KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/5. எது சரி? எது தவறு?Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

5. எது சரி? எது தவறு?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஜென் ஞானியிடம், "எது தவறு?" எனப் பேராசிரியர் கேட்டார்.

பதிலுக்கு ஞானி, "எது சரி?" என்றதும், தீவிரமாக யோசித்த பேராசிரியர்,

"எதுவெல்லாம் எனக்குத் தவறெனப்படவில்லையோ, அதுவெல்லாம் என்னைப் பொருத்தளவு சரி" என்றார்.

ஞானி, "பார், உன் கேள்விக்கு பதில் உன்னிடமேயிருக்கிறது. உனக்கு சரியெனப்படாத எல்லாமே தவறுதான்! என்றார்.

'எது தவறு?' என்ற கேள்விக்கு ஞானி பதில் சொல்லி முடித்தவுடனே பேராசிரியர் மீண்டும் ஆழமாய்க் கேட்டார்,

"எது உண்மையிலேயே தவறு?"

அதற்கு ஞானி, "உண்மையாகவே அதைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா?" எனக் கேட்டதற்கு,

"ஆமாம்" என்றார்.

ஞானி, "இப்படிக் கேள்விக் கேட்பதே தவறுதான்" என்றார்.

பேராசிரியர், "இப்படிச் சொன்னால், பின் எப்படித்தான் நான் தெளிவடைவதாம்?" எனத் தாழ்ந்த குரலில் கேட்க,

ஞானி சொன்னார் ....

"உன்னைக் குழப்புவதற்காக, நான் இப்படிப் பேச வில்லை. உன்னைக் குழப்பிக் கொண்டிருப்பதை குழப்பத்தான் இப்படிப் பேச வேண்டியிருக்கிறது. எது தவறு என ஆராயாதே.

உண்மையில் தவறு என்ற ஒன்றே இல்லை. தப்பு தவறு, நீதி, நியாயம் தாண்டி இயல்பாய் வாழ, உன்னைக் குழப்புவதை குழப்பு. தெளிவடைவாய்!" என்றார்.

  • நாம் மற்றவர்களிடம் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே கிட்டத்தட்ட தவறு தான். ஒருவன் தன்னை மனதளவிலோ, உடலளவிலோ புண்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்க்க, சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை, அவ்வளவே.