குண்டலினி சக்தியை உயிர்த்து எழச்செய்யும் நேர்வழி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்கள் உடலில்... உங்கள் தாயின் தசை நினைவு (Muscle-Memory)-உங்களுடைய தசை நினைவாக இருக்கும்.
உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory) உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.
தீக்ஷையின் பலனாக... உங்கள் குருவின் ஜீவசக்தியை (Bio-energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாகப் பொங்கும்.
உங்களுக்குள் 'சிவplatform' எனும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினிசக்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீக்ஷையே சிவ தீக்ஷை.
ஞானமடையாதவரிமிருந்து தீக்ஷை பெறும்பொழுது, தீக்ஷைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியைத் தொடர்ந்து போட வேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம்செய்ய வேண்டும். ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீக்ஷை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவசக்தியில் பதிய வைக்கிறார்.
அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம் தொண்டைக்குழியில் ஒடிக்கொண்டே இருக்கும். இயங்கிக்கொண்டே இருக்கும். நீங்கள் சிவமாக மாறும்வரை இந்த ருத்ராக்ஷத்தை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி தரப்படும் திருநீற்றுப் பையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.
திருநீறு சிவபெருமானின் அஸ்திர தேவதை
நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்துமுடித்துவிட்டுத் திரும்பிவரும்.
இந்த தீக்ஷையை பொறுத்தவரை நீங்கள் தீக்ஷையின்படி வாழ ஆரம்பித்தால் போதும், மிகப்பெரிய சக்திகளைஉங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்தத் துவங்குவீர்கள்.
ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்.
ஆகமத்தில், சிவபெருமான் சமய தீக்ஷையை அடிப்படை தீக்ஷையாக தருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீக்ஷை எடுத்த பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.
