KAILASA Library/சிவ தீட்சை (Sivadhiksha)/மாற்ற முடியாத உண்மைSign in
சிவ தீட்சை (Sivadhiksha)

மாற்ற முடியாத உண்மை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிவபெருமான் ஆகமத்தை, வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாகச் சொல்லுகின்ற சத்தியம்... 'உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.'

ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் எல்லோருக்குள்ளும் சீவோஹம் என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார். சீவோஹம் என்றால் 'சிவ அஹம்'- நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது 'சிவம்'. 'இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன்' என்று சிவபெருமான் சொல்கிறார். சீவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்தச் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவளுள்ளே சீவோஹம் இருப்பது உண்மை. 'சீவோஹம்' எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம். அனுபவிக்காமல் விட்டாலும் விடலாம், ஆனால் 'சீவோஹம்' உங்களுக்குள் இருப்பது உண்மை. இது மாற்ற முடியாத உண்மை.

Nithyananda on a bull / chariot

உண்மையை மறைக்கும் மாயத்திரை

'நீங்கள்தான் சிவம்' என்று சொன்ன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி... 'என் மனைவியே நான் சொல்வதைக் கேட்பதில்லை, நான் எப்படி சாமீ சிவனாக முடியும்?'

நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். 'நீங்கள்' என்று உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற ஒரு கருத்து, அந்தக் கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை.

உடல்தான் நான், மனம்தான் நான் என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை.

'உடல்தான் நான், மனம் தான் நான்' எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், அந்த கருத்துதான் நிஜமான உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.

நிஜமாகவே 'நீங்கள்' என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்களோ, 'நீங்கள்' என்று நீங்கள் எதை உணர்கின்றீர்களோ, அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், 'சிவொஹம் எனும் நிலையில் எப்போதும் இருக்கின்ற உங்களை, அதை உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.

Nithyananda speaking at a microphone