KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/49. தனக்காக உயிர்வாழ்பவன்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

49. தனக்காக உயிர்வாழ்பவன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு காதலிக்கு வந்த சுவாரஸ்யமான ஈமெயில் ஒன்று...

என் அன்பே! உயிரே! மூச்சே!

வரும் வெள்ளி, உனைக் காண வருவேன்.

அப்போது,

கடற்கரை மணலை

நாராய்த் திரித்து - அதில்

நட்சத்திரங்களையெல்லாம் கொய்து

செய்த மாலையோடு,

நீலவானத்தை உரித்து

உனக்கு அதைச் சேலையாக மடித்து,

உன் நெற்றிக்கு பொட்டிட்டு அழகு பார்க்க

சூரியனையோ!

சந்திரனையோ!

நிச்சயம் பறித்து வருவேன்

இப்படிக்கு உனக்காக உயிர்வாழ்பவன்

பின்குறிப்பு : வெள்ளிக்கிழமை மழை பெய்யும் போல் வானிலை இருந்தால் நான் வரமாட்டேன். நன்றி.

உணர்ச்சி பொங்க வசனம் பேசுவது எளிது. வாழ்வது??? "அதைச் செய்வேன்", "இதைச் செய்வேன்" என சொல்வது எளிது, சரிசெய்வதாகுமா?