KAILASA Library/நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM/அத்தியாயம் - 9: அதிருப்தியிலிருந்து நன்றியுணர்விற்குSign in
நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள் / THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM

அத்தியாயம் - 9: அதிருப்தியிலிருந்து நன்றியுணர்விற்கு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • ஸஹஸ்ரார சக்கரம் -
  • ஸஹஸ்ரார தியானம் -

ஸஹஸ்ரார சக்கரம் தலையின் உச்சியில் இருக்கிறது.

ஸமஸ்கிருதத்தில், ஸஹஸ்ராரா என்றால் ‘ஆயிரம் இதழ்களையுடைய' என்று பொருள் - இந்தச் சக்கரம் தூண்டப்படும் பொழுது, சிரசின் உச்சியில் ஆயிரம் இதழ்களையுடைய தாமரை மலர்கிறது; அப்பொழுது நிகழும் ஆன்மீக அனுபவத்திலிருந்து இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்தச் சக்கரம் அதிருப்தியாலும், வாழ்க்கையை சாதாரணமாக (அலட்சியமாக) எடுத்துக் கொள்வதாலும் மூடப்படுகிறது;

இதைத்திருப்தியாலும் பொங்கும் நன்றியுணர்வினாலும் மலரச் செய்ய முடியும்!

தியானமுறை: ஸஹஸ்ரார தியானம் - ஒரு சூஃபி தியானமுறையிலிருந்து எடுக்கப்பட்டது.

ஒரு மனிதன் தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறான், "கடவுளே, என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை. குறைந்த பட்சம் ஒரு கோடி அளவிற்காவது இருக்கும் ஒரு பெரிய பரிசு விழுவதற்குத் தயவு செய்து உதவு! அவ்வாறு விழுந்தால், எனக்கு விழுவதில் 20 சதவிகிதத்தை உன் கோயிலில்

| From Discontent to Gratitude | | :---: |

காணிக்கையாகப் போட்டு விடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன். உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையென்றால், தயவு செய்து நீயே 20 லட்சத்தை கழித்துக் கொண்டு மீதி 80 லட்சத்தை மட்டும் எனக்குக் கொடு".

(கூட்டத்திலிருந்து பெருஞ் சிரிப்பு!)

நமது எல்லா விவகாரங்களுமே இவ்வாறுதான் வெறும் வியாபாரமாகவே இருக்கிறது! இவ்வளவு வெளிப்படையாக வேண்டுமானால், நமது வாழ்வில், இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிரார்த்தனை பற்றிய உங்கள் மனோபாவத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தீர்களானால், எப்பொழுதும் எல்லாருடனும்- கடவுளுடன் கூட-வியாபார பரிவர்த்தனைதான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு நாள் ஒரு ஏழை, சக்ரவர்த்தி அக்பரின் அரண் மனைக்குச் சென்றான். அவன் அக்பரிடம் தனது மகனின் படிப்புச் செலவுக்காகக் கொஞ்சம் பணம் வேண்டுமென்று கேட்க விரும்பினான். அக்பரிடம் உதவி கேட்டு வந்தவர் எவரும் திருப்பியனுப்பப்பட்டதில்லை என்பது தெரிந்ததுதான். அவன் அரண்மனையை அடைந்த பொழுது, அக்பர் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தார். அதனால் அவனும் மற்றவர்களுடன் பிரார்த்தனை அறைக்கு வெளியே காத்திருந் தான். அக்பர் வெளியே வந்த பொழுது, ஒவ்வொருவரும் அவரவரது விண்ணப்பத்தை வைத்து அவரிடம் உதவி பெற்றனர். அந்த ஏழை மட்டும் எதுவும் கேட்காமல் திரும்பிச் சென்றான். ஆனால் அக்பர் அவனைக் கண்டுபிடித்துத் திருப்பி அழைத்தார். அவர் கேட்டார், "ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாய்?". அவன் பதிலளித்தான், "மாட்சிமை பொருந்தியவரே, நான் தங்களிடம் தருமம் பெறலாம் என்று வந்தேன், ஆனால் தாங்களே பிச்சையெடுப்பதைக் கண்டேன்!".

| நாம் வெறுமனே மீண்டும் மீண்டும் | | :--- | | கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது பிரார்த்தனை | | என்பது வெறும் பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறல்ல. |

நமது பிரார்த்தனைகளைக் கவனித்தாலே, நாம் அனைவருமே உண்மையில் பிச்சைக்காரர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நாம் வெறுமனே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். நமது பிரார்த்தனை என்பது பிச்சைப் பாத்திரத்தைத் தவிர வேறல்ல. நாம் லோகாயதமான விஷயங்களுக்காக, மென்மையான உறவு முறைகளுக்காக, அதிகாரத்திற்காக, நமது இலக்கை அடைவதற்காக, உடல் அழகிற்காக மற்றும் இன்னும் பலவற்றிற்காகவும் கடவுளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் எப்பொழுதும் தொடர்ந்து எதற்காகவாவது நமது மனதிற்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். உண்மையில் நாம் கேட்பதுடன் மிகவும் இசைந்து போய் விட்டதால், கேட்கிறோம் என்பதைக் கூட நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு, அது நமக்குள் ஒரு விழிப்பற்ற செயல்பாடாகவே ஆகிவிட்டது. நாம் அதைக் கேட்பதாகப் பார்ப்பதில்லையாதலால், நாம் ஒன்றும் கேட்பதில்லை என்று வாதம் பண்ணலாம். அதை வாழ்க்கையில் ஒரு இயல்பான வழியாகவே பார்க்கிறோம்! நாம் அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதால், நம்மை அதிலிருந்து விலக்கிக் கொண்டு ஒரு புதிய மனதுடன் பார்க்க முடியவில்லை.

புரிந்து கொள்ளுங்கள்... உலகில் இரண்டே இரண்டு வகையான மதங்கள் மட்டுமே உண்டு; பிரார்த்தனையை1 அடிப்படையாகக் கொண்ட மதம், மற்றும் நன்றியுணர்வை2 அடிப்படையாகக் கொண்ட மதம்.

பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதம் என்பது, கடவுளிடம் ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பது. அதைக்கூட்டுப் பிரார்த்தனை வாயிலாகச் செய்யலாம்; ஏனெனில் அது நமது கேட்கும் மனோபாவத்துடன் மிகவும் இசைந்திருக்கிறது. அது

Prayer

Gratitude

சிறுவயது முதலே நமக்குள் பதிந்து விட்ட நெறிப்படுத்தல்களுடன் இசைந்திருக்கிறது. நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுதிலிருந்தே பிரார்த்தனை என்றால் கேட்பது என்று கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. அதுவே கடவுளை அல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை அணுகும் ஒரு மிகவும் இயல்பான வழி போல் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், நன்றியுணர்வு மதமானது, கடவுளை அல்லது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய, உள்ளிருந்து பொங்கும் தாங்க முடியாத நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்டது. அது நமக்குக் குழந்தைப் பருவத்திலிருந்து சொல்லிக் கொடுக்கப்பட்டதற்கு முற்றிலும் மாறானது. நமக்கு எப்பொழுதும், பெற்றுக் கொண்டதற்கு மட்டுமே நன்றி தெரிவிக்குமாறு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். நமக்கு, நன்றியுணர்வு என்பது ஒரு சமூகப் பண்பாடு என்பதற்கு மேலாகக் கற்றுத் தரப்படவில்லை! பிறகு, எப்படி நாம் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்க முடியும்? அது மிகவும் அதிகம்! அதனால்தான் இந்த நன்றியுணர்வு மதங்கள், குறிப்பிட்ட மிகச் சிலராலேயே பின்பற்றப்படுகின்றன.

மிகச் சில, தியான அடிப்படையிலான மதங்களான, புத்தமதம் மற்றும் சூஃபி போன்ற மதங்கள் மட்டுமே நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் மிகச் சிலராகவே இருப்பினும், அவர்களது தரம் மிகவும் உயர்வாக இருக்கிறது.

பாருங்கள், பிரார்த்தனையில் ஒன்றும் தவறு கிடையாது; ஆனால் பிரார்த்தனையில் கேட்பதிலேயே சிக்கிக் கொண்டு விடுவதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. பிரார்த்தனை என்பது தியானத்திற்குள் - நன்றியுணர்வே பிரார்த்தனையாகவும், உங்கள்

உலகில் இரண்டே இரண்டு வகையான மதங்கள்தான் உண்டு; பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதம் மற்றும் நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்ட மதம். இருப்புத் தன்மையே ஆனந்தமாகவும் ஆகி விடும் தியானத்திற்குள்

  • நுழையும் குதிபலகையாக உபயோகப்படுத்த வேண்டும்!

"உங்கள் நன்றியுணர்வைக் காட்டுவது ஒரு சமூகப் பழக்கமாக இருக்கலாம்; அது எவ்வாறு தியானமாக முடியும்?", என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், உண்மையிலேயே நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் பொழுது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்து கொள்வீர்கள். நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.

நான் சொல்கிறேன்... உங்களுக்குத் தேவையானவற்றை அளிப்பதற்கும், கவனித்துக் கொள்வதற்கும் நேரடிப் பொறுப் பிலுள்ளவர்களை மட்டும்தான் நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்த எல்லாச் சமயங்களிலும், உங்களுக்கு உதவி புரியும், பாது காப்பளிக்கும், கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றியோ, பிரபஞ்ச சக்தியைப் பற்றியோ நீங்கள் அறியக் கூட மாட்டீர்கள்.

ஆனால், நீங்கள் எப்பொழுதுமே, உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருப்பினும், அது உங்கள் தகுதியாலோ அல்லது எதேச்சையாக நிகழ்ந்ததென்றேதான் எண்ணுகிறீர்கள். உங்களை கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை, நீங்கள் காணவும் உணரவும் ஆரம்பித்த பிறகே, பிரபஞ்ச இருப்புத்தன்மை நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அப்பொழுதுதான் நீங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட மதம் என்பது, கடவுளிடம் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பது.

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற உண்மை, பிரபஞ்ச இருப்புத்தன்மை நீங்கள் இங்கிருப்பதை விரும்புகிறது என்பதையும், அது உங்களை கவனித்துக் கொள்கிறது என்பதையும் காண்பிக்கப் போதுமானதாகும். இதை நீங்கள் புரிந்து கொள்ளாத பொழுதுதான், மந்தமாகவும், மனச் சோர்வுடனும், எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், ஏதோ நீங்கள் மட்டும்தான் இந்த உலகில் ஏதுமற்றவர் போலவும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

இங்கு சொல்லப்பட்டவற்றை நீங்கள், உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து கவனமாகக் கேட்டீர்களானால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அற்புதமான கொடுக்கும் வழிகளுக்கு உங்களை இசைவாக வைத்துக் கொள்ளவும், அதனை நுட்பமாக உணரும் திறனையும் பெறுவீர்கள்!

நம்மில் பலரும் கடவுளிடம் ஒரு பயத்துடனேயே பிரார்த்தனை செய்கிறோம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளிடம், அவர்கள் சில விஷயங்களைச் செய்யவில்லையென்றால் கடவுள் அவர்கள் மீது கோபமடைவார் என்று சொல்வதைக் கண்டிருக்கலாம். இதுபோன்ற சொற்கள், குழந்தையின் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய ஒரு தவறான கருத்து வேரூன்றக் காரணமாகி விடுகின்றன. இவையெல்லாம்தான் குழந்தைகளுக்கு, அவர்களின் இளம் பிராயத்திலேயே, நாம் கொடுக்கும் நெறிப்படுத்தல்கள். இதனால் அவர்கள் வளரும் பொழுது கடுமையான குழப்பத்தை எதிர்கொள்கிறார்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையை அன்புடனும் நன்றியுணர்வுடனும் அரவணைத்துக் கொள்வதற்குப் பதிலாக, மரியாதையுடனும் பயத்துடனும் அதிலிருந்து விலகி நிற்கிறார்கள்.

பயத்துடன் பின்பற்றப்படும் மதம் உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது; அது உங்களுள் உருமாற்றம் நிகழ்வதற்கான வழியமைக்காது. உங்களுக்குக் கேட்பதன் மீதுள்ள

| நன்றியுணர்வு மதமானது, கடவுளை அல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய, உள்ளிருந்து பொங்கும் தாங்க முடியாத நன்றியுணர்வை அடிப்படையாகக் கொண்டது. |

விசுவாசத்தினால் நீங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறக் கூடும்; ஆனால், இருப்புத் தன்மை நிலையிலோ நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நகர மாட்டீர்கள். வாழ்க்கையின் நோக்கம் அல்லது உண்மையான நிறைவு ஒருபோதும் பொருளாதார ரீதியாக நிகழ முடியாது; அது இருப்புத் தன்மை நிலையில்தான் நிகழ முடியும். வெற்றியினால் வரும் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்களால் நான் சொல்வதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். வெற்றியினால் வரும் மனச்சோர்வைப் பற்றி, இதற்கு முந்தைய அமர்வுகளில், நாம் நிறையப் பேசி யிருக்கிறோம்.

தெய்வீகம் அல்லது பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய, ஆழமான அன்பினாலும் நன்றியுணர்வினாலும், மதமானது பின்பற்றப்பட வேண்டும். சமூகம் பயத்தின் பெயரால் கடவுளை வழிபடக் கற்றுக் கொடுப்பினும், நான் சொல்கிறேன், ஒரு போதும் அதைச் செய்யாதீர்கள். எப்பொழுதும் தெய்வீகத்தை நோக்கிய அன்புடனும் நன்றியுணர்வுடனுமே பிரார்த்தனை செய்யுங்கள்.

ஒரு சின்ன கதை....

ஜுன்னாயத் என்னும் ஒரு சூஃபி குரு, தினமும் ஐந்து முறை கடவுளுக்குத் தன் நன்றியுணர்வைச் செலுத்துவார். ஒரு சமயம், அவரும் அவரது சீடர்களும், சூஃபி மதம் ஒரு மதமாக ஏற்றுக் கொள்ளப்படாத சில கிராமங்கள் வழியாக அலைந்து திரிந்து கொண்டிருந்தனர். முதல் கிராமத்தில், மக்கள் அவர்களைப் பிச்சை எடுப்பதற்காகப் பழித்து, மிகவும் சொற்பமான அளவு உணவையே அவர்களை நோக்கி வீசி எறிந்தனர். இரண்டாவது நாள், மக்கள் அவர்களுக்கு எந்தவிதமான பிச்சையும் இட மறுத்தனர். மூன்றாவது நாள், அவர்கள் கடந்து சென்ற கிராம மக்கள் மிகவும் விரோதத்துடன்

நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.

அவர்களைக் கம்புகளையும் கற்களையும் கொண்டு விரட்டியடித்தனர். அன்று இரவும் வழக்கம் போலவே, ஜுன்னாயத் முழந்தாளிட்டு, கடவுளுக்குத் தன் நன்றியுணர்வைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இதை அவர்களால் தாங்க முடியவில்லை. ஜுன்னாயத் ஏன் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் மிகவும் ஆவேசத்தில் இருந்தனர். "குருவே! மூன்று நாட்களாக நாம் உணவில்லாமல் இருந்து கொண்டிருக்கிறோம். இன்று நம்மை அந்த கிராமத்தை விட்டு நாயைப் போலத் துரத்தியடித்தனர்! அதற்காகத்தான் நீங்கள் உங்கள் நன்றியுணர்வைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறீர்களா?" - என்று அவர்கள் கூக்குரலிட்டனர். ஜுன்னாயத் அவர்களைப் பார்த்துச் செ ான்னார், "நீங்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் முப்பது வருடங் களாக உங்களுக்கு உணவு கொடுத்ததற்காகக் கடவுளுக்கு என்றைக்காவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா? இன்னொரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்; என்னுடைய நன்றியுணர்வானது எனக்கு எதுவும் கிடைத்ததற்காகவோ அல்லது கிடைக்காமல் போனதற்காகவோ அல்ல. அது வெறுமனே என்னுடைய இருப்புத் தன்மையின் ஆழமான மகிழ்ச்சியின் மற்றும் அன்பின் வெளிப்பாடு; அது தேர்ந் தெடுத்தலற்ற பிரார்த்தனையின் வெளிப்பாடு, அவ்வளவே".

உங்களால் உங்களுக்குள் தாங்க முடியாத நன்றியுணர் வுடன் வாழ முடிந்தால், வேறெதுவும் தேவைப்படாத ஒரு வெற்றிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் தியானத்திற்குள் விழுந்து விட்டீர்கள் என்று பொருள். பிறகு நீங்கள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் சரியான பாதையில்

நீங்கள் எப்பொழுதுமே, உங்களுக்கு எது கொடுக்கப்பட்டிருப்பினும், அது உங்கள் தகுதியாலோ அல்லது ஏதேச்சையாக நிகழ்ந்ததென்றோதான் எண்ணுகிறீர்கள். இருக்கிறீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு, உங்கள் மனம் இனியும் ஒரு தடையாக இருக்காது. உங்கள் மனம் மறைந்து விட்டது. இனியும் உங்கள் மனம் உள்ளே வர முடியாது; ஏனெனில் நீங்கள் இதயத்தில் இருந்து தளும்பிக் கொண்டிருக் கிறீர்கள். உங்கள் மனதிற்கு இடமேயில்லை. உங்கள் மனதிற்கு இடமில்லாதபோது, அதிருப்தி எங்கேயிருந்து வரும்? அதிருப்தி இதயத்தில் இருந்து வர முடியாது. அது முழுவதும் மனதிலிருந்தே உற்பத்தியாகும் ஒரு பொருள்.

எப்பொழுதும் உங்களுக்கும், பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் இடையே நிற்பது உங்கள் மனம்தான். அது உங்களை, பிரபஞ்ச இருப்புத் தன்மையைக் கேட்பதிலிருந்தும், பார்ப்பதிலிருந்தும், உணர்வதிலிருந்தும், அதனுடன் உணர்ச்சி பூர்வமாய் இருப்பதிலிருந்தும் தடுக்கிறது. ஒருமுறை உங்கள் மனதைக் கடந்து சென்று பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அழகைக் கண்டு விட்டீர்களானால், நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும்; ஆனந்தம் உங்கள் இருப்புத் தன்மை யாகி விடும்! பிறகு நீங்கள் விடுதலையையும், நிரந்தரமான மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள்!

உங்கள் மனதின் சலிப்படைய வைக்கும் தர்க்கத்தை விட்டு விட்டீர்களானால், தேர்ந்தெடுத்தல் இல்லாமலும், முயற்சியின்றி யும், மகிழ்ச்சியாகவும், நீரோட்டத்தின் பிரவாகத்துடன், நீங்கள் ஒரு நதியைப் போலப் பாய்ந்து செல்வீர்கள். பிறகு நீங்கள் உங்கள் பாத்திரத்தைச் சரியாக நடித்து, ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். பிறகுதான் நீங்கள், நீங்களும் ஒரு அற்புதமான நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பதையும், நீங்கள் எந்த அளவிற்கு இதனை நடத்துபவர்க்கு உணர்வு பூர்வமாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் பாத்திரத்தை நன்றாகவும்,

உங்களை கவனித்துக் கொள்ளும் பிரபஞ்ச இருப்புத்தன்மையின் கண்ணுக்குத் தெரியாத கைகளை நீங்கள் உணர ஆரம்பிக்க வேண்டும்.

மகிழ்ச்சியுடன் அனுபவித்தும் செய்ய முடியும் என்பதையும் புரிந்து கொள்வீர்கள்!

நீங்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் பொழுது, முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது; மேலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நீரோட்டத்துடன் செல்லும் பொழுது, எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ள வேண்டிய தில்லை; களைப்படைய மாட்டீர்கள்; ஏமாற்றப்பட்டு விட்டதாக எண்ண மாட்டீர்கள்; இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருப்பீர்கள்! பிறகு உங்களுக்கு எல்லாமே அழகாகத்தான் தோன்றும்.

ஒரு சின்ன கதை....

நித்ய காந்தி ஒரு நீண்ட இரயில் பயணத்தில் இருந்தாள். அவள், பெரும்பாலான நேரத்தை இயற்கைக் காட்சிகளை இரசிப்பதில் செலவிட்டுக் கொண்டிருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணியிடம் காந்தி, பயணத்தில் சிறந்த பகுதி, அற்புதமான இயற்கைக் காட்சிகளை இரசிப்பதுதான் என்று சொன்னாள். அந்தப் பெண்மணி, தலையாட்டிவிட்டு, அங்கு சிறிது நேரம் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வந்து, சிறிது நேரம் அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்து விட்டு, எழுந்து சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து, மீண்டும் திரும்பி வந்து, காந்தியின் பின்னால் அமர்ந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, காந்தியின் முதுகில் தட்டி, "என்னை மன்னிக்கவும், ஆனால் நீங்கள் நான் பார்க்காதது எதையாவது பார்க்கிறீர்களா?" என்று கேட்டாள்.

(சிரிப்பு)

நீங்கள் நன்றியுணர்வுடன் இருக்க ஆரம்பிக்கும்பொழுது, உங்கள் வாழ்க்கையின் மதிப்பைப் புரிந்து கொள்வீர்கள்.

அதனுடன் எவ்வாறு ஒத்திசைந்து செல்வது என்பது தெரியாத போது, நாம் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மை யின் அழகைத் தவறவிட்டு விடுகிறோம்! நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம். கொண்டாடுவதற்குக் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். எதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம். இதனால் நமது பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை முழுவதுமாக இழந்து விட்டோம்.

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் நோக்கிய நன்றியுணர்வுடன் இருப்பதற்கு பதில், எப்பொழுதும் கேட்டுக் கொண்டும், கேள்வி எழுப்பிக் கொண்டும் இருக்கிறோம். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை, நாம் திரும்பவும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம். நன்றியுணர்வினால் இந்த இழந்த தொடர்பை மீண்டும் கொண்டு வர முடியும். அதனால் மீண்டும் உங்கள் வேர்களைக் கண்டுபிடிக்க உதவ முடியும். அதனால் நீங்கள் இயற்கையுடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமிக்க உதவ முடியும்.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள் ஒருவன் கோயிலில் மிகவும் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்... “ஒ கடவுளே! எனக்கு தயவு செய்து ஒரு 15 நாட்களுக்கு 1000 ரூபாய் கொடு. நான் அது கிடைக்குமா என்று மிகவும் அவநம்பிக்கையில் இருக்கிறேன். எனக்கு முதல் சம்பளக் காசோலை வந்ததும், இன்றிலிருந்து சரியாகப் 16-ம் நாள் அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன்”. அந்தக் கோயில் புரோகிதர் அவனது பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவனது நிலையைக் கண்டு இரங்கினார். அவரிடம் 500 ரூபாய்

பயத்துடன் பின்பற்றப்படும் மதம் உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது. அது உங்களுள் உருமாற்றம் நிகழ வழியமைக்காது.

இருந்தது. அதை ஒரு உறையில் போட்டு, கடவுள் அந்தப் பணத்தை அவனிடம் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லிக் கொடுத்தார். அவன் மிகுந்த சந்தோஷமடைந் தான். அந்த உறையை வீட்டுக்குச் செ ன்று பிரித்துப் பார்த்தான். அதை எண்ணிப் பார்த்த பொழுது 500 ரூபாய் தான் இருந்தது; 1000 ரூபாய் இல்லை. அவன் அடுத்த நாள் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தான், "கடவுளே, அடுத்த முறை, தயவு செய்து பணத்தை புரோகிதர் மூலமாக அனுப்பாதே; நேரடியாக அனுப்பி விடு. அவர் அதில் பாதியை எடுத்துக் கொண்டு விட்டார்".

(பலத்த சிரிப்பு)

நாம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்¹; அதனால் அதிருப்தியுடனேயே இருக் கிறோம்!

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... வாழ்க்கையே உங்களுக்கு ஒரு பரிசுதான்! அதைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைத்தீர்களா? உங்களில் யாராவது இந்த வாழ்க் கையை கடினமாக உழைத்து சம்பாதித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது! அதனால்தான் நாம் அதன் மதிப்பை உணர்வதில்லை! நாம் வெறுமனே எல்லாவற்றையும் சாதாரண மாக எடுத்துக் கொள்கிறோம் - நமது உடல், நமது தினசரி உணவு, இயற்கையின் அழகு - எல்லாவற்றையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம். நாம் கடவுளிடம் வைர மோதிரங்களைக் கேட்கிறோம் - ஆனால், அவற்றை அணிவதற்கான விரல்களைக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்கிறோமா? காலப் போக்கில், வைரமோதிரமும் நம்மிடம் அதன் மதிப்பை இழந்து விடும்!

We take everything for granted¹

ஒரு நாள், பூகோள ஆசிரியை, பள்ளியில் அவளது மாணவர்களிடம், ஏழு உலக அதிசயங்களை எழுதுமாறு சொன்னாள். எல்லாக் குழந்தைகளும் பெரிய அதிசயங்களான சீனப்பெருஞ் சுவர், பிரமிடுகள், ஈஃபிள் கோபுரம் முதலிய வற்றை வரிசையாக எழுதினர். ஒரே ஒரு குழந்தை மட்டும், தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு, எதையோ தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தது. ஆசிரியை அவளிடம் வந்து கேட்டாள், “என்ன ஆயிற்று, நீ கற்றதை மறந்துவிட்டாயா?”. அந்த சின்னப் பெண் சொன்னாள், “இல்லை. எனக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அவை ஏழுக்கும் மேல் இருக்கிறது”. ஆச்சரியமடைந்த ஆசிரியை அவளது தாளை எடுத்துப் படித்தாள். பிறகு அவள் அந்த வகுப்பு முழுவதும் கேட்பதற்காக அதைச் சத்தமாகப் படித்தாள், “உலகின் ஏழு அதிசயங்கள்: என்னால் பார்க்க முடியும், என்னால் தொட்டு உணர முடியும், என்னால் முகர்ந்து உணர முடியும், என்னால் கேட்க முடியும், என்னால் சுவைக்க முடியும், என்னால் சிரிக்க முடியும், என்னால் நேசிக்க முடியும்...” திடீரென்று வகுப்பு ஒரு ஊடுருவிச் செல்லும் அமைதியால் நிரம்பியது.

இந்தச் சின்ன விஷயங்கள் மறக்கப்பட்டுவிட்டன. ஏனெனில் நாம் அவற்றை சிறிய விஷயங்கள் என்று எண்ணு கிறோம். எளிதாகக் கிடைக்கும் பொழுது எல்லா விஷயங்களுமே நமக்கு சிறிய விஷயங்களாகி விடுகின்றன. இந்த உலகில் பல இலட்சக் கணக்கான மக்களால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, பேச முடியாது, சுவைக்க முடியாது. நாம் இவற்றைப் பற்றி ஒரு போதும் எண்ணுவதேயில்லை. நாம் எப்பொழுதும் அடுத்தது என்னவென்றும், இன்னும் அதிகமாக என்ன கிடைக்குமென்றுமே எண்ணிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவே.

நீங்கள் மூன்று நாட்கள் பட்டினி கிடந்ததைப் பற்றிப் பேசுகிறீர்கள்; ஆனால் முப்பது வருடங்களாக உங்களுக்கு உணவு கொடுத்ததற்காகக் கடவுளுக்கு என்றைக்காவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு சின்ன கதை....

ஷேக் கோவிந்தா அவரது கிராமத்தை நோக்கி நெடுஞ் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அவரது கார் ஒரு குலுக்கலுடன் நின்று விட்டது. பீதியடைந்த அவர், எரிபொருள் தீர்ந்து விட்டிருந்ததைக் கண்டார். சில கிலோமீட்டர்கள் வேண்டுதலுடனும், வியர்வையுட னும், மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்கிக் கொண்டு நடந்து சென்று இறுதியாக ஒரு நகரத்தை அடைந்தார். ஒரு எரிவாயு நிலையத்தைக் கண்டுபிடித்து, தன்னிடம் காசில்லாததையும், ஆயினும் எப்படியாவது தனது கிராமத்திற்குச் செல்ல எரிபொருள் தேவையென்றும் தன் நிலையை விளக்கிக் கூறினார். ஆனால் அவர்கள் அவரைத் திருப்பியனுப்பி விட்டனர். பிறகு அவர் அதற்கு எதிரிலேயே, சாலையின் மறுபுறத்தில் இன்னொரு எரிவாயு நிலையத்தைப் பார்த்து, தனது சூழ்நிலையை விளக்க உள்ளே நுழைந்தார். நிலைய மேலாளர் அவர் மீது இரக்கப்பட்டு, இலவசமாகவே சில லிட்டர் கொடுப்பதற்குச் சம்மதித்தார். கோவிந்தா கேட்டார், "அதற்கு பதிலாகப் பணமாகத் தர முடியுமா? சாலையின் மறுபுறத்தில் இருக்கும் நிலையத்தில் மலிவாக இருக்கிறது!".

எதுவாயினும் நமக்குக் கிடைக்கும் வரையில், அது மிகவும் விலைமதிப்பற்றதாகத் தெரிகிறது; நாமும் ஒரு பிரார்த்தனையான மனநிலையில் இருக்கிறோம்; அது கிடைத்த கணமே, தன் மதிப்பை இழந்து விடுகிறது; நாமும் அடுத்ததற்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறோம்!

நாம் எப்பொழுதுமே, 'அடுத்தது என்ன' எனும் மனோபாவத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்னுடைய நன்றியுணர்வானது எனக்கு எதுவும் கிடைத்ததற்காகவோ அல்லது கிடைக்காமல் போனதற்காகவோ அல்ல! அது வெறுமனே என்னுடைய இருப்புத் தன்மையின் ஆழமான மகிழ்ச்சியின் மற்றும் அன்பின் வெளிப்பாடு! அதனால்‌தான் நம்மால் நன்றியுணர்வுடன் இருக்க முடிவதில்லை.

உதாரணத்திற்கு, நாம் ஒரு கடைக்குச் சென்று, சில புதிய அம்சங்களுடன் ஒரு புதுவிதமான அலாரம் கடிகாரத்தைப் பார்த்தோமானால், உடனே நாம் அந்தப் புதிய அம்சங்களுடன் நமது வாழ்க்கை இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணு கிறோம். அந்தப் புதிய அம்சங்கள் நமக்குக் கிடைக்குமானால், நமது வாழ்க்கையின் முழுத் தன்மையுமே மாறி விடும் என்று எண்ணுகிறோம். அதனால் அதை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் செ ல்கிறோம்.

சில நாட்கள் கழித்து, என்ன நடக்கிறது? அந்த விலைமதிப்பற்ற கடிகாரத்தைத் துடைத்து வைப்பதற்குக் கூட நமக்கு நேரம் இல்லை! பாவப்பட்ட அந்த கடிகாரமோ எங்கோ ஒரு மூலையில் புழுதி படிந்து கிடக்கும்; இன்னொரு பொருளை வாங்கிவந்து வீட்டின் அடைசலுக்குக் காரணமான உங்களுக்கும் திட்டு கிடைக்கும்! நீங்களும் வேறொரு சாதனத்தை நோக்கி, வேறொரு ஆசையை நோக்கி நகர்ந்து விடுவீர்கள்!

நாம் எப்பொழுதும், நம்மிடம் இல்லாத எதுவுமே ஒரு மலையளவு பெரிதாக இருப்பதாகவும், அது இல்லாவிடில் நம்மால் உயிர் வாழ முடியாதென்றும் எண்ணுகிறோம்; ஆனால், உண்மையிலேயே அது கிடைத்து விடும் பொழுது, எவ்வாறோ அது மிகவும் சிறியதான ஒன்றாகி விடுகிறது. இவ்வாறுதான் நம் வாழ்வில், மிகவும் அற்புதமான மனோபாவமான நன்றியுணர்வைத் தவற விட்டு விடுகிறோம். அடுத்தது என்ன என்பதன் பின்னாலேயே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.

பகவான் ரமண மஹரிஷி இறைவனிடம் சொல்கிறார்: “நான் மிகவும் அறிவாளி. நான் என்னிடம் இருப்பதை எல்லாம்

உங்களால் உங்களுக்குள் தாங்க முடியாத நன்றியுணர்வுடன் வாழ முடிந்தால், வேறெதுவும் தேவைப்படாத ஒரு வெற்றிடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள்! நீங்கள் தியானத்திற்குள் விழுந்து விட்டீர்கள்!

  • என் துன்பமயமான வாழ்வையெல்லாம், உன்னிடம் கொடுத்து விட்டேன். நீயோ, உன்கருணையினால், அதற்கு பதிலாக எனக்கு ஆனந்தமயமான உன் இருப்பைக் கொடுத்திருக்கிறாய்!’.

இந்த அறிவுபூர்வமான பரிமாற்றத்தினால், கடவுளை விட தானே மிகவும் அறிவாளி என்று கடவுளிடம் பகவான் சொல்கிறார்! பகவானது பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வு இத்தகைய மரியாதைக்குரியது! அது படிக்கும் பொழுதே உங்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் பற்றிய இன்னொரு சின்ன கதை...

சைதன்ய மஹாப்பிரபுவின் ஊரிலிருந்து வந்த யாரைக் கண்டாலும், இராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவர்களது காலில் விழுந்து விடுவார் என்று கூறப்படுகிறது. சைதன்ய மஹாப்ரபு இந்தியாவின் ஒரு தலைசிறந்த ஞானியும் குருவும் ஆவார்.

அவர் ஏன் சாதாரணமான மனிதர்களின் கால்களில் விழுகிறார் என்று மக்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் சொல்வார், “அவர்கள் சாதாரணமானவர்களா அல்லது அசாதாரணமானவர்களா என்பது ஒரு பொருட்டல்ல; அவர்கள் சைதன்யர் ஒரு முக்கியமான சங்கீர்த்தனத்தைச் செய்த பானிகாட்டடியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கேட்டவுடனேயே, அந்தப் பெயரே என்னுள் சைதன்யரைப் பற்றிய நினைவுகளை எழுப்பப் போது மானதாக இருக்கிறது. அவர்கள் என் மனதிற்குள் சைதன்யரைக் கொண்டு வந்ததற்காக, அவர்கள் காலில் விழுவதன் மூலம் அவர்களுக்கு என் நன்றியுணர்வைச் செலுத்துகிறேன். அவர் களைச் சந்தித்திருக்காவிட்டால், அந்த க்ஷணங்களில்,

நாம் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். அதனால் அதிருப்தியுடனேயே இருக்கிறோம்.

வேறெதையாயினும் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை எண்ணிக் கொண்டிருந்திருப்பேன். அதனால் அவர்கள் எனக்குள் தெய்வீகமான நினைவுகளையும், கருத்துகளையும் தூண்டிவிடும் கருவிகளாக இருக்கிறார்கள்” - இதுதான் இராம கிருஷ்ணரின் பதில்!

சைதன்யரைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டு வருவதனால், இராமகிருஷ்ணர் அவர்களது கால்களில் விழுந்தாராம்! இதை இன்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? அவர்கள் செய்வது எதுவாக இருப்பினும், எல்லோரையும், எல்லாவற்றையும் நன்றியுணர்வுடன் நோக்க வேண்டும் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். அவர்கள் அனைவருமே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதிகள்தான்; அவர்கள் அனைவருமே, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஸ்ருதிக்கேற்ப, ஏதோ ஒரு ஒருமித்த நிகழ்வில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் இந்த நிகழ்வை நுட்பமாக உணரமுடிந்தால், விஷயங்கள் நிகழும் விதத்திற்காக, உங்களால் நன்றியுணர்வுடன் இருக்க முடியும்.

நாம் இந்த நன்றியுணர்வை தலைசிறந்த குருமார்களிடம் இருந்து உட்கிரஹித்துக் கொள்ள வேண்டும். இதுமட்டுமே உட்கிரஹித்துக் கொள்ளப்பட வேண்டியதாகும். மற்றவை யனைத்தும் தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்; ஏனெனில், இதை உட்கிரஹித்துக் கொள்ளும் பொழுது, எதேச்சையாக ஒன்றாக நிகழும் ஆற்றல், உங்களுக்காகத் தானே விஷயங்களை நிகழச் செய்யும்; பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே உங்கள் மீது பொழியும்.

புரிந்து கொள்ளுங்கள்.. ஆசையும் நன்றியுணர்வும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஆசைகள் வருமானால், நீங்கள் நன்றியுணர்வுடன் வாழவில்லை என்று பொருள். நீங்கள் நன்றியுணர்வுடன்

வாழ்க்கையே உங்களுக்கு ஒரு பரிசுதான். அதைப் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைத்தீர்களா?

வாழும் பொழுது, உங்களுக்கு ஒருபோதும் எந்தவிதமான ஆசைகளும் வர முடியாது. நீங்கள் நன்றியுணர்வுடன் வாழும் பொழுது உங்களுக்கு எது கொடுக்கப்படினும், அது வெறுமனே அந்தக் கணத்திற்குத் தேவையானதை நிறைவு செய்வதாக இருக்கும், அவ்வளவே. அதுவும் நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே, உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடும்; அதனால் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை!

நீங்கள் நன்றியுணர்வுடன் செயல்படும்பொழுது, எப்பொழுதும் எல்லா விஷயங்களும் சரியாகவே இருக்கும். இல்லாவிடில், எப்பொழுதுமே அவை குறைபாட்டுடனும், அசிங்கமாகவுமே இருக்கும். மனிதனின் பேராசை எத்தகையதென்றால், அவனை இந்த பூமிக்கே அரசனாக்கினாலும், அவன் “இந்தக் கடல்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை; இந்த சூரியனும் விண்மீன்களும் என் ஆணைக்குக் கட்டுப்பட வில்லை!” என்று எண்ணுவான்.

சிவபுராணத்தில், சிவனும் பிரம்ம கபாலமும் என்றொரு கதை வருகிறது. பிரம்ம கபாலம் என்பது, சிவன் ஆண்டிக் கோலத்தில் அலைந்து திரியும்பொழுது, பிச்சைப் பாத்திரமாக உபயோகப்படுத்தும் ஒரு மண்டையோடு. பிரம்ம கபாலத்தைப் பற்றிய ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், மக்கள் அதில் என்ன பிச்சையிட்டாலும், அது உடனே விழுங்கி விடும்! சிவன் அதை நிரப்ப எவ்வளவு கடின முயற்சி செய்தும், அந்தப் பாத்திரம் எப்பொழுதும் காலியாகவே இருக்கும்! உண்மையில், இந்த பிரம்ம கபாலம் நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அது நமது அஹங்காரத்தைத் தவிர வேறெதுவுமில்லை; அஹங்காரமே எல்லாவற்றையும் விழுங்கி இன்னும் நிறைய வேண்டும் என்று கேட்கிறது! இந்த அஹங்காரம்தான் நம் மீது பொழியப்படுவதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது.

எப்பொழுதும் உங்களுக்கும் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்கும் இடையில் நிற்பது உங்கள் மனம்தான்.

உங்களுடைய வாழ்க்கையை, கேட்பதன் அடிப்படையில் அமைத்துக் கொள்வதா அல்லது நன்றியுணர்வின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதா என்பது முழுவதும் உங்களைப் பொறுத்தது. நன்றியுணர்வு என்பது வெளியிலிருந்து உங்கள் மீது திணிக்கக் கூடிய ஏதோ ஒரு விதமான நல்லொழுக்கம் அல்ல. அது பிரபஞ்ச இருப்புத் தன்மையைப் பற்றியும் அதன் வழிகளைப் பற்றியும் ஆழ்ந்து புரிந்து கொள்ளுதலில் இருந்து, உள்ளிருந்து மலர வேண்டிய ஒரு மனோபாவம். உண்மையான நன்றியுணர்வு நிகழும் பொழுது, அது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையே உருமாற்றி, உங்களுக்கு நிரந்தரமான அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரக் கூடியது.

ஒரு முறை ரமண மகரிஷியிடம் ஒருவர் சென்று, "பகவான், எனக்கு அமைதி வேண்டும்!" என்றாராம். ரமணர் சொன்னாராம், "நீங்கள் சொன்ன வாக்கியத்தில் இருந்து, வெறுமனே 'எனக்கு' என்ற வார்த்தையையும், 'வேண்டும்' என்ற வார்த்தையையும் அகற்றி விடுங்கள் - பிறகு அங்கே இருப்பது அமைதிதான்!".

நிஜத்துடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன், உயிர்ப்புள்ள தொடர்பு வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, உங்கள் நெறிப்படுத்தல்களையும், அஹங்காரத்தையும் விட்டுவிட்டு, உங்களைச் சுற்றி நீங்களே எழுப்பிக் கொண்டுள்ள சுவரை உடைத்துத் தள்ளிவிட வேண்டியது தான்; அப்பொழுதுதான் உங்களால் அந்தத் தொடர்பு எப்பொழுதுமே இருக்கிறது என்பதைக் காணமுடியும்! அதற்காக நீங்கள் விசேஷமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை; நீங்கள் எது இல்லையோ அதை வெறுமனே விட்டுவிட வேண்டும், அவ்வளவு தான்!

| உங்கள் மனதின் சலிப்படைய வைக்கும் தர்க்கத்தை விட்டு விட்டீர்களானால், தேர்ந்தெடுக்கல் இல்லாமலும், முயற்சியின்றியும், மகிழ்ச்சியாகவும், நீரோட்டத்தின் பிரவாகத்துடன் ஒரு நதிபோலப் பாய்ந்து செல்வீர்கள். |

நீங்கள் நேசிக்கும் தன்மையுடனும், பிரவகிக்கும் தன்மையுடனும், நன்றியுணர்வால் நிரம்பியும் இருப்பீர் களானால், உங்கள் வழியாகப் பாய்ந்து செல்லும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மாபெரும் சக்தியை உங்களால் எப்பொழுதும் உணர முடியும்; நீங்கள் எப்பொழுதும் ஒரு மன நிறைவான உணர்வுடன் இருப்பீர்கள்; அதனால் எதுவும் லாபம் கிடைக்கும் என்பதனால் அல்ல, அதுவே உங்கள் இருப்புத் தன்மையாய் ஆகி விடுவதால்! இந்த மன நிறைவே, அவன் அறியாவிடினும், ஒவ்வொரு மனிதனும் தேடும் இறுதியான மனநிறைவாகும். அவன் மீண்டும் மீண்டும் அதை லோகாயதமான விஷயங்களில் தேடித் தேடி, தவறவிட்டுக் கொண்டே இருக்கிறான்.

நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம், அதன் மீது விசு வாசம் வைத்து, நன்றியுணர்வுடன் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்க வேண்டியதே. பிறகு, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கும்.

ஆனால், நம்மிடம் விசுவாசம் இல்லை.

ஒரு சின்ன கதை....

கடவுளிடம் எந்தவிதமான விசுவாசமும் இல்லாத ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் திடீரென்று மலையுச்சியில் இருந்து விழுந்து விட்டான்; வெறுமனே ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் திகிலால் நிரம்பியிருந்தான். அவனுக்கு திடீரென்று மக்கள் எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. கடவுளை ஏன் உதவிக்கு அழைக்க முயற்சி செய்யக் கூடாது என்று எண்ணினான். “ஓ கடவுளே! நான் ஒரு போதும் உன்னிடம்

நீங்கள் நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும்பொழுது, முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது, மேலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. விசுவாசம் வைத்ததில்லை; நீ உண்மையிலேயே இருக்கிறாயா? உன்னால் என்னைக் காப்பாற்ற முடியுமா?"- என்று கத்தினான். கடவுளின் குரல் இடிபோல முழங்கியது, "கண்டிப்பாக மகனே, நீ பிடித்துக் கொண்டிருக்கும் வேரைச் சற்று விட்டு விடு; நான் உன்னைக் கீழேயிருந்து தாங்கிக் கொள்கிறேன்". அவன் மீண்டும் கத்தினான், "எனக்கு உதவ வேறு யாராவது இருக்கிறார்களா?".

(சிரிப்பு!)

நாம் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மை மீது மனப் பூர்வமான நம்பிக்கை வைக்கத் தயாரில்லை! உங்கள் இருப்புத் தன்மையில் பிரபஞ்சத்தின் மீது மனப்பூர்வமாக நம்பிக்கை வைக்கும் தன்மையே, உங்களை இந்தப் பூமியில் கடவுளைப் போல வாழ வைக்கும்! உங்கள் சொந்த அறியாமையினாலும் அஹங்காரத்தினாலும் இந்த அற்புதமான வாய்ப்பைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நம்மால் விழிப்புடன், இந்தப் பிரபஞ்ச சக்தியை நோக்கிய ஒரு தொடர்ந்த நன்றியுணர்வில் இருக்க முடியு மானால், நம்மை அதன் மடியில் வைத்துப் பாதுகாப்பதை உணர முடியும். ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்வது போல, நம்மை இந்த சக்தி, தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதைக் காணலாம். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிடினும் இதுதான் உண்மை.

ஒரு மனிதன், அவனும் கடவுளும், இந்த வாழ்க்கைப் பயணத்தில், ஒரு கடற்கரையில் நடந்து செல்வதாகக் கனவு கண்டான். அவன் கடவுளிடம் சொன்னான், "ஓ பிரபுவே! நாமிருவரும் கடற்கரை மணலில் நடந்து செல்வதாகக் கனவு கண்டேன். மணலில் நாம் கடந்து வந்த பாதையின் அடிச்சுவடுகளைப் பார்க்கும் பொழுது,

| நீரோட்டத்துடன் செல்லும்பொழுது, எந்தவிதமான முயற்சியும் | |:---| | மேற்கொள்ள வேண்டியதில்லை; மேலும் களைப்படைய | | மாட்டீர்கள்; இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருப்பீர்கள். |

வாழ்க்கையின் மிகவும் சோதனையான கால கட்டங்களில், நான் ஆழமான பிரச்சினை களில் இருந்தபோதெல்லாம், ஒரு வரிசைக் காலடிகளை மட்டும் தான் காண்கிறேன். மற்றதைக் காணவில்லை. அந்த சமயங்களில் எவ்வாறு நீ என்னை விட்டு விலகிச் செல்லலாம்?". கடவுள் சொன்னார், "மகனே! அந்தச் சமயங்களில் நான் உன்னைச் சுமந்து கொண்டு நடந்தேன்!".

என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் அலைந்து திரிந்து கொண்டிருந்த நாட்களில், 30,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்திருக்கிறேன். அதில் 2000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடந்திருக்கிறேன். வெறும் இரண்டே இரண்டு துண்டுத் துணிகளுடனும், உணவுக்காக ஒரு பிச்சைப் பாத்திரத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு பயணம் செய்தேன். பணத்தைத் தொடுவதில்லையென்றும், அடுத்த வேளைக்காக உணவைச் சேமித்து வைப்பதில்லை என்றும் சபதம் செய்திருந்தேன்.

இது எவ்வாறு சாத்தியம் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் சொல்கிறேன்.... நான் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைத்து, என்னுடைய குறிக்கோளான ஞானமடைதலில் மட்டுமே மனதை ஒருமுகப் படுத்தியிருந்தேன். பிரபஞ்ச இருப்புத் தன்மை என்னை கவனித்துக் கொண்டது; அது இவ்வாறுதான் நிகழ்ந்தது.

பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது விசுவாசம் வையுங்கள் என்பது போன்ற விஷயங்களை நான் சொல்லும்போது, நீங்கள், இந்தக் கருத்தெல்லாம் அந்தக் கால நியாயமென்றும், மகான் களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நினைக்கலாம். கண்டிப் பாக அவ்வாறு அல்ல. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து,

உலகின் ஏழு அதிசயங்கள்: என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும், சுவைக்க முடியும், தொட்டு உணர முடியும், முகர்ந்து உணரமுடியும், சிரிக்க முடியும், நேசிக்க முடியும்...

இப்பொழுது உங்கள் முன்னால் அமர்ந்திருக்கும் எனக்கு நிகழ்ந்தவற்றில் இருந்து சொல்கிறேன்! மேலும் நான்தான் இந்தக் கூட்டத்திலேயே மிகவும் இளையவன் என்று எண்ணுகிறேன்! அதனால் நான் அந்த காலத்தைப் பற்றிய எதையும் பேசவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

வெறுமனே நன்றியுணர்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்; அற்புதங்கள் நிகழ்வதைக் கவனியுங்கள். நீங்கள் பொங்கும் இதயத்துடன், கேள்விகள் எதுவுமின்றி, பெற்றுக் கொள்ளத் தயாராயிருந்தால், பிரபஞ்ச இருப்புத் தன்மை கொடுக்கிறது.

ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்வதாகவும், அங்கு ஒரு தேவதை அவனுக்கு சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பிப்பதாகவும் கனவு கண்டான். அவர்கள் இருவரும் அருகருகே ஒன்றாகச் சென்றனர். முதலில் அவர்கள், நிறைய தேவதைகளால் நிரம்பி இருந்த ஒரு பெரிய தொழிற் கூடத்தினுள் நுழைந்தனர். அந்த அறையில் செயல்கள் சுறுசுறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. அந்த வழிகாட்டும் தேவதை, நின்று அவனுக்கு விளக்கியது. "இதுதான் பெற்றுக் கொள்ளும் பிரிவு. இங்குதான் பிரார்த்தனை மூலமாக கடவுளுக்கு வரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வகைவகையாகப் பிரிக்கப்படுகிறது". அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்; அந்த அறை மிகவும் சுறுசுறுப்பாயிருந்தது; நிறைய தேவதைகள் பல்வேறு விதமான

  • நீளமான காகிதங்கள், வீணான காகிதங்கள் என்று பலவிதமாகவும் இருந்த - காகிதங்களிலும் இருந்து வந்த விண்ணப்பங்களை வகைப்படுத்திக் கொண்டிருந்தனர். அவை உலகெங்கிலும் உள்ள மக்களிடம் இருந்து, பல்வேறு மொழிகளிலும் இருந்தன.

அவர்கள் மேலே சென்று இரண்டாவது பிரிவிற்குள் நுழைந்தனர். இதுவும் நிறைய சுறுசுறுப்பான தேவதைகளாலும்,

இந்த உலகில் பல இலட்சக்கணக்கான மக்களால் பார்க்க முடியாது. கேட்க முடியாது, பேச முடியாது, சுவைக்க முடியாது... நாம் இவற்றைப் பற்றி ஒரு போதும் எண்ணுவதேயில்லை.

நிறைய பாக்கெட்டுகளாலும், காகிதங்களாலும் நிரம்பியிருந்தது. வழிகாட்டும் தேவதை விளக்கியது, "இதுதான் பார்சல் கட்டும் மற்றும் வழங்கும் பிரிவு; இங்கு தான் மக்கள் கேட்கும், அருளும் ஆகளும், பகுத்தாராயப்பட்டு, கீழே பூமியில் வழங்கப்படுகிறது".

அவர்கள் மேலே நடந்து சென்று, அந்த நீளமான வராந்தாவின் இறுதியில் உள்ள, ஒரு சிறிய அறையில் கதவின் முன்பு நின்றனர். அவனுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, அங்கு ஒரே ஒரு தேவதை மட்டுமே, உட்கார்ந்து, மேசையின் மீது கவிழ்ந்தவாறு இருந்தது. அவன் தேவதையிடம் கேட்டான், "ஏன் இந்தப் பிரிவு மட்டும் இவ்வளவு அமைதியாக இருக்கிறது? இது என்ன பிரிவு?". அதற்கு தேவதை அமைதியாகப் பதில் அளித்தது "இதுதான் ஆசி களைப் பெற்றுக் கொண்ட தகவலைத் தெரிவிக் கும் பிரிவு. மக்கள், தாங்கள் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு விட்டதாகத் தெரிவிக்கும் தகவலைப் பகுத்தாராயும் பிரிவு இது".

நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், நம்மில் எத்தனை பேர், பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம்? நம்மில் எத்தனை பேர், நமது பிரார்த்தனையில் கேட்பதுடன் நன்றியுணர்வையும் சேர்த்துக் கொள்கிறோம்?

நீங்கள் உங்களுடன் இருக்கும் பொழுது, இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்: ஒரு இரண்டு மணி நேரத்திற்கு, உங்களுடைய எல்லாக் கவலை களையும் தேவை களையும் ஒதுக்கி வைத்து விட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களுக்கு ஏற்கனவே கொடுத்த எல்லாவற்றையும் உங்கள் கவனத்தில் கொண்டு வாருங்கள். நீங்கள் உடனே, "என்னுடைய தேவைகளைப் பற்றி, நான் கவலைப்படவில்லை யென்றால், எவ்வாறு அவற்றை

| நாம் எப்பொழுதும் அடுத்தது என்னவென்றும், | | இன்னும் அதிகமாக என்ன கிடைக்கும் என்றுமே | | எண்ணிக் கொண்டிருக்கிறோம். |

நிறைவேற்ற முடியும்? யார் என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வார்கள்? என்னுடைய வியாபாரம் என்னவாகும்?”, என்றெல்லாம் எண்ணலாம். நீங்கள் இவற்றை யெல்லாம் பற்றி எண்ணத்தான் வேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும், இந்த எல்லாச் சுமைகளையும் உங்கள் தலையிலிருந்து எடுத்து விட்டு, நான் சொல்வதைச் செய்யுங்கள்.

எவ்வாறாயினும், உங்கள் குடும்பம் அல்லது உங்கள் வியாபாரம், உங்களால்தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? நான் சொல்கிறேன், எல்லாம் இலகுவாக நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம் நாமல்ல; ஆனால், நாமிருந்தும் அவை மென்மையாக நடந்து கொண்டிருக்கின்றன! பிரபஞ்ச இருப்புத் தன்மை, நமது குடும்பங்களையோ அல்லது நமது செல்வத்தையோ காப்பதற்கு நமது அறிவைச் சார்ந்திருக்க வேண்டியிருந்திருக்குமாயின், நாமனைவரும் தற்சமயம் அனாதை களாயிருப்போம்! மிகவும் தெளிவாக இருங்கள்... வெறுமனே கவலைப்படுவதன் மூலம், எதையும் சாதிக்க முடியாது. நாம் கவலைப்படுதலைப் பற்றி ஏற்கனவே போதுமான அளவு பேசியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

அதனால், வெறுமனே சில நிமிடங்கள் கண்களை மூடி, ஏற்கனவே உங்கள் மீது பொழியப்பட்டதன் மீதும், ஏற்கனவே உங்களிடம் இருப்பதன் மீதும் கவனத்தை வையுங்கள். மனப் பூர்வமாக எல்லா விஷயங்களையும் - உங்கள் உடல், உங்கள் செல்வம், உங்களை ஆதரிக்கும் மற்றும் உங்களுக்கு உதவும் மக்கள், உங்கள் வீடு, உங்கள் ஆடம்பரப் பொருட்கள், உங்கள் விடுமுறைகள் எல்லாவற்றையும் பாருங்கள். அவை எல்லா வற்றையும் தளர்வுடனும், நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியாக

எதுவாயினும் நமக்குக் கிடைக்கும் வரையில், அது மிகவும் விலைமதிப்பற்றதாகத் தெரிகிறது. ஆனால் கிடைத்த கணமே தன் மதிப்பை இழந்து விடுகிறது.

அனுபவியுங்கள். எவ்வளவு நேரம் முடிகிறதோ, அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மிகவும் அவசரமாகவும், வேகமாகவும் ஓடாதீர்கள். அவை எல்லாவற்றையும் நிதானமாக, உங்கள் மனதளவில் வாழுங்கள். அந்த உணர்விலேயே நிலைத்திருங்கள். சற்று நேரம், அந்த அற்புதமான மனநிறைவான உணர்விலேயே நிலைத்திருங்கள். நீங்கள் நன்றியுணர்வால் நிரம்புவதையும், பொங்கிப் பிரவகிப்பதையும் உணருங்கள். நீங்கள் கண்களைத் திறக்கும்பொழுது, உங்களிடம் இருப்பது, உங்கள் வாழ்க்கையை நடத்தத் தேவை யானதற்கும் அதிகமாகவே இருப்பதைக் காண்பீர்கள்! மேலும் நீங்கள், இதற்கு மேலும் என்ன வேண்டும் என்று ஆச்சரியப் படுவீர்கள்!

நீங்களே வெறுமனே நன்றியுணர்வாகி விட வேண்டும்! நன்றியுணர்வாகி விடச் சிறந்த வழி, காரணமின்றியே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வதுதான். நீங்கள் காணும் எல்லாவற்றையும், நீங்கள் கேட்கும் எல்லாவற்றையும், நீங்கள் செய்யும் எல்லாவற்றையும், பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்களைப் பாதுகாக்கிறது என்கிற உயர்ந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் அனுபவியுங்கள். பிறகு, வெறுமனே, வாழ்க்கை உங்கள் கண்ணோட்டத்தில் உருமாறி விடும்; பின்னர் நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியில் இருப்பதால், எப்பொழுதுமே பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருப்பீர்கள்.

ஒரு சின்ன கதை....

ஒருவன் விதம் விதமான மாம்பழங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த ஒரு மாஞ்சோலையைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அவன் சோலையின் உள்ளே புகுந்தான்; சுற்றும் முற்றும் பார்த்தான்; ஆராய்ந்தான்; ஏதோ புள்ளி விவரங்களை

| நாம் எப்பொழுதும் 'அடுத்தது என்ன?' எனும் மனோபாவத்திலேயே இருக்கிறோம். அதனால்தான் நம்மால் நன்றியுணர்வுடன் இருக்க முடிவதில்லை. |

எடுத்தான்; ஒரு அரை மணி நேரங்கழித்து புள்ளி விவரங்களுடன் வெளியேறினான். சிறிது நேரங்கழித்து, இன்னொருவன் அதே மாஞ்சோலை, வழியாகச் சென்றான். அவனும் உள்ளே புகுந்தான்; சில மாம்பழங்களைப் பறித்தான்; அவற்றைச் சந்தோஷமாகச் சாப்பிட்டுவிட்டுச் சென்று விட்டான்!

(உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார்!)

இப்பொழுது, தயவு செய்து ஏதாவது மாஞ்சோலையில் நின்று மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டு விடாதீர்கள். நீங்கள் கல்லடி பட நேரிடலாம்! நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கேள்வி எழுப்பாமல் வெறுமனே மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டுமே இருங்கள் என்று நான் சொல்ல வில்லை.

நீங்கள் வேலை செய்ய வேண்டும்; அதில் சந்தேகமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக மட்டும் இருந்தால் உங்களுக்கு யாரும் எதுவும் கொடுக்கப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம், மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்களைத் தேடாதீர்கள் என்றுதான், அவ்வளவே. கேள்வி எதுவும் கேட்காமல் எல்லாவற்றையும் வெறுமனே மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் அடிப்படை இயல்பாகி விடட்டும்; பிறகு நன்றியுணர்வு தானாகவே உங்கள் இருப்புத் தன்மையாகி விடும்.

உங்கள் தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; உங்கள் சமூக அந்தஸ்து எதுவாக வேண்டு மானாலும் இருக்கலாம்; உங்கள் பொருளாதார அந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் மகிழ்ச்சியாக இருப்பது என்பது, இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், எல்லோராலும் செய்யக் கூடியது.

ஆசையும் நன்றியுணர்வும் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஆசைகள் வருமானால், நீங்கள் நன்றியுணர்வுடன் வாழவில்லை என்று பொருள்.

பிரச்சினை என்னவென்றால், நீங்கள் எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் கூட ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். நீங்கள் உங்கள் மனதை இது போன்ற எண்ண வடிவ அமைப்புகளைக் கொண்டு பழக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு, உங்கள் முயற்சிகளுக்குத் தகுந்த அளவு கொடுக்கப்படாத போது, மற்றவர்களுக்கு, அவர்கள் தகுதிக்கும் மேலாகக் கிடைக்கிறது என்று நீங்கள் அடிக்கடி எண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எப்பொழுதும் எண்ணுகிறீர்கள். கண்டிப்பாக இல்லை! கடினமாக உழைப்பது சரிதான்; ஆனால் அதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; அந்தக் கருத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் குறை கூறுவதை அல்லது அதிருப்தியாக இருப்பதை நிறுத்தும் ஒரே வழி இதுதான்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை பொழிந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க விரும்பினால், அனுபவிப்பீர்கள். அது முழுவதும் உங்களுடைய தேர்ந்தெடுத்தல் தான். நீங்கள் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டு, பிறகு வேறு யாரையாவது குறை கூறுகிறீர்கள் அல்லது பழிக்கிறீர்கள். உங்களுக்கு நிகழும் எதற்கும் வேறு யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் வையுங்கள். எல்லாமே நீங்கள் விழிப்பற்ற நிலையில் செய்யும் விழிப்பான தேர்ந்தெடுத்தல்தான். உங்களிடம் போதுமான விழிப்புணர்வின்மையால், வெறுமனே விழிப்புணர்வற்ற, ஒரே மாதிரியான தீர்மானங்களை எடுத்து விட்டு, பிறகு வாழ்க்கையைப் பற்றிக் குறை கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்.

எப்பொழுதும் நினைவில் வையுங்கள்... சொர்க்கமும், நரகமும் வெளியுலகில் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல;

| நீங்கள் நன்றியுணர்வுடன் செயல்படும்பொழுது, எப்பொழுதும் எல்லா விஷணங்களும் சரியாகவே இருக்கும். | | :--- |

அவை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொள்பவை. நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீதான மனப்பூர்வமான நம்பிக்கையை இழக்கும் கணமே, உங்களை அதிலிருந்து வேறு படுத்திக் கொண்டு, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களுடன் நரகத்தையும் சுமந்து செல்கிறீர்கள். நரகம் ஏதோ உங்களுக்கு வெளியே இருக்கும் ஒன்று என்று எண்ணாதீர்கள். அது உங்கள் மனதில்தான் இருக்கிறது. உங்களுடைய தேர்ந்தெடுத்தலே, உங்களுடைய இயல்பே, நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்களா அல்லது சொர்க்கத்தில் இருக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்கிறது.

ஒரு ஆசிரியை ஒரு முறை அவளது மாணவர்களிடம் கேட்டாள், ''நரகம் எங்கிருக்கிறதென்று யாராவது சொல்ல முடியுமா?''. நீண்ட அமைதிக்குப் பிறகு, ஒரு குழந்தை எழுந்து நின்று சொன்னது, ''என் தந்தையின் படிக்கும் அறையில், மிஸ்''. ஆச்சரியமடைந்த ஆசிரியை, அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று கேட்டாள். அதற்குக் குழந்தை பதில் சொன்னது, "ஒவ்வொரு முறை நான் என் தந்தையின் படிக்கும் அறைக்குச் செல்லும் பொழுதும், அவர் கத்துவார், 'இங்கிருந்து நரகத்தை எடுத்துக் கொண்டு போய்விடு1' (இங்கிருந்து ஒழி என்பதற்கு ஆங்கில வழக்கு!)''.

(சிரிப்பு!)

குழந்தைகள் சிறுவயது முதலே, சொர்க்கமும், நரகமும் வெளியே இருக்கும் ஸ்தூலப் பொருட்கள் என்று எண்ண, பழக்கப்படுத்தப்பட்டு விடுகின்றனர். கடவுள், நமக்கு மேலாக ஒரு பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு, நமது பாவச் செயல்களையும்,

Get the hell out of here¹ நல்ல செயல்களையும் குறித்துக் கொண்டிருக்கிறார், என்று எண்ணுவதற்கு அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டு விடுகிறார்கள்.

இவ்வாறு எண்ணுவதால், நாம், நமது எல்லாச் செயல் களுக்கும் காரண-விளைவுச் சுழற்சியை ஏற்படுத்த ஆரம்பித்து விடுகிறோம். நல்ல செயல்களை சொர்க்கத்துடனும், தீய செயல்களை நரகத்துடனும் இணைக்கிறோம். நாம் கடவுளையும், இந்த முழுப் பிரபஞ்ச இருப்புத் தன்மையையுமே, ஒரு வர்த்தகப் பரிவர்த்தனை மையமாக எண்ண ஆரம்பித்து விடுகிறோம். நாம் வியாபாரியாகி விடுகிறோம்- நமது உண்மையான தொழில் எதுவாக இருப்பினும்!

நீங்கள் கோயிலுக்குச் சென்றால் என்ன செய்கிறீர்கள்? தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, உள்ளே சென்று கடவுளுக்கு உங்கள் குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய பெயர், பிறந்த நக்ஷத்திரம் முதலியவற்றைச் சொல்லி சடங்குகளைச் செய்கிறீர்கள்

பரிதாபத்துக்குரிய அர்ச்சகர் கையில் ஒரு தட்டுடன் நின்று கொண்டிருக்க, நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வருடைய பெயரையும், மற்ற எல்லா விவரங்களையும் ஒரு நீண்ட பட்டியலிட்டுக் கொண்டிருப்பீர்கள். கடவுள் தனது ஆசிகளை தவறான நபர்களுக்கோ, தவறான குடும்பத்திற்கோ அனுப்பி விடப் போகிறார் என்று மிகுந்த அச்சத்தில் இருக் கிறீர்கள்! பூகோள ரீதியாக சரியான இடம் முதலியவற்றைச் சொல்லி, இந்த நிவேதனப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பது நீங்கள்தான், வேறு யாரோ ஒருவர் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்கிறீர்கள். இதைச் செய்த பிறகுதான் நீங்கள் கோயிலை விட்டுச் செல்கிறீர்கள். சரிதானே?

என்னவோ இவற்றையெல்லாம் நீங்கள் சொல்லாவிடில், கடவுளுக்குத் தெரியாது என்பது போல! என்னவோ உங்கள் இருப்பைக் கடவுளுக்கு ஞாபகப்படுத்தினால்தான் அவர் உங்கள் மீது பொழிவார் என்பது போல! நான் சொல்கிறேன்... தொடர்ந்து அவரை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் இருங்கள், அவ்வளவே. அவர் எப்பொழுதும் உங்கள் மீது பொழிந்து கொண்டுதான் இருக்கிறார்.

அவர் நீங்கள் ஏதோ பிரச்சினையில் இருப்பதைக் கண்டு, உங்களை அதிலிருந்து வெளியே கொண்டு வரத் தீர்மானிக்கிறார் என்பதோ, அல்லது, நீங்கள் பிரச்சினை எதுவுமில்லாமல் நன்றாகத்தான் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு அலட்சியமாக இருந்து விடுகிறார் என்பதோ அல்ல. இவையெல்லாம் நாம் கடவுளின் மீது பிரதிபலிக்கும் நமது சொந்த நெறிப்படுத்தல்கள். இவையெல்லாம் நமக்கு சிறு வயதிலிருந்தே சமூகம் கற்றுத் தந்தது.

நன்றியுணர்வு என்னும் கருத்தே நம்மிடையே மிகவும் திரிக்கப்பட்டு விட்டது. நன்றியுணர்வு என்பது, நாம் ஏதாவது ஆழமான தொல்லையிலிருந்து மீட்கப் பட்டாலோ அல்லது யாராவது ஒருவர் தனது அக்கறையிலும் பகிர்தலிலும் வழக்கத் திற்கு மாறாக விசேஷமாக நடந்து கொண்டாலோ உணரப்பட வேண்டியது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். இது நமக்குக் கற்றுத் தரப்பட்ட மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு நம்பிக்கை.

நான் சொல்கிறேன்... கோயிலுக்குள் வெறுமனே ஒரு நன்றியுணர்வுடன் நுழையுங்கள். ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும் சில நிமிடங்கள் ஒரு ஆழமான நன்றியுணர்வுடன் நில்லுங்கள். பிறகு கோயிலை விட்டு அதே மனநிலையுடன் செல்லுங்கள். அதுவே போதுமானது. மற்றவை தானாகவே

இந்த அஹங்காரம்தான் நம் மீது பொழியப்படுவதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியாமல் தடுக்கிறது.

கவனித்துக் கொள்ளப்படும். இதுவே இறுதியான, உயர்ந்த பிரார்த்தனை. நன்றியுணர்வே இறுதியான, உயர்ந்த பூஜை அல்லது சமர்ப்பணம்.

நீங்கள் இங்கிருக்கும் சில நாட்களில், நான் சொல்வதை அனுபவபூர்வமாக உணர, அவற்றை பயனுள்ள வகையில் உபயோகியுங்கள். நீங்கள் வெளியுலகிலிருந்து விலகியிருக்கும் இந்த ஏழு நாட்களில், நன்றியுணர்வு உங்களிடம் வேர் விட அனுமதியுங்கள். நீங்கள் திறந்து, உங்களை மலர அனுமதியுங்கள். இது உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம். நீங்கள் உருமாற்றமடைவதற்கான ஒரு வாய்ப்பு. தவறவிட்டு விடாதீர்கள். உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்; நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் பொழுது, அதுவும் உங்களுடன் வரும்.

பாருங்கள், பிரச்சினை என்னவென்றால், நாம் எப்பொழுதும் நமது தலையின் (அறிவின்) வழியாகவே கடவுளை அடைய முற்படுகின்றோம். உங்களால் ஒருபோதும் உங்கள் தலையின் வழியாகக் கடவுளை அடைய முடியாது. நீங்கள் வெறுமனே உங்கள் தலையை விட்டுவிட்டால், தானாகவே இதயத்தின் (உணர்வின்) வழியாக இயங்க ஆரம்பித்து விடுவீர்கள்; பிறகு அவரை அடையக் கூட வேண்டாம் - அவர் ஏற்கனவே உங்களுக்குள்தான் இருக்கிறார் - என்பதைக் கண்டுபிடிப்பீர்கள்!

உங்கள் தலையைக் கொண்டு, நீங்கள் எப்பொழுதும் வெளியேதான் தேடுவீர்கள்; ஒருபோதும் உங்களால் கடவுளை வெளியே கண்டுபிடிக்க முடியாது. உங்கள் தலையைக் கொண்டு, நீங்கள் நன்றியுணர்வுடன் இருப்பதற்கான காரணங்களைத் தேடுவீர்கள். நீங்கள் தலையிலிருந்து இதயத்திற்கு நகர்ந்து

நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது.

விடும் பொழுது, ஒரு முழுமையான, புதிய வெளி உங்களுக்காகத் திறக்கும்; அது நீங்கள் எப்பொழுதும் அறிந்ததுதான் என்பதை யும், இதை நீங்கள் உணரவிடாமல் தடுத்ததும், இந்த எல்லா சேதத்திற்கும் காரணமும் உங்கள் மனம்தான் என்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்.

நீங்கள் இதயத்திலிருந்து இயங்கும் பொழுது, எப்பொழுதும் நன்றியுணர்வுடன்தான் இருப்பீர்கள். நாம் எப்பொழுதாவது மூளைப்பூர்வமான நன்றியுணர்வு என்று சொல்கிறோமா? இல்லை! இதய பூர்வமான நன்றியுணர்வு என்றுதான் சொல்கிறோம், இல்லையா?

அடுத்ததாக நீங்கள் கேட்பீர்கள், "எவ்வாறு நாங்கள் தலையிலிருந்து (அறிவிலிருந்து) இதயத்திற்கு (உணர்வுக்கு) நகர்வது, ஸ்வாமிஜி?" என்று. வெறுமனே உங்கள் தலையைப் பற்றிய விழிப்புடன் இருங்கள், அதுவே போதும்! நீங்கள், உங்கள் தலையைப் பற்றிய கவனமின்மை யால்தான், ஒரே சீராகவும், ஒரு இயந்திர கதியிலும் அதைச் செயல்பட அனுமதிக்கிறீர்கள். ஒரு முறை உங்கள் தலையைப் பற்றிய விழிப்புடன் இருக்க ஆரம்பித்து விட்டால், உங்களால் அதை விட்டுவிட முடியும்.

நன்றியுணர்வு என்பது ஒரு நற்பண்பல்ல. அதுவே உங்கள் அடிப்படை மனோபாவமாக இருக்க வேண்டும். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்க, இதைவிட அதிகமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் நன்றியுணர்வுடன் மட்டும் இருந்தாலே, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் அற்புதமாக இசைந்திருக்க முடியும்; பிறகு பிரபஞ்ச இருப்புத் தன்மை தன்னுடைய மந்திர ஜால வைபவங்களை உங்களுக்கு வெளிப்படுத்தும். பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சாய்ந்து அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டியதுதான்.

உங்கள் இருப்புத்தன்மையில் பிரபஞ்ச இருப்புத்தன்மை மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைக்கும் தன்மையே, உங்களை இந்த பூமியில் கடவுளைப் போல வாழவைக்கும்.

இசைவாக இருத்தல் என்றால் என்ன என்று விளக்கு கிறேன். நாமனைவருக்கும் வானொலி எவ்வாறு வேலை செய்கிறது என்பது தெரியும், இல்லையா?

ஆம், ஸ்வாமிஜி....

சரி, அதே வானொலி, அதில் எந்தவிதமான உருவ மாற்ற மும் செய்யாமல், பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பும் பல வானொலி நிலையங்களுடன் இணைக்கப்பட முடியும், இல்லையா? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைய ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஏதேனும் இடையூறோ அல்லது குறுக்குப் பேச்சோ வந்தால், என்ன செய்கிறீர்கள்?

நாங்கள் இன்னும் அதை நுட்பமாக இசைந்திருக்குமாறு1 சரி செய்கிறோம், ஸ்வாமிஜி.

மிகச் சரி! ஏதேனும் ஒரு நிலையத்தை இன்னும் மிகத் தெளிவாகக் கேட்பதற்கு, நீங்கள் அதை நுட்பமாக இசைந் திருக்குமாறு சரி செய்ய வேண்டும், அவ்வளவே. இப்பொழுது, இதே கருத்தை, நம்மை பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக2 வைத்திருப்பதற்கும் பிரயோகியுங்கள்.

நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நம்மை எதனpurch இசைவாக வைத்திருக்கிறோமோ, அந்த அனுபவத்தை அடைகிறோம். இப்பொழுது, ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நம்மை இசைவாக வைத்திருப்பது என்பது, முழுவதுமாக நமது சொந்தத் தேர்வு; இதை யாராவது மறுக்கிறீர்களா? இல்லை. நீங்கள் கேட்க விரும்பும் நிகழ்ச்சியை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது, சரிதானே?

(கூட்டத்திலிருந்து முணுமுணுப்பு) ஆமாம், ஸ்வாமிஜி...

| Fine - tune¹ | Tune² |

Fine - tune

Tune

அதே போல, நீங்களும் உங்களைச் சுற்றி மனித மனதால் உருவாக்கப்பட்டுள்ள குழப்பத்துடன் உங்களை இசைவாக வைத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பீர்களானால், நீங்களும் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவீர்கள். நீங்கள் கவலை, அதிருப்தி, தடுமாற்றம் முதலியவற்றால் ஆன, முடிவற்ற சுழலில் சிக்கிக் கொள்வீர்கள்.

அதே சமயத்தில், உங்களை, இந்த மொத்தக் காட்சியையும் நடத்திக் கொண்டிருக்கும் மைய இழையான, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பீர் களானால், உங்களைச் சுற்றி இருக்கும் குழப்பத்திலிருந்து நீங்கள் சரியான இழையைப் பிடித்து விட்டீர்கள்; நீங்கள் எல்லா உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை பெற்று விடுவீர்கள். நீங்கள் ஒரு அழகான நறுமணம் பரப்பும் மலராக மலர்ந்து விடுவீர்கள்.

முன்பிருந்த உணர்ச்சிகளுடன், வாழ்க்கை ஒரு நிரந்தரமான அதிருப்தி நிலையாகத் தோன்றும். பிந்தையதில், வாழ்க்கையே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மொழியான - இசையாகிவிடும்; நீங்கள் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை மிகுந்த பரவசமாக இருக்கும்.

அதிருப்தி உங்களை கீழ்நோக்கி இழுக்கும்; கனமாகவும், துயரமாகவும் ஆக்கும். இன்னொரு பக்கம், நன்றியுணர்வும் அதனுடன் வரும் மனநிறைவும், உங்களை இலேசாகவும், ஆனந்த மயமாகவும் ஆக்கும். நாம் அதிருப்தியுடன் இருப்பதற்குக் காரணம், விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுதான். நீங்கள் விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்பொழுது,

நம்மால் விழிப்புடன், இந்தப் பிரபஞ்ச சக்தியை நோக்கிய ஒரு தொடர்ந்த நன்றியுணர்வில் இருக்க முடியுமானால், நம்ம அதன் மடியில் வைத்துப் பாதுகாப்பதை உணர முடியும். நிறைய தவறவிட்டு விடுகிறீர்கள்; பிறகு உங்களை எதுவுமே சந்தோஷமாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ ஆக்காது. நான் சொல்கிறேன்.... ஒரு போதும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்¹.

இந்தச் சின்னக் கதையைக் கேளுங்கள்.....

ஒரு பிச்சைக்காரன் தெருவில் நடந்து கொண்டிருந்த ஒருவனை நிறுத்திக் கேட்டான், "இரண்டு வருடங்களுக்கு முன்பு, நீங்கள் எனக்கு 20 ரூபாய் கொடுப்பது வழக்கம்; சென்ற வருடம் முழுவதும் 10 ரூபாய்தான் கொடுத்தீர்கள்; கடந்த சில மாதங்களாக நீங்கள் வெறும் 2 ரூபாய்தான் கொடுக்கிறீர்கள். ஏன்?". அவன் சொன்னான், "முதலில் நான் பிரம்மச்சாரியாக இருந்தேன்; பிறகு எனக்குக் கல்யாணமாயிற்று; இப்பொழுது எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அதனால்தான்". அந்தப் பிச்சைக்காரன் கத்தினான், "என்ன! உன் குடும்பத்தை நடத்துவதற்கு என் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறாயா?".

(பலத்த சிரிப்பு!)

அந்தப் பிச்சைக்காரன் சொல்கிறான், "உன் குடும்பத்தை நடத்துவதற்கு என் பணத்தை உபயோகிக்கிறாயா!" என்று. உண்மையில், நம்மில் பலரும், இன்னொருவர் நமக்கும், நம் தேவைகளுக்கும் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நமது பிறப்புரிமை என்றே எண்ணிக் கொண்டிருக்கிறோம். மேலும் அவற்றை நாம் வெறுமனே சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற மனோபாவம் நம்மிடம் இருக்குமானால், நாம் எவ்வளவு ஆழமான அறியாமையில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. நாம் இவ்வாறு இருக்கும் பொழுது,

Never take anything for granted¹ முழுக்குறைபாட்டுடன் இருக்கிறோம் என்பதைக் கூட அறிவ தில்லை. இந்த முழு மனோபாவமும் ஒரு அடிப்படையான மாற்றத்திற்குள்ளாக வேண்டும். உங்களுடைய சொந்தத் தந்தையோ அல்லது தாயோ அல்லது கணவனோ அல்லது மனைவியோ கூட, சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடக் கூடாது.

ஒருவன் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்து, தன் மனைவி ஒரு மோசமான மனநிலையில் இருப்பதைக் கண்டான். அவள் அவனை நோக்கிக் கத்தினாள், "கடைசியில் நான் எப்படியோ சமாளித்து வேலைக்காரியை வீட்டு வேலையனைத்தும் அவளே செய்து விடுமாறு பழக்கியிருந்தேன்; அவள் இப்பொழுது விட்டுவிட்டுச் சென்று விட்டாள்!". அவன் இரக்கத்துடன் கேட்டான், "என்ன காரணத்திற்காக, அன்பே?". அவள் சொன்னாள், "நல்லது, அதற்கு நீங்கள்தான் காரணம்! தொலை பேசியில் அவளுடன் பேசும் பொழுது மிகவும் மூர்க்கத்தனமாக பேசினீர்கள் என்று சொல்கிறாள்; அவளுடைய சுய மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைப்ப தால் வேலையை விட்டுவிட்டாள்". அவன் குழப்பமடைந்து உளறினான், "ஆனால், நான் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதாக அல்லவா நினைத்தேன்!".

(சிரிப்பு)

நாம் எப்பொழுதுமே உறவு முறைகளைச் சாதாரண மாகவே எடுத்துக் கொள்கிறோம்; அதனால் சிக்கலுக்கு உள்ளாகிறோம். ஒவ்வொரு தனி மனிதரையும், முழுமையின் பகுதியாக நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்; அவர்களை நோக்கிய நன்றியுணர்வுடன் இருங்கள்; பிறகு நீங்கள் ஒருபோதும் யாரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். பிறகு நீங்கள் ஒவ்வொருவரையும்,

வெறுமனே நன்றியுணர்வுடன் வாழ முயற்சி செய்யுங்கள்; அற்புதங்கள் நிகழ்வதைக் கவனியுங்கள். அவரும் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு பகுதியாக இருப்பதற்காக, வழிபடுவீர்கள்; மரியாதையுடன் நடத்துவீர்கள்.

நீங்கள் விஷயங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், உங்களுக்குக் கிடைத்தவற்றைப் பெரிதாகக் கருதுவீர்கள். நீங்கள் உட்கார்ந்து ஆராய்ந்து பார்ப்பீர்களானால், நாம் எப்பொழுதுமே நமக்குக் கிடைக்காதவற்றைதான் பெரிதாகக் கருதுகிறோம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்! நமக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டாலும், நாம் சந்தோஷமாக இருப்பதில்லை; ஏனெனில் நாம், நமக்குக் கிடைக்காதவற்றைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருக்கிறோம்!

வாழ்க்கை உங்களுக்குக் கொடுத்ததாக நீங்கள் கருதுவதை யெல்லாம், அமர்ந்து பட்டியலிட வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் அந்தப் பட்டியலை உங்கள் சொந்தக் கண்களிலிருந்தே ஆரம்பிக்கலாம். நான் முன்பே சொன்னது போல், எத்தனை பேர்களுக்குக் கண் பார்வை அருளப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாள் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது, பார்வையை இழந்து விட்டீர்கள் என்பதை உணர நேர்ந்தால், என்ன நடக்கும் என்பதை உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடிகிறதா?. உங்களால் படுக்கையில் இருந்து எழுந்து குளியலறைக்குக் கூடச் செல்ல முடியாது! நன்றியுணர்வேயின்றி நீங்கள் முன்னர் செய்த ஒவ்வொரு செயலும் இப்பொழுது உங்கள் முழுப் பிரயத்தனத் தையும் எடுத்துக் கொள்ளும்.

எவ்வாறாயினும், வாழ்க்கையில் உங்களுக்குக் கொடுக்கப் பட்ட எல்லா விஷயங்களையும், நீங்கள் பட்டியலிட ஆரம்பித்தால், அது ஒரு நீண்ட பட்டியலாக முடியும். அதை முடித்த பிறகு,

நீங்கள் பொங்கும் இதயத்துடன், கேள்விகள் எதுவுமின்றி, பெற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால், பிரபஞ்ச இருப்புத்தன்மை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

உங்களுக்குக் கொடுக்கப்படாததாக நீங்கள் கருதும் விஷயங்களைப் பட்டியல் இடுங்கள். இதுவும் ஒரு நீண்ட பட்டியலாகவே... உண்மையில் மிக நீண்ட பட்டியலாகவே இருக்கும்! அது ஒருவேளை பென்ஸ் காரில் ஆரம்பித்து, பென்ஸ் காரை விடவும் நீளமான ஒரு பட்டியலாக முடியக் கூடும்! நீங்கள் சிரத்தையுடன் ஒரு விஷயத்தைக் கூடத் தவற விடாமல் எழுதுவீர்களானால், இரண்டு பட்டியல்களுமே முடிவற்றவையாக, உண்மையில் எல்லையற்றவையாக இருக்கும்.

சரி, இப்பொழுது இரண்டு பட்டியல்களும் நம் முன் இருக்கிறது. இப்பொழுது நாம் எந்தப் பட்டியலைப் பார்க்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பது நம்மிடம்தான் இருக்கிறது. நாம் நமக்குக் கொடுக்கப்படாத விஷயங்களைப் பார்த்து, நமது வாழ்க்கையை மந்தமாகவும், உயிரற்றதாகவும் ஆக்கிக் கொள்ளப் போகிறோமா, அல்லது நமக்குக் கொடுக்கப்பட்ட விஷயங்களைப் பார்த்து, மகிழ்ச்சியுடன், நமது வாழ்க்கையை அற்புதமாக ஆக்கிக் கொள்ளப் போகிறோமா? அது முழுமை யாக நமது தேர்வுதான்!

எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒருவன், இரண்டாவது பட்டியலைப் பேராசையுடனும், அதிருப்தி யுடனும் பார்ப்பான். நீங்கள் பேராசையுடன் இருப்பீர்களானால், தானாகவே அதிருப்தியுடன்தான் இருப்பீர்கள்; ஏனெனில் உங்கள் பேராசைக்கு ஒரு முடிவே கிடையாது; அதனால் திருப்தி என்பதே உங்கள் வாழ்வில் ஒருபோதும் நிகழ முடியாது! எப்படியோ, இவன், முதல் பட்டியலிலிருந்து கிடைக்கும் வாழ்வின் மகிழ்ச்சியை முழுவதுமாகத் தவறவிட்டு விடுகிறான்!

அவன் வழியில் வரும் எதுவுமே, அது பெரியதோ அல்லது சிறியதோ, அவனுக்குச் சாதாரணமாகத்தான் தெரியும்; அவன்

நாம் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேர் பெற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம்? அடுத்ததன் வருகையை நோக்கி மட்டுமே காத்துக் கொண்டிருப்பான். அடுத்தது வரும் பொழுது, அதுவும் சாதாரணமாகத்தான் தெரியும்; ஏனெனில் ஏற்கனவே அவன் அதற்கடுத்ததைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டு இருக்கிறான்!

அதே சமயத்தில், எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்கும் ஒருவருக்கு, இரண்டாவது பட்டியல் என்ற ஒன்று இருப்பது கூடத் தெரியாது! அவருக்கு ஒவ்வொரு கணமும் நன்றியுணர்வுடன் இருக்கவும், அதையே சுவாசிக்கவும் மட்டும்தான் தெரியும். அவருக்கு வாழ்க்கை என்பது ஒரு நிரந்தரக் கொண்டாட்டமாக இருக்கும். அவர் மிகவும் இலேசாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பார். அவர் கவனிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம். அவர், அவருக்கேயுரிய தனித்துவம் வாய்ந்த அழகைப் பரப்பிக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டாவது பட்டியல் என்று ஒன்று இருப்பது கூடத் தெரியாது. அவருக்கு அந்த மொழியே தெரியாது! அவருக்குத் தெரிந்ததெல்லாம் ஆழ்ந்த அன்புடனும், நன்றியுணர்வுடனும் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது மட்டுமே, அவ்வளவுதான்.

எப்பொழுதும், வெறுமனே நன்றியுணர்வுடன் இருப்பதன் மூலமே, வாழ்க்கையில் ஒவ்வொரு பெயரளவிலான லோகாயதமான விஷயமும் புனிதமானதாகவும், அற்புதமானதாகவும் ஆகிவிடும்! நான் சொல்கிறேன்... வாழ்க்கை மிகவும் சலிப்பாகி விட்டது என்று நீங்கள் நினைப்பதற்குக் காரணம், உங்களு டைய எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம்தான். வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல் சலிப்பானதல்ல. ஒவ்வொரு சின்ன விஷயமும் மிகவும் அழகாகவே இருக்கிறது. சலிப்பாக இருப்பது உங்கள் மனம்தான்; உங்கள் மனம்தான், பிரபஞ்ச இருப்புத்தன்மை

உங்கள் குடும்பம் அல்லது உங்கள் வியாபாரம் உங்களால்தான் நடக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அற்புதமாக பிரவகித்துச் செல்வதை ஊடுருவிப் பார்க்க உங்களை அனுமதிப்பதில்லை.

உங்கள் மனம், எப்பொழுதும் தொடர்ந்து 'அடுத்தது என்ன’ என்றே கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு உயிரற்ற வடிவ அமைப்பாகி விட்டது.

உங்களால் எல்லாவற்றையும் ஆச்சரியம் ததும்பும் மனோபாவத்துடனும், வியப்புடனும் நோக்க முடியுமானால், அது உங்களை மிகுந்த நன்றியுணர்வாலும், மன நிறைவாலும் நிரப்புகிறது; ஏனெனில் அந்த சமயத்தில் நீங்கள் கேள்வி எதுவும் கேட்பதில்லை. நீங்கள் உங்கள் மனதை விளையாட அனுமதிப்பதில்லை. நீங்கள் வெறுமனே உங்கள் இதயத்துடன் ஒத்திசைந்து கொண்டு இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் ஒரு குழந்தையாகி விடுகிறீர்கள்; நீங்கள் ஒரு குழந்தையாகி விடும் பொழுது, எதுவுமே சலிப்பாக இருப்பதில்லை; எல்லாமே அற்புதமாகத் தான் இருக்கிறது!

அதனால்தான் குழந்தைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அவர்கள் மனம் உயிரற்றுப் போய் விடுவதில்லை; அது புத்துணர்ச்சியுடனும் பிரவகிக்கும் தன்மையுடனும் இருக்கிறது. சமூகம் இன்னும் அவர் களுடைய மனதை பழக்கமான வடிவ அமைப்புகளால் நெறிப்படுத்தி விடவில்லை.

எல்லாவற்றையும் ஒரு நன்றியுணர்வுடனும், வியப்புடனும் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் சொந்த உடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, வெறுமனே இந்தச் சின்னப் பயிற்சியை முயற்சி செய்யுங்கள்! கீழே அமர்ந்து, கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஒரு சின்ன விபத்தில் உங்கள் வலது கைச் சுண்டு விரல் துண்டாகி விட்டதாக, வெறுமனே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் சுண்டுவிரல், அதன் அசலான

| நீங்கள் வெறுமனே நன்றியுணர்வாகிவிட வேண்டும். | | :--- | | நன்றியுணர்வாகிவிடச் சிறந்த வழி, காரணமின்றியே | | மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்வதுதான். |

அளவில் இப்பொழுது முக்கால் பாகம் தான் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலில் வேறு எந்தவிதமான உருவச்சிதைவும் இல்லை. எல்லாம் சரியாக இருக்கும் உடலையே பெற்றிருக்கிறீர்கள். திடீரென்று உங்கள் சுண்டு விரல் மட்டுமே துண்டாகி விட்டது.

உங்களுடைய எதிர்ச்செயல் எவ்வாறு இருக்கும்? உங்களுக்கு அதை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் உங்கள் கையை உபயோகப்படுத்திச் செய்யும் ஒவ்வொரு சின்ன செயலிலும், உங்கள் சுண்டு விரலுக்கும் ஒரு பங்கு இருக்கிறது, இல்லையா? உங்களுக்கு என்ன நிகழும்? நீங்கள் மனச்சோர்வு கூட அடைய நேரிடலாம்.

இப்பொழுது எண்ணிப் பாருங்கள், இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் எத்தனை விதமான உருவக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் என்று. எல்லா விரல்களும் இல்லாத மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! உங்கள் தலை முதல் கால் பெருவிரல் வரை ஒரே ஒரு சிறு ஊனம் இருந்தால் கூட, நீங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு அம்சத்தை அனுபவிக்காமல் தவறவிட்டு விடுவீர்கள், சரிதானே?

தினமும் சில நிமிடங்கள் நீங்கள் உங்களுடனேயே ஒரு அறையில் அமர்ந்து, உங்கள் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அன்புடன் தொட்டு, வாழ்க்கையில் பல விஷயங்களை அனுபவிக்க சாத்தியப்படுத்தியதற்காக அந்தப் பகுதிக்கு நன்றி கூறுங்கள்.

நீங்கள் இது போன்று எப்பொழுதாவது உங்கள் உடலை எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு தூரம் உங்கள் உடலை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் உடலை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? நம்மில் சிலர்,

மகிழ்ச்சியாக இருக்கக் காரணங்களைத் தேடாதீர்கள். கேள்விகள் எதுவுமின்றி எல்லாவற்றையும் வெறுமனே மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.

நமது உடல் அவ்வளவாக அழகாக இல்லை என்று எண்ணுவதால், அதை வெறுக்கக் கூட செய்கிறோம். சாமி சொல்கிறேன்... இந்தப் பயிற்சியை நீங்கள் தினமும் செய்வீர்களானால், உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் நோக்கிய ஆழமான அன்புடனும் நன்றியுணர்வுடனும் இருப்பீர்களானால், உங்கள் முழு உடலும் முகமும் முழுவதுமாக ஒரு புதிய பிரகாசத்துடன் ஒளிர்வதைக் காண்பீர்கள்.

உங்கள் உடல் உங்கள் மனதைப் பிரதிபலிக்கிறது. அதை ஒருபோதும் அலட்சியம் செய்து விடாதீர்கள்; அல்லது சாதாரண மாக எடுத்துக் கொண்டு விடாதீர்கள். உங்களுடைய இந்த உடலைக் கொண்டுதான் பல விஷயங்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடிகிறது. இன்று இங்கு வருவதற்கும், இந்தப் பேச்சை எந்த முயற்சியுமின்றிக் கேட்பதற்கும் கூட, உங்கள் உடலின் எல்லாப் பகுதிகளும் சரியாகச் செயல்பட வேண்டும் இல்லையா?

ஒரு சின்ன கதை...

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில், ஒரு சிறுமி அவளது தாயுடன், இரவு உணவிற்காக மேசையின் முன் அமர்ந்து இருந் தாள். உணவு பரிமாறப்பட்டது; அவள் பிரார்த்தனை செய்யாமல் சாப்பிட ஆரம்பித்து விட்டாள். அதிர்ச்சியடைந்த தாயோ, அவள் எவ்வாறு அத்தகைய செயலைச் செய்யலாம் என்று கேட்டாள். அதற்கு அந்தச் சிறுமி சொன்னாள், "நான் இதற்கு முன் ஒரு முறையாவது நன்றி சொல்லாத எதுவும் என் தட்டில் இல்லை!".

எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் என்று இதைத்தான் நான் சொல்கிறேன். அது சிறு குழந்தைகளிடம் வேர் விட்டுக் கொண்டிருப்பதைக் காண வருத்தமாக இருக்கிறது.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். கண்டிப்பாக அதற்கும் மகிழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.

ஒரு சிறுமி, அவளது தாயிடம் கேட்டாள், “அம்மா, இன்னும் கிறிஸ்துமஸுக்கு எத்தனை நாட்கள் இருக்கின்றன?”. அம்மா கேட்டாள், “அதை ஏன் தெரிந்து கொள்ள விரும்பு கிறாய்?”. சிறுமி சொன்னாள், “நான் நல்ல பெண்ணாக இருக்க ஆரம்பிப்பதற்கான நேரம் வந்து விட்டதா என்று பார்க்கிறேன்!”.

இவ்வாறுதான் நாம் குழந்தைகளை எண்ணவும், நடந்து கொள்ளவும் பழக்குகிறோம். நாம் அவர்களுக்கு எவ்வாறு வர்த்தகப் பரிவர்த்தனை செய்வது என்று கற்றுக் கொடுக்கிறோம். நாம் அவர்களுக்கு எல்லாமே வர்த்தகப் பரிவர்த்தனையைத் தவிர வேறல்ல என்று கற்றுக் கொடுக்கிறோம். நாம் அவர்களுக்குத் தன்னிச்சையாகவும், பிரவகிக்கும் தன்மையுடனும் இருக்கக் கற்றுத் தருவதில்லை. ஒரு நோக்கமின்றி வாழ்வதற்குக் கற்றுத் தருவதில்லை. நாம் அவர்களுக்கு எல்லாவற்றையும் ஒரு குறிக்கோளை நோக்கியே இருக்குமாறு செய்து வைத்து விட்டோம். இவை அனைத்தும் முற்றிலும் அபத்தமானவை.

இவையெல்லாவற்றையும் நாம் அவர்களுக்குச் செய்து விட்டபடியால், முதலில் அவற்றைத் திருப்புவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். மிகவும் தெளிவாக இருங்கள்... நான் உங்களுக்குச் செய்வது எல்லாமே திருப்புவதற்காகத்தான். நான் தொடர்ந்து திருப்பி செய்து கொண்டு இருக்கிறேன். ஏற்கனவே உங்களுக்கு எவ்வளவு செய்யப்பட்டு விட்டது என்பதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். தலைமுறை தலைமுறையாக, மக்கள் தங்கள் கருத்துக்களை உங்களிடம் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் அவற்றையெல்லாம் முதலில் திருப்பி விட்டு, பிறகு நீங்கள் malarvathaṟkāṉa மலர்வதற்கான ஒரு வெற்றிடத்தை உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

நீங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிற்கும் - மகிழ்ச்சியாக இருப்பதற்கும் கூட - ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.

நான் மக்களிடம் அவர்கள் தொடர்ந்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று சொன்னால், அவர்கள் போய் விட்டு திரும்பி வந்து என்னிடம் சொல்கிறார்கள், “ஸ்வாமிஜி, இப்பொழு தெல்லாம் நான் கார் ஓட்டுனர்களுக்கும், வீட்டில் வேலைக்காரர் களுக்கும் நன்றி சொல்கிறேன்” என்று. மிகவும் தெளிவாக இருங்கள். நன்றியுணர்வு உங்கள் இருப்புத் தன்மையாகி விடும் பொழுது, நீங்கள் இது போன்ற விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்கள்... உங்களுக்குப் பிரியமான ஒருவரை இழந்து துக்கத்தில் தவிக்கும் பொழுது, உங்களுடைய துக்கத்தை வார்த்தைகளாகக் கொண்டு வருவீர்களா? உங்களுடைய துக்கத்தை வார்த்தைகளாகக் கொண்டு வர முடியுமா? முடியாது! அது மிகவும் ஆழமாக வேர் கொண்டு விட்ட ஒரு உணர்ச்சி; அது உங்களுடைய இருப்புத் தன்மையின் ஒரு நிலையாகி விடுகிறது இல்லையா? அதை உணர மட்டுமே முடியும்; ஒருபோதும் கூற முடியாது இல்லையா?

ஆமாம் ஸ்வாமிஜி...

அதே போல், நன்றியுணர்வு உங்களுடைய அடிப் படையான இருப்புத் தன்மையாகிவிடும் பொழுது, அது வெறுமனே உங்களுடைய ஒரு நிலையாகி விடும்; அதைக் கூறிக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதை உங்களால் ஒருபோதும் கூறவும் முடியாது. ஆனால், சமூக காரணங்களுக்காக நன்றி சொல்வது சரிதான்; ஏனெனில் நீங்கள் வெளிப்படுத்தாவிட்டால், அது மற்றவருடைய காதுகளை எட்டாது.

ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், நாம் மனதின் நன்றியுணர்விலிருந்து, இருப்புத் தன்மையின்

மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் அடிப்படை இயல்பாகிவிடட்டும் பிறகு நன்றியுணர்வு தானாகவே உங்கள் இருப்புத்தன்மையாகிவிடும்.

நன்றியுணர்விற்கு, நகர்ந்து விட வேண்டும். நாம் பேசிக் கொண்டிருக்கும் நன்றியுணர்வை, உங்களால் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது; ஏனெனில் அது மிகவும் ஆழமானது.

மக்கள் என்னிடம் அடிக்கடி சொல்கிறார்கள்; "ஸ்வாமிஜி, உங்களுடன் இணைந்த பிறகு, எங்கள் வாழ்வில் நடந்த பல விஷயங்களுக்கு, நாங்கள் உங்களிடம் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்".

நான் சொல்கிறேன்... சமூகப் பண்பாட்டின் காரணமாக நீங்கள் எதற்காகவாவது ஒருவருக்கு நன்றி சொல்லலாம்; ஆனால் நன்றியுணர்வு என்பது ஒருவரை நோக்கியது அல்ல. நீங்கள் பெற்றுக் கொண்ட எதற்காகவாவது ஒருவரை நோக்கிய நன்றியுணர்வுடன் இருந்தால், அது வெறுமனே மனதின் நன்றி யுணர்வுதான். அது நன்றியுணர்வின் ஆரம்பப்பள்ளி நிலை.

உண்மையான நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் நிகழும் ஒரு ஆழமான, தாங்க முடியாத உணர்வு; அது ஏதேனும் கிடைத்ததன் விளைவாக வருவதில்லை; வெறுமனே இருத்தலினாலேயே வருவது; பரிவுமிக்க உயிராற்றலாகிய பிரபஞ்ச இருப்புத்தன்மையை எண்ணுந்தோறும் எழுவது, அவ்வளவே. இந்த நன்றியுணர்விற்கு எந்தவிதமான உறவு முறையும் தேவையல்ல; அது யாரையும் அல்லது எதையும் சார்ந்து இருப்பதல்ல; அது இச்சை, கோபம், வெறுப்பு அல்லது அன்பு போன்ற உணர்ச்சிகளால் ஊசலாடிக் கொண்டு இருப்பதில்லை. அது வெறுமனே இருக்கிறது, அவ்வளவே.

நீங்கள் உங்கள் நன்றியுணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்தக் காரணம் உங்கள் அஹங்காரம்தான்; நீங்கள் மரியாதை தெரியாதவர் என்று மக்கள் எண்ணுவதை நீங்கள் விரும்பவில்லை. அதனால், அதை வெளிப்படுத்தும் கணத்திலேயே

சொர்க்கமும் நரகமும் வெளியுலகில் புவியியல் ரீதியான இடங்கள் அல்ல. அவை நீங்களே உங்களுக்குள் உருவாக்கிக் கொள்பவை.

அதன் மதிப்பைக் குறைத்து விடுகிறீர்கள் அல்லது அதைப் போலியாக்கி விடுகிறீர்கள்.

உண்மையில், உங்கள் உடல் மொழியே உங்களுடைய நன்றியுணர்வின் நிலையைத் தெரிவித்து விடும்; உங்கள் கண்கள் தெரிவிக்கும்; உங்கள் புன்னகை தெரிவிக்கும்; உங்கள் அன்பும் உற்சாகமும், அதை வார்த்தைகளை விட இன்னும் நன்றாகவே தெரிவித்து விடும். நன்றியுணர்வினால் பெருகும் கண்ணீர் அதை வேறெதை விடவும் இன்னும் நன்றாகத் தெரிவிக்கும். உங்களால் தாங்க முடியாதபோது, நீங்கள் தளும்பிக் கொண்டிருக்கும் பொழுது, கண்ணீர் பெருகுகிறது.

நான் உங்களை அழச் சொல்லவில்லை! நீங்கள் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதை உங்கள் உடல் வெளிப்படுத்தி விடும், அதை உங்களால் மறைக்க முடியாது. அதுவே உங்களுடைய இருப்புத்தன்மையின் நிலையைக் காட்டும் உண்மையான அறிகுறி என்றுதான் சொல்கிறேன்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்தக் கண்ணீர் எந்த ஜாதியையோ, இனத்தையோ அல்லது மதத்தையோ சார்ந்ததல்ல! அதை ஹிந்துக் கண்ணீர், முஸ்லிம் கண்ணீர் என்று வகைப்படுத்த முடியாது; அது எந்த மதத்தையும் சேர்ந்ததல்ல. அது இருப்புத் தன்மையைச் சேர்ந்தது; இருப்புத் தன்மை இவையெல்லாவற்றை யும் கடந்தது. நன்றியுணர்வு மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லாத் தடைகளையும், நெறிப்படுத்தல்களையும் கரைத்து விடக் கூடிய ஒன்றாகும்; அதனால்தான் அது இறுதியான, உயர்ந்த பிரார்த்தனையாக இருக்கிறது.

ஆழமான எதையுமே ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்தி விட முடியாது. கவிஞர்கள் அதை வெளிப்படுத்த

நன்றியுணர்வே இறுதியான, உயர்ந்த பூஜை அல்லது சமர்ப்பணம்.

கவிதைகள் எழுதலாம், ஓவியர்கள் அதை வெளிப் படுத்த ஓவியங்கள் வரையலாம், எழுத்தாளர்கள் அதை வெளிப்படுத்த ஏதேனும் எழுதலாம்; ஆனால் இவை எவற்றின் மூலமாகவும், ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத ஒரு பகுதி இருந்து கொண்டுதான் இருக்கும். பிரபஞ்ச இருப்புத்தன்மையை ஒருபோதும் சாதாரண விஷயங்களால் வெளிப்படுத்தி விட முடியாது. அதனால்தான் இது பெரும் புதிராகவும், கவர்ந்திழுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதனால்தான் அது உங்களுக்கு நிகழும் பொழுது, வார்த்தைகளின் விவரிப்பிற்கு அப்பாற்பட்ட கிளர்ச்சி தரக் கூடியதாக இருக்கிறது! அதனால்தான் அதை உங்களால் உணர மட்டுமே முடியும்; வெளிப்படுத்த முடியாது. அதனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு என்னிடம் வருகிறீர்கள்!

என்னிடம் நீங்கள் எந்தவிதமான நன்றியுணர்வையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை; ஏனெனில் நீங்கள் வெளிப்படுத்தாமலே கூட, என்னால் அறிந்து கொள்ள முடியும். உங்களிடம் உண்மையான நன்றியுணர்வு தாங்க முடியாமற் போகும் பொழுது, அது உங்களுக்குத் தெரியும் முன்பே கூட எனக்குத் தெரிந்து விடும்! எனக்கு உங்கள் இதயத்தின் துடிப்பு தெரியும்! அதை உங்கள் கண் பார்வையின் ஆழத்தில் இருந்து தெரிந்து கொள்வேன்! உண்மையில், நீங்கள் உங்களை வெளிப் படுத்திக் கொள்ளும் பொழுது, உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடும்; ஏனெனில் பெரும்பாலான சமயங்களில், நீங்கள் முரண்பாடான வழிகளில் எண்ணவும் பேசவும் செய்கிறீர்கள். நீங்கள் உள்ளே ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கக் கூடும்; வெளியே வேறொன்றை வெளிப்படுத்தக் கூடும்.

நினைவில் கொள்ளுங்கள்... ஒருவன் உள்ளிருந்து மலரும் பொழுது, அதை பிரபஞ்ச இருப்புத் தன்மை அறிகிறது.

உங்களால் ஒருபோதும் உங்கள் தலையின் வழியாகக் கடவுளை அடைய முடியாது.

வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய ஒரு ஆழமான நன்றியுணர்வுடன் இருங்கள்; அதுவே போதுமானது. அதை வெளிப்படுத்த வேண்டியதில்லை; வெறுமனே அதுவாகவே ஆகிவிடுங்கள், அவ்வளவே!

இந்தியாவில் குருநாதரின் பாதங்களைப் பற்றிக் கொள்ளும் ஒரு பழக்கம் இருக்கிறது. நீங்கள் குருநாதரை நோக்கிய அளவு கடந்த நன்றியுணர்வில் இருக்கும் பொழுது, அதை வெளிப்படுத்த, வழியெதுவும் கிடையாது. அப்பொழுது நீங்கள் வெறுமனே அவரது பாதங்களைப் பற்றிக் கொள்கிறீர்கள்; அவருடன் ஒன்றாக உணர்ந்து, உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறீர்கள்.

என்னைப் பார்க்க, பலரும் பல இடங்களிலிருந்தும் வருகின்றனர். அவர்களில் சிலர், வெறுமனே என் முன் வந்து நிற்கின்றனர்; அவர்கள் எதுவும் சொல்வதில்லை. அவர்கள் கண்களிலிருந்து வெறுமனே ஆனந்தக் கண்ணீர் பொங்குகிறது. அவர்கள் எதையும் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக எண்ணுவதில்லை; ஏனெனில் அவர்களால், அவர்களது கண்ணீரை விட அதிகமாக எதையும் தெரிவித்து விட முடியாது. அவர்கள் வெறுமனே தங்கள் இருப்புத் தன்மையிலிருந்து தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

நீங்கள் ஒரு குருவின் இருப்பில் இருக்கும் பொழுது, ஆழ்ந்த நன்றியுணர்வுடனும், அன்புடனும் இருங்கள்; வெறுமனே அவரது அருகாமையில் இருப்பதற்கான நன்றியுணர்வுடன் இருங்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களுடைய எல்லாக் கேள்விகளும் கரைந்து விடுவதையும், நீங்கள் ஒருவிதமான மகிழ்ச்சியால் நிரப்பப்படுவதையும் காண்பீர்கள்! நீங்கள் சுலபமாக நிரப்பப்படுவீர்களானால், சரியான இழையைப் பிடித்துவிட்டீர்கள்

உங்கள் தலையைக் கொண்டு நீங்கள் எப்போதும் வெளியேதான் தேடுவீர்கள். ஒருபோதும் உங்களால் கடவுளை வெளியே கண்டுபிடிக்க முடியாது.

என்று அர்த்தம். நீங்கள் சுலபமாக நிரப்பப்படவில்லையென்றால், அதிருப்தியுடனும் விடையளிக்கப்படாத கேள்விகளுடனும் திரும்பிச் சென்றீர்களானால், தவறவிட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்!

ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, எப்பொழுதும் ஆழமான விழிப்புணர்வுடன் இருங்கள்; அப்பொழுது தவற விட மாட்டீர்கள். ஒரு குருவுடன் இருக்கும் பொழுது, நன்றியுணர் வுடன் இருப்பீர்களானால், குருவின் சக்தியானது உங்கள் இருப்புத் தன்மையின் மீது பொழியும்; வெறுமனே அவரது அனுபவத்தில் திளைப்பீர்கள்.

உங்களால் குருவை நோக்கி நன்றியுணர்வுடன் மட்டுமே இருக்க முடியுமானால், அவரது உடலருகாமைக்கான தேவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து விடும். நன்றியுணர்வானது கால தேசங்களைக் கடந்து செல்ல உதவும். அது எல்லைகளைக் கரைத்து உங்களை விரிவடைய வைக்கும். நீங்கள் விரிவடையும் பொழுது, எல்லாவற்றுடனும் ஒன்றாக உணர்வீர்கள். சில காலம் கழித்து, நன்றியுணர்வு கூட ஒரு இடைஞ்சலாகத் தோன்றும்; வெறும் அமைதி மட்டுமே நிலவும்!

நான் சொல்கிறேன்... உறவுகளில் கூட, ஏதோ ஓர் உறவு அன்பை இழக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக நீங்கள் எண்ணினால், நீங்கள் வெறுமனே மற்றவரை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் பிரிந்து விடலாம்; அவ்வளவுதான். அவருடன் அத்தனை காலம் சேர்ந்திருந்ததற்காகவும், அவருடன் சேர்ந்திருந்த காலத்தில் கற்றுக்கொண்ட வற்றிற்காகவும், மகிழ்ச்சியுடன் அனுபவித்ததற்காகவும், வெறுமனே உங்களுக்குள் ஒரு நன்றியுணர்வுடன், அவருக்கு விடை கொடுங்கள். அப்பொழுது, அதுவும் மிக அற்புதமாகவே இருக்கும்!

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைவாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கை மிகுந்த பரவசமாக இருக்கும்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, எவ்வாறு நாங்கள் எதிரிகளிடம் நன்றியுணர்வுடன் இருக்க முடியும்?” என்று.

“ஏன் முடியாது?” என்று நான் கேட்கிறேன். பெயரளவிலான உங்கள் எதிரிகளே உங்களை வலிமையாக்கும் பொறுப்பை ஏற்கின்றனர். அவர்கள் உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கின்றனர்; உங்களை வளரச் செய்கின்றனர். உங்களைப் புண்படுத்துவதன் மூலம், நீங்கள் கையாள வேண்டிய, வாழ்க்கையின் வேறு விதமான தோற்றங்களைக் காட்டுகிறார்கள். அதனால் ஏன் அவர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கக் கூடாது?

நீங்கள் வளர விரும்புகிறீர்கள்தானே, இல்லையா? ஒவ்வொரு கணமும், நீங்கள் மேலும் மேலும் அறிவுக்கூர்மையடைய விரும்புகிறீர்கள், இல்லையா? இவர்கள், இந்த வாய்ப்புகளை உங்களுக்குத் திறக்கவில்லையெனில், நீங்கள் உங்களைச் சூழ்ந்துள்ள நண்பர்களால் மட்டுமே ஏமாற்றப்பட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். அது ஒன்றும் பெரிதாக உதவிவிடப் போவதில்லை. நீங்கள் கஷ்டப்பட வேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் உடைவீர்கள்; அறிவு மலரும்.

விதை பிளந்தால்தான் மரம் வளர முடியும். விதை, விதையாக இருப்பதிலேயே சந்தோஷமடைந்து விட்டால், அது காலப்போக்கில் சிதைந்து, செத்துப் போய் விடும். அவ்வளவே, அதற்கு எந்த விதமான உருமாற்றமும் நிகழாது.

பெயரளவிலான பகைமையைப் பொறுத்தவரை, சாதாரணமானவர்கள் அதை அசிங்கமாகத் தோன்றச் செய்து விடுவார்கள். எல்லாமே, வெறுப்பிலிருந்து வெறுப்பை நோக்கியே செல்லும், கொடிய சுழலாகிவிடும் அளவிற்கு, அதை எடுத்துச் சென்று விடுவார்கள். பல குடும்பங்களில், குடும்பத் தகராறுகள்

அதிருப்தி உங்களை கீழ்நோக்கி இழுக்கும்; கனமாகவும் துயரமாகவும் ஆக்கும்.

இருக்கின்றன. அது அசிங்கமாகவும், கையாள முடியாத அளவிற்கு அதிகமாகவும் ஆகிவிடுகிறது; ஏன்? அதை அவ்வாறு வளர விட்டது நீங்கள்தான். நீங்கள் ஆழமான விழிப்புணர் வுடனும், அறிவுக் கூர்மையுடனும் செயல்படவில்லை. நீங்கள் மனநிறைவுடன் செயல்படவில்லையாதலால், அதை அருவறுக்கத் தக்க வகையில் வளர விட்டு விட்டீர்கள்.

நீங்கள் மனநிறைவுடன் செயல்பட்டிருந்தால், பகைமை வளர்வதற்கே இடமிருந்திருக்காது! நான் சொல்வது புரிகிறதா? நீங்கள் எப்பொழுதும் ஒரு மனநிறைவான நிலையிலேயே இருக்கும் பொழுது, இது போன்ற விஷயங்களுக்கு இடமேயிருக்காது. அது உங்களுக்கு ஒரு தெரியாத பாஷையாக இருக்கும். மற்றவர் பகைமையைத் தொடர விரும்பினால் கூட, உங்களுக்கு அவர் மீது எந்தவிதமான வெறுப்பும் இருக்காது. அவர் உறவை முறித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் மீண்டும் அதை நன்றியுணர்வு டனேயே முடிவுக்குக் கொண்டு வருவீர்கள்!

பல குடும்பங்களிலும், மக்கள் ஒருவரையொருவர் கண் களில் பார்த்துக் கொள்வதில்லை அல்லது ஒருவரையொருவர் பொது இடங்களில் தவிர்ப்பதற்காக, உண்மையில் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த தேவையற்ற விஷயங்கள்? உங்கள் சக்தியை ஏன் இதுபோன்ற விஷயங்களில் விரயம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? வெறுப்பு உங்களை விழுங்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். ஆழ்ந்த விழிப்புணர் வுடனும், அறிவுக் கூர்மையுடனும் அதைப் பாருங்கள்; வெறுப்பு மறைந்து, அன்பும் நன்றியுணர்வும் மட்டுமே எஞ்சியிருக்கும்.

சரி... ஏதேனும் கேள்விகள்?

ஸ்வாமிஜி... இந்நாட்களில் நான் உங்களிடம் நன்றியுணர்வுடன் மட்டுமே இருக்கிறேன்; ஒரு விதத்தில்,

நன்றியுணர்வும் அதனுடன் வரும் மன நிறைவும், உங்களை இலேசாகவும், ஆனந்தமாகவும் ஆக்கும்.

உங்களிடம் எதையும் கேட்கும் விருப்பமும் இல்லை. ஆயினும் வினோதமாக நீங்கள் என் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு, அவ்வப்பொழுது என்னைக் கூப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்! இது என் தரப்பிலிருந்து ஒருவிதமான அதிருப்தியா அல்லது ஆசையா, ஸ்வாமிஜி?

(பரமஹம்ஸர் சிரிக்கிறார்...!)

நீங்கள் ஒரு அற்புதமான விஷயத்தைக் கொண்டு வந்திருக் கிறீர்கள். இது, நீங்கள் உங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. பாருங்கள், நீங்கள் பொறாமையாலோ அல்லது அதிருப்தியாலோ, உங்கள் மனதிலிருந்து கவனத்திற்காக ஏங்கினால், அது ஆரோக்யமற்றது. ஆனால் அன்புடனும், நன்றியுணர்வுடனும் கேட்கும் பொழுது, அது ஒரு ஆசையல்ல; அது என்னை நோக்கிய ஒரு ஆழமான அன்பு, அவ்வளவே.

ஒரு விருப்பத்துடன் பிரார்த்தனை செய்யும் பொழுது, அது வெறுமனே நன்றியற்றதாகவும், அஹங்காரத்தின் விளையாட்டாக வும் இருக்கிறது. ஆனால் ஆழமான அன்புடன் கேட்கும் பொழுது, அது நன்றியுணர்வும், பக்தியும் நிரம்பிய பிரார்த்தனை யாகி விடுகிறது. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், அதை அதிருப்தியென்றோ அல்லது ஆசையென்றோ அழைக்க முடியாது. காலப் போக்கில், இதுவும் உங்களிடம் இருந்து போய்விடும். இன்னொரு விஷயம்... உங்களுக்கு இந்த கேள்வியைக் கேட்கும் தைரியம் இருந்தது! பலரும் இதே போன்று இரகசியமாக எண்ணியிருப்பார்கள். ஆனால் வெளியே சொல்லவில்லை என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்! அவர்கள் பெயரில் என்ன இருக்கிறது என்றோ அல்லது வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்

| உங்களால் எல்லாவற்றையும் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் நோக்க முடியுமானால், அது உங்களை மிகுந்த நன்றியுணர்வாலும், மன நிறைவாலும் நிரப்புகிறது. |

கொண்டோ தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டிருப்பார்கள்! ஆம், பெயரில் ஒன்றும் இல்லைதான். ஆனால், நீங்கள் அனுபவபூர்வமாக புரிந்து கொள்ளுதலுடன் அதைக் கடந்து செல்ல வேண்டும்; உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டதே, அதை நீங்கள் தைரியத்துடன் கடந்து செல்ல விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

சரி! புரிந்து கொண்டீர்களா?!

ஆமாம் ஸ்வாமிஜி...

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நாங்கள் எங்கள் நன்றியுணர்வைக் காட்டுவதற்கு, பதிலுக்கு உங்களுக்கு என்ன செய்ய முடியும்?" என்று.

பதிலுக்கு நீங்கள் எனக்கு செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மலர்வதே! என்று நான் சொல்வது வழக்கம். அதுவே பதிலுக்கு நீங்கள் எனக்கு செய்யக் கூடிய, நான் உங்களுக்கு செய்யக் கூடிய மிகச்சிறந்த விஷயமாகும். அதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வார்த்தைகளை நீங்கள் மனதில் புகுத்தி, நன்றியுணர்வை உங்கள் இருப்புத் தன்மையாகச் செய்தால், நீங்கள் பதிலுக்கு எனக்கு நிறையச் செய்ததாகக் கொள்ளலாம்.

ஆனால் என்னால் ஒரு விஷயம் சொல்ல முடியும்... நீங்கள் பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணினால், சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்யுங்கள்; மற்றவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் கண்டுபிடித்த மகிழ்ச்சிக்கு, மற்றவர்களும் விழிப்படைய உதவுங்கள். அதை அஹங்காரத்தினாலோ அல்லது உயர்வு மனப்பான்மையாலோ

| நீங்கள் ஒரு குழந்தையாகிவிடும் பொழுது, | | :---: | | எதுவுமே ஒரு சலிப்பாக இருப்பதில்லை, | | எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கிறது. |

செய்யாதீர்கள். பகிர்ந்து கொள்வதை நேசிப்பதாலும், பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சிக்காகவுமே அதைச் செய்யுங்கள். உங்கள் முழுச் சக்தியையும் அளித்து, அதைச் செய்வதில் மகிழ்ச்சி அடையுங்கள். அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தியானமாகவும், அவர்களுக்கு ஒரு விழிப்படைதலாகவும் இருக்கும்.

நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணரும் ஒவ்வொரு முறையும், உண்மையில் தியானத்தில்தான் இருக்கிறீர்கள். எப்பொழுதும் நன்றியுணர்வில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! நீங்கள் எப்பொழுதும் தியானத்திலேயே இருப்பீர்கள்.

பாருங்கள்... ஒரு விஷயம்... நன்றியுணர்வை ஒருபோதும் கற்றுக் கொடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் பொழுதே, தெரிந்து கொள்வதற்காக, நன்றியுணர்வுடன் இருப்பதைப் பற்றிச் சொல்லலாம். ஆனால், அதுவும் வெறுமனே மற்ற விஷயங்களைப் போல பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொடுப்பதைப் போல, ஆசிரியர்களுக்கு முகமன் கூற கற்றுக் கொடுப்பதைப் போல-ஒரு சமூக நெறிப்படுத்தலாகவே இருக்கும். அது வெறுமனே, மனதின் ஒரு இயந்திரத்தனமான அமைப்பு; உங்களுக்குள்ளிலிருந்து வரும் ஒரு உண்மையான உணர்வு அல்ல.

பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான ஒரு தொடர்பை உணர ஆரம்பித்தால், உங்களுக்குள் உண்மையான நன்றியுணர்வு எழும். வேறு வழியே கிடையாது. இவ்விதமாக நன்றியுணர்வு எழும்பொழுது, அது குறிப்பாக எதையும் நோக்கியதாக இருக்காது. அது வெறுமனே உங்களுடைய நறுமணமாக இருக்கும்; அவ்வளவே!

இது நிகழும்பொழுது, நீங்கள் தானாகவே தெரிந்து கொள்வீர்கள், நன்றியுணர்வே உங்களுடைய பிரார்த்தனை

உண்மையான நன்றியுணர்வு என்பது உங்களுக்குள் நிகழும் ஒரு ஆழமான, தாங்க முடியாத உணர்வு.

தான் என்று! இந்தப் பிரார்த்தனை உங்களை மேலே கொண்டு செல்வதாகத்தான் இருக்கும். அது உங்களை அன்பிலும், மனநிறைவிலும் எழச்செய்யும். பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமிக்கும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்! எவ்வாறு எப்பொழுதும் ஒரு ஆழமான தொடர்பிலேயே இருப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். எவ்வாறு எல்லோரையும், எல்லாவற்றையும் ஒரு முழுமையின் பகுதியாகப் பார்ப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள். கூறுபோட்டு, ஆராய்ந்து கொண்டு, துண்டிக்கப்பட்டதாக எண்ணிக் கொண்டிருக் காமல், அதற்கு பதிலாக எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதைத் தெரிந்து கொண்டு விட்டீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, குருவுடன் எவ்வாறு உறவு கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும் பொழுதுதான் குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும். அதுவரையில், நீங்கள் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள்; கேட்கும் பொழுது, தவறவிட்டு விடுகிறீர்கள்.

இப்பொழுதும் கூட, மிகவும் தெளிவாக இருங்கள்... நான் உங்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்கும்படி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. நான் உங்களுக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவே முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்; அங்கு நீங்கள் நான் சொல்வதை உணர்ந்து கொள்ள முடியும்; அங்கு, அது உங்களுக்கு சொந்த அனுபவமாகிவிடும். என் வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சக்தியால் அந்த வெற்றிடத்தை உருவாக்க முடியும், அவ்வளவே.

எப்பொழுது உங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறதோ, அப்பொழுது நீங்கள் சிறந்த மனிதராகிறீர்கள்; திறப்பதற்குத்

| ஆழமான எதையுமே ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. |

தயாராகிறீர்கள். நீங்கள் உளவியல் ரீதியான அடிமைத்தனத்தில் இருக்கும் பொழுது, ஆராய்ந்து உங்கள் உள் வெளியைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது.

சாமி எப்பொழுதும் சொல்வேன்.... சாமி ஒரு விடுதலை அளிக்கும் குரு! சாமி மக்களிடம் செயல்படும் பொழுது, அவர்களுக்கு மாபெரும் சுதந்திரம் அளிப்பேன். அப்பொழுது தான் அவர்களுக்கு ஆராய்வதும், வளர்வதும் சுலபமாகிறது.

ஆயினும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டு, இடையில் குறுக்கிடாமல் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. உளவியல் ரீதியான அடிமைத்தனம் தவிர்க்கப்பட வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். வெறுமனே அவர்கள் வளர்வ தற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். சந்தேகத்திற்கிடமின்றி, தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது தான்; ஆனால், அவர்கள் தொண்டையில் வைத்துத் திணிப்பதற்குப் பதில், அவர்களே உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ள விடுங்கள். அவர்கள் வளர்வதற்கும், உள் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கும் போதுமான வெற்றிடத்தை அளியுங்கள்.

சில சமயங்களில், மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். “ஸ்வாமிஜி, எவ்வாறு உங்களால் எப்பொழுதும் மிகவும் ஆனந்தமயமாக இருக்க முடிகிறது!” என்று.

குருமார்கள் எப்பொழுதும் பரவச நிலையிலேயே இருப்பதற்குக் காரணம், அவர்களிடம் ஆழமான நன்றியுணர்வு வெறுமனே தொடர்ந்து பொங்கிக் கொண்டே இருப்பதுதான்; அவர்கள் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் சங்கமித்திருப்பதுதான்!

| உங்களிடம் உண்மையான நன்றியுணர்வு தாங்க முடியாமல் போகும்பொழுது, அது உங்களுக்குத் தெரியுமுன்பே கூட எனக்குத் தெரிந்துவிடும். |

நீங்கள் வெறுமனே என்னை நோக்கியோ, அல்லது வேறெவரையும் நோக்கியோ நன்றியுணர்வுடன் இருப்பீர் களானால், முழுவதையும் தவறவிட்டு விடுகிறீர்கள். ஏனெனில் தகுந்தவரை நோக்கி கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் திருப்பி விடுவதற்கு, நன்றியுணர்வு ஒன்றும் ஒரு ஒளிக்கற்றை அல்ல. அது ஒரு நறுமணம். நீங்கள் அதை அணியும் பொழுது, அது வெறுமனே உங்களிடமிருந்து பரவிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், ஒரு குருவானவர் எப்பொழுதும் மிகவும் ஆனந்த மயமாகத் தோன்றுகிறார். உங்களால் அனுபவித்து மகிழக்கூடிய ஒரு நறுமணம் போல குருவானவர் இருக்கிறார்! அதனால்தான் நீங்கள் மீண்டும் மீண்டும் இங்கு கவர்ந்து இழுக்கப்படுகிறீர்கள்!

பாருங்கள், ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.... நீங்கள் பெற்றுக் கொள்ளவும், பார்க்கவும் தயாராக இருந்தால், ஒவ்வொரு கணமுமே அற்புதமாகத்தான் இருக்கிறது. நாம் ஏதாவது ஒரு விழாவைக் கொண்டாடும் பொழுதோ, அல்லது வெற்றி காணும் பொழுதோ அல்லது சாதனை புரியும் பொழுதோ அந்தக் கணம் மட்டும்தான் அற்புதமாக இருக்கிறது என்றல்ல.

ஒவ்வொரு கணமும் அற்புதமாக இருக்கிறது; ஏனெனில் பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே தன்னிச்சையாகவும் மகிழ்ச்சியாகவும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது; எல்லா நிகழ்வு களும் எப்பொழுதும் ஒருமித்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் புரிந்து கொள்ளும்பொழுது, எதுவும் எப்பொழுதும் உங்களுக்குத்தவறாகத்தெரியாது. பிறகுநீங்கள், மக்கள்எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி ஆச்சரியப்படுவீர்கள்!

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை

நீங்கள் குருநாதரை நோக்கிய அளவு கடந்த நன்றியுணர்வில் இருக்கும் பொழுது, அதை வெளிப்படுத்த வழியெதுவும் கிடையாது. அப்பொழுது நீங்கள் வெறுமனே அவரது பாதங்களைப் பற்றிக் கொள்கிறீர்கள். முழுவதுமே உங்களுக்கு ஒரு கோயிலாகி விடும். பிறகு நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு பிரார்த்தனைபூர்வமான, தியானபூர்வமான மனநிலையில்தான் இருப்பீர்கள். நீங்கள் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டிய தேவை இனியில்லை. நீங்கள் வெறுமனே முழுமையில் கலந்து, எப்பொழுதும் ஆனந்தமயமான உணர்விலேயே இருப்பீர்கள்.

பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுமையுமே கோயிலாகி விடும் பொழுது, மரங்களும், வானமும், பூமியும், எல்லாமே ஒன்றாகி விடும். அதன் முன்பு குனிந்து தலைவணங்கும் பொழுது, எதைக் கேட்க முடியும்?! இந்த ஆழ்ந்த பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பதற்காக நன்றி யுணர்வுடன் வெறுமனே குனிந்து தலைவணங்குவீர்கள், அவ்வளவுதான்!

இது நிகழுமானால், உங்களால் மரங்களுடனும், வானுடனும், பூமியுடனும், இன்னும் மற்ற எல்லாவற்றுடனும் உறவு கொள்ள முடியும். அப்பொழுது நீங்கள், மனதின் மொழியான தொடர்பு கொள்ளுதலில் இருந்து, இதயத்தின் மொழியான சங்கமித்தலை நோக்கி நகர்ந்து விடுவீர்கள். பிறகு நீங்கள் உங்களுடைய மையத்தை மூளையில் இருந்து இதயத்திற்கு நகர்த்தி விடுவீர்கள்.

கடவுள் உங்களுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக் கிறார் என்று நம்புகிறவர்களுக்கு, நான் ஒன்று சொல்கிறேன்... கடவுள் மிகவும் கருணையுள்ளவர்; அவர் பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்காமல் விடுவதேயில்லை. அது இவ்வாறு இருக்கிறது..

ஏற்கனவே ஜலதோஷத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஐஸ்க்ரீம் கேட்டால், நீங்கள் கொடுப்பீர்களா? மாட்டீர்கள்.

உங்கள் எதிரிகளே உங்களை வலிமையாக்கும் பொறுப்பை ஏற்கின்றனர். அதனால் ஏன் அவர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கக் கூடாது?

அதற்காக, குழந்தை இப்பொழுது உங்களிடம் நன்றியுணர் வுடன் இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் உங்களுக்குத் தெரியும், நீங்கள் குழந்தைக்கு நல்லதைத்தான் செய்கிறீர்கள் என்று. ஏனெனில் அவன் கேட்பது அவனுக்கு இந்தச் சமயத்தில் சரியானதல்ல என்பது அவனுக்குத் தெரியாது.

அதே போல, உங்களுடைய ஆழ்ந்த அறியாமையினால், நீங்கள் கடவுளிடம் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்; ஆனால் உங்களுக்கு நல்லது எது என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால், முழுமையான கருணையினால் கடவுள் உங்களுடைய பிரார்த்தனைகளை மென்மையாக ஒதுக்கி விட்டு, உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் விஷயங்களை அளிக்கிறார்; மேலும் உங்களை இன்னும் சிறந்த அறிவை நோக்கித் தூண்டி விடுகிறார்; அதுவே அவருக்கு உங்கள் மீது இருக்கும் ஒரே அக்கறை. நினைவில் வையுங்கள்... உங்கள் உள் அறிவுக் கூர்மையானது மேலும் மேலும் வளர வளர, உங்களு டைய பிரார்த்தனை அல்லது கேட்பது குறைந்து விடும்.

கடவுளிடம் உங்களால் எதைக் கேட்க முடியும்? அவ்வாறு நீங்கள் கேட்கும் கணத்திலேயே, அவருக்குத் தெரியாத சில விஷயங்களும் இருக்கின்றன என்று எண்ணுகிறீர்கள் என்றுதானே பொருள்! அப்படியென்றால், நீங்கள் கேட்காவிடில் அவருக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். அது சிறுபிள்ளைத்தனமாக இல்லை?! கடவுளுக்குத் தெரியாத எதுவும் இருக்க முடியுமா?

புரிந்து கொள்ளுங்கள்... கடவுள் உங்களுக்குத் தேவை யானதைக் கொடுக்கிறார்; நீங்கள் விரும்புவதை அல்ல. அவர் நீங்கள் விரும்புவதை எல்லாம் கொடுக்க ஆரம்பித்தால், நீங்கள் துயரத்திலிருந்து துயரத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பீர்கள்!

விதை பிளந்தால்தான் மரம் வளர முடியும். அது, விதையாக இருப்பதிலேயே சந்தோஷமடைந்துவிட்டால், காலப்போக்கில் சிதைந்து செத்துப் போய்விடும்.

அவர் உங்களுக்குத் தேவை யானதைக் கொடுக்கும் பொழுது, நீங்கள் அறிவிலிருந்து மேலும் அறிவுக் கூர்மையை நோக்கியும் அதற்கு மேலும் செல்வீர்கள்; கேட்பது போய் நன்றியுணர்வு மலரும்.

கடவுள் உங்களுக்குச் சங்கடங்களைச் சமாளிக்கத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் தருகிறார். அவர் உங்களுடைய பெயரளவிலான பிரச்சினைகளைக் கரைத்து விடுவதற்கான விவேகத்தைத் தருகிறார். அவர் உங்களுக்கு வளத்தைக் கொண்டு வருவதற்காக, உங்களுடைய விலை மதிப்பற்ற மூலாதாரமான மேம்படுத்தப்பட்ட அறிவைத் தருகிறார். உங்கள் சொந்த அன்பையும் அக்கறையையும் ஆராய்ந்து பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தருகிறார். அவர் உங்களிடம் இருப்பதெல்லாம் உங்களுக்குத் தேவையானfabricதான் என்பதைப் புரிந்து கொள்வதற்காக, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவர் நீங்கள் பக்குவம் பெறவும், மலர்ந்து மணம் பரப்பவும் தேவையான எல்லாவற்றையும் அளிக்கிறார்.

நமது அடிப்படைப் பிரச்சினை என்னவெனில், கடவுளிடம் நாம் விரும்புவதை கொடுக்கக் கூடிய சக்தி அல்லது ஆற்றல் இருப்பதை நம்பத் தயாராக இருக்கிறோம்; ஆனால் அது நமக்கு நல்லதா இல்லையா என்று தீர்மானிக்கும் புத்தி அல்லது அறிவும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம்! ஏனெனில், கடவுளிடம் வெறுமனே சக்தி மட்டுமே இருப்பதாக நாம் நம்புவதால், நாம் தொடர்ந்து மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

நாம் எப்பொழுதும் நமக்குச் சிறந்தது எதுவென்று நமக்குத் தெரியும் என்று எண்ணுவதால், கடவுளிடம் அதற்காகப்

உங்கள் நன்றியுணர்வைக் காட்டுவதற்கு, நீங்கள் எனக்குச் செய்யக் கூடிய மிகச் சிறந்த விஷயம் நீங்கள் மலர்வதே!

பிரார்த்தனை செய்கிறோம். நாம் விரும்புவதை அடைய, நமது அறிவையும், கடவுளுடைய ஆற்றலையும் உபயோகித்துக் கொள்ள விரும்புகிறோம்! நாம் அவரிடம் தெளிவாகச் சொல்கிறோம்... இதுதான் எனக்கு வேண்டும், இவ்வாறுதான் எல்லாம் இருக்க வேண்டும், அதனால் தயவு செய்து இதை உன் ஆற்றலினால் எனக்காகச் செய்து கொடு! நாம் நமது எல்லா விருப்பங்களையும்முன்னுரிமைகளை அடைப்புக் குறிக்குள் இட்டு-கடவுளிடம் பிரார்த்தனையாகச் சமர்ப்பிக்கிறோம்!

இந்த மனோபாவம்தான் நம்மைச் சிக்கலில் மாட்டி விடுகிறது. கடவுளிடம் ஆற்றல் மட்டுமில்லை; உங்களுக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அறிவும் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது, கேட்பதை நிறுத்தி விடுவீர்கள்.

இந்த உலகம் முழுமையும் உங்களுடைய அறிவாலேயே நடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். மிகவும் தெளிவாக இருங்கள்... உங்களுடைய அறிவு இருந்தும் இந்த உலகம் நடந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் வர்த்தகம் செய்வதில் மிகவும் பழக்கப்பட்டு விட்டீர்கள்; அதனால், உங்களுக்கு இரத்த சம்பந்தம் கூட இல்லாத ஒருவர், உங்களிடமிருந்து பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமலும், நிபந்தனையற்றும் உங்கள் மீது அக்கறை செலுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இது உங்கள் நம்பிக்கைக்கு மிகவும் அதிகம்!

நான் சொல்கிறேன்.. பிரபஞ்ச இருப்புத்தன்மை உங்கள் மீது, மற்ற எவராலும் முடியாத அளவிற்கு, அக்கறை கொண்டிருக்கிறது. இந்த உண்மையைத்தான் என்னால் சொல்ல முடியும்; ஆனால்

நீங்கள் பதிலுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று எண்ணினால், சமூகத்திற்கு ஏதேனும் சேவை செய்யுங்கள்; மற்றவர்களுக்கு உதவுங்கள். அதை உள்ளுக்குள் இருந்து, உங்கள் சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்ள வேண்டியது உங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்தது. அப்பொழுதுதான் அது உங்களுடைய நேரடியான அறிவாக இருக்கும்.

நான்எப்பொழுதும் சொல்வேன், “என்னால் ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது, ஆனால் உங்களால் கற்றுக் கொள்ள முடியும்!” என்று. நான் உங்களுக்குப் பெரிய உண்மைகளைச் சொல்ல முடியும்; அதனால் குறைந்தபட்சம் உங்களுக்கு எது தெரியவில்லையென்பதையாவது தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த உண்மையை உங்களுடைய புரிந்து கொள்ளுதலாகச் செய்து கொள்வது உங்களைப் பொறுத்தது. நீங்கள் உண்மையை எத்தனை முறை கேட்க விரும்பினாலும் நான் சொல்லத் தயாராக இருக்கிறேன்.

ஒரு சின்ன கதை...

சங்கரர் ஒரு முறை பரிவ்ராஜக யாத்திரையில் (புண்ணிய ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாகச் செல்லுதல்) அவருடைய சீடர்களுடன் சென்று கொண்டிருக்கும் பொழுது, ஓரிடத்தில் அவருக்கு மிகவும் தாகமாக இருந்தது. அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்; ஆனால் அவரது தாகத்தைத் தீர்க்கும் எதுவும் கண்ணில் படவில்லை. பனை மரங்கள் அடர்ந்த ஒரு சிறிய வனம் மட்டுமே இருந்தது; அங்கு கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். சங்கரர் அந்த வனத்தில் நுழைந்து, அங்கிருந்த தொழிலாளர்களிடம், அவரது தாகத்தைத் தணிப்பதற்கு ஏதேனும் இருக்குமா என்று கேட்டார். அவர்களும், அவர்களிடம் கள்ளைத் தவிர வேறெதும் இல்லை என்று சொல்லி விட்டனர். சங்கரர் கள்ளைக் கேட்டு வாங்கிக் குடித்தார். சீடர்கள் சங்கரர் குடிப்பதைப் பார்த்தனர். உடனே அவர்களும் கள்ளைக் கேட்டு வாங்கிக் குடித்தனர்! கள் சங்கரரைப்

நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணரும் ஒவ்வொரு முறையும், உண்மையில் தியானத்தினால்தான் இருக்கிறீர்கள்.

பாதிக்கவில்லை; ஏனெனில் அவர் ஆத்மஞானம் பெற்றவர்; எல்லையற்ற விழிப்புணர்வைப் பெற்றவர்! அவர் நிதானமாக நடந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது சீடர்களோ அவருக்குப் பின் தள்ளாடிக் கொண்டிருந்தனர்! சில நாட்கள் கழித்து, மீண்டும் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர்; ஆனால் இந்த முறை ஒரு பாலைவனப் பகுதியில். அவர்களுக்குத் தாகமாக இருந்தது; இந்த முறை ஒரு இரும்புப் பட்டறைதான் கண்ணில் பட்டது. வேறெதுவும் இல்லை. அங்கிருந்த தொழிலாளி குடிப்பதற்கு எதுவுமில்லை என்று சொல்லி விட்டான். ஆனால் சங்கரர் அங்கிருந்த உருகிய இரும்பை, திரவ நிலையில் இருந்த இரும்பைப் பார்த்து விட்டு, அதைக் கேட்டு வாங்கிக் குடித்து விட்டார். இரும்புக் குழம்பைக் குடித்த பிறகு, அவர்களது சீடர்களை நோக்கித் திரும்பி, அவர்களையும் குடிக்கச் சொன்னார்! சீடர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்!

அவர் சொல்வதைச் செய்ய வேண்டுமே தவிர, அவர் செய்வதை அல்ல என்பதை, சங்கரர் அவர்களுக்குப் புரிய வைக்க விரும்பினார். அவர் எல்லையற்ற விழிப்புணர்வில் நிலை பெற்றிருந்ததால், கள் அவரைப் பாதிக்கவில்லை. அதை நீங்கள் அனுபவிக்காத வரையில், உங்களால் அறிந்து கொள்ள முடியாது. அதனால் வெறுமனே வெளியி லிருந்து அதைப் போல் நடிக்க முடியாது. அது உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளேயிருந்து நிகழ வேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நீங்கள் உண்மையை உணர்வதில் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்கள் அல்லது உண்மையுடன் எவ்வளவு தூரம் இணைந்திருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய சொந்த முடிவு. தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்பவர்களுக்கு மட்டுமே என்னால் உதவ முடியும். நான் உங்களை மேலே தூக்கிவிட கையைக் கொடுக்க

நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகிவிடும் பொழுதுதான் குருவுடனான உண்மையான உறவு ஆரம்பிக்கும்.

முடியும்; ஆனால் குறைந்த பட்சம் உங்கள் கையை மேலே உயர்த்தி என்னுடைய கையை அடைய விருப்பம் இருந்தால் மட்டுமே. நீங்கள் உண்மையிலேயே மேலே தூக்கிவிடப்பட வேண்டும் என்று விரும்பினால், குறைந்தபட்சம் உங்கள் கைகளை மேலே தூக்கி என்னை நோக்கி நீட்ட வேண்டும். இல்லாவிடில், நீங்கள் வெறுமனே இருந்த இடத்திலேயே இருப்பதற்கான சுதந்திரத்தை நான் உங்களுக்கு அளித்து விடுவேன், அவ்வளவுதான். அதனால்தான், ‘கடவுள் நீங்கள் அடிமைத்தளையில் இருப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறார்!’ என்று சொல்கிறார்கள்.

நம்மில் பலரும், நாம் கடவுளால் உதவப்பட வேண்டிய வகையில் உதவப்படவில்லை என்றே எண்ணுகிறோம். நான் சொல்கிறேன், கடவுளுக்கு உங்களைப் பற்றி, உங்களை விட நன்றாகவே தெரியும். இதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவே. உங்கள் சந்தேகத்தைச் சற்று விட்டுவிட்டு, கொஞ்சம் விசுவாசத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்; அதுவே போதுமானது. மற்றவை தானாகவே கவனித்துக் கொள்ளப்படும்.

ஒரு சின்ன கதை...

ஒரு மீன் தொட்டியில் இரண்டு தங்க மீன்கள் இருந்தன. அதில் ஒன்று மற்றொன்றிடம் கேட்டது, “உண்மையிலேயே நீ கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறாயா?”. மற்றொன்று சொன்னது, “தினமும் நமது தண்ணீரை மாற்றுவது வேறு எதுவென்று நீ நினைக்கிறாய்?”.

பிரபஞ்ச இருப்புத்தன்மை நமது எல்லாத் தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது என்று நம்புவீர்களானால், நீங்கள் எந்த

கேட்கும்பொழுது தவற விட்டு விடுகிறீர்கள்.

விதமான கவலையுமின்றி இருப்பீர்கள். ஆனால் நினைவில் வையுங்கள், நான் சொன்னதுபோல், உங்கள் தேவைகள், ஆசைகளிலிருந்து வேறுபட்டவை. உங்கள் தேவைகள் சில; ஆனால் ஆசைகளோ பல. உங்கள் தேவைகள் தானாகவே பிரபஞ்ச இருப்புத் தன்மையால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. உங்களுடைய ஆசைகள் அதிகரிக்கும் போது, அவைகள் நிறைவேற்றப்படாததால், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் மீதான உங்கள் நம்பிக்கையை இழக்கிறீர்கள்.

பாருங்கள், சாதாரண நம்பிக்கை என்பது வெறுமனே நம்புவது, அவ்வளவுதான். ஆனால் விசுவாசம் என்பது நம்பிக்கையுடன், செயல்பாட்டில் இருக்கும் சக்தியும் சேர்ந்தது. நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம்; ஆனால் விசுவாசத்தில் முடிய வேண்டும். நம்பிக்கையுடன், கொஞ்சம் சந்தேகமும் இருக்கும்; ஆனால் விசுவாசத்தில் சந்தேகமே இருக்காது; ஏனெனில் நீங்கள் அதை அனுபவித்திருப்பீர்கள். நன்றியுணர்வின் அற்புதங்களை நீங்களே அனுபவிக்கும் பொழுது, நீங்கள் மேலும் மேலும் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்திழுக்கிறீர்கள். நான் இதை என் சொந்த அனுபவத்திலிருந்து அறிவிக்கிறேன்.

ஒரு சின்ன கதை....

ஒரு முறை ஒரு சிறுவன் ஒரு அரசனது அரண் மனைக்குச் சென்றான். அவன் ஒரே ஒரு இரவு அரண்மனை யில் தங்கிக் கொள்வதற்கு அனுமதி கேட்டான். அரசன் ஏற்றுக் கொண்டான்; சி றுவன் தங்கினான். அடுத்த நாள் காலை சிறுவன் அரசனிடம் வந்து அவனுக்குத் தங்குமிடம் கொடுக்கப்பட்டதில் ஏற்பட்ட குறைகளை, ஒரு முடிவின்றி புகார் கூறிக் கொண்டிருந்தான். அரசன், இது போன்றவர்களுக்கு ஒருநாள் தங்குவதற்கு இடம் கொடுத்ததே மிகவும் அதிகம் என்று சொல்லி, அந்தச் சிறுவனை உடனே

நீங்கள் பெற்றுக் கொள்ளவும், பார்க்கவும் தயாராக இருந்தால், ஒவ்வொரு கணமுமே அற்புதமாகத்தான் இருக்கிறது.

வெளியேற்றும்படிக்கட்டளையிட்டான். வருத்தமடைந்த சிறுவன் ஒரு சூஃபி துறவியிடம் சென்று நடந்ததை விவரித்தான். அவர் ஒன்றும் கூறவில்லை. அவனிடம் வெறுமனே தன் சீடனாகி விடும்படிக் கூறினார். சில மாதங்கள் கழித்து, துறவி தான் அந்த அரசனைச் சந்திக்கப் போவதாகவும், அவனையும் கூட வருமாறும் அழைத்தார். அவர்கள் அரசனிடம் சென்று, அரண் மனையில் சில நாட்கள் தங்குவதற்கு அனுமதி கேட்டனர். அரசனும் அனுமதியளித்தான். அடுத்த நாள் காலை, அரசன் துறவியிடம் அவருக்காகச் செய்திருந்த ஏற்பாடுகள் சௌகரியமாக இருந்ததா என்று கேட்டான். துறவி, அவருக்குச் செய்து தரப்பட்ட வசதிகளுக்காக, அரசனுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். அரசன் மிகவும் சந்தோஷமடைந்து, அவனது ஆட்களிடம் துறவிக்குச் செய்து தரப்பட்ட ஏற்பாடுகளை இன்னும் நன்றாகக் கவனித்துச் செய்யுமாறு உத்தரவிட்டான். துறவி சிறுவனிடம் சொன்னார், “இப்பொழுது பார்த்தாயா? இதுதான் வாழ்வின் இரகசியம். நன்றியுணர்வுடன் இரு; உன் மீது பொழியப்படும்.”

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதில் தவறுகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது நன்றியுடன் இருக்கும்பொழுது இது நிகழ்கிறது. நன்றியுணர்வுடன் இருக்கும்பொழுது, நீங்கள் நேர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள்; அது தானாகவே, உங்களால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாகத் திரும்பக் கொண்டு வருகிறது.

நிறைய பெறுவதற்காக, மக்களை உதட்டளவில் புகழ்ந்து விட்டுப் பிறகு அவர்களைத் தந்திரமாக ஏமாற்ற வேண்டும் என்பது இதன் பொருளல்ல. கண்டிப்பாக அல்ல! நீங்கள் வெளியுலகில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் ஒரு

ஒவ்வொரு கணமுமே அற்புதமாகத்தான் இருக்கிறது. ஏனெனில், பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே தன்னிச்சையாகவும், மகிழ்ச்சியாகவும் பிரவகித்துக் கொண்டிருக்கிறது.

நன்றியுணர்வான நிலையில் இருக்கும் பொழுது, உங்களுடைய நன்றியுணர்வானது உங்களிடமிருந்து பரவி ஒளிவீசிக் கொண்டிருக்கும். பிறகு, உங்களுக்குள் விஷயங்கள் வெறுமனே நிகழத் தொடங்கும்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, நம்மைச் சுற்றி எவ்வளவு துன்பம். இது ஏன்?". நான் சொல்கிறேன், இதெல்லாம் அபத்தமானது. முதலில், நீங்கள் எண்ணுகிற அளவிற்கு அவ்வளவு துன்பமில்லை. துன்பம் இருக்கிறது; சரி; ஆனால், அது உங்கள் மனதினால் பெரிதாக்கப்படுகிறது. நீங்கள் சரியான புள்ளி விவரம் எடுத்துப் பார்த்தீர்களானால், இவற்றிலெல்லாம் உங்கள் மனம் எவ்வளவு தூரம் விளையாடுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவற்றையெல்லாம் சொல்லி, மொத்த விஷயத்தையும் பெரிதாக்கி விடுவது சாதாரண சமூகப் பேச்சு வழக்காகிவிட்டது. இரண்டாவதாக, துன்பத்திற்குக் காரணம், நமது விசுவாசம் காணாமல் போய் விட்டதுதான், அவ்வளவே. நமது விழிப்பற்ற வழிகளால் உந்தப்பட்டு, நாம் பேராசைக்காரர்களாகி விட்டோம்.

புரிந்து கொள்ளுங்கள்... பிரபஞ்ச இருப்புத்தன்மை வெறுமனே, இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு வாத்திய இசைக் குழுவைப் போல் நடத்திச் சென்று கொண்டிருக்கிறது. எல்லா நிகழ்வுகளும் மிகவும் ஒருமித்து நிகழுமாறு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது; இப்பொழுது குழப்பமாகத் தோன்றுவதெல்லாம், நீங்கள் எவ்வளவு தூரம் அறிகிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்களால் அதில் ஆச்சரியப்படும்படியான ஒரு ஒழுங்கைக் காணமுடியும். இதை நாம் வெறுமனே அறிந்து கொண்டு, நமது பாத்திரத்தை அதற்கேற்றார் போல் சரியாகச் செய்ய வேண்டும்; அப்பொழுது வாழ்வு ஒரு இசை போலப் பாயும்.

நீங்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையை நோக்கிய ஒரு நன்றியுணர்வுடன் இருக்கும்பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மை முழுவதுமே உங்களுக்கு ஒரு கோயிலாகி விடுகிறது.

சிறிய நிகழ்வுகள் முதல் பெரிய நிகழ்வுகள் வரை, உங்களால் இந்த நிகழ்வுகளை நுட்பமாக உணர முடியுமானால், எவ்வாறு விஷயங்கள் ஒரு ஒழுங்காக மாற்றியமைக்கப்பட்டு நிகழும்படி செய்யப்படுகிறது என்பதையும், இந்த முழுச் செயல் முறையிலும் நீங்கள் ஒரு எளிய கருவியாக உபயோகப்படுத்தப் படுவதையும், உணரத் தொடங்குவீர்கள். எதேச்சையாக ஒன்றாக நிகழ்வதன்1 ஆற்றல், உங்களுக்குத் தன்னை முழு கோலாகலத்துடன் வெளிக்காட்டத் தொடங்கும். நீங்களும் இந்த பேரண்ட இசைக்குழுவின் ஒரு பகுதிதான் என்பதையும், நீங்கள் வெறுமனே அந்த இசையுடன் இசைந்து சென்று அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டியதுதான் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்! நீங்கள் அந்தப் பிரவாகத்துடன் சண்டையிடும் பொழுதுதான், அதற்கு எதிராகச் செல்ல முயற்சிக்கும்பொழுது தான், பிரச்சினை ஆரம்பிக்கிறது.

ஒரு சின்ன கதை....

ஒரு நாள் மக்கள் வேகமாக ஒருவனிடம் ஓடி வந்து, அவனுடைய மனைவி ஆற்றில் விழுந்து விட்டதாகவும், அடித்துச் செல்லப்படுவதாகவும் சொன்னார்கள். அவன் உடனே ஆற்றிற்கு ஓடிச் சென்று, துணிகளைக் களைந்து விட்டு, ஆற்றில் குதித்து எதிர்ப்புறமாக நீந்தத் தொடங்கினான். மக்கள் கத்தினார்கள், "ஏன் எதிர்ப்புறமாக நீந்திச் செல்கிறாய்? அவள் கண்டிப்பாக நீரோட்டத்துடன்தான் சென்றிருப்பாள்". அவன் சொன்னான், "என் மனைவியைப் பற்றி எனக்குத்தான் தெரியும்... ஆற்றில் கூட அவள் நீரோட்டத்திற்கு எதிராகத்தான் சென்றிருப்பாள், அதனுடன் அல்ல!".

(பலத்த சிரிப்பு!)

Coincidence

பிரவாகத்துடன் சண்டையிடும் பொழுதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஏனெனில் நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கும் நமக்கும் இடையில் அஹங்காரம் உள்ளே வர அனுமதித்து விட்டோம். இன்னொரு பக்கம் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரவாகத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் செல்வோமாயின் நாம் தன்னிச்சையாக இருப்போம். நம் வழியில் எதுவரினும் ஏற்றுக் கொண்டு நன்றியுணர்வுடன் விரிவடைந்து கொண்டிருப் போம்.

நீங்கள் தன்னிச்சையாக இருக்கும்பொழுது, எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள். நான் எப்பொழுதும் சொல்வேன்... பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாக தக்க பதில் கொடுக்கும் திறமை¹. குருமார்கள் உலகம் முழுவதற்குமான பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள்! எவ்வாறு? ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் தன்னிச்சையாகவும் பிரபஞ்ச இருப்புத் தன்மை யின் பிரவாகத்துடன் இசைந்து சென்று கொண்டும் இருக் கிறார்கள்! பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் வெறுமனே இசைந்து செல்லும் பொழுது, பிரபஞ்ச இருப்புத்தன்மையே எல்லாவற்றையும் ஒரு இயல்பான முறையில் நிகழச் செய்து விடும் என்பது அவர்களுக்கு தெரியும்!

நீங்கள் நமது ஆசிரமத்திலுள்ள ஆசிரமவாசிகளிடம் பேசினீர்களானால், அவர்கள் என்னுடனான அவர்களது அனுபவத்தைச் சொல்வார்கள். விஷயங்களை முன்பே தெரிந்து கொள்வதும், என்னுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து கொள்வதும் அவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனெனில் நான் எப்பொழுதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் பிரவகித்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் அவர்கள்

Responsibility is the ability to respond spontaneously¹

செயல்படுவதற்கு போதுமான கால அவகாசம் தேவை என்னும் கருத்தையே விட்டுவிடக் கற்றுக் கொள்கிறார்கள்; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எதற்கும் எப்பொழுதும் தயாராக இருக்கக் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரமத்தில் விஷயங்கள் இவ்வாறு தான் நடைபெறுகிறது. எதுவும் எந்த முன்னேற்பாடும் இன்றி அந்த க்ஷணத்தில் தீர்மானித்துச் செய்யப்படுகிறது.

வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர் ஆசிரமத்தில் நிகழும் இந்த ஒழுங்கான குழப்பத்தை1 கண்டு பேராச்சரியம் அடைய நேரிடும். அது பூஜையோ அல்லது வேறெதாவது நிகழ்ச்சியோ நான் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் சொல்வேன்; எல்லாம் செய்யப்பட்டு விடும். ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு மட்டுமே சொல்வதற்குக் காரணம் நான் எந்த விதமான சட்டமோ திட்டமோ இல்லாமல் தொடர்ந்து பிரவகித்துக் கொண்டு இருப்பதுதான்.

நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லக் கற்றுக் கொண்டு விட்டோமானால் எந்தவிதக் கவலையுமின்றி வாழ முடியும். ஆனால் எப்படியோ நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் போராடும் கலையில் தேர்ச்சி பெற்று விட்டோம். அதனால் துன்பப்படுகிறோம். நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரவாகத்துடன் உங்களை இசைவாக வைத்துக் கொண்டீர்களானால் ஒவ்வொரு கணமும் நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறீர்கள். அந்தக் கணத்தில் உங்களுக்கு என்ன தேவையோ அது கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

நீங்கள் உங்களை இசைவுபடுத்திக் கொள்ளும் பொழுது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பிரகாசத்தையும் சக்தியையும் உங்களுடன் எடுத்துக் செல்கிறீர்கள். விஷயங்கள் தானாகவே

Orderly chaos

மாற்றியமைக்கப்படுவதையும், எல்லாம் அதனதன் இடத்தில் வெட்டி ஒட்டி ஒன்று சேர்க்கும் ஜிக்ஸா புதிர்1 போல தானாகவே பொருந்திக் கொண்டு, உங்களுக்கான விஷயங்கள் நடைபெறு வதையும் காண்பீர்கள். நீங்கள் செல்லுமிடமெல்லாம் மக்கள் இதற்குமுன் கேள்விப் பட்டிராத வகையில் தன்னிச்சையாகவும், உற்சாகத்துடனும் வரவேற்பளிப்பதையும் உங்களால் உணர முடியும்.

மக்கள் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். அவர்கள் உங்களை நோக்கி ஒரு விவரிக்க முடியாத வகையில் கவர்ந்திழுக்கப்படுவதை உணர்வார்கள். உங்கள் வாழ்க்கை கண்ணுக்குத் தெரியாத ஒரு இசைக் கலைஞனால் இசைக்கப்படும் பாடலாகிவிடும். நீங்கள் அதற்கு வெறுமனே நடனமாடிக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையே ஒரு இசையாகவும் நடனமாகவும் ஆகிவிடும். அது ஒரு கொண்டாட்டமாகிவிடும்!

ஆனால் கொண்டாடுவதற்குப் பதிலாக நாம் எப்பொழுதும் மேலும் மேலும் தேடிக் கொண்டு இருக்கிறோம். அற்புதங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் அற்புதங்களுக்காக காத்துக் கொண்டும் அது நிகழவில்லை என்று எண்ணிக் கொண்டும் இருக்கிறோம்.

நான் சொல்கிறேன்... அற்புதங்கள் ஒருபோதும் செய்யப் படுவதில்லை. அவை வெறுமனே தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்கின்றன! உங்களுடைய அடையாளம் கண்டு கொள்ளும் திறனால் அவை அற்புதங்களாக்கப்படுகின்றன! நன்றியுணர்வால் உங்களைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைவாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அற்புதங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள்! நன்றியுணர்வு உங்களை அற்புதங்களுடன் இசைவுபடுத்தும்.

Jigsaw Puzzle ஒன்று போல இருக்கும் பல சிறு துண்டுகளை

ஒன்று சேர்த்து ஒரு உருவம் வரவழைக்கும் ஒரு புதிர்.

அவற்றை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதோ அல்லது தவற விடுவதோ உங்கள் தேர்வு!

நீங்கள் அவற்றைத் தவறவிடும் பொழுது அதிருப்தியுடன் இருப்பீர்கள். அது இவ்வாறு இருக்கிறது... கதவு திறந்துதான் இருக்கிறது; ஆனால் நீங்கள் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்! 'உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது, நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி' என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீங்கள் அதை நம்பத் தயாராக இல்லை. நீங்கள் ஏற்கனவே உங்களைச் சுற்றி நிகழும் அற்புதங்களைப் பார்க்காமல் அவற்றை தேடிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

புரிந்து கொள்ளுங்கள்... தண்ணீரை மதுவாக மாற்றுவது ஒன்றும் அற்புதமில்லை. மனிதனைக் கடவுளாக மாற்றுவதே உண்மையான அற்புதம். முன்னதை சிறந்த மந்திர ஜால வித்தைக்காரரான பி.சி சர்க்கார் செய்வார். ஆனால் பின்னதைச் செய்ய ஆழமான புரிந்து கொள்ளுதல் தேவை.

இராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லும் ஒரு சின்ன கதை... இரண்டு சகோதரர்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மூத்த சகோதரன் வியாபாரத்தைத் தொடர முடிவு செய்தான்! இளையவன் சாதுவாகச் சென்றான். சில வருடங்கள் கழித்து அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். அவர்கள் கடந்த சில வருடங்களில் என்ன சாதித்தனர் என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். மூத்த சகோதரன் வெளியுலகில் சாதித்த எல்லா லோகாயதமான விஷயங்களையும் பட்டியலிட்டான். அவனுடைய வியாபாரத்தைப் பற்றியும் அவன் எவ்வளவு செல்வம் சேர்த்திருக்கிறான் என்பது பற்றியும் விவரித்தான். பிறகு அவன் இளைய சகோதரனிடம் அவன் என்ன சாதித்திருக்கிறான் என்று கேட்டான். இளையவன் அவனை

கடவுள் உங்களுக்குத் தேவையானதைக் கொடுக்கிறார்; நீங்கள் விரும்புவதை அல்ல. வெறுமனே ஒரு ஆற்றுக்கு அழைத்துக் சென்று அதை சகஜமாக நடந்து கடந்தான். பிறகு பெருமிதத்துடன் அறிவித்தான், “இதுதான் நான் சாதித்தது”. மூத்த சகோதரன் ஒரு படகை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு அதில் அவனை மறுகரைக்கு அழைத்துச் சென்று அவனிடம் சொன்னான், “என்ன? இரண்டு அணாவில் சாதிக்க வேண்டியதை நீ பல வருடங்களில் சாதித்திருக்கிறாய்!”.

வெளியுலகில் அதிசயங்கள் புரிய முடிந்தால் ஆன்மீகவாதிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் ஆகிவிடலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி அல்ல! புரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகம் என்பது வெளியுலகில் அதிசயங்கள் புரியும் விளையாட்டல்ல. அது உள்ளுலக விளையாட்டு - உங்களுடைய புறத்தன்மையை தனித்தன்மையாக மாற்றும் மாபெரும் அதிசயம்! புறத்தன்மையை தனித்தன்மையாக மாற்றுவதே மாபெரும் அற்புதம்¹.

மக்கள் என்னிடம் மீண்டும் மீண்டும் அதிசயங்கள் செய்து காட்டுமாறு கெஞ்சுகிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், பெயரளவிலான இந்த அதிசயங்களெல்லாம் என் நிலையை அளக்கும் ஒரு அளவுகோல் அல்ல. ஆனால் அவர்கள் கேட்க விரும்புவதில்லை. வெறுமனே செய்து காட்டுவதற்காக சில எளிய உத்திகளான பொருள்களை வரவழைத்தல் போன்ற ஒன்றிரண்டை செய்தால் கூட, மக்கள் என்னிடம் இந்த அதிசயங்களை, மந்திர ஜால வித்தையைக் காண்பதற்காக வர ஆரம்பித்து விடுவார்கள். உருமாற்றத்திற்காக அல்ல! அதுதான் என் கவலையே.

ஒரு நாள் சில பக்தர்களின் விடாப்பிடியான கெஞ்சுதலின் காரணமாக ஒரு லக்ஷ்மி விக்ரகத்தை தொலைகடத்தல்² மூலம் வரவழைத்து அவர்களிடம் கொடுத்தேன். அவர்களிடம் அது

Changing Personality to Individuality is the greatest miracle¹ Teleporting² ஒரு அற்புதம் அல்ல என்று விளக்கினேன். உங்களுக்கு நீங்கள் பார்ப்பதன் காரண- விளைவு உறவு முறை தெரியாததால், நீங்கள் அதை அதிசயம் என்று எண்ணுகிறீர்கள்.

உண்மையில் இந்த தொலைகடத்தலில் என்ன நிகழ்கிறது என்றால், தொலைபேசியில் எவ்வாறு உங்கள் குரல் ஒலியலைகள் மின்குறிப்புகளாக மாற்றப்பட்டு ஒரு ஊடகத்தின் வழியாகக் கடத்தப்பட்டு மறுமுனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகிறதோ, அதே போல, நான் வெறுமனே ஒரு பொருளை சக்தியாக மாற்றி காற்றின் வழியாகக் கடத்தி மீண்டும் அதைப் பொருளாக மாற்றி விடுகிறேன், அவ்வளவுதான். இதில் ஒன்றும் அதிசயமில்லை.

அதனால் அதிசயங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது நன்றியுணர்வுடனும் அன்புடனும் வாழுங்கள்; தானாகவே அதிசயங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். உங்களுடைய உருமாற்றமே ஒரு குருவின் மூலமாக நிகழக்கூடிய மாபெரும் அதிசயமாகும்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு குருவிடம் இருந்து உங்களுக்குத் தேவை அதிசயங்கள் அல்ல; அறிவு மட்டுமே.

அறிவுக் கூர்மை வளரும் பொழுது உங்களுடைய தினசரிச் செயல்பாடுகளை முயற்சியின்றிக் கையாளுவீர்கள்; அமைதியாக இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் ஒரு மேலாளர் என்று வைத்துக் கொள்வோம்; உங்களுக்குப் பல கடமைகள் இருக்கின்றன, இல்லையா? மக்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்கிறீர்கள், அவர் களுடைய செயல்திறனை மேற்பார்வையிடுகிறீர்கள், அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்கிறீர்கள், இவ்வாறு பலவும் செய்கிறீர்கள். இவற்றை யெல்லாம் உங்களால் மனஅழுத்தம் இன்றிச் செய்ய முடிகிறதா? அறிவுக் கூர்மையினால் இவற்றையெல்லாம் உங்களால்

என்னால் உங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தர முடியாது; ஆனால் உங்களால் கற்றுக்கொள்ள முடியும்.

மனஅழுத்தமின்றிக் கையாள முடியும். அமைதியுடன் இருப்பீர்கள். உங்களுக்குத் தேவை அறிவுக் கூர்மையே தவிர ஆற்றலல்ல. அதை நினைவில் வையுங்கள்.

பிரஞ்சஇருப்புத்தன்மை உங்களை பாதுகாக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அனுபவித்து உணர்ந்தீர்களானால், நீங்கள் உருமாற்றமடைவீர்கள்; இதுபோன்ற ஏமாற்றங்களிலிருந்தெல்லாம் விடுதலை பெற்று தனித் தன்மையுடையவராவீர்கள். நாம் எப்பொழுதும் மக்களையும் ஜோதிடர்களையும் குறி சொல்பவர்களையும் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் நம்புகிறோம்; ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் உயிர் மூலமான பிரபஞ்ச இருப்புத் தன்மையை ஒரு போதும் விசுவசிப்பதில்லை.

இந்தியாவில் மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கிளியிடம் கேட்கும் ஒரு பழக்கம் இருக்கிறது!

சாலையோர நடைபாதைகளில் ஒருவன் ஒரு கூண்டுக்குள் கிளியை வைத்திருப்பான். அந்த வழியாகச் செல்லும் மக்கள் அவனிடம் நின்று கொஞ்சம் பணம் கொடுத்து அவர்களது எதிர்காலத்தைப் பற்றி விசுவாசத்துடன் கேட்பார்கள். அவன் கூண்டைத் திறந்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக்கட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்துத் தரும்படி கிளிக்குக் கட்டளை யிடுவான். கிளி கூண்டிலிருந்து வெளியே வந்து அதன் அலகால் ஒரு சீட்டை எடுத்து அவனிடம் கொடுக்கும். அவன் அதில் எழுதப்பட்டிருப்பதைப் படிப்பான். அதுதான் கேட்பவருடைய எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பு!

ஆறறிவுள்ள ஒரு மனிதன் நாலறிவுள்ள ஒரு கிளியிடம் தனது எதிர்காலத்தைப் பற்றி முன் கூட்டியே சொல்லும்படிக் கேட்கிறான்! இது எவ்வாறு சாத்தியம்? நான் சொல்கிறேன்,

| உங்கள் தேவைகள் ஆசைகளிலிருந்து வேறுபட்டவை. தேவைகள் தானாகவே பிரபஞ்ச இருப்புத்தன்மையால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. |

இதுபோன்ற முட்டாள்தனங்களையெல்லாம் விட்டு விட்டு இசை வுடன் இருக்கத் தொடங்குங்கள். மைய இழையான நன்றியுணர்வை பிடித்துக் கொண்டு பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இசைந்து செல்லுங்கள்.

நீங்கள் குருமார்களை கவனித்தீர்களானால், அவர்கள் மிகவும் கருணைமயமாகவும் அற்புதமாகவும் தெய்வீகத் தன்மையுடனும் தோன்றுவார்கள். இதற்குக் காரணம் அவர்கள் பிரபஞ்ச இருப்புத்தன்மையுடன் இசைந்து செல்வதே. ஆனால் நீங்கள் அவர்களது நிலையைப் புரிந்து கொள்ளாமல் அந்தஸ்தை மட்டுமே பார்க்கிறீர்கள். நீங்கள் அவர்களது நிலையைப் புரிந்து கொண்டீர்களானால், அவர்கள் வெறுமனே பிரபஞ்ச இருப்புத் தன்மையில் கலந்து விட்டதால்தான் எப்பொழுதும் இவ்வளவு ஆனந்தமயமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்த நிலையை அடையத்தான் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? “ஓ! அவர் ஒரு குரு; அவர் எப்பொழுதும் ஆனந்தத்தில் இருக்கிறார். அவருக்கு எப்படி என்னுடைய பிரச்சினைகளைப் பற்றித் தெரியும்? நான் இங்கு ரொட்டிக்கும் வெண்ணெய்க்குமே போராடிக் கொண்டு இருக்கிறேன்; அவரோ எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருக்கச் சொல்கிறார்?”.

நான் சொல்கிறேன்... நீங்கள் குருவின் காலடியில் இருக்கும் ரோஜா இதழ்களை மட்டும்தான் பார்க்கிறீர்கள்; நீங்கள் அவருடைய அந்தஸ்தை மட்டுமே பார்த்து அவருக்கு உங்களுடைய தினசரி விஷயங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று எண்ணுகிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் அவருக்குக் கொடுக்கும் மரியாதை அவரது நிலைக்காக;

நன்றியுணர்வின் அற்புதங்களை நீங்களே அனுபவிக்கும்பொழுது, நீங்கள் மேலும் மேலும் அதிர்ஷ்டத்தைக் கவர்ந்திழுக்கிறீர்கள்.

அந்தஸ்த்துக்காக அல்ல. அந்த நிலையை அடைவதற்கு அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

நீங்கள் ரொட்டிக்கும் வெண்ணெய்க்குமான போராட்டத்தை பற்றிப் பேசுகிறீர்கள். நான் என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்... நான் அலைந்து திரிந்த நாட்களில் பல நாட்கள் உணவின்றியே இருந்திருக்கிறேன். ஆனால் நான் அதை ஒருபோதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஒரு குறையாக நினைத்ததில்லை. நான் மிகவும் ஆர்வத்துடன் உண்மையைத் தேடிக் கொண்டிருந்ததால், எல்லாமே - உணவில்லாமல் இருப்பது கூட - தியானமாகிவிட்டது.

உங்களுக்குத் தெரியுமா... சில தர்ம சத்திரங்களையும், சந்யாசிகளுக்கு நல்ல மரியாதை தரும் வட இந்தியாவையும் தவிர, மக்கள் எப்பொழுதும் பொதுவாகவே சந்யாசிகளைத் தவிர்த்து விடுகின்றனர். சந்யாசிகள் எப்பொழுதும் சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் உங்கள் சொத்துக்களைத் திருடிச்செல்வதற்காகவே வந்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்கள் போலிருக்கிறது. நான் சொல்கிறேன்... ஒரு போதும் அவர்களைத் தவிர்த்து விடாதீர்கள். அவர்களுக்கு ஏன் கொஞ்சம் உணவு கொடுக்கக் கூடாது? அதுவே அவர்களுக்குப் போதுமானது. மக்களுக்குக் கொடுக்கும்போது ஒருபோதும் கஞ்சத்தனமாக இருக்காதீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் உங்கள் செல்வத்தில் இருந்து கொஞ்சம் கொடுக்கும் ‘தானி’யாக இருக்க விரும்பாவிட்டால் இறக்கும் பொழுது எல்லா வற்றையும் விட்டுச் செல்லும் ‘மஹாதானி’யாகி விடுவீர்கள்!

எப்படியோ... தயவுசெய்து நான் என் சொந்த அனுபவத்திலிருந்துதான் பேசுகிறேன் என்பதைப் புரிந்து

நன்றியுணர்வுடன் இருங்கள். உங்கள் மீது பொழியப்படும். இதுதான் வாழ்வின் இரகசியம்.

கொள்ளுங்கள். ஆழமான கஷ்டங்களிலும் போராட்டங்களிலும் கூட, அலைபாயாத விசுவாசத்துடனும் நன்றியுணர்வுடனும் செயல்பட்டு, உங்கள் உள் அறிவுக் கூர்மையை உபயோகித்து அவற்றைக் கடந்து செல்வீர்களானால், நீங்கள் அதிக நன்றி யுணர்வுடனும் அறிவுக் கூர்மையுடனும் வெற்றிகரமாக வெளிவருதைக் காண்பீர்கள்!

நீங்கள் மிகவும் விலைமதிப்பற்ற எதையேனும் இழந்து விட்டால் கூட அதைச் சிலகாலம் மகிழ்ச்சியுடன் அனுபவித்ததற்காக வெறுமனே நன்றியுணர்வுடன் இருங்கள், அவ்வளவே. நீங்கள் தூய்மையான நன்றியுணர்வாகி விடும்பொழுது, இழந்து விட்ட எதற்காகவும் அழுது கொண்டிருக்க மாட்டீர்கள். அது இருக்கும் வரையில் வெறுமனே மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்; அது போன பிறகும் தொடர்ந்து நன்றியுணர்வுடனேயே இருந்து கொண்டிருப்பீர்கள்.

ஒரு சின்ன கதை...

ஒரு அரசன் அவனது நாட்டிலேயே இரவில் மாறு வேடத்தில் நகர்வலம் வருவது வழக்கம். ஒவ்வொரு இரவும் நகரம் முழுவதும் உறக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு குரு மட்டும் ஒரு மரத்தினடியில் ஆனந்தமயமான நிலையில் அமர்ந்திருப்பதைக் காண்பான். அந்த குருவிடம் அவனுக்கு ஒரு ஆழமான மரியாதை ஏற்பட்டது; ஒரு இரவு அவனுடன் அரண்மனையில் வந்து தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். குரு சொன்னார் "சரி. நான் இன்றே வருகிறேன். நாளை என்பது ஒருபோதும் நிச்சயமில்லை". அழைப்பு திடீரென்று எதிர்பாராவிதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அரசன் பின்வாங்கினாலும், அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அரண்மனையில் அவருக்கு அறைகளில் சிறந்ததையும், சிறந்த உணவையும் அளித்தான்.

பொறுப்புணர்வு என்பது (எந்த ஒரு நிகழ்விற்கும்) தன்னிச்சையாகத் தக்க பதில் கொடுக்கும் திறமை.

குருவோ எல்லாவற்றையும் நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவித்தார். அவர் எல்லா லோகாயதமான சுகங்களையும் அனுபவிப்பதை அரசன் கவனித்துக் கொண்டே யிருந்தான். ஒரு உண்மையான குருவானவர் இவ்வாறு அனுபவிப்பார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவனுக்கு குருவின் மீதான மரியாதை நாளாக நாளாகக் குறைந்து கொண்டே வந்தது. அவன் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தான். இறுதியில் ஒருநாள் குரு அவனிடம் சொன்னார், “ஏதோஒன்றுஉன்னைதொல்லைசெய்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறதே, நீ ஏன் அதை வெளியே சொல்லக் கூடாது?”. அரசன் சொன்னான், “ஆம், நீங்கள் இவை எல்லாவற்றையும் என்னைப் போலவே அனுபவிப்பதைக் காணும் பொழுது, என்னால் உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை”. குரு புன்னகையுடன் சொன்னார் “சரி நாம் சிறிது நடக்கலாம்”. அரசன் சம்மதித்தான். அவர்கள் நடக்கலாயினர். வெகு நேரம் அமைதியாக நடந்தனர். ஒரு ஆற்றையடைந்தனர்; அத்துடன் அந்த அரசனின் எல்லை முடிவடைந்து விடுகிறது. குரு சொன்னார், “சரி, நான் தங்கும் காலம் முடிந்து விட்டது. நான் உன்னுடைய இராஜ்ஜியத்தை விட்டுச் செல்கிறேன். நீயும் வருகிறாயா?”. அரசன் சொன்னான், “என்னால் எவ்வாறு முடியும்? எனக்கு இராஜ்யம் இருக்கிறது; என்னுடைய மக்கள் இருக்கிறார்கள், இன்னும் நான் தீர்க்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன!”. குரு புன்னகையுடன் கேட்டார், “இப்பொழுது உன்னுடைய கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா?”. குருவின் வார்த்தைகள் அரசனை பலமாகக் குலுக்கியது.

எல்லாம் பிரபஞ்ச இருப்புத்தன்மையைச் சேர்ந்தது என்று குருவுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் அந்தக் கணத்தில்,

அற்புதங்கள் ஒருபோதும் செய்யப்படுவதில்லை. அவை வெறுமனே தொடர்ந்து உங்களைச் சுற்றி நிகழ்கின்றன.

நன்றாக அனுபவித்து, முழுமையாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு கணமும் முழுமையாக வாழப்படுகிறது. அவர்கள் எதையும் இழப்பதைப் பற்றி அச்சப்படுவதில்லை; ஏனெனில் இழப்பதற்கு எது உன்னுடையது?

ஒருபோதும் மறக்காதீர்கள்... எல்லாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தது. நீங்கள் அதைத் தற்காலிகமாக வைத்திருக்கிறீர்கள், அவ்வளவுதான். உங்களிடம் எது இருப்பினும் இல்லாவிடினும் எப்பொழுதும் நன்றியுணர்வுடன் இருங்கள். அதுவே விடுதலை தரும் வாழ்விற்கான வழி. இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால், உங்களால் மாபெரும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

இன்னொரு அருமையான சின்ன கதை.....

கடவுளும், உலகின் எல்லா விஞ்ஞானிகளும் சந்தித்து ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். கடவுள் எதைச் செய்தாலும், விஞ்ஞானிகளும் ஏதோ ஒரு பொருளிலிருந்து அதை அப்படியே உருவாக்கினர். இறுதியாக கடவுள் மண்ணிலிருந்து மனிதனைப் படைத்து விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார். விஞ்ஞானிகள் மண்ணை எடுக்கத் துவங்கினர்... கடவுள் சொன்னார், "பொறுங்கள்! அதை உங்களுடைய மண்ணிலிருந்து செய்யுங்கள், என்னுடையதில் இருந்து அல்ல!".

மனிதன், பிரபஞ்ச இருப்புத் தன்மையே படைத்தது, படைக்கப்பட்டது மற்றும் படைத்தல்¹ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவனால் விஷயங்களை எந்தவிதக் கவலையுமின்றி, வெறுமனே அனுபவிக்கத் தொடங்க முடியும். அப்பொழுதுதான் அவனால் என்னுடையது என்பதையும் நான் செய்தேன் என்பதையும் கைவிட முடியும்.

Existence is the Creator, Created and the Creation¹

அதனால் புரிந்து கொள்ளுங்கள்... உங்களுடைய மனோபாவத்தை அதிருப்தி, கவலைகள், மனச்சோர்வு ஆகியவற்றைத் தேடுவதிலிருந்து, நன்றியுணர்வுடன் நிகழ்காலத்தைத் தேடுவதை நோக்கி மாற்றியமைத்துக் கொண்டால், உங்களால் தானாகவே பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சக்தியை இன்னும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்; பிறகு நன்றியுணர்வே உங்களுடைய மனோபாவமாகிவிடும்.

ஒரு சின்ன கதை....

ஒருவன் அவன் மனைவிக்குக் காய்கறிகள் வாங்கி வர கடைத்தெருவிற்குச் சென்றான். அவன் வெண்டைக்காய் வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் காட்டினான். அதைப்பார்த்த மனைவி சொன்னாள், “ஓ! இவையெல்லாம் மிகவும் முற்றிப் போய்விட்டது. என்னால் இவற்றைச் சமைக்க முடியாது”. அவன் அடுத்த நாள் கடைக்குச் சென்று, இந்த முறை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வெண்டைக்காய்களை வாங்கிக் கொண்டு வந்து மனைவியிடம் காட்டினான். மனைவி சொன்னாள், “நீங்கள் என்ன வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? எல்லாம் மிகவும் பிஞ்சு; இதை வைத்துக் கொண்டு நான் நினைத்த உணவைச் செய்ய முடியாது”. அடுத்த நாள் அவன் கடைத்தெருவிற்குச் சென்று, கடைக்காரரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான், “தயவு செய்து எனக்கு ரொம்ப முற்றலாகவோ அல்லது ரொம்பப் பிஞ்சாகவோ இல்லாத நல்ல வெண்டைக்காய்கள் கொஞ்சம் கொடு”. கடைக்காரரும், அவரே சிறந்த வெண்டைக்காய்களாகப் பொறுக்கியெடுத்துக் கொடுத்தார்; அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் காட்டினான். அதைப் பார்த்த மனைவி சொன்னாள், “என்ன? இன்றைக்கும் வெண்டைக்காய் வாங்கிக் கொண்டு வந்து விட்டீர்களா!”.

தண்ணீரை மதுவாக மாற்றுவது ஒன்றும் அற்புதமில்லை. மனிதனைக் கடவுளாக மாற்றுவதே உண்மையான அற்புதம்.

(பலத்த சிரிப்பு!)

நம்மில் பலருக்கும் பாராட்டுதல் என்பது ஒரு போதும் தன்னிச்சையாக வருவதில்லை. நம்மால் தன்னிச்சையாகப் பாராட்ட முடியவில்லையென்றால், நம்மிடம் குறை கூறும் அல்லது அதிருப்தியுடன் இருக்கும் இயல்பு இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில், அதிருப்தியே நமது மனதின் உணவாகும்.

அதிருப்தியுடன் இருப்பது என்பது மனதிற்கு மெல்வதற்குக் கொஞ்சம் உணவு கொடுப்பதைப் போன்றது. மனம் அதை உட்கொண்டு தன்னை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும். நாம் மிகவும் திருப்தியுடன் இருக்கும் பொழுது என்ன நிகழ்கிறது? மனதிற்கு உணவில்லாமல் போகிறது. அதற்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. அது தன் உணவைத் தேட ஆரம்பிக்கிறது!

ஒரு பெண்மணி செருப்புக் கடைக்குச் சென்றாள். அவள் கால்களுக்குப் பொருந்தும்படியான செருப்பைக் கேட்டாள்; விற்பனையாளரும் அவளுக்குப் பொறுமையாக பல ஜோடி செருப்புகளைக் காண்பித்தார். அவளும் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சிசெய்து, எதுவும் அவளுக்குச் சரியாகப் பொருந்தவில்லை என்று எண்ணினாள். இறுதியாக, விற்பனையாளர் ஒரு ஜோடி செருப்புகளைக் காண்பித்து, அவற்றை முயற்சி செய்து பார்க்குமாறு சொன்னார். அவள் அதை போட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள், “இது மிகவும் சரியாகப் பொருந்துகிறது, ஆனால், இது சரியான அளவு தானா என்று நான் ஆச்சரியமடைகிறேன்”.

(சிரிப்பு)

நீங்கள் திருப்தியாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டீர்களானால், பிறகு உங்களுக்கு யாராலும் உதவ

அதிசயங்களைத் தேடுவதை நிறுத்துங்கள்.

முடியாது. அது உங்கள் மனதின் ஒரு நிலை; அதற்கு உங்களால் மட்டுமே உதவிக் கொள்ள முடியும். நம்மில் பலரும் அதிருப்தியாக இருப்பதிலும், பேசுவதிலும் ஒருவிதமான வசதிப்பகுதியை உணர்கிறோம்; ஏனெனில் அதைப் பற்றிப் பேசுவதற்கு எப்பொழுதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கிறது; மனதிற்கு எப்பொழுதும் வேலை இருந்து கொண்டிருக்கிறது.

எப்பொழுதும் திருப்தியாக இருப்பது என்பது மனதை இழப்பதைப் போன்றது. நாம் எப்பொழுதும் திருப்தியாக இருக்க விரும்புவதாகச் சொன்னாலும், அது நிகழும் பொழுது நாம் தயாராக இல்லாமல் இருப்பதற்கு, இதுவும் ஒரு காரணம். நமது மனம் தந்திரமாக விளையாடுகிறது; ஏனெனில் அது மெல்வதற்கு ஏதேனும் தேவை.

தொடுவானத்தை1 நோக்கி ஓடும்பொழுது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். தொடுவானம் என்பது கற்பனையான ஒரு கோடு; ஆனால், அதன் பின்னால் ஓடும்பொழுது பாதுகாப்பாக உணர்கிறோம்; ஏனெனில் பின்னால் ஓடுவதற்கு ஏதோ இருக்கிறது! மனம் எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது!

நீங்கள் இதுபோன்றிருந்தால், உண்மையில் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், அவ்வளவுதான். நீங்களே உங்களுக்கு சுய முரண்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உதாரணமாக, உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் திருப்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; ஆனால் தொடர்ந்து குறை கூறிக் கொண்டிருப்பதன் மூலமும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்க மறுப்பதன் மூலமும், உங்களை நீங்களே திருப்தியடைய விடாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் விரும்புவது ஒன்று; ஆனால் உங்கள்

Horizon¹

மீது கொண்டு வருவது வேறொன்று. திருப்தியடைவதை வாழ்நாள் சாதனையாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கிறது!

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்... உங்களுக்கு சுயமுரண்பாடான விளைவுகளை உருவாக்கிக் கொள்ளும் அந்தக் கணத்திலேயே, உங்களுடைய துயரம் ஆரம்பித்து விடுகிறது. உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க முயற்சி செய்யுங்கள்; உங்களுடைய ஒவ்வொரு அவுன்ஸ் சக்தியையும் அவ்வாறு செய்வதற்கான வழியில் செலுத்துங்கள். இதுபோன்ற தெளிவுடன் செயல் படுவீர்களானால், உங்களை ஒருபோதும் ஏமாற்றிக் கொள்ள மாட்டீர்கள்; விரைவில் நீங்கள் விரும்புவதைப் போல் ஆகி விடுவதையும் காண்பீர்கள்!

நன்றியுணர்வே உங்கள் தியானமாகி விடும் ஒரு வெளியில் நீங்கள் நுழையும் பொழுது, தானாகவே திருப்தி ஏற்படுகிறது. நமக்குத் தெரிந்த சாதாரண திருப்தியானது எப்பொழுதும் ஒரு காரணத்துடனேயே வருகிறது. அது வெளியுலகில் நிகழ்ந்த ஏதோ ஒன்றுடன் தொடர்புடையது; அது உங்களுடைய சுறுசுறுப்பான மனதிற்குத் தற்காலிகமாக கொஞ்சம் ஓய்வு கொடுக்கிறது, அவ்வளவே. உங்கள் மனம் ஓய்வில் இருக்கும்பொழுது, நீங்கள் திருப்தியடைந்ததாகச் சொல்கிறீர்கள். உண்மையான திருப்தியென்பது இது அல்ல.

உண்மையான திருப்தியென்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணையை நோக்கி நீங்கள் நிரந்தரமான நன்றியுணர்வுடன் இருப்பதாகும். உண்மையான திருப்தி என்பது எதையும் கேட்காது. அது எல்லாவற்றையும் வெறுமனே

ஆறறிவுள்ள ஒரு மனிதன் நாலறிவுள்ள ஒரு கிளியிடம் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கேட்பது எவ்வளவு முட்டாள்தனம்?

எந்தவிதமான காரணமும் இன்றி மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும்; அதற்குக் காரணம் தேவையில்லை. நீங்கள் இந்த நிலையை அடைந்தீர்களானால், உங்களுக்கு அதிருப்தி என்றாலே என்னவென்று தெரியாது.

ஒரு சின்ன கதை...

ஒருவன் டாக்டரிடம் சென்று அவனுக்குத் தூக்கமின்மை இருப்பதாக முறையிட்டான். டாக்டர் கேட்டார், "அதனால், உங்களால் இரவில் தூங்கவே முடிவதில்லையா?". அவன் சொன்னான், "நான் இரவில் நன்றாகத் தூங்குகிறேன் டாக்டர்". டாக்டர் கேட்டார், "பிறகு உங்கள் பிரச்சினைதான் என்ன?". அவன் சொன்னான், "என்னால் பிற்பகலிலும் மாலை வேளைகளிலும் தூங்க முடிவதில்லை".

(பலத்த சிரிப்பு!)

நாம் மேலும் மேலும், ஒரு அளவு முறையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வேளை ஒரு அளவுகோல் இருந்தாலும், அது முடிவற்றதாக இருக்கிறது; அதுதான் பிரச்சினை. நமது மேலும் மேலும் கேட்கும் மனோபாவத்தால், முழுவதுமாக குருடாக்கப்பட்டு விட்டோம். இதனால், நாம் எங்கு நிற்கிறோம் என்பது கூட நமக்குத் தெரிவதில்லை. நாம் வெகுகாலமாக உள்நோக்கிப் பார்க்கவேயில்லை. நாம் வெறுமனே நமது மனதால் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இத்தகைய அறியாமை நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாமே துன்பத்தை உள்ளே உருவாக்கிக் கொண்டு, நிவாரணத்தை வெளியே தேடிச் செல்கிறோம்.

உங்களால் இந்த நகைச்சுவைக்குச் சிரிக்க முடிந்ததன் காரணம், நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் குருவின் காலடியில் இருக்கும் ரோஜா இதழ்களை மட்டும் தான் பார்க்கிறீர்கள். அந்நிலையை அடைவதற்கு அவர் எவ்வளவு போராடியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். என்பது உங்களுக்குத் தெரியும்; நீங்களும் அதில் ஒரு பகுதியல்ல என்பது உங்களுக்குத் தெரியும். வாழ்க்கையில், பல சமயங்களில், நீங்களும் இதே சூழ்நிலையில் இருக்கிறீர்கள்; அது உங்களுக்குத் தெரிவதில்லை. அந்த சமயங்களில், நீங்கள் கவனிப்பவர் அல்ல. நீங்கள் முழு விஷயத்திலும் மிகவும் ஆழ்ந்துவிட்டதால், அது உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகிவிடுகிறது. அது உங்களுக்கு ஒரு திடமான உண்மையாகிவிடுகிறது.

ஏதேனும் ஒரு விஷயம் உங்களைத் தொந்திரவு செய்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம், இந்த நகைச் சுவையை ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடனே இந்த நகைச்சுவையுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து, விழிப்புணர்வுடன், உங்களைத் தொந்திரவு செய்வது எது என்பதைப் பாருங்கள். ஆழமாகச் சென்று, உண்மையிலேயே உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறதா, அல்லது வெறுமனே உங்கள் மனதை விளையாட அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்களா, என்பதைப் பாருங்கள். இறுதியில் நீங்கள் வெறுமனே சிரித்து விடக் கூடும்!

ஒரு பெண்மணி நீண்ட தூர விமானப் பயணம் செய்து கொண்டிருந்தாள். விமானப் பணிப்பெண் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள், அந்தப் பெண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, அடுத்தவரை நோக்கி நகர்ந்து சென்று விட்டாள். சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணி விழித்துக் கொண்டு, அவளது உணவைக் கேட்டாள். விமானப் பணிப்பெண் அவளுக்கு உணவைக் கொண்டு வந்தாள். உணவைத் தொட்டுப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு சுரீர் என்று கோபம் வந்தது, "நீங்கள் என்ன விமானக் கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உணவு சூடாக இல்லை. நான் இந்த

இழப்பதற்கு எது உன்னுடையது?

விமானத்திற்கு மூக்கு முட்டப் பணம் கொடுத்திருக்கிறேன்; எனக்கு சூடான உணவு கூடக் கொடுக்க முடியாதா!". விமானப் பணிப்பெண் மன்னிப்புக் கேட்டாள், "மேடம், தயவுசெய்து எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். சூடு செய்யும் அடுப்பு வேலை செய்யவில்லை. மற்ற அனைவரும் இப்படித்தான் சாப்பிட்டார்கள்". அந்தப் பெண்மணி சொன்னாள், "அப்படியா? அப்படியென்றால் சரி!".

(சிரிப்பு!)

பாருங்கள், உணவு இப்பொழுதும் குளிர்ந்துதான் இருக் கிறது; ஆனால், அந்தப் பெண்மணிக்கு இப்பொழுது வருத்த மில்லை; ஏனெனில் எல்லாரும் அப்படித்தான் சாப்பிட்டனர் என்பது அவளுக்குத் தெரியும்! எல்லாம் மனதின் விளையாட்டு என்று நான் சொல்வது இதைத்தான்; எல்லாம் மனதின் சரி செய்து கொள்ளுதல்1. மனது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறது; நீங்கள் அதை ஆக்ரமிக்க அனுமதித்து விட்டதால், உங்களிடம் விளையாடுகிறது. நீங்கள் திருப்தியில் மையம் கொள்ளவில்லை; அதனால் உங்கள் மனதிற்கேற்றவாறு அலை பாய்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதனால், நான் சொன்னதுபோல், இறுதியில் உங்களால் சிரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அனைத்தையும் பற்றி இன்னும் கடுமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்; நீங்கள்தான் மொத்த உலகத்தையும் உங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், உங்களால்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

பாருங்கள், ஆழ்ந்து பார்க்கும் பொழுது, உண்மை என்ன வென்றால், நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையைச் சேர்ந்தவர்கள்;

Adjustment¹

அதுவே இறுதியான, எங்கும் பரவியிருக்கும் சக்தியாகும்; அதுவே அனைத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது உள்ளார்ந்த இயல்பும் கூட, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடனான தொடர்பை திரும்பப் பெறுவதுதான்; அதனால் நாம் எந்தப் பிரச்சினையும் இன்றி இசைந்து செல்ல முடியும். ஆனால், எங்கோ நாம் புரிந்து கொள்ளுதலைத் தவறவிட்டு விட்டு, நம்மைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையில் இருந்து துண்டித்துக் கொண்டு, லோகாயதமான விஷயங்களின் பின்னால், அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தில், ஓடிக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தீர்களானால், சிங்கம் மற்றும் புலிக் கூண்டுகளின் முன்னால் மிக நீண்ட வரிசையிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எப்பொழுதும் மக்கள் சிங்கம் மற்றும் புலிகளின் முன்னால் வெகுநேரம் நின்றுவிட்டு, ஒரு பயங்கலந்த வியப்புடனும், மரியாதையுடனும் அவற்றைப் போற்றிப் பாராட்டி விட்டுச் செல்வதைக் காணலாம்.

உணர்ந்து கொள்ளாமல் கூட, இதை நாம் செய்வதன் காரணம், நம்மை விடப் பெரிய அல்லது வலிய விஷயங்களைப் பார்ப்பதன் மூலம், நாம் மீண்டும் உறுதி செய்து கொள்கிறோம்; நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் அல்ல என்பதே நமக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் அல்ல என்பது நமக்குத் தெரியும். உண்மையில் நமது இருப்புத் தன்மை, இந்த பேரண்டப் பிரபஞ்சத்தில், நமது உண்மையான பங்கை ஞாபகப்படுத்தும் இது போன்ற ஏதாவதொரு கம்பீரத் தன்மையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

அதிருப்தியுடன் இருப்பது என்பது மனதிற்கு மெல்வதற்குக் கொஞ்சம் உணவு கொடுப்பதை போன்றது. மனம் அதை உட்கொண்டு தன்னை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.

மக்கள் கோயில்களுக்குச் செல்வது, விக்ரகங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குக் கிடைக்கும் இந்த உறுதி மொழிக்காகவே. இது போன்ற உறுதி மொழியைக் கோயில்களில் பெறாதவர்கள், வேறெங்காவது பெறுகிறார்கள். ஆனால் எப்படியோ, நமது உள் ஆழத்தில், நாம் இறுதியான உயர்ந்த ஆற்றல் அல்ல என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த உணர்வு நமக்கு அனுபவபூர்வமான உண்மையாக வேண்டும். பிறகு நாம் நிச்சயமாகத் தெரிந்து கொண்டு விடுவோம்.

நீங்கள் இமயமலைக்குச் சென்றால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் ஆழத்தைப் பற்றி, நிரந்தரமாகவும் உறுதியாகவும் ஞாபகப்படுத்தப் படுவீர்கள். ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்கு மலைகள் எழும்பி நிற்பதும், மலைகள் பள்ளத் தாக்கு களாகி விடுவதும், பள்ளத் தாக்குகள் மலைகளாக எழும்புவதும், ஆதியந்தம் காண முடியாமல் இருக்கிறது; கங்கை நதி பள்ளத்தாக்குகளில் பல மனநிலைகளிலும், பல வண்ணங்களிலும் வழிகளிலும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மொழியில் சலசலத்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் தொடர்ந்து பிரவகித்துக் கொண்டு இருக்கிறது. மனிதனால் செய்யப்படாத உலகம் ஒன்று இருக்குமானால், அதை நிரூபிக்க இமயமலை எழுந்து நிற்கும். மனிதர்கள் இறுதியான மன்னர்கள் அல்ல என்பதை இமயமலை நிரூபிக்கிறது. நீங்கள் இமயமலையைப் பார்க்கும்பொழுது, எவ்வாறு பல நூறு கிலோ மீட்டர்களில், பனிமலைகள் வெறுமனே பனிமலைகளாக தோன்றுவதையும், பிறகு மலைகளாகவும் நீராகவும் மாறி விடுவதையும், பின்னர் வெறுமனே நீராக மட்டுமே ஆகிவிடுகிறது என்பதையும் காண்பீர்கள். இயற்கையின் அற்புதங்கள் அதன் உச்சத்தில் இத்தகையதாக இருக்கிறது.

| நீங்கள் திருப்தியாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டீர்களானால், பிறகு உங்களுக்கு யாராலும் உதவ முடியாது. |

புத்தகங்களால் வார்த்தைகளின் வழியாகக் கற்பிக்க முடியாததை, இமயமலையால் வெறுமனே பார்ப்பதன் மூலமாகவே அனுபவபூர்வமாகக் கற்றுக் கொடுத்து விட முடியும். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டியது மட்டுமே தேவை. இமயமலை, ஊடுருவிச்செல்லும் அமைதியுடன் இருக்கும், உயிருள்ள ஒரு சக்தி வடிவம். நீங்கள் வெறுமனே அதை ஊடுருவிச் செல்ல அனுமதியுங்கள். நீங்கள் இந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் அற்புதத்தில் ஒரு புள்ளிதான் என்பதை புரிந்து கொண்டீர்களானால், அதை எந்தக் கேள்வியுமின்றி, கருணையுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்வீர்கள்.

நீங்கள் உங்களைப் பிரபஞ்ச இருப்புத் தன்மைக்குத் திறக்கும் பொழுது, அது உங்களை நிரப்புகிறது. நீங்கள் உங்களை எவ்வளவு திறக்கிறீர்களோ, அது அவ்வளவு நிரப்புகிறது. நீங்கள் அனைவரும், கடவுளைப் பற்றிக் கொள்ளக் கடினமாக உழைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நிச்சயமாக அல்ல. குரங்குக் குட்டி எவ்வாறு அதன் தாயைப் பற்றிக் கொள்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா? அது விட்டுவிட்டு விழுந்து விடும் சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. ஆனால் பூனை விஷயத்திலோ, தாய் குட்டியைக் கவ்விக் கொள்கிறது; குட்டி மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.

நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டாம். வெறுமனே உங்களை அனுமதியுங்கள்; உங்கள் கடமையைச் செய்து விட்டு மற்றவற்றை விட்டு விடுங்கள்; கடவுள் உங்களைப் பற்றிக் கொள்வார். கடவுளிடம் விழுவது பெரிய விஷயமல்ல. கடவுளை உங்களிடம் விழ வைப்பதே பெரிய விஷயம்! அது, நீங்கள் தோல்விகளால் துவளாத விசுவாசத்துடன்,

உண்மையான திருப்தியென்பது பிரபஞ்ச இருப்புத் தன்மையின் கருணையை நோக்கி நீங்கள் நிரந்தரமான நன்றியுணர்வுடன் இருப்பதாகும.

அன்பும் சேவை மனப்பான்மையும் கூடிய வாழ்க்கையை வாழும் பொழுது நிகழும்.

ஒரு அருமையான சின்ன கதை...

கடவுள் சிந்தனையும், அன்பும் நிறைந்த, தன் வாழ்வில் நிறைய நற்கருமங்களைச் செய்த மனிதர் ஒருவர் இருந்தார். யாரோ ஒருவரிடம் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அதில் கடவுளை மிகவும் நேசிப்பவர்களின் பெயர்கள் இருப்பதாகவும் அவருக்குத் தெரிய வந்தது. அவர் தன் பெயரும் அதில் இருக்கிறதா என்று பார்க்க விரும்பி, அவனிடம் சென்று, தான் அந்த புத்தகத்தைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் பலமுறை எல்லாப் பக்கங்களிலும் தேடிப் பார்த்தும் அவர் பெயரைப் பார்க்க முடியவில்லை. அவர் மிகவும் ஏமாற்ற மடைந்து திரும்பிச் சென்றார். ஒரு வருடம் கழித்து, தன் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க மீண்டும் திரும்பி வந்தார். இந்த முறையும், அவரால் எங்கும் காணமுடியவில்லை. அவர் திரும்ப முயற்சிக்கும் பொழுது, அவன் சொன்னான், "ஐயா, தயவு செய்து பொறுங்கள். இந்த புத்தகத்தில் கடவுளை நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள்தான் இருக்கிறது. கொஞ்சம் பெயர்களுடன், என்னிடம் இன்னொரு சின்ன புத்தகம் இருக்கிறது. அதில் கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள் இருக்கிறது". அவன் அவரிடம் அந்தப் புத்தகத்தைக் காண்பித்தான். அதில் அவரது பெயர் இருந்தது.

கடவுளிடம் விழுவது மிகவும் சுலபம். ஏனெனில் கடவுள் அன்புமயமானவர்; அனைத்தையும் கொடுப்பவர்; ஆற்றல் மிக்கவர். நீங்கள் தொடர்ந்து அவரை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டு இருந்த இடத்திலேயே இருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவனை இருப்புத்தன்மை நிலையில் உணர ஆரம்பித்தீர்களானால்,

நான் மேலும் மேலும் ஒரு அளவு முறையே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

உங்களிடம் உருமாற்றம் நிகழும்; கடவுள் உங்களிடம் விழுவார்! இதுவரை உங்களுக்குத் தெரியாத பல வழிகளிலும் நீங்கள் நேசிக்கப்படுவதைக் காண்பீர்கள். இறைவனின் பரிவான அன்பு அத்தகையது.

ஆரம்பத்திலிருந்தே நாம் இயற்கையைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், பிரபஞ்ச இருப்புத்தன்மை பற்றியும் எச்சரிக்கையுடன் இருக்கவே கற்றுக் கொடுக்கப்பட்டிருக் கிறோம். பூமி நம்மை காயப்படுத்தி விடாமல் இருக்க, செருப்புகளை அணியக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். மழையில் இருந்து விலகி இருக்கக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறோம். காற்று பலமாக வீசும்பொழுது வீட்டிற்குள் இருக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம் மிருகங்களிடம் இருந்து விலகி நிற்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம்.

நான் சொல்கிறேன்... இந்த பூமியில், பிரபஞ்ச இருப்புத் தன்மையே உங்களுடைய ஒரே சிநேகிதம். இந்த பூமியை உணர்ந்து நடப்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் என் சிறுவயதில், கல்லூரி நாட்களைத் தவிர, ஒருபோதும் செருப்பை அணிந்ததே கிடையாது. கல்லூரி நாட்களில் கூட அவர்களது விதிமுறைகள் அவ்வாறு இருந்ததால் அணிந்து கொண்டேன். வீட்டிலோ அல்லது பள்ளியிலோ அல்லது அலைந்து திரிந்த நாட்களிலோ, நான் வெறுமனே வெறும் காலுடன் நடப்பதுதான் வழக்கம்.

இப்பொழுது ஆசிரமத்திலும், பல சமயங்களில் நான் வெறும் காலுடன்தான் நடக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் அன்பினால், கால்கள் புண்ணாகி விடும் என்று சொல்லி செருப்பை அணிவித்து விடுகிறார்கள். நான் அவர்களிடம் கேட்பேன்,

இறுதியில் உங்களால் சிரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அனைத்தையும் பற்றி இன்னும் கடுமையாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

'வெறுமனே செருப்பின்றி இந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் அலைந்த என்னுடைய கால்கள், இப்பொழுது எவ்வாறு புண்ணாகி விட முடியும்?' என்று!

இவற்றையெல்லாம் செய்வதன் மூலம், நீங்கள் உங்களை இயற்கையிலிருந்து முழுமையாக துண்டித்துக் கொண்டு விடுகிறீர்கள். பலர் என்னிடம் கேட்கிறார்கள், "ஸ்வாமிஜி, பல வருடங்கள் கரடு முரடான பிரதேசங்களில் அலைந்து திரிந்தும் எவ்வாறு உங்கள் பாதங்கள் இவ்வளவு மிருதுவாகவும் வெடிப்பின்றி யும் இருக்கிறது?" என்று. நான் இப்பொழுது சொல்கிறேன்... நான் ஒருபோதும் என்னை பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு அந்நியமாக உணர்ந்ததில்லை, அதனால்தான்; அதுவே உண்மையான காரணம். நான் எப்பொழுதும் என்னை பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாகத்தான் எண்ணுகிறேன்.

நான் எப்பொழுதும் என்னை இயற்கையைச் சேர்ந்தவனாகத் தான் எண்ணுகிறேன். அதனால்தான் நான் ஒரு கவலையுமின்றி, எதைப் பற்றிய அச்சமுமின்றி அலைந்து திரிவது வழக்கம்.

வெறுமனே கற்பனை பண்ணிப் பாருங்கள்.. இருண்ட காட்டில் நீங்கள் தனியே, கொடிய வன விலங்குகளுடன், உணவின்றி, அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாமல், உறங்கக் கூட இடமின்றி, வானமே கூரையாக! எவ்வாறு நீங்கள் இருப்பீர்கள்? முழுவதும் பயத்துடன், இல்லையா?

இதற்குக் காரணம், பிரபஞ்ச இருப்புத் தன்மை, உங்களின் ஏமாற்றமடையச் செய்யாத சிநேகிதம் என்பது ஒரு போதும் உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை. நீங்கள் உதவிக்கு எப்பொழுதும் மக்களையே பார்த்து பழக்கப்பட்டு விட்டீர்கள்; ஏனெனில் மக்கள் மட்டுமே உதவுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே பிரச்சினை இருக்கிறதா, அல்லது வெறுமனே உங்கள் மனதை விளையாட அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதைப் பாருங்கள். இறுதியில் நீங்கள் வெறுமனே சிரித்து விடக்கூடும்.

பிரபஞ்ச இருப்புத் தன்மைதான் மக்களின் வழியாக உதவுகிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள். உங்கள் விசுவாசம் எப்பொழுதும் மக்களின் மீதே இருக்கிறது; ஒரு போதும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது அல்ல.

உங்கள் விசுவாசத்தைப் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மீது வைத்தீர்களானால், நீங்கள் இந்த பூமியில் கடவுளைப் போல வாழ முடியும். நான் அலைந்து திரிந்த நாட்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். எங்கு போகிறோம் என்ற எண்ணம் துளியுமின்றி, வெறுமனே கால்போன போக்கில் நடப்பது வழக்கம். ஏதோ ஒரு இரயிலில் ஏறி, எங்கு என்னை இயற்கைக் காட்சி கவர்கிறதோ, அந்த இரயில் நிலையத்தில் இறங்கி விடுவது வழக்கம். அப்பொழுது எனக்கு ஹிந்தியும் தெரியாது; பெரும்பாலும் அலைந்து திரிந்தது வட இந்தியாவில், இமய மலையில்தான். வழியைத் தெரிந்து கொள்வதற்காக, வெறுமனே அனுபவத்தில் ஹிந்தி வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.

உண்மையில், ஏதேனும் ஒரு மொழியைக் கற்பதானால், முதல் தடை, உங்களுக்கு அந்த மொழி தெரியாது என்ற எண்ணம்தான். நீங்கள் முதலில் உங்களை அந்த மொழியிலிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள்; பிறகு அது கடினமாகத் தோன்றுகிறது. இங்கு மீண்டும், உங்களுடைய 'எல்லாம் தெரிந்த' இயல்பினால், உங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள்.

எப்படியோ, பல சமயங்களிலும், நான் எந்த சாதுக் கூட்டத்துடனும் இல்லாமல், தனியாகவே அலைந்து திரிந்தேன். ஒருபோதும் நான் தனியாக இருந்ததாக எண்ணவில்லை. பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்.

நீங்கள் உங்களைப் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குத் திறக்கும்பொழுது, அது உங்களை நிரப்புகிறது. நீங்கள் எவ்வளவு திறக்கிறீர்களோ அவ்வளவு நிரப்புகிறது.

நீங்கள் இயற்கையுடன் தொடர்பு கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டால், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் மகிழ்ச்சியை உங்களால் உணர முடியும். நான் உணவிற்காக ஒரு போதும் பிச்சையெடுக்க வேண்டிய தேவையே இருந்ததில்லை. எனக்குப் பசியெடுக் கிறதோ இல்லையோ, உணவு யார் மூலமாகவோ ஏதோ ஓர் வடிவத்தில் வந்து விடும். இதைத்தான் நான், வெறுமனே நம்பிக்கை வை, (எது நடந்தாலும் சரி என்று) விட்டுவிடு1, பிரபஞ்ச இருப்புத் தன்மை கவனித்துக் கொள்ளும், என்று சொல்கிறேன்.

மக்கள் என்னிடம் கேட்கிறார்கள், “ஸ்வாமிஜி, நீங்கள் வாழ்க்கையில் மிகவும் போராடியே உங்கள் இலக்கை அடைந் திருக்கிறீர்கள். நாங்களும் எங்கள் இலக்கை அடைய கஷ்டப்பட வேண்டாமா?” என்று. நான் அவர்களிடம் சொல்கிறேன், என்னுடைய போராட்டத்திற்குக் காரணம், நான் ஒரு பூட்டைத் திறக்கும் முயற்சியில் 10,000 சாவிகளை உபயோகப் படுத்தியதுதான். நான் பல வருடங்களாக சோதனை செய்து சரியான சாவியைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்பொழுது என்னிடம் சரியான சாவி இருக்கிறது. நான் அதை யார் விரும்பினாலும் அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அதைக் கொண்டு திறப்பதற்கு உங்களுக்கு ஒரே ஒரு கணம் மட்டுமே பிடிக்கும்! ஆயினும், நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணினீர்களானால், அது உங்களுடைய சுதந்திரம்; நான் அதில் குறுக்கிட மாட்டேன்!

உங்களுடைய ஒரே ஒரு முயற்சி, பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் வழியாக பாய்ந்து செல்ல அனுமதிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு உங்களுடைய

Let go

எதிர்ப்பு குறைவாக இருக்கும் பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியும் குறைவாகவே இருக்கும். அது நேரான விகிதத்தில் தொடர்பு கொண்டுள்ளது. நீங்கள் ஞானமடை யும் பொழுது, ஒரு காலியான ஊடகமாகி விடுகிறீர்கள்; உங்கள் வழியாக பிரபஞ்ச இருப்புத் தன்மை தொடர்ந்து பாய்கிறது, அவ்வளவே. உங்கள் தரப்பிலிருந்து எல்லா முயற்சிகளும் நழுவி விழுந்து விடும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையால் உங்கள் வழியாக முயற்சியின்றிப் பாய முடியும்.

சரி, ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?

ஸ்வாமிஜி, திருப்தியாக இருப்பதற்கு தியானம் எவ்வாறு உதவுகிறது?

பாருங்கள், நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் பொழுது, மிருதுவாகவும், மென்மையாகவும் ஆகி விடுகிறீர்கள். உள்வாங்கும் தன்மையுடனும், நுட்பமான உணர்வுடையவர் களாகவும், விழிப்பு மிக்கவர்களாகவும் ஆகிவிடுகிறீர்கள். உங்களுடைய விழிப்புணர்வு ஒவ்வொரு கணமும் விரிவடைந்து கொண்டே செல்வதைக் காண்பீர்கள். உங்களுடைய உணர்வு களையும், செயல்களையும் விழிப்புணர்வே தீர்மானிக்கிறது. அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் உங்களை தியானம் செய்யச் சொல்கிறேன். அது உங்கள் விழிப்புணர்வைத் தூய்மைப் படுத்துகிறது. விஷயங்கள் உங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியும்.

உங்கள் மையம் மூளையிலிருந்து, இதயத்திற்கு நகர்வதை உங்களால் உணரமுடியும். உங்கள் மனதிற்கும் உங்களுக்கும்

நீங்கள் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டாம்.
வெறுமனே உங்களை அனுமதியுங்கள்.
கடவுள் உங்களைப் பற்றிக் கொள்வார்.

இடையேயுள்ள தூரம் அதிகரிக்கும்பொழுது, உங்கள் முழு இருப்புத் தன்மையும் ஒரு வித்தியாசமான உணர்வுடன் அதிர்வடைய ஆரம்பிக்கிறது; இந்த உணர்வே திருப்தி; ஒரு ஆழமான மனநிறைவு; அனைத்தையும் நோக்கிய எந்தவிதமான காரணமுமற்ற ஆழமான அன்பு; ஒரு தொடர்ந்த மகிழ்ச்சியும் ஆனந்தமுமான உணர்வு.

நீங்கள் மனதிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் வரை, மேலும் மேலும் கேட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள்; ஆராய்ந்து, பகுத்து இறுதியில் அதிருப்தியில் வந்து முடித்து விடுவீர்கள். இதயத்திலிருந்து இயங்கும் பொழுது, உங்களுடைய எல்லா ஆராய்தலும் நின்று விடும்; நீங்கள் கடந்த காலத்தை கூறுபோட்டு பார்க்கவும் மாட்டீர்கள், எதிர்காலத்தை நினைத்து கவலைப்படவும் மாட்டீர்கள். எந்த விதமான எடை போடுதலும் இன்றி, வெறுமனே நிகழ்காலத்தில் இருப்பீர்கள்; இந்த நிலையில் நீங்கள் திருப்தியுடனும் நன்றியுணர்வுடனும் மட்டுமே இருப்பீர்கள். உங்களுக்குள் ஒரு புதிய வெளி திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெளியை நீங்கள் கண்டுபிடித்து விட்டால், இதற்கு முன்பு நீங்கள் எதிர்மறை எண்ணங்களாலும், அதிருப்தியாலும் செலவழித்த எல்லா சக்தியும் விடுவிக்கப்பட்டு, நீங்கள் சக்தியால் நிரப்பப்பட்டு, ஆனந்தமயமாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் உணர்வீர்கள். பிறகு நன்றியுணர்வே உங்கள் பிரார்த்தனையாகி விடும்; நன்றி என்பது உங்கள் மந்திரமாகி விடும்!

நீங்கள் பிரபஞ்ச இருப்புத் தன்மையை நோக்கிய நன்றியுணர்வு நிலையில் இருக்கும் பொழுது, உங்களுக்குள்

நீங்கள் கடவுளிடம் விழுவது பெரிய விஷயமல்ல. கடவுளை உங்களிடம் விழ வைப்பதே பெரிய விஷயம்.

பொங்கும் சக்தியை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அது அனுபவபூர்வமாகத்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உங்கள் வழியில் வரும் ஒவ்வொரு விஷயமும் மிகுந்த திருப்தியைக் கொடுக்கும்; அது பிரபஞ்ச இருப்புத் தன்மை யிலிருந்து மேலும் மேலும் ஈர்க்கும்; பிரபஞ்ச இருப்புத் தன்மை உங்கள் மீது பொழிந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.

திடீரென்று, எல்லாம் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து விடும்; மேலும் மேலும் அதிகமான ஆனந்தத்தை உணர முடியும். உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் உங்களைத் திக்கு முக்காடச் செய்யும். வெறுமனே இருத்தலே மிகவும் தாங்க முடியாததாகத் தோன்றும். இதை, உங்களுக்கும், இந்த உலகம் முழுவதற்குமே ஒரு ஆசீர்வாதமாக உணர்வீர்கள்.

நீங்கள் கேட்கும் பொழுது, தெளிவாகத் தவற விட்டு விடுகிறீர்கள்; நன்றியுணர்வுடன் இருக்கும் பொழுது, பொழியப்படுகிறீர்கள். எப்பொழுதும் வெறுமனே நன்றி யுணர்வுடன் இருங்கள். அதுவே அனைத்திற்கும் பிரதான திறவுகோலாகும். ஆனால் அந்த நன்றியுணர்வு உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து வரவேண்டும்; புற விளிம்பிலிருந்து அல்ல. இருப்புத் தன்மையிலிருந்து நன்றியுணர்வு வரும் பொழுதுதான், விஷயங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

உறங்கச் செல்லும் பொழுது, இன்னொரு நாள் பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இருந்ததற்கான நன்றியுணர்வுடன் உறங்கச் செல்லுங்கள். எழுந்திருக்கும் பொழுது, பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் இன்னொரு நாள் இருக்கப் போவதற்கான நன்றியுணர்வுடன் எழுந்திருங்கள்! இதுவே, நன்றியுணர்வை

இந்த பூமியில், பிரபஞ்ச இருப்புத்தன்மையே உங்களுடைய ஒரே சினேகிதம்.

இருப்புத் தன்மையாக ஆக்கிக் கொள்வதற்கான, உங்களால் செய்ய முடிந்த, மிகவும் எளிமையான, மிகவும் ஆற்றல்மிக்க தியானமாகும்.

நான் சொல்கிறேன், உங்கள் இருப்புத் தன்மையிலிருந்து, வெறுமனே நன்றியுணர்வுடன் இருப்பதன் மூலமும், அதைப் பரப்புவதன் மூலமும், உங்களால் இந்த பூமியின் முகத்தை மாற்ற முடியும். ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் வெளிக் கொணர வேண்டிய நன்றியுணர்வைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதன் மூலம், எல்லா பயங்கரவாதம், போர்கள், மதவெறி, ஆரோக்யக் குறைவு, வறுமை ஆகிய அனைத்தையும் வேருடன் களைந்தெறிந்து விட முடியும்.

ஒவ்வொருவரும் நன்றியுணர்வுடனும், அதைப் பரப்பிக் கொண்டும் இருக்கும் பொழுது, அன்பிற்கும், வெறுப்பிற்கும், பொறாமைக்கும் இடமில்லை. வெறுமனே இந்த ஒரு உணர்வின் மூலமே உலகம் முழுவதிலுமுள்ள எதிர்மறைத் தன்மைகளுக்கான சாத்தியக்கூறுடைய எல்லா வேர்களையும் அழித்து விட முடியும்; ஏனெனில் எல்லா எதிர்மறைத் தன்மைகளுக்கான காரணங்களும் அதனுடன், வெறுமனே கரைந்து விடும். அதுதான் நன்றியுணர்வின் அற்புதம்!

சரி, இப்பொழுது நாம், நன்றியுணர்விற்கான தியானமான ஸஹஸ்ரார தியானம் என்று அழைக்கப்படும், ஒரு அற்புதமான தியான முறையைச் செய்வதில் சிறிது நேரத்தைக் கழிப்போம்.

(தன்னார்வத் தொண்டர்கள் கூடியிருக்கும் அனை வருக்கும் மலர்களை வினியோகிக்கிறார்கள்)

Satori - க்ஷண நேர ஆனந்த அனுபவம்

ஸஹஸ்ரார தியானம்

(நீடிக்கும் காலம் : 30 நிமிடங்கள்)

(ஒலிநாடாவில் மென்மையான இசை போடப்படுகிறது)

நிமிர்ந்து அமர்ந்து, கண்களை மூடிக் கொள்ளுங்கள்; உங்கள் ஸஹஸ்ரார சக்கரத்தில் மனதை ஒருமுகப்படுத்துங்கள். உங்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களையும் மறந்து விடுங்கள். உங்கள் உச்சியில் இருக்கும் மையத்தில் மனதை ஒருமுகப்படுத்தி, அங்கேயே தளர்வாக இருங்கள். புன்னகையுடனும், தளர்வாகவும் இருங்கள்.

உங்கள் முழு இருப்புத் தன்மையிலிருந்தும், இந்த உடலைக் கொடுத்ததற்காக, உங்கள் அன்னைக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். உங்கள் அன்னையை நினைவில் வைத்து, உங்கள் முழு இருப்புத் தன்மையில் இருந்தும், நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததற்காகவும் மற்றும் தேவையானவற்றையெல்லாம் கொடுத்ததற்காகவும் உங்கள் தந்தைக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நீங்கள் இந்த பூமிக்கு வந்த பொழுது, உங்களை வரவேற்று பெற்றுக்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நீங்கள் பிறந்த மருத்துவமனை அல்லது வீட்டைக் கட்டிய அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நீங்கள் குழந்தையாக இருந்தபொழுது, உங்களை கவனித்துக் கொண்ட அனைவருக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுடைய சிறுவயதில், உங்களது உணவிற்காகவும், உடைகளுக்காகவும், வாழ்க்கைக்காகவும் உழைத்த அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்கு ஆரம்பக் கல்வியை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் உங்களுடைய நன்றி யுணர்வைக் கொடுங்கள்.

தங்களுடைய கள்ளங்கபடமற்ற தன்மையையும், மகிழ்ச்சி யையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், ஆனந்தமயமாகவும் ஆக்கிய, உங்களுடைய சிறுவயது நண்பர்கள் அனைவருக்கும், உங்களுடைய நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களைப் போஷித்து வளர்த்ததற்காகவும், உங்கள் மீது அக்கறையுடன் கவனித்துக் கொண்டதற்காகவும், உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும், மற்ற உறவினர்களுக்கும், உங்களுடைய நன்றியுணர்வைக் கொடுங்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ அவர்களை ஏதேனும் புண்படுத்தியிருக்கக் கூடும்; அதற்காக அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தொழிற் கல்வியை அளித்தவர்களுக்கும், உங்கள் தொழிலில் நிலைத்து நிற்க உதவியவர்களுக்கும், உங்கள் சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தை அளித்தவர்களுக்கும், அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்குத் தேவையானபொழுது பணத்தைக் கொடுத்து உதவிய அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்களுக்குத் தேவையானபொழுது மருத்துவ உதவி யளித்து, உங்கள் ஆரோக்யத்தைக் கவனித்துக் கொண்ட, எல்லா மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அன்பையும் பாதுகாப்பையும் அளிக்கும் உங்கள் மனைவி அல்லது கணவனுக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் தரும் அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

நமது வாழ்க்கை முழுவதும் நமக்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்யும் பாலைக் கொடுக்கும் பால்காரர், மளிகைக் கடைக்காரர், சலவைக்காரர், குப்பைகளை அள்ளுபவர், உங்களுடைய வேலைக்காரர்கள் மற்றும் வேலைக்காரிகள், வாகன ஓட்டுனர் முதலிய நீங்கள் எப்பொழுதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ, அல்லது அறிந்தோ அறியாமலோ இவர்கள் யாரையேனும் புண்படுத்தி யிருக்கக் கூடும்; அதற்காக அவர்கள் ஒவ்வொரு வரிடமும் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களை வலுவாகவும், மன்னிக்கும் தன்மையுடனும் ஆக்கியதற்காக, உங்கள் எதிரிகளுக்கும், உங்களைப் புண்படுத்தியவர்களுக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். அவர்களை நீங்கள் புண்படுத்தியிருக்கக்கூடும்; அதற்காக அவர்களது மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உடல் ரீதியாக, மனரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் ஆன்மீக ரீதியாக உதவிய அனைவருக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் மனதில் இருத்தி, ஒவ்வொரு வருக்கும் உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். இதற்கு உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கும், அதன் எல்லா உறுப்புகளுக்கும், ஒவ்வொன்றாக, உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள். உங்கள் மனதிற்கு, அதன் அற்புதமான செயல்பாட்டிற்காக, உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

இந்த அனைத்தையும், உங்கள் வாழ்க்கையில் சாத்திய மாக்கியதற்காக, தெய்வீகத் தன்மைக்கும், முழுமைக்கும், கடவுளுக்கும், உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

இறுதியாக, பிரபஞ்ச சக்தியின் உருவமான, பிரபஞ்ச இருப்புத் தன்மையே ஸ்தூல வடிவில் இருக்கும் குரு நாதருக்கு உங்கள் நன்றியுணர்வைக் கொடுங்கள்.

என்மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைத்ததற்காகவும், இந்த சில நாட்களில் என் வார்த்தைகளைக் கவனத்துடன் கேட்டதற்காகவும், உங்கள் அனைவருக்கும் என் நன்றி யுணர்வைச் சமர்ப்பிக்கிறேன்.

இப்பொழுது நீங்கள் கண்களைத் திறக்கலாம்; பிரபஞ்ச இருப்புத் தன்மைக்கு, நன்றியுணர்வுடன் மலர்களை இந்த வெள்ளைத் துணியில் சமர்ப்பிக்கலாம்.

(கூடியிருக்கும் ஒவ்வொருவரும் வந்து நன்றியுணர்வுடன் மலர்களைச் சமர்ப்பிக்கிறார்கள்)

இப்பொழுது, ஆனந்த தரிசனம்.

ஆனந்தமாக இருங்கள்!