சிவ தீக்ஷையின் தாத்பரியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சமய தீக்ஷை என்பதன் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.. சமயம் = ச + மயம். சமயம் என்பது 'நான், எனது' என்கின்ற அகங்காரம். 'மயம்'-இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். 'நான், எனது' என்ற வலி வேதனைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சீவோஹமாக மாற்றுவது சமயம்.
மனிதனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான விஞ்ஞானி.
ஆழ்ந்து கேளுங்கள்... அப்பா-மகன் உறவில்... அப்பா என்ன சொல்கிறார், 'நீ ஏதாவது வியாபாரத்தைச் செய்து உன் திறமையை நிரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கின்றேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.'
மகன் என்னசொல்கிறார், 'நீ எதையாவது கொஞ்சமாவது கொடு. அதைவைத்து த்தான் என் வியாபாரத்தை நடத்தி என் திறமையை நிரூபிப்பேன்.
இது முடிவிற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, 'சரிப்பா,
டி.என்.ஏ வை
விழிப்பிக்கவைக்கும் மந்திரம்
குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினிசக்தியை விழிப்படையச் செய்து, உங்களுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளைத் தருவார். தீக்ஷை அளித்து, உங்களுடைய உரிமைகளைப் பெறச்செய்வார். அந்த தீக்ஷைதான் சிவ தீக்ஷை.
இந்த சிவ தீக்ஷையில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும். எம்பெருமானே, சதாசிவனே, காமிக ஆகமத்தில்-சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகின்றாறோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதேமுறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும்.
சிவ தீக்ஷையின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் திருநீற்றுப்பையும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் தொண்டைக்குழியின்மீது இருக்கும். தொண்டைக்குள் இந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். இதனால் ருத்ராக்ஷம் சக்திபெறும். மந்திரம் ஓடுவது நிற்கும்பொழுது, ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.
தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை ஜபிக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை ஜபிக்க வைக்கும். 24 மணிநேரமும் மந்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால், சிவத்தன்மைசிவனுடைய ஆனந்தமும், அறிவும், சக்தியும், ஞானமும் உங்கள் உயிர் நினைவில் பொங்கிப்பெருகிக்கொண்டே இருக்கும்.
இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏவை (DNA) விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்தீர்களோ, அந்த குலத்தின் தனித்துவமான மரபணு விழிப்படையும்.
இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்துவமும் உங்களுக்குள் வெளிப்படத் துவங்கும்.
ஞானமடையாதவரிடமிருந்து தீக்ஷை பெறும்பொழுது, தீக்ஷைக்குப்பிறகு,. மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியைத் தொடர்ந்து போட வேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம்செய்ய வேண்டும். ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீக்ஷை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவசக்தியில் பதிய வைக்கிறார்.
அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம் தொண்டைக்குழியில் ஓடிக்கொண்டே இருக்கும். இயங்கிக்கொண்டே இருக்கும். நீங்கள் சிவமாக மாறும்வரை இந்த ருத்ராக்ஷத்தை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி தரப்படும் திருநீற்றுப் பையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.
திருநீறு சிவபெருமானின் அஸ்திர தேவதை
நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்துமுடித்துவிட்டுத் திரும்பிவரும்.
இந்த தீக்ஷையை பொறுத்தவரை நீங்கள் தீக்ஷையின்படி வாழ ஆரம்பித்தால் போதும், மிகப்பெரிய சக்திகளைஉங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்தத் துவங்குவீர்கள்.
ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்.
ஆகமத்தில், சிவபெருமான் சமய தீக்ஷையை அடிப்படை தீக்ஷையாக தருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீக்ஷை எடுத்த பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.
