அதிர்ஷ்டசாலியாகுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன்...
சிலபேருக்கு சிவபெருமானிடமிருந்து சொத்து கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடைக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும், சிவபெருமானின் வண்டி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லாம் அதிர்ஷ்டசாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதிர்ஷ்டசாலி.
‘அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி’ என்றுசொல்வோம்.
எம்பெருமான் சொன்னபடி, அவர் விதித்த விதிப்படி, அவர் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அளிக்கப்படும் சிவ தீக்ஷைபெற்று வாழுங்கள். மயத்தை சிவOptionோஹமாக்குங்கள். எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் சொல்லி சிவ தீக்ஷை பெற வையுங்கள். ‘சிவொஹம்’ என்ற ஜீவன்முக்த விஞ்ஞானத்தை, ஜீவன்முக்த வாழ்க்கைமுறையை மக்களெல்லாம் வாழ வையுங்கள்.
வேதநெறி தழைத்தோங்கும் தத்துவத்தைத் தெரிந்து, சத்தியத்தை உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான் ஞானம் கிடைக்கும். ஆண்டவன் இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலயவழிபாடாகும்.
தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச்செல்லும். தத்துவம் புரியாமல் செய்வது, அறியாமல் செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.
சிவ தீக்ஷை பெற்று, தத்துவத்தை அறிந்து சீவோஹத்தைப் பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.

விசேஷ தீக்ஷை
இது சிவ தீக்ஷையின் இரண்டாம் நிலையாகும். சிவ தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களுக்கான அடுத்த நிலை தீக்ஷை-விசேஷ தீக்ஷை. இந்த விசேஷ தீக்ஷையை காமிக ஆகமத்தில் பெருமான் இரண்டாம் நிலை தீக்ஷையாக விளக்குகிறார். இது நான்கு நாள் தியான முகாமாக நடைபெறும்.
இந்த தீக்ஷையை பெற்றுக்கொண்டவர்கள் ‘தவறாமல் தினமும் சிவபூஜை செய்வேன்’ என்ற வாக்குறுதியோடு இந்த தீக்ஷையை எடுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்வின்ஒரு அங்கமாக இந்த சிவபூஜையை செய்யவேண்டும். இதற்கென பரமஹம்ஸ நித்யானந்தரால் சக்தியூட்டப்பட்ட ஸ்படிகத்தால் ஆன ஆத்மலிங்கம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படம். ஸ்படிகத்தால் ஆன ஆத்மலிங்கத்தில் ஸ்ரீ சக்கரம் வரையப்பட்டிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரமானது பிரபஞ்ச சக்தியை தன்னை நோக்கி ஈர்க்கும் சக்தி பெற்றது. ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த தீக்ஷையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தீக்ஷையை ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என எல்லோரும் பெற்றுக்கொள்ளலாம்.