KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 4: கவலைகள் இன்றி வாழ்தல்Sign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 4: கவலைகள் இன்றி வாழ்தல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • மணிபூரக சக்கரம் -
  • மணிபூரக சுத்திக்கிரியா -

மணி பூரக சக்கரம் தொப்புள் பகுதியில் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில், மணிபூரகம் என்றால் "ஆபரண நகரம்" என்று பெயர்.

கவலைகளால் இந்தச் சக்கரம் பூட்டப்படுகிறது (அடைபடுகிறது).

நமது கவலைகளைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதன் மூலம் இந்தச் சக்கரத்தை மலரச் செய்ய

முடியும்!

தியான முறை: மணி பூரக சுத்திக்கிரியா - கிறிஸ்தவ மதத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தச் சக்கரம் நிரந்தரமான கவலைகளுடன் தொடர்புடைது.

'கவலை' என்றால் என்ன என்று நாம் ஆராய்வோம். கவலை என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

(ஒரு பெண்மணி பதிலளிக்கிறார்...) ஸ்வாமிஜி, எங்கள் வியாபாரப் பிரச்சினைகளைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது உடல் நலத்தைப் பற்றியோ நினைக்கும் பொழுது கவலையடைகிறோம்...

Living without Worries

நீங்கள் சொல்வது கவலைக்கான காரணங்கள். நான் உங்களிடம் கவலைக்கான காரணங்களைக் கேட்கவில்லை. 'கவலை' என்றால் என்ன என்று கேட்கிறேன்? காரணங்களைக் கேட்டால் இந்த வகுப்பு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்! நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய பட்டியலுடன் தயாராக இருப்பீர்கள்... சொல்லுங்கள்...

ஸ்வாமிஜி, என் வியாபாரம் படுத்துவிட்டது.. ஸ்வாமிஜி, எனக்கு வீட்டில் மனநிம்மதியே இல்லை! ஸ்வாமிஜி, உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாத அளவிற்கு எனக்கு நிறைய பிரச்சினைகள்...! எனக்குக் குழந்தைகளில்லை, அதுதான் எனக்குக் கவலை! ஸ்வாமிஜி, என் குழந்தைகளைப் பற்றித்தான் என் கவலையெல்லாம்...!

(மக்களிடமிருந்து பலத்த சிரிப்பு!)

நாம் எப்பொழுதும் நிறைய கவலைகளுடன் இருக்கிறோம். கவலைகளே இல்லையென்றாலும், நமக்குக் கவலைகளே இல்லையே என்று கவலைப்பட ஆரம்பித்து விடுகிறோம்! பாதுகாப்பற்று உணரத் தொடங்கி, கவலைப்படுவதற்கான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுகிறோம்! நான் சொல்கிறேன்... இது உண்மை! சில வயதான ஓய்வு பெற்ற மனிதர்கள் என்னிடம் வந்து, “ஸ்வாமிஜி, எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கள் குழந்தைகளுக்குத் திருமணமாகி அவர்களும் சொந்த வீடுகளுடன் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் எதையும் கேட்பதில்லை; என்ன செய்வதென்று தெரியவில்லை; நினைப்பதற்கும் எதுவுமில்லை. இனிமேலும் வாழ்வதில் அர்த்தமேயில்லை ஸ்வாமிஜி. நாங்கள் நிம்மதியாக சாக விரும்புகிறோம்”, என்று சொல்கிறார்கள்.

ஆழ்ந்து நோக்கினால், கவலை என்பது ஏதோ ஒரு சம்பவத்திற்கு உங்களது பதில் செயல்தான் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

கவலைகளே இல்லாததனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் முயற்சி செய்து ஏதாவது மூளைக்கு வேலை கொடுத்து வைக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள்; ஆனால், ஒன்றும் வருவதில்லை! இது அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது; ஏனெனில் இதுவரை அவர்கள் ஏதோ ஒரு கவலையுடனேயோ, எண்ணத்துடனேயோ இருந்திருக்கிறார்கள்.

கவலையென்றால் என்ன என்று வரையறுப்பதற்கு முன்னால், நமது கலாச்சாரம், பொருளாதார நிலைமை, வயது முதலியவை என்னவாக இருந்தாலும், நம் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு - அதுதான் கவலை - என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது நான் உங்களை, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் பல காரணங்களைப் பட்டியலிடுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் கவலைக்குக் காரணம் வெளிவிஷயங்கள்தான் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் வெளியுலகத்தையும், உங்களைச் சுற்றியுள்ள மக்களையுமே உங்கள் கவலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.

எண்ணிப் பாருங்கள்.. கவலைக்குக் காரணம் வெளியில் இருந்தால், யாராவது ஒருவராவது அவைகளை வெற்றி கொண்டு கவலைகளிலிருந்து விடுதலையடைந்திருக்க மாட்டாரா? சரிதானே? ஆனால் அப்படித்தான் இருக்கிறதா? நீங்கள் சந்திக்கும் எவருக்கும் ஏதோ ஒரு கவலையிருக்கிறது. அவர்கள் ஏழையோ அல்லது பணக்காரரோ, கல்யாணம் ஆனவரோ அல்லது ஆகாதவரோ, குழந்தைகள் இருக்கிறதோ அல்லது இல்லாமல் இருக்கிறதோ, வேலை செய்பவரோ அல்லது சொந்தமாகத் தொழில் செய்பவரோ

| ஒரு சூழ்நிலை உங்களை கவலைப்பட வைக்கிறதா இல்லையா என்பது, அதற்கு உங்கள் எதிரிச் செயல் என்ன என்பதைச் சார்ந்திருக்கிறது. |

  • யாராக இருப்பினும், அனைவருக்கும் கவலைகள் இருப்பதாகவே படுகிறது.

இதற்குக் காரணம் வெளியிலிருப்பதாக நாம் நினைத் தாலும், உண்மையில் நமக்குள்ளேதான் ஆழமாகப் பொதிந்து கிடக்கிறது. இதுதான் உண்மை. அனைவருக்கும் எப்பொழுதும் ஏதோ ஒரு கவலை இருப்பதற்குக் காரணம் இதுவே.

அதனால் மீண்டும் கேள்விக்கு வருவோம்...

கவலை என்றால் என்ன?

நீங்கள் ஆழ்ந்து உள்ளே நோக்கினால், கவலை என்பது ஏதோ ஒரு சம்பவத்திற்கு உங்களது பதில்செயல்தான்¹ என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். ஒரு சூழ்நிலை உங்களை கவலைப்பட வைக்கிறதா இல்லையா என்பது, அந்தச் சூழ்நிலைக்கு உங்கள் எதிர்ச்செயல்², என்ன என்பதைச் சார்ந்திருக்கிறது. மேலும் கவலை உங்கள் நிரந்தர உள்பேச்சாகி, உங்களை எப்பொழுதும் நிம்மதியற்றுப் போகச் செய்து விடுகிறது.

உதாரணத்திற்கு, உங்கள் நண்பருக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் உங்களிடம் வந்து அவரது புதிய வேலை பற்றியும், அதனால் அவருக்குக் கிடைக்கும் பலன்களையும், சலுகைகளையும் பற்றியும் உங்களிடம் ஆர்வத்துடன் சொல்கிறார். இதற்கு உங்கள் எதிர்ச்செயல் என்னவாக இருக்கும்? விழிப்பின்றி நீங்களே உங்களுக்குள் பேசி க் கொள்வீர்கள்.

ஓ! அவனுக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது. அதனால் அவன் நிறைய பலன்களை அனுபவிக்கிறான். ஆனால், என் நிலை என்ன? இந்தச் சலுகைகளையும்

Response¹ React² பலன்களையும் பற்றிக் கேள்விப் பட்டால் என் மனைவி என்ன சொல்வாள்? இவன் என் மனைவியைச் சந்திக்காமல் இருப்பதே நல்லது. இல்லையெனில் நான் தொல்லைக்கு ஆளாக நேரிடும். நானும் வேறொரு வேலை தேட வேண்டுமா? ஒருவேளை கிடைக்காவிடில்? எனக்கு மட்டும் எதுவும் சரியாகவே அமைவதில்லை... என்றெல்லாம் எண்ண ஆரம்பித்து விடுவீர்கள்.

இதுதான் கவலை!

கவலை என்பது, உங்களை எப்பொழுதும் வெளியில் ஏதாவது ஒன்றுடன் ஒப்பிட்டுக் கொண்டு, உங்களுக்குள்ளேயே அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதனால் நிகழ்வது. காலப் போக்கில் இது உங்கள் மன அமைப்பாகவே மாறி விடுகிறது. நானும் அண்டை வீட்டுக்காரர்களைப் போலவே நன்றாக இருக்கிறேனா? எவ்வாறு என் மேலதிகாரியைக் கவர்வது? என் குழந்தைகள் என்ன நினைப்பார்கள்?

எப்பொழுதும், அது குடும்பமோ அல்லது வேலையோ அல்லது சமூகமோ எதுவாக இருப்பினும், நமக்கு அடுத்தவர்களின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. இதுவே நமது பெரிய கவலை. நமது முழு வாழ்க்கையுமே மற்றவர்களிடம் நற்சான்றி தழைச் சேகரிப்பதைத் தவிர வேறில்லை என்றாகிவிட்டது. மற்றவர்கள் - நல்ல கணவன், நல்ல ஊழியர், நல்ல அண்டை வீட்டுக்காரர் - என்ற நற்சான்றிதழ்களைத் தராதபோது, நமது வாழ்க்கையே வீணாகி விட்டது என்று கவலையடைகிறோம்.

நாம் நமது புறஇயல்பையே1 மற்றவர்களின் நற்சான்றிதழ்களிலிருந்துதான் அமைத்துக் கொள்கிறோம். நாம் நம் மீது நம்பிக்கையிழந்து விட்டோம்; அதுதான் பிரச்சினையே.

Personality¹

Personality¹

குழந்தையாக இருந்தபொழுது, நாம் அனைவரும் நமது இருப்புத்தன்மையில் உறுதியாகவே மையம் கொண்டிருந்தோம். நீங்கள் எப்பொழுதாவது ஒரு குழந்தை தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட்டுப் பார்த்திருக்கிறீர்களா? முடியாது! குழந்தை கவனிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஏனெனில், அவனுக்குக் கவலைகள் கிடையாது. மற்றவர்கள் அவனைப் பற்றி என்ன சொல்வார்கள் என்ற கவலையில்லாததால், அவன் செய்யும் எந்தச் செயலிலும் முழுமையாக ஈடுபடுகிறான்.

நாம் வளர வளர, சமூகம் நம் மீது இந்தக் கருத்தை திணிக்கிறது. சமூகம் மற்றவர்களின் - பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகமற்றவர்களையும் விட்டு வைக்காமல், அவர்களது - கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் கொண்டு நம்மை மதிப்பிட்டுக் கொள்ளக் கற்றுத் தருகிறது. சமூகம் நமது செயல்களுக்கும், வார்த்தைகளுக்கும் வெளியிலிருந்து ஆதரவையும், மற்றவர்களின் சான்றிதழ்களையும் சார்ந்திருக்கு மாறு செய்து விடுகிறது. அதனால்தான் நாம் எப்பொழுதும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று கவலைப்படுகிறோம்.

மேலும், நாம் எதைப் பற்றியேனும் கவலைப்படும் பொழுது, வெளியே ஒன்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதற்கெதிராக நம்மை மதிப்பிட்டுக் கொண்டும், நமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டும் இருக்கிறோம். அதனால் கவலைப்படுதல் நமக்கு வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கிறது. கவலையில்லாவிடில், நமது இருப்புத் தன்மை நகர்வதற்கு ஒரு அச்சு இல்லாதது போல் உணர்கிறோம். அதனால்தான் நாம் உண்மையிலேயே, இரகசியமாக, நமது கவலைகளின் மீது காதலோடு இருக்கிறோம்!

எப்பொழுதும் நமக்கு அடுத்தவர்களின் அங்கீகாரம் தேவைப்படுகிறது - அதுவே நமது பெரிய கவலை.

ஒரு சின்ன கதை....

ஒரு ஆளரவமற்ற தீவில் கைவிடப்பட்ட மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. திடீரென்று அவர்கள் ஒரு பாட்டிலைக் கண்டெடுத்தனர். அவர்கள் அதைக் கையால் தேய்த்த பொழுது, திடீரென்று அவர்களுக்கு முன்னால் ஒரு பூதம் தோன்றியது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பூதம் அவர்களிடம், "எனக்கு இந்த பாட்டிலில் இருந்து விடுதலை கொடுத்ததற்கு நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆசையைக் கேட்கலாம், நான் நிறைவேற்றுகிறேன்" என்று சொன்னது. அவர்கள் பரபரப்படைந்து, சிறிது நேரம் சிந்தித்தனர். முதலாமவன் சொன்னான், "நான் என்னுடைய காதலியை மணந்து சந்தோஷமாக வாழ விரும்புகிறேன்". பூதம் சொன்னது, "சரி, உன் ஆசை நிறைவேறும்". முதலாமவன் அந்தத் தீவிலிருந்து காணாமல் போய் விட்டான். பூதம் இரண்டாமவனைப் பார்த்தது. இரண்டாமவன் சொன்னான், "நான் ஒரு பணக்கார தொழிலதிபராக விரும்புகிறேன்". பூதம் சொன்னது, "சரி. உன் ஆசை நிறைவேறும்". இரண்டாமவன் மறைந்தான். பூதம் மூன்றாமவனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டது. மூன்றாமவன் சொன்னான், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்த என் இரு நண்பர்களையும் நான் இழக்கப் போகிறேன். நான் அவர்களுடன் இருக்க ஆசைப்படுகிறேன்". பூதம் "சரி" என்று சொல்லி விட்டு, அவர்கள் மூவரையும் பழையபடி அந்த ஆளரவமற்ற தீவில் விட்டுவிட்டு, மறைந்து விட்டது.

(சிரிப்பு)

நாம் நமது கவலைகளின் மீது மிகவும் பாசத்துடன் இருக்கிறோம்! அவைகள் நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்று

நீங்கள் உங்கள் கவலைகளை காதலிக்கிறீர்கள் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை. சொல்கிறோம். ஆனால் அவைகளின் மீது மிகவும் பற்றுடன் இருக்கிறோம். நீங்கள் உங்கள் கவலைகளைக் காதலிக்கிறீர்கள் என்று சொன்னால், நம்பத் தயாராக இருக்க மாட்டீர்கள், ஆனால் அதுதான் உண்மை.

மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், "என் வியாபாரம் மோசமான நிலையிலிருந்து மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது, ஸ்வாமிஜி! சென்ற மாதம் எனக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அடுத்த மாதம் அது இன்னும் மோசமாகி விடும்" என்று. நான் சொல்கிறேன், "அ்து தெரியுமென்றால், நீங்கள் ஏன் உங்கள் வியாபாரத்தை உடனே இழுத்து மூடிவிடக் கூடாது? ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?". ஆனால் அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். அவர்கள் நம்பிக்கையின்றி கேட்கிறார்கள், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிஜி? பிறகு நான் என்ன செய்வது?".

(பலத்த சிரிப்பு)

கவலைப்படுவதற்கான காரணம் இன்றி, உங்கள் அஹங்காரம் அதன் இருப்பிற்கான காரணத்தை இழக்கிறது! அதனால்தான் நீங்கள் துன்பப் பரிமாணத்திலேயே இருக்கத் தீர்மானிக்கிறீர்கள். கவலையில் இருக்கும்பொழுது, நீங்கள் 'யாரோ ஒருவராக'¹ இருப்பதாக உணர்கிறீர்கள். நீங்கள் எப்பொழுதும் கவலைகளைப் பற்றி நினைப்பதாலும், அவற்றைத் தீர்ப்பதாலும், உங்களை திடமான ஒரு வஸ்துவாக உணருகிறீர்கள்.

அதே சமயத்தில், இந்த நிரந்தரமான கவலைகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறும்பொழுது ஆனந்தத்தில் இருப்பீர்கள்.

Somebody¹ ஆனால் நீங்கள் இந்தப் பரிமாணத்தில் ‘இல்லாதவராக1’ இருப்பீர்கள்! நீங்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கு விஷயம் எதுவும் இல்லை. தீர்ப்பதற்கு எதுவுமில்லை. நீங்கள் பாதுகாப்பற்று, ஒரு தனி வஸ்துவாக இல்லாதது போல் உணருகிறீர்கள். கவலை யற்று இருக்கும் நிலையை அனுபவிப்பதற்கு முதல் படியாக நீங்கள் திடமான வஸ்துவாக இருக்க விரும்பும் உங்கள் அஹங்காரத்தை விட்டொழிக்க வேண்டும்.

முதலில், கவலையைப் பற்றிய ஒரு விஷயம் என்ன வென்றால், கவலைப்படுதல் என்பதே, உங்கள் மனதிற்கு எப்போதும் உணவளித்து அதை எப்போதும் செயல்பட வைத்துக் கொண்டேயிருப்பதற்கான, உங்கள் தீர்மானம். இதற்கெல்லாம் மேலாக, ஒவ்வொரு மனிதனும் அவன் மட்டுமே அதிகக் கவலைகளுடன் இருப்பதாகவும், அவன் மட்டுமே மகிழ்ச்சியற்று இருப்பதாகவும், மற்ற அனைவரும் மிகவும் சந்தோஷமாகவே இருப்பதாகவும் எண்ணுகிறான்! ஆனால், இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால், இந்தப் பூமியில் ஒவ்வொரு மனிதனுமே, அவன் அல்லது அவள் மட்டுமே மிகவும் துரதிருஷ்டமானவர் என்றும், மிகவும் மகிழ்ச்சியற்றவர் என்றும் நினைப்பதுதான்! இது எவ்வாறு சாத்தியம்?

ஒரு சின்ன கதை....

ஒரு அரசாட்சியில், மக்கள் அனைவருமே மிகுந்த மனச்சோர்வில் இருப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கே மிக அதிகமான கவலைகள் இருப்பதாகவும், மற்ற யாருமே கவலைகள் எதுவுமே இல்லாமல் இருப்பதாகவும் எண்ணுவதாக அரசனுடைய கவனத்திற்குக் கொண்டு வரப் பட்டது. அதனால் மன்னன் ஒரு ‘கவலை பரிமாற்றத் திட்டம்2’ அறிவித்து மக்கள் தங்கள் பெரிய

Nobody¹

Worry Exchange Offer²

கவலைங்களைக் கொண்டு வந்து அதற்குப் பதிலாக மற்றவர்களின் சின்ன கவலைகளை மாற்றி எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று அறிவித்தான். ஒரு பெரிய இடம் தயார் செய்யப்பட்டு, அதன் நடுவில் ஒரு மிகப் பெரிய கவலைப்பானை வைக்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் தங்கள் கவலைகளை அதில் கொட்டி விட்டு, அவர் விரும்பும் வேறு கவலைகளை எடுத்துச் செல்லலாம். ஒரே ஒரு நிபந்தனை, கண்டிப்பாக ஏதாவது கவலைகளை எடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிக்காகக் குழுமினர். மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் கவலைங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர். பிறகு, கவலைப் பரிமாற்றம் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது. நெடு நேரமாகியும் ஒருவர் கூட தங்களது கவலைங்களைப் பானையில் போட முன் வரவில்லை! அனை வருடனும் பேசியதில், ஒவ்வொருவருமே மற்றவர்களுடைய கவலைகளை விட தங்களுக்குப் பழக்கமான சின்ன கவலைகளே எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்!

நான் சொல்கிறேன்.... பல சமயங்களில் நாம் சரியான உண்மையைப் பார்க்காமல் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் கவலைகள் என்று அழைக்கப்படுவதை ஆழமாகப் பார்க்கும் பொழுது, ஒன்றுமில்லாத விஷயத்தை வெறுமனே பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வோம்.

சரி, நீங்கள் கவலைப்படும்பொழுது உங்கள் மனதில் உண்மையிலேயே என்ன நிகழ்கிறது என்பதை இப்பொழுது ஆராய்வோம்.

நீங்கள் எதைப் பற்றியேனும் கவலைப்படும் பொழுது உங்கள் மனதைச் சற்று கவனியுங்கள்.

| கவலையில் இருக்கும்பொழுது நீங்கள் யாரோ ஒருவராக, திடமாக இருப்பதாக உணர்கிறீர்கள். |

முற்றிலும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, அநேக மாக எதிர்மறையான, ஒரு தொடர் எண்ண ஓட்டம் உங்கள் மனதில் உற்பத்தியாவதைக் காண்பீர்கள். எதிர்மறையான வார்த்தைகள் ஒரு ஓட்டம் போல மீண்டும் மீண்டும் உங்கள் மனதிற்குள் வருவதைக் காண்பீர்கள்.

பாருங்கள்... நாம் இரண்டு விதமான பேச்சுக்களை உபயோகப்படுத்துகிறோம் - வெளியே பேசுதல் மற்றும் உள்ளுக்குள்ளேயே பேசிக் கொள்ளுதல். வெளியே பேசுதல் என்பது மற்றவர்களுடன் பேசுவது - நாம் சாதாரணமாக பேச்சு அல்லது உரையாடல் என்று அழைப்பது. உள்ளுக்குள்ளேயே பேசிக் கொள்ளுதல் என்பது நாம் நமக்குள்ளேயே பேசிக் கொள்வது. உண்மையில், இந்த உள்ளுக்குள் பேசிக் கொள்ளுதல் நமக்குள் எப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது. இந்த உள்ளுக்குள் பேசிக் கொள்வது ‘உள் பேச்சு1’ என்று அழைக்கப்படுகிறது. இதைத்தான் கவலை என்றும் அழைக்கிறோம்.

மனதிற்குள் நிகழும் இந்தக் கட்டுப்படுத்தப்படாத தொடர் உழ்பேச்சே கவலையாகும். இந்த உள்பேச்சு உங்கள் எஜமானனாகி விடுகிறது. அது உங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. அதுவே முழு நேர நிகழ்வாகி விடுகிறது.

நீங்கள் பேசும் வார்த்தை எதுவானாலும், கவனத்துடன் பேசுகிறீர்கள். இல்லாவிடில், சமூகம் உங்களை கவனமாக இருக்குமாறு வற்புறுத்துகிறது, இல்லையா? ஆனால், உங்கள் 'உள்ளுக்குள் பேசுவது' எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. நீங்கள் வெளியே பேசும் ஒளியுள்ள வார்த்தை களைக் கட்டுப்படுத்த முடியும் பொழுது, ஒலியற்ற வார்த்தைகளை ஏன் கட்டுப்படுத்த முடியாது?

Inner chatter

உங்களுக்கு சுயமரியாதை இல்லாததனால், நீங்கள் உள்ளே பேசிக் கொள்வதைக் கட்டுப்படுத்துவதில்லை. உங்களுக்குள், நீங்கள் விரும்புவதையெல்லாம் பேசுகிறீர்கள். நாம் ஒரு தட்டிலுள்ள உணவின் மீது குப்பையை எறிவோமா? மாட்டோம். ஆனால், குப்பைத் தொட்டியில் போடுவோம். நீங்கள் மற்றவர்களை ஒரு உணவுத் தட்டு போலவும், உங்களை ஒரு குப்பைத் தொட்டி போலவும் கையாளுகிறீர்கள்; அதனால் உங்களுக்கு அஜீரணம் ஏற்படுகிறது.

வெளி உரையாடல்களில், சில சமயம் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. ஆனால், இந்த உள்பேச்சோ தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அது உங்களை பைத்தியமாக்கி விடக்கூடும்! உண்மையில், பல சமயங்களில் மற்றவர்களுடன் பேசுவதென்பது, உங்களைப் பைத்தியமாக்கி விடக்கூடிய உள் பேச்சிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஒரு வழியாகி விடுகிறது. அதனால் தான் உலகில் இத்தனைப் பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன! மக்கள் அமைதியாக இருப்பதற்கே அச்சப்படுவதற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்!1 அதனால் அவர்கள் சந்தித்து, ஒருவருடன் ஒருவர் பழகி, பேசித் தங்களை எப்பொழுதும் ஒரு செயல் பாட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உள் பேச்சு என்பதற்கு நாம் சரியாக என்ன பொருள் கொள்கிறோம்?

நீங்கள் தனியாக இருக்கும் பொழுது இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்யுங்கள்: சில நிமிடங்கள் வெறுமனே கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு பேப்பரையும் பேனாவையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை குறிப்பிட்ட எதிலும் குவிக்க வேண்டாம். உங்கள் மனதை வெறும் சாட்சியாக

Mad House¹

இருந்து கவனிக்கவும். உங்கள் மனதில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். ஏறக்குறைய கண்களை மூடிய உடனேயே, உங்கள் மனதில் ஒரு தொடர் எண்ண ஓட்டம் பாய்வதைக் காணலாம். உங்கள் மனம் தொடர்ந்து செயல்படுகிறது. எந்த எண்ணம் வந்தாலும், நேர்மையாக எழுதுங்கள். இதை ஒரு ஐந்து நிமிடங்களுக்குச் செய்யவும்.

இப்பொழுது, அமர்ந்து நீங்கள் எழுதியவற்றை யெல்லாம் படியுங்கள். நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்! நீங்கள் பேப்பரில் பதிவு செய்ததெல்லாம் உங்களது உள் பேச்சுக்கள்; அதை நீங்கள் படித்தால், உங்கள் எண்ணங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாகவும், சம்பந்தமற்றதாகவும் இருக்கிறதென்பதைக் காண்பீர்கள்! ஒரு கணம் இங்கேயிருப்பீர்கள்; அடுத்த கணம் அமெரிக்காவில் இருப்பீர்கள்; அடுத்த கணம் உங்கள் அலுவலகத்தில் இருப்பீர்கள்; அடுத்த கணம் உங்கள் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.

இந்தக் கட்டுப்படுத்தப்படாத எண்ணங்களின் ஓட்டம் - இதுதான் உங்களுடைய மனதின் நிலை. இந்த மனதின் கையில்தான் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருக்கிறீர்கள்! இந்த மனம்தான் உங்களுடைய எல்லாக் கவலைகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த மனம்தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த அளவிற்குப் புரிந்து கொண்டாலே, கவலை மற்றும் உள்பேச்சு இவற்றிலிருந்து விடுதலையை நோக்கி ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள், சாலையில் ஒரு விபத்து நடந்திருந்தது. மக்கள் கூடிவிட்டனர். புத்தம் புதிய கார் ஒன்று ஒரு சுவற்றின் மீது மோதியிருந்தது. அவர்கள் ஓட்டுனரிடம் கேட்டனர், "ஐயா,

| கவலைகளிலிருந்து விடுதலை பெறும்பொழுது நீங்கள் ஆனந்தத்தில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் இல்லாத ஒருவராக இருப்பீர்கள். |

உங்களுக்கு சரியாக ஓட்டத் தெரியவில்லை என்றால், ஏன் காரை ஓட்டுகிறீர்கள்?" என்று. அதற்கு அவர் சொன்னார், "எனக்கு எப்படி ஓட்டுவதென்று தெரியும். எப்படி நிறுத்துவதென்றுதான் தெரியாது''.

(பலத்த சிரிப்பு)

பாருங்கள், நீங்களும் இதுபோன்றுதான் ஒரு வண்டியை ஓட்டிச் செல்கிறீர்கள். உங்களுக்கும் அதை எப்படி நிறுத்துவ தென்பது தெரியவில்லை. உங்கள் மனம்தான் உங்களுக்கு நிறுத்தத் தெரியாத வண்டி. சில நொடிகளாவது உங்கள் உள்பேச்சை நிறுத்த முயற்சி செய்யுங்கள்.... முடிகிறதா?

நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த முனைந்தால், அதை நிறுத்த வேண்டும் என்கிற இன்னொரு கூடுதலான எண்ணத் தினால், எண்ண ஓட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இன்னும் அதிகமாகும்!

நீங்கள் உங்கள் மனதைச் செலுத்திக் கொண்டிருக்க வில்லை. உங்கள் மனமே உங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது!

கவலையைப் புரிந்து கொள்ள, நமது மனதின் இயல்பைப் பற்றிய ஆழமான உள்நோக்குப் பார்வை தேவை.

மனதின் வழியாகவே கவலைப்பட முடியும் - எனவே வெளியேறும் வழியும் மனதின் வழியாகத்தான் இருக்க முடியும். ஆனால், நாம் கவலையின் மூலத்தை ஆழ்ந்து நோக்காமல், அதற்கான தீர்வை எப்பொழுதும் தவறான இடங்களிலும் வெளியிலுமே தேடிக் கொண்டிருக்கிறோம். நிறைய பணம் இருந்தால் எல்லாக்

| நாம் கவலைகள் என்று அழைக்கப்படுவதை ஆழமாகப் | | --- | | பார்க்கும்போது, ஒன்றுமில்லாத விஷயத்தை வெறுமனே | | பெரிதுபடுத்திக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்வோம். |

கவலைகளும் தீர்ந்து விடும் என்று நாம் நினைக்கிறோம். நான் இன்னும் அழகாக இருந்தால்.... நான் இன்னும் நல்ல வேலையில் இருந்தால்.. அது இருந்தால்.. இது இருந்தால்...

தீர்வை வெளியுலகப் பொருட்களில் கண்டுபிடிக்க முடியாது. அதனை நமக்குள்ளேயேதான் கண்டு பிடிக்க முடியும்.

ஒரு சின்ன கதை....

புத்தரிடம் பத்தாயிரம் சீடர்கள் இருந்தனர். அவர்களுக்கு தினமும் காலையில் ஒரு உரை நிகழ்த்துவார். ஒரு நாள் நன்கு முடியிடப்பட்ட ஒரு கயிற்றைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்து, “இதை யாரேனும் அவிழ்க்க முடியுமா?” என்று கேட்டார். சீடர்கள் முன்வந்து, அந்த முடிச்சை இழுத்தும் தள்ளியும் அவிழ்க்க முயற்சித்தனர். ஆனால், அவிழ்க்க முடியவில்லை. பிறகு அறிவாளியான சீடன் ஒருவன் வந்து, சிறிது நேரம் அந்த முடிச்சை உற்று கவனித்தான்; பின்னர் அதைச் சுலபமாக அவிழ்த்து விட்டான்.

அது எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது, அந்த முடிச்சு எவ்வாறு விழுந்திருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டும். பிறகு அந்த முடிச்சு உருவாக்கப்பட்டிருக்கும் முறைக்கு எதிர்ப் புறமாக திருப்பி செய்தால் அது தானே அவிழ்ந்து விடும். அதை விட்டுவிட்டு, வெறுமனே இழுப்பதும் தள்ளுவதுமாக இருந்தால், அதை ஒருபோதும் அவிழ்க்க முடியாது; மேலும் அது இறுகி விடும்.

அதே விஷயம் நமது பிரச்சினைக்கும் பொருந்தும். நமது பிரச்சினைகள், நோய்கள், நாம் போராடிக் கொண்டிருக்கும்

நாம் இரண்டுவிதமான பேச்சுக்களை உபயோகப்படுத்துகிறோம் - ஒன்று வெளியே பேசுதல், மற்றொன்று உள்ளுக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல்.

உணர்ச்சிகள் ஆகிய எல்லாமே நமது அமைப்பில் இருக்கும் முடிச்சுகளே தவிர வேறில்லை. அந்த முடிச்சுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டால், அதை அவிழ்ப்பதற்கான சரியான செயல்பாட்டைச் செய்ய முடியும்.

கவலை, தொப்புள் பகுதியில் இருக்கும் மணிபூரக சக்கரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எதிர்மறை எண்ணங்கள் மணிபூரக சக்கரத்தை நேரடியாகத் தாக்குகின்றன.

இந்த ஒரு சிறு சோதனையைச் செய்யவும்... எதிர்மறையான எண்ணங்கள் வருவதாக நீங்கள் உணரும் பொழுது, அவை எங்கிருந்து எழுகின்றன என்று பாருங்கள். அவை எப்பொழுதுமே தொப்புளிலிருந்து எழுவதைக் காண்பீர்கள்.

நீங்கள் கவலைப்படும்பொழுது, உங்களால் கையாள முடியாத சூழ்நிலைகள் எழும்பொழுதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் தொப்புள் பகுதி, உங்கள் வயிறு. மனச் சோர்வை நீங்கள் உடலிலேயே வயிற்றில் ஒரு சுமையாக உணர முடியும். அதனால்தான் நாம் எப்பொழுதும், ‘என் வயிற்றில் சுமக்க முடியாது’, ‘என்னால் ஜீரணிக்க முடியாது’ என்று சொல்கிறோம். இது எல்லா மொழியிலும் இருக்கிறது. இது எங்கும் பொதுவான வழக்கு. நிரந்தரக் கவலை மணிபூரக சக்கரத்தைப் பூட்டுகிறது.

இந்தச் சக்கரத்தைத் திறக்கும் வழி என்ன? இந்தச் சக்கரத்தை எவ்வாறு நல்ல நிலையில் வைத்திருக்க முடியும்? வாருங்கள்.... சொல்லுங்கள்...

உள்ளுக்குள் பேசிக்கொள்வதை உள்பேச்சு என்று அழைக்கிறோம். இந்த உள் பேச்சுதான் கவலை.

நாம் எந்தச் சூழ்நிலையிலும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் ஸ்வாமிஜி?

நீங்கள் உங்களுக்குள் கவலைப்படக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள். என்ன நடக்கும்? நீங்கள் கவலைப்படக் கூடாது என்கிற இன்னொரு கவலையையும் உருவாக்கிக் கொள்வீர்கள். கவலைப்படுவதை நிறுத்து என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; அது கண்டிப்பாக முடியாது. ஒரே ஒரு விஷயம். கவலைகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விடுங்கள்!

கவலையைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது என்றால் என்ன? கவலைகளை வெறுமனே பாருங்கள். அவற்றால் பாதிக்கப்படாமல் இருங்கள். கவலைகளை மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளேயே ஒரு கவலையான போக்கில் சொல்லிக் கொண்டு சிக்கிக் கொள்வதால்தான், உண்மையிலேயே கவலை உங்களிடம் வேர் விடுகிறது. உங்கள் கவலைகளைப் பற்றிக் கவலைப் படாமல் இருங்கள் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். அவைகள் அப்படியே இருக்கட்டும். அவைகளுக்கு உயிர் கொடுக் காாதீர்கள். அவைகளுக்கு இரத்தத்தையும், சதையையும் உணவாகக் கொடுக்காதீர்கள்.

‘மனதைக் கட்டுப்படுத்துங்கள்’, ‘எதிர்மறையாக எண்ணா தீர்கள்’ என்று நீங்கள் சொல்வது கயிற்றில் முடிச்சை அவிழ்ப்பதற்கு எந்த விதத்திலும் உதவாது.

மனதை அடக்கும் பொழுது, அடக்கப்பட்ட நினைவுகள் நேராக மணிபூரக சக்கரத்திற்குச் செல்கிறது. மணிபூரக சக்கரம் விஷமாகும் பொழுது - எதையேனும் பறித்துக் கொள்ளுதல், எதையேனும் அழித்தல், உங்கள் உடலிடமே முறையற்று நடந்து கொள்ளுதல், உங்களுடனேயும் மற்றவர்களுடனும் போராடுதல்

வெளி உரையாடல்களில், சில சமயம் ஒரு இடைவெளி ஏற்படுகிறது. ஆனால், இந்த உள்பேச்சோ இடையறாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. போன்ற - உங்கள் செயல்களில் ஒரு விழிப்பற்ற வன்முறை தலைதூக்கி நிற்கும்.

இவையெல்லாம் அடக்கு முறையின் நுட்பமான வெளிப்பாடுகள். அதனால்தான் கோபமாக இருக்கும் பொழுது வயிறு எரிவதாகவும், அல்லது வயிறு கனமாக இருப்பதாக உணர்வதாகவும் மக்கள் சொல்கிறார்கள். உங்களிடம் ஏராளமாக அடக்கி வைக்கப்பட்ட கோபம் இருக்கிறது; எதிர்மறையான தன்மை நிறைய இருக்கிறது; அது எதிர்மறைத் தன்மையை இன்னும் மேலும் மேலும் அதிகரிக்கிறது.

எதிர்மறைத் தன்மை என்றால் என்ன?

ஏதோ சில காரணங்களால் உங்கள் தொழிலில் தோல்வி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உங்கள் எதிர்ச் செயல் எவ்வாறு இருக்கும்? நீங்கள் தோல்வியைச் சந்தித்ததனால் கொஞ்சம் வருத்தமாக இருப்பீர்கள்; அது பரவாயில்லை. ஆனால், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், நீங்கள் மிகவும் விரக்தியுடன் கோபமும் அடைந்து எல்லாவிதமான விஷயங்களையும் உங்கள் தலைக்குள் போட்டுக் கொள்வீர்கள்...

ஓ... எனக்கு நேரம் சரியில்லை! நான் தொடுவதெல்லாம் தோல்வியில்தான் முடியும்! நான் எதற்கும் லாயக்கில்லை! நான் ஏன் எப்பொழுதும் துரதிருஷ்டசாலியாகவே இருக்கிறேன்? நான் என்ன செய்யப் போகிறேன்?வ்வாறாக பல விஷயங் களையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்வீர்கள்.

இதுதான் எதிர்மறைத்தன்மை என்பது; இதுதான் கவலையின் மூலம். கவலையைப் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால், நமது

| மனதிற்குள் நிகழும் இந்த கட்டுப்படுத்தப்படாத தொடர் உள்பேச்சே கவலையாகும். இதுவே உங்கள் எஜமானனாகி உங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. |

கவலைகளில் 99% ஒரு போதும் உண்மையாயிருப்பதில்லை! நமது கவலைகளில் 99% முழுவதும் காரணமற்றவை.

கொஞ்சம் கொஞ்சமாக, இந்த எதிர்மறையான போக்கு, இந்த எதிர்மறையான பேச்சு உங்கள் இருப்புத் தன்மையில் நிரந்தரமாக உறுதிப்பட்டு, பின்னர் நீங்கள் செய்யும் எல்லாச் செயல்களிலும் ஒருவிதமான எதிர்மறைச் செல்வாக்காகவே வெளிப்படுகிறது. உங்க ளிடம் திடமாகி விட்ட இதைப் பற்றி நீங்கள் வெகுவாக விழிப்பின்றி இருப்பது மிகவும் அபாயகரமானது. அதுவே உங்கள் இயல்பாகி விட்டதால், உங்களிடம் உங்கள் அமைப்பில் இருக்கும் இந்த ஓட்டத்தைப் பற்றிய ஒரு கூரிய விழிப்பை ஏற்படுத்துவதே ஒரு பெரும் வேலையாகிறது. அதை உங்களால் உங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அது உங்களின் ஒரு பகுதியாகி விட்டது.

இந்த எதிர்மறையான¹ மனோபாவத்தின்² மருத்துவப் பெயர்தான் மனச்சோர்வு³. சிலரிடம் மனச்சோர்வு கொஞ்சமாக இருக்கிறது. சிலரிடம் அதிகமாக இருக்கிறது. அவ்வளவே. இந்தப் பேச்சு உங்களை அதிகமாக விழுங்க நீங்கள் அனுமதித்தால் நீங்கள் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாகிறீர்கள். குறைந்த மனச்சோர்வுக்கு உள்ளாகும் மக்கள் சில சமயங்களில் மட்டுமே, அதுவும் குறைந்த அளவில் உணருகிறார்கள். ஆனால் அதிக மனச் சோர்வுக்கு உள்ளாகும் மக்களோ பல சமயங்களில், அதுவும் அதிக அளவில் உணருகிறார்கள். ஆனால், இருவருக்குமே எப்பொழுதும் இந்த ஓட்டம் இருக்கிறது.

அதனால், மனச்சோர்வு அல்லது எதிர்மறைத் தன்மை என்பது, நீங்கள் உங்களுடனேயே பேசிக் கொள்ளும், எதிர்மறையான எண்ணக் குவியல்களைத் தவிர வேறில்லை. ஒருமுறை இது போன்ற எண்ணங்களை நீங்கள் உங்கள் மனதுக்குள் அனுமதித்துவிட்டால்,

Negative¹ Attitude² Depression³ ஒவ்வொரு முறை நீங்கள் சின்னத் தோல்வியடையும் பொழுதும் மீண்டும் மீண்டும் உங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கும். அது இந்த மனோபாவத்தை மேலும் மேலும் வலுப்படுத்தும். கவலைப்படுதல் என்பது அதிகமாக வலுப்படுத்தப்பட்ட ஒரு பழக்கம்தான்.

ஆனால் அது ஒரு வெறும் பழக்கம்தான்; அதனால் மற்ற எந்தப் பழக்கத்தையும் போல எளிதில் உதைத்துத் தள்ளிவிட முடியும்! ஆனால், அதை ஒரு பழக்கமாக நீங்கள் நினைப்ப தில்லை; அது ஏதோ ஒரு திடமான மிகப் பெரிய உண்மை என்று நினைக்கிறீர்கள். அதுதான் பிரச்சினையே. அதனால்தான் உங்களால் அதை உதைத்துத் தள்ள முடியவில்லை.

மனம் ஒரு அற்புதமான பதிவு செய்யும் அமைப்பு. அது உங்கள் எதிர்மறை எண்ண வடிவ அமைப்புகளையும், உங்கள் மனக் குழப்பங்களையும், உங்கள் கவலைகளையும் சேமித்து வைக்கிறது. நீங்கள் கற்றுக் கொடுக்கும் எதையும், மனமானது விசுவாசத்துடன் கற்றுக் கொண்டு திரும்பச் செய்கிறது. இவ்வாறுதான் உங்களுடைய எல்லா வித எதிர்மறைத் தன்மைகளுடனும் ஒரு திடமான மன அமைப்பை உருவாக்கிக் கொள்கிறீர்கள். எனவே உங்கள் மனத்திடம் என்ன சொல்கிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.

நாம் எப்பொழுதுமே மற்றவர்களுடன் எவ்வாறு பேசுகிறோம் என்பதில் மிகுந்த கவனமெடுத்துக் கொள்கிறோம். ஆனால், நாம் நம்முடனேயே எவ்வாறு பேசிக் கொள்கிறோம் என்பதில் ஒரு போதும் போதுமான கவனம் எடுத்துக் கொள்வதேயில்லை.

எவ்வாறு சரியான சாப்பாட்டுப் பழக்கமின்மையால் நமது இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்து விடுகிறதோ, அதே

மக்கள் அமைதியாக இருப்பதற்கே அச்சப்படுவதற்கு காரணம், அவர்களுக்குள் இருக்கும் இந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரிதான்.

போன்று, நிரந்தரக் கவலையானது நமது இருப்புத் தன்மையில் திடப்பட்டு விடுகிறது. கொழுப்பானது நமது இரத்த நாளங்களில் தடைகளை ஏற்படுத்துவது போல், கவலையானது நமது இருப்புத்தன்மையில் சக்தித் தடைகளை ஏற்படுத்துகிறது.

காலப்போக்கில், கவலை உங்கள் இயல்பின் ஒரு பகுதியாகி விடுகிறது. அது ஒரு விழிப்பற்ற செயலாகி விடுகிறது. என்னதான் நீங்கள் அதன் காரணத்தைக் கண்டு பிடித்தாலும், தாழ்வான மனோநிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன்? காலங்காலமாக நீங்கள் அடக்கி வைத்த கவலைகளும், கோபங் களும் உங்கள் இருப்புத் தன்மையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு படலமாக இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கவலை ஒரு அலை போல அவ்வப்பொழுது எழுகிறது; ஆனால், மனச்சோர்வா னது தண்ணீரைப் போல எப்பொழுதும் இருக்கிறது.

எவ்வாறு மனச்சோர்வு அல்லது எதிர்மறைத் தன்மைகளைக் கடந்து செல்வது?

வெறுமனே விழிப்பாகவும் கவனமாகவும் இருங்கள். எப்பொழுதாவது ஒரு எதிர்மறையான எண்ணம் மேலே வருவது உங்கள் கவனத்திற்கு வந்தால், எதிர்மறையான வார்த்தைகள் சிதறி மறைவதாக உங்கள் மனக்கண்ணால் பாருங்கள். இதை நீங்கள் செய்து வந்தாலே, எதிர்மறையான வடிவ அமைப்புகள் உங்களுக்குள் படிய நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள். காலம் செல்லச் செல்ல, உங்கள் மன அமைப்பும் அதை உருவாக்கும் செயல் திட்டமும் மாறியிருக்கும்; அது இனியும் எதிர்மறையாக இருக்காது.

நீங்கள் ஒரு சில கணங்களாவது உள்பேச்சைக் கடந்து சென்றால், உங்கள் விழிப்பும், உயிர்ப்பும் அதிகரிக்கும்.

நீங்கள் உங்கள் மனதைச் செலுத்திக் கொண்டிருக்கவில்லை

  • உங்கள் மனமே உங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. கவலையென்பது உண்மையற்றது, தேவையற்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு மணிபூரக சக்கரத்தின் பொக்கிஷங்கள் இயல்பாகவே திறக்கப்பட்டு விடும்.

சொல்லுங்கள்...

ஸ்வாமிஜி, எண்ணங்கள் மனதின் ஒரு பகுதியா, அல்லது அவை மனதின் வெளிப்பாடா?

உங்கள் மனமும் எண்ணங்களும் ஒன்றே. மனத்திற்கும் எண்ணங்களுக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. மனமே எண்ணம், எண்ணமே மனம். மனம் என்பது எண்ணக் குவியல்களைத் தவிர வேறில்லை; அது தொடர் எண்ண ஓட்டமே. எண்ணங்கள் என்பது நீங்களே உங்களிடம் தொடர்ந்து பேசிக் கொள்ளும் வார்த்தைகளைத் தவிர வேறல்ல.

பாருங்கள்.. நீங்கள் கவலைப்படும் பொழுது, ஏற்றுக் கொள்ளும் தன்மையுடனும் தெளிவுடனும் அதனுள் ஆழ்ந்து செல்லுங்கள். அதனுள் செல்வதற்கு அஞ்சாதீர்கள். கவனத்தில் கொள்ளுங்கள்.... ஏற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு மிகச் சிறந்த தியான முறை. ஏற்றுக் கொள்ளுதல் மிகப் பெரும் சக்தியை வெளியிடுகிறது. உங்களுக்கு நல்ல தெளிவையும் விடுதலையையும் கொடுக்கிறது.

நீங்கள் உங்கள் கவலைகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது, அதனுள் ஆழ்ந்து செல்லும் பொழுது, அவையெல்லாம் வெறும் உங்கள் படைப்புகளே என்கிற அற்புதமான புரிந்து கொள்ளுதல் ஏற்படும். உங்கள் மனம் எவ்வாறு விளையாடுகிறது, எவ்வாறு உங்களிடம் ஒரு மனஇறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் காணமுடியும்.

| இந்த மனதின் கையில்தான் உங்கள் வாழ்க்கையை | | ஒப்படைத்திருக்கிறீர்கள். |

நான் இதைச் சொல்லும் பொழுது, உங்களால் புத்தி பூர்வமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது உங்கள் அனுபவமாகி விடும் பொழுது, உங்களிடம் அந்தத் தெளிவு இருக்குமானால், நீங்கள் கவலைகளைக் கடந்து செல்லலாம். பிறகு, மனச்சோர்வு உங்களைத் தொட முடியாது; நீங்கள் துயரங்களைக் கடந்து செல்வீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒருசமயம் நான் கல்கத்தாவில் தங்கி, ஈஷாவாஸ்ய உபநிஷத வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது, ஒருவர் என்னைக் காண வந்தார்.

அவர் சொன்னார், "ஸ்வாமிஜி, எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் இருக்கும் பகுதியில் நிறையதெரு நாய்கள் இருப்பதால், என்னால் இரவில் நன்றாகத் தூங்க முடிவதில்லை. ஒவ்வொரு இரவும் அவை குறைக்க ஆரம்பித்து விடுகின்றன; விடியும் வரையில் குறைத்துக் கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே நான் ஆழ்ந்து தூங்குபவனல்ல; எனவே இந்த இரைச்சலால் என்னால் சிறிதும் ஓய்வெடுக்க முடியவில்லை".

நான் சொன்னேன், "வீட்டிற்குச் சென்று இன்று இரவு இதை முயற்சி செய்யுங்கள். குரைப்பை கேட்கும் பொழுது, கோபத்தையும் உங்களிடம் எழும் எதிர்மறை உணர்வுகளையும் விட்டு விடுங்கள். எதிர்ப்பில்லாமல் வெறுமனே குரைப்பின் சப்தத்தைக் கேளுங்கள். உங்களிடம் சொல்லிக் கொள்ளுங்கள், நாய்கள் குரைக்கின்றன, அவ்வளவுதான். அதற்கு எதிர்செயல் புரிய உங்களை அனுமதிக்காதீர்கள். குரைப்பு பிரச்சினை அல்ல; அதற்கு உங்களுடைய எதிர்ப்புதான் பிரச்சினை".

சரியான உணவுப் பழக்கமின்மையால் நமது இரத்த நாளங்களில் கொழுப்புச் சேர்ந்து விடுவது போல, நிரந்தரக் கவலையானது நமது இருப்புத் தன்மையில் திடப்பட்டு வருகிறது.

அவர் திரும்பிச் சென்று நான் சொன்னதை முயற்சி செய்தார். சில நாட்கள் கழித்து திரும்பிவந்து சொன்னார், “ஸ்வாமிஜி, நீங்கள் சொன்னது போலவே நான் என் எதிர்ப்பை விட முயற்சி செய்தேன். ‘என் தூக்கத்தைக் கெடுக்க அந்த முட்டாள் நாய்களுக்கு எத்தனை தைரியம் இருக்க வேண்டும்’ என்று நினைப்பதற்கு பதிலாக, நான் என் எண்ணங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன். ‘நாய்கள் குறைக்கின்றன. அது என் தூக்கத்தைக் கெடுக்கிறது...’, ‘நாய்கள் குறைக்கின்றன...’, ‘ஏதோ சில பிராணிகள் ஏதோ சில ஒலியை எழுப்புகின்றன’. இந்த வாக்கியத்திற்கு வரும் பொழுது, நான் தூங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். எது எப்படியாயினும், இந்த சில நாட்களாக நான் நன்றாக உறங்குகிறேன். மிக்க நன்றி ஸ்வாமிஜி”.

இது உங்களிடமும் நடக்கலாம். உங்களுடைய எதிர்மறைத் தன்மையை எவ்வாறு விடுவது என்பது தெரியுமானால், உங்களுடைய எதிர்ப்பை எவ்வாறு விடுவது என்பது தெரியுமானால், எந்த சூழ்நிலையையுமே உங்களால் சமாளித்து விட முடியும். இதுவே மணி பூரக சக்கரத்தைத் திறக்கும் திறவுகோல் ஆகும்.

ஆனால் மனமோ தனக்கு மிகவும் பழக்கமான உள் பேச்சு வடிவ அமைப்புகளிலேயே தங்கி விடவும், நிலை பெறவும் விரும்புகிறது. இதுதான் கவலை செயல்படும் அடிப்படை. மனம் எப்பொழுதுமே விஷயங்களை வகைப்படுத்த விரும்புகிறது. அதற்கு எப்பொழுதுமே கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றிற்கிடையே ஒப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஒப்பீடே, இந்த ஆதாரமே, இந்தத் தீர்ப்பே, கவலை பிறக்கக் காரணமாகிறது.

கொழுப்பானது நமது இரத்த நாளங்களில் தடைகளை ஏற்படுத்துவது போல, கவலையானது நமது இருப்புத்தன்மையில் சக்தித் தடைகளை ஏற்படுத்துகிறது.

கவலைகள் என்பது நமது மனத்திற்குப் பழக்கமான வடிவ அமைப்புகளைத் தவிர வேறல்ல. மனித உளவியல் துறையில் இந்தப் பழக்கமான அமைப்புகளுக்கு என்கிராம்கள் (ஸம்ஸ்காரங்கள் / எண்ணப் பதிவுகள்) என்று பெயர். ஸம்ஸ்காரங்கள் என்பது செதுக்கப்பட்ட இறந்தகால நினைவுகள். இவையே நமது நிகழ்கால மற்றும் எதிர்காலச் செயல்களுக்கு நமக்குள் இருந்து விரும்பத்தகாத மூலங்களாகச் செயல்படுகின்றன. இந்த சேமித்து வைக்கப்பட்ட ஸம்ஸ்காரங்களால், நாம் நிகழ்காலத்தில் தர்க்க ரீதியற்று எதிர்செயல் புரிகிறோம்.

நம்மால் ஏன் ஒவ்வொரு கணத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியவில்லை? ஒவ்வொரு கணத்தையும் இறந்த காலத்துடனும், எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தி முடிவெடுக்க வேண்டிய தேவை என்ன? மனம் தான் காணும் எல்லாவற்றிலும் ஏன் ஒரு முரண்படாத தன்மையை விரும்பு கிறது? அவ்வாறு இல்லாத பொழுது, அதை ஜீரணிக்கக் கஷ்டப்படுவது ஏன்? ஏனெனில், நீங்கள் உங்கள் மன அமைப்புக்படி¹, சேமிக்கப்பட்டுள்ள பதிவுகளின்² உதவியுடன், விஷயங்களை வடிவமைக்க விரும்புகிறீர்கள்; அது முடியாத போது, கவலைப்படுகிறீர்கள்.

எப்பொழுதாவது நான் கவலைப்படுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் எப்படி எப்பொழுதும் சிரித்த முகத்துடனும் எதனாலும் தீண்டப்படாமலும் இருக்கிறேன் என்று உங்களில் எத்தனை பேர் என்னிடம் கேட்டிருக்கிறீர்கள்? நான் சொல்கிறேன்... அதற்குக் காரணம், நான் வெறுமனே இந்தக் கணத்தில்³ வாழ்கிறேன், அவ்வளவே. நான் இறந்த காலத்தை ஒரு ஆதாரமாக மனதில் எடுத்துச் செல்வதில்லை. இதுபோன்ற ஆதாரங்களால்

Mental Makeup¹ Engrams² Moment³ என் மனதை சுமையேற்றுவதில்லை. நான் தன்னிச்சையாக¹ செயல்புரிகிறேன்; எந்தவித வடிவ அமைப்பிலிருந்தும்² அல்ல.

நான் ஒரு பாயும் நதி போல இருக்கிறேன். என்னுடன் வந்த பலர் இமயமலையில் கங்கை நதி பாய்ந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அழகானது. அது சில இடங்களில் மிகவும் அமைதியாகவும், சில இடங்களில் சீற்றம் மிகுந்தும், சில சமயங்களில் மிகத் தெளிவாகவும் மற்ற சமயங்களில் ஒன்றும் தெரியாமல் மிகவும் கலங்கலாகவும் இருக்கிறது. அதை ஒருவன் எங்கு எதிர் கொள்கிறானோ, அதிலிருந்து அவன் அந்த விதமான அனுபவத்தைப் பெறுகிறான்.

அதை எதிர் கொண்ட இருவர் எப்பொழுதாவது தங்களது குறிப்புகளை ஒப்பிட்டுக் கொண்டு புகார் கூற முடியுமா? அது எவ்வளவு முட்டாள்தனமானது! நதியானது வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் இசைக் கேற்றவாறு ஓடிக் கொண்டிருக்கிறது, அவ்வளவே! அதற்கு எந்தவிதமான திட்டமிடுதலும் இல்லை. நானும் கங்கையைப் போலத்தான்... எந்தவிதமான திட்டமிடுதலும் இன்றி, தன்னிச்சையாக, எந்தக் கவலையுமின்றி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறேன். பிரதான திட்டமிடுதல் எல்லாம் பிரபஞ்ச இருப்புத் தன்மைதான்.

நான் தன்னிச்சையாகச் செயல்படுவதன் காரணமாக, முன்னுக்குப் பின் முரணாக³ இருக்கிறேன் என்று, மக்கள் என்னைப்பற்றிக் கருத்துக் கூறுகிறார்கள். உங்களில் எத்தனை பேர் என்னுடைய முன்னுக்குப்பின் முரணான வார்த்தைகள் மற்றும் நடத்தை பற்றி புகார் கூறியிருக்கிறீர்கள்? சொல்லுங்கள்... உங்கள் கைகளைத் தூக்குங்கள்!

(ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, சிலர் துணிகின்றனர்...)

Spontaneously¹Patterns²Inconsistent³

பாருங்கள்! இந்த எண்ணம் உங்கள் எல்லாருக்குமே ஒரு சில சமயங்களிலாவது வந்திருக்கும். ஆனால் இவர்கள் மட்டுமே கையை உயர்த்தும் துணிச்சல் பெற்றிருக்கிறார்கள்.

கங்கை முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? உங்களால் 'கங்கை இன்னும் கொஞ்சம் சீராக ஒழுங்கான முறையில் ஓட வேண்டும்' என்று சொல்ல முடியுமா? முடியாது! ஆறு அப்படித்தான் ஓடுகிறது, அவ்வளவுதான்; உங்களால் அதை எடைபோட முடியாது. அதே போல், நானும் ஒரு நதியைப் போல் பாய்ந்து செல்கிறேன்; என்னை முன்னுக்குப்பின் முரணானவன் என்று சொல்ல முடியாது. நான் கணத்திற்கு கணம் வாழ்கிறேன். ஆனால் நீங்களோ ஒன்றுக்கொன்று தொடர்பு உடைய, மிகவும் சிக்கலான கணங்களை ஒன்று சேர்த்து அதில் வாழ்கிறீர்கள். அதன் விளைவு என்ன? நீங்கள் சுமையேற்றப் பட்டதாக உணர்கிறீர்கள்; கவலைப்படுகிறீர்கள்.

இத்தனை கணங்கள் உங்கள் மீது தங்கள் சுமையை ஏற்றியிருக்கும் பொழுது, நீங்கள் நிச்சயமாக சுமையாக உணர மாட்டீர்களா? அதே போல, ஒரே ஒரு கணம் மட்டுமே உங்கள் மீது இருக்கும் போது, நீங்கள் இலேசாக உணர மாட்டீர்களா? உங்களுடைய கவலைகளுக்கெல்லாம் காரணம் நீங்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை இறந்தகால வடிவ அமைப்புகளுடன் தொடர்பு படுத்துவது தான். இந்த முழுச் செயல்பாட்டில், உண்மையிலேயே உங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும், நிகழ் காலத்தைத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் இறந்தகாலத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும், தொடர்ந்து நிகழ் காலத்தைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இறுதியில், எதிர் காலமும் இறந்த காலமுமே இருக்கிறது; நிகழ்காலம் ஒரு போதும் இல்லை.

எண்ணங்கள் என்பது நீங்களே உங்களிடம் தொடர்ந்து பேசிக்கொள்ளும் வார்த்தைகளைத் தவிர வேறல்ல. கவலையின் ஓட்டத்திற்குக் காரணமாகும் இந்த வடிவ அமைப்புகள் மனதின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கும் அடிப்படைக் கூறாகும்.

ஒரு சின்ன கதை....

இரண்டு நண்பர்கள் புதிதாக வெளிவந்த ஒரு படத்தைப் பார்ப்பதற்காக தியேட்டருக்குச் சென்றனர். ஒருவன், மற்றவன் தன் கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதைக் கவனித்தான். அவன் காதில் கிசுகிசுத்தான், "நீ படத்தை ரசிக்கவில்லையா?". அவன் சொன்னான், "ரசிக்கிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்று பார்க்கிறேன்''.

(சிரிப்பு!)

உண்மையில், நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். நாம் கவலைப்படுவதுடன் மிகவும் இசைந்து போய் விட்டோம்; அதனால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லாவிடில் கூட, இந்தக் கவலையற்ற நிலை எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று கவலைப் படுகிறோம்! நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது கூட, மகிழ்ச்சியாக இருக்க இன்னும் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்ற எண்ணத்திலேயே இருக்கிறோம். பிறகு நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நீங்கள் தொடர்ந்து இது போன்ற எண்ணத்திலேயே இருந்தால், உங்களை எப்பொழுதும் எதிர்காலத்திலேயே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் எதிர்கால மகிழ்ச்சியான கணத்தைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் சமயத்தில், அந்த க்ஷணத்தின் மகிழ்ச்சியைத் தவறவிட்டு விடுகிறீர்கள்!

நான் சொல்ல முயற்சிப்பதைப் பின்தொடர முடிகிறதா?

| மனம் எப்பொழுதும் விஷயங்களை வகைப்படுத்தி ஒப்பிட விரும்புகிறது. இந்த ஒப்பீடே கவலை பிறக்கக் காரணமாகிறது. | |---|

நீங்கள் உங்கள் குடும்பத்தில் உங்களையும், மற்றவர் களையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தீர்களானால், நான் சொல்வதைக் கவனிக்க முடியும்.

ஒவ்வொருவருமே, கவலைகளுடன் இருக்கும் பொழுது, தங்களை முக்கியமானவராகவும், தங்களால் பயனிருப்பதாகவும் கருதுகிறார்கள்.

உண்மையில், நிறைய கவலைகளுடன் இருக்கும் பொழுது, ஒரு மனிதன் தன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமடைகிறான்; ஏனெனில் அவனது அஹங்காரம் நிறைய கவலைகளை நிர்வகிக்கும் திறமை பற்றிச் சந்தோஷமடைகிறது. அதனால்தான் பல சமயங்களில், நீங்கள் உங்கள் கவலைங்களைப் பற்றி யாரிடமாவது பேசினால், உடனே அவர்கள், "ஆ! இது ஒன்று மில்லை; என்னுடைய பிரச்சி னைகளைக் கேளுங்கள்; அப்பொழுது தான் உங்களுக்குத் தெரியும்" என்று சொல்வதைக் கண்டிருப்பீர்கள். ஏனெனில், மக்கள் பெரிய கவலைகளை சுமப்பதை உயர்வாகக் கருதுகிறார்கள்.

எப்பொழுதும் கவலைங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால் என்ன நிகழ்ந்து விடப் போகிறது? ஒன்று மில்லை. உங்களுடைய பத்து கவலைகளுடன், பதினோராவது கவலையாக மனச்சோர்வும் சேர்ந்து கொள்ளும், அவ்வளவுதான்.

நாம் வேலை செய்யும் பொழுது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தெளிவாக இருங்கள்... கவலையிருக்கும் பொழுது உங்களால் வேலை செய்ய முடியாது. உண்மையிலேயே நீங்கள் வேலை செய்யும் பொழுது கவலைப்பட முடியாது. கவலையிருக்கும் இடத்தில் படைத்தல் நிகழ முடியாது. படைத்தல்

கவலைகள் என்பது நமது மனதிற்குப் பழக்கமான வடிவ அமைப்புகளைத் தவிர வேறல்ல. இதற்கு மனித உளவியல் துறையில் என்கிராம்கள் என்று பெயர். இதைத்தான் நாம் ஸம்ஸ்காரங்கள் அல்லது எண்ணப்பதிவுகள் என்கிறோம்.

நிகழுமிடத்தில் கவலை இருக்க முடியாது. ஒரு சமயத்தில் படைப்போ அல்லது கவலையோ மட்டும்தான் இருக்க முடியும்; ஒருபோதும் இரண்டும் சேர்ந்திருக்க முடியாது. படைப்பே உண்மையான வழிபாடு. படைக்கும் பொழுது நீங்கள் கடவுளுக்கு மிக அருகாமையில் இருக்கிறீர்கள். படைப்பு இதயத்திலிருந்து வருகிறது. கவலை மனதிலிருந்து வருகிறது.

இறந்தகாலத்தின் பின்னால் செல்லும் பொழுது, அல்லது எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது, நீங்கள் நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். ஆன்மீகம் என்பது இறந்தகாலத்தை விட்டு விட்டு நிகழ்காலத்தில் வாழ்வது. தற்சமயம், நீங்கள் இறந்த காலத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சுமை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் நீங்கள் சதுப்பு நிலத்தில் மாட்டிக் கொண்டு விட்டதைப் போல் உணர்கிறீர்கள்.

உங்களுக்கு, உங்களுடைய இறந்தகாலச் சுமையை எவ்வாறு இறக்கி வைப்பது என்று தெரியவில்லை; உங்களுக்கு அதை எவ்வாறு சுமந்து செல்வது என்று மட்டுமே தெரியும். நீங்கள் அதனை உங்களுடனேயே சுமந்து செல்ல வேண்டும் என்று கருதுகிறீர்கள். சமூகம் அதை உங்களுடன் சுமந்து செல்லவே கற்றுக் கொடுத் திருக்கிறது. நீங்கள் அதை விட்டுவிட முயற்சி செய்தால், குற்ற உணர்வுடன் இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

நீங்கள் இறந்தகாலத்தை விட்டுவிட்டால், நன்றியுணர் வற்றவர்கள் என்று சமூகம் உங்களைச் சொல்கிறது. நான் சொல்கிறேன்... அது வெறும் அபத்தமானது. நீங்கள் உங்களுடைய இறந்த காலத்தை உங்களுடன் சுமந்து செல்ல வேண்டிய தேவை

| நீங்கள் இறந்த காலத்திற்காகவும் | | எதிர்காலத்திற்காகவும், தொடர்ந்து | | நிகழ்காலத்தைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். |

கண்டிப்பாக இல்லை. நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் தொடர்ந்து இருக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மையையும் மற்றும் மொத்தத்தில் அனைவரையும் நோக்கிய ஒரு உணர்வு; வாழ்க்கையில் நிகழும் தனித்தனி சம்பவங்களை நோக்கிய உங்கள் உணர்வு அல்ல என்பது இவற்றையெல்லாம் உங்களுக்குச் சொல்லும் மக்களுக்குத் தெரியாது.

நீங்கள் இறந்தகாலத்தை விடும்பொழுது, நிகழ்காலம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சமூகம் எப்பொழுதுமே நிகழ்காலத்தை இறந்த காலமாகவே அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது; ஒருபோதும் நிகழ்காலமாக அல்ல. அது எல்லாவற்றையுமே இறந்தகாலமாகச் செய்த பிறகே அனுபவிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

நான் விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் மக்களைக் கண்டிருக்கிறேன் - எப்பொழுதும் கையில் ஸ்டில் கேமரா மற்றும் வீடியோ கேமராக்களுடன். அற்புதமான இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தில், அவர்களைச் சுற்றியுள்ள இயற்கையை ரசிக்காமல், எல்லாக் காட்சிகளையும் அவர்களது கேமராவின் லென்ஸ் வழியாகப் பிடித்து விட கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருப்பார்கள்.

பிறகு அவர்கள் வீட்டிற்குச் சென்று, படச்சுருளைக் கழுவி, நான்கு சுவர்களுக்குள் ஸோஃப்பாவில் அமர்ந்து, அதே இயற்கைக் காட்சிகளைப் புகைப்படத்திலும், வீடியோ கேமராவிலும் அனுபவிப்பார்கள். அவர்கள் வெறுமனே தவறவிட்டு விட்டார்கள், அவ்வளவுதான். எடுக்கப்பட்ட எல்லா புகைப்படங்களும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காண்பிக்கப்படுவதெல்லாம், அதில் காணப்படும் இடங்களுக்கெல்லாம் சென்று விட்டு வந்ததைச் சொல்வதற்குத்தான். ஆனால் அவர்கள் அந்த இடங்களில் இருந்த

எப்பொழுதும் கவலைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது? பத்துக் கவலைகளுடன் பதினோராவதாக மனச்சோர்வு சேர்ந்து கொள்ளும்!

போது அதை ஒருபோதும் அனுபவிக்கவில்லை! அதை வெறுமனே தவறவிட்டு விட்டார்கள்!

நீங்கள் எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாகச் செய்த பிறகே அனுபவிக்கிறீர்கள். அதனால் தான் மக்கள், "அவை பொன்னான நாட்கள்", என்று சொல்கிறார்கள். அந்த நாட்கள் உண்மையிலேயே இருந்த பொழுது, நீங்கள் அவற்றை நிச்சயமாகப் பொன்னான நாட்களாக எண்ணவில்லை. அந்த சமயத்தில் நீங்கள் அதற்கு முந்தைய நாட்களைப் பொன்னான நாட்கள் என்று சொல்லிக் கொண்டிருந்திருப்பீர்கள், அவ்வளவுதான்! இவ்வாறுதான் நீங்கள், உங்கள் கவலைகளால், உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.

நீங்கள் நிகழ்காலத்தின் அழகை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறீர்கள். நீங்கள் நிகழ்காலத்துடன் இசைந் திருக்கும் பொழுது, ஒவ்வொரு கணமுமே கொண்டாட்டமாக இருக்கும். நீங்கள் கொண்டாடுவதற்கு பழைய சம்பவங்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஒவ்வொரு கணமுமே கொண்டாட்டமாக இருக்கும் பொழுது, நீங்கள் தொடர்ந்து நிகழ்காலத்திலேயே இருந்து கொண்டிருப்பீர்கள்; ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு கணத்தையுமே கொண்டாடிக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் கொண்டாடுவதற்கு ஒரு போதும் இறந்த காலத்திற்குச் செல்ல மாட்டீர்கள்.

கவலைகளைக் கண்டறிய இறந்தகாலத்தைக் கூறு போட்டு ஆராய்ந்து கொண்டிருப்பது ஒரு வீண் வேலை; ஏனெனில் ஒவ்வொரு கணமும் நீங்கள் ஒரு புதிய மனிதராக இருக்கிறீர்கள்! ஒவ்வொரு கணமும், நீங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு கணமும் நீங்கள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் ஒரு பகுதி; பிரபஞ்ச இருப்புத்தன்மை

நீங்கள் எப்பொழுதும் நிகழ்காலத்தை இறந்த காலமாகச் செய்த பிறகே அனுபவிக்கிறீர்கள். ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது. பிறகு நீங்கள் எவ்வாறு பழைய சம்பவங்களைக் கூறுபோட்டு மேம்படுத்தப்பட்ட அறிவுடன் ஆராய முடியும்? அது முற்றிலும் பொருளற்றது.

மேம்படுத்தப்பட்ட அறிவுடன் ஒருபோதும் இறந்த காலத்தை ஆராயாதீர்கள். அது முற்றிலும் முட்டாள் தனமான செயலாகும். அது மேலும் மேலும் கவலை மற்றும் குற்ற உணர்வை நோக்கியே இட்டுச் செல்லும். ஒவ்வொரு கணமும் நீங்கள் இறந்து மீண்டும் புதிய மனிதனாகிறீர்கள். இதுதான் உண்மை. இதை வெறுமனே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஏதாவது எருமை அல்லது பசு கவலைப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது செடி கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவைகளெல்லாம் வாழ்க்கையை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கவில்லையா? நீங்கள் மட்டும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நான் சொல்கிறேன்... கவலைப்படுதல் மிகவும் பயனற்ற ஒரு செயலாகும். உங்களுக்குள் கவலைகள் நிரந்தரமான உள் பேச்சாக உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அது உங்களை அதில் பயனற்ற வகையில் முழுவதுமாக ஈடுபடுத்தி விடுகிறது.

உங்கள் கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த மொழியின் வார்த்தைக் குவியல்களைத் தவிர வேறல்ல. மேலும் அவை உங்களுக்குள் அதிகக் குழப்பத்திற்கும் தவறான விளக்கங்களுக்கும் காரணமாகிறது. வார்த்தைகளே எல்லா தவறான புரிந்து கொள்ளுதலுக்கும் மூல காரணம். ஆனால், என்ன செய்வது

நீங்கள் ஏதாவது எருமை அல்லது பசு கவலைப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது செடி கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

  • தொடர்பு கொள்வதற்கு நமக்கு பரிச்சயமான ஒரே முறை வார்த்தைகள் மட்டுமே.

நான் எப்பொழுதும் மக்களிடம் சொல்வதுண்டு.... நான் ஏதாவது ஒன்று சொன்னால், நீங்கள் அதை வேறொன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான அகராதியைக் கையில் வைத்துக் கொண்டு, வார்த்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த வழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சின்ன கதை....

ஒருவன் தன் மனைவியிடம் சொன்னான், "உனக்குத் தெரியுமா, பெயிண்ட் பிரஷ்கள் செய்வதற்கு வருடத்திற்கு சுமார் 5000 ஒட்டகங்களை உபயோகப்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது". அதற்கு மனைவி சொன்னாள், "ஓ கடவுளே! மிருகங்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது வியப்பாக இல்லை!".

(சிரிப்பு)

இப்படித்தான் நம்மில் பலர் புரிந்து கொள்கிறோம். அதனால்தான் நான் வார்த்தைகள் குழப்பத்தை விளை விக்கின்றன என்று சொல்லுகிறேன். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மனிதனுக்குத் தெரிந்த ஒரே தொடர்பு முறை வார்த்தைகள்தான். அவன் மேலும் மேலும் வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறான்.

பாருங்கள், வார்த்தைகள் மேலும் வார்த்தைகளுக்கு வழி வகுக்கும். ஆனால் ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையில் ஒரு அமைதி அல்லது ஒரு இடைவெளி - நம்மால்

உங்கள் கவலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த மொழியின் வார்த்தைக் குவியல்களைத் தவிர வேறல்ல.

உணர்ந்து கொள்ள முடியாத ஒரு மிகச்சிறிய இடைவெளி இருக்கிறது; இந்த இடைவெளி கவனிக்கத் தக்கது. நாம் உண்மையிலேயே தேடுவது இந்த இடைவெளியில்தான் இருக்கிறது.

இந்த இடைவெளி நாம் நாள் முழுதும் பார்த்தாலும் அக்கறை கொள்ளமுடியாத அளவு அணுஅளவானது. நான் பேசும் பொழுது நீங்கள் அதிக உள்பேச்சின்றி என் பேச்சில் தீவிரமாக மூழ்கி விடுகிறீர்கள். நீங்கள் என் வார்த்தைகளில் ஆழ்ந்து மூழ்கியிருக்கும் பொழுது, நான் சில இடை வெளிகளைக் கொடுக்கிறேன்; இந்த இடைவெளிகளில் இருக்கும் அமைதியே நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் உண்மையான தீர்வு!

நான் சில சமயம் பேசும் பொழுது, நீண்ட இடைவெளிகளைக் கொடுப்பேன். அந்த இடைவெளிகளைக் கொடுப்பது நீங்கள் அமைதியை கிரஹித்துக் கொள்ளவும், அதற்கு சாட்சியாக இருப்பதற்காகவுமே. அது உங்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கும். ஆனால் வழக்கமாக என்ன நடக்கிறது? நான் இடைவெளிகளைக் கொடுக்கும் கணத்தில், மக்கள் அமைதியற்று இருக்கத் தொடங்குகிறார்கள். ஏதாவது அவர்களது பொருள்களை குடையத் தொடங்குவது அல்லது சுற்றும் முற்றும் பார்த்து பேசத் தொடங்குவது - இவ்வாறு மீண்டும் வார்த்தைகளைச் சேகரிக்கிறார்கள்!

உண்மையான அமைதி என்பது விழிப்புணர்வால் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதைத் தவிர வேறில்லை. அது உங்கள் வாயை மட்டும் மூடிக் கொண்டிருப்பதல்ல. உங்களுக்கு இந்த அமைதியின், இந்த விழிப்புணர்வின் கணநேரக் காட்சி

நான் ஏதாவது ஒன்று சொன்னால், நீங்கள் அதை வேறொன்றாகப் புரிந்து கொள்கிறீர்கள். கிடைத்தாலும், எப்பொழுதும் சாமி பேசுவது என்ன என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

இப்பொழுது உங்கள் மனம் கேட்கத் தொடங்கும்.. இந்த, உள் பேச்சையும் எண்ணங்களையும் எவ்வாறு நிறுத்துவது? எவ்வாறு உண்மையான அமைதியை அனுபவிப்பது? இந்த எண்ணம் உங்களைச் சுற்றி வந்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். பிறகு அதுவே இன்னொரு கவலையாகி விடும்!

பாருங்கள்... இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்... உங்களால் சிந்திப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது. சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமே இன்னொரு எண்ணம்தான்! நீங்கள் வலுக்கட்டாயமாக ஒரு வினாடி அமைதியாக இருக்க முயற்சி செய்தால், அது நாம் அடைய விரும்பும் அமைதி அல்ல; அது வெறுமனே திணிக்கப்பட்ட, இறந்து போன அமைதியாகும். நாம் சாதிக்க விரும்பும் அமைதி, அதிர்விலேயே இருக்கும், ஆனந்தமான அமைதி - பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அமைதி.

அதனால், நாம் செய்ய வேண்டியது என்ன? வெறுமனே மனதை கவனியுங்கள், அவ்வளவுதான். வெறும் கவனிப்பவராக இருங்கள். எந்தக் கருத்தும் சொல்லாதீர்கள்; எந்த எண்ணத்தையும் எதிர்க்காதீர்கள். அது உங்களுக்குக் கடவுளின் பரிசு என்ற ஆழ்ந்த நன்றியுணர்வுடன் கவனியுங்கள். உள் அமைதிக்கு இதுவே முதல் படியாகும்.

உங்கள் விழிப்புணர்வு மெதுவாக வளர்ந்து, உங்களை உங்களுக்குள் மையங்கொள்ள வைத்து, உங்கள் அமைதியை அதிகமாக்கும். அமைதி அதிகமாகும் என்று நான் சொல்லும் பொழுது, உங்கள் உள் பேச்சு குறையும், நீங்கள் அதிகம் கவனிப்பவராக மாறுவீர்கள் என்று பொருள் கொள்கிறேன். அமைதி

| ஒவ்வொருவரும் தமது சொந்த அகராதியைக் கையில் வைத்துக்கொண்டு, வார்த்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த வழியில் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். |

அதிகமாகும் பொழுது, உங்கள் விழிப்புணர்வும் அதிகரிக்கும். இது உங்களுக்குள் ஒரு சுழற்சியாக நடைபெறும்.

இது போன்ற விழிப்புணர்வுடன், உங்களைச் சுற்றி யிருக்கும் அழகை உங்களால் நன்றாக ரசிக்க முடியும். அழகு திடீரென்று வந்து விடவில்லை; அது எப்பொழுதும் அங்கு இருக்கிறது! ஆனால் நீங்கள்தான் அதைக் கவனிக்கவில்லை. உங்களுக்கு, உங்களிடமே வேலை மிகவும் அதிகம் இருந்ததால், அதை கவனிக்கத் தவறி விட்டீர்கள். இப்பொழுது உங்கள் விழிப்புணர்வுடன் உங்களால் அதைக் கொண்டாட முடியும்! திடீரென்று, இயற்கை முழு அழகுடன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தத் தொடங்குகிறது. உங்கள் உள் தன்மையில் உருமாற்றம் ஏற்படுகிறது. இது நிகழும் பொழுது வெளியுலகிலும் தானாகவே உருமாற்றம் நிகழ்ந்து விடுகிறது!

நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி உபயோகிக்க முடியும். அது உங்கள் கையில் ஒரு இன்றியமையாத கருவியாகி விடுகிறது. நீங்கள் அதை விரும்பும் பொழுது உபயோகிக்கலாம். அது ஒரு அபாய கரமான எதிரி என்ற நிலையிலிருந்து ஒரு நம்பத்தக்க நண்பன் என்ற நிலைக்கு மாறி விடுகிறது.

உங்களுடைய உள் பேச்சு குறையும் பொழுது, உங்களுடைய TPS (ஒரு வினாடியில் வரும் எண்ணங்கள்1) குறையும் பொழுது - இது ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரம் நிகழுமானால் கூட - அந்த ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரத்தில் நீங்கள் நிகழ் காலத்தில் முழுமையாக இருக்கிறீர்கள்; அப்பொழுது உங்களால் உங்கள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒரு திறந்த புத்தகம் போல் அணுக முடியும். உங்களுடைய உள் பேச்சு அதிகமாக இருக்கும் பொழுது, TPS-ம் அதிகமாக இருக்கும்; அதனால் நீங்கள் எப்பொழுதுமே

Thoughts Per Second (TPS)¹

Thoughts Per Second (TPS)

இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் இருப்பீர்கள்; ஒருபோதும் நிகழ் காலத்தில் இருக்க மாட்டீர்கள்.

இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுகும் திறன் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதை உங்களுக்கு தெளிவாக விளக்குகிறேன்.

நீங்கள் ஒரு சொற்பொழிவிலோ அல்லது விருந்திலோ இருக்கும் பொழுது, திடீரென்று இந்தக் காட்சிகள் ஏற்கனவே நிகழ்ந்ததைப் போல் உணர்கிறீர்கள். குரல்கள், உரையாடல், இடம், அங்கிருக்கும் சில அரிய பொருட்கள் கூட, எல்லாக் காட்சிகளும் இதற்கு முன் ஏற்கனவே நிகழ்ந்திருப்ப தாகவும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை நடப்பதைப் போலவும் உணர்கிறீர்கள். நீங்கள் உலுக்கப்படுகிறீர்கள்.

அல்லது, திடீரென்று நீங்கள் வெகு நாளாகத் தொடர்பு கொள்ளாத உங்கள் நண்பரைப் பற்றி நினைக்கிறீர்கள், அவர் தொலைபேசியில் உங்களை அழைக்கிறார். அடுத்த சில கணங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை உங்களால் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் பொழுது நீங்கள் உலுக்கப்படுவதாக உணர்கிறீர்கள். உண்மையில் நீங்கள் உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப் படுகிறீர்கள். அவ்வளவுதான், அது கூட எதிர்பாராத விதமாக; வேண்டுமென்றே நிகழ்ந்ததல்ல!

நீங்கள் ஒருபோதும் விழிப்புடன் நிகழ்காலத்தில் இருப்பதேயில்லை. எப்பொழுதும் இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோதான் இருக்கிறீர்கள். நீங்கள் இறந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு, நிகழ்காலத்தைத் தொடாமலேயே சென்றுவிடுகிறீர்கள். இதுதான் உண்மை. ஆனால் ஒரு கணம்

உண்மையான அமைதி என்பது விழிப்புணர்வால் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பது. அது வெறுமனே உங்கள் வாயை மட்டும் மூடிக் கொண்டிருப்பதல்ல.

எதிர்பாராத விதமாக உங்கள் எண்ணங்கள் - TPS - குறைந்து நீங்கள் உலுக்கப்பட்டு நிகழ்காலத்திற்குள் தள்ளப்படுகிறீர்கள்.

நீங்கள் முழுமையாக நிகழ்காலத்தில் ஒரே ஒரு வினாடி இருந்தால் கூட, உங்களுடைய இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் உங்களால் ஊடுருவிப் பார்க்க முடியும். அதனால்தான் உங்களுக்கு இது போன்ற நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் நிகழ்வதைக் காண்கிறீர்கள்.

பாருங்கள்... நம் சிந்தனை ஒருபோதும் தெளிவாக இருப்பதில்லை. அது எப்போதும் வெறும் இணைத்தல் மட்டுமே; ஒருபோதும் உண்மையான சிந்தனை அல்ல.

இணைத்தல் என்றால் நான் என்ன பொருள் கொள்கிறேன் என்று விளக்குகிறேன்.

நீங்கள் காலையில் எழுந்து உங்கள் தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜாவைப் பார்க்கிறீர்கள். உடனே உங்கள் மனம் சில காலத்திற்கு முன் ஒரு ரோஜாவைக் கொடுத்த யாரோ ஒருவரிடம் செல்கிறது; பிறகு உங்கள் எண்ணம் அந்த சமயத்தில் அந்த மலருக்கான எதிர்செயலைப் பார்க்கிறது அல்லது நீங்கள் அந்த மனிதரைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள். பிறகு அவருடன் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறீர்கள். இறுதியில் என்ன நடக்கிறது? உங்கள் கண் முன்னே இருக்கும் ரோஜாவை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள்!

இவ்வாறுதான் நீங்கள் இறந்த காலத்தின் பின் ஓடி நிகழ்காலத்தைத் தவற விட்டு விடுகிறீர்கள். இணைத்தல் என்ற வார்த்தைக்கு நான் கொள்ளும் பொருள் இதுதான். இதுதான் உங்களுடைய தற்போதைய மனநிலையின் இயல்பு.

வெறுமனே மனதைக் கவனியுங்கள், அவ்வளவுதான் எந்தக் கருத்தும் சொல்லாதீர்கள். உள் அமைதிக்கு இதுவே முதல்படியாகும். குருமார்கள் எப்பொழுதும் நிகழ்காலத்திலேயே வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்களால் பெரும் கடலான இறந்த காலம் மற்றும் எதிர்காலங்களை சுலபமாக அணுக முடிகிறது. உங்களுக்கு அது ஒரு விபத்து. அது உங்களுக்கு ஒரு வினாடியில் ஒரு பகுதி நேரமே நிகழ்கிறது. நீங்கள் சமயத்தில் அதைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! நீங்கள் விழிப்பின்றி வாழப் பழகி விட்டதால், விழிப்புணர்வுக்குள் குலுக்கித் தள்ளப்படும் போது, அதை உங்களால் தாங்க முடியவில்லை. உண்மை தாங்க முடியாததாகி விடுகிறது!

நீங்கள் உண்மைக்கு அல்லது நிகழ்காலத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு உங்களுடைய TPS மிகவும் உதவிகரமாக இருக்கிறது. உங்களுடைய TPS மிகவும் அதிகமாக இருக்கும் போது, நீங்கள் விழிப்பின்றி வாழ்கிறீர்கள். நீங்கள் உண்மையிலிருந்து வெகு தூரத்தில் வீசப்பட்டிருக்கிறீர்கள்.

புரிந்து கொள்ளுங்கள்... உங்கள் செயல் மட்டுமே உங்களுக்காக பேசும். உங்கள் பேச்சு உங்களுக்கு எதையும் செய்யாது. நீங்கள் உள்ளே பேசுகிறீர்களா அல்லது வெளியே பேசுகிறீர்களா என்பது முக்கியமல்ல. வெறுமனே விழிப் புணர்வைக் கொண்டு வந்தால், தேவையற்ற பேச்சு தானாகவே நின்று விடும்.

மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், “ஸ்வாமிஜி, நாங்கள் விடுமுறைக்காகச் சென்றிருந்தோம். ஆனால் அது நரகமாகி விட்டது”. நான் சொல்கிறேன், உங்களுக்குள்தான் நரகம் இருக்கிறது. நீங்கள் செல்லுமிடமெல்லாம் அதை உங்களுடனேயே எடுத்துச் செல்கிறீர்கள். அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அதைக் கண்டுதானே ஆகவேண்டும்! நீங்கள் வாழும்போது, மற்றவர்களுக்கு

| நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க கற்றுக் கொள்ளும்பொழுது, உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி உபயோகித்துக் கொள்ள முடியும். |

நரகத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் இறக்கும் பொழுது உங்களுக்கு நரகம் கிடைக்கிறது! நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் நரகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லவே விரும்புகிறீர்கள். நீங்கள் நரகத்துடன் மிகவும் பரிச்சயமாகி விட்டீர்கள். அதனால் சொர்க்கத்தைக் காட்டினாலும், நீங்கள் அங்கே பொருத்தமற்று இருப்பதாக உணர்கிறீர்கள்!

ஒரு சின்ன கதை...

ஒரு நாள் மூன்று மீனவப் பெண்கள் மீன் விற்று விட்டு வீட்டிற்குத் திரும்பும் சமயம் இரவு வெகுநேரமாகி விட்டது. அன்று இரவு, வழியில் ஏதாவது ஒரு வீட்டில் தங்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிழைப்பிற்காக மல்லிகைப் பூக்களை விற்று வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்று அன்று இரவு அங்கு தங்கிக் கொள்ள அனுமதி கேட்டனர். அந்தப் பெண் சம்மதிக்க, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் உறங்கச் சென்றனர். அந்த வீடு முழுவதும் மல்லிகையின் மணம் நிரம்பி இருந்தது. ஆனால், எவ்வளவு முயன்றும், அந்த மீனவப் பெண்களால் உறங்க முடியவில்லை. அவர்கள் உருண்டு புரண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, திடீரென்று, அவர்களில் ஒருவர் எழுந்து சென்று காலியான மீன் கூடையை கொண்டு வந்து அவர்கள் தலை மாட்டருகே வைத்துக் கொண்டவுடன், சிறிது நேரத்தில் உறங்கி விட்டனர்!

(சிரிப்பு!)

நாம் எங்கு சென்றாலும் நமது கவலைகளையும் உடன் கொண்டு செல்கிறோம். அவைகளை போஷிப்பதில் இதமாக உணர்கிறோம். ஆனால் எப்போதும் கவலையுடன் இருப்பதாக புகாரும் செய்கிறோம்! நாம் சில விஷயங்களிலிருந்து விடுதலை பெற

| நீங்கள் நிகழ்காலத்தில் முழுமையாக ஒரே ஒரு வினாடி இருந்தால் கூட, உங்களுடைய இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் உங்களால் ஊடுருவிப் பார்க்க முடியும். | |---|

விரும்புகிறோம். ஆனால் உருமாற்றமடைவதையும் அதிலிருந்து விடுதலையடைவதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம்! இவ்வாறு நாம் நமக்குள்ளேயே முரண்பட்டிருக்கிறோம்.

சொல்லுங்கள்... ஏதேனும் கேள்விகள்?

ஸ்வாமிஜி, இதிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது? எங்களுடைய மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?

எவ்வாறு விடுதலை பெறுவது, மேலும் உங்களுடைய மனோபாவம் எப்படி இருக்க வேண்டும். இரண்டு கேள்வி களுக்கும் ஒரே ஒரு பதில்தான்; நீங்கள் என்ன செய்தாலும், ஆனந்தமான உணர்வுடன் செய்ய முடிய வேண்டும், அவ்வளவுதான்! பாருங்கள், உங்களுக்குள் இருக்கும் அந்த வெற்றிடம் அல்லது உங்கள் விழிப்புணர்வுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிக்கிறது. இந்த வெளி எப்பொழுதும் தூய்மையாகவும் ஆனந்த மாகவும் இருக்க வேண்டும்.

ஒரு விஞ்ஞானி செய்யும் பரிசோதனைகளில் அவரது விழிப்புணர்வு ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே பரிசோதனை அதேபோன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளிலும் வேறு விஞ்ஞானிகள் செய்யும் பொழுது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துவது கவனிக்கப்பட்டிருக்கிறது. நமது உள் எண்ணங்கள் நமது செயல்களையும் அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நான் எப்பொழுதும் சொல்வேன்... ஆனந்தம் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது¹. இது ஒரு பெரும் உண்மை. நீங்கள் ஆனந்த மயமாக இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிகிறது. மேலும் லோகாய தமான செல்வமும் உங்களை நோக்கிப் பாய்கிறது. எப்பொழுதும் ஒருவிதமான நன்றியுணர் வுடனேயே இருங்கள். மற்றவை தானாகவே நிகழும்.

வெறுமனே எதைப் பற்றியும் துயரப்படுவதில்லை என்று தீர்மானியுங்கள். ஏதேனும் கவலை அல்லது குற்ற உணர்வு அல்லது வருத்தப்படத்தக்க சம்பவங்கள் உங்கள் மனதில் எழும் பொழுது அதை வெறுமனே பார்த்து சிரியுங்கள். பிறகு அதனிடம் சொல்லுங்கள், 'நான் உன்னால் பாதிக்கப்படப் போவதில்லை. நீ என்ன செய்வாய்?'. அதை வெறுமனே பார்த்து இவ்வாறு சொல்லுங்கள். தானாகவே அந்த சம்பவமோ அல்லது குற்ற உணர்வோ உங்களிடம் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது உங்களைத் தாக்குவதற்கு அனுமதிப்பதன் மூலம், நீங்கள் ஏதாவது லாபம் அடையப் போகிறீர்களா? இல்லை! அதைப் பார்த்து, அது உங்களைத் தாக்கவிடப் போவதில்லை என்று சொல்வதன் மூலம், நீங்கள் துயரத்தைத்தான் தவிர்க்கிறீர்கள். நான் அதிலிருந்து விலகி ஓடச் சொல்லவில்லை. அதைப் பார்த்து இப்படிச் சொல்லுங்கள் என்று சொல்கிறேன். இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்த எண்ணங்களை அடக்க முயன்றால், அவை உங்கள் மனதின் பின்புறமாக ஒளிந்து கொண்டு, எப்பொழுது வேண்டுமானாலும் வரத் தயாராக அச்சுறுத்திக் கொண்டே இருக்கும். அவைகள் மேலே வருவதற்கு அனுமதியுங்கள். ஆனால் அவைகளை வெறுமனே பார்த்து அவைகள் சக்தியற்றவை என்று சொல்லுங்கள்; அவைகள் தானாகவே மறைந்து விடுவதைப் பார்ப்பீர்கள். உங்களை

| ஆனந்தம் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்து இழுக்கிறது. இது ஒரு பெரும் உண்மை. |

தொந்தரவு செய்வதனால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்து அவைகள் தானாகவே மறைந்து விடும்!

இதை எப்பொழுதும் கவனத்தில் வையுங்கள்... உங்களுக்கு உடலளவிலோ, மனதளவிலோ அல்லது ஆன்ம அளவிலோ வலிமையைத் தருவது எதுவானாலும் அதுவே ஆன்மீகமாகும்; அது தானாகவே உங்களை ஆனந்தத்தை நோக்கி அழைத்துச் செல்லும். உங்களை பலவீனப் படுத்துவது எதுவானாலும், அது ஆன்மீகமல்ல; அதனால் அதைப் பின்தொடராதீர்கள். இதுவே நீங்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான விதியாகும். ஆனந்தமே உங்களுடைய உண்மை யான இயல்பு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.

இன்னொரு விஷயம்... நீங்கள் பார்க்கும் அழகான விஷயம் எதுவானாலும், வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து அதை வகைப்படுத்தி விடாமல், ரசியுங்கள். நீங்கள் சூரியோதயத்தையோ சூரிய அஸ்தமனத்தையோ ஆசிரமத்திலோ அல்லது உங்கள் ஊரில் வேறு எங்காவதோ பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் எப்பொழுதாவது நின்று வண்ணங்கள் அற்புதமாக மாறுவதையோ, ஒளிக்கதிர்கள் வானத்தில் பரவுவதையோ கவனித்திருக்கிறீர்களா? நம்மில் பலருக்கு, ஒன்று சூரியன் அஸ்தமனமாவதே தெரியாது அல்லது, வெறுமனே, “ஆம், சூரியன் அஸ்தமனம் ஆகிறது; அதனால் என்ன; அது எப்படியும் தினமும்தான் அஸ்தமனமாகிறது” என்போம்.

நான் சொல்கிறேன்... கல்வியறிவு உங்கள் கள்ளங் கபடமற்ற தன்மையைக் கெடுத்து வாழ்க்கையை மந்தமாக்கி விடுகிறது. சூரிய உதயத்தையோ அல்லது சூரிய அஸ்த மனத்தையோ பார்ப்பது ஒரு அற்புதமான தியானமாகக் கூடும். அதை உங்களுடைய உலகாயதமான கல்வியறிவைக் கொண்டு பார்க்காமல், நீங்கள்

| நீங்கள் ஆனந்தமயமாக இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிகிறது. |

அதன் ஒரு பகுதியாகி, அதனுடன் கலந்து விட்டீர்களானால், கொண்டாட்டத்தில் இருக்கும் பிரம்மாண்ட மான இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சிறு துளியாக நீங்கள் இருப்பீர்கள். பிறகு நீங்கள் இயல்பாகவே கொண்டாட்டத்தில் கலந்து கொள்வீர்கள்.

ஆனால் நாம் நமது பெயரளவிலான கல்வி அறிவினால் மந்தமாக்கப்பட்டு விடுகிறோம். உள் பேச்சிற்கும் கவலைக்கும் காரணமான நமது கல்வியறிவு, மீண்டும் வார்த்தைக் குவியல் களைத் தவிர வேறில்லை. நாம் நிறைய வார்த்தைகளைச் சேகரித்து வைத்து, அவற்றுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நம்மை எதுவுமே ஆச்சரியப்படுத்துவதில்லை. கடவுளே உங்களிடம் வந்து தான் கடவுள் என்று சொன்னாலும், நீங்கள், 'அதனால் என்ன?' என்று சொல்வீர்கள். உங்கள் அறிவினால் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்.

உங்களுடைய பெயரளவிலான கல்வியறிவினால், இந்த முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையையே மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள். இதனால் முழு பிரபஞ்ச இருப்புத் தன்மையையுமே தவறவிட்டு விடுகிறீர்கள். மேலும் மேலும் பேராசையையும், கவலையையும், பயத்தையும் மட்டுமே கொடுக்கும் உலக விஷயங்களின் பின்னால் ஓடுகிறீர்கள். அவைகள் உங்களை உள் மையத்திலிருந்து மேலும் துண்டித்து விடுகின்றன. அவைகள் உங்களை உள்ளே பார்ப்பதற்கு பதிலாக வெளியே பார்க்க வைக்கின்றன. அவைகள் உங்களை உங்கள் சொந்த உள்பலத்தைச் சார்ந்திராமல் முழுவதும் வெளியுலக விஷயங்களைச் சார்ந்திருக்குமாறு செய்து விடுகின்றன. அவைகள் உங்களை நிரந்தரமான ஆனந்தத்தில் மையங்கொள்ளவிடாமல் மனச்சோர்விற்கும் சந்தோஷத்திற்கும் இடையே ஊசலாடுமாறு செய்து விடுகின்றன.

எப்பொழுதும் ஒருவிதமான நன்றியுணர்வுடனேயே இருங்்கள். மற்றவை தானாகவே நிகழும். நீங்கள் எல்லாம் வெளியில் நிகழ்வதாகவும், மிகவும் தாமதமாகி விடுவதற்கு முன்னால் ஓடி அதைப் பிடித்து விட வேண்டும் என்றும் எண்ணுகிறீர்கள். அதனால்தான், நீங்கள்

எப்பொழுதுமே ஒரு அவசரத்தில் இருக்கிறீர்கள்; எப்பொழுதுமே உங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் நீங்கள் எலி ஓட்டப் பந்தயத்தில்¹ இருக்கிறீர்கள். அதனால்தான் நீங்கள் எப்பொழுதும் எதிர்காலத்திலேயே இருக்கிறீர்கள்; ஒரு போதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.

கல்வியறிவு² என்பது வெறும் தகவல் துளி, உண்மைச் சம்பவம், புள்ளி விவரம்; அது இறந்து போனது. கல்வியறிவைச் சேகரியுங்கள்; ஆனால் அது உங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அதை ஒரு பக்கமாக வைத்து விட்டு வாழ்க்கையை வியப்புடன் நோக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மனம் எப்பொழுதும் எதைக் கண்டாலும் உடனே ஒரு தீர்மானத்திற்கு வர, சுருக்கி எளிதாக்கிக் கொள்ள, எடை போட, மேலும் விவரங்களைச் சேகரிக்க முயற்சி செய்யும். நீங்கள் மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரிக்க விரும்புகிறீர்கள், அவ்வளவே. அதனால் என்ன பயன்?

நான் இரண்டு பக்தர்களை, கிருஷ்ணனின் பிறந்த இடமான மதுராவிற்கு அழைத்துச் சென்றேன். அது மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் கிருஷ்ணர் இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு யமுனை ஆற்றில் படகில் சென்றோம். என்னுடைய ஆனந்தத்தை, மிகவும் புத்திசாலித்தனமான மக்களான, பக்தர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். கிருஷ்ணனின் நாட்களை நினைவு கூர்ந்து கொண்டு, ராச லீலை நிகழ்ந்த இடத்தை காண்பித்துக் கொண்டே மிகவும் பரவசத்தில் ஆழ்ந்திருந்தேன்; பக்தர்கள் அங்கிருந்த கற்பலகைகள் புதுப்பிக்கப்பட்டது போல் தெரிகின்றன என்று

Rat Race¹ Knowledge² சொல்லிக் கொண்டிருந்தார்கள்! அவர்களைக் கண்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவர்களிடம் சொன்னேன், 'குறைந்த கல்வியறிவுடன் நிறைய வியப்படையும் பக்தர்கள் சிலரை அழைத்து வந்திருந்தால், அவர்களுடன் என்னுடைய பரவசத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க முடியும்' என்று.

இறுதியில், கல்வியறிவு ஒரு இறந்த விஷயம். எப்படியோ, ஒரு மனிதன் பயனுள்ளவனா என்பதை அறிய கல்வியறிவை அளவுகோலாக உபயோகிக்கிறார்கள். உங்களிடம் அதிக கல்வி அறிவு இருந்தால், நீங்கள் அதிகமாக மதிக்கப்படுவீர்கள்.

கல்வியறிவுடன் இருக்கும் பொழுது, நீங்கள் நிரந்தரமாக மூளையுடன் வாழ்கிறீர்கள். மூளையுடன் உங்களால் ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையை அறிய முடியாது. பிரபஞ்ச இருப்புத் தன்மையை இதயத்தின் வழியாக மட்டுமே அறிய முடியும். அன்பின் வழியாக மட்டுமே உங்களால் பிரபஞ்ச இருப்புத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். மேலும் மூளைக்கு அன்பு தெரியாது; இதயம் மட்டுமே அன்பை அறியும். மூளைக்குத் தெரிந்ததெல்லாம் திட்டமிடப்பட்ட அன்பு மட்டுமே; அது அன்பே அல்ல. அது மேலோட்டமான நிலையில் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ள, நீங்கள் செய்யும் இன்னொரு திட்டமிடல்.

ஆன்மீகம் என்பது மனிதனுக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இருக்கும் ஆழமான தொடர்பையும், முழுமையான ஒத்திசைவையும் புரிந்து கொள்ளுதல். இதைப் புரிந்து கொண்டு உங்களுடைய எல்லாப் போராட்டத்தையும் விட்டு விட்டால், நீங்கள் ஒரு நதியைப் போல வெறுமனே பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பீர்கள்.

இனி எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை என்று தீர்மானியுங்கள். வெறுமனே அதைப்பார்த்து சிரியுங்கள். நதியானது அதன் வழியில் சென்று வலிமையான கடலை அடைகிறது. நீங்கள் வெறுமனே விட்டுவிட்டாலே போதும்.

நீங்கள் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கலாம், ஒரு நதியினால் அடித்துச் செல்லப்படுவீர்கள் என்று நான் சொல்ல வில்லை. அப்படி இல்லை! இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நடத்திக் கொண்டிருக்கும் உயிர்ச்சக்தி ஒன்று உங்களையும் பாதுகாக்கிறது, அதுவே உங்கள் மூச்சு உள்ளே செல்லவும் வெளியே வரவும் செய்கிறது என்கிற உணர்வுடன், அசைக்க முடியாத விசுவாசத்துடன், உங்கள் வேலையை வெறுமனே செய்து கொண்டிருங்கள்; அதுவே போதுமானது.

வெறுமனே பொறுப்பை உயர் அதிகாரத்திடம் நகர்த்தி விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அரசனைப் போல வாழ்வீர்கள்! பிறகு நீங்கள் ஒருமித்து நிகழும் பாயும் நதியின் இசையை, உங்களை நடத்திச் செல்லும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் இசையை, உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இருக்கும் ஒத்திசைவின் இசையைக் கேட்கத் தொடங்குவீர்கள். இந்த ஒத்திசைவுடன் தான் நீங்கள் இசைந்திருக்க வேண்டும். பிறகு உங்கள் எல்லாக் கவலைகளும் மறைந்து விடும்!

ஆனால், பிரபஞ்ச இருப்புத் தன்மை நம்மைப் பாதுகாக்கிறது என்பதற்கு எந்த வித நிரூபணமும் இல்லை. சில விஷயங்களை நிரூபிக்க முடியாது. இந்த திசைதான் கிழக்கு என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? முடியாது! உங்களால் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளை நிரூபிக்க முடியுமா? முடியாது! அதை உங்களால் அனுபவிக்க மட்டுமே முடியும். அதை உங்களால் நிரூபிக்க முடியாது என்பதால், இல்லையென்றாவது

நீங்கள் சூரிய உதயத்தையோ அல்லது அஸ்தமனத்தையோ என்றாவது பார்த்து ரசித்திருக்கிறீர்களா? அது ஒரு அற்புதமான தியானமாகக் கூடும்.

நிரூபிக்க முடியுமா? உங்களால் விஞ்ஞானத்தின் வாயிலாக தினமும் சூரியன் எழுவதையும் அஸ்தமிப்பதையும் தடுக்க முடியுமா?

புரிந்து கொள்ளுங்கள்... தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரே விஷயம் பிரபஞ்ச இருப்புத் தன்மைதான். உங்களால் தர்க்க ரீதியாக பிரபஞ்ச இருப்புத் தன்மையை நிரூபிக்க முடியுமானால், தர்க்கம் பிரபஞ்ச இருப்புத் தன்மையை விட பெரிதென்று ஆகி விடுகிறது; அது ஒரு போதும் சாத்தியமாகாது!

என்னிடம் ஒருவர் கேட்டார், “ஸ்வாமிஜி, நான் ஆன்மீகவாதியாக இருக்க ஹிந்துவாக மாற வேண்டுமா?” என்று. எனக்கு இந்தக் கேள்வியைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது! நான், அவர் ஹிந்துவாக மாற வேண்டாம் என்று சொன்னேன். பாருங்கள்... உங்களுடைய புரிந்து கொள்ளுதலுக்கு தடையாக இருக்கும் எதுவும் ஆன்மீகத்துடன் தொடர்புடையது அல்ல என்பதில் தெளிவாக இருங்கள். ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது.

உங்களுடைய 'நான் அது' மற்றும் 'நான் இது' என்கிற எல்லா கருத்துகளையும் விட்டு விடுங்கள்.

உங்கள் வாழ்க்கையைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஆன்மீகத்திற்கு அடிப்படை. அது எப்படி இருக்கிற தென்றால்... எப்பொழுதும் பூட்டிய அறையிலேயே இருக்கும் ஒருவனுக்கு திறந்த வெளியைப் பற்றியும் தென்றலைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. அவன் எண்ணங்கள் மிகவும் குறுகியிருக்கும். இதுபோன்ற கட்டுப்பாடுகளை உங்கள் மீது சுமத்திக் கொள்ளும் பொழுது உங்களுக்குள் இருக்கும் எல்லையற்ற அன்பைப் பற்றியும், கருணையைப் பற்றியும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. நீங்கள் கவலைப்பட்டுச் குறை மட்டுமே கூறுவீர்கள். உங்களால் மலர முடியாது.

மூளையுடன் உங்களால் ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத்தன்மையை அறிய முடியாது. அதை இதயத்தின் வாயிலாக மட்டுமே அறியமுடியும். கருணையற்ற மக்களுக்கு எந்த விதமான நரகம் கிடைக்கும் என்று புத்தரிடம் ஒரு முறை கேட்கப்பட்டது. அவர் சொன்னார், "உங்களால் அவர்களை நரகத்தில் போட முடியாது. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் நரகத்தில்தான் இருக்கிறார்கள்!". நீங்கள் நரகத்தில் இருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு நரகத்தை உருவாக்குவீர்கள்; ஏனெனில் உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் கொடுக்க முடியும்.

ஒரு சின்ன கதை....

ஒரு தாயும் மகனும் சூடான வாக்குவாதத்தில் இருந்தனர். தாய் மகனிடம் கேட்டாள், "உனக்கு ஏதாவது மூளை இருக்கிறதா?". மகன் சிரித்தான். தாய் அவனிடம் 'ஏன் சிரிக்கிறாய்?' என்று கேட்டாள். அவன் சொன்னான், "உங்களிடம் ஏதாவது இல்லை என்றால் மட்டுமே மற்றவர்களிடம் கேட்பீர்கள்!".

(சிரிப்பு!)

நாம் அமைதியாக இல்லாத பொழுது மட்டுமே, மற்றவர்களுடைய அமைதியைக் கெடுப்போம்.

நாம் மீண்டும் மீண்டும் நமது மனதை அலசி ஆராய்ந்து நமக்கு மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தைத் தருவது எது என்று பார்க்க வேண்டும். மிகவும் தெளிவாக இருங்கள்... மகிழ்ச்சியும் ஆனந்தமும் வேறு வேறாகும். ஆனந்தம் என்பது உங்களுள் எழும் ஒரு அற்புதமான ஆழ்ந்த உணர்வு; அது உங்களை இந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் வேறொரு தளத்தில் இருப்பதாகன ஒரு உணர்வைக் கொடுக்கும். மகிழ்ச்சி அல்லது சந்தோஷம் என்பது

ஆன்மீகவாதியாக இருக்க ஹிந்துவாக மாற வேண்டுமா?

வெளியுலகப் பொருட்களோடு தொடர்புடையது; அது நமக்கு தொடர்ந்து வலியையே தரும்.

மகிழ்ச்சி¹ என்பது சார்புடையது; ஆனந்தமோ² முழுமை யானது. ஆனந்தத்திற்கு எதிர்ப்பதம் கிடையாது. நீங்கள் சந்தோஷமாக இருக்கும் பொழுது, வருத்தம் கையருகில் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் திளைக்கும் பொழுது, அடுத்து வலியை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஆனந்தத்தில் இருக்கும் போது, வெறுமனே இருக்கிறீர்கள். அதற்கு எதிர்ப்பதம் கிடையாது. மகிழ்ச்சியும், சந்தோஷமும் திரும்ப வருவதற்கு முன்னால் மறுமுனைக்கு ஊசலாடிச் செல்லும் ஊசல் குண்டைப்³ போன்றது. ஆனால் ஆனந்தம் ஊசல் குண்டைப் போன்றதல்ல; அது இருமைக்கு அப்பாற்பட்டது. அது வெறுமனே இருக்கிறது.

உங்களுக்கு ஆனந்தத்தைத் தருவது எது என்று உங்கள் மனதை மீண்டும் பரிசீலித்துப் பாருங்கள். பிறகு அதைப் பின்தொடருங்கள். உங்களுக்குள் ஏதோ ஒன்று நீங்கள் நிரந்தரமான ஆனந்தத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக் கிறீர்கள் என்று சொல்லுமானால், அதில் உங்களுக்கு திடமான நம்பிக்கை இருக்குமானால், உங்கள் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் இந்த ஆனந்தத்தை நோக்கியே இருக்குமாறு சற்று மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயலும் எண்ணமும் இந்த ஆனந்தத்தை உணர்வதை நோக்கியே அமைய வேண்டும். அப்பொழுது செலவழித்த சக்தி சேமித்த சக்தியாகி விடும். நீங்கள் எப்பொழுதும் சக்தியுடன் இருப்பீர்கள்.

சிலர் சொல்கிறார்கள், அவர்கள் கவலைகள் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று. அவர்கள் பேசும் அமைதி உயிருள்ள அமைதியன்று; அது இறந்து போன அமைதி. அது

Happiness¹ Bliss² Pendulum³ வாழ்க்கையில் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாமல் உயிரற்றும் செயலற்றும் இருக்கிற அமைதி. அவர்களுக்கு வாழ்க்கை கையாளுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதால் அமைதிக்காக ஏங்குகிறார்கள். அது இந்தப்பழம் புளிக்கும் என்று அதை விட்டுவிட்டு சென்று விடுவதைப் போல இருக்கிறது.

உண்மையான அமைதி என்பது வெளியில் நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் உங்களுக்குள் இருந்து கொண்டிருப்பது; நீங்கள் வெறுமனே உங்களுக்குள்ளேயே மகிழ்ச்சியாக இருப்பீர்கள்; நீங்கள் எதையும் அல்லது யாரையும், உங்களைக் கடந்து செல்லும் ஒரு தென்றல் முத்தமிட்டுச் செல்வதைப் போலவே காண்பீர்கள். அது மனிதனாக இருந்தாலும் சரி, அல்லது வேறென்னவாக இருந் தாலும் சரி, உங்கள் அமைதி அப்படியேயிருக்கும். மனிதர்களோ அல்லது சூழ்நிலைகளோ அதை எந்த விதத்திலும் மாற்ற முடியாது.

அமைதி என்பது நீங்கள் உள்ளுக்குள் உணரும் ஆனந்தம். அமைதி ஆனந்தத்திலிருந்து பிறக்கும் பொழுது, அது உங்களையும் மற்றவர்களையும் ஒரு அமைதியான நிலையில் வைத்திருக்கிறது. அதை நீங்கள் ஒரு முறை உங்களுக்குள் கண்டு கொண்டு விட்டால், ‘என்னை அமைதியாக இருக்க விடுங்கள்’, ‘நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்’ என்றெல்லாம் ஒருபோதும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள். எப்பொழுது நீங்கள் இப்படி யெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள் அடுத்தவர்களின் கருணையில்தான் அமைதியாக இருக்க முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம்; அது அமைதியே அல்ல.

உங்களுடைய ‘நான் அது’ மற்றும் ‘நான் இது’ என்கிற எல்லாக் கருத்துக்களையும் விட்டுவிடுங்கள்.

அமைதி என்பது உங்களுக்குள் உருவாகும் ஒரு உறுதியான மையம்; அது உங்களை எப்பொழுதும் இயல்பாகவே மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வெளியில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியுமே பத்தோடு பதினொன்றாகி விடும். அதை உங்கள் அமைதியுடன் தொடர்புடுத்திப் பார்ப்பீர்களேயானால், உங்களுக்குள் இன்னும் அமைதி நிகழவேயில்லை, என்பதில் தெளிவாக இருங்கள்.

நாம் வருடந்தோறும் செல்லும் இமயமலை யாத்திரையில், சிலர் தங்களது கஷ்டங்களையும், சுகாதார மற்ற சூழ்நிலை களையும் பற்றி குறை கூறுகின்றனர். நான் அவர்களிடம் மீண்டும் மீண்டும், 'இமயமலையில் இருப்பதே பெரும் பாக்கியம், பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை, அதனால் அற்ப விஷயங்களை விட்டு விட்டு வெறுமனே மகிழ்ச்சியாயிருங்கள்' என்று சொல்வதுண்டு. ஆனால் மக்கள் இதையெல்லாம் பெரிய தொல்லையாக எடுத்துக் கொண்டு இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு இளைய பக்தர்கள் ஒரு முறை என்னிடம் சொன்னார்கள், “ஸ்வாமிஜி, இவர்களெல்லாம் கஷ்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு அதனால் பாதிக்கப்படாமல் இருக்க முயற்சி செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை! நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்”. இதைத்தான் நான் இயல்பாகவே மகிழ்ச்சியாய் இருப்பது என்று சொல்கிறேன். என் அமைதி, உங்கள் அமைதி என்றெல்லாம் தனியாக ஒன்றும் கிடையாது. என்ன இருக்கிறதோ, இருக்கிறது, அவ்வளவுதான். நீங்களும் இருக்கிறீர்கள், அதுவும் இருக்கிறது, ஆனால் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நீங்கள் வெறுமனே அமைதியான ஆனந்தமான நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

கருணையற்ற மக்களை நரகத்தில் போட முடியாது.
ஏனெனில் ஏற்கனவே அவர்கள்
நரகத்தில்தான் இருக்கிறார்கள்.

குறைகூறுதல் கவலையுடன் தொடர்புடையது. ஏனெனில் நீங்கள் நிம்மதியற்று, வார்த்தைகளில் சிக்கிக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் இமயமலையில், ஒரே ஒரு தண்ணீர் கூஜா மற்றும் இரண்டு மாற்றுடைகளுடன் திரிந்து கொண்டிருக்கும் சாதுக்களைக் கண்டால், உங்களிடம் இருப்பதற்கும் மேலாக வேறு எதுவும் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். அதனால் குறை கூறுவதற்கு எதுவும் இல்லை.

நீங்கள் ஏன் குறை கூறுகிறீர்கள்? உண்மையிலேயே, குறை கூறுபவர்கள் நிறைய வைத்திருக்கும் பாக்கியவான்கள்; அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாதலால் குறை கூறுகிறார்கள்! உங்களிடம் போதுமானது இருக்கும்போது, வாழ்க்கை ஒரு பெரிய போராட்டமாக இல்லாதபோது, குறைகூற நேரம் இருக்கிறது. ஆனால் உங்கள் உயிர் வாழ்தலே அபாயத்தில் இருக்கும் போது, குறை கூறாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள்; ஏனெனில் நீங்கள் குறைகூற ஆரம்பித்தால், உங்களுடைய வேலையை யார் செய்வார்கள்?!

இமயமலையில் தகுதியுள்ளது மட்டுமே உயிர் வாழ முடியும். நீங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாகவும் கவன மாகவும் இருக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் நிலச்சரிவு ஏற்பட்டு உங்கள் மீது இறங்கலாம்; பனிப் பொழிவினால் பழக்கமான பாதைகள் மூடப்பட்டு விடலாம்; திடீரென்று உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம், இவ்வாறு இன்னும் எத்தனையோ.

இது போன்ற சூழ்நிலைகளில், நீங்கள், அங்குள்ள மக்களை கவனிக்க வேண்டும். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமலும், குறை கூறாமலும், வரவேற்கும் தன்மையுடனும், கள்ளம் கபடமற்றும்

| நீங்கள் நரகத்தில் இருந்தால் மட்டுமே, மற்றவர்களுக்கு நரகத்தை உருவாக்குவீர்கள். ஏனெனில் உங்களிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் உங்களால் கொடுக்க முடியும்? | | --- |

இருக்கிறார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள் எதுவும் சரியாக இல்லையென்று நினைப்பதில்லை; அவர்கள் வெறுமனே சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, அதற்கேற்றார் போல் அவர்களது செயல்முறை களை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கவலைப்படு வதில்லை, குறை கூறுவதுமில்லை.

நீங்கள் ஏன் கிடைப்பதை வைத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கக் கூடாது? இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குச் சென்று திரும்பியவுடன், குளியலறை முதல் சாலைகள் வரை இந்திய சூழ்நிலைகளைப் பற்றி குறைகூற ஆரம்பித்து விடுகிறார்கள். இது நீங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டது, உங்களை மேலும் விரிவடைந்து மலர வைப்பதற்குப் பதிலாக மேலும் அதிருப்தி யாகவும், புகார் கூறுபவராகவுமே செய்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நீங்கள் ஆழ்ந்து புரிந்து கொண்டீர்களானால், குறை கூறுவதை நிறுத்தி விடுவீர்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிவதற்குக் காரணம் உங்கள் தகுதியல்ல; அது வெறுமனே எல்லார் மீதும் எல்லாவற்றின் மீதும் பொழிந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டீர் களானால், புகார் கூறுவதை நிறுத்திவிடுவீர்கள். நீங்கள் குறை கூறுவதற்குக் காரணம், நீங்கள் எதற்கோ தகுதியானவர், ஆனால் அது உங்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற எண்ணம்தான்.

தெளிவாக இருங்கள்... யாரும் தகுதியானவரோ அல்லது தகுதியற்றவரோ அல்ல; யாரும் புனிதரோ அல்லது பாவியோ அல்ல; பிரபஞ்ச இருப்புத் தன்மையையும் அதன் பரிசு

நாம் அமைதியாக இல்லாதபொழுது மட்டுமே, மற்றவர்களுடைய அமைதியைக் கெடுப்போம். களையும் பெறுவது அனைத்தும் அதைப் புரிந்து கொள்வதிலும், இயற்கையோடு இசைந்து செல்வதிலும்தான் இருக்கிறது. எப்பொழுதும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலே, விழிப்புணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் திறந்த தன்மையில் இருந்தால், பிரபஞ்ச இருப்புத்தன்மை பொழிகிறது. பிரபஞ்ச இருப்புத்தன்மை தொடர்ந்து பொழிந்து கொண்டுதான் இருக்கிறது; நமக்குத்தான் அதை எப்படி பெற்றுக் கொள்வது என்று தெரிவதில்லை. நாம் எப்பொழுதும் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் மணிபூரக சக்ரத்தில் அமிழ்ந்திருக்கிறோம்! வார்த்தைகளைச் சேகரிப்பதில் சுறுசுறுப்பாயிருக்கிறோம்!

நீங்கள் உங்களுடனே இருக்கக் கற்றுக் கொண்டால், உங்களால் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் நாம் ஒரு போதும் நம்முடன் இருப்பதில்லை. நாம் எப்பொழுதும் மனிதர்களுடனும், இரைச்சலுடனுமே இருக்கிறோம். நாம் நம்மை மற்றவர்களுடன் அடையாளப் படுத்திக் கொள்கிறோம்; நம்முடன் அல்ல. நாம் நம்முடனே இருப்பதற்கு அஞ்சுகிறோம். நாம் நம்முடன் இருக்கும் போது தனியாகவும், பயமாகவும் உணருகிறோம். நாம் நம்முடன் இருக்கும் போது மனச் சோர்வடைகிறோம்.

நீங்கள் உங்கள் தாயின் கருவறையில் தனியாகவே இருந்தீர்கள்; அதுவே உங்கள் உண்மை இயல்பு. அதற்குப் பிறகு என்னவாயிற்று? நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு மனிதர்கள் வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள். நீங்கள் மனிதர்களுடன் சேர்ந்து சிரிக்கிறீர்கள், மனிதர்களுடன் சேர்ந்து அழுகிறீர்கள், மனிதர்களுடன் பேசுகிறீர்கள், மனிதர்களாலேயே

| மகிழ்ச்சி என்பது சார்புடையது, ஆனந்தமோ முழுமையானது. ஆனந்தத்திற்கு எதிர்ப்பும் கிடையாது. | | --- |

கஷ்டமும்படுகிறீர்கள். உங்களுக்கு உங்களுடனேயே கொண்டாடுவது எப்படி என்பது தெரியவில்லை.

நீங்கள் தனியாக இருக்கும் பொழுது, உங்களுக்குள் போராட ஆரம்பித்து விடுகிறீர்கள், உங்கள் உள் பேச்சுக்கள் ஆரம்பித்து விடுகின்றன, உங்கள் கவலைகள் ஆரம்பித்து விடுகின்றன. எவ்வாறு இரைச்சலை ஏற்படுத்துவது அல்லது யாரைக் கூப்பிட்டுப் பேசுவது அல்லது யாருடன் கணினி வழியாக உரையாடுவது என்பது போன்ற மடத்தனமான விஷயங்களை எண்ண ஆரம்பித்து விடுகிறீர்கள்.

எப்பொழுதும் மனிதர்களுடனும் இரைச்சலுடனும் இருக்க வேண்டிய தேவை இருந்தால், நீங்கள் உங்களுடன் இருப்பதற்கு நிச்சயமாக அஞ்சுகிறீர்கள் என்று அர்த்தம். உள்ளே பார்ப்பதற்கு அச்சமாக இருப்பதால் வெளியே பார்க்கிறீர்கள். நீங்கள் தியானிப்பவராக ஆகிவிட்டால், சந்தோஷமாக இருப்பதற்கு உறவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே போதும். உங்களால் உங்களுடனே அமைதியாக இருக்க முடியவில்லை என்றால், பெயரளவிலான உறவு முறைகளில் சிக்கி, உங்கள் இருப்புத் தன்மையின் வெளி விளிம்பிலேயே தங்கி விடுவீர்கள்.

முதலில் உங்களுக்கு உங்களுடனேயே ஒரு உறவு தேவைப்படுகிறது. இது உறுதியாகவும் நிலையாகவும் இருக்கு மானால், மற்றவர்களுடன் உறவு கொள்வது தற்செயலாகவே நிகழ்ந்து விடுகிறது. தற்சமயம், வெளி விளிம்பில் இருக்க வேண்டியது முக்கியமானதைப் போலவும், முக்கியமானது வெளி விளிம்பில் இருக்க வேண்டியதைப் போலவும் நடத்தப்படுகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள்

குறைகூறுதல் கவலையுடன் தொடர்புடையது. பார்வையை உள்நோக்கித் திருப்ப வேண்டும். நீங்கள் உங்களுக்குள் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.

அதற்கு உங்கள் மனதைத் தாண்டிச் செல்லும் தைரியம் வேண்டும். நீங்கள் உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் உங்களைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கத் தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்குகிறீர்கள். ஏனெனில் அது உங்கள் அஹங்காரத்தைத் திருப்தி செய்கிறது.

நீங்கள் உங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. ஏனெனில் உண்மை வெளியே வந்து விடும், அதை உங்களால் தாங்க முடியாது என்று அஞ்சுகிறீர்கள். ஆனந்தத்தை தவறான இடங்களில் தேடி விட்டு, அது உங்களிடமிருந்து நழுவி விடுவதாக குறை கூறுவது உங்களுக்கு வசதியாக இருக்கிறது. உங்களுக்கு உண்மையிலேயே ஆனந்தத்தைக் கண்டுபிடிக்கும் விருப்பம் இருக்குமானால், அதைக் கண்டுபிடிப்பீர்கள். ஆனால் அதற்கு தைரியம் தேவைப்படுகிறது.

உண்மையில், நாம் அனைவரும் தேடுவது ஒன்றைத்தான் - அதுவே ஆனந்தம். ஆனால் நாம் தொடர்ந்து தவறான இடங்களிலேயே தேடிக் கொண்டிருக்கிறோம். நான் ஒரு இளைஞனை அவனுக்கு எது சந்தோஷத்தைத் தருகிறது என்று கேட்டால், அவன் உடனே போதைப் பொருள் என்று சொல்வான். அவனும் ஆனந்தத்தையும், முடிவற்ற அமைதியையும்தான் தேடுகிறான்; ஆனால் தவறான திசையில்!

நாம் நமது பாதையிலிருந்து வெகு தூரம் தள்ளி வந்து விட்டோம். நமது சுயமான சிந்தனை முறையே எதிர்மறையான எண்ண வடிவ அமைப்புகளால் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. நமது வாழ்க்கையே இருக்க வேண்டிய முறையிலிருந்து

நீங்கள் ஏன் கிடைப்பதை வைத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்கக் கூடாது? மிகவும் வேறாக இருக்கிறது. போதைப் பொருட்களை உட்கொள்வதனால் நீங்கள் உங்களிடமிருந்து தப்பிப்பது மட்டுமல்ல; சூழ்நிலையையும் மோசமாக்கி விடுகிறீர்கள்; ஏனெனில் ஒரு நாள் உங்கள் உடல்நிலை கவலைக்கிடமாகி விடும். இவை அனைத்திலும் உள்ள முட்டாள்தனத்தைப் பாருங்கள்.

இது மிகவும் கடுமையாக இருப்பதால் உங்களுக்கு முட்டாள்தனமாகப் படுகிறது. இது உங்கள் ஒழுக்க அளவு கோலின்படி சரியில்லாததால் உங்களுக்கும் சரியற்றதாகப் படுகிறது. ஆனால் இன்பதைத் தேடும் மற்ற நுட்பமான செயல்களும் இதைப் போன்றதுதான். ஆனால் வேறு அளவு கோலில், அவ்வளவாக ஒழுக்கமற்றதாக கருதப்படாத அளவு கோலில் இருப்பதால், நீங்கள் அவற்றை முட்டாள் தனமாகக் கருதவில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, மனதைத் தூய்மைப் படுத்துங்கள். அப்பொழுது நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்பது தெரியும்.

எவ்வாறு உங்கள் மனம் வேலை செய்கிறது, எவ்வாறு உங்கள் கவலைகள் வேர் விடுகின்றன என்பதை விழிப்புணர் வுடன் உங்களுக்குள் உற்று கவனியுங்கள். நாம் வார்த்தைகளைச் சேகரிப்பதும், அபிப்பிராயங்களை உருவாக்குவதுமாக, இதையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறுதான் கவலை வேர்விட்டு தன்னை பலப்படுத்திக் கொள்கிறது.

ஒரு நாள் உங்கள் மகன் வீட்டிற்கு வரத் தாமதமானாலும், ஏதோ கெட்ட சகவாசத்தினால்தான் இவ்வாறு தாமதமாகிறது என்று நீங்களாகவே முடிவு செய்கிறீர்கள். இது உங்களுக்குள் ஒரு பதிவாகி விடுகிறது. அடுத்த முறை, அவன் வகுப்பிலிருந்து தாமதமாக வந்தாலும், இந்தப் பதிவு மேலே வந்து, நீங்களும் அதற்கேற்றார் போல் செயல்படுகிறீர்கள்.

> பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிவதற்குக் காரணம் உங்கள் தகுதியல்ல. இது உங்கள் மகனை விரக்தியடையச் செய்வது மட்டுமல்ல, உங்கள் பேச்சை மீறி எதிர்த்து நடக்கவும் நிர்பந்திக்கிறது. ஒவ்வொருவரும் வளர்ந்து கொண்டும் மாறிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்; நீங்கள் உங்கள் சொந்த கற்பனை அமைப்பில் இருப்பது உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கற்பனைகளுடன் வாழ்வது மிகவும் சுலபம். ஆனால் நான் சொல்கிறேன், 99% நீங்கள் நம்புவது எல்லாமே தவறாகவே இருக்கிறது. உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே பெரிய திரை இருப்பதை நீங்கள் உணருவீர்கள். நீங்கள் பச்சை நிறக் கண்ணாடி அணிந்திருந்தால், இந்த உலகம் முழுவதையும் பச்சையாகவே காண்பீர்கள், அவ்வளவே.

முகமது நபி சொல்கிறார், “நீங்கள் இந்த உலகத்தை எதுவாகப் பார்க்கிறீர்களோ, அதுதான் நீங்கள்”. நீங்கள் என்னிடம் பேசினாலோ அல்லது யாரையேனும் பற்றி குறை கூறினாலோ, நீங்கள் கவலைப்படுவதாலேயே இவற்றை யெல்லாம் என்னிடம் சொல்வதாகச் சொல்லலாம்; ஆனால் உங்கள் மனதைத் தெளிவாகக்காட்டி விடுகிறீர்கள்; ஏனெனில், விஷயங்களை நீங்கள் விரும்பியபடிதான் பார்க்கிறீர்களே ஒழிய, ஒருபோதும் உள்ளபடி பார்ப்ப தில்லை. நீங்கள் விரும்பியபடி மட்டுமே பார்க்கும் பொழுது, நிறைய தவறவிட்டு விடுகிறீர்கள்.

உண்மையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறுகிறேன்...

சில வருடங்களுக்கு முன்பு, தினமும் அதே டிரைவருடன் ஆசிரமத்திலிருந்து நகர மையம் வரைக்கும் செல்லும் வழக்கத்தைக்

உங்கள் வாழ்க்கையைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். அதுவே ஆன்மீகத்திற்கு அடிப்படை.

கொண்டிருந்தேன். ஒருநாள் ஒரு குறிப்பிட்ட தெருவிற்குச் செல்ல விரும்பி, டிரைவரிடம் அடையாளத்திற்காக அதன் அருகிலுள்ள ஒரு மசூதியைச் சொன்னேன். அவர் அங்கே ஒரு மசூதியே இல்லை என்று சொல்லி விட்டார். பிறகு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு பிரபலமான ஹோட்டலைச் சொல்லி நினைவுபடுத்த முயற்சி செய்தேன். ஆனால் அதுவும் அவர் கவனத்திற்கு வரவில்லை. இறுதியாக, அங்கிருக்கும் ஒரு அனுமார் கோவிலைப் பற்றிச் சொன்னதும்தான் அவர் முகம் பிரகாசமாயிற்று. பிறகு அங்கு சென்றோம். கோவிலுக்கு அருகிலேயே அதை விட ஐந்து மடங்கு பெரிதான அந்த மசூதியை அவருக்குக் காட்டினேன். அவர் ஆச்சரியமடைந்தார்! அவர் ஒரு தீவிரமான ஹிந்து. அதனால் அத்தனை மாதங்களில் ஒரு முறை கூட அந்த மசூதியைப் பார்க்கவேயில்லை.

நான் சொல்கிறேன்... வாழ்க்கையில் ஒரு கொள்கை வெறியராகவோ அல்லது எதையேனும் பற்றித் தொங்கிக் கொண்டோ இருக்காதீர்கள்.

ஒரு நதியை எண்ணிப் பாருங்கள். உங்கள் காலை அதில் ஒரு முறை விட்டு எடுத்து விட்டு, இரண்டாம் முறையாக அதில் விடும் பொழுது, அது அதே நதியாகவா இருக்கிறது? இல்லை! அதன் முகம் மாறி விட்டது; அங்கிருப்பது அதே தண்ணீர் அல்ல; புதிய தண்ணீர் பாய்கிறது, இல்லையா?

அதனால் உங்களை எந்த ஒரு மதத்துடனோ அல்லது ஏதோ ஒன்றுடனோ அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்; வாழ்க்கைஎப்பொழுதும்மாறிக்கொண்டேயிருக்கிறது.உங்களுடைய நம்பிக்கைகளின் குறுகிய எல்லையால், உங்கள் ஆன்மீக வளர்ச்சி தடுமாறி தடைப்படுகிறது. நீங்கள் சேணம் கட்டப்பட்ட குதிரையைப் போல ஆகிவிடுகிறீர்கள். அதனால் அதன் முன்னே இருக்கும்

யாரும் தகுதியானவரோ அல்லது தகுதியற்றவரோ அல்ல. யாரும் புனிதரோ அல்லது பாவியோ அல்ல.

சாலையில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் பார்க்க முடியும். ஆனால் வாழ்க்கையில் ஒரு பரந்த பார்வை அவசியம்.

நமது முன்னோர்கள் நமக்கு நிறைய உணவை அளித்தனர், ஆனால் அதை சுவைப்பதற்கான நாவை அளிக்கவில்லை. இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது நம்மிடம் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது அதை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது; வெளியுலகத்தில் இருக்கும் பொருட்களில் இல்லை. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவோ அல்லது துயர மானதாகவோ ஆக்குவது உங்கள் மனநிலையே ஆகும்.

உங்களுடைய தற்போதைய மனநிலையிலேயே நீங்கள் சந்தோஷமாக இருந்தால், அது மிகவும் சரி. ஆனால் அதைக் கொஞ்சம் திருத்தி சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அப்பொழுது எங்கேயோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். செடிகளை வெட்டி அழகுபடுத்துவது போல, நீங்களும் உங்கள் மனநிலையை அடிக்கடி திருத்தி சரி செய்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள். திருத்தி வெட்டி அழகு படுத்தப்பட்ட செடிகள் வேகமாய் வளர்கின்றன!

ஒன்று நீங்கள் தற்போதைய மன நிலையிலேயே வாழுங்கள், அல்லது அதை வேரோடு களைந்து விட்டுப் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் துணிகளுக்கு சாயம் போட்டு, அதை பார்ப்பதற்கு வேறு மாதிரி ஆக்கி விடுவது போல், உங்கள் மனநிலைக்கு சாயம் போட முடியாது. உங்கள் மன நிலையை செதுக்கி சரி செய்ய முடியாது. ஒரு முழுமையான உருமாற்றம் ஏற்படாத வரையில் மீண்டும் பழைய வழிகளில் விழுந்து விடும் அபாயம் எப்பொழுதும் இருக்கிறது.

நீங்கள் உங்களுடனேயே இருக்கக் கற்றுக்கொண்டால், உங்களால் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் தொடர்பு கொள்ள முடியும்.

உங்களிடம் ஒரு தூய்மையான மனநிலை இருக்குமானால், நீங்கள் ஏதுபோதும் கவலைப்பட மாட்டீர்கள். சிக்கலான எண்ண வடிவ அமைப்புகளாலும் வார்த்தைகளாலும் குழப்பமடையும் போதுதான் நீங்கள் எப்பொழுதும் கவலைப்படுகிறீர்கள். நான் எப்பொழுதும் சொல்லுவேன்... நீங்கள் உங்களைப் பற்றி உறுதியாக இல்லாத போதுதான், கோள்களின் நிலையைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்! எந்தக் கோள் எங்கே மையம் கொண்டிருக் கிறது, அது உங்களை எவ்வாறு ஆட்சி செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஆராயத்தொடங்குகிறீர்கள். உண்மையான பிரச்சினை என்னவென்றால் நீங்கள் மையத்தில் இல்லை.

நேரம் கிடைக்கும் பொழுது உங்கள் மனதை ஆராயுங்கள். அதைப் பார்த்து தூய்மைப் படுத்துங்கள். ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் நீங்கள்தானே உங்கள் மனதுடன் இருக்கிறீர்கள், இல்லையா? பிறகு ஏன் அதை சுத்தமாக வைத்திருக்கக்கூடாது?

தங்கள் வீட்டை அழகாக நிர்வகித்துக் கொண்டிருக்கும் ‘வீட்டுப் பெருமை’யுடைய1 மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ‘வாக்யுவம் க்ளீனர்’ பயன்படுத்தி வீட்டைச் சிறிது கூட தூசியில்லாமல் வைத்திருக்கின்றனர். ஒரு சின்ன தூசியையும் அவர்களால் தாங்க முடியாது. அவர்கள் தரை விரிப்பை, அது ஓட்டையாகும் வரை சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள்! நீங்கள் 24 மணி நேரமும் வசிக்கும் வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி என்ன சொல்வது? உங்கள் மனம்? நீங்கள் அதனுடன் 24 மணி நேரமும் இருக்கிறீர்கள்; உங்களுடைய ஒவ்வொரு எண்ணமும் செயலும் அதை ஈடுபடுத்துகிறது.

உங்கள் வீட்டின் உட்புறத்தைத் தூய்மையாகவும் சக்தியூட்டப்பட்ட நிலையிலும் வைத்திருக்க வாஸ்து சாஸ்திரம்,

House - proud

ஃபெங்ஷூயி முதலிய அறிவியலை உள்ளே கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள்... நீங்கள் உங்களுடைய வீட்டிற்குத் தொடர்ந்து சக்தியூட்டிக் கொண்டேயிருக்க வேண்டிய காரணம், உங்கள் எதிர்மறைத் தன்மையால் அதைத் தொடர்ந்து அசுத்தப்படுத்திக் கொண்டேயிருப்பது தான். இதுதான் உண்மை.

நீங்கள் உங்கள் கூட்டு எதிர்மறை எண்ணங்களாலும் கவலைகளாலும் உங்கள் வீட்டிலுள்ள வெற்றிடத்தை அசுத்தப் படுத்துவதால், அது எதிர்மறை எண்ணங்களைத் திருப்பி உங்களை நோக்கி பரப்பத் தொடங்குகிறது. நீங்கள் உங்கள் வீட்டினுள் நுழையும் போதே எதிர்மறைத் தன்மையை உடைய ஒரு கொடிய சுழலில் சிக்கிக் கொள்கிறீர்கள்.

எத்தனை முறை நீங்கள் உங்கள் வீட்டினுள் நுழையும் வரை மிகவும் சரியாகவே இருந்ததாக உணர்ந்திருக்கிறீர்கள்? நுழைந்த அடுத்த கணமே, ஒரு பழக்கமான எதிர்மறை வடிவ அமைப்புகளின் பிடியில் சிக்கிவிட்டதாக உணர்கிறீர்கள். இது உங்கள் வீட்டினுள் நீங்களே நிரப்பியிருக்கும் உங்கள் செ ாந்த எண்ணங்களைத் தவிர வேறில்லை. பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வீட்டின் அமைப்பையே மாற்றுவதற்காக ஒரு வாஸ்து நிபுணரை வரவழைக்கிறீர்கள். அல்லது ஒரு ஹோமம் செய்து வீட்டைத் தூய்மைப்படுத்துவதற்காகக் கோயிலிலிருந்து புரோகிதரை வரவழைக்கிறீர்கள் அல்லது ஃபெங் சூயி முறைப்படி உங்கள் வீட்டிற்கு எதையாவது செய்கிறீர்கள்.

இவற்றையெல்லாம் சிரத்தையுடன் செய்தோமானால், அவை உங்கள் வீட்டிற்குத் தேவையானதைச் செய்யும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் இரண்டாம் பட்ச முறைகளே.

நாம் எப்பொழுதும் மனிதர்களுடனும் இரைச்சலுடனுமே இருக்கிறோம். நாம் நம்மை மற்றவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். உண்மையிலேயே முறையானது என்னவென்றால் உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொண்டு ஒரு ஆனந்தமயமான மன நிலையை பரப்புவதே; அதனால் நீங்கள் வசிக்கும் இடமானது தானாகவே அதைப் பரப்புகிறது.

ஒரு மனிதனிடம் அவனது இறந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்கப்பட்டது. அவன் சொன்னான், ‘முன்பெல்லாம் நான் தரையில் பாயின் மீது அமர்ந்து உணவருந்துவேன். இப்பொழுது மேஜையில் உணவருந்துகிறேன்’.

பாருங்கள்... இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் அவனது வாய் ஒன்றேதான். உங்களிடம் ஒரு அடிப்படை மாற்றம் நிகழவில்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் இந்த அளவு மாற்றம்தான் காணப்படும். எவ்வாறு அழகு பார்ப்பவனின் கண்களில் இருக்கிறதோ, அதேபோன்று சுவை அதை அனுபவிக்கும் நாவில் இருக்கிறது. உங்கள் மனநிலை உங்கள் வாழ்க்கையின் தரத்தை வரையறுக்கிறது.

பல சமயங்களில், மாற வேண்டிய தேவையை நாம் உணர்ந்தாலும், இருக்கும் நிலையிலேயே இருப்பது வசதியாக இருக்கிறது. மீண்டும் அதே சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். நமது ஒரு பக்கம் நாம் மாற வேண்டிய தேவையைச் சொன்னாலும், இன்னொரு பக்கம் விழிப்பின்றி மீண்டும் பழக்கமான வடிவ அமைப்புகளிலேயே நழுவி விழுந்து விடுகிறது. நீங்கள் மாறுவதற்குப் பல வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டாலும், தற்சமயம் இருக்கும் நிலையையே சௌகரியமாக உணர்ந்து, அவற்றைத் தவற விட்டு விடுகிறீர்கள்.

இந்த மனநிலை உங்களைப் பொறுத்தவரை ஒரு திடமான உண்மையாகி விடுகிறது. நீங்கள் அதை வெறுமனே பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் மனிதர்களுடன் சேர்ந்து சிரிக்கிறீர்கள், மனிதர்களுடன் சேர்ந்து அழுகிறீர்கள், மனிதர்களுடன் பேசுகிறீர்கள், மனிதர்களாலேயே கஷ்டமும் படுகிறீர்கள். அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். நான் சொல்கிறேன்... நீங்கள் இது போன்ற திடமான மனநிலையுடன் வாழ்ந்தீர் களானால், அதில் இன்னொரு அபாயம் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் அதை உங்களிடமிருந்து கிரகித்துக் கொள்வதற் கான வாய்ப்புகள் அதிகம்.

எனக்கு ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு கணவனும் மனைவியும் தொழில் முறை ஜேப்படித் திருடர்கள். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அது எவ்வளவு வளமாக இருக்கும் என்று அடிக்கடிப் பேசிக் கொள்வார்கள். ஒரு குழந்தையும் பிறந்தது. அது தனது வலது கையை இறுக்கமாக முடியே வைத்திருந்தது. அவர்களால் அதை எவ்வளவு முயன்றும் திறக்க முடியவில்லை. அதை கவனிக்கும் டாக்டரும் எவ்வளவோ முயன்றார். இறுதியாகத் தனது தங்கச் சங்கிலியை அதன் கண் முன்னே ஆட்டினார். குழந்தை மெதுவாகத் தன் கையைத் திறந்தது. உள்ளே நர்ஸினுடைய தங்க மோதிரம்!

(பலத்த சிரிப்பு!)

இது ஒரு நகைச்சுவை மட்டுமே. ஆனால் ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் மனநிலையைக் கொடுத்து விடக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் உங்கள் விழிப்புணர்வில் செயலாற்றுங்கள். உள்பேச்சுகளையும் மன அமைப்புகளையும் சுத்தம் செய்வதில் முனையுங்கள்.

நாம் எப்பொழுதும் குழந்தைகளைக் பொம்மைகளாக்கி கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். குழந்தைகள் கட்டுக்கடங்காத சக்தி. நாம் அதைக் கையாளும் சுலபத்திற்காகப் பெட்டிக்குள் அடைத்து விடப் பார்க்கிறோம்.

நீங்கள் தனியாக இருக்கும்பொழுது, உங்களுக்குள்ளேயே போராட ஆரம்பித்து விடுகிறீர்கள். உங்கள் உள்பேச்சுக்கள் ஆரம்பித்து விடுகின்றன.

இரண்டு நாய்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தன. முதல் நாய் சொன்னது, "என் பெயர் ஸாண்டி, உன் பெயர் என்ன?'. இரண்டாவது சிறிது இடைவெளி விட்டு பிறகு சொன்னது, "என் பெயர் No No (எதையும் செய்ய விடாமல் தடுப்பதனால்!) ரோஜர் என்று நினைக்கிறேன்".

(சிரிப்பு!)

இந்த நாயைப் போலவே, குழந்தைகளும் நமது வார்த்தைகளிலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் கிரஹித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் தொடங்குகிறார்கள். குழந்தைகள் சிறுவயதில் எதையாவது பார்த்து ஆச்சரியப்படும் பொழுது, அது தொடர்பாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்த வார்த்தைகளை அல்லது செயல்களை நினைவு கூர்ந்து அதன் அடிப்படையில் அவர்களது தீர்மானங்களை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் குழந்தைகளுடன் இருக்கும்பொழுது, எப்பொழுதும் தடை செய்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, இன்னும் கவனத்துடன் அவர்களது அறிவுக் கூர்மையை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

தாய்மார்கள் இதைத் தொடர்ந்து செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மழை பெய்யும் சமயத்தில், உடனே உள்ளே வந்து விடுமாறும் இல்லாவிடில் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்றும் சொல்வார்கள். இது சில முறை திரும்பத் திரும்ப நடக்கும் பொழுது, மழையைப் பார்த்தவுடனே, குழந்தையின் மனது தானாகவே ஜலதோஷத்துடன் இசைந்து சென்று விடும். அடுத்த முறை சிறிது தூறல் வந்தாலே குழந்தை தும்ம ஆரம்பித்து விடும்.

உங்கள் பார்வையை உள்நோக்கி திருப்ப வேண்டும். நான் சொல்கிறேன்... உண்மையிலேயே மனிதனுடைய உடல் அறிவுக் கூர்மை மிக்கதும், தானே சரி செய்து கொள்ளக் கூடியதும், தானாகவே நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தன்மையும் உள்ள ஒரு அமைப்பு. ஆனால் எப்படியோ, நமது உடலின் உள்ளுறையும் அறிவுக் கூர்மையை விட, நமது மூளையை அதிகம் நம்புகிறோம். அங்கே தான் நமது பிரச்சினையும் எல்லாக் கவலைகளும் ஆரம்பமாகின்றன.

ஒரு சின்ன கதை....

ஒரு தந்தை ஒட்டகம், தன் மகன் ஒட்டகத்திடம் தங்கள் இனத்தின் உடல் அமைப்பு பற்றி விளக்கிக் கொண்டிருந்தது. தந்தை சொன்னது, ''உனக்குத் தெரியுமா, நாம் பாலைவனத்தில் இருக்கும் போது பல நாட்களுக்குத் தேவையான தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளத்தான் நமக்குத் திமில் இருக்கிறது''. மகன் கேட்டது, ''நமது கண் இமைகள் ஏன் நீளமாக இருக்கின்றன?''. தந்தை சொன்னது, ''மணற் புயல்களிலிருந்து நம் கண்களைக் காப்பாற்றுவதற்காகத் தான்''. மகன் கேட்டது, ''நமது பாதம் ஏன் வீங்கி உப்பலாக இருக்கிறது?''. தந்தை சொன்னது, ''பாலைவனங்களில் வேகமாக பயணம் செய்வதற்காகத்தான்''. அதற்கு மகன் சொன்னது, ''தந்தையே, இப்பொழுது நாம் இந்த மிருகக் காட்சி சாலையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?''.

(பலத்த சிரிப்பு!)

பாருங்கள், நமது உடல் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் அதை வெறுமனே அதன் இயல்பான அறிவுக் கூர்மையில் செயல்பட விட்டாலே, அது நன்றாகச் செயல்படும். உங்கள் ஒழுக்க நியதிகளை உடலின் மீது சுமத்தும்போது துன்பமடைய ஆரம்பிக்கிறீர்கள். உங்கள்

முதலில் உங்களுக்கு உங்களுடனேயே ஒரு உறவு தேவைப்படுகிறது.

கவலைகளும் மனநிலையுமே எல்லாவிதமான உடல் மற்றும் மனம் சார்ந்த வியாதிகளுக்கு மூல காரணம்.

இமயமலையில், திரிந்து கொண்டிருக்கும் சாதுக்கள் குகைகளினுள் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களை விட மிகவும் ஆரோக்கியமாகவேஇருக்கிறார்கள். வெயிலோ, மழையோ, பனியோ எது வந்தாலும் அவர்கள் தொடர்ந்து வசிக்கிறார்கள்; அவர்களது உடல், சூழ்நிலைக்கேற்பத் தானாகவே சரி செய்து கொள்கிறது. நாம் வெறுமனே இயற்கையின் மீதும், அதனோடிணைந்த நோய் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் மீதும் விசுவாசம் வைக்க வேண்டும்.

மேலும் புரிந்து கொள்ளுங்கள்... குருவானவர் உங்களுக்கு ஒரு புதிய மனநிலையை, ஒரு மறு பிறப்பைக் கொடுக்கக் கூடியவர். அதை எளிதாக ஒரு குருவின் இருப்பைக் கிரஹித்துக் கொள்வதன் மூலம் அடைந்து விட முடியும். குருவின் சக்தியானது உங்கள் மீது வெள்ளமாகப் பாயும் பொழுது, உங்கள் மனநிலை மாறி, நீங்கள் மறுபிறப்பெடுக்கிறீர்கள். உங்களுக்கு இதற்கு முன் தெரிந்திராத வெளி்களில் பிரவேசிக்கிறீர்கள்.

இவ்வாறு நீங்கள் மறுபிறப்பெடுக்கும் பொழுது, கவலைகள், நோய்கள் மற்றும் இதர உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுதலை அடைந்து விடுவீர்கள். ஒருவேளை இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு நேர்ந்தால் கூட, அதை இதற்கு முன் தெரிந்திராத அளவு சுலபமாக உங்களால் கையாண்டு விட முடியும். நீங்கள் உங்களையும், உங்களைச் சுற்றியும் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உற்றுக் கவனிப்பவராக ஆகிவிடுவீர்கள்.

முகமது நபி சொல்கிறார், இந்த உலகத்தை எதுவாகப் பார்க்கிறீர்களோ அதுதான் நீங்கள்.

அன்றொரு நாள், நமது தியான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு ஹோட்டலில், நான் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இந்திய அலைவரிசையில் ஒரு பழைய படத்திலிருந்து டூயட் ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு இந்திய அலைவரிசையில் ஒரு புதிய படத்திலிருந்து டூயட் ஓடிக் கொண்டிருந்தது. இந்த இரண்டு அலைவரிசைகளும் மனிதனின் விழிப்புணர்வில் வளர்ச்சியே ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது என்று என் செயலரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் நான் சொல்வதை ஒப்புக் கொண்டார்.

ஒரு மூடிய அறையில் ஐந்து பேர் ஒரு பந்தை அங்கும இங்கும் உதைப்பது போல், ஒரே மாதிரியான வடிவ அமைப்புகள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறைந்தபட்சம் மேலை நாடுகளிலாவது, இறுதி வரை சென்று விஷயங்களை ஆராய்ந்து விட்டுத் திரும்பி வருகிறார்கள். மேலை நாடுகளில் ஒரு வளரும் விழிப்புணர்வு இல்லா விட்டாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக அறிவுக் கூர்மையாவது இருக்கிறது. பழக்கமான வடிவ அமைப்புகள் நமது அறிவுக் கூர்மையை முழுமை யாகச் சாகடித்து விடக் கூடும்.

நான் இவற்றையெல்லாம் மக்களிடம் சொல்லும் பொழுது, அவர்கள் சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி, நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது; ஆனால் என்னால் அவற்றை விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை". நான் சொல்கிறேன்... என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊடுருவிச் சென்று உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்க அனுமதி அளியுங்கள். இங்குதான் தியானம் துணை புரிகிறது. என்னுடைய தியான முகாம்களில், வெளியுறப் புரிந்து கொள்ளுதலை கொடுக்கிறேன்; பிறகு

வாழ்க்கையில் ஒரு கொள்கை வெறியராகவோ
அல்லது எதையேனும் பற்றிக் கொண்டு
தொங்கிக் கொண்டோ இருக்காதீர்கள்.

தியானத்தின் மூலமாக உங்களுக்குள் ஊடுருவிச் சென்று அதன் மீது செயலாற்றுகிறேன்.

ஆனால் மக்கள் சொல்கிறார்கள், "ஸ்வாமிஜி, எங்களுக்கு வேலை இருக்கிறது, பணம் கட்ட வேண்டிய பில்கள் இருக்கின்றன, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டியவைகள் இருக்கின்றன, பிறகு எப்படி எங்களால் தியானம் செய்ய முடியும்?". நான் அவர்களுக்கு ஒரு எளிய தியான முறையைப் பதிலாகச் சொன்னேன்; உங்கள் பில்களுக்கு பணம் கட்டுவதற்கோ அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியவற்றை முடிப்பதற்கோ நேரம் இருக்கிறதோ இல்லையோ, மூச்சு விடுவதற்குக் நிச்சயமாக நேரம் இருக்கிறதல்லவா? இல்லாவிடில் நீங்கள் உயிருடன் இருக்க முடியாது! இப்பொழுது, நீங்கள் சுவாசத்துடன் வெறுமனே விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள், அவ்வளவுதான்! வெறுமனே உங்கள் மூச்சைக் கவனியுங்கள். அது உங்களால் செய்யக் கூடிய, மிகவும் எளிமையான, அதிக சக்தி வாய்ந்த ஒரு தியான முறையாகும்.

ஞாபகம் வரும் பொழுதெல்லாம் இந்த முறையைப் பயிற்சி செய்யுங்கள். வெகு சீக்கிரத்திலேயே அது ஒரு பழக்கமாகி விடும். உங்கள் மூச்சில் விழிப்புணர்வைக் கொண்டு வரும் பொழுது, நீங்கள் நிகழ்காலத்தில், இந்தக் கணத்தில் இருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் வாழ்வது உங்களை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும். 'இப்பொழுதின்' ஆற்றல் ஆனந்தத்திற்கு நேரான வழியாகும். ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் வெறுமனே விழிப்புணர்வையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால் ஆனந்தத்தை அடைய, உங்களுக்குத்

உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவோ அல்லது துயரமானதாகவோ ஆக்குவது உங்கள் மனநிலையே ஆகும்.

தனியாக நேரம் தேவையில்லை. தனியாக நேரம் ஒதுக்கித் தனிமையை நாடிச் செல்லவோ அல்லது தியான முகாமிற்குச் செல்லவோ தேவையில்லை. உங்கள் தினசரி செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். நீங்கள் உருவாக்கும் அதிக விழிப்புணர் வினால் உங்களுடைய காலக் கெடுக்களும், ஏனைய இலக்கு களும் மிகவும் திறமையுடன் நிறைவேற்றப்படும்.

தியானம் என்பது உங்கள் விழிப்புணர்வில் ஒரு மாற்றம் என்பதைத் தவிர வேறில்லை. அது உங்கள் இருப்புத் தன்மையில் ஒரு சக்தி மாற்றம். அது ஒரு மூலையில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டு, நேரான முதுகுடன் மனதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதல்ல. நீங்கள் இவற்றையெல்லாம் செய்ய முயற்சி செய்தால், அது கழுத்து வலியிலும் முதுகு வலியிலும்தான் முடியும்! உங்களால் அமர்ந்து தியானம் செய்ய முடியவில்லை என்ற இன்னொரு கவலையும் சேர்ந்து கொள்ளும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ் காலத்தில், இப்பொழுது, இங்கேயே வாழ முயற்சி செய்வதே. நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையை உணர்ந்து மகிழலாம். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்வீர்கள். நீங்கள் நிகழ் காலத்தில் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

பிரபஞ்ச இருப்புத்தன்மை ஒரு சிறந்த குருவாகும். வாழ்க்கை ஒரு சிறந்த ஆசான் என்று சொல்வது இதைத்தான். அதைத் தவற விட்டால், கற்றுக் கொள்வதற்கு உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். கற்றுக் கொள்வதற்கு, நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது,

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் நீங்கள்தானே
உங்கள் மனதுடன் இருக்கிறீர்கள்? பிறகு ஏன்
அதை தூய்மையாக வைத்திருக்கக் கூடாது?

நீங்கள் விழித்துக் கொண்டு விரைவில் கற்றுக் கொள்வதற்காக வேண்டி வாழ்க்கை சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும். இல்லாவிடில் நீங்கள் ஜென்ம ஜென்மங்களாகக் கற்றுக் கொண்டே இருப்பீர்கள்.

இப்பொழுது பாருங்கள், நீங்கள் இறந்த காலத்தின் பின்னால் வருத்தத்துடனோ அல்லது எதிர் காலத்தின் பின்னால் மன உளைச்சலுடனோ ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இது போன்ற வடிவ அமைப்புகளால் நீங்கள் நிகழ்காலத்தை முழுவதுமாக அழித்து விடுகிறீர்கள். என்ன நிகழ்கிறது என்றால், நீங்கள் ஒருபோதும் சரியாக செயல்படுவதில்லை; உங்கள் இறந்தகால நினைவுகளின் அல்லது எதிர்கால மன உளைச்சலின் அடிப்படையில் வெறுமனே எதிர்ச்செயல் புரிகிறீர்கள். நீங்கள் எதிர்ச்செயல் மட்டுமே புரியும்போது, உங்களுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்துவதில்லை. நீங்கள் வெறுமனே ஒரு புரோகிராம் செய்யப்பட்ட இயந்திர மனிதனைப் போல நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அறிவையும் விழிப்புணர்வையும் பயன்படுத்தாமல், குருட்டுத் தனமான தர்க்கத்தைப் பின்பற்றுகிறீர்கள்.

உங்களுடைய சக்தியில் 80% இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ பூட்டப்பட்டு, 20% மட்டுமே நிகழ்காலத்திற்குக் கிடைக்கிறது. அதனால்தான் நீங்கள் மந்தமாகவும், உங்கள் சக்தி வடிந்துவிட்டதாகவும் உணர்கிறீர்கள். மிகுந்த விழிப்புணர்வுடன் இந்தச் சூழ்நிலையை மாற்றி விட முடியும்; உங்கள் வாழ்க்கையை ஒரு உயர்ந்த தளத்தில், அதிக ஆனந்தத்துடனும், மகிழ்ச்சியுடனும் சிலிர்ப்புடனும் வாழ முடியும்!

“ஸ்வாமிஜி, வெறுமனே நமது சுவாசத்தை சாட்சியாக இருந்து கவனிப்பதன் மூலம், ஆனந்தத்தை அடைய முடியும் என்று கருதுகிறீர்களா?”

> வெறுமனே உங்கள் மூச்சைக் கவனியுங்கள்.
> அது உங்களால் செய்யக்கூடிய, மிக எளிய,
> மிக சக்திவாய்ந்த ஒரு தியான முறையாகும்.

ஆம். அது ஒரு மிகவும் சக்தி வாய்ந்த தியான முறையாகும். பாருங்கள்... உங்கள் சுவாசத்தை கவனிக்கும் பொழுது, உங்கள் விழிப்புணர்வு தீவிரமடைகிறது. ஒரு எண்ணம் கூட உங்கள் விழிப்புணர்விலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. ஒவ்வொரு எண்ணமும் உங்கள் விழிப்புணர்வைக் கடந்து செல்லும் பொழுது, நீங்கள் தானாகவே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவதை நிறுத்தி விடுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்வ தற்காகத் தனியாக நேரம் செலவிட வேண்டியதில்லை; அதை விழிப்புணர்வே உங்களுக்காகச் செய்து விடும். உங்களு டைய சிந்தனை அமைப்பு தானாகவே மாற்றியமைக்கப்பட்டு விடும். விழிப்புணர்வின் ஆற்றல் இவ்வாறு உங்களுடைய சிந்திக்கும் முறையையே நேர்மறை சக்தியாக மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது.

வலியை உணர்ந்தால்தான் நமது ஆசைகள் நிறைவேறிய தாக நாம் எப்படியோ நம்ப ஆரம்பித்து விட்டோம். வலிக்கும் வரை ஓடுகிறோம்; வேலியில் முட்டிக் கொள்ளும் வரை ஓடுகிறோம். வேலியைப் பற்றிய கருத்து ஆழமாகப் பதிந்து விட்டதால், வேலி என்று ஒன்றும் கிடையாது, எல்லை என்று ஒன்றும் கிடையாது என்று சொன்னால் கூட நாம் நம்பத் தயாராக இல்லை. நாம் ஓடி எப்படியோ ஒரு வேலியில் இடித்துக் கொண்டு வலியை உணர்கிறோம்; பிறகு வலியை உணர்ந்த திருப்தியில் நிறுத்தி விடுகிறோம். பிறகு நமது ஆசை தீர்ந்ததாக நினைக்கிறோம். நாம் எப்பொழுதுமே பொழிவதற்கு தகுதி பெற வேண்டுமானால் மன உளைச்சலையும் கவலையையும் கடந்து செல்ல வேண்டும் என்று

| உங்கள் மூச்சில், விழிப்புணர்வைக் கொண்டு வரும்பொழுது நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். நிகழ்காலத்தில் வாழ்வது உங்களை ஆனந்தத்திற்கு இட்டுச் செல்லும். |

எண்ணுகிறோம். நாம் கவலைக்காகவும் வலிக்காகவும் முடிவற்ற தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

மேலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் தானாகவே கவலைகளை உருவாக்கிக் கொள்ளுவார்கள். பிறகு அதை மறப்பதற்காகக் குடிப்பார்கள்! இது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது. அது எப்படி இருக்கிற தென்றால், ஒரு பன்றி தான் இருக்குமிடத்தின் சகதியையும் நாற்றத்தையும் தாங்க முடியாமல், அதத்துள்ளே மூக்கை நுழைத்துக் கொண்டதாம். குடிப்பதன் மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் வென்று விட்டதாக நினைக்கிறீர்கள்; ஆனால் உண்மையில் நீங்கள் இன்னும் வேகமாக அதனுள் மூழ்குகிறீர்கள்.

நாம் எதையோ நினைத்து, ஆனால் நமக்கே முரண்பாடான விளைவுகளை உருவாக்கி இன்னும் அதிகமான கவலைகளுக்கு ஆளாகிறோம். நமக்குத் தெரியாவிடினும், இதுவே தலையாய பிரச்சினை.

ஒரு சின்ன கதை...

ஒரு மனிதரின் வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி ஒருவர் வந்தார். அந்த மனிதர் விருந்தாளிக்கு ஒரு காபி கொண்டு வரும்படி சமையலறையிலிருந்த தன் மனைவியை நோக்கிக் கத்தினார். மனைவியோ பதிலுக்கு வீட்டில் காபியும் இல்லை கடையில் சென்று வாங்குவதற்கு பணமும் இல்லை என்று உள்ளேயிருந்து திருப்பிச் கத்தினாள். கணவன் கோபமடைந்து அவளைத் திட்டத் தொடங்கினான். இறுதியில் காபி கொடுக்க முடியாமல் போனதற்காக அவளுக்கு ஒரு அறையும் கொடுத்தான். மனைவி அழ ஆரம்பித்தாள். நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த விருந்தாளி மெதுவாக எழுந்து சென்றுவிட்டார். கண்களைத்

ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் வெறுமனே விழிப்புணர்வையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால் ஆனந்தத்தை அடைய, உங்களுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை.

துடைத்துக் கொண்ட மனைவி வெற்றிக் களிப்புடன் கணவனிடம் சொன்னாள். “பார்த்தீர்களா? நான் அழுவது போல் நடித்து அவரை வெளியே அனுப்பிவிட்டேன்!”. கணவன் சொன்னான், “நல்லது! நான் உன்னிடம் கோபமாக இருப்பதுபோல் நடித்து உன்னை அழ வைத்தேன்!”. அப்பொழுது அந்த விருந்தாளியும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டு சொன்னார். “நானும் வெளியே செ ல்வது போல் நடித்து விட்டுத் திரும்ப வந்து விட்டேன்!”.

(சிரிப்பு!)

நமது எண்ணங்களும் நமது வார்த்தைகளும் வேறு வேறாக இருக்கின்றன; அதனால் நாம் வாழும் வாழ்க்கையை இழந்து விடுகிறோம். ராமகிருஷ்ணர் சொல்கிறார், “நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்தல் ஒரு தவம் செய்வது போலாகும்”. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமது எண்ணங்களைத் திருத்தி வார்த்தைகளாக வெளிக்கொண்டு வருகிறோம். வார்த்தைகள் வெளிவருவதற்கு முன் நிறைய கணக்கீடுகள் செய்யப்படுகிறது. நாம் எதிர்கால லாப - நஷ்டங்களைப் பார்த்து ஆராய்ந்த பின்னரே பேச ஆரம்பிக்கிறோம். இதனால் நமது புற இயல்பு ஒருபோதும் ஒருங்கிணைக்கப்படுவதில்லை; நாம் பல துண்டுகளாக பிளவுபட்டிருக்கிறோம்.

எப்படி எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் மணிக் கணக்காக என்னால் பேச முடிகிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பாருங்கள்... உண்மையை, இயல்பாக, உள்ளவாறே நான் பேசுகிறேன், அவ்வளவுதான். உண்மையை வெளிப்படுத்துவதில் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை! நான் வார்த்தைகளை ஒருபோதும் திருத்துவதில்லை. எனக்கு, எண்ணுவதும் பேசுவதும் ஒன்றுதான். உங்களுக்கு, முதலில்

| நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ்காலத்தில், | | இப்போது இங்கேயே வாழ முயற்சி செய்வதே. |

எண்ணம் வருகிறது; பிறகு அதைத் திருத்திய1 பிறகே பேச்சு வருகிறது. இந்த மொத்த நடைமுறையில் கள்ளம் கபடமற்ற தன்மை இழக்கப்படுகிறது; நீங்களும் நிறைய வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்.

நான் தன்னிச்சையாகப் பேசுவதனால் நீங்கள் என்னுடைய பேச்சை மணிக்கணக்காக அமர்ந்து கேட்க முடிகிறது. இல்லாவிடில் நீங்கள் அமைதியற்று விடுவீர்கள். நீங்கள் நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உட்கார்ந்திருப்பதே இதற்குப் போதுமான நிரூபணமாகும்.

தன்னிச்சையாக நிகழும் பொழுது, நீங்கள் எண்ணாமல் வெறுமனே பாய்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இல்லாவிடில், நீங்கள் உங்கள் சொந்த மன அமைப்பிலேயே தேங்கி விடுகிறீர்கள். நீங்கள் ஒரே வழியில் சிந்தித்துக் கொண்டிருக்கும் குறுகிய மனப்பான்மையுடையவராகி விடுகிறீர்கள்.

ஒரு சின்ன கதை....

அண்டை வீட்டுக்காரரின் நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்ததால், ஒருவரால் எவ்வளவு முயன்றும் தூங்க முடியவில்லை. இது சில இரவுகள் தொடர்ந்தது. இறுதியில் அவர் அவற்றின் சொந்தக்காரரிடம் பேசுவதாக முடிவு செய்தார். அடுத்த நாள் அவருடைய வீட்டிற்குச் சென்று, அதைப் பற்றிப் புகார் கூறினார். அவரோ, அசையவேயில்லை. “என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு முதலாமவர் சொன்னார், “நல்லது, இன்று இரவு அந்த நாய்களை என் வீட்டின் கொல்லைப் புறத்தில் கட்டிப் போட்டு விடுகிறேன். அப்பொழுது உமக்குத் தெரியும் அது எப்படி இருக்கும் என்று!”’.

Editing¹

Editing

அவரது யோசனைப்படி செய்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்று எண்ணிப் பாருங்கள்! அவர் மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தில் ஒரே சிந்தனையில் சென்று கொண்டிருக்கிறார். அவரால் எப்படி ஒரு தீர்வைக் காணமுடியும்? நீங்கள் தன்னிச்சையாக இருக்கும் பொழுது, உங்களுக்கு எதுவும், ஒருபோதும், ஒரு கணம் கூட சவாலாக இருக்காது. நீங்கள் உடனே ஒரு தீர்வுடன் வந்து விடுவீர்கள். நீங்கள் தன்னிச்சையாக இருக்கும் பொழுது, எந்த உச்சியிலிருந்தும் சுலபமாகக் குதித்து, கீழே வரும் வழியிலேயே உங்கள் சிறகுகளைக் கட்டிக் கொண்டு விடுவீர்கள்!

சொல்லுங்கள்... ஏதேனும் கேள்விகள்?

"ஸ்வாமிஜி, எங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இத்தனை கவலை மற்றும் மனஇறுக்கத்திற்கு¹ மூலகாரணம் எது?".

உண்மையில் இந்தக் கேள்வியே, நீங்கள் அதனுள் ஆழமாக பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

நாம் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றி- நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றி, நாம் வசிக்கும் இடங்களைப் பற்றி, அவ்வப்பொழுது எழும் சூழ்நிலைகள் பற்றி, நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை பற்றி ஏதாவது கற்பனைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் தொடர்ந்து விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் அல்லது பகல் கனவு காண்கிறோம். ஆனால் உண்மை எப்பொழுதும் இந்த கற்பனையிலிருந்து மாறுபட்டிருக்கிறது. உண்மைக்கும் நமது கற்பனைக்கும் உள்ள இடைவெளியே நமது வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கத்திற்குக் காரணம்.

நாம் நமக்குள் ஒரு மாய உலகத்தைப் படைத்துக் கொண்டு அதை நிஜத்தில் மெய்யாக்க முடியுமா என்று தொடர்ந்து முயற்சி

Tension¹ செய்து கொண்டிருக்கிறோம். நமது கற்பனைகள் மிகையாக இருந்தால், உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள இடை வெளியும் அதிகமாக இருக்கும், அதனால் மன இறுக்கமும் அதிகமாக இருக்கும்.

நாம் எப்பொழுதும் நமது கற்பனைகள் மெய்யாகி விடும் என்ற நிலையை நெருங்கி விட்டதாக நினைக்கம் றோம். ஆனால் அங்கு செல்லும் பொழுது, நமது கற்பனை இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கும். ஆதலால், நம்மால் ஒருபோதும் அதை நெருங்க முடியாது. இது நம்மிடம் ஏமாற்றத்தையும், மன இறுக்கத்தையும், கவலையையும் உருவாக்குகிறது.

உண்மை என்னவெனில், நாம் கற்பனையில் இருக்கிறோம் என்பது கூட நமக்குத் தெரியாது. நமது கற்பனை அந்த அளவிற்குத் திடமான விஷயமாகி விட்டதால், நம்மால் அதை கற்பனை என்று கூடப் பார்க்க முடியவில்லை. நாம் அதில் சிக்கிக் கொண்டு விட்டோம். தெளிவாக இருங்கள்... எதிலாவது வேலை செய்வது உங்களுக்கு மன இறுக்கத்தை உண்டாக்கினால், நீங்கள் நிஜத்தில் வேலை செய்யவில்லை; கற்பனைப் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கணமும், நமது எதிர்பார்ப்புகளை வெளி யுலகில் நிஜமாக்க முயற்சி செய்து கொண்டிருக் கிறோம்; மக்கள் நாம் கற்பனை செய்த முறையில் எதிர்ச்செயல் புரியவில்லை என்றாலோ அல்லது தக்க பதில் கொடுக்கவில்லை என்றாலோ நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். சின்னச் சின்ன விஷயங் களிலிருந்து பெரிய விஷயங்கள் வரை, எப்பொழுதும் அது நமது கற்பனையுடன் பொருந்தி வருகிறதா என்று பார்க்கிறோம். இது நமக்குள் ஒரு விழிப்பற்ற செயலாக இருப்பதால், நமது மன

| நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புக் தன்மையை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். |

இறுக்கத்தின் காரணத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் அனைத்திலும் மிகவும் நுட்பமாக பின்னப்பட்டிருப்பதால், அதை வெளிப்படுத்த முடியவில்லை.

நீங்கள் இந்த விஷயத்தில் கூர்மையான விழிப் புணர்வைக் கொண்டு வந்து உங்களைச் சில மணி நேரங்கள் கவனித்தீர் களானால், உங்களுடைய முழு மனமும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் மனதையும், உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும் கவனிப்பவராக இருப்பதென்று தீர்மானியுங்கள். உங்கள் மனம் எவ்வளவு நுட்பமாக நீங்கள் பார்க்கும் அல்லது செய்யும் ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதையும், அது எவ்வாறு சில சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்புகளுடன் பொருந்திப் போகிறது, சில சமயங்களில் தவறி விடுகிறது என்பதையும், இவ்வாறு நிகழும் சமயங்களில் எவ்வாறு உங்கள் மன இறுக்கம் மற்றும் கவலை எழுகிறது என்பதையும் காண்பீர்கள்.

இந்த விஷயத்தில் முழுவதும் மிகுந்த விழிப்புணர்வை செலுத்துவதன் மூலம், உங்கள் மனம் எவ்வாறு விளையாடுகிறது, எவ்வாறு மன இறுக்கத்தை உருவாக்குகிறது என்பதைப் பார்க்க முடியும். ஒரு முறை கவனிப்பவராக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டீர்களானால், உங்கள் கவலைகள் குறைந்துவிடும்; வெளியுலக நிகழ்ச்சிகளை உள்ளே எடுத்துச் செல்லும்போதுதான், நீங்கள் உங்களுக்குள் ஒரு பெரிய தகவல் அடித்தளத்தையே1 உருவாக்கி விடுகிறீர்கள்; அதிலிருந்து புதிய கவலைகள் எழுகின்றன.

மேலும் ஒரு விஷயம்... கால வரிசைப்படி திட்டமிட்டு, அதை மெய்யாக்க கால விரயமின்றி உழைப்பீர்களானால், நீங்கள்

Database¹

உண்மையின் பாதையில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி, வேலை செய்வதை விட கவலைப்படுவது அதிகமாக இருந்தால், அப்பொழுது நீங்கள் இருக்கும் பாதையில் உண்மைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது. அது உங்களுக்குள் நோக்கி, உங்கள் எண்ணங்களை நேராக்கிக் கொள்ள வேண்டிய நேரம்.

கால வரிசைப்படி திட்டமிடுங்கள், சரிதான்; ஆனால் உங்கள் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறீர்கள் என்று நினைப்பதுதான் சரியற்றது. இதை உளவியல் திட்டம் எனலாம்; இதுவே மன இறுக்கத்தையும் கவலையையும் உருவாக்குகிறது.

உங்களுக்குத் திட்டமிடுவதற்கு 2 மணி நேரம் தேவைப்பட்டால், மீதி 22 மணி நேரம், அதைச் செயல்படுத்துவதற்குக் கிடைக்கிறது. பிறகு ஏன் அது செயல்படுத்தப்படுவதில்லை? ஏனெனில், நீங்கள் அதில் 80% நேரத்தை எப்படி உங்கள் திட்டத்தை செயல்படுத்தப் போகிறீர்கள் என்ற கவலையிலேயே வீணாக்கி விடுகிறீர்கள்.

நீங்கள் உங்களுக்குள்ளேயே திட்டத்தை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளும் பொழுது, உங்கள் சக்தி அதிலேயே வடிந்து விடுகிறது. சக்தியை, திட்டத்தைச் செயல்படுத்த உபயோகிப்பதற்குப் பதிலாக, வெறுமனே வீணாக்கி விடுகிறீர்கள். பிறகு வேலை எப்படி முடியும்?

இன்னொரு விஷயம்... உண்மையிலேயே உங்களுக்கு வேலையை முடிக்கும் விருப்பம் இருந்தால், நீங்கள் கவலைப்படாமல் அதைச் செய்வதில் இறங்குவீர்கள். நான் சொல்கிறேன்... மன இறுக்கமும் கவலையும் உண்மையிலிருந்து ஓடி விட உதவும் நொண்டிச் சாக்குகள். மன இறுக்கம் மற்றும் கவலை

நமது எண்ணங்களும் வார்த்தைகளும் வேறு வேறாக இருக்கின்றன.

என்ற போர்வையின் கீழ், நீங்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்கிறீர்கள்.

ஒவ்வொரு பிரச்சினையும், தீர்வையும் அதனுடன் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. உண்மையிலேயே உங்களுக்கு அதைத் தீர்க்கும் விருப்பம் இருந்தால், நீங்கள் அதைச் செய்வீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பிரச்சினையை ஆழ்ந்த விழிப்புணர்வுடன் உற்று நோக்க வேண்டியதுதான்; தீர்வு தானாகவே வெளிவந்து விடும். உங்களுக்கு அதைத் தீர்க்கும் விருப்பமின்றி, ஆனால் அதைப் பற்றிப் பேசுவது சுகமாக இருப்பின், நீங்கள் அதைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டும், அதைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டும், கவலைப்பட நிறைய இருப்பதாகப் பெருமிதப்பட்டுக் கொண்டும் இருப்பீர்கள்.

பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் சிறந்த வழி, மன இறுக்கம், கவலை போன்ற மயக்க நிலைக்குச் சென்று விடுவது. பல சமயங்களில் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நிலையிலேயே சுகமாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களால் எல்லாவிதமான பொறுப்புகளில் இருந்தும் விடுதலை பெற்றிருக்க முடியும்.

ஒரு சின்ன கதை....

எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் ஒரு புகழ் பெற்ற மனிதர், ஒரு கிராமத்திற்கு வந்தார். வெகு சீக்கிரத்திலேயே அவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடி விட்டது. அவர் ஒரு மனிதனைக் கழுத்தில் தொட்டவுடனேயே, அவனுடைய நாட்பட்ட கழுத்து வலியில் இருந்து அவனுக்கு நிவாரணம் கிடைத்தது. இன்னொரு மனிதனைத்

நான் வார்த்தைகளை ஒருபோதும் திருத்துவதில்லை. எனக்கு எண்ணுவதும் பேசுவதும் ஒன்றுதான். உங்களுக்கு முதலில் எண்ணம் வருகிறது. பிறகு அதைத் திருத்திய பிறகே பேச்சு வருகிறது.

தலையில் தொட்டவுடன், அந்தக் கணமே அவன் தலைவலியும் மறைந்து விட்டது. அடுத்து ஊன்று கோலுடன் இருந்த ஒரு மனிதனை நோக்கி நகர்ந்தார். ஆனால் ஊன்று கோலுடன் இருந்த மனிதனோ விலகிச்சென்று “என்னைத் தொட்டு விடாதீர்கள்!” என்று சொன்னான். குணப்படுத்துபவர் குழப்பமடைந்து ஏனென்று வினவினார். அதற்கு அவன் சொன்னான், “நான் உடல் ஊனமுற்றவர்களுக்கான நலத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன்”.

(சிரிப்பு!)

நாம் நமது பிரச்சினைகளைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அதற்கு ஒரு உடனடி தீர்வு கொடுக்கப்படும் பட்சத்தில், அதை ஏற்றுக் கொள்வது நமக்குக் கடினமாக இருக்கிறது! ஒரு உடனடித் தீர்வு கொடுக்கப்படும் பட்சத்தில், உடனே நமக்குள் ஒரு பெரும் வெறுமையை உணர்கிறோம். நம் வாழ்க்கையில் அதற்குப் பிறகு செய்வதற்கு எதுவுமில்லை என்பது போல் உணர்கிறோம். சுமை மிகவும் குறைந்து விட்டது போல் உணர்கிறோம்! நமது பிரச்சினைகள் திடீரென்று மறைந்து விடும் பொழுது, நம்மால் சரியாக சிந்திக்க முடியாதது போல் உணர்கிறோம். ஏனெனில் நாம் நமது பிரச்சி னைகளைக் கடந்து சிந்தித்ததேயில்லை!

உங்களுடைய எல்லா மன இறுக்கங்களும், கவலை களும் உண்மையிலேயே, நிஜத்திலிருந்து நீங்கள் மறைந்து கொள்ளும் ஆறுதல் பிரதேசங்கள்¹. உங்களுக்கு உண்மை யிலேயே ஏதேனும் செய்து முடிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுப்பது எது?

| Comfort Zones¹ | | --- |

நீங்கள் ஏன் உங்களை மன இறுக்கத்திலும், கவலையிலும் மூழ்கடித்துக் கொள்ளவேண்டும்? நீங்கள் இதைச் செய்வதற்குப் காரணம் ஒருவேளை உங்களிடம் நிறைய நேரம் இருக்கலாம் அல்லது உண்மையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இருக்கலாம், அல்லது இத்தனை மன இறுக்கத்தையும் கவலையையும் வைத்திருப்பதில் பெரு மிதமாக இருக்கலாம், அவ்வளவே!

அதனால், வாழ்க்கை முறை, மக்கள் முதலியவை பற்றிய எல்லாக் கற்பனைகளையும் விட்டு விட்டு, இந்தக் கணத்தில் வாழத் துவங்குங்கள்; மற்றவை தானாகவே நிகழும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... உங்களால் இந்த ஆறுதல் பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ முடியாது. ஒரு நாள் இல்லாவிடினும் இன்னொரு நாள் நிஜத்தைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். அதனால் விழிப்புடன் வாழத் தொடங்குங்கள்; விழிப்புடன் தீர்மானங்களை எடுங்கள்; நீங்கள் எடுத்த ஒவ்வொரு தீர்மானத்திற்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்னொருவருடைய தீர்மானத்தின்படி சென்று விட்டு, இறுதியில் அவர்கள் மீது பழி போடுவது மிகவும் சுலபமானது. அதை ஒருபோதும் செய்யாதீர்கள். அது மிகவும் முட்டாள் தனமான, கோழைத்தனமான செயலாகும். ஒருபோதும் யாரையும் எதற்காகவும் பழி சொல்லாதீர்கள். உங்களால் எதையும் கையாள முடியாத பட்சத்தில் மட்டுமே, மற்றவர்கள் மீது பழி போடுகிறீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்வாமிஜி... எப்பொழுதும் ஓய்வாகவும் தளர்வாகவும் இருப்பது எப்படி?

உங்கள் விழிப்புணர்வு எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்குமானால், நீங்கள் எப்பொழுதும் ஓய்வாகவும்

| நமது கற்பனைகள் மிகையாக இருந்தால், உண்மைக்கும் கற்பனைக்கும் உள்ள இடைவெளியும் அதிகமாக இருக்கும். அதனால் மன இறுக்கமும் அதிகமாக இருக்கும். |

தளர்வாகவும் இருக்கலாம். இந்த நிலையை அடைவதற்கு தியானம் ஒரு திறவுகோலாகும். குறைந்தபட்சம் புத்தி பூர்வமான நிலையிலிருந்தாவது இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிறகு இதைச் சிறு சிறு இடைவெளிகளில் உணர ஆரம்பிப்பீர்கள். சிறிது சிறிதாக இந்த இடை வெளிகள் பெரிதாக்கப்பட்டு, இறுதியில் அது உங்கள் நிரந்தரமான நிலையாகி விடும்.

நான் எப்பொழுதும் சொல்வதுண்டு... ஒரு குரு உண்மையான குருவா என்பதைக் கண்டறிய, அவர் தூங்கும் பொழுது கவனியுங்கள். உண்மையான குரு தூங்கும் பொழுதும் பூவைப் போல இருப்பார். அவர் தூங்கும் பொழுதும் மிகவும் தளர்வாகவும், மிகவும் அழகாகவும் இருப்பார். அவர் தூங்கும் பொழுதும் ஒரு குழந்தையைப் போன்ற கள்ளம் கபடமற்ற தன்மை அவரிடமிருந்து ஒளிவீசிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு சாதாரணமான மனிதனோ தூங்கும் பொழுது மிகவும் இறுக்கமாகவும், பிடிப்பாகவும் காணப்படுவான்.

ஒரு குரு எப்பொழுதும் உயர் விழிப்புணர்வு நிலையில் இருக்கிறார். அவர் தூங்குவது உடலிற்கு ஓய்வு கொடுப்பதற்காக மட்டுமே. நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு நிலையில் இருப்பீர்களானால், உங்களால் எப்பொழுதும் இறுக்கமாக இருக்க முடியாது. நீங்கள் விழிப்புணர்வற் ற நிலையில் விழும் பொழுது மட்டுமே, மன மயக்கத்தில், மன இறுக்கத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். எப்பொழுதும் தளர்வாக இருப்பதற்கு ஒரே வழி, உள்ளேயும் வெளியேயும் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதே!

விழிப்புணர்வுடன் தளர்வாக இருப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, நீங்கள்

| உங்களுடைய எல்லா மன இறுக்கங்களும், | | கவலைகளும் உண்மையிலேயே, நிஜத்திலிருந்து | | நீங்கள் மறைந்து கொள்ளும் ஆறுதல் பிரதேசங்கள். |

உங்களை தளர்வாக இருப்பதற்கு அனுமதிப்பீர்களானால், அவர் உங்களுக்குள் பிரவேசிப்பார்; அவர் நிலை உங்களை ஊடுருவிச் செல்லும். நீங்கள் மூடியும், இறுக்கத்துடனும் இருந்தால், அவரால் உங்களுக்குள் பிரவேசிக்க முடியாது.

‘உபநிஷதம்’ என்ற வார்த்தையின் பொருள், ‘குருவின் காலடியில் அமர்தல்’ என்பதாகும். உங்களால் திறந்த மனதுடன், தளர்வாக, குருவின் காலடியில் அமர முடிந்தால், அவர் உங்களுள் பிரவேசித்து, தன் முழுக்கருணையுடன் உங்களிடம் செயலாற்றுவார். அதன் பிறகு வார்த்தைகளுக்கு அவசியமில்லை. அவர் வார்த்தைகளை உபயோகித்து, நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும் போது, உங்களை ஊடுருவிச் செல்ல முயற்சி செய்கிறார். எப்படித் தளர்வாக இருப்பது என்பதை ஒரு குருவால் கற்றுக் கொடுக்க முடியும்.

ஒரு குருவின் இருப்பில் நீங்கள் தளர்வாக இருக்கையில் உங்கள் சொந்த உடலில் நிலைபெறுகிறீர்கள்; உங்கள் சொந்த தனித் தன்மையில் நிலை பெறுகிறீர்கள்; நீங்கள் உங்கள் சொந்த புற இயல்பில் தளர்வாக இருப்பதாக உணர்கிறீர்கள். பின்னர் உங்களிடம் எந்தப் பிளவும் இல்லை; நீங்கள் ஒருங்கிணைக்கப் படுகிறீர்கள். அதனால், ஒரு குருவின் இருப்பில் தளர்வாக இருக்கப் பயிற்சி செய்யுங்கள். அதுவே ஓய்வாகவும், தளர்வாகவும் இருப்பதற்கு குறுக்கு வழியும், இறுதியான வழியுமாகும். சொல்லுங்கள்...

ஸ்வாமிஜி, நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறீர்களா? உங்களை எப்பொழுதும் உணர்ச்சிகள் அலைக்கழிப்பதில்லையா?

(பரமஹம்ஸர் சிரிக்கிறார்...) ஆம்! நான் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறேன். உங்கள் மொழியில்

‘உப நிஷதம்’ என்ற வார்த்தையின் பொருள், ‘குருவின் காலடியில் அமர்தல்’ என்பதாகும்.

சொல்வதானால் 24x71. ஏனெனில் என் இருப்புத் தன்மையிலிருந்து2 பன்மை3 மறைந்து விட்டது. ஆனந்தம்4 இருக்கும் பொழுது, பன்மை இருக்க முடியாது. பன்மை மறையும் பொழுதுதான், ஆனந்தம் நிகழ முடியும்.

என் இருப்புத் தன்மையில் காமமோ, பயமோ, பற்றோ, வெறுப்போ அல்லது மற்ற எந்த எதிர்ப்பதங்களை உடைய உணர்ச்சிகளோ இல்லை. ஒரே உணர்ச்சி ஆனந்தம் மட்டுமே! நான் சொல்வதை புரிந்து கொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கும். அது உங்களிடம் ஒரு அனுபவப்பூர்வமான புரிந்து கொள்ளுதலாக இல்லாத வரையில், அதைப் புரிந்து கொள்வது கடினம்தான். அதை நீங்கள் புத்திபூர்வமான நிலையில் புரிந்து கொள்ளலாம். தற்சமயம், நான் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அது போதும்!

புரிந்து கொள்ளுங்கள்... ஆனந்தத்திற்கு முதல் படி கவனிப்பவராக ஆதலே. வாழ்க்கையை வெறுமனே ஒரு நாடகத்தைப் போல கவனியுங்கள். நீங்கள் கவனிக்கும் பொழுது, உங்கள் மனம் அசைவற்று அமைதியாக5 நிற்கிறது. அது அசை வற்று, அமைதியாக நிற்குமானால், நீங்கள் இழையைப் பிடித்து விட்டீர்கள். அந்த அசைவற்ற அமைதித் தன்மையை நீங்கள் ஒரே ஒருமுறை அனுபவித்து விட்டீர் களானால், நீங்கள் அந்த இழையைப் பிடித்து விட்டீர்கள்.

அந்த இழையே உங்களை நீண்டநேர அசைவற்ற அமைதித் தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த அசை வற்ற அமைதித் தன்மையே உங்கள் குரு. வெளியேயுள்ள குரு உங்கள் உள்ளேபுள்ள குருவைக் கண்டுபிடிக்க உதவி செய்கிறார், அவ்வளவே. நீங்கள் இந்த அசைவற்ற அமைதித் தன்மையைக் கண்டுபிடித்து விட்டீர்களானால், எல்லா

வாரத்தின் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரமும்

Being

Plurality

Bliss

Stillness

Still / Stillness - அசைவற்ற அமைதி, நிசப்தம் உணர்ச்சிகளுமே வெறும் மனதின் விளையாட்டே என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

உங்களால் எந்த உணர்ச்சியையுமே விழிப்புடன் முயற்சி செய்து விட்டுவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை விட்டுவிட அதிகமாக முயற்சி செய்தால், அதன் மீது உங்கள் பற்று அதிகமாகி, அதுவே ஒரு பெரிய தொந்தரவாகி விடும். உணர்ச்சி கள் உங்களை வட்டமிட்டு சுற்றி வந்து தொந்தரவு கொடுக்கும். ஒரே வழி உணர்ச்சிகளைக் கவனிப்பதே. உணர்ச்சிகளைக் கவனிக்க கவனிக்க, உங்களுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தற்சமயம், உங்கள் உணர்ச்சிகளில் நீங்கள் மிகவும் சிக்கிக் கொண்டிருப்பதால், உங்களால் உங்களை அவற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் இடையே ஒரு தூரத்தை உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தூரம் அதிகரிக்கும். ஒரு நாள், கவனிப்பவர் காட்சியிலிருந்து மறைந்து விடுவார்.

பிறகு, நீங்கள் உணர்ச்சிகளை விட்டுவிட எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளத் தேவையில்லை. அவைகள் தானாகவே நழுவி விழுந்து விடும்; நீங்கள் அவற்றிலிருந்து துண்டிக்கப்பட்டதை உணர்வீர்கள். உங்களால் இனிமேல் அவைகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. அவைகள் உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வெறுமனே மறைந்து விடும். உங்கள் விழிப்புணர்வில் ஒரு மாற்றம் நிகழும். பிறகு நீங்கள் புது மனிதனாகி விடுவீர்கள்.

நான் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கிறேன். உங்கள் மொழியில் சொல்வதானால் 24 x 7.

நீங்கள் கவனிப்பவராகிவிட்டால், கவலைகளுக்கும், வலிக்கும் இடமில்லை. உங்களிடம் அன்பு மட்டுமே இருக்கும். பின்னர் நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அன்பை, அது ஒவ்வொரு நிமிடமும் உங்கள் மீது பொழியும் எல்லையற்ற அன்பைப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு மனிதர் பலவீனமான இதயம் உடையவராய் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் ஜாக்கிரதையாகவே சொல்லுவார்கள். ஒரு நாள், அவருடைய பணக்கார மாமா ஒரு மில்லியன் டாலரை அவருக்கு விட்டுவிட்டு இறந்துவிட்டார். அவர்கள் மிகவும் பரபரப் படைந்தனர்; அதேசமயம் அந்த செய்தியை எப்படி அவரிடம் போட்டு உடைப்பது என்று தெரியாமல் தவித்தனர். அவர் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இறந்து விடுவார் என்று பயந்தனர். அவர்களில் ஒருவர் ஆலோச னை கூறினார், “குடும்ப மருத்துவரை அழைத்து, அவரை இதைக் கையாளச் சொல்வது தான் நல்லது என்று நினைக்கிறேன்”. அவர்கள் சம்மதித்தனர். அவர்கள் குடும்ப மருத்துவரை அழைத்து, அவரிடம் விஷயத்தை கூறினர். மருத்துவர் சொன்னார், “கவலைப்படாதீர்கள், நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன். அது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு கடினமானதல்ல”. அவர் உடனே வீட்டிற்கு வந்து, அறைக்குள் சென்று அந்த மனிதரிடம் பேசத் தொடங்கினார். அவரிடம்ாதாரணமாகக் கேட்டார், “இப்பொழுது திடீரென்று உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?”. அவர் சொன்னார், “உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிடுகிறேன்,

நாம் நமது பிரச்சினைகளைப் பற்றி முடிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். டாக்டர்”. இப்பொழுது அதிர்ச்சியைத் தாங்காமல் மருத்துவர் விழுந்து இறந்து விட்டார்.

(சிரிப்பு!)

அடுத்தவர்களுக்கு வரும் வரையில் நாம் வாழ்க் கையை ஒரு நாடகமாகப் பார்க்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் நமக்கு வரும் பொழுது அதை ஜீரணிப்பதற்குக் கடினமாக இருக்கிறது!

நாம் எப்பொழுதும் மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்... அறிவுரை என்பது எல்லோருமே கொடுக்க விரும்பும், ஆனால் எவருமே எடுத்துக் கொள்ளத் தயாரில்லாத ஒரு விஷயம்!

உங்களால் தாமரை போல - தண்ணீருக்குள் ஆழமாக இருந்தும் அதனால் தீண்டப்படாமல் - இருக்க முடியுமானால், நீங்கள் வாழ்க்கையின் விளையாட்டை விளையாடக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து தன்னைப் பல்வேறு வழிகளில் வெளிப் படுத்திக் கொண்டேயிருக்கிறது. நமது பங்கு, ஆழமான விழிப்புணர்வுடன் அதைப் புரிந்து கொண்டு அதனுடன் பாய்ந்து சென்று கொண்டிருப்பதுதான்.

படைப்பு அனைத்தும், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் ஒருமித்து பாய்ந்து சென்று கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பின்னர், நீங்கள் தானாகவே உங்கள் வேலைகளையும், மன உளைச்சல்களையும் விட்டு விடுவீர்கள். உங்களைச் சுற்றி நடப்பவைகள், உங்கள் மையத்தைத் தீண்ட முடியாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். பிரபஞ்ச இருப்புத்தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதை நீங்கள் அனுபவ பூர்வமாகப் புரிந்து கொண்டால் இது நிகழும்.

| என் இருப்புத் தன்மையிலிருந்து பன்மை மறைந்து விட்டது. | | --- | | ஆனந்தம் இருக்கும்பொழுது பன்மை இருக்க முடியாது. | | பன்மை மறையும் பொழுதுதான் ஆனந்தம் நிகழ முடியும். |

வெளிப்புறத்தில், நீங்கள் பல விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் உங்கள் உள்மையத்தில், வெளியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுமே பிரபஞ்ச இருப்புத் தன்மை என்ற பொதுவான இழையில் கோர்க்கப்பட்ட மணிகளைப் போலத்தான் என்பதை உங்களால் தொடர்ந்து பார்க்க முடிய வேண்டும். அவை எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப் பது அந்த இழைதான்.

சொல்லுங்கள்...?

ஆனால் ஸ்வாமிஜி, நாங்கள் வேண்டுமென்றே கவலைப் படவில்லை. பிறகு, எங்கள் கவலைகளுக்கு நாங்கள்தான் காரணம் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்?

கவலை உங்கள் மனதின் விழிப்பற்ற நிலையாகிவிட்டது. அதற்கு உங்கள் முயற்சியெல்லாம் தேவையில்லை. அது வெறுமனே இருக்கிறது, அவ்வளவுதான். நீங்கள் அதற்காக விழிப்புடன் முயற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை, அது எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறது.

ஒரு சின்ன கதை....

ஒரு பெண், ஹோட்டலின் வரவேற்பாளரை அழைத்து உதவுமாறு கத்தினாள். வரவேற்பாளர் அவளது அறைக்கு வந்தாள். மற்றொரு அறையில் ஒரு மனிதர் நிர்வாணமாக நிற்பதை ஜன்னல் வழியாக என்னால் பார்க்க முடிகிறது என்று அந்தப் பெண் கத்தினாள். வரவேற்பாளரும் ஒரு மனிதன் மேல் பாதி வெற்றுடம்புடன் நின்று கொண்டு இருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அவள் சொன்னாள், "மேடம், அவர் உடம்பின் மேல் பாகம் மட்டும்தான்

| ஆனந்தத்திற்கு முதல்படி கவனிப்பராக ஆதலே. | | :---: | | வாழ்க்கையை வெறுமனே | | ஒரு நாடகத்தைப் போல் கவனியுங்கள். |

வெற்றுடம்பாக இருக்கிறது. எப்படி நீங்கள் அவர் நிர்வாணமாக இருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்?’’. அந்தப் பெண் கத்தினாள், ‘‘அந்த அலமாரியின் மேல் ஏறிப் பாருங்கள், தெரியும்’’.

(பலத்த சிரிப்பு!)

எல்லாம் சரியாக இருந்தாலும், ஒரு மின் விளக்குடன் நாம் கவலைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்! நாம் இதை வேண்டுமென்றே செய்வதில்லை. நாம் அதை முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் இயல்பாகச் செய்கிறோம் - அதுதான் பிரச்சினையே! நமது மனநிலை 180° மாற்றம் அடைய வேண்டும்.

இன்னொரு சின்ன கதை....

ஒரு போலீஸ்காரர் இரவு ரோந்து போய்க் கொண்டு இருக்கும் பொழுது வழியில் ஒரு பசு மாடு ஒரு சந்தின் நடுவில் இறந்து கிடப்பதைப் பார்த்தார். அவர் அதை அருகிலுள்ள ஒரு தெருவை நோக்கி இழுத்துச் செல்ல ஆரம்பித்தார். ஒரு வழிப்போக்கர் அவரிடம் ஒரு செத்துப் போன பிராணியை ஏன் இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தப் போலீஸ்காரர் சொன்னார், ‘‘அப்பொழுதுதான் நான் நாளைக்குப் புகார் செய்ய சுலபமாக இருக்கும். ஏனெனில் எனக்கு அந்தத் தெருவின் பெயர் தெரியும்’’.

(சிரிப்பு!)

நமக்கு எப்படி தன்னிச்சையாக, இயல்பாக இருப்பது1 என்பது தெரியாததால், நாம் எப்பொழுதும் கவலைப்பட்டுச் கொண்டு இருக்கிறோம். நமது திட்ட வடிவப்படி பொருந்தி

Spontaneous¹

Spontaneous

வருவதற்காக, நாம் வாழ்க்கையில் விஷயங்களைச் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் திரவத்தன்மையோடு1 வாழ்வதில்லை. நீங்கள் ஒரு திரவத்தன்மையோடு வாழ்ந்தால், வேலை செய்ய வேண்டிய தேவையில்லை. நீங்கள் வெறுமனே மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருக்கலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் எப்பொழுதும் ஆனந்த மயமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால், எப்படி ஆனந்தமயமாக இருப்பது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவீர்கள்! உங்களுக்கு எதையும் கவலையுடன் மட்டுமே ஆரம்பிக்கத் தெரியும்; அதுதான் பிரச்சினை. அதனால்தான் பல சமயங்களில் நீங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கும் பொழுது, நான் எதையும் நேரடியாகவோ அல்லது விளக்கமாகவோ ஒருபோதும் செ ால்வதில்லை. நான் வெறுமனே சில சுருக்கமான எளிதில் புரியாத வாக்கியங்களை - உங்கள் மனம் கவலையாக எடுத்துக் கொள்ளாத வகையில் - சொல்லி விடுவேன். அதே சமயம் அதை ஊடுருவிப் புரிந்து கொள்ளும் சக்தியையும் கொடுப்பேன்.

சொல்லுங்கள்...

ஸ்வாமிஜி, நீங்கள் சொல்லுவதைப் பற்றிக் கவலைப் படாமல் எப்படி எங்களால் அதை பின்பற்ற ஆரம்பிக்க முடியும்?

நான் சொல்லும் வார்த்தைகளில் உங்கள் மூளையைச் செலுத்தாமல், அதற்குப் பின்னால் உள்ள சக்தியையும் ஊக்கத்தையும் கிரஹித்துக் கொண்டு நிகழ்காலத்தில் வாழத் தொடங்குங்கள், அவ்வளவுதான். உங்கள் மூளையை அதில் செலுத்தும் பொழுது தர்க்கம் உள்ளே வந்து விடுகிறது; ஒரு முறை

Fluid way

தர்க்கம் உள்ளே வந்து விடுமாயின், தொல்லைகள் ஆரம்பித்து விடுகின்றன.

என் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள சக்தியை உணருங்கள். இதை நான் அமைதி என்று அழைக்கிறேன். இந்த அமைதியினால் உங்களை நான் எப்பொழுதும் ஊடுருவிச் செல்ல முயற்சி செய்கிறேன். இந்த அமைதி உங்களை இறுதியாக எங்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ அங்கு எடுத்துச் செல்லும். ஒருபோதும் என் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீர்கள்.

ஒருபோதும் வார்த்தைகளைச் சேகரிக்காதீர்கள். புத்திசாலிப் பைத்தியங்கள்1 மட்டுமே மேலும் மேலும் வார்த்தைகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வார்த்தைகளைச் சேகரித்து மேலும் மேலும் குழப்பமடைகிறார்கள். என்றாவது ஒரு நாள் தெளிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் வார்த்தைகளைச் சேகரிக்கிறார்கள். ஆனால் அது ஒரு போதும் நிகழப் போவதில்லை.

பாருங்கள், நான் பேசுவது எதுவானாலும், இணைத்து ஆராயும் பொழுது அது முரண்படுவதாகத் தோன்றினாலும், அது பேசப்படும் கணத்தில் முழுமையான உண்மையாக இருக்கிறது. நான் பேசுவது எதுவானாலும் பேசும் அந்தக் கணத்தில் முழுமையாக உண்மையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் என் வார்த்தைகளில் இருந்து மட்டும் எந்த ஒரு அனுமானத்திற்கும் வர முடியாது. அதனால், இப்போதைக்கு அவற்றை எந்தக் கேள்வியுமில்லாமல் வெறுமனே எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பின்பற்றுவதற்குத் தேவையான சக்தியையும் அறிவுக் கூர்மையையும் அதுவே கொடுக்கும்.

Intellectual Nuts

நீங்கள் முழுமையான விசுவாசத்துடன் இருக்கும் பொழுது, உங்களால் கவலைப்பட முடியாது. இதுவே உண்மையான வழிபாடு. வழிபாடு என்பது உங்கள் கவலைகளையெல்லாம் கொட்டி விட்டு ஒரு தீர்வைக் கேட்பதல்ல. வழிபாடு என்பது பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது முழுமையான விசுவாசம் வைப்பது; அது உங்களுக்குச் செய்கிறது என்பதை உணர்வது.

அதனால் உங்கள் புத்தியுடன் கேட்காதீர்கள். ஆழமான தியானத்துடன் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்கள் உணர்ச்சியோ அல்லது பாதையோ எதுவாக இருப்பினும் அதில் ஆழமாகச் சென்று, நான் சொல்வதைக் கேளுங்கள். அது போதும். நீங்கள் தானாகவே சக்தியால் நிரப்பப்பட்டு, வலிமையாக்கப்படுவீர்கள். இவையெல்லாம் நான் உங்களுக்குக் கொடுக்கும் அடிப்படை இரகசியங்கள்.

நீங்கள் என் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தால், அவைகளை மறந்து விடக் கூடும் என்று கவலைப்படுவீர்கள். அவைகளை எழுதிக் கொள்ளத் தொடங்குவீர்கள். நான் சொல்கிறேன், நீங்கள் அவற்றை எழுதிக் கொள்ளத் தொடங்கும் பொழுதே, விஷயம் அனைத்தையும் தவறவிட்டு விடுவீர்கள். என்னுடைய வார்த்தைகளையும் முழுமையாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள், அவற்றின் பின்னால் இருக்கும் சக்தியையும் கிரஹித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். கிறுக்கல் குறிப்புகளுடன் வீட்டுக்குச் செல்வீர்கள்; சில நாட்களில் அதுவும் எங்காவது ஒரு மூலையில் கிடக்கும். சில காலம் சென்ற பின்னர், அது கிடைத்தாலும் தலையும் புரியாது, காலும் புரியாது.

ஒரே வழி உணர்ச்சிகளை கவனிப்பதே. கவனிக்க கவனிக்க, உங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் கவனிப்பவர் காட்சியிலிருந்து மறைந்து விடுவார். அது எப்படி இருக்கிறதென்றால்.. நீங்கள் ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு அதன் கடைசி இரண்டு பக்கத்தை மட்டும் உங்கள் கையில் வைத்திருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இரண்டு பக்கங்களை மட்டும் வைத்துக் கொண்டு உங்களால் அந்த முழு புத்தகத்தையும் திரும்பத் தொகுக்க முடியுமா? முடியாது! அதே போல், என்னுடைய சில வார்த்தைகளை மட்டும் எழுதி வைத்துக் கொண்டு, மொத்த விஷயத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நான் பேசும் பொழுது வெறுமனே முழுமையாக இருங்கள். அதுவே போதுமானது.

என்னுடைய வார்த்தைகளை மறந்து விடுவதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விடுங்கள். நீங்கள் முழுமையாக இங்கு இருப்பீர்களானால், என்னுடைய வார்த்தைகள் உங்களை ஊடுருவிச் சென்று அதன் வேலையைச் செய்யும். உருமாற்றமே முக்கியம், என் வார்த்தைகள் அல்ல. உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து கேளுங்கள், மூளையில் இருந்து அல்ல. நீங்கள் புரிந்துகொண்டு, உருமாற்றம் நிகழுமானால், ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். மறந்து விட்டீர்களானால், நீங்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.

என்னுடைய வார்த்தைகளை மட்டுமல்ல, எதையுமே பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள். ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது; பிறகு பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு என்ன இருக்கிறது? பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது மேலும் மேலும் துன்பத்தையே கொண்டு வரும். எதிர்காலத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதிலும் அர்த்தம் ஏதுமில்லை. அது இனிமேல் வரப் போவது. நீங்கள் எதைப் பற்றி

உங்களால் தண்ணீரில்
தாமரை போல் இருக்க முடியுமானால்,
நீங்கள் கற்றுக் கொண்டு விட்டீர்கள்.

எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்? எதிர்காலமும் நிகழ்காலமாகவே வரும். அதனால் நிகழ் காலத்தைக் கவனியுங்கள்.

பாருங்கள்... நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கவலை எழுவதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் எப்பொழுதும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதுதான். இனி தேர்ந்தெடுப்பதேயில்லை என்று தீர்மானித்து, அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டு முழு அனுபவத்தையும் பருகுவீர்களானால், எல்லாக் கவலைகளும் வெறுமனே மறைந்து விடும். நீங்கள் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் என்னவெனில், உங்களை திடமான ஒரு விஷயமாக அடையாளப்படுத்திக் கொள்வதுதான். நீங்கள் எப்பொழுதும் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்கிறீர்கள். அது உங்கள் அஹங்காரத்தின் விளையாட்டைத் தவிர வேறல்ல. அதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, உலகம் ஒருநாள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எண்ணும் பொழுது அச்சமாக இருக்கிறது” என்று.

உலகம் ஒரு நாள் முடிவுக்கு வந்து விடப் போகிறது; அதனால் என்ன? உலகம் ஒரு முடிவுக்கு வருவதானால், அதனுடன் எல்லோருக்கும்தான் ஒரு முடிவு வரப்போகிறது. யாரும் எதைப் பற்றியும் கவலைப்படுவதற்கு, எதுவும் யாரிடமும் இருக்கப் போவதில்லை. நீங்கள் இதற்கு முன் கவலைப் பட்டற்குக் காரணம் உலகத்தில் கவலைப்படுவதற்கு ஏதோ இருந்தது. உலகமே ஒரு முடிவுக்கு வரும் பொழுது, கவலைப்படுவதற்கு எதுவுமே இருக்க முடியாது, இல்லையா? ஆனால் நீங்கள் அதைப் பற்றியும் கவலைப்படுகிறீர்கள்!

| நமக்கு எப்படி இயல்பாக இருப்பது என்று தெரியாததால், | | எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். |

மனம் எப்படித் தானே முரண்படுகிறது பாருங்கள். அது கவலைப்படுவதற்கு ஏதேனும் இருந்தாலும் கவலைப்படுகிறது, இல்லாவிட்டாலும் கவலைப்படுகிறது. உங்களுடைய எல்லாக் கவலைகளையும் விழிப்புணர்வோடு பார்த்தீர்களானால், உங்கள் விழிப்பற்ற நிலையில், அவைகள் எவ்வளவு தந்திரமாக உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் கவலைகள் மிகவும் நழுவும் தன்மையிலும் ஆதாரமற்றும் இருப்பதைக் காண்பீர்கள். அவைகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இருப்பதால் உங்களால் அவற்றை ஒரு போதும் பிடிக்க முடியாது. அவைகள் திடமாக இருப்பதில்லை.

உண்மையில், உங்களுடைய எல்லா உணர்ச்சிகளுமே விழிப்பற்ற தன்மையின் விளையாட்டைத் தவிர வேறல்ல. நீங்கள் முழு விழிப்புணர்வோடு வாழும் பொழுது, ஒரு போதும் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட மாட்டீர்கள். அதனால்தான் மீண்டும் மீண்டும் உங்களை விழிப்புணர்வால் நிரம்பிக் கொள்ளச் சொல்கிறேன்.

உங்கள் வாழ்க்கையை ஆக்குவதும் அழிப்பதும் உங்கள் கவலைகளும் உங்கள் வார்த்தைகளும்தான். அவைகளுக்கு அத்தனை சக்தி - உங்கள் மீதும், மற்றவர்கள் மீதும் செல்வாக்கு - இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் பசு என்ற வார்த்தையை உச்சரித்தவுடன் என்ன நிகழ்கிறது? நான்கு கால்களுடனும், இரண்டு கொம்புகளுடனும், ஒரு வாலுடனும் ஒரு உருவம் உங்கள் மனதில் தோன்றுகிறதல்லவா? ஒரு சாதாரண இரண்டெழுத்து வார்த்தை உங்கள் மனதில் மொத்த உருவத்தை யும் கொண்டு வந்து விடுகிறது. வார்த்தைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை. நாம் வார்த்தைகளை மதிக்காமல் தவறாகப் பயன்படுத்துவோமாயின், தொல்லைக்கு உள்ளாக நேரிடும்.

நீங்கள் முழுமையான விசுவாசத்துடன் இருக்கும்பொழுது, உங்களால் கவலைப்பட முடியாது. இதுவே உண்மையான வழிபாடு.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள் ஞானமடைந்த குருவான பீர்பாலும், அவரது மன்னரான அக்பரும் தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். ஒரு சந்தன மர வியாபாரியைப் பார்த்தனர். அக்பர் பீர்பாலிடம் சொன்னார், "எனக்கு ஏனென்று தெரியவில்லை. ஆனால் இந்த மனிதனைத் தூக்கிலிட வேண்டும் போல் தோன்றுகிறது!". ஒரு மாதம் கழித்து, அவர்கள் அதே சந்தன மர வியாபாரியைக் கடந்து சென்றனர். இந்த முறை அக்பர் சொன்னார், "இது வினோதமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த மனிதனுக்கு இப்பொழுது ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும் போலிருக்கிறது!". சற்றுப் பொறுத்து பீர்பால் சொன்னார், "ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சந்தன மர வியாபாரியின் வியாபாரம் மிகவும் நொடித்துப் போயிருந்தது. அவன் உங்களைக் கடந்து செல்லும் பொழுது, நீங்கள் இறந்தால் உங்கள் இறுதிச் சடங்குகளுக்காக உங்கள் மந்திரி பிரதானிகள்ன்னிடம் நிறைய சந்தனக் கட்டைகளை வாங்குவார்கள் என்று நினைத்தான். அவன் அனுப்பிய இந்த எதிர்மறை அதிர்வுகள் உங்களை அவன் மீது வெறுப்புக் கொள்ள வைத்தது. நான் உடனே நமது இராஜாங்கத்திற்கு மேசை நாற்காலிகள் செய்வதற்காக நிறைய சந்தனக் கட்டைகளை அவனிடம் வாங்கினேன். இன்று அவன் உங்கள் மீது மிகவும் நன்றியுணர்வோடு இருப்பதால், இந்த நேர்மறையான அதிர்வுகளால் நீங்கள் தாக்கப்பட்டு அதனால் அவனுக்குத் தானமாக ஏதேனும் தரவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்!

உங்கள் எண்ணங்கள் நிறைய சக்தியைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் ஒரு

| ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பிறகு பிடித்துக் கொண்டு தொங்குவதற்கு என்ன இருக்கிறது. |

கவலையற்ற தெளிவான மனநிலையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

சொல்லுங்கள்...?

ஸ்வாமிஜி, 'சின்ன விஷயத்திற்காக வியர்வை சிந்தாதீர்கள்' என்று சில புத்தகங்கள் சொல்கின்றனவே-அவைகளை எப்படி துச்சமாகக் கருத முடியும், ஸ்வாமிஜி?

நீங்கள் அறிவு பூர்வமாகச் செயல்பட்டால், 'சின்ன விஷயங்களுக்காக உயிரை விடும்' வகையில் விழ மாட்டீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒரு இளைஞன் அவனது நண்பனைக் காணச் சென்றான். அவன் சுவற்றிலிருந்து சுவரொட்டியை உரித்து எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கேட்டான், "நீ சுவற்றுக்கு மீண்டும் பெயிண்ட் அடிக்கப் போகிறாயா? நண்பன் சொன்னான், "நான் வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன்".

பாருங்கள்... நீங்கள் சின்ன விஷயங்களை அலட்சியம் செய்து விட முடியாது. ஆனால் நீங்கள் அதற்குப் போதுமான அளவு மட்டும் கவனம் செலுத்துமளவிற்கு அறிவுக் கூர்மையுடன் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்காக வியர்வை சிந்த நேரிடும். சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள் என்று சொல்பவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்காதீர்கள். சின்ன ஓட்டை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அங்கு அறிவுக் கூர்மையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

| நீங்கள் எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னால், எப்படி ஆனந்தமயமாக இருப்பது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவீர்கள். |

முதலில், சம்பந்தப்பட்ட, சின்ன விஷயங்கள் என்று சொல்லப்படும் விஷயங்களை, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அது இருந்தால், உங்களுக்குள் முரண்படாமல் இருப்பதால், அந்த விஷயங்களைச் செய்வதற்கான சக்தியைத் தானாகவே பெறுவீர்கள். நீங்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், அதன் பின் சென்று, உங்கள் வழியில் அதைச் செய்து முடிக்கப் போதுமான உறுதியும் சக்தியும் உங்களிடம் இருக்காது. அதன் பொருள், உங்கள் அறிவுக் கூர்மை முழுமையாக உங்கள் பின் இல்லை. ஏனெனில், அறிவுக் கூர்மையே சக்தி, சக்தியே அறிவுக் கூர்மை.

நீங்கள் அவற்றிற்காக வியர்வையைச் சிந்தினால், எங்கோ ஏதோ தவறாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மிகவும் தெளிவாக இருங்கள்.... எல்லாத் துயரங்களும் எழுவதற்குக் காரணம் சுய-முரண்பாடுகளே. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் நீங்களே முழுத் தெளிவாக இல்லாததனால் உங்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அந்தத் தெளிவு பிறக்க வேண்டுமானால், நீங்கள் உங்கள் அறிவுக் கூர்மையைப் பேணி வளர்க்க வேண்டும்.

அறிவுக் கூர்மை மேலெழும் பொழுது, சுய-முரண் பாடுகள் மறைந்து நீங்கள் ஒருங்கிணைக்கப்படத் தயாராகி விடுவீர்கள். நீங்கள் ஒருங்கிணையத் தயாராகி விட்டால், உங்கள் அறிவுக் கூர்மை மேலும் வளரும். நீங்கள் இந்த சுழற்சிக்குள் வர வேண்டும். இந்தச் சுழற்சி உங்கள் கவலை களையும் அகற்றி விடும்.

உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் எதிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு ஒரே வழி அறிவு பூர்வமாக இருப்பதே.

நீங்கள் எதைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? எதிர்காலமும் நிகழ்காலமாகவே வரும். அதனால் நிகழ்காலத்தை கவனியுங்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே உள் பேச்சையும் கவலை களையும் விட்டுவிடும் ஆர்வம் இருந்தால், ஒரு சின்ன பயிற்சியை முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எல்லா விஷயங் களையும் நினைத்துப் பாருங்கள். மற்ற விஷயங்களை அண்ட விடாமல் இந்த விஷயங்களை மட்டுமே உங்கள் மனதை விட்டு நீங்காமல் வைத்திருப்பதாக உறுதியான முடிவெடுங்கள். வேறு எதுவானாலும், அதை முடிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொடுத்து விட்டுப் பிறகு அதைப் பற்றி மறந்து விடுங்கள். இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்; ஏராளமான சக்தி சேமிக்கப்படுவதைக் காண்பீர்கள்.

பாருங்கள்... மேலும் மேலும் அதைப் பற்றிப் பேசிக் கொண் டே இருப்பதன் மூலம் உங்கள் கவலைகளுக்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, வீட்டிலிருக்கும் மனைவி தொலைபேசியை எடுத்தவுடன், அவளது தோழிகளிடம் அன்று வேலைக்காரி வரவில்லை என்றுதான் ஆரம்பிப்பாள். அதுதான் அவளது அன்றைய மனச்சோர்வு. நீங்கள் உண்மையிலேயே வேலைக்காரி வரவில்லை என்று மனச்சோர்வடைந்திருந்தால், உங்களுக்கு உண்மையிலேயே அதை விட்டு வெளியே வரும் விருப்பம் இருந்தால், அதை அப்படியே விட்டுவிட்டு, நீங்களே வேலையை செய்து முடித்திருக்க வேண்டும்! தர்க்க ரீதியாக இது மிகவும் சரியாகப்படவில்லையா?

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் தோழியும் உங்கள் மனச்சோர்விற்குத் தீனி போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது நீங்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கவலையின் அடிப்படைக் காரணம் எப்பொழுதும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருத்தலே. அவள் உங்களுக்காக இரக்கப்பட வில்லை என்றாலோ அல்லது 'வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும், நீங்கள்தான் எல்லாவற்றையும் தாண்டி மேலே செல்ல வேண்டும்' என்று சொன்னாலோ, நீங்கள் உடனே இன்னொரு தோழியை அழைத்து அவளிடம் இவள் எப்படி அக்கறையின்றி இருந்தாள் என்று விவரிப்பீர்கள்! எண்ணிப்பாருங்கள்... உண்மையிலேயே உங்களுக்கு வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், தோழியின் வார்த்தை களைப் பாராட்டியிருப்பீர்கள், இல்லையா?

உங்களுக்கு உண்மையிலேயே மனச்சோர்வை விட்டு வெளியே வந்து வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வதில் உங்கள் அறிவைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் நீங்கள் ஏன் வேறு மாதிரி எதிர்ச்செயல் புரிகிறீர்கள்? அதற்குக் காரணம், கவலைகளிலிருந்து வெளியே வரும் வழியைக் கண்டுபிடிப்பதை விட, அதைப் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பது மிகவும் சுகமாக இருக்கிறது.

நான் கொடுத்த அந்தச் சின்னப் பயிற்சியை நீங்கள் செய்ய ஆரம்பித்தால், உங்களுடைய எல்லாக் கவலைகளும் மறைந்து, நீங்கள் முற்றிலும் ஒரு புதிய மனநிலையைப் பெறுவதைக் காண்பீர்கள். உங்களுக்குள் ஒரு புதிய சக்தி அலைமோதுவதைக் காண்பீர்கள்; இப்பொழுது திடீரென்று கிடைக்கும் அந்தச் சக்தி, இதற்கு முன் நீங்கள் கவலைப்படுவதற்காகத் தேக்கி வைத்த சக்திதான்!

நீங்களே உங்களுக்கு நேர்மையான ஒரு சோதனை செய்து, இரகசியமாக உங்கள் கவலைகளைப் பேணிக்காக்கிறீர்களா,

உண்மையில் உங்களுடைய எல்லா உணர்ச்சிகளுமே, விழிப்பற்ற தன்மையின் விளையாட்டைத் தவிர வேறல்ல. நீங்கள் உருமாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரா என்பதைக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் கவலைகளுக்குப் பின்னால் செல்வதை நிறுத்திய வுடன், மற்றவர்கள் எவ்வாறு ஆதரவற்று அந்தச் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடியும். கவலைகளைப் பற்றி மக்களிடம் முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அதை எப்படிப் பெரிதுபடுத்துகிறார்கள் என்பதை உங்களால் காணமுடியும். இந்தக் 'கவலையைப் பற்றிப் பேசுவதையே', 'கவலையைப் பற்றிக் கவலைப்படுதல்' என்று அழைக்கிறேன்! உங்களால் கவனிக்க முடிந்தால் மட்டுமே, இது நிற்கும். நீங்கள் கவனிப்பவர் ஆகும் வரை, உணர்ச்சிகளில் சிக்கிக் கொண்டு, அவைகளுக்கு மிகுந்த சக்தியையும் அதிகாரத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன்... உங்களை உங்கள் கவலைகளிலிருந்து ஓடி விடச் சொல்லவில்லை. அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் பெரிதுபடுத்தாதீர்கள் என்று சொல்கிறேன். உங்கள் சக்தியை அதில் செலவழிக்காதீர்கள். அதற்குப் பதில் செய்ய வேண்டியதை கவனித்தீர்களானால், அவைகள் உங்களைக் கவலைப்படுத்துவதை நிறுத்திவிடும். நேரத்தை வீணாக்காமல் அவைகளை உடனே கவனியுங்கள், அவ்வளவுதான்.

உங்கள் கவலைகளுடன் நீங்கள் சுகமாக இருக்கத் தொடங்கி விட்டீர்களா என்று உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள். கவலைகள் உங்களைக் கட்டுப்படுத்து கின்றனவா அல்லது நீங்கள் கவலைகளைக் கட்டுப்படுத்துகிறீர்களா என்பதை அறிய இதுவே அளவுகோலாகும். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதைப் பற்றி மீண்டும்

| நீங்கள் முழு விழிப்புணர்வோடு வாழும்பொழுது, ஒருபோதும் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவதில்லை. | மீண்டும் பேசுவதில் சுகம் காணுவீர்களானால், கவலைகள் உங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அதை மனதிலேயே வைத்துக்கொண்டிருக்காமல், செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்வீர் களானால், நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!

ஸ்வாமிஜி, நீங்கள் இதற்குமுன் குடிப்பதைப் பற்றிச் சொன்னீர்கள். என் கணவர் எப்பொழுதுமே குடித்துக் கொண்டிருக்கிறார்; கவலைகளை மறப்பதற்காகவே குடிப்பதாகச் சொல்கிறார். நான் என்ன செய்வது?

நான் சொன்னது போல, இது ஒரு பொதுவான பிரச்சினை. எப்படியாயினும், உங்கள் கணவர் இங்கிருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும். குடிப்பழக்கத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால், நீங்கள் எவ்வளவு சுய-முரண்பாட்டுடன் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இதை விளக்க முயற்சி செய்கிறேன்.

நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்காகக் குடிக்கிறீர்கள்; ஆனால் அது துயரமான துயரமாக முடிந்துவிடுகிறது. நீங்கள் சமுதாயத்தோடு இணக்கமுள்ளவர் என்று அழைக்கப்படுவதற்காக, சமுதாயம் உங்களை ஏற்றுக் கொள்வதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் விதண்டாவாதம் செய்பவராகி விடுகிறீர்கள். ஆடம்பரத்திற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் தாங்கமுடியாத துன்பம் உடையவராகி விடுகிறீர்கள். உங்கள் கவலைகளையெல்லாம் மறந்து தூங்கலாம் என்று குடிக்கிறீர்கள், ஆனால் எழுந்திருக்கும் போது முன்னை விடப் பலவீனமாக உணர்கிறீர்கள்! பரவச அனுபவத்திற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் மனச்சோர்விற்கு ஆளாகி விடுகிறீர்கள். தன்னம்பிக் கையைப் பெறுவதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் உங்களையே கண்டு அஞ்சுகிறீர்கள். உரையாடலைத் தொடர்வதற்காகக் குடிக்கிறீர்கள்,

| உங்கள் கவலைகளுடன் நீங்கள் சுகமாக இருக்கத் தொடங்கி விட்டீர்களா, என்று உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள். |

ஆனால் முடிவில் தெளிவற்றுப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினைகள் கரைவதற்காகக் குடிக்கிறீர்கள், ஆனால் முடிவில் அவை பெருகுவதைத்தான் காண்கிறீர்கள்.

இவையெல்லாம் உண்மை என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்! இப்பொழுது நேர்மையுடன் சொல்லுங்கள், குடிப்பது உண்மையிலேயே பிரயோஜனமுள்ள ஒரு செயலா? இவ்வாறுதான் நீங்கள் இந்த விஷயத்தில் மட்டு மின்றி வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் சுய-முரண்பாட்டுடன்¹ இருக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமானால், உங்களின் ஒவ்வொரு அவுன்ஸ் சக்தியையும் அந்த திசையில் செலவழிப் பீர்களானால், நீங்கள் நிலையாக வளருவீர்கள்; மகிழ்ச்சியை உணருவீர்கள். பிறகு நீங்கள் ஒரு போதும் சுயமுரண்பாட்டுடன் இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும், முழுமையான விழிப்புணர்வுடன் குடியுங்கள். அதை விளக்குகிறேன்... நீங்கள் ஒவ்வொரு முறை குடிக்கும் பொழுதும், விழிப் புணர்வுடன், மெதுவாக, உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்து, ஒவ்வொரு துளியையும் ரசித்து, குடியுங்கள்; அதற்கு உங்களுடைய உடலின் எதிர்வினையைக் கவனியுங்கள். அதைக் கூர்மையான விழிப்புணர்வால் நிரப்பப்பட்ட ஒரு செயலாக்கச் செய்யுங்கள். இதனை நீங்கள் ஒவ்வொரு முறை குடிப்பதாகத் தீர்மானித்தவுடன் செய்தீர்களானால், நீங்கள் குடிப்பழக்கத்தை விட வேண்டியதில்லை; அதுவே உங்களை ஒரேயடியாக விட்டுவிடும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

Self - contradictory¹ எதற்கும் அடிமையாக இருப்பது என்பது ஒரு விழிப்பற்ற அல்லது இயந்திரத்தனமான செயல். அடிமைத்தனம் என்பது குடிப்பழக்கத்திற்கோ அல்லது புகையிலைக்கோ மட்டுமல்ல. மதத்திற்கும்கூட அடிமையாக இருக்க முடியும். விழிப்புணர் வற்றும் இயந்திரத்தனமாகவும் வழிபடும் மக்கள், ஒரு குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுபவர்கள், ஒருநாள் வழிபாட்டைத் தவறவிட்டாலும் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு, அது ஒரு அடிமைத்தனம்; ஆதலால் அதைத் தவற விடுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எவ்வாறு போதைக்கு அடிமை யானவர் ஒரு மாலை குடிக்காமல் தவற விட்டாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வில் நடுங்கத் தொடங்குகிறாரோ, அதேபோல இயந்திரகதியிலான மதவாதியும் அவரது ஒரு பழக்கமான வழிபாட்டைத் தவற விடும் பொழுது ஒரு பெரிய வெறுமையை உணர்கிறார்.

விஷயங்களை விழிப்புணர்வுடன் செய்வதற்கும், பயத்தின் காரணமாகவும், இயந்திரத் தனமாகவும் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்தான் விடை இருக்கிறது. விஷயங்களை முதல் வகையில் செய்வது உங்களை ஒருபோதும் எந்தவிதமான கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வராது. அது உங்களை இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தாது. நீங்கள் எஜமானராக இருப்பீர்கள். விஷயங்களை இரண்டாவது வகையில் செய்வது உங்களைக் கட்டுப்படுத்தித் துயரத்தை ஏற்படுத்தும். நீங்கள் அடிமையாக இருப்பீர்கள்.

ஒரு அடிமைத்தளையிலிருந்து விடுபட, அதை விழிப்புணர்வால் நிரப்புங்கள்; அது சரியான வழியில் உருமாற்றம் அடையும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... ஒரு

| உங்கள் எண்ணங்கள் நிறைய சக்தியைக் கொண்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். |

அடிமைத்தனத்தை விட்டுவிட வேண்டிய தேவை இருப்பதாக ஒரு போதும் நினைக்காதீர்கள். நீங்கள் எதிர்க்கும் எதுவும் உங்களை விட்டுப் போக மறுக்கும். நீங்கள் வெறுமனே ஆழ்ந்த விழிப்புணர்வுடன் அதில் உருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டும், அவ்வளவுவே. நீங்கள் உருமாற்றத்தின் மொழியைப் புரிந்து கொள்வீர் களானால், சரியான பாதையில் இருக்கிறீர்கள்; திறந்த தன்மையின் பாதையில் இருக்கிறீர்கள்.

மக்கள் என்னிடம் சொல்கிறார்கள், “ஸ்வாமிஜி, உங்கள் பேச்சைக் கேட்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. இப்பொழுது அதை எங்கள் தினசரி வாழ்வில் உபயோகப்படுத்தி அது வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும்”.

பாருங்கள்... நான் எப்பொழுதும் சாத்தியமான விஷயங்களையே சொல்கிறேன் என்பதில் தெளிவாக இருங்கள். தினசரி வாழ்க்கையில் செய்ய முடியாத விஷயங்களை நான் சொல்வேன் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.

உண்மையில் நான் செய்வதெல்லாம், திரும்பத் திரும்ப அதே வேதாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் - ஆனால் வெவ்வேறு வார்த்தைகளில், தற்காலத்திற்கு ஏற்றவகையில்; அதனால் அது உங்களுக்குக் கேட்பதற்கு இதமாக இருக்கிறது; உங்களுக்கு அது பொருத்தமாக இருப்பதாக நினைப்பதால், உங்களால் அதைப் பின்பற்ற முடிகிறது. அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது... இந்தக் கருத்துக்களை நீங்கள் ஒரு புத்தகத்தில் படித்தால், அது வெறுமனே எழுதுபவரின் தலையிலிருந்து உங்கள் தலைக்குள் சென்று விடும். எந்தவிதமான அனுபவத்திற்கும் சாத்தியம் இல்லை. ஆனால் நீங்கள் இந்த வார்த்தைகளை ஒரு குருவிடம் - தனது

எதற்கும் அடிமையாக இருப்பதென்பது ஒரு விழிப்பற்ற அல்லது இயந்திரத்தனமான செயல்.

ஆத்மாவின் அனுபவத்திலிருந்து சொல்லும் ஒருவரிடம் இருந்து கேட்கும்பொழுது, நீங்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும், அது உங்களுக்குள் ஆழமாக நுழைந்து செல்கிறது.

தெளிவாக இருங்கள்... நான் உங்களுடன் என் அறிவைப் பகிர்ந்து கொள்ளவில்லை. என் அனுபவத்தை, என் வாழ்க்கை யைப் பகிர்ந்து கொள்கிறேன். என் இருப்புத் தன்மையிலிருந்து பேசும்பொழுது அது உங்கள் இருப்புத் தன்மையைத் தொட வேண்டும். அது உங்கள் வாழ்க்கையில் உருமாற்றத்தை ஏற்படுத்தும். வேறு வழி இல்லை.

"எனது அன்பிற்குரிய அமெரிக்க சகோதர சகோதரிகளே..." என்று விவேகானந்தர் சிகாகோவில் பேசியபொழுது, அரங்கத்தில் கரகோஷம் விண்ணைப் பிளந்தது. ஒரு பெண்மணி எழுதினார், "வெறும் கரவொலியை மட்டும் அல்ல, அவர் நாடு முழுவதையும் வென்றார். ஒரு அன்பின் ஓட்டம் எங்கள் அனைவரையும் கடந்து சென்றதாக, எங்கள் இருப்புத் தன்மையைக் கடந்து சென்றதாக உணர்ந்தோம்...". பின்னர் அந்தப் பெண்மணி, விவேகானந்தரிடம் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று கேட்ட பொழுது, அவர்ாதாரணமாகச் சொன்னார், "ஏனெனில் அது எனக்குள் இருந்து வந்தது".

விவேகானந்தர் அவரது இருப்புத் தன்மையிலிருந்து பேசினார். வார்த்தைகள் மூளையிலிருந்து வெளிவரும் பொழுது, அது மற்றவரின் மூளையைத் தொடுகிறது; இதற்குத் "தொடர்பு கொள்ளுதல்¹" என்று பெயர். வார்த்தைகள் ஒருவரின் இதயத்திலிருந்து வரும் பொழுது அது மற்றவரின் இதயத்தைத் தொடுகிறது. இதற்கு "சங்கமித்தல்²" என்று பெயர். தொடர்பு கொள்ளுதல் போதுமானதல்ல; நாம் எப்படி சங்கமிப்பது

Communication¹Communion²

என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இப்பொழுது சொல்கிறேன்... என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பேசுகிறேன். அதனால் நீங்கள் முழு மனதுடன் கேட்கிறீர்கள்.

பேசுபவர் முழுமையாகப் பேசும்பொழுது, கேட்பவரும் முழுமையாகத்தான் கேட்க முடியும். அவருடைய வாழ்க்கையில் உருமாற்றம் நிகழும். உங்களுடைய வாழ்க்கை என் வார்த்தைகளால் தொடப்படவில்லையானால், எனக்குப் பேசுவதற்கு உரிமையில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். என் அனுபவத்தின் உண்மைத் தன்மையை சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு. என்னுடைய வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் உருமாற்றம் ஏற்படுத்தவில்லை என்று எண்ணுவீர் களானால், அதற்காக நீங்கள் குற்ற உணர்வடைய வேண்டிய தேவையில்லை. அதனை வெளியே சொல்லுங்கள். ஆனால் நான் சொல்கிறேன். நீங்கள் என்னால் தொடப்படாமல் போவதற்கு வழியே கிடையாது!

நீங்கள் இதயத்தின் வழியாகக் கேட்பீர்களானால், சமயம் வரும்பொழுது, என் போதனைகள் உங்கள் வாழ்க்கையில் தானாகவே வேலை செய்வதைக் காண்பீர்கள். தானே உறுதி யில்லாத ஒரு ஆசிரியரே தன் மாணவர்களை திரும்பிச் சென்று அவரது வார்த்தைகளைப் பயிற்சி செய்யச் சொல்லி வற்புறுத்த வேண்டியதிருக்கிறது.

ஒரு உண்மையான குரு பேசும்பொழுது, வெறுமனே கேட்பதே போதும். முழுமையாகக் கேளுங்கள்; உருமாற்றம் தானாகவே நிகழும்.

சாந்தோக்ய உபநிஷத் அழகாக விவரிக்கிறது...

| வார்த்தைகள் மூளையில் இருந்து வரும்பொழுது அது மற்றவரின் மூளையைத் தொடுகிறது. இதற்குத் தொடர்பு கொள்ளுதல் என்று பெயர். |

குரு சீடனிடம் ஒன்பது முறை திரும்பத் திரும்பச் சொல்கிறார், தத்த்வம் அஸி - நீயே அதுவாக இருக்கிறாய். வெறுமனே கேட்பதன் மூலம், குரு சொல்வதை இருப்புத் தன்மையிலிருந்து வெறுமனே கேட்பதன் மூலம், சீடன் உண்மையிலேயே ஆன்மீக அனுபவத்தை அடைகிறான்! குரு, சீடன் இருவருமே முழுமையுடன் செயல்படும்பொழுது இது சாத்தியமாகிறது.

நீங்கள் ஒரு குருவைச் சுற்றியிருக்கும் பொழுது, வார்த்தைகளுக்கு முழுமையாக முக்கியத்துவம் கிடையாது. ஒரு குருவைச் சுற்றியிருக்கும் பொழுது, வெறுமனே அமைதியாக அவரை கிரஹித்துக் கொள்ளுதலே உங்களிடம் ஒரு உண்மையான உருமாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் என்ன செய்வது? நீங்கள் உங்கள் உள்பேச்சில் நன்றாகச் சிக்கிக் கொண்டிருப்பதால், எனக்கு உங்களை ஊடுருவிச் செல்வது சாத்தியமற்றுப் போய் விடுகிறது. அதனால் நான் பேசுகிறேன். நான் வார்த்தைகளை உபயோகப்படுத்தி உங்களை அமைதியில் ஆழ்த்துகிறேன்.

நான் எதற்காக உங்களிடம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்? ஏனெனில், நான் பேசவில்லையெனில், நீங்கள் உங்களுக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்கள் - இறந்த காலத்தைக் கூறுபோட்டு ஆராய்ந்து கொண்டும், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டும், முடிவெடுத்துக் கொண்டும், எடை போட்டுக் கொண்டும் இன்னும் பலவும் செய்து கொண்டிருப்பீர்கள். நான் பேசும் பொழுது, நீங்கள் தவற விட்டுவிடும் பயத்தில் என் வார்த்தைகளில் இலயித் திருக்கும் நேரத்தை நான் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உங்களுக்குள் நுழைந்து விடுவேன்!

| வார்த்தைகள் ஒருவரது இதயத்தில் இருந்து வரும்பொழுது, அது மற்றவரின் இதயத்தை தொடுகிறது. இதற்கு சங்கமித்தல் என்று பெயர். | |---|

நான் பேசும் பொழுது, உண்மையில் நான் உள்ளே அமைதியாகத்தான் இருக்கிறேன். பாருங்கள்... ஒரு குரு பேசும் பொழுது உண்மையிலேயே அவருக்குள் அமைதிதான் நிலவுகிறது. அதனால்தான் அவர் குருவாக இருக்கிறார்! ஆனால் உங்கள் நிலையிலோ, நீங்கள் மௌனமாக இருக்கும் பொழுதும் உள்ளுக்குள் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். உள்பேச்சு இருந்து கொண்டிருக்கும். அதுதான் வித்தியாசம். உங்கள் மௌனம் என்பது வழக்கமாக உங்களுக்குள் நிகழும் கேட்க முடியாத வெறும் பேச்சுதான். உங்களுக்குள் நீங்கள் ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளிற்கு எந்தவித சம்பந்தமுமின்றி ஒரு குரங்குபோல தாவிக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரி உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நீங்கள் வெளியே அமைதியாக இருப்பதுபோல் காட்சியளிக்கிறீர்கள், அவ்வளவே.

அதனால் வெறுமனே எவ்வாறு கேட்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தலையால் கேட்காதீர்கள். உங்கள் இருப்புத்தன்மையை எனக்குத் திறவுங்கள். ஆழ்ந்த விசுவாசத்துடன், முழுமையான சரணாகதியுடன் கேளுங்கள். என் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டு, எடுத்துச் செல்ல முயற்சி செய்யாதீர்கள்; என்னை உங்கள் இருப்புத் தன்மையில் எடுத்துச் செல்லுங்கள். அதுவே மிகவும் போதுமானது. உங்களுக்குள் என் இருப்பு இரச வாதத்தை நிகழ்த்தும்.

சரி... நாம் இப்பொழுது உங்கள் மணி பூரக சக்கரத்தை முழுமையாக சுத்தம் செய்துவிடும் மணி பூரக சுத்திகிரியா என்னும் தியான முறைக்குள் நுழைவோம்...

ஆனந்தமாக இருங்கள்!

மணிபூரக சுத்‌திகி்ரியா

(நீடிக்கும் நேரம் : 31 நிமிடங்கள்)

இந்த தியான முறையானது உங்களிடம் ஆழமாகப் பதிந்துள்ள எதிர்மறை மன அமைப்புகளையும், கவலைக் ளையும் காலி செய்து உங்களை வெறுமையாக்கி விடும். இது உங்களுடைய எல்லா அடக்கப்பட்ட கோப உணர்ச்சிகளையும் கவலையையும் அகற்றி விடும். இந்தத் தியான முறையைச் செய்தால் உங்களுடைய கவலைகள் மற்றும் சிக்கலான மன அமைப்புகளின் இருப்பிடமான மணிபூரகப் பிரதேசமான, தொப்புள் பகுதியில் மிகவும் இலேசாக உணர்வீர்கள். இந்தத் தியானத்தைச் செய்த பிறகு புதிய கவலைகளைச் சேகரித்து மீண்டும் மணிபூரகத்தின் மீது சுமையேற்றாமல் இருப்பது உங்களிடம்தான் இருக்கிறது.

இந்தத் தியானத்தை வெறும் வயிற்றிலோ அல்லது உணவிற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தோ செய்யலாம்; இல்லாவிடில் வாந்தி எடுக்க நேரிடலாம்.

கண்களை மூடி நில்லுங்கள். உங்கள் மணிபூரகத் திற்குள் ஆழ்ந்து சென்று, அந்தப் பகுதியில் எவ்வளவு கனமாக இருக்கிறது என்பதை உணருங்கள். அது உங்கள் கவலைகளால் நிரம்பியுள்ளது. ஒரு நிமிடம் மணிபூரக சக்கரத்தில் உங்கள் கவனத்தைக் குவியுங்கள். பல்வேறு காரணங்களால் உங்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் எல்லாக் கோபங்களையும் கவலைகளையும் வெறுமனே உணர முயற்சி செய்யுங்கள்.

இப்பொழுது உங்கள் தொப்புள் பகுதியில் இருந்து எவ்வளவு உரக்க முடியுமோ அவ்வளவு உரக்க உளற ஆரம்பியுங்கள் (Gibberish). கத்தும் பொழுது வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது, பழக்கமான மற்றும் சமீபத்திய உணர்ச்சிகள் மட்டுமே வெளிவரும். மேலும் வார்த்தைகள், உண்மையில் அவற்றின் பின்னால் உள்ள உணர்ச்சிகளில் செயலாற்றுவதற்கு பதில், மேலும் வார்த்தைகளுக்கே வழி வகுக்கும். அது வெறும் பொருளற்ற உளறலாக இருக்கட்டும்; அது மட்டுமே உங்களுக்குள் உள்ள விழிப்புணர்வற்ற பகுதியை, ஆழமாக மறைந்துள்ள உணர்ச்சிகளை திறந்து வெளியே கொண்டு வரும். கைகளை அசையுங்கள்; கத்துங்கள்; கதறுங்கள்; கண்ணீர் வந்தால் வரட்டும்; விட்டு விடுங்கள்.

உங்களுடைய எல்லா எதிர்மறை உணர்வுகளையும் கொட்டி விட இதை உங்கள் முழு பலத்துடன் செய்யுங்கள். உங்கள் உணர்ச்சி களில் முழுமையாக மூழ்கி விடுங்கள். மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.

இருபத்தியொரு நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்துங் கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு கண்களை மூடியவாறே அமைதியாக அமர்ந்திருங்கள். உங்கள் எண்ணங்களுக்கு ஒரு வெறும் சாட்சியாக இருங்கள். உங்கள் மணிபூரகப் பகுதி இலேசாகியிருப்பதை உணருங்கள். அது மிகவும் இலேசாகவும் ஆனந்தமையமாகவும் இருப்பதைக் காணலாம். உங்கள் முழு இருப்புத் தன்மையுமே மிகவும் இலேசாகவும் சுதந்திரமாகவும் இருக்கும்.

(பங்கேற்பாளர்கள், மென்மையான இசையுடன் மணிபூரக சுத்திகரியாவைப் பயிற்சி செய்கின்றனர்)

ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

மெதுவாக, மிக மெதுவாக, உங்கள் கண்களைத் திறவுங்கள். அடுத்த அமர்வில் சந்திப்போம். நன்றி.

ஆனந்தமாக இருங்கள்!

Blank square frame