KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/19. ஆசை அசுரனிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

19. ஆசை அசுரனிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்தி மதபோதகரைச் சந்தித்தார்.

தன் செல்ல நாய்க்குட்டி பப்பி அகால மரணமடைந்து விட்டதால் மதவிதிப்படி தன் பப்பிக்கு ஈமச்சடங்கு செய்ய வேண்டும் என வெகு உருக்கத்தோடு கேட்டுக் கொண்டார்.

"என்ன இது! ஒரு நாய்க்காக நான் இறைவனிடம் பேசுவதா? இது முழு மடத்தனம்" என வெறுப்புக் குரலில் வெடித்தார் மத போதகர்.

ஆனந்தி, "ஐநூறு டாலர் கூட கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நீங்கள் முடியாதென்று சொல்லி விட்டீர்கள். உங்களுக்குத் தெரிந்த வேறு யாராவது இந்தச் சடங்கு செய்வதாய் இருந்தால் சொல்லுங்கள். என் பப்பி எனக்கு முக்கியம்" என்றார்.

ஐநூறு டாலர் என ஆனந்தி சொன்னதும், "நீங்கள் ஆரம்பத்திலிருந்து தெளிவாகப் பேசவே இல்லை. உங்களுடைய நாயும் நம் மதத்தைச் சேர்ந்தது என்று சொல்லாமல் மறைத்து விட்டீர்கள். நம் மத நாய்களுக்கு நானே எல்லாம் செய்வேனென்பது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. பக்கத்து ஊரிலிருப்பவர் ஐநூறு டாலருக்கு மேல் கேட்பார். அவர் வேண்டாம்" என தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் குரலில் சொன்னாராம்!

• வெற்றிக்கு ஒரு காரணம். வெறுப்புக்கு ஒரு காரணம்.

இரண்டுமே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எதன் மீதும் ஏற்படலாம்.

காரணம், இரண்டுமே ஆசை என்னும் அசுரனுக்குப் பிறந்த குழந்தைகள்.