KAILASA Library/Sri Guru Puja Sri Shiva Puja_Tamil/பூஜைக்குத் தயாராதல்Sign in
Sri Guru Puja Sri Shiva Puja_Tamil

பூஜைக்குத் தயாராதல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பூஜைக்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்கும்பொழுதும், அவற்றை முறையாக வரிசைப்படுத்தும் பொழுதும் நீங்கள் முழுவதும் இறையுணர்வில் மூழ்கி, உங்கள் உணர்வையே இறைவனிடம் சமர்ப்பிக்கும் மனநிலையில் இருக்க வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல் அவசியம்.

புறத்தூய்மை: காலை இயற்கை கடன்களை முடித்துவிட்டு, நீராடி, தூய்மையான உடைகளை உடுத்திக்கொள்ள வேண்டும்.

அகத்தூய்மை: இனிமையான, கொண்டாடும் உணர்வுநிலையைக் கொண்டிருங்கள். மேலான பூர்ணத்வ உணர்வுநிலையில் இருங்கள். உங்கள் குருவோடும் சதாசிவனோடும் ஆதிசக்தியோடும் உங்களுக்குள்ள புனிதமான நினைவுகளை மேலெடுத்து வாருங்கள்.

ஆடை மற்றும் சமய குறியீடுகளைப் பற்றிய விதிமுறைகள்: ஆண்கள், பாரம்பரிய ஆடையான வேஷ்டி மற்றும் யோக வஸ்திரம் அணிந்திருக்க வேண்டும். யோக வஸ்திரத்தை, தொப்புளை மறைக்கும் வண்ணம் இடுப்பைச்சுற்றி அணிய வேண்டும். மேலாடை எதுவும் அணியக்கூடாது.

பெண்கள், பாரம்பரிய ஆடையான சேலை அணிந்திருக்க வேண்டும்.

நீளமான தலைமுடிகொண்ட ஆண்களும் பெண்களும் முடியின் நுனியை முடிந்திருக்க வேண்டும். முடி அவிழ்ந்த வண்ணம் இருக்கக்கூடாது.

மூன்றாவது கண்மீது குங்குமம் இட்டிருக்க வேண்டும்.

3 வரி கொண்ட திருநீற்று பூச்சை 5 இடங்களில் (நெற்றி, முன்னங்கைகள், மார்பு மற்றும் தொப்புள்) இட்டிருக்க வேண்டும். அல்லது ஆகமத்தில் விதித்துள்ளபடி 8,16,32 இடங்களில் இட்டிருக்க வேண்டும்.

ருத்ராக்ஷம் அணிந்திருக்க வேண்டும்.

அர்க்யம் தயாரிக்கும் முறை: அருகம்புல்லுடன் ஒரு வில்வ இலை, ஒரு புஷ்பம் மற்றும் அக்ஷதை ஆகியவற்றை, நீர் நிறைக்கப்பட்ட சங்கின்மேல் வைக்க வேண்டும்.

மதுபர்கம் தயாரிக்கும் முறை: பால், தேன் அல்லது வெல்லம் மற்றும் நெய்யைக் கலந்தால் மதுபர்கக் கலவை தயார்.

நைவேத்யமாகப் படைக்கப்படவேண்டியவை: புதிதாய்ச் சமைக்கப்பட்ட, ருசிக்கப்படாத, இரசாயனக் கலப்பற்ற உணவு வகைகள் நறுக்கப்படாத சாறு நிறைந்த பழங்கள், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், கல்கண்டு

நைவேத்யமாகப் படைக்கப்படக் கூடாதவை: நேரங்கழிந்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்டு புட்டிகளில் அடைக்கப் பட்டுவரும் உணவுகள் அசைவ உணவுகள் (காளான் உணவும் இதில் அடங்கும்) பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் ஈஸ்ட் கலந்த சாத்விகமற்ற உணவுவகைகள் GMO கலந்த உணவுவகைகள்

தீபத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே உபயோகிக்க வேண் டும்.

குருமூர்த்தி மற்றும் சிவலிங்கம் - இரண்டையுமே கிழக்கு நோக்கிய வண்ணம் அமைக்க வேண்டும். பூஜைசெய்பவர் வடக்கு நோக்கி அமர வேண்டும்.