KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/47. கூண்டுக்குள்ளே குறுகிவிடாதீர்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

47. கூண்டுக்குள்ளே குறுகிவிடாதீர்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அமேசான் காட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ சிம்பன்ஸி குரங்கு ஒன்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்தாரால் தொடர்ந்து மூன்றரை வருடங்களாகத் தீவிர ஆராய்ச்சிக்குட்படுத்தப் பட்டது.

ஆராய்ச்சியில் இருபத்தைந்தடி கூண்டுக்குள் அதன் வாழ்க்கையும் நடவடிக்கையும் சுருக்கப்பட்டு விட்டது.

ஆராய்ச்சி முடிந்த பின் அதன் ஜோடி குரங்கும் வரவழைக்கப்பட்டது. இருபத்தைந்தடி, அறுபதடி கூண்டாக மாற்றப்பட்டது.

மாற்றப்பட்ட பின் தான் ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு ஆச்சரியத்தைக் கண்டுபிடித்தார்கள்.

கூண்டு அறுபதடி பெருகினாலும், அந்தக் குரங்கு இத்தனை வருடமாகத் தான் வாழ்ந்து பழகிய அந்த இருபத்தைந்தடி இடத்தை மட்டுமே மீதமுள்ள வாழ்நாளெல்லாம் பயன்படுத்தியது.

குரங்கின் நடவடிக்கைகள் இருபத்தைந்தடிக்குள் சுருங்கிப் போனது.

இறுகிப் போனது.

  • மனித மனம், அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அவற்றிற்குள் உறைந்து இறுகிப் போகிறது. அது நல்லதானாலும், கெட்டதானாலும்! வாழ்க்கையில் ஒரே மாதிரியான சுகதுக்கங்களை மனிதன் தொடர்ந்து அனுபவிக்கக் காரணமானது இந்த மனித எலும்புகள்