KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/42. துக்கத்தை துடைத்தெறியுங்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

42. துக்கத்தை துடைத்தெறியுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

'ஞானமடைவது மிக எளிது' என ஞானிகள் சொன்னால் மனிதர்கள் புரிந்துகொள்ளத் தடுமாறுகிறார்கள். ஏன்?

Dr. நிட்டி இலவச கண்மருத்துவ முகாமில் குருடரிடம் “சிறியதாக ஆபரேஷன் செய்தால்... உன்னுடைய பல வருட குருடு சரியாகிவிடும். இனி கைத்தடி இல்லாமல் நடக்கலாம்” எனச் சொன்னதும், குருடர்...

“ஆப்ரேஷனுக்கு அப்புறம் என்னால் பார்க்க முடியும், என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் எனச் சொல்வதுதான் புரியவேயில்லை” எனச் சொன்னாராம்.

  • அக்குருடருக்கு கைத்தடியானது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதேபோல் துக்கம் மற்றும் இயலாமை நிறைந்த மனமானது மனிதனின் ஒரு அங்கமாக இருப்பதாக நம்புவதே தடுமாற்றத்தின் மூலக்காரணம்.
டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ளும் நபர்

45. எதற்காகப் போரிடுகிறீர்கள்

ரோகிணி நதி நீருக்காக சாக்கியர்களும், கோலியர்களும் போட்டியிட்டு போருக்கே தயாராகி விட்டனர்.

பரபரப்பின் நடுவே வெகு அமைதியோடு நுழைந்த புத்தர், "ரோகிணி நதி நீர் என்பதால் இந்த நீரை மதிக்கிறீர்களா? அல்லது இந்த நீர் தரும் நன்மைகளுக்காக இந்த நீரை மதிக்கிறீர்களா?" எனக் கேட்டதற்கு,

"வெறும் நீரை யார் மதிப்பார்கள்? அது செய்யும் நன்மைக்காகத்தான் மதிக்கப்படுகிறது. விரும்பப்படுகிறது" என்றார்கள்.

"இருதரப்புக்கிடையே போர் உருவாகக் காரணமான இந்த நீர், இந்தச் சூழலில் நன்மை செய்கிறதா, தீமை செய்கிறதா... இரத்தக் களறியாக்கும் போரைத் தூண்டும் நீருக்காகவா போரிடப் போகிறீர்கள்" எனக் கேட்டுவிட்டு புத்தர் கலைந்து சென்றார். போரும் கலைந்தது.

• நெருங்கியவரிடம் இருக்கும் சில தவறான செய்கைகளுக்காக நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்றால் .... யாரை மதிக்கிறீர்கள்? நெருங்கிய வரையா? தவறுகளையா .... யோசியுங்கள். தப்பித்துக் கொள்ளலாம்.

போர் சிப்பாய்கள்