KAILASA Library/பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa/105. கிலியிருந்தால் எலியாகவே இருப்பீர்கள் ....Sign in
பரமஹம்ஸரின் சின்னக் கதைகள் (Paramahamsarin Chinna Kathaigal) / Small Stories of Paramahamsa

105. கிலியிருந்தால் எலியாகவே இருப்பீர்கள் ....

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புராதன காலத்துக் கதையொன்று...

பூனையைப் பார்த்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்த எலியைக் காப்பாற்ற நினைத்த மந்திரவாதி, அதை தன் மந்திர சக்தியால் பூனையாக மாற்றினார்.

பூனையாக மாற்றிய பின் அது நாயைப் பார்த்துப் பயப்பட்டது. எனவே அதை நாயாக மாற்றினார். மறுவுரு எடுத்த நாய், வேட்டைக்காரனைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. எனவே அதை ஒரு வேட்டைக்காரனாக மாற்றினார்.

உருமாறிய வேட்டைக்காரன் காட்டுக்குள் வந்தான்.

மந்திரவாதியைப் பார்த்த வேட்டைக்காரனின் மனதைக் கிலிபற்றிக் கொள்ள, ‘சரி ஆனது ஆகட்டும்!’ என நினைத்து அவனை ஒரு மந்திரவாதியாக மாற்றினார்.

புது உருவெடுத்திருந்த மந்திரவாதி அருகே ஒரு பெருச்சாளி வந்து நின்றது. கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் பீதியடைந்து கத்தும் சில பெண்கள் போல, எலியைப் பார்த்த புது மந்திரவாதி கத்தினான்!

‘‘நீ எலியாக இருக்கத்தான் லாயக்கு. எலியாகவே இரு!’’ என திரும்பவும் எலியாகவே மந்திரவாதி சபித்து விட்டார்.

● மனதிலிருக்கும் பயம், துக்கம், மனவேதனை போன்றவை நீங்கள் எந்த வேஷமெடுத்தாலும் உங்களை உலுக்கிக் கொண்டேயிருக்கும். நிரந்தரமான நிரந்தரமின்மைகள்.

இவை உங்களிடமிருந்து நிரந்தரமாகத் துரத்தப்படும் வரை என்ன செய்தாலும், எதைச் சாதித்தாலும் அதில் துக்கமானது இழையோடிக் கொண்டேயிருக்கிறது.