KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/9. கடவுளாக கலைஞனாகுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

9. கடவுளாக கலைஞனாகுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு ஜப்பானியக் கதை....

தாய் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கையில்...

மகன், "அம்மா! அம்மா! என்னை விட்டுப் போகாதே... நீ என்னச் சொன்னாலும் செய்கிறேன்" என அழுது புலம்புவதைப் பார்த்த தாய் சொன்னார்,

"உன் அப்பா என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன். அதைக் கடைப்பிடித்தால் உடலில் உயிர் இருக்கும்வரை ஆனந்தமாயிருப்பாய்" என்றார்.

அவ்வளவு துக்கத்திலும் மகன் ஆர்வமானான், "என்ன அது!" எனக் கேட்டான்.

அதற்கு அம்மா "கலைஞனாகு! பெரிய கலைவித்து வானாகத்தான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.

உனக்குக் கழிவறை சுத்தம் செய்யும் பாக்கியம் கிடைத்தாலும் சரி. கவலைப்படாதே. நீ சுத்தம் செய்வது போல இன்னொருவர் சுத்தம் செய்யக் கூடாது. உன்னுடைய வேலைப்பாடு அவ்வளவு தனித்துவமும், கலைநயமும் மிகுந்ததாகவும் இருக்க வேண்டும்" எனச் சொல்லி முடித்ததும் கண்மூடினார் நிம்மதியாக!

  • கலை என்பது .... நம்மிடமிருக்கும் மிருதுத் தன்மையை வெளிக் கொண்டு வரும் ஒரு அருமையான முறை.