி விடக் கூடும் என்பதால், இவர்கள் ஏதேனும் பேச வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் அவர்கள் - அது பொருளற்றதாக இருந்தால் கூட - ஏதேனும் சொல்கிறார்கள். இவையனைத்தும், நீங்கள் உணர்வதற்குக் கடினமான, பயத்தின் நுட்பமான வெளிப்பாடுகள்.

ஸ்வாமிஜி, நீங்கள் தெரியாதவற்றைப் பற்றிய பயத்தைப் பற்றி பேசினீர்கள். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?

ஆம். நான் அங்குதான் வருகிறேன்.

பாருங்கள்..... நம்முடைய தெரியாதவற்றைப் பற்றிய பயம் என்பது, இருளைப் பற்றிய, பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய, கடவுள் பற்றிய, இறுதியில் நமது சொந்த மரணம் பற்றிய பயத்தைத் தவிர வேறல்ல.

உண்மையில், நாம் நமது அச்சங்களைப் பற்றி மிகவும் அச்சப்படுகிறோம்! அதுதான் உண்மை. நாம் நமது அச்சங்களை

Nobody¹ Somebody²

எதிர்கொள்ள அச்சப்படுவதால், அச்சங்கள் நம்மில் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொள்ள அனுமதித்து, மேலும் மேலும் அதிகமாக அச்சமடைய ஆரம்பிக்கிறோம்.

ஒரு சின்ன கதை....

ஒரு மனிதன் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான். பயணச் சீட்டு பரிசோதகர் அவனிடம் வந்து அவனது பயணச் சீட்டைக் கேட்டார். அவன் பைத்தியம் பிடித்தது போல், அவனது பணப்பையிலும், மூட்டை முடிச்சுகளிலும், அவனது கால்சட்டைப் பையிலும் இன்னும் எங்கெங்கோ அவனது பயணச் சீட்டைத் தேடினான். அவனைக் கவனித்துக் கொண்டிருந்த பரிசோதகர் அவனிடம் சொன்னார், "ஐயா, ஏன் உங்கள் மேல் சட்டைப் பையினுள் தேடக் கூடாது?". அவன் பதிலளித்தான். "தயவு செய்து என்னை இப்பொழுது அங்கே பார்க்கச் சொல்லாதீர்கள். அது அங்கே இருக்கும் என்பதுதான் என்னுடைய ஒரே நம்பிக்கை".

(சிரிப்பு)

நாம் பார்ப்பதற்கு மிகவும் பயப்படுகிறோம்! நமது பயங்களைப் பார்ப்பதற்கே மிகவும் பயப்படுகிறோம்; அதுதான் முழுப் பிரச்சினையும்; அதனால் ஆறுதல் பிரதேசங்களில் நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்.

பார்ப்பதற்கு ஒருபோதும் அஞ்சாதீர்கள். பார்க்க பயப்படுவதால், இன்னும் அதிக பயத்தையே உருவாக்குகிறீர்கள். ஏனெனில், அது உங்களுக்கு மேலும் தெரியாததாகி விடுகிறது.

வெறுமனே பயத்தைப் பார்த்து, நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். பயம் தானாகவே

| நீங்கள் விழிப்பான நிலையில் இருக்கும் கணங்கள் எல்லாம் உங்கள் வங்̄கி இருப்புப் போன்றது. நீங்கள் இறக்கும் தருணத்தில் இவைகளே மேலே வந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும். | |---|

கரைந்து போய்விடும். ஒவ்வொன்றாக, உங்கள் பயங்களை விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள ஆரம்பித்தீர்களானால், ஒரு காலகட்டத்தில், அறிவால் உங்கள் பயம் அகற்றப்பட்டு, உங்கள் பய உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும்.

எப்படியாயினும், தெரியாதவற்றைப் பற்றிய பயத்தைப் பற்றிப் பேசும் பொழுது, ஆவிகள் மற்றும் பேய்களைப் பற்றிய பயம் மிகவும் பொதுவானது. அவைகளைப் பற்றி பயப்பட வேண்டிய தேவையில்லை. பேய்களும், ஆவிகளும் நம்மை விட மிகவும் சக்தி குறைந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாமே அவைகளுக்கு அவற்றிடம் இருப்பதை விட மிக அதிகமான சக்தியைக் கொடுத்து, அவைகள் நமது பயங்களைக் கட்டுப்படுத்துமாறு செய்து விடுகிறோம். அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

ஆவிகள், பேய்கள் ஆகியவை பற்றிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். அதனால், எந்தப் பயனும் இல்லை. நீங்கள் உங்களுக்குள் நன்றாக மையம் கொண்டிருந்தாலே, உங்களைப் பற்றித் தெளிவுடன் இருந்தாலே போதுமானது. தானாகவே, எதுவும் உங்களைத் தொட முடியாது; உங்களிடமும் அவற்றைப் பற்றிய அச்சம் இருக்காது.

இருளைப் பற்றிய பயமும் தெரியாதவற்றைப் பற்றிய பயம்தான். இருளைப் பற்றிய பயம் இறப்பைப் பற்றிய பயத்தைத் தவிர வேறல்ல. எண்ணிப் பாருங்கள்.... உங்கள் வீட்டிலுள்ள, பகல் நேரத்தில் நடந்து செல்லும் அதே தோட்டத்தில், நீங்கள் இரவில் நடந்து செல்வீர்களா? மாட்டீர்கள்! நீங்கள் பயப்படுகிறீர்கள்! ஏன்? உங்களுக்கு அதன் எல்லைகள் நன்றாகவே தெரியும், இல்லையா?

நீங்கள் பூமியில் பெயரளவில் நல்ல செயல்களைச் செய்து விட்டு நுழைவதற்கு, கடவுள் ஒன்றும் சொர்க்கத்தில் விடுமுறை வாசஸ்தலம் நடத்திக் கொண்டிருக்கவில்லை.

பிறகு ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் தோட்டத்தைக் கண்டு பயப்படவில்லை; இருளைக் கண்டு பயப்படுகிறீர்கள்.

இருளில் உங்களுக்கு ஏதேனும் நேரிட்டு விடக் கூடும் என்று பயப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பற்றியே அச்சப்படுகிறீர்கள். நான் இதைத்தான் உங்களுடைய எல்லாப் பயங்களுமே ஏதோ ஒரு வகையில் இறுதியான இறப்பைப் பற்றிய பயத்துடனே தொடர்பு கொண்டிருக்கிறது என்று சொல்கிறேன். இருள் பற்றிய விஷயத்தில் அது தெளிவாகத் தெரிகிறது. மற்ற பயங்களின் விஷயத்தில் அது மிகவும் நுட்பமாக இருக்கிறது, அவ்வளவே.

உண்மையில், இருள் மிகவும் அழகாகவே இருக்கிறது! அது உங்கள் தாயின் கருவறை போல இருக்கிறது. உங்கள் தாயின் கருவறையில் இருந்த பொழுது, நீங்கள் முழு இருளில் இருந்தீர்கள். ஆனால், உலகத்திற்கு வந்து விட்ட பிறகு, இருளுடனான தொடர்பை இழந்து விட்டீர்கள்; அதை ஏதோ தெரியாத ஒன்றாக நினைத்து அச்சப்படுகிறீர்கள். தந்த்ராவைப் பின்பற்றுபவர்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் தீவிரமான சக்தியை உணர்வதற்கு, இருளின் மீது தியானம் செய்கிறார்கள்.

இருளைப் பற்றி அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. ஒரே ஒரு முறை, உங்களால் இருளை ஆழமான அன்புடன், அது உங்களுடைய தாயின் கருவறை என்ற ஆறுதலான உணர்வுடன், பார்க்க முடியுமானால், அதற்குப் பிறகு அதனிடம் நீங்கள் அச்சப்பட மாட்டீர்கள்.

ஒரு குழந்தை இருளைக் கண்டு பயந்தால், அதனிடம் ‘தைரியமாக இரு’ என்று சொல்லாதீர்கள்! அப்படிச் சொன்னால், அது அவனை இறுக்கமாக மட்டுமே ஆக்கும்; ஏனெனில் பயப்படக்கூடாது என்பதால் இருளைப் பற்றிய அவனது பயத்தை

| கடவுளால் உங்களை புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், பிறகு இந்த உலகம் முழுவதும் எந்தப் புரிந்து கொள்ளுதலும் இருக்க முடியாது. |

விட்டுவிட மாட்டான். அவன் இருளைக் கண்டு அச்சப்படுவதை அனுமதியுங்கள். அவன் கொஞ்சம் நடுங்கட்டும். குறைந்த பட்சம், அவன் பயத்தைப் பற்றி ஆராய்வதற்காவது அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அவன் இதைச் சில முறைகள் செய்யும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக இருளைப் பற்றிய அவனது பயம் விலகுகிறது.

கடவுளைப் பற்றிய பயத்திற்கு வந்தால், கடவுளும் நமக்குத் தெரியாததுதான்; எனவே கடவுளைக் கண்டு அஞ்சுகிறோம். புரிந்து கொள்ளுங்கள்.... கடவுள் என்பது பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கு, இந்தப் பேரண்டத்திற்கு, பிரபஞ்ச சக்திக்கு, இந்தப் பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கும் உயிராற்றலுக்கு நாம் கொடுத்திருக்கும் பெயரைத் தவிர வேறல்ல. இந்த பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு, இந்த பிரபஞ்ச சக்திக்கு நேசிக்க மட்டும் தான் தெரியும். இந்த அளவிற்கு நீங்கள் புரிந்து கொண்டாலே, தானாகவே உங்கள் பயங்கள் அனைத்தும் விலகிவிடும்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, நாம் கெட்ட செயல்கள் அல்லது பாவம் செய்யாமல், நல்ல செயல்கள் அல்லது புண்ணியம் செய்தால், நரகத்திற்குச் செல்லாமல் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்று மக்கள் சொல்கிறார்களே, அது உண்மையா?” என்று.

முதலில் சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் தலைக்கு மேலாக எங்கும் சொர்க்க - நரகங்கள் இல்லை. அவைகள் மனிதனுக்குள் பயத்தையும், பேராசையையும் புகுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள், அவ்வளவே. நரகம் அல்லது சொர்க்கம் என்பதை கடும் போராட்டமான மரணம்

உங்களுடைய தாய் தந்தையரைவிட கடவுள் உங்களை நன்றாக அறிவார். அவர் உங்களை இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், இதற்கு முன் பிறவியிலும் அறிவார். அதனால் அஞ்சுவதற்கு எதுவுமில்லை.

அல்லது மிகவும் அமைதியான விழிப்புணர்வான மரணம் என்று விளக்கலாம், அவ்வளவுதான்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தியானத்தில் செலவழித்த கணங்கள் புண்ணியம் அல்லது நற்செயல். நான் தியானம் என்று சொல்லும் பொழுது, உங்கள் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதைச் சொல்லவில்லை. நான் சொல்வது, நீங்கள் விழிப்புடன் நிகழ்காலத்தில் இருக்கும் கணங்களை; உங்கள் விழிப்புணர்வு உங்களிடம் இருக்கும் தருணத்தை; நீங்கள்ாதாரணமாக இருக்கும் கீழ்நிலை விழிப்பு நிலையிலிருந்து வெளியே வந்து நிகழ்காலத்தில் இருக்கும் கணங்களை; நீங்கள் பிரபஞ்ச இருப்பு சக்தியுடன் உணர்ந்து ஒத்திசைந்து இருக்கும் தருணங்களை.

இது போன்ற நிலையில் இல்லாத கணங்களே பாவம். நீங்கள் விழிப்பான நிலையில் இருக்கும் கணங்கள் எல்லாம் உங்கள் வங்கி இருப்புப் போன்றது. நீங்கள் இறக்கும் தருணத்தில், இந்த நிலைகளே மேலே வந்து உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

மக்கள், கோயில்களில் உள்ள தெய்வங்களுக்குப் பானை பானையாகப் பாலை ஊற்றினால் அவர்கள் கணக்கில் புண்ணியம் அதிகமாகி சொர்க்கத்தை அடையலாம் என்று நினைக்கின்றனர்! சாமி சொல்கிறேன்.... வெறுமனே பரம்பொருளுக்கு பாலைப் படைப்பதனால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஆனால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி நன்றியுணர்வு பொங்கிப் பெருகும் பொழுது, நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையாக நினைத்து வழிபடும் தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் செய்து அதனை வெளிப்படுத்தலாம். அது மிகவும் சரியானதுதான். ஆனால், தயவு

| புரிந்து கொள்ளுங்கள்... | | :-: | | உங்களுடைய இந்தக் கணம், உங்களுடைய | | எல்லா கடந்த காலத் தீர்மானங்களின் மொத்த தொகுப்பு. |

செய்து அதை புண்ணியம் அது இது என்று எதனுடனும் தொடர்பு படுத்தாதீர்கள்.

தூய மகிழ்ச்சியுடனும், நன்றியுணர்வுடனும், ஒரே ஒரு சொட்டுப் பாலைப் படைத்தாலும், உண்மையான தியானமாகிய அந்தக் கணம், நீங்கள் இறக்கும் தருணத்தில் உங்களுடன் வரும்.

இன்னொரு பக்கம், புண்ணியத்தை எங்கே தவற விட்டு விடுவோமோ என்ற வெறும் பயத்தில் படைக்கும் பானை பானையான பாலினால் எந்தப் பயனும் இல்லை. அதனால் தயவு செய்து உங்கள் விழிப்புணர்வை அதிகப் படுத்திக் கொண்டு விழிப்புடன் வாழுங்கள். ஒவ்வொரு கணத்தையும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், தியானமாக்கி விடுங்கள். அதுவே போதுமானது. நீங்கள் பாவங்களைப் பற்றிய பயமின்றி வாழலாம்.

நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்....

இந்தியாவில் தொலைதூரத்திலுள்ள ஒரு சிவன்கோயிலுக்குப் போயிருந்தேன். மூலவர் சந்நிதியின் வாயிலில் ஒரு குழல் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அதன்மேல் விஷ்ணுநாதன் B.Sc., என்று கறுப்பு வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்ததில் வெளிச்சமே தெரியவில்லை. சிவனுக்கு எப்படி விஷ்ணுநாதன் என்று பெயர் வந்தது என்று நான் ஆச்சரியத்திலிருந்தேன். பிறகுதான் அதனடியில் சின்ன எழுத்துக்களில், கைலாஸநாதர் என்ற சிவனின் சரியான பெயரை, எழுதியிருந்ததைப் பார்த்தேன். விஷ்ணுநாதன் என்பது அந்தக் குழல் விளக்கை நன்கொடையாக அளித்தவரின் பெயர்!

(சிரிப்பு)

| நமது விழிப்புணர்வற் ற செயல்களின் விளைவுகளை நாம் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்காத அல்லது சாதகமற்ற விளைவுகள் நிகழும்பொழுது அவற்றை நாம் விதி என்கிறோம். | |---|

நாம், நமது வாழ்வில் நற்செயல்களை சேகரிக்காமல் தவறவிட்டு விடுவோமோ என்று மிகவும் அஞ்சுகிறோம். அதனால் உலகாயதமாகி நமது நற்செயல்களுக்கான வங்கிக் கணக்கை உருவாக்க ஆரம்பிக்கிறோம். மேலும் அத்துடன் நிற்பதில்லை. மறந்து விடாமல் இருப்பதற்காக, நாம் செய்த எல்லா நற்செயல்களைப் பற்றியும் தொடர்ந்து கடவுளிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்! கடவுளின் விஷயத்தில் கூட நாம் மிகவும் உலகாயதமாக நடந்து கொள்கிறோம்!

புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் பூமியில் பெயரள வில் நல்ல செயல்களைச் செய்து விட்டு நுழைவதற்கு, கடவுள் ஒன்றும் சொர்க்கத்தில் விடுமுறை வாசஸ்தலம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் வாழும் பொழுது, அவற்றின் பின்னாலுள்ள உண்மையைப் பற்றிய எந்தவிதக் கருத்தோ அல்லது உணர்வோ இன்றி, எப்பொழுதும் இது போன்ற உலகாயதமான செயல்களைச் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். இவற்றைக் கொண்டு, நீங்கள் புண்ணியம் என்கிற பெரிய கோட்டையைக் கட்டுகிறீர்கள். பிறகு அந்தக் கோட்டை நீங்கள் இறக்கும் பொழுது, உங்களுடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

அது எப்படியிருக்கிறதென்றால்...நீங்கள் கனவில் ஒரு வீட்டைக் கட்டி, வண்ணம் பூசி, அலங்கரித்து மகிழ்ச்சியடைகிறீர்கள். உங்கள் கனவிலிருந்து கண்விழித்து எழும் பொழுது என்ன நிகழ்கிறது? வீடு எங்கே போயிற்று? நீங்கள் கண்விழித்த பிறகு அதனால் ஏதேனும் பயன் உண்டா? கிடையாது! அதே போல்தான் நீங்கள், இந்த புண்ணியம் என்கிற கருத்தை வைத்துக் கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நாம் எல்லாவற்றையும்

கடவுள் மிகவும் கருணையுள்ளவர். இந்த உலகம் முழுவதும் அவருடையதாகவே, இருப்பினும், அவர் நம்மை, நம் விருப்பப்படி இருக்க அனுமதிக்கிறார்.

  • தெய்வீகத்தையும் சேர்த்து - ஒரு ‘எளிமையான வியாபாரமாக’ குறைத்து விட்டோம். அவ்வளவுதான்.

நான் பலரைப் பார்த்திருக்கிறேன்... அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு குறிப்பிட்ட கோயிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை ஒரு நிவேதனத்துடன் தரிசனம் செய்வதாக வேண்டிக் கொள்கிறார்கள். ஒரு சனிக்கிழமை போக முடியவில்லை என்றால் அந்தக் கடவுளுக்கான நிவேதனத்தை அவர்களுடைய ஓட்டுனரிடம் கொடுத்து அனுப்புகிறார்கள்! மிகவும் தெளிவாக இருங்கள்... நீங்கள் இறக்கும் பொழுது இந்தப் பொருள் சார்ந்த உலகம் உங்களுடன் வராது. விழிப்புணர்வுடனும் தியானத்திலும் இருந்த கணங்கள் மட்டுமே உங்களுடன் வரும்.

இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.... கடவுளுக்கு உங்களைப் பற்றி உங்களை விட நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரியுமாதலால், உங்களால் அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. அதனால் அவரிடம் அஞ்சவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்தவோ வேண்டிய காரணம் எதுவும் இல்லை. கடவுளால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பிறகு இந்த உலகம் முழுவதும் எந்தப் புரிந்து கொள்ளதலும் இருக்க முடியாது.

உங்களுடைய தாய் தந்தையரை விட கடவுள் உங்களை நன்றாக அறிவார். அவர் உங்களை இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல், இதற்கு முன் பிறவிகளிலும் அறிவார். அதனால் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. அவர் முன் நீங்கள் ஒரு திறந்த புத்தகமாக இருக்கிறீர்கள். அவரால் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்தையும் பார்க்க முடியும்!

| விழிப்புணர்வை உங்கள் சுவாசத்திலேயே புகுத்துவதுதான் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான ஒரே வழி. அதனால்தான் உங்கள் எல்லாச் செயலுமே விழிப்புணர்வுடனேயே நிகழும். |

அதனால் கடவுளைப் பற்றிய பயத்தை விட்டு விட்டு அவரை ஒரு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் முழுமையாகப் பாருங்கள். அவரை ஒரு நண்பனைப் போல் பாருங்கள்.

சமூகம், உங்களிடம் கடவுளைப் பற்றிய பயத்தை ஏற்படுத்த எவ்வளவு கடினமாக முயன்றாலும், அதற்கு செவி சாய்க்காதீர்கள். கடவுளிடம் உங்களுக்கான தனிப்பட்ட உறவை, ஒரு உறுதியான விசுவாசமிக்க உறவை-ஒருவரது வாழ்க்கையில் தேவையான ஒரே ஒரு உறவை - வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் அல்லது கடவுளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்தீர்களானால், நீங்கள் உங்களுடனேயே முன்பு இருந்ததை விட இன்னும் நன்றாக தொடர்பு கொள்ள ஆரம்பிப்பீர்கள். உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்வீர்கள். தெளிவு பிறக்கும். உங்கள் உள் அறிவுக்கூர்மை வளரும். பயங்கள் விலகி விடும். எதையும் கண்டு பயப்படுவதற்கு முன் அதைச் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வீர்கள். அறிவு, பயத்தை அகற்றி விடுவதால், நீங்கள் எதையும் செய்ய வேண்டிய எவ்வித நிர்ப்பந்தத்தையும் உணர மாட்டீர்கள். மிகவும் தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். விடுதலை பெற்றதாக உணர்வீர்கள்.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மை பற்றிய இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், மதத்தின் பெயரால் நடக்கும் எல்லாச் சண்டைகளும் இனி இருக்காது. தங்கள் மதம் பற்றிய பயத்தில் இருப்பவர்களும், தங்கள் மதத்திற்காகச் சண்டையிடுப வர்களும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவர்கள். அவர்கள் தொடர்ந்து முழு விஷயத்தையும் தவற விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்

நமது பயங்களால், நாமே நம்மைச் சுற்றி நிறைய சுவர்களை எழுப்பிக் கொண்டு விடுகிறோம். இறுதியில் நாமே எழுப்பிய சிறையில் நாம் சிக்கிக்கொண்டு விடுகிறோம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் குருடர்களைப் போன்றவர்கள்.

மிகவும் முக்கியமானது... தயவு செய்து கடவுளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை உங்கள் குழந்தைகளிடம் திணித்து, அவர்களிடம் கடவுளைப் பற்றிய பயத்தைப் புகுத்தி விடாதீர்கள். அவர்களுக்குக் கடவுளைத் தழுவிக் கொள்ளக் கற்றுக் கொடுங்கள். கடவுள் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய, எங்கும் பரவியுள்ள, பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் என்பதைக் கற்றுக் கொடுங்கள். கடவுள் என்பது தூய அன்பைத் தவிர வேறல்ல என்பதைக் கற்றுக் கொடுங்கள். அவர்கள் கடவுள் மற்றும் பிரபஞ்ச இருப்புத் தன்மை நோக்கிய ஒரு அன்பான மனோபாவத்துடன் வளர உதவுங்கள். இந்த விதத்தில்,ாதாரணமாக வளர்வதைப் போல் அதிக பயத்துடன் வளர மாட்டார்கள்.

ஸ்வாமிஜி, நாங்கள் அவ்வப்பொழுது ஆச்சரியப்படுகிறோம் - எங்களுக்கு நிகழும் எதுவும், விதியா அல்லது எங்களுடைய தேர்வா?

(பரமஹம்ஸர் சிரிக்கிறார்!) மிகவும் வழக்கமாகக் கேட்கப்படும் ஒரு கேள்வி!

புரிந்து கொள்ளுங்கள்... உங்களுடைய இந்தக் கணம், உங்களுடைய எல்லா கடந்த காலத் தீர்மானங்களின் மொத்தத் தொகுப்பு. நீங்கள் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறீர்கள். அதிகாலையில் எழுந்து, சரியான பாதையில் இங்கு வந்து, அமர்ந்து, மேலும் தொடர்ந்து அமர்வதாகத் தீர்மானித்தீர்கள்..? சரிதானே!

இதேபோல், உங்களுடைய கடந்த காலத் தீர்மானங்கள் அனைத்தும், உங்களுடைய நிகழ்காலத்தை உருவாக்குகின்றன.

| மற்றவர்களை மனப்பூர்வமாக நம்புங்கள். நீங்கள் சுரண்டப் பட்டால் கூட - உங்கள் இருப்புத் தன்மையில் இருக்கும் இந்த மனப்பூர்வமான நம்பிக்கையானது, உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும். |

இப்பொழுது இங்கு இருப்பது போல. அதே போல், உங்களுடைய எதிர்காலம், உங்களுடைய எல்லா நிகழ்கால தீர்மானங்களின் விளைவாக இருக்கும். இப்பொழுது, அதை நாம் ஏன் விதி என்று நினைக்கிறோம்? ஏனெனில், நாம் நமது தீர்மானங்களை விழிப்பின்றி செய்கிறோம்; விளைவுகள் நமது வழியில் வருவதை நாம எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்காத அல்லது சாதகமற்ற விளைவுகள் நிகழும் பொழுது, அதை நாம் விதி என்று அழைக்கிறோம்.

விழிப்புடன் தீர்மானங்களை எடுக்கும் பொழுது, நாம் அதன் பக்க விளைவுகளையும், பின் விளைவுகளையும் அறிவோம். நாம் பக்க விளைவுகளையும், பின் விளைவு களையும் அறியாத போது, அதை விதி என்று சொல்கிறோம். உண்மையில், வாழ்க்கையே உங்களுடைய தேர்வுதான். நாம்தான் தீர்மானங்களை எடுக்கிறோம்; ஒருபோதும் நமக்காக வேறு யாரும் எடுப்பதில்லை.

கடவுள் மிகவும் கருணையுள்ளவர். இந்த உலகம் அவருடையதாக இருப்பினும், அவர் நம்மை நம் விருப்பப்படி இருப்பதற்கு அனுமதிக்கிறார்! விழிப்புணர்வை உங்கள் சுவாசத்திலேயே புகுத்துவதுதான், சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான ஒரே வழி. அதனால் உங்களுடைய எல்லாச் செயலுமே, எல்லாத் தீர்மானங்களுமே விழிப்புணர்வுடனேயே நிகழும்; நீங்கள் விழிப்பற்ற அல்லது ஆழ்மன நிலையில் தீர்மானம் எடுக்கும் நிலைக்கு ஒருபோதும் நழுவி விழுந்து விட மாட்டீர்கள், அவ்வளவே. பிறகு நீங்கள் உங்கள் ஊழ்வினை பற்றியும் விதி பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... யாரும் உங்களுடைய செல்வத்தில் கை வைத்து உங்களுக்குப்

உங்கள் புத்தி கூர்மையடையும்போது, உங்களால் ஒரு விஞ்ஞானியைப் போலப் புரிந்து கொள்ள முடியும். பெயரளவிலான விதி கெட்டுப் போக காரணமாகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. எப்படியோ, மக்கள் நம் செல்வத்தைத் திருடிக் கொண்டு போக காத்துக் கொண்டிருப்பதாக ஒரு நிரந்தரமான பயத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நமது செல்வத்தை இழந்து விடும் பயம்.

இந்த பயத்தில், நாம் நம்மைச் சுற்றி நிறைய சுவர்களை எழுப்பிக் கொள்கிறோம். இறுதியில் நாமே எழுப்பிய சிறையில் நாம் சிக்கிக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். அதனால்தான் நான் ‘கதவைத் திற, காற்று வரட்டும்’ என்று சொல்கிறேன். உயிர்ச்சக்தி உங்களைப் பாதுகாக்கும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். மிகவும் தெளிவாக இருங்கள்... ‘உங்கள் வீடுகளைப் பூட்டி வைக்க வேண்டாம்’ என்று நான் சொல்லவில்லை! உடல் சார்ந்த நிலையில் உங்கள் வீடுகளைப் பூட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. மனம் சார்ந்த நிலையில் உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும் பூட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று சொல்கிறேன், அவ்வளவுதான்.

ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் பெட்டியில் ஒருவாறு நிலைபெற்றவுடன் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு அருகில் இருப்பவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்கிறீர்கள். அவர்கள் என்ன மதமாக இருப்பார்கள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறீர்கள். அவர்களுடைய பின்னணியைப் பற்றி கேள்விகளைக் கேட்கிறீர்கள். இப்படிப் பல, ஏன்? உங்களுக்கு அவர்களைப் பற்றிய விவரங்களில் உண்மையிலேயே ஆர்வம் இருப்பதாலா? இல்லை! ஏனெனில் நீங்கள்

உங்கள் உணர்ச்சி கூர்மையடையும் போது, நம்பிக்கை மலர்கிறது.

அவர்களை தெரியாதவையாகப் பார்க்கிறீர்கள். அவர்களைப் பற்றிய இந்த விஷயங்கள் தெரிந்தால், உளவியல்பூர்வமாக உங்களுடைய தெரியாதவற்றைப் பற்றிய பயம் குறைகிறது; நீங்கள் இயல்பாக இருக்கலாம், அவ்வளவுதான்.

நீங்கள் ஒரு ஹிந்துவாக இருந்து, அவர்களும் ஹிந்துவாக இருந்தால் நீங்கள் நிம்மதியடைகிறீர்கள். நீங்கள் ஹிந்துவாக இருந்து, அவர்கள் முஸ்லிமாக இருந்தால், நீங்கள் மன நிம்மதியற்றும் அச்சமாகவும் உணர்கிறீர்கள்; அவர்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறீர்கள். உங்கள் இருக்கையை மாற்றிக் கொள்ளலாமா என்று கூட சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். இவ்வாறு தான் உங்கள் பயம் வேலை செய்கிறது. நீங்கள் எப்பொழுதும் விழிப்பின்றி உங்கள் சொத்துக்களை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருக்கிறீர்கள்.

சாரதா தேவி சொல்கிறார், “மற்றவர்கள் மீது மனப் பூர்வமான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் சுரண்டப்பட்டால் கூட. உங்கள் இருப்புத்தன்மையில் இருக்கும் இந்தப் பிரபஞ்ச த்தை மனப்பூர்வமாக நம்பும் தன்மையானது உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்”.

உங்கள் புத்தி கூர்மையடையும் பொழுது, உங்களால் ஒரு விஞ்ஞானியைப் போல புரிந்து கொள்ள முடியும்; உணர்ச்சி கூர்மையடையும் பொழுது நம்பிக்கை மலர்கிறது; உணர்வுகள் கூர்மையடையும் பொழுது ஞானம் மலர்கிறது. அதனால், உங்கள் அச்சங்களை விட்டு விட்டு, உங்களிடம் புரிந்து கொள்ளுதலும் நம்பிக்கையும் நிகழ அனுமதியுங்கள்.

அதனால் உங்கள் ஆஸ்திகளைப் பற்றிய அச்சங்களை விட்டு விடுங்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... அனைத்தும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தது. நீங்கள்

உங்கள் உணர்வுகள் கூர்மையடையும் போது, ஞானம் மலர்கிறது. வெறும் தற்காலிகமான சொந்தக்காரர் மட்டுமே, அவ்வளவுதான். இதை உங்களால் ஆழமான நிலையில் புரிந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உங்கள் ஆஸ்திகளைப் பற்றிய அச்சம் உங்களை விழுங்க அனுமதிக்க மாட்டீர்கள்.

நாம் சொத்துக்களைப் பற்றிப் பேசும்பொழுது, அந்நியர்களைப் பற்றிய அச்சத்தைப் பற்றிப் பேசினோம். ஆனால் கெளரவத்தைப் பொறுத்தவரையில் பயம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள். திருமணம் தாண்டிய உறவுகள் போன்ற சில சமூகம் அங்கீகரிக்காத சில விஷயங்களை, யாராவது செய்ய விரும்பினால், என்ன செய்கிறார்கள்? சமூகத்தின் கண்களில் தங்களுடன் எந்த வழியிலும் எந்த விதமாகவும் அடையாளப்படுத்திக் கொள்ளாத, முகம் தெரியாத அந்நியர் களுடனேயே அவர்களுடைய விளையாட்டுக்களை வைத்துக் கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில், தெரியாதவை அச்சத்தின் நண்பனாகி விடுகிறது, இங்கு பொறுப்பும் ஈடுபாடும் பயத்திற்குக் காரணமாகி விடுகிறது. அதனால், முற்றிலும் தவிர்க்க முடியாவிடினும், பொறுப்பும் ஈடுபாடும் குறைவாக உள்ள அதிகம் பழக்கமற்ற மனிதர்களைத் தேடுகிறீர்கள். பயம் எப்படியெல்லாம் செயல் படுகிறது என்பதைப் பாருங்கள்! எப்படி நீங்கள் எப்பொழுதும் பயத்தின் பிடியிலேயே இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.

ஸ்வாமிஜி... எங்களுக்குப் பயம் வரும் பொழுது, அதை அதிக விழிப்புடன் பாருங்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் சில சமயங்களில், அது திடீரென்று வந்து விடுகிறது. வந்து விட்டுப் போய் விடுகிறது - ஒரு திடீர் அதிர்ச்சியைப் போல, அப்பொழுது எங்களுக்கு அதைப் பார்க்கக் கூட நேரமில்லை...

| பயத்தாக்குதல்கள், நம் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்தி விடுகிறது. |

ஆம்... நீங்கள் பயத்தாக்குதலைப் பற்றிச் சொல்கிறீர்கள்.

பயத்தாக்குதல்கள்¹ குறைவான காலமே இருக்கும் கூரிய பயத்துணுக்குகள்². அவை வெறுமனே சில நொடிகளில் வந்து விட்டுப் போய் விடும். உதாரணத்திற்கு, நீங்கள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பென்று எண்ணி விடுகிறீர்கள். பயம் திடீரென்று எழுந்து, சில வினாடிகளில் அடங்கி விடுவதை உணர்கிறீர்கள். ஏனெனில் அதற்குள் அது கயிறுதான் என்பதை உணர்ந்து விடுகிறீர்கள். இதுதான் பயத்தாக்குதல்.

பாருங்கள்... அது இப்படி இருக்கிறது... எப்பொழுதும் நமக்குள் ஒரு பய ஓட்டம் இருந்து கொண்டிருக்கிறது. சில சமயங்களில் அது உச்சத்திற்குச் செல்கிறது, அவ்வளவுதான். இந்த பயத்தாக்குதல்கள் மிகக்குறைவான நேரமே இருந்தாலும், மிகுந்த தீவிரத்துடன் நிகழ்கிறது. பயத்தாக்குதல்கள் நம் உடலில் நோய் ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை³ பலவீனப்படுத்தி விடுகிறது. இவை மனச் சோர்வைத் தூண்டும் இரசாயனங்களை வெளியிடுகிறது. மேலும் முதுமையடையும் செயல்பாடுகளை வேகப்படுத்தி விடுகிறது. நமது முடி நரைப்பதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் கூட காரணமாகிறது.

சராசரியாக, ஒவ்வொருவரும், விழிப்புடனோ அல்லது விழிப்பின்றியோ, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 பயத்தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். நடு இரவில் தொலைபேசி மணியடிப்பது, காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது இன்னொரு வாகன ஓட்டி திடீரென்று பாதையில் இருந்து விலகி உங்கள் பக்கமாக வருவது, நீங்கள் ஒரு திகில் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்கள் தோளில் தட்டுவது, முதலிய இது போன்ற பலவும் விழிப்புடனான பயத்தாக்குதல்களாகும்.

Fear-strokes¹
Short Spikes of Fear²
Immune System³

நீங்கள் உங்கள் கனவுகளிலும் பயத்தாக்குதல்களுக்கு உள்ளாகிறீர்கள்; ஆனால் கண்விழிக்கும் பொழுது மறந்து விடுகிறீர்கள். பயத்தாக்குதல்கள் ஒரு ரோஜாச் செடியின் வேர்களை அசைப்பது போன்றது; அது உடல் அமைப்பிற்கு மிகவும் அபாயகரமானது.

நீங்கள் சொன்னது போல், பயத்தாக்குதல் நிகழும் பொழுது, நீங்கள் விழிப்புணர்வுக்குள் செல்வதற்கு நேரமே இருக்காது; கடவுளின் பெயரைச் சொல்வதற்குக் கூட நேரமிருக்காது; ஏனெனில் அது ஒரு பயத்துணுக்கு மட்டுமே. ஆனால், பயத்தாக்குதலுக்குப் பிறகு, அதை நீங்கள் ஆராய்ந்து, உங்கள் பயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளலாம். இது பயத்தைப் பற்றிய உங்களது மொத்தக் கருத்தையும் கரைத்து விடுவதற்கு உதவும்.

நம்மிடம் இருக்கும் வழக்கமான பயத்தின் தீவிரத்தையும் ஆழத்தையும் குறைப்பதன் மூலம் பயத் தாக்குதல்களின் தீவிரத்தையும் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைக்கலாம். இந்த வழக்கமான பயத்திலிருந்துதான், பயத் தாக்குதல்கள் எழுகின்றன. ஆழமான புரிந்து கொள்ளுதலாலும் தெளிவாலும் வழக்கமான பயத்தைக் குறைக்க முடியுமானால், பயத்தாக்குதல் களும் குறைந்து விடும்.

பொதுவாக பயம் மிகவும் சக்தியுடன் இருப்பதால், அது உங்களைக் கட்டுப்பாடு இழக்கச் செய்து விடுகிறது.

ஒரு சின்ன கதை...

ஒரு சூஃபி குருவிடம் அவரது சீடன் ஒருவன் தீட்சை கொடுக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தான். இறுதியில்

நீங்கள் தொடர்ந்து உங்கள் பயங்களை விழிப்புணர்வுடன் பார்க்கும்பொழுது, மரணம் வந்தாலும் அதையும் விழிப்புணர்வுடன் நோக்கி, அது நிகழ அனுமதிப்பீர்கள். குரு ஒரு நிபந்தனையுடன் அவனுக்குத் தீட்சை கொடுக்கச் சம்மதித்தார். நிபந்தனை என்னவென்றால், அவன் அருகிலிருக்கும் பட்டணத்திற்குச் சென்று அங்கு பர்தா அணிந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை முத்தமிட்டு விட்டு, அங்கிருந்து அதற்கப்பாலுள்ள காட்டிற்குச் சென்று அவன் கையிலுள்ள கம்பால் ஒரு புலியை அடித்து விட்டு வர வேண்டும். இது மிகவும் எளிதானது என்று மற்ற சீடர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குரு ஒரு புன்சிரிப்புடன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னார். ஒரு வாரம் கழித்து அந்த சீடன் திரும்பினான். அவன் மிகவும் மோசமாகக் காயமடைந்து இரத்தம் வடிய நின்று கொண்டிருந்தான். குரு அவனிடம் என்ன நடந்ததென்று கேட்டார். சீடன் சொன்னான், "எனக்கு ஏனென்று தெரியவில்லை, ஆனால் நான் பெண்ணை அடித்து புலியை முத்தமிட்டு விட்டேன்".

(பலத்த சிரிப்பு!)

பயம் உங்களை வெறுமனே குருடாக்கி விடும்! அது சில கணங்களுக்கு உங்கள் சிந்தனையையும் அறிவுக் கூர்மையையும் ஒருங்கே எடுத்துச் சென்று விடும். அதனால் பயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு அதனை வெல்ல வேண்டும்.

பல சம்பவங்களிலும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம்... எங்கேனும் ஏதாவது தீவிபத்தோ அல்லது பேரழிவோ ஏற்படும் பொழுது, மக்கள் பயத்தில் எல்லாத் திசைகளிலும் ஓடிக் கொண்டு இருப்பார்கள்; கதவுகளைத் தவறான பக்கம் திறப்பார்கள்; சாதாரண காலங்களில் சரியான வாயில் தெரிந்திருந்தும் இப்பொழுது தவறான வாயிலை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள். அவசர காலங்களில் இது போன்ற செய்கைகள் சில சமயங்களில் அவர்களது

நீங்கள் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். 'நான் யார்?' வாழ்க்கையையே இழக்கவும் காரணமாகி விடும். பயம் மிகவும் குருடாக்கி விடும் தன்மையுடையது.

நீங்கள் எப்பொழுதும் உங்கள் பயத்தை அறிந்திருக்க வேண்டும் என்று நான் சொல்வதன் காரணம், விழிப்புணர்வால் மட்டுமே கீழ்நிலைச் சக்திகளை உயர்நிலைச் சக்திகளாக உருமாற்றமடையச் செய்ய முடியும். விழிப்புணர்வால் இச்சையை அன்பாக மாற்றி விடுவது போல, தூய விழிப்புணர்வால் அச்சத்தை அச்சமற்ற தன்மையாகவும் அறிவாகவும் மாற்றமடையச் செய்து விட முடியும்.

அடக்கி வைக்கப்படும் எதுவும் வேறொரு வடிவத்தை எடுத்துக் கொண்டு விடும். அது முழுவதுமாக வேருடன் களையப்படுவதில்லை; அதனால் அடக்கி வைத்தல் பயத்தை வெல்லும் வழியல்ல. விழிப்புணர்வே வழியாகும். உண்மையில், பயத்தை அடக்கி வைக்கும் பொழுது, அதை வெல்லும் ஒரு வாய்ப்பை இழந்து விடுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பயங்களை விழிப்புணர்வுடன் பார்க்கும் பொழுது, மரணம் வந்தாலும், அதையும் விழிப்புணர்வுடன் நோக்கி, அது நிகழ அனுமதிப்பீர்கள். இதைச் செய்ய முடிவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் உங்களுடைய எல்லா பயங்களுமே இறுதியில் இறப்பைக் குறித்த பயத்தைத் தவிர வேறல்ல. நீங்கள் உங்கள் தினசரி பயங்களின் மீது செயல்படுவீர்களானால், விழிப்பின்றியே உங்கள் மரணத்தைப் பற்றிய பயமும் குறைந்து விடும்; மரணத்தைப் பற்றிய பயம் குறையுமானால், உங்கள் தினசரி பயங்களும் குறைந்து விடும்.

சரி...நாம் இப்பொழுது, ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் மீது நேரடியாகச் செயல்படும், இருள் தியானம் எனும் அற்புதமான ஒரு தியானத்தைச் செய்வோம்.

ஆனந்தமாக இருங்கள்

இருள் தியானம்

(நீடிக்கும் காலம் : 30 நிமிடங்கள்)

கண்களை மூடி, முதுகு, கழுத்து, தலை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையுமாறு வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். இது ஒரு வழிகாட்டுதலுடன் செய்யப்படும் தியானம். நான் சொல்லச் சொல்ல, நீங்கள் நான் சொல்வது போல மனதில் கற்பனை செய்து இதனுள் ஆழமாகச் செல்லுங்கள். இந்த தியானம் நீங்கள் இருளுடன் பழக்கம் கொள்ளவும், நட்புணர்வை வளர்த்துக் கொள்ளவும் உதவும். இது இருளை அன்புடன் அரவணைத்துக் கொள்ள உதவும். இது இறப்பு அல்லது இருளைப் பற்றிய பயத்தில் வேர் விட்டுள்ள உங்கள் தினசரி பயங்களை வெற்றி கொள்ள உதவும். சரி... நாம் இப்பொழுது ஆரம்பிப்போம்.

(மென்மையான இசை போடப்படுகிறது)

ஆழமாக மூச்சை வெளியே விடுங்கள். உடல் தானாகவே மூச்சை உள்ளே எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள்... (2 அல்லது 3 நிமிடங்கள்)

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து, நடந்து, தெருக்களின் வழியே, நகரத்திற்கு வெளியே, ஒரு அடர்த்தியான, இருள் மிக்க, காட்டுப் பகுதிக்குச் செல்கிறீர்கள். இருள் அதிகரிக்கிறது; நீங்கள் இப்பொழுது பழக்கமான பகுதியில் இல்லை; அடர்ந்த காட்டின் வழியே நடந்து செல்கிறீர்கள்; நீங்கள் ஒரு விதமாக நிச்சயமற்றும் அச்சத்துடனும் இருக்கிறீர்கள்; தூரத்தில் ஒரு குகையைக் காண்கிறீர்கள்; அதனை நோக்கி நடந்து செல்கிறீர்கள்; குகைக்குள் மிகவும் இருளாக இருக்கிறது... (5 நிமிடங்கள்) குகைக்குள் இருள் மிகவும் சக்தி மிக்கதாக இருக்கிறது; அது இதற்கு முன் நீங்கள் ஒரு போதும் அறியாதது; நீங்கள் குகையின் உள்ளே சென்று அமர்கிறீர்கள்; நீங்கள் கைகளை நீட்டினால் கூட எதையும் உணர முடியவில்லை; ஒரு சப்தமும் இல்லை; உங்கள் புலன் களால் எதையும் உணர்ந்து, சொல்ல முடியவில்லை; நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை... (5 நிமிடங்கள்)

இருள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் உங்களிடம் இருப்பதையெல்லாம் இழப்பதைப் போல் உணர்கிறீர்கள்; உங்களுடைய எல்லைகளை இழக்கிறீர்கள்; உங்களுடைய உடலையும் உணர முடியவில்லை; உங்கள் மனம் எண்ணுவதை நிறுத்திவிட்டது; உங்களிடம் ஞாபக சக்தியும் இல்லை; உங்களிடம் புலன்கள் இல்லை, உடல் இல்லை, மனம் இல்லை, நினைவும் இல்லை; உடலும் மனமும் இல்லாத நீங்கள் யார் என்று வியப்படைகிறீர்கள்.

நீங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறீர்கள், “நான் யார்?”. நீங்கள் உடல் சார்ந்த கட்டுப்பாடுகளில் இருந்தும், உணர்ச்சித் தொடர்புகளில் இருந்தும் விடுபட்டு, தனியாக உணர்கிறீர்கள்; இதை ஆழமாக உணருங்கள்... (5 முதல் 10 நிமிடங்கள்)

இப்பொழுது இருள் உங்களுக்குப் பழகி விடுகிறது; இருள் நண்பனாக, வழிகாட்டியாக ஆகி விட்டது; அது உங்களிடம் சொல்கிறது, ‘நீங்கள் உடலோ அல்லது மனமோ அல்ல’ என்று; அவை இல்லாமலே நீங்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்; இருள் உங்களுக்கு வழி காட்டுகிறது; நீங்கள் உங்கள் தாயின் கருவறையில் இருப்பதைப் போல கதகதப்பாகவும் சுகமாகவும் உணர்கிறீர்கள்; பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணர்கிறீர்கள்; நீங்கள் வீட்டில் இருப்பது போல உணர்கிறீர்கள்; நீங்கள் எதைச் சேர்ந்தவரோ... எங்கிருந்து வந்திருக்கிறீர்களோ... எங்கு செல்லப் போகிறீர்களோ... அதுவாகத்தான் இருக்கிறீர்கள்... (5 நிமிடங்கள்)

இப்பொழுது, மெதுவாக உங்கள் எல்லைக்குள் வாருங்கள். உங்கள் உடலை உணர்கிறீர்கள்; உங்கள் எண்ணங்களை உணர்கிறீர்கள்; உங்களுக்கு ஞாபகம் வருகிறது; நீங்கள் நிலை பெறுகிறீர்கள்.

இப்பொழுது மெதுவாக எழுந்து குகையை விட்டு வெளியே வாருங்கள்; வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்; திரும்ப நடக்க ஆரம்பித்து நகரத்திற்குள் சென்று, நீங்கள் அமர்ந்திருந்து இடத்திற்கு வாருங்கள்; மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களை திறவுங்கள் (2 அல்லது 3 நிமிடங்கள்)

ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

நாம் அடுத்த அமர்வில் சந்திக்கும் வரை, இந்த அமைதியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். நன்றி.

ஆனந்தமாக இருங்கள்!

Blank square frame
A blank square outline