பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
10. கவலை நிவாரணீ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அந்தப் புகழ்பெற்ற ஓவியர், எவ்வளவு பணம் தருவதாகச் சொன்னாலும் தான் வரைந்த ஓவியங்களைத் தரமாட்டார். "அப்படி நடந்துகொள்வது எதனால்?" எனக் கேட்டபோது,
"நான் வரைவது எனக்காக. உனக்காக அல்ல. என் உயிரை கலந்து வரைந்த கலை இது. அது பொருளல்ல. என் பிள்ளை! பிள்ளையை எவன் காசுக்காக விற்பான்?" எனக் கேட்டார்.
- கலை என்பது, வாழ்வில் திருப்தி அலையைச் சேர்ப்பது.
- கலை என்பது கவலையைக் களைவது.
