KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/76. ஜலதோஷமா? ஜன்னியா?Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

76. ஜலதோஷமா? ஜன்னியா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முகுந்தனுக்கு ஜலதோஷம் மிகுந்திருந்தது. மருத்துவரை பார்க்கச் சென்ற முகுந்தன் தன்னுடைய தொந்தரவுகளை விளக்கி முடித்ததும், பயந்த விழிகளோடு சுற்றும் முற்றும் பார்த்தார்.

அவர் ஊசி போட்டு விடுவாரோ என்ற பயத்தில் டாக்டரின் கைகளையே பார்த்துக் கொண்டிருந்த முகுந்தனின் சிந்தனையைத் தடுத்து மருத்துவர், "மருந்து தரும் முன் நீங்கள் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமே" என்றார்.

முகுந்தன், "என்ன அது? சொல்லுங்கள்".

"குறைந்தது ஒரு பத்து நிமிடமாவது, உங்களின் உச்சந்தலையில் நீர் விழுமாறு டேப்பை திறந்து விட்டு நனையுங்கள். பின் குளிர்காற்று உடலில் படுமாறு ஒரு பத்து நிமிடமாவது நில்லுங்கள். இதை முடித்த உடனே என்னை வந்து பாருங்கள். மருந்து தருகிறேன்".

"என்ன சொல்லுகிறீர்கள்! அப்படிச் செய்தால் ஜலதோஷம் போய் வீசிங் அல்லவா வந்து விடும்".

"என்ன செய்வது.... எனக்கு வீசிங்குக்குதான் மருந்து கொடுக்கத் தெரியும்".

மருத்துவர் அரைகுறையாக இருந்தால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். கடவுளைப் பற்றிய உங்களின் கருத்துக்கள் அரைகுறையானதாக இருந்தால் வாழ்வே கேள்விக்குறியாகிவிடும்.