69. பொய் தன்னால் வெளிவரும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,
மன்னர், "என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்" எனக் கேட்டதற்கு,
"மன்னரே! தப்பித்தவறி அந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்" என மந்திரி சொன்னார்.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். "மன்னா! அப்படி என்ன சொக்குபொடி போட்டீர்கள். பக்கத்து நாட்டு மன்னன் நம் காலைச் சுற்றும் பூனையாகி விட்டானே".
"எதிரி நாட்டு அரசன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லச் சொல்லி, நம் ஒற்றனிடமே லஞ்சம் கொடுத் தனுப்பினேன்.
அவன் நமக்கு நண்பனாகி விட்டான் எனக் கண்ணடித்து, மது மயக்கத்தில் உளறியதை, பக்கத்து நாட்டு அரசன் கேட்டு விட்டான்.
அப்புறம் என்ன! அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை தலைகீழாகி விட்டது".
- ஏமாற்றப்பட்டவர்களுக்கு ... அது பாடம். பண்படுவார்கள். ஏமாற்றுபவர்களுக்கு அது படமெடுக்கும் பாம்பு. ஆபத்து! கள்ளம் கொண்ட உள்ளம், அது மற்றவர்களை தீண்டுவது போல் குறைந்தது இரண்டு மடங்கு தீண்டப்படும், துன்பப்படும்.