KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/|| சிவ பூஜை ||Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

|| சிவ பூஜை ||

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

|| தத்த்வாசமநம் ||

ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.

வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச் சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் அருந்தவும்.

ஆசமனம் செயல்முறை

ஆத்மதத்த்வம் போ⁴தயামি ஸ்வதா⁴ /
வித்​யாதத்த்வம் போ⁴தயামি ஸ்வதா⁴ /
சிவதத்த்வம் போ⁴தயামি ஸ்வதா⁴ /

...........................................................................................................

|| ஸுக்லாம்​பரத⁴ரம் ||

அட்சதையையும் மலர்களையும் வலது கையில் எடுத்து, பின் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே, இரண்டு கை முஷ்டிகளையும் கொண்டு, முன்நெற்றியின் பக்கவாட்டில் குட்டிக்கொள்ளவும்.

ஸுக்லாம்​பரத⁴ரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்பு⁴ஜம் /
ப்ரஸந்நவதநம் த்⁴யாயேத் ஸர்வவிக்நோப ஸாந்தயே //

...........................................................................................................

|| ப்ராணாயாம: ||

அட்சதையையும் மலர்களையும் வலது கையில் அப்படியே வைத்துக் கொண்டு, சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல்-இம்மூன்று விரல்களை மட்டும் திறக்கவும்.

1. பெருவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக ஆழமாகச் சுவாசத்தை முழுமையாக வெளியேற்றவும். உங்கள் உள்-உணர்வில் உள்ள அமைதியைக் கவனிக்கவும்.

2. மோதிர விரலாலும் சுட்டுவிரலாலும் இடது நாசியை மூடி, வலது நாசி வழியாக ஆழமாகச் சுவாசத்தை உள் இழுத்துக்கொண்டே, ‘அ’, ‘உ’ என்று உச்சரிக்கவும். அப்போது உங்கள் உள்-உணர்வில் சந்திரனையும் விஷ்ணுவையும் பாவனைசெய்யுங்கள்.

3. வலது நாசியையும் மூடி, உங்கள் உள்-உணர்வில் சூரியனையும் சிவ னையும் பாவனைசெய்துகொண்டே, ‘ம்’ என்று உச்சரிக்கவும்.

4. பெருவிரலால் வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக ஆழமாகச் சுவாசத்தை முழுமையாக வெளியேற்றிக்கொண்டே, ‘அ’, ‘உ’ என்று உச்சரிக்கவும். அப்போது உங்கள் உள்-உணர்வில் அக்னியையும் பிரம் மாவையும் பாவனைசெய்யுங்கள்.

5. மேலேயுள்ள 2 மற்றும் 4 வது படிகளை, மேலும் 2 முறைகள் செய் யவும்.

6. இறுதியில், வலது காதினை வலது கையால் தொடவும்.

.......................................................................................................................

|| ஸங்கல்ப: ||

மமோபாத்த- ஸமஸ்த-துரித-க்ஷயத்வாரா ஸ்ரீ-ஸத்குரு-ப்ரீத்யர்தம் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத நித்யானந்தேஸ்வர ஸதாஸிவ-ப்ரீத்யர்தம் ச அத்ய பூர்வ ஸங்கல்பித ப்ரகாரேண ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவ பூஜாம் கரிஷ்யே //

(வலது கையில் தண்ணீரை ஊற்றி, கீழ் வரும் மந்திரத்தை உச்சாடனம் செய்து, அக்ஷதையில் ஊற்றவும்)

ஓம் அப உப ஸ்ப்ருʼஸ்ய

ஆதிசக்தி ஸ்ரீநித்யானந்தேச்வரீயைத் தம் மடியில் இருத்தி, ஆதிசக்தி ஸ்ரீநித்யானந்தேச்வரீ ஸமேதராக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் நித்யானந்தேச்வர ஸதாசிவரை ஆத்மலிங்க வடிவில் வழிபட்டு, அவர்களை உங்கள் உள் உணர்வுக்குள் வரவேற்று நிலைநிறுத்துங்கள்.

இந்த மந்திரத்தின் பொருள்: சந்திரனைப்போல் ஒளிவீசும் ஐந்து முகங்களுடன், திரிசூலம், மான், மழு, வாள், வஜ்ராயுதம், அபய முத்திரை, பாசக் கயிறு, வரத முத்திரை, அங்குசம் மற்றும் அக்னி ஆகிய தெய்விக ஆயுதங்களைத் தம் பத்து கரங்களில் ஏந்தியவராய், வெண்தாமரையில் வீற்றிருக்கும் ஸதாசிவனைத் தியானிப்போமாக.

|| த்யாநம் ||

இந்துநிப பஞ்சமுக ஹஸ்த தச-யுக்தம்
ஶூலம்ருʼக டங்கமஸி வஜ்ரமபயம் ஸ்யாத்
பாஸா-வரதாங்குஶ மணிஜ்வலந-வாமே
ஸ்வேதகமலாஸந-ஸதஶிவ ஸ்வரூபம்

|| ஆவாஹநம் ||

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஶ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஶ்வர ஸதஶிவாய
த் hisயாமி ஆவாஹயாமி //

|| முத்ராம் ||

கைகளை விரித்த பின், பெருவிரல்களை மட்டும் மடித்து, சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு இடையிலுள்ள இடைவெளியைத் தொடுமாறு வைத்து இம்மந்திரத்தை உச்சரிக் கவும்.

ஆவாஹந முத்ராம்

மேற்கூறிய நிலையிலேயே கைவிரல்களை வைத்த வண்ணம் கைகளை பூமியை நோக்கித் திருப்பிக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

ஸ்தாபந

பெருவிரல்களை மட்டும் உயர்த்தி, மற்ற விரல்களை மடித்து, கைகளைச் செங்குத்து வசமாக வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

ஸந்நிதாந

மடித்து வைக்கப்பட்டிருக்கும் விரல்களுக்கிடையில் பெரு விரலைகளையும் மடித்து வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

நிஸ்தூரா முத்ராம்

|| ஆஸநம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்.

(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை ஆத்மலிங்கத்தின் முன் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய
ஆஸநம் ஸமர்பயாமி //

..........................................................................................................

|| பாத்யம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் பாதங்களைக் அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.

(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின்முன் வைக்கப்பட்டுள்ள பாத்ய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய
பாத்யம் ஸமர்பயாமி

..........................................................................................................

|| அர்க்யம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் கைகளை அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.

(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அர்க்கிய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய
அர்க்யம் ஸமர்பயாமி //

|| ஆசமநீயம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் அருந்துவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.

(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமநீய பாத்தி ரத்தில் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌளம் ஶிவாய ஸ்வதா: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய
ஆசமநீயம் ஸமர்பயாமி //

|| ஸ்நாநீயம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் நீராடுவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்.

(மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, மணியை ஒலிக்கச் செய்துகொண்டே, சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தால் ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகம் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌளம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய
ஸ்நாநம் ஸமர்பயாமி //

ஸ்நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி

ஓம் ஹாம் ஶிவாய ஸ்வதா //

...........................................................................................................

|| வஸ்த்ரம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் உடுத்துவதற்குரிய புத்தம்புது ஆடைகளைச் சமர்ப்பித்தல்.

(அட்சதையை எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஆசமநீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய
வஸ்த்ர-யஜ்ஞோபவீத-உத்தரீய-ஆபரணார்தம் அக்ஷதாந்
ஸமர்பயாமி //

...........................................................................................................

|| கந்த: ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் பூசுவதற்குரிய சந்தனத்தைச் சமர்ப்பித்தல்.

(சந்தனத்தைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, லிங்கத்திற்குப் பூசுவோம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஶிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவாய
கந்தாம் தாரயாமி
கந்தஸ்யோபரி ஹரிதா- குங்குமசூர்ணம் ஸமர்பயாமி //

...........................................................................................................

|| அஷ்ட புஷ்ப பூஜா ||

(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன், ஒவ்வொரு மந்திரத்தை உச்சாடனம் செய்யும்பொழுதும், அம்மலர்களை ஆத்மலிங்கத்தின்மீது சமர்ப்பிப்போம்.)

ஓம் ப₄வாய தே³வாய நம: ப₄வஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் ஸர்வாய தே³வாய நம: ஸர்வஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் ஈஸாநாய தே³வாய நம: ஈஸாநஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் பஸுபதயே தே³வாய நம: பஸுபதேர் தே³வஸ்ய பத்ன்யை நம:/ ஓம் உக்³ராய தே³வாய நம: உக்³ரஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் ருத்³ராய தே³வாய நம: ருத்³ரஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் பீ⁴மாய தே³வாய நம: பீ⁴மஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் மஹதே தே³வாய நம: மஹதோ தே³வஸ்ய பத்ன்யை நம: /

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /

ஸ்ரீ நித்யானந்தே³ஸ்வரீ ஆதி³ஸக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தே³ஸ்வர ஸதா³ஸிவாய அஷ்ட புஷ்ப பூஜாம் ஸமர்பயாமி //

................................................................................................................

|| பில்வபத்ரம் ||

ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் வில்வ இலைகளைச் சமர்ப்பித்தல்.

(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டேலிங்கத்தின்மேல் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /

ஸ்ரீ நித்யானந்தே³ஸ்வரீ ஆதி³ஸக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தே³ஸ்வர ஸதா³ஸிவாய பில்வபத்ரம் ஸமர்பயாமி //

................................................................................................................

|| தூப: ||

ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல். (ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஸதாசிவிருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய
தூபம் அத்ராபயாமி //

|| தீப: ||

ஸதாசிவிருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.

(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தீபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஸதாசிவிருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய
தீப: தர்ஸயாமி //

|| நைவேத்யம் ||

ஸதாசிவிருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.

(மணியை ஒலிக்கச்செய்துகொண்டே, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, உத்தரணியில் நீரை எடுத்து நைவேத்யத்தைக் கடிகாரச் சுற்றில் சுற்றி, ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமனீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம்.)

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத

ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய
நைவேத்யம் நிவேதயாமி //
ஓம் ஹாம் ஸிவாய ஸ்வதா. /

|| ஆராத்ரிகம் ||

தீப ஆரதியை ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் காட்டுவோம்.

கற்பூர கௌரம் கருணாவதாரம்
ஸம்ஸார ஸாரம் புஜகேந்த்ர ஹாரம் /
ஸதா-வஸந்தம் ஹ்ரு'தயாரவிந்தே
பவம் பவானீ ஸஹிதம் நமாமி //
பவம் பவானீ ஸஹிதம் நமாமி பவம்
பவானீ ஸஹிதம் நமாமி /

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: / ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய கற்பூரநீராஞ்ஜநம் ஸந்தர்ஸயாமி //

||புஷ்பாஞ்ஜலி: ||

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /
ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஸக்தி ஸமேத
ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஸிவாய
புஷ்பாஞ்ஜலிம் ஸமர்பயாமி //

|| மூலஜபம் ||

ஓம் ஹாம் ஹௌம் ஸிவாய நம: /

|| 3 முறை அமைதியாக மனத்திற்குள்ளேயே இம் மந்திரத்தை உச்சரிக்கவும் ||

.......................................................................................................

|| க்ஷமாப்ரார்தநா ||

இந்த மந்திரத்தின் பொருள்: என்னுடைய செயல்கள் அனைத்தையும், அவை நிறைவுணர்விலிருந்து செய்யப்பட்டாலும், குறைவுணர்விலிருந்து செய்யப்பட்டாலும், அவற்றை எரித்துவிடுவீராக, என்னை மன்னித்தருள்வீராக. சிவனே கொடுப்பவர், சிவனே அனுபவிப்பவர், சிவனே இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருப்பவர். எல்லா இடத்திலும் காலத்திலும் நீக்கமற இருக்கும் வழிபடுபவராகவும் சிவனே இருக்கிறார். இப்பூஜையை செய்து கொண்டிருக்கும் அந்த சிவமே நான் - ஸோஹம்.

இடது கையால் உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கொள்ளவும். வலது கையைத் திறந்து வைக்கவும். மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன், தீர்த்தத்தை வலது கையில் ஊற்றியபடியே, அத்தீர்த்தம் ஆத்மலிங்கத்தின் முன் விழும் வண்ணம் சமர்ப்பிக்கவும்.

யத்கிஞ்சித் கர்ம தேவேஶ ஸதா ஸாக்ரு'த துஷ்க்ரு'தம் /
தந்மேஶிவபதஸ்தஸ்ய புங்க்ஷ்வக்ஷபய ஶங்கர //
ஶிவோ தாதா ஶிவோ போக்தா ஶிவஸ்ய ஸர்வம் மிதம் ஜகத் /
ஶிவோ யஜதி ஸர்வத்ர யப்ஶிவஸ்ஸோஹமேவ து //

.......................................................................................................

|| புனராசமநீயம் ||

ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.

வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச் சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் அருந்தவும்.

ஆத்மதத்த்வம் போதயாமி ஸ்வதா /
வித்யாதத்த்வம் போதயாமி ஸ்வதா /
சிவதத்த்வம் போதயாமி ஸ்வதா /

|| பூர்ணமந்த்ர ||

இந்த மந்திரத்தின் பொருள்: தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. அந்த முழுமையிலிருந்து இந்த முழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது.

பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே /
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே //

பூஜையை முடிப்பதற்கு முன் ஆத்மலிங்கத்தின் முன் வீழ்ந்து வணங்குவோம்.

ஸர்வம் ஸ்ரீ ஸத்குரு பாதுகார்பணம் அஸ்து

ஓம் நித்யானந்தம்.