KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/39. நிரூபணமற்றவர் கடவுள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

39. நிரூபணமற்றவர் கடவுள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

விவேகானந்தரிடம், "எல்லாவற்றையும் ஆதாரத்தோடு பேசுகிறீர்களே. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?" என வம்பிழுக்கும் தொனியில் கேட்டார் ஒருவர்.

கணீர் குரலில் விவேகானந்தரிடமிருந்து பதில் வந்தது, "கடவுள் இருக்கிறார் என்பதை, இதுவரை ஒருவராலும் நிரூபிக்க முடியாததே, கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்!" கேள்வி கேட்டவர், இந்த பதிலால் ஆடிப்போனார்.

சில நிமிடங்கள் தாமதித்துக் கேட்டார்,

"எப்படி? விளக்கமாகச் சொல்லுங்களேன்"

"ஒருவேளை கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல் நிரூபித்து விட்டால் அறிவியல் கடவுளை விடப் பெரிய விஷயமாகி விடும். அறிவியலால் நிரூபிக்கப் படுமளவுக்கு விளையாட்டுப் பொருளல்ல கடவுள்.

கடவுள் பெரியவர். பிரம்மாண்டமானவர். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாததே, கடவுள் இருப்பதற்கான நிரூபணம்" என சொல்லி முடித்தார் விவேகானந்தர்.

ஒரு ஞான குருவால்தான் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்குக் கூட நயமாகவும், எளிமையாகவும், அதே நேரத்தில் நறுக்கென்றும் சொல்ல முடியும். புதிர் கேள்விகளுக்கு புதுப்புது பதிலளிப்பதற்காக மட்டும் ஞான குருமார்கள் பிறப்பெடுக்கவில்லை.. வம்பிழுக்கும் மனிதனைக் கூட அன்பொழுகும் ஆனந்த குணமுடையவனாக மாற்றப் பிறப்பெடுத்தவர்கள் தான் ஞான குருமார்கள்.