பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
72. அகநடுக்கம் அதிகரித்தால் ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குல்ஜித்திடம் நிட்டி கேட்டார், “திருமணத்திற்கு முன், பின் அனுபவமென்ன?”
“முன் : ‘அவனைக் கண்டாலே எனக்கு நடுங்கும்’ - என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுவார்கள்”.
“பின் : ‘அவளைக் கண்டாலே அவன் நடுங்குகிறான்!’ - என என்னைப் பற்றி மற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்”.
- ஆம்! நிஜவாழ்வில் மனிதனின் அகநடுக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உணர்கிறீர்களா?

74. உணர்ந்தால் உயரலாம்
ஒரு மாமரத்தின் இரு கிளைகள் பேசிக் கொண்டன. வேகமாய் வளரும் மாங்கிளையைப் பார்த்து, மெதுவாய் வளரும் மாங்கிளை கேட்டதாம்...
"ஏன் நீ மட்டும் இவ்வளவு வேகமாக வளரத் துடிக்கிறாய்?"
"நான் ஒரு மாமரமாக மாற விரும்புகிறேன். அதனால் தான்..." என்றதாம், வேகமாய் வளரும் மாங்கிளை.
மாங்கிளை தனி மாமரமாக முடியாது. அது மாமரம் தானென உணர வேண்டும். அதே விதிதான் மனிதன் எனும் கடவுளுக்கும்