KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/35. யார் சொன்னார்கள்? மனம் ஒரு குரங்கென்றுSign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

35. யார் சொன்னார்கள்? மனம் ஒரு குரங்கென்று

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அறுபது வயது தாத்தாவுக்கும், ஆறு வயது பேரனுக்கும் நடந்த சுவையான உரையாடல்...

பேரன், "தாத்தா, மனம் ஒரு குரங்காமே! என் டீச்சர் சொன்னார்கள். மனதை அடக்கிவிட்டால் நல்லா படிக்கலாமாம். மனதை ஜெயித்தவன் உலகையே ஜெயிப்பானாம். முயன்றால் இது முடியுமாம். மனதைக் கட்டுப்படுத்த எவ்வளவு நாள் ஆகும் தாத்தா?" எனக் கேட்டதற்கு,

கோபப்பட்ட தாத்தா, "எவ்வளவு நாள் என்றா கேட்டாய்? உன் டீச்சர் உங்களுக்கெல்லாம் தவறான செய்திகளையே கற்றுத் தருகிறார். அவரை நம்பாதே.

நாட்களில்லை.... அறுபது வருடங்களானாலும் ஒருவனால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது" எனச் சொன்ன விதத்தை வினோதமாக பார்த்தான் ஆறு வயது பேரன்.

● இது விசித்திரமான பிரயாணம். பிரயாண வேகம் அதிகமானால், எண்ணங்களின் வேகம் குறையும்.

மூன்று குரங்குகள்