KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/60. உடல் பேசும் மொழிகள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

60. உடல் பேசும் மொழிகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தெனாலியின் மனைவி, “நீங்கள் சிலவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். பலரிடம் புத்திசாலியாகப் பேசும் நீங்கள்,

சிலரிடம் அசடு போல் நடந்து கொள்கிறீர்கள்”

கண்ணசைவிலேயே ‘யாரிடம்?’ எனக் கேட்டார்.

“என்னிடமும், என் பிள்ளையிடமும்” என்றார்.

‘அட அசடே!’ என முகபாவனையாலே சொன்னார்.

“எங்களிடமும், இனி நீங்கள் புத்திசாலியாக நடந்துக்கொள்ள வேண்டும்” எனப் பிதற்றிய மனைவியை பெருமிதத்தோடு பார்த்தார்.

தெனாலியின் கண்களில் வந்த அன்பும், முகத்தில் வெளிப்பட்ட

பரிவும், அவரின் உடல்மொழிகள் சொன்ன கனிவுகளுக்காகவும் இப்படி ஏதாவது பேசி மகிழ்வதும், நெகிழ்வதும் தெனாலியின் மனைவியின் வழக்கம்.

நீங்கள் உரையாடும்போது உங்களின் வார்த்தைகள் 7% செய்தியையும், உங்களின் குரலும் உணர்வும் 35% செய்தியையும்; உங்களின் உடல்மொழிகள்தான் மீதமுள்ள 58% செய்தியையும் சொல்கின்றன. என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.