KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/12. குதி! விழித்துக்கொள்வாய்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

12. குதி! விழித்துக்கொள்வாய்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ரீ-சென் தன் குருவிடம் கேட்டார். "புத்திசாலித்தனத்தை எப்படிக் கற்றுக் கொள்வது. விளக்குங்கள்" குரு, "சைக்கிள் ஓட்டுவது எப்படி? விளக்கிச் சொல்" எனத் திரும்பக் கேட்டார்,

ரீ-சென், "அது... அது..." எனத் தடுமாற... குரு கேட்டார், "உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும். ஆனால், விளக்க முடியாது. இருந்தும், புதிதாய்க் கற்றுக்கொள்ள நினைப்பவனிடம் என்ன சொல்வாய்?"

ரீ-சென், "கற்றுக்கொள் என்பேன்" என்றார். குரு சிரித்தார். ரீ-சென் மலர்ந்தார்.

புத்திசாலித்தனத்தை விழிக்கச் செய்ய முடியும். எதுவுமே ஆரம்பத்தில் மலைப்பாகத்தான் தெரியும். குதியுங்கள். முடியும். இப்பிறவியிலேயே வாழ்ந்திடலாம்.

சைக்கிள் ஓட்டுபவர்