KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/55. நாகரீகமா? நரகமா?Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

55. நாகரீகமா? நரகமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்விக்குப் பதிலாய் ஒரு கதை,

விலங்குகள் ஆராய்ச்சியாளன் ஒருவன் நரமாமிசம் உண்ணும் ஒரு கும்பலிடம் சிக்கிக் கொண்டான். பிடிப்பட்ட வெள்ளையனை உயிரோடு வறுத்துக் தின்பதற்காகக் காட்டுக்குள்ளே கூச்சலோடு அந்தக் கும்பல் இழுத்துச் சென்றது.

புது விருந்துக்கு ஆள் கிடைத்த குஷியில் கும்பல் வெள்ளையனை தங்கள் தலைவனிடம் இழுத்துச் சென்றது. தலைவனுக்கு அருகிலேயே தலைமுடி சரியாக வெட்டி, நாகரீக மனிதன் போன்று உடையணிந்த ஒரு காட்டுவாசி உட்கார்ந்திருக்க... வெள்ளையனுக்குப் புது நம்பிக்கை பிறந்தது.

‘ஒருவேளை அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் தப்பித்துவிடலாம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே...

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன் போல் அந்த மனிதன் ஆங்கிலத்தில் வெள்ளையனிடம் பேசினான்.

வெள்ளையனிடம், "உன் கடைசி ஆசை என்ன? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கே இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது" என்றான்.

வெள்ளையன், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறாய், நாகரீக உலகில் வாழ்ந்திருக்கிறாய் இதெல்லாம் உன்னிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என்று வெகுண்டு கேட்டான்.

அதற்கு அவன் உடலை உலுக்கிக் கொண்டு, "என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். நான் எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா? இவர்கள் போன்று அநாகரீகமாக நான் நடந்துக் கொள்வதில்லை.