KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/59. எதிர்பாராத திருப்பம்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

59. எதிர்பாராத திருப்பம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அன்று மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் ஐன்ஸ்டீன் E = mc^2 பற்றி விளக்கவுரையாற்ற வேண்டும். வேறொரு ஊரிலிருந்து வரவேண்டிய ஐன்ஸ்டீன் நேரத்திற்கு வராததால், சமயோசித புத்தியை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்ட ஐன்ஸ்டீனின் கார் டிரைவர், ஐன்ஸ்டீனின் உடையணிந்து மேடையேறி விட்டார்!

அது புதிய ஊர். டிரைவரும் பட்டப்படிப்பு முடித்தவர். விளக்கவுரையை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஐன்ஸ்டீன் E = mc^2 பற்றி விளக்கும்போதெல்லாம் உடனிருந்து கேட்ட டிரைவர்...

ஐன்ஸ்டீன் பேசுவது போலவே, ஒரு பாய்ண்ட் கூட விடாமல் எல்லாவற்றையும் மனப்பாடமாய் பேசி விட்டார்!

ஐன்ஸ்டீன் பேசுவதாய் நம்பிய கூட்டம் பேச்சின் கடைசியில் ஆரவாரத்தோடு கைதட்டியது.

அடுத்துதான் வம்பாகி விட்டது. ஐன்ஸ்டீனிடம் E = mc^2 பற்றி மிக சிக்கலான கேள்வி ஒன்றை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கேட்டுவிட...

படபடப்பானார் டிரைவர். இது புதியது. எதிர்பாராதது. இந்தப் புதிய சூழ்நிலையைச் சந்திக்க எந்த ரெடிமேட் வசனமோ, பதிலோ இல்லாததால் டிரைவர் தடுமாற ஆரம்பிப்பதற்கும், ஐன்ஸ்டீன் அந்த அறைக்குள் நுழைவதற்கும் மிகச் சரியாக இருந்தது.

“இதுபோன்ற சாதாரண கேள்விகளுக்கெல்லாம் நான் பதிலளிப்பதில்லை. இதற்கு என் கார் டிரைவரே மிக அழகாக பதில் சொல்வார்” எனச் சொல்லி ஐன்ஸ்டீனை மேடைக்கு அழைத்து தப்பித்துக் கொண்டார் டிரைவர்!

ஐன்ஸ்டீன் வர கால தாமாகியிருந்தால் டிரைவரின் கதி என்னவாகியிருக்கும்? டிரைவரின்குட்டு, அவரின் தடுமாறும் உடல்மொழி மூலமாக வெளிப்பட்டிருக்கும். ரெடிமேடான வசனங்களோ, புத்திசாலித்தனமோ இல்லாத நெருக்கடியான சூழ்நிலைகளில் நம் சுயரூபம் நம்மையும் மீறி நம் உடல்மொழிகள் மூலமாக வெளிப்பட்டு விடுகிறது.