பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa
68. மனப்பாரம் இறங்க ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மிகுந்த வருத்தத்தோடு ஒருவர், "எல்லாவற்றையும் வரவேற்க, ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. என் மனம் கல்லா? என்ன செய்யலாம்?" என என்னிடம் வழி கேட்டார். "கவலையை விடுங்கள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்பதை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றேன்.
அடுத்த நாள் காலை, "நன்றி" என்றவர், "இயலாமையை ஏற்றுக்கொண்டபின் மிகப்பெரிய பாரத்தை இறக்கினாற் போல் லேசாயிருக்கிறேன்" எனச் சந்தோஷமாய் சொன்னார்.
- உங்கள் வாழ்க்கையை அது உள்ளபடியே வரவேறுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். நிம்மதி வரும். செய்து பாருங்கள்.
