KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/11. நிஜத்திற்கு வாருங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

11. நிஜத்திற்கு வாருங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிறுவன் முகுந்தன் கிராமத்திலிருக்கும் அவன் தாத்தாவின் வீட்டிற்கு முதல் முறையாகச் சென்றிருந்தான். அந்த கிராமத்தின் ரம்யமான சூழல் சிறுவனைச் சுறுசுறுப்பாக்கியது.

வீட்டின் பின்புறத்திலிருக்கும் தோட்டத்திற்குள் சந்தோஷத்தோடு துள்ளிக்குதித்து ஓடினான். "முகுந்தா அது தோட்டம், வீதியல்ல..." என சத்தமிட்டார் தாத்தா. "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனப் பதில் சொல்லிக் கொண்டே ஓடினான் முகுந்தன்.

தாத்தா, "தோட்டத்தில் பெரிய மண் குன்று ஒன்று இருக்கிறது" எனச் சொல்லி முடிப்பதற்குள், "அதெல்லாம் எனக்குத் தெரியும்" என சொல்லிக்கொண்டே தோட்டத்தின் மண் குன்று மேல் ஏறி ஓடினான் முகுந்தன்.

"மடையா! சொல்வதைக் கொஞ்சமாவது நின்று கேட்கிறாயா? அந்த குன்றைத் தாண்டியதும்..." என தாத்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "அதெல்லாம் எனக்குத் தெரியும்" எனச் சொல்லிக் கொண்டே பலத்த சத்தத்தோடு குன்றைத் தாண்டியிருந்த குட்டையில் குதித்து, சகதியானான்.

தன்னைப் புத்திசாலி என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.

புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக் கொண்டேயிருப்பான்.