106. எதுவும் நடக்கலாம் ....
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அமெரிக்காவில் பரபரப்பைத் தூண்டிவிட்ட, ஒரு கன்சியூமர் கோர்ட் வழக்கு வினோதமானது.
காரணம் ‘வழக்கு தொடுத்தவர்’ - திருடன்! ‘வழக்கு தொடுக்கப்பட்டது’ - திருடப்பட்ட வீட்டின் மேல்! ‘வழக்கு’ - திருடச் சென்றவர் பயன்படுத்திய வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால், திருடனுக்கு உடலில் பெருமளவு காயம் ஏற்பட்டுவிட்டது!
‘‘எனக்கு திருடச் சென்றதற்கான தண்டனையளியுங்கள். ஆனால், திருடச் சென்ற நான் விபத்துக்குள்ளாகக் காரணமாக இருந்தது ஒழுங்காகக் கட்டப்படாத வீடு, அதனால் நஷ்ட ஈடு தரவேண்டும்’’ என்ற திருடனின் வழக்குக்கு, வீட்டின் உரிமையாளர் - பெருமளவு பணத்தைத் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது!
● நாம் எதிர்பார்க்காத கோணத்தில் வாழ்க்கையை எதிர்கொள்ள வைப்பது - ‘நிரந்தரமின்மை’ எனும் நிரந்தரவிதி. எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!