KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 5: மனக்கோட்டைகளைத் தகர்த்தல்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 5: மனக்கோட்டைகளைத் தகர்த்தல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • மூலாதார சக்கரம் -
  • துக்கஹரணா தியானம் -

இந்த மூலாதார சக்கரம் முதுகுத்தண்டின் அடியில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் மூலாதாரா என்றால் 'இருப்புத் தன்மையின் மூலமும் அடிப்படையும்' என்று பொருள். 'மூலா' என்றால் மூலம், 'ஆதாரா' என்றால் அடிப்படை.

இந்தச் சக்கரம் கட்டுப்பாடற்ற கனவுகளாலும் கற்பனைகளாலும் பூட்டப்படுகிறது.

கனவுகளை விட்டுவிட்டு நிஜத்தை வரவேற்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய முடியும்.

தியானமுறை : துக்கஹரணா தியானம் - குலார்ணவ தந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மூலாதார சக்கரம் காமம், கட்டுப்பாடற்ற கனவுகள், கற்பனைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

மிகவும் அதிகமாகப் பேசப்படும், எண்ணப்படும், எழுதப்படும் விஷயம் காமம். மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாக விளக்கப்படும், குழப்பமான விஷயமும் காமம்தான்!

ஒன்று, நாம் அதைத் தவிர்க்க முயற்சி செய்கிறோம்; அல்லது அதில் தீவிரமாக ஈடுபட முயற்சி செய்கிறோம். காமம்

Overcoming Fantasies

நமது விழிப்பற்ற மனதில் ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, நமக்குக் காமத்தைப் பற்றிய உண்மையைத் தெளிவுபடுத்துபவர் யாருமில்லை.

ஏனைய எந்த விஷயத்தையும் விட, தெளிவுபடுத்தப்பட வேண்டிய தேவை, காமத்திற்கு மிகவும் அதிகம். அது விழிப்புணர்வின் ஒளியில் விளக்கப்பட வேண்டும்.

நமது தற்போதைய நிலை, மையிருட்டில் இரவில் ஒரு காட்டில் நடந்து செல்லும் மனிதனை ஒத்தது.

எங்காவது ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கலாம்.

இந்த விஷயத்தைத் தவிர்க்க முயற்சி செய்யும் மனிதன் முழு விழிப்புணர்வற் ற நிலையில் இருக்கிறான்; அவனுக்குப் பள்ளம் எங்கிருக்கிறதென்று கூடத் தெரியாது - பிறகு அவனால் எப்படி அதைத் தவிர்க்க முடியும்?

அதில் ஈடுபடும் மனிதனுக்குப் பள்ளம் எங்கு இருக்கிற தென்பது தெரியும்; ஆனால் அவனுக்கு அதில் நேராக குதிப்பதைத் தவிர வேறெந்த வழியும் தெரியாது.

இதில் ஏதாவது ஒன்று தீர்வாக இருக்க முடியுமா? என்ன செய்வது?

ஒருவனுக்குப் பள்ளம் எங்கிருக்கிறதென்பதும் தெரிய வேண்டும்; அதைச் சுற்றிச் சரியான பாதையிலும் செல்ல வேண்டும்.

காமம் என்ற விஷயமே, எப்பொழுதும் பெருக்கித் தரை விரிப்புக்கடியில் தள்ளப்பட்டு விடுகிறது. அது சமூகப் பழக்க வழக்கங்களால் தடை செய்யப்பட்ட ஒரு விஷயம்.

காமம் ஒரு மிகப்பெரிய படைப்பாற்றல்,
அது ஒரு தியான சக்தி. உலகம் முழுவதும்
காம சக்தியிலிருந்தே எழுகிறது.

பெற்றோர்கள் அதைப் பற்றி வெளிப்படையாகக் குழந்தைகளுடன் விவாதிப்பதில்லை. முதலில், அதனுள் இருக்கும் உண்மைகள் பற்றி பெற்றோர்களுக்கே தெரிவதில்லை! எந்த விஷயமாயினும், அதைப் பற்றி அறிந்த நிபுணர்களிடம்தான் கேட்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விடுவீர்கள்; சரியாகப் புரிந்து கொள்ளத் தவறும் பொழுது, தவறாகப் புரிந்து கொண்டு விடுவீர்கள்.

ஒரு சின்ன கதை...

ஒரு பெண்மணிக்கு, அவளது பையனின் பள்ளி ஆசிரியரிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த ஆசிரியர், பையனால் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியாததால் எழுதும் பொழுது தவறுகள் செய்வதாக எழுதியிருந்தார். அந்தப் பெண்மணி உடனே அவளது மகனை ஒரு கண் டாக்டரிடம் அழைத்துச் சென்றாள். அந்தப் பையனைப் பரிசோதித்த டாக்டர், பரிந்துரை செய்திருந்தது: முடிவெட்டுதல்!

(சிரிப்பு!)

இதைக் கண்டு நாம் சிரிக்கிறோம்; ஆனால் நான் சொல்கிறேன், பல சமயங்களில் நாமும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். முதல் தடவையிலேயே நீங்கள் சரியான மனிதரிடம் சென்று விட்டால், உங்களுக்குத் தீர்வு கிடைத்து விடும். இல்லாவிடில், பெயரளவில் நிபுணர்கள் என்று சொல்லப்படுபவர்களின் பயனற்ற ஆலோசனைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டு, ஒரே வட்டத்திலேயே மீண்டும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பீர்கள்.

அதை விட மோசமானது, நீங்கள் இதே ஆலோசனை களை எதிர்கால சந்ததியினருக்கும் வழங்கிக் கொண்டு இருப்பது.

காமத்தைப் பற்றிய அறிவியல் நூலான ‘காமசூத்ராவை’ எழுதிய வாத்ஸ்யாயனர் ஒரு துறவி என்பது உங்களுக்குத் தெரியுமா?

இவ்வாறுதான் சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கின்றன. ஒரு முறை சம்பிரதாயங்களை அனுமதித்து விட்டால், பிறகு அதை உடைத்துக் கொண்டு வெளியே வருவது மிகவும் கடினமான காரியமாகி விடும்; ஏனெனில் சம்பிரதாயங்கள் காலப்போக்கில் உண்மையாகி விடும்.

ஒரு குரு தோன்றும் பொழுது, உங்களுக்குச் செய்யப்பட்டதையெல்லாம் திருப்புவதே1, அவரது முதல் வேலையா கிறது. அதன் பிறகே, அவரால் உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல முடியும்! அதன் பிறகே அவரால், உண்மையிலேயே நீங்கள் யார் என்பதை உங்களுக்குக் காட்டத் தொடங்க முடியும். அது அவருக்கு மிகவும் கடினமான வேலையாகும்; ஏனெனில் நீங்கள் உங்கள் பாதையில் வெகுதூரம் முன்னேறிச் சென்று விட்டீர்கள். நீங்கள் எவ்வாறு தவறான பாதையில் இருக்க முடியும் என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முன்னேறி விட்டீர்கள்!

காமம் என்பது என்ன?

காமம் ஒரு மிகப் பெரிய படைப்பாற்றல். அது ஒருதியான சக்தி. உலகம் முழுவதும் காம சக்தியிலிருந்தே எழுகிறது.

நமது பண்டைய கால குருமார்களும், ரிஷிகளும் நமக்கு இந்த விஷயத்தைப் பற்றிய சிறந்த தெளிவை அளித்திருக்கின்றனர். காமத்தைப் பற்றிய அறிவியல் நூலான 'காமசூத்ரா'-வை எழுதிய வாத்ஸ்யாயனர் ஒரு துறவி என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு பிரம்மச்சாரி!

உண்மையில் அவர் காமசூத்ராவை வழங்கியது அவரது சொந்த அன்னைக்கு. ஞானமடைந்த பிறகு ஒரு நாள் அவர் தன் அன்னையிடம் திரும்பி வருகிறார். அவரது அன்னை,

Undoing¹

ஞானமடைந்திருந்தால் இந்த பூமியில் எந்த விஷயத்தைப் பற்றியும் ஒரு ஆழமான அறிவு இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். அதை ஒத்துக் கொண்ட அவர், அவளிடமிருந்து எதைப் பற்றிக் கேட்க விரும்புகிறாள் என்று கேட்கிறார். அதற்கு அவள் சொல்கிறாள், "நீ பிறந்ததிலிருந்தே ஒரு பிரம்மச்சாரியாக இருக்கிறாய் என்பது உன் தாயான எனக்குத் தெரியும். உனக்கு காமத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன்னால் அதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?”. வாத்ஸ்யாயனர் ஒரு புன்சிரிப்புடன், காமத்தைப் பற்றிய அறிவியலான காம சூத்ராவை வழங்கினார். வாத்ஸ்யாயனரிடம் ஒருமுறை கேட்கப்பட்டது - "இந்த விஷயத்தைப் பற்றிப் பேச உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?”.

ஒரு இயல்பான கேள்வி! உங்களில் பலர் என்னிடமும் இதே கேள்வியை மௌனமாகக்க் கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

அதற்கு வாத்ஸ்யாயனர் அளித்த பதிலை, நான் நவீன உவமையுடன், இன்றைய மொழியில் மொழி பெயர்க்கிறேன்...

உங்கள் வீட்டிற்கு வரும் மின்தொழில் வல்லுனருக்கு1, ஒவ்வொரு அறையிலும் உள்ள மின்-இயக்கிகளைப்2 போடும்3 பொழுதும் அணைக்கும்4 பொழுதும் என்ன நிகழ்கிறது என்பது மிகச் சரியாகத் தெரியும். அவருக்கு சுவற்றுக்குள் மறைந்து செல்லும் மின் சுற்று அமைப்பு முழுவதும் தெரியும். ஏதேனும் பிரச்சினைஇருந்தால், பிரச்சினையின்சாத்தியக்கூறுகளைஅளவிட்டு, அவரால் ஒரு தீர்வைக் கொடுக்க முடியும், இல்லையா?

மின்சாரம் பற்றிய அறிவியலை அவர் புரிந்து கொள்கிறார். அதே சமயம், ஒரு நாளைக்கு ஐம்பது தரம் இந்த இயக்கிகளைப் போட்டுக் கொண்டும் அணைத்துக் கொண்டும் இருக்கும் உங்களுக்கு,

Electrician¹ Electrical Switch² Switch-on³ Switch-off⁴

Electrician

Electrical Switch

Switch-on

Switch-off

இதற்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய எண்ணம் துளிக்கூட இல்லை! சரிதானே?

நம்மில் பலருக்கு இந்த இயக்கிகளைப் போட்டு அணைப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது; அதனால் தான் நமக்கு சில சமயம் மின்அதிர்ச்சி¹ ஏற்படுகிறது! அதனால் புரிந்து கொள்ளுங்கள்... நாம் அப்பாக்களாக, அம்மாக்களாக, தாத்தா பாட்டிகளாக இருக்கலாம்... இருப்பினும் நமக்கு காமத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கலாம்.

நாம் அனைவரும் தொடர்ந்து ஹார்மோன்களின் தொல்லைக்கு ஆட்பட்டிருக்கிறோம். தொலைக்காட்சியும் மற்றும் மற்ற வடிவத்திலிருக்கும் ஊடகங்களும்² இச்சையை³ வெவ்வேறு வடிவங்களில் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாமும், நமக்குக் காதலைப்⁴ பற்றியும் காமத்தைப்⁵ பற்றியும் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம்.

ஒரு ஞானமடைந்த மனிதன் மட்டுமே, உங்களுக்கு காமத்தைப் பற்றிய அறிவியலைக் கொடுக்க முடியும்.

கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் பெருஞ் செல்வ மும் நிலங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இவை எதுவுமே இந்தியாவிற்குப் பெரிய இழப்பல்ல. ஒவ்வொரு அந்நியப் படையெடுப்பிற்குப் பிறகும் நமது சமுதாயம் திரும்ப எழுந்து நின்றது. இறுதியாகப் பழங்காலத்தில் குருவின் காலடியில் அமர்ந்து கற்கும் முறையான குருகுல முறையும், காமத்தைப் பற்றிய அறிவியலான காம சூத்திரத்தைச் சிறுவர்களுக்குப் போதிப்பதும் ரத்து செய்யப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது. இதுதான் இந்தியாவிற்குப் பெரிய அடி. இந்த சமயத்தில்தான் மக்கள் காமத்தின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இச்சையின் பின் செல்ல ஆரம்பித்தனர்.

இரண்டு பேர் சதுரங்கம் விளையாடிக் கொண்டு இருப்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்திருக்கிறீர்களா ? நீங்கள் வெறுமனே விளையாட்டை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது, அடிக்கடி, சரியான ஆட்டம் தானாகவே உங்களுக்குத் தோன்றும்; ஆனால் எப்படியோ விளையாடும் இரண்டு பேருக்கும் ஒருபோதும் தோன்றுவதில்லை! இதை உங்களில் எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்கள் ? இதன் காரணம் என்னவாக இருக்கமுடியும்? சொல்லுங்கள்...

நாம் விளையாட்டில் ஈடுபடாமல் இருப்பதாலா ஸ்வாமிஜி?

ஆம்! உண்மையில் சாட்சியாக இருப்பவனுக்கு வெல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. நிர்ப்பந்தமும் மன அழுத்தமும் மனதை மந்தமாக்கிவிடும். அதனால் விளையாட்டைவிட்டு வெளியே வந்து விட்ட, வெறும் கவனிப்ப வனாக மட்டுமே இருக்கும் ஒரு மனிதனே அதைப் பற்றிய சரியான கருத்தைக் கொடுக்க முடியும்.

காமம் என்பது என்ன?

இன்று, உயிரியல் எந்த ആണும் 100 சதவிகித ஆணல்ல, எந்தப் பெண்ணும் 100 சதவிகித பெண்ணல்ல என்று நிரூபித்திருக்கிறது. ஒரு ஆண் 51 சதவிகிதம் ஆணாகவும் 49 சதவிகிதம் பெண்ணாகவும் இருக்கிறான். அதே போன்று, ஒரு பெண் 51 சதவிகிதம் பெண்ணாகவும், 49 சதவிகிதம் ஆணாகவும் இருக்கிறாள்.

வெறும் 1 சதவிகித வித்தியாசம்தான்.

நமது பண்டைய ரிஷிகளும், குருமார்களும் நமக்கு இதைப்பற்றிய சிறந்த தெளிவை அளித்திருக்கின்றனர். நீங்கள் உங்கள் தந்தையின் மூலாதாரத்தில் இருந்தும், தாயின் மூலாதாரத்தில் இருந்தும் பிறந்திருக்கிறீர்கள். பிறகு எவ்வாறு நீங்கள் வெறும் ஆணாக மட்டுமோ அல்லது பெண்ணாக மட்டுமோ இருக்க முடியும்? இருவரது குணாதிசயங் களும் உங்களிடம் நிச்சயமாக இருக்கும்! இல்லையா?

சிவபெருமானை அர்த்த நாரீஸ்வரராக - பாதி ஆணும் பாதி பெண்ணுமான உருவமாக உருவகப்படுத்தியிருப்பதன் காரணம் இதுவே. ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், நாம் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சக்திகளின் உடல் வெளிப்பாடு. நாம் முழுமையானவர்கள்; பிளவுபட்டவர்கள் அல்ல.

காமத்தைப் பற்றிய அனைத்துக் கருத்துக்களையும் தந்த்ரா மிகவும் அழகாகக் கையாள்கிறது. புனித நூல்களில், சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த விஷயங்களைப் பற்றி விளக்குவதாக வருகிறது.

5000 வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அந்த உள்நோக்குப் பார்வை இன்றும் உயிரியல் கூற்றுப்படி பொருந்த மாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

முழுமையாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாக வும் இருப்பதற்கு, நமது இயல்பான ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் ஏற்றுக் கொள்வதும் வெளிப்படுத்து வதும் அவசியம்.

ஆனால் உண்மையிலேயே அது நடக்கிறதா? நாம் வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறோமா?

பிறந்த கணம் முதற்கொண்டே உங்களுக்கு சமூகம் ஆண் அல்லது பெண் என முத்திரை குத்தி விடுகிறது. மேலும்

ஒரு ஞானமடைந்த மனிதன் மட்டுமே,
உங்களுக்குக் காமத்தைப் பற்றிய
அறிவியலைக் கொடுக்க முடியும்.

நீங்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. ஆண்கள் தங்களது பெண் தன்மையை வெளிப் படுத்துவதையும், பெண்கள் தங்களது ஆண் தன்மையை வெளிப் படுத்துவதையும் சமூகம் அனுமதிப்பதில்லை. மிகச் சிறு வயதிலிருந்தே நமது இருப்புத் தன்மையின் ஒரு பாதி அடக்கி வைக்கப்படுகிறது.

ஏழு வயது வரையில், சமூக நெறிப்படுத்தல்கள் இன்னும் ஆழமாக வேரூன்றாத வரையில், குழந்தைக்குத் தான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பது பற்றிய விழிப்பு கிடையாது. அதனால்தான் சிறு குழந்தைகளிடம் ஒரு முழுமையான உணர்வு இருக்கிறது. அவன் மையத்திலும், பாதுகாப்பாகவும் இருக்கிறான். அதனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறான்! கிட்டத்தட்ட ஏழாவது வயதில், குழந்தை சமூகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுகிறது.

ஒரு ஆண் குழந்தை பொம்மைகளுடனும், சமையல் அறைச் சாமான்களுடனும் விளையாடுவது ஊக்குவிக்கப்படுவ தில்லை. ஒரு பெண் குழந்தை பந்தயக் கார் மற்றும் ராக்கெட் பொம்மைகளுடன் விளையாட விரும்புவது அங்கீகரிக்கப் படுவதில்லை. அவர்களின் துணிமணிகள் மற்றும் மற்ற பொருட்களின் வண்ணங்களில் கூட பாகுபாடு இருக்கிறது. நீங்கள் நீலத்தைப் பையன்களுக்கும் இளஞ் சிவப்பைப் பெண்களுக்கும் தேர்ந்தெடுக்கிறீர்கள், சரிதானே?

முந்தைய நாட்களில் குழந்தையைப் பெறுவது மட்டுமே பெற்றோர்களின் பொறுப்பு. நான்கு வயதில் குழந்தையை குருகுலத்தில் குருவிடம் ஒப்படைத்து விடுவார்கள். குருகுலத்தில் குழந்தைகளுக்கு 7 வயதில், அறிவுக் கூர்மையைத் தூண்டி

| இன்று உயிரியல் எந்த ആണும் நூறு சதவீதம் ஆணல்ல, | | --- | | எந்த பெண்ணும் நூறு சதவீதம் பெண்ணல்ல | | என்று நிரூபித்திருக்கிறது. |

விடுவதற்கான மந்திர தீட்சையான காயத்ரி மந்திரம் போதிக்கப்படும். அவர்களுக்கு ஏதேனும் ஆன்மீக அனுபவங்கள் கிடைத்திருந்தால் 14 வயதில், உலக தத்துவ நூல்களில் தலை சிறந்த நூலான பிரம்മസூத்திரம் போதிக்கப்படும். இல்லை எனில், காமத்தைப் பற்றிய அறிவியலான காമസூத்திரம் போதிக்கப்படும். அதனால் அவர்கள் குடும்ப வாழ்க்கைக் கலையைக் கற்றனர். 21 வயதிற்குள் அவர்களுக்கு ஞானம் கிடைத்துவிட்டால், அவர்களுக்கு சன்யாச தீட்சை கொடுக்கப்பட்டது. இல்லாவிடில், அவர்களுக்கு யோக சூத்திரங்கள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு தான் ஒரு குழந்தை, ஒரு குருவின் வழிகாட்டுதலிலும் அன்பிலும், தன் இயல்பான வழியில் வளர அனுமதிக்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது, பெரும் சேதத்தை விளைவிக்கும் கடுமையான நெறிப்படுத்துதல்கள் குழந்தையின் மீது திணிக்கப் படுகின்றன. குழந்தை, சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத பகுதியை தனக்கு உள்ளே அடக்கி வைக்க ஆரம்பிக்கிறது. நாம் உணராவிடினும், குழந்தைக்கு இந்தக் கால கட்டம் மனதளவில் மிகவும் வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இருப்புத் தன்மையின் ஒரு பாதியிலிருந்து துண்டிக்கப்பட்டு, திடீரென்று தான் வேருடன் பிடுங்கப்பட்டதாக உணர்கிறான். இந்த அடக்கப்பட்ட பாதியையே பின்னர் அவன் வெளியே தேடத் தொடங்குகிறான்.

பாருங்கள்... மனிதனின் உள்ளார்ந்த இயல்பு நிறை வடைந்திருப்பது. அவன் பூரணத்தில் இருந்தே வருகிறான்; மீண்டும் அதையே அடைய விரும்புகிறான். அதனால் இழந்த ஒரு பாதியை, அடக்கப்பட்ட பாதியை விழிப்பின்றியே தேடத் தொடங்குகிறான். தன்னிடமிருந்து இழந்த பாதிக்கான மாற்றை, வெளியுலகத்தில் தேடத் தொடங்குகிறான். ஆண் குழந்தை

| நாம் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சக்திகளின் உடல் வெளிப்பாடு - சிவபெருமானை அர்த்த நாரீஸ்வரராக உருவகப் படுத்தியிருப்பதன் காரணம் இதுவே. | பெண்ணின் சமீபத்தையும், பெண் குழந்தை ஆணின் சமீபத்தையும், தேடத் தொடங்குகிறது.

காமத்தைப் பற்றிய முழுக் கருத்தும் இங்குதான் ஆரம்பிக் கிறது. காமத்தைப் பற்றிய கருத்து வேர் விடுவது இவ்வாறுதான்.

7 வயதுமுதல் 14 வயது வரையிலான கால கட்டத்தில், குழந்தை பெற்றோரின் அருகாமையில் இருக்கிறது. அவர் களிடமிருந்து ஒரு இலட்சியப் பெண்1 அல்லது இலட்சிய ஆண்2 எவ்வாறு இருக்க வேண்டும் என்பது போன்ற முன்மாதிரி உருவங்களைச் சேகரிக்கிறது. ஆண் குழந்தைக்கு, அவனது அடக்கப்பட்ட இயல்பின் பாதியை அவன் தாயின் உருவமும், பெண் குழந்தைக்கு அவளது அடக்கப்பட்ட இயல்பின் பகுதியை அவள் தந்தையின் உருவமும் மாற்றாக இருந்து நிரப்புகிறது.

அதனால்தான் ஒவ்வொரு ஆண் குழந்தையின் முதல் கதாநாயகி அவனது தாயாகவும், ஒவ்வொரு பெண் குழந்தையின் முதல் கதாநாயகன் அவளது தந்தையாகவும் இருக்கிறார்கள். இதுவே எழுதப்படாத சட்டம்! இந்த ஆழமான தேடலே, ஃப்ராய்டின் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்3 மற்றும் எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்4 என்றழைக்கப்படும் உளவியல் தத்துவங்களின் பின்னால் இருப்பது.

ஒரு ஆண் தன் மனைவியிடமிருந்து, தன் தாயிட மிருந்து பெற்றதைப் போன்ற அரவணைப்பையும், ஒரு பெண் தன் கணவரிடமிருந்து தன் தந்தையிடம் இருந்து அனுபவித்ததைப் போன்ற பாதுகாப்பையும், உறுதியையும் எதிர்பார்க்கின்றனர்.

உடைந்து போன இல்லங்களில், இறப்பாலோ அல்லது விவாகரத்தாலோ, தாயின் அல்லது தந்தையின் அருகாமையை இழந்த குழந்தைகள் ஒரு முழுமை பெறாத உணர்வைச் சுமந்து

Ideal Woman

Idean Man

Oedipus Complex-மகனுக்குத் தந்தையைவிட தாய் மீது இருக்கும் அதிகப் பற்று.

Electra Complex-மகளுக்குத் தாயை விட தந்தையின் மீது இருக்கும் அதிகப் பற்று.

கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பெற்றோர்களால் ஏற்படும் பதிவு முதலானதும், ஆழமானதும் ஆகும். வளர்ந்து, நீண்ட காலம் ஆன பிறகு கூட, உங்கள் தாய் அல்லது தந்தையுடன் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தப் பதிவை உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து ஒருபோதும் அழிக்கவே முடியாது.

பதினாங்கு வயதில் குழந்தை உடலளவில் முதிர்ச்சி அடைகிறது. இயற்கையாகவே, சமூகத்தின் சட்ட திட்டங்கள் பெற்றோராக இருப்பினும் கூட எதிர் பாலினருடன் பழைய நெருக்கத்தை அனுமதிப்பதில்லை. மேலும் அவர்களது செயல் பாடுகள் வேறு பலவிதங்களிலும் சென்று விடுவதால், அவர்கள் முன்போல அவர்களது பெற்றோர்களுடன் நிறைய நேரம் செலவிடுவது இல்லை.

அதனால் 14 வயதில் தேடல் தொடர்கிறது; ஆனால் இந்த முறை வெளியுலகத்தில்; இந்நாட்களில் அது 14 வயதிற்கும் முன்னதாகவே நிகழ்கிறது. இந்நாட்களில் சிறுவர்கள் மிக சிறு வயதிலேயே தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகிய வற்றுக்கு வெளிப்படுத்தப்படுவதால், அவர்கள் மனதளவில் வேகமாக வளர்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அறிகுறி அல்ல. எது எப்படியோ, ஏறக்குறைய 14 வயதில் வெளியுலகத்தில் தேடல் ஆரம்பிக்கிறது.

குழந்தை இப்பொழுது வெளியாட்களிடமிருந்தும், ஊடகங்களின் வாயிலாகவும் கற்பனை உருவங்களைச் சேகரிக் கிறது. ஊடகங்களுக்கும் இது நன்றாகத் தெரியும். அதனால்தான் எல்லா விளம்பரங்களிலுமே ஒரு கவர்ச்சி இழையோடிருப் பதைக் காணலாம். ஒரு கவர்ச்சியான பெண்ணோ அல்லது ஆணோ ஒரு பொருளுக்கு - அவர்களுக்கும் அந்தப் பொருளுக்கும் ஒரு

காமத்தைப் பற்றிய அனைத்துக் கருத்துக்களையும் 'தந்திரா' அழகாக கையாள்கிறது.

சம்பந்தமும் இல்லையென்றால்க்கூட - விளம்பர அழகியாகவோ அல்லது அழகனாகவோ அதில் இருப்பத்தைக் காணலாம்.

ஏறக்குறைய எல்லா மோட்டார் பைக் விளம்பரங்களும் பெண்களைக் காண்பிக்கின்றன - எத்தனை பெண்கள் மோட்டார் பைக் ஓட்டுகிறார்கள்?! எந்தவிதப் பொருளாக இருந்தாலும், புன்சிரிப்புடன் ஒரு பெண் அதை பரிந்துரைத்துக் கொண்டிருப் பத்தைக் காணலாம். நீங்கள் கடைக்குச் செல்லும் பொழுது, சரியாக அந்தப் பொருளைத் தேர்ந்தெடுப்பீர்கள் - அந்தப் பெண் அதனுடன் வருவ தில்லை என்பதையும் மறந்து! ஒரு சாதாரண 'ப்யூர் மாஜிக் குக்கீஸ்' விளம்பரம் கூட பெண்களைத்தான் காட்டுகிறது. உங்களுடைய அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளை இப்படியாகப் பணம் பண்ணுவதுதான் ஊடகங்களின் வழியாகும்.

எல்லா விதமான ஊடகங்ளுமே கனவுகளை விற்பவர் களைத் தவிர வேறில்லை. நாம் இந்தக் கனவுகளை எல்லாம் சேகரித்து, நம் மனதில் ஓட விட்டுக் கொண்டிருக்கிறோம் - நமது தாகத்தைத் தணித்து விடலாம் என்ற நம்பிக்கையில். இது சாத்தியமா? உங்களுடைய தண்ணீருக்கான தாகம் உப்பைத் தின்பதன் மூலம் தணிந்து விடுமா? தணியாது! நீங்கள் அப்படிச் செய்தால், உங்கள் தாகம்தான் அதிகரிக்கும், இல்லையா?

நீங்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருந்தால், விளம்பரப் பலகைகள் உங்களை ஒரு போதும் முட்டாளாக்காது; அவற்றைப் பார்ப்பதன் மூலம், சந்தையில் இருக்கும் சமீப கால விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவை உங்களை ஏமாற்றாது.

மனிதனின் உள்ளார்ந்த இயல்பு நிறைவடைந்திருப்பது. அவன் பூரணத்தில் இருந்தே வருகிறான். மீண்டும் அதையே அடைய விரும்புகிறான். நீங்கள் அவற்றால் பாதிக்கப்பட மாட்டீர்கள். அவற்றையும் மற்ற பொருள்களைப் போல் பார்த்து விட்டு அத்துடன் விட்டு விடுவீர்கள். நீங்கள் அதை நோக்கிய ஒரு விழிப்பற்ற, உடனடியான ஈர்ப்பை உணர மாட்டீர்கள். எதிர்வினை புரியும் மனதிற்கு, தீர்மானிக்கும் உரிமையை நீங்கள் அளிக்கும் பொழுது தான் தொல்லைக்கு உள்ளாகிறீர்கள். எதிர்ச்செயல் புரியும் மனதைக் கரைத்து விட்டு, உங்களால் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். இதை அடைவதற்கு தியானம் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் பாருங்கள், ஒரு பக்கம் ஊடகங்கள் உங்கள் கற்பனைகளுக்குத் தீனி போட்டாலும், மறுபக்கம் சமூகம் உங்களை அடக்கி வைக்கவே முயற்சி செய்கிறது. மேலும் உங்களது கற்பனைகளையும், ஆசைகளையும் அடக்கி வைக்க சமூகம் முயற்சி செய்ய முயற்சி செய்ய, அவை மேலும் மேலும் வளர்கிறது; ஏனெனில் சமூகம் அதன் மூல காரணத்தை அறிந்து கொள்ளாமல் அறிகுறிகளை அடக்க முயற்சி செய்கிறது. வெறுமனே ஒரு மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டி விட்டு அதன் வேர்களை அப்படியே விட்டு விட்டால் என்னவாகும்? மரம் இன்னும் செழிப்பாக வளரும், அவ்வளவுதான்!

எப்படியாயினும், இந்த சில வருடங்களில், நாம் எல்லா விதமான ஊடகங்களின் வாயிலாகவும் கருத்துக்களைச் சேகரித்து ஒரு முழுமையான பெண் அல்லது ஆணின் உருவத்தை மனதில் உருவாக்கிக் கொள்கிறோம். ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் சிறந்த நாசி, சிறந்த கண்கள், சிறந்த தோற்றம் என்று சேகரித்து நமது 'இலட்சிய மனிதனை' உருவாக்கிக் கொள்கிறோம். நாம் ஒரு வெட்டி ஒட்டும் முறையைப் பின்பற்றுகிறோம்! உங்கள் கணினிகளில், நீங்கள் எப்பொழுதும் வெட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?

ஒவ்வொரு ஆண் குழந்தையின் முதல் கதாநாயகி அவனது தாய். ஒவ்வொரு பெண் குழந்தையின் முதல் கதாநாயகன் அவளது தந்தை. இதுவே எழுதப்படாத சட்டம்.

இந்த நிலை கிட்டத்தட்ட 7 வருடங்கள் நீடித்து இருக்கும்; நாம் 20 அல்லது 21 வயதை அடையும் வரை. இந்த சமயத்தில் ஊடகங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ளுதல் போய் விடுகிறது - ஆனால், அவற்றில் இருந்து பெற்ற கருத்துக்கள் நம் மனதில் ஏற்கனவே ஆழமாக வேரூன்றி விடுகிறது. பிறகு ஒரு புதிய தேடல் ஆரம்பிக்கிறது - அந்த இலட்சிய மனிதனை நமது நிஜ வாழ்வில் தேடுவது. இந்தத் தேடல் நமக்கு கணவனாக அல்லது மனைவியாக வரப் போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியது. இங்குதான் எதிர்பார்ப்புகள் ஆரம்பிக்கின்றன.

அடுத்த 7 வருடங்களுக்கு, இந்தத் தேடல் தொடர்கிறது. நாம் ஒவ்வொரு மனிதராக முயற்சி செய்து ஏமாற்றம் அடை கிறோம். அறிவுள்ள சில மனிதர்கள், சிறிது காலத்தில், கனவுகள் உண்மையாக முடியாது என்பதைக் கண்டு கொள்கிறார்கள். கனவுகள் உண்மையாக முடியாத காரணத்தினால்தான், கனவுகள் என்று அழைக்கப்படுகின்றன! ஆனால், பலர் அதைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு 90 வயது மனிதர் தினமும் கடற்கரையில் காலை முதல் மாலை வரை அமர்ந்து மக்களை கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம். இதைக் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு மனிதர் அவரிடம் சென்று, “நீங்கள் தினமும் இங்கு அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், “நான் எனக்கு மனைவியாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன்”. இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த அந்த மனிதர் கேட்டார், “நீங்கள் ஏன் உங்கள் இளமையிலேயே தேடியிருக்கக் கூடாது?”. வயதான மனிதர் பதிலளித்தார், “நான்

எல்லாவிதமான ஊடகங்களுமே கனவுகளை விற்பவர்களைத் தவிர வேறல்ல. என் 30-வயதிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்''. திகைப்படைந்த அந்த மனிதர் கேட்டார், "நீங்கள் எந்த மாதிரி பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?'' அவர் பதில் சொன்னார், "நான் ஒரு முழுமையான பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறேன்''. அவர் கேட்டார், "அது போன்று ஒருவரைக் காணவேயில்லையா?''. வயதான மனிதர் சொன்னார், "என் மனதில் இருப்பது போன்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஆனால், அவளுடன் சரிப்படவில்லை''. அந்த மனிதர் ஏன் என்று கேட்டார். வயதான மனிதர் சொன்னார், "அவளும் ஒரு முழுமையான ஆணைத் தேடிக் கொண்டிருந்தாள்!''.

(பலத்த சிரிப்பு!)

நமது மனதில் வைத்துக் கொண்டிருக்கும் உருவத்துடன் முழுமையாகப் பொருந்தும் ஒன்றைப் பெற முயற்சி செய்யும் பொழுது இதுதான் நிகழும்.

ஆனால், ஒரு நீண்ட தேடலுக்குப் பிறகு, நமது மனதிலுள்ள உருவத்துடன் பொருந்துவது போன்ற ஒருவரைத் திடீரென்று காண்போம் - ஒரு தொலைவிலிருந்து. நமது மனதிலுள்ள படம் பசுமையாக இருக்கிறது - அந்த மனிதர், நாம் பார்க்கும் உருவமும் பசுமையாகத் தோன்றும் கிறது. பிறகு, எல்லாமே பசுமையாக இருக்கிறது! ஒரு பொருத்தமானவரைக் கண்டுபிடித்து விட்டது போல் தோன்றுகிறது!

இந்த நிகழ்வைத்தான் நாம் 'காதலில் விழுவது' என்றழைக்கிறோம். இதுதான் காதலில் விழுவதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல். இது எப்பொழுதுமே காதலில் 'விழுவதுதான்', ஒருபோதும் காதலில் 'எழுவது' அல்ல என்பதைக் கவனியுங்கள்! இது காதல் என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கும்

| உங்களுடைய தண்ணீருக்கான தாகம் உப்பை தின்பதன் மூலம் தீர்ந்து விடுமா? |

ஹார்மோன்களின் குறும்பைத் தவிர வேறெதுவுமில்லை. ஏனெனில், உண்மையிலேயே என்ன நிகழ்கிறதென்றால், நம்முடைய வலுவான தேவைகளினாலும் எதிர்பார்ப்பு களினாலும், விஷயங்களை நாம் விரும்புவது போன்றே காண்கிறோம். நமது மனதில் இருக்கும் உருவத்தை அடுத்தவர்களின் மீது பிரதிபலிக்கிறோம்.

ஆகவே, எப்படியாயினும் உலகம் பசுமையாலும், இசையாலும் நிரப்பப்படுகிறது. வாழ்க்கை கவிதையாகிறது. இறுதியில் நமது தேடல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது! இந்த நிலையில்தான் நாம் கவிதை எழுதவும், ஓவியங்கள் வரையவும் இன்னும் என்னவெல்லாமோ செய்யவும் ஆரம்பிக்கிறோம்.

இந்த இடைவெளியைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக் கும் வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருக்கும். நாமும் ஒருவர் மீது மற்றொருவர் கற்பனைகளைத் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருப்போம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதர் அருகில் வர வர, நாம் பசுமையாகக் காண்பது பசுமையல்ல, வெளிர் பசுமையே என்று உணருகிறோம். அது பரவாயில்லை என்று மேலே செல்கிறீர்கள். சிறிது காலத்தில், இன்னும் நெருங்கி வரும்பொழுது அது வெளிர் பச்சை கூட அல்ல, உண்மையில் ஒரு விதமான மஞ்சள் என்று உணருகிறீர்கள்.

ஆனால், இந்த நிலையில் நமது கற்பனை பொய்த்து விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லத்தால், நாம் ஏதோ சாக்குபோக்குச் சொல்லிச் சமாளிக்க ஆரம்பிக்கிறோம். நாம் நமக்குள்ளேயே ‘இதுதான் வாழ்க்கை! எல்லாம் சரியாக இருக்க முடியாது!’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நிஜத்துடன் வாழ்வதற்கு அசாதாரணமான தைரியமும், அறிவுக்

| ஒரு பக்கம் ஊடகங்கள் உங்களுடைய கற்பனைகளுக்குத் தீனி போட்டாலும், மறுபக்கம் சமூகம் உங்களை அடக்கி வைக்கவே முயற்சி செய்கிறது. |

கூர்மையும் தேவை. அதனால் நாம் அதற்குப் பதிலாக இந்த நண்டிச் சாக்குகளை, நமக்குப்பாதுகாப்பு அமைப்பாக, நிஜத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு உபயோகித்துக் கொள்கிறோம்.

இறுதியில், போதுமான அளவு நெருங்கி வந்தவுடன், அது மஞ்சள் கூட இல்லை, வெறும் வெள்ளைதான் என்பதைக் கண்டு கொள்கிறோம்! நமக்கு உள்ளே இருப்பது பசுமையாகவும் வெளியே இருப்பது வெளுப்பாகவும் இருக்கிறது. கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை.

ஒரு சின்ன கதை...

ஒரு மனிதன் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடி யிலிருந்து தவறி சாலையில் விழுந்து விட்டான். ஒரு வழிப் போக்கன் அவனிடம் ஓடிச்சென்று கேட்டான், "விழுந்ததில் உங்களுக்கு அடிபட்டு இருக்குமே". அந்த மனிதன் சொன்னான், "இல்லை. விழுந்ததினால் அடிபடவில்லை. திடீரென்று தடுக்கப் பட்டதால்தான் அடிபட்டது!".

(சிரிப்பு)

காதலில் மிதந்து கொண்டும், பாசாங்கு செய்து கொண்டும் இருக்கும் வரையில், போதுமான இடைவெளியும் குறைவான நேரமும் வைத்துக் கொண்டிருக்கும் வரையில், நாம் நன்றாகத் தான் இருப்போம்; ஒரு கனவுலகில் இருப்போம்; செயல்படும் நிலையில் இருப்பதில்லை. மிதப்பது நின்று உண்மையான உறவு ஆரம்பிக்கும் பொழுதுதான், இடைவெளி குறைந்து நேரம் அதிகரிக்கும் பொழுதுதான், பிரச்சினை ஆரம்பிக்கிறது!

நீங்கள் சேகரிக்கும் கனவுகள் அதிகரிக்க அதிகரிக்கத் தரையைத் தொடுமுன் விழும் நேரமும் அதிகரிக்கும், அதனால்

| எப்பொழுதுமே காதலில் விழுவதுதான். எழுவது அல்ல. இது காதல் என்ற முகமுடியை அணிந்து கொண்டிருக்கும் ஹார்மோன்களின் குறும்பைத் தவிர வேறல்ல. |

பாதிப்பும் அதிகமாக இருக்கும். உங்கள் கனவுகள் குறைவாக இருக்குமானால், நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய விஷயங்களும் குறைவாக இருப்பதால் தொல்லைகளும் குறைவாகவே இருக்கும். உங்களிடம் எந்த விதமான கனவோ கற்பனையோ இல்லை என்றால், நீங்கள் உடனே உங்கள் ஆத்ம நாயகன் அல்லது நாயகியை சந்தித்து விடுவீர்கள். உங்களுக்குக் கனவுகளே இல்லாதபட்சத்தில், நீங்கள் கரம் பிடிக்கும் எவரும் உங்கள் ஆத்ம நாயகன்1 அல்லது ஆத்ம நாயகி¹ ஆகிவிடுவர்.

உயிருடன் இருக்கும் எந்த மனிதனாலும் நம் மனதில் இருக்கும் உருவத்தின் அளவிற்கு வாழ முடியாதென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உருவம் நிஜத்திலிருந்து உருவான தல்ல! அந்த உருவம் நமது கற்பனை உலகின் பல பகுதிகளில் இருந்தும் வெட்டி ஒட்டப்பட்டது! எந்த உருவமும் நிஜத்துடன் பொருந்தாது - ஏனெனில், அது ஒரு வெறும் கனவு உருவம் மட்டுமே!

உங்கள் உருவங்களை நிஜவாழ்வின் பாத்திரங்களில் இருந்தும், நீங்கள் பார்த்துக்கொண்டுஇருக்கும்-உங்களைச்சுற்றியுள்ள மனிதர்களிடம் இருந்தும் சேகரித்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், நீங்கள் ஊடகங்களில் இருந்து சேகரிக்கிறீர்கள். ஊடகங்களே இச்சையினால் தவித்துக் கொண்டிருக்கிறது! பிறகு அதனால் எவ்வாறு உங்களுக்கு ஏதேனும் ஒரு வழிகாட்டுதலையோ அல்லது நிவாரணத்தையோ வழங்க முடியும்?

அதனால்தான் பெயரளவிலான காதல் அனைத்தும், அநேகமாக வேதனையிலேயே முடிகின்றன. நாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக, மற்றவரால் சுய நலத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட உணர்வுடன் முடித்துக் கொள்கிறோம். நமது

Soul mate¹

அடிப்படை இயல்பே நடந்தவற்றிற்கு அடுத்தவரின் மீது பழி போடுவதுதான்!

ஆனால் அது அடுத்தவரின் தவறுதானா?

இல்லை! குற்றம் எப்பொழுதும் உங்களிடமே இருக்கிறது. ஏனெனில் நீங்கள் எதையோ எதிர்பார்த்து, உங்கள் கற்பனையை அடுத்தவரின் மீது திணிக்க முயற்சி செய்தீர்கள்! பிறகு தோல்விக்குப் பொறுப்பானவர் யாராக இருக்க முடியும்?

பாருங்கள், சில சம்பவங்களில் ஒரு மனிதன் கிறுக்குத் தனமாகவோ அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வொத வகையிலோ நடந்து கொள்ளக் கூடும். இவையெல்லாம் விதிவிலக்குகள். இது போன்ற சமயங்களில், இது போன்ற நடத்தையுள்ளவர்களுடன் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நான் சொல்வதை இது போன்ற சமயங்களில் பயன்படுத்தத் தேவையில்லை. எப்பொழுதும் விதிவிலக்குகள் என்பது இருக்கத்தான் செய்யும்.

ஆனால் நான் சொல்வது உண்மையில் பல வீடுகளில் நிஜத்தில் நிகழ்வதுதான்; இருவருமேசாதாரணமாக இருந்தும் ஒருவித அமைதியின்மை நிலவுகிறது. ஆனால் ஒருபோதும் அதனைப் பார்க்க முயற்சிப்பதில்லை. நாம் ஒருபோதும் உண்மையுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை! நாம் எப்பொழுதுமே விஷயங்களை ஒரு அழகான தரை விரிப்புக்கடியில் பெருக்கித் தள்ளி விட்டு, நம்மையே ஏமாற்றிக் கொண்டு அதன் மீது நடந்து செல்லவே விரும்புகிறோம்.

உங்களிடமிருக்கும் ஒரு திறந்த காயத்திற்கு, உடனே சிகிச்சை அளித்து அதிலிருந்து நிவாரணம் பெறுவதுதானே மிகவும் தார்க்க ரீதியான ஒரு செயலாக இருக்கும்? அதற்குப் பதில் அதை

கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை. தங்கக் கவசத்தாலும் பட்டுத் துணியாலும் மூடி, காயமே இல்லை என்று நம்பிக் கொண்டிருப்பீர்களானால் என்ன நிகழும்? அது வெறும் முட்டாள்தனமாகத்தானே இருக்கும், இல்லையா?

அதனால் நான் சொல்ல முயற்சிப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கற்பனைகளை விட்டு விட்டு நிஜத்தில் வாழத் தொடங்குங்கள்.

ஒரு சின்ன கதை...

ஒரு மனிதன் அவனது நண்பனுக்குத் திருமணப் பரிச ாக ஒரு நாய்க் குட்டியை அளித்தான். மூன்று மாதங்கள் கழித்து அவனை வீதியில் சந்தித்தான். “திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?” என்று கேட்டான். “ஓ, காலப்போக்கில் சில சிறு மாற்றங்கள், அவ்வளவுதான்” என்று நண்பன் பதிலளித்தான். “என்ன மாற்றங்கள்?” அவன் கேட்டான். “ஆரம்பத்தில் உன்னுடைய நாய்க் குட்டி என்னைப் பார்த்துக் குரைக்கும், என்னுடைய மனைவி செய்தித் தாளைக் கொண்டு வந்து தருவாள். இப்பொழுது என் மனைவி என்னைப் பார்த்துக் குரைக்கிறாள், உன்னுடைய நாய்க்குட்டி செய்தித் தாளைக் கொண்டு வந்து தருகிறது!” என்று அவன் பதிலளித்தான்.

(சிரிப்பு!)

தேன் நிலவு முடிந்தவுடன் என்ன நடக்கிறது? அதை தேன் சூரியன் என்று சொல்லாமல் தேன்நிலவு என்று சொல்வதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை! அந்த சந்தோஷம் தேய்வதற்கு வெறும் 15 நாட்களே ஆகிறது! நான் சொல்கிறேன்... நீங்கள் மிகவும் அழகான ஒரு விளம்பர அழகியை மணந்தாலும், அவள் அழகு உங்கள்

| உயிருடன் இருக்கும் எந்த மனிதனாலும் நம் மனதில் இருக்கும் உருவத்தின் அளவிற்கு வாழ முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். |

கண்களில் வெறும் 15 நாட்களில் மங்கி விடும். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே வேறு எதையோ பற்றி மனக் கோட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! ஏனெனில் நீங்கள் உண்மையில் நிறைவைத் தேடுவது உங்களுக்குள்ளே தான்; ஆனால் அது தெரியாமல், அதை வெளியே பல்வேறு விதமான பொய்த் தோற்றங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு பெண்மணி அவளது மகளுக்கு கல்யாண சம்பந்த மாக அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள்: "கேள் அன்பே! நீ யாரையாவது காதலிப்பாயானால், அது வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அது உண்மையான காதலாக இருக்கும்". மகள் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந் தாள். தாய் தொடர்ந்தாள், "என்னுடைய அறிவுரை வார்த்தை களை எடுத்துக் கொள். நான் என்ன பேசுகிறேன் என்பதை நன்றாக அறிவேன் என் அன்பே. எது எப்படியாயினும், நான் மூன்று முறை மணந்து கொண்டிருக்கிறேன்".

(பலத்த சிரிப்பு!)

பிரச்சினை என்னவென்றால், ஒவ்வொருவருமே அறிவுரை கூறத் தயாராக இருக்கின்றனர், ஆனால் அதை எடுத்துக் கொள்ளத்தான் ஒருவர் கூட இல்லை! ஒவ்வொரு வருமே காதல், கற்பனை, கனவுகள் மற்றும் இதுபோன்ற பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவாற்றத் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் அதுவே அவர்கள் வாழ்க்கை என்று வரும் பொழுது, அனைத்திற்கும் என்னவாகிறது? அது வெறும் இன்னொரு கனவாகவே, இன்னொரு கற்பனையாகவே இருந்து விடுகிறது, அவ்வளவே!

எப்படியாயினும், இந்தச் சமயத்திலாவது, நிஜத்தை ஏற்றுக் கொண்டோமாயின், பிரச்சினை ஏதும் இருக்காது. ஆனால் நாம்

காதலில் எப்போதும் 'விழுவதுதான்'. ஒரு போதும் காதலில் 'எழுவது' அல்ல என்பதை கவனியுங்கள்.

சும்மா இருக்கிறோமா? இல்லை! நாம் நமது தூரிகையையும் வண்ணங்களையும் எடுத்துக் கொண்டு, வெள்ளையை மீண்டும் பசு மையாக மாற்ற முயற்சி செய்கிறோம்! அடுத்தவரை நமது மனதிலுள்ள உருவத்துடன் பொருந்துமாறு மாற்ற முயற்சி செய்கிறோம். எந்த உறவிலும் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயலாகும். நாம் ஒருவரையொருவர், மற்றவர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தோமோ, அதன்படி செதுக்க முயற்சி செய்கிறோம். நாம் அடுத்தவரை உடைமையாக்கிக் கொண்டு அவர்களையும் ஒரு பொருளாக மாற்ற முயற்சி செய்கிறோம். சக்தியைப் பொருளாக்கி இழிவுபடுத்துகிறோம். இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது - வாழ்க்கையின் முடிவற்ற போராட்டம்!

ஒரு சின்ன கதை...

ராம்கோபால் ஒரு தொழில் முறை பெயிண்டர். அவர் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், "உனக்குத் தெரியுமா, ஒரு நாள் ஒரு பெண் கையில் ஒரு சிறு கருநீல வண்ணம் தீட்டப்பட்ட மரத்துண்டுடன் உள்ளே நுழைந்து, அதே வண்ணத்தில், ஒரு மாதிரி வீட்டிற்கு நான் வண்ணம் தீட்ட வேண்டும் என்று விரும்பினாள். அந்த வண்ணம் பொருந்தி வருவதற்குள், நான் தொழிலையே விட்டு விடலாம் என்று எண்ணுமளவிற்கு ஆகி விட்டது. எதுவுமே அவளுக்குத் திருப்திகரமாக இல்லை''. நண்பர் கேட்டார். "கடைசியாக அது பொருந்தி வந்ததா?". ராம்கோபால் சொன்னார், "என் அதிர்ஷ்டம்தான்; அவளுக்கு செல் பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அவள் பேசி முடிப்பதற்குள் அந்த மரத்துண்டிற்கு வேகமாக பெயின்ட் அடித்துவிட்டேன்!".

(சிரிப்பு!)

| கனவும் நிஜமும் முற்றிலும் வெவ்வேறானவை. |

நாள் முழுவதும், ஒவ்வொரு வீட்டிலும், கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை கவனமாகக் கேளுங்கள்; செதுக்குதல் நடந்து கொண்டே யிருப்பதை கேட்கலாம். திருமணங்களுக்கு இனிமேல் நாம் மங்கல நாண் அல்லது மோதிரத்திற்குப் பதிலாக ஒரு உளியையும் சுத்தியலையும் பரிசாகக் கொடுக்கலாம்.

ஒரு மாலையில், ஒருவர் அவரது நண்பருடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அவர் நண்பரிடம் செ ான்னார், "நான் என் மனைவியை விவாகரத்து செய்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். கடந்த 6 மாதங் களில் அவள் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை". அதற்கு நண்பர் செ ான்னார், "அதுபோன்ற ஏதாவது தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் கவனமாக யோசித்துப் பார். உனக்கு அது போன்ற இன்னொரு மனைவி கிடைக்க மாட்டாள்".

(பலத்த சிரிப்பு!)

வாழ்க்கையில், நாம் தொடர்ந்து நமக்குள் இருக்கும் உருவத்தை வெளியில் இருக்கும் நிஜத்துடன் பொருத்த முயற்சி செய்து கொண்டேயிருக்கிறோம். எல்லாம் முழுமையாகப் பொருந்தி வருவதை ஒருபோதும் காண முடியாது. நமக்குள் இருக்கும் இந்த உருவங்களை எல்லாம் விட்டு விட்டால், நாம் முடிவற்ற சாத்தியக் கூறுகளைக் காணலாம்!

நீங்கள் இன்னும் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்கள் மனக்கோட்டைகளை விட்டு விடுங்கள்; அதனால் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியும்; கனவுத் துணையை அல்ல! நீங்கள் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது நீங்கள் அவருடன் வாழப் போவது வெறும் சில மாதங்களுக்கல்ல, உங்கள் வாழ்நாள்

உங்களிடம் கனவோ கற்பனையோ இல்லாத பட்சத்தில், நீங்கள் உடனே உங்கள் ஆத்ம நாயகன் அல்லது நாயகியைச் சந்தித்து விடுவீர்கள். முழுவதும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதை அலட்சியமாக நினைக்காதீர்கள். அது வாழ்க்கை முழுவதற்குமான ஒரு விஷயம்.

தற்சமயம், ஏதோ ஒரு கறுப்பு ஜீன்ஸ் அல்லது நீல டீ-ஷர்ட் உங்கள் கனவுலகத்துடன் ஒத்துப் போகலாம்; நீங்களும் அதனால் கவர்ந்து இழுக்கப் படலாம். ஆனால் நீலமோ அல்லது கறுப்போ, வெறும் 6 மாத காலத்தில் அது வெளுத்துப் போய் விடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் மனக்கோட்டைகளை1 விட்டு விடுங்கள்; அப்பொழுது தான் உங்களால் யாருடனுமே ஒரு உண்மையான உறவைத் தொடங்க முடியும். நீங்கள் அதற்குள் ஒரு உளியுடனும் சுத்தியலுடனும் நுழைந்தால், ஒரு உண்மையான உறவு நிகழ முடியாது.

பாருங்கள்:... செதுக்கும் பொழுது என்ன நிகழ்கிற தென்றால், நீங்கள் செதுக்க ஆரம்பித்து, முடித்து விட்டீர்கள் என்று நினைக்கும் தருவாயில், உங்கள் கற்பனை மாறி விடுகிறது; அது கொஞ்சம் வேறு மாதிரியாகி விட்டதால், அந்த கொஞ்சம் மாறிய கற்பனையுடன் பொருந்த நீங்கள் இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டியதிருக்கிறது! இது ஒரு முடிவற்ற சுழற்சியாகி விடுகிறது!

உங்களிடம் மனக்கோட்டைகள் இருக்கும் வரை உறவு ஒருபோதும் நிகழ முடியாது. நீங்கள் 24 மணி நேரமும் வீட்டில் இருந்தாலும், ஒருவர் மற்றவரின் கண்களைப் பார்ப்பதில்லை; ஏனெனில் நீங்கள் நிஜத்தில் வாழாமல் கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே நிஜ மனிதனுடன் வாழவில்லை-மற்றவர் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் கற்பனை

Fantasy¹ - மனக்கோட்டை / பகல்கனவு / கட்டுப்பாடற்ற கற்பனை

Fantasy¹ - மனக்கோட்டை / பகல்கனவு / கட்டுப்பாடற்ற கற்பனை

வழியாகவே பார்த்து, உங்கள் வாழ்க்கை, கடவுள் உங்களுக்களித்த தண்டனை என்ற தீர்மானத்திற்கு வந்து விடுகிறீர்கள்.

நீங்கள் திருமணமாகாதவராயிருந்தால், உங்கள் கனவு களை விட்டு விடுங்கள்; உங்கள் இரத்தம் குளிர்ச்சியடையும்; ஹார்மோனின் தொந்தரவிற்காளாக மாட்டீர்கள். நீங்கள் மனைவியை இழந்தவராயிருந்தால், உங்கள் கற்பனையை விட்டு விடுங்கள்; தனிமையினால் வேதனையடைய மாட்டீர்கள்.

உங்களால் முடிந்த வரையில் குழந்தைகள் தொலைக் காட்சியில் டூயட் காட்சிகளை காண அனுமதிக்காதீர்கள். அவர்கள் வெறுமனே இசையை ரசித்து அதனுடன் நடனம் ஆடினார்களே யானால் பரவாயில்லை; ஆனால் அவர்கள் பார்க்கும் டூயட்டுகள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உள்ளே எடுத்துக் கொள்கிறார்கள். இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. அனைத்தும் பால் உணர்வு சக்கரமான, மூலாதார சக்ரத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு வெறும்ஒருகுறிப்பே போதுமானது, மூலாதாரம்தயாராகிவிடுகிறது.

எதிர்பார்ப்புகளின் சுமையே மூலாதாரத்தின் அமைதியைக் குலைத்து விடுகிறது. அதனால் இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது. உங்கள் கனவுகளை இன்னொருவரின் மூலம் அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்தாலோ அல்லது உங்கள் எதிர்பார்ப்பு களையும் கனவுகளையும் இன்னொருவரின் மீது சுமத்தினாலோ அல்லது பிரதிபலித்தாலோ இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது.

அதற்கும் வெளியுலக வாழ்க்கை நியதிகளுக்கும் சம்பந்தமில்லை. அதற்கும் பெயரளவிலான பிரம்மச்சரியத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. அதற்கும் நீங்கள் உங்களுக்குள் பிளவுபட்டிருப்பதற்கும் சம்பந்தம் உண்டு.

உங்களிடம் கனவோ கற்பனையோ இல்லாத பட்சத்தில், நீங்கள் கரம்பிடிக்கும் எவரும் உங்கள் ஆத்ம நாயகன் அல்லது நாயகி ஆகிவிடுவர்.

பிரம்மச்சர்யம் என்பது என்ன?

பிரம்மச்சர்யம் என்பது நமக்குள் இருக்கும் அடக்கி வைக்கப்பட்ட பாதிக்காக ஏங்கிக் கொண்டிராமல் இருப்பது. நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் அடக்கப்பட்ட பாதி அல்லது பெண்ணை நீங்கள் இழக்கிறீர்கள் என்ற எண்ணமே வராத அளவிற்கு ஒரு மனநிறைவை நீங்கள் உங்களுக்குள்ளேயே அனுபவிக்க வேண்டும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், இந்த மனநிறைவை வெளியே தேடவேண்டிய தேவையின்றி நீங்களே உங்களுக்கு மிகவும் போதுமானவராக இருக்க வேண்டும்.

இந்நிலையை அடைந்து விட்டீர்களானால், நீங்கள் வெளியுலகத்தில் ஒரு பெண்ணுடனோ அல்லது இன்றியோ வாழ முடியும். அதை அடையாவிடில் திருமணம் செய்து கொண்டால் கூட, நீங்கள் தொடர்ந்து ஹார்மோன்களின் தொல்லைக்கு உட்பட்டுதான் இருப்பீர்கள். இந்த ஹார்மோன்களின் தொல்லை மனநிறைவுக்கான ஏக்கத்தைத் தவிர வேறல்ல; அது உண்மையில் உங்களுக்குள்ளிருந்து அடைய வேண்டியதாகும்; வெளி யிலிருந்து அல்ல.

இந்த மனநிறைவை அடைந்து விட்டால், நீங்கள் திருமண மானவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மனதில் அமைதி நிலவும். அதன் பிறகு நீங்கள், உங்கள் மண வாழ்க்கை யிலும் பிரம்மச்சாரியாக இருக்க முடியும்! இதுவே உண்மையான பிரம்மச்சர்யம் என்பது. அதற்குப் பதிலாக, மக்கள் பிரம்மச் சரியத்திற்காக தங்களுக்கு இயல்பான வழியிலிருந்து விலகிச் சென்று மேலும் அடக்குதலின் காரணமாக மன நோய்க்கு ஆளாகிறார்கள்.

| உங்கள் கற்பனைகளை விட்டுவிட்டு நிஜத்தில் வாழத் தொடங்குங்கள். | |---|

சரி... நான் சொல்ல முயற்சிப்பதை உங்களால் பின் தொடர முடிகிறதா? யாருக்கேனும் ஏதேனும் விளக்கம் தேவையா?

ஆனால் ஸ்வாமிஜி, நாங்கள் உள்ளே ஒரு உருவத்தைச் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட உணரவ தில்லையே....

ஆம், ஏனெனில் நாம் ஒருபோதும் உள்ளே பார்த்த தில்லை. நாம் உள்நோக்கிச் செல்வதைத் தவிர மற்ற எல்லா இடங்களுக்கும் செல்கிறோம். உங்களுக்குத் தெரியுமா, 80 சதவிகித சக்தி இந்த சக்கரத்தில் அடைபட்டிருக்கிறது! இந்தச் சக்கரத்தை சக்தியூட்ட வேண்டிய தேவை கூட இல்லை. அது வெறுமனே திறக்கப்பட்டு தூண்டி விடப்பட்டால் கூட, அதிலிருந்து வெள்ளமாகப் பாய்ந்துவரும் சக்தி உங்கள் முழு வாழ்க்கையையுமே உருமாற்றி விடக் கூடியது.

நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பார்த்தீர்களானால், உங்களுடைய துயரங்களுக்குக் காரணம், நீங்கள் பார்ப்பதற்கும் பார்க்க விரும்புவதற்கும் இடையில் ஒரு பொருத்த மின்மை இருப்பதாக எப்பொழுதும் நீங்கள் எண்ணுவதுதான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்த ‘நீங்கள் பார்க்க விரும்புவதுதான்’ நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் உருவம்.

குறைந்த பட்சம், இப்பொழுதிலிருந்தாவது, நீங்கள் பார்ப்பவற்றில் எல்லாம் உங்கள் மனதின் விளையாட்டை, விழிப்புணர்வுடன் கவனிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மனம் புகுந்து அவற்றை எடைபோடுவதற்கு முன், காட்சிகளை அது எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறே பிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களால், மனம் எவ்வாறு நுட்பமாகவும் இடையறாமலும் நீங்கள் பார்ப்பவற்றிலெல்லாம் செயல்பட்டு,

அதை ஏன் ‘தேன் சூரியன்’ என்று சொல்லாமல் ‘தேன் நிலவு’ என்று சொல்கிறோம்?

எப்பொழுதுமே நீங்கள் பார்ப்பவற்றில் ஏதோ தவறு இருக்கிறது என்று உங்களை நம்ப வைக்கிறது, என்பதைக் காண முடியும்.

சமஸ்கிருதத்தில் நமக்கு உண்மையைக் கற்பிக்கும் இரண்டு சொற்றொடர்கள் உள்ளன; திருஷ்டி சிருஷ்டி மற்றும் சிருஷ்டி திருஷ்டி. முதலாவதான திருஷ்டி சிருஷ்டி என்பது உலகத்தை உள்ளவாறே பார்ப்பது, வருவதை அப்படியே ஏற்பது, நிஜத்தில் எது இருக்கிறதோ, அதை வரவேற்பது. சிருஷ்டி திருஷ்டி என்பது உலகத்தை நாம் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அவ்வாறே நமது சொந்த வண்ணக் கண்ணாடிகளின் மூலமாகவும், நமது கனவுகளின் மூலமாகவும் காண்பது. முன்னது அமைதியான வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும், பின்னது துயரத்தை நோக்கி இட்டுச் செல்லும். சரிதானே...?

ஒரு சின்ன கதை....

ஒருமுறை ஒரு மனிதர் என்னிடம் வந்து சொன்னார், "ஸ்வாமிஜி, எங்கள் வீட்டில் இருப்பது, நானும் என் மனைவியும், வெறும் இரண்டு பேர் மட்டும்தான். ஆயினும் அமைதியில்லை!". நான் சொன்னேன், "யார் சொன்னது உங்கள் வீட்டில் இரண்டு பேர் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று? நீங்கள் நான்குபேர் இருக்கிறீர்கள்". அவர் அதிர்ச்சியடைந்தார். நான் சொன்னேன், "நீங்கள், உங்கள் உள்ளிருக்கும் பெண், உங்கள் மனைவி, அவள் உள்ளிருக்கும் ஆண்! அதனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் நான்கு பேர் என்று! உங்கள் உள்ளிருக்கும் ஆணையோ, பெண்ணையோ வெறுமனே விட்டு விடக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் வீட்டில் எப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறது என்று பாருங்கள்". அந்த மனிதர் அமைதியாகச் சென்று விட்டார்.

திருமணப் பரிசு : ஒரு உளியும் சுத்தியலும்

ஸ்வாமிஜி, பெற்றோர்கள், குழந்தைகள் போன்ற மற்ற உறவுகளில் கூட நாங்கள் அமைதியின்மையை உணருகிறோம்...

ஆம், எந்த உறவிலும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாத எந்த உறவுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளைச் செதுக்க முயற்சி செய்கிறார்கள்; குழந்தைகளும் அதையே பெற்றோர்களின் மீது முயல்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை குழந்தைகளின் வாயிலாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். நீங்கள் அனைத்து விஷயங்களையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வது உண்மை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மருத்துவராகவும் பொறியாளராகவும் வேண்டுமென்று கனவு காண்கிறார்கள். குழந்தை என்னவாக விரும்புகிறது என்று தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதைப் பற்றி ஏன் கனவு காணக் கூடாது? அது குழந்தைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

என்றைக்கு ஒரு குழந்தை பதிலுக்கு பதில் பேச ஆரம்பிக்கிறதோ, அன்றைக்கு அது வளர்ந்து விட்டது என்று பொருள். அவர்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அவனுடன் சிறிது நேரம் செலவழியுங்கள், அவனுடன் பேசுங்கள், அவனுக்கு நல்ல நண்பனாயிருந்து வாழ்க்கையில் அவன் உண்மையிலேயே என்ன செய்ய விரும்புகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆழமான அன்படனும், நம்பிக்கையுடனும் அவனுக்கு வழி காட்டுங்கள். பிறகு அவனது குறிக்கோளை உங்களது நிஜமாக்கிக் கொண்டு அவன் அதை அடைய உதவி செய்யுங்கள்.

உங்களிடம் மனக்கோட்டைகள் இருக்கும் வரையில் ஒருபோதும் உறவு நிகழ முடியாது.

பல குழந்தைகள் என்னிடம் சொல்கிறார்கள், "என் தந்தை நான் ஒரு டாக்டர் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்" அல்லது "என் தந்தை நான் ஒரு வக்கீல் ஆக வேண்டுமென்று விரும்புகிறார்" என்று. குழந்தையால் தீர்மானிக்க முடியாத நிலையில், அவன் உங்களிடம் என்ன செய்வதென்று கேட்கும் நிலையில், அவனுடைய திறமைகளைப் பற்றிய உங்கள் கணிப்பின் அடிப்படையில், நீங்கள் அவனால் என்ன செய்ய முடியும் என்பதைக் கூறலாம்.

நீங்கள் எப்பொழுதும் ஆலோசனை மட்டுமே கூறலாம்; எதையும் அவன் தொண்டைக்குள் திணிக்காதீர்கள். மேலும் இதைச் செய்வதற்கு அவனுக்கு நீங்கள் சுதந்திரத்தையும் பக்குவத்தையும் அளித்திருப்பதைப் புரிய வையுங்கள். அதனால் பின்னால் யாரையும் குறை கூற முடியாது என்பதையும் தெளிவாக்குங்கள். இதை அவன் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாருங்கள், நாம் எப்பொழுதும் கையில் உளியை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டு, நமது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் முன்பின் தெரியாதவர்களையும் விட்டு வைக்காமல், அனைவரையும் நமது சொந்த கற்பனைப்படி செதுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அவர்களும் பதிலுக்கு அவர்களது உளியைக் கொண்டு உங்கள் மீது முயற்சி செய்வார்கள். என்ன ஒரு வன்முறை!

உங்களுக்கு இன்றைய வீட்டுப்பாடம், ஒரு முழுமையான கணவன், ஒரு முழுமையான மனைவி, ஒரு முழுமையான தந்தை, ஒரு முழுமையான தாய், ஒரு முழுமையான குழந்தை, ஒரு முழுமையான நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். உங்களுக்குப் பொருந்தி வருகிற ஏதேனும் ஐந்து உறவு முறைகளைத் தேர்ந்தெடுத்து, இதை

| நீங்கள் 24 மணி நேரமும் ஒரே வீட்டில் இருந்தாலும், ஒருவர் மற்றவரின் கண்களைப் பார்ப்பதில்லை. ஏனெனில் நீங்கள் நிஜத்தில் வாழாமல் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். |

எழுதுங்கள். இதை நேர்மையாகச் செய்யவும். உங்களுடைய ஆழ்ந்த விழிப்பற்ற நிலையில், உங்கள் எல்லாக் கருத்துக்களையுமே பிரபலமான ஊடகங்களில் இருந்து எடுத்திருப்பதை நீங்கள் காணலாம். இதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.

நீங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்க் கிறீர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை உங்களுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது. அந்தக் கதாபாத்திரம் உங்களைப் பொறுத்த வரையில் ஒரு திடமான நிஜமாகி விடுகிறது. நீங்கள் விழிப்பின்றி, நிஜ வாழ்வில் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைவரிடமும் அதே போன்ற ஒரு குணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களுக்குத் தெரியுமா... மக்கள் "இலட்சிய குரு¹" என்ற உருவத்தைக் கூட அவர்கள் மனதில் வைத்துக் கொண்டிருக் கிறார்கள்? வழக்கமாக அது ஒரு வயதான மனிதனின் உருவமாக, நரைத்த தலையுடன், நீண்ட தாடியுடன், நீங்கள் புத்தகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் பார்ப்பது போன்று இருக்கிறது! அவர்கள் என்னிடம் வந்து என்னைப் பார்க்கும் பொழுது, இப்படி ஒரு இளைஞன் ஒரு உண்மையான குருவாக இருக்க முடியும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால் நானும் அதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் என்னை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், நான் அவர்களுக்கு குருவைப் பற்றிய எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை அளிக்க வேண்டியிருக்கிறது!

ஆனால் ஸ்வாமிஜி, சில சமயங்களில், உதாரணமாக வேலையில், நமது தொழிலாளிகளைக் கையாள வேண்டிய சமயங்களில், செதுக்குவது தேவையாக இருக்கிறது. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது?

உங்கள் செதுக்குதலை விழிப்புடன் செய்யுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்து செய்யுங்கள். அப்பொழுது தேவைக்கதிகமாக செய்ய மாட்டீர்கள். உங்கள் தொழிலாளிகளிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் நியாயமானவையா என்று பாருங்கள். வேறு ஏதேனும் மாற்று தீர்வுகள் இருக்கிறதா என்று பாருங்கள். முற்றிலும் தேவையென்றால் மட்டுமே, நீங்கள் மற்றவரை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

உங்களிடம் எந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதை கவனத்துடன் உபயோகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! கோபமும், இச்சையும் கூட உங்களுக்குக் கடவுளால் கொடுக்கப் பட்ட மிகப் பெரும் சக்திகள்தான். அந்த சக்தியிடம் உங்களுக்கு மரியாதை இருக்குமானால், நீங்கள் அதை வீணாக்கவோ, தவறாகப் பயன்படுத்தவோ மாட்டீர்கள்.

நாம் எப்பொழுதாவது பணத்தைத் தவறாகப் பயன்படுத்து கிறோமா? நீங்கள் பணத்தை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்த மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதை மதிக்கிறீர்கள். ஒருவன் பத்து ரூபாய் மதிப்புள்ள வேலையைச் செய்தால், நீங்கள் அவனுக்கு ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுப்பீர்களா?

ஆனால் கோபத்தைப் பொறுத்தவரையில், நீங்கள் எப்பொழுதுமே அதிகமாகத்தான் கொடுக்கிறீர்கள். ஒருவன் பத்து ரூபாய் அளவு கோபப்படும் அளவிற்குத் தவறு செய்தால், நீங்கள் ஐம்பது ரூபாய் அளவிலான கோபத்தைக் கொடுக்கிறீர்கள்! இல்லையா? ஏன்? ஏனெனில் உங்கள் கோபத்தை விழிப்பின்றி உபயோகப்படுத்துகிறீர்கள்; விழிப்புடன் அல்ல. நீங்கள் உங்கள்

உங்களால் முடிந்த வரையில் குழந்தைகள்
தொலைக்காட்சியில் டூயட் காட்சிகளைக் காண
அனுமதிக்காதீர்கள்.

கோபத்தை விழிப்புடன் உபயோகிப்பீர்களானால், அது பலன் கொடுக்கும். அதன் பிறகு குற்ற உணர்வடைய நேராது. இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

உங்கள் கோபத்தினால், ஒருபோதும் உங்கள் அமைதி குலையக் கூடாது. அவ்வாறு அமைதி குலையுமாயின், நீங்கள் கோபத்தில் விழிப்புணர்வுடன் செல்லவில்லை என்று பொருள்; கோபம் உங்களை வெல்ல அனுமதித்து விட்டீர்கள். இதுதான் உங்கள் கோபத்தை நீங்கள் சரியாக உபயோகப் படுத்துகிறீர்களா என்பதை அறியும் அளவுகோல்!

ஒரு சின்ன கதை...

ஒரு முறை ஒரு சாது, அலைந்து திரிந்து இரந்து உண்டு வாழும் ஒரு மனிதர், ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அந்த கிராம மக்களிடம் இருந்து, அவர்களது வாழ்க்கையில் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த ஒரு நாகத்தைப் பற்றி, ஒரு புகார் வந்தது. அவருக்கு மிருகங்களுடன் தொடர்பு கொள்ளும் சக்தி இருப்பது தெரியுமாதலால், எப்படியாவது அந்த நாகத்திடம் பேசி அவர்களை விட்டு விடுமாறு செய்ய வேண்டும் என்று அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். அந்த சாது நாகத்திடம் பேசினார். நாகமும் இனிமேல் எந்த கிராமவாசியையும் கடிப்பதில்லை என்று சத்தியம் செய்தது. சில மாதங்கள் கழித்து, அந்த சாது மீண்டும் அதே கிராமம் வழியாக வந்த போது, உடலெங்கும் சிராய்ப்புகளுடன், கிட்டத்தட்ட சாகும் தருவாயில் அந்த நாகத்தைக் கண்டார். “உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி காயமடைந்திருக்கிறாய்?” என்று அந்த சாது கேட்டார். அந்த நாகம் அழுதது, “ஓ சாதுவே! நீங்கள்தான் நான் இனிமேல் கிராமவாசிகளைக் கடிக்கக் கூடாதென்று சத்தியம் செய்ய வைத்தீர்கள்! நான் இன்று வரை என் சத்தியத்தைக்

| எதிர்பார்ப்புகளின் சுமையே மூலாதாரத்தின் அமைதியைக் குலைத்து விடுகிறது. அதனால் இந்தச் சக்கரம் பூட்டப்பட்டு விடுகிறது. |

காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் முன்னர் என்னைக் கண்டு பயந்த கிராமவாசிகளோ என் மென்மையை பலவீனமாக எடுத்துக் கொள்கிறார்கள். நான் கடிக்காமல் இருப்பதைக் கண்டு, தினமும் என்னைச் சித்திரவதைப் படுத்துகின்றனர். நான் என்ன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று பாருங்கள்!”. அதற்கு சாது சொன்னார், "என் அனுதாப்பத்திற்குரிய முட்டாள் நண்பனே! நான் மக்களைக் கடிக்க வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொண்டேன். அவர்களைப் பார்த்து சீற வேண்டாம் என்று சொன்னேனா?”.

நீங்கள் கோபத்தை சரியான வழியில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். சரியாக உபயோகப் படுத்தத் தெரிந்தால் கோபம் ஒரு மிகப்பெரும் சக்தி. கோபத்தைப் பற்றிய அறிவு கோபத்தைக் குறைக்கிறது.

பலர் என்னிடம் வந்து சொல்கிறார்கள், “ஸ்வாமிஜி, நான் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான் நான் நல்லதற்காக அவள் மாற வேண்டும் என்று விரும்புகிறேன்! அதனால்தான் நான் அவளுடன் சண்டை போடுகிறேன்”.

நான் சொல்கிறேன், “நீங்கள் உங்கள் மனைவியை நேசி க்கவில்லை, உங்கள் மனதிலிருக்கும் உருவத்தைத்தான் நேசி க்கிறீர்கள்”.

நீங்கள் உங்கள் மனதிலிருக்கும் உருவத்தை நேசிக் கிறீர்கள்; மேலும் உங்கள் மனைவி நீங்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளும் பொழுது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள். உங்களுடைய உண்மையான அன்பு, உங்கள் மனைவிக்கானது அல்ல; உங்கள் மனதிலிருக்கும் உருவத்திற்கானதே. நீங்கள் உண்மையிலேயே உங்கள் மனைவியை நேசித்தால், மன உருவத்தை உங்கள் மனைவியுடன் பொருந்துமாறு மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

பிரம்மச்சரியம் என்பது நமக்குள் இருக்கும் அடக்கி வைக்கப்பட்ட பாதிக்காக ஏங்கிக் கொண்டிராமல் இருப்பது.

ஆனால் உங்கள் மன உருவத்தை நேசித்தால், உங்கள் மனைவியை அந்த உருவத்துடன் பொருந்துமாறு மாற்ற முயற்சி செய்வீர்கள்.

நம்மில் பலரும் நமது மன உருவங்களை நேசிக்கிறோம். அதுதான் உண்மை. நமது இல்லங்களின் அமைதியின்மைக்கு ஆரம்பம் இதுதான். இதுதான் 'நெருக்கமான சண்டைக்கு' ஆரம்பம்! நான் சொல்கிறேன்... உண்மையிலேயே காதலர்கள் நெருங்கிய எதிரிகள்! அவர்கள் நெருக்கமாக இருந்தாலும் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஓயாமல் ஒருவரையொருவர் மேலோங்கி நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஒரு நெருங்கிய பகைமை நிலவுகிறது; அதை அவர்கள் நெருக்கம் என்கிறார்கள். உண்மையிலேயே நெருக்கம் என்பது நீங்கள் மற்றவருடன் முற்றிலும் தளர்வாக இருப்பதேயாகும். அதுவே உண்மையான நெருக்கம்.

ஸ்வாமிஜி, நீங்கள் சொல்வது, நாம் மற்றவரை முழுமையாக, அவருடைய எல்லாத் தவறுகளுடனும், ஏற்றுக் கொள்வது என்பதுதானே?

இல்லை!

ஏற்றுக் கொள்ளுதல் என்ற வார்த்தை கூட நிராகரித்தல் என்ற எண்ணத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. 'அவருடைய எல்லாத் தவறுகளுடனும்' என்று சொல்லும் பொழுது, அது ஒரு மௌனமான புகாரைப் போல இருக்கிறது. அது "வேறு என்ன செய்வது? அதனுடன்நான் வாழ்ந்தாக வேண்டும்" என்று சொல்வதைப் போல இருக்கிறது. அது அல்ல! நான் சொல்வது, அடுத்தவரை உங்கள் வாழ்க்கைக்குள் மனப்பூர்வமாக வரவேற்றுக் கொள்ளுங்கள்; வெறுமனே அவனோ அல்லது அவளோ எப்படி இருக்கிறார்களோ, அப்படியே. ஏற்றுக் கொள்வதற்கும்

பிரம்மச்சாரிய நிலையை நீங்கள் அடைந்து விட்டீர்களானால், நீங்கள் வெளியுலகத்தில் ஒரு பெண்ணுடனோ அல்லது இன்றியோ வாழமுடியும். வரவேற்றலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏற்றுக் கொள்ளுதல் ஒரு சமரச உடன்பாடு செய்து கொள்வதைப் போல. வரவேற்றல் என்பது எந்தவிதமான எதிர்பார்ப்புகளோ நிபந்தனைகளோ இன்றி மற்றவருக்கு உங்கள் இருப்புத் தன்மையைத் திறப்பது.

இந்த படைப்பு முழுவதுமே உங்களுக்கு பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பரிசு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

அதைப் பெருந்தன்மையுடனும், பணிவுடனும் பெற்றுக் கொள்ளுங்கள். இதை நீங்கள் செய்வீர்களானால், மூலாதார சக்கரத்தின் மிகப் பெருஞ்சக்தி உங்களுக்கு திறக்கப்படும். இந்த சக்கரத்தை எழுப்புவதென்பது முடிவற்ற சக்தியின் மூலத்தைத் தொடுவதாகும். கற்பனைகளிலும், எதிர்பார்ப்புகளிலும், பேராசையிலும் இப்பொழுது அடைந்து கிடக்கும் மிகப்பெரிய சக்தியை படைப்பாற்றலுக்கும், தொழிலுக்கும், வாழ்க்கைக்கும் நிஜத்திற்கும் கிடைக்குமாறு செய்ய முடியும்!

அது மட்டுமல்ல, உங்கள் வீடே ஒரு க்ஷேத்திரம் (அமைதியின் ஆலயம்) ஆகிவிடும். நமது இல்லங்கள் தர்ம க்ஷேத்திரங்களாக (நற்பண்புகளின் இருப்பிடமாக) இருக்க வேண்டியவை. ஆனால் அவை குருக்ஷேத்திரங்களாக (போரின் இருப்பிடமாக) ஆகிவிட்டன! நான் சொல்வது சரிதானே? ஏன் அவை போரின் இருப்பிடமாகி விட்டன? ஏனெனில் நாம் மனிதர்களைச் செதுக்குகிறோம். நாம் சிலைகளையோ அல்லது மரத்தையோ செதுக்கினால், அழகான வடிவங்களையும், மேசை நாற்காலிகளையும் செய்யலாம். ஆனால் மனிதர்களைச் செதுக்கினால் மரண வேதனைதான் ஏற்படும்.

பிரம்மச்சரிய நிலையை அடையாவிடில், திருமணம் செய்துகொண்டால் கூட நீங்கள் தொடர்ந்து ஹார்மோன்களின் தொல்லைக்குட்பட்டுதான் இருப்பீர்கள்.

ஒருவர் என்னிடம் கேட்டார், “ஸ்வாமிஜி, பதினெட்டுக் கைகளையுடைய தேவியுடன் தொடர்பு கொள்ள ஏதேனும் வழியை உங்களால் சொல்ல முடியுமா?”. நான் சொன்னேன், “முதலில் இரண்டு கைகளையுடைய உங்கள் மனைவியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்; பதினெட்டு கைகளையுடைய தேவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!”.

(சிரிப்பு!)

இன்னொருவர் என்னிடம் வந்து விவாகரத்திற்கு ஆசிகளைக் கேட்டார். நான் கல்யாணத்திற்கு மட்டும்தான் ஆசிகளைத் தருவேன், விவாகரத்திற்கெல்லாம் கொடுப்ப தில்லை என்று சொல்லி விட்டேன். நான் அவரிடம், “என்ன பிரச்சினை, என்னால் தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்றேன். அவர் சொன்னார், “ஸ்வாமிஜி, இன்று காலை, நான் காபி கேட்டேன். அவள் காபியுடன் வந்த வேகத்தில் அது என் ஆடையெல்லாம் சிந்தி விட்டது”. நான் அதிர்ச்சியடைந்து அவரிடம் “இந்த அற்பமான விஷயத்திற்கெல்லாமா விவாகரத்து கேட்பது” என்றேன். அவர் சொன்னார், “ஸ்வாமிஜி, உங்களுக்குத் தெரியாது, இன்று அவள் காபியை ஊற்றினாள். நாளைக்கு அமிலத்தை ஊற்றுவாள்”. நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். அவரிடம் சொன்னேன், “ஐயா, எந்தக் காரணமும் இல்லாமல் ஏன் காபியிலிருந்து அமிலத்திற்குத் தாவுகிறீர்கள்? அவள் செய்ததெல்லாம் ஏதோ கோபத்திலும், அவசரத்திலும் கொஞ்சம் காபியைச் சிந்திவிட்டாள். எப்படியாயினும், அவள்தான் உங்கள் ஆடைகளை துவைக்கப் போகிறாள்!”. அவர் தொடர்ந்தார், “ஸ்வாமிஜி, எங்கள் கல்யாணத்தில், மூன்று பானைகளில் தண்ணீரை வைத்து, அதில் தம்பதியர் இருவரும் கையை விட்டு, அதில் ஒன்றில்

> இந்த ஹார்மோன்களின் தொல்லை உங்கள் மனநிறைவுக்கான ஏக்கத்தைத் தவிர வேறல்ல. அது உண்மையில் உங்களுக்குள்ளிருந்து அடைய வேண்டியதாகும்; வெளியிலிருந்து அல்ல. போடப்பட்டிருக்கும் மோதிரத்தை எடுக்க வேண்டும் என்பது வழக்கம். அப்பொழுதே அவள் நகத்தால் என் கையில் கீறி விட்டாள்!".

(சிரிப்பு!)

தம்பதியருக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காக, இந்தியத் திருமணங்களில், இதுபோன்ற சிறு விளையாட்டுக்கள் விளையாடப்படுகிறது. அந்த மனிதர் இது போன்ற அற்ப விஷயங்களை பத்து வருடங்களாக பத்திரமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். நான் சொன்னேன், "ஐயா, இது போன்ற போலீஸ் பதிவேடுகளை வைத்துக் கொண்டிருந்தால், ஒருவரால் உங்களுடன் எப்படி வாழ முடியும்!".

பாருங்கள்... நாம் இரண்டு விஷயங்களைச் செய்கிறோம். ஒன்று, வாதங்களை வைத்து விட்டு தீர்ப்பை எதிர்நோக்குவது. இரண்டாவது, தீர்ப்பை முடிவு செய்து விட்டு, அதை ஆதரிக்கும் வகையிலான வாதங்களைச் சேகரிப்பது. நாம் 99 சதவிகித நேரம் இரண்டாவதைத்தான் செய்கிறோம்.

பாருங்கள், நம்மைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் நாம் பதிவு செய்து கொள்ள விரும்புவதை மட்டும்தான் பதிவு செய்து கொள்கிறோம்; ஒருபோதும் உண்மையில் நடப்பதை அல்ல. இதனால் நீங்கள் நிஜத்தைத் தவற விடுகிறீர்கள். நிஜம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது; ஆனால் நீங்கள் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கிறீர்கள். திருமணத்தில், முதல் சில மாதங்களில், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவரைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வந்து விடுகின்றனர். பிறகு அடுத்தவர் எது செய்தாலும், அவன் அல்லது அவள், அந்த தீர்மானத்தின் கோணத்திலிருந்தே பார்க்கின்றனர். அவர்கள் தீர்ப்பை நிலைநிறுத்தும் வகையிலான வாதங்களைத் தேடிச் சேகரிக்கின்றனர்.

நீங்கள் பார்ப்பவற்றில் எல்லாம் உங்கள் மனதின் விளையாட்டை விழிப்புணர்வுடன் கவனிக்க முயற்சி செய்யுங்கள்.

அதனால்தான், நீங்கள் உங்கள் மனைவி ஒரு முட்டாள் என்று தீர்மானித்து விட்டால், அவள் எப்பொழுதுமே உங்களுக்கு ஒரு முட்டாளாகவே தெரிவாள். நீங்கள் உங்கள் கணவர் ஒரு அடக்கி ஆளும் வகை என்று முடிவு செய்து விட்டால், அவர் என்ன செய்தாலும், எப்பொழுதுமே உங்களுக்கு அப்படித்தான் தோன்றுவார்.

நீங்கள் இவ்வாறு செய்தீர்களானால், உங்களால் ஒரு போதும் உங்கள் கணவரின் அல்லது மனைவியின் உண்மையான தன்மையைக் காண முடியாது; உங்கள் தீர்மானத்திற்கு தீனி போடும் தன்மையை மட்டும்தான் நீங்கள் பார்ப்பீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நீங்கள் பசியுடன் இருக்கும் பொழுது, சாலையில் உள்ள உணவகங்கள் மட்டுமே உங்கள் கண்களில் படும். ஒரு நாயைச் சாகடிப்பதற்கு முன்னால், நாம் என்ன செய்கிறோம்? அதற்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்லி விட்டுச் சாகடிக்கிறோம்.

இந்த மனோநிலையை விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் மற்றும் விஷயத்திலும் ஒரு புத்துணர்ச்சியைப் பார்ப்பீர்கள்.

ஒரு சின்ன கதை...

ஒரு மனிதர் கடந்த மூன்று மணி நேரமாக தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுப்பதற்காகக் காவல் நிலையத்திற்குச் சென்றார். போலீஸ்காரர் அவரிடம் கேட்டார், "உங்களால் உங்கள் மனைவியைப் பற்றிய உயரம், எடை போன்ற விபரங்களைத் தர முடியுமா?". அந்த மனிதர் சொன்னார், "ஓ! எனக்குத் தெரியாது". போலீஸ்காரர் கேட்டார், "உங்கள் மனைவி வீட்டை விட்டுச் சென்ற பொழுது என்ன அணிந்து கொண்டிருந்தாள்?". அந்த மனிதர் சொன்னார், "நான் கவனிக்கவில்லை. ஐயா, சற்றுப் பொறுங்கள்...

திருஷ்டி சிருஷ்டி என்பது உலகத்தை உள்ளவாறே பார்ப்பது. நிஜத்தை ஏற்று வரவேற்பது. அவளுடன் நாயை அழைத்துச் சென்றாள்... எனக்கு அது தெரியும்''. போலீஸ்காரர் கேட்டார், "அது என்ன நாய்?". அந்த மனிதர் சொன்னார், "கறுப்புக்கு பதிலாக சாம்பல் நிறப் புள்ளிகளுடன் கூடிய அது டால்மேஷன் இனத்தைச் சேர்ந்தது; அதன் எடை 50 பவுண்டு; அதன் வால் புள்ளிகளற்ற தூய வெண்மையானது; அது வெள்ளிச் சங்கிலியுடன் கூடிய பழுப்பு நிற கழுத்துப்பட்டை அணிந்திருக்கிறது; அதன் பெயர் ஸ்பாட்''. போலீஸ்காரர் சொன்னார், "அது போதும்''. நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து விடுவோம்''.

(சிரிப்பு!)

ஒரு கணவனும் மனைவியும் திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் ஒரு வித புத்துணர்ச்சியுடன் அனேகமாக சில மாதங்களே வாழ்கின்றனர். அந்த சில மாதங்களில், அவர்கள் ஒருவர் மற்றவரைப் பற்றி தீர்மானங்களைச் சேகரிக்கின்றனர். அதன் பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவருடன் உறவு கொள்வதே இல்லை. அவர்கள் உண்மையில் மற்றவரைப் பார்ப்பது கூட இல்லை; அவர்கள் தீர்மானங்களுடன் மட்டுமே உறவு கொள்கின்றனர், அவ்வளவுதான்.

கணவன் மனைவியைப் பற்றி சேகரித்த தீர்மானங் களுடன் உறவு கொள்கிறான்; மனைவி கணவனைப் பற்றிச் சேகரித்த தீர்மானங்களுடன் உறவு கொள்கிறாள். உண்மையான கணவனும், உண்மையான மனைவியும் வேறாக இருக்கிறார்கள்! அவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் நான்கு மனிதர்களாக ஆகி விடுகிறார்கள்.

| சிருஷ்டி, திருஷ்டி என்பது உலகத்தை நாம் விரும்பிய வண்ணம நமது சொந்த வண்ணக் கண்ணாடிகளின் மூலமும், நமது கற்பனைகளின் மூலமும் பார்ப்பது. |

வெறுமனே ஒரு நேர்மையான சோதனையைச் செய்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கணவனின் அல்லது மனைவியின் கண்களைப் பார்த்துப் பேசி எத்தனை நாட்களாகிறது? வெகு காலம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும் நாம், முந்தைய நாட்கள் பொன்னான நாட்கள் என்றும், இப்பொழுது வாழ்க்கை மிகவும் சலிப்பாகிவிட்டது என்றும் எண்ணுகிறோம். உங்களுடைய மனோபாவம்தான் வாழ்க்கையைச் சலிப்பாக்குகிறது.

ஒரு மனிதன் வளர்ச்சியடைவதற்குக் கொஞ்சம் கூட இடம் கொடுப்பதேயில்லை. நீங்கள் உடனே அவர்களை வகைப்படுத்தி விடும் அவசரத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களது கணக்கில் புதிதாக எதையும் எடுத்துக் கொள்ள விரும்புவதேயில்லை. நான் சொல்கிறேன், திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் உங்கள் கணவனை அல்லது மனைவியைப் பார்ப்பது கூட இல்லை. ஏனெனில் உங்கள் மனதிலுள்ள அவர்களது உருவத்துடன் உறவு கொள்வதிலேயே மகிழ்ச்சியடைந்து விடுகிறீர்கள்.

பிறகு என்ன நடக்கும்? தன் மனைவியைப் பற்றியே எந்த விவரமும் கொடுக்க முடியாத அந்த மனிதனின் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். மனைவியைப் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பது மிகவும் மேலோட்டமான ஒரு பிரச்சினை. ஆனால் கருத்து இன்னும் ஆழமானது. நீங்கள் உங்களுடன் வாழும் நிஜமான மனிதரை உண்மையிலேயே தவற விட்டு விடுகிறீர்கள். நீங்கள் அந்த மனிதரைப் பற்றிய உங்கள் கருத்துடன் மட்டுமே வாழ்கிறீர்கள், அவ்வளவுதான்!

ஒரு 24 மணி நேரத்திற்கு, உங்கள் மனைவியை அல்லது கணவனை முதல் தடவையாகப் பார்ப்பது போல் பார்ப்பதற்கு

உங்கள் செதுக்குதலை விழிப்புடன் செய்யுங்கள்! அப்பொழுது தேவைக்கதிகமாகச் செய்ய மாட்டீர்கள். உங்கள் மனதைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையையும் அல்லது செயலையும் தீர்மானத் திற்குத் தாவி விடாமல், ஒரு புத்துணர்ச்சியுடனும் கள்ளங்கபட மற்ற தன்மையுடனும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் அவளை நோக்கிய ஒரு அன்பை உணருங்கள். அவள் உங்களைத் தூண்டி விடுவதுபோல் ஏதாவது சொன்னாலும், அந்த வார்த்தை களை விழிப்புணர்வுடன் கேட்டு, வழக்கம் போல விவாதங்களில் இறங்காமல், ஒரு அமைதியான அன்பான வழியில் பதில் கொடுங்கள். உங்கள் இருவருக்குமே நீங்கள் உண்மையிலேயே புதிய பாதைகளைத் திறப்பதைக் காண்பீர்கள்; நீங்கள் இருவரும் வளர்ச்சியடைவதற்கு ஒரு புதிய வெளியைக் கொடுக்கிறீர்கள்.

திடீரென்று, இதுவரையில் எல்லா விஷயங்களும் துயரமாகத் தெரிந்தற்குக் காரணம் உங்கள் மனோபாவம்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். ஆயினும், உங்கள் மனைவி யும் திருப்பியளிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் நான் சொல்கிறேன்.... உங்களிடம் உங்களையும் மற்றவர்களையும் மாற்று வதற்கான சக்தி இருக்கிறது. உங்கள் மன அமைப்பில் ஒரு சாதாரண மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், உங்களால் நிறைய சாதிக்க முடியும். நீங்கள் மாறுவதாகத் தீர்மானித்து விட்டால், உங்கள் மனைவியும் தானாகவே அவள் வழிகளை மாற்றிக் கொள்வாள்.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள், ஒரு மனிதர் ஒரு கல்லறையைக் கடந்து நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அங்கிருந்து உரத்த அழுகைச் சத்தம் கேட்டது. அவர் நின்று, ஏதேனும் உதவ முடிந்தால் உதவலாம்

கோபமும் இச்சையும் உங்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சக்திகள் என்பதை உணர்ந்தால், அதை வீணாக்கவோ அல்லது தவறாகப் பயன்படுத்தவோ மாட்டீர்கள். என்று நினைத்தார். உள்ளே நடந்து சென்று, ஒரு மனிதன் ஒரு சமாதியின் அருகே உரக்க அழுது கொண்டிருப்பதைக் கண்டார். அவன் மீண்டும் மீண்டும், “நீ ஏன் இறந்து போனாய், நீ ஏன் இறந்து போனாய்?” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவனது துயரத்திற்கு வருந்தி, அவனருகில் சென்று, “ஐயா, நான் மிகவும் வருந்துகிறேன், அது உங்கள் மனைவியா?” என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், “இல்லை, அவளுடைய முதல் கணவன்”.

(பலத்த சிரிப்பு!)

ஒருவருடைய கற்பனைகளுடன் நிஜம் பொருந்தாமையால் உறவுகள் பெரும் வேதனையாக மாறுகின்றன. அடுத்ததாவது அவர்களது கற்பனைகளுடன் பொருந்தி வரும் என்ற எண்ணத்தில், மக்கள் ஒரு உறவிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது இதைவிட மோசமானது. அவர்கள் அதனுடன் சில காலம் சென்ற பிறகு, அதிலும் ஏதோ குறைபாடு இருப்பதாக எண்ணி அடுத்ததற்குத் தாவுகிறார்கள். மற்றவரிடம் எந்தத் தவறும் இல்லை; உண்மையிலேயே அந்தக் குறைபாடுகளுக்குக் காரணம் அவர்களுடைய சொந்த கற்பனைதான் என்பது அவர்களுக்குத் தோன்றுவதேயில்லை.

அவர்கள் கற்பனை உலகில் ஆழ்ந்து நிலைபெற்று விட்டதால், நிஜம் அவர்களுக்கு கற்பனையைப் போல் தோன்றும்றது! நான் சொல்கிறேன், இதுதான் நமது தொல்லைகளுக்கெல்லாம் ஆரம்பம். நாம், என்று முதல் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோமோ, அன்றுதான் ஆனந்தத்தை உணர ஆரம்பிப்போம்; அன்றுதான் நாம் இதுவரையில் இந்த அளவிற்கு கற்பனையில் இருந்திருக்கிறோம் என்பதை கண்டுபிடிப்போம்.

உங்கள் கோபத்தினால் ஒருபோதும்
உங்கள் அமைதி குலையக் கூடாது.

இன்று, ஒருவரையொருவர் சகித்துக் கொள்வது இளைஞர்களுக்கு மிகவும் கடினமாகிக் கொண்டே போவதால், திருமணங்கள் எளிதில் முறிந்து விடுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் பார்ப்பதற்கு மிகவும் அனுதாப்பிற்குரியது. இப்பொழுது ஒரு விழிப்பு தேவை. ஆழமான புரிந்து கொள்ளுதலே இந்த விழிப்பைக் கொண்டு வரும்.

உறவுகள் என்று வரும் பொழுது, நாம் அனைவரும் அடுத்தவரை நோக்கி விரல்களைச் சுட்டத் தயாராக இருக் கிறோம். கை தட்டி ஒலியெழுப்ப இரண்டு கைகள் தேவை என்பதை மறந்து விடுகிறோம். நீங்கள் உங்கள் மீது செயல்படுவீர்களானால், உங்களால் விஷயங்களை உங்களுக்கும், மற்றவர்களுக்கும் சிறப்பாகச் செய்ய முடியும். அடுத்தவரும் மாற வேண்டும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்.

நீங்கள் இது வரையில் எழுதப்பட்டுள்ள எல்லாக் காதல் கதைகளையும் படித்தீர்களானால், நிஜத்தில், செயல்படும் நிலையில், ஆணும் பெண்ணும் முழு நேரமும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதை எங்கும் காண முடியாது.

ரவீந்திரநாத் தாகூர் எழுதியுள்ள, நிரந்தரக் காதலர்கள் பற்றிய ஒரு கதையில், கதாநாயகனும், கதாநாயகியும் நிரந்தரக் காதலர்களாக, கங்கையின் இரு கரைகளிலும் தங்கி வசிப்பது என்று தீர்மானிக்கிறார்கள். வாரம் ஒரு முறை அவர்கள் படகில் வந்து சந்தித்து விட்டுத் திரும்பி விடுகின்றனர்.

இப்படிச் செய்தார்களானால், அவர்கள் சந்திக்கும் போது நிச்சயமாக அமைதியாகத்தான் இருப்பார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் சந்திக்கும் பொழுதும் அதில் புத்துணர்ச்சி இருக்கும்; ஏனெனில் அவர்கள் ஒன்றாக இருக்கப் போவது சில மணி

சரியாக உபயோகப்படுத்தத் தெரிந்தால் கோபம் ஒரு மிகப்பெரிய சக்தி. நேரங்கள்தான் என்பது அவர்களுக்குத் தெரியும்; அந்தக் கணங்கள் விலை மதிப்பற்றது!

எல்லா நிரந்தரக் காதலர்களுமே, அது ரோமியோ ஜூலியட்டாக இருக்கட்டும், லைலா மஜ்னுவாக இருக்கட்டும், அல்லது அம்பிகாபதி அமராவதியாக இருக்கட்டும், அவர்கள் ஒருபோதும் ஒன்றாக வாழ்ந்ததில்லை! ஒன்றாக வாழ்ந்திருந்தால் அவர்களது நிரந்தரக் காதலை மீண்டும் வேறு மாதிரியாகச் சொல்ல வேண்டியிருந்திருக்கும்!

பிரச்சினை என்னவென்றால், வாழ்க்கைக்குப் பின்னணி இசை கிடையாது! தொலைக்காட்சியில் காதல் கதைகளைப் பார்க்கும்போது, அவை அனைத்தும் பின்னணி இசையுடன் வருவதால், உங்களால் எளிதாகக் கனவுலகில் நுழைந்து விட முடியும். இசைக்கு உங்களைக் கரைத்து, ஒரு பலவீனமான நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடிய சக்தி இருக்கிறது. நீங்கள் காணும் எல்லாக் காட்சிகளுமே, முக்கியமாக காதல் காட்சிகள், பின்னணி இசையடன்தான் வருகிறது. பின்னணி இசையால்தான் அதை நீங்கள் மிகவும் இரசிக்கிறீர்கள். நீங்கள் தொலைக் காட்சி பெட்டி உருவாக்கும் சூழ்நிலையால் முழுவதும் மனோவசியம் செய்யப்பட்டு விடுகிறீர்கள்.

நிஜ வாழ்க்கையில், உங்களால் இசையைத் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை! கற்பனையிலிருந்து கவிதை எழுதுவதற்கும் மனதால் உருவகப்படுத்தி கவிதை எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னது வெறும் கற்பனை; அது வானத்தைச் சென்றடைவது போன்றது. பின்னது நிஜம்.

உங்கள் கணவனோ அல்லது மனைவியோ கடவுளின் ஒரு படைப்பு. உங்கள் படைப்பு கடவுளின் படைப்புடன் போட்டியிட முடியாது! அவரது படைப்பே வெல்லும்! மக்கள்

நீங்கள் உங்கள் மனைவியை நேசிக்கவிலை. உங்கள் மனதிலிருக்கும் உருவத்தைத்தான் நேசிக்கிறீர்கள்.

அவர்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள மற்ற கீழ்த்தரமான மாற்று வழிகளைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று சமூகத்தில் மிகவும் அதிகமான அளவில், ஆபாசப் படங்கள், கட்டுப்பாடற்ற கற்பனைகள், முறை தவறிய நடத்தை முதலியவைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆபாசப் படங்கள் பாலுணர்வு வாழ்க்கையைப் பூர்த்தி செய்வதில்லை; மாறாக அது மேலும் கனவுகளையும், வழி தவறுதலையுமே உருவாக்குகிறது, அவ்வளவுமே! ஆனால் கனவு காண்பதற்கான நிர்ப்பந்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பலவீனமாகவும் அறிவு கூர்மையற்றும் இருந்தாலொழிய, எதுவுமே ஒரு நிர்ப்பந்தமாக ஆவதில்லை. நீங்கள் அறிவுக் கூர்மையானவராகி விட்டால், உங்களால் எதையும் விட்டுவிட முடியும்.

(ஒரு பெண்மணி அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்) ஸ்வாமிஜி, நீங்கள் எங்களை உள்ளவாறே இருக்கச் சொல்கிறீர்கள். ஆனால் அப்படியே எப்படி சமூகத்தில் வாழ முடியும்? நான் குடும்பம், சமூகம் ஆகியவற்றுக்கு ஏற்றபடி நாம் மாற வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆம், அனைவருமே இந்தப் பிரச்சினையை நடை முறையில் எதிர்நோக்குகிறார்கள். நீங்கள் சொல்கிறீர்கள், "ஸ்வாமிஜி, நான் மற்றவருக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்". நான் கேட்கிறேன், மற்றவர்கள் உங்களுக்கேற்ற படி நடந்து கொள்ளுமாறு நீங்கள் ஏன் உறுதி செய்யக் கூடாது? சமூகத்தில் நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான். வேறு வழியில்லை. ஆனால் உங்கள் எல்லைகளில் மிகவும் தெளிவாக இருங்கள்.

இந்தப் படைப்பு முழுவதுமே உங்களுக்குப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு பரிசு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

சுதந்திரமாகச் சார்ந்திருங்கள்!

எது உங்களுடைய வெளி, எது மற்றவர்களுடையது என்பதில் தெளிவாக இருங்கள். மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல், உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள உங்களாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்.

என்னால், குறைபாடுகளற்ற ஒரு முழுமையான தீர்வைத் தர முடியாதுதான்... கணவன் மனைவிக்கிடையே உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மந்திரத்தை என்னால் கொடுக்க முடியுமானால், நான்தான் இந்த உலகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மனிதனாக இருப்பேன்!

(பலத்த சிரிப்பு மற்றும் கைதட்டல்!)

ஸ்வாமிஜி, மற்றவருடைய மூலாதார சக்ரத்தைத் திறக்க முடியுமானால், அவருடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டு விடுவார் இல்லையா?

(பரமஹம்ஸர் சிரிக்கிறார்!) அதை நீங்கள் எப்படிச் செய்வீர்கள்? உங்களுடைய எதிர்பார்ப்புக்களை விட்டு விடுவதை மட்டும்தான் உங்களால் உறுதிப்படுத்த முடியும்- அதனால் நான்கு பேர் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து, உங்களால் அதை மூன்றாகக் குறைக்க முடியும்!

மற்ற மனிதரை எவ்வாறு மாற்றுவது...? இந்நாட்களில் திருமண ஆலோசகர்கள், மனோவசியத்தைக் கூட பரிந்துரைக்கின்றனர். நான் அதை அடுத்தவரின் சுதந்திரத்தில் ஒரு உச்சபட்சத் தலையீடாகக் கருதுகிறேன். அது முற்றிலும் தவறானது.

அன்றொரு நாள், ஒரு பெண் அவளது கணவருடைய கோபத்தின் அளவைக் குறைக்க விரும்பிய ஒரு சம்பவத்தை பற்றிப்

நீங்கள் உங்கள் மனைவி ஒரு முட்டாள் என்று தீர்மானித்து விட்டால், அவள் எப்பொழுதுமே உங்களுக்கு ஒரு முட்டாளாகவே தெரிவாள்.

படித்தேன். நீங்கள் படித்திருக்கலாம் - சிகாகோ பல்கலைக்கழகத்தில், மூளையில் மின் கம்பிகளைப் பதிய வைப்பதன் மூலம் கோபத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்து வதைப் பற்றிய சில ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன!

அவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க தன்னார்வ தொண்டர்களைக் கேட்ட பொழுது, நூற்றுக்கணக்கான பெண்கள் வலுக்கட்டாயமாகத் தங்கள் கணவன்மார்களை அழைத்துக் கொண்டு வந்ததாக அறிகிறோம்!

(சிரிப்பு!)

பரிசோதனைக்குப் பிறகு, 72 பெண்கள் (இது உண்மை) பல்கலைக்கழகத்திற்குத் திரும்ப வந்து, "தயவு செய்து இந்த மின் கம்பிகளை எடுத்து விடுங்கள். எனக்கு திரும்பவும் பழையபடியே என் கணவன் தேவை. நான் மீண்டும் என் பழைய கோபக்கார கணவனையே விரும்புகிறேன்!" என்று சொன்னார் களாம். அவர்கள் சொல்கிறார்கள், "வாழ்க்கை அதன் சுவையை இழந்துவிட்டது! நாங்கள் சண்டை போடாவிடில் எந்த விதமான பரிமாற்றமும் இல்லை. அவர் என்னைக் கவனிப்பதேயில்லை!".

அனைவருக்குமே கவனம் தேவைப்படுகிறது! நடத்தையியல் மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள், ஒரு சாதாரணமான மனிதன் உணவில்லாமல் 90 நாட்கள் வரை உயிர் வாழ முடியும், ஆனால் மற்றவர்களுடைய கவனம் இன்றி 14 நாட்கள் மட்டுமே வாழ முடியும்! அவன் பைத்தியமாக ஆரம்பித்து விடுவான்!

என்ன நடந்திருக்கிறதென்றால், நாம் ஒருவரை யொருவர் நேசிப்பதையும், ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்வதையும் மறந்து விட்டோம். அன்பு, மறக்கப்பட்ட ஒரு மொழியாகிவிட்டது!

நீங்கள் உங்கள் கணவர் ஒரு அடக்கி ஆளும் வகை என்று தீர்மானித்து விட்டால், அவர் என்ன செய்தாலும் உங்களுக்கு அப்படித்தான் தோன்றுவார். அதனால் ஒருவருக்கொருவர் இணைந்து செயலாற்றவும், கவனம் கொள்ளவும் நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை ஒருவரோடொருவர் சண்டை போடுவது தான்!

இங்கு அமர்ந்திருப்பவர்கள், தங்கள் கணவன்மார்கள் அல்லது மனைவிமார்கள் ஆன்மீக வழியில் இல்லை என்று குறை கூறிக் கொண்டு இருப்பவர்களே கூட, அவர்கள் கணவன் அல்லது மனைவி ஆன்மீக வழியில் சென்று விட்டால், திரும்ப வந்து அவர்களது பழைய கணவன் அல்லது மனைவியே திரும்ப வேண்டும் என்று குறை கூறக் கூடும்.

(பங்கேற்பாளர்களிடம் இருந்து சிரிப்பும் எதிர்ப்பும்!)

சரி! நீங்கள் மாறுபட்டவர்கள் என்று சொல்கிறீர்கள்! பார்ப்போம்...!

இந்த மூலாதார சக்கரத்தைப் பற்றிய அற்புதமான ஒரு விஷயம் என்னவென்றால், இந்த ஒரு சக்கரத்தைத் திறந்தாலே, உங்கள் பிரச்சினைகள் 50 சதவிகிதம் மறைந்து விடுவதைக் காண்பீர்கள்! இந்த ஒரு சக்கரம் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிர்வகிக் கிறது. நீங்கள் எதைச் செய்தாலும், அதில் இந்தச் சக்கரத்தின் ஒரு தடத்தைக் காணமுடியும்! உங்களுடைய கையெழுத்தில் கூட, இந்தச் சக்கரத்தின் தடத்தைக் காண முடியும்! மூலாதாரச் சக்கரம் தூண்டி விடப்படுமானால், உங்கள் கையெழுத்துக் கூட மாறி விடும். நீங்கள் ஒரு மலரைப் பறித்தால், அதை நீங்கள் செய்யும் விதம் மாறுபட்டிருக்கும்.

நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் இறை அடியார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லும் ஒரு பாடல் இருக்கிறது. அவர்கள் மலர்களைப் பறித்தால், அந்த

| இந்த மனோநிலையை விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு புத்துணர்ச்சியைப் பார்ப்பீர்கள். |

மரத்திற்கு வலியே தெரியாதாம்! அதன் பொருள் என்ன? இந்தச் சக்கரம் திறக்கப்படுமானால், நீங்கள் மிகவும் நுட்பமான உணர்வு உடையவர்களாகவும் அன்பு மிக்கவர்களாகவும் ஆகி விடுவீர்கள். இந்தச் சக்கரத்தின் சக்தி உருமாற்றமடையும் பொழுது, அது உங்களிடமிருந்து அன்பாகப் பொங்கிப் பிரவகிக்கிறது!

காமம் கரி போன்றது, அன்பு வைரம் போன்றது; காமம் சேற்றைப் போன்றது, அன்பு அதில் மலரும் தாமரை போன்றது. பொருள் ஒன்றுதான். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், அதை எவ்வாறு பக்குவப்படுத்துவது என்று தெரிய வேண்டும்.

உங்கள் எதிர்பார்ப்புகளை விட்டு விடுங்கள், ஒரு பெரும் சக்தி அலை போலப் பாய்வதைக் காண்பீர்கள்.

இன்று நீங்கள் அனைவரும் வீட்டில் இந்த உத்தியை முயற்சி செய்து பாருங்கள்; கீழே அமர்ந்து மூலாதார சக்ரத்தில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். நீங்கள் கவனித்தால், உங்கள் மூலாதாரச் சக்கரம் எப்பொழுதும் இறுக்கமாக இருப்பதைக் காணலாம். அது எப்பொழுதும் இறுக்கமாகத்தான் இருக்கும்.

ஒரு ஐந்து நிமிடங்கள், உங்கள் கணவனை அல்லது மனைவியை, அவர்கள் செய்த எல்லாவற்றையும் மனதால் மன்னித்து விடுங்கள். உண்மையாக மன்னித்து விடுங்கள்; வேர் வரை சென்று சின உணர்வையும் வருத்தங்களையும் விட்டு விடுங்கள். இதை முழுமையாகச் செய்யுங்கள். அவர்களை வெறுமனே உள்ளவாறே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்கள் ஆழமான அன்பை அளியுங்கள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து, மூலாதார சக்கரம் முற்றிலும் தளர்வாக இருப்பதைக் காண்பீர்கள்.

ஒருவருடைய கற்பனைகளுடன் நிஜம் பொருந்தாமையால் உறவுகள் பெரும் வேதனையாக மாறுகின்றன. வெறும் ஐந்து நிமிடங்களே இவ்வளவு பலன் கொடுக்குமானால், உங்கள் முழு மனோபாவத்தையும் மாற்றிக் கொண்டீர்களானால் என்ன நிகழும் என்று வெறுமனே கற்பனை செய்து பாருங்கள்! எவ்வளவு பெரிய சக்தி ஓட்டத்தை அனுபவிப்பீர்கள்!

இப்பொழுது நீங்கள் வாழும் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதென்றால், உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கிடைத்து, அதில் தொண்ணூறாயிரம் ரூபாயை மீட்க முடியாத ஏதோ ஓர் இடத்தில் பூட்டி வைத்திருப்பது போல் இருக்கிறது. மீதி பத்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பிறகு இயல்பாகவே நீங்கள் ஏழையாக இருப்பதாகத்தான் உணர்வீர்கள்!

அதே போன்று, நமது எல்லா சக்தியும் தவறாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது; அவை இந்தச் சக்கரத்தில் கோபத்திலும், காமத்திலும் இன்னும் பலவற்றிலும் பூட்டப்பட்டிருக்கிறது. நமது தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சக்தி கூட நம்மிடம் இல்லை. ஒரு முறை இந்தச் சக்கரம் திறக்கப்படுமானால், உங்கள் வாழ்க்கை வளமாகும்.

உங்களால் இன்னும் நன்றாகச் சிந்திக்க முடியும், இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும், இன்னும் நன்றாகத் திட்டமிட முடியும். இந்த சக்தி விழிப்புடன் உங்களிடம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை உங்களால் உணர முடியும். அது நீங்கள் இதற்கு முன் அனுபவித்திராத ஒரு புதிய பரிமாணத்தைத் திறக்கும். நீங்கள் உங்கள் கணவன், மனைவி, மற்ற அனைவருமே ஆன்மீக இருப்புத் தன்மைகள் தான் என்பதை உண்மையிலேயே உணர்ந்து கொள்வீர்கள்!

ஒருவர் மற்றவருடன் உறவு கொள்வதேயில்லை. உண்மையில் மற்றவரைப் பார்ப்பது கூட இல்லை. அவர்களுடைய தீர்மானங்களுடன் மட்டுமே உறவு கொள்கின்றனர்.

புரிந்து கொள்ளுங்கள்... சொர்க்கமும் நரகமும் புவியியல் சார்ந்த இடங்கள் அல்ல. அவற்றை உங்களால் வரைபடத்தில் குறிப்பிட முடியாது. அவை உளவியல் ரீதியாகவே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாகவோ அல்லது நரகமாகவோ மாற்றிக் கொள்வது உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் மனம் முழுவதும் எதிர்பார்ப்புகளால் நிரம்பியிருந்தால், நீங்கள் நரகத்தை உங்கள் தலையில்தான் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் சொந்த மூட்டையான நரகமும் உங்களுடனேயே பயணம் செய்கிறது! ஒரு சர்க்கஸ் கலைக்குழு எப்படி எங்கு சென்றாலும் கூடாரத்தை எடுத்துச் சென்று பரப்புகிறதோ, அதே போல நீங்களும் உங்கள் நரகத்தை எங்கு சென்றாலும் சுமந்து சென்று அதில் வசிக்கிறீர்கள். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. மேலும் இரண்டு மனிதர்கள் சந்திக்கும் போது, மணிகள் ஒலிப்பதில்லை, மாறாக நரகங்களின் மோதலால் பெரும் கலவரம்தான் நிகழ்கிறது!

எங்கு சென்றாலும் உங்களுடன் இந்தச் சுமையை ஏன் சுமந்து செல்ல விரும்புகிறீர்கள்?

அதை அப்படியே விட்டு விடுங்கள்!

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மற்றவரைச் செதுக்கும் முயற்சியில் நீங்கள் வீணாக்கும் சக்தியையெல்லாம் எண்ணிப் பாருங்கள். அதை விட உளியைப் போட்டு விடுவது மிகவும் சுலபம் இல்லையா? அதில் 10 சதவீத சக்தியை தியானத்தை நோக்கித் திருப்பி விட்டால் கூட, உங்கள் வாழ்க்கையை உண்மையான வாழ்தலாக உருமாற்றம் பெறச் செய்து விட முடியும்!

நாம் என்று முதல் நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோமோ, அன்றுதான் ஆனந்தத்தை உணர ஆரம்பிப்போம். வாழ்தல் என்பது ‘விழிப்புணர்வுடன், சுதந்திரத்துடன் நடத்தப்படும் வாழ்க்கை’. தேர்ந்தெடுத்தல் நம்மிடம் இருக்கிறது! நம்மிடம் விழிப்படைவதற்கான் சாத்தியம் இருக்கிறது. இப்பொழுது தீர்மானிப்பது உங்கள் கையில் இருக்கிறது.

சொல்லுங்கள்... ஏதேனும் கேள்விகள்?

ஸ்வாமிஜி, எவ்வாறு இச்சையை விட்டுவிட்டு அன்பைப் பேணி வளர்ப்பது?

சரி.... நீங்கள் இறுதியில் சரியான விஷயத்திற்கு வந்து விட்டீர்கள்... இச்சையும் கோபத்தைப் போன்றே ஒரு மிகப்பெரிய சக்தி. உண்மையில், ‘இச்சை என்பது என்ன, அதை எவ்வாறு உருமாற்றமடையச் செய்வது?’ என்பதைப் புரிந்து கொள்ளும்வரையில், நீங்கள் செய்யும் எந்தச் செயலுமே இச்சையுடையதாகத்தான் இருக்கும். நீங்கள் ஒரு பேனாவை எடுத்தால் கூட அதில் இச்சை இருக்கிறது; நீங்கள் ஒரு சிறு குழந்தையைக் கொஞ்சினால் கூட அதில் இச்சை இருக்கிறது; அதில் கொஞ்சம் மிருக இயல்பும் இருக்கிறது. ஏனெனில் உங்களுடைய சக்தி இன்னும் கீழான நிலையிலேயே இருக்கிறது, உயர்நிலைச் சக்தியாக உருமாற்றமடையவில்லை.

எவ்வாறு கோபத்தைப் பற்றிய அறிவு கோபத்தைக் குறைக்கிறதோ, அதேபோல, இச்சையைப் பற்றிய அறிவும் இச்சையைக் குறைக்கிறது; ஏனெனில் இரண்டும் ஒரே சக்திதான்! இச்சை மற்றும் காமத்தைப் பற்றிய பிரச்சினை என்னவென்றால், அது பெரிதாக்கப்பட்டு, இருப்பதை விட மிக அதிகமாகக் கற்பனை செய்யப்படுகிறது. அடக்கி வைக்கப்படுவதால், அது இருப்பதை விட மிகப் பெரிதாகச் செய்யப்பட்டு விட்டது. அங்கு தான் முழுப் பிரச்சினையும் ஆரம்பமாகிறது. அது ஊடகங்களால் மிகப் பெரிய அளவில் மாசுபடுத்தப்பட்டு விட்டது.

பிரச்சினை என்னவென்றால் வாழ்க்கைக்குப் பின்னணி இசை கிடையாது!

மேலும் உங்களுடைய இச்சை மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படாத போது, அது அந்த மனிதனுக்கெதிரான கோபமாக மாறி விடுகிறது. அதனால்தான் நீங்கள் செய்தித் தாள்களில், இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் தங்களை ஏற்றுக் கொள்ளாத இளம் பெண்களின் முகத்தில் அமிலத்தை வீசி விட்டதாகச் செய்திகளைப் படிக்கிறீர்கள்.

பாருங்கள்... முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... சமூகம் எப்பொழுதுமே கீழான மனிதர்கள், மேலான மனிதர்கள் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடுகிறது. தீவிரமான ஆசைகள் உள்ள எவருமே கீழான மனிதர் எனப் படுகிறார்; தீவிர இச்சை உள்ள எவருமே கீழான மனிதர் எனப் படுகிறார். கீழ், மேல் என்றெல்லாம் எதுவுமில்லை; உருமாற்றம் நிகழ வேண்டும், அவ்வளவுதான்.

இந்த ஒழுக்க நியதிகளை வகுக்கும் மக்கள் அனைவருமே ஒழுக்கவாதிகளாக நடிப்பவர்களே. அவர்கள் ஒவ்வொரு வருக்குப் பின்னாலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இச்சையும், தீவிரமான உணர்ச்சிகளும் ஏராளம். அவர்கள் பயத்தின் காரணமாகவோ அல்லது குற்ற உணர்வின் காரண மாகவோ இந்த உணர்ச்சிகளின் பின்னால் செல்லாமல், ஒழுக்க வாதிகளாகக் கடந்து சென்று விடுகிறார்கள். இது கீழானது, இது மேலானது என்கிற நியதிகளை வகுப்பவர்கள் இவர்களே. சமூகத்தின் எல்லாத் துயரங்களுக்கும் காரணம் இவர்களே.

தாழ்வு, உயர்வு என்று எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தாழ்ந்தவர் என்ற எண்ணம் வந்து விட்டால், அந்த எண்ணத்துடன் போராட ஆரம்பித்து விடுகிறீர் கள். அதை வெல்வது மிகவும் கடினமாகி விடுகிறது; உருமாற்றம் நிகழ்வதும் கடினமாகி விடுகிறது.

உங்கள் கணவனோ அல்லது மனைவியோ கடவுளின் ஒரு படைப்பு. உங்கள் படைப்பு கடவுளின் படைப்புடன் போட்டியிட முடியாது.

நீங்கள் எதிர்க்கும் எதுவும் பிடிவாதமாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். வெறுமனே உங்கள் உணர்வு உருமாற்றமடைய அனுமதியுங்கள். அது நிகழும். உங்களுக்குள் வெறுமனே விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள். நீங்கள் உருமாற்றமடைந்து விடுவீர்கள். ஒருபோதும் ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்; ஆராய்தல் பிரிக்க மட்டுமே செய்யும். அது உங்களை இரண்டு பாதியாகப் பிரித்து விடும்; அவையிரண்டும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு இருக்கும். சமூகம் எப்பொழுதும் உங்களைப் பிரிக்கவே பார்க்கிறது.

ஆராய்தல் விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக் கும் உரியது; ஆன்மீக வளர்ச்சிக்கல்ல. நீங்கள் ஆராய்வதற்கும், கூறுபோட்டுப் பார்ப்பதற்கும் மிகவும் பழகி விட்டதால், உங்களால் அதை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடுதல் இயலாத காரியம். மக்கள் உங்கள் மீது தாழ்வு மனப்பான்மை அல்லது உயர்வு மனப்பான்மையை சுமத்த முயற்சி செய்யும் போது, இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருவருமே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதிதான்; யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ இல்லை. இந்த உண்மையை நீங்கள் மறக்கும் பொழுதுதான், இது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறீர்கள்.

உங்களுடைய இச்சையைப் பற்றிய கேள்விக்கு வருவோ மாயின், அன்பு மட்டுமே இருக்க முடியும், இச்சை ஒருபோதும் இருக்க முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதுதான் உண்மை. இச்சை, ஆழமான அறியாமையின் விளைவு.

இச்சையை அன்பாக மாற்றும் முறை, ஒரு இரசவாத முறை. கீழான ஒரு உலோகத்தை உயர்வான ஒரு உலோகமாக

சுதந்திரமாகச் சார்ந்திருங்கள்!

மாற்றும் முறைக்கு இரசவாதம் என்று பெயர். அதே போன்று, கீழான உணர்வான இச்சையை, நம்மால் முடிந்த, மிகவும் உயர்வான ஒரு உணர்வான அன்பாக மாற்றுவதும் ஒரு இரசவாத முறைதான். அதுவே இறுதியான இரசவாதமாகும்.

நான் இமயமலையில் அலைந்து திரிந்து கொண்டு இருந்த போது, எனக்கு நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியை உங்களுக்கு விளக்குகிறேன்.

இமயமலையில், நான் வெறுமனே மனம் போனபடி நடந்து கொண்டிருப்பேன். என்னுடைய பொருட்கள் என்று சொல்லத் தக்கவை மிகவும் சொற்பமானதுதான். அலைந்து திரிந்து விட்டு இரவு எங்கு வேண்டுமானாலும் தூங்கி விடுவது வழக்கம். அந்தச் சமயத்தில் நிறைய சாதுக்களைச் சந்தித்தேன். அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், மிகவும் குறைவான உடைகளுடன், சடைமுடியுடன், தீவிரமான தோற்றத்துடன் ஒரு சாதுவைச் சந்தித்தேன். அவர் ஒரு நாகா பாபா-சாதுக்களில் நாகா எனப்படும் பிரிவைச் சேர்ந்தவர். நான் எப்படியோ அவரால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் சென்றேன். அப்பொழுது எனக்கு அவ்வளவாக ஹிந்தி பேச வராதாயினும், அவரிடம்டைந்த ஹிந்தியில் பேசிச் சமாளித்தேன். அவருடன் சில நாட்கள் இருந்தேன். நாள் முழுதும் அவர் அவருடைய ஹுக்காவைப் புகைத்துக் கொண்டிருப்பார். நான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் செய்வதைக் கண்டு ஆச்சரிய மடைந்தேன். அவருடைய ஹுக்காவில் இரண்டு தாமிரக் காசுகளை போட்டு, சிறிது நேரம் புகைத்து விட்டு, அந்தக் குழாயில் இருப்பத்தைக் கீழே கொட்டினால் அதிலிருந்து இரண்டு தங்கக் காசுகள் வெளியே வந்து விழும்! அவர் கடைத் தெருவிற்குச் சென்று, அந்த இரண்டு தங்கக் காசுகளை விற்று விட்டு, இன்னும் நிறைய தாமிரக் காசுகளை

கணவன் மனைவிக்ஃகிடையே உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மந்திரத்தை என்னால் கொடுக்க முடியுமானால், நான்தான் இந்த உலகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மனிதனாக இருந்திருப்பேன்!

வாங்கிக் கொண்டு வந்து, இதே முறையைத் திரும்பவும் செய்வார்! நான் அவரிடம் இது எவ்வாறு நிகழ்கிறது என்று கேட்டேன்; அவர் பதில் சொல்லவில்லை. ஆனால் வெறுமனே அந்தக் குழாயை என்னிடம் கொடுத்தார். ஆனால் புகையிலையின் மணம், மது ஆகியவை எப்பொழுதும் என் உடலுடன் ஒத்துப் போகாததால், நான் சில அடிகள் பின்னால் நகர்ந்தேன். நான் இமயமலைக்கு வந்தது தியானத்திற்காகவும் ஞானத்திற்காகவும்தானே தவிர, புகை பிடிப்பதிலோ, தங்கக் காசுகளின் மீதோ எனக்கு ஆர்வம் இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் என்னைப் பார்த்து முதன்முறையாகத் தமிழில் பேசினார், “அங்கம் பழுத்தால் தங்கம் பழுக்கும்” - உங்கள் இருப்புத் தன்மை பழுக்குமானால் தங்கம் பழுக்கும். நான் வார்த்தையற்றுப் போனேன். அவர் விளையாட்டாக என் முகத்தில் புகை வளையங்களை ஊதி விட்டுச் சென்றார். அதன் பிறகு மூன்று நாட்கள் நான் ஆழமான தியானத்தில் திளைத்திருந்தேன்.

தாமிரத்தைத் தங்கமாக மாற்றுவது ஒரு இரசவாத முறை. அது வெளியுலக இரசவாத முறை. உள் உலகத்தில் இரசவாதம் என்பது நமது கீழ்நிலையிலுள்ள சக்திகளை உயர்நிலை ஆன்மீக சக்தியாக மாற்றுவது. கீழ்நிலைச் சக்திகளை உயர்நிலை ஆன்மீக சக்தியாக மாற்றும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெற்று விட்டால், உங்களால் தாமிரத்தைத் தங்கமாக மாற்ற முடியும். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. உள் இரசவாத முறையில் தேர்ச்சி பெற்று விட்டால், வெளி இரசவாதமிெல்லாம் ஒன்றுமேயில்லை. அவை உங்கள் கைகளில் வெறும் குழந்தையின் விளையாட்டைப் போலாகி விடும்.

இந்த ஒரு சக்கரத்தை திறந்தாலே, உங்களது பாதி பிரச்சினைகள் மறைந்து விடுவதைக் காண்பீர்கள்.

நான் இந்தச் சம்பவத்தை உங்களிடம் சொன்னதன் காரணம், உங்களுக்கு இரசவாதத்தின் தத்துவத்தைப் புரிய வைக்கத்தானே தவிர நீங்கள் வெளியுலக இரசவாதத்தைப் பின் தொடர்வதற்காக அல்ல! அதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளியுலக இரசவாதங்கள் சாதாரண மானவை. உள்ளுலக இரசவாதமே உங்களை ஒரு உண்மையான குருவாக்குகிறது.

உலோகங்களுடனான இரசவாத முறையில் உண்மையில் என்ன நிகழ்கிறது? முதலில் கீழான உலோகத்தின் இருக்கும் மாசு கள் அகற்றப்படுகின்றன. பிறகு சில பொருட்கள் சேர்க்கப் பட்டு, பக்குவப்படுத்தப்படுகிறது. அதன் இறுதியில் கீழான உலோகம் உயர்ந்த உலோகமாக மாறி விடுகிறது.

நமது மிருக உணர்ச்சிகள் தெய்வீக உணர்ச்சிகளாக மாற்றப்பட வேண்டும். நம்மிடம் மிருக உணர்ச்சியாக இச்சை இருக்கிறது. இன்னொரு விஷயம்... குறைந்தபட்சம் மிருகங்களிடம் இருப்பதாவது தூய இச்சையாக இருக்கிறது. உறவு கொள்ளும் போது அவை வெறுமனே முழு உலகையும் மறந்து விடுகிறது. ஆனால் நமக்கோ, நமது இச்சை கூட தூய்மையாக இல்லை. அது எப்பொழுதும் குற்ற உணர்வுடனும் ஆசைகளுடனும் இருக்கிறது.

கடந்த கால நெறிப்படுத்துதல்கள் நம்மை குற்ற உணர்வடைய வைத்து, விலகிக் கொள்ள வைக்கின்றன அல்லது எதிர்காலத்தினுள் தொடர்ந்து செல்லும் தீவிரமான ஆசை நம்மை அதில் மேலும் ஈடுபட வைத்து, மீண்டும் குற்ற உணர்வையே உண்டாக்குகிறது. இழுபறியான இந்த கொடிய சூழலில் சிக்கிக் கொள்வதன் விளைவாக இச்சை மாசுபட்டு விடுகிறது; அது தூய்மையாக இல்லை.

சொர்க்கமும் நரகமும் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல. அவை உளவியல் ரீதியானவை. நீங்கள் கவனித்தீர்களானால், எப்பொழுதுமே, உங்களுடைய கற்பனையை நிறைவேற்றிக் கொண்ட உடனேயே, உங்களை ஒரு குற்ற உணர்வு சூழ்ந்து கொள்ளும். அதனால்தான் காமம் உங்களை குற்ற உணர்வடைய வைக்கிறது. நீங்கள் குழந்தையாக இருக்கும் பொழுதே, குடும்பம்தான் உங்களுக்குள் முதல் குற்ற உணர்வைப் புகுத்துகிறது. பிறகு, நீங்கள் குற்ற உணர்வை உருவாக்கிக் கொள்வதில் தேர்ச்சி பெற்று விடுகிறீர்கள்!

முதலில் குற்ற உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்பும் எவரும், முதலில் உங்களுக்குள் குற்ற உணர்வைப் புகுத்து கின்றனர். ஏதோ ஒரு வகையில் நீங்கள் தாழ்ந்தவர் என்று உங்களை எண்ணச் செய்கின்றனர். பிறகு நீங்கள் தானாகவே அவர்கள் சொல்வதைப் பின்தொடர ஆரம்பித்து விடுவீர்கள்.

மனிதனுக்கு குற்ற உணர்வின் மூலம் மட்டுமே கட்டுப் படுத்தத் தெரியும். நான் சொல்கிறேன், குழந்தைகளுக்கு விதி முறைகள் சரிதான். விதிமுறைகளுடன் ஆரம்பிப்பது நல்லது தான். ஆனால் நீங்கள் வளர்ந்து உங்கள் சொந்த அறிவுக் கூர்மையால் வழிநடத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. நீங்கள் உங்களுடைய புறத்தன்மையை ஒருங்கிணைத்து விட்டீர்களானால், உங்களுக்குள் குற்ற உணர்வைப் புகுத்த முடியாது. உண்மையில் ஒரு சம்பவமே உங்களுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தி விடுவதில்லை. அந்தச் சம்பவத்தின் விளைவுதான் உங்களுக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மக்கள் விதிமுறைகளை ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு குருட்டுத்தனமாகக் கைமாற்று கிறார்கள். அதனுடன் குற்ற உணர்வும் கைமாற்றப்படுகிறது. ஒரு மகுடத்தைப்

அங்கம் பழுத்தால் தங்கம் பழுக்கும். போல குற்ற உணர்வும், தாத்தாவிடமிருந்து தந்தைக்கும், தந்தையிடமிருந்து மகனுக்கும் மகனிடமிருந்து பேரனுக்கும், கொடுக்கப்படுகிறது.

எல்லா அழகு சாதனங்களுமே, நீங்கள் போதுமான அளவு நன்றாக இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றன. அதனால் குறைவுள்ள உங்கள் உடலைக் குறித்து குற்ற உணர்வடைய ஆரம்பிக்கிறீர்கள். பிறகு என்ன செய்கிறீர்கள்? அவர்களுடைய பொருள்களை வாங்கி உபயோகப்படுத்துகிறீர்கள். நீங்கள் தானாகவே அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் விழுந்து விடுகிறீர்கள். ஒரு முறை அவற்றை உபயோகப் படுத்தினால், 'இதற்காகத்தான் இத்தனை தொல்லைகளையும் படவேண்டியிருந்ததா?' என்கிற இன்னுமோர் குற்ற உணர்வால் சூழப்படுகிறீர்கள். நீங்கள் எதையேனும் சாதித்தவுடன், உங்களைச் சூழ்ந்து கொள்ளும் முதல் உணர்வு குற்ற உணர்வுதான்.

உங்கள் கனவும் கற்பனையும் உங்களை ஒரு பயனற்ற வாழ்க்கைச் சுழலுக்குள் அமிழ்த்தி விடுகிறது. நீங்கள் தொலைக் காட்சி, இணையதளங்கள், புத்தகங்கள் இப்படிப் பலவற்றிலும் பார்த்தவற்றில் இருந்து தொகுத்த கற்பனைகளைக் கொண்டு ஒரு திடமான மூளைப் படிவத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் மனதால் எப்பொழுதும் இந்தப் படிவத்தில் வாழ்கிறீர்கள். உறவுகளில் கூட, நீங்கள் இந்தப் படிவத்துடன்தான் தொடர்பு கொள்கிறீர்களே தவிர, உண்மையான மனைவியுடனோ அல்லது கணவனுடனோ தொடர்பு கொள்வதில்லை. உண்மையான மனைவியோ அல்லது கணவனோ உங்கள் மனதிலுள்ள உருவத்திற்கு ஒரு கீழ்த்தரமான மாற்றாகவே இருக்கிறார்கள். உங்கள் இச்சை இப்பொழுது மாசுபட்டு விடுகிறது.

| இரண்டுவிதமான வாழ்க்கைத்தான் இருக்கிறது - புரிந்து கொள்ளுதலுடன் கூடிய வாழ்க்கை மற்றும் புரிந்து கொள்ளுதல் இல்லாத வாழ்க்கை. புத்தா வாழ்க்கை மற்றும் புத்து வாழ்க்கை. |

நீங்கள் இந்த வகையில் ஈடுபட்டீர்களானால், ஒரு கொடிய சுழலில் சிக்கிக் கொள்கிறீர்கள். அதனால்தான் உங்களால் அதனுள் ஆழமாகச் சென்று விட்டு அதிலிருந்து வெளியே வந்து விட முடியவில்லை. ஆனால் மேலும் மேலும் அதிக ஆசையுடன் திரும்ப வருகிறீர்கள். நீங்கள் அதனுள் ஆழமாகச் சென்றால், அதிலிருந்து மலர்ந்து வெளியே வருவீர்கள்!

அதனால்தான் முந்தைய நாட்களில், மக்களால் அவர்களது இச்சையை 40 வயதில் விட முடிந்தது. அவர்கள் மனதில் ஒருபோதும் இவ்வளவு சிக்கலான உருவங்களை வைத்துக் கொண்டதில்லை. அவர்கள் நேரடியாக அவர்களது கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு கொண்டனர். அதனால்தான் அவர்களால் சிறிய வயதிலேயே அதிலிருந்து மலர்ந்து வெளி வர முடிந்தது. அவர்களால் இச்சையினுள் ஆழமாகச் சென்று விட்டு அதிலிருந்து வெளியே வர முடிந்தது. இச்சையே அவர்களிடமிருந்து விழுந்து விட்டது; அவர்கள் அதைவிட வேண்டியிருக்கவில்லை.

இந்தியத் திருமணங்களில், புரோகிதர்கள் ஒரு அழகான சுலோகத்தை தம்பதியரைச் சொல்ல வைப்பார்கள். மனைவி கணவனிடம் சொல்லுவாள், ‘நீ என்னுடைய 11-ஆவது மகனாக இரு’. கணவன் மனைவியிடம் சொல்லுவான், ‘நீ என்னுடைய 11-ஆவது மகளாக இரு’. அதன் பொருள், திருமணமான பின் 11-ஆவது வருடத்தில், அவர்கள் ஒருவரையொருவர் மகனாகவும் மகளாகவும் பார்ப்பார்கள். உறவு முறை அந்த அளவு உருமாற்ற மடைந்திருக்கும்!

உங்கள் குழந்தைகளைப் பார்க்கும் பொழுது, நீங்கள் மிக்க மகிழ்ச்சியால் சூழப்படுகிறீர்கள், இல்லையா? உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் உங்கள் உறவு அந்த அளவிற்கு

| உங்கள் கற்பனையைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் இல்லாவிடில் நீங்கள் துன்பப் படுகிறீர்கள். புரிந்து கொள்ளுதலே, இதனை விட்டு வெளியே வரும் திறவுக்கோல். |

உருமாற்றமடைந்திருந்தால், நீங்கள் உங்கள் கணவனை அல்லது மனைவியைப் பார்க்கும் பொழுதும் அதே மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். கணவன் அந்தப் பெண்ணுடைய மகனாகவும், மனைவி அந்த ஆணுடைய மகளாகவும் ஆகி விடுவார்கள்.

உங்கள் கற்பனையைப் பற்றிய ஒரு தெளிவான புரிந்து கொள்ளுதல் இல்லாவிட்டால் நீங்கள் துன்பப்படுகிறீர்கள். புரிந்து கொள்ளுதலே இதனை விட்டு வெளியே வரும் திறவுகோல். உங்களுக்குத் துன்பப்படாமல் எப்படி வாழ்வது என்பது தெரிந்திருந்தால், நீங்கள் ஒரு ஆன்மீக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் துன்பத்தைத் தவிர்க்கத் தெரியவில்லையென்றால், நீங்கள் உலகாயதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இரண்டு விதமான வாழ்க்கைதான் இருக்கிறது - புரிந்து கொள்ளுதலுடன் கூடிய வாழ்க்கை மற்றும் புரிந்து கொள்ளுதல் இல்லாத வாழ்க்கை; ‘புத்தா’ வாழ்க்கை மற்றும் ‘புத்து’ (மூட) வாழ்க்கை!

உங்களுடைய ஆசைகளையும் கனவுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இல்லை. நீங்கள் தரையில் பாய் மீது அமர்ந்திருக்கும் பொழுது, நாற்காலியை நினைத்துக் கொண்டிருந்ததால் சந்தோஷமாக இல்லை. நாற்காலி கிடைத்தவுடன், சிம்மாசனத்தை நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். சிம்மாசனம் கிடைக்கும் பொழுது அதை அனுபவிக்கும் திறனை இழந்து விடுகிறீர்கள். நான் சொல்ல முயற்சிப்பதைப் பின் தொடர முடிகிறதா?

உங்களுடைய இச்சை எந்தவிதமான குற்ற உணர்வோ அல்லது ஆசையோ இல்லாமல் பரிசுத்தமாக இருக்குமானால், நீங்கள் எந்தவிதமான குற்ற உணர்வோ அல்லது கற்பனையோ இல்லாமல் அதனுள் ஆழ்ந்து சென்று அதிலிருந்து மலர்ந்து வருவீர்கள்.

| ஒரு முறை வெறுமனே உங்கள் தோட்டத்திற்குள் நடந்து சென்று ஒரு மலரையோ அல்லது இலையையோ மிக்க வியப்புடனும் அன்படனும் நெருக்கமாகப் பாருங்கள். |

உங்களுடைய மூளைப் படிவங்கள் செயல்படத் தொடங்கும் பொழுதுதான், உங்கள் சேகரிக்கப்பட்ட கற்பனைகளையும் கனவுகளையும் உள்ளே கொண்டு வந்து, இச்சை யிலிருந்து மலர்ந்து வெளிவராமல் தவறுகிறீர்கள்.

உங்களது மூளைப் படிவங்களை விட்டு விட்டு உங்கள் உடலையும் மற்றவரின் உடலையும் நோக்கிய அன்பை உணரத் தொடங்குங்கள். ஆனந்தம் எப்பொழுதும் உங்கள் உடலுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது; நீங்கள் கற்பனையில் சிக்கிக் கொண்டிருப்பதால் அதை வெளியே வருவதற்கு அனுமதிப்பதில்லை. நீங்கள் உங்கள் உடல் மற்றும் மற்றவரின் உடல் பற்றிய கற்பனைகளை விட்டு விட்டால், உங்கள் இச்சையிலுள்ள மாசு அகற்றப்படும். ரசவாத முறையின் முதல் படியான, அசுத்தங்களை அகற்றுதல் நிகழும்.

நீங்கள் உங்கள் உடலுடன் இயல்பாக இருந்தால் உங்களிடம் ஏதோ ஒரு வசீகரம் நிகழும். பெரும்பாலும் உங்கள் உடலை நோக்கிய ஏதோ ஒரு வெறுப்புணர்வின் காரணமாகத் தான் எல்லா தோல் நோய்களும் ஏற்படுகின்றன. இது நிகழ்க் காரணம், உங்கள் சொந்த உடல் மீதான சுயமரியாதைக் குறைவும் அவமரியாதையும்தான்.

நீங்கள் இதைப் புரிந்து கொள்ளாமல், தோல் நோய்க்குக் குணத்தைத் தேடுகிறீர்கள். அதன் வேர் நீங்கள் பல வருடங்களாகக் கட்டிய உங்கள் சொந்த மூளைப் படிவத்தில்தான் இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவரின் உடலைப் பார்த்து அதைப் போன்ற உடல் வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை நேசித்தால், அதனுடன் இயல்பாக இருந்தால், அழகாகத் தோன்றுவீர்கள்; அழகாக இருப்பீர்கள்.

உங்களை மாற்றிக் கொள்ளும் ஆசையோ விருப்பமோ இல்லாமல் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை ‘ராம் ராம்’ என்று ஜெபிப்பது அல்லது ஆயிரம் முறை கோககோலா என்று சொல்வதும் ஒன்றுதான்.

துளசிதாசர் எழுதிய இராமாயணத்தில், சீதை ஜனகரின் சபைக்குள் நடந்து வந்தபொழுது, சிறந்த முனிவர்களும், வசிஷ்டரைப் போன்ற ரிஷிகளும், சீதையின் சொந்தத் தந்தையான ஜனகரும் கூட மற்ற அனைவருடன் சேர்ந்து மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்றனராம். அது போன்ற உயர் பண்பும், கம்பீரமும், வசீகரமும் அவளிடமிருந்து பரவிக் கொண்டிருந்தது.

தந்திராவில், ஒரு தியான முறையில், தினமும் காலையில் எழுந்து கண்விழித்தவுடன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஆழமான அன்புடன் தொட்டு, சூட்சும உடல் ஸ்தூல உடலில் நிலை பெறுவதற்கு அனுமதிக்கிறோம்.

எது எப்படியோ, வெளியிலிருந்து நீங்கள் அதிகமான உருவங்களைச் சேகரிக்கச் சேகரிக்க, உங்களுடைய மூளைப் படிவம் அந்த அளவு தடிமனுடன் இருக்கும். முந்தைய நாட்களில் மக்கள் இவ்வளவு சிக்கலாகவும், மனநோய் களுடனும் இல்லாமல் எளிமையாக இருந்தனர். அதனால் மூளைப் படிவமே இல்லாமல் இருந்தது அல்லது மிகவும் மெல்லிய ஒரு படிவமாக இருந்தது.

ஒரு முறை, உங்களுடைய உடலையும், மற்றவருடைய உடலையும் பற்றிய கற்பனையை நீங்கள் விட்டு விட்டால், உங்களால் மற்றவருடைய உடலை நோக்கி பரிவையும் நட்பூணர்வையும் காட்டத் தொடங்க முடியும். இச்சையை அன்பாக உருமாற்றமடையச் செய்யும் இரசவாத முறையில், நட்பூணர்வும் சேர்க்கப்பட வேண்டிய ஒரு பொருளாகும்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், வன்முறை ஒரு வழியல்ல. நாம் சமூகத்தில், மாநிலத்தில், மற்றும் நாட்டில் நிலவும் வன்முறை பற்றிப் பேசுகிறோம். நம் வீட்டிலும், உடலிலும், மனதிலும்

இச்சையும் அன்பும் ஒரே நிறமாலையின் இரண்டு எல்லைகள்.

இருப்பதைப் பற்றி என்ன சொல்வது? சாமி சொல்கிறேன்... வன்முறை வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது.

நீங்கள் சொல்லலாம், “ஸ்வாமிஜி, ஆனால் நாங்கள் தினசரி வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபடுவதில்லை”. நான் சொல்கிறேன், நீங்கள் வன்முறையில் ஈடுபடாமல் நட்புணர்வுடன் இருப்பதாக வெறுமனே நினைக்கிறீர்கள். நட்புணர்வு என்ற வார்த்தைக்கு நான் கொள்ளும் பொருள் உங்கள் மனதில் இருப்பதிலிருந்து மாறுபடுகிறது. உங்களை நெருக்கமாக கவனித்துப் பாருங்கள்... நீங்கள் தெருவிலோ அல்லது தோட்டத்திலோ நடந்து செல்லும் பொழுது விழிப்பின்றி மரங்களிலிருந்து இலைகளையும், மலர்களை யும் பறிக்கிறீர்கள்; கற்களைக் காலால் உதைக்கிறீர்கள்; கொடிகளை இழுக்கிறீர்கள்; இவ்வாறு இன்னும் பலவும் செய்கிறீர்கள். இவையெல்லாம் வன்முறைச் செயல்களே.

ஒரு முறை வெறுமனே உங்கள் தோட்டத்திற்குள் நடந்து சென்று ஒரு மலரையோ அல்லது இலையையோ மிக்க வியப்புடனும் அன்புடனும் நெருக்கமாகப் பாருங்கள். அதை அன்புடன் நோக்கி, அதன் அழகை உங்கள் இதயத்தில் உணருங்கள். அதன் மூலமாகப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அதிசயங்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதை ஒரு புதிதாகப் பிறந்த குழந்தை போலக் கையாளுங்கள். உங்கள் ஆழத்திலிருந்து பொங்கும் உணர்ச்சிகளை அனுபவியுங்கள்.

இப்பொழுது, இது போன்று எத்தனை முறை நடந்து செல்லும் பொழுது விழிப்பின்றி மலரையோ அல்லது இலையையோ பறித்து அலட்சியமாக வேறெங்கோ வீசியிருக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இரண்டுவிதமான உணர்ச்சிகளுக்கும்,

உங்களை ஆழமான விழிப்புணர்வுக்குள் தள்ளும் எதுவுமே தியானம்தான். மனோபாவங்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது சொல்லுங்கள், நீங்கள் உண்மையிலேயே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றுடனும், எல்லாருடனும் நட்புணர்வுடன்தான் இருக்கிறீர்களா?

எல்லாவற்றையும் விழிப்புணர்வுடன் நோக்குங்கள். இப்பொழுது நீங்கள் விழிப்பற்ற நிலையிலிருந்து செயலாற்றுவதால், வன்முறையுடன் இருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியாமல், அவற்றிடம் ஒரு வன்முறையான வகையில் நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அவற்றை விழிப்புணர்வுடன் பார்ப்பீர் களானால் உங்களால் அவற்றிடம் உள்ள அளவற்ற அழகைக் காண முடியும்; அவற்றிடம் அன்புடன் நடந்துகொள்ள முடியும்.

மேலும், நீங்கள் உங்கள் உடலை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? அதிகமாக உண்டு உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான ஜீரண அமைப்பிற்கு எத்தனை தொல்லை கொடுக்கிறீர்கள். உங்கள் உடல் ஓய்விற்காகக் கதறும் பொழுது, இரவில் அதிக நேரம் கண்விழித்து, அதைச் சித்திரவதை செய்கிறீர்கள். உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்று தெரிந்தும் புகை பிடிக்கிறீர்கள், மது அருந்துகிறீர்கள். இவையெல்லாம் உங்கள் உடலுக்கு நட்பணர்வான செயல்களா? சிலர் உடலை வெறுப்பதால் அதை அலட்சியம் செய்கின்றனர்.

அதனால் வெளியிலிருக்கும் வன்முறையைப் பற்றிப் பேசுவதை நிறுத்தி விட்டு, உங்களுக்குள் நிகழும் வன்முறையைக் கவனிக்கும் வழியைப் பாருங்கள்! தானாகவே வெளி வன்முறை நின்று விடும். நாம் எப்பொழுதுமே மற்றவர்களின் குறைபாடுகளைச்

உங்கள் இருப்புத்தன்மை, தன்னை உங்கள் தலை மூலம் வெளிப்படுத்திக் கொண்டால், அது அறிவு. சுட்டிக்காட்டத் தயாராக இருக்கிறோம். நம்மிடம் எத்தனை குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி என்ன சொல்வது?

ஒரு முறை, ஒருவர் என்னிடம் வந்து அவரது குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். அவருடைய மனைவி ஒரு வழக்கறிஞர் என்று சொன்னார். நான் கேட்டேன், "ஓ, அவர் நீதிமன்றத்தில் வாதம் செய்வாரா?". அவர் சொன்னார், "இல்லை சுவாமிஜி, அவள் வீட்டில்தான் வாதம் செய்கிறாள்!".

நாம் மற்றவர்களை நோக்கி விரல்களைச் சுட்டவும் வாதம் செய்யவும் தயாராக இருக்கிறோம். அதற்கு பதில், நம்மிடம் இருக்கும் மாசுகளை அகற்றினோமானால், தானாகவே வெளியில் வாதம் செய்ய வேண்டிய தேவையற்றுப் போய் விடும்.

உங்களுடன், உங்களையும் மற்றவர்களையும் குணப் படுத்தும் வார்த்தைகளை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர் களுடைய உடல், மனம், இருப்புத் தன்மை ஆகியவற்றிடம் நட்புணர்வைக் காட்டுங்கள். இதுவே 'பயன் பாட்டு ஆன்மீகம்'. ஆன்மீகம் என்பது தினம் தவறாமல் பூஜையறையில் மணியடித்துக் கொண்டு லக்ஷ்மியிடம் செல்வத்தை வேண்டி வழிபாடு செய்வதல்ல; அது லக்ஷ்மியின் குணங்களாகிய கருணையையும் நல்லெண்ணத் தையும் கிரஹித்துக் கொள்வது. பிறகு செல்வம் தானாகவே நிகழும்.

நாம், சடங்குகளைச் செய்தாலே போதும், பலன் கிடைத்து விடும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறோம். அல்ல. மிகவும் தெளிவாக இருங்கள்... உங்களை மாற்றிக் கொள்ளும் ஆசையோ விருப்பமோ இல்லாமல் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை 'ராம் ராம்' என்று ஜபிப்பதும் அல்லது ஆயிரம் முறை 'கோககோலா' என்று சொல்வதும் ஒன்றுதான்! சடங்குகளுக்கு பின்னால் இருக்கும் அடிப்படைக் கருத்து என்னவென்றால், உங்களை உருமாற்றிக் கொள்வதற்காகப் புரிந்து கொண்டு கிரகித்துக் கொள்வது. பிறகு உலகாயதமான விளைவுகள் தானாகவே சகஜமாக நிகழும்.

ஒரு முறை உங்களால் மற்றவரிடம் நட்ப உணர்வைக் காட்ட முடியுமானால், பொறுமையும் விடாமுயற்சியும் கொண்டு உங்கள் உருமாற்றப்பட்ட உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தினால், இறுதியில், மிகவும் உயர்ந்த பரஸ்பரமான உணர்ச்சியான அன்பை அனுபவிப்பீர்கள். மற்றவர்களும் உங்கள் உருமாற்ற மடைந்த உணர்ச்சியை திருப்பியளிப்பார்கள்; இப்பொழுது நீங்கள் வந்து சேர்ந்து விட்டீர்கள். உங்கள் இருப்புத் தன்மை ஆனந்தமாகி விடும்! அப்பொழுது தான் உங்கள் தியானத்தைச் சரியாகச் செய்ததாக அர்த்தம்!

அன்பு உங்கள் இருப்புத் தன்மையின் மையமாகி விடும் பொழுது, காமம் இரண்டு இருப்புத் தன்மைகளின் ஆழ்ந்த சங்கமம் ஆகிவிடும். பிரச்சினை என்னவென்றால், உண்மையான அன்பு மறைக்கப்பட்டு காணாமல் போய் விட்டது; இச்சை ஆக்ரமித்து விட்டது.

அதன் விளைவாக, இருப்புத் தன்மைகள் ஒருபோதும் ஒன்றாக இணைவதில்லை; உடல்கள்தான் ஒன்றாக இணை கின்றன. உறவு மிகவும் மேலோட்டமான நிலையிலேயே இருக் கிறது. மேலோட்டமான எதையுமே எளிதாக அசைத்து விடலாம். எதுவும் அசைக்க முடியாமல் இருக்க வேண்டுமானால், அதற்கு ஆழமான வேர்கள் தேவை. இது ஒரு எளிமையான தர்க்கம்.

மேலும், இச்சை எப்பொழுதும் உங்களைக் குருடாக்கி விடுகிறது. அது உங்களை விழிப்பற்ற போதைக்கு எடுத்துச்

| உங்கள் இருப்புத்தன்மை, தன்னை உங்கள் உடல் மூலம் வெளிப்படுத்திக் கொண்டால், அது சக்தி. | |---|

செல்கிறது. அன்பும் போதையைத் தருகிறது; ஆனால் அந்த போதை உங்களை ஆழமான விழிப்புணர்வுக்கு எடுத்துச் செல்கிறது. அது ஒரு அற்புதமான நிலை; இச்சையும் அன்பும் ஒரே நிறமாலையின் இரண்டு எல்லைகள். உங்களை ஆழமான விழிப்புணர்வுக்குள் தள்ளும் எதுவுமே தியானம்தான். உங்களை விழிப்பற்ற நிலைக்குத் தள்ளும் எதுவும் பாதகமானதுதான். இதுவே நீங்கள் அனுபவிப்பது எதுவும் உங்களுக்கு நல்லதா இல்லையா என்பதை அறியும் அளவு கோலாகும்.

இன்னொரு விஷயம் நீங்கள் ஆழமாக நேசிப்பீர்களே யானால், பொறாமைக்கு அங்கு இடமேயில்லை. பொறாமை இருப்பதற்குக் காரணம், ஆழமற்ற வேர்கள் வழி விட்டு விடும் என்று நீங்கள் அஞ்சுவதுதான். வேர்கள் ஆழமாய் இருந்தால், ஏன் அஞ்ச வேண்டும்? ஏன் பொறாமைப்பட வேண்டும்? நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்பதற்குக் காரணம், கனவுகளையும் இச்சையையும் அடிப்படையாகக் கொண்ட, மேலோட்டமான உறவுதான்.

ஒரே ஒருவரை மட்டுமே நோக்கிய காதல், உண்மையான காதலே அல்ல. வாழ்க்கையே காதல்தான்! உங்களுடைய இருப்புத் தன்மையே, பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கி, காதலைப் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். உங்களுடைய இருப்புத் தன்மை, தன்னை உங்கள் தலை மூலம் வெளிப் படுத்திக் கொண்டால், அது அறிவு; அது தன்னை இதயத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டால் அது பரிவு; அது தன்னை உடலின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டால் அது சக்தி; அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வெறும் ‘இருப்புத் தன்மை’யாக இருந்தால் அது முக்தி - ஆனந்தம்!

| உங்கள் இருப்புத் தன்மை, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் வெறும் ‘இருப்புத்தன்மை’யாக இருந்தால் அது முக்தி - ஆனந்தம் |

நீங்கள் இந்த நிலையை அடைந்து விட்டால், எந்த விதமான மகிழ்ச்சிக்கும் வெளியில் யாரையும் சார்ந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் எப்பொழுதும் உங்களுக்குள் வெறுமனே மகிழ்ச்சியுடன் ஒத்திசைந்து கொண்டு இருப்பீர்கள். அதே சமயத்தில், அதை வெளியில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களால் பெருக்கவும் முடியும்.

நீங்கள் ஒருவருடன் ஆழமாக இணைக்கப் பட்டிருப்பதாக உணர்ந்தால், அவரது உடல் அருகாமை தேவை இல்லை. வெறுமனே அவருடன் இணைக்கப்பட்டிருக்கும் உணர்விலேயே சந்தோஷமும் திருப்தியும் அடைவீர்கள். நீங்கள் உங்களுக்குள்ளேயே முழுமையாக உணர்வீர்கள். முழுமை பெறுவதற்கு வெளியில் எதையும் தேடமாட்டீர்கள். இந்த இணைப்பு பிரிவாலோ அல்லது வேறு எதனாலோ பாதிக்கப்படாது.

உறவு என்பது, அனைத்திற்கும் அப்பாற்பட்டு, ஒருவருடன் ஆழமான நிலையில் இணைக்கப்பட்டிருக்கும் உணர்வு. இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால், பல நிபந்தனைகளுடன் உங்களை நீங்களே மற்றவர்களுடன் கட்டிப்போட்டுக் கொண்டு, அதை உறவு என்று அழைக்கிறீர்கள். அது ஆட்டம் காண்கிறது. அதைப் பராமரிப்பதற்காகக் கடினமாக உழைக்கிறீர்கள். உறவுகள் எல்லாமே சித்திரவதேதான் என்று தீர்மானித்து விடுகிறீர்கள்!

மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், “ஸ்வாமிஜி, நான் ஆசிரமத்தில் வந்து தங்க விரும்புகிறேன். எனக்கு வீட்டில் தங்குவதில் மகிழ்ச்சியில்லை”.

நான் எப்பொழுதும் அவர்களிடம் சொல்வது என்னவென்றால், அவர்களால் வீட்டில் 4 பேருடன் சந்தோஷமாக

உங்களால் வீட்டில் 4 பேருடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லையென்றால், ஆசிரமத்தில் 100 பேருடன் சந்தோஷமாக இருக்க முடியாது! இருக்க முடியவில்லையென்றால், ஆசிரமத்தில் 100 பேருடன் சந்தோஷமாக இருக்க முடியாது! ஆசிரமம் என்ன தப்பித்துச் செல்பவர்களின் விடுதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

மிகத் தெளிவாக இருங்கள்... வீடு ஏதோ உங்களுக்கு வெளியில் இருக்கும் விஷயம் அல்ல. உங்களைச் சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருப்பதே ‘வீட்டில் இருப்பது1’ என்பதாகும். உங்களால் இவ்வாறு இருக்க முடியவில்லையென்றால், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களால் ‘வீட்டில் இருக்க’ முடியாது.

நான் மாதக்கணக்கில் ஒரு 8’ x 8’ அளவில் அறை போன்ற ஒரு அமைப்பில் இருந்த போதும், இன்று இந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவே ஆனந்தமயமாக இருந்தேன். தயவு செய்து இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் சந்தோஷத்திற்கு வெளியுலகப் பொருட் களால் ஆக வேண்டியது எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் உங்கள் திறன் இருக்கிறது.

நாய் எலும்புத் துண்டைக் கடிக்கிறது. அதன் வாயிலிருந்து இரத்தம் வடியத் தொடங்குகிறது. அது இரத்தம் எலும்பிலிருந்து தான் வருகிறது என்று நினைத்துக் கொண்டு இன்னும் நன்றாகக் கடித்து இரத்தத்தை நக்கிச் சுவைக்கிறது. அந்த நாய்க்கு என்ன நிகழும்? வலி மட்டும்தான் நிகழும். நீங்களும் இதைத்தான் செய்கிறீர்கள். சந்தோஷமோ அல்லது வலியோ, உங்களுக்கு வெளியில் இருந்துதான் கிடைப்பதாக எண்ணிக் கொண்டு, அதில் மேலும் மேலும் ஈடுபட்டு, துயரத்திற்குள்ளாகிறீர்கள். உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

Being at home

ஸ்வாமிஜி, எவ்வாறு எங்கள் குழந்தைகளும் இந்த விதமான பிரச்சினைகளை வளர்த்துக் கொள்வதில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது?

ஒளிவு மறைவின்றி சொல்ல வேண்டும் என்றால், இதை உங்களால் முழுவதும் கட்டுப்படுத்த முடியாது. உங்களால், குழந்தையின் சமூகத்துடனான எல்லாத் தொடர்புகளையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சில விஷயங்களை நீங்கள் வீட்டில் பயிற்சி செய்ய முடியும்.

நான் ஏற்கனவே சொன்னது போல், குழந்தையின் மற்றொரு பாதியை அடக்கி வைக்காதீர்கள். அது தன்னைப் பல வழிகளிலும் சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ளவும், அனுபவிக்கவும் விடுங்கள். பால் வேற்றுமைகளைப் பற்றிய விழிப்பை போதிக்காதீர்கள்.

வெறுமனே குழந்தை தானாகவே இயல்பாக இருக்க அனுமதியுங்கள். தானே ஆராய்ந்து கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ள போதுமான வாய்ப்புக் கொடுங்கள். குழந்தைகள் சமூக நெறிப்படுத்தல்களால் தொடப்படாமல் இருக்கும் பொழுது இயற்கையாகவே அவர்களது சொந்த எல்லைக்குள் மிகவும் இயல்பாகவே இருக்கிறார்கள்.

நீங்கள், குழந்தைகள் தங்கள் பாலுறுப்புக்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதையோ அல்லது கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சப்பிக் கொண்டோ அல்லது அதுபோன்ற வேறேதாவதுச் செய்து கொண்டோ இருப்பதைக் காணலாம். இவையெல்லாம் அவர்கள் வெறுமனே தங்கள் எல்லைக்குள் மிகவும் இயல்பாகவும், அன்படனும், ஆராய்ந்து தெரிந்து கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதேயே காட்டுகின்றன. ஆனால் அவர்கள் இவற்றைச் செய்வதை நாம் அனுமதிப்பதில்லை. அவர்கள் இது

குழந்தைகள் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால் அவர்களை அடக்கி வைக்காதீர்கள். போன்ற செயல்களைச் செய்யும் பொழுது நாம் உடனே அதைத் தடுத்து நிறுத்தி விடுகிறோம். அவர்களிடம் அது தவறு என்று சொல்கிறோம். அவர்கள் ஆராய்ந்து தெரிந்து கொள்வதை அனுமதிப்பது நல்லது.

அவர்களது ஆடைகள் என்று வரும் பொழுது, இரண்டு துண்டுகளாக இருக்கும் உடையை விட, எப்பொழுதும் ஒரே துண்டாக இருக்கும் உடையை அணிவிப்பது நல்லது. இரண்டு துண்டு உடைகள் உடலை இரண்டாகப் பிரிக்கும் ஒரு உணர்வைக் கொடுக்கும்; காலப்போக்கில் அவர்கள் உடலின் கீழ்ப்பாதியையே மறந்து உணர்ச்சியற்றும் போய் விடுவார்கள். அது கிட்டத்தட்ட விழிப்புணர்விலேயே ஒரு பிரிவை உண்டாக்கி விடுகிறது. அதனால்தான் இன்று உங்களை மனதிற்குள் உருவகப் படுத்திக் கொண்டு பார்க்கச் சொன்னால், ஏறக்குறைய எப்பொழுதுமே உங்களுக்கு மேல் பகுதிதான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் உங்கள் கீழ்ப்பாதியை வெறுமனே அலட்சியப் படுத்தி விடுகிறீர்கள். குழந்தையை வெறுமனே அதன் வழிகளில் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள் - அதற்காக நீங்கள் சில இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தால் கூட! குழந்தை களிடம் இயல்பாகவே ஒரு நுண்ணறிவும், உள்ளுணர்வும் இருக்கின்றன. அதனால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவர்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ள அனுமதியுங்கள்.

மேலும், குழந்தைகள் தங்களை முழுமையாக வெளிப் படுத்திக் கொள்கிறார்கள். அதனால் அவர்களை அடக்கி வைக்காதீர்கள். குழந்தைகளுக்கு விஷயங்களை மனதிற்கு கொண்டு வந்து அவற்றை மேலோட்டமாக வெளிப்படுத்துவதும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும் தெரியாது. நாம் மனதிலுள்ள பல விஷயங்களைத் தடைசெய்து உள்ளொன்று

குழந்தைகள் இரண்டு கைகளையும் சுதந்திரமாக உபயோகப்படுத்த அனுமதியுங்கள்.

வைத்துப்புறமொன்று பேசும் கலையில் தேர்ச்சி பெற்று விட்டோம். நாம் ஒரு போதும் முழுமையாக வெளிப் படுத்துவதில்லை.

அவர்கள் இரண்டு கைகளையும் சுதந்திரமாக உபயோகப் படுத்த அனுமதியுங்கள். அவர்கள் பல விஷயங்களுக்கு இடது கையை உபயோகப்படுத்துவதை நாம் ஊக்கப்படுத்துவதில்லை. குழந்தை ஏன் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்தக் கூடாது?! அதில் எந்தத் தவறும் இல்லை. மகாபாரதத்தில், அர்ஜுனன் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லப்படுகிறது. அது உங்களுக்குத் தெரியுமா? நாம் இதுபோன்ற விஷயங்களைக் கேட்கும் பொழுது, மிகவும் வியப்புடன் கேட்கிறோம்; ஆனால் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் நம்மாலும் இவையெல்லாம் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்!

இன்னொரு விஷயம்... எல்லாக் குழந்தைகளும் சுழலுவதில் மகிழ்ச்சியடைவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவ்வாறு சுழல்வதன் மூலம் அவர்களுக்குள் சக்தி மையங்கொள்வதை அனுமதிக்கிறார்கள். தொப்புளைச் சுற்றியுள்ள மணிபூரக சக்கரம் தூய்மையாக இருந்தால்தான் உங்களால் தடையில்லாமல் சுழல முடியும். குழந்தைகள் கள்ளங்கபடமற்றும், கவலையற்றும் இருப்பதால்தான் அவர்களால் எந்தவித முயற்சியும் இன்றி சுழல முடிகிறது. ஆனால், அவர்கள் சுழல்வதற்கு நாம் அனுமதிக்கிறோமா? அவர்கள் சுழல்வதைப் பார்த்தாலே நம் தலை சுற்ற ஆரம்பித்து விடுவதால் நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தி விடுகிறோம்! நாம் அவர்களை ஒரு இடத்தில் உட்காருமாறு சொல்கிறோம்! அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

மகாபாரதத்தில், அர்ஜுனன் இரண்டு கைகளையும் உபயோகப்படுத்துவதில் தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லப்படுகிறது. அது உங்களுக்குத் தெரியுமா? நான் சொல்கிறேன், அவர்கள் சற்று சுழல்வதற்கு அனுமதியுங்கள். அவர்கள் காலடியில் ஒரு கம்பளத்தைப் போட்டு வையுங்கள்; கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்கும்.

இன்னொரு விஷயம்... ஒருபோதும் உங்கள் குழந்தைகளிடம் பயத்தைப் புகுத்தி விடாதீர்கள் அவனைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்; அவன் மேலே ஏறிச் சில தடவை கீழே விழட்டும். நீங்கள் தொடர்ந்து குழந்தையை அதிரியப்படுத்திக் கொண்டேயிருந்தால், அது உயரத்தைக் கண்டால் பயம், இருட்டைக் கண்டால் பயம் போன்ற பல பயங்களுக்கு இட்டுச் செல்லும்.

அதுவே பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறு வதற்கும், தெரியாத புதிய முடிவுகளை எடுப்பதற்கும், இன்னும் பலவற்றிற்கும் பயமாக உருவெடுக்கும். வெறுமனே இந்த சில விஷயங்களைப் பின்பற்றுங்கள். அதுவே போதும்.

ஸ்வாமிஜி, நீங்கள் முழுமையான வாழ்க்கைத்துணை என்று எதுவும் கிடையாது என்று சொன்னீர்கள். பிறகு திருமணத்திற்கு முன்பு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம் என்ன?

இப்பொழுது இந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், ஜோதிடத்தின் முழு அமைப்பையும் இழுக்க வேண்டும்! ஜோதிடத்தை இன்று நாம் பின்பற்றும் விதம்தான் மிகவும் முட்டாள்தனமானதும் அபத்தமானதும் ஆகும்.

புரிந்து கொள்ளுங்கள்... இது உங்கள் வாழ்க்கை, இதை நீங்கள் வாழ்கிறீர்கள், உங்களுக்குத்தான் சாதக பாதகங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையைப் பற்றி

ஒரு போதும் உங்கள் குழந்தைகளிடம் பயத்தைப் புகுத்தி விடாதீர்கள். எதுவும் தெரியாது, நீங்கள் மற்றவர்களிடம் சென்று கேட்கிறீர்கள்! உங்களுடைய அறிவு எங்கே போயிற்று?

உங்கள் வாழ்க்கையை முன்பின் அறிமுகமற்றவர்களிடம் ஒப்படைப்பதும், அவர்களை உங்கள் வாழ்க்கைக்கான முடிவுகளை எடுக்க விடுவதும், உங்கள் சொந்த வாழ்க்கையை நடத்துவது எப்படி என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. தெளிவாக இருங்கள்... உங்கள் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும்.

மக்கள் என்னிடம் அவர்களது எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுடன் வரும் பொழுது, நான் அவர்களிடம் சொல்லுவேன், உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஆருடம் சொல்வதற்காக என்னிடம் வராதீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வடிவமைத்துக் கொடுக்க என் உதவி வேண்டுமானால் என்னிடம் வாருங்கள். இந்த ஆருடங் களெல்லாம் பலவீனமான மனது உடையவர்களுக்கே என்பதில் மிகவும் தெளிவாக இருங்கள்.

பண்டைய காலத்தில் ஜோதிடம் ஒரு தூய அறிவியலாக இருந்தது. ஜோதிடம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்று சொல்கிறேன். கடந்த காலத்தில், ஒரு குழந்தை குருகுலத்திற்கு, ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்பப்பட்டவுடன் அந்தக் குழந்தையின் இயல்பு எவ்வாறு இருக்கும், அதன் மனோபாவம் எவ்வாறு இருக்கும், அவனிடம் இருக்கும் இயல்பான திறன் என்ன என்பதைக் கணிப்பதற்கு ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. அதற்கேற்றாற் போல் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

இதைய் போன்றே, முற்காலத்தில், சாதிப் பாகுபாடுகள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல; அவை ஒரு மனிதனின்

தெளிவாக இருங்கள்... உங்கள் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பை நீங்கள்தான் ஏற்க வேண்டும். குணநலன்களை, ஒரு மனிதனில் இயல்பான திறமைகளை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு பையன் குருகுலத்தில் சேர்க்கப்பட்டவுடன், குரு அவனது இயல்பான சுபாவம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பார். அவனிடம், அறிவுக் கூர்மை முக்கிய அம்சமான பிராமணத் தன்மை சார்ந்த சுபாவம் இருக்குமானால், அவனுக்கு வேத சம்பந்தமான நூல்களைப் படிப்பதற்கான 'வேத வித்யா' தீட்சை கொடுக்கப்படும். அவனிடம் க்ஷத்ரிய இயல்புகளான வீரமும் பலமும் மிகவும் மேலோங்கி இருக்குமானால், அவனுக்குப் போர்க்கலையில் பயிற்சி அளிக்கப்படும். அவன் பல திறமைகளைக் கொண்ட வைசிய குணநலன்களைக் காட்டுவானாயின், அவனுக்கு வியாபாரம் கற்றுத் தரப்படும். அவனிடம் ஒரே வேலையை சந்தோஷமாகச் செய்து கொண்டிருக்கும் சூத்திர குணங்கள் இருக்குமானால், அவனுக்குப் பிறருக்குப் பயன்படும் வேலைகளைச் செய்யப் பயிற்சி அளிக்கப்பட்டது. நான்கு நான்கு பிரிவுகளுக்கும் சம மதிப்பும் சம மரியாதையையும் கொடுக்கப்பட்டது.

ஜோதிடம் இதற்காகத்தான் பயன்படுத்தப்பட்டது. அது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதற்காக உபயோகப் படுத்தப்பட்ட ஒரு அறிவியல். இன்று உங்களைச் சுற்றிப் பாருங்கள். ஏறக்குறைய எல்லாருமே தவறான இடங்களிலேயே இருக்கிறார்கள். மருத்துவரின் இயல்பைக் கொண்ட ஒருவர் பொறியாளராகவும், பொறியாளர் இயல்பைக் கொண்ட ஒருவர் உதவியாளராகவும் இருக்கிறார்கள்! அதனால்தான் சமூகத்தில் எல்லாமே குழப்பமாக இருப்பதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. இயல்பாகவே வியாபாரத்தில் நாட்டமுள்ள ஒருவர் ஆன்மீகத்திற்குள் நுழைந்தால் என்ன நடக்கும்? ஆன்மீகம் வியாபாரமாகி விடும்.

நீங்கள் உயிருள்ள விழிப்புணர்வு - நீங்கள் கடவுளைத் தவிர வேறல்ல.

அப்பொழுது, பண்டைய ஜோதிடம் ஒரு நிரூபிக்கப் பட்ட அறிவியல்தானே, ஸ்வாமிஜி?

அதுதான் எனக்கு பயமாக இருக்கிறது! நான் ஆம் என்று சொன்னால், உடனே நீங்கள் அனைவரும் அதன் பின் ஓட ஆரம்பித்து விடுவீர்கள்! நாளை காலை மக்கள் ஒரு நீண்ட வரிசையில் கையில் ஜாதகங்களுடன் என்னிடம் வந்து, "ஸ்வாமிஜி தயவுசெய்து இதை வெறுமனே பார்த்து எங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்!".

நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம்.. ஜோதிடத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படாதீர்கள்!

விவேகானந்தர் ஒரு முறை, யாரோ அவரிடம் ஜோதிடத்தைப்பற்றிக் கேட்ட கேள்விக்கு மிகவும் பொருத்தமான ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். அவர் சொல்கிறார், "போ, நன்றாக சாப்பிடு, நன்றாக உடற்பயிற்சி செய், நன்றாகத் தூங்கு. நீ உடளவிலும், மனதளவிலும் வலிமையானவனாகி விடுவாய். பிறகு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டாய்!".

மனதளவில் பலவீனமாக இருக்கும் ஒருவனே, இந்த அளவிற்கு ஜோதிடத்தைச் சார்ந்திருப்பான்.

ஸ்வாமிஜி, அப்படியென்றால் ஜோதிடத்தைப் பின் பற்றும் அனைவருமே பலவீனமான மனது உடையவர்களா?

இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலானவர்கள் பலவீனமான மனது உடையவர்கள். சாதாரண மாக அறிவுக் கூர்மையுள்ளவர்கள் கூட சில சமயங்களில் இந்த விஷயங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நான் இந்தக் கல்லை

தேவாலயத்தில் பிறப்பது நல்லதுதான், ஆனால் அங்கேயே இறப்பது அல்ல.

அணிந்தால், எனக்கு அதிர்ஷ்டமாக இருக்குமா?''. நீங்கள் எப்படி ஒரு கல்லைச் சார்ந்து இருக்க முடியும்! நீங்கள் உயிருள்ள விழிப்புணர்வு; நீங்கள் கடவுளைத் தவிர வேறல்ல! என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை, நான் உங்களுக்கு இந்த முழு பிரபஞ்ச சக்தியையும் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற அறிவியலைப் போதித்துக் கொண்டிருக்கிறேன்; நீங்கள் கற்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

நீங்கள், ஸ்வாமி யதீஸ்வரானந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கக் கூடும். அவர் ஒரு சிறந்த மனிதர், ஞானமடைந்தவர். அவர் முதன் முதலாக வெளிநாட்டிற்குச் சென்ற பொழுது, கிரஹங்களின் நிலையைக் கொண்டு கணக்கிடப்படும் ஒரு நாளின் அமங்கலமான நேரம் என்று சொல்லப்படும், ராகு காலத்தில் கிளம்பினார். யாரோ ஒருவர் அவரிடம் கேட்டார், "ஸ்வாமிஜி, நீங்கள் எப்படி ராகு காலத்தில் கிளம்புகிறீர்கள்''. அவர் சொன்னார், "முட்டாள்! கிரஹங்களையே வழிநடத்தும் சக்தி நான்! அவை எப்படி என்னைக் கட்டுப்படுத்தும்?''.

அந்த மனிதரின் தைரியத்தைப் பாருங்கள்! அந்த தைரியம் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலில் இருந்து வருகிறது.

நீங்கள் கிரஹங்களையே கட்டுப்படுத்தக் கூடிய அறிவியலை, நான் உங்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் ஏன் கிரஹங்கள் எங்கே இருக்கின்றன, அவை எப்படி உங்களைப் பாதிக்கும் என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? தியான அறிவியலை எடுத்துக் கொள்ளுங்கள், அதுவே போதுமானது. பிறகு எதுவுமே உங்களைத் தொட முடியாது.

ஆனால் அது எங்களுடைய மதிப்பீடு-அமைப்பில்1 ஒரு பகுதியாக ஆகிவிட்டதே, ஸ்வாமிஜி...

Value-system¹

மிகத் தெளிவாக இருங்கள்... எல்லா மதிப்பீடுகளுமே விழிப்புணர்விற்கு ஒரு மாற்றுதானே தவிர வேறல்ல.

நீங்கள் விழிப்புடன் இருந்தால், என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்து செய்தால், என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்கு மதிப்பீடுகள் தேவையில்லை. நீங்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்ற வேண்டியதில்லை; விதிகள் உங்களைப் பின்தொடரும்! எல்லா நற்பண்புகளும், ஒழுக்கமும், ஆன்மீகமும் உங்களிடம் நிகழும்; நீங்கள் இயல்பாகவே ஆன்மீகத்தில் ஒரு உயர்ந்த நிலையில் மலர்வீர்கள்.

எப்படியோ, நாம் விழிப்புணர்வு அல்லது ஆன்மீக உயர்வு போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே, அது நமக்கல்ல என்றே எப்பொழுதும் நினைக்கிறோம்! எந்த விதமான தியான முறையையோ, விழிப்புணர்வை உயர்த்தும் சாத்தியமான வழிகளையோ முயற்சி கூடச் செய்யாமல், அது நமக்கல்ல என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். அதனால் அதற்கு மாறாக ஒழுக்கம், மனசாட்சி, மதிப்பீடுகள் என்று அழைக்கப்படும் பொய்யான விழிப்புணர்வை நாடிச் செல்கிறோம்.

ஆரம்ப நிலையில் மதிப்பீடுகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இறுதி நிலையாக அல்ல!

விவேகானந்தர் அழகாகச் சொல்கிறார், "தேவாலயத்தில் பிறப்பது நல்லதுதான், ஆனால் அங்கேயே இறப்பது அல்ல!".

நாம் முதலில் ஆன்மீகத்தில் இருப்பது மிகவும் கடினமானது, வித்தியாசமானது என்ற எண்ணத்தை விட வேண்டும்.

பகவான் ரமணரின் பாடல் ஒன்று இருக்கிறது :

"அய்யே, அதி சுலபம், ஆத்ம வித்யை, அய்யே, அதி சுலபம்!"

| நீங்கள் நீங்களான இருப்பதற்கு என்ன தேவை? அது கடினமா அல்லது சுலபமா? | | --- |

அதன் பொருள், “ஓ, மிக சுலபம், இந்த ஆன்மீகம் ஓ, மிக சுலபம்”

பின்னர் வரும் இன்னொரு பகுதியில் அவர் சொல்கிறார்.

“நீங்கள் பணத்தை விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கும் பெயரும் புகழும் வேண்டு மென்றால், கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் தன்னை உணர வேண்டும் என்று விரும்பினால், செய்ய வேண்டிய தெல்லாம் அமைதியாக இருத்தலே!”.

உங்களால் ஆழமான சோம்பல்தனத்திற்குள் நழுவ முடியுமானால், நீங்கள் தெய்வீகத்திற்குள் விழுந்து விடுவீர்கள். இந்த சோம்பல்தனம், நமக்குத் தெரிந்த வழக்கமான சோம்பல் தனம் அல்ல. இது உடலைச் சார்ந்த சோம்பல்தனம் அல்ல. இது ஒரு வகையான மனம் சார்ந்த சோம்பல்தனம்! உங்களால் முழுமையாக - முழுமையாக என்றால் முழுமையாக - சலனமற்று அமைதியாக இருக்க முடியுமென்றால், உங்களால் நிச்சயமாக ஆன்மீகத்திற்குள் இருக்க முடியும்.

ஆன்மீகத்திற்குள் இருப்பது சுலபமும் அல்ல கடினமும் அல்ல. அது உங்களுடைய வெறும் கருத்து மட்டுமே. அது சுலபம் என்று நீங்கள் நினைத்தால், அது சுலபம். அது கடினம் என்று நீங்கள் நினைத்தால், அது கடினம். நீங்கள் நீங்களாக இருப்பதற்கு என்ன தேவை? அது கடினமா அல்லது சுலபமா?

சுலபம் ஸ்வாமிஜி...

நீங்கள் சுலபம் என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்க முடியாது! அது நாம் இருப்பது போலவே இருப்பது! நீங்கள் ஏற்கனவே அதுவாகத்தான் இருக்கிறீர்கள். பிறகு நீங்கள் எவ்வாறு

இச்சையை அன்பாக மாற்றும் முறை ஒரு இரசவாத முறை. அதுவாக ஆவது சுலபம் என்று சொல்ல முடியும்? வெறுமனே உள்ளே பாருங்கள். உள்நோக்கித் திரும்புங்கள். ஆன்மீகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் தியானம், அதுவே போதும்! ஆன்மீகத்திற்குள் இருப்பது மிகவும் கடினம் என்ற பயத்தை விட்டாலே, “ஆம், என்னால் ஆன்மீகத்திற்குள் இருக்க முடியும். என்னால் விழிப்புடன் இருக்க முடியும்” என்ற நம்பிக்கை ஏற்படும். பிறகு, ‘என்னுடைய மதிப்பீடுகளை விட்டு விடுவது சரிதானா’ என்ற கேள்வியே எழாது.

பற்றிக் கொள்வதற்கு வேறெதுவும் இல்லாததால், இப்பொழுது உங்கள் மதிப்பீடுகளை விட்டுவிட அஞ்சுகிறீர்கள்! ஒரு முறை நமது மதிப்பீடுகளை விட்டு விட்டால், அடக்கப்பட்ட எல்லா ஆசைகளும் வெளியே வந்து விடும், பண்டோராவின் பெட்டி1 திறந்து கொள்ளும் என்பது நமக்குத் தெரியும்! பண்டோராவின் பெட்டி திறந்து கொண்டால், குழப்பம் மட்டுமே மிஞ்சும் என்பதும் நமக்குத் தெரியும்! அதனால் நாம் நமது உள் மனத்தைக் கண்டு அஞ்சுகிறோம். உள்மனத்தைக் கண்டு படும் இந்த அச்சமே, இந்தக் கேள்வியைத் தூண்டுகிறது.

நீங்கள் தொடர்ந்து தியானப் பயிற்சி செய்வீர் களானால், உங்களுடைய உள்மனம் தூய்மையாக்கப்பட்டு விடும். அதன்பிறகு, நீங்கள் பண்டோராவின் பெட்டியைத் திறந்தால் கூட, அதிலிருந்து வெளியே வர எதுவும் இல்லாததைக் காண்பீர்கள். உங்கள் முகம் அதில் பிரதிபலிப்பதைக் காண்பீர்கள்; நீங்கள் ஒரு தெளிவான கண்ணாடியைக் காண்பீர்கள்! நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

சரி... நாம் இப்பொழுது துக்கஹரணா என்று அழைக்கப் படும் தியான முறைக்குள் நுழைவோம். அது மூலாதார சக்கரத்தின் மீது செயல்பட்டு அதில் உள்ள சக்தியை எழுப்பும்.

Pandora's Box - எதிர்பாராத பிரச்சினைகளின் மூலம் (கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதை போல)

துக்கஹரணா தியானம்

(நீடிக்கும் நேரம்: 31 நிமிடங்கள்)

இந்த தியான முறைக்கு துக்க ஹரணா என்று பெயர். இது உங்களுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ள எல்லா உணர்ச்சிகளையும் வெளியே கொண்டு வந்து விடும். இதற்கு முன்னும் பல குருமார்கள் இந்த உத்தியை உபயோகப்படுத்தியிருக்கின்றனர். இதைச் செய்வதற்கு ஆகும் நேரம் 31 நிமிடங்கள்.

மூச்சு விடுதலே நமக்கு இந்தப் பிரபஞ்சத்துடனான இணைப்புப் பாலமாக இருக்கிறது. இது நாம் மனம் போல் வாழும் ஒரு அமைப்பு. உங்களுடைய எண்ணம் அமைதியாக இருக்குமானால், மூச்சு தளர்வாக இருக்கும். ஆக்கிரமிப்பான சிந்தனை இருக்குமானால், மூச்சும் ஆக்கிரமிப்பாகவே இருக்கும். அதனால் மனதைக் கட்டுப் படுத்த வேண்டுமானால், முதலில் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தற்சமயம், அடக்கி வைக்கப்பட்ட நிலையில், நம்மில் பலர் அரை உயிருடனும், அரைப் பிணமாகவுமே இருக்கிறோம். இந்த தியானத்தின் முதல் பகுதியில், உங்களுடைய அடக்கப்பட்ட அமைப்பில் ஒரு கடையும் விளைவை உருவாக்குவதற்காக ஆழமான சுவாசம் மேற்கொள்ளப்படுகிறது. உள் எடுத்துக் கொள்ளப்படும் பிராண வாயு அதிகரிக்கப்படுவதால், உங்களுடைய மன அமைப்பு முழுவதுமாக உயிரூட்டப்படுகிறது; அது மிகவும் இன்றியமையாததாகிறது. உங்கள் உடலிலுள்ள செல்களுக்கு அதிக சக்தி கிடைத்து, அவை அதிக உயிர் மின்சக்தி அல்லது உயிர்-சக்தியை உருவாக்குகிறது. இந்த சக்தியானது எல்லா அடக்கப்பட்ட உணர்ச்சி களையும் பனி உருகுவது போல் உருக்கிக் கரைத்து விடுகிறது. இது மூலாதார சக்ரத்தை விசிறி விடுவதைப் போலாகும்.

இந்த முறையை வெறும் வயிற்றில் காலை வேளையில் பயிற்சி செய்வது சிறந்தது. 21 நாட்கள் துக்க ஹரணா செய்வது உங்கள் இருப்புத் தன்மையையே மாற்றமடையச் செய்து, உங்கள் முகத்திலும், உடலிலும் ஒரு பொலிவை ஏற்படுத்தி விடும். இது ஒரு உளவியல் ரீதியான குளியலைப் போன்றது. உங்களுக்குள் இருக்கும் அமைதியை உணர முடியும். உங்களுக்குள் இருக்கும் துக்கத்தைக் கொன்று விட்டால் ஆனந்தம் தானே மலர்ந்து, உங்களிடமிருந்து ஒரு அற்புதமான நறுமணம் வீசும்.

கண்களை மூடி நிற்கவும். உங்கள் உடலின் அடி ஆழத்திலிருந்து, ஆழமாகவும் லயத்துடனும் மூச்சு விடவும்; எப்போதும் வாய் மூடி நாசி வழியாகவே சுவாசிக்கவும். கைகளை அசைத்து முழங்கால்களை வளைத்து பாதி உட்கார்ந்த நிலைக்குச் செ ன்று, பிறகு எழும்பவும். பறந்து கொண்டிருக்கும் ஒரு பறவையைப் போல கைகளை மேலும் கீழும் அசைத்து, முழங்கால்களை மேலும் கீழுமாக உட்கார்ந்துழும்பி, அவையனைத்தையும் சுவாசத்துடன் இணைந்து ஒரே லயத்தில் செய்யவும்.

அசைவுகளை மென்மையாகவும், உள்மூச்சை மேலெழும்பும் பொழுதும், வெளிமூச்சை கீழே செல்லும் பொழுதும் ஒத்திருக்குமாறு இணைந்து செய்யவும். உங்களுக்கு இதய சம்பந்தமான பிரச்சினைகள் ஏதாவது இருக்குமானால், முடிந்த வரையில் செய்யுங்கள். அதே போல், கர்ப்பிணிப் பெண்களும் மற்ற உடற்கோளாறு உள்ளவர்களும் முடிந்த வரையில் செய்தால் போதுமானது. இதை 10 நிமிடங்களுக்குச் செய்யவும்.

அடுத்த 10 நிமிடங்களுக்கு, கண்களை மூடி, உடலின் ஒவ்வொரு பகுதியையும், பகுதி பகுதியாக, ஒவ்வொரு அவயமாக, இறுக்கம் ஏற்படுத்தி, பிறகு தளர விடவும்; ஒரு அவயத்தை இறுக்கி, பிறகு தளர்த்தி, பின்னர் அடுத்த அவயத்திற்குச் செல்லவும். பாதங்களில் ஆரம்பியுங்கள்; கால்களுக்குச் செல்லுங்கள்; பிறகு தொடைக்குச் செல்லுங்கள்; அடுத்து இடுப்பு; பிறகு வயிறு மற்றும் கீழ் முதுகு; பிறகு மார்பு மற்றும் மேல் முதுகு; பிறகு உங்கள் கைகள், விரல் நுனியில் இருந்து தோள் வரை; பிறகு கழுத்து மற்றும் தோள் பட்டை; அடுத்து முகம்; இறுதியாக உச்சந்தலை. அடுத்த பகுதிக்குச் செல்வதற்கு முன், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தளர்த்திக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்குமான ஐஸோமெட்ரிக் பயிற்சி போன்றது.

இந்த 10 நிமிடங்களின் இறுதியில், நீங்கள் உள்ளே காலியாகி விடுவீர்கள்; மேலும் நீங்கள் குளிர்ந்தும், அமைதியாகவும், ஒன்றுபட்டும் விடுவீர்கள்.

அடுத்த 10 நிமிடங்களுக்கு, கண்களை மூடி, அமர்ந்து, வெறுமனே 'ஹு' என்ற வார்த்தையை, 'ஹு' என்ற சப்தத்தை எழுப்பவும். இதை ஆழமாகவோ, உரக்கவோ உச்சரிக்கத் தேவையில்லை. வெறுமனே சாதாரணமான குரலில் உச்சரிக்கவும். உச்சரிக்கும் பொழுது, உங்கள் இருப்புத்தன்மைக்கு உள்ளேயோ அல்லது வெளியே யோ எது நிகழ்ந்தாலும், அதற்கு வெறுமனே சாட்சியாக இருக்கவும். இந்த முறையில், முதல் இரண்டு பகுதிகளுமே, இந்த மூன்றாவது பகுதியான, உண்மையான தியானத்திற்கான, தயார் செய்தல்தான். இந்த மூன்றாவது பகுதிக்கு வரும் பொழுது, மனம் தானாகவே எந்த வித முயற்சியும் இன்றியே அமைதியாகி விடுவதைக் காண்பீர்கள். அமைதியைத் திணிக்க முடியாது; அது தானாகவே நிகழ வேண்டும்.

இந்தத் தளர்வான நிலையிலேயே புன்னகை தவழும் முகத்துடன் ஆனந்தமயமான மனோநிலையில் இருக்கவும். இந்தச் சமயத்தில் நிறைய அனுபவங்கள் ஏற்படலாம்; அவற்றை வெறுமனே ஒரு தொலைக்காட்சியைப் பார்ப்பது போல் பார்க்கவும். உங்கள் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணத்தையும் கவனிக்கவும்.

இந்த தியானம் செய்யும் பொழுது, எப்பொழுதும் மூலாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டாம்; ஏனெனில் அது நாம் அகற்ற முயற்சி செய்யும் கட்டுப்பாடற்ற கற்பனைகளையே மேலும் உருவாக்க வழிவகுக்கும்.

10 நிமிட 'ஹூ' சப்தத்திற்குப் பிறகு, ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருக்கவும்; பிறகு உங்கள் கண்களைத் திறக்கவும்.

(பங்கேற்பாளர்கள் இசையுடனான துக்கஹரணா தியானத்தைச் செய்கிறார்கள்)

ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

மெதுவாக, மிக மெதுவாக, கண்களை திறக்கவும். இந்த சக்தியையும் அமைதியையும் உங்களுடன் எடுத்துச் செல்லவும்.

அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.

ஆனந்தமாக இருங்கள்!

A blank square outline
Blank square outline