51. துரத்துவதை துறந்து விடுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆண்ட்ரூ கார்னகி மிகப் பெரிய சாதனையாளர். உலகத்தின் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். இதற்கு மேல் சதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லாத அளவுக்கு இமாலய சாதனை படைத்தவர்.
ஒரு முறை பேட்டியளிக்கையில்,
அவர் சந்தித்த சிந்தனையைத் தூண்டும் கேள்வி,
''ஓய்வேயில்லாமல், சம்பாதித்துக் கொண்டிருப்பதிலிருந்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஓய்வெடுத்திருக்கலாம். இளைப்பாறியிருக்கலாம். உங்களைச் சுற்றி எல்லாம் இருந்தும், ஏன் இன்னும் சாதிக்க ஓடிக்கொண்டே யிருக்கிறீர்கள்?'' என கேட்கப்பட்டதற்கு,
கார்னகி சொன்னார், "சரியாகக் கேட்டீர்கள், நீங்கள் சொன்னது போல் ஓய்வெடுத்திருக்கலாம்தான். ஆனால், என்னால் அது முடியவில்லை.
'ஓடுவதை நிறுத்தி ஓய்வெடுப்பது எப்படி' என்பதை நான் மறந்து விட்டேன். இதன் விளைவு - ஓடிக்கொண்டேயிருக்கிறேன்''.
ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சக்கரமும் ஒவ்வொரு விதமானது. அச்சக்கரத்தை ஒரு முறை மேட்டிலிருந்து சுற்றி விட்டால், அச்சக்கரம் அதன் கட்டுப்பாட்டை இழந்து விடும். வேகமாய் ஓடும் சக்கரம் தானாய் நிற்க நினைத்தால் கூட நிற்க முடியாது. யாராவது தடுத்து நிறுத்த வேண்டும்.