KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/67. காதல் சுருங்கினால் ....Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

67. காதல் சுருங்கினால் ....

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு இளம்பெண்ணை காதலித்த பணக்கார குல்ஜீத், ஒரு பிறவிக் குருடன். தன் காதலியின் குணம், பேச்சு, நடவடிக்கை பற்றி தன்னுடைய நண்பனிடம் சந்தோஷத்தோடு விளக்கினான்.

அடுத்த நாள் தன் நண்பனை காதலிக்கு அறிமுகம் செய்து வைத்தான். சந்திப்பிற்குப் பின் நண்பன் சொன்ன செய்தியால் உடைந்து போனான்.

"குல்ஜீத்! நீ சொல்வது போல் அவள் அழகியல்ல. என்னைப் பொறுத்தளவிற்கு அவள் உனக்கு எந்த வகையிலும் பொருத்தமானவளல்ல" என நண்பன் சொன்ன நிமிடம், இதுவரை மகாராணி போல் அவன் மனதில் வாழ்ந்த காதலி சுருங்கிப் போனாள். அவன் காதலும் சுருங்கிப்போனது!

  • 'வரவேற்றல்' என்ற நற்குணமில்லாதவர்களுக்கே அதிர்ச்சிகளை வாழ்க்கை பரிசளிக்கிறது.
Illustration