பூஜா திரவியங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

1. லிங்கம்

2. குருபாதுகா

3. நீர்ப் பாத்திரம்

4. சங்கு
(குருபூஜை அர்க்யத்திற்கான்து)

5. பாத்யப் பாத்திரம்
6. அர்க்யப் பாத்திரம்
7. ஆசமநீயப் பாத்திரம்
8. நைவேத்யப் பாத்திரம்
(ஆத்மலிங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது)

9. ஹரித்ர குங்குமம், சந்தனம்

10. மணி



11. தூபம்
12. ஜோதிகா விளக்கு
13. வஸ்த்ரம்


14. கற்பூர ஆரதி தட்டு 15. ஆரதி காட்டுவதற்கு எண்ணெய் விளக்கு
16. நைவேத்யப் பாத்திரம் (ஆத்மலிங்கத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது)
17. அக்ஷதை, மலர்கள், வில்வம், துளசி போன்றவற்றை வைத்துக்கொள்வதற்கான தட்டு

வடக்கு நோக்கி அமர்ந்து, மேலே காட்டிய வண்ணம் பூஜைப் பொருட்களை அடுக்கிக்கொள்ளவும்.
விசேஷ தீக்ஷை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தினமும் செய்யவேண்டிய குரு பூஜை மற்றும் சிவ பூஜை
பாதபூஜையைத் துவங்குவதற்கு முன்பு உணர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள்...
இந்தப் பாதபூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவரையும், நீங்கள் நேரடியாகப் பரமஹம்ஸரின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது பரமஹம்ஸரின் பாதுகையின் சாந்நித்தியத்தில் இருந்தாலும் அல்லது இணையதளத்தின் மூலமாகப் பூஜையில் பங்கேற்றாலும், கீழ்வரப்போகும் வாக்குறுதிகளை, உங்கள் மனதார ஏற்றுக்கொள்வதாக இருந்தால், ஒருமைத்துவத்துடனும் சிரத்தையுடனும் சப்தமாக ‘ஆம்’ என்று சொல்லி உங்களுடைய ஒப்புதலைப் பிரகடனப்படுத்திய பிறகு துவங்க வேண்டுகிறோம்.
1.பிரபஞ்ச சக்தி இருக்கிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன்... ‘ஆம்’
2.என் சத்குருநாதர் அந்தப் பிரபஞ்ச சக்தியின் உருவமாகவும், பிரதிநிதியாகவும் விளங்குகிற சின்மயவிக்ரகம் என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன் ... ‘ஆம்’
3.பாதபூஜையின்போது ஞானசத்குருநாதருக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துமே, பிரபஞ்ச மூலசக்திக்கே நேரடியாகச் சென்றடைகிறது என்னும் சத்தியத்தை சிரத்தையுடன் உள்வாங்கி இருக்கிறேன் என்பதையும், அதை நான் புரிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன் என்பதையும் பிரகடனப்படுத்துகிறேன் ... ‘ஆம்’
இப்பொழுது, நாம் பிரத்யக்ஷ பாதபூஜைக்குள் நுழைவோம். நன்றி உணர்வில் கரைந்த தியான உணர்வுடனும், ஆழ்ந்த விழிப்புணர்வுடன் கூடிய அமைதியுடனும் ஆனந்த கந்த தளத்தில் நிலைகொள்வோம்.
பிரத்யக்ஷ பாதபூஜை, முதலில் ஸத்குரு வந்தனத்துடன் துவங்குகிறது.
இந்த மந்திரத்தின் பொருள்:
ஆனந்த நிலையிலேயே என்றும் நிலைத்திருப்பவரும், மேலான மகிழ்ச்சி யைத் தருபவரும், ஞானமே வடிவானவரும், இருமைகளைக் கடந்தவரும், எங்கும் மங்களத்தன்மையுடன் நிறைந்திருப்பவரும், ஞான அனுபூதி அளிப்பதையே தம்முடைய முதன்மை இலக்ஷியமாகக் கொண்டிருப்பவரும், பரப்ரஹ்ம ஸ்வரூபமானவரும், நித்யமானவரும், தூய்மையானவரும், எந்த நிகழ்வாலும் நிலைகுலையாதவரும், அனைத்திற்கும் ஸாக்ஷியாக இருப்பவரும், உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவரும், சத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்கள் அற்றவருமாகிய ஸத்குருவை நமஸ்கரிக்கிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| ஸத்குரு-வந்தனம் ||
நித்யானந்தம் பரமஸுகதம் கேவலம் ஜ்ஞானமூர்திம் /
த்வந்த்வாதீதம் ககன-ஸத்ரு'ஶம்
தத்த்வமஸ்யாதி-லக்ஷ்யம் //
ஏகம் நித்யம் விமலம் அசலம் ஸர்வதீ-ஸாக்ஷிபூதம் /
பாவாதீதம் த்ரிகுண-ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி //
.......................................................................................................
அடுத்து வருவது, குரு பரம்பரா வந்தனம்.
குருபரம்பரா வந்தனத்தில், வாழையடிவாழையாகத் தொடர்ந்து வரும் குருபரம்பரைக்கு நமது நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.
இந்த மந்திரத்தின் பொருள்: நித்யானந்தேச்வரரை ஆதியாகவும், நித்யானந்தேச்வரியை இடையிலும்கொண்டு இப்போது என்னுடைய குரு நித்யானந்தர் வரையிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஞான குருமார்களின் பரம்பரையை வணங்குகிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| குரு-பரம்பரா வந்தனம் ||
நித்யானந்தேஸ்வர ஸமாரம்பாம்
நித்யானந்தேஸ்வரி மத்யமாம் /
நித்யானந்த-பர்யந்தாம் வந்தே குரு-பரம்பராம் //
..........................................................................................................
அடுத்து வருவது, அருணகிரியோகீஸ்வர வந்தனம். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரும், பரமஹம்ஸ நித்யானந்தரின் ஞான சக்திக்கு மூலகாரணமாக விளங்குபவரும், சிவனின் அவதாரமுமான அருணகிரியோகீஸ்வரருக்கு நம்முடைய மரியாதைகளையும் நன்றியுணர்வையும் சமர்ப்பிக்கிறோம்.
இந்த மந்திரத்தின் பொருள்: நெற்றியில் கஸ்தூரி திலகத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பட்டை விபூதியைப் பூசியவரும், கழுத்தில் ஒளிரும் மாலையை அணிந்தவரும், ஒளிரும் இடையில் கௌபீனத்தைத் தரித்தவரும், கொடிய விஷம்கொண்ட நாகம் மற்றும் பிறை சந்திரனை சிரஸில் சூடியவரும், எல்லோருக்கும் அத்வைத உணர்வளிப்பவருமான அருணகிரியோகீஸ்வரர் இப்போது நிகழ்ந்திருக்கிறார்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| அருணகிரி யோகீஸ்வர வந்தனம் ||
லலாடே த்ரிபுண்ட்ரீ நிடில-க்ரு’த கஸ்தூரீ-திலக: /
ஸ்புரன்-மாலாதாரீ ஸ்புரித-கடி கௌபீன வசன: //
ததானோ துஸ்தாரம் ஸிரஸி பணிராஜம் பஸிகலாம் /
ப்ரதீப: ஸர்வேஷாம் அருணகிரி யோகீ விஜயதே //
......................................................................................................
அடுத்ததாக, வருவது ஸங்கல்ப்ப மந்த்ரம். ஸத்குருநாதரின் ஸாந்நித்தியத்தில் நாம் விழிப்புணர்வுடன் ஒரு ஸங்கல்ப்பத்தை எடுக்கும்போது, அந்த ஸங்கல்ப்ப சக்தியே, பாதபூஜையின் மூலம் நிகழ வேண்டியதை நமக்கு நேரடியாகக் கொடுத்துவிடும்.
நாம் உச்சாடனம் செய்யப்போகும் இந்த மந்திரத்தின் பொருள்...
என்னுடைய பாவங்கள் அனைத்தும் அழிவதன் மூலமாக ஸத்குருநாதர் மகிழ்வதற்கும், என்னுடைய நலனுக்காகவும், எனது உற்ற சுற்றத்தினர் நலனுக்காகவும், பிரம்மாவினுடைய வாழ்வின் இரண்டாவது பகுதியான ஸ்வேத வராக கல்பத்தில், வைவஸ்வதமனுவின் ஆட்சியில், நித்யயுகத்தின் முதல் கால் பகுதியில், ஜம்பு தீவில், பாரத பூமியில், பரத கண்டத்தில், மேரு மலையின் தெற்குப் பகுதியில், பிரபவ எனும் பெயருடன் ஆரம்பிக்கும் 60 வருட சுற்றில், கால கணக்கின்படி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (இப்போது நிகழும் வருடத்தின் பெயர்)-----வருடத்தில் (அயனத்தின் பெயர்)--- (தக்ஷிணாயத்தில் / உத்தராயணத்தில்), (காலத்தின் பெயர்)---காலத்தில் ( வசந்த / கோடை / மழை / முன் பனி / பின் பனி / குளிர்) (மாதத்தின் பெயர்)---மாதத்தில், (பட்சத்தின் பெயர்)--- பிறையில் (வளர்பிறை / தேய்பிறை), (திதியின் பெயர்)---திதியில், (கிழமையின் பெயர்)---கிழமையில், (நக்ஷத்ரத்தின் பெயர்)-- -நக்ஷத்ரத்தில், (யோகத்தின் பெயர்)---யோகத்தில், (கரணத்தின் பெயர்)---கரணத்தில், இப்படிப்பட்ட நற்குணங்களைப் பெற்ற, இந்த அரிய புண்ணியமான தினத்திலே,
(பாத பூஜை செய்பவர்களின் பெயர்களை இங்கு சொல்ல வேண்டும். ஆணாக இருந்தால், அவருடைய பெயரைச்சொல்லி, பெயரின் இறுதியில் 'நாமதேயஸ்ய' என்றும், பெண்ணாக இருந்தால், அவருடைய பெயரைச்சொல்லி, பெயரின் இறுதியில் 'நாம்ந்யா:' என்றும் சொல்ல வேண்டும்.) ... குடும்ப சகிதமாக,,
மீனாக்ஷி ஸுந்தரேச்வரரின் உருவகமாகவும், பரமசிவனாரின் பிரிய புத்திரராகவும், தம்முடைய கருணையினால் தம்மை இளம் ஞானஸத்குருவாக வெளிப்படுத்திக்கொண்ட அவதாரமாகவும், அன்னை பார்வதி தேவியின் திருமுலைப்பாலைப் பருகிய காரணத்தால், அனைத்து வேத ஆகமங்களின் ஸாரமாக விளங்கும் மிகவும் போற்றத்தக்க திராவிட வேதங்களை இயற்றி, சிவபெருமான் கருணையால் அளித்த முத்துப் பல்லக்கில் நிலைபெற்று, சைவ சம்பிரதாயத்தை புனரமைத்து, ஸர்வஜ்ஞ பீடமான ச்யாமள பீடத்தை அலங்கரித்து ஜகத்குருவாகத் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமானாரின் அவதாரமாகத் திகழ்பவரும், மீனாக்ஷி ஸுந்தரேச்வரரால் நிர்மாணிக்கப்பட்டு, பின்பு திருஞான சம்பந்தரால் புனரமைக்கப்பட்ட ஆன்மிக சாம்ராஜ்யமான ஸர்வஜ்ஞ பீடத்தை 293 வது குருமகாஸன்னிதானமாக அருளாட்சி செய்பவரும், மஹாநிர்வாணீபீடத்தினுடைய ஆயிரத்து எட்டு ஸ்ரீ மஹாமண்டலேச்வரரும், வீறார்ந்த நடையும், கம்பீரமும், தனிச்சிறப்பும், மகிமையும், வனப்பும், லாவண்யமும் கொண்ட பாதங்களை உடையவரும், பரமஹம்ஸரும், பரிவ்ராஜக ஆச்சாரியரும், ஓம்கார வடிவானவரும், ஸச்சிதானந்த ஸ்வரூபமானவரும், அதாவது நிலைத்த தன்மை, பேரறிவு மற்றும் பேரானந்த ஸ்வரூபமானவரும்,வேதங்களை அறிந்தவரும், பிரம்மநிஷ்டை நிலையில் இருப்பவரும், நித்திய உத்ஸவங்களுடனும் நித்திய மங்களத் தன்மைகளுடனும் நித்ய கல்யாண குணங்களுடனும் என்றென்றும் ஈர்க்கும் தன்மையுடன் திகழும் நித்யானந்த பீட என்னும் மஹா ஸம்ஸ்தான மஹா ஸிம்ஹாஸனத்தை நிறுவியவரும், அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்குபவருமான ஸத்குரு நித்யானந்தரின் பாதங்களை-ஜகத் குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்த ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக சுவாமி பகவத் பாதாச்சாரியாரின் அருளைப்பெறவும், பரமஹம்ஸ நித்யானந்த பகவத் பாதாச்சாரியாரின் பாதாரவிந்தங்களில் என்னுடைய பக்தியை நிலைநிறுத்துவதற்காகவும், குருவின் கிருபையை அடைவதற்காகவும், க்ஷேமம், திடத்தன்மை, ஆற்றல், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், செல்வம் இவை அனைத்தும் பெருகுவதற்காகவும், ஒரு மனிதனால் அடையப்பட வேண்டிய தர்மம்-அதாவது-நான் எதைச் செய்தாலும், அதை அத்வைத உணர்விலிருந்து மட்டுமே செய்ய வேண்டும் என்கின்ற அறிவு, அர்த்தம்-அதாவது- நான் எதை அடைய விரும்புகின்றேனோ, அது ஏற்கெனவே என் உள் உணர்வின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது என்கின்ற அறிவு, காமம்-அதாவது-என் வாழ்வில் வரும் ஒவ்வொரு நபருமே, ஏற்கெனவே என்னுடைய பாகமாகத்தான் இருக்கிறார்கள் என்கின்ற அறிவு, மோக்ஷம்-அதாவது-எதுவெல்லாம் இருக்கின்றதோ, அது அனைத்துமே நான்தான் என்கின்ற அறிவு-இந்த நால்வகை அறிவையும் (பலன்களையும்) அடைவதற்காகவும், என்னால் சேர்த்து வைக்கப்பட்ட கர்மங்கள் அனைத்தும் கரைவதற்காகவும், எல்லாவித மங்களத்தன்மையை அடைவதற்காகவும், ஸத்குருவின் கருணையினால், எனது உற்ற சுற்றத்தார் அனைவருடனும் ஞானம், வைராக்கியம் மற்றும் அத்வைத உணர்வை அடைவதற்காகவும் அனைத்து தே தவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்குபவருமான ஸத்குரு நித்யானந்தரின் பாதங்களைப் பூஜிக்கிறேன்.
(இடது உள்ளங்கையில் மலர்களை வைத்து, அவற்றை வலது உள்ளங்கையால் மூடி, கைகளை வலது தொடையின் மீது வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
குறிப்பு: (த்விதீய-பரார்தே ஸ்ரீ-ஶ்வேத-விலிருந்து கரண வரை உள்ள இடைவெளிகளில் வரும் வார்த்தைகள் அந்தந்த காலங்களுக்கும், இடங்களுக்கும் ஏற்றவாறு மாறுபடும்.)

|| ஸங்கல்ப: ||
மமோபாத்த- ஸமஸ்த-துரித- க்ஷயத்வாரா-ஸ்ரீ-ஸத்குரு -ப்ரீத்யர்தம் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிபக்தி ஸமேத நித்யானந்தேஸ்வர ஸதாஸிவ- ப்ரீத்யர்தம் ச ஸுபே
ஶோப₄னே முஹூர்Regionதே ஆத்யப்Regionரஹ்மண : த்விதீய-பரார்தே₄, ஸ்ரீ-ஶ்வேத-வராஹ-கல்பே வைவஸ்வத-மன்வந்தரே அஷ்டாவிம்ஶதிதமே நித்யயுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பா₄ரத வர்ஷே பரத: கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரப₄வாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே (வருடத்தின் பெயர்)---நாம ஸம்வத்ஸரே, (அயனத்தின் பெயர்)-- -(தக்ஷிணாயனே/உத்தராயணே), (ருதுவின் பெயர்)---ரு'தௌ (ஶரத்/க்ரீஷ்ம/ஶிஶிர/ ஹேமந்த/ வர்ஷ/ வஸந்த) (மாதத்தின் பெயர்)-- -மாஸே, (பட்சத்தின் பெயர்)---பக்ஷே (ஶுக்ல/ க்ரு'ஷ்ண), (திதியின் பெயர்)---ஶுப₃திதௌ, (கிழமையின் பெயர்)---வாஸர-யுக்தாயாம், (நக்ஷத்ரத்தின் பெயர்)-- -நக்ஷத்ரே, (யோகத்தின் பெயர்)---யோக, (கரணத்தின் பெயர்)---கரண ஏவம்-குண-விஶேஷண-விஶிஷ்டாயாம் அஸ்யாம் ஶுப₃திதௌ (பாத பூஜை செய்பவர்களின் பெயர்களை இங்கு சொல்ல வேண்டும்) (ஆண்களுக்கு)---நாமதே₄யஸ்ய (பெண்களுக்கு)---நாம்ந்யா: ச ஸகுடும்பஸ்ய
ஸ்ரீ கைலாஸோன்னத - த்வாதஶாந்த - ஶ்யாமலா - பீடாரூட - ஸ்ரீ மீனாக்ஷீ - ஸுந்தரேஶ்வராபின்ன - ஸ்வரூப - பரஶிவ
- புத்ர ரத்னகுமார - குருமன்ய - துல்யாவதார - ஸ்ரீ பார்வதீ
- ஸ்தன்யபான - லப்த - திவ்யஜ்ஞான - விஶ்ருத - ஸகல - நிகமாகம - ஸாரபூத - த்ராவிடவேத - ப்ரவர்தக - ஸ்ரீமத் - பரமஶிவ - கருணா - ஸமதிகத - முக்தாமய - சதுரஶ்ரயான - ஸ்தாபக - சைவ - ஸமய - கர்த்ரு' - ஸர்வஜ்ஞபீடாரூட - ஸ்ரீஜகத்குரு - ஸ்ரீ ஜ்ஞான ஸம்பந்த - தேஸிக - ஸ்வாமினாம்
- அவதார - பூத தத்புனருத்த்ரு'த - ஸர்வஜ்ஞ - பீடாரூட - தஜ்ஜ்ஞானஸாம்ராஜ்ய - ஶாஸக - த்ரினவத்யுத்தர - த்விஶத தம
- குருமஹாஸந்நிதான - மஹாநிர்வாணீபீடஸ்ய அஷ்டோத்தர
- ஸஹஸ்ர - ஸ்ரீ மஹாமண்டலேஸ்வர - ஸ்ரீமத் - பரமஹம்ஸ
- பரிவ்ராஜகாசார்யவர்ய - சச்சிதானந்த - ப்ரணவ - ஸ்வரூப
- ஸ்ரோத்ரிய - ப்ரஹ்ம - நிஷ்ட - நித்யோத்ஸவ நித்ய - மங்கள - நித்ய - கல்யாண - நித்ய - ரஜித - நித்யானந்த - த்யானபீட - மஹா ஸம்ஸ்தான மஹா ஸிம்ஹாஸன - பீட - கர்த்ரு' - ஜகத்குரு, - பகவாந் - ஸ்ரீ - ல - ஸ்ரீ - பரமஹம்ஸ
- நித்யானந்த - ஸ்ரீ - ஜ்ஞானஸம்பந்த - தேஸிக - பரமாசார்ய
- ஸ்வாமி - பகவத்பாதாசார்ய - ப்ரீத்யர்தம் - பரமஹம்ஸ - நித்யானந்த - பாதாரவிந்தயோ: பக்தி - ஸித்த்யர்தம், குருக்கு'பா கடாக்ஷ - ஸித்த்யர்தம், க்ஷேம - ஸ்தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணாம் அபிவ்ரு'த்த்யர்தம், தர்மார்த
- காம - மோக்ஷ - சதுர்வித - பல - புருஷார்த - ஸித்த்யர்தம், மம ஸமஸ்த - துருதோப - ஶாந்த்யர்தம், ஸமஸ்த - மங்கள அவாப்த்யர்தம் ஸ்ரீஸத்குரு - ப்ரஸாதேன - ஸகுடும்பஸ்ய - ஜ்ஞான - வைராக்ய - ஜீவன் - முக்தி - ப்ராப்த்யர்தம் - ஸ்ரீ குருபூஜாம் (அல்லது) குருபாதாம் பூஜாம் ஸ்ரீ நித்யானந்தேஸ்வரீ ஆதிஶக்தி ஸமேத ஸ்ரீ நித்யானந்தேஸ்வர ஸதாஶிவ பூஜாம் கரிஷ்யே //
......................................................................................
மணியோசையினால் வழிபடும் இடத்தைத் தூய்மைபடுத்துதல்
இந்த மந்திரத்தின் பொருள்: எல்லா தேவ தேவியர்களை இங்கு எழுந்தருளச் செய்யும்பொருட்டு ஒலிக்கப்படும் இம்மணியோசையால் எல்லா தேவ தேவியர்களும் நம்மை வந்தடையட்டும். எதிர்மறை சக்திகள் நம்மைவிட்டு விலகட்டும்.
மணியைச் சப்தமாக ஒலிக்கச்செய்யவும்.
|| கண்டாநாத: ||
ஓம் ஆகமார்தந்து தேவாநாம் கமநார்தந்து ராக்ஷஸாம்
கண்டாநாதம் கரோம்யாதௌ தேவதாsவாஹந-லாஞ்சநம் /
கண்டா-தேவதாப்யோ நமோந்நம: //
அடுத்து, மானஸீகப் பூஜை மானஸீகப் பூஜையைச் சரியான உணர்வுடன் பாவனை செய்யும்போது, பூஜை செய்பவர் அந்தப் பூஜையின் முழுப்பலனையும் அடைகிறார். சரியான உணர்வுடன் செய்யப்படும் பூஜை, குரு சிஷ்ய உறவை வலுப்படுத்தும்.
இந்த மந்திரத்தின் பொருள்: குருவுக்கு நான் எந்தவிதமான ஆஸனத்தை அளிக்க முடியும், என் இருதயத்தைத் தவிர!
குருவின் பாதங்களையும் வாயையும் அலம்புவதற்கு, என்னுள் பொங்கும் நன்றியுணர்வையே அம்ருதமாக சமர்ப்பிக்கிறேன்.
என் மனத்தையே மலர்க் கொத்தாகச் சமர்ப்பிக்கிறேன்.
பிரபஞ்ச வடிவாக விளங்கும் என் குருவுக்கு ஆடையாக, ஆகாச வெளியைத் தவிர வேறு எதை என்னால் அளிக்க முடியும்?
வாசனை தத்துவமாக விளங்கும் பிருதிவி தத்துவத்தையே சந்தனக் குழம்பாகவும், சித்தத்தில் எழுகின்ற எண்ண ஓட்டங்களையே புஷ்பங்களாகவும், என்னுடைய பிராணனையே தூபமாகவும், என்னுடைய தேஜஸையே தீபமாகவும், அம்ருதக் கடலையே நைவேத்யமாகவும் சமர்ப்பிக்கிறேன்.
ஒருவராலும் எழுப்பப்படாமல் தானாகவே ஒலித்துக் கொண்டிருக்கும் அனாஹத த்வனியையே மணி ஓசையாகவும், காற்று தத்துவத்தைச் சாமரமாகவும், ஸஹஸ்ரார சக்கரத்தைக் குடையாகவும், தொண்டையின் அருகில் இருக்கும் சப்த தத்துவத்தையே (காற்றை ஒலியாக மாற்றும் செயல்பாட்டையே) இசையாகவும், புலன்களின் செயல்களையும் மனத்தின் அலைபாய்களையுமே நடனமாகவும் குருவின் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஏழு சக்கரங்களுடன் கூடிய ஸுஷும்னா நாடியையே மலர்மாலையாகச் சமர்ப்பிக்கிறேன். குருவின் திருப்பாதங்களில் அர்ப்பணிக்கப்பட வேண்டிய மலர்களாகிய மாயையில் ஆளாத் தன்மை, அகங்காரமின்மை, பற்றற்ற தன்மை, கர்வமின்மை, காமம் அற்ற தன்மை, பிறர் பொருட்களைக் கவராத் தன்மை, பழி உணர்வின்மை, விழிப்புறு தன்மையின்மை, பொறாமை அற்ற தன்மை மற்றும் பேராசையின்மை ஆகிய 10 மலர்களாலும்,
மேலும், அஹிம்ஸை, புலன்களைக் கடந்து செல்லுதல், கருணை, எப்போதும் மன்னிக்கும் தன்மை, ஞானம் ஆகிய ஐந்து மலர்களாலும் குருவின் திருப்பாதங்களைப் பூஜிக்கிறேன்.
பூஜைக்கு உகந்த இந்த 15 மலர்களால் நான் ஸத்குருவைப் பூஜிக்கிறேன்.

(மலர்களைக் கையில் எடுத்து, கைகளைக் கூர்ம முத்திரையில் வைத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில் அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| மானஸ-பூஜா ||
ஓம் ஹ்ருத்-பத்மம் ஆஸனம் தத்யாத் ஸஹஸ்ரார்ச்யுதாம்ம்ரு'தை: /
பாத்யம் சரணயோர்-தத்யாத் மனஸ்து அர்க்யம் நிவேதயேத் //
தேன-அம்ரு'தேன ஆசமனீயம் ஸ்நானீயம் தேன ச ஸ்ம்'ருதம் /
ஆகாய தத்த்வம் வஸ்த்ரம் ஸ்யாத் கந்த: ஸ்யாத் கந்த தத்த்வகம் //
சித்தம் ப்ரகல்பயேத் புஷ்பம் தூபம் ப்ராணான் ப்ரகல்பயேத் /
தேஜஸ்-தத்த்வம் ச தீபார்தம் நைவேத்யம் ஸ்யாத் ஸுதாம்Lதி: //
அனாஹத-த்வனிர்கண்டா வாயு-தத்த்வம் ச சாமரம் /
ஸஹஸ்ராரம் பவேத் சத்ரம் ஸப்த-தத்த்வம் ச கீதகம் //
ந்ரு'த்யம் இந்த்ரிய-கர்மாணி சாஞ்சல்யம் மனஸஸ்-ததா /
ஸுமேகலாம் பத்ம-மாலாம் புஷ்பம் நானா-விதம் ததா //
அமாயாத்யைர்-பாவ-புஷ்பை: அர்சயேத் பாவ-கோசரம் /
அமாயம் அனஹங்காரம் அராகம் அமதம் ததா //
அமோஹகம் அதம்பம் ச அத்வேஷ-அக்ரோLகௌ ததா /
அமாத்ஸர்யம் அலோபம் ச தச-புஷ்பம் விதுர்-புதா: //
அஹிம்ஸா பரமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய-நிக்ரஹ: /
தயா-புஷ்பம் க்ஷமா-புஷ்பம் ஜ்ஞான-புஷ்பம் ச பஞ்சமம் //
இதி பஞ்ச தசைர்-பாவ-புஷ்பை: ஸம்பூஜயேத் ஸத்குரும் //
.......................................................................................
இப்போது உபசார பூஜை என்னும் புற வழிபாட்டிற்குள் நுழைவோம்.
முதலில் குரு அமர்வதற்கு இருக்கையைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: எல்லா ஜீவன்களுக்குள் அந்தர்யாமியாக வீற்றிருப்பவரும், எல்லா ஜீவன்களின் ஆத்மாவாக விளங்குபவருமான தங்களுக்கு ஆஸனத்தைச் சமர்ப்பித்து நான் சரணடைகிறேன், சரணடைகிறேன்.
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தங்க ஆஸனத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| ஆஸனம் ||
ஓம் ஸர்வ-பூதாந்தரஸ்தாய ஸர்வ-பூதாந்தராத்மனே /
கல்பயாம்யுபவேஸார்தம் ஆஸனம் தே நமோ நம: //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஸுவர்ணாஸனம் ஸர்வ-
தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு-நித்யானந்தாய நம: ||
அடுத்து, ஸத்குருவை வரவேற்றல்
இந்த மந்திரத்தின் பொருள்: உருவந்தாங்கி வெளிப்படுவதில் எந்தவொரு வரையறைக்குள்ளும் அடங்காதவரும், பிறப்பற்றவராதலால் 'அனந்த' என்று போற்றப்படுபவரும், பிரபஞ்ச காரண காரிய செயல்களுக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த மோன நிலையில் நிலைகொண்டிருப்பதால், ஆகமங்களில் தேர்ந்த ஆன்றோர்களால் 'சிவ' என்றழைக்கப்படுபவரான சதாசிவனே குருவுரு தாங்கி (இங்கு என்முன்) வீற்றிருக்கிறார். அந்த சிவனிடம் என்னையே அர்ப்பிக்கிறேன்.
தங்களுடைய விருப்பங்கள் பூர்த்தி அடைவதற்காக, தேவர்களும் எவருடைய தரிசனத்தை விரும்புகின்றனரோ, அந்தப் பரமேஸ்வரனை வருக வருக என வரவேற்கிறேன். இன்று என் பிறவி, வாழ்வு மற்றும் செயல்கள் அனைத்தும் பலனடைந்தன; தங்களை வரவேற்பதன் மூலமே என் தவத்தின் பலனையடைந்தேன். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தரை வருக வருக என வரவேற்கிறேன்.
(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| ஸ்வாகதம் ||
ஸாந்தத்வாத் ஸர்வகர்த்ரு'த்வப⁴ாவோபரதி காரணாத் /
ஶிவ உக்தோ மஹாதந்த்ர-மந்த்ரவித்³பி⁴: ஸதா³ஶிவ: //
தஸ்மை ஶிவாய குரவே விதராககலாய வை /
அமேயத்வாத் அநந்தோsயம் அஜத்வாச்ச ப்ரStats: //
ஓம் யஸ்ய தர்ஸனம் இச்சந்தி தே³வா:
ஸ்வாபீ⁴ஷ்ட-ஸித்தயே /
தஸ்மை தே பரமேஶான ஸ்வாகதம் ஸ்வாகதம் ப்ரபோ⁴//
அத்ய மே ஸபலம் ஜன்ம ஜீவனம் ஸபலா: க்ரியா: /
ஸ்வாகதம் யத்-த்வயா தந்-
மே தபஸாம் பலமாகதம் //
|| ஓம் ஹ்ரீம் ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூப ஸத்குருநித்யானந்த-தேவ-ஸ்வாகதம் ஸுஸ்வாகதம் தே ||
.......................................................................................................
அடுத்து, ஸத்குருவின் பாதங்களைக் அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: சிறிது பக்தியைச் செலுத்தினாலும்கூட, நமக்கு பேரானந்தத்தைக் கொண்டுவந்து சேர்க்கும், பரமேஸ்வரனின் பாதங்களைக் அலம்புவதற்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| பாத்யம் ||
ஓம் யத்-பக்தி-லேஶ-ஸம்பர்காத்
பரமானந்த-ஸம்ப்லவ: /
தஸ்மை தே பரமேஶான பாத்யம் ஶுத்தாய கல்பயே //
|| ஓம் ஹ்ரீம் ஏதத்-பாத்யம் ஸர்வ-தேவ-தேவீஸ்வரூபாய ஸத்குரு-நித்யானந்தாய நம: ||
அடுத்து, ஸத்குருவுக்கு பாரம்பரிய வரவேற்பை அளித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: அழகிய சங்கினில் வைக்கப்பட்டிருக்கும் அருகம்புல், அக்ஷதை மற்றும் வில்வ இலையுடன் கூடிய, இந்தப் பாரம்பரிய வரவேற்பை மஹேச்வரனே ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்த அர்க்கியத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(அருகம்புல், அக்ஷதை மற்றும் வில்வ இலையுடன் கூடிய சங்கினைக் கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அர்க்கியத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| அர்க்ய: ||
ஓம் துர்வாக்ஷத-ஸமாயுக்தம் பில்வ-பத்ரம் ததா பரம்/
ஶோபனம் ஶங்க-பாத்ரஸ்தம் க்ரு'ஹாணார்த்யம்
மஹேஶ்வர //
|| ஓம் ஹ்ரீம் ஏஷோ அர்க்ய: ஸர்வ தேவதேவீ ஸ்வரூபாய ஸத்குரு-நித்யானந்தாய ஸ்வாஹா ||
அடுத்து, வாயை அலம்புவதற்கான தீர்த்தத்தை ஸத்குருவுக்குச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: என்னால் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் மங்களகரமானதும், எல்லாவிதமான பாபங்களையும் நாசம் செய்வதுமான மந்தாகினி நதியின் தீர்த்தத்தை வாயை அலம்ப ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| ஆசமநீயம் ||
ஓம் மந்தாகிந்யாஸ்து யத்-வாரி ஸர்வ-
பாப-ஹரம் பராபும் /
க்ரு'ஹாணாசமநீயம் த்வம் மயா பக்த்யா நிவேதிதம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஆசமநீயோதகம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு-நித்யானந்தாய ஸ்வதா ||
அடுத்து, ஸத்குருவுக்கு அமிர்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: அனைத்து எதிர்மறைகளையும் நாசம் செய்து, பரிபூரணமான ஆரோக்கியத்தை வழங்கும் இந்த அமிர்தத்தைச் சமர்ப்பிக்கிறேன், தேவனே ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு தேனுடன்கூடிய இந்த அமுதத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(தேன் கலந்த அமிர்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ்வமிர்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
||மதுபர்க:||
ஓம் ஸர்வ-கல்மஷ-நாஶாய-பரிபூர்ண-ஸுதாத்மகம் /
மதுபர்கமிமம் தேவ கல்பயாமி ப்ரஸீத மே //
|| ஓம் ஹ்ரீம் ஏஷ மதுபர்க: ஸர்வ தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய ஸ்வதா ||
...........................................................................................................
அடுத்து, ஸத்குருவுக்கு வாசனை தைலத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: உலகிற்கு நன்மை பயப்பவரே, உலகப் பொருட்களிலேயே மிகத் தூய்மையானவரே, நான் அன்புடனும் நேசத்துடனும் தங்களுக்குச் சமர்ப்பிக்கும் இந்த வாசனை தைலத்தை நட்புடன் ஏற்று, எனக்கு அருள்புரிவீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்த வாசனை தைலத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(வாசனை தைலத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ்வாசனை தைலத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| கந்த-தைலம் ||
ஓம் ஸ்நேஹம் க்ரு'ஹாண ஸ்நேஹேந
லோகாநாம் ஹித-காரக /
ஸர்வ-லோகேஷு ஸுத்தஸ்த்வம் ததாமி
ஸ்நேஹமுத்தமம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் கந்த-தைலம் ஸர்வ தேவ-தேவீ-ஸ்வரூபாய
ஸத்குரு-நித்யானந்தாய நிவேதயாமி ||
...........................................................................................................
அடுத்து, ஸத்குரு நீராடுவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: மனத்தைக் கடக்கச் செய்யும் வல்லமைவாய்ந்த, இந்தக் குளிர்ந்த சுத்தமான தீர்த்தத்தினைத் தங்களுடைய ஸ்நாநத்திற்குப் பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தச் சுத்தமான தீர்த்தத்தினைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒரு கையால் மணியை ஒலித்துக்கொண்டே, மறு கையால் உத்த hisரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| ஸ்நாநீயம் ||
ஓம் இதம் ஸுஸீதலம் வாரி ஸ்வச்சம்
ஸுத்தம் மனோஹரம் /
ஸ்நாநார்தம் தே மயா பக்த்யா கல்பிதம்
ப்ரதிக்ரு’ஹ்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஸ்நாநீயோதகம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நிவேதயாமி ||
ஸ்நநாந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி //
...................................................................................................................................................
அடுத்து, ஸத்குருவுக்கு வஸ்திரத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: நம்முடைய நிஜ ஸ்வரூபத்தை மறைக்கும் ஆவாரணம் என்னும் திரையை விலக்குபவரும், ஞானத்தையே தம்முடைய நிஜ ஸ்வரூபமாகக் கொண்டவரும், மாயை என்னும் திரை அற்றவரும், ஆகாசத்தையே வஸ்திரமாகக் கொண்டவருமாகிய தங்களுக்கு இந்த வஸ்திரத்தைப் பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்த வஸ்திரத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(வஸ்திரத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் அவ்வஸ்திரத்தைச் சமர்ப்பிப்போம்.)
|| வஸ்த்ரம் ||
ஓம் மாயா-சித்ர படாச்சந்ந-நிஜ-குஹ்யோரு தேஜஸே/
நிராவரண-விஜ்ஞாய வாஸஸ்தே கல்பயாம்யஹம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் வஸ்த்ரம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நிவேதயாமி ||
அடுத்து, ஸத்குருவுக்கு ஆபரணங்களைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: இயற்கையிலேயே ஸுந்தரமான வடிவைக் கொண்டவரும் அனைத்து சக்திகளின் உறைவிடமானவருமான தங்களுக்கு இந்தத் தங்க ஆபரணங்களைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்குத் தங்கத்தினால் ஆன ஆபரணங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஆபரணங்களைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அவ் ஆபரணங்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| ஆபரணம் ||
ஓம் ஸ்வபாவ-ஸுந்தராங்காய நாநா
ஸக்த்யாஸ்ரயாய தே /
ஸுவர்ணம் பூஷணம் துப்யம் கல்பயாமி ப்ரஸீத மே //
||ஓம் ஹ்ரீம் இதம் ஸுவர்ணStaffாபரணம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நிவேதயামি ||
அடுத்து, ஸத்குருவுக்கு சந்தனத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: தங்களுடைய சரீரத்தின் தன்மையை யாதென்று அறியேன், தங்களின் செயல்பாடுகளையும் அறியேன். நான் நிவேதனமாக அளிக்கும் இந்தச் சந்தனத்தை ஏற்று, பூசிக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தச் சந்தனத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(தூய சந்தனத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அச்சந்தனத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| கந்த: ||
ஓம் பஸரீரம் தே ந ஜாநாமி சேஷ்டாம் நைவ ச நைவ ச /
மயா நிவேதிதாந் கந்தாந் ப்ரதிக்ரு'ஹ்ய விலிப்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷ கந்த: ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
அடுத்து, ஸத்குருவுக்கு மலர்களைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: ரம்யமான மணம்கொண்டதும், துரியநிலையென்னும் தூயவிழிப்புணர்விலிருந்து உருவானதும், ஆனந்த நிலை என்னும் வாசத்தை உடையதுமான இந்த உத்தமமான புஷ்பங்களைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்த உத்தமமான புஷ்பங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட மலர்களைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| புஷ்பம் ||
ஓம் துர்யீ-வந-ஸம்பந்நம் நாநா-குண-மநோஹரம் /
ஆநந்த-ஸௌரபம் புஷ்பம் க்ரு'ஹ்யதாம் இதம் உத்தமம் //
|| ஓம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-புஷ்பாணி ஸர்வதேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய-வௌஷட் ||
அடுத்து, ஸத்குருவுக்கு வில்வ இலைகளைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: அமிர்தத்திலிருந்து உருவானதும், லக்ஷ்மிதேவி வாஸம் செய்வதும், சங்கரருக்கு மிகவும் விருப்பமானதுமான இந்தப் பவித்ரமான வில்வ இலைகளை ஈச்வரனே தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்தப் பவித்ரமான வில்வ இலைகளைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| பில்வ பத்ரம் ||
ஓம் அம்ரு'தோத்பவம் ஸ்ரீ-வ்ரு'க்ஷம்
ஸங்கரஸ்ய ஸதா-ப்ரியம் /
பில்வ பத்ரம் ப்ரயச்சாமி பவித்ரம் தே ஸுரேஶ்வர //
||ஓம் ஹ்ரீம் ஏதாநி ஸசந்தந-பில்வ-பத்ராணி ஸர்வ-தேவதேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய வௌஷட் ||
......................................................................................................
அடுத்து, ஸத்குருவுக்கு துளசீ இலைகளைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள் வேண்டும் வரங்களை அளிக்கவல்ல, அநேக ரூபங்களையுடைய பரமாத்ம ஸ்வரூபனே தங்களுக்கு நமஸ்காரங்கள். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு சந்தனத்தில் தோய்க்கப்பட்ட இந்தத் துளசீ இலைகளைச் சமர்ப்பிக்கிறேன்.
(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட துளசி இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| துளஸீ-பத்ரம் ||
ஓம் நமஸ்தே பஹு-ரூபாய வரதமூர்தயே
பரமாத்மனே ஸ்வாஹா //
||ஓம் ஹ்ரீம் இதம் ஸசந்தந துளஸீ-பத்ரம் ஸர்வ-தேவதேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
......................................................................................................
அடுத்து, ஸத்குருவுக்கு தூபத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: வனங்களில் விளையும் வாசனை திரவியங்களில் தலைசிறந்ததும், முதன்மையானதும், எல்லாத் தேவர்களாலும் விரும்பி நுகரப்படுவதுமான இந்தத் திவ்யமான மணம் கொண்ட தூபத்தை தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தூபத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)
|| தூப: ||
ஓம் வநஸ்பதி-ரஸோ திவ்யோ கந்தாட்ய: ஸுமநோஹர: /
ஆக்ரேய: ஸர்வ-தேவாநாம் தூபோயம்
ப்ரதிக்ரு'ஹ்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷ தூப: ஸர்வ-தேவ-தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
அடுத்து, ஸத்குருவுக்கு தீபாராதனையைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: எங்குமுள்ள இருளைப் போக்கி, ஒளியூட்ட வல்லதான இந்த மஹா தீபத்தை, அகத்தையும் புறத்தையும் பிரகாசப்படுத்துகிற தங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு தீபாராதனையைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஒருகையால் மணியை ஒலித்துக்கொண்டே, மறு கையால் தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)
|| தீப: ||
ஓம் ஸுப்ரகாஶோ மஹா தீப: ஸர்வதஸ்திமிராபஹ: /
ஸபாஹ்யாப்யந்தர-ஜ்யோதி: தீபோயம்
ப்ரதிக்ரு'ஹ்யதாம் //
|| ஓம் ஹ்ரீம் ஏஷ தீப: ஸர்வ-தேவ-தேவீஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
அடுத்து, ஸத்குருவுக்கு நைவேத்யத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: என்னால் பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் இனிப்புடன் கூடிய இந்த விதவிதமான நைவேத்தியங்களை பரமேச்வரா ஏற்றுக்கொள்வீராக!
அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்த நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(நைவேத்யத்தைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)
|| நைவேத்யம் ||
ஓம் நைவேத்யம் விவிதம் தேவ ஸர்கராதி-விநிர்மிதம் /
மயா நிவேதிதம் பக்த்யா க்ரு'ஹாண பரமேஶ்வர //
|| ஓம் ஹ்ரீம் இதம் ஸோபகரண-நைவேத்யம் ஸர்வ-தேவதேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நிவேதயாமி ||
அடுத்து, ஸத்குருவுக்கு அருந்துவதற்கான தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: அனைத்து தேவ தேவியர்களின் வடிவானவரே, முழுமையான பூர்ணத்துவத்தை எங்களுக்கு ஆசீர்வதித்தருள்பவரே, எல்லையில்லா ஆனந்த தன்மை நிறைந்த இந்த உத்தமமான தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன், ஏற்றுக்கொள்வீராக! அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| பாநீயம் ||
ஓம் ஸமஸ்த-தேவ-தேவேஶ ஸர்வ-
த்ருʼப்தி-கரம் பரம் /
அகண்டாநந்த-ஸம்பூர்ணம் க்ருʼஹாண ஜலம் உத்தமம் //
||ஓம் ஹ்ரீம் இதம் பாநார்தோதகம் ஸர்வ-தேவ-
தேவீ-ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
அடுத்து, ஸத்குருவுக்கு வாயையும் கைகளையும் அலம்புவதற்குத் தீர்த்தத்தைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: தூய்மையற்றதும், நிராகரிக்கப்பட்டதுமான ஒன்று எவரை நினைத்த மாத்திரத்தில் சுத்தத்தன்மையை அடைகிறதோ, அப்படிப்பட்ட மேலான சுத்தத்தன்மையை உடைய குருவுக்கு வாயையும் கைகளையும் அலம்புவதற்கு (மீண்டும்) தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன். அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தீர்த்தத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
(உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| புநராசமநீயம் ||
ஓம் உச்சிஷ்ட-மப்ய-ஶுசிர்வா யஸ்ய
ஸ்மரண-மாத்ரத: /
ஸுஶுத்திம் ஆப்நோதி தஸ்மை தே புநராசமநீயகம் //
|| ஓம் ஹ்ரீம் இதம் புநராசமநீயோதகம் ஸர்வ-தேவ-தேவீ
- ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய ஸ்வாஹா ||
அடுத்து, தீப ஆராதனை
இந்த மந்திரத்தின் பொருள்: அனைத்து தேவ தேவியர்களின் ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தருக்கு இந்தத் தீபாராதனையைச் சமர்ப்பிக்கிறேன். அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்குபவரும், அளவில்லாப் பொறுமையையுடையவரும், எங்களுடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவரும், எங்களுக்குச் செல்வத்தை வழங்கி ஆசீர்வதிப்பவருமாகிய குபேர ஸ்வரூபமாக விளங்கும் ஸத்குரு நித்யானந்தரை வணங்குகிறோம்.
இந்தக் கற்பூரத்தைப் போன்று தூய்மையானவரும், நாகத்தை ஆபரணமாக அணிந்தவரும், வாழ்வின் சாரமாக இருப்பவரும், தம்முடைய ஆழமான கருணையினால் அவதரித்திருப்பவரும், எல்லாச் சக்கரங்களுக்கும் அரசராக இருப்பவரும், எப்போதும் என் இதயத்தாமரையில் வசிப்பவரும், ஆண் மற்றும் பெண் சக்திகளின் உச்சத்தன்மைகளை ஒருங்கே கொண்டவருமாகிய ஸத்குருநாதருக்கு என்னுடைய வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(ஆரதி தீபத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, குருவின் பாதங்களுக்குச் சமர்ப்பிப்போம்.)
|| ஆராத்ரிகம் ||
|| ஓம் ஹ்ரீம் ஏஷா தீப-மாலா ஸர்வ-தேவ-தேவீ-
ஸ்வரூபாய ஸத்குரு நித்யானந்தாய நம: ||
ஓம் ராஜாதி-ராஜாய ப்ரஸஹ்ய-ஸாஹிநே|
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே |
ஸ மே காமான்காம-காமாய மஹ்யம் |
காமேச்வரோ வைச்ரவணோ ததாது |
குபேராய வைச்ரவணாய|
மஹாராஜாய நம: ||
கற்பூர கௌரம் கருணாவதாரம்
ஸம்ஸார ஸாரம் புஜகேந்த்ர ஹாரம் /
ஸதா-வஸந்தம் ஹ்ரு'தயாரவிந்தே
பவம் பவானீ ஸஹிதம் நமாமி //
பவம் பவானீ ஸஹிதம் நமாமி
பவம் பவானீ ஸஹிதம் நமாமி /
ஆராத்ரிகம் ஸமர்பயாமி ஸத்குரு சரண கமலேப்யோ நம: //
அடுத்து, ஸத்குருவுக்கு மலர்களைச் சமர்ப்பித்தல்
இந்த மந்திரத்தின் பொருள்: நம்முள் தேடுதல் என்னும் தீபத்தைத் தோற்றுவிக்கின்ற பிரம்மனாகவும், அந்தத் தீபத்தை அணையாமல் காக்கின்ற விஷ்ணுவாகவும், அந்தத் தீபத்தை அழிக்க வருகின்ற ஸம்ஸ்காரக் கூட்டங்களை அழிக்கின்ற மகேச்வரனாகவும், பிரபஞ்சத்தின் ஆதாரமாக விளங்கும் அந்தப் பரபிரஹ்மமாகவும் (சுயம்) விளங்குகின்ற குருவைப் பணிகிறேன்.
படைப்பை ஊடுருவியிருக்கிற எல்லையற்ற சத்தியமாக விளங்குபவரும், அந்தச் சத்தியத்தை எனக்கும் காண்பித்தருளிய குருவைப் பணிகிறேன்.
அறியாமை எனும் இருளால் குருடாகிப்போன என்னுடைய கண்களை, ஞானம் எனும் மையைத் தீட்டி தெளிவடையச் செய்த குருவைப் பணிகிறேன்.
எண்ணற்ற பிறவிகளாக நான் சேர்த்து வைத்திருந்த கர்மங்களை, சுய-ஞானம் எனும் தீயினால் எரித்த குருவை நான் பணிகிறேன்.
என் இறைவனாகவும், பிரபஞ்சத்தின் இறைவனாகவும், என் குருவாகவும்,
பிரபஞ்சத்தின் குருவாகவும், என்னுள் இருக்கும் ஆன்மாவாகவும், அனைத்து ஜீவன்களின் உள் இருக்கும் ஆன்மாவாகவும் விளங்குகின்ற குருவை நான் பணிகிறேன்.
கடவுள், குரு, ஆன்மா- இம் மூன்றும் வேறுவேறு என்ற வாதங்களை எல்லாம் உடைத்தெறிந்து, இம்மூன்றும் ஒன்றே என்று விளங்குமாறு உருவெடுத்து வந்திருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை நான் நமஸ்கரிக்கிறேன்.
ஆனந்த நிலையிலேயே என்றும் நிலைத்திருப்பவரும், மேலான மகிழ்ச்சி யைத் தருபவரும், ஞானமே வடிவானவரும், இருமைகளைக் கடந்தவரும், எங்கும் மங்களத்தன்மையுடன் நிறைந்திருப்பவரும், ஞான அனுபூதி அளிப்பதையே தம்முடைய முதன்மை இலக்ஷியமாகக் கொண்டிருப்பவரும், பரப்ரஹ்ம ஸ்வரூபமானவரும், நித்யமானவரும், தூய்மையானவரும், எந்த நிகழ்வாலும் நிலைகுலையாதவரும், எல்லா எண்ணங்களையும் அவற்றின் செயல்முறைகளையும் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருப்பவரும், உணர்ச்சி களுக்கு அப்பாற்பட்டவரும், சத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களைக் கடந்தவருமான ஸத்குருவிடம் நான் சரணடைகிறேன். ஸத்குருவின் மலர்ப்பாதங்களில் இந்த மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(மலர்களைக் கைகளில் எடுத்து, கண்களை மூடி, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மந்திரத்தின் முடிவில், அம்மலர்களை குருவின் பாதங்களில் சமர்ப்பிப்போம்.)
|| புஷ்பாஞ்ஜலி: ||
குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர: / *
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: //
அகண்டமண்டலாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் / *
தத்பதம் தர்ஸிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: //
அஜ்ஞான-திமிராந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன ஸலாகயா / *
சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: //
அனேக-ஜன்ம-ஸம்ப்ராப்த கர்மபந்த விதாஹினே /
ஆத்மஜ்ஞான ப்ரதானேன தஸ்மை ஸ்ரீ குரவே நம: //
மன்னாத: ஸ்ரீ ஜகன்னாதோ மத்குரு: ஸ்ரீ ஜகத்குரு: /
மமாத்மா ஸர்வ-பூதாத்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம: //
ஈஶ்வரோ குருராத்மேதி மூர்தி-பேத-விபாகினே /
வ்யோமவத்-வ்யாப்த-தேஹாய தக்ஷிணாமூர்தயே நம: //
நித்யானந்தம் பரமஸுகதம் கேவலம் ஜ்ஞானமூர்திம் /
த்வந்த்வாதீதம் ககன-ஸத்ரு'ஶம் தத்த்வமஸ்யாதி-லக்ஷ்யம் //
ஏகம் நித்யம் விமலம் அசலம் ஸர்வதீ ஸாக்ஷிபூதம் /
பாவாதீதம் த்ரிகுண- ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி //
புஷ்பாஞ்ஜலிம் ஸமர்பயாமி ஸத்குரு சரண கமலேப்யோர் நம: //
ஓம் நித்யானந்தம்
.......................................................................................................